New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழை ஆண்டாள் - முழுக்கட்டுரை- Vairamuthu shared in Twitter


Guru

Status: Offline
Posts: 24778
Date:
தமிழை ஆண்டாள் - முழுக்கட்டுரை- Vairamuthu shared in Twitter
Permalink  
 


தமிழை ஆண்டாள் - முழுக்கட்டுரை

பீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் விலங்குகள் பறவைகள் தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.

மார்கழியின் அதிகாலை மனோகரமானது. தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது; தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது; இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது; கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது. தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது. இன்னுமா உறக்கம்! எல்லே இளங்கிளியே! எழுந்து வா வெளியேஎன்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது. மார்கழி நீராட வாரீரோ மங்கையரேஎன்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது. அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.

பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு. எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்கஎன்பதே நோன்பு. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு. 

நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால், திங்கள் மும்மாரி பெய்யும்; நெல்லோடு கயல் உகளும்; பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுக்கும்; வள்ளல் பெரும்பசுக்கள் வாங்கக் குடம் நிறைக்கும், ஆதலால் மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்” - இப்படி உயிரியல் வாழ்வியல் சமூகவியல் என்ற மூன்றையும் முன்னிறுத்துவதாகப் பாவை நோன்பு பார்க்கப்படுகிறது.

வைணவத்தின் வளர்ச்சியில் திருப்பாவை செல்வாக்குற்றது அல்லது திருப்பாவை செல்வாக்குற்றதில் வைணவம் வளர்ந்தது.

தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் ஆறாம் - ஏழாம் நூற்றாண்டுகளைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிடமுடியாது. இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வு அந்த நூற்றாண்டுகளில்தான் இறையோடு இழைந்தது. அறம்பற்றி நடந்த தமிழர் இறைபற்றி நடக்கத் தலைப்பட்டதும் இந்த நூற்றாண்டிலேதான்.

சமண பெளத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது. கடவுள் இல்லாமலும் மதங்களுண்டு. ஆனால் மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற மெய்ஞ்ஞானம்வாய்க்கப்பெற்ற பிறகு தன் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு மக்களை நோக்கி இறங்கி வந்தது.

யாகம் யக்ஞம் தவம் வேள்வி விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டுக் கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்பட்ட வாத்சல்யம் காருண்யம் செளலப்பியம் முதலியவற்றை முன்னிறுத்தியே முக்தியுறமுடியும் என்ற புதிய சலுகை மக்களிடம் போதிக்கப்பட்டது. எல்லாச் சாதியார்க்கும் மதம் தேவைப்பட்டதோ இல்லையோ எல்லாச் சாதியரும் மதத்திற்குத் தேவைப்பட்டார்கள். எந்த மதம் சாதிய அடுக்குகளைக் கெட்டிப்படுத்தியதோ அதே மதம் கொண்டு அதை உடைத்தெறியவும் சிந்தித்தார்கள். இறை நேயம் என்பதே சாதி என்னும் மம்மர் அறுக்கும் மருந்து என்று நாயன்மார்களைப் போலவே ஆழ்வார்களும் நம்பினார்கள்.

இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்கள் ஆகின் தொழுமின் கொடுமின் கொண்மின்” –என்று தொண்டரடிப் பொடியாழ்வார் சாதிபேதம் ஒழிந்ததென்று சங்கூதினார்.

வர்க்கபேதம் ஒழியாமல் சாதிபேதம் ஒழியாது என்ற பிற்காலப் பேரறிவை அவர்கள் அக்காலத்தில் பெற்றிருக்கவில்லை. இறைவன்முன் எல்லாரும் சமம் என்னும் குறுகிய பரவசம் ஒன்றே அவர்களைக் கூட்டுவித்தது; கொண்டு செலுத்தியது. 

வைணவம் என்னும் திருமாலியம் தமிழர்க்குப் புதுவதன்று. மாயோன் மேய காடுறை உலகமும்என்ற வரையறை தொல்காப்பியத்திலே சுட்டப்பெறுகிறது. கண்ணன் பலராமன் என்ற தொன்மங்கள் புறநானூற்றிலேயே புழங்கி வந்திருக்கின்றன.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்த காட்சி கண்ட காரிக்கண்ணனார்
பால்நிற உருவிற் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமியோனுமென்று
இருபெருந் தெய்வமும் உடன்நின் றாங்கு
உருகெழு தோற்றம்” (புறம் 58) - என்று பாடுகிறார்.

கண்ணனும் பலராமனும் இணைந்திருந்த தோற்றம்போல் சோழனையும் பாண்டியனையும் காட்சிப்படுத்துகிற காரிக்கண்ணனார், தெளிந்த சொல்லாட்சியில் தெய்வம்என்கிறார். சங்க இலக்கியத்தில் தெய்வமென்று கொண்டாடப்பட்டவர்கள் ஏழாம் நூற்றாண்டில் கடவுள் உயரத்தில் காட்சி தருகிறார்கள்.

தெய்வம் கடவுள் என்ற இரண்டுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடுண்டு. தெய்வம் என்பது பழம்பொருள்; பழகிய பொருள். கடவுள் என்பது பரம்பொருள்; பழகாத பொருள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் தெய்வத்துள் வைக்கப்படலாம்’. தெய்வம் என்பது வழித்துணைப் பொருள்; கடவுள் என்பது வழிபடுபொருள். அது எட்ட முடியாதது. எல்லார்க்கும் வாய்க்காதது. அந்த எட்ட முடியாத கடவுளையும் எட்டமுடியும்; கணவனாகவே கைத்தலம் பற்ற முடியும். இடையறாது நினைந்து காதலுற்றுக் கனிவதொன்றே கடவுளை எட்டும் வழி என்று குறியீட்டு முறையில் சொன்ன கோட்பாடுதான் ஆண்டாள் என்று எண்ணத் தோன்றுகிறது.




__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பிறப்பு முதல் சீரங்கத்து மாயனோடு மாயமான நாள் வரையிலான ஆண்டாளின் வாழ்வில் உயிருள்ள சில கேள்விகள் ஊடாடுகின்றன. ஆண்டாள் ஒன்றும் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள். திருவில்லிபுத்தூர் நந்தவனத்தில் திருத்துழாய்ப் பாத்தியில் கண்டெடுக்கப்பட்ட கனகம் அவள். ஆயின் அவள் பெற்றோர் யாவர்அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்?

அடுத்த வினா. ஆண்டாள் வாழ்ந்த காலம் என்பது யாதுகுரு பரம்பரைக் குறிப்புகள்கொண்டு கி.பி 776 என்று கணிக்கிறார் சாமிக்கண்ணுப்பிள்ளை. வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று’ என்ற திருப்பாவை வரிகொண்டு கி.பி 731 டிசம்பர் 18 என்று கணிக்கிறார்கள் வானூல் அறிஞர்கள்.
ஆழ்வார்களின் காலம் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை என்று வரையறுத்த மு.ராகவையங்காரின் கூற்று மெய்யாயின் ஆண்டாளின் காலம் 8ஆம் நூற்றாண்டின் மையம் என்று கொள்வதில் ஐயம் இல்லை.

பெண்