New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு


Guru

Status: Offline
Posts: 24811
Date:
வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு
Permalink  
 


 

வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு!!! (Post No.4683)

dea65-vairamuthu2bvalluvar2bganga2bpayan

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 7-17 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4683

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

ஷாக்கிங்! ஷாக்கிங்!!

 

வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு!!!

 

ச.நாகராஜன்

 

87144-vairamuthu252c2ba2bkalam252c2bnew2

1

நிஜமாகவே ஏமாந்து போனேன். நண்பர் வைரமுத்துவிடம் வைரம், முத்து இன்ன பிற ரத்தினங்கள் இருக்குமோ என்று ஒரு நப்பாசை இருந்தது.

ஆனால் ஷாக்கிங், ஷாக்கிங்! இவரிடம் வைரமும் இல்லை; முத்தும் இல்லை; வெறும் ஓட்டாஞ்சல்லி தான் இருக்கிறது என்று தெரிந்து விட்டது!

ஆண்டாள் தமிழை ஆண்டாள்;

தமிழ் இதயங்களை ஆண்டாள்! உண்மைத் தமிழர்களின் இதயங்களைத் தான் சொல்கிறேன்.

போலிகளை அவள் வேண்டாள். (வேண்ட மாட்டாள்!)

 

 

2

மனிதர் ‘பெய்யெனப் பெய்யும் மழை என்று எப்படி குமுதத்திற்குத் தலைப்புக் கொடுத்தாரோ தெரியவில்லை.

ராங் டைடில்!

“உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்

தன்னம்பிக்கை தளரவிடாதே

இரட்டைப் பேச்சுப் பேசும் உலகம்

மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே!

 

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு

உலகின் வாயில் இரட்டை நாக்கு

எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்

உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது!

என்று 22-5-1997 குமுதம் இதழில் ‘பெய்யெனப் பெய்யும் மழை கவிதைத் தொடரில் எழுதிய போது மயங்கிப் போனேன்.

மனிதர் உண்மையத் தான் சொல்கிறாரோ என்று!

“இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்

இலக்கியம் இல்லை லேகியம் என்றது…

எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்

வடுக பட்டி வழியுது என்றது

 

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்

காதில்பூ வைக்கிறான் கவனம் என்றது

விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன்

குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது

 

உலகின் வாயைத் தைத்திடு; அல்லது

இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு

உலகின் வாயைத் தைப்பது கடினம்

உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்

 

   _ 22-5-1997 குமுதம் இதழில் வெளியான 68 வரிகள் கொண்ட உலகம் என்ற கவிதையில் சில வரிகள் மட்டும் மேலே தரப்பட்டுள்ளது.

 3065b-andal2bunjal252c2bgeetha2bvasudeva

அடடா, எவ்வளவு ‘இழிமொழி எல்லாம் அனாவசியமாக வாங்கி இருக்கிறார் என்று தோன்றியது.

 

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் உலகம் அவரை ஏன் உலகம் இப்படிப் பழிக்கிறது என்று எனக்குப் புரிகிறது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகார்; வையத்து

அலகையா வைக்கப்படும்

 

ஆம் இவரை உலகம் அலகையா – பேயாக வைத்து விட்டது இன்று!

சூடிக் கொடுத்த நாச்சியாரை உலகம் கொண்டாட, இவர் தன் வழி தனி வழி என்றார். உலகம் செய்ய வேண்டிய மரியாதையை இன்று செய்து விட்டது!

 

 

3

இவர் ஆண்டாளைப் பற்றிச் சொன்னதற்கு பக்தி லெவலில் சென்று மறுப்புரை கொடுக்கிறார்கள்.

அந்த அளவுக்கு இவர் தகுதியானவர் தானா! இல்லை என்று அல்லவா தோன்றுகிறது!!

இலக்கிய மட்டத்தில் கூட இவருக்கு இவ்வளவு மறுப்புரை தேவை இல்லை; வரலாற்று ரீதியாக கூட இவருக்கு இவ்வளவு ஆதார உரைகள் தேவை இல்லை.

தமிழ்ப் பைத்தியம் என்று நினைத்திருந்தேன்; ஆனால் தமிழைத் தவற விட்டு விட்டார் என்பது இப்போது எனக்குப் புரிகிறது!

 

 

இவர் சேர்ந்த இடமே சரியில்லை.

போலித் தமிழில் கொச்சை வார்த்தை பேசுபவர்களிடம் இச்சகம் கொண்டவர் இவர்; இச் ச(ஜ)கத்தை அவர்களிடம் கண்டவர் அவர்.

 

‘இவர் யார் என்றால் மனைவி; அவர் யார் என்றால் துணைவி;

‘இவள் யார் என்றால் துணைவிக்குப் பெண்; உனக்கு யார் என்றால் துணைவிக்குப் பிறந்த பெண்.

‘போதை முடிவுக்கு வந்து விட்டதா?

 

இப்போதைக்கு முடிவு தான்! (இப்போதைக்கு – அதாவது தற்காலிகமாக இப்போதைக்கு – மதுவுக்கு முடிவு தான்!)

இப்படி கொச்சையாகப் பேசி சொந்தக் கூட்டத்திடம் கை தட்டல் வாங்குபவர்களின் சேர்க்கை இவரை என்ன செய்யுமோ அதைச் செய்து விட்டது.

வேசி; தாசி! அடடா, என்ன தமிழ் அறிவு!

வேசிக்கும் தாசிக்கும் “இன்னிசைத் தமிழை எளிமை செய்தவர் தரும் விளக்கம் புல்லரிக்க வைக்கிறது.

 

 1ce05-img_7571.jpg?w=792&h=1056

4

 

இல்லாத ஒரு ஆய்வுக் கட்டுரையைக் கேடயமாக்கி தமிழையும் தமிழ்ப் பெண்ணையும் இழிவு படுத்திய இவருக்கு மறுப்புரையே தேவை இல்லை; இவரைப் பற்றிய மதிப்புரை தான் தேவை!

 

அதுவும் கிடைத்து விட்டது!

உலகளாவிய விதத்தில் இப்படி இழிவு பட்ட ஒரு கவிஞரை இனிமேல் தான் தமிழகம் காண வேண்டும்.

காணாது.

 

 எட்டிய மட்டும் காதைக் குடைந்து தோண்டி காதை அறுப்பதற்கு வில்லிப்புத்தூரார் இன்று இல்லை.

ஆகவே இவர் கவிஞர் என்று சொல்லிக் கொள்ளலாம். வில்லிப்புத்தூரிலும் சென்று பேசலாம் – வீ ரமாக, கோரமாக!

இவர் தமிழை இன்னும் எளிமைப் படுத்தினால்! ஒரேயடியாக தமிழ் …. !!!!

 

 

5

அது சரி, தினமணி வைத்தியநாதனுக்கு என்ன ஆயிற்று!

(திரு ஏ.என்.எஸ், எனது தந்தையார் இருந்த ஸ்தானத்தில் இப்படி ஒருவரா!)

 

ஐயகோ! கலியின் கொடுமையா? காலிகளின் சேர்க்கையா!

தினமணி என்ற ஒளி கொடுக்கும் சூரியனை இருள் கவ்வச் செய்து விட்டாரே! தினமணிக்கு கிரகண காலம்!!

 

a06a6-andal2bby2bmangalam.jpg?w=600

6

ஒரே ஒரு வழி தான்! இவர்களை இனம் கண்டு கொண்டாயிற்று!

இவர்களை ஒதுக்குங்கள்; உள்ள வேலையைப் பாருங்கள்!

“அப்படி இருந்தால் அதுவும் தப்பு

இப்படி இருந்தால் இதுவும் தப்பு

கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்

தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்

என்று எழுதி இருக்கிறார் அல்லவா! (உலகம் கவிதை வரிகள்)

இப்போது புரிந்து விட்டது இதில் கூறியுள்ள ஜந்து யார் என்று!

“வைரமும் தப்பு; முத்தும் தப்பு – இவர்

தரமும் தப்பு; தமிழும் தப்பு

 

 

7

குரைப்பது கடிக்காது!

தெய்வீக ஆண்டாளும் சேமமுற இருப்பாள்; தெய்வத் தமிழும் தனது தெய்வத் தன்மையுடன் சிறந்து வாழும்.

 

 

1f395-img_7570.jpg?w=600

8

ஒன்றும் தெரியாதார் உச்சத்தில் ஏறினார்

    அன்றும் இராவணன் உண்டு; இரண்யன் உண்டு

நன்று செய்யாதார் நலிந்தே செத்தார்

    நாயகன் தோன்றுவான் யுகம் தோறும்!

 

இப்போதைக்கு இவர் போதையில் ஆட்டம்

     போட்டாலும் பொட்டென வீ ழ்வார்

எப்போதைக்கும் வெல்வது அறம் தான்!

      ஆண்டாள் என்றுமே ஆள்வாள்!!

6865f-andal2bbommai252c2bs2bramanujadasa

***



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard