திருவள்ளுவனின் சாதி என்ன?
திருவள்ளுவர் தனது ஊரையோ, சாதியையோ, மொழியையோ, நாட்டையோ, காலத்தையோ, எந்த வொரு குறளிலும் குறிப்பிடாமல் மறைத்துவிட்டார்.
ஆய்வாளர்கள் அவரவர் அவரவர் அறிவுக்கு எட்டியபடி அவரை சாதியால், மதத்தால், மொழியால், நாட்டால் அடையாளப்படுத்த முற்படுகின்றனர். சிலர் ஒருபடி மேலே போய் திருவள்ளுவரின் பிறந்தநாள் எல்லாம் கணித்துக் குறித்துக் கொடுத்துள்ளனர்.
வள்ளுவன் என்ற பெயரைக் கொண்டு திருவள்ளுவர் வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றும் சிலர் திருவள்ளுவருக்குச் சாதிச் சான்றிதழ் வழங்குகின்றனர். ஆனால், திருப்பரங்குன்றத்தில் திருவள்ளுவரைப் பண்டாரம் சமுகத்தினர் தங்களது குலதெய்வமாகப் பரம்பரைபரம்பரையாக வழிபடுகின்றனர். இவர்களைப் பொறுத்தமட்டில் திருவள்ளுவர் பண்டாரம் சமுகத்தைச் சேர்ந்தவர்.
தெய்வப்புலவர் குறளில் கூறாமல் மறைத்த சாதி, மதம், மொழி, நாடு இவற்றை நாமும் நமது சொல்லிலும் செயல்களிலும் மறைத்துக் குறள் கூறும் வழிநின்று வாழ்வதே நாம் திருக்குறளைப் போற்றும் வழியாகும்.
அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி.காளைராசன்