New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் காலம்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் காலம்
Permalink  
 


https://dravidianatheism2.wordpress.com/2015/09/19/dravidian-protagonists-still-exploiting-in-the-name-of-race-racism-and-racialism/
Date of Thiruvalluvar 400-500 CE

Date of Thiruvalluvar 400-500 CE

திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் காலம் என்ன?: திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் காலத்தை பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது[1]. திருக்குறள் தேதியை இக்கால ஆராய்ச்சியாளர்கள் 9ம் நூற்றாண்டு வரை இழுத்துள்ளனர். நவீனகால அறிஞர்கள் 200 BCE முதல் 800 CE வரை இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். திராவிடத்துவவாதிகள் போற்றும் காமில் வேய்த் ஸ்வெலெபில் என்பவரே திருவள்ளுவரது காலம் 400-500 CE என்று 1974ல் குறுப்பிட்டார்[2]. தமிழக அரசு 31 B.C. E என்று தீர்மானித்தாலும், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தனித்தமிழ் இயக்கம் 1922ல் மறைமலை அடிகள் தலமையில் 500க்கும் மேல் அறிஞர்கள் கூடி, தமிழர்களுக்கு ஒரு தனியான நாட்காட்டி (calendar) இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கேற்றபடி திருவள்ளுவர் ஆண்டு என்பதனை உருவாக்கினர். அதன்படியே திருவள்ளுவர் பிறந்த வருடம் 31 BCE (Before Current Era) என்று நிர்ணயித்தனர்! 1971ல் கருணாநிதியின் தலமையில் அதனை ஏற்றுக் கொண்டது. ஆனால், எவ்வாறு அவர்கள் அவ்வாறு தேதியைக் கண்டுபிடித்தனர் என்பது யாருக்கும் தெரியாது! [அப்பொழுது அவர்கள் கிமு, கிபி என்றுதான் குறிப்பிட்டார்கள்][3].

Political ideas of M S Golwalkar- book

Political ideas of M S Golwalkar- book

ஜோதிடம்-வானியல் ரீதியில் தேதி கண்டுபிடிக்கப்பட்டதா?: இரா. இளங்குமரனார் என்ப்வர் கொடுக்கும் விவரங்கள்[4], “மறைமலை அடிகளார், திருவள்ளுவரைப் பற்றிக் கூறிய தலைமைப் பொழிவில், “திருவள்ளுவ நாயனார், கிறித்து சமய முதல்வரான ஏசு முனிவர் பிறப்பதற்கு முப்பதாண்டுகள் முன்னரே பிறந்தருளினார் என்பதை, மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது பெருநூலிலே பலநூற் சான்றுகள் கொண்டு விளக்கிக் காட்டியிருக்கின்றாம். அதன் விரிவை அங்கே கண்டு கொள்க” (செந்தமிழ்ச் செல்வி. 13:550) என்றார். “இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர்தம் திருநாளாய வைகாசி அனுடத்தன்று வள்ளுவர் விழாக் கொண்டாடுவதற்கான முறைகளைத் தேர்ந்து அமைப்பதற்காகவே இக்கழகம் கூட்டப்பட்டது” என்கிறது திருநாட்கழக அறிக்கை-1 (செந்தமிழ்ச் செல்வி. 13:335). திருவள்ளுவர் திருநாள் கி.மு. 31 வைகாச அனுடம் என்றே தீர்மானித்தார் அடிகள். அதிலிருந்து தி.மு.; தி.பி. என்னும் வழக்கம் தமிழ்ப்பற்றாளரிடம் உண்டாயது. நாட்காட்டி நாட்குறிப்பு என்பனவும் ஆக்கப்பட்டன! பாவாணர் பாவலரேறு வழிஞர் திருவள்ளுவர் ஆண்டைப் பற்றினர்”.  இப்படியொரு கருத்தும் காணப்படுகிறது[5], “முதலிரு கழக இலக்கியமும் அழிக்கப்பட்டபின், தமிழ் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தாங்கிக்கொண்டிருக்கும் இருபெரு நூல்களுள் ஒன்றான திருக்குறளின் காலம், அதை இயற்றிய திருவள்ளுவரின் காலம், இன்ன நூற்றாண்டில் இன்ன வாண்டிலிருந்து இன்ன வாண்டுவரை என்று திட்டவட்டமாய்க் கூறுதற்கியலாவிடினும், தொல்காப்பியர் காலமாகிய கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கும் கடைக்கழக முடிவாகிய கி. பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாய்க் கிறித்துவிற்கு முந்தியதென்று கொள்வது, பெரும்பாலும் குற்றத்திற்கிடமில்லாததும் ஏறத்தாழ உண்மையை ஒட்டியதுமாகும்”.

மறைமலை அடிகள், நெடுஞ்செழியன், கோவால்கர்

மறைமலை அடிகள், நெடுஞ்செழியன், கோவால்கர்

உலகப்பொதுமறையாதிராவிடர்களின் தனித்துவம் பாராட்டும்நூலா?: தனித்தமிழ்இயக்கம் ஆரம்பித்தபோது, திருக்குறள் தமிழருக்குத்தான் சொந்தம் என்பது போன்ற ஒரு குழப்பம் இருந்தது. பிறகு, திருவள்ளுவர் ஜைனர் என்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள். இல்லை அவர் வைணவர் தான், சைவர் தான் என்றெல்லாம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆனால், கோல்வால்கர் என்ன சொன்னார் என்பதனை நோக்கவேண்டும். “எந்தஒரு வழிபாட்டையும்கடவுள் பெயரையும் குறிப்பிடாமல்மோட்சத்தைப் பற்றிய விவரத்தை கூறுகிறதுஅதனால்அது எந்தபிரிவினரையும் சேர்ந்த நூலாகாதுமகாபாரதத்தில் காணப்படும் சமூகவாழ்க்கை அப்படியே திருக்குறளில் காணப்படுகிறதுஇந்துவிடம்தவிரஇத்தகைய சிறப்பான சமூக வாழ்க்கை தத்துவம் வேறேங்கும்காணமுடியாதுஇந்து சிந்தனைகளை விளக்கும்பவித்ரமான இந்துமொழியில் உள்ள ஒரு தூய்மையான நூல் ஆகும்”. இப்படி சொன்னது தான், இன்றைக்கு வீரமணிக்கு உரைக்கிறது. அதனால், மறுபடியும் திராவிடத்திற்குள் சுருக்கப் பார்க்கின்றனர் போலும்!

தொல்காப்பியம்

தொல்காப்பியம்

தொல்காப்பியத்தின் காலம்: தொல்காப்பியத்தின் காலமும், தமிழ் ஆராய்ச்சியாளர்களிடம் படாத பாடு பட்டது. இலக்கியம் முன்னதா, இலக்கணம் முன்னதா என்ற “கோழி-முட்டை” விவாதங்களை வைத்துக் கொண்டு காலந்தள்ளினர். பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும்.

குமரிக்கண்டம் கருதுகோள்

குமரிக்கண்டம் கருதுகோள்

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றியமூத்த குடி தமிழ் குடி”: கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி – தமிழ் குடி என்று தமிழின் தொன்மை அனாதியானது என்று விளக்கம் கொடுத்தனர். கல் தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்று மாற்றி விளக்கம் கொடுத்தனர். ஆனால், சரித்திர ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் வாய்பந்தல் போட்டே காலந்தள்ளினர். திராவிடத்துவவாதிகளான நெடுஞ்செழியன் போன்றோர் தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டு என்றும், ரிக் வேதத்துக்கு முற்பட்டது, என்றெல்லாம் பேசினர். இவர்கள் ஆதாரங்கள் பற்றி கவலைப்படுவதேயில்லை. இறையனார் களவியல் உரையின் முன்னுரையில் தான் முச்சங்களின் விவரங்கள் காணப்படுகின்றன. 12ம் நூற்றாண்டில் நக்கீரர் எழுதியதாக இந்நூல், ஒரு பார்ப்பனரின் நூலாகும். பிறகு திராவிடத்துவவாதிகள், இதனை எப்படி ஏற்றுக் கொள்கின்றனர்? “ஆரிய-திராவிட” இனவாதங்களை இன்றளவும் பிடித்துக் கொண்டு, கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டு, சித்தாந்தங்களை உண்மை என்று உறுதியாகப் பிடித்துக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். பிறகு, ஆராய்ச்சியாளர்கள் இவர்களது நிலையை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? பெரியார் திடலில் உள்ள இரண்டு அரங்களில் தங்களுக்கு என்று வேண்டப்பட்டவர்களை வைத்துக் கொண்டு, இவ்வாறு பேசிக்க்கொண்டும், குறும் புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டும் காலம் தள்ளலாம். ஆனால், சரித்திர ரீதியில் ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

19-09-2015

[1] His date of birth may have been as early as 200 BCE or as late as 800 CE.

the Tirukkural was written between 100 and 200 BC,

Considering all the facts given above we may infer that these two epics would have been written in a period from 130 to 150 A.D. If the date of Manimekalai is within 130 to 150 A.D., then Tirukkural must be having adate before this.

But these facts by themselves do not warrant the inference that theTirukkural must have been composed soon after the Tolkappiyam, and that therefore, the date of the Tirukkural is sometime between 300 B.C and 1 B.C.

The widely accepted date of Valuvar is 31 B.C. E

[2] Kamil Veith Zvelebil, A History of Indian Literature, Tamil literature, Otto Harrassowitz, Wiesbaden, Germany, 1974, p.119.

date of the work sometime between A.D. 400-500 may be the best .

[3]https://indianhistoriography.wordpress.com/2010/01/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/

[4]முதுமுனைவர் இராஇளங்குமரனார்  திருவள்ளுவர் காலம், Oct 1, 2012, http://siragu.com/?p=4628

[5] http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=197&pno=148



-- Edited by Admin on Friday 11th of May 2018 02:45:53 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 திருக்குறள் மிகவும் எளிமையான நடை, இயற்றப்பட்டு 1400 ஆண்டுகள் பின்பும் இன்றைக்கும் படிப்போர் புரிந்து கொள்ளும் எளிமை.  அதற்கு முந்தைய சங்க இலக்கியம் போல கடுமையான நடை, புரியாத பல சொற்கள் என்று இல்லாமல் குறள் வெண்பாவில் இயற்றப் பட்டது குறள். திருவள்ளுவர்  காலம் தற்போது காலம் 7 - 8ம் நுற்றாண்டு என்பதில் நடுநிலையாளர்களுள் ஒரு கருத்து ஒற்றுமை வருகிறது.
திருவள்ளுவர் காலம் பற்றிய ஆய்வு முடிவுகள் நடுநிலையாய் செய்தவர் பேரறிஞர் வையாபுரி பிள்ளை, இவர் ஜி.யு.போப் 10ம் நூற்றாண்டு என்பதாய் வள்ளுவர் காலம் குறித்ததை, 600ஐ ஒட்டி என்றார்.
திருக்குறளில் உள்ள பல சங்கப் பாடல்தொடர்களை தலைகீழ்ழய் திருக்குறளை சங்கப் புலவர்கள் பயன்படுத்தியதாய் கூறித் திரிந்த வள்ளுவரால் பாழ்செய்யும் பல்குழு(குறள் 735) எனும் பிரிவினைவாத சக்திகள் அவரை கடுமையாய் விமர்சித்தனர். 
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு என்னும் பெயர் பெற்றன. இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவது திருக்குறள். இந்த நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதாநுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் என்ற வேறு பெயர்களும் உண்டு. இதே போல திருக்குறளுக்கும் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவை திருவள்ளுவம், பொய்யாமொழி, முப்பால், தெய்வநூல், உத்தரவேதம், வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன் என்பன. ஒன்றே முக்கால் அடியில் உலகக் கருத்துகளை உள்ளடக்கிய அருமையான நூல் இது.
தமிழில் உள்ள அறநூல்களுள் காலத்தால் முந்தியதும் தன்மையால் தலைசிறந்ததும் திருக்குறளாகும். ஈரடி வெண்பா, குறள் வெண்பா எனப்படும். அவ்வெண்பாவால் ஆன நூலும் ஆகுபெயராகக் குறள் என்று பெயர் பெற்றது. அதன் சிறப்பு நோக்கித் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருக்குறள் என்று வழங்கி வருகின்றோம்.

திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பாலாகவும், எட்டு இயல்களாகவும் பிரித்துள்ளனர். அறத்துப்பாலில் இல்லறவியல் (குடும்பவாழ்வு), துறவறவியல், ஊழியல்(விதி) பற்றியும், பொருட்பாலில் அரசு இயல் (ஆட்சி சார்ந்தது), அங்கவியல்(அரசாங்கத்திலுள்ள வரி, படை, பாதுகாப்பு குறித்த அம்சங்கள்), ஒழிபு இயல்( இவை தவிர மற்றவை) பற்றியும், இன்பத்துப்பாலில் களவியல் (காதல்), கற்பியல் ஆகியவை பற்றியும் கூறப்பட்டுள்ளன. அறத்துப் பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்கள் உள்ளன.

திருக்குறள் பாயிரத்தில் (முன்னுரை) நான்கு அதிகாரங்கள் உள்ளன. அதாவது கடவுள், மழை, துறவிகள், தர்மம் ஆகியவற்றை வாழ்த்திப் பாடிவிட்டு நூலுக்குள் நுழைகிறார் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற முதல் நான்கு அதிகாரங்களும் முன்னுரையாக உள்ளன. இந்நூலில் ஒரு சிறப்பு என்னவென்றால், "குறிப்பறிதல்' என்னும் அதிகாரம் இரண்டு முறை வருகிறது. பொருட்பால் 71வது அதிகாரமும், இன்பத்துப்பால் 110வது அதிகாரமும் இந்தப் பெயரைக் கொண்டவை. பொருட்பால் குறிப் பறிதலில், மன்னனின் குறிப்பறிந்து அமைச்சர்கள் செயல்படுவது பற்றியும், இன்பத்துப் பால் குறிப்பறிதலில், காதலி தன் மேல் காதல் கொண்டிருக்கிறாளா என்று குறிப்பறிவது பற்றியும் வள்ளுவர் அருமையாக எழுதியுள்ளார். திருக்குறளுக்குப் பத்துப்பேர் இடைக்காலத்தில் உரையெழுதி உள்ளனர். இவ்வுரையாசிரியர் பெயர்களைப் பின்வரும் வெண்பாவால் அறியலாம்.
https://www.facebook.com/groups/ongarakudil
தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்
பரிமேலழகர், பருதி, திருமலையர்,
மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், வள்ளுவர் நூற்கு
எல்லை உரை செய்தார் இவர்

இவர்களுள் மணக்குடவர், காளிங்கர், பரிப்பெருமாள், பரிதியார், பரிமேலழகர் ஆகியோர் உரைகளே இப்பொழுது கிடைக்கின்றன. இவற்றுள் பரிமேலழகர் உரையே பெரியோர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றது.

திருக்குறள் 1730ம் ஆண்டில் லத்தீன் மொழியில் முதன் முதலாக மொழி பெயர்க்கப் பட்டது. இத்தாலி நாட்டில் இருந்து தமிழகம் வந்த வீரமாமுனிவர் இந்த அரும்பணியைச் செய்தார். இதன்பிறகு பலர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர். இவர்களில் கிண்டர்ஸ்லே (1784), எப்.டபிள்யு. எல்லிஸ்(1812), ஜி.யு.போப்(1886), வ.வே.சு. அய்யர் (1916), கோ.வடிவேலு செட்டியார்(1919), எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை( 1927), ராஜாஜி (1937), கஸ்தூரி ஸ்ரீனிவாசன்(1969) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பிரெஞ்சு, ரஷ்யன், மலாய், பர்மீஷ், பிஜி, சைனீஷ், ஸ்பானிஷ், சிங்களம், சமஸ்கிருதம், ஜெர்மன், இந்தி, மராத்தி, குஜராத்தி, உருது, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் இது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஜெர்மன் மொழியில் காமரர் என்பவர் 1980 லும், பிரெஞ்சு மொழியில் 1848, 1853ம் ஆண்டுகளிலும் ஏரியல், டெடுமாஸ்ட் என்ற அறிஞர்கள் மொழி பெயர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-Nilani


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 தமிழகத்தில் சைவசித்தாந்தம் என்பது வேத ஆகமங்களோடு இயைந்த சைவசித்தாந்தம்.

சைவசித்தாந்த நூல்களே "வேதாந்த தெளிவாம் சைவசித்தாந்தம் "என்றும், சிவாகமங்கள் சித்தாந்தமாகும் என்று அறுதியிட்டு உரைக்கின்றன.

ஆனால் தற்காலத்தில் சைவசித்தாந்த வகுப்பு என்ற பெயரில் திராவிட +கம்யூனிச +மிஷனரி கொள்கை வயப்பட்டவர்கள் சிவவேடம் கொண்டு, சைவ மரபுகளுக்கு மாறாக வேத நிந்தனை, ஆகம நிந்தனை, வடமொழி நிந்தனை, சிவாச்சாரியார் நிந்தனை செய்யும் வகுப்புகளாக இவ்வகுப்புகள் மாறிவருகின்றன.

ஒரு மடத்தின் சித்தாந்த நூலிலேயே தமிழில் வேதம் இருந்தது என்று வருகின்றது.இந்த நூலை தயாரித்தவர் திராவிட கொள்கை சார்பாளர்.எனவே சித்தாந்த கருத்துகளோடு திராவிட கருத்துகளையும் தூவி உள்ளார்.

ஒரு சில இடங்களில் மட்டும்தான் சைவசித்தாந்த வகுப்புகள் மரபு ரீதியாக நடைபெற்றுவருகின்றது.அவ்வகுப்பு ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறோம்.

இதோ சைவசித்தாந்தம் என்ற பெயரில் திராவிடம் +கம்யூனிசம் பரவி உள்ளது என்பதற்க்கு இந்நூல் ஒரு எடுத்துக்காட்டு.

சென்னை சைவசித்தாந்த பெருமன்றம் வெளியிட்டுள்ள, #மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் என்ற நூல்.

இந்நூலை இயற்றியவர் முனைவர் பத்மாவதி அவர்கள்.
தீவிரமான மார்க்ஸிய பின்புலம் கொண்டவர்.

இவர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில்,

ஆவுடையார் கோயிலில் காலியாக கருவரையும் அம்மன் சந்நதியும் ஏன் என்ற சந்தேகத்தில் ஆரம்பித்து,

அக்கோயில் கருவறையில் உள்ளது பீடமே, ஆவுடையார் அல்ல என்று முடிவெடுத்து,

எனவே ஆவுடையார்கோயில் ஒரு சாஸ்தா கோவிலாக இருக்கலாம் என்று எழுதியுள்ளார்.

மேலும், அக்கோயிலில் லிங்கம் இல்லை என்பதால், அக்கோயிலின் முழுமுதல் தெய்வம் சிவன்தான் என்பதற்க்கான சான்று இல்லை என்கிறார் இந்த அம்மையார்.

இந்நூலின் கடைசி பக்கத்தில் திருவிளையாடற்புராணமே ஒரு கட்டுக் கதை என்று நிறைவு செய்கிறார்.

இதற்காக அவர் சில திருவாசக விளக்கங்களை அங்கங்கு எடுத்து தூவி தம் கருத்தை நிரூபணம் செய்ய முயல்கிறார்.

நாம்தான் சைவசமயத்தை திறந்துவைத்துள்ளோமே! 
தீக்ஷை வேண்டாம், 
குரு உபதேசம் வேண்டாம் ,
சைவ வாழ்வியல் வேண்டாம்.

தமிழ் தெரிந்தால் போதும் திருமுறை சித்தாந்தங்களுக்கு யார் வேண்டுமானாலும் உரை எழுதலாம், பாடம் எடுக்கலாம், சொற்பொழிவு ஆற்றலாம் என்று.அதையும் கைதட்டி ரசிக்கதான் இங்கு ஒரு கூட்டம் உள்ளதே.

அந்தபடிக்கு மார்க்சிய பின்புலம் கொண்ட இந்த அம்மையார் மாணிக்கவாசகர் வாக்குகளை எல்லாம் ஆராய்ந்து இந்நூல் எழுதியுள்ளார்.

பொதுவாக ஆராய்ச்சி என்ற பெயரில் நம் சைவசமயத்தில் குழப்பம் ஏற்படுத்துவது காலம் காலமாக நடைபெற்றுவருகின்றது.

மேலும் இதுபோன்ற திராவிட +மார்க்சியவாதிகள் தெய்வநாயகம் போன்ற மிஷனரிகள் ஆராய்ச்சி என்ற பெயரில் நம் சைவசமயத்தை குழப்பிக்கொண்டுதான் இருப்பார்கள்.இது அவர்கள் இயற்க்கை.

ஆனால் ,திருவிளையாடற்புராணம் கட்டுக்கதை என்றும், ஆவுடையார் கோயில் சிவன் கோயில் அல்ல என்ற ஆராய்ச்சி நூலை "#சைவசித்தாந்தம் "என்ற பெயர் கொண்ட ஒரு மன்றம் வெளியிடுவது எவ்வளவு காலக்கொடுமை.

அவ்வாறாகில் மாணிவாசகர் காலம் முதல் பல அருளாளர்கள், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்றவர் எழுதிய இலக்கியம் வாக்குகள் அனைத்தும் பொய்யோ?

ஒரு சாதாரண பாமர சைவன் இந்நூலின் ,"மாணிக்கவாசகர் "என்ற தலைப்பையும், வெளியிட்டுள்ள சைவசித்தாந்த பெருமன்றம் என்ற அமைப்பின் பெயரை மட்டுமே கவனித்துவிட்டு இந்நூலில் உள்ளது அனைத்தும் உண்மை என நம்பிவிடுவான்.

ஆக, எப்படியெல்லாம் மார்சிய &திராவிட கொள்கைகள் சைவசமயத்தில் இறக்குமதி செய்யப்படுகின்றது என்பது சிந்திக்க.

சைவசித்தாந்த மகாசமாஜம் என்ற பெயரில் ஞானியார் சுவாமிகளும் J.m.நல்லுசாமிப்பிள்ளை போன்ற சிவபூஜா செல்வர்களும் இருந்த சைவசித்தாந்த மன்றம் இன்று இத்தகைய மார்க்சிய பின்புலம் கொண்ட நூலை வெளியிடும் நிலையில் வந்து நிற்பது உண்மையில் சைவசமயத்தின் தவக்குறைவே.

காரணம் சைவசமயத்தில் பாமர மெய்யடியார்களை தவிர்த்து, பல இடங்களில் திராவிட +கம்யூனிச கொள்கை உடையோர் பரவலாக நுழைந்துவிட்னர்.அது அவர்களுக்கே தெரியவில்லை.உணரவும் இல்லை.

எப்படியும் மன்றம் எதிர்காலத்தில் நடத்தும் சைவ சித்தாந்த மநாட்டில் நான்கு திராவிட கொள்கை சார்புடையவருக்கும், இரண்டு மார்ஸிய சிந்தனையாளருக்கும் மேடையில் இடம் உண்டு.
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேயசிவம். 

Image may contain: text

 



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

சைவசமயம் வேத ஆகமங்களை போற்றும் சமயம். சைவசித்தாந்தங்களுக்கு ஆகமமே அடிப்படை.

இவ்வாறு ஒரு பக்கம் மெய்யடியார்கள் மரபுரீதியாக தொண்டுகளை செய்துகொண்டிருக்க,

மற்றொருபக்கம் ஆராய்ச்சி, அன்பு, தமிழ் மொழி என்ற பெயரில் பிரிவினை சக்திகள் சைவசமயத்தில் புகுந்து சீர்குலைத்து வருகிறார்கள்.

