1966ம் ஆண்டு மார்ச் 10ல் திருமதி தர்மா, சென்னை.17, தியாகராய நகரில், 24.A, திருமூர்த்தி தெருவில் மாதம் ரூ.100 வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார். இந்த வீட்டுக்கான வாடகையை கருணாநிதி கொடுத்து வந்தார். திருமதி தர்மாவுடன் அவர் தாயார், சகோதரர், சகோதரி ஆகியோரும் அதே வீட்டில் வசித்து வந்தனர். கருணாநிதிக்கும் திருமதி தர்மாவுக்கும் 1968ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாளில் ஒரு பெண் குழந்தைக் பிறந்தது . பெயர் கனிமொழி . பின்னர் , 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி திருமதி தர்மா, சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் எண் 9, முதல் குறுக்குத் தெருவில் உள்ள வீட்டை திருமதி ஈ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து 57 ஆயிரத்திற்கு கிரயத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது. 1968 இல் மாதம் 100 ரூபாய் வாடகைக்கே கருணாநிதியை எதிர்பார்த்த திருமதி தர்மா , எப்படி ஒரே ஆண்டில் எந்த வேலைக்கும் செல்லாமல் 57 ஆயிரத்திற்கு சொந்த வீட்டை வாங்கினார் ? இந்த விஷயம் வெளியில் தெரியத் தொடங்கியவுடன் , ஆகஸ்டு 21 1970 அன்று அந்த வீட்டை டி . கே . கபாலி என்பவருக்கு கிரயம் செய்துக் கொடுக்கிறார் , அதற்கு விலையாக 14000 ரூபாய் திருமதி தர்மாவுக்கு வழங்கப் படுகிறது . இது பத்திரப் பதிவுத் துறை அதிகாரியின் முன்னிலையில் பதிவு செய்யப் படுகிறது . . அந்த கபாலி , திருமதி தர்மா என்கிற ராசாத்தி அம்மாளின் பாதுகாவலராக பணி புரிந்தவர் . வீட்டை கபாலிக்கு விற்று விட்ட நிலையில் , அதே வீட்டில் 300 ரூபாய் வாடகை தந்து வசிப்பதாக கபாலியுடன் ஒப்பந்தம் போடப் பட்டு , அதன் படி அங்கேயே திருமதி தர்மா வசித்து வருகிறார் . ஜனவரி 30 , 1972 அன்று , டி கே கபாலி , அந்த வீட்டை , சிவபாக்கியம் என்கிற நபருக்கு விற்று விடுகிறார் . 45000 ரூபாய்க்கு அந்த வீடு விற்கப் படுகிறது , அதாவது 12000 நஷ்டத்தில் அந்த வீட்டை விற்கிறா கபாலி ... இதில் கூத்து என்னவென்றால் , அந்த சிவபாக்கியம் திருமதி தர்மாவின் தாயார் . மார்ச் 20 , 1972 அன்று திருமதி சிவபாக்கியம் , தர்மா பெயரிலும் அவரது மகள் கனிமொழி பெயரிலும் அந்த வீட்டை உயில் எழுதி வைக்கிறார் . மார்ச் 13 1973 அன்று வருமான வரித் துறைக்கு சமர்பித்த தகவல் படி , தான் வீடு வாங்குவதற்காக 40000 ரூபாய் பணத்தை திரு டி கே கபாலியிடமிருந்து கடனாக வாங்கியதாக தர்மா தெரிவிக்கிறார் . ஜனவரி 11 , 1970 அன்று போடப் பட்ட கடன் ஒப்பந்தத்தின் படி , 15000 , 15000 , 10000 என்று அந்தப் பணத்தை கபாலிக்கு திருமதி தர்மா மூன்று தவணைகளில் திரும்பத் தர வேண்டும் என்றும் , அப்படி செய்யவில்லை என்றால் , அந்த வீடு , கபாலிக்கே சொந்தமாகிவிடும் என்பது தான் ஒப்பந்தம் .... இதில் உச்சக் கட்ட சுவாரசியம் , திருமதி தர்மாவுக்கு கடன் தருவதற்காக , கபாலி கடன் வாங்குகிறார் , யாரிடமிருந்து தெரியுமா ? திருமதி சிவபாக்கியதிடமிருந்து . ஏப்ரில் 11 1973 அன்று வருமான வரித் துறைக்கு சமர்பித்த தகவல் படி தான் திருமதி தர்மாவுக்கு கடன் தருவதற்காக , திருமதி சிவபாக்கியதிடம் 20000 ரூபாய் கடன் பெற்றதாக கபாலி தெரிவிக்கிறார் .... மகளுக்கு கடன் கொடுக்க அந்த மகளின் தாயாரிடமே கடன் வாங்கிய பாதுகாவலர் . .... அடடே
கருணாநிதியின் கலையுலகு எப்படிப் பட்டது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் தனது மகன் மு க முத்து கதாநாயகனாக நடிக்க தனது மருமகனான முரசொலி செல்வத்தைத் தயாரிப்பாளராக வைத்து, அஞ்சுகம் பிக்சர்ஸின் சார்பில் தயாரித்து 1972-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதியன்று பிள்ளையோ பிள்ளை படத்தை ரிலீஸ் செய்தார் கருணாநிதி. படம் படு தோல்வி..! 'பிள்ளையோ பிள்ளை' படத்துக்கான மொத்த தயாரிப்புச் செலவே 15 லட்சம் ரூபாய்தான். ஆனால், படத்தைத் தயாரித்த அஞ்சுகம் பிக்சர்ஸின் மொத்த முதலீடே 10 ஆயிரம் ரூபாய்தான்.. பிறகு எப்படி 15 லட்சம் ரூபாய் செலவில் திரைப்படம் எடு்க்க முடியும்? அதுதான் கருணாநிதி. இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் வெளியில் இருந்து கடனாக வாங்கப்படுகிறது. மீதம் உள்ள 14.23 லட்சம் ரூபாய் விநியோகஸ்தர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட அட்வான்ஸ். ரஜினியின் எந்திரன் படத்துக்குக்கூட இப்படி போட்டி போட்டுக் கொண்டு அட்வான்ஸ் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே..? ஒரு புதிய நடிகர் நடிக்கும் படத்தை, அதுவும் எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக, எம்.ஜி.ஆரை காப்பியடிக்கும் ஒரு புதுமுக நடிகரின் படத்தை வாங்குவதற்காக 14 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸாக கொடுப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த 14 லட்சத்து 23 ஆயிரத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை ராசி அண்ட் கோ, கிரெசன்ட் மூவிஸ், மற்றும் சேது பிலிம் டிஸ்டிரிபியூட்டர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள்தான் வழங்கியுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களிலும் அஹமது யாசின் என்கிற கட்டுமான கம்பெனி நடத்துபவர் பங்குதாரராக இருந்தார் என்பது யதேச்சையான நிகழ்வாகக் கருத முடியாது. அதிலும், சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலத்தைக் கட்டுவதற்கான கான்ட்ராக்ட் அப்போது இவரிடம்தான் வழங்கப்பட்டது என்பதும் யதேச்சையான நிகழ்வல்ல. சரி.. எப்படித்தான் இது நடந்தது..? இதை சம்பந்தப்பட்ட சாட்சி அஹமது யாசின் வாயாலேயே கேட்போமா..? “சாதாரண சமயமாக இருந்தால், ‘பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்திற்கான விநியோக உரிமைகளை வாங்குவதற்கு நான் முன் வந்திருக்கவே மாட்டேன். இருப்பினும், அப்போது சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் கூட்டுப் பங்குதாரராகவும் இருந்தேன். எனது நிறுவனம் தமிழக அரசுக்காக அண்ணா மேம்பாலம் கட்டும் முக்கிய ஒப்பந்தத்தை நிறைவற்றிக் கொண்டிருந்தது. வேறு சில ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்தது. அந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட சில சலுகைகளுக்காக சென்னைக்குத் தெற்கிலுள்ள பகுதிகளுக்கு இத்திரைப்பட விநியோகஸ்தர் உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு நான் அப்போதைய ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டேன். அப்படத்திற்கான விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு கருணாநிதியை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று வழியேதும் எனக்கு இல்லை..” - இப்படித்தான் அந்த அஹமது யாசின், சர்க்காரியா கமிஷன் முன்பு வாக்குமூலம் அளித்திருந்தார். இதையெல்லாம் தெரிந்துதான் “மகன் ‘பிள்ளையோ பிள்ளை’ என நடிக்கிறான். அப்பன் ‘கொள்ளையோ கொள்ளை’ என அடிக்கிறான்” என்று எம்.ஜி.ஆர். காலத்திலேயே அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பியுள்ளனர்.