லிங்கம் என்பது பிரபஞ்சத்தின் வடிவம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஏனெனில் லிங்கத்தில் உள்ள 5 அடுக்குகள் பிரபஞ்சத்தில் உள்ள 5 அடுக்குகளையே குறிக்கின்றன...
ஞானியர்களில் இரண்டு வகை உண்டு ஒன்று அண்டத்தை பேரண்டத்தை அறியும் பறந்த நிலை மற்றொன்று தன்னில் ஒடுங்கி புலனில் ஒடுங்கி அணுவில் ஒடுங்கி அதற்குள்ளும் ஒடுங்கும் நிலை ஆனால் இவை இரண்டுமே ஒன்றுதான் ஏனெனில் இரண்டின் அமைப்பும் ஒன்றுதான் இரண்டின் முடிவும் ஒன்றுதான் இதை தான் அணுவும் அவனே அண்டமும் அவனே என்றார்கள்.....
திருமூலரே லிங்கம் பற்றி 3 கருத்துக்களை முன் வைக்கிறார் மற்ற சித்தர்களை விட திருமூலர் கருத்தை யாரும் எதிர்த்து வாதம் செய்வதில்லை ஏனெனில் வேதங்கள் முழுவதும் கற்று அதன் வழியே தனது கருத்துக்களை வரையறுத்தவர்...
அதாவது அணுவின் ஒரு துகளை ஆயிரம் கூறிட்டு பிடித்தால் அதுவே லிங்கம் . அதாவது அணுவின் கூறுகளான எலக்ட்ரான், புரோட்டான், பாசிட்ரான், போஸான் என. இதுவரை 18 துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இந்த 18 யும் உடைக்க முடியும் என்கிறது அறிவியல் அப்படி ஒரே ஒரு புரோட்டானையோ போஸானையோ 1000 கூறாக உடைத்தால் அதுவே லிங்கம்...