திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து | |||
குறள் எண் | கடவுளின் பெயர் / இலக்கணம் | கடவுளைத் தொழும் விதம் | கடவுளைத் தொழுவதன் பயன் |
1. | ஆதிபகவன்- உலக முதல்வன்/ உலகைப் படைத்தவன் | மறை நூல்கள் பயிலுதல்-கற்க கற்பவை (கேள்வி அல்லது ஸ்ரவணம்) | எல்லா அனுபவங்களும் காரணத்திற்கு உட்பட்டவையே என்ற நம்பிக்கை பெறுதல் |
2. | வாலறிவன்- யாவும் அறிந்தவன் | மறைகள் காட்டும் வாலறிவன் பற்றி கசடற கற்க. ஆண்டவன் மற்றும் மறையின் பொருள் விளக்கும் நல்லாசிரியரின் பாதங்கள் தொழுதல் (விமரிசம் அல்லது மனனம்) | அறிவு என்பது உரிமை கோரவியலாத, தனது என்ற சொந்தம் கொள்ள முடியாத உன்னத உணர்வு என்ற தெளிவும், அத்தெளிவினால் பணிவும் பெறுதல் |
3. | மலர்மிசை ஏகினான்- படைக்கப்பட்ட உயிர்களின் உள்ளத்தாமரையில் வீற்றிருப்பவன் | மறைகள் உணர்த்தும் பரமனைக் குறித்து மனதளவில் தியானம் என்னும் அறிவுச்செறிவுப் பயிற்சியில் ஈடுபடுவது, அதாவது நிற்க-அதற்குத் தக- (பாவனை அல்லது நிதித்யாஸனம்) | படைத்தவர் உணரப்படும் இடம் மனமே என்ற தெளிவும், முன்னரே குடிகொண்டிருத்தலால் இறவாநிலை சத்தியமே என்ற நிம்மதியும் எய்துதல் |
4. | வேண்டுதல் வேண்டாமை இலான்- விரும்பத்தக்கது, தகாதது என்ற பிரிவுகள் அற்றவன் | அறம் இழுக்கென இயம்பும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் வாழ்வில் நீக்கிப் பழகுதல் | விரும்பத்தக்கது, தகாதது என்ற பிரிவுகளால் உண்டாகும் இடும்பைகள் யாவற்றினின்றும் தீர்வு அடைதல் |
5. | இறைவன்-
எங்கும் நிறைந்த இறைவன் | அடியார்கள் இறைவனைக் குறித்துப் பாடியுள்ள பாசுரங்களைப் பாடுதல் | நல்வினை, தீவினைகளால் தாக்கப்படாத நிலை எய்துதல் |
6. | ஐந்தவித்தான்- அவா அறுத்தவன் | வாழ்வில் பொய்தீர்ந்த ஒழுக்கநெறி நிற்றல் | மறுபிறப்பினின்று வீடு எய்துதல் |
7. | தனக்குவமை இல்லாதான்- ஒப்புயர்வு அற்றவன் | பிறருடன் ஒப்பிட்டு நோக்கலை நீக்குதல் | மனக்கவலை நீங்குதல் |
8. | அறவாழி அந்தணன்- மறைமுடிவு நூல்கள் மையக்கருத்தாக போதிக்கும் அந்தணன் எனும் பரமன் | மனதாலும் அறம் வழுவாது இருத்தல் | கடக்க அரிதான பொருள், இன்பம் ஆகியன எளிதில் கடந்து செல்லுதல் |
9. | எண்குணத்தான்- 1.முடிவற்றவன், 2.உருவற்றவன் 3.குறிகளற்றவன், 4.சார்பற்றவன் 5.கட்புலன் ஆகாதவன்,
6.மெய்யவன் 7.அறிவினன், 8.பேரின்பவடிவன் என எட்டு குணங்களை உடையவன் – | உடலின் எல்லா பாகங்களையும், உள்ளம்,உரை, செயல் என எல்லாவற்றானும் அறம் பேணுதல் | வாழும் வரை நம் உடல் புதுப்பொலிவுடன் திகழ்தல் |
10. | இறைவன்- முக்காலத்திலும் நிறைந்தவன் | கழிந்ததையும், வருவதையும் பற்றிய எண்ணங்கள் தவிர்த்து காலத்திற்கு அப்பாலுள்ள இறைவனைப் பணிதல் | அனுபவங்கள் யாவற்றினும் அப்பாற்பட்டதே மெய்யுணர்வு எனும் வீடுபேறு அடைதல் |