New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஈ.வே.ராமசாமி தான் உயிரோடு இருக்க யார் காலையும் பிடிக்க துணிந்தார். - தோழர் பா.ஜீவானந்தம்.


Guru

Status: Offline
Posts: 19649
Date:
ஈ.வே.ராமசாமி தான் உயிரோடு இருக்க யார் காலையும் பிடிக்க துணிந்தார். - தோழர் பா.ஜீவானந்தம்.
Permalink  
 


EVR the uncertain mindset. .

"ஈ.வே.ராமசாமி தான் உயிரோடு இருக்க பிற்போக்கு கும்பலின் யோசனைப்படி யார் காலையும் பிடிக்க துணிந்தார்.

என்னை மானங்கெட்டத் தனமாக மன்னிப்பு கொடுத்துவிட்டு வெளியே வரும்படி

K.M. பாலசுப்பிரமணயம்
மூலம் கடிதம் கொடுத்து சிறைச்சாலைக்கு அனுப்பி கட்டாயப் படுத்தினார். " 
- தோழர் பா.ஜீவானந்தம்.
~~~~~~~~~~||||||||||||~~~~~~~~~~
H ராஜா ஈவேரா சிலை அகற்றச் சொன்னதற்குக் கொதிப்பவர்கள்,

ஈவேரா வை ப.ஜீவானந்தம் கிழிகிழின்னு கிழிக்கறதையும் படிக்கணும்! 

"அரசாங்கம் (ஜஸ்டிஸ் கட்சி) மீண்டும் 1935ல் பத்திரிகையில் ஜாமீன் கேட்டனர்.

பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடான "நான் நாஸ்திகன் ஏன்?"- பற்றி பிரச்னை வந்தது.

இந்நூல் பகத்சிங் இறுதிக் காலத்தில் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு:

வெளியிட்டவர் என்பதற்காக 

ஈ வே கிருஷ்ணசாமியையும், மொழி பெயர்த்தவர் என்பதற்காக என்னையும் கைது செய்தனர். 'சுயமரியாதை இயக்கத்தின்' மீது சர்க்காரின் கோபப்பார்வை விழுந்தது.

அதிகாரத்தில் இருந்தது பொப்பிலி அரசரின் ஜஸ்டிஸ் கட்சி. 

தேர்தலில் ஈவேரா ஜஸ்டிஸ் கட்சிக்கு தோள்போட்டு, அதை சமதர்மக் கட்சி ஆக்கியதன் விளைவுதான் இந்த அடக்குமுறை. 

சர்க்கார் அழிவ நடவடிக்கையைக் 

கண்டு ஈவேரா மிரண்டார்.

சமதர்மத்திற்கு விரோதிகளான R K சண்முகம் செட்டி போன்றவர்கள் 

தருணத்தைத் தவறவிடாமல் செயல்பட்டனர். 

ஏற்கனவே மந்திரியாக இருந்த பன்னீர்செல்வம், GD நாயுடு மூலம் நாஸ்திகப் பொதுவுடமைப் பிரச்சாரத்தை நிறுத்திவிட வேண்டும் என்றும்,

இல்லாவிட்டால் கட்சியை சர்க்கார் அழிக்க முடிவு கட்டி விட்டதென்றும் ஈவேரா வை மிரட்டிய கதையும் நமக்குத் தெரியும்.

என்னை மானங்கெட்டத்

தனமாக, மன்னிப்புக்கொடுத்துவிட்டு வெளியே வரும்படி, ஈவேரா,

K M பாலசுப்ரமணியம் மூலம் ஒரு கடிதத்தை சிறைச்சாலைக்கு அனுப்பிக் கட்டாயப் படுத்தினார்.

''பெரிய நாயக்கர் (ஈ வே கிருஷ்ணசாமி) வேண்டுமானால் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டுப் போகட்டும்: நான் முடியாது"- என்று பிடிவாதமாகக் கூறினேன். நான் மன்னிப்புக் கடிதம் கொடுக்காவிட்டால் இயக்கம் அழிக்கப்பட்டு விடும் என்றும், தானே மன்னிப்பும் பொறுப்பும் என்று 'குடியரசு' வில் எழுதிவிடுவதாகவும் ஈவேரா கட்டாயப்படுத்தினார்.

தான் உயிரோடிருக்க (யாருக்காக?) பிற்போக்கு கும்பல்களின் யோசனைப்படி யார் காலையும் பிடிக்கத் துணிந்தார்.

1) ஈரோட்டில் சமதர்ம வேலைத் தீர்மானத்தை நிறைவேற்றினார் - பின்னர் சமதர்ம விரோதிகளான R K சண்முகம் செட்டியார், ஏ ராமசாமி முதலியார்களைத் தேர்தலில் ஆதரித்தார் ஈவேரா.

2) ஜமீன்தார் அல்லாதார் மாநாடு கூட்டி, பொப்பிலி முதல் எல்லா ஜமீன்தாரிகளும் ஒழிய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு, பொப்பிலி அரசர் சிறந்த சமதர்ம வீரர் என்று புகழ்ந்தார் ஈவேரா.

3) லேவாதேவிக்காரர் அல்லாதார் மாநாடு கூட்டி, லேவாதேவிக்காரர்கள் எல்லாம் ஒழிய வேண்டும் சரமாரியாகச் சொன்மாரி பொழிந்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, குமார ராஜா முத்தையா செட்டியாரோடு கொஞ்சிக் குலாவினார் ஈவேரா.

4) மதங்கள் எல்லாம் ஒழிய வேண்டும் என்று விருது நகர் சுயமரியாதை மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இஸ்லாம் மார்க்கம் நல்லதென்றும் அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேருங்கள் என்றும் பிரச்சாரம் செய்தார் ஈவேரா!

5) திருநெல்வேலி மாநாட்டில் கொள்கைப் பரப்பலில் ஈடுபட்ட சுயமரியாதை இயக்க முக்கிய ஊழியர்களைத் தாக்கி, அவர்தம் கொள்கையைப் பழித்த சோமசுந்தர பாரதியை ஆதரித்து 'குடியரசில்' தலையங்கம் எழுதினார் ஈவேரா! 

("ஈரோட்டுப் பாதை சரியா?"- by ப ஜீவானந்தம் - சந்தியா பதிப்பகம் - பக்கம் 25 -29)
-----'-----------'--------------'-----------'----- 
நான் மேலே காட்டியிருப்பது கம்யூனிஸ்ட் தலைவர் ப ஜீவானந்தம் அவர்கள், ஈவேரா வைப் புத்தகம் முழுக்கக் கிழித்துத் தொங்க விட்டிருப்பதில் சிறிய சாம்பிள்தான்.
என்னுடைய கவலையே கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள், தோழர் ஜீவா இப்படி எல்லாம் ஈவேராவைக் கிழித்திருப்பதைப் படித்து விட்டு "பாலன் இல்லத்தின்" மீது வீசிவிடுவார்களோ என்பதுதான்! பாவம் வீதி வீதி யாக உண்டியல் குலுக்கி சேர்த்த மணத்தில் கட்டியதாகக் கூறிக் கொள்கிறார்கள்!!
நன்றி.Abvp. chandran.



__________________


Guru

Status: Offline
Posts: 19649
Date:
RE: ஈ.வே.ராமசாமி தான் உயிரோடு இருக்க யார் காலையும் பிடிக்க துணிந்தார். - தோழர் பா.ஜீவானந்தம்.
Permalink  
 


பெரியார் உயிரோடு இருந்த வரை அவரது காலத்திற்கு பின் அவரது சொத்துக்களை யார் பராமரிப்பது ? என்று உயில் ஏதும் எழுதி வைக்கவில்லை ....

மணியம்மை உயிரோடு இருந்தவரை அவர் நிர்வகித்து வந்ததுகூட சட்டப்படி தவறில்லை.

பெரியாரைப்போலவே மணியம்மையும் உயில் ஏதும் எழுதி வைக்கவில்லை.

பெரியார் மற்றும் மணியம்மையால் நிர்வகிக்கப்பட்ட சொத்துக்கள் ஏதும் டிரஸ்ட் பேரில் பதியப்படவில்லை.

பெரியார் திராவிடர் கழகம் வீரமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரியாரின் அறிவுசார் சொத்துரிமை தங்களுக்குச் சொந்தமானது!’ என்று திராவிடர் கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதத்தை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்கவில்லை.

‘உங்களிடம் உரிமையிருப்பதற்கு எந்த ஆவணம் இருக்கிறது? அந்த ஆவணத்தைக் காட்டினால் மட்டுமே நீங்கள் சொல்வதை நீதிமன்றம் ஏற்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அப்படி ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் அது மக்கள் சொத்தாக மாறி விடுகிறது’ என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெரியாரின் அசையாச் சொத்துகளுக்கான உரிமை யாருக்கு என்பதற்கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவை தாமாகவே மக்கள் சொத்தாக மாறிவிடுகின்றன என்பது தான் தற்போதுள்ள சட்ட பூர்வமான நிலை’

பெரியாரின் மறைவு வரையில் தனது சொத்துக்களை யாருக்கும் அவர் எழுதி வைக்கவில்லை.

பெரியாரின் பெயரில்தான் அவை இருந்தன. சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தைப் பெரியார் பதிவு செய்தாரே தவிர, தனது சொத்துகளை சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்காக அவர் எழுதித் தரவில்லை.

எனவே, பெரியாரின் சொத்துகளுக்கு அந்த அறக்கட்டளை உரிமை கோர முடியாது. சட்டப்படி அதுவும் மக்கள் சொத்தாகத்தான் கருதப்படும்.

விவாதித்ததாகக் கூறப்படும் தி.க. தலைமை, பெரியார் பெயரிலிருக்கும் சொத்துகளை விரைவில் விற்றுவிடுவதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தியிருப்பதாக உறுதி செய்யப்படாத சில தகவல்கள் உள்ளது.

* சென்னை செனாய் நகரில் ஒரு சொத்தும்,

* திருவிடைமருதூரில் இரு சொத்துகளும் விற்கப்பட்டுள்ளதாக தி.க. தரப்பிலிருந்தே செய்திகள் வந்துள்ளன.

மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு முயற்சியாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது.

பெரியாரின் சொத்துகள் மக்கள் சொத்தாக மாற்றப் பட்டு, அரசின் கண்காணிப்பில் அது நிர்வகிக்கப்பட வேண்டும் .

* சென்னையிலுள்ள பெரியார் திடல்,

* ஈரோட்டிலுள்ள பெரியார் மன்றம்,அதனைச் சுற்றியுள்ள வணிக வளாகம்,

* பத்தாயிரம் சதுர அடியிலான ஒரு மஞ்சள் மண்டி, பல வீடுகள்,

* மணியம்மை ஸ்டோர் என்ற பெயரில் ஒரு கடை என பெரியாருக்குச் சொந்தமான பல சொத்துகள் ஈரோட்டில் உள்ளன.

* திருச்சி நகரத்தில் 3 ஏக்கர் பரப்பில் பெரியார் மாளிகை,

* திருச்சி கே.கே. நகர் பகுதியில் 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியார் கல்வி வளாகம்,

* சேலம் ஏற்காட்டில் ஏரிக்கருகே ஒரு வீடு மற்றும் சில கடைகள் ....

* தஞ்சையில் பெரியார் இல்லம் உள்ளிட்ட பல சொத்துகள் உள்ளன.

மேற்காணும் சொத்துக்கள் மற்றும் இன்னும் சில பொதுமக்கள் அறிந்திராத சொத்துக்கள் அனைத்திற்கும் வீரமணி சட்டப்படியான வாரிசுதாரர் இல்லை.

ஏனெனில் வீரமணி முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கும் பெரியாருக்கும் ரத்த சம்பந்தமான ஒட்டோ, உறவோ கிடையாது.

பெரியாரின் சொத்துக்களுக்கு சட்டப்படி உரிமைகோர அவரது ரத்த சம்பந்தமான பேரன் என்ற முறையில் ஈ.வி.கே.எஸ் மட்டுமே உரிமை கோர முடியும்.

இதுபற்றி வழக்குபோடுவது யார் ? எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும் என்பதுபோல் ,

பெரியாரின் சொத்துக்களை தமிழக அரசு கையகப்படுத்தவேண்டும்.

நன்றி - Sankara Narayanan



__________________


Guru

Status: Offline
Posts: 19649
Date:
Permalink  
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் திருச்சியில் இருந்து கல்லணைக்கு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது. திருச்சி மேலப்புதூரில் உள்ள தூய மரியன்னை பேராலயத்தில் இருந்து மோட்டார் ஊர்வலத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் திருச்சி பிஷப் அந்தோணிடிவோட்டா, பங்கு தந்தைகள், கிறிஸ்தவ அமைப்பினர், இளைஞர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஊர்வலம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, ஊர்வலத்தில் சென்றவர்கள் தங்கள் வாகனங்களில் ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு‘ என்ற வாசகம் எழுதப்பட்ட கொடியை வைத்து கொண்டு சென்றனர். ஊர்வலம் மேலப்புதூரில் இருந்து டி.வி.எஸ்.டோல்கேட், பழைய பால்பண்ணை, அரியமங்கலம், காட்டூர், திருவெறும்பூர், வேங்கூர் வழியாக கல்லணையை சென்றடைந்தது. ஊர்வலத்தில் சென்ற இளைஞர்கள் வழிநெடுக பொதுமக்களிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும், இந்த போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்றனர்.
https://www.dailythanthi.com/News/Districts/2018/04/09024322/The-Ceylon-Management-Board-is-set-up-to-set-up-a.vpf



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard