இன்றைய காலகட்டத்தில் திருக்குறளை அறியாதார் அகிலத்தில் யாருமில்லை எனலாம், இந்திய மொழிகள் 16 உட்பட உலக மொழிகள் ஏறத்தாழ 83 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு உலகில் மொழிமாற்று செய்யப்பட்ட நூல்களிலே மூன்றாவதாக இடம்பிடித்திருப்பது நம் திருக்குறள். திருக்குறளை இயற்றியவர் தான் திருவள்ளுவர், இது தெரியாதா ?
சரி, திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவரென எந்த பனையோலை குறிப்பில் எழுதி கையெழுத்திட்டுள்ளார் திருவள்ளுவர்..? முதலில் திருவள்ளுவர் கைப்பட இயற்றிய எந்த ஒலையும் நம்மிடம் இல்லை, திருக்குறள் மற்ற மற்ற மாணவர்களால் அல்லது பின்பற்றாளர்களால் எழுதிய பிரதிகளே நம்மிடம் உள்ளது. திருவள்ளுவர் கரங்களால் தீட்டிய ஒரிஜினல் சுவடி யாரிடமும் இல்லை. ஒரு பனை ஓலை சுவடியின் ஆயுட்காலம் 40 வருடங்கள் தான் அதற்கு பிறகு அது செல்லரித்து அழிந்து விடும்.
இப்போது நமக்கு கிடைத்த சுவடிகள் எந்த காலத்தை சேர்ந்தவை எனவும் அதனை மறுபிரதி எடுத்து எழுதியது யாரெனவும் தோராய கணக்குகளை மட்டுமே ஆய்வாளர்கள் நிர்ணயித்துள்ளார்கள்.
பிறகு எப்படி அதனை இயற்றியது இன்னார் என நமக்கு தெரிந்திருக்கிறது..? அது ஔவை, கபிலர் போன்றோர் தமது நூல்களிலே எழுதி வைத்த குறிப்புகளை வைத்து நமக்கு அறிவிக்கப்படுகிறது..ஒன்றிற்கும் மேற்பட்ட சங்க கால புலவர்களின் குறிப்பில் இது காணப்படுவதாலும் ஔவை என்கிற பெருமூதாட்டி வள்ளுவரை மதித்து " அணுவைத் துளைத்தோள் கடலைப் புரட்டி குறுக்கத்தரித்த குறள் " என திருக்குறளுக்கு புகழ்மாலை பாடியிருப்பதாலும் , அதில் அடங்கியிருக்கும் கடல் போன்ற அகன்ற ஞானத்தை கொண்டிருக்கும் வார்த்தைகளை மனமார பாராட்டியிருப்பதாலும் திருக்குறளை இயற்றியவர் வள்ளுவர் எனவே நம்புவோம்.
திருக்குறள் என்றால் என்ன ?
உண்மையில் சொல்லப்போனால் " குறள் " என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றே இதுவரை யாரும் கண்டறியவில்லை. பிங்கல நிகண்டுவிற்கு முற்பட்ட ......நிகண்டுவிலும் குறள் என்கிற வார்த்தைக்கான அர்த்தம் இல்லை , 3 லட்சத்திற்கும் அதிகமான வார்த்தைகள் கொண்ட தனித்தமிழ் அகராதியில் கூட குறளுக்கான அர்த்தம் " ஈறடி வெண்பா " என்றே எழுதப்பட்டுள்ளது. திரு என்பது மதிப்பு நிறைந்த எல்லா விஷயங்களுக்கும் திரு என்கிற வார்த்தை கூறுவது தமிழர் மரபு.
தமிழறிஞர்களின் பெரும்பாலானரின் கருத்து - இரண்டே அடிகளுடைய பாடல் குறள் வெண்பா என்கிற பண்டைய தமிழ் இலக்கண விதிகளுக்குட்பட்டு எழுதப்பட்டுள்ளதால் இது குறள் எனப்படுகிறது என்பதே. ஆனால் ஒரு விஷயத்தை கவனிப்போமேயானால் பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உள்ள எந்தவொரு இலக்கண மரபும் , கட்டளைகளும் திருக்குறளில் பின்பற்றப்படவே இல்லை..அதற்கு காரணம் திருக்குறள் என்பது தொல்காப்பியத்திற்கு முற்பட்டது. ஆதி இலக்கண நூலான அகத்தியம் நம்மிடையே இல்லாமல் அழிந்து போனதால் அப்போதைய இலக்கண, இலக்கிய நெறி யாதென நம்மால் அறியமுடியவில்லை.
ஆனால் குறள் என்கிற வார்த்தைக்கு வேறு அர்த்தம் இருப்பதாக நமக்கு தோன்றுவது , குறளி என்கிற வார்த்தையில் இருந்து குறள் தோன்றியிருக்கலாம் என்பதே.. பொதுவாக கிராமங்களில் பார்த்திருப்போம் குறளி வித்தைக்காரர்கள் மக்களை மிரட்டி தெருவில் நிற்க வைத்து வித்தை காண்பிப்பார்கள், ஆனால் தற்காலத்திய குறளி வித்தைக்காரன் போல அந்தக்கால வித்தைக்காரன், ஜக்கம்மா சொல்றா, பச்சையம்மா சொல்றா , கண்ணால் கண்டதை நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான், கண்ணால் கண்டதுக்கு காசு தராதவன் போகும் வழியில் மண்டை வெடிச்சி சாவான் என்பன போன்ற துர்போத வார்த்தைகளை கூறமாட்டார்கள். நல்வார்த்தைகள் மட்டுமே கூறுவார்கள்.
மக்களிடம் இந்த குறளிக்கூத்திற்கு அதீத வரவேற்பு இருப்பதை தவறாக பயன்படுத்தி காசு பறிக்க நினைத்தவர்களே, நாங்கள் ஊர் ஊராய் சுற்றி மயானங்களை தாண்டி வருகிறோம், எங்களிடம் சக்தியுள்ளது நாங்கள் பேய்கள் ஓட்டுவோம், பிசாசுகளை பிடித்து குப்பியிலாக்குவோம் என பலகீன மனிதர்களின் மதியை மயக்கி உளவியல் ரீதியாக மனிதரின் பயத்தை அதிகப்படுத்தி, பின்னாளில் பில்லி சூனியம் ஏவல் சேட்டை செய்பவர்களாக உருவெடுத்தார்கள் , நல்லவேளை நம்ம வள்ளுவர் நல்லவர்... அதுபோல எல்லா பறையர்களும் குறிளிவித்தை காட்டுபவர்கள் அல்லர்.. நமது கிராமங்களில் இன்றும் ஒரு சொலவடை உண்டு அதாவது " பள்ளுபற பதினாறு சாதி " என்று - பறையர் , பள்ளரில் கூட உட்பிரிவுகள் உண்டு அவரவர் தகுதிக்கும் வாய்ப்புகளுக்குமேற்பு வெவ்வேறு தொழில் செய்தவர்கள்... ஊர்க்காவல் படை, விவசாயம், குறளிக்கூத்து, மாந்திரீகம், வாணிகம், நெசவு , கால்நடை வளர்ப்பு என அவர்களது தொழில் பலதும் உண்டு , இதில் நம் வள்ளுவர் கல்வியில் கரைகண்டவராய் இருந்திருக்கலாம், உலகம் போற்றும் ஒரு நூலை எழுத சிந்தனை மிக முக்கியம் ஆதலால் புலமைக்கு இடையில் வேறு தொழிலும் அவர் செய்திருக்கலாம்.
எல்லா க்ஷத்திரியரும் படை வீரனல்லன், எல்லா பிராமணனும் வைதீக வாழ்வு வாழ்பவனல்லன் ஆனால் எப்படி நாடக நடிகர்களை ஓரம்கட்டி சினிமா நடிகர்கள் நம் ரசனையில் புகுந்தார்களோ அதுபோலவேதான் பறையர் பள்ளர் கட்டிய கூத்துக்களை ஓரம்கட்ட பிராமணர்களின் ஆரிய கூத்து வந்தது, பிராமணர்களும் ஆடிப்பாடி தான் மன்னர்களின் அரசவையில் புகுந்தனர்.. என்ன ஒரு வித்தியாசம் பிராமணர்களின் ரூபம் அரசர்களை கவருவதாக நேர்த்தியாக இருந்தது, அவர்களது கதைகள் பக்தி புராணங்களாகவும், அலங்கார வார்த்தையுடைய பாடல்களாகவும், தடாபுடா என்கிற இசையில்லாமல் காதிற்கினிய மெல்லிசையாகவும் இருந்தது. இது பள்ளுபறையர்களை நமது அரசர்கள் ஓரம்கட்ட ஒரு வாய்ப்பாய் அமைந்தது. ஒன்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிடுச்சி.
( பிராமணர்களின் ஆதிக்கம் இப்படித்தான் சொந்த மண்ணின் மைந்தர்களை அடிமையாக்கியது... விஷத்தில் கூட தேன் தடவி கசக்காமல் நம்மை பருகச்செய்யும் வித்தை அறிந்தவர்கள் ஆரியர்கள் , அதுபோல எல்லா ஆரிய பிராமணனும் கெட்டவனும் அல்ல )
அன்றைய நாளில் பறையர்கள் யாதும் அறிந்தவர்களாக இருந்தார்கள் காரணம் பல ஊர்கள் , பல நாடுகள் ( அன்று நாடுகள் என்பது குறுநிலங்களே ) , பலதரப்பட்ட மனிதர்கள் என சகல விஷயங்களையும் அறிந்தவர்களாக இருந்தனர். இன்னும் கேட்டால் இவர்களுடைய சுபாவமானது எல்லோருடனும் சிரித்துப்பேசி நல்வார்த்தைகள் கூறி உடனே அவர்களுடன் நட்புகொள்ளும் பழக்கமுடையவர்கள், ஆதலால் அவர்களுக்கு வேண்டிய பணம், பொருள்,ஆடை,ஆபரணங்கள் அனைத்தும் கேட்டவரிடமிருந்து தங்குதடையின்றி கிடைத்துவிடும்.. அரசு சபைகளில் யாரும் கேட்டிறாத கதை கூறி கூத்துக்கட்டினால் அவர்களுக்கு அவ்வூரில் நிலங்கள் கூட தானமாக கிடைத்து விடும், சிலர் விருப்பப்பட்டால் வியாபாரக் கப்பல்களில் வெளிதேசம் கூட பிரயாணப்பட்டு வருவார்கள்.. இப்படி நிலபுலன்கள் பெற்று வசதியாக வாழ்ந்த பறையர்களும் உண்டு. எப்படி நமக்கு இக்காலத்தைய சினிமாக்கார்ர்களை பிடிக்கிறதோ அதுபோல அவர்களது அலங்கார அச்சுக்கோர்த்த வார்த்தைகளும் அந்நாளில் அவர்களுக்கு மரியாதையை சம்பாதித்து கொடுத்தது. உண்மை கதைகளில் கற்பனைகளை ஏற்றி கூறுவதில் வல்லவர்கள் இவர்கள். இவர்களுக்கு பழனியாண்டவர் திருக்கோயிலில் இன்றும் தலைக்கெட்டு மரியாதையும் சம அந்தஸ்த்தும் தரப்பட வேண்டுமென எழுதி வைத்த பழங்கால கல்வெட்டுகளும் உண்டு.
ஆகவே பறையர்கள், பள்ளர்கள் தாழ்ந்த சாதி கிடையாது,அவர்களும் அமைச்சர்களுக்கும் புலவர்களுக்கும் நிகராக வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர்களே. பறையர்கள், பள்ளர்களின் பாடல்களில் கூத்துக்களில் மனமகிழ்ந்த அரசர்களும் பலர்.
பறையர் என்பது குலமா ?
