New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 12. மணிமேகலை மொழிபெயர்ப்புகள் எஸ். சரவணன்


Guru

Status: Offline
Posts: 24791
Date:
12. மணிமேகலை மொழிபெயர்ப்புகள் எஸ். சரவணன்
Permalink  
 


12. மணிமேகலை மொழிபெயர்ப்புகள்  -எஸ். சரவணன்

 

மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. இருப்பதை அப்படியே பார்த்து எழுதும் முறைமை உடையது மொழிபெயர்ப்பு இல்லை. மூலமொழியில் இருக்கும் பகுதியைச் சுவை குன்றாமல் மற்றொரு மொழி சார்ந்த வாசகனுக்கு அளிப்பது மொழிபெயர்ப்பாகின்றது. தற்காலத்தில் உலக அளவில் மொழிபெயர்ப்பு என்பது மிகத் தேவையானதாக உள்ளது. அறிவியல் துறையிலும், இலக்கியத் துறையிலும், தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தற்போது மொழிபெயர்ப்பின் அவசியம் மிக மிகத் தேவையானதாக உள்ளது. மொழிபெயர்ப்பின்றி ஓர் இலக்கியம் உலக இலக்கியமாக ஆக இயலாது என்ற சூழலில் இலக்கியப் பகுதியில் மொழிபெயர்ப்பு இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றது.

இந்தியா போன்ற பல மொழிகள் வழங்கும் நாடுகளில் மொழிபெயர்ப்பு என்பது அரசு, ஆட்சி அதிகாரங்களிலும், மக்களின் பண்பாட்டு ஒருங்கிணைப்பிற்கும் தேவைப்படுவதாக அமைகின்றது. இந்தியாவின் உயர் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பிற்குத் தனித்த விருதுகளை வழங்கி வருகின்றது. ஒரு படைப்பாளனுக்கு உள்ள மதிப்பினை மொழிபெயர்ப்பாளனுக்கும் தரும் போக்கினைச் சாகித்திய அகாதமி இவ்வழியில் முன்மொழிந்துள்ளது.

திருக்குறளை, திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். காளிதாசரின் சாகுந்தலம், ஜெயதேவரின் கீத கோவிந்தம் ஆகியன வடமொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பெற்றன. பி.சி ராய் வங்கமொழியில் இருந்து மகாபாரதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதுபோன்ற பல முன் முயற்சிகள் இந்திய இலக்கியங்கள் உலக மக்கள் அறிந்து கொள்வதற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன.

தமிழில் உள்ள இலக்கியங்கள் பலவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கண்டுள்ளன. திருக்குறளை ஆங்கிலத்தில் எச்.ஏ. பாப்பா என்பவர் மொழிபெயர்த்துள்ளார். கால்நடையியல் பற்றிய நூல் ஒன்றை வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். சிலப்பதிகாரம் இராமச்சந்திர தீட்சிதர், க.நா. சுப்பிரமணியம் ஆகியோரால் முழுவதும் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் குறிக்கத்தக்க பாடல்கள் ஏ.கே. இராமானுஜம் என்பவரால் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களை ஆங்கில மொழிக்கு ஆக்கிய இவரின் இம்மொழிபெயர்ப்பு உலக அளவில் சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்தது. மா.லெ தங்கப்பா என்பவர் முத்தொள்ளாயிரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இவ்வழியில் மணிமேகலைக்கும் சில மொழிபெயர்ப்புகளும் தோன்றியுள்ளன. மணிமேகலைக்கு ஒலிபெயர்ப்புகளும் தோன்றியுள்ளன. இக்கட்டுரை அவற்றை அறிமுகம் செய்து சில மொழிபெயர்ப்புகளை மதிப்பிடுவதாக அமைகின்றது.

 



மணிமேகலை காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்

 

மணிமேகலை முதன் முதலாக ஆங்கிலத்திற்கு ஆர்.பி. கே. அய்யங்கார் என்பவரால் மொழிபெயர்க்கப்பெற்று 1928 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது. 1989 ஆம் ஆண்டில் அலைன் டேனிலோ என்பவரும் டி.வி. கோபால அய்யரும் மணிமேகலையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். மணிமேகலையில் ஜப்பானிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு ஷகுஸோ மட்சுங்கா என்பவரால் இம்மொழிபெயர்ப்பு ஆக்கம் பெற்றுள்ளது.(1)

புகழ்பெற்ற நாவலாசிரியர் மாதவையாவும் மணிமேகலையை மொழிபெயர்த்து 1929 ஆம் பெண்களும் மொழிபெயர்த்துள்ளனர். இவர்களில் குறிக்கத்தக்கவர்கள் பிரேமா நந்தகுமார், லஷ்மி ஆம்ஸ்ட்ராம் ஆகியோர் ஆவர்.

 

அலைன் டேனிலோ, டி.வி கோபால அய்யர் ஆகியோரின் மொழிபெயர்ப்பு

 

அலைன் டேனிலோ என்பவரும் டி.வி கோபால அய்யரும் மொழிபெயர்த்துள்ள மணிமேகலை மொழிபெயர்ப்பு உரைநடைவயப்பட்டது. முப்பது காதைகளும் சொல்லும் கதை நிகழ்வுகளை இம்மொழிபெயர்ப்பு தொகுத்து உரைநடையில் சொல்லுகின்றது. இந்நூல் தி நியு டைரக்சன் புத்தக வெளியீட்டாளரால் நியுயார்க் நகரில் இருந்து வெளியிடப்பெற்றுள்ளது.

இம்மொழிபெயர்ப்பு முன்னால் விரிவான முன்னுரை வழங்கப் பெற்றுள்ளது. இதில் மணிமேகலையின் காலம், அதன் சமயப் பின்னணி, மணிமேகலையில் பயன்படுத்தப்பட்டுள்ள சமயம் தொடர்பான சொற்கள் ஆகியன எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. மேலும் முப்பது காதைகளின் கதைச்சுருக்கமும் ஓரிரு வரிகளில் தரப்பெற்றுள்ளன. இம்முன்னுரைப் பகுதி மிக முக்கியமானதாகும். இதுவே மணிமேகலையை அறிந்து கொள்ள விரும்பும் ஆங்கில மொழி அறிந்த வாசகனுக்குப் போதுமானதாகும். தி டான்சர் வித் மாஜிக் பவுல் என்று மணிமேகலைக்கு இவர்கள் பெயரிட்டுள்ளார்கள். இதனை எழுதியவர் சீத்தலைச் சாத்தன் என்பதை தி மெர்ச்சண்ட் பிரின்ஸ் சாத்தன் என்பதாக இந்நூல் குறிக்கின்றது.

எடுத்துக்காட்டிற்கு மலர்வனம் புக்க காதையின் சுருக்கத்தை இம்மொழிபெயர்ப்பு பின்வருமாறு தருகின்றது. “Manimekalai betakes herself to a garden on the outskirts of the city to gather flowers” என்பதாகும். 



இந்திரவிழா நடைபெற்றதை இம்மொழிபெயர்ப்பு பின்வருமாறு காட்டுகின்றது. “On this occasion the followers of the various creeds gathered in the town, explaining the doctrines expounded in their holy books and discussing the value of profane knowledge and of moral concepts as well as the various ways of attaining release. there was also skilled astrologers who could calculate the periods of the stars and the duration of time ” என்பதாக அமைகின்றது.

இதனைச் சீத்தலைச் சாத்தானரின் மணிமேகலைப்பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இம்மொழிபெயர்ப்பின் திறம் விளங்கும்.

தண்மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்உரை அறிவீர் பொருந்துமின்
ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் 
பட்டிமண் டபத்துப் பாங்குஅறிந்து ஏறுமின்
பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
வெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும்
தண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்துஉடன் திரிதரும்
நால்ஏழ் நாளினும் நன்குஅறிந் தீர்என்

என்பது மணிமேகலைப் பகுதியாகும். பல சமயத்து அறிஞர்களும் பூம்புகார் நகருக்கு வந்து, தன் சமயக் கருத்துக்களை எடுத்துரைத்தனர் என்ற செய்தியை மணிமேகலையைப் பாடல் வரிகள் சொன்ன அளவில் அதே அழுத்தம் தந்து மொழிபெயர்ப்பாளர்களும் மொழிபெயர்த்துள்ள நிலை இங்குக் குறிக்கத்தக்கது.

 

பிரேமா நந்தகுமார் அவர்களின் மணிமேகலை மொழிபெயர்ப்பு

 

பிரேமா நந்த குமார் அவர்கள் பாரதியார் பற்றிய பல ஆய்வுகளை எழுதிவருபவர். இவர் பாரதியாரின் பாடல்களை மொழிபெயர்த்தவர். இவர் ஒரு மொழிபெயர்ப்பினை மணிமேகலை துறவு என்ற அடிப்படையில் செய்துள்ளார். மணிமேகலை பற்றிய பிரேமா நந்தகுமார் அவர்களின் ஆங்கிலக் கருத்துரை என்பதாக இதனைக் கொள்ளலாம். இது ஐஐடபிள்யுசி என்ற அமைப்பால் வெளியிடப்பெற்றுள்ளது. பெங்களுரில் இயங்கிவரும் உலக கலாச்சாரத்திற்கான இந்திய மையம் இதனை வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய பதிமூன்று பக்கங்கள் வரை நீளும் இக்கட்டுரை நூல் ஆங்காங்கே மணிமேகலையின் அடிகளைக் கவிதையாகவே மொழிபெயர்த்துள்ளது. 

ஈங்குஇப் பாத்திரம் என்கைப் புகுந்தது
நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து
வித்தி நல்அறம் விளைந்த அதன்பயன்
துய்ப்போர் தம்மனைத் துணிச்சிதர் உடுத்து
வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி
வெயில்என முனியாது புயல்என மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்
ஈன்ற குழவி முகங்கண்டு இரங்கித்
தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே

என்ற பாத்திரம் பெற்ற காதையில் வரும் அடிகளைப் பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளார் பிரேமாநந்தகுமார்.

In this enormous island of Jambu,
There ate prosperous homes made by good deeds.
In the past: at their entrance stand many
Wearing rags, suffering pangs of hunger,
Unmindful of heat, daring heavy rains,
Loaded with sorrows .innumerable,
The legacy of their past evil ways.
This magical vessel acts through the heart
Even like a mother’s breast when she yields
Sweet milk out of love for her new-born babe.”

These- few lines give us an idea of Manimekalai as a perfect

இவ்விரு பகுதிகளையும் ஒப்பிட்டுக் காணுகையில் மொழிபெயர்ப்பாளரின் திறமும் மூலநூல் ஆசிரியரின் திறமும் இணைந்து செல்வதைக் காணமுடிகின்றது. இதுபோன்று சிற்சில அடிகளுக்குக் கவிதையாகவே மொழிபெயர்த்து இக்கட்டுரையை பிரேமாநந்த குமார் அளித்துள்ளார்.

 



லட்சுமி ஆம்ஸ்ட்ராம் மொழிபெயர்ப்பு

 

லட்சுமி ஆம்ஸ்ட்ராம் அவர்களின் மொழிபெயர்ப்பு மணிமேகலைக் கதையை கதைப்பகுதி விடுபடால் உரைநடையில்சொல்லும் பகுதியாக விளங்குகின்றது. இவர் இந்தியாவில் பிறந்து ஐரோப்பிய எழுத்தாளராக மிளிர்பவர். இவர் இந்திய செவ்விலக்கியங்களை மொழிபெயர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். நவீன தமிழ் ஆக்கங்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் ஆங்காங்குப் படங்களுடன் மணிமேகலையை மொழிபெயர்த்து அளித்துள்ளார். இதனை வெளியிட்டவர்கள் ஓரியண்ட் டாங்மன் பதிப்பகத்தார்.

இதில் சிலப்பதிகாரம் முன்பகுதியிலும் பின்பகுதியில் மணிமேகலையும் தரப்பெற்றுள்ளன. கதையை அறிமுகப்படுத்தும் இந்நூல் மூல நூல் பகுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் தனக்கான பகுப்புகளை வைத்துக் கொண்டுள்ளது. இதன் காரணமாக 22 கிளைப்பிரிவுகள் இதனுள் அமைந்துள்ளன. கச்சி நகர் புக்க காதை என்பதை தி பெமினைன் அட் காஞ்சி என்று மொழிபெயர்த்துள்ளார் இவ்வாசிரியர். இதன்வழி இந்த மொழிபெயர்ப்பு பெண்ணியச் சிந்தனை வயப்பட்டது என்பது தெளிவாகின்றது.

இவ்வாறு பல்வேறு மொழிபெயர்ப்புகள் மணிமேகலையை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளன. செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனமும் ஒரு நல்ல மொழிபெயர்ப்பை மணிமேகலைக்குக் கொண்டு வர முயற்சி எடுத்துவருகிறது. இம்முயற்சிகள் வென்று மணிமேகலையையும் தமிழ் இலக்கியத்தையும் உயர்த்தட்டும்.

 

அடிக்குறிப்புகள்


1. Manimegalai was first translated into English by R. B. K. Aiyangar and was published in 1928 in Manimekhalai in its Historical Setting. The extracts were then republished in Hisselle Dhammaratana’s Buddhism in South India. A more recent translation of the work was done in1989 by Alain Daniélou in collaboration with T.V. Gopala Iyer. The epic was also published in a Japanese translation by Shuzo Matsunaga in 1991.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard