சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டம் அவரை தவறாய் வழிகாட்டும் தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். குறள் 508: தெரிந்துதெளிதல்
ஒருவரை ஆராய்ந்து பார்க்காமல் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் தனக்கு மட்டும் அல்லாமல் அவரால் வருங்காலத் சந்ததியினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. குறள் 452: சிற்றினஞ்சேராமை நீர் தான் பாயும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப அந்நிலத்தின் தன்மையோடு திரிந்து விடும், மக்களுடைய அறிவும் அவர்கள் சேர்ந்துள்ள கூட்டத்தின் தன்மையை பெற்றுவிடும்
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து. சிற்றினஞ்சேராமை குறள் 458 நிறைகுணம் பெற்றவராக இருந்தாலும் நன்கு கற்ற சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை அமையும்
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். குறள் 133: ஒழுக்கம் உடைமை ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 959 குடிமை
'பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவி நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருஎன முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே''(தொல்.1219) என்கிறது நூற்பா. தோன்றிய குடிநிலை, குடிக்குத் தக ஒழுகும் ஒழுக்கம், வினை ஆளும் தன்மை, வயது, வடிவம், நிலைத்த காதல், மனஅடக்கம், பரிவுணர்வு, அறிவு, செல்வம் இவை பொருந்தி இருத்தல் தமிழ்நாட்டுத் தலைவன் தலைவிக்கு மட்டுமல்ல, உலக மாந்தர் அனைவருக்கும் அமைய வேண்டிய பண்புகளாகும். நாள், கோள், சாதி போன்ற பொருத்தங்கள் தலைமக்களுக்கு அமைய வேண்டும் எனக் கூறாமல், இத்தகைய பத்து ஒப்புமைகளைக் கூறுவது பண்பட்ட தமிழின் வாழ்க்கையையும், தொலைநோக்குச் சிந்தனையின் வளத்தையும் வெளிக்காட்டுவதாக அமைகிறது.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை மணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.
நல்ல குடியில் பிறதோர் இழிவான செயலை செய்ய மாட்டார்கள்
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 959 குடிமை மணக்குடவர் உரை: வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும். அதுபோல உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும்.
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை குலத்தின்-கண் ஐயப்படும் - குறள் 958 குடிமை மு.வரதராசனார் உரை:ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 956 குடிமை மணக்குடவர் உரை: பொய்யைச் சார்ந்து அமைவில்லாதன செய்யார், குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார். இது சான்றாண்மை விடார் என்றது. மு.வரதராசனார் உரை: மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. குறள் 957:குடிமை மணக்குடவர் உரை: உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும். ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 960குடிமை மணக்குடவர் உரை: ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக: அவ்வண்ணமே குலத்தை விரும்புவாராயின் யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக. இது பணிந்தொழுக வேண்டு மென்றது. சாலமன் பாப்பையா உரை:ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும் நாண் இன்மை நின்ற கடை - குறள் 102:9 நாணுடைமை மணக்குடவர் உரை:ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச் சுடும்: அதுபோல நாணின்மை நிற்குமாயின் தமது நலத்தினைச் சுடும். இது நலமில்லையா மென்றது. சாலமன் பாப்பையா உரை:ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன் உடையார்-கண்ணே உள - குறள் 23:3 ஈகை மணக்குடவர் உரை:இரந்துவந்தார்க்கு இலனென்னா நின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும் குடிப்பிறந்தான்மாட்டே யுளதாம். இது கொடுக்குங்கால் மாறாது கொடுக்க வேண்டுமென்றது. மு.வரதராசனார் உரை: யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். குறள் 528: சுற்றந்தழால் மணக்குடவர் உரை: அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின் அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர். இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793: நட்பாராய்தல் ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும். குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794: நட்பாராய்தல் உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. குறள் 681:தூது அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
செய்யும் தொழிலால் பிரிவு என்பது வர்ண வேறுபாடு, ஆனால் திருக்குறள், ஏன் இதற்கு முன்பான சங்க இலக்கியத்திலும் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாதபடி பிறப்பில்- மேல் & கீழ் எனச் சொல்லப் படுகிறது மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. குறள் 409: கல்லாமை சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே. பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் குறளின் அதே அதிகாரத்தின் அடுத்த குறள் மேலும் விளக்கம் நாளை மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். குறள் 973: பெருமை
கருமமே கட்டளைக் கல் (அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:505) பொழிப்பு (மு வரதராசன்): (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும். மணக்குடவர் உரை: ஒருவனைப் பெரியனாக்குதற்கும் மற்றைச் சிறியனாக்குதற்கும் வேறு தேறவேண்டா; அவரவர் செய்யவல்ல கருமந்தானே அதற்குத்தக ஆக்கும் படிக்கல்லாம். இஃது ஒருவனை ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையுமென்றது. இது குற்றங்கூறாமை பலவற்றிற்கு முள்ள வேறுபாடென்று கொள்ளப்படும். பரிமேலழகர் உரை: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது, தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் கருமமே,பிறிதில்லை. (இஃது ஏகதேச உருவகம். மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும், முடிந்த கருவி செயல் என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம் குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்பட்டது.) குன்றக்குடி அடிகளார் உரை: ஒருவருடைய பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர் செய்யும் செயல்களே உரைகல். ஒவ்வொருவரும் வேறு பிறவற்றால் சிறப்புடையார் போலத் தோன்றினாலும் உண்மையில் அவர்களுடைய பெருமையை அல்லது கீழ்மையை எடுத்துக்காட்டுவது அவர்களுடைய செயல்களே என்பது கருத்து. பொருள்கோள் வரிஅமைப்பு: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக் கல் தத்தம் கருமமே. பதவுரை: பெருமைக்கும்-சிறப்புக்கும், நிறைகுணத்திற்கும்; ஏனை-மற்றும்; சிறுமைக்கும்-குறைபாட்டிற்கும், குறைவிற்கும்; கருமமே-செயலே, செய்திறனே. செயற்பாங்கே; கட்டளைக்கல்-உரைகல்; தத்தம்-தங்கள் தங்களது, அவரவர்.
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். குறள் 973:பெருமை பரிமேலழகர் உரை: மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார், கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் -அவை செய்து பெரியராயினார்; தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார். (மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும் செல்வ மாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.). மணக்குடவர் உரை:மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு.குறள் 409: கலைஞர் மு.கருணாநிதி உரை: கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும். மு.வரதராசனார் உரை: கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே. சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே. பரிமேலழகர் உரை:கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர். (உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.). மணக்குடவர் உரை: கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது. Translation: Lower are men unlearned, though noble be their race, Than low-born men adorned with learning's grace. Explanation: The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.
சாதி என்பது தமிழர்கள் செய்தொழிலால் அமைந்த பிரிவுகளுக்கு வைத்த பெயர். சாதிப்போர் சாதியோர் என்று அவர்கள் மேற்கொண்ட் தொழிலில் சாதிப்போர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட சொல் என்று கூறுகிறார் அயோத்திதாசர்
ஆங்கில சமூகவியல் அறிஞர்கள் போர்த்துக்கீசிய மொழியில் இருந்து எடுத்தாளப்பட்ட காஸ்டஸ் என்ற சொல் அடிப்படையில் சமஸ்கிரிதத்தில் ஜாதி என்றழைக்கப்பட்டது வாழும் இடம் சார்ந்ததென்று கருதினர். ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பிறந்து கூடி வாழ்ந்த பிரிவினரைக் குறிக்க சேரி என்ற பெயரும் அங்கு வாழ்ந்தவர்களை அடையாளப்படுத்த சாதியையும் குறித்தனர் என்பது சமூகவியலாரின் கருத்து சாதி தமிழ்ச்சொல்.இலக்கண,இலக்கியங்களில்பயின்றசொல்.தமிழ்ச்சொற்களைச்சங்கதமாக்கச்சிலசித்துவேலைகள்.தானம்-ஸ்தானம்.திரம்-ஸ்திரம்.பெண்சாதிக்குஇணையானசொல்,நல்லசாதிமாடு\ நல்லசாதிமரம் ஜாதி என்ற சொல் சாதி என்று தமிழில் பழங்காலத்தில் இருந்து உபயோகத்தில் உள்ளது.
திருக்குறள், பொருட்பால், ஒழிபியலில், பெருமை எனும் அதிகாரத்தில் வருகின்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (972) என்ற குறளுக்கு தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், பொருளதிகாரம், களவியல், நூற்பா எண். 90 – “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோனாயினுங் கடிவரை இன்றே” என்ற நூற்பாவில் வருகின்ற ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்பதற்கு, ஒப்பு பத்துவகைப் படும் என்று கூறுகிறார். அதை மெய்ப்பாட்டியல் சூத்திரம் (25) “பிறப்பே குடிமை ஆண்மை, ஆண்டோடு / உருவு நிறுத்த காம வாயில் / நிறையே அருளே உணர்வொடு திருவென / முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” என்பதைக் கூறி இதில் பிறப்பு என்பதற்கு “பிறப்பாவது அந்தணர், அரசர், வணிகர் . . . என்றாற்போல் வருங் குலம். குடிமையாவது, அக்குலத்திலுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் ‘குடிமை’ என்றார்” என்று சொல்கிறார் ஆகவே ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான்” எனப் பிறரும் குலத்தின் கண்ணே சிறப்பென்பது ஒன்று உண்டென்று கூறினராகலின்” என்கிறார். குலம் என்பது பிறப்பினால் வரக்கூடியது எனில், “குலத்தின் கண்ணே சிறப்புண்டு” எனும்போது அது பிறப்பின் வழியே வந்த சிறப்பு என்றாகிறது. இப்படியான நிலையில் “பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதற்கு என்ன பொருள் என்று நீங்கள் கருதுகிறீர்கள். சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஜ என்பதற்கும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்பதற்கும் வேறுபாடே இல்லை இவர்கள் கீதையிலும் குறளிலும் முதல் வரியை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்
குடி (2) நில பெயர் குடி பெயர் குழுவின் பெயரே - சொல். பெயர்:11/1 இரு பால் குடி பொருள் இயல்பின்-கண்ணும் - பொருள். கள:24/11
குடிகோள் (1) உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற - பொருள். மெய்ப்:10/1
குடிநிலை (1) மறம் கடைக்கூட்டிய குடிநிலை சிறந்த - பொருள். புறத்:4/1
குடிமை (3) குடிமை ஆண்மை இளமை மூப்பே - சொல். கிளவி:57/1 பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு - பொருள். மெய்ப்:25/1 வன் சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை - பொருள். மெய்ப்:26/2 இன்புறல் ஏழைமை மறப்பொடு ஒப்புமை - 26/3
குடியும் (1) நாடும் ஊரும் இல்லும் குடியும் - பொருள். கள:23/33 பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி - 23/34
குடுமி (1) இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும் - பொருள். புறத்:13/10
''பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவி நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருஎன முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே''(தொல்.1219)
என்கிறது நூற்பா. தோன்றிய குடிநிலை, குடிக்குத் தக ஒழுகும் ஒழுக்கம், வினை ஆளும் தன்மை, வயது, வடிவம், நிலைத்த காதல், மனஅடக்கம், பரிவுணர்வு, அறிவு, செல்வம் இவை பொருந்தி இருத்தல் தமிழ்நாட்டுத் தலைவன் தலைவிக்கு மட்டுமல்ல, உலக மாந்தர் அனைவருக்கும் அமைய வேண்டிய பண்புகளாகும். நாள், கோள், சாதி போன்ற பொருத்தங்கள் தலைமக்களுக்கு அமைய வேண்டும் எனக் கூறாமல், இத்தகைய பத்து ஒப்புமைகளைக் கூறுவது பண்பட்ட தமிழின் வாழ்க்கையையும், தொலைநோக்குச் சிந்தனையின் வளத்தையும் வெளிக்காட்டுவதாக அமைகிறது.
கற்பு எனப்படுவது கரணமொடு புணர கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே. 1 கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்து உடன் போகிய காலையான. 2 மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே. 3 பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப. 4
வாய்மொழி என்பது யாப்பிலக்கணம் ஆகும். இந்தச் செய்யுள் இலக்கணம் அறிந்த புலவரைத் தொல்காப்பியர் வாய்மொழிப் புலவர் என்று குறிப்பிடுகிறார்கள்.[1] தொல்காப்பியர் காலத் தமிழ் பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்று செய்யுளானது ஏழு நிலைகளில் காணப்படுகிறது என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.[2] இதற்கு உரை எழுதும் இளம்பூரணர் ’வாய்மொழியாப்பு’ என்று குறிப்பிட்டுச் செல்கிறார்.[3] நூல் என்பது எழுத்து, சொல் இலக்கணங்களைக் கூறும் நூல்.[4] வாய்மொழி என்பது யாப்பிலக்கணம் கூறும் நூல் என்றும் இவற்றால் தெரியவருகிறது. மேற்கோள் 'நிரை அவண் நிற்பின், நேரும் நேர்பும் வரைவு இன்று' என்ப-வாய்மொழிப் புலவர். (தொல்காப்பியம் – பொருளதிகாரம் 380 – செய்யுளியல்)
பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே, அங்கதம், முதுசொல், அவ் ஏழ் நிலத்தும், வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின் நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது' என்மனார் புலவர். (தொல்காப்பியம், பொருளதிகாரம் 384 – செய்யுளியல்)
தொல்காப்பியம், உரையாசிரியர் இளம்பூரணர், சாரதா பதிப்பகம், சென்னை 600 014, பதிப்பு 2010 ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகையது ஆகி, ஈர்-ஐங் குற்றமும் இன்றி, நேரிதின் முப்பத்திருவகை உத்தியொடு புணரின், நூல்' என மொழிப, நுணங்கு மொழிப் புலவர். (தொல்காப்பியம், பொருளதிகாரம் 644 – மரபியல்)
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும் கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 409 கல்லாமை மணக்குடவர் உரை:கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது. சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. குறள் 951: குடிமை மு. வரதராசன் உரை:நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும் இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 952 குடிமை மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - குறள் 954 குடிமை மு. வரதராசன் உரை:பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 959 குடிமை மு. கருணாநிதி உரை:விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம். சாலமன் பாப்பையா உரை:நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின் மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 957 குடிமை மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும் நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2 தெரிந்துதெளிதல் மு. வரதராசன் உரை:நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும். மு. கருணாநிதி உரை:குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்.
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 794 நட்பாராய்தல் மு. வரதராசன் உரை:உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும். மு. கருணாநிதி உரை:பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும் கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9 கல்லாமை மு. வரதராசன் உரை:கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே. மு. கருணாநிதி உரை:கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும். சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3 ஒழுக்கமுடைமை மு. வரதராசன் உரை:ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4 ஒழுக்கமுடைமை மணக்குடவர் உரை:பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று சாலமன் பாப்பையா உரை:பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம் பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1 தூது மு. வரதராசன் உரை: அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும் பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:2 பண்புடைமை மு. வரதராசன் உரை:அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும். மு. கருணாநிதி உரை:அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாண பெரிது - குறள் 13:4 அடக்கமுடைமை மணக்குடவர் உரை: தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம். மு. வரதராசன் உரை: தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர் நிலையின் இழிந்த-கடை - குறள் 964 மானம் மு. வரதராசன் உரை:மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.