பறையர்கள் என்போர் ஊர்கள் தோரும் சுற்றி பலவிடங்களில் தங்கி தாங்கள் காணும் செப்படிவித்தைகளை கற்றுவந்து வேறு ஊர்களில் அதை செய்து காட்டி சம்பாதிப்பார்கள்.. பெரும்பாலும் இவர்கள் நாடோடி இனமாகவே திரிவதுண்டு..இவர்களிடம் தோலில் செய்த பறை இருக்கும்.. பல ஊர்களில் கண்டு கேட்டு வரும் இன்னபிற தகவல்களை ஊர் கங்காணியிடம் தெரிவித்து அவரது உத்தரவின் பெயரில் ஊருக்குள் வந்து தப்படித்து தகவல் பரப்புவார்கள். அவர்களுடைய செய்திகள் பெரும்பாலும்
1.வேறு ஊர்களில் விழுந்த மரணங்களை பெயரோடு பறையடித்து படிப்பது,
2. அடுத்த ஊர்களில் கயவர்கள், திருடர்கள் பெற்ற தண்டனைகள் குறித்து பெயரோடு தாக்கல் அறிவிப்பது,
3. கிராமத்து கோயில்கள், வனதேவதை வீடுகள், படைவீடுகளில் நடக்கும் திருவிழா, குடமுழுக்கு,காப்பு கட்டுதல் ஆகியவற்றை அறிவித்து மக்களை உற்சாகப்படுத்துவது.
4. வேறு கிராமங்களில் வாழும் உறவினர்கள் அறியும் வண்ணம் அவர்கள் வீட்டு விசேசங்களுக்கு தப்படிப்போர் மூலம் அழைப்பு விடுவது
என போஸ்ட்மேன் வேலை பார்ப்பார்கள், அவர்களே மந்திர தந்திரம் செய்கிறேன் பார் என சமயத்தில் மக்களுக்கு பொழுதுபோக்கு சாதனங்களாகவும் இருந்துள்ளனர், அதில் சிலர் வரயிருக்கும் சம்பவங்களை கூறுவதாக மக்களை ஏய்க்கவும் செய்வார்கள், வனதேவதை வந்து உடலில் இறங்குவதாக,கனவில் கூறுவதாக குறி சொல்வார்கள். இவர்களையே குறளிவித்தைக்காரன் என்பார்கள்.
வள்ளுவர் என்போர் அக்காலத்திய நிமித்தம் பார்க்கும் ஒரு குலமாக இருந்தனர், அவர்கள் இன்றும் நம் சமூகத்தில் உண்டு...வள்ளுவர் குலம் என்றாலே ஜோசியர் கூட்டமென கிராப்புற மனிதர்கள் அறிவார்கள். ஆகவே முன்னால் நடக்கவிருப்பதை இப்பொழுதே கூறிய முனிவர் என்பதாலே முக்கால முனி என வள்ளுவரை நாம் அழைக்கிறோம்.. ஆகவே வள்ளுவர் இயற்றிய பாடல்கள் குறி சொன்னது போல தவறாது நடக்கும் தெய்வ வாக்கு என்பதாலே குறள் என பெயர் பெற்றது என்பது எமது சிற்றரிவிற்கு தோன்றுவது. ஏனென்றால் இலக்கண மரபுகளுக்கு உட்படாத ஒரு நூல் எப்படி குறள் வெண்பா என்கிற இலக்கணத்திற்கு மட்டும் உட்படும் என்பதே நம் கேள்வி ?
திருக்குறளில் நாம் காணும் ஒரே மரபு யாதெனில் திருக்குறளின் முதல் எழுத்து "அ" வில் ஆரம்பித்து இறுதியில் முடியும் குறளில் "ன்" ல் முடிகிறது.
அதுபோல முதலடியில் 4 சீரும் இரண்டாமடியில் 3 சீருமாக ஏழு சீர்களை உடைய உவமையணி பாடல்களாகவே பெரும்பாலான குறட்பாக்கள் வருகிறது. இது தவிர குறளில் வேறு இலக்கண மரபுகளே இல்லை. ஏழு என்கிற வார்த்தை அதிகமாக வருவதைக்காணலாம். ஏழு என்கிற எண்ணை அதிகமாக அடையாளம் காட்டவே மூன்று அதிகாரங்களில் வரும் கூட்டுத்தொகையாக 7 வரும்படியும், மொத்த குறள்கள் 133 என்கிற எண்ணின் கூட்டுத்தொகையும் 7 வரும்படியாக வள்ளுவர் அமைத்துள்ளார், இது தற்செயலாக நடந்ததாகவும் இருக்கலாம்.
பள்ளும் வள்ளும் ஒன்றே:
அதுபோக வள்ளுவர் என்பதும் பள்ளுவர் என்கிற சொல்லின் திரிபு ஆகும் என்பதே நம் கருத்து.. பள்ளுவர் என்றால் பாடல்கள் படிப்பவர், கூத்துக்கட்டுபவர் என்ற பொருள் வருகிறது.. பள்ளு என்றால் பாடல், அக்காலத்தில் பறையடிப்பவர்கள் தமது செய்திகளை பாடல்களாகத்தான் பாடுவார்கள், முந்தைய கால ராஜாக்கள், ராணிகள் கதை, போர்க்களத்து கதை, குடும்ப கஷ்டம், பிள்ளைவரம் இல்லாமை, கடனில் வாழ்விழந்தமை, துரோகங்கள், தியாகங்கள், தூர தேசத்து கதைகள் என பல ஊர்களில் தாம் செவி வழியாக , கிராமிய பாடல்களாக கேட்டுவந்தவற்றை எல்லாம் கூத்துக்கட்டி ஆடிப்பாடி நடித்துக்காட்டுவர் அதனாலேயே பள்ளுபறை என்கிற வார்த்தை கோர்வை உண்டானது..அதையே நாம் இன்றும் கூட வட்டார வழக்காக கூத்தும் கும்மாளமும் என்று சேர்த்து கூறுகிறோம்.. கூத்து என்பது பள்ளும் கும்பமேளம் - குடம் போன்ற பறைக்கொட்டு வைத்து மேளம் அடித்தலை கும்மாளம் என்றும் அழைக்கிறோம்.
பழந்தமிழ் சொற்களில் சிலவற்றை நாம் காண்போமேயானால் "ப" , "வ", " ம " ஆகிய எழுத்துக்களில் அமையும் சொற்களை மாற்றிக்கூட உச்சரிப்பார்கள். உதாரணமாக , பள்ளர் என்பதே மள்ளர் ஆனது போல... மள்ளர் - வீரர்.
உபாத்தியாயர்- வாத்தியார்
பைரவன் - வைரவன்
வானம் - மானம்
பாங்கோசை - வாங்கோசை
பீமன் - வீமன்
மீசை- வீசை
தபம் - தவம்
கபடம் - கவடம்
அபலை - அவலம்
இப்படி "ப " வார்த்தைகளில் சிலவற்றை "வ " வில் உச்சரித்தும் "வ" வார்த்தையை "ம" வில் உச்சரிப்பதும் நம் மரபில் உண்டு.. 'ப ' வார்த்தைகள் வடசொல்லாகவும் 'வ 'வார்த்தைகள் தென்சொல்லாகவும் தமிழர்களால் மொழியப்படுகிறது.
"ய" சொற்களை "ச" உச்சரிப்பில் பேசுவதும் நமது தமிழர் மரபாகும் உதாரணமாக வியாழன் - விசாலக்கிழமை
புயல் - பெசலு
முயல் - மொசலு
உயிர் - உசுரு
மயி..... - மசு.....
"க" சொற்களை "ய" உச்சரிப்பில் கூறுவதுண்டு
வைகாசி- வையாசி
தெற்கு - தெக்யே
தேங்காய் - தேங்யா
மாங்கா - மாங்யா
காய் என்பதை க்யா என்றே இன்றுவரை கிராமங்களில் கூறுகிறார்கள்,
ற்ற சொற்களை த்த என்றுதான் நாம் இன்றும் பேச்சுவழக்கில் பேசுகிறோம்..
மாற்று - மாத்து
ஆற்று - ஆத்து
ஊற்று - ஊத்து
சொல்லிற்று - சொல்லித்து
வந்துற்று - வந்துடுத்து
போயிற்று - போயிடுத்து
காற்று - காத்து
கீற்று - கீத்து
இப்படி உண்மையில் இவை சிதைந்துபோன வட்டார வழக்கில் எச்சமாக உள்ளவை..இவை கொச்சை வார்த்தைகள் என நவீன தமிழ் சீர்த்திருத்தவாதிகள் திரித்து வைத்துள்ளார்கள்.
வங்காளிகள் உச்சரிப்பில் ' வ 'சொல் அத்தனையும் 'ப 'சொல்லாகவே அமையும் , பெங்காளிகளை நாம் வங்காளிகள் என்றே அழைக்கின்றோம்..அதுபோல கன்னடிகர்கள் நமது ' ப 'சொற்களை ' ஹ' சொல்லாக உச்சரிப்பார்கள், பால் என்பதை ஹாலு , பள்ளி - ஹள்ளி , என்பார்கள்.
திருமந்திரத்தை திருமூலர் இயற்றினர் என்றால் அவரது பெயர் தெரியவில்லை.. ஒருவேளை அவரது பெயர் ஆதிமூலம் என்பதை குறிக்கும் சிவனின் பெயராக இருக்கலாம், திருக்குற்றாலக்குறவஞ்சியை இயற்றியவர் திரிகூடராசப்ப கவிராயர் என்கிறோம்.. திரிகூடன் என்பதும் சிவனின் பெயர் தான் , அது போலவே வள்ளுவன் - பள்ளுவன் என்பதும் ருத்திரக்கூத்தாடும் சிவனின் பெயர் தான் வள்ளுவன் என்பதை வல்லபன் எனவும் கொள்ளலாம்.. வல்லபன் என்றால் வலிமை மிகுந்தவன், எல்லாவற்றிற்கும் பெரியவன் என அர்த்தம் , முந்தைய தமிழ் எழுத்துக்களில் ல,ள,ழ,ர,ற,ந,ன ஆகிய எழுத்துக்களுக்கு தனி உச்சரிப்புகள் இல்லை..எல்லாம் ஒன்றுபோலவே வரும். பின்னாளில் தான் பொருளுக்கேற்ற எழுத்துக்கள் சீர்படுத்தப்பட்டது. இதனாலே நாம் காண்கிறோம் கிராமத்தவர்கள் ள,ழ உச்சரிப்புகளை சரியாக செய்யமாட்டார்கள் ல மட்டுமே அவர்களது வாயில் உறவாடும் அதற்கு காரணம் பேச்சு வழக்கை அன்றுதொட்டு இன்று வரை மாற்றாத ஒரு இனம் அது தமிழ் இனம் மட்டுமே.. இன்று பழத்தை பலம் என உச்சரிப்போரை சிலர் கேலி செய்வதுண்டு..அப்படி பலம் என உச்சரித்தவரும் அய்யோ நாம தவனாக பேசிவிட்டோமே என்கிற வருத்தம் வருவதுண்டு..ஆனால் அவர்கள் அறிவதில்லை ள,ழ எல்லாம் பின்னால் எவனோ புகுத்தியது என்று. ஆகவே வள்ளுவனை வல்லுவன் எனவும் கொள்வோம்.!
( பிறர் அறிவது போல பள்ளுபறை என்கிற வார்த்தையை சாதீய அடையாளங்காட்டும் ஸ்தானமாக நாம் விவரிக்கவில்லை... காலப்போக்கில் அவர்களது நிலைமை இப்படியானதை எண்ணி அகக்கண்ணில் செந்நீர் வடிப்போரில் நாமும் ஒருவர் )
திருக்குறளின் வயது என்ன ?
திருவள்ளுவர் வயது தெரிந்தால் தானே திருக்குறள் வயதை கண்டறிய முடியும். தமிழக அரசு திருவள்ளுவர் வயது கி.மு.31 என கணக்கிடுகிறது. ஆனால் அவர் அதற்கும் முந்தையவராக இருக்கலாம் என்பதே தமிழறிஞர்கள் பலரது கருத்து. காரணம் தமிழின் இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை கி.பி.முதல் நூற்றாண்டை சார்ந்தவை என கன்னியாகுமரி கேரன் செப்பேட்டில் உள்ளபடி சிலப்பதிகாரம் இயற்றிய இலங்கோவடிகள் தமக்கு நூறு வருடத்திய காலத்திற்கு முந்தைய கண்ணகியின் குறவைக்கூத்து பாடலை எடுத்து இலக்கியம் புனைந்தார் எனவும் சிலப்பதிகாரத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முந்தையது திருக்குறள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே வள்ளுவரது காலம் சந்தேகத்திற்குறியதும் அறிஞர்களின் அனுமானமுமே ஆகும்.
வள்ளுவரது பிறப்பிடம் இது ?
வள்ளுவர் பிறந்தது சென்னை மயிலாப்பூர் என்பதனை அடியோடு மறந்து விடவும், அவரது பழங்கால சிலை ஒன்று அங்கு அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டது என்கிற காரணத்திற்காகவும், அவரது குரளில் " பீலிபெய் சாக்காடும் அச்சீரும் " ( பீலி- மயில்த்தோகை ) எனத்தொடங்கும் குறள் மயில்த்தோகை பற்றி கூறுகிறது என்கிற காரணத்திற்காக மட்டும் அவர் பிறப்பிடம் மயிலாப்பூர் என அனுமானிக்க முடியாது.
மயில்கள் நிறைந்ததால் மயிலாப்பூர் என்கிறது போல் மயிலாடுதுறை , மயிலாடும்பாறை என்கிற இடங்களை ஏன் கணக்கில் ஏற்றுக்கொள்ளக்கூடாது?
திருவள்ளுவரின் பெயர்கொண்ட இடங்கள் பல இருந்தாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் வள்ளுவநாடும், கேரள பாலக்காட்டிற்கு அடுத்த மலப்புரம் 18 ம் நூற்றாண்டு வரை வல்லுவநாடு என அழைக்கப்பட்டதாகவும், மதுரையை அடுத்த திருச்சுழி தான் வள்ளுவன் பிறந்த நாடு எனவும் மூன்றுவிதமான கருத்துக்களை முன் வைக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அதில் முதலில் வருவது நாகர்கோவில்- கன்னியாகுமரி நல்லூரில் கிடைத்த தகவலின் பெயரில் அங்கு திரு.பத்மநாபன் ( தொல்லாய்வுத்துறை இயக்குனரின் தலைமையில் விரைந்த ஆய்வுக்குழு அந்த பழங்கால ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்தது.. அந்த சுவடிகளை இத்தனை நாளும் போற்றி பாதுகாத்து வந்த திரு.முத்துக்குமாரசுவாமி பிள்ளை அவர்களின் குடும்பத்தார், இன்றளவும் அந்த சுவடிக்கு சொந்தக்காரர்களாகவே பாவித்து வருகின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வள்ளுவரை தமது மூத்த அரசனாக நினைத்து வழிபட்டு விழா எடுத்து வருகின்றர்.
இரண்டாவது வல்லநாடு அல்லது வேநாடு எனும் வல்லுவநாடு, இதனை அங்கிருக்கும் கேரள பறையர்கள் வல்லுவமலை என வழங்கி வருகிறார்கள், அவர்கள் வள்ளுவரை தங்களது இனத்தை ஆண்ட ராஜா என்கிறார்கள்... 18 ம் நூற்றாண்டு வரையில் அப்பகுதி வல்லுவநாடு என்றே அழைத்து வந்துள்ளனர். அதன் பிறகு மெதுவாக பெயர் மங்கத்தொடங்கி தற்போது அது ........என கேரளத்தில் வழங்கப்படுகிறது.
மூன்றாவதாக மதுரையை அடுத்த , விருதுநகரில் இருக்கும் திருச்சுழி என்கிற ஊரில் திருவள்ளுவருக்கான கோயில் ஒன்று உள்ளது, இதுவும் வள்ளுவர் பிறந்த ஊராக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது..
எதையும் யாரும் முழுமையாக கண்டுபிடிக்க முடியாத நிலையில் , பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக ஒருமனதாக எடுத்திருக்கும் தீர்மானம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் நல்லூரை அடுத்து 8 கிமீ தொலைவில் இருக்கும் நாகர்கிராமம் என்று தற்போது வழங்கப்படும் திருநாயனக்குறிச்சி என்கிற பகுதியையே ஆகும், இதற்கு அவர்கள் கூறும் வலுவான காரணம், அங்கு வாழும் கானி அல்லது கலியன்கானி என்கிற பழங்குடி இனமக்கள் திருவள்ளுவரை தமது மூதாதையர் எனக்கூறி வழிப்பட்டு வருகிறார்கள், அந்த இனத்தவரின் சீயான் எனப்படும் ஊர்த்தலைவர் திரு. மூட்டுக்கானி வயது 105 , அவர் ஒரு மலைக்குன்றை அடையாம்காட்டி அங்கிருக்கும் குகையில் திருவள்ளுவர் ஓய்வு எடுப்பார் என தமது முப்பாட்டன்கள் கூறி கேள்விப்பட்டிருப்பதாகவும் அதனாலேயே அக்குன்று " வல்லுவன்கல்பொற்றை அல்லது வல்லுவாதிகற்பொற்றை " என இன்றளவும் அழைக்கப்படுகிறது என்கிற தகவலை திரு.பத்மநாபன் அவர்களின் குழுவிடம் தெரிவித்தாராம், அதுபோல ஔவைப்பிராட்டியின் பிறப்பிடம் குமரியாக இருப்பதாலும் இரண்டாம் தமிழ்ச்சங்க காலத்தில் கொற்கையை தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியரது சபையில் வள்ளுவரது திருக்குறள் வெண்பா பாடல்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும், ஔவையின் பரிந்துரையால் அது சபையேறியது என்றும் கல்வெட்டுக்குறிப்புகள் கூறுவதால் இந்த முடிவை ஏற்கிறார்கள்.
அதுபோல வள்ளுவர் , வல்லுவ நாட்டின் அரசனாக இருக்க இயலாது என்றும் அவர் ஒரு நாடாண்ட ராஜா இல்லை என்றும் வாதிடுவோர் பலர். அதற்கு மிக முக்கிய காரணமாக கூறப்படும் விஷயமாவது முற்கால பாண்டியர்கள் காலந்தொட்டு மேற்கு மலை நாட்டை ஆள்பவர்கள் கேரர் எனப்படும் சேரர்களே ஆவர்.. கேரல் என்றால் கயறுதல் என்னும் மூலச்சொல்லில் பிறந்த ஏறுதல் என பொருள்தரும் சொல்லாகும்.. மலையேறிகள் - மலைக்கயறிகள் - மலைக்கேரலர்கள்- பிறகு கிரேக்க - ஆங்கில நுனிநாக்கு அதனை சேரனாக்க மாற்றியது... Ceral என்ற கிரேக்க உச்சரிப்பின் மாற்று உருவே Keral ஆனது.
கேரளத்தை மறுபுறம் கேரளம் என்கிறதற்கான மற்றுமொரு காரணி கேரல் என்றால் தேங்காய் ஆகும் ( நாளிகேரம் ) அதாவது உயரமான மரத்தில் விளையும் காய். உயரத்தில் கயறி பறிக்கும் காய்..ஆக கயறுதல் என்பது உயரத்தில் ஏறுதல்... ( காளக்கட்டு- ஏறுதழுவல்- காளக்கயறு - மாடுபிடி - மஞ்சுவிரட்டு இவை எல்லாமே காளை மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு கொடுக்கப்பட்டுள்ள பழந்தமிழ் சொற்கள் )
((( 1. அசோகரது கல்வெட்டில் கூட மலைநாடன்களை கேரலபுத்திரர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது
2. பெரிப்பிளஸ் ஆப் தி எரித்ரியன் சீ - எனும் பண்டையகால ஆசிரியர் அறியப்படாத கிரேக்க மொழி வணிக குறிப்பு புத்தகத்தில் Ceral , Nitcandai என்ற இடங்கள் குறிக்கப்பட்டுள்ளது , கேரல் என்பது கேரளமும், நிட்சந்தை என்பது நெல்சந்தை எனப்பட்ட திருநெல்வேலுயுமாகும்.
3. பொதுவாக நமக்கே கூட ஆங்கிலத்தில் "C " தொடங்கும் சொற்களை " ச" வில் உச்சரிப்பதா இல்லை " க" வில் உச்சரிப்பதா என்கிற ஐயம் தோன்றுவது இயல்பு...அவர்களின் உச்சரிப்பு முறை பொருட்களின் பதத்தை வைத்து மாறுபடும்.
உதா : Crow, Candy என்பதை " க் " ல் உச்சரிப்பதும்
Center, Cement என்பது "ச" வில் சொல்வதுமாக மாற்றிக்கொள்ளவது
அதுவே இரண்டு C - ஒரே சொல்லின் வரும்போது Circus, Circle என்று வருகையில் முதல் C யெ " ச" வாகவும் அடுத்த C யை க் ஆகவும் கூறுவது அவர்கள் வழக்கம், இது கிரேக்கர்களிடம் இல்லை...அவர்கள் க வாகவே உச்சரிப்பார்கள்.
இப்போதும் கூட கேரள மக்கள் கொச்சின் என்ற இடத்தின் பெயரை Cochin - Kochin என்று இருவேறு எழுத்துக்களை உபயோகித்து எழுதுவதுண்டு. தமிழகத்திலும் கோவையை Kovai - Coimbatore என எழுதுவோரும் உண்டு )))
ஆகவே வள்ளுவரின் சொந்த ஊர் இது தான் என தோராயமாக அறிஞர்கள் ஒரு முடிவிற்கு வந்தாலும் கூட அதனை நமக்கு பாடநூல்கள் அறிவிப்பதில்லை அதற்கு மாற்றாக நாம எப்போதும் ஒரு கன்பியூசன்லயே இருக்கனும் அப்படிங்குற காரணத்திற்காக வழிவழியாய் தமிழ்ப்பாட புத்தகங்களில் வள்ளுவரின் பிறந்த ஊர் மைலாப்பூர் என்றும் சிலர் மதுரை என்றும் கருதுகிறார்கள் என பிறருடைய கருதலையே கண்ணை இறுக மூடி நாமும் நம்ப வேண்டும் என்பதே அவர்களது கட்டளை..
வள்ளுவர் எந்த மதம் ? அடுத்த பதிவில் தொடரும்.

கடந்த கட்டுரை வரை வள்ளுவரின் பெயர், அவரது ஊர் போன்றவற்றின் தெளிவற்ற ஆதாரங்களை கண்டோம்..
இப்பதிவில் அவரை எங்கள் மதத்தை சேர்ந்தவர் என சமணர்,பௌத்தர்,சைவர், பிராமணர் இடையில் அவர் கிறிஸ்தவர் என வேறு தத்தமது மத அடையாளங்களை அவர் மீது சுமத்தி சொந்தம் கொண்டாடி வருகின்றனர் பலர்.
அவர்களுடைய வாதங்கள் வள்ளுவர் இயற்றிய குறட்பாக்களிலிருந்தே செய்திகளை பெற்று கூறுவதாக ஆணித்தரமாக வாதிடவும் செய்கிறார்கள். அதற்காக சில குறள்களையும் மேற்கோள் காட்டுகிறா்கள், எது எப்படி இருந்தாலும் அவருடைய பிறப்பை பற்றிய தகவல்களும் அவரது பெற்றோர் பற்றி இவர்களுடைய புனைவுகளின் உண்மைத்தன்மை பற்றியும் ஆய்ந்து சிலவற்றை அறிந்த பிறகு அவரது சாதியை அறிவோம்.
வள்ளுவரின் பெற்றோர் :
வள்ளுவரது பெயரும் அவர் பிறந்த ஊருமே பல சந்தேகங்களுக்குட்பட்டது என்கிற அடிப்படையில் அவரது தாய், தகப்பனை பற்றிய கதைகளும் சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவே உள்ளது. முதலில் அவரது தந்தை பெயர் பகவனும் இல்லை, தாயின் பெயர் ஆதியும் இல்லை. திருச்சுழி அடுத்த புதுப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் வள்ளுவர் கோவிலில் கீழ்கண்ட விடயங்கள் பதிவாக்கப்பட்டுள்ளது. புதுப்பட்டி கிராம மக்களில் வள்ளுவர் இனத்தவர் சோதிடம் பார்ப்பவர்களாக அறியப்படுகிறார்கள், அவர்களும் வள்ளுவரை தமது வழிகாட்டி எனவும் மூதாதையர் எனவும் கூறி மாசி மாதங்களில் வள்ளுவருக்கு விழா எடுக்கின்றார்கள்.
கபிலர் நம் வள்ளுவரின் சமகாலத்தவராயிருந்தவர், அவர் குறிஞ்சி நிலத்து மனிதன் ஆதலால் அவருடைய பாடல்கள் அனைத்தும் குறிஞ்சித்திணை சார்ந்த பாடல்களாகவே இருந்தது, கபிலர் இயற்றிய அந்த பாடல்களே அகநானூற்றில் அதிகளவு இடம்பெற்ற பாடலாகும்.. சங்க கால நூல்களுள் கபிலரால் பாடப்பட்ட பாடல்களே அதிகம் எனலாம். அவ்வாறிருக்க கபிலர் கூறியுள்ள சில குறிப்புகளின் வழி காண்கையில் வள்ளுவரது தந்தையின் பெயர் " யாளிதுத்தன் " என அறியப்படுகிறது.
யாளிதுத்தன் - யாளி - சிம்மம், துத்தம் - தந்தம் அல்லது பல்., இந்தியின் தாய்மொழியான பிராகிருத் மொழியில் தாத் - பல் என அர்த்தம்... தமிழே ஆதி மொழி அதிலிருந்து பிரிந்ததே பாலி,பிராகிருத்,சமஸ்கிருத்,இந்தி ஆகியவை, சமஸ்கிருதில் பெர்சிய மொழி ஊடு இருப்பதனால் அது வேற்றுமொழி போல தெரிகிறது ஆனால் பெர்சிய மொழி சொற்களின் வேர் பழந்தமிழாகும் ஆகவே தாத் என்கிற சொல் துத்து என்கிற பழந்தமிழ் சொல்லின் மருவி ஆதலால் யாளிதுத்தன் - சிம்மபல்லன் என பொருள்படும் இப்பெயர் அவரது பெயரா அல்லது தொழிலா ? என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.
அதுபோல நாம் நினைத்த வகையில் யாளி என்பது பண்டைய காலத்தில் வாழ்ந்த நீண்ட கோறைபற்களையுடைய சிம்மம் மட்டுமல்ல, யாளி என்பது ஒரு பொதுப்பெயர் ஆகும் , நீண்ட பற்கள் அல்லது தந்தங்கள் அல்லது கொம்புகளுடைய மிருகங்களை முறையே " சிம்மயாளி , ஆனயாளி, மகரயாளி " என வகைப்படுத்தியுள்ளனர் இதில் சிம்மயாளி சிங்கத்தையும், ஆனயாளி யானையையும், மகரயாளி என்பது ஆடு, மான் ஆகிய இரண்டையும் குறிக்கும் பதமாகும்.
( பண்டைய காலத்தில் பெயர்கள் இப்பொது வைக்கப்படுவது போல கடவுளர் பெயராக வைக்கப்படவில்லை என கவனத்தில் கொள்க...பண்டைய மக்கள் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தமையால் மக்களது பெயரும் இயற்கை சார்ந்த மலர்கள், பறவைகள், பழங்கள், மிருகங்களின் கம்பீரத்தை பாராட்டும் விதமாக அவற்றின் சிறப்பை காட்டும் பெயர்களை இட்டு வந்தனர், இப்போது அவற்றை படித்தால் நமக்கு வியப்பும் சிரிப்பும் தோன்றும்.
உதாரணமாக :
மாங்கனி
மாதுளை
கற்பூரம்
சங்கு, சங்கன்,சங்கைய்யா
சமுத்திரம், சாகரன்
அகில்,அகிலன்
முகில்,முகிலன்
கார்மேகம்
நீலமேகம்
மாரி - மழை
மானி - வானம்
குஞ்சு - குழந்தை
காவேரி
மான்விழி
கயல்விழி
தேன்மொழி
மயிலாத்தா
குயிலாத்தா
கிளி
பஞ்சவர்ணம் (கிளி)
சிட்டு
சிம்மன்
புலியன்
கொம்பன் - யானைதந்தம்
காரி, கரி,கருவாயன் - யானை
ஓரி
காளி - காளை கொம்பு
யானமுடி - விலைமதிப்பானது
பராந்தன்- ( பருந்து- விரிவான பார்வையுடையது)
உளுவாயி- வெந்தையத்தை போல மிருதுவான
வேலாயி - வேப்ப மரத்தின் குணங்களுடைய
தாமரை
மல்லிகா
கனகு
செம்பகம்
மந்தார
மரிகொழுந்து
துளசி
பொன்முளரி - மஞ்சள் ரோசா,
மகிழம்பூ
பேத்தா , பேயாத்தா - அப்பாவியான
ராவுத்தன் - குதிரை பராமரிப்பாளன்
மாவுத்தன் - யானை பராமரிப்பாளன்
பொரவி- புரவி குதிரை
வெள்ளிக்கண்ணு
நிலா, வெண்ணிலா
கொம்பூதி
போன்ற பெயர்கள் இப்போது நம்மிடையே மறைந்துவிட்டது ஆயினும் Apocalypto படத்தில் வரும் கதாநாயகனின் மகன் பெயர் Turtle egg, அதாவது ஆமை முட்டை... நம்ம காக்கா முட்டை ஸ்டைலில் பண்டையகால தென்னமரிக்க Aztec இனமக்கள் இன்றளவும் வினோதமான பெயர்களை இடுகிறார்கள். )
இப்போது போலவே அழகிற்கு வேண்டி அலங்காரமாக மாட்டி வைக்கவும், மருந்திற்காகவும் யானை,சிம்மம்,ஆடு,மான்,மயில், காட்டெருமை ஆகிய மிருகங்களின் பல்லுகளும்,கொம்புகளும்,இறகுகளும் பயன்பட்டு வந்ததால் பணம் படைத்த மனிதர்களால் பெருமதிப்பு கொடுத்து வாங்கப்பட்டது, அவை தூரதேசங்களுக்கு கப்பல் பிரயாணங்கள் மூலம் கொண்டுசெல்லப்பட்டது.
ஆங்கிலத்தில் Goldsmith, Blacksmith என்பார்கள் , அவரையே நாம் பொற்கொல்லர், கருங்கொல்லர் என கூறுவதுண்டு... தங்க ஆபரணங்கள் செய்பவர் பொற்கொல்லர், இரும்பில் ஆயுதங்கள், லாடங்கள், சக்கரங்கள் செய்வோர் கருங்கொல்லர் ஆவர். ஆனால் நாம் இப்போது தமிழில் அவ்வாறான தொழிலில் இருப்போரை பொற்கொல்லன், கருங்கொல்லன் என்கிற பெயரிடுவதில்லை, இக்காலத்தில் அவர்களுடைய பெயரே மாறிவிட்டது,்நகை ஆபரணங்கள் செய்வோரை தற்காலம் ஆசாரி என்று அழைக்க தலைப்பட்டுள்ளார்கள், உண்மையில் மரம் இழைப்பவர் தான் ஆசாரி..
ஆனால் இன்றும் ஆங்கிலேயர்கள் Smith என்கிற பெயரை வேறு பெயரோடு இணைத்து வைப்பர்களாக உள்ளனர் , அது போலவே அன்றைய பழந்தமிழரும் தாம் செய்யும் தொழிலுக்குண்டான பெயரில் அறியப்பட்டார்கள், காரணம் அவ்வாறு தந்தங்கள், சிம்மபற்கள், புலிப்பற்கள், கொம்புகள் விற்போர் ஊரில் யாராவது ஒருவர் அல்லது இருவர் தான் இருப்பார்.. ஆகவே கபிலர் வாழ்ந்த ஊரில் யாளிதுத்தன் என்கிற யாளிப்பற்கள் விற்றவர் திருவள்ளுவரது தந்தையாய் இருக்கலாம். அவரது தாயின் பெயருக்கான குறிப்போ மனைவி, மக்களின் குறிப்போ இல்லை.
வள்ளுவர் பிராமணரா ?
வள்ளுவருக்கு பூனூல் அணிவித்து விட்ட நல்லவர்கள் யாரோ நாம் அறியோம் ஆனால் ஒவ்வொருவரும் தத்தமது மதத்தை ஈடுபடித்தி வள்ளுவர் தமக்கு தான் சொந்தக்காரர் என வாதாடுவோரின் கூற்று சற்று அறியலாம்
|| . சைவர்கள் தங்களது மதத்துக்காரர் என போராடுவதற்கு கூறும் சில காரணங்கள்
1. ஆதிபகவன் என்பது சிவனின் பெயர், அவர் ஆதிபகவன் என குறிப்பிடுவது அவரது பெற்றோரை அல்ல மாறாக " எல்லாம் சிவமயம் " எனும் திருமந்திரமே " ஆதி பகவன் முதற்றே உலகு " என குறிப்பிட்டுள்ளார் என்கின்றனர்.
2. தமிழகத்தில் ஆரம்பம் முதலே இருந்த ஒரே மதம் சைவம் மட்டுமே, சைவ சித்தாந்தத்தை ஏற்ற சிவாச்சாரியார்களே தமிழகத்தில் வாழ்ந்துள்ளார்கள், அவர்கள் வளர்த்த கலையே தவக்கலையும் சித்த மருத்துவமுமாகும். வள்ளுவர் ஒரு சித்த வைத்தியர் , அவர் எழுதிய சித்த மருத்துவ நூல்களான ஞானவெட்டியான் மற்றும் பஞ்சரத்னத்தை வைத்தே இதனை அறியலாம் என்கின்றனர். ( அந்த இரண்டு புத்தகங்களுமே இன்று உயிரோடு இல்லாதபட்சத்தில் இவர்கள் அதில் எதனை வைத்து ஆதாரம் காட்டுவார்கள் ? ) மற்ற மதங்கள் அனைத்தும் பிற்காலத்தில் தான் தமிழகத்தை வந்தடைந்தன என அறுதியாக கூறிவிட்டு ஒருபடி மேலாக வள்ளுவரை 64 ம் நாயன்மார் என ஏற்றுள்ளனர்... வள்ளுவருக்கு நாயனார் என்கிற மற்றொரு பெயரும் உண்டு...
( நாயனார் என்றால் வழிநடத்துபவர் என பொருள் , நாயன்,நாயகன் ஆகியவை நாயனார் என்கிற சொல்லில் அடங்கும் )
3. ஆரம்பத்தில் சித்தர்கள் திருமணம் செய்து லௌகீக வாழ்வியலில் ஈடுபட்டுக்கொண்டே துறவறம் இருந்தனர்.. அதற்கு சாட்சியாக இருப்பவர் விஸ்வாமித்ர மாமுனிகள், அதுபோலவே வள்ளுவரும் தமது மனைவி வாசுகியோடு ஒரு துறவியாக வாழ்ந்தார் என்கின்றனர்.
( வள்ளுவரின் பெற்றோர் பெயரே தெரியாதபட்சத்தில் அவரது மனைவி பெயரை யார் சூட்டியதோ )
|2 . அடுத்ததாக வள்ளுவரை சொந்தம் கொண்டாடுபவர்கள்... பிராமணர்கள், அவர்கள் கூறும் கதைகளை காண்போம்.
1. வள்ளுவரின் தந்தை பகவன் என்கிற பிராமணர் குல மைந்தனாவார், அவர் ஆதி என்கிற கீழ்சாதி பெண்ணை திருமணம் செய்தமையால் வள்ளுவர் தமது முதல் குறளில் தம்முடைய பெற்றோராகிய ஆதி பகவனை வழிபட்டு இதனை எழுத ஆரம்பிப்பதாக குறிப்பிட்டு எழுதியுள்ளார் என்கிறார்கள்.
2. வள்ளுவரின் முதல் சிலையானது மைலாப்பூர் பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட போது அவரது சிலையில் பூனூல் தறித்து இருந்த அடையாளக் குறிப்பு உள்ளது.. பூனூல் என்பது பிராமணருக்கே உள்ள அடையாளம் என்கின்றனர்.
( முதலில் இவர்கள் கூறும் ஆதாரத்தில் இருந்தே இவர்கள் கூறுவது திரிவு என அறியலாம்..அதாவது வள்ளுவர் இறைவனைப்பற்றி கூறும் பத்து குறட்பாக்களும் அது எந்த தெய்வத்தினை பற்றிய குறிப்பு என்றே அறியாதபட்சத்தில் ஆதி பகவன் அவரது பெற்றோர் என வாதிடுவது பொய்.
இரண்டாவதாக வள்ளுவர் வாழ்ந்த அந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வருணாசிரம கொள்கை தமிழகத்தை ஆட்டிப்படைக்கவே இல்லை... ஆரியரது வருணாசிரம கொள்கையில் முதலில் அவதியுற்றது வடக்கத்திய மக்களே அன்றி தென்னாட்டவர்கள் அல்லர்.. பிராமணர்கள் என்போர் தென்னாட்டில் முதலாம் இராஜராஜ சோழனது காலத்தில் தான் உட்புகுகிறார்கள் அதாவது ஆயிரம் வருடங்கள் முன்பு தான், கேரளாவின் மலப்புரத்திலும் நம்பூதிரிகள், நாயர் தரவாடுகள் ஆகியோர் உட்புகுந்ததும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான், பிறகெப்படி ஆதி கீழ்சாதி மகளாவாள்... குறவன் , குறத்தி இன மக்களே அக்காலகட்டத்தில் மேன்மக்களாக நடத்தப்பட்டபோது ஒரு நெசவாளி மகள் எப்படி கீழ்சாதி பட்டியலில் வந்தாள்.
3 . யாளிதுத்தன் என்பது ஆதிகால பிராமணப்பெயர் இதனை ஞானாமிர்தம் என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளதாம்.. ஞானாமிர்தம் நூலை இயற்றியது யாருனெல்லாம் கேட்கப்படாது.
அதுபோக வள்ளுவர் தமது தகப்பன் வழி தொழிலான வைதீகத்தை விட்டு ஏன் தாய்வழி தொழிலான நெசவினை கையிலெடுக்க வேண்டும்,? உழவும் நெசவும் உலகை மேன்மையாக்கும் எனப்பாடிய வள்ளுவர் ஏன் வைதீகம் மனிதனை சீர்திருத்தும் என தமது உலக அறநூலில் கூறவில்லை.. மனிதனுக்கு இருக்க வேண்டிய அத்தனைவிதமான அறத்தினையும் அத்துப்படியாக எழுதி வைத்த வள்ளுவர் ஏன் தமது தகப்பனது வைதீக வழியினை பற்றி ஒரு வார்த்தையும் கூறவில்லை...ஒருவேளை வள்ளுவரையும் தீண்டாமை சாதியில சேர்த்து கொடுமை படுத்திட்டாங்களோ...? தீட்டுப்பட்ட வள்ளுவருக்கு பூனூல் மாட்டியது யாரு ?
பூனூல் என்பது என்ன ?
இன்று சில ஆதிக்க சாதியினரும் ஆளும் வர்க்கமும் தங்களை மேன்மையான மனிதராக உயர்ந்த சாதியாக பிறர் முன் அங்கீகாரம் ஏற்படுத்திக்கொள்ள பூனூல் என்கிற பூவுடலை காக்கும் நூல் என்பதனை இடது தோளிலிருந்து வலது விலாவிற்கு குறுக்காக அணிந்து கொள்வார்கள், அது தங்களை கெட்ட எண்ணங்களிலிருந்து தடுக்கும் என்பதே அதன் ஐதீகம் மாறி அந்த பூனூலை அணிந்துகொண்டால் தாம் ஒரு சுத்த பிராமணன் என்கிற அகந்தை தோன்றியுள்ளது அவர்களிடம்.
பூனூல் பற்றி மறைந்த சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியிடம் ஒரு பிராமணரல்லாத நிருபர் ஒருவர் கேட்ட கேள்வி :
" சுவாமி , பூனூல் அணிவதன் நோக்கமென்ன, அது நாங்கள் உசந்த சாதி காண காட்டிக்கொள்ளவா ? அல்லது பூனூல் தீயசக்திகளிடமிரிந்து எம்மை காக்கும் என்பதாலா ? பூனூலை தாங்கள் மட்டும்தான் அணியவேண்டுமா ? அல்லது விருப்பமுடையோர் யாரும் அணியலாமா ? பூனூலை அகற்றிவிட்டாலோ அல்லது அறுத்துவிட்டாலோ தெய்வக்குத்தம் ஆகுமா? பூனூலின் தத்துவம் என்ன சுவாமி ? " .
அவரது அழகான பதில் - பூனூலை யாரும் அணியலாம், பிராமணர் பூனூல் அணிந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை.. பூனூல் அணிவதன் நோக்கம், நாம் வைதீகன் ஆதலால் உலக ஆசைகளில் இருந்து வெருத்து இருக்க வேண்டும், உலக ஆசைகளுக்காக பாவங்கள் செய்யக்கூடாது, வாழும் மனிதருக்க ஒரு வைதீகன் எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும், அதனை ஒவ்வொரு தவணையும் ஞாபகம் உண்டாக்கிக்கொண்டே இருக்கவே இந்த பூனூலை அணிகிறோம் " என்றார்
நிருபர் - சுவாமி , அப்போது உங்களாவிவிலும் தவறுகள் செய்வோர் இருக்கத்தானே செய்கிறார் ?
அவர் - ஆம். மனிதன் கட்டுப்பாட்டு எல்லைகளுக்கு அப்பாற்பட்டவனாகவே பிறந்துள்ளான், சிலருக்கு இரும்பு சங்கிலி போட்டு பூட்டினாலும் தீய எண்ணங்கள் வரவே செய்யும்.
நிருபர் - அப்போ நாங்களும் பூனூல் அணியலாமா ?
அவர்- தாராளமாக, ஆனால் நான் யாவற்றிலும் மேலானவன் என காண்பிப்பதற்காக அன்றி மனதினை ஒருமுகப்படுத்த, கெட்ட நடத்தைகளில் இருந்து விலகியிருக்க யாரும் பூனூல் அணியலாம். என்றார்
நிருபரின் இறுதி கேள்வி,- பூனூல் என்கிற ஒரு சாதாரண குறுக்கு கயிறு நம் மனதை கட்டுப்படுத்தி விடுமா..?
அவர் - நிச்சயம் கூற முடியாவிட்டாலும், உங்களுக்கு ஒரு கதை கூறுகிறேன் கேளுங்கள், ஒருவன் சிறுவயது முதல் ஒரு யானைக்குட்டியை வளர்த்து வந்தான் ,அது அங்குமிங்கும் ஓடுவதை தடுக்க ஒரு சணல் நூலை எடுத்து அதன் காலில் கட்டி மரத்தில் கட்டிப்போட்டான்.. அது இந்த கயிற்றை அறுத்துவிட்டு நமக்கு போக முடியாது என்கிற நம்பிக்கையிலேயே வளர்ந்தது, பிறகு அது வளர்ந்து பெரிய ஆனையாக வந்த பிறகும் அவன் அதே சணல் கயிற்றெக்கொண்டே அதன் காலில் கட்டிப்போட்டான் இதை கண்ட ஒருவன் பாகனிடம் கேட்டான் , " என்னப்பா இவளோ பெரிய ஆனையை இந்த சணலால கட்டிப்போட்டிருக்க அறுத்துக்கொண்டு ஓடிடாதா.சங்கிலியால கட்டுப்பா " என்றான் , அதற்கு அந்த பாகன் கூறினான், " நான் அதை சிறியதாக இருந்தது தொட்டு இதனால் தான் கட்டிப்போடுறேன் ஒருநாள் கூட அது அறுத்தது இல்ல காரணம் அதை அறுக்க முடியாது என்ற பயம் அதற்கு பழகிவிட்டது அதனால் கயிற்றை அறுக்க முயற்சி எடுக்காது என்கிற நம்பிக்கை தான் எனக்கு " என்றான்
ஆகவே சிறு வயது முதல் இந்த பூனூலை போட்டு, நீ பிராமணன், தவறுகள் செய்ய விளக்கப்பட்டவன் ஆதலால் அதற்கான முயற்சிகளில் இறங்காதே என்கின்ற பூனூலின் தத்துவம் என்று விளக்கினார்
( இதில் நம் கருத்து எத்தனை வலிமையான கயிறு போட்டாலும், மனதில் மதம் ஏறினால் அது அறுத்துக்கொள்ளப்படும் ).
பூனூலின் ஆரிய தத்துவம் :
1. பூனூல் போடுவது மூன்று வயது நிரம்பிய பிராமணக் குழந்தைகளில் இருந்து தொடங்குகிறது.
2. பூனூல் போட தகுதியானவர் பிராமணர் மட்டுமே.
3. வேத மந்திரங்கள் ஓதப்பட்டு அக்னி சாட்சியாக ஆவணி அவிட்டத்தின் போது பூனூல் மாற்றும் சடங்கும் புதிதாக பூனூல் போடும் சடங்கும் நடைபெற வேண்டும்.
4. பெண் எப்படி கணவன் இழந்து தாலி அறுத்தால் வாழும் ஜடமாக கருதப்படுவாளோ அதுபோல ஆண்களில் பூனூல் தறிக்காதோர் பிணத்திற்கு சமம் என அறியப்படுவார்கள்.
5. பிராமணர்கள் மேற்சட்டை அணிந்து தங்களது பூனூலை மறைத்தலாகாது..அவர்களின் பூனூல் தென்பட நடப்பவர்களே மதிக்கப்படுவார்கள், இழிசாதி குலத்தான் அவரைக்கண்டு ஒதுங்குவான்.
6. கலப்பாக பிறக்கும் பிராமணக் குழந்தைகளுக்கு பூனூல் சடங்கு நடத்தப்படமாட்டாது...கீழ்சாதி ஆளிற்கும் பிராமணாளிற்கும் பிறக்கும் குழந்தைகள் பாராமணாளாக முடியாது,அவருக்கு பூனூல் செல்லாது.
பிறகெப்படி கீழ்சாதி பெண்ணான ஆதி பெற்ற பிள்ளையான வள்ளுவனுக்கு பூனூல் அணிவித்தீர்கள் ? அவரை எப்படி பிராமணன் என ஏற்றுக்கொண்டீர்கள் ? புலால் உண்ணக்கூடாது என்கிற ஒரே ஒரு கருத்தை மட்டுமே குறளில் இருந்து எடுத்து வைத்துக்கொண்டு உங்களது விருப்பத்திற்கேற்ப வள்ளுவரை அணைத்துக்கொள்கிறீர்..
ஒரே கடவுளை வலியுறுத்தும் வள்ளுவன் உங்களது சாதி எனில்... பிரம்மன்,சிவன்,விஷ்ணு,இந்திரன்,எமன் உங்களது கடவுளர்கள் ஆனது ஏன் ?
வள்ளுவன் கூறிய மொழியை ஆதிபகவனில் இருந்து ஆதி சிவன் என்றும் ஆதிபரமன் என்றும் சைவர்களும் பிராமணர்களும் வளைக்காதது வரை நமக்கு சந்தோசமே...!
உங்கள் தகவலுக்கு : சைவர்கள், பிராமணர்கள் போலவே தமிழகத்தில் இன்று செட்டியார்கள்,ஆசாரிகள்,சைவப்பிள்ளைமார் , கிருஷ்ணரை வழிபடும் கோனார்களில் சிலரும் , சுவாமி சிலைகளை வைதீக முறைப்படி வடிக்கும் ஸ்தபதிமார் இன்னும் கிராம்ப்புற பிராமணரல்லாத பூசாரிகள் கூட பூனூல் அணிந்திருப்பதை காணலாம்.
நாட்டுப்பிற பிராமணரல்லாத கீழ்சாதி பூசாரிகள் பூனூல் அணிவது அவர்கள் சாமிக்கு பூசை போடுபவர்கள் மற்றும் உடுக்கடித்து தீய சக்திகளை ஓட்டும் வல்லமைபடைத்தவர்கள் என மக்களிடம் அடையாளம் காட்டு ஏய்த்து பிழைக்கவே அன்றி வேறில்லை..
இனி சமணரும், பௌத்தரும் வள்ளுவர் தங்கள் சொத்து என வாதாடும் காரணிகளை அடுத்த பதிவில் காணலாம்...
திருவள்ளுவர் இந்து சமயம் சார்ந்தவரல்லர் என ஆணித்தரமாக
கூறுபவர்கள் சமணர்களும் பௌத்தர்களும் , காரணம் வள்ளுவர் கடவுள் கொள்கை பற்றியோ, பிரபஞ்ச படைப்புகள் பற்றியோ எதுவும் அறிவிக்கவில்லை... என சட்டமாக வாதிக்கும் இரு சமயத்தவரும் தத்தமது கொள்கை சார்ந்தவர் என போரிடுவதே பெரும் நகைப்புக்குறியது.!
ஆனால் " மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தான் நிலர்மிசை நீடு வாழ்வான் " என்கிற குறளானது தமது தெய்த்திருகுருமார்களான மகாவீரரையும் கௌதம புத்தரையும் தான் குறிப்பிடுகிறார் என கூறிக்கொண்டே இறைக்கொள்கை இல்லாத மார்க்கம் என்ற சமணத்திற்குள்ளும் பௌத்தத்திற்குள்ளும் இறைக்கொள்கையை விதைத்து சாதாரண மானிடப்பிறவிகளான குருமாரை கடவுளாக்குகின்றனர்.
மலரில் மேல் அமர்வது இறைவன் என்கிறார் வள்ளுவர்...மகாவீரரும் புத்தரும் மட்டும் தான் மலர் மீது அமரும் மகான்களா? அன்றைய காலத்தில் துளவு பூண்டோர் அனைவருமே மலர் மீது அமரும் பழக்கமுடையவர்களே..ஆகவே வள்ளுவர் சமணர் அல்லது பௌத்தர் எனக்கொள்ள இது ஆதாரமல்ல..
அதுபோலவே ஓரிறைவனை கூறும் வார்த்தைகளான..... ஆகியவை குறளில் தெள்ளத்தெளிவாக வருகிறது.
1. வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மும்முடி அரசர்களான சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் குறிப்பு குறளில் இல்லை
2. பிராமணர்,சத்ரியர், வனிகர்,பறையர்,குறவர் என எந்தவொரு சாதியை பற்றியும் குறளில் இல்லை
3. குறிஞ்சி நில கடவுளான முருகர் - வள்ளி, நெய்தல் நில கடவுள் வருணன் - , முல்லை நிலக்கடவுளான நெடுமால் ,மருத நிலக்கடவுளான இந்திரன், பாலை நிலக்கடவுளான கொற்றவை பற்றி எந்த குறிப்புகளும் இல்லை.
4. அந்த நாளைய கலாச்சார விழாக்களான அறுவகை நாள், பொங்கலிடுதல், மாடுபிடி, மஞ்சுவிரட்டு, தைப்பூசம்,கார்த்திகை தீபம் என எதுபற்றியும் குறிப்புகள் இல்லை.
5. வீரவிளையாட்டுக்களான ஏறுதழுவல்,வட்டுக்கல் தூக்கல், வழுக்குமரம், உறியடி ஆகிய முக்கிய ஆட்டங்கள் பற்றிய குறிப்புகளும் இல்லை.
6. அதுபோலவே கடல் கடந்து தமிழர்கள் சென்ற இடங்கள் பற்றியோ அங்கு அமைத்த அரசாங்கள் பற்றியோ ஒரு குறிப்பும் இல்லை.
7. சமகாலத்து புலவர்களையும் அவர்தம் படைப்புகளையும் பற்றியும் அல்லது அவரமு ஊர்,பெயர்,பரம்பரை,பெற்றோர், மனைவி,மக்கள்,நாடு என எந்த குறிப்பும், தாம் ஒரு சமணத்துறவி என்கிற குறிப்பும் எங்குமேயில்லை...ஒருவேளை அவை அழிந்துபோயிருக்கலாம்.
இதற்கு பின் வருபவை சமணர்களின் வாதமாக வருகிறது
*************************************
..அவர்கள்
திருவள்ளுவர் வள்ளுவ பறையர் குலத்தில் பிறந்தவர் என்பது உண்மைதான் ஆனால் அவர் ஒரு சமணர் என்கின்றனர்.
திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள் சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளடக்கியது திருவள்ளுவர் ஒரு சமணர் இந்து இல்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர், தொல்பொருள் ஆராச்சியாளர்கள் உறுதி செய்து இருக்கின்றனர், இங்கு அரசால் மக்களிடம் கான்பிக்கப்பட்டு இருப்பது உண்மையான திருவள்ளுவர் உருவம் இல்லை, இது இந்து மதவெறியர்கள் பார்ப்பனியர்களின் சூழ்ச்சி தான்.சரித்திர மோசடி.
சமண மதம் இறை நம்பிக்கையற்றவர்கள், கொள்கையை வழிபடுபவர்கள்.
தமிழகத்தில் சமணர்களை சித்திரவதை செய்து கொன்று குவித்து இருக்கின்றனர், பல மறைக்கப்பட செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கின்றது.
புராணங்கள் இல்லை என்றால் இந்து மதமும் இல்லை கடவுள்களும்இல்லை என்று ... கருத்தை திருவள்ளுவர் ஒரு வரி பிசகாமல் அப்படியே மறுத்துரைக்கிறார். அவருடைய கருத்துக்களும் அவர் வலியுறுத்திய அறக் கோட்பாடுகளும் அப்படியே சமண சமயத்தை பிரதிபலிக்கின்றது.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கடலில் கம்பீரமாக நிற்கும் திருவள்ளுவர் தமிழ் மொழிக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்கே தவிர்க்க முடியாத அடையாளம்! 'தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அழகான கடற்கரைகளும் எழில் கொஞ்சும் பாறைகளும் இருக்கும்போது, எதற்காகக் கன்னியாகுமரியில் அவருக்குச் சிலைவைத்தார்கள்?’ வரலாற்றுப் பின்னணியோடு அதற்கான காரணங்களைச் சொல்கிறார்
நாகர்கோவிலைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர், டாக்டர் பத்மநாபன். இவர், குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
''தொல்காப்பியத்தில் 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’னு தமிழகத்தின் எல்லை பரப்பு சொல்லப்பட்டு இருக்கு. தொல்காப்பியத்தில் சொல்லப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்னு நான்கு வகை நிலங்களும் குமரி மாவட்டத்தில் இருக்குது. அதனால்தான் வள்ளுவர் திருக்குறளில் இந்த நான்கு நிலங்களுக்குமான பிரதான தொழில்களைப் பற்றியும், அதன் நுணுக்கங்களையும் அத்தனை சிறப்பா சொல்லி இருக்காரு.
அன்றைய காலங்களில் குமரி மாவட்டத்தில் குறிஞ்சி நிலத்தில் குறவர்களும், முல்லை நிலத்தில் வேட்டுவர்களும், மருத நிலத்தில் உழவர்களும், நெய்தல் நிலத்தில் மீனவர்களும் வாழ்ந்துஇருக்காங்க. திருவள்ளுவர் பறையர் பிறந்த ஊரான (இப்போது மறுவி திருநயினார்குறிச்சி) திருநாயனார்குறிச்சியின் பக்கத்தில்தான் முட்டம் கடல் பகுதி இருக்கு. அதாவது முழுக்க முழுக்க நெய்தல் பூமி. அதன் எதிர்ப் பக்கத்தில் பெரிய குளம். நீர்ப் பாசனம் நிறைந்த பகுதி என்பதால் வெள்ளாமை செழிப்பாக நடைபெற்ற பூமி. அதாவது மருத நிலம். திருவள்ளுவர் பறையர் நெய்தலும் மருதமும் இணையும் திருநாயனார்குறிச்சியில் பிறந்ததால்தான் இங்கு உள்ள தொழில்களை ரொம்பவும் மதிநுட்பத்துடன் குறள் வெண்பாக்களில் சொல்லி இருக்கார்.
திருநாயனார்குறிச்சியின் பக்கத்தில் கூவைமலைனு ஒரு மலை இருக்கு. பேச்சிப் பாறையை ஒட்டி உள்ள மலைப் பகுதிகளில் வசிக்கும் காணி என்னும் பழங்குடி மக்கள், வள்ளுவரை இன்னைக்கும் தெய்வமாக வணங்குறாங்க. பருவ மழை பொய்த்துவிட்டால் கூவைகாடு பகுதியில் வள்ளுவர் பெயரால் அமைந்து உள்ள வள்ளுவன் கல்பொற்றை மலைக்குப் போய், வள்ளுவருக்குப் படையல்வைத்து வணங்குவாங்க. இதுக்கு 'வள்ளுவன் கொடுதி’என்று பெயர் .
முன்னாள் குமரி மாவட்டம் 'வள்ளுவன் நாடு’, 'நாஞ்சில் நாடு’னு இரண்டு பகுதியா இருந்துச்சு. அதில் நாஞ்சில் நாட்டைப் பொருநன் என்ற வள்ளுவப் பறையர் இனத்தைச் சேர்ந்த மன்னன் ஆட்சி செய்து வந்தார். வள்ளுவ நாட்டை, திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரே ஆட்சி செய்தார் என்றும் சொல்லப்படுகின்றது. திருவள்ளுவர் பறையர் அரசனாக இருந்து, பின் நாட்களில் சமண துறவியாக மாறி இருக்கார். அதனால்தான் அரசியலைப் பற்றி எழுதும்போது வள்ளுவரால் மன்னருக்கே உரிய நுட்பமான திறன்களை அத்தனை அழகா சொல்ல முடிந்து இருக்கின்றது. ஆனால், இடைக்காலத்தில் வள்ளுவர் நெய்தல் தொழில் செய்ததாகப் பதிவுசெய்துவிட்டார்கள். ஆனால், அவர் நெய்தல் நிலத்தில் வாழ்ந்தார் என்பது மட்டும்தான் உண்மை.
குமரி மாவட்டத்தில் உள்ள சராசரி பழக்கவழக்கங்கள், திருக்குறளில் அதிகமாக இடம்பெற்று உள்ளன. நாஞ்சில் நாட்டுக்கே உரிய உழவியல் செயல்முறையான பொடி விதைப்பு முறை திருக்குறளில் வருகின்றது. 'தொடிப் புழுதி’ எனத் தொடங்கும் குறளில் உள்ள பொருளைப் பார்த்தால், 'ஒரு பிடி மண் கால்பிடி ஆகும்படி உழவு காயவிட்டால், ஒரு பிடி உரம் கூட இல்லாமலேயே, பயிர் செழித்து வளரும்’ என்று பொருள்படும். நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில் இந்தக் காய்ந்த மண்ணைப் 'புழுதி’ என்றே இன்றும் அழைக்கிறார்கள்.
வள்ளுவர் பல இடங்களில் 'உணக்கின்’ங்கிற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்காரு. 'உணக்கின்’ என்ற சொல்லுக்கு காயவைத்தல்னு பொருள். இந்தச் சொல் இன்னைக்கும் குமரி மாவட்டப் பேச்சு வழக்கில் இருக்குது. அதே போல் இங்கு உள்ள முட்டம் பகுதியில் உள்ள மீனவர்கள், கடலில் மீன் பிடிக்கப் பயன்படுத்தும் தூண்டிலில் ஜரிகையை இணைப்பது வழக்கம். இதனை வள்ளுவர் 'தூண்டிற் பொன்’ என்ற குறளில் குறிப்பிட்டு இருக்கார். இந்த மீன் பிடி முறை தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது.
இது போன்ற தகவல்களைத் தொகுத்து 1995-ல் அரசு ஆவணங்களில் திருவள்ளுவர் குமரி மாவட்டத்தில் பிறந்ததாகப் பதிவு செய்து உள்ளார்கள். இன்று 'திருவள்ளுவர் மதுரையில் பிறந்தார்’, 'மயிலாப்பூரில் பிறந்தார்’என்று சொல்கின்றார்கள். வாய் வார்த்தைகளில் சொல்கின்றவர்களால் இந்த அளவு ஆதாரங்களைக் கொடுக்க முடியவில்லை . வள்ளுவனுக்குச் சிலைவைக்க முடிவு செய்ததும் கன்னியாகுமரியைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணமும் இது தான்!' என்றார்.
பல தமிழர்கள் இந்து மதம் நமது மதம் என்ற அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றார்கள். மூழ்கிக் கிடப்பதோடு மட்டுமல்லாது, மதச்சார்பற்ற நமது பெருந்தமிழ்ப் புலவர் வள்ளுவரை இந்துவாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் ஈடு இணையற்ற தமிழ் நூலான திருக்குறளை இந்து மத நூலாக எண்ணத் துணிகின்றனர். ஆனால் நமது வள்ளுவப் பெருந்தகையோ இந்து மதத்தையும், அதனை இயக்கும் கருவியான பார்ப்பனியத்தையும், இந்து மதத்தின் ஆணிவேராக விளங்கும் வருணாசிரம தர்மத்தையும், மற்றும் இந்து மதத்தின் மூடப் பழக்கவழக்கங்களையும் தனது குறட்பாக்கள் வழியாக சாட்டையடி கொடுப்பதுபோல் கடுமையாகச் சாடுகிறார்.
இந்து மதத்திற்கு அடிப்படையாக விளங்குபவை ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள். மற்றும் பகவத்கீதை, மனு தர்மம், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவைகள் புனித நூல்களாகக் கருதப் படுகின்றன. இவைகளை அலசி ஆராய்ந்தால் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது, பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் வருணாசிரம தர்மம். குறிப்பாக பகவத்கீதையும் மனுதர்மமும் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன் என்றும் மனிதப் பிறவிகளில் அவனே உயர்ந்தவன் என்றும் பெண்களும் சூத்திரர்களும் தாழ்ந்தவர்கள் என்றும் உரைக்கிறது.
(மனுதர்மம் அத்தியாயம் 1 சூத்திரம் 31 – பகவத்கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32)
நமது வள்ளுவரோ இதைக் கடுமையாக மறுத்து
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972)
பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையால் மட்டுமே வேறுபாடு காண முடியும். என்கிறார்.
ஆரியர்களின் மனுதர்மம் புலால் உண்பதை அனுமதிக்கிறது. பசுக்களை யாகத்தில் வெட்டிப் பலியிடவேண்டும் என்றும் யாகத்தில் படைக்கப் பட்ட பசு இறைச்சியை உண்பது தெய்வீகச் செயல் என்றும் உரைக்கிறது. (மனுதர்மம் அத்தியாயம் 5 சூத்திரம் 27 30 35 39). இந்து மதத்தின் மிக முக்கிய நூலானபகவத்கீதை கொலை செய்வதை நியாயப் படுத்துகிறது. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு காந்தியடிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக பார்ப்பனரான நாதுராம் கோட்சேயைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது அவர் கீதை காட்டும் இந்து தர்மப்படி காந்தியைக் கொலை செய்தது நியாயமே என்று கூறினார். இந்து மதம் நரபலிக்கும் நியாயம் கற்பிக்கிறது. மகாபாரதத்தில் குருட்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்வதற்காக அருச்சுனனின் புதல்வர்களில் ஒருவனான அரவானை கண்ணன் நரபலியிட்டதாக குறிப்பிருக்கிறது.
தமிழர்களின் திருக்குறளோ புலால் உண்பதையும் கொலை செய்வதையும் வன்மையாகக் கண்டிக்கிறது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். (குறள் 260)
புலால் உண்ணாதவர்களையும் அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும் என்கிறது. மற்றுமொரு குறள்
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (குறள் 327)
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது என்றுரைக்கிறது.
புராணங்கள் இந்து மதத்தின் அடிப்படை வேர்கள். புராணங்களில் வரும் கதாபாத்திரங்களே இந்து மதத்தில் கடவுள்களாக விளங்குகின்றன. புராணங்கள் இல்லை என்றால் இந்து மதமும் இல்லை கடவுள்களும் இல்லை என்று கூறும் அளவிற்கு புராணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்புராணங்கள் தேவர்-அசுரர் போராட்டாத்தையே முக்கிய கருப்பொருளாகக் கொண்டிருக்கின்றன. இவற்றை பின்னாள்களில் ஆய்வு செய்த பல வரலாற்று ஆசிரியர்கள் தேவர்-அசுரர் போராட்டங்கள் அந்நாள்களில் நடந்த ஆரியர்-திராவிடர் போராட்டங்களையே குறிப்பதாக எழுதியுள்ளார்கள். புராணங்கள் புனையப்பட்ட அன்றைய காலகட்டத்தில் தென்னாட்டில் வாழ்ந்த தமிழர்களே திராவிடர்களாகக் கருதப்பட்டார்கள். திராவிடம் என்ற சொல் தமிழிலிருந்து திரிபுற்ற ஒன்றே (தமிழ்-தமிள-த்ரமிள-த்ரமிட-திரபிட-திராவிட) என்பதை பாவாணர், மு.வரதராசனார் போன்ற அறிஞர் பெருமக்கள் தங்களின் நூல்களில் விளக்கியுள்ளனர். அந்தத் தமிழர்களையே அசுரர்களாகவும் அவர்கள் எதிர்த்த ஆரியர்களைத் தேவர்களாகவும் தங்களின் புராணங்களில் சித்தரித்திருக்கின்றனர். நல்லவர்களான தேவர்களைக் (ஆரியர்கள்) காக்க தீயவர்களான அசுரர்களை (தமிழர்கள்) கடவுள் அழித்தார் என்று பொருள் பட புராணங்களைப் புனைந்தார்கள்.
இவற்றை அறிந்த நமது வள்ளுவர் தனது குறள் ஒன்றின் வழியாக ஆரியர்களின் இனவெறிக்கு சாட்டையடி கொடுக்கின்றார்.
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான் (குறள் 1073)
தேவர்கள் (ஆரியர்கள்) மனம் போன போக்கில் தீய செயல்களைச் செய்யும் கயவர்களுக்குச் சமமானவர்கள் என்கிறார்.
பொதுவாக, உலகத்திற்குத் தேவையான நீதிக் கருத்துக்களை எழுத முன்வந்த திருவள்ளுவருக்கு இது போன்ற குறள் எழுத வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது. ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட இன இழிவை தமிழரான வள்ளுவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே எய்யப் பட்ட அம்பை எடுத்து எய்தவன் மேல் எய்வது போல் தேவர் என்ற சொல்லைப் பயன்படுத்தி ஆரியரைக் கயவர் எனக் கடுமையாகச் சாடுகிறார்.
பொதுவாக அன்றைய காலத்தில் பார்ப்பனர்களுடைய தோற்றம் தமிழர்களிடமிருந்து முற்றிலும் மாறு பட்டிருந்தது. தலைமுடியை முன்புறம் நன்றாக மழித்து பின்புறம் தலைமுடியை நீட்டி குதிரை வால் போன்று வளர்த்திருப்பார்கள். வள்ளுவர் இதையும் மறுக்கிறார்
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின் (குறள் 280)
உலகம் பழிக்கக் கூடிய தீய செயல்கனை செய்யாமல் விட்டாலே போதும் மழித்தல் நீட்டல் போன்ற புறத் தோற்றங்கள் தேவையில்லை என்கிறார்;. இக்குறளை ஆழ்ந்து நோக்கினால் புறத் தோற்றத்தின் வழியாகத் தங்களை வேறுபடுத்திக் காட்டும் பார்ப்பனர்கள் உலகம் பழிக்கும் செயல்களைப் புரிந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
இந்து மத புராண இதிகாசங்களில் வேள்விகளும் யாகங்களும் புனிதச் செயல்களாக விளக்கப் பட்டிருக்கும். வானம் பொய்த்து விட்டால் யாகம் செய்து மழையை வரவழைப்பது போன்ற மூட நம்பிக்கைகள் நிறைந்திருக்கும். வான் சிறப்பை பாட வந்த வள்ளுவர் இந்த மூட வழக்கத்தை மறுக்கிறார்.
சிறப்போடு புசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (குறள் 18)
வானமே பொய்த்து விடும்போது அதன் பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப் படுபவர்களுக்கு வழிபாடு செய்வதில் எந்தப் பயனும் இல்லை என்கிறார்.
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் சொரிந்து உண்ணாமை நன்று (குறள் 259)
எனும் குறளில், நெய் போன்ற பொருள்களை தீயிலிட்டு யாகங்களும் வேள்விகளும் செய்வதை விட உயிர்களைக் கொன்று தின்னாமையையே உயர்ந்தது என்கிறார்.
இந்துத்துவம் என்பது பார்ப்பனியத்தை நிலை நிறுத்த முயற்சிக்கும் மதக் கட்டமைப்பு. வேதங்கள் உபநிடதங்கள் முதல் கொண்டு புராண இதிகாசங்கள் வரை அனைத்துமே பார்ப்பனர்களின் ஆதிக்க வெறியையே வெளிக்காட்டுகின்றன. பிராமணர்களை உயர்ந்தவர்களாகச் சித்தரிக்கும்பகவத்கீதையும் மனுதர்மமும் தனிமனித ஒழுக்கத்தைக் காட்டிலும் வருணாசிரம முறைப்படி பிராமணர்களின் தொழிலான வேதம் ஓதுதலையே முக்கிய கடமையாகக் கூறுகின்றன. பிராமணன் ஒருவன் ஒழுக்கத்திலிருந்து தவறினாலும் வேதம் ஓதுதலில் இருந்து தவறக் கூடாது என்று அவை வெளிப்படையாகவே கூறுகின்றன. என்ன விந்தை! பகவத்கீதையிலும் மனுதர்மத்திலும் சொல்லப் பட்ட கருத்தை திருவள்ளுவர் ஒரு வரி பிசகாமல் அப்படியே மறுத்துரைக்கிறார்.
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் (குறள் 134)
பார்ப்பனன் ஒருவன் கற்றதை (வேதம்) மறந்துவிட்டால் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் ஒழுக்கத்திலிருந்து தவறினால் அவன் என்றும் இழிமகனே.
வள்ளுவரின் இந்தக் குறளை உற்று நோக்கினால் ஓர் உண்மை தெளிவாகப் புலனாகிறது. தனது 1330 குறட்பாக்களில் இந்த ஒரு குறளில் மட்டும்தான் பார்ப்பான் என்ற சொல்லைப் பயன் படுத்தியுள்ளார். தமிழரான வள்ளுவர் தனது நூலை அகரம் என்ற சொல்லிலிருந்து தொடங்குவதின் வழியாக தன்னைத் தமிழரென வெளிக் காட்டிக் கொள்கிறார். இருந்த போதிலும் தமிழ் தமிழர் போன்ற சொற்களை அவர் எந்த இடத்திலும் பயன் படுத்தவில்லை. நாட்டைப் பற்றி குறள் தீட்டிய அவர் தன்னுடைய நாட்டைப் பற்றி கூறவில்லை. மன்னர்களைப் பற்றிக் குறள் தீட்டிய அவர் சேர சோழ பாண்டியர் என்ற முடியுடை மூவேந்தர்களைப் பற்றிக் கூறவில்லை. தான்னுடைய நூல் தமிழர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற உலகளாவிய நோக்கமே அதற்குக் காரணம். அப்பேர்ப் பட்ட உயரிய எண்ணம் கொண்ட வள்ளுவர் தேவர் பார்ப்பான் போன்ற சொற்களின் வழியாக ஆரியக் கருத்துக்களை எதிர்க்கவும் மறுக்கவும் துணிந்திருக்கிறார் என்றால் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான ஆரியர்களுடைய வேதங்களும் புராண இதிகாசங்களும் வள்ளுவருக்கு ஓருவித சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
திருவள்ளுவர் அறவாழி அந்தணன், அந்தணர் என்போர் அறவோர், என்றெல்லாம் அந்தணர்களை உயர்த்திப் பாடியிருக்கிறாரே எனவே பிராமணர்களின் உயர்வை அவரும் ஒத்துக் கொண்டிருக்கிறார் என்று தமிழர்களில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வள்ளுவர் அந்தணர் என்ற சொல்லை பிராமணர்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தவில்லை. இந்து மத நூல்களில் வரும் பிராமணர் என்ற சொல்லை வள்ளுவர் எந்த இடத்திலும் பயன் படுத்தவில்லை. எனெனில் பிராமணர் என்ற சொல்லின் பொருளே பிறவி உயர்வைக் வெளிக்காட்டுகிறது. பிறப்பினால் வரும் உயர்வை வள்ளுவர் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிராமணர்களைக் குறிப்பதற்கு அவர் பார்ப்பான் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர் மட்டுமல்ல வள்ளுவருக்குப் பின் தமிழ் இலக்கிய உலகில் சிறப்பான இடத்தைப் பெற்ற இளங்கோவடிகளும் தனது சிலப்பதிகாரத்தில் பிராமணர்களைக் குறிக்கும் இடத்தில்
மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிட……………….
என பார்ப்பான் என்ற சொல்லையே பயன் படுத்தியுள்ளார். எனவே பிராமணர்களைத் தமிழ்ப் புலவர்கள் பார்ப்பான் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்களே தவிர அந்தணர் என்று அல்ல. திருவள்ளுவர் அந்தணர் என்ற சொல்லை மூன்று குறள்களில் பயன் படுத்தியுள்ளார்.
அறவாழி அந்தணன் தாழ்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள் 8)
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை புண்டொழுக லான் (குறள் 30)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் (குறள் 543)
இந்த மூன்று இடங்களிலும் வள்ளுவர் அந்தணர் என்ற சொல்லை அறத்தோடு தொடர்பு படுத்தியே கூறியுள்ளார். எனவே நெஞ்சு நிறைந்த அன்போடு மனித சமூகத்திற்கு அரும்பணியாற்றிய அறவோர் அனைவரும் வள்ளுவர் மொழியில் அந்தணர்களே. அந்த வகையில் பார்ப்பனர் அல்லாதவர்களான புத்தர், சோக்ரடீஸ், வள்ளலார், அன்னை தெரசா, நைட்டிங்கேல், பெரியார், அண்ணா, தியாகி தீலீபன், அன்னை பூபதி அனைவரும் அந்தணர்களே. பார்ப்பனச் சமூகத்தில் பிறந்தாலும் பார்ப்பனியத் தன்மைகளை விட்டொழித்து அறநெறிப்படி வாழ்ந்தால் அவர்களை அந்தணர் என்றழைப்பதில் தவறில்லை ஆனால், வேள்வித் தீயில் உயிர்களைப் பலியிட்ட பார்ப்பனர்கள் முதற் கொண்டு இருபதாம் நூற்றாண்டிலும் வருணாசிரம தர்மத்தைக் கட்டிக்காத்த காஞ்சிப் பெரியவர் என்று அழைக்கப் பட்ட காலஞ் சென்ற சந்திர சேகரேந்திர சரஸ்வதி, சங்கர ராமன் கொலைவழக்கில் கைது செய்யப் பட்ட ஜெயந்திர சரஸ்வதி வகையறாக்களை அந்தணர் என்று அழைத்தால் அதைவிடக் கேலிக்கூத்து வேறொன்றும் இல்லை. வள்ளுவர் குறிப்பிடும் அந்தணர் என்ற சொல் குணத்தைக் குறிக்கும் சொல்லே அன்றி குலத்தைக் குறிக்கும் சொல் அல்ல.
இந்துப் புராண இதிகாசங்களிலும் துதி பாடல்களிலும் கடவுளர்களின் அற்புதங்கள் கதை கட்டிவிடப்பட்டுள்ளன. மகாபாரதமும் தன் பங்கிற்கு பாண்டவர்களின் வெற்றிக்கு அருச்சுனன், பீமன், அபிமன்யு, போன்றவர்களின் வீரத்தை முக்கிய காரணமாகக் காட்டாமல் கண்ணனின் அருளையே முக்கியமாகக் காட்டுகிறது. தனிமனிதனுடைய வீரமும் முயற்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்டு கடவுள் தன்மைகள் முக்கியப் படுத்தப் பட்டிருக்கும். வள்ளுவரின் திருக்குறளோ இதற்கு நேர் எதிரான கருத்தைக் கூறுகிறது.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (குறள் 619)
கடவுள் அருளைக் காட்டிலும் முயற்சியுடன் உடலை வருத்தி உழைத்தால் உழைப்புக்கேற்ற வெற்றியைத் தரும் எனப் பொருள் படும் படி வள்ளுவர் தீட்டிய குறளானது கடவுளைப் பின்னுக்குத் தள்ளி முயற்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது.
இந்து மதம் உடலை வருத்தி உழைக்காமல் பிறரிடமிருந்து யாசகம் பெற்று வயிறு வளர்க்க உதவும் புரோகிதத் தொழிலையே சிறந்த தொழிலாகக் கூறுகிறது. திருக்குறளோ நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த ஏர் புட்டி உழும் உழவர்களின் தொழிலையே சிறந்த தொழிலாகக் கூறுவதுடன் உலக மக்கள் உழவுத் தொழிலை நம்பித்தான் வாழ்கிறார்கள் என்கிறது. இதோ அந்தக் குறள்
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் 1031)
தமிழரின் மறையான திருக்குறள் நெடுகிலும் இந்துத்துவ எதிர்ப்புக் கருத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே பறையனார் இந்து இல்லை. வள்ளுவர் சமண சமயத்தைத் தழுவி இருக்கின்றது, இந்து மதத்திற்கு முற்றிலும் எதிரானது.வள்ளுவ பறையனாரின் ஆரிய எதிர்ப்புக் கருத்துக்களும் அவர் வலியுறுத்திய அறக் கோட்பாடுகளும் சமணம் மற்றும் பௌத்தக் கருத்துக்களோடு ஒன்றியது. பௌத்தத்தைக் காட்டிலும் வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தமிழோடு அதிகம் தொடர்பு கொண்டிருந்த சமயம் சமண மதம். திருக்குறளுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் போற்றப் படும் நீதி நூலான நாலடியாரை எழுதிய நூற்றுவரும் சமணத் துறவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திய சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் ஒரு சமணத் துறவி. ஆனால் வள்ளுவப் பறையனாரோ தன்னை ஒரு சமணராக வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவர் மதச்சார்பற்றவர். மனிதர், மானுடம் போற்றியவர் அதுவே அவரது சிறப்பு.
தீர்மானம் : சமண மதம் உயர்வு தாழ்வு அற்றது, மனிதர்களில் ஏற்ற தாழ்வு இல்லை என்று போதிக்கின்றது சமணமதம். சமணம் இங்கு இருந்தால் பார்ப்பனீயம் பாதிப்பாகும், என்பதினால் இந்து மத வெறியர்கள் சமணர்களை கொண்டு குவித்து இருக்கின்றார்கள், இப்பொழுது இங்கு வாழ்த்து கொண்டு இருக்கும் பறையர்கள் இனத்தின் பாட்டன் சமண மஹரிஷி திருவள்ளுவ பறையனார், பறையர்கள் இனம் சமண,பௌத்த வழி வந்தவர்கள் பறையர்கள் யாரும் இந்துக்கள் இல்லை. சாட்சியா? திருவள்ளுவர் பறையனார் உங்கள் பாட்டன், அவரது வம்சாவழி வந்தவன் வந்தவர்கள் தானே பறையர்கள். திருவள்ளுவர் பறையர் இல்லை என்றால் பறையர் கட்டாயம் இந்து தான். - தமிழ் தந்தை பண்டிதர் அயோத்தி தாசன் "தமிழ் பௌத்தம்".
தமிழன் என்றால் ஆதி திராவிடன் மட்டும் தான். ஆதியில் தமிழகத்தின் முதல் குடி, சமண பௌத்த மதங்களை சார்ந்தவர்கள், மீதி சமூக இன இந்து மக்கள் படையெடுப்பு, குடிபெயர்ப்பு வாயிலாக தமிழகத்தின் உள் வந்தவர்கள் என்பது சரித்திரப்பதிவு, இங்கு வந்தவர்கள் ஆதி திராவிடர்கள் எனப்படும் பௌத்த,சமண மதத்தினரை தாழ்த்தப்பட்டவன் என்று முத்திரை குத்தி இந்து மத கோட்பபாடுகளை திணித்து ஆதி திராவிடர்கள் பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள் என்று ஒரு கற்பனை கதை திரித்து விட்டனர்.
திருவள்ளுவர் வள்ளுவப் பறையர்களின் இனத்தில் பிறந்தவர், சமண மதத்தை தழுவியவர் , திருக்குறள் மொத்தம் 5000 அதில் சமணர்களை வெறுத்த இந்து மத வெறியர்களால் அழிக்கப்பட்டது எஞ்சியது 1330 அந்த திருக்குறளை பாதுகாத்தவர் எல்லீல் மன்னரிடம் பணியாற்றிய திருவள்ளுவரின் உறவினர்கள் அயோத்திதாதச பண்டிதரின் பாட்டனனார் ஆவார் .
இதுவரை கண்டது சமணர்களின் வாதம், இதற்கு பிறகு குறள் ஒரு இறைவேதமா என்பதனை காணலாம்.