११.५४ ब्रह्महत्या सुरापानं स्तेयं गुर्वम्गनागमः |
महान्ति पातकान्याहुः संसर्गश्चापितैः सह ||
- பிரமணனைக் கொல்லுதல் (ப்ரஹ்ம ஹத்யா)
- சுரா (சாராயம்) என்று சொல்லப்படும் கள்ளைக் குடித்தல்
- திருட்டு
- தன்னுடைய குருவின் படுக்கையை (மனைவியை) அபகரித்தல்
- மேற்கூறிய நன்கு விதமான பாதகம் செய்தவர்களுடன் சேர்தல்
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
வள்ளுவரும் இதே பொருளில் மேற்கூறிய குறளில், ஒழுக்கத்தை, உயிரை விட மேன்மையாகக் காத்தல் வேண்டும் என்கிறார்.
११.५५ अनृतं च समुत्कर्षे राजगामि च पैशुनं |
गुरोश्चालीकनिर्बन्धः समानि ब्रह्महत्यया ||
11.55 மனு இந்த ஸ்லோகத்தில் பிரம்மஹத்திக்குச் சமமான பாதகங்கள் எவை என்று கூறுகின்றார்:
- தம்மை உயர் குலத்தோர் என்று பொய்யாக்க கூறிக் கொள்ளுதல்
- அரசுக்கு பொய்யான சாக்ஷியைக் கொடுத்தல்
- தன்னுடைய ஆசார்யன் மீது பொய்யான பழியைப் போடுதல்.
११.५६ ब्रह्मोज्झता वेदनिन्दा कौटसाक्ष्यं सुहृद्वधः |
गर्हितानाद्ययोर्जग्धिः सुरापानसमानि षट् ||
- தான் கற்ற வேதங்களை மறத்தல்
- வேதங்களை நிந்தை செய்தல்
- பொய் சாக்ஷி கூறுதல்
- தன்னுடைய நண்பனைக் கொல்லுதல்
- தவிர்க்கப்பட வேண்டிய உணவினை உண்ணுதல்
- பருகத் தகாத திரவங்களைப் பருகுதல்
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
வள்ளுவர் இங்கு ஒரு பார்ப்பான் தான் கற்ற வேதங்களை மறந்து விட்டாலும் கூட மீண்டும் கற்றுக்கொள்ள முடியும், ஆனால் பிறப்பொழுக்கம் என்று சொல்லப்பெறும் தன வர்ண தர்மத்தை மறந்து மற்ற பாதகங்களை செய்தால், அந்தப் பிராம்மண ஜென்மம் வீணாகி விடும் என்கிறார். முதல் வருணத்திற்குக் கூறிய படியினால் மற்ற மூன்று வருணங்களுக்கும் இது பொருந்தும் என்று கொள்ளல் வேண்டும்.
११.५७ निक्षेपस्यापहरणं नराश्वरजतस्य च |
भूमिवज्रमणीनां च रुक्मस्तेयसमं स्मृतं ||
11.57 அடுத்தபடியாக தங்கம் திருடுவதற்கு சமமான பாவங்கள் எவை என்று மனு சொல்கின்றார்.
- வைரம் முதலாகிய நவ இரத்தினங்கள்
- வெள்ளி
- நிலம்
- குதிரை
- பணம்
- (அடிமை) மனிதர்கள்
११.५८ रेतःसेकः स्वयोनिषु कुमारीष्वन्त्यजासु च |
सख्युः पुत्रस्य च स्त्रीषु गुरुतल्पसमं विदुः ||
11.58 இனி தன்னுடைய ஆச்சர்யனுடைய, படுக்கையை(மனைவியை)த் திருடிய பாவத்திற்கு சமம் எது என்று சொல்கின்றார் மனு.
- தன்னுடைய சகோதரிகள்
- பணிப்பெண்கள்
- கீழ் குலப் பெண்டிர்
- நண்பர் மனைவியர்
- தன்னுடைய மாற்றுப்பெண் (மருமகள் அல்லது தன் மகனின் மனைவி)
இப்படியாக. மஹாபாதகங்கள் என்று சொல்லப்பெறும் ஐந்து பாபங்களையும், அவற்றிற்கு சமமான பாபங்களையும் மனு கூறுகின்றார்.
இவை உபபாதகங்கள் என்று சொல்லுகின்றார் மனு.(11.59 - 11.57 )
- பசு மாடுகளை வதைத்தல்
- அருகதை அற்றவர்களுக்கு வேள்வி நடத்துதல்
- தாய், தந்தை மற்றும் தம் குருவினை நிராகரித்தால்
- வேதாத்யாயனத்தை நிறுத்தி விடுதல்
- அக்னி காரியம் என்னும் நித்திய வேள்விகளை நிறுத்துதல்
- தன்னுடைய அண்ணுனுக்கு முன்னர் திருமணம் முடித்துக் கொள்ளுதல்
- தன் தம்பிக்கு (அன்னான் திருமணம் இல்லாமல் இருக்க) திருமணம் முடித்தல்
- கன்னிப்பெண்களை தூஷணம் செய்தல்
- அதிக வட்டிக்குக் கடன் கொடுத்தல்
- (பிரம்மச்சர்ய) விரதத்தை முறித்தல்
- பூஞ்ச்சோலைகள், குளம் ,குட்டைகள், மனைவி , மக்கள் ஆகிய்வற்றை விலைக்கு விற்றல்
- சொந்தக்காரர்களை நிராகரித்தால்
- விற்ககூடாத (அபாயகரமான) பொருட்களை விற்றல்
- பணம் வாங்கி/கொடுத்து கொண்டு வேதங்களை கற்றல் / கற்றுவித்தல்
- இரும்பு உறுகாலைகளை நடத்துதல்
- மற்ற உயிரினங்களுக்கு துன்பம் விளைவித்தல்
- மாந்திரீகம் முதலான க்ஷுத்ர விஷயங்களை செய்தல்
- காட்டில் உள்ள மரங்களை விறகிற்காக வெட்டுதல்
- தன் சுய நலத்திற்காக மற்ற உயிர்களுக்குத் துன்பம் விளைவித்தல்
- ஆடல் பாடல் போன்றவற்றால் ஜீவனம் நடத்துதல்
- திருடுதல்
- உயிரினங்கள், தேவர்கள், முன்னோர்கள் ஆகிய மூவர்க்கும் செய்ய வேண்டிய கடமைகளை நிராகரித்தல்
- தானியங்கள், உலோகங்கள், மற்றும் கால்நடைகளைக் களவாடுதல்
- கள்ளுண்ணும் பெண்களுடன் கலவி செய்தல்
- க்ஷத்திரத்தியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் பெண்களைக் கொல்லுதல்
- நாஸ்தீகம் பேசுதல்
११.६७ ब्राह्मणस्य रुजः कृत्वा घ्रातिरघ्रेयमद्ययोः |
जैह्म्यं च मैथुनं पुंसि जातिभ्रंशकरं स्मृतं ||
11.67 இனி மனு பின் வரும் பாதகங்கள் ஒருவனை, குலம் தாழ்ந்தவனாக ஆக்கி விடும் என்கிறார். இதனை ஜாதி பிரம்ஷ கரணம் என்று அழைப்பர் வடமொழியில்:
- பார்ப்பனர்களை அடித்து துன்புறுத்துதல்
- உண்ணக் கூடாத பொருட்களை உண்ணுதல் / முகர்தல்
- அருந்தக்கூடாதவற்றை (கள்ளு) அருந்துதல்
- மற்றவர்வர்களை ஏமாற்றுதல்
- ஆண்களுடன் உறவு கொள்ளுதல்
வள்ளுவரும் இதே விஷயத்தை:
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
அதாவது தத்தம் வர்ண தருமத்தைக் கை விட்டால், தம் குலத்தை / குடிமை / வருணத்தை இழக்க நேரிடும் என்கிறார். (இதனையே ஜாதி பிரம்ஷ கரணம் என்கிறார் மனு).
११.६८ खराश्वोष्ट्रम् ऋइगैभानाम् अजाविकवधस्तथा |
सम्करीकरणं ज्ञेयं मीनाहिमहिषस्य च ||
11.68 இனி மனு ஷங்கரிகாரணம் எனப்படும் கலப்பு வருணத்தவர்களாக ஆகிவிடும், கர்மங்களை பற்றிக் கூறுகின்றார். கீழ் கூறிய மிருகங்களைக் கொன்றால் ஒருவன் கலப்பு வருணத்தவனாக ஆகி விடுவான் என்கிறார்.
- கழுதை
- குதிரை
- ஒட்டகம்
- மான்
- யானை
- வெள்ளாடு
- செம்மறி ஆடு
- மீன்
- பாம்பு
- எருமை
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
ஜாதி பிரம்சம் , மற்றும் சங்கரி கரணம் ஆகிவிடும் எனும் அச்சத்தால், மனவலிமை உள்ளார்கள் தங்கள் வர்ண தர்மத்தை எக்காலத்திலும் விட மட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.