New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 34. நிகண்டவாதி சமயம் முனைவர் து. இளங்கோவன்


Guru

Status: Offline
Posts: 24791
Date:
34. நிகண்டவாதி சமயம் முனைவர் து. இளங்கோவன்
Permalink  
 


34. நிகண்டவாதி சமயம்

 

முனைவர் து. இளங்கோவன்

 

ஆசீவகனின் சொற்களைக் கேட்டதை கைவிட்ட மணிமேகலை நிகண்டவாதியை அனுகினாள். நிகண்டவாதியை நோக்கி உன் சமயம் சொல்லும் கருத்துக்களை சொல்வாயாக என மணிமேகலை கேட்டாள்.

நிகண்டவாதியின் சமயத்தலைவன் யார் என்னும் அந்தச் சமயத்தால் பின்பற்றப்படும், போற்றப்படும் நூலின் பொருள் யாது என்றும் சமய உள்ளடக்கம் எவை என்றும் மணிமேகலை கேட்டாள்.

பொதுவாக சமயங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்று நாற்பொருள் கருத்தைக் கொண்டது. அப்படியாக, நிகண்டவாதியின் சமயம் பேசுகின்ற நூலின் பொருளையும் எனக்கு உண்மையாகப்படுமாறு விளக்கிக் கூறுங்கள் எனக் கேட்டாள்.

மணிமேகலையின் கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாக நிகண்டவாதி தன் சமயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினாள்.

இந்திரர்களால் தொழப்படுகின்ற தலைவனாகிய அருக பரமேட்டியே இறைவனாகும்.

‘‘இந்திரர், பவணேந்திரர், வியந்ததேரந்திரர், கற்பேந்திரர், மிருகேந்திரர் என பலர் உள்ளபடியால் இநதிரர் என்று சீத்தலை சாத்தனார் பொதுப்படக் கூறினார்.

நிகண்டவாதியின் சமயப் பொருள் சொல்லும் நூல் என்பது ஆகமத்தின் பொருட்களை உள்ளடக்கியவையாக இருந்தது. அவைகளை நிகண்டவாதி விளக்கிச் சொல்லத் தொடங்கினார்.

நிகண்டவாதி உரைத்த நூற்றொருட்கள் பின்வருமாறு அளவைகள்

1. தர்மம்

2. அதர்மம்

3. காலம்

4. காயம்(உடல்)

5. சீவன்(உயிர்)

6. புண்ணியம்

7. நல்வினை

8. தீவினை

9. அவ்வினையால் செய்தலை பெறுகின்ற கட்டும்

10. வீடு

இப்படியாக 10 வகைப் பொருட்களை உள்ளடக்கியது நிகண்டவாதி சமயம்.



நிகண்டவாதி சமயம் என்பது சொல்லும் கருத்தில் உயிர் என்பது அநாதி நித்தியம் என்று சொல்லப்படுகிறது.

தனியே வந்த உயிர், தனியே போவது என்பது ஒரு பொதுக்கருத்து எனலாம். அன்னை, தந்தை, அண்ணன், தம்பி, தமக்கை, தங்கை, மனைவி, பிள்ளை, சுற்றம் உறவு என்று பேசப்படும் அத்தனை உறவோடும் நெருங்கி வாழும் மனித வாழ்வில் உயிர் என்பது தனியே வந்து பிறந்து தனித்தே போகிறது. இதை அநாதி நித்தியம் என்பர். இதுவே நிகண்டவாதி சமயத்தின் கொள்கையாகும்.

ஓர் உயிரின் செயல் என்பது இருவினைகளுக்குள் கட்டுண்டது. அவ்வினைகள் நல்வினை என்றும், தீவினை என்றும் இருவகையாகும். அந்த வினைகளால் பந்தங்கள் உருவாகுகின்றது. பந்தம் என்பது கதையால் உருவாகும். உறவுகளை வளர்க்கும்.

சொந்தம் ஒரு கைவிலங்கு நீபோட்டது - அதில்
பந்தம் ஒரு கால்விலங்கு நான் போட்டது

என்று உயிர்கள் கட்டப்படும் வினையை கண்ணதாசன் தன் கவிதையில் சொல்வார்.

ஆகமத்தில் கூறப்பட்டு அமைந்த பொருள் என்பது தன்னுடைய இயல்பாகிய தன்மை உடையதாகவும், உயிர்கள் தனக்கு என்றும் , தோன்றும் இயல்பில் செயல்படும் தன்மை உடையதாக உள்ளது.

தன் தனித்துவத்தை, சிறப்பை, துன்பத்தை, துயரத்தை மையப்படுத்தி, தான் சுழலும் பம்பரம் ஆகும்.

‘‘ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்’’ மனிதர் என்று பட்டினத்தார் சொல்வது போல உயிர்கள் தனக்கென்று ஓர் தன்மை உடையது ஆகும்.

உயிர்கள் தான் எதை சார்ந்து உள்ளதோ, அவைகளின் தன்மை உடையதாக மாறிவிடும் இயல்பு உடையது. தண்ணீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும், அது ஊற்றப்பட்ட பாத்திரத்தின் வடிவத்தை உள்ளடக்கமாக மாற்றிக் கொள்ளும் இயல்புடையது. அது போன்றதுதான் உயிர்கள் என நிகண்டவாதி சமய கொள்கை சொல்கிறது.



உயிர்கள் ஒரு குணத்தால் வெளிப்படுத்தும் இயல்பு உடையதாகும். கோபம், காமம், களவாடல் போன்ற தன்மையால் உயிர்கள் குணத்தின் தன்மையை வெளிப்படுத்தும். உயிர்கள் உணர்பவைகள், நிலைத்த தன்மை உடையதாகவும், நிலையற்ற தன்மை உடையதாகவும் உள்ளது. அவைகள்;

1. தோன்றுதல்

2. நிலை பெறுதல்

3. கெடுதல்(அழிதல்) 

எனப்படும் மூன்று வகை இயல்பை உடையதாக உள்ளது.

இதை இந்துமதம் 

1. படைத்தல்

2. காத்தல் 

3. அழித்தல் 

என்ற தன்மைகளாக விளக்குகிறது.

வேம்பின் முளைமுளைத்து வேம்பாகவே தோன்றுவது நித்தியமாகும். அதாவது, நிலைத்த தன்மையாகும். வேம்பினை நட்டு முளைத்தவழி அதன் விதை அழிவது அநித்தியமாம். அதாவது, நிலையற்ற தன்மையாகும்.

வேம்பின் விதை அழிகிறது. ஆனால், அதில் இருந்து மற்றொரு வேம்பே எழுகிறது. இப்படி நிலைத்த தன்மையும் கொண்டதே உலக வாழ்வு. அப்படிப்பட்ட வாழ்வின் உள்ளே உயிர்கள் சுழல்கின்றன.

பயறு தன் தன்மை ஏதும் கெட்டுப்போகாது இருக்கும். கும்மாயம் (பாயாசம்) என்னும் குழைவினை ஆக்கியணலை அந்தப் பயறு சுழிற்து போதலை அறிக. இதில் வெளிப்படும் உண்மை என்பது, ஒன்று அழிந்து, மற்றொன்றாக அது தோன்றுவது என்பது உலக இயல்பு என்பதை நிகண்டவாதி தன் சமயக்கோட்பாடாக எடுத்துரைத்தார்.

சிறு பயிற்றினாலே பாயாசம் செய்து கன்னி தெய்வங்கட்குப் படைத்து வழிபடல் என்னும் வழக்கம் தென் தமிழ் நாட்டில் இன்றளவும் நிலவி வருதல் மரபாக உள்ளது.

இந்த உலக உயிர்கள் அத்தனையும் பிறந்து, வாழ்ந்து, அறம், பொருள், இன்பம் கண்டு வீடு பேறு அடைதலையே நோக்கமாகக் கொண்டது. அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு இறைபொருள் தான் எங்கும் உளதாகி, எப்போதும் உளதாகி, எப்பொருளையும் பொருந்த நடத்தி, அதனோடு பொருந்தி இருப்பதே இறைபொருளாகும் என்பது நிகண்டவாதி சமயத்தின் கோட்பாடாகும்.

ஒவ்வொரு பொருளின் இயக்கமும் இறைவனிடம் இருந்தே வருகிறது என்பது நிகண்டவாதி சமயத்தின் கருத்தாகும்.

எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை- அது
என்தலையில் போட்டது பழியை 

என்ற பட்டுக்கோட்டையார் பாடல் வரி போலவும்

அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
-மக்கள் அரங்கத்தில் வராது அவன் காட்சி 

என்ற கண்ணதாசன் வரிகள் போலவும்

பாட்டுவித்தாற் பாடுகின்றேன் 
பணிவித்தாற் பணிகின்றேன் 
பதியே நின்னைக் 
கூட்டுவித்தாற் கூடுகின்றேன், 
குழைவித்தாற் குழைகின்றேன் 
குறித்த பூனை 
ஊட்டுவித்தாற் உண்ணுகின்றேன் 
உறங்குவித்தால் உறங்குகின்றேன் 
உறங்கா தென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் 
அந்தோகிச் சிறிமேனால் ஆய தென்னே!

என்ற வள்ளலாரின் வரிகள் போலவும் நிகண்டவாதி சமயம் தன் கருத்தை வேரூன்றச் செய்திருக்கிறது.

உலக உயிர்கள் கட்டப்பட்டு இருக்கிறது உயிர்கள் ஆசை, காமம், கோபம், குரோதம் என்ற கயிற்றால் கட்டப்பட்டவையாகும்.

அவைகள் தன் கட்டை அவிழ்த்து, தன்னை இந்த மண்ணிற்கு அனுப்பிய இறைவனின் வீட்டை அடையும் என்பதை நிகண்டவாதி சமயம் தன் கருத்தாகத் தெளிவுபடுத்துகிறது.

இது பற்றி நீலகேசி உரை சொல்லும் போது தர்மம், அதர்மம் இரண்டும் ஒரு பறவைக்கு சிறகும் காலும் போல வாழ்வை நகர்த்திச் செல்லும் என்கிறது. நிகண்டவாதி சமயம் என்பது மிகச்சிறந்த கோட்பாடுகளை உள்ளடக்கியது. அந்த கோட்பாடுகளின் பார்வையில் காலம் என்பது குறுகிய அளவும், கற்பென்னும் நீண்டகால வாழ்வும் கொண்டதாகும். வாழ்வின் நிகழ்ச்சிகள் யாவும் காலத்தால் கழிவதே அன்றி வேறல்ல என்று நிகண்டவாதி சமயம் கூறுகிறது.

காமம் என்பது உடல்ஆகும். அது உயிர் வாழ்வதற்கான இடமாக உள்ளது. இன்ப துன்பங்களின் செயல்பாட்டை செய்தும் அதனால் விளையும் விளைவை அடைந்தும் வாழ்வதே உடல்களுக்கு விதிக்கப்பட்ட வழித்தடமாகும்.

சீவன் என்பது உடம்பில் கூடி இருப்பது, அது உடம்பின் அளவிற்கு ஏற்பக் கூடி பரந்து நின்று அனைத்துச் சுவைகளையும் கெடாதபடி உயிர் சுவைக்கிறது. இவ்வாறு நிகண்டவாதி சமயம் கூறுகிறது.

உயிர் என்பது உடம்பின் ஒரு பகுதியில் இருப்பது இல்லை. அது முழு உடலிலும் பரவி இருப்பதாகும். ஒரு பிறப்பில் தான் அடைய முடியாதவற்றை மறு பிறப்பில் தான் அடைந்து, தன் புலன்கள் அப்பிறப்பில் அவற்றை அடைந்திடச் செய்யும் என்று நிகண்டவாதி சமயத்தில் சொல்லப்படுகிறது.



உடம்பு என்பது புற வடிவமாகும். அவ்வுடம்பு உயிர் சொல்லும் நல்வினை, தீவினை ஆகிய இரண்டு வினைகளையும் பயக்கும். அதாவது, உடம்பின் வழியாகப் பிறக்கச் செய்யும் என்று நிகண்டவாதி சமயம் சொல்கிறது.

ஐந்து புலன்களும் புறவடிவம், அதனால்தான் புற உருவம் என்று நிகண்டவாதி சமயம் புலன்களைப் பற்றிக் கூறுகிறது.

உயிர்கள் யாவும் ஒரு பிறப்பில் தான் அடையவும் நுகரவும் அனுபவிக்கவும் விரும்பியவற்றை எவ்விதத் தடையும் இன்றி தன் புலன்கள் தான் உண்டு அனுபவித்து துய்த்து வெறுப்பை அடையும் மட்டும் அனுபவிக்க வேண்டும். அவ்வாறு நுகர்ந்தால் அவ்வுயிர் ஒரு நிலையில் தான் விரும்பியவற்றை முகமையாக வெறுத்து ஒதுக்கி விடுகிறது. அந்த வெறுப்பே வீடு பேற்றைக் காட்டுகிறது. இதனை ‘‘அனுபவித்து அறுத்திடுதல்’’ என்று நிகண்டவாதி தன் சமயக் கருத்தாக கூறி தன் கருத்தையும் உரையையும் தான் முடிவு பெறச் செய்தார்.

எனினும், மணிமேகலை தான் மனநிறைவு பெறவில்லை என்பதைக் காப்பியம் காட்டுகிறது. மன நிறைவு பெறாத மணிமேகலை தான் மற்றொரு சமயவாதியாகிய சாங்கியவாதியை நாடி ஏன் கேள்வியை முன் வைத்து அச்சமயத்தின் கோட்பாடுகளையும் கருத்துக்களையும் கேட்கத் தொடங்கினாள் என்பது தொடர்நிகழ்வு.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard