New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் பெருமான் கூறும் சாகா கல்வி


Guru

Status: Offline
Posts: 24765
Date:
திருவள்ளுவர் பெருமான் கூறும் சாகா கல்வி
Permalink  
 


திருவள்ளுவர் பெருமான் கூறும் சாகா கல்வி

 

 http://tamil.vallalyaar.com/archives/3692

“தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்.” – திருவருட்பிரகாச வள்ளலார் .

ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் ஆற்றிய உரையில் , எழுதி வெளியிட்டுள்ள நூல்களில் திருக்குறளில் உள்ள ஞானத்தை , சாகா கல்வியை வெளிப்படுத்தி உள்ளார். அதை தொகுத்து இங்கு பதிகிறோம்.

இறைவன் திருவடியை அறிந்து அதனை பற்றுவதே சாகா கல்வி என்றும் , இறைவன் திருவடியை , மெய்ப்பொருளை பற்றி பற்றி நம் பற்றான வினைகள் அழிந்தால் தான் பிறவா நிலை எய்தி மரணமிலா பெருவாழ்வு பெற முடியும் என்பதை ஆணித்தரமாக கூறி உள்ளார் திருவள்ளுவர் பெருமான்.

ஜோதி சொரூபனான இறைவனது திருவடி எது?! முதல் அதிகாரத்தில் கூறுப்பட்டுள்ள சாகா கல்வி என்ன? அதை இந்த கட்டுரையில் காண்போம்.

முதல் அதிகாரத்தில் வரும் 10 குறள்களில் 7 குறளில் இறைவன் திருவடியை பலவாறாக போற்றி பாடியுள்ளார் திருவள்ளுவர் பெருமான்.

2வது குறளிலும்
“கற்றதனால்லாய பயனென் கொல் வாலறிவான்
நற்றாள் தொழார் யெனின்”

நாம் என்னதான் கற்றாலும் “நற்றாள்” அதாவது இறைவனின் நல்ல திருவடிகளை தொழ வில்லை எனில் என்ன பயன் என்கிறார். மனிதனுக்கு உண்மையா கல்வி – அறிவு வருவது எப்போது எனின் ஒருவன் இறைவன் திருவடியை அறிந்து அதை தொழும் போது தான்.

இந்த திருவடியை அறியாதவர்கள் அறிவில்லாத மிருகங்கள் என்று திருமூலர் பெருமானும் சாடுகிறார்.

“பெறுதர்கரிய பிறவியை பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே” – திருமந்திரம் 2090

திருக்குறள் – 3, 4, 7, 8, 9 ஐ பார்ப்போம்

“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”

“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல”

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”

“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது”

“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”

இக்குறள்களில் வள்ளுவர் பெருமான் இறைவனை மாண்பு மிக்கவன், வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன், தனக்கென்று உவமையாக யாரும் இல்லாதவன், எண்குணத்தான் என்று போற்றுகிறார்.

இறைவனை போற்றுவதோடு இல்லாமல் அவன் திருத்தாள்களை பற்றினால் தான் ஒருவன் உலகில் நீண்டு (மரணமில்லா பெருவாழ்வு) வாழ முடியும் என்றும் ,
திருவடியை பற்றினால் தான் ஒருவனது துன்பம் மற்றும் மனக்கவலைகள் நீங்கும் என்றும், பிறவி கடலை நீந்தி கரை ஏறவும் ஒருவன் இறைவன் திருவடியை பற்ற வேண்டும் என்றும் தெளிவாக உரைக்கிறார்.

மேலும் பத்தாவது குறளில்

“பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்”

இந்த குறளில் வள்ளுவ பெருந்தகை அவர்கள் பிறவி பற்றியும் இறைவன் அடி பற்றியும் மேலும் இந்த இறைவன் அடியை சேராதவர்கள் பிறவி எனும் பெருங்கடலில் நீந்தி கொண்டே இருப்பார்கள் என்கிறார்.

இறைவன் திருவடியாக வள்ளுவர் பெருமான் கூறுவது என்ன?
கீழுள்ள குறளில் பதில் கூறுகிறார் :

“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்: மற்று
நிலையாமை காணப் படும்.” – 349

பொதுவாக இந்த குறளுக்கு விளக்கம் எந்த பற்றும் இல்லாமல் இருந்தால் இறைவனை காண முடியும் (அ) பிறப்பறுக்க முடியும் என்று சொல்ல படுகிறது. இது எந்த அளவிற்க்கு மிக சரியான கருத்தோ அதே அளவு இந்த குறளில் இருக்கும் இன்னொரு விஷயமும் மிகவும் முக்கியமானது. எதன் மூலமாக பிறப்பறுக்க முடியும் என்று சொல்கிறார்.ஆம், முன்பு பார்த்த குறளில் பிறவி பெருங்கடலை நீந்த இறைவன் அடியை சேர வேண்டும் என்று சொன்னவர் இந்த குறளில் பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் என்று சொல்வதன் மூலம் எது இறைவன் அடி என்றும் சொல்கிறார். பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் – ஆம், கண் வழி மூலமாகத்தான் நாம் இறைவனை அடைய முடியும் (அ) பிறப்பறுக்க முடியும். இதைத்தான் இறைவன் திருவடி என்றும் சொல்கிறார்.

ஏன் இங்கு பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார் என்று சிந்தித்தால் அதுதான் ஞான பாதை. கண்ணின் மகத்துவத்தை மேலும் அது எப்படி நம் உடம்பில் இருக்கிறது என்பதைத்தான் திருவள்ளுவர் வெளிபடுத்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதுதான் பிறப்பறுக்கும் என்று சொல்கிறார். ஏன் கண்ணை பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார்?

நமது கண் அமைப்பை நன்றாக பாருங்கள். வெள்ளை விழி – அதன் நடுவே கருவிழி – இந்த கருவிழியை தான் கருமை பெற்ற கடல் என்கிறார் திருஞான சம்பந்தர், வெள்ளை விழி தான் திருப்பாற்கடல் என்றார்கள் ஆழ்வார்கள். இந்த கருவிழியாகிய கருங்கடலிலே மிதக்கின்ற கலம் தான் நம் கண்மணி. எவ்வளவு ஒப்பற்ற உவமை இது. நம் கண்மணி வேறு எதையும் பற்றாமல் கருவிழியில் பிராணநீரில் மிதந்து கொண்டிருக்கிறது. இது தான் ஞான இரகசியம். தாயின் கருவினுள் சிசு பனிக்குடத்தில் இருப்பது போலவே கண்மணியும் “நீர் மேல் நெருப்பாக” மிதந்து கொண்டிருக்கிறது. கண்மணியின் மையம் ஊசிமுனை துவாரம் உள்ளது. அதனுள் ஊசிமுனை அளவு நெருப்பு. நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சூட்சுமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது. இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான். இவ்வினைகள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது. கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.

நம் கண்ணில் சூட்சமமாக உள்ள வினை திரையை நீங்கினால் தான் நம் கண் பற்றற்ற கண்ணாகும்.

இந்த வினை திரையை நீக்குவது எப்படி? அதற்கும் விடை அளிக்கிறார் வள்ளுவர் பெருந்தகை :

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு”

நாம் ஞான சற்குருவிடம் திருவடி தீட்சை பெற்று கண்களில் உணர்வு பெற்று தவம் செய்கையில் , மெய்ப்பொருளான நம் கண் சிவந்து செம்மையான கண்ணாகும். அதுவே செம்பொருள் என்கிறார் வள்ளுவர். அதாவது செம்பொருள் கைவல்யமானவரே பிறப்பை தவிர்பர். வினையை சுட்டெரிப்பர்

இதே போல மீதி உள்ள இந்த குறள்களை பார்த்தாலும் இதில் ஏன் வள்ளுவர் இத்தனை முறை சொல்கிறார் என்று பார்த்தாலும் இந்த இறைவன் திருவடி ஆன்மீகத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.

கீழே இருக்கும் இந்த குறளுக்கான விளக்கம் தெரிந்தால் போதும் அது நிச்சயமாக ஞான பாதைக்குள் நம்மை தள்ளும்

“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்” – 214

இந்த குறளும் மறைமுகமாக திருவடி பற்றிதான் சொல்கிறது. மேலும் இப்படி அறிந்து உணர்ந்து இருப்பவர்களே உயிர் வாழ்வார்கள் என்று தெளிவாக சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் இறைவனை உணர உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் 700 கோடி வழிகள் பற்றி எல்லாம் இந்த குறளில் சொல்லவில்லை. இந்த குறளில் உள்ள வழி உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் பொதுவான ஒரே வழியான ஞான வழியை ப்ற்றி மட்டும்தான் சொல்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிடுகிறோம். இந்த “ஒத்தது அறிவான்” என்ற குறளுக்கான விளக்கம் “பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்” என்ற குறளுடன் மிக தொடர்புடையது இதுவே ஞான இரகசியம்.

விளக்கம்:

ஒத்தது அறிந்தவன் உயிர் வாழ்வான் அறியாதவன் செத்து போவான்.

ஒத்தது எது? நம் உடம்பில் ஒரு கண்ணைப்போல உள்ள மற்றொரு கண்!?

ஒத்தது எது? உலக மக்கள் அனைவருக்கும் ஒன்று போல் உள்ள கண்கள்!

ஏன் ஒன்று போல் உள்ளது? இறைவன் எல்லார் கண்மணி-ஊசிமுனை துவாரத்தின் உள்ளிலும் ஊசிமுனை அளவாக ஒரே அளவாக இருக்கிறான்!இறைவனுக்கு பாகுபாடே இல்லை! எல்லாரும் அவர் பிள்ளைகளே! எல்லாருக்கும் சமமான – ஒரே தன்மையில் தான் இறைவன் – பரமாத்மா – சீவனாக – ஒளியாக கண்களில் மிளிர்கிறான்!

நமது இரு கண்களும் ஒப்பற்றவை! நம் உடம்பில் ஒரேமாதிரி உள்ள இரண்டு பொருள் கண்கள் மட்டும்தான். நமது உடம்பில் மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் ஒன்று போல் இருப்பது கண்கள்தான்! கண்-மணி தான்! நம் வாழ்வே கண்ணில்தான் இருக்கிறது! நமது கண்களில் – மணியில் – மத்தியில் – ஊசிமுனை துவார்த்தின் உள்தான் ஊசிமுனை அளவு ஒளி உள்ளது!

உலகமக்கள் அனைவருக்கும் ஒரே அளவாக இருப்பதும் கண் மணியே!

கண்தானம் யார் வேண்டுமானலும் எந்த பாகுபாடுமின்றி யாருக்கும் கொடுக்கலாமல்லவா?

ஏன்?

எல்லார் கண்ணும் ஒன்றாக இருப்பதால்தான்!? யாருக்கும் எந்த வித்தியாசமும் கண்ணில் இல்லை! ஆம், 700 கோடி மக்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இந்த கண்கள்தான்.

கண்களில் இறைவன் ஒளியாக துலக்குவதை அறிபவன் -உணர்பவன் திருவடியான கண்மணி ஒளியை பற்ற முற்படுவான் . அவனுக்கு இறைவன் நல்ல குருவை காட்டி ஆட்கொள்வான் – மரணமில்லா பெரு வாழ்வு பெறுவான். இதை தான் கூறுகிறார் வள்ளுவர் பெருமான்.

மேலும் திருவள்ளுவரும் (Thiruvalluvar), திருமூலரும் (Thirumoolar), அவ்வையாரும் (Avvaiyar) மற்றும் திருவருட் பிரகாச வள்ளலாரும் (Ramalinga Swamigal) பற்றற்ற என்ற இடத்தில் மிக சரியாக ஒத்து போகிறார்கள். ஏன் எனில் அந்த பற்றற்ற இடத்திலே இறைவன் துலங்குகிறான்! அதுவே திருவடி அல்லது மெய்பொருள்.

எல்லா ஞானியரும், சித்தர்களும்  இறைவன் திருவடியாக கண்ணையும் – கண்ணில் துலங்கும் ஆன்ம ஒளியை தான் திருவடி என்கிறார்கள் என்பதை அவர்கள் பாடல்கள் மூலம் அறிய இந்த (லிங்கை) கிளிக் செய்யுங்கள்.

திருச்சிற்றம்பலம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard