New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - முனைவர் இராம.மலர்விழி மங்கையர்க்கரசி


Guru

Status: Offline
Posts: 24625
Date:
கொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - முனைவர் இராம.மலர்விழி மங்கையர்க்கரசி
Permalink  
 


கொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும்

 
            கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா? அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா? இக்கேள்வியை முன்வைத்தே ஆய்வுக்கட்டுரை செல்கிறது. பாண்டி நாட்டு இளவரசி எனில்   அவள் கடல் கடந்து எவ்வாறு கொரியா சென்றிருக்கமுடியும்? இதற்கான விடையாகப் பாண்டிய அரசர்களில் கடற்பயணம் மேற்கொண்டவரையும் அதற்கான காரணத்தையும் அறிய வேண்டியது அவசியமாகிறது.
பாண்டிய மன்னர்களின் கடல் கடந்த பயணங்கள் ஏன்?
            நகரங்களைக் கொள்ளையிடுவதற்கு கி.பி. 835ல் முதல் வரகுண பாண்டியன் இறந்த பின்னர் முடிசூடிக்கொண்ட அவன் மகன் சீமாறன் சீவல்லபன் கடல்கடந்து இலங்கை சென்று குண்ணூர், சிங்களம். விழிஞம் எனும் இடங்களில் போர்நிகழ்த்தி வாகைசூடியுள்ளான். “ஈழநாட்டில் முதல் சேனன் (கிபி 822 _ 842) ஆட்சி புரிந்த காலத்தில் படையெடுத்துச் சென்று நகரங்களைக் கொள்ளையிட்டு, புத்த விகாரங்களின் பொற்படிமங்களையும் விலையுயர்ந்த பிற பொருட்களையும் கைப்பற்றி வந்தான். ஆதனால் சிங்களதேசம் தன் செல்வமெல்லாம் இழந்து சிறுமையுற்றது என்று மகாவம்சம் என்னும் இலங்கை வரலாறு கூறுகிறது.  சிங்கள மன்னன் பாண்டியனுடன் தோற்று மலேயாவிற்கு ஓடிவிட்டான் என்ற குறிப்பும் இடம் பெறுகிறது. சின்னமனுhர் செப்பேடுகள் “குரைகடல் ஈழங்கொண்டும்”1 என்று குறித்ததனால் அறியப்படுகிறது.
கடல் கடந்து வந்த படை உதவி
            கிபி 910ல் பராந்தகச் சோழனை எதிர்க்க இலங்கை மன்னன் ஐந்தாம் காசிபனைத் தனக்குத் துணைப்படை அனுப்புமாறு இராசசிம்ம பாண்டியன் கேட்டுக் கொண்டான் அவனுக்கு உதவ இலங்கையிலிருந்து கடல் கடந்து  படைவந்து சேர்ந்தது. அப்படையுடன் பாண்டிய நாட்டுப்படையும் சேர்ந்து வெள்ளுர் என்னுமிடத்தில் பெரும் போரை நிகழ்த்தி அதில் தோல்வியையே தழுவினான் பாண்டிய மன்னன். “நாடிழந்த இராசநிம்ம பாண்டியன் கடல் கடந்து சிங்களம் சென்று அந்நாட்டுமன்னன் உதவியைப் பெரும் பொருட்டு அங்கு தங்கினான் என்று சின்னமனூர் செப்பேடுகள்”2  குறிப்படுகின்றன.
அடைக்கலம் தேடிய கடற்பயணம்
            முதலாம் ராசாதி ராச சோழனிடம் விக்கிரம பாண்டியன் தோல்வியுற்று அடைகலந்தேடி ஈழநாட்டிற்கு ஓடிவிட்டான் கி.பி.1030களில் இது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று “ராசாதி ராச சோழனின் திருக்களர்ச் செப்பேட்டில்”3  குறிக்கப்பட்டுள்ளது.
கடல் கடந்து வந்த படையெடுப்பு
            கி.பி 1167ல் குலசேகரப்பாண்டியன், ராசாதி ராச சோழனின் உதவியுடன் இலங்கையை எதிர்த்தான். சிங்களப்படைக்கும் சோழப்படைக்கும் தொண்டி, பாசிப்பட்டிணம்  ஊர்களில் பெறும் போர் நிகழ இலங்காபுரித் தண்டநாயகனும், சாத்விஐய தண்ட நாயகனுமாகிய சிங்களப்படைத்தளபதியரே வென்றுள்ளனர்.
            பின்னர் ராசாதி ராசன் படைத் தலைவன் திருச்சிற்றம்பலமுடையான் சிங்களப்படைத்தலைவர் இருவரையும் கொன்று மதுரைக் கோட்டையில் யாவரும் காணும்படித் தலைகளை வைத்துள்ளனர். “இச் செய்தி பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு” 4  காட்டிநிற்கிறது.
தோற்றோடிய கடற்பயணம்
            கி.பி. 1180ல் கடையவர்மன் வீரபாண்டியனுக்கு உதவ வந்த ஈழ நாட்டுப்படைகள் தோல்வியுற்று இலங்கைக்கு ஓடிவிட்டன எனும் செய்தி “திருக் கொள்ளம் புதூர்க் கல்வெட்டு”5  காட்டிநிற்கிறது.
 கடல்கடந்த பாண்டியனின் வெற்றி
            “கி.பி 1252ல் பாண்டிய அரசன்  சுந்தர பாண்டியன்  இலங்கையரசனை வென்று அவன்பால் யானைகளையும் பலவகை மணிகளையும் கப்பமாகப் பெற்றான்”6   
ஈழ நாட்டில் கயற்கொடி பொறித்த பாண்டியன்
            கி.பி 1252_1260 சடையவர்மன் வீரபாண்டியனின் மெய்கீர்த்தியில் “திருமகள் வளர்” என்று தொடங்கும் அதில் “கொங்கீழங் கொண்டு”7   எனக் குறிக்கப்பட்டுள்ளது. இம்மெய்க்கீர்த்தியால் இவன் ஈழ நாட்டில் போர்புரிந்து அந்நாட்டரசருள் ஒருவனைக் கொன்று மற்றொருவனுக்கு முடி சூட்டியதும்  திருகோணமலை. திரிகூடகிரி என்பன வற்றில்கயற் கொடிபொறித்ததும் தெரியவருகிறது. 
            இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காகப் பாண்டிய மன்னர்கள் கடந்து சென்றுள்ளனர் இவர்களுடன் அம்மன்னர் தம் மகள் ஒருத்தி கடல் கடந்து சென்றிருக்க வாய்ப்புண்டா?
            அன்றியும், “பாண்டிய நாட்டின் கொற்கைத் துறைமுகத்தில் யவன நாட்டு மீகாமன்களும், அராபிய நாட்டுக் குதிரை வணிகர்களும். முத்துக்கொழிக்குத் நாடெனக் குழுமிய வணிகர்களும், எகிப்தியரும,; கிரேக்கரும், உரோமரும் நடனமாடிய காட்சியை”8  ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர் இவ்வாறு வந்த அந்நிய நாட்டு ஆடவர் எவருடனுடனாவது காதல் வயப்பட்டுப் பாண்டிய இளவரசி சென்றிருக்கக் கூடுமோடூ பின்னர் அவ்வந்நியதேசங்கள் ஏதாகினும் ஒன்றி[லிருந்து கடல் மார்க்கத்தே கொரியா சென்றிருக்க வழியுண்டோ?
உலக வரலாற்றுப் பயண இலக்கியப் பதிவாளர்கள் கோணத்திலும் ஆராய வேண்டியுள்ளது.
            கூன் பாண்டியன்,   நின்றசீர் நெடுமாறன், சுந்தரபாண்டியன் எனும் பெயர்கள் கொண்ட பாண்டிய மன்னன் காலத்தில் சீனப்பயணி யுவான்சுவாங் தமிழகம் வந்துள்ளார். தன் வரலாற்றுக் குறிப்பில் “பாண்டிய நாட்டில் முத்தும் உப்பும் மிகுதியாக கிடைக்கின்றன. பக்கத்துத் தீவுகளிற் கிடைக்கும் முத்துக்களும் இங்கு கொண்டவரப்படுகின்றன. இந்நாட்டில் வேறு விளை பொருட்கள் மிகுதியாக இல்லை. இங்கு வெப்பம் மிகுந்துள்ளது. இங்குள்ள மக்கள் எல்லாரும் கருத்தமேனியுடையவர்களாகவும் மன உறுதியும் போர் வலிமையும் மிக்கவர்களாகவும் இருக்கின்றனர்”9   என்று குறிப்பிட்டள்ளார்.
            இங்கு இருகுறிப்புகள் இடம்பெற்றுள்ளமையை உற்று நோக்குதல் அவசியம். ஓன்று ’பக்கத்துத் தீவுகளிற் கிடைக்கும் முத்துக்கள்’ என்றதனால்துறைமுகம் மட்டுமல்லாது பல்வேறு பக்;கத்துத்தீவுகள் வழியாகவும் கடற்மார்க்கத்தில் செல்லுதற்கு வழியுமுண்டு. அவற்றில் பாண்டிய நாட்டிற்கும் கொரியாவிற்குமான கடல் வழிப்பயணத்தின் சாத்தியக் கூறுகள் எந்தத்தீவிலிருந்து நிகழ்ந்திருக்க முடியும் என்ற கோணத்திலும் ஆராயலாம்.  இவ்விடத்தில் கடற்பயண ஆய்வாளர் ஒரிசாபாலு அவர்கள் தமிழகத்தை குறிப்பாக பாண்டி நாட்டுப் பதியில் உள்ள தீவுகளில் இருந்து ஒரு கடலாய்வை நிகழ்த்தினால் தடம் தெரிய வாய்ப்புண்டு என இவ்வாய்வை உள்வாங்கிய இக்கட்டுரை  ஆசிரியரின் பரிந்துரையாக இக்கருத்து அமைகிறது.
            மற்றொரு குறிப்பு மக்கள் எல்லாரும் மன உறுதியும் போர் வலிமையும் மிக்கவர்களாக இருக்கின்றனர் என்பது. மனவலிமையும் உடல்வலிமையும் உள்ள ஒரு பெண்ணாலேயே கடற்பயணம்  சாத்தியமாயிருக்க முடியும்.
மெகஸ்தனிஸ் என்பவர் எழுதிய கிரேக்க ரோமானியக்குறிப்புகள்
            முதன் முதலில் தமிழகத்தை நேரடியாகக் குறிப்பிடுகின்றன.  அவர் எழுதியுள்ள குறிப்பு விசித்திரக் கவர்ச்சி மிக்கதாக உள்ளது. பாண்டிய அரசி “பண்டையா” என்பவள் ஹெராக்லிஸ் எனும்  கிரேக்கமன்னனின் மகள் என்கிறிர். “பாண்டி நாட்டை ஹெராக்லிஸ் என்பவருடைய மகள் பண்டையா என்பவள் ஆண்டுவந்தாள் என்றும் அவளுக்கு ஹெராக்லிஸ் இந்தியாவின் தென்பகுதியில் கடல் வரையில் பரவியிருந்த நாட்டை அளித்தார் என்றும் அந்த நாடு365 கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்றும், ஒரு நாளைக்கு ஒரு கிராமம் என்ற கணக்கில் கிராமங்கள் அவளுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்றும் அவ்வாறுகட்டத் தவறிய கிராமங்களின் கப்பத்தை வசூல் செய்வதற்கு மற்ற கிராமங்கள் உதவ வேண்டும்”10  என்றும் எழுதியுள்ளார். கிரேக்க மன்னர் மகள் அங்கிருந்தபடியே இங்கு ஆட்சி நடத்தினாள் என்றிலும் எப்போதாகிலும்  ஒரு முறை அவளோ அவளது வாரிசுகளோ பாண்டிய நாடு வந்திருக்க வாய்ப்பு உண்டா? எனயூகித்தாலும் அவ்வகையில் அவ்விளவரசி கொரியாவிற்குச் சென்றிருக்க வாய்ப்புள்ளதல்லவா?
    பாண்டிநாட்டு எல்லை தற்போது சோழ நாட்டுப்பகுதி எனக் கூறப்படும் காவிரி ஆறு வரை இருந்தது என்ற குறிப்பும்; கிடைக்கப் பெற்றுள்ளது. “தெற்கில் பல்லவர்களும் பாண்டியர்களும் தமிழகத்தைப் பங்கிட்டுக்  கொண்டு ஆட்சி நடத்தினார்கள். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருந்ததால் அவர்களுடைய ராஐ;ய எல்லைகள் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தன. ஆனால்  அந்த நாடுகளுக்கிடையே காவிரியாறு எல்லையாக இருந்தது.” 11  என்பதுவே அது. 
            எனவே காவிரியாற்று வரை எல்லையாக இருந்ததனால் காவிரியாறு கடலில் கலக்கும் ப]ம்புகார் நகரத்தின் வழியாக காவிரிப்ப]ம்பட்டினத்துறைமுகம் வழியாக, சோழ நாட்டுத் துறைமுகம் வழியாகவும் கடற்பயணம்’ மேற்கொள்ள ஒரு வழியும் இருந்திருக்கின்றது..
            “பாண்டிநாட்;டின் தலைநகராய், துறைமுகமாய் கடலைத் தொட்டுக் கொண்டிருந்த கொற்கை நகரம் இப்போது கடலிலிருந்து ஒருமைல் தூரத்தில் உள்நாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.  ஓஃபிர் அல்லது உவரி இவ்வூரின் ஒரு பகுதி இப்போதும் இதே பெயாpல் இங்கிருக்கும் மீனவர் கிராமத்தில் மணல் மேடுகள் உள்ளன.  இம்மணல் மேடுகள் ஒருகாலத்தில் தங்கச் சுரங்கங்களாய் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மழைபெய்த பின்னர் கிராமவாசிகள் அங்கு சென்று தங்கப் பொடியை பொறுக்குகின்றனர்”12   என்கிறிர்.  கடல் பயண ஆய்வாளர் நரசய்யர்.
            அக்கால உவரியில் கடற்சுரங்கத்தில் தங்கம்  வெட்டும் பணிக்குவந்த அல்லது கடல்வழியாகத் தங்க வணிகம் செய்ய வந்தவர்களுடன் நட்புகாரணமாகவோ உறவை ஏற்படுத்திக் கொண்டோ சென்ற தமிழச்சி பின்னாளில் கொரிய இளவரசியாகவும் ஆகியிருக்கலாம் தானே?
            பண்டைய தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரையும் அதன் பரந்து விரிந்த பரப்பும்,தமிழகப் பரதவர்களின் கடலோடும் தன்மையும், பண்டைய தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரச் சூழ்நிலையும் தமிழகக் கடல்வணிகம் பழங்காலம் தொட்டு நடைபெற முக்கிய காரணியாகத் திகழ்ந்துள்ளது. என்பது மறுக்கவியலாத உண்மை.
            இவையெல்லாம் யூகங்களே எனக் கொண்டாலும் இலங்கையின் மகாவம்சம் காணும் செய்தி பாண்டியப் பெண் கடல் கடந்து சென்றிருக்கிறிள் என்பதை நமக்கு முற்றிதாரமாகத் தந்து நிற்கிறது. ‘புத்தரின்நிர்வாண காலமாகிய கி.மு 478ல் இலங்கையின் முதல் தமிழ் வேந்தனாம் விசயனென்பான், ஒரு பாண்டியர் குலப்பெண்மணியை மணந்தனனென்றும், ஆண்டு தோறும் தன் மாமனாகிய பாண்டியற்குச் சிறந்த பரிசில் அனுப்பினனென்றும் கூறுகிறது”13 
            தற்போதையத் தமிழகத்து அகழ்வாய்வின் கண்டு பிடிப்புகளாக மதுரை கீழடியில் இந்தியத் தொல்பொருள் துறை ஆய்வு செய்து வருகிறது. அதில் வாணிபத் துறைமுக நகரமாக அப்பகுதி இருந்திருக்க வாய்ப்புண்டு என்றும், வைகை நதிக் கடலோடும் பாதையாக அழகன் குளம் திகழ்ந்திருக்கும் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனைப் பற்றி தற்காலத்து எழுத்தாளரான சு. வெங்கடேசன் “பழம்நூற்களில் குறிப்பிடப்படுகிற இரண்டு பெண்கள் கப்பலில் பயணம் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்துள்ளதாகக் கருதலாம். இலங்கையின் வரலாற்றைக் கூறும் “மகாவம்சம்  இலங்கையை முதன்முதலாக ஆட்சி செய்த  மன்னன் விஐயன் பாண்டிய அரசனின் மகளை மணந்தான் எனக் கூறுகிறது. அசோகப் பேரரசன், இலங்கை மன்னன் தீசனுக்கு அனுப்பி வைத்த பட்டாபிசேக அன்பளிப்புப் பொருட்கள் பற்றி வம்சத்த பாஹாசினி என்ற பாலி மொழி நூல் விரிவான செய்திகளைப் பதிவு செய்கிறது. அதில் ஒரு சாமரை,ஓர் அரச சின்னம், ஒரு வாள், நிழற்குடை, சிவந்த புற்று மண், கங்கையின் புனித நீர், தங்கத் தாம்பாளங்கள் திரைபோட்ட அரச கட்டில், புனித ஒலியைத் தரும் மங்கலகரமான வெண்சங்கு, அன்று மலர்ந்த செந்தாமரைப் போல இளமை இதழ்விரியும் கன்னிகை ஒருத்தி…” என அந்தப்பட்டியல் நீள்கிறது.
            பேரரசன் அசோகனால் அனுப்பப்பட்டவர்களும் பாண்டிய நாட்டின் கடற்கரை வழியாகத் தான் இலங்கைக்கு போயிருக்க முடியும், எனவே அசோகனால் அனுப்பப்பட்ட அந்தப் பெண்ணும். மணம் முடித்து அனுப்பப்பட்ட பாண்டியனின் மகளுந்தான் தமிழகத்தின் துறையில் இருந்து கடல் தாண்டிக் கப்பலில் பயணம் செய்ததாக இலக்கியக் குறிப்புகளிலிருந்து நாம் அனுமானிக்கலாம.;வேறு எந்தப் பெண்ணும் கப்பலில் பயணம் செய்திருக்க வாய்ப்பு இல்லை.”14  என்ற கருத்தையும் இணைத்துக் காண வேண்டியுள்ளது. 
இரட்டை மீன்சின்னம்
            பாண்டிய மன்னர்கள் தமது சின்னமாக இரட்டை மீன்களைத் தேர்வு செய்தனர் மன்னர் ஆட்சிக் காலத்தில் இருந்து தற்போதைய மக்களாட்சிக் காலம் வரை இந்த “.இரட்டை மீன்”15   குறியீட்டுப் பயன்பாடு மக்களிடம் நடைமுறையில் உள்ளதையும் அறியலாம்.
கல்வெட்டில் மீன் சின்னம்
            பாண்டியர் இலச்சினையான இருகயல் செண்டுடன் கூடிய கல்வெட்டு “திருவண்ணா
மலையில் காணப்படுகிறது. இதன் காலம் கி.பி 13ம் நூற்றாண்டு”16    என்கின்றனர்
காசில், நாணயங்களில் மீன் சின்னம்
சங்க காலப் பாண்டியர் காசுகளில் பாண்டியரது குலச் சின்னமான மீன் பல்வேறு  நிலைகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
“காசு 1) பின்பக்கத்தில் ஒற்றைமீன் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.
காசு 2) பின்பக்கத்தில் வேலியிட்ட மரமும் பக்கத்தில் மீன்குறியிட்டுச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது.
காசு 3 காசின் பின்புறம் மீன் குறியீட்டுச் சின்னம் உள்ளது. இந்தக் காசின் காலம் கி.மு. 2ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியீட்டு இருக்க வேண்டும்”17    
இவ்வாறு சங்ககாலப் பாண்டியர் கால நாணயங்களில் குறிக்கப்படுவது. தனி மீன் சின்னமாகவே உள்ளது. 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
RE: கொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - முனைவர் இராம.மலர்விழி மங்கையர்க்கரசி
Permalink  
 


மதுரை நாயக்கர் காசுகளில் இரட்டை மீன் சின்னம்
            மதுரை நாயக்கர் காசுகளில் விஸ்வநாத நாயக்கர் வெளியிட்டப்பட்ட(கி.பி 1529_ 1564) காசில் தான் இரட்டை மீன் சின்னம் நடுவில் செண்டுடன் காணப்படுகிறது. “காசு 1. காசின் முன்பக்கத்தில் மனித உருவமும்  பின்பக்கத்தில் இரண்டு மீன்கள் நடுவில் செண்டும் மேலே பிறையும் காணப்படுகின்றன. காசின் விளிம்பைச் சுற்றிலும் விஸ்வநாதன் என்ற தமிழ் பெயரில் ‘ ஸ் வ’ என்ற கூட்டெழுத்து மட்டும் கிரந்த எழுத்தில் உள்ளது”18.  
பிற்காலச் சோழர்களின்காசுகளில் மீன் சின்னம்
            பிற்காலச் சோழர்களின் காசுகளிலும் இரட்டை மீன் சின்னம் உள்ளது வியப்பளிப்பதாக உள்ளது. கி.பி. 985 _ 1014ம் நூற்றாண்டில் கிடைத்த ஐந்து காசுகளில் மூன்றில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
            “காசு 3 ல் முன்பக்கத்தில் நடுவில் ஓருமீனும் இடது நோக்கி அமர்ந்திருக்கும்  புலியும் காணப்படுகிறது.
            காசு 4ல் முன்பக்கத்தில் வில்லும்  வலது பக்கத்தில் புலி இரண்டு மீன்கள், பொறிக்கப்பட்டுள்ளது.
            காசு 5ல் முன்பக்கத்தின் நடுப்பகுதியில் விளக்கு. புலி இரண்டு மீன்கள் வெண் கொற்றக் குடை இரண்டு வெண் சாமரங்கள் உள்ளன.”19  
            இங்கு சோழர்களின் நாணயங்களில் மீன் சின்னம் இடம் பெற்றிருப்பது அவர்களிடையே இருந்த நட்புரிமை காரணமாக இருக்கக்கூடும்.
பிற்காலப் பாண்டியர்கள் காசுகளில் மீன் சின்னம்
            பனிரெண்டாம் நூற்றாண்டு என்று கருதப்படும். பிற்காலப் பாண்டியர்களின் காசுகளில் “காசின் முன்பக்கத்தில் செங்குத்தாக மீன்களும் நடுவில் செண்டு ஒன்றும் மேலே பிறை ஒன்றும் உள்ளது. பின் பக்கத்தில் சுந்தர பாண்டியன்”20 என்று மூன்று வரிகளில் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. 
            இக்காசில் உள்ள சின்னம் போன்றே நாயக்கர் காலக் காசுகளில் இடம் பெற்றிருப்பதால் பாண்டியர்க்குப் பின் அரச பரிபாலனைக்கு வந்த நாயக்கர்கள் பாண்டியர் மரபை அப்படியே தொடர்ந்திருக்கக் கூடும்.
கோயில்களில் பாண்டியரின் மீன் சின்னம்
            தமிழகத்தில் உள்ள “சிதம்பரம் கோயிலின் தெற்கு கோபுரத்தில் இரட்டை மீன் சின்னம் நடுவில் செண்டுடன் பொறிக்கப்பட்டுள்ளது.”21  பாண்டியர் இலச்சினை என்பதாகவே தரப்பட்டுள்ளது.
பாண்டியர்களின் கொடியும் முத்திரையும் மீனே
            பாண்டியர்கள் மீன் கொடியையும் முத்திரையும் தேர்வு செய்ததற்குத் தொன்மமாக
             தசாவதார மச்சாவதரத்தைச்; சுட்டுவர். இதற்கான இலக்கியத்தரவு ஏதுமில்லை. மீனைத் தேர்வு செய்ததற்கு “மீனின் இயற்கையாக அமைந்த அரிய உறுப்பின் மாட்சியை வைத்தே மீனைச் சின்னமாக ஏற்றனர் எனத் தெரிகிறது.மீன் குஞ்சுகள் தாய்மீனின் அண்மையில் நின்று இரைதேடும். தாய்மீனோ எப்போதும் தன் குஞ்சுகள் மீது கண்வைத்து நிற்கும், அரசனும் மக்களை அவ்வாறு காப்பான் என்றே மீனைத் தேர்வு செய்தனர்”22 என்றும் கருதப்படுகிறது.  
            மேலும் மீன் சின்னம் ஒற்றை மீனா இரட்டை மீன்களா என்ற கேள்வியும் வலுப்பெறுகிறது. முற்காலப் பாண்டியர் பதிவுகளாக ஒற்றை மீனையும், பிற்காலப் பாண்டியர் பதிவுகளாக இரட்டை மீன்களையும் கொண்டிருந்தனர் என்று கல்வெட்டுகளிலும் நாணயங்களில் கிடைக்கப் பெறும் காலத்தின் பதிவிற்கேற்ப கருதவும் முடிகிறது.
            இந்த இரட்டை மீன் சின்னத்தை உலகின் வேறு எங்கும் பயன்படுத்தியுள்ளனரா, பாண்டியர் மட்டும் தான் பயன்படுத்தினரா எனக் கேட்டால் “கிறித்துவின் முன்னுள்ள ஆபிரகாமின்  வழித் தோன்றல்கள் புதைக்கப்பட்ட கல்லறைகளில் இரு மீன்களின் உருவம் தீட்டப்பெற்றிருக்கிறது. கி.பி 200ம் ஆண்டிலுள்ள இலினிசியா அமியா என்பவரின் கல்லறை மீது இரு மீன்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது”23 
            இருப்பினும்  “இளவரசன் சடவர்மன் வீர பாண்டியன் _II ஈழ நாட்டை வென்று இலங்கை மன்னனைக் கொன்று அவன்  படையையும், தேரையும் கருவூலங்களையும் அரசக் கட்டிலையும், மணி முடியையும். செங்கோலையும், கருத்து மாலைகளையும் பிறவற்றையும் கவர்ந்து கொண்டு தனது இரட்டைமீன் பொறித்த மீன் கொடியைத் திரிகோண மலையில் பொறித்தான்” என்று குறிப்புள்ளதும், சங்க இலக்கியமான கலித்தொகையிலும்.
            “புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர்கெண்டை வல்லினான் வணங்கிய வாடர்ச் சீர்த் தென்னவன்”24 அவை கெண்டை மீன்கள் என்பனவும் அறிய வருகின்றன.
            “பாண்டியன் வடஇந்தியாவை வென்று இமயத்தின் மீது குடையை நாட்டினான், இணைக்கயல்கள் தீரட்டிய கொடியைப் பொறித்தான் என்றும்தமிழ்ப்புலவர்கள் மன்னர்களும் புகழ் மாலை கூட்டுவது உண்டு.  அந்தப் பாக்களில் எல்லாம் இணைக் கயல்கள் என்றே  குறிக்கப்பட்டுள்ளன.  மேலும் வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர் ஈராசு அடிகளாரும் தம் ஆய்வுக் கண் கொண்டு ஆராய்ந்து பாண்டியர்களின் சின்னம் இரு மீன்களே என்று கூறியுள்ளனர்.”25    என்றதனாலும் பாண்டியர்கள் தம் கொடியில் இருமீன்கள் பொறித்திருப்பது தௌpவாகிறது.
            கடல்கோளுக்கு முந்தைய பாண்டிய நகரமாயின் வைகை நதிக் கடலோடும் பாதையான இப்பகுதி வழியாவும் சென்றிருக்கக்கூடும்
 
இது காறும்கண்டவற்றில் பின்வரும் முடிவுகள் பெறப்படுகின்றன.
1.       கொரிய இளவரசி பாண்டிய நாட்டு இளவரசியாயின் அவள் கடந்து               செல்லுதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டன.
2.       நகரங்களைக் கொள்ளையிடுதல், அடைக்கலந்தேடுதல்,  படை உதவி,          வெற்றிக் கொடி நாட்டல் எனப் பல்வேறு காரணங்களுக்காகப்          பாண்டிய மன்னர் கடல்கடந்து சென்றனர் அவர்தம் புதல்வியாகப் போக             வாய்ப்புண்டு
3.       கொற்கைத் துறைமுகத்திலிருந்து வந்த பல்வேறு நாட்டு மிகாமன்,      வணிகர்கள் இவர்களுள் யார் மீதேனும் காதல் வயப்பட்டுச் சென்றிருக்கக்    கூடும்.
4.       இலங்கைக்கு மணமுடித்துக் கொடுத்த பாண்டியனின் மகளினது வாரிசுகள் கொரியாவிற்குச் சென்றிருக்க வாய்ப்புகள் மிகுதி.  கடல்வழிப்பாதை மிக     எளிது.
5.       மெகஸ்தனிஸ் குறிப்பின் வழி கிரேக்க மன்னனின் மகளும் பாண்டிய            அரசியுமாக நியமிக்கப்பட்ட “பண்டையா” என்பவளின் வாரிசுகளாக இருந்து             பாண்டிய நாட்டில் சுற்றுலா வாழ்க்கைமுறை  கைவரப்பெற்று பின் சென்றவள்          ஒருத்தி கொரிய இளவரசியாக ஆட்சி புரிந்திருக்கக் கூடும்.
6.       பாண்டியர்தம் எல்லை காவிரியாறு வரை இருந்துள்ளதனால் சோழ நாட்டுத்      துறைமுகம் வழியாகவும் சென்றிருக்க வாய்ப்புண்டு.
7.       கடல் கோளுக்கு முன்பிருந்த பாண்டிய நகரமாயின் வைகை நதிக் கடலோடும்      பாதையான அழகன் குளம் வழியாகவும் சென்றிருக்கக் கூடும்.
8.       பாண்டியர்கள் தம் கொடியில் இருமீன்கள் பொறித்திருப்பது தெளிவாகிறது.            அதிலும் இரு கண்கள் காணப்படவேண்டும் என்றும் அத்துடன் மீன்கள்     செங்குத்தாய் நிற்பது போல தீட்டப்பட்டிருப்பது பாண்டிய நாட்டின்         வலிமையையும் உறுதியையும் காட்டிநிற்கிறது.
9.       பாண்டிய மன்னர்களின்  சொந்த முத்திரையில் செங்குத்தாய் நிற்கும் இரு     மீன்கள் பொறிக்கப் பட்டு உள்ளதே தெளிவு. 
10.    கொரிய இளவரசியோடு இணைக்கப்பட்டுள்ள இரட்டை மீன் சின்னத்தில்   மீன்கள் செங்குத்தாய் இருப்பின், அவையும் கெண்டைமீன்களாக இருப்பின்        அது பாண்டியர்; மீன் சின்னம் தான் என உறுதியாகக் கொள்ள முடியும்.
 
அடிக்குறிப்புகள் & துணைபுரிந்த நூல்கள் 
1.       பாண்டியர் வரலாறு. - தி. வை சதாசிவப் பண்டாரத்தார்            (பழையநூல் பதிப்பு விவரங்கள்,   கிடைக்கப்பெறவில்லை)
2.       மேலது பக்கம் 81
3.       மேலது பக்கம் 90
4.       மேலது பக்கம் 98
5.       மேலது பக்கம் 101
6.       மேலது பக்கம் 129
7.       மேலது பக்கம் 135
8.       கோநகர் கொற்கை _ பக்கம் - எiii அ. இராகவன், (கலை           நூற்பதிப்பகம்      பாளையங்கோட்டை, திருநெல்வேலி _ 1971. 
9.       பாண்டியர் வரலாறு _ பக்கம் - 41
10.    தென்னிந்திய வரலாறு _ பக்கம் - 42 (வரலாற்றுக்கு       முற்பட்டகாலம் முதல்      விஐய நகரப் பேரரசின்   வீழ்ச்சி         வரை  முதற்பகுதி  _ கே ஏ.நீலகண்ட        சாஸ்திரி. தமிழ்நாட்டுப்      பாடநூல் நிறுவனம்,முதற்பதிப்பு ஜூலை 1973)
11.    தென்னிந்திய வரலாறு _ பக்கம் - 7 (கே ஏ நீலகண்ட சாஸ்திரி.             தமிழாக்கம், மு.ரா பெருமாள், முதலியார்  தமிழ்நாட்டுப்             பாடநூல்        நிறுவனம்   ஜூலை 1973)
12.    கடல்வழிவணிகம் _ பக்கம்- 63;. இணையம் வழியாகப் பெற்ற            தகவல்
13.    பாண்டியர் வரலாறு _ பக்கம் - 3
14.    ஆனந்த விகடன் தமிழ்வார இதழ் 9.9.2015.(வைகை நதி          நாகரிகம்        (மதுரை மண்ணுக்குள்ளே… ரகசியங்கள் ஆதி நிலம்)             சு. வெஙகடேசன்
15.    சுடிதார் அச்சில் இரட்டை மீன் சின்னம்
16.    தமிழ்நாட்டு வரலாறு _ பாண்டியப் பெருவேந்தர் காலம் பின்   அட்டை தமிழ்           வளர்ச்சி இயக்ககம் தமிழக அரசு   சென்னை   2000.
17.    தமிழ்காசுகள் பக்கம் - 3 (சங்க காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை)          ஆறுமுக சீதாராமன் தனலெட்சுமி பதிப்பகம், தஞ்சாவூர் 2005
18.    மேலது பக்கம் 23
19.    மேலது பக்கம் 12 $ 13
20.    மேலது பக்கம் 15
21.    பாண்டிய வரலாறு _ பக்கம் 8 தி. வை சதாசிவப் பண்டாரத்தாh 
22.    கோநகர் கொற்கை _ பக்கம் - 130  அ. இராகவன் (கலை நூற்பதிப்பகம்      பாளையங்கோட்டை,  திருநெல்வேலி 1971.)
23.    மேலது பக்கம் 23
24.    கலித்தொகை 104 – 3 $ 4 வரி
25.    கோநகர் கொற்கை_ பக்கம் 139.
 
-       முனைவர் இராம.மலர்விழி மங்கையர்க்கரசி


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard