New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஈ.வெ.ரா வின் - வள்ளுவன் மடையன்தானே


Guru

Status: Offline
Posts: 19649
Date:
ஈ.வெ.ரா வின் - வள்ளுவன் மடையன்தானே
Permalink  
 


H Raja shared a post.
1 hr · 

அருமை

 
Subramanian Kamaraj

என் சொந்த ஊர் ஈரோடு. சிறு வயதில் ஈ.வெ.ரா வின் மேடை பேச்சுகள் பலவற்றை கேட்டிருக்கிறேன். ஹிந்து மதத்தைப் பற்றியும் பிராமணர்களைப் பற்றியும் மிக ஆபாசமாக, கேவலமாகப் பேசுவார். மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். மதத்தைப் பற்றி மட்டுமல்ல. நம் தாய் மொழியாம் தமிழைப் பழித்தும், இகழ்ந்தும் பேசுவார். திருக்குறளைப் பற்றி கேலி பேசுவார். திடீரென்று கூட்டத்தில் பெண்களைப் பார்த்து, “இங்கு யாராவது பத்தினிகள் இருக்கின்றீர்களா? இருந்தால் கையைத் தூக்குங்கள் ” என்று சொல்வார். யாருக்கும் உடனே பதில் சொல்லத் தோன்றாது. ஒருவரை ஒருவர் பார்ப்பார்கள். வெட்கமாய் சிரிப்பார்கள். “எங்கே பத்தினியா இருக்கற ஒரு பெண் எழுந்து நின்னு மழை வரச் சொல்லி சொல். வருதா பார்ப்போம்” என்பார். எல்லோரும் அமைதியாகவே இருப்பார்கள். கட கடவென பெரிய தொப்பை குலுங்க சிரிப்பார். சில தமிழின துரோகிகளும் சேர்ந்து கை தட்டி சிரிப்பாங்க. உலகத்துல யாருக்குமே தெரியாத மிகப்பெரிய விஷயத்தை தான் கண்டுபிடிச்சிட்ட மாதிரி ஈ.வெ.ரா சிரித்து மகிழ்வார். பின்னர் “நீங்க பத்தினி இல்லேன்னு அர்த்தம் இல்லை. உங்க வள்ளுவன் அயோக்கியன்னு அர்த்தம். பத்தினிங்க பெய்னு சொன்னா உடனே மழை பெய்யும்னு வள்ளுவன் சொல்றான். மடையன்தானே அவன்?” என்று வள்ளுவரையும் திருக்குறளையும் இழிவாக பேசுவார்.

தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள் 
பெய்யெனப் பெய்யும் மழை.

என்கிற திருக்குறளைத் தான் அவர் இப்பிடி கேவலமாக பேசுவார். மேலோட்டமாகப் பார்த்தால் அதன் அர்த்தம் அதுதான். தெய்வத்தைக் கூட தொழாமல் தன் கணவனையே தெய்வமாகத் தொழும் பத்தினிப் பெண்கள் பெய் என சொன்னால் உடனே மழை பெய்யும் என்பதே அதன் பொருள் என்று எல்லோரும் சொல்லுவார்கள். இது ஈ.வெ.ராவுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. அதைக் கையில் எடுத்துக் கொண்டு தமிழ்மறையைக் கேலி பேசினார். ஆனால் எனக்குப் புரிபட்ட வகையில் இதன் பொருள் வேறு. திருக்குறளை ஊன்றிப் படிக்கும் பொழுது வேறு அர்த்தம் வருகிறது அந்த குறளுக்கு. அது என்னவென்று பார்க்கலாமா?

இதே வள்ளுவர் இன்னொரு இடத்தில் மழையைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

கெடுப்பதூ உம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே 
எடுப்பதூ உம் எல்லாம் மழை

அதாவது வள்ளுவப் பெருந்தகை இரண்டு மழைகளைப் பற்றிப் பேசுகிறார். ஒன்று கொடுக்கும் மழை இன்னொன்று கெடுக்கும் மழை. நிலத்தைப் பண் படுத்தி, ஆழமாக ஏர் உழுது விதைகளை விதைத்திருப்பான் விவசாயி. அன்று இரவு மழை பெய்தால் பரவாயில்லையே என்று ஏங்கி வேண்டுவான். அப்படியே பெய்தால் அது கொடுக்கும் மழை. அதாவது பயிர்களை வாழ வைக்கும் மழை.

பயிர் நன்றாக விளைந்து முற்றித் தலை கவிழ்ந்து அறுவடைக்குத் தயாராக நிற்கும். அடுத்த நாள் விடியற்காலையில் அறுவடை. தந்சாவூரில் இருந்து ஆட்களும் அறுப்புக்கு வந்தாயிற்று. அன்று இரவு மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விளைந்து நின்ற பயிர்களை நாசம் செய்தால் அது கெடுக்கும் மழை.

ஒரு மழை, பெய்யாதா என்று ஆசைப் படும் போது பெய்யும் மழை. இன்னொன்று பெய்யக் கூடாதே என்று வேண்டும் போது பெய்து நாசம் விளைவிக்கும் மழை. இதில் பத்தினி என்பவள் எப்படிப் பட்டவள்? அவள் பெய்யென பெய்யும் மழைக்கு சமமானவள். அதாவது மழை பெய்தால் தேவலையே என்று விவசாயிகள் ஏங்கிக் கொண்டிருக்கும் போது பெய்யும் மாமழை போன்றவள்.

தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தொழும் 
பெண் = பெய்யென பெய்யும் மழை. 
அதாவது அவ்வளவுக்கு சமுதாயத்திற்கு நன்மை செய்து உதவும் மா மழை போல இனிமையானவள், நன்மை பயப்பவள். 
புரிகிறதா? இதைத்தான் உலகப் பொது மறையாம் வள்ளுவம் பேசுகிறது. 
பத்தினிப் பெண் is equal to பெய்யெனப் பெய்யும் மழை. 
இப்பொழுது சொல்லுங்கள். வள்ளுவர் மடையனா? முட்டாளா?
#TRCARR__________________


Guru

Status: Offline
Posts: 19649
Date:
Permalink  
 

தமிழ் நம் தாய்மொழி. ஒரு மொழியை பற்றி சொல்லும் போதே அதன் கம்பீரமும் வரலாறும் நம்மை மட்டும் அல்ல எத்தனை எத்தனையோ அயல் நாட்டு மனிதர்களை கூட தமிழ் மீது பித்து பிடிக்க வைத்துள்ளது. நம் மொழி  திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும்,முக்கியமாக  செம்மொழியும் ஆகும். 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது இந்தியாவில் வழக்கில் இருக்கும் ஒரே செம்மொழியாகும்

 பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது. இத்தனை வருட தொன்மை வாய்ந்த மொழியும் அதன் கட்டமைப்பும் , அதன் வழியாக ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மொழியை தான் நாம் சிறு வயதிலேயே  கற்றிருக்கிறோம்  என்று நினைக்கும் போதே , பெருமை விண்ணை முட்டுகிறது.

 வெளி ஆக்கிரமிப்புக்களாலும் காலனித்துவ ஆதிக்கத்தாலும் தமிழ் தேங்கி கிடந்த நிலையில் இருந்து மீண்டு தமிழின் தொன்மையையும், தொடர்ச்சியையும், சிறப்பையும் தமிழர்கள் தாம் அறிந்தும் பிறரும் அறியக்கூடியவாறு நிலைநிறுத்த தொடங்கிய காலப்பகுதி தமிழ் மறுமலர்ச்சி காலம் ஆகும். “கி.பி. 1887 முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் எனலாம். இவ்வாண்டில் இருந்துதான் கல்வெட்டுக்களின் அறிக்கைகள் வெளிவரத்தொடங்கின. தமிழின் தலையெழுத்தும் மாறத் தொடங்கியது. தமிழின் தொன்மை வெளியுலகத்துக்கு தெரிய ஆரம்பித்தது. பண்டைத் தமிழரின் நாகரிகத்தை உலகம் அறிய முற்பட்டது.”

இந்த மறுமலர்ச்சிக்கு மேலைநாடுகளில் இருந்து சமயம் பரப்ப வந்த மேலைநாட்டு அறிஞர்களின் ஆய்வுகளும் உதவியது. குறிப்பாக வீரமாமுனிவர் 1856-இல் எழுதிய ‘திராவிடமொழிகள் ஒப்பிலக்கணம்’ (The Comparative Grammar of the Dravidian Languages) ஆய்வு தமிழின் தனித்துவ பண்பை நிறுவ உதவியது.

18 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழறிஞர்கள் சங்க ஏடுகளை தேடிப் பெற்று அச்சுப் பதிப்புச் செய்து பொது மக்களுக்கு எடுத்து செல்லும் பணியையும் செய்தனர். இந்த பணியை செய்தவர்களில் உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:

  • சங்க காலம் (கிமு 300 – கிபி 300)
  • சங்கம் மருவிய காலம் (கிபி 300 – கிபி 700)
  • பக்தி இலக்கிய காலம் (கிபி 700 – கிபி 1200)
  • மத்திய காலம் (கிபி 1200 – கிபி 1800)
  • இக்காலம் (கிபி 1800 – இன்று வரை)

பக்தி இலக்கிய காலத்திலும், மத்திய காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன

தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம் மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர். மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்

உலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்றவர்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது. 1816இல் எல்லிஸ் என்ற அறிஞர் தென்னிந்திய மொழிகள் வடமொழியல்லாத மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றுள் தமிழ்மொழியின் தொன்மையினையும் வடமொழியினின்றும் தனித்து இயங்குதற்குரிய ஆற்றலையும் உலகறிய நிலைநாட்டினார். இவர் நிகழ்த்திய ஆராய்ச்சியின் அடித்தளத்தில்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தமிழ்த்தெய்வ வணக்கம் பாடியதும், பரிதிமாற்கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்) தாம் எழுதிய “தமிழ் மொழியின் வரலாறு” எனும் நூலில் தமிழ்மொழி உயர்தனிச்செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தியதும் அமைந்தன. இவர்களைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கத்தினைத் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தொடங்கினார். இவ்வியக்கத்தினைத் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட பலரும் பேணி வளர்த்தனர். உலகின் முதல் செம்மொழி தமிழ் என்ற கருத்தினைப் பாவாணர் The Primary Classical Language of the World என்ற தம் நூலில் விளக்கியுள்ளார்.

 கால்டுவெல் காலத்திற்கு முன்பே, வடமொழியிலும் வல்ல தமிழறிஞர்கள் வடமொழியில் காணப்படாத தமிழ்மொழியின் தனி இயல்புகளைக் கண்டறிந்து கூறினர். இவர்களுள், கி.பி 18 ஆம் நூற்றாண்டினராகிய மாதவச் சிவஞான முனிவர் முதலில் சுட்டத்தக்கவர். இச்சான்றோர் தொல்காப்பியப் பாயிரவிருத்தியில், “தமிழ்மொழி புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா” என்று எழுதியிருத்தல் எண்ணத்தக்கது. தமிழ் மொழியையும் வடமொழியையும் ஒப்பிட்டு முறையாக ஆராய்ந்த முதலறிஞராகச் சிவஞான முனிவர் கருதுதற்கு உரியர்.

பன்மொழிப் புலமைமிக்க, புகழ்பெற்ற தமிழியல் அறிஞர்கள் பலரும் செவ்வியல் மொழிக்குரிய தகுதிகள் யாவும் தமிழ்மொழியில் நிரம்பப் பெற்றுள்ள நிலையினைத் தம் ஆய்வுநூல்களில் கூறியுள்ளனர்.

“இருபத்தாறாயிரத்து முந்நூற்று ஐம்பது அடிகளில் உருப்பெற்றுள்ள சங்க இலக்கியம், சிறந்த உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழை உயர்த்துகிறது. தமிழர் பண்பாட்டின் விளைவாக விளங்கும் இம்மொழி இந்தியத் திருநாட்டில் ஒப்பற்றது. தனித்தியங்கும் ஆற்றலையும், தமிழ்மண்வாசனை கமழும் உயர்தரம் கொண்ட இலக்கியக் கொள்கையினையும், யாப்பியல், பாவியல், அணியியல் முதலிய இலக்கணங்களையும் பெற்று விளங்குவது.

 சங்கச் செய்யுள் என்பது மொழியியல், யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமைபெற்ற வெளிப்பாடாகத் திகழ்வது. தமிழர் பண்பாட்டின் நனி சிறந்த கூறாகத் திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளரால் படியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், செப்பமும் முழுமையும் வாய்ந்த படைப்பாகவும் திகழ்கிறது. இவ்வகையில், சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும்” எனக் கமில் சுவலபில் குறிப்பிடுகிறார்.

 உலகப்புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஏ . கே . இராமாநுசன் மேலே கூறப்பெற்ற கருத்தினை வழிமொழிவதுடன், இந்தியச் செம்மொழிகள் இரண்டினில் வடமொழி வழக்கில் இல்லை என்றும் தமிழ்மொழி தொன்றுதொட்டு வழங்கிவரும் சிறப்புக்குரியது என்றும் கூறியுள்ளார்.

 மேலே கூறப்பெற்ற மொழிவல்லுநர்களின் கருத்துகள் ஒருபுறமாக, வரலாற்றறிஞர்களும் புதைபொருளாய்வாளர்களும் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என்றும், தொல்பழந்தமிழர் நாகரிகம் என்றும், அங்கு வாழ்ந்தோர் பேசிய மொழி செம்மொழித்தமிழின் மூலமொழி என்றும் நிலைநாட்டியுள்ளனர். திராவிடமொழிகளிலும் வல்ல மேலைநாட்டு வடமொழிப் பேராசிரியர்கள் டி. பர்ரோ, எம். பி. எமனோ உள்ளிட்டோர் வடமொழி வேதங்களில் காணப்படும் எண்ணற்ற தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். பாணினியின் அட்டாத்தியாயி என்னும் வடமொழியின் மூல இலக்கண நூலுக்குப் பேருரை கண்ட காத்தியாயனர், பதஞ்சலி ஆகியோர் தமிழ் தொடர்பான தம் அறிவினைப் புலப்படுத்தியுள்ளனர். கிரேக்கம், ஈபுரு, சீனம், சப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட உலக மொழிகளில் காணப்படும் பற்பல தமிழ்ச் சொற்களைத் துறைவல்ல அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். மேலை, கீழை நாடுகளுடனும் தமிழ்மக்கள் கொண்டிருந்த பண்பாட்டு, வணிகத்தொடர்புகளை நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் ஆராய்ச்சிஅறிஞர்கள் நிலைநாட்டியுள்ளனர்.

 எனவே, செம்மொழித்தமிழின் சிறப்பும் உலகமக்களுடன் தமிழர் கொண்டிருந்த தொடர்பும் இதன் மூலம்    புலனாகும்.

இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்றுக்கொண்டு 12.10.2004 இல் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்நன்னாள் தமிழர் வரலாற்றில் ஒரு பொன்னாள் ஆகும்.

 __________________


Guru

Status: Offline
Posts: 19649
Date:
Permalink  
 

 Written by: Sundar Raja Cholan

என் வயதிற்கும்,தகுதிக்கும் தகுந்த கேள்வியை கேளுங்கள் என்று கீ.வீரமணி சொல்கிறார்.நிச்சயம் பொருட்படுத்தத்தக்க விஷயம் ஆனால் அதற்கு முன் ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

//கட்டிப்போட்டு இருக்கிற பெண் பிள்ளைகள் எல்லாம் உற்சவம் என்றால்தான் கோவிலுக்குள் பார்க்க முடிகிறது.அங்கே போனால்தான் நான்கு ஆண் பிள்ளைகளோடு உராய முடிகிறது.வீட்டிலேயே இருந்தால் என்ன வேலை என்று மிரட்டுவான் புருஷன்.

அங்கே போய்விட்டால் "வா" என்பான் புருஷன்.'வர முடியவில்லையே,நசுக்குகிறானே,நசுக்குகிறானே' என்பாள் அவள்; 'வா வா முட்டிகிட்டு வா' என்பான் அவன்.அந்த சுகமெல்லாம்,பெண்டாட்டியை கோவிலுக்கு கூட்டிக் கொண்டு போனால்தான் அவன் அங்கே அடைகிறான்.அது பழக்கமாய் போயிற்று;இது எல்லோருடைய பெண்டாட்டியும் அந்த கதி ஆனதாலே எவனும் பரிகாசம் பண்ணுவதில்லை.இப்படிப்பட்ட காரியத்தினால்தான் கோவில்கள் தன் உயிரை பிடித்துக் கொண்டு இருக்கிறது.நாம் அதற்கு தகுந்தபடி வேறே ஏற்பாடெல்லாம் பண்ணினால் பெண்டுகள் திரும்பிவிடுவார்கள்.// -

#பெரியார்[19-12-1973] இறுதி உரை.

இப்படி பெரியார் தன் தள்ளாத வயதில் பேசினார்.இதற்குள் இருக்கும் ஒரு வக்ரம் பிடித்த நினைப்பு வயதிற்குரியதா? இப்படி பட்ட சொற்களை தன் வாழ்நாள் முழுக்க உதிர்த்தவரை 20 ம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர் என்று கட்டியெழுப்பி அதை பூஜித்துக் கொண்டிருப்பவரிடம் இப்போது கேட்பதே தகுதியை மீறியல்லவா இருக்கிறது? முன்பெல்லாம் கேவலமாக பேசியதற்கு யாரும் பதில் சொல்லவில்லை கூனிக்குறுகி எல்லோரும் கடந்து சென்றார்கள் ஆனால் அதுவே இருமுனை கத்தி போல இன்று பிறரால் இவர்கள் மேல் பாய்ச்சுவதை தாங்க முடியாமல் கதறுகிறார்கள்.ஹெச்.ராஜா பேசுவதை கூட இவர்களால் எதிர்கொள்ள முடியவில்லையே? எனக்கெதுவோ அதுவே உனக்கும் என்பதை மறந்து விடக் கூடாது__________________


Guru

Status: Offline
Posts: 19649
Date:
Permalink  
 

"பெரியார் திருக்குறளைப் போற்றியவர்; அப்படிப்பட்ட பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி' என்று சொல்லிவிட்டாரே என்று பார்ப்பனர்கள் கூப்பாடு போடுகிறார்கள். அவர்களுக்கு இயக்குநர் கரு.பழனியப்பன் கூறும் விடை இது. "பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னால் சொல்லட்டுமே. இது பெரியாருக்கும், தமிழர்களுக்கும் உள்ள உறவு; இதில் சம்பந்தம் இல்லாத 'நீங்கள்' தலையிட வேண்டாம்', என பார்ப்பனர் கன்னத்தில் பளீர் என்று அறைந்ததைப் போலப் பளிச்சென்று பழனியப்பன் பதில் அமைந்திருக்கிறது என்றொரு தகவலை விடுதலை (03-10-18) பத்திரிகை பெருமையுடன் தருகிறது.

"தமிழையும், தமிழர்களையும் காட்டுமிராண்டி" என ஈவெராமசாமி சொன்னதற்கு, கரு.பழனியப்பன் தருகிற பதில் சரி தானா? ஒரு குடிகாரன், தன் மனைவியை தெருவில் இழுத்து போட்டு அடிப்பதை கண்டிப்பவனை பார்த்து, அந்த குடிகாரன் "இது என் பொண்டாட்டியை நான் அடிப்பேன், கொல்வேன், அதிலா சம்பந்தம் இல்லாத நீங்கள் தலையிட வேண்டாம்" என சொன்னால், பளீர் என்று அறைந்ததை போன்று என்போமா அல்லது குடிகாரனை பிடித்து, அவன் கன்னத்தில் பளீர் என்று அறையக்கூடிய செயலை செய்வோமா? "ஈவெராமசாமி தமிழர்களின் பெருமையையும், தமிழின் பெருமையையும் அரைகுறையாய் புரிந்து கொண்டு காட்டுமிராண்டி என தமிழையும், தமிழர்களையும் முட்டாள்தனமாக சொல்லிவிட்டார்" என எப்போது ஈவெராவாதிகள் ஒப்பு கொள்கிறார்களோ, அதுவரை ஈவெராமசாமி விமர்சிக்கபட்டு கொண்டு தான் இருப்பார்.

அப்படி விமர்சிப்பவர்களை பார்ப்பனர் என்றோ, பார்ப்பனரல்லாதோர் என்றோ பிரித்து பேசுவது, "உருப்படியாக பதில் சொல்ல ஈவெராவாதிகளிடம் யாதொரு பதிலும் இல்லை என்கிற, அவர்களின் வாயாலாகாததனத்தை தான் காட்டுகிறதே தவிர, அது ஒரு போதும் நேர்மையான பதில் ஆகாது. ஈவெராமசாமி தமிழர்களை காட்டுமிராண்டி என சொன்ன விஷயத்தில் பார்ப்பனர்கள் தலையிடக்கூடாது என்கிறான் கரு.பழனியப்பன். சரி - ம.பொ.சியிலிருந்து விபூதி வீரமுத்து என பலர் தொடர்ந்து, ஈவெராமசாமியின் காட்டுமிராண்டி பேச்சை விமர்சித்து வந்தார்களே - அவர்கள் எல்லாம் பார்ப்பனர்களா? எந்த தி.க.காரன், இதுவரை யாருக்கு நேர்மையாக பதில் தந்தான். பார்பபனனல்லாத நானும் நூற்றுக்கணக்கில் ஈவெராமசாமியின் பித்தலாட்டத்தை வெளிக்கொணரும் பதிவு போட்டுவிட்டேன். ஒரு தி.க.காரனுக்கும் பதில் சொல்ல திராணியில்லை.

தமிழ் மொழி குறித்த ஈவெராமசாமியின் யோக்கியதையை விளக்கும் இன்னொரு பதிவு இது. ஒரு பார்ப்பனனல்லாதவன் தான் எழுதுகிறான். எவனுக்கும் பதில் சொல்ல திராணி இருக்காது என சவால் விட்டு கூறுகிறேன். "ஈவெராமசாமியின் தமிழ்பற்றை இரண்டாக பிரிக்கலாம். எல்லாவற்றிலும் முரண்பட்ட ஈவெராமசாமி, தமிழ் மொழி பற்றி பேசுகையிலும் முரண்படாமல் இருந்தால் தானே ஆச்சர்யம். திராவிடர் கழகத்துக்கு ஈவெராமசாமி அதிபதியாவதற்கு முன்வரை - அவரது தமிழ்ப்பற்று சிறப்பாக தான் இருந்தது.. திராவிடர் கழகத்திற்கு அதிபதியானதும் - தமிழ்ப்பற்று, அவரிடம் இருந்து விடை பெற்றுபோனது. ஈவெராமசாமி - திராவிடர் கழகத்திற்கு அதிபதியாவதற்கு முன் சொன்னதை சொல்லி தான், "ஈவெராமசாமி தமிழுக்கு விரோதி அல்ல" என காட்ட முயல்கிறார்கள் ஒழுக்க குறைபாடுடன் பிறந்த தி.க.வினர்.

ஈவெராமசாமி - விடுதலை 5.4.67 இதழில் கூறியது. "பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்’ என்றும் ‘நாங்கள் பகுத்தறிவுவாதிகள்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், ‘தமிழுக்கு, தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறி விடுவோம்’ என்று சொல்கிறார்கள் என்றால் இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது" என தி.மு.க.,வினரின் தமிழ் மொழி பற்றை சாடிய ஈவெராமசாமி தான், 04.09.1938 - குடிஅரசு இதழில், அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளருக்கு, தமிழ்மொழி சிறப்பை இவ்வாறு சொல்லி பாடமெடுக்கிறார். "நீ மானமுள்ள தமிழனானால், மதி மிகுந்த தமிழனானால் உன் பெற்றோரின் தமிழ் ரத்தம் உன் உடலில், நரம்பில், உதிரத்தில் தோய்ந்திருக்குமானால், இப்போழுதே - ஏன் இன்றே - எங்கள் நாட்டில் எங்கள் தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டுமென்று ஒரு தீர்மானம் அனுப்புவாயாக. தமிழை ஒவ்வொருவறும் கட்டாயம் படித்தால்தானே தமிழ் கலைச் சொற்களையுண்டு பண்ண முடியும்."
இதே ஈவெராமசாமி தான் மானம் கெட்ட தமிழனாக, மதி கெட்ட தமிழனாக இப்படியும் பேசினார்.. "பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள். வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார். – “விடுதலை’ (27.11.43)

ஈவெராமசாமி தமிழை துதி பாடியதற்கும், தமிழை இகழ்வதற்கும் இடையே வெறும் நாலு வருஷம் தான் இடைவெளி. 1938ல் சீரும் சிறப்புமாக தெரிந்த தமிழ்மொழி, 1943ல் சீரழிந்த மொழியாகி விட்டதா. 38ல் "தமிழில் படி" என்ற ஈவெராமசாமி, 43ல் "தமிழில் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது" என இகழ்ந்தால் அது எவ்வளவு அயோக்கியதனம். நாலே வருஷத்தில் தமிழ் சீரழிந்த மொழியானதா ஈவெராமசாமி மூளைக்கு. எப்போதும் தமிழ் சீரும், சிறப்புமாக தான் உள்ளது. ஈவெராமசாமியின் அறிவில் தான் குறைபாடு இருந்ததே தவிர, மொழியில் என்ன குறைபாடு. ஈவெராமசாமியின் பிறவிக்குணமே, ஒன்றை இழிவாக பேசிவிட்டு, பிறகு அதை நியாயப்படுத்த காரணங்களை தேடுவார்.. அதுவே தமிழை பழிப்பதிலும் நிகழ்ந்தது. காலமாற்றத்திற்கேற்ப்ப, தமிழ்மொழி தன்னை புடம் போட்டு - தேவையற்றதை கழித்தும், தேவையானதை கற்று கொண்டும், தேவை இருப்பதை தக்கவைத்து கொண்டுமே வந்துள்ளது.

இல்லையென்றால் செத்த நூற்றுக்கணக்கான மொழிகளில் ஒன்றாக தமிழ் ஆகி இருக்கும். இதை உணராத தற்குறி தான், ஈவெராமசாமி "தமிழை காட்டுமிராண்டி மொழி" என்றார். 1938ல் தமிழ்மொழியை கொண்டாடிய ஈவெராமசாமி 40களில் தமிழ்மொழியை ஏன் பழித்தார். எதனால் இந்த வித்தியாசம்? ஈவெராமசாமி பாணியில் சொல்வதானால் "முதலில் தமிழ், தமிழர்கள்" என பிழைப்பை ஓட்டினார்.. பிறகு திராவிடம் கிடைத்ததும் அதற்கு விசுவாசமாய் இருந்து, திராவிடத்தை வைத்து பிழைப்பை ஓட்டினார். அவ்வளவே. திருக்குறளுக்கு மாநாடு நடத்தினாராம் ஈவெராமசாமி. திருக்குறளின் பால் ஈவெராமசாமிக்கு இருந்த மையலின் யோக்கியதையை பார்ப்போமா? அது தமிழை காட்டுமிராண்டி என சொன்னதைவிட, படுஅயோக்கியதனத்தை கொண்டிருக்கும்.

ஈவெராமசாமி கூறியது. "நான் பாரதிதாசனைப் பற்றிப் புரிந்து கொண்ட அளவுக்கு மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப் புரிந்து கொண்டிருந்தார்களானால் வள்ளுவன் படத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு அதாவது வள்ளுவன் படம் உள்ள இடங்களிலெல்லாம் பாரதிதாசன் படத்தை வைத்திருப்பார்கள்; வைக்க வேண்டும். எதற்காக வள்ளுவன் படத்தை வைக்க வேண்டுமென்று கருதி வைத்திருக்கின்றார்களோ அதைவிட புதுமையான, புரட்சியான கருத்துக்களை, மக் களை பகுத்தறிவுவாதிகளாக்கக் கூடிய கவிதைகளை எழுதியவர் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றன; முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும், முற்போக்கு - சமுதாயத்திற்கு ஏற்றதாகவும் அவரது கவிதைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. -'விடுதலை' 22.4.1970

என்ன மூடர்களா, இப்படி பேசிய யோக்கியதைக்கார ஈவெராமசாமி, திருக்குறளுக்கு மாநாடு நடத்தினார் என்று சொன்னால், அது திருவள்ளுவரை பெருமைப்படுத்த இருக்குமா அல்லது திருள்ளுவரை பெருமையாக பேசினால், அதனால் தனக்கு மதிப்பு, மரியாதை கூடுமே என கணக்கு பார்த்து மாநாடு வைத்ததாக இருக்குமா? இரண்டாவது சொன்னது தான் சரி என தொடர்ந்து தரும் ஆதாரங்களை வாசித்து உணரலாம். ஒருவர் படத்தை வைத்து கொண்டாட வேண்டிய அவசியமில்லை என்று சொல்வதற்கும், அவர் படத்தை தூக்கி குப்பை தொட்டியில் தூக்கி எறிய வேண்டும் என்று சொல்வதற்கும் மிக பெரிய வித்தியாசம் உள்ளது. குப்பை தொட்டியில் எதை எறிவார்கள்? இனி இதை வைத்து உபயோதப்படுத்த ஒரு புரியோஜனமும் இல்லை என்கிற எண்ணம் வரும்போது. எங்கள் திருக்குறளால் ஈவெராமசாமிக்கு அப்படி ஒரு எண்ணம் ஏன் வந்தது. அப்படி ஒரு எண்ணம் வரத்தக்க நூல் தானா திருக்குறள்.
ஈவெராமசாமி, திருவள்ளுவர் படத்தை குப்பை தொட்டியில் எறிய வேண்டும் என கூறியதை உச்சப்பட்ச வன்மம், வள்ளுவரையே அவமானப்படுத்தும் செயல் என்றே சொல்ல வேண்டும். அறிவற்றவனின் பேச்சு எனவும் சொல்வோம். இந்த ஈவெராவின் முட்டாள் அடிமைகள் தான் லெனின் சிலையை உடைத்ததற்கு பொங்கிய கூமுட்டைகள். பார்ப்பன கவிஞர் பாரதியாரிடம் கூட, ஈவெராமசாமியால் காட்டப்படாத வன்மம் - திருவள்ளுவர் மீது காட்டப்பட்டுள்ளது. "எப்போதாவது பாரதியின் சிலையை குப்பை தொட்டியில் போடுங்கள்" என ஈவெராமசாமி சொன்னதுண்டா. இல்லையே. ஏன்? திருவள்ளுவர் உலக பொதுமறையை இயற்றியவன் அல்லவா. தமிழுக்கு பெருமை சேர்க்கும் எவரையும் மதிக்கக்கூடாது என்கிற திராவிட திருட்டு புத்தியன்றி வேறென்ன இது.

"என்ன ஈவெராமசாமியின் அறிவு இவ்வளவு கேவலமானதாக உள்ளது" என சுட்டி காட்டினால், ஈவெராமசாமியால் குப்பை தொட்டியில் எறிய வேண்டும் என சொல்லப்பட்ட வள்ளுவன் இயற்றிய திருக்குறளுக்கு மாநாடு நடத்தியதாக ஈவெராவாதிகள் பெருமையடித்து கொள்வார்கள். 
ஈவெராமசாமி, திருக்குறள் மாநாடு நடத்தியபோது கூறியது 1949ல். "திருக்குறள் ஆரிய தர்மத்தை-மனுதர்மத்தை-அடியோடு கண்டிப்ப தற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க எழுதப்பட்ட நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை " எவரின் நூலை பாராட்டி ஈவெராமசாமி மாநாடு நடத்தினாரோ - அத்தகைய மனிதரின் படத்தையே குப்பை தொட்டியில் எறிய வேண்டும் என்கிறார் "திருக்குறளிள் ஒன்றும் இல்லை" என. ஏன் ஈவெராமசாமி திருக்குறளை 1949ல் ஒழுங்காக படிக்கவில்லையா?
ஒன்றை முழுமையாக வாசித்து கருத்து சொல்ல வேண்டும் என்கிற அறிவின்றி முதலில் பழிப்பது பிறகு ஏற்பது... அல்லது முதலில் ஏற்பது பிறகு பழிப்பது என முரண்பாடு தான்.

மாநாடு நடத்திய திருக்குறளை தான், மறுவருஷமே, 1950 ஈவெராமசாமி இப்படி பழித்தார். "வள்ளுவர் குறளையும், 
அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை (1.6.50)யில் ஈவெராமசாமி. 1949ல் எந்த நூலை சிறப்பித்து மாநாடு வைத்தாரோ, அந்த நூலை, அதற்கு மறுவருஷமே மலத்துடன் ஒப்பிடுகிறார். திருக்குறள் மலமில்லை, திருக்குறளை இழிவு செய்ததன் மூலம், ஈவெராமசாமியின் மண்டை மூளை தான் மலமானது.

கடைசியாக சொல்வார்கள் ஈவெராவாதிகள் "உங்கள் வீட்டு பெரியவர்கள் உங்களை கடிந்து கொள்வதில்லையா, அப்படி தான் ஈவெராமசாமி காட்டுமிராண்டி" என சொன்னதும்" என சொல்வார்கள். கடிந்து கொள்வதும், காட்டுமிராண்டி என சொல்வதும் ஒன்றா? ஒருவன் தன் மனைவியையே, அவள் விரும்பாமல் தொடக்கூடாது, பிள்ளைகளையே அநாகரீகமாய் திட்டக்கூடாது எனும் சட்டக்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த தி.க.வினர் என்னவென்றால், "காட்டுமிராண்டி" என சொன்னதற்கு, வெட்கங்கெட்டு போய் சப்பைக்கட்டு கட்ட வருகிறார்கள். அடுத்து வரும்போது, இன்னும் யோசித்து சப்பைக்கட்டு கட்ட வாருங்கள் இல்லை என்றால் ஈவெராமசாமி சொன்னது தப்பு தான் என மன்னிப்பு கேட்டுவிடுங்கள்.__________________


Guru

Status: Offline
Posts: 19649
Date:
Permalink  
 

"திருக்குறள் மனுதர்மத்தின் சாரமாம்" பார்ப்பனர் நாகசாமியின் ஆங்கில நூலுக்குப் பதிலடி (1)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

***கலி. பூங்குன்றன்***

v22.jpg

மேனாள் தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் நாகசாமி என்ற பார்ப்பனர் திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் நூல் ஒன்றை வெளியிட்டார். பார்ப்பனர் நாகசாமியின் இந்த விஷமத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில் நேற்று மாலை (7.11.2018) 7 மணிக்கு  சிறப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வரவேற்புரையாற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். முனைவர் மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் பழ. கருப்பையா, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் அரிய உரையாற்றினர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன் நன்றி கூறினார்.

பார்ப்பனர்களை பொறுத்தவரை தமிழையும், தமிழர் களையும், தமிழர்களின் பண்பாட்டையும்  கொச்சைப் படுத்துவதில் எப்பொழுதும் 'நயமாய்' ஈட்டி முனையாய்ச் செயல்படக் கூடிய இட்லர் மனப்பான்மை கொண்டவர்கள். உலகத்திலேயே ஆரிய இனம்தான் உயர்ந்தது என்று ஓங்காரக் குரல் கொடுத்த உன்மத்தன் ஆயிற்றே - அந்த உன்மத்தர்கள் இந்தியாவில் ஆரியப் பார்ப்பனர்கள் உருவில் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். தமிழில் பேசுவார்கள், தேவைப்படும் இடங்களில் தங்களைத் தமிழர்கள் என்று கூடச் சொல்லிக் கொள்வார்கள்.ஆனால் நடப்பில் மட்டும் அவர்கள் எண்ணம் என்பது திரா விடர் - தமிழர் எதிர்ப்புதான் - தமிழ் மீது துவேஷம் தான்.

இதுபற்றி அறிஞர் அண்ணா கூறுவது கூர்மையானது - கவனிக்கத்தக்கதுமாகும்.  "தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டித ரெனப்பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்புக் கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ண மெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான்!" (திராவிடன்நாடு 2.11.1947 பக்கம் 18). பார்ப்பனர்களை எவ்வளவு துல்லியமாக அண்ணா படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

இன்றைக்குக்கூட சங்கராச் சாரியார் ஒவ்வொரு நாளும் பூஜை வேளையில் (சந்திர மவுளீஸ்வரர் பூஜை என்று சொல்லிக் கொள்வார்கள்) தமிழில் பேச மாட்டார். பூஜை வேளையில் தமிழ் நீஷப் பாஷை என்று கூறிப் பேச மாட்டார்கள். (ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங் கனார் பேட்டி - 'உண்மை' 1.12.1980).

ஓலைச் சுவடிகளை எல்லாம் திரட்டி தமிழ் இலக்கியங் களைப் பதித்தவர் உ.வே. சாமிநாதய்யர் என்று கூறப்பட்டாலும் அதிலும் கூட அவர் தனது பார்ப்பனர் உணர்வைக் காட்டத் தவற வில்லை.

"ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள்!" எனும் நூலில் பாவலரேறு பெருஞ் சித்திரனார் உ.வே.சா. பற்றி பின்வருமாறு குறிப்பிட் டுள்ளார். "புறநானூற்றில் 'ஆன்முலை யறுத்த' - என்று தொடரும் 34ஆம் பாட்டில் உள்ள அடி களில் உள்ள ஒரு சொல், யாழ்ப் பாணத்துப் பழைய வெளியீடு ஒன்றில் 'அறவோர்' என்று வந் துள்ளது என்று உரையாசிரியர் சிலர் குறித்துள்ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் 'பார்ப்பார்' என்று குறிக்கப்பெற்றுள்ளது. பாட வேறுபாடாகக்கூட அச் சொல் இவர் வெளியீட்டில் எழுதப் பெறவில்லை. 'அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடா'தெனும் 'அறங்கூறும் அவ்வடி, 'பார்ப்பார்க்குக் கொடுமை செய்தல் கூடா'தென்பதாக இவர் பதிப்பில் காட்டப்பெற்றதும், அதற்குக் 'கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலை' எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப்பதும், இவ்வாறு பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப்பெற்ற கருத்து மேலும் மேலும் வலிவுற வேண்டும் என்னும் உள்நோக்கம் இவருக்கு இருப்பதை நன்கு புலப்படுத்தும். மேலும் அதில் உள்ள 305ஆம் பாட்டில் உள்ள 'தன்மை' என்னும் ஒரு சொல் லுக்கு 'அவரவர் சாதி இயல்பு' - என்று விளக்கம் எழுதியுள்ளார்.

இனி, இவர் உரையுடன் வெளியிட்ட குறுந்தொகை 'முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்' எனும் 67ஆம் பாட்டின் உரை விளக்கத்தில் நச்சினார்க்கினியரின் (அவரும் ஒரு பார்ப்பனர்) தொல்காப்பிய உரையைச் சுட்டிக்காட்டி, "இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்க் கினியர், பார்ப்பானையும், பார்ப்பனியையும் தலைவராகக் கூறியது எனக் கொண்டனர் போலும். பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர்மனையிற் பாணர் பெறும் உணவைப் பற்றிக் கூறியிருக்கும் பகுதி இங்கே ஆராய்தற்குரியது" என்றும்,

'அறிவுடையீரே' என்று தொடங்கும் குறுந்தொகை 206ஆம் பாட்டின் அடியில், 'பார்ப்பனப் பாங்கனைப் பன்மையாற் கூறுவது மரபென்று தெரிகின்றது' என்றும்,

'ஆசில் தெருவில்' என்று தொடங்கும் 277ஆம் பாட்டின் சிறப்புரையில், 'ஆசில்' (குற்றமற்ற) தெருவென்றும் நாயில் (நாய் இல்லாத) வியன்கடை யென்றும் சிறப்பித்தமையால், இங்கே கூறியது அந்தணர் தெருவென்று 'தோன்றுகின்றது' என்றும் எழுதி, 'பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகலின்னா' எனும் (இன்னா 3) அடியையும், 'அந்தணர் அமுதவுண்டி' (கம்பர்) எனும் பாட்டடியையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவர் இவ்வாறு காட்டுவதன் நோக்கம், கழகத் தமிழ் இலக்கி யங்களில் ஆங்காங்கே ஆரியக் கருத்துகளை வலியுறுத்திக் காட்ட வேண்டுமென்னும் உட்கோளேயாகும்.

v23.jpg

தமிழ் மொழிக்கு மிக உழைத்தவரெனச் சொல்லப் பெறும் உ.வே.சாமிநாதய்யர் தமிழ்மொழியின் தனிமைச் சிறப்பைப் பலவிடங்களில் தாழ்த்தியுள்ளது கவனிக்கத்தக்கது. கழக நூற்பதிப்புகளுக்காக அவர் ஊர் ஊராய் அலைந்ததும், அவற்றைத் திரட்டி ஆராய்ந்து அச்சிட்டதும் அவர் பெரு மையை நன்றியுடனும் நினைக்கப் போதுமான அரிய வினைப்பாடுகள் எனின், அந்நூல்களிலெல்லாம் ஆரிய நச்சுக்கருத்துகளைத் தக்கவிடத்தில் மறவாது வைத்துப் போனதும் இவரின் இயல்பான இனவுணர்வை மறவாதிருக்கச் செய்யும் நினைவாகும். தமிழ்மொழி மேல் இவருக்கு ஒருவகைப் பற்று உளதென்றால், அஃது ஆரியத்தைக் கலப்ப தற்கு ஏற்ற ஒரு கருவியாக உள்ளதெனும் மாற்றாந் தாய்ப் பாசமே என்க.

பரிமேலழகர் திருக்குறளை எவ்வாறு தம் இனக் கருத்துகளை ஊன்றுவதற்கு ஏற்ற ஒரு விளைநிலமாக எடுத்துக் கொண்டாரோ, அவ்வாறே உ.வே.சா. கழகப் பதிப்புகளைக் கைக்கொண்டார். இன்றியமையாத சொற்களை யெல்லாம் வடமொழியாகவே இவர் பயின்றார். பண்புகள் அல்லது குணங்கள் என்று குறிப்பதால் நிறைவுறாத இவர், குணவிசேடங்கள் என்று குறிப்பதால் மன நிறைவுறுவார். மைசூர் நாடு என்று குறிக்காமல் மைஸுர் ஸமஸ்தானம் என்றே குறிப்பார். மேலும் அரசுக்கட்டில் என்பதைச் சிங்காதனம் என்றும், அமைச்சு என்பதை மந்திரி வேலை என்றும், விண்மீன் என்பதை, நக்ஷ்திரம் என்றும், மருத்துவம் என்பதை வைத்தியம் என்றும், வள்ளல் என்பதை உபகாரி என்றும், இளம் பருவம் என்பதை இளம்பிராயம் என்றும், படிகள் என்பதை பிரதிகள் என்றும், முற்றூட்டு என்பதை ஸர்வமானியம் என்றும், கல்வெட்டு என்பதை சிலாசாசனம் என்றும், சான்று என்பதை ஆதாரம் என்றும், நகைகள் என்பதை ஆபரணங்கள் என்றும் கொடி என்பதை துவசம் என்றும், போர் என்பதை யுத்தம் என்றும், பயன்படுத்துதல் என்பதைப் பிரயோகங்கள் என்றும் பலவாறு வடசொற்களை பெய்து எழுதுவதில் இவர் பெருமகிழ்வுற்றதாகத் தெரிகின்றது.

v25.jpg

அவ்வாறு தமிழ்மொழியோடு வடசொற்களை பெய்து எழுதுவதால் வடமொழியாகிய சமசுகிருதத்தின் துணை யின்றித் தமிழ் இயங்காது என்பது வலியுறுத்தம் பெறல் வேண்டும் என்பது இவர் கொள்கையாக இருக்கலாம். இவர் இதனை, ஒரு கொள்கையாக வலிந்தே கையாண்டுள்ளார் என்பதற்குப் புறநானூற்றுப் பதிப்பின் உரையின் இயல்பு என்னும் பகுதியில் 'வடசொல்லாட்சி' என்னும் தலைப்பிட்டு, அப்புறநானூற்று உரையாசிரியரின் உட்கோளை இவர் கண்டுக் கொண்டதாக எழுதும் பகுதியே அழுத்தமான சான்றாகும். அப்பகுதியில்,

"இவரது உரைநடை பெரும்பாலும் செந்தமிழ்ச் சொல் நிறைந்ததாக இருப்பினும் ஓரோரிடங்களில் சில தமிழ்ச் சொற்களுக்கு வட சொற்களைக் கொண்டு இவர் பொருள் எழுதி யுள்ளார். கடனென்பதற்குப் பிண்டோதக்கிரியையென் றும், மருந்தென்பதற்குப் பரிகாரம் என்றும், ஒளிருமென் பதற்குப் பாடஞ்செய்யும் என்றும், அறம் என்பதற்கு தர்மம் என்றும், பூண்டென்பதற்குப் பரித் தென்றும், ஓம்புதல் என்பதற்குப் பரிகரித்தல் என்றும் கூறும் இடங்களையும் இவற்றைப் போன்ற பிறவற்றையும் காண்க."

தமிழ்த் தாத்தா என்று கூறப் படுவரே தமக்குள்ள வாய்ப்பைப் பயன்படுத்தித் தமிழை இப்படி யெல்லாம் குதறி இருக்கின்றார் என்றால் மற்ற பார்ப்பனர்களைப் பற்றிப் பேசுவானேன்!__________________


Guru

Status: Offline
Posts: 19649
Date:
Permalink  
 

 திருவள்ளுவரைப் பற்றிப் பார்ப்பனர்கள் (சங்கராச்சாரியார் உட்பட) புரட்டு! (2)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

***கலி. பூங்குன்றன்***

v28.jpg

உ.வே.சா. பற்றி தந்தை பெரியார் அவர்களின் கணிப்பும் இங்கு எடுத்துக்காட்டத் தகுந்ததாகும்.

"பார்ப்பனர்கள், டாக்டர் சாமிநாதய்யர் விஷயத்தில் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டதன் அந்தரங்க நோக்கம் என்ன என்பதை பார்ப்பனரல்லாதார் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி வெளிப்படுத்த விரும்பியே இவ்விஷயங்களை எழுத முன் வந்தோம்.

உண்மையில் இந்தப் பார்ப்பனர்கள் தமிழ் பாஷையின் மேலும், தமிழ் அபிவிருத்தியிலும் ஆசையுடையவர் களானால் இந்த டாக்டர் அய்யர் அவர்களை இன்று பார்ப்பனர்கள் கவுரவம் பண்ணுவதற்குக் காரணமாக இருந்த, அவருடைய ஆசிரியரான காலஞ்சென்ற மகா வித்துவான். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றியோ, கும்பகோணம் காலேஜில் தமிழாசிரியராக இருந்த காலஞ்சென்ற தியாகராஜச் செட்டியார் அவர்களைப் பற்றியோ குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது. ஆனால் இவர்களைப் பற்றிப் பொது ஜனங்கள் தெரிந்து கொள்ளும்படி செய்யவோ இவர்கள் அய்யர் அவர்களுக்குச் செய்த நன்றியை எடுத்துக்காட்டவோ எந்தப் பார்ப்பனரும், எந்தப் பார்ப்பனப் பத்திரிகையும் முன்வரவில்லை.

அன்றியும் தமிழைப் படிப்பாரும், ஆதரிப்பாரும், படிப்போர்க்கு உதவியளிப்பாரும் இல்லாதிருந்த காலத்தில் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி, அதன் பயனையும் பெரும்பாலும் பார்ப்பனர்களே அடையும்படிச் செய்து அச்சங்கத்தின் வளர்ச்சிக்காகவே சாகும் வரையிலும் உழைத்துக் காலஞ்சென்ற பாண்டித்துரைத் தேவர் அவர்களைப் பற்றி மனதினாலாவது இந்தப் பார்ப்பனர்கள் நினைத்ததுண்டா?

தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கணங்களையும், மற்றும் பல இலக்கியங்களையும் மிகுந்த பிரயாசையுடன் தேடி வெளியிட்ட காலஞ்சென்ற சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களைப் பற்றி இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையேனும் பேசுவதுண்டா?

தற்பொழுது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை வைத்து நிர்வகித்து பெரும்பாலும் தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணம் பண்ணிவரும் தோழர் உமாகேசுவரன் பிள்ளை அவர்களின் முயற்சிகளுக்கு இந்தப் பார்ப்பனர்கள் துணை செய்யாவிட்டாலும்கூட, பாதகஞ்செய்யாமல் இருக்க வேண்டும் என்றாவது நினைக்கிறது உண்டா?

உண்மையில் பார்ப்பனர்களுக்குக் கொஞ்சமாவது தமிழ் மொழிக்கும், தமிழ் அபிவிருத்திக்குப் பாடுபட்டவர் களுக்கும், பாடுபடுகின்றவர்களுக்கும் பெருமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா என்பதை இதுவரையிலும் சொல்லி வந்ததைக்கொண்டும், மேலே நாம் எடுத்துக்காட்டியவர்களின் ஊழியத்தைச் சிறிதாவது பாராட்டுவதற்கு முயற்சியெடுக்காததைக் கொண்டும் அறிந்திருக்கலாம்!" என்று தந்தை பெரியார் குறிப்பிட் டுள்ளார்கள்.

('குடிஅரசு' 10.3.1935 பக்கம் 3,4)

இதுதான்  தமிழ்  வளர்ப்பில்கூட இன பேதக் கண் ணோட்டம்!

v29.jpg

"திரு" என்ற அருந் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவ தில்கூட பார்ப்பனர்களிடத்தில் மல்லுக் கட்ட வேண்டி யிருந்தது.

"திரு"வை எதிர்த்து இரா. இராகவய்யங்கார், உ.வே.சாமி நாதய்யர் முதலானோர் எழுதினர். இரா. இராகவய்யங்கார் "சுதேசமித்திரன்" இதழில் "திரு" என்ற சொல் "ஸ்ரீ" என்பது போலச் செவிக்கு இன்பம் பயவாது என்றும், "திரு" என்னும் அடையாளமும் உதவாதது என்றும் மறுத்தெழுதினார். (பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரான் அவர்களின் "தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும்" மேலும் "குறளீயம்" 1.11.2000).

தமிழில் உள்ள ஓர் அழகிய சொல்லைப் பயன்படுத் துவதற்கு இந்தளவுக்குப் பார்ப்பனர்கள் முட்டுக்கட்டை என்பதைப் புரிந்துகொண்டால் பார்ப்பனர்களின் மனப் பாங்கு எத்தகையது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே.

சென்னை சிறப்பு கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் "துக்ளக்கில்" சோ எழுதிய "வெறுக்கத்தக்கதா பிராமணியம்?" எனும் கட்டுரைத் தொடருக்கு  "உண்மை" இதழில் "வெறுக்கத்தகுந்ததே பிராமணீயம்" எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் எழுதிய தொடரிலிருந்து ஓர் எடுத்துக்காட்டைக் கூறினார்.

"உலகம் போற்றும் உயர் கருத்துகளை வாரி வழங்கிய திருவள்ளுவரைக் கூட இவாள் கொச்சைப்படுத்தாமல் விட்டது கிடையாதே!

வ.வே.சு. அய்யர் The Kural or the Maxims of Thiruvalluvar (1916) என்று ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்து இருக்கிறார். அதன் முன்னுரையில்,

... Tradition declares that he was the child of a Brahman father named Bhaghavan and a Pariah mother Adi who had been brought up by another Brahman and given in marriage to Bhaghavan. Six other children are named as the issue of this union, all of whom have debbled in poetry. 

"திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற பார்ப்பனராவார். இவரது தாயார் ஆதி என்கிற பறைச்சி. ஆதியை இன்னொரு பார்ப்பனர் அழைத்துவந்து பகவ னுக்கு மணம் முடித்து வைத்தார். ஆதி - பகவன் கூட் டுறவால் திருவள்ளுவரன்றி ஆறு குழந்தைகள் பிறந்தனர். அக்குழந்தைகளுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டன என்று மரபுவழிச் செய்தியாக சொல்லப்படுவதோடன்றி இதனை கவிதையாகவும் எழுதி வைத்துள்ளனர்" என்று எழுதி யுள்ளார். ஒரு பாடலில் இக்கருத்தை கபிலனே சொல்லுவ தாக அமைந்து இருக்கிறது. அதில்கூட "அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்" என்று கடைசி வரி முடிக்கப்பட் டுள்ளது. மேலும் அதே முன்னுரையில்,

“Thiruvalluvar does not treat of the fourth objective separately and Hindus say that he has submitted himself to the orthodox rule that none but a Brahman should be a teacher of spritual truth to mankind”.

அதாவது, "திருவள்ளுவர் நான்காவதான வீட்டுப் பேற்றைப் பற்றி தனியாக ஏதும் கூறவில்லை. மனித குலத்திற்கு ஆன்மீக உண்மைகளைப் பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் போதிக்கக் கூடாது என்ற பழங்கால வைதீக (வேத) விதிகளுக்கு திருவள்ளுவர் தம்மை உட்படுத்திக் கொண்டார் என்று இந்துக்கள் கூறுகிறார்கள்" என்று எழுதினார்."

(க. திருநாவுக்கரசு அவர்களின் "திருக்குறளும்  - திராவிடர் இயக்கமும்" சங்கொலி 14.6.1996)

என்னே பார்ப்பனத்தனம்!

ஜெகத் குரு என்று ஜெகத்துக்கே பறைசாற்றுவார்கள்; இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஜப்பானுக்கும் இவர்தான் தலைவர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சுக்கும் இவர்தான் தலைவராம். (அப்படித்தானா?) ஆனால் மனம்? ஆதி சங்கரரைப் பற்றி  விவேகானந்தர் சொல்லுவதுபோல அவர் வழி வந்த இந்த சங்கராச்சாரியார்களுக்கு குறுகிய புத்திதான் - தான் பிறந்த பார்ப்பன ஜாதி எனும் ஆணவம் கொக்கரிக்கும் - குரூரக் குணம்தான் - தங்கள் மொழியான சமஸ்கிருதத்தின் மீது தாங்கொணா வெறிதான் - கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புரட்டிக் குறுகத் தரித்த குறள் என்றார் - குறளைப் பற்றி இடைக்காடர் எனும் புலவர். மதுரைப் பாலாசிரியனார் எனும் புலவரோ,

வெள்ளி வியாழம் விளங்கு இரவி வெண்திங்கள்

பொன் என நீக்கும் புறஇருளைத் - தெள்ளிய

வள்ளுவர் இக்குறள் வெண்பா அகிலத்தோர் உள் இருள் நீக்கும் ஒளி

என்றார்.

இப்படி உலகத்தாரின் உள் இருள் நீக்கும் ஒளியான திருவள்ளுவர் யாத்த திருக்குறளை லோகக் குரு என்று 'லொக் லொக்'கென்று இருமிக் கொண்டு, இறக்கும் தருவாயில் இருக்கும்  பார்ப்பனர்கள்கூட உச்சிமோந்து போற்றுகிறார்களே, அந்த சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?

வைணவப் பெண்மணியாகிய ஆண்டாள் என்பவர் பாடியதாகக் கூறப்படும் திருப்பாவையில் இரண்டாவது பாடல், "நாட்காலை நீர் ஆடி" என்று தொடங்குகிறது. அதில் 'செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்' என்பது ஒருவரி.

இதற்கு இந்த லோகக் குரு சொன்ன விளக்கம் என்ன தெரியுமா?

"தீய திருக்குறளைச் சென்று ஓத மாட்டோம்" என்று பொருள் சொல்லுகிறார் என்றால் இந்தப் புரோகிதப் பார்ப்பனக் கும்பலை என்னவென்று சொல்லுவது! 'குறளை' என்பதற்கு என்னதான் பொருள்? அய்காரத்தைக் கடைசியாகக் கொண்ட இந்த சொல்லுக்கான பொருள் 'கோள் சொல்லுதல்' என்பதாகும் (மதுரைத் தமிழ் பேரகராதி)

தீக்குறளைச் சென்றோதோம் என்றால் தீமை விளைவிக்கும் கோட் சொற்களைச் சென்று சொல்ல மாட்டோம் என்பதாகும். ஆனால் இந்தக் கோட் சொல்லி குல்லுகப்பட்டர் பாம்பரையோ அர்த்தத்தை அனர்த்தமாக்கி ஆனந்தநடனம் ஆடுகிறதே!

இந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் இப்படி சொல்லு கிறார் என்றால் சீனியர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தன் பங்குக்கு எதையாவது உளறி வைக்க வேண்டாமா?

மதுரையில் தொழில் அதிபரான பார்ப்பனர் ஒருவருக்கு கைங்கரிய சிரோமணி விருது வழங்க சென்ற இடத்தில் இவர் உதிர்த்த 'உன்னத' மொழி என்ன தெரியுமா?

"திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டத்தட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும். வாழ்வின் வழிமுறைகளும், குறிக்கோளும் அதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றாரே பார்க்கலாம் ('தினத்தந்தி' 15.4.2004)

"நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது." (கீதைஅத்தியாயம் 4 - சுலோகம் 13) இப்படி சொல்லும் கீதையும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளும் ஒன்றாம்.

பிறவிக்குருடர்கூட இப்படிக்கூறி இப்படி அடையாளப் படுத்த மாட்டான்.

சந்தனமும் - சாணியும் ஒன்று, பாலும் -  பாஷாணமும் ஒன்று என்று சொல்லும் பாழ்ப்புத்தி பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தான ஏகபோகக் குணம்!

குறள் மனிதநேயத்தின் குணம்! சங்கரமடம் மனித வெறுப்பின் இனம்!! இரண்டும் எதிர்நிலை மனம்!!! இரண்டும் எதிர் நிலை - ஒன்றல்ல - புரிந்து கொள்வீர்!

'திருக்குறளில் உள்ள அறத்துப் பாலை - அதிலும் முதலில் பத்துக் குறள்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டு பொருட்பால், காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று காஞ்சி ஜெயேந்திரர் சொன்னதைக் கண்டித்து 2.4.1982 அன்று ஈரோட்டில் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருக்குறள் பேரவை 4ஆம் ஆண்டு விழாவில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டதே!

"திருவள்ளுவர், பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் திருக்குறளை இயற்ற முடிந்ததென்று ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை க.அயோத்திதாச பண்டிதர் கேள்வி கேட்டு மடக்கிய நிகழ்ச்சி   "நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை" என்ற சிறு நூலில் காணப்படுகிறது.

அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர், இராயப் பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராயிருந்து தொண்டாற்றியவர். 'தமிழன்' என்ற வார இதழை 1907 இல் துவக்கி ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப் படுத்தியவர்.

இவர் 'பார்ப்பன வேதாந்த விவரம்' 'வேடப்பார்ப்பனர் வேதாந்த விபரம்' 'நந்தன் சரித்திர விளக்கம்' 'நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை' "திருவள்ளுவ நாயனார், பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தாரென்னும் பொய்க் கதை விபரம்" ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பவுத்த சங்கத்தைப்பற்றி திரு.வி.க. "அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று" என்று போற்றுகிறார்.

1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது "வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கல-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும்" என்றார்.

அதற்கு சிவநாம சாஸ்திரி, "சரி, கேளும்" என்றார்.

"நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப் படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் 'எம்.ஏ.,' 'பி.ஏ.,' படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர்" என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து "பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலை களில் அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக் குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர்" என்று கேட்டார்.

சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் திரு. க.அயோத்திதாச பண்டிதர், "ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும்," என்று சினந்து கேட்டுக் கொண்டி ருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், திரு. பி.அரங்கைய நாயுடும், திரு. எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் திரு. க.அயோத்திதாச பண்டிதரை அமைதிப்படுத் தினார்கள்.

திரு. சிவநாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவி விட்டார்.

இந்த தகவலை "நூதன ஜாதிகள் உற்சவபீடிகை" எனும் நூலிலிருந்து வெளிப்படுத்தியவர் தோழர் சு. ஒளிச்செங்கோ. இத்திசையில் சொல்லிக் கொண்டே போகலாம்.__________________


Guru

Status: Offline
Posts: 19649
Date:
Permalink  
 

 குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

***கலி.பூங்குன்றன்***

v23.jpg

மனுதர்மத்தின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று பார்ப்பன நாகசாமியால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கான மறுப்புக் கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவருக்கே உரித்தான முறையில் 'நச்சு நச்சு' என்று கொடுத்தார் சாட்டையடி!

வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தெடர்ந்து நாகசாமியை எம்.ஜி.ஆர். மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் அப்படி என்ன தான் கூறினார்?

எம்.ஜி.ஆர். தொடக்கத்தில் பகுத்தறிவுவாதியாகத்தான் நடந்து கொண்டார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டபொழுது பலகீனமானார். பார்ப்பன வட்டாரம் அவரைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. காஞ்சிப் பெரியவாளை சந்தித்து விட்டு வரலாம் என்று 'ஆனந்த விகடன்' மணியன் சொல்ல, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரும் கிளம்பி விட்டார்.

அங்குப் போய் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைச் சந்தித்தனர். உடல் நலனை விசாரித்துக் கொண்டனர்.

அப்பொழுது சங்கராச்சாரியார் முதல் அமைச்சரிடம் மூன்று வேண்டுகோள்களை வைத்தார்.

ஒன்று - பல கோயில்களில் ஒருவேளை விளக்குக் கூட ஏற்ற முடியாத நிலை - அதற்கு வழி செய்ய வேண்டும்.

கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு

 

நாகசாமியின் திருக்குறள் பற்றிய நூலுக்கு மறுப்பு நூல் ஒன்றை முனைவர் மறைமலை இலக்குவன் எழுதுவார் என்று கூட்டத்தில் அறிவிப்பு.

இரண்டாவது - பழம்பெரும் கோயில்கள் எல்லாம் இடிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் புதுப்பித்து கும்பாபிசேகம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு மூன்றாவதைச் சொல்லுவதற்கு கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டார். சிறிது நேரங்கழித்து திருவாய்த் திறந்தார், "நாகசாமியை மன்னிச்சிடுங்கோ!" என்றதும், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அதிர்ந்து போனார்.

v25.jpg

தொல்லியல் துறை இயக்குநரான நாகசாமி தொல்லியல் துறையின் கண்டுப்பிடிப்புகள், பெறும் புதிய தகவல்களை முதலில் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தானே ஏடுகளுக்குப் பேட்டி கொடுத்து வந்தார். இந்த ஒழுங்கு மீறலுக்குத் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத்தான் மன்னிக்க வேண்டும் என்று சங்கராச்சாரியார் சொன்னார் முதல் அமைச்சரிடம்.

(சங்கரமடம் எப்படியெல்லாம் அவாளுக்காக வேலை செய்கிறது பார்த்தீர்களா?)

சற்றுத் தயங்கிய முதல் அமைச்சர் சரி என்று தலையாட்டினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் (ஆதாரம்: குமுதம் லைஃப், 27.12.2017 பக். 180, 182) சொன்னதைத் தொடர்ந்துதான் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் நாகசாமியை எம்.ஜி.ஆர். மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க முடியாது என்றார்.

நாகசாமி என்ற தனி மனிதன் எழுதிய நூலாக இதனைக் கருத முடியாது. இவர் பின்னணியில் ஒரு வலைப் பின்னல் இருக்கிறது. இதே நாகசாமி 2012இல் Mirror of Tamil and Sanskrit எனும் நூலினை எழுதினார். அதில் பிராமி என்பது பிராமணர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று எழுதினார். பிராமி என்பதால் பிராமணர்களால் கண்டுபிடிக் கப்பட்டது என்பது நல்ல நகைச்சுவை.

5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது சமஸ்கிருதம். அதிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் திருகுறளை எழுதினாராம். என்ன ஆதாரம் என்றெல்லாம் கேட்டு விடக் கூடாது அவர்களிடம்.

அடுத்து அதே ஆண்டு இன்னொரு நூலையும் எழுதினார். "Tamil Nadu A Land of Vedas" என்பதாகும் அது. தமிழ்நாடு வேத நாடா? (அப்படி என்றால் வேதங்கள் தமிழில் தானே இருக்க வேண்டும்).

திருக்குறளுக்கு நாகசாமி என்ன விளக்கம் எழுதுகிறார்? அறிவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது - என்பது குறள்.

அதற்கு நாகசாமியின் விளக்கம் என்ன தெரியுமா? "பார்ப்பானின் காலைத் தொட்டு வணங்காதவர் சொர்க்கம் போக மாட்டார்கள்" என்று எழுதியுள்ளார்.

அந்தணர் என்றால் பார்ப்பனரா? அந்தணர் என்பவர் யார் என்பதற்குத் திருவள்ளுவர் அழகாக விளக்கம் சொல்லியுள்ளாரே?

அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்

செந்தண்மைப் பூண் டொழுகலான்.

என்பது தான் அந்தணருக்கு திருவள்ளுவர் சொல்லும்  விளக்கமாகும்.

நாகசாமியின் இந்த நூல் விமர்ச்சிக்கப்படுவதைவிட கொளுத்தப்பட வேண்டும் (பலத்த கர ஒலி).

எல்லாக் குறளுக்கும் விளக்கம் எழுதிய நாகசாமி ஒரே ஒரு குறளுக்கு மட்டும் விளக்கம் எழுதவில்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

என்ற குறளுக்கு அவரால் ஒன்றும் எழுத முடியவில்லை.

ஒரு செய்தி: திருநாவலூரில் இன்று (7.11.2018) காலை சுந்தரர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என்று அறிவிப்பு. அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லுகிறார்கள். நீதிபதி மகாதேவன் கேட்டார். சுந்தரர் தேவாரத்தை எந்த மொழியில் பாடினார்? 'பித்தா பிறை சூடிய பெருமானே' என்று சுந்தரர் தமிழில் தானே பாடினார் என்று நீதிபதி கேள்விக்குப் பதில் இல்லை.

இன்று காலை தமிழில் அங்கு குடமுழுக்கு நடைபெற்று விட்டது என்று சுப.வீ. சொன்னபோது - ஆரவாரம் மக்களிடையே!

(கரூர் அருகே உள்ள திருமுக்கூடலூர் சிவன் கோயில் குடமுழுக்கு 9.9.2002இல் தமிழில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார். "நாத்திகம் பேசும் கருணாநிதிக்கு இதில் தலையிட உரிமை இல்லை" என்றார். குடமுழுக்கு செய்த பின்னர் கோயில் நடை இழுத்துச் சாத்தப்பட்டு சுத்திகரிப்பு நடந்தது என்பதை நினைவூட்டுகிறோம்.)

இதில் வேதனை என்னவென்றால் தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆதினகர்த்தாக்கள் தமிழில் குடமுழுக்கு ஆகமத்துக்கு விரோதம் என்பார்கள்.

("சைவமும் தமிழும் தழைத்தோங்குக" என்ற வாசகங்கள் இந்த ஆதினங்களின் வளாகங்களுக்குள் காணப்படும்).

இந்தியப் பண்பாட்டுக்குரிய நூல் திருக்குறள் என்று எழுதுகிறாரே திருவாளர் நாகசாமி.

இந்தியா முழுவதும் ஒரே பண்பாடா இருக்கிறது? என்ற வினாவை சுப.வீ. தொடுத்தபோது கரஒலி தான்.

கடைசியாக என்ன சொல்லி நூலை முடிக்கிறார் தெரியுமா?

திருகுறள் தானாக எழுதப்பட்டதா? தழுவி எழுதப் பட்டதா? என்பதை எதிர்காலம் முடிவு செய்யும் என்கிறார். அப்படி யென்றால் எதற்கு இப்படியொரு நூல் என்ற சுப.வீ.யின் கேள்வி அர்த்தமுள்ளது.

பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்

v24.jpg

இவர் உரை ஓர் ஆய்வுரையாக அமைந்திருந்தது என்றே சொல்லவேண்டும். நாகசாமி நூலுக்கு ஒரு மறுப்பு நூல் எழுத வேண்டும் என்று தாய் உள்ளக் கனிவோடு ஆசிரியர் பெருந்தகை எனக்கு அன்புக் கட்டளை இட் டுள்ளார் - அந்தப் பணியை விரைவில் முடிப்பேன் என்று சொன்னபோது மிகப் பெரிய வரவேற்பு பார்வையாளர்கள் மத்தியில்.

ஆரியப் பண்பாட்டுக்கு எதிர்ப்புத் தொடங்கிய காலந்தொட்டு அவ்வப்பொழுது எதிர்ப்பு முனைகள் இருந்தபோதிலும் தந்தை பெரியார்தான் அதன் குடலை உருவிக் காயப் போட்டார்.

- நீதிக்கட்சி ஆட்சி பெரியார் வழிகாட்ட காமராசர் ஆட்சி எல்லாம் பெரியார் கொள்கை வழி ஆட்சிகள்தான். வடக்கே வி.பி.சிங் பிரதமராக இருந்து பெரியார் கொள்கையைப் போற்றினார்.

தர்ம சாத்திரங்களை எழுதியவர்கள் பார்ப்பனர்கள். அற நூல்கள் தமிழருக்குரியவை. சமஸ்கிருதத்தில் தர்க்க நூல்கள் உண்டு. அவை எல்லாம் மறைக்கப்பட்டு - தர்ம சாஸ்திரங்கள் என்னும் வருணதர்மத்தை வலியுறுத்தும் நூல்களை தூக்கிக் பிடிக்கக் கூடாது என்றார் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்.

எழுத்தாளர் பழ.கருப்பையா

v26.jpg

எழுத்தாளர் பழ. கருப்பையா அவர்களின் பேச்சு ஒரே கலகலப்புதான். பல வரலாற்றுத் தகவல்களைக் கூறினார்.

2100 ஆண்களுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் தொடர்ந்து பெரியார் காலம் வரை ஆரிய எதிர்ப்புத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது! பெரியார் காலத் தோடு இந்த இனப் போர் முடியும் என்று எதிர்பார்த்தோம்.  ஆசிரியர் வீரமணி காலத்திலும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.

தமிழனுக்கு மெய்யியல் இல்லையாம். அதைச் சரி செய்ய வள்ளுவர் வேதங்களிலிருந்து கடன் பெற்று எழுதினாராம்.

இன்றைக்கு நாகசாமிகள் எழுதுகிறார்கள் என்றால் இதற்கு மூலம் பரிமேலழகர்தான். பரிமேலழகர் மிகச் சிறந்த உரை ஆசிரியர்தான். ஆனாலும் பார்ப்பனத் தனத்துடன் பல இடங்களில் நடந்து கொண்டுள்ளார்.

'அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலுமாம்' என்று பரிமேலழகர் எழுதுகிறார் என்று பழ.கருப்பையா குறிப்பிட்டார்.

ஆரியம் வேறு, திராவிடம் வேறு - இரண்டும் இரு வேறு பண்பாட்டு நிலைப்பாடுகள்.

உயிர்க்கொலை புரிந்து யாகம் நடத்துவது ஆரியம்.

ஆனால் திருவள்ளுவர் நமது தமிழ்ப் பண்பாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் என்ன பாடுகிறார்?

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்சொரிந்து உண்ணாமை நன்று.

என்று ஆரியத்துக்கு எதிரான கருத்தை முன் வைக்கிறார் வள்ளுவர்.

(பெரும்புலவர் சீனிவாசன் பல குறள்களைச் சுட்டிக்காட்டி, பரிமேலழகர் தவறான உரையை எழுதியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். வடமொழி நூல்களைத் தழுவி எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் குறள்களின் எண்ணிக்கையையும் பெரும்புலவர் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். 434, 501, 648, 924, 993, காமத்துப் பால், அவதாரிகை 1330 ஆக ஏழு இடங்கள்.

சில இடங்களில் அரசன் புரோகிதர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும் என பரிமேலழகர் எழுதுகிறார். புரோகிதர்கள் தெய்வத்தால் வரும் குற்றங்களைத் தீர்த்து வைப்பார்களாம். 425, 45, 501 ஆகிய குறள்களுக்கு பரிமேலழகர் இவ்வாறு பொருள் கூறுவதாக புலவர் சீனிவாசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளது இவ்விடத்தில் சுட்டிக் காட்டத் தகுந்தது.

ஆரிய - திராவிட வேறுபாட்டைச் சுட்டிக் காட்டுவதற்கு உழவுத் தொழிலைப்பற்றி மனுதர்மம் கூறியதையும், திருவள்ளுவர் கூறியதையும் ஒப்பிட்டு காட்டினார் எழுத்தாளர் பழ.கருப்பையா.

பயிர்த் தொழிலைப் பற்றி மனுதர்மம் என்ன சொல்லுகிறது?

"சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக் கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது - ஏனெனில் இரும்பை முகத்திலே உடைய கலப்பையும், மண் வெட்டியும் பூமியையும், பூமியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுகிறதல்லவா!"

மனு அத்தியாயம் 10 சுலோகம் 841

இது ஆரியத் தத்துவம் - கலாச்சாரம்; ஆனால் திருவள்ளுவர் என்ன சொல்லுகிறார்?

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர்

இது திராவிடத் தத்துவம்.

இப்படி இருக்கும்போது திருக்குறள் மனுவின் சாரம் என்று நாகசாமி எழுதுவது எப்படி? பார்ப்பனத் தனம்தானே!

நாகசாமியின் இந்த நூலைப் பற்றி - பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டைப் பற்றி எல்லாக் கட்சித் தலைவர்களும் பேச வேண்டும். எல்லாக் கட்சிகளிலும் உள்ள இலக்கிய அணிகளும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எழுத்தாளர் பழ.கருப்பையா. அவர் உரை ஒரே கலகலப்பாகவே அமைந்திருந்தது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

v22.jpg

நாகசாமிக்கு இவ்வளவுப் பச்சையாக தமிழர்களை எதிர்த்து உண்மைக்குப் புறம்பாக பச்சைப் பார்ப்பனத் தனத்துடன் நூல் எழுதும் துணிவு எப்படி வந்தது?

நாகசாமி என்ற ஒரு தனி மனிதர் இப்படியொரு நூலை எழுதியுள்ளார் என்று தவறாகக் கருதக்கூடாது.

திட்டமிட்டே ஒரு வட்டாரம் - ஒரு லாபி இதனைச் செய்கிறது. இந்த வேலையைச் செய்வதற்காகவே கோடிக்கணக்கில் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனுதர்மத்தையே இந்திய அரசமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இந்தத் திராவிட மண்ணை - பெரியார் மண்ணை வேத மண் என்கிறார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் இந்த மண்ணுக்கு சட்டரீதியாக 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியுள்ளார். இதனை மாற்றி வேத நாடாக ஆக்கப் பார்க்கிறார்கள் - நாகசாமிகளின் வேலை என்பது இதில் ஒன்றுதான்.

ஏன் ஆங்கிலத்தில் திருக்குறளைப் பற்றிப் பொய்யும், புனை சுருட்டுமாக எழுதுகிறார்? உலகம் பூராவும் பரப்புவதற்குத்தான். பார்ப்பனர்களின் இந்த சூழ்ச்சிகளை எல்லாம் பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் புரியும்.

குறளில் கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, கோயில் என்ற வார்த்தை இல்லை. சங்க இலக்கியங்களிலும் முப்பால், நாற்பால் கிடையாது.

மனுதர்ம சாஸ்திரத்தில் கடைசிக் கடைசியாக சாஸ்திரத்தின் இரகசியம் சொல்லப்பட்டுள்ளது.

"இந்த சாஸ்திரத்தில் எல்லாத் தருமத்தையும் சொல்லி இராத்தினாலும்,சொல்லப்பட்ட தருமங்களுக்குள் தேச கால பேதத்தால் யாதாவதொரு சந்தேகம் நேரிடுமாதலாலும் அந்த விஷயத்தில்  மேற்சொல்லும் குணமுள்ள பிராமண ருள் எந்தத் தருமத்தை ஏற்படுத்துவார்களோ அதே நிச்சய மான தருமமாகும். (மனு அத்தியாயம் 12, சுலோகம் 108).

இதைவிட பச்சையான பார்ப்பனத்தனம் வேறு ஒன்று இருக்க முடியுமா?

குறளுக்கு மரியாதை வந்துவிடக் கூடாது. குறள் மூலம் தமிழினத்துக்கு சிறப்பு ஏற்பட்டு விடவும் கூடாது.

அதற்கு ஒரே வழி அந்தக் குறள் என்பது மனுதர்மத்தைப் பார்த்துக் காப்பியடித்தது என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது கதை - இதுதான் பார்ப்பனர்களின் அணுகுமுறை - சூழ்ச்சி முறை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

(முழு உரை பின்னர்)__________________


Guru

Status: Offline
Posts: 19649
Date:
Permalink  
 

 ஒரு பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்தது திருக்குறள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகசாமியின் நூல் தனி நபர் முயற்சியல்ல - ஒரு பின்னணி உண்டு!

 

மனுதர்மத்தின் சாரம் திருக்குறள் என்று நாகசாமி எழுதிய நூலுக்கான மறுப்புரையில் தமிழர் தலைவர் விளக்கம்

vm3.jpg

 

சென்னை, நவ.30 திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று நாகசாமி என்ற பார்ப்பனரால் எழுதப்பட்ட நூலுக்குப் பதிலடி கொடுத்து நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், நாகசாமி என்ற தனி மனிதரின் முயற்சியால் மட்டும் எழுதப்பட்ட நூல் அல்ல - இதற்குப் பின்னணியில் ஒரு லாபியே உண்டு என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

7.11.2018 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திருக்குறள் மனு தர்மத்தின் சாரமா? பார்ப்பனர் நாகசாமியின் நூலுக்குப் பதிலடி'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

இங்கே சிறப்பாக உரையாற்றி அமர்ந்துள்ள முனைவர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களே,

சிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளருமான அன்புத் தோழர் பழ.கருப்பையா அவர்களே,

அன்பு சகோதரர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,

இந்த அறிவார்ந்த அரங்கத்தில் கூடியுள்ள சிறந்த அறிஞர் பெருமக்களே, நுண்மாண் நுழைபுலம் உள்ள சான்றோர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நிறைய குறிப்புகளை எடுத்துக்கொண்டு வந் தாலும், இங்கே நான் பேசுவது முக்கியமல்ல. வழக்கமாக நான் பேசினாலும், இவர் திராவிடர் கழகத்துக்காரர், இவர் இப்படித்தான் பேசுவார் என்று ஒரே வரியில் சொல்லி விடுவார்கள்.

பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

ஆனால், இங்கே பேசிய நம்முடைய அய்யா  பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள்,

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் சிறந்த முறையில் பணியாற்றி, ஜார்ஜ் ஹார்ட் போன்ற வெளிநாட்டவர்களுக்கெல்லாம் அங்கே தமிழின் பெருமையை, தமிழருடைய பெருமையை, திராவிடருடைய பெருமையை எடுத்து வைத்தவர்.

அதுபோலவே பேராசிரியர் சுப.வீ. அவர்கள், அந்தத் துறையில் ஆழமான அறிஞர், ஆய்வாளர் ஆவார்.

சுய சிந்தனையாளர், துணிச்சலான சிந்தனையாளர்!

அதுபோலவே நம்முடைய அய்யா பழ.கருப்பையா அவர்கள். அவருக்கு எத்தனை கட்சிகளுடைய அடையாளம் இருந்தாலும், அதைவிட மிக ஆழமானது முழுக்க முழுக்க அவர் சிறந்த சிந்தனையாளர், சுய சிந்தனையாளர், துணிச்ச லான சிந்தனையாளர் - அதுதான் மிக முக்கியம். அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேசுவார். இங்கே அவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண் டிருக்கின்ற நிலையில், ஒரு சில கருத்துகளை மட்டும் நான் சொல்கிறேன்.

இந்தத் துணிச்சல் ஏன் வந்தது?

மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள். இந்த விஷமம், திருவள்ளுவரைப்பற்றிய விஷமம் இருக் கிறதே, அந்த விஷத்தன்மை பாய்ச்சல், பரிமேலழகரிலிருந்து ஆரம்பித்தது என்பதை மிக அழகாக எடுத்துச் சொன்னார்.

அதேபோன்று இந்த விஷமத்தை செய்தது திட்டமிட்ட ஒரு தனி நபரல்ல, நாகசாமி, அதை அருமை சகோதரர் சுப.வீ. அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

உங்களுக்கு அதை மீண்டும் என்னுடைய தலைமை உரையில், நிறைவுரையில் நினைவூட்டவேண்டும்.

சமஸ்கிருதமும், தமிழும் என்ற பெயராலே எழுதும்போது...

ஒரு பெரிய திட்டம். இதற்கு முன்பு சமஸ்கிருதமும், தமிழும் என்ற பெயராலே எழுதும்போது, அன்றைக்கும் மறுப்பு சொல்லவேண்டிய அளவிற்கு உணர்வுகள் வந்தன.

நாகசாமியினுடைய விஷமம் சில ஆண்டுகளுக்குமுன் வந்தபொழுது, அதை எதிர்த்து, நம்முடைய எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ் அகாடமி என்று சொல்லக்கூடிய வாய்ப்பில், அவர்கள் சிறந்த முறையில்,  The tainted spectacles and faulty vision of Dr.Nagaswamy (The real status - of Tamil and Sanskrit) என ஆய்வரங்கத்தினை நடத்தினார்கள்.  பாராட்டவேண்டிய ஒரு பெரிய முயற்சி. முதலில் தமிழும், சமஸ்கிருதமும் என்று சொல்லி, அதாவது சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழே வந்தது என்றார்.

அடுத்த விஷமம் என்னவென்று சொன்னால், திருக்குறள் என்பது மனுதர்மத்திலிருந்துதான் வந்தது என்றார். திருக்குறளில் உள்ள மூன்று பால்களும் எப்படி வந்தது என்று சொன்னால், முதலில் மனுதர்மம், அறம் என்பது அறத்துப்பால் மனுதர்ம சாஸ்திரம்

பொருட்பால் என்பது அர்த்தசாஸ்திரம் காமத்துப்பால் என்பது வாத்ஸாயானாருடைய காமசூத்திரம் என்று அந்தப் புத்தகத்தில் எழுதி வைத்து, தர்ம சாஸ்திரத்தில் இருக்கக்கூடிய நிலைகள்தான் என்று அவர்கள் சொல்லி வைத்திருக்கின்ற அந்த நிலை.

அதோடு இன்னொரு முக்கியமான நண்பர் இன்றைக்கு சொன்ன ஒரு தகவல்.

இது தனி நபர்களுடைய முயற்சியல்ல!

திட்டமிட்டு ஒரு பெரிய வட்டாரம் இதை செய்து கொண்டி ருக்கிறது - பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்பைச் சார்ந்த பார்ப்பனர்கள்.

நண்பர்களே, இது தனி நபர்களுடைய முயற்சியல்ல. கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.  இந்திய அளவில், முழு அரசாங்கத்தினுடைய ஆதரவோடு, ஆளுங்கட்சி, மனுதர்மத்தை அரசியல் - சட்டமாக்கவேண்டும் என்று வெளிப்படையாகச் - சொல்லக்கூடியவர்கள். இதை இப்பொழுது செய்து கொண்டி ருக்கிறார்கள்.

Tamil Nadu, the Land of Vedas

தமிழ்நாடு என்பதே வேதங்களுடைய மண்.

இது பெரியார் மண் அல்ல; திராவிட மண் அல்ல என்று சொல்லக்கூடிய அளவிற்கு,

தமிழ்நாடு' என்று தனிப் பெயர் வைத்தவர் பேரறிஞர் அண்ணா

தமிழ்நாடு வேதங்களுடைய மண்ணாக இருக்கக்கூடாது ' என்பதற்காகத்தான், தமிழ் நாடு என்று தனிப் பெயர் வைத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

தமிழ்நாடு என்று சொன்னாலே, அதற்கு ஒரு தனித் தன்மை உண்டு. அதை அப்படியே மாற்றவேண்டும் என்பதற் காகத்தான் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பண்பாட்டுப் படையெடுப்பினை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள்

இந்தப் புத்தகங்களுக்கெல்லாம் அடிப்படையான ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே! இது ஏதோ ஒரு புத்தகத்திற்கு மறுப்பு, அல்லது ஒரு கருத்துக்கு மறுப்பு என்பதல்ல.

ஒரு பண்பாட்டுப் படையெடுப்பினை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

எனவேதான், நாம் இந்தியை எதிர்க்கிறோம், சமஸ்கிரு தத்தை எதிர்க்கிறோம், நம்முடைய தலைவர்கள் எதிர்த்தார் கள். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா , கலைஞர், நாவலர் போன்றவர்கள், தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகளார், சோமசுந்தர பாரதியார், தளபதி அழகிரிசாமி இப்படி எல்லோரும் எதிர்த்தார்கள் என்றால், அது வெறும் மொழி எதிர்ப்பு அல்ல. அருள்கூர்ந்து இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு பண்பாட்டுப் படையெடுப்பினை எதிர்ப்பதுதான்

தமிழனே இது கேளாய் உன்பால் சாற்ற நினைத்தேன் பல நாளாய்!

என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்களே, அதனு டைய அடிப்படையை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, பண்பாட்டுப் படையெடுப்பு, அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள், அடித்தளத்தில், எல்லா இடத் திலும் நொறுக்கினார்கள்.

இணையத்தில், புதிய புதிய ஏற்பாடுகளையெல்லாம் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்

திராவிடர் இயக்கத்தினர் அரசியல் துறையில் இருந்த பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்தார்கள். ஆனால், அதைவிட ஆழமாக வேரூன்றிய சமுதாயத் துறையில் இருக்கின்ற பார்ப்பனீயத்தை வேரறுத்த பெருமை தந்தை பெரியாருக்கு - சுயமரியாதை இயக்கத்திற்கு உண்டு. ஏனென்றால், அடித்தளத்தில் இருந்து கைவைத்தார்கள். அதனுடைய அடிப்படையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால், இப்பொழுது அவர்கள் புதிதாக இதை யெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். இணையத்தில், புதிய புதிய ஏற்பாடுகளையெல்லாம் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் அடித்தளமாக, மிகப்பெரிய அளவிற்கு திட்டம் போட்டு இறங்கியிருப்பது, பல கோடி ரூபாய் உள்ள கார்ப்பரேட்டுகள். பன்னாட்டு முதலாளிகள் எல்லாம் தொலைக்காட்சிகளை தங்களு டையகைகளில்வைத்திருக்கிறார்கள்.வாங்கிவிட்டார்கள். ஊடகங்களைத் தங்களுடைய கைகளில் வைத்தி ருக்கிறார் கள். பத்திரிகைகள் அவர்களால் வாங்கப்பட்டு இருக்கின் றன. பங்குகள் பெரும்பாலும் வாங்கப்பட்டு இருக்கின்றன. அவர்கள் என்ன உத்தரவு போடுகிறார்களோ, அதைத் தான் அந்தந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களாக இருக்கின் றவர்கள் எழுதியாகவேண்டும். இல்லையானால், அந்த ஆசிரியர்கள் அந்தப் பத்திரிகைகளை விட்டு வெளியே வரவேண்டும்.

அண்மையில்கூட, இங்கிலாந்தில் ஒரு ஆசிரியர் தொகுத்து எழுதியிருக்கிறார். இந்து' ஆங்கிலப் பத்திரிகை யில் ஞாயிற்றுக்கிழமையன்று வெளிவந்திருக்கிறது. எந்த செய்தியைக் கொடுக்கவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ, அதைத்தான் மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அளவில்,    என்று சொல்லக்கூடிய அளவிற்கு, எதை நீங்கள் படிக்கவேண்டும் என்பதை, எதை நீங்கள் உண்ண வேண்டும் என்று சொல்வதை அவர்கள் சொன்னார்கள் என்பது முக்கியமல்ல. எந்த செய்தியை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும், எதைப் படிக்கவேண்டும் என்பதை, தொலைக்காட்சிகளாக இருந்தாலும் அல்லது ஊடகங்களாக இருந்தாலும் அல்லது செய்தித்தாள்களாக இருந்தாலும் அல்லது புத்தகங்களாக இருந்தாலும் அதை செய்யவேண்டும் என்கிற ஒரு மிகப்பெரிய ஒரு திட்டம்; அதற்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு இருக்கின்றன.

இங்கே அழகாக சொன்னார் நம்முடைய சுப.வீ. அவர்கள். இப்பொழுது நாம் செய்கின்ற பணியெல்லாம் ஏதோ மேலெழுந்தவாரியான பணி.     To the fringe of the problem என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உள்ளே போக முடியாமல், பிரச்சினையின் விளிம்பிலேதான் நாம் சென்றுகொண்டிருக்கிறோமோ என்று நினைக்கவேண்டிய அளவில் இருந்துகொண்டிருக்கிறது.

பெரியார் கண்ணாடியைப் போட்டுப்பார்க்கவேண்டும்

ஆகவேதான், இந்த முயற்சிகளை அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற நூல்களை எழுதும்போது ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். அப்படியென்றால், அதனுடைய நோக்கம் என்ன? பார்ப்பனர்களுடைய சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், பெரியார் கண்ணாடியைப் போட்டுப் பார்க்கவேண்டும். அந்தப் பெரியார் கண்ணாடி தான், நுண்ணாடி, ஆகவே, அதைப் போட்டுப் பார்த்தால்தான் உங்களுக்கு நன்றாகப் புரியும்.

ஏன் ஆங்கிலத்தில் அதை இப்பொழுது எழுத ஆரம்பித் திருக்கிறார்கள். தமிழ்நாடு முக்கியமல்ல அவர்களுக்கு. இப்பொழுது ஹார்வர்டில் தமிழ் உள்ளே போகிறது. அந்த ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் உள்ளே போகும்பொழுது, அங்கே இந்த உணர்வுகள் எப்படியும் திசை திருப்பப்பட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

நம்மாட்கள் உடனடியாக மறுப்பு சொல்ல மாட்டார்கள்!

 __________________


Guru

Status: Offline
Posts: 19649
Date:
Permalink  
 

 நம்முடைய ஆட்கள் பல பேர் பேசுவார்களே தவிர, எழுதுங்கள் என்று சொன்னால், எழுத மாட்டார்கள். உடனடி யாக மறுப்பு சொல்ல மாட்டார்கள்.

இப்படி ஒரு கூட்டத்தைப் போட்டிருக்கிறோம். இன்றைக்கு ஒரு நல்ல கருத்தை நம்முடைய தோழர் பழ.கருப்பையா அவர்கள் சொல்லியிருக்கிறார். எல்லா கட்சிகளிலும் இலக்கிய அணி இருக்கிறதல்லவா? அவர்கள் இனிமேல் செய்ய வேண்டிய பணி என்ன? என்று கேட்டிருக்கிறார். இலக்கியம் என்பதே வடமொழி என்று சொன்னார்கள் முதலில்,

புரட்சிக்கவிஞர் அவர்கள்தான் சொன்னார்கள், இலக்கு இயம் என்று. அந்த வார்த்தை தமிழ்தான் என்று.

அதற்கே போராட வேண்டிய அளவிற்கு அவர்கள் ஆக்கினார்கள்.

சமஸ்கிருதத்திலேயே உங்களுடைய பத்திரிகைகளை அச்சடிக்க வேண்டியதுதானே?

சமஸ்கிருதத்தின் மேன்மையைப்பற்றி இவ்வளவு  பேசுகிறீர்களே, அப்படியானால், சமஸ்கிருதத்திலேயே உங் களுடைய பத்திரிகைகளை அச்சடிக்க வேண்டியதுதானே? சமஸ்கிருதத்தில் புத்தகம் எழுதவேண்டியதுதானே என்றார் நம்முடைய சுப.வீ. அவர்கள் ஒருமுறை.

சமஸ்கிருதத்தைப் படிப்பதற்கு ஆட்கள் இங்கே கிடையாது.

சமஸ்கிருதத்தை அவர்கள் சொல்லிக் கொடுப்பதே, ஆங்கில மொழியை வைத்துத்தான்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், டாக்டர் தமிழண்ணல் அவர்கள் எழுதி, அதனை ஈ.வி.பாலசுப்பிரமணியன் அவர் கள் மொழி பெயர்த்து, எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் முதலில் அதனை வெளியிட்டார்கள்.

மறைமலை அய்யாவின் மறுப்பு நூல் இன்னும் சில மாதங்களில்...!

அதுபோல, இதற்கு மறுப்பு நூலை, நம்முடைய பேராசிரியர் மறைமலை அய்யா அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அந்நூல் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளிவரும் என்பதை முதற்கண் அறிவிக்கக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.

This book is in English it will not spread  much in 
Tamil Nadu but it will help confuse the foreigners.

நம்முடைய தமிழண்ணல் அவர்கள் மிக அழகாகச் சொன்னார், வெளிநாட்டுக்காரர்களைக் குழப்பவேண்டும் - ஹார்வர்டு போன்ற இடங்களில், தமிழ் வராமல் தடுத்தார்கள். தமிழ் இருக்கை அங்கே வந்துவிட்டது. அங்கே கிறித்தவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் வேறு விதமாக வருவார்கள் என்று தடுத்தார்கள். அது தோல்வி அடைந்து விட்டது என்றவுடன், இப்பொழுது அதற்கு அடுத்தகட்டமாக, இதுபோன்ற நூல்களைக் கொண்டு வருகிறார்கள்.

ஒரு பெரிய குழுவே இருக்கிறது

ராஜீவ் மல்கோத்ரா என்பவர் ஒருவர் அங்கே தலைமை தாங்குகிறார்.

சுப்பிரமணிய சாமி, ராஜீவ் மல்கோத்ரா, நாகசாமி அதே போல, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள். இன்னொரு நண்பர், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் மோடிக்கு அடுத்தபடியாக நிற்கிறார்; செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். ஆக, இவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய குழு இருக்கிறது.

பனிப்பாறையின் முனை!!

நாம் சொல்கின்ற இந்தப் புத்தகம் இருக்கிறதே, Tip of the iceberg- பனிப்பாறையின் முனை. அதனை எச்சரிக்கை செய்யவே இந்தக் கூட்டம். நாகசாமிமீது கோபப்பட்டு அல்ல இந்தக் கூட்டம். இது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை மீண்டும் உருவாக்கி, மனுதர்மத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் - மனுதர்மத்தைத்தான் அரசியல் சட்டமாக்க வேண்டும் - அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இப் பொழுது எப்படி ராமனைப்பற்றி பேசுகிறோமோ - சட்டம், நீதிமன்றத்தைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்று பேசுகிறோமோ - அதேபோன்று கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசுகிறார்கள்.         தமிழ் மொழியை செம்மொழியாக்க கலைஞர் அவர்கள் அரும்பாடுபட்டு இன்றைக்கு நிலை நிறுத்தியிருக்கிறார். இன்றைக்கு உண்மையிலேயே செம்மொழிக்கான வாய்ப்பு நூற்றுக்கு நூறு கிடைத்திருக்கிறதா? அய்யா அவர்கள்  வேதனைப்பட்டு சொன்னார்களே? சமஸ்கிருதத்திற்கு எத்தனைக் கோடி ரூபாயை ஒதுக்குகிறார்கள்? செம்மொழி யான தமிழுக்கு எத்தனை கோடி ரூபாயை ஒதுக்குகிறார்கள்? செம்மொழிக்குத் தமிழ் தெரிந்தவர் அதிகாரியாக வரு வதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? இதையெல்லாம் நினைத்தால் வேதனையாக இல்லையா!

இந்தக் கூட்டத்தினுடைய நோக்கம்!

தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள் எல்லோருக்கும் இந்த உணர்வுகள் வரவேண்டும் என்பதுதான் இந்தக் கூட்டத்தினுடைய நோக்கமாகும்.To establish Tamil has not become a classical language on its own level and capacity, but by borrowing gradually from Sanskrit.

சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கி, பிராகிருதத்திலிருந்து. கடன் வாங்கித்தான் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் மற்ற அத்தனை இலக்கியங்களும் படைக்கப்பட்டதாக நாகசாமி எழுதியிருக்கிறார்.

இதேபோன்று அதைக் காட்டவேண்டும் என்பதற்காகத் தான் முதலில் பொத்தாம் பொதுவில் எழுதினார். சமஸ் கிருதமும் - தமிழும்!

பறைச்சிப்  பெண்ணுக்கும் - பார்ப்பனர் ஒருவருக்கும் பிறந்ததாக சொல்கிறார்கள்!

அதற்கடுத்தபடி பார்த்தீர்களேயானால், திருவள்ளுவரைப் பற்றி அந்த விஷமத்தை எப்படி செய்திருக்கிறார்கள் என்றால், பறைச்சிப் பெண்ணுக்கும் - பார்ப்பனர் ஒருவருக்கும் பிறந்ததாகச் சொல்கிறார்கள். இதைச் சொல்லவேண்டிய அவசியம் என்ன? ஒவ்வொருத்தருக்கும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களா? திருக்குறளை கீழிறக்குவது - உடனே சாமர்த்தியமாக "இப்படியும் சொல்லப்படுகிறது'' என்று சொல்கிறார்கள்.

அதாவது, யார் புத்திசாலியாக இருந்தாலும், அவன் பார்ப்பானுக்குப் பிறந்தவனாக இருக்கவேண்டும் என்பது தான் அவர்களுடைய தத்துவம்.

திருவள்ளுவரைப்பற்றி புரட்சிக்கவிஞர்!

புரட்சிக்கவிஞர் அவர்கள் திருவள்ளுவரைப்பற்றி எழு தும்போது அற்புதமான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

வள்ளுவன் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால்,

வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு

உள்படு கருமத் தலைவற்கு ஒன்றும்

என்னும் பிங்கலந்தைச் செய்யுளை மேற்கோளாக எடுத்துக்காட்டி புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்.

வள்ளுவர் என்பது அமைச்சர். அந்த அமைச்சர் களுக்குரிய பண்பாடு. வள்ளுவன் என்பது அமைச்சர்களில் ஒருவர் என்று எடுத்துச் சொன்னார். இதுபோன்று எத்தனையோ கருத்துக்கள் நிறைய இருக்கிறது. நேரமின்மையைக் கருதி அவற்றை இங்கு எடுத்துச் சொல்லவில்லை. நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

தந்தை பெரியார் அவர்களுடைய பார்வையில் திருவள் ளுவரைப்பற்றியும், திருக்குறளைப்பற்றியும் பல உரைகளின் தொகுப்பு நூல்: பெரியார் களஞ்சியம் தொகுதி 37 - திருக்குறள் - வள்ளுவர்

பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்ப்பதற்காகவே வள்ளுவர் திருக்குறளை எழுதினார். அதனால்தான் அதற்கு எதிர்ப்பு. அதுமட்டுமல்ல, அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்பது உண்மையைப் பொருத்ததா என்றால், இல்லை. முழுக்க முழுக்கப் பொய் - முழுக்க முழுக்கப் புரட்டு.

அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் எடுத்துச் சொல்கிறார்: பெரியார் பேசுகிறார் கேளுங்கள்: சமீபத்தில் ஒரு தோழரோடு திருக்குறளின் பெருமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறபொழுது, அதன் பெருமையை எடுத்துக்கூற, அவர் ஒரு தேனீக்குடிக்கீரனார் என்ற புலவரால் பாடப் பெற்ற சாற்றுக் கவி ஒன்றை எனக்கு மேற்கோளாக எடுத்துக்காட்டினார். அதாவது பொய்ப்பால் பொய்யே ஆயிப் போயின

பொய்யில்லாத மெய்ப்பாலே மெய்யாய் விளங்கினவே

முப்பாலில் தெய்வத்திருவள்ளுவர் செப்பிய குறளால்

வையத்து வாழ்வார் மனத்து... என்று அந்த சாற்றுக் கவியில் இருக்கிறது என்றார்.

ஆகவே, பொய்யை, புரட்டை எதிர்ப்பதற்காகத்தான் திருக்குறளே வந்தது.

ஒரு பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கின்ற மிகப்பெரிய நூல் திருக்குறள்!

எனவே, பொய் மறுப்பு நூல் - ஒரு பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கின்ற மிகப்பெரிய நூல் என்பதற்கு அடையாளம்தான் திருக்குறள் என்பதை இங்கே மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள்.

மிக அழகாக எடுத்துச் சொன்னாரே நம்முடைய சுப.வீ. அவர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறள் ஏன் தெரியவில்லை என்று கேட்டார்.

அதேபோன்று, நம்முடைய தோழர் கருப்பையா அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள்.

விவசாயம் - வேளாண்மை - உழவு இவற்றைப்பற்றி திருவள்ளுவரின் கருத்து என்ன?

மனுதர்மத்தைப் பார்த்துதான் திருக்குறள் காப்பியடிக் கப்பட்டது என்கிறார்களே, உழவைப்பற்றி மனுதர்மத்தின் கருத்து என்ன? விவசாயத் தொழில் பெரியோரால் நிந்திக்கப்பட்டதாம்!

மனுதர்மத்தில் 10 ஆவது அத்தியாயத்தில் 84 ஆவது சுலோகம்

"சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக் கிறார்கள்; அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலுடைய கலப்பையும், மண்வெட்டியும் பூமியையும், பூமியிலுள்ள பற்பல ஜந்துக்களையும் வெட்டுகிறது அல்லவா?" இருவேறு பண்பாடுகள் - நேர் எதிரான பண்பாடு, மனுதர்மம் - வருணாசிரம தர்மம் திருக்குறள் - ஜாதி ஒழிப்பு, அனைத்து உயிர்களும் ஒன்று என்று எண்ணுவது. அதுதான் பிறப்பொக்கும் என்பது.

இப்படி வரிசையாக ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். நேரமில்லாத காரணத்தினால் சொல்லவில்லை.

தர்ம சாஸ்திராசினுடைய பிரதிபலிப்புதான் என்று நாக சாமி சொல்கிறார். மனுதர்மத்தில் அவர் எவ்வளவு விஷமத் திற்கு உள்ளாகிப் போயிருக்கிறார் என்பதற்கு அடையாளம்,

பார்ப்பனர்கள் சொல்வதுதான் தர்மமாம்!

12 அத்தியாயங்கள்; 2684 சுலோகங்கள் அத்தனையையும் எழுதிய பிறகு, கடைசியாக முடிக்கிறார்கள்.

12 ஆவது அத்தியாயம் 108 ஆவது சுலோகம் "மனுதர்ம சாஸ்திரத்தில் எல்லாத் தருமத்தையும் சொல்லி யிராததினாலும் சொல்லப்பட்ட தருமங்களுக்குள் தேச கால பேதத்தால் யாதாவதொரு சந்தேகம் நேரிடுமாதலாலும், அந்த விஷயத்தில் மேற்சொல்லும் குணமுள்ள பிராமணாள் எந்தத் தருமத்தை ஏற்படுத்துவார்களோ அதே நிச்சயமான தரும மாகும்."

முடிவு அங்கேதான். உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், இன்றைக்கு எப்படி மாறிப் போயிருக்கிறார்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வரும் - ஏனென்றால், காலதேசம் வர்த்த மானத்தில் மாறிப் போயிருப்பார்கள். இன்றைக்கு சூட் போட்டுக்கொண்டு உச்சிக்குடுமி வைத்தி ருப்பார்கள். எல்லாம் மாறும்.

ஆனால், எப்படி இருந்தாலும், பிராமணன் என்ன சொன்னானோ, அவன் சொல்வதுதான் தர்மம் இன்றைக்கும்.

அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செயலும் விலக்கியன ஒழிதலுமாம்' என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆரம்பித்த அந்தப் பரிமேலழகருடைய அந்த வாடை எல்லா இடங்களிலும் எப்படியெல்லாம் வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

எனவேதான் நண்பர்களே, தந்தை பெரியார் ஏன் பண்டிகைகளை எதிர்த்தார்? ஏன் தீபாவளியைக் கொண் டாடாதீர் என்றார்? ஏன் மற்றவைகளை சொன்னார்? ஏன் மூடநம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும் என்று சொன்னார்? யாரும் சாப்பிடக்கூடாது என்பதற்காக சொன்னாரா? நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு - அதுதான் மிக முக்கியம்.

நம்முடைய கடமை என்ன? தமிழர்களே, திராவிடர்களே நீங்கள் சிந்தியுங்கள்!

எனவேதான், நாகசாமிகள் பண்பாட்டுப் படையெடுப்பை மீண்டும் நிகழ்த்தக்கூடிய போர் வீரர்களாகக் களத்தில் வரும்பொழுது, நம்முடைய கடமை என்ன? தமிழர்களே, திராவிடர்களே நீங்கள் சிந்தியுங்கள்!

இப்பொழுது திட்டமிட்டு மீண்டும் நாட்டை பழைய கருப்பனாக, மனுதர்மத்திற்குக் குறளால் ஏற்பட்ட அந்த விழிப்புணர்ச்சி வந்தவுடன், குறளுக்கு மரியாதை வந்துவிட்டது - அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல், மறைத்துப் பார்த்தார்கள்; அது முடியவில்லை என்றவுடன், அடுத்தகட்டமாக, அந்தக் குறளை நாங்கள் பார்த்து எழுதியதுதான் என்கிறார்கள். குறளும், சாஸ்திரமும் ஒன்றுதான் என்று சொல்கிறார்கள்.

குறளில் எங்கேயாவது கடவுள் என்கிற வார்த்தை இருக்கிறதா?

பெரியார் தான் கேட்டார், குறளில் எங்கேயாவது பிராமணன் என்கிற வார்த்தை இருக்கிறதா? குறளில் எங்கே யாவது சூத்திரன் இருக்கிறானா? குறளில் எங்கேயாவது கடவுள் என்கிற வார்த்தை இருக்கிறதா? குறளில் எங்கேயாவது ஜாதி, வர்ணம் என்கிற வார்த்தை இருக்கிறதா? குறளில் எங்கேயாவது ஆத்மா என்கிற வார்த்தை இருக்கிறதா?

கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன் நண்பர்களே!

முப்பால் என்பது இருக்கிறதே, அதை என்ன சொல்கி றார்கள் என்றால், சந்நியாசமும் சேர்ந்ததுதான் என்று நாகசாமி எழுதியிருக்கிறார்.

நாற்பால் என்பது பின்னாளில் இணைக்கப்பட்ட ஒன்று. ஆனால், நம்முடைய பண்பாட்டில், சங்க இலக்கியங்களில் தொல்காப்பியம் தொடங்கி பல இடங்களில், பிற்காலத்தில் வந்ததைத் தவிர்த்துவிட்டு, முதலில் பார்த்தால், முப்பால் நாகரிகம் என்பதைத் தவிர,

நாற்பால் என்பது பின்னாளில் இணைக்கப்பட்ட ஒன்று.

வீடு என்பதே கிடையாது - மோட்சம் என்பதைப்பற்றியே கவலைப்படவில்லை. அதனால்தான், வாழ்க்கையைப்பற்றி மிகவும் சிறப்பாக சொன்னார்கள்.

திருக்குறளைப்பற்றி அறிஞர் மு.வ. அவர்கள்

அறிஞர் மு.வ. அவர்கள் ஒருமுறை திருவள்ளுவருடைய திருக்குறளைப்பற்றி சொல்லும்பொழுது,

அறம் - தனி மனித வாழ்க்கை

பொருள் - சமூக வாழ்க்கை

இந்த இரண்டையும் சேர்ந்து நடத்துவது எப்படி என்ப தைத் தெரிந்துகொண்டால், அதுதான் இல்லற வாழ்க்கை யாகும் என்று எளிமையாக வாழ்க்கையைப்பற்றி  சொன்னார்.

 

திசைதிருப்பும் வேலைகளை செய்கிறார்கள்!

எனவேதான், வள்ளுவருடையது வாழும் கலை. தமிழர்களுடைய, திராவிட இனத்தினுடைய பெருமை. எனவே, இந்தத் திராவிட இனத்தினுடைய பெருமையைக்  குலைக்கத் திட்டமிட்டு, ஆரியப் பண்பாட்டை மீண்டும் புதுப்பித்து நம்மீது சுமத்த, பண்டிகைகளை எப்படி புதிது புதிதாக உண்டாக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களோ, புதிது புதிதாக இறக்குமதி செய்து கொண்டிருக்கிறார்களோ, அதேபோலத்தான், நம்முடைய நூல்களையே கறையான்கள் அரிப்பதுபோல, திசை திருப்புவதைப்போல செய்து கொண்டிருக்கிறார்கள்.

முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்; கருவிலேயே அதை சிதைக்கவேண்டும்!

தமிழர்களே, திராவிடர்களே எச்சரிக்கையாக இருங்கள்! இருங்கள்! என்று சொல்லி, இதை எல்லா மக்களுக்கும் விளக்குங்கள்! அவர்கள் அச்சப்படவேண்டும்; இந்த முயற் சியை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்; கருவிலேயே அதை சிதைக்கவேண்டும் என்று கேட்டு, என்னுரையை முடிக்கின்றேன். நன்றி, வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்,__________________


Guru

Status: Offline
Posts: 19649
Date:
Permalink  
 

 வடநூலார் மொழிப்படியா வள்ளுவர் நூல் செய்தார்?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இரா.கண்ணிமை

வடநூலில் கூறப்படும் மூடக்கொள்கை களை மூலமாகக் கொண்டே திருக்குறளை வள்ளுவர் எழுதினார் என்பதை எடுத்துக்காட்ட பரிமேலழகர் அரும்பாடுபட்டுள்ளார். இதை வலியுறுத்தவே நாகசாமி என்பார் முற்பட்டுள்ளார்.

- ஆசிரியர்

திருக்குறளுக்கு உரை எழுதப் புகுந்த பரிமேலழகர் எந்த முறையில் உரை எழுத எண்ணினார் என்பதை முன்னதாகவே தம் ஆரிய மூட்டையை அவிழ்த்துக் கொட்டிக் காட்டி விட்டார். நூலாசிரியர்கள் நூற்குப் பாயிரம் செய்து முன்னால் அமைத்தல் போலவே தாமும் உரைப்பாயிரம் ஒன்றெழுதி முன்னால் புதுமையாகப் புகுத்தியுள்ளார். அதில் தமிழ் மரபுக்கும், திருவள்ளுவர் உள்ளத்துக்கும் பொருந்தாத மாறுபட்ட ஆரியக் கொள்கைகளை வரிசையாக அடுக்கியிருக்கின்றார். இவைகளைத்தான் குறள் ஆசிரியர் நூலினுள் எடுத்துக் கூறுகின்றார் என்று உண்மையறிவும் - ஆராயும் திறமை யில்லாதவர்களெல்லாம் நம்பும் வகையில் தன் எழுத் தாற்றலை பயன்படுத்தியிருக்கின்றார்.

"முன்மொழிந்து கோடல்" - என்னும் உத்திக்கிணங்க உரைப்பாயிரத்தில் முன்னால் மொழிந்த கொள்கை களுக்கு ஆங்காங்குத் தன் உரையில் இடம் ஏற்படுத்திக் கொண்டு அவற்றைப் புகுத்துகின்றார். தான் வலிந்து கொள்ளும் உரையும், மாறாகத் திணிக்கும் கொள்கையும் வழுவாகத் தோன்றாதிருக்கப் பலவிடங்களில் மூலத் திலேயே கைவைத்திருக்கிறார். இங்ஙனம் தன் கொள் கைகளைத் திருக்குறளின் உள்ளே திணிக்கும் கள்ள வழிகளைக் கண்டாராயினும் வள்ளுவர் உள்ளத்தை மறைக்கும் வழிகாண இவரால் இயலவில்லை. இவர் வலிந்து கூறும் உரைக்கும், நுழைக்கும் கொள்கை களுக்கும், திருத்திய மூலத்திற்கும் மாறாக ஆசிரியர் பல விடங்களில் கூறியிருக்கிறார். இவற்றை அகச்சான்று களைக் கொண்டே ஆராய்ந்து உண்மையை உணரலாம். இனி உரைப்பாயிரத்தை ஆராய்வோம்.

உரைப்பாயிரத்தில் முதன் முதலில் "இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் அந்தமில் இன்பத்து அழிவில் வீடும் நெறியறிந்து எய்தற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரானெடுக்கப்பட்ட பொருள்கள் நான்கு; அவைகள் அறம், பொருள், இன்பம், வீடென்பன" - என்று தொடங்குகின்றார். இந்த முதல் தொடரின் கருத்தே தமிழ் மரபுக்கு முரணானது. இந்திரன் முதலிய இறையவர்களின் பதங்களும் (உலகங்களும்), இந்த உலகங்களுக்கு மேலே உள்ள வீட்டுலகமும் (மோட்ச உலகமும்) என்பது இத்தொடரின் பொருளாம். இந்திரன் என்பவன் ஆரியர்களால் கடவுளாகக் கருதப்படும் ஒருவன். தங்கள் வேதங்களில் அவனைப் பலவாறு போற்றுகின்றார்கள். யாகங்களில் தாம் உயிர்பலியிட்டுத்தரும் ஊனையும், கிண்ணங்களில் வார்த்து வைக்கும் சோமபானத்தையும் (மதுவையும்) ஏற்றுக் கொள்ளும்படியும், போரில் தங்களுக்கு உதவிபுரியும் படியும் தங்கள் எதிரிகளான திராவிடர்களை அழிக்கும் படியும் வேண்டுகிறார்கள். அன்றியும் பழந்தமிழ்க் குடிமக்கள் (திராவிடர்) இந்திரனைக் கடவுளாகக் கொண்டு வணங்காதவர்கள் என்று கூறுகின்றார்கள். இக் காரணத்தால் தமிழர்களுக்கு நீந்திரர்கள் (இந்திரனைக் கடவுளாகக் கொள்ளாதவர்கள்) என்று பெயர் கொடுத்தும் அழைக்கின்றார்கள். ஆரியர் பரம்பரையாக வணங்கி வந்த இந்திரனை ஆரிய வழக்கப்படி முதலில் வைத்து மொழிந்ததுமின்றி, இந்திரன் முதலிய இறையவர் என இந்திரனுக்கு இறைமைத் தன்மையையும் ஏற்றுகின்றார்.

"இறைமைக் குணங்களிலராயினாரை உடையரெனக் கருதி அறிவில்லார் கூறுகின்ற புகழ் பொருள் சோரா" - என்று அய்ந்தாம் குறளுக்கு அடியில் உரை கூறிய இவர், இங்ஙனம் கூறுவது அறியாமையா, உணராமையா, தம் இனக் கடவுளை உயர்த்த வேண்டுமென்ற விருப்பத் தால் உண்டான மறதியா? அறியோம். இந்திரனை இறை வனாகவும் அவனுக்குரியதாக ஆரியர் களால் கூறப்படும் சொர்க்க உலகத்தை (சொர்க்கலோகம்) அடையக்கூடிய பதமாகவும் கொள்ளும் வழக்கம் பழந்தமிழ் மக்களிடம் இல்லை. இதைப் போல் மற்ற பிர்மலோகம், விட்னு லோகம்" (வைகுண்டம்) முதலிய உலகங்களையும், இவைகளுக்கு மேல் எங் கேயோ வீட்டுலகம் (மோட்ச உலகம்) உள்ளதென்ப தையும் தமிழ்மக்கள் நம்புவ தில்லை - கொள்ளுவது மில்லை. வீடு என்பது இவ் வுலகிலேயே அறியாமையால் நேரும் துன்பங்களை அகற்றி அறிவு விளக்கம் பெறு வதே தமிழர்களுடைய தனிப்பெருங்கொள்கையாகும்.

ஆதலால் இந்திரனையோ - இந்திரன் முதலிய இறைவர் எனக்கூறப்படும் மற்ற கடவுள்களையோ அவர்கள் உலகங்களையோ - (மோட்சத்தை - மோட்ச உலகத்தை) தமிழர்கள் ஒருக்காலும் ஒப்புக்கொள்ளுவ தில்லை. இதனால் இந்திரன் என்ற சொல்லும், வீடு என்ற சொல்-மோட்சம் என்ற பொருளிலும் திருக்குறளில் இடம் பெறுவதற்குக் காரணமில்லை. பின்னால் இந்திரன் என்ற சொல்லை எடுத்தாளவும், அத்தகைய கடவுளாகிய இந்திரனையும் ஆரிய முனியாகிய கவுதமன் சபித்தான் என்ற ஆரியரின் பெருமை கூறவும், அகலிகையைப் பற்றிய புராணக் கதையையும் ஆசிரியர் ஏற்றுக் கொண்டதாகக் காட்டவும் முன்மொழிந்து வைத்தார்.

"நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு" - என்ற குறளில் வீடு என்ற சொல் விடுபடுதல் என்று பொருளில் வருவதை அறியவும்.

அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றை வடநூலார் முறையே தருமம்,  அருத்தம்,  காமம், மோட்சம் எனக் கூறுகின்றார். வடநூலார் கூறிய நான்கையும் கூறத்தொடங்கி, அவற்றுள் வீடென்பது சிந்தையும், மொழியும் செல்லா நிலைமைத்தாகலின் அறமாகிய காரண வகையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின் ஏனைய மூன்றுமே நூலில் கூறுவதாக எழுதுகின்றார்.

வடநூலார் நான்கெனக் கொண்டதையே பின்பற்றி வள்ளுவர் கொள்ளவில்லை. வடநூலில் கூறும் தருமம் வேறு; வடவர் காம சாத்திரம்வேறு; தமிழர் காதலின்பம் வேறு; அறம், பொருள், இன்பம் மூன்றையும் முறைப்படி அறிந்து வழுவாதொழுகி அறிவு விளக்கம் அடைந்து இயங்கும் மாந்த நேய வாழ்க்கையே வீடன்றி வேறில்லை. மேலும் "அவற்றுள் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம் - அ ஃது ஒழுக்கம், வழக்கு, தண்டமென மூவகைப்படும்" - என்று கூறி இவற்றை வடநூலார் முறையே ஆசாரம், விவகாரம், பிராயச்சித்தமென்பர் என்று குறிப்பும் எழுதுகிறார். "அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய (நான்கு) வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமச்சரிய முதலிய நிலை (ஆசிரமம்)களினின்று அவ்வவற்றிற் கோரிய அறங்களின் வழுவாதொழுகுதல்" - என்று கூறுகின்றார். இவர் குறிப்பிடும் வருணம் வடநூலில் கூறப்படும் பிரம்ம, சத்திரிய, வைசிய, சூத்ர என்ற நான்கு சாதிப்பிரிவுகளாகும். பிர்மச்சர்யம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்யாசம் என்ற நான்கு பிரிவுகளும், ஆச்சிரமப் பிரிவுகளும் இடம் பெறாத தமிழர் கொள்கைக்குரிய தமிழ் நூலில் சாதிப்பிரிவையும், ஆச்சிரமப் பிரிவையும் சந்து பார்த்துத் திணிக்கவே முந்தி இவற்றை மொழிந்து வைத்தார்.

இவற்றின் இயல்புகளை இனி ஆராய்வோம். மனு நூலில் விதித்தன செய்தல், விலக்கியன ஒழித்தல்தான் அறமென்கிறார். ஆதலால் மனுநூலில் விதித்தவை எவை, விலக்கியவை எவை என்பவற்றை அறிய வேண்டும். அதற்கு மனுநூல் படிக்க வேண்டும். எனவே திருக்குறளைப் படிப்பதற்கு முன் மனுநூலைப் படித்தறிந் தால்தான் குறளில் கூறப்படும் அறம் புலப்படும்.

"பிர்மா இந்த சாத்திரத்தை எனக்கு (மனுவுக்கு) ஓது வித்தார். நான் மரிசி, பிருகு இவர்களுக்கு ஓதுவித்தேன்"

 

- மனுஸ்மிருதி-அத்-1: சுலோகம்: 58

- பிராமணர் இந்த மனுஸ்மிருதியைப் படிக்கலாம். மற்றவருணத்தார்க்கு ஓதுவிக்கக் கூடாது.

- மனு.அத் : 1, சு: 103

- வேதம், சுருதி, மனுசாத்திரம் -ஸ்மிருதி இவை களைத் தர்க்க புத்தியால் மறுப்பவன் நாத்திகன் - அத்: 2, சு: 11

- பிர்மாவின் உயர்ந்த இடமாகிய முகத்தில் பிறந்த பிராமணன் முதல் வருணத்தான் ஆகையால் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தார்களுடைய பொருள்களையும், தானம் வாங்கக் கூடிய பிரபுவாயிருக்கின்றான். ஆதலால் அவன் பிறரிடம் தானம் வாங்கினாலும் தன்பொருளையே உண்டவனாவான்.

- அத்: 1, சு: 100-101

குறிப்பு: பிச்சை ஏற்பவனைப் பிரபு என்று கூறுவதை இந்நூலில்தான் காணலாம்

- பலகாரம், பாயாசம், கிழங்குகள், சுவையுள்ள இறைச்சி, நல்ல நீர் இவையாவும் பிராமணர்களுக்குரியவை.

- அத்: 3, சு: 227

- வாசனைப் பொருள்கள், தருப்பை, பூ, பொன், பால், தயிர், அவல், அரிசி, மீன், மாமிசம் இவை வலுவில் வந்தால் பிராமணன் நீக்கக்கூடாது.

- அத்: 4, சு: 250

- சோறு, பால், சோமபானம் (மது) இறைச்சி இவைகள் யாகத்திற்குரிய அவிசுகள்.

- அத்: 3, சு: 257

- யாகம் செய்து மாமிசம் புசித்தல் தேவ காரியம். தனக்கெனக் கொன்று தின்னல் இராட்சத காரியம்.

- அத்: 5, சு: 31

- உயிர்க்கு ஆபத்து நேருங்கால் நாள்தோறும் பிராணிகளை ஏராளமாகக் கொன்று தின்றாலும் பிராமணன் தோஷத்தையடைய மாட்டான். மாமிசம் கிரையத்திற்கு வாங்கினாலும், தாமே கொன்று கொண் டாலும், பிறர் கொடுத்தாலும் அதைத் தேவர்களுக்கும், பிதிரர்களுக்கும் நிவேதித்துப் புசிக்கும் பிராமணன் துரஷிக்கப்படமாட்டான்.

- அத்: 5, சு: 30-32

- பசுக்கள், மிருகங்கள், பறவைகள் இவைகளை யாகத்திலும் சிரார்த்த தினத்திலும் கொன்றால் அவை பின்பு உயர்ந்த கதியை அடைகின்றன - ஆதலால் யாகம், சிரார்த்தம் இவைகளில் உயிர்க்கொலை செய்யலாம், அக்கொலை பாவமாகாது.

- அத்: 5, சு: 40-41

- யாகத்திற்காகவே பசுக்கள், மிருகங்கள், பறவைகள் பிர்மமனால் படைக்கப்பட்டுள்ளன. அந்த யாகத்தால் உலகமெலாம் நன்மையடைகிறது. ஆகையால் யாகத்தில் செய்யும் உயிர்க்கொலை கொலையாக மாட்டா.

- அத்: 5, சு: 39

- இங்ஙனம் யாகத்திற் கொல்லப்பட்ட கொலையைக் கொலையென்று நினைக்கலாகாது; வேதத்தினாலேயே தருமம் விளங்குவதால் வேதம் கொலை செய்யக் கூறினாலும் அது புண்ணியமாகவே இருக்கும்.

- அத்: 5, சு: 44

- எள்ளு, அரிசி, உளுந்து, கிழங்கு, பழம் இவைகளால் சிரார்த்தம் செய்தால் பிதிரர்கள் ஒருமாதம் வரையில் திருப்தி அடைவார்கள்.

- அத்: 3, சு: 267

- முள்ளுள்ள வாளை மீன், கட்க மிருகம், சிவந்த ஆடு இவற்றின் இறைச்சியால் சிரார்த்தம் செய்தால் பிதிரர்கள் அளவற்ற காலம் திருப்தியடைவார்கள்.

- அத்: 3, சு: 271

- சிரார்த்தத்தில் விதிப்படி அழைக்கப்பட்ட பிரா மணன் இதில் கூறப்பட்ட மாமிசங்களைப் புசிக்கா விட்டால் அவன்21 பிறப்பு பசுவாகப் பிறப்பான்.

- அத்: 5, சு: 35

- அக்கினி எப்படி மேலான தெய்வமாகின்றதோ அப்படியே பிராமணன் ஞானியாயினும், மூடனாயினும் அவனே மேலான தெய்வம். - அத்: 9, சு: 317__________________


Guru

Status: Offline
Posts: 19649
Date:
Permalink  
 

 வடநூலார் மொழிப்படியா வள்ளுவர் நூல் செய்தார்? (2)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடநூலில் கூறப்படும் மூடக்கொள்கை களை மூலமாகக் கொண்டே திருக்குறளை வள்ளுவர் எழுதினார் என்பதை எடுத்துக்காட்ட பரிமேலழகர் அரும்பாடுபட்டுள்ளார். இதை வலியுறுத்தவே நாகசாமி என்பார் முற்பட்டுள்ளார்.

- ஆசிரியர்

நேற்றையத் தொடர்ச்சி....

- பிணத்தை எரிக்கும் தீ, யாகத்திற்கும் பயன்படுதல் போல தீமையான காரியங்களைச் செய்யும் பிராமணர் களும் பூஜிக்கப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் உயர்குலத்தார் அல்லவா?

- அத்: 9, சு: 318

- சூத்திரன் இம்மையினும் மறுமையினும் பிராமணனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். சூத்திரன், மனம் வாக்குக் காயங்களால் பிராமணனுக்குத் தொண்டு செய்ய வேண்டும். பிராமணரில்லாதவிடத்தில் சத்திரியனுக்கும், அவனுமில்லாத விடத்தில் வைசி யனுக்கும் தொண்டு செய்ய வேண்டும்.

- அத்: 9, சு: 334-335

- பிராமணன் கூலி கொடுத்தோ - கொடாமலோ சூத்திரனிடம் வேலை வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரன் பிர்ம னால் படைக்கப்பட்டிருக்கிறான்.

- அத்: 8, சு: 413

- மற்ற மூன்று வருணத்தார்க்கும் தொண்டு செய்யும்படி சூத்திரனுக்கு அரசன் உத்தரவிட வேண்டும். அப்படிச் செய்யாவிடில் உலகம் அழிந்துவிடுமாகையால் சூத்திரனைத் தண்டித்துப் பணிவிடை செய்விக்க வேண்டும்.

- அத்: 8, சு: 410

- சூத்திரன் தேடிய பொருள்களைப் பிராமணன் தடையின்றிக் கைப்பற்றிக் கொள்ளலாம், ஏனெனில் அடிமையாகிய சூத்திரன் எவ்வித பொருள்களுக்கும் உரியவனாக மாட்டான்.

- அத்: 8, சு: 417

- பிராமணன் பொருளை எடுத்த சூத்திரனுடைய அங்கங்களை வெட்டிக் கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருள்களைப் பிராமணன் தான் விரும்பியபடி கொள்ளையிடலாம்.

- அத்: 9, சு: 248

- பிராமணனுடைய தொழிலைச் சூத்திரன் செய் தாலும் பிராமணனாக மாட்டான். அவனுக்குப் பிராமணத் தொழில் செய்ய அதிகாரமில்லை. பிராமணன் சூத்திர னுடைய தொழிலைச் செய்தாலும் அவன் உயர்குலத்த வனேயாவான். இப்படியே பிர்மா நிச்சயித்துள்ளார்.

- அத்: 10, சு: 75

- சூத்திரன் பொருளாசையால் உயர்குலத்தோர்க்குரிய தொழில்களைச் செய்தால் அவன் பொருள்களை எல் லாம் பறித்துக் கொண்டு அவனைத் துரத்திவிட வேண்டும்.

- அத்: 10, சு: 96

- பிராமணன், சத்திரியன், வைசியன் இவர்கள் தம் வருணத்திலும், தம் கீழ் உள்ள மற்ற வருணங்களிலும், சூத்திரன் தன் வருணத்தில் மட்டும் மணம் செய்து கொள்ளலாம்.

- அத்: 3, சு: 13

- சூத்திரப் பெண்ணோடு சமமாய்ப் படுக்கும் பிரா மணன் நரகத்தையடைவான், அவளிடம் பிள்ளை உண்டு பண்ணுகிறவன் பிராமணத்தன்மையை இழந்து விடுகிறான்.

- அத்: 3, சு: 17

பிராமணனுக்குச் சூத்திரப் பெண்ணிடம் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு அப்பிராமணன் சொத்தில் உரிமையில்லை. அப்பிள்ளை சிரார்த்தம் செய்யலாகாது. அவன் உயிரோடிருப்பினும் பிணத்துக்குச் சமமானவன்

- அத்: 9, சு: 155-178

- பிராமண குலத்திற் பிறந்தவன் கர்மானுட்டான மில்லாதவனாயினும், ஒழுக்கங்கெட்டவனாயினும் அரசனைப்போலவே தீர்மானம் செய்யலாம். (ஆட்சி செய்யலாம், பிறரைத் தண்டிக்கலாம்) சூத்திரன் ஒரு பொழுதும் செய்யலாகாது.

- அத்: 8, சு: 20

- பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டுப் பொய் சொல்லலாம் குற்றமில்லை. பிராமணரல்லாதவரைக் கொன்றாலும் பரவாயில்லை.

- அத்: 8, சு: 112-143

- வைசியனும், சூத்திரனும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டால் வைசியனுக்கு 250 பணங்களும், சூத்தி ரனுக்கு 500 பணங்களும் பொருள் தண்டனை விதிக்க வேண்டும்.

- அத்: 8, சு: 277

- பிராமணனைச் சூத்திரன் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். பிராமணனுடைய ஜாதிப் பெயர்களை சொல்லித்திட்டும் சூத்திரன் வாயில் காய்ச் சிய இரும்புக்கம்பியை எரிய எரியச் சொருக வேண்டும்.

- அத்: 8, சு: 270-271

- சூத்திரன் மேல் ஜாதியாரை அடித்தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்டிவிட வேண்டும்.

- அத்: 8, சு: 280

- சூத்திரன் (பிராமணரல்லாதவன்) மற்ற மூன்று வரு ணத்தாருடைய மனைவியைப் புணர்ந்தால் அவனை உயிர்போகும் வரை தண்டிக்க வேண்டும்.

- அத்: 8, சு: 359

குறிப்பு: பிராமணன் மற்றவர்களின் மனைவிமார் களைக் கற்பழித்தால் தண்டனை இல்லை போலும்

- தாழ்ந்த சாதிப்பெண் உயர்சாதியாரைக் கூடினால் அவளைக் கண்டிக்கக் கூடாது, உயர்ந்த குலப்பெண் ஒரு தாழ்ந்த சாதியாரைக் கூடினால் அவளைக் கண்டித்து வீட்டிலேயே அடக்க வேண்டும்

- அத்: 8, சு: 365

- உயர்குலப்பெண்ணைப் புணர்ந்த இழிகுலத் தோனை இறக்கும் வரையில் அடிக்க வேண்டும். கட்டுக் கடங்காமல் இட்டப்படி திரியும் பிராமணப் பெண்களை சூத்திரன் புணர்ந்தால் ஆண்குறியை அறுக்க வேண்டும். ஒருவர் கட்டுக்குட்பட்ட பெண்களைப் புணர்ந்தால் அவனைத் துண்டு துண்டாய் வெட்டி அவன் பொருளை யெல்லாம் கொள்ளையிட வேண்டும்.

- அத்: 8, சு: 374

- பிராமணனுடன் சூத்திரன் சமமாக உட்கார்ந்தால் இடுப்பில் சூடுபோட்டாவது, பிட்டத்தை அறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்திட வேண்டும்.

- அத்: 8, சு: 283

- பிராமணன் எத்தகைய கொடிய குற்றங்களைச் செய்தாலும் அவனுக்குத் தூக்குத் தண்டனை ஏற்பட்டால் தூக்கில் இடக்கூடாது. அவன் தலையை மொட்டை அடித்தல் வேண்டும். அதுவே அவனுக்குத்  தூக்குத் தண்டனைக்கு ஒப்பாம். மற்ற வருணத்தார்க்குக் கொலையே தண்டனை.

- அத்: 8, சு: 379

- கொடிய குற்றம் செய்தவனாயினும் பிராமணனைக் கொல்லாமலும், வேறு எத்தகைய துன்பமும் செய்யாம லும் பொருளைக் கொடுத்து அவனை அயலூருக்கு அனுப்பிவிட வேண்டும். எத்தகைய குற்றஞ்செய்தாலும் பிராமணனைக் கொல்ல அரசன் நினைக்கலாகாது.

- அத்: 8, சு: 80, 381

- பிராமாணம் கேட்கும்போது, பிராமணனைச் சத்தியமாகச் சொல் என்று கேட்க வேண்டும். சூத்திரனை நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய மழுவைக் கையில் பிடித்துக் கொண்டு பிரமாணம் செய்யச் சொல்ல வேண்டும் அல்லது அவனைத் தண்ணீரில் அழுத்த வேண்டும். அவன் மனைவி, பிள்ளை இவர்கள் தலைகளில் ஓங்கி அடித்தும், பிரமாணம் சொல்லும் படிச் செய்ய வேண்டும். மழுவெடுத்த சூத்திரன் கை வேகாமலும், தண்ணீரில் அழுத்திய சூத்திரன் சாகாமலும், அடித்ததால் மனைவி மக்கள் தலையில் வலி தோன்றாமலும் இருந்தால்தான் அவன் சொல்லும் பிரமாணம் சத்தியம் என்று கொள்ள வேண்டும்.

- அத்: 8, சு: 113-115

- சூத்திரன் இம்மையில் உயிர்வாழ்க்கைக்கும், மறுமையில் மோட்சமடையவும் பிராமணனையே தொழ வேண்டும். அதுவே அவனுக்குப் பாக்கியம்.

- அத்: 10, சு: 122

- சூத்திரன் எவ்வளவு திறமையுள்ளவனாயினும், தனக்கெனத் தனியாக பொருள் சேர்த்து வைக்கலாகாது. சூத்திரனிடம் பொருள் இருந்தால் பிராமணனுக்குத் துன்பம் வரும்.

- அத்: 10, சு: 129

குறிப்பு: பொருள் சேர்த்துப் பிராமணனுக்குக் கொடுத்துவிட வேண்டும்.

- பிராமணன் உண்டு மிகுந்த உணவும், கட்டிக்கிழிந்த உடையும், சுவையும் ஔதமுமற்ற தானியங்களையும் பிராமணன் பார்த்து சூத்திரனுக்குக் கொடுக்க வேண்டும்.

- அத்: 10, சு: 125

- பிராமணன் வைசியனிடமுள்ள பொருளைக் கேட்டுக் கொள்ளாவிடில் வலிமையாலாவது களவினா லாவது யாகத்திற்கு வேண்டிய பொருளைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். வைசியனிடமில்லாவிடில் சூத்திரன் வீட்டிலிருந்து ஏராளமாக யோசனையின்றிக் கேளாமல் வலிமையினாற் கொள்ளையிட்டு எடுத்துக் கொள்ளலாம்.

- அத்: 11, சு: 12,13

- யாகம் செய்கிறவன் பொருள் தேவர்கள் பொருள் என்றும், யாகம் செய்யாதவர்களின் பொருள்கள் அசுரர்களின் பொருள்களென்றும் வேதம் ஓதுகின்றது. ஆதலால் அசுரர் பொருள்களைத் தேவர்களுடைய பொருள்களாக்குதல் தருமமேயாகும்.

- அத்: 11, சு: 20

- தரும சிந்தனையுள்ள அரசன் இவ்விதம் கொள் ளையிட்டு யாகம் செய்கின்ற பிராமணர்களைத் தண்டிக் கக் கூடாது. அரசனின் அறியாமையால் பிராமணன் பசித்துன்பத்தை அடைகிறான்,

- அத்: 11, சு: 21

குறிப்பு: இதனால் பிராமணன் எந்த விதத்திலும் பிழைக்கும்படி அரசன் வழிதேடி வைக்க வேண்டும். அவர்கள் சொல்லுவனவெல்லாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

- பிராமணனுக்கு வேதம் ஓதலே தவம்; சத்திரியனுக்கு இந்நூலில் சொன்னபடி ஆட்சி செய்தலே தவம். வைசியனுக்கு வர்த்தகம் செய்தலே தவம். சூத்திரனுக்குப் பிராமணனுக்குப் பணிவிடை செய்தலே தவம் ஆகும்.

- அத்: 11, சு: 235

- இதில் சொல்லும் கருமங்களில் தவறிய அரசன் மலம், பிணம் இவைகளைத் தின்னும் கடபூதம் என்னும் பேயாகப் பிறப்பான். மேற்சொன்ன வேதஸ்மிருதிகளுக்கு அடங்காமல் விரோதமாக நடக்கும் சூத்திரன் சீலைப் பேனைத் தின்னும் பேயாகப் பிறப்பான்.

- அத்: 12, சு: 71,72

குறிப்பு: ஆதலால் இதில் சொன்னபடியே அரசன் பிராமணர்களுக்குச் சாதகமாக ஆட்சி நடத்த வேண்டும்,. சூத்திரன் பிராமணர்களுக்குத் தொண்டு செய்து நடக்க வேண்டும் என்பது தான் மனுநீதி.

மனுநீதியின் அறநெறியைப் பார்த்தீர்களா? பார்ப்பான் எதையும் தின்னலாம். எந்த குற்றங்களையும் செய்யலாம். யார்வீட்டுப் பெண்களையும் கற்பழிக்கலாம். யார் பொருளையும் கொள்ளையிடலாம். கொலையும் செய்யலாம். அவனுக்குக் குற்றத் தண்டனை கிடையாது. நாவிதக் கூலியில்லாமல் மொட்டையடித்துப் பொருள் கொடுத்து வேறு ஊருக்கு அனுப்புவதே தண்டனை. அங்கும் குற்றம் செய்தால் அப்படியே; எப்படியுள்ளது மனு (அ) நீதி?  ஜாதிக்கொரு நீதி! மன்னன் மனுநீதிப்படியே மற்றவர்களை தண்டித்து அவர்களை ஆதரித்து அரசாள வேண்டும். இல்லையேல் அரசனையும் தொலைத்துக் கட்ட மனுவில் இடமுள்ளது.

இத்தகைய அறத்தை, அரசியலை, உயிர்க் கொலையை, ஊன் உண்ணலை, கரவை, கற்பழித்தலை, கொலைகளை, கொடுமைகளை, மடமைகளைத்தான் வள்ளுவர் சொல்லுகிறாராம். திருக்குறளில் அறமாவது மனுநூலில் விதித்த செய்தலும் விலக்கிய தவிர்த்தலும் தான் - என்று பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதினார். இதைத்தான் நாகசாமி போன்றவர்களும், புலவர்களும் போற்றுகின்றனர்.

தமிழ் மரபும், பண்பும் அறியாத பரிமேலழகர் - தமிழர் கொள்கைகளுக்கு மாறுபட்ட வேத விதிகளையும், மனுதர்ம சாத்திர முறைகளையும் நம்பும் ஒருவர் - அவற்றையே வாழ்க்கையின் கொள்கைகளாகக் கொண்ட ஒருவர் எழுதிய உரை எவ்வாறு பொருந்தும்? அதை நம்பும் உணர்வற்றவர்களாகிய நாகசாமிகள் என்ன செய்யப் போகின்றார்கள்?

 


__________________


Guru

Status: Offline
Posts: 19649
Date:
Permalink  
 

page4_03.jpg__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard