தமிழ்த் தேசியவாதியர்தம் தனிப்பட்ட கவனத்துக்கு.....
”ஸங்க₄ ஸாஹித்யே ஸதா₃ஶிவ மாஹாத்ம்யம்”
முது முதல்வன், முக்கண்ணான், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், கறை மிடற்றண்ணல், ஆலமர் செல்வன், ஆல்கெழு கடவுள் - இவை இலக்கியம் சொல்லும் இறைவனின் பெயர்கள்.
உலகம் எல்லாம் பரவும் புகழுடைய நான்கு வேதங்களான பழைய நூலை அருளிய சிவபெருமானின் ஆலமுற்றம்! - பரணர்
உருத்திரனார், இறையனார் என்ற பெயர்களில் புலவர்கள் இருந்தனர்.
[ஆலமர் செல்வன்- தென்முகக் கடவுள் - தக்ஷிணா மூர்த்தி, பவுத்தரின் அவலோஹிதர் பார்த்துக் காப்பியடித்து உருவாக்கிய வடிவம் என ரீல் சுற்றிக்கொண்டிருந்தார் ஓர் அமெரிக்கத் தமிழ் நண்பர்; மேற்கத்திய ‘ஆய்’வாளர் முடிவாகச் சொல்லி விட்டார்களாம்]