இவர்களை திட்டமிட்டே சைவ சித்தாந்த மேட்டிமையில் உள்ளவர்கள் உள் நுழைக்கின்றார்கள்.காரணம் அவர்களுக்கு சைவசித்தாந்தம் என்பதை திராவிட&மிஷனரி கலாச்சாரமாக மாற்ற வேண்டும் என்பதே.

இப்படியான திட்டமிட்ட மார்க்சிய +திராவிட +மிஷனரி கருத்துகளை சைவசமயத்தில் புகுத்துபவர்களை இனம் காணமுடியாமல் பாமர சைவசமய பக்தர்கள் குழம்புகின்றார்கள்.

ஆராய்ச்சி என்ற பெயரிலான இவர்கள் எதிர்பார்பதும் இத்தகைய குழப்பத்தையே



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

உண்மைங்க தமிழ் மொழி வழிபாடு, ஆகமம் கூடாது, வேதம் கூடாது, சமஸ்கிருதம் கூடாது என சொல்லி மதம் மாற்றவே அடிபோடுகிறார்கள். 

நமக்கோ புலம்புவதை தவிர வேறு இல்லை என ஆகிறது காரணம் கோவில் வருமானம் முழுக்க அரசு கையிலே. மறுப்பு கூட பதிப்பிக்க காசு தேடவேண்டியிருக்கிறது.

 

நான் இன்று சைவசித்தாந்தப் பெருமன்ற நிகழ்ச்சி ஒன்றை யூடுயுபில் பார்த்தேன். அதில் மாணிக்கவாசகர் பற்றிய நூல் எழுதிய அம்மையார் காரைக்கால் அம்மையார் அம்மையாரைப் பற்றிய ஆராய்ச்சி??? உரை என ஒன்றை நிகழ்த்தியுள்ளார். காரைக்கால் அம்மையார் பவுத்த சமயத்திலிருந்து சைவத்துக்கு மாறினார், காரைக்கால் அம்மையாரீ முதன் முதல் சிவனைக் குறிப்பிட்டவர், அவருக்கு முன் சிவனைப் பற்றிய குறிப்புக்கள் இலக்கியத்திலோ வரலாற்றுச் சான்றுகளிலோ இல்லை, பவுத்தர்களே கடல் வாணிகம் செய்தவர்கள், சமணர் தரைவழி வணிகர்கள், மாணிக்க வாசகர் 10 ஆம் நூற்றாண்டினர், ஆவுடையார் கோயில் பவுத்தலக் கோயில் . என்னால் கொஞ்ச்ச நேரத்திக்குமேல் இந்த உளறல்களைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. உடல் சூடேறி விட்டது. சைவசித்தாந்த சமாஜம் சைவ மரபினைக் காக்க, பேணிப் போற்ற நிறுவப்பட்டது. பாம்பன் சுவாமிகள், ஞானியாரடிகள், மறைமலையடிகள், சச்சிதானந்தம் பிள்ளை, நல் . முருகேச முதலியார், தொண்டைமண்டலஆதீனம்,229 ஆவது சந்நிதானம், அருணை வடிவேல் முதலியார், தண்டபாணி தேசிகர்,மலேசியா இரத்தினம் செட்டியார், இராம சங்க்குப் பாண்டியன், இரத்தினவேலனார், மு. அருணாசலம், வை . இரத்தின சபாபதி முதலிய சைவப் பெரியார்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்த அமைப்பை, இந்த அம்மையாரைப் பொன்ற கடப்பாரையைக் கொண்டு தற்போதய தலைவர் சிதைக்கின்றார். இந்த ஆராய்ச்சி (??) யைச் சென்னைப் பல்கலைக் கழ்கத்தில் ந்டத்தியிருந்தால் நான் அதிகம் கவலைப் பட்டிருக்க மாட்டேன். சைவ மரபைப் போற்றிக் காக்க வேண்டிய அமைப்பு சைவத்தி அழிக்கும் செயலைச் செய்து கொண்டிருக்கின்றது. சமாஜம் பெருமன்றம் ஆனதிலிருந்தே எந்தொடர்பு நீங்க்கியது. தட்டிக் கேட்கும் பழைய உறுப்பினர்கள் இல்லையோ? அகில இந்திய வரலாற்றுக்கு ஒரு ரொமிலா தாப்பர் என்றால் தமிழக வரலாற்றுக்கு பத்மாவதி அம்மையார் போலப் பலர் சைவ அமைப்புக்குள்ளேயே நுழைந்துவிட்டனர்.. பெருமன்ற உறுப்பினர்களே விழித்துக் கொள்ளுங்க்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

மனம் இல்லாமல் 
வேறு வழியில்லாமல் உண்மை தெரிய சற்று காட்டமாக பதிவுகள் போட காரணம் 
இவ்வாறு உளறல்கள் நினைவு தெரிந்த நாள் முதல் வகுப்பு,பட்டிமன்றம் ,சொற்பொழிவு என மடம் கோவில்களை அரசியல் பத்திரிக்கை டீவிகள் துணையுடன் அவைதிக ப்ரச்சார த்வேஷங்களை(எங்களுக்கு மீடியா முக நூல் வாட் சப் அப்ப்இல்லை)முற்றிலும் வேற்று மத வேற்று தேச கருத்தை பரப்ப ஓர் கலமாக பல ஆலயங்களை ஆக்ரமித்து செய்ததை பார்த்துள்ளவன்.என்னை போல் பலர்.
இன்று தங்கள் போன்ற சீகாம் பட்டி ஐயா போன்ற பலர் சிவஅறிஞர்களும் நிஜ மார்காநுசாரிகளும் உளீர்கள்.வருங்காலத்தில்்தங்களை போன்ற சான்றோர்கள் உண்மைகள் சொல்ல வர?????களே.இன்று ___ச்சாரிய குழந்தைகள் உள்பட சைவ விஷயம்????
சொன்னால் கோபிப்பார்களே.ஆனால் பொய் புகல கூடாது.உண்மைாஅதுதான்.அப்படி பட்ட ஸ்திதியில்
தங்கள் போன்ற ஆன்றோருக்கே(தர்மத்து்க்காக)கோபம் வரும் போதுசிறியேன் பதிவுகள் நியாயமே.என தோனனறுகின்றது.மகிழ்ச்சி.தங்களின்்வைதிக சைவ நூல் எனக்கு தேவை .நன்றி ஐயா.இன்பாக்ஸில் முக வரி முன்பே அனுப்பியுள்ளேன்.நல்லாரை காண்பதுவும் நன்று.சிவ சிதம்பரம்
தங்கள் மாணவர் குருபக்தி பூர்வமாக திருச்சாயில்சைவர் என்பதற்க்கு உதாரணமாக உள்ளார்.தங்கள் மீது அத்தணை பிரியம் .ஜயகுமார் ஐயாவுக்கு.பொன்னம்பலம்

 

சைவருக்கு பொருளாதாரம்
மீடியா பின்னனி இல்லை
அரசியல் வலுவும் இல்லை

குழப்பங்கள் மட்டுமே.
ஆனாலும் சைவ பெரியவர்கள் ஏதோ ஓர் மூலையில் இருந்து நம்மை காக்கின்றனர்

 

No automatic alt text available. Image may contain: text



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 ஒரு வரலாற்று ஆய்வாளர் என்ற வகையில் ஆவுடையார் கோயிலில் உள்ள புதிரான விஷயங்களைப் பற்றிய தனது ஊகங்களையும், திருவிளையாடல் புராணம் பற்றிய தனது கருத்தையும் தெரிவிக்க அந்த அம்மையாருக்கு முழு சுதந்திரம் உண்டு. மேலும் அவர் எழுதியிருப்பது வரலாற்று ஆராய்ச்சி, தத்துவ / சமய விளக்கம் அல்ல. எனவே, சைவதீட்சை பெறவில்லை போன்ற ஆட்சேபங்களுக்கு இடமில்லை என்று நினைக்கிறேன். உண்மையான பிரசினை - இத்தகைய கருத்துக்கள் அடங்கிய நூலை 'சைவ சித்தாந்த பெருமன்றம்' என்ற பெயரில் இயங்கும் அமைப்பு வெளியிடுவது எதற்காக? அவரது பல்கலைக் கழகமோ அல்லது வேறு பதிப்பகமோ வெளியிடலாமே? அந்த மன்றத்தின் உண்மையான நோக்கங்கள் என்ன? அதை அந்த மன்றத்தை ஆதரிப்பவர்கள், பண உதவி செய்பவர்கள் ஆகியோர் கேட்க வேண்டும். சைவ சமயத்துக்கு முரணான கருத்துக்களை மன்றம் ஏன் ஆதரிக்கீறது என்று அவர்கள் கேள்வி எழுப்பி இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

 

 தங்கள் கூற்று உண்மைதான்.அதனால்தான் பிரதான பதிவில் இவர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் இவ்வாறு எழுதுவது இயற்க்கையே என்று சுட்டியுள்ளேன்.ஆனால் இந்நூலை சைவசித்தாந்த மன்றம் வெளியிட்டுள்ளதுதான் கொடுமை.

காரணம் தமிழகத்தில் சித்தாந்த தத்துவம் பிரிவினைவாதிகளின் புகலிடமாகி வருகின்றது 
Image may contain: 1 person, text

 

தலைக்காவிரியில் உற்பத்தியாகும் காவிரித்தாய் பூம்புகார் சங்கமத்தில் கலக்கும்வரை தமது பாதையில் ஓடிக்கொண்டேயிருப்பாள். இடையில் அவளிடமிருந்து சில சிற்றாறுகள் பிரியும். சில வாய்க்கால்களும் ஏன் கழிவுநீர்களும்கூட வந்து கலக்கும். அதற்காக அவள் வருந்தியதுமில்லை.கலங்கியதுமில்லை. தன்பாதையில் நிதானமாகப்பயணிக்கிறாள். சில அறிவிலிகள் குப்பைக்கூளங்களை அவள்மீது வீசுவர். சிலிர்த்துக்கொள்ளக்கூட மாட்டாள். புன்னகை மாறாமல் வளம் செழிக்கச்செய்து கொண்டே செல்கிறாள். கணவனின் அலைக்கரங்கள் ஆர்ப்பரித்து வரவேற்கப்போவதை நோக்கிப்பயணிக்கும் அவளைத்தடுத்து அணைக்கட்டுவர். கோபத்தில் திரும்பிச்சென்று விடாமல் சமுத்திரத்தை நோக்கிப்பயணிப்பாள். தனது மகிமையை எக்காரணத்தை முன்னிட்டும் தாமே வெளிப்படுத்துவாள் இல்லை. ஸத்ய:புனாது காவேரி என்றபடி அவளை உபாசிப்பவர்களை அரவணைத்துப்புனிதமாக்குவாள். சாத்திரங்கள் காவேரிப்போன்றவை. அவற்றை உபாசிப்பவர்களை தன்வழியே சமுத்திரமாகிய சிவபரம்பொருளிடம் சேர்ப்பிக்கும். சாக்கடைகளையும் குப்பைகளையும் பொருட்படுத்தாத காவிரிபோல் போலிகளையும் வேடதாரிகளையும் புறந்தள்ளி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்ப் பயணித்துவரும் நம் சாத்திரங்கள் நேற்றைய மழையில் முளைத்த காளான்களினாலா பாதிக்கப்பட்டுவிடும்? அஞ்சற்க. அதன் பயணம் சூரிய சந்திரர்கள் உள்ளவரையும் இப்புவியில் தொடரும். அதன் புனிதம் ஞானகுருமார்களால் உபாசித்துப் பேணப்படும். எனவே வீணர்களுக்குப் பதிலிறுத்தி மனதைக்காயப்படுத்திக்கொள்வதை விட்டு" தங்கடன் அடயேனையும் தாங்குதல் என் கடன் பணிசெய்து கிடப்பதே" எனத் தூயமனத்தினராகிய அடியவர் கூட்டத்துடன் பெருமான் கழலடிப்பயணத்தை அச்சமின்றித் தொடருவோம். காலத்தின் கொடுமை ஈனர்கள் சாத்திரப்போர்வையினால் மூடிக்கொண்டு பிதற்றுவதற்கு இனி ஒருபோதும் செவிசாயோம்!



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

நம் முன்னோர்கள் வணங்கத்தவர்கள்!

இன்று ஒரு நண்பருடன் உரையாடலில் பேசிக் கொண்டிருந்தது - 
நம் நாடு கிட்டத்தட்ட 1000 வருடங்களாக கொடூரமான அந்நிய ஆட்சிக்கு உட்பட்டிருந்தது! எத்தனைக் கோவில்கள் இடிக்கப்பட்டன! எத்தனைப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன! இந்துவாக வாழவே ஜிஸ்யா வரிகட்ட வேண்டிய சூழ்நிலை!

அதற்குப் பிறகு ஆங்கிலேயர்களின் சுரண்டல்! மதமாற்றம் செய்ய ஆயிரமாயிரம் சதிகள்! தேசத்தைத் துண்டாடிய அநீதி! ஆயிரம் அடக்குமுறைகள்! உலகில் இருந்த எந்த தொல்குடியாலும் இத்தனைத் துன்பங்களைத் தாங்கியிருக்க இயலாது!

நாம் தாங்கினோம்! விழ விழ வளர்ந்து கொண்டே வரும் வாழை மரம் போல் இந்துதர்மம் செழித்து வளர்ந்தது! அதற்கு நம் முன்னோர் செய்த தியாகங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல... அப்படி எல்லாம் பாடுபட்டு வளர்த்த தர்மத்தை நமது உயிராகக் கருதி காப்பது நமது கடமை! உலகில் எந்த ஓர் சர்வாதிகாரத்திற்கும் பணியாத தொல்குடிகள் இந்துக்கள் என்பதை மீண்டும் நிறுவுவோம்!

 

 

Karthikeyan Shivasubramaniam இது வழக்கம் போல நம்மை நாம் சமாதானப் படுத்துவதற்காக சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு ஆறுதல். 
இந்துதர்மம் செழித்தெலாம் வளர வில்லை ப்ளீஸ். 
நிச்சயம் நம் முன்னோர்கள் அரும்பாடு பட்டுக் காத்தனர், அவர்கள் வணங்கத் தக்கவரே. ஆனால். நாம் போரிட்டுக் கொண்டிருப்பது ஒரு 
தோற்கும் போரில். 

கிபி 1000 ஆம் ஆண்டில் சனாதன தர்மம் சுமார் உஸ்பெச்கிச்தானில் இருந்து துவங்கி கீழே பாலி சுமத்திரா, ஸ்ரீ விஜயம், மேல ஜப்பான் வரை பரவி இருந்தது, இப்போது கிபி 2018 இல் 80 சதவிகிதம் காணாமல் போய் விட்டது. 20 % தான் மீதி இருக்கு. நீங்கள் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறீர்கள், அங்கே உங்கள் முதலாளியிடம் ஐயா, நாம் 80% நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறோம், இருந்தாலும் நமக்கு 20 % மீதம் இருக்கிறது, அதனால் நாம் ஜெயித்து விட்டோம், வெற்றி நமதே என்று சொல்வீர்களா ?! 

//விழ விழ வளர்ந்து கொண்டே வரும் வாழை மரம் போல் இந்துதர்மம் செழித்து வளர்ந்தது!// முதலில் இப்படி பேசுவதை நாம் எல்லாரும் நிறுத்தப் பழகிக் கொள்ள வேண்டும், அப்போ தான் எல்லாருக்கும் புரியும், உண்மையான கள நிலவரம் என்ன என்று. 

இருக்கும் 20% என்னும் தற்போதைய இந்திய நிலப்பரப்பில் கூட நாளொரு பிரச்சனை பொழுதொரு பஞ்சாயத்து. இங்கேயாவது நிம்மதியாக இருக்க முடிகிறதா ?! இந்திய அரசாலேயே இரண்டாம் தர குடிமக்களாக இந்துக்கள் நடத்தப் படுகிறார்கள், அதனால், நாம் வளர்ந்து விட்டோம் என்னும் பிரமையைவிட்டு விடலாம், தயவு செய்து.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

”தாமரைக் கண்ணான் உலகு”

திருமாலே ‘தாமரைக் கண்ணன்’ எனும் பெயருக்குரியவன்; புராண - இதிஹாஸ - இலக்கியச் சான்றுகள் எண்ணற்றவை. சைவநூலான திருக்குற்றாலத் தலபுராணமே ‘முத்தனே, முளரிக் கண்ணா’ என முகுந்தனை விளிக்கும். "அரி தன் ’தாமரைக்கண்’ சாத்துதலும் ...."
- பதினொன்றாம் திருமுறை

தாமரைக் கண்ணான் இந்திரனைக் குறிப்பதாகாது; ’ஆயிரம் கண்ணான்’ என்றால் அது பொருத்தமாக இருந்திருக்கும்.

வேத சமயம் சாராத- சிரமணர்தம் சமயம் சார்ந்த அமரசிம்மர் என்பார் எழுதிய சங்கத நிகண்டு ‘அமரகோசம்’; அது சொல்லும் இந்திரனுக்கான 39 பெயர்களில் ‘தாமரைக் கண்ணான்’ இல்லை -
इन्द्र, मरुत्वत्, मघवन्, बिडौजस्, पाकशासन, वृद्धश्रवस्, सुनासीर, पुरुहूत, पुरन्दर, जिष्णु, लेखर्षभ, शक्र, शतमन्यु, दिवस्पति, सुत्रामन्, गोत्रभिद्, वज्रिन्, वासव, वृत्रहन्, वृषन्, वास्तोष्पति, सुरपति, बलाराति, शचीपति, जम्भभेदिन्, हरिहय, स्वाराज्, नमुचिसूदन, सङ्क्रन्दन, दुश्च्यवन, तुराषा, मेघवाहन, आखण्डल, सहस्राक्ष, ऋभुक्षिन्, कौशिक, घनाघन, पर्जन्य, हरि

இந்த்₃ர, மருத்வத், மக₄வந், பி₃டௌ₃ஜஸ், பாகஶாஸந, வ்ருʼத்₃த₄ஶ்ரவஸ், ஸுநாஸீர, புருஹூத, புரந்த₃ர, ஜிஷ்ணு, லேக₂ர்ஷப₄, ஶக்ர, ஶதமந்யு, தி₃வஸ்பதி, ஸுத்ராமந், கோ₃த்ரபி₄த்₃, வஜ்ரிந், வாஸவ, வ்ருʼத்ரஹந், வ்ருʼஷந், வாஸ்தோஷ்பதி, ஸுரபதி, ப₃லாராதி, ஶசீபதி, ஜம்ப₄பே₄தி₃ந், ஹரிஹய, ஸ்வாராஜ், நமுசிஸூத₃ந, ஸங்க்ரந்த₃ந, து₃ஶ்ச்யவந, துராஷா, மேக₄வாஹந, ஆக₂ண்ட₃ல, ஸஹஸ்ராக்ஷ, ருʼபு₄க்ஷிந், கௌஶிக, க₄நாக₄ந, பர்ஜந்ய, ஹரி

அமரத்தில் 'ஹரி’ என்பதுகூட இந்திரனைக் குறிக்கிறது; அமரம் கூறுவது ‘ ஆயிரம் கண்ணான்’ [ஸஹஸ்ராக்ஷ:]. அரவிந்தாக்ஷன் அமரர் தலைவனைக் குறிப்பதாகாது.

இந்திரனைச் சமணம் ஏற்றுள்ளது; தாமரைக் கண்ணானை இந்திரனுக்காக்கினால் வள்ளுவம் சமணம் சார்ந்த நூலாகும் எனும் முயற்சி பொருளற்றது. சமணம் கூறும் முக்தித் தலம் தாமரைக் கண்ணான் உலகன்று; ’ஸித்த சிலா’, அது சுவர்க்கத்தைக் காட்டிலும் மேம்பட்ட உயர்ந்த இடம். சமணரின் அண்டவியலில் அது பிறை போன்ற குறியீட்டால் விளக்கம் பெறும். அங்கு தேவர்களுக்கு இடமில்லை; முத்தி அடைந்த சீவர்க்கு மட்டுமே உரியது ’ஸித்த சிலா’.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

”திருக்குறளை ஒரு சமயச் சிமிழுக்குள் அடைப்பது தவறு”

தொன்மை வாய்ந்த நீதி நூல்கள் அனைத்துமே சமயவாதிகளால் இறைவனையும், ஊழ் வலியையும், சுவர்க்க - நரகங்களையும் முன்வைத்தே எழுதப்பட்டுள்ளன;வள்ளுவத்தில் இறைச்சார்பு மிகுதியாகவே காணப்படுகிறது. மறுமையை ஒப்புக்கொள்ளாத இந்திய அறநூல்கள் அறவே இல்லை. இந்திய சமயப் பிரிவுகள் பல; அனைத்துக்கும் அடித்தளம் அறமே.

வள்ளுவம் மட்டும் ஒருநாளும் விதி விலக்காகாது,
முற்போக்குச் சாயம் பூசிக்கொண்டுதான் முதன்மை பெற்றாக வேண்டும் எனும் கட்டாயம் வள்ளுவத்துக்குக் கிடையாது; வள்ளுவத்தின் மனங்கவரும் சொற்செட்டும், இலக்கிய நயமும், அந்வய - வ்யதிரேக முறைகளால் கருத்துகளை வலியுறுத்தும் பாங்கும், மனத்தில் நிலைக்கும் அரிய உவமைகளும் மாந்தரை ஈர்க்கப் போதுமானவை.

முற்போக்காளர் உபதேசம் பொருளற்றது

 



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

குறட்பாவும், சங்கப் பாடலும்:

”இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”

இக்குறட்பா ஒரு சங்கப்பாடலை நினைவுறுத்துகிறது -

ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற, அப்பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.
(புறநானூறு -194)

'படைத்தோன் மன்ற அப் பண்பில்லாளன்' எனும்
கருத்தை வள்ளுவர் அப்படியே அடியொற்றியிருக்கிறார். 'பரந்து கெடுக உலகியற்றியான்' என்பது இறைவனையே குறிக்கும் என்பது குறளாலும், புறநானூற்றாலும் நிறுவப்படுகிறது. இக்குறளின் கருத்தைச் சங்கத்தின் நீட்சியாகக் கருதுவது இலக்கியச் சுவையை மிகுவிக்கிறது.

வள்ளுவம் ஒரு சமண நூலாயின் உலக நடையைக் கற்பித்த, பெரு மதிப்புக்குரிய சமய ஆசாரியரான ஆதி தீர்த்தங்கர ஸ்வாமியைப் பழிப்பதுபோல் பா அமைவது சமண அறத்துக்கு முரணானதாக அன்றோ அமைந்துவிடும்! வள்ளுவர் சமண முனிவராயிருப்பின் 'கெடுக' எனும் நிந்தனையைக் கட்டாயம் சொல்லியிருக்க மாட்டார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

திருக்குறள் உரை ஆய்வில் முனைவர் பட்டம் வாங்கியுள்ள திரு.சாமி.தியாகராஜன் நூல் கிறிஸ்துவ வெறியர் பாவாணர் முதல் தமிழண்ணல் வரை அனைவர் உரையையும் பிய்த்துப் போடுகிறது

Image may contain: one or more people

No automatic alt text available.

34962382_10216419008694012_7133839996032



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 

Dev Raj
3 hrs · 
 

*ஆதி பகவன்*

இந்தியச் சமயங்கள் எவ்வெப் புள்ளிகளில் இணைகின்றன, எதில் எதில் பிரிகின்றன என்பதைக் கவனித்தால் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்.

'பகவான்' என்பது முழுமுதற் பொருள் ஒன்றுக்கே பொருந்தும் சொல். ஆனால் பயன்பாட்டில் அது தேவர், கோள்கள், முனிவர் இவர்களையும் குறிப்பதாக ஆகிறது. (எ கா) வாயு பகவான், குரு பகவான், வ்யாஸ பகவான், பராசர பகவான்.

ஆத்ம ஞானிகளையும் இப்பெயரில் அழைப்பர்; 
(எகா) பகவான் ரமணர்.

கௌதம புத்தரையும் 'புத்த பகவான்' என்கிறோம்.

முழுமுதலுக்கு உரியதைப் பிறருக்கு ஒட்ட வைக்கலாமா என்றால் இது 'ஔபசாரிகம்'- மரியாதை வழக்கு.

சமணர் தம் சமய முதல்வரை 'பகவன்', 'ஸித்தர்'
எனும் பெயரால் குறிப்பர். ஆனால் அவர்களை ஜட ப்ரபஞ்சத்தின் மேலாண்மையோடு இணைக்க மாட்டார்கள்; சமணம் உலகோடு தொடர்புடையதான முத்தொழில், ஐந்தொழில் இவற்றை ஒப்புவதில்லை. சமணத்தில் உலகம் ஒரு தான்தோன்றி.

சமண நெறி அர்ஹத வழிபாட்டை வற்புறுத்துகிறது;
அது நன்னெறிக்கான குறியீடு மட்டுமே. தீர்த்தங்கரர் எவருக்கும் தம்மை வழிபடுவோருக்கு உலகியல் நன்மை தரும் ஆற்றல் கிடையாது, முக்திபெற்ற ஜீவர்களுக்கு உலகில் வழிபாடு பெற வேண்டும், புகழ் அடைய வேண்டும் எனும் எண்ணமும் கிடையாது. தீர்த்தங்கர வழிபாடு உலகியல் சலுகைகள் கோருவதற்கானதன்று; நன்னெறியில் மனம் சென்று உய்வு பெறுவதற்கானது.

வடபுலச் சமணத்தின் ஸ்தானகவாசி, தேராபந்தி, தரண்பந்தி பிரிவினர் எவ்வகையான உருவ வழிபாட்டையும் நம்புவதில்லை, பின்பற்றுவதில்லை என்பதும் ஒரு செய்தி.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

ஸ்ம்ருதிகள் தெளிவாகவே கூறுகிறது, ‘பிறப்பால் அனைவரும் சூத்திரர்கள், செயல்களால் இருபிறப்பாளர் ஆகின்றனர், பிரம்ம ஞானத்தால் பிராமணன் ஆகின்றனர்”

ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா ஜாயதே த்விஜ: ப்ரஹ்மக்ஞானேதி ப்ராஹ்மணா.

அதாவது பிராமணராக பிறந்தததால் ஒருவன் வேதம் முதலியவற்றைக் கற்று பிரம்மஞானம் அடைவதில்லை, மாறாக யார் வேதங்களைக் கற்று உணர்ந்து பிரம்ம ஞானத்தை அடைகிறானோ அவனே பிராம்மணன் என்று அறியப்படுவான் என்று சந்தேகத்துக்கு இடமன்றி வகுக்கிறது.

இன்னும் தெளிவாக,

“கேவலம் ய: மனுஷ்ய: ப்ரஹ்ம ஞானம் ப்ராப்னோதி, ஸ ஏவ ப்ராஹ்மணா இதி நாம்னாத் ஞாதவான்”

எந்த மனிதன் பிரம்ம ஞானத்தை அடைகிறானோ அவன் ஒருவன் மட்டுமே பிராமணன் என்னும் பெயரால் அறியப்படுவான் என்று சொல்கிறது.

வேத காலச் சமூகத்தில் ஒரே குடும்பத்தில் இருக்கும் அங்கத்தினர் வெவ்வேறு தொழில் புரிபவராக – வர்ணத்தினராக இருந்தார்கள். அதாவது ஒருவரின் வர்ணம் அல்லது தொழில் என்பது அவரது பிறப்பால் நிர்ணயிக்கப்படுவது இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

ஒரு ரிக் வேதச் செய்யுளில் அதன் ஆசிரியரான ரிஷி சொல்கிறார்,

“நான் புலவன், என் தந்தை மருத்துவர், என் தாய் கல்லால் தானியங்களைப் பொடி செய்பவள். பசுக்கள் வெவ்வேறு மேய்ச்சல் நிலங்களில் உணவு தேடுவதைப் போல, நாங்கள் குடும்பத்தின் வளத்திற்கும் மகிழ்ச்சிக்கும் வேண்டி வெவ்வேறு தொழில் செய்கிறோம்.” (ரிக்வேதம்: மண்டலம் 9, ஸூக்தம் 112, ரிக் 3).

வேதத்தில் எந்த இடத்திலும் பிறப்பினால் சாதியும் இல்லை, ஆகவே தீண்டாமையும் இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

திக நாத்திகர் மொழிபெயர்ப்பு:
நான்கு வர்ணங்கள் என்னால் உண்டாக்கப்-
பட்டவை; அவரவர்களுக்குரிய
கருமங்களை அவரவர் மீறாமல்
செய்யவேண்டும். அதனை மாற்றிச்
செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம
உற்பத்தியாளனாகிய என்னால்-கூட
முடியாது (கீதை அத்தியாயம் 4;
சுலோகம் 13)
----------------------------------------------
ஒரிஜினல்:
கு³ண கர்ம விபா⁴க³ஸ²: = குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் = நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது
தஸ்ய கர்தாரம் அபி = நானே அவற்றை செய்தேன் என்றாலும்
அவ்யயம் மாம் = அழிவற்றவனாகிய என்னை
அகர்தாரம் வித்³தி⁴ = கர்த்தா அல்லேன் என்று உணர்
குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.
-------------------------------------------
நடுவுல நைசா 
’அதனை மாற்றிச்
செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம
உற்பத்தியாளனாகிய என்னால்-கூட
முடியாது’
அப்படின்னு மாத்திட்டானுங்க
வெண்ணெய் வெட்டிகள்



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

சென்னை பல்கலைக் கழகம் சார்பில்

ஜி.யு.போப் எனும் பாதிரி  பொ.ஆ.10ம் நூற்றாண்டு எனவும், வையாபுரி பிள்ளை 6ம் நூற்றாண்டு இறுதி இறுதி எனவும் குறித்தனர், ஆனால் 3000 ஆண்டு தொன்மை, 5000 ஆண்டு என்று கூறியோரும் உண்டு, ஒரு அறிஞர் கூட்டம் கூடி திருவள்ளுவர் பிறந்தது பொ.மு. 31, வைகாசி அனுஷம் எனக் குறிக்க, திருவள்ளுவர் ஆண்டு என தமிழக ஆரசு அழைத்தும் வருகிறது.

திருக்குறளிற்கு முதல் உரை மணக்குடவர் 10ம் நூற்றாண்டினது, திருக்குறளை மேற்கோள் காட்டும் முதல் நூல்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 திருவள்ளுவர் காலத்தை மிகவும் பின் தள்ளியோரின் தரவுகள் என்ன? அவை நடுநிலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட நேர்மையான காரணங்கள் என்ன

1.முச்சங்கம் இருந்தது என்ற தொனமக் கதை நம்பிக்கை.

மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது எனும் ஒரு தொன்மக் கதை  மூன்று கடற்கோள்கள் இறையனார் களவியல் ஆசிரியர் உரையில் புனைந்துள்ளதை இன்று அறிவு சார் ஆய்வுலகம் முழுமையாய் நிராகரித்துவிட்டது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லைபுலவர் பட்டியல் எல்லாமே கற்பனைகள் என தூக்கி எறிந்து பல காலம் ஆகிவிட்டது.
 
சங்ககால மன்னர் காலநிலை  வரலாறு-   வி.பி.புருஷோத்தம்;   
அணிந்துரை- சிலம்பொலி செல்லப்பன். இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.   பாராட்டுரை- பேராசிரியர். சாலை- இளந்திரையன்.
நூலின் ஆய்வின் விஸ்தீரணம் கண்டு இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- இந்நூலிற்கு தமிழக அரசு சார்பாக வேளியீடு மான்யம் பெற்று தந்தார்.
 
53.png
 
 
தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி.ப். எட்டாம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்கக் கதையை நம்பி, சங்ககாலத்தைக் கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். -பக்கம்30 
8ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை- என்னும் நூலில் ஒரே ஒரு பாடல் மட்டும் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதை. இதில் முதல்- இடைச் சங்கப் புலவர்கள் என உரையில் கூறப்பட்ட புலவர்கள் பெயர்கள் பெரும்பாலும் பாட்டுத்தொகை ஆசிரியர்கள் பெயரே உள்ளது. 
 
இடைச் சங்கம், கடைச் சங்கம், முதல் சங்கம்- இவை எல்லாம் வெறும் ஆரவார புராணம். ஆதாரமில்லாதது.

2. தொல்கப்பியம் பற்றிய பின்னோக்கிய காலம் குறித்தல் -முச்சங்க கதைகளின் தாக்கம்.

தொல்காப்பியத்தில் உள்ள சொல், சொல் தொடரி போன்றவை ஆய்வில், காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் என அறிஞர்கள் ஏற்கின்ற்னர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.

இன்றைய நிலையில் தொல்காப்பியர் காலம் பொ.ஆ. 7ம் நூறாஆண்டு என்பதில் பெரும் கருத்தொற்றுமை உள்ளது

3.வள்ளுவர் சங்க காலப் புலவர் எனும் நம்பிக்கை.

தொல்காப்பியத்தில் உள்ள சொல், சொல் தொடரி போன்றவை ஆய்வில், காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் என அறிஞர்கள் ஏற்கின்றனர்.

3.வள்ளுவர் சங்க காலப் புலவர் எனும் நம்பிக்கை.

பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூல்களுள் உள்ள தொடர், பாட்டு கருத்துக்கள் குறளிலும் உள்ளதைக் கொண்டு - திருக்குறளை முன் தள்ளியனர். இத்தோடு முசங்கக் கதை, கீழுள்ள கதைகள் அவற்றிற்கு உதவின

4.திருவள்ளுவர் பற்றி உள்ள திருவள்ளுவமாலை மற்றும் கபிலர் அகவலில் உள்ள புனைக் கதைகள்



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலையில் உள்ள பாடல்களில் திருக்குறளின் ஒவ்வொரு பாலின் உள்ளும் உள்ள இயல்களில் எத்தனை அதிகாரங்கள் என்பதை கூறும் வகையில் பல பாடல்கள் உள்ளன.

திருக்குறள் எழுதப் பட்ட பின் வரையப்பட்ட முதல் உரை மணக்குடவர் எனும் சமணர் உரை, ஆனல் இவர் உரையில் உள்ள இயல்களினும் உள்ள அதிகார அமைப்பினோடு திருவள்ளுவமாலை பாடல்கள் பொருந்த வில்லை, ஆனால் 13ம் நூற்றாண்டின் பரிமேலழகர் பிரித்துள்ளதோடு பொருந்துகிறது. எனவே நிச்சயமாய் இவை அவற்றிற்கு பிற்பட்டவை

வள்ளுவர் பற்றிய கதைகளில் பல கிறிஸ்துவப் பாதிரிகள் திணித்தவை எனப் பல ஆய்வுகள் கூறுவதையும் அறிஞர் காட்டி உள்ளனர். 



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 5. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை தெளிவாய் திருக்குறளை குறிப்பிடுவதால் இரட்டைக் காப்பியங்கள் காலம் முன்னோக்கி தள்ளியதால் குழப்பம். 

சிலப்பதிகாரக் கதையின் சேரன், செங்குட்டுவன் போன்ற அரசர்கள் சங்க காலத்தவர், அதாவது பொ.மு.300 - பொ.ஆ.300 இடையிலானவர், ஆனால் சங்கப் பாடல்கள் பொ.ஆ.6ம் நூற்றாண்டின் முற்பாதி வரை வரையப்பட்டவை. சிலப்பதிகாரமோ கதை மாந்தர்களை சங்க காலத்தினராகக் காட்டினும் அதில் உள்ள செய்திகள், நகர வாழ்வு இவை பிற்காலத்தது, அறிஞர்படி 9ம் அல்லது 12ம் நூற்றாண்டு எனக் குறிக்கின்றனர், தொல்லியலும் கண்ணகி கோவிலின் தொன்மை 9ம் நூற்றாண்டு பின் என்பதால் தெளிவாய் சிலப்பதிகாரம் 9ம் நூற்றாண்டு  இறுதிக்கு முன் வாராது.



-- Edited by Admin on Sunday 17th of June 2018 02:18:04 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

திருவள்ளுவர் காலம் பன்னாட்டு பல்கலைக் கழக முறை ஆய்வுகள் 8ம் நூற்றாண்டு எனக் குறிக்க காரணம் பெருமளவில் மொழியும் திருக்குறள் நடையும் தான்.

 

 திருக்குறளின் மொழி நடை

சங்க இலக்கியத்தின் பாடல்கள் பெரும்பாலும் இன்றைக்கு புரியா மொழி நடை, ஆசிர்யப்பாவில் அமைந்தது.

 

திருக்குறளோ வெண்பா, அதிலும் குறள் வேண்பா, சொற்கள் வளர்ச்சியுற்று எளிதில் புரியும் நடை

‘தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்திய போக்குகள் தொடர்பான எனது அனுபவங்களில் சிலவற்றை மட்டும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

 

ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன் “படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால், போவான் போவான் ஐயோ வென்று போவான்!” என்று அறச்சீற்றம் கொண்டவன் பாரதி. அவனை அறச்சீற்றமடையவைத்த அறிவுச்சமூகம் இன்றளவும் அறம் பிறழ்ந்ததாகவே திகழ்கிறது.



-- Edited by Admin on Sunday 17th of June 2018 02:51:29 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

திருக்குறளின் மொழியியல் வழியில் இலக்கண திறனாய்வு நூல்கள் மிகவும் குறைவு. 

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் ஈ.சுந்தரமூர்தி அவர்களின்  குறளின் நடையியல் மற்றும், முனைவர் மோகனராசுவின்  -"திருவள்ளுவர் நடைநலைம்". இரணடுமே திருக்குறள் பேராசிரியர் அகத்தியலிங்கம் அவர்கள் நூலும் உண்டு.

இவை நமக்கு தெளிவாய் காட்டுவது, திருக்குறள் பாட்டுத் தொகை நூல்களுக்குப் பிறகான தொல்காஅபியத்திலிருந்து பிற்காலத்தது.

திருவள்ளுவர் காலம் என்ற பெயரிலேயே ஒரு கட்டுரை பேராசிரியர்.கஸ்தூரி ராஜா அவர்கள்   நூலில் ஒரு கட்டுரையும், முனைவர் மோகனராசுவின் வளர்ச்சி வரலாறு - பகுதி௨ நூலின் பெரும் பகுதியும் 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

கிறிஸ்துவ உரை சுவடி தயாரிப்பு வழக்கு 

தமிழக செய்தி தொலைக் காட்சி ஒன்றில் இரவில் பழைய குற்ற வழக்குகளை அலசும் "த்டடயம்" நிகழ்ச்சியில் -  வழக்கின் விபரம் பற்றியவை பெரிதும் மறைக்கப் பட்டதால் முழுவிபரம் நாம் தருகிறோம்.)

திருச்சி ஸ்ரீரங்கம் சேர்ந்த கணேஷ் ஐயர் என்பவர் கிறிஸ்துவராய் மதம் மாறி ஜான் கணேஷ் ஐயார் எனும் பெயரில் வாழ்ந்தவர், 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard