பெரியாரிஸ, திராவிட கழகவாதம்[1]: “641 CE க்கு முன்தமிழகத்தில் பிள்ளையார் சதுர்த்திஎன்பதோ, பிள்ளையார் வழிபாடோகிடையாது. இதற்கான ஆதாரம்கேட்கப்புகின்தொல்காப்பியத்தில்கூட மாயோன், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை குறித்துபேசப்படுகிறதே தவிர பிள்ளையார்இல்லை. சங்க நூல்களிளேகூடகதிரவன், காளி, கூளி, காற்று, காடுகாத்தாள், நம்பின்னை, பலராமன் போன்றோர்பேசப்படுகின்றதே தவிர தும்பிக்கைகடவுள் இல்லை”, என்று திகவினர் வாதிடும் போது, மற்ற சங்க இலக்கிய ஆதாரங்களை மறைப்பதை கவனிக்கலாம். “641 CEல் நரசிம்மவர்மன் வாதாபியின்மீது போர் தொடுத்து இரண்டாம்புலிகேசியை வென்றபோது அவன்படைத்தலைவனானபரஞ்சோதிதான் அங்கிருந்தயானைத்தலை மனித உடலுடன்கூடிய பொம்மையை எடுத்துவந்துகாட்சிப் பொருளாக வைத்தான். அதன் பிறகு புராணக் கதை எழுதிபார்வதிக்கு மகனாக்கினர், முருகனுக்கு அண்ணனாக்கினர்”, என்று வழக்கம் போல தூஷண படலத்தைக் காணலாம். இக்காலத்திலும், இப்படி 1960-70 வாதங்களை வைத்து விதண்டாவாதம் செய்வதால், உண்மையினை அறிய வேண்டாம் என்றுள்ள போக்குதான் வெளிப்படுகின்றது.
பரஞ்சோதிக்குப் பிறகு தான்பிள்ளையார் வழிபாடு ஏற்பட்டது: “சிறுத்தொண்டர் என்னும்பரஞ்சோதியார் நரசிம்மவர்மப்பல்லவனின் படைத் தலைவராகப்படையுடன் சென்று சாளுக்கியமன்னனின் வாதாபி என்னும்தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக்கொண்டு வந்து தாம்வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபிகணபதி என்று பெயர்,”[2] என்று விகிபீடியா போன்றவையும் பாட்டு பாடுகின்றன. 2007-ஆம் ஆண்டில், கருணாநிதி, “பிள்ளையார்கர்நாடகத்தைச் சேர்ந்த வாதாபியில்பிறந்தவர். அவர் பல்லவர்காலத்தில்தான் தமிழகத்திற்குக்கொண்டு வரப்பட்டார். எனவே அவர்தமிழ் கடவுள் அல்ல,” என்று பேசினார். படித்தாலும், பண்பில்லாததால், அவர் அவ்வாறு பொய் சொல்லியே காலத்தை கழித்தார். “17 ஆம் நூற்றாண்டின்போது தமிழ்நாட்டை சேர்ந்த ஒருமன்னர் வட மாநிலத்தில் போர்புரிந்து வெற்றிபெற்றார் அதன்நினைவாக அங்கிருந்த விநாயகர்சிலையை கொண்டு வந்தார். அதன்பிறகு தமிழ்நாடு முழுவதும்விநாயகர் வழிபாடுகள்தொடங்கின. தமிழகத்தில்இவ்விழா பெரும்பாலும் குடும்பவிழாவாகவே கொண்டாடப்பட்டது. வெகுகாலத்தின் பின்னரே பொதுவிழாவாக அறிமுகப்படுத்தப்பட்டுகொண்டாடப்பட்டது,” என்று விகிபீடியா இன்னொரு கதையினையும் சொல்கிறாது[3].
4-6 நூற்றாண்டுகளில் CE பிள்ளையார் வழிபாடு இருந்தது: தமிழ்நாட்டில் தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குடை வரைகோயிலில் உள்ள கற்பக விநாயகர் சிலை, 6-ம் நூற்றாண்டுக்கு CE உட்பட்டதாகும். இந்த கோயிலையும், விநாயகரையும் உருவாக்கிய கல்தச்சனின் பெயர் எக்காட்டூரூக்கோன் பெருந்த(ச்)சன் என்று உள்ளது. இது 6-ம் நூற்றாண்டில் CE காணப்பட்ட எழுத்து வடிவில் இருப் பதால் வாதாபி காலத்துக்கு முன்பே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததை அறிய முடிகிறது[4]. மேலும், இதே காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்து பொறிக்கப்படாத இரண்டு சிற்பங்கள் உத்திரமேரூரிலும், வேளச்சேரியிலும் வழிபாட்டில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர். 2015ல் போது திண்டிவனம் அருகே ஆலகிராமத்தில் உள்ள எமதண் டீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்து பொறிக்கப்பட்ட கல்லில் பிள்ளையார், லகுவேஸ்வரர் மற்றும் முருகன் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கோயிலின் தெற்கு வெளிப்புற அதிட்டானத்தில் பிள்ளையார் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இச் சிற்பம் 75 செ.மீ உயரம், 40 செ.மீ அகலம் கொண்ட நீண்ட கல்லில் வெட்டப்பட்டுள்ளது. பிள்ளையார் பீடத்தில் 3 வரி களில் கல்லெழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இவ்வெழுத்தின் வடி வம் பூளாங்குறிச்சி எழுத்து வடி வத்துக்கு பின்னும், பிள்ளையார் பட்டி குடைவரைக்கோயில் கல் லெழுத்து வடிவத்துக்கு முந்தை யதும் ஆகும். அதாவது 4-ம் நூற்றாண்டுக்கும், 6-ம் நூற்றாண்டுக்கும் CE இடைப்பட்ட தாகும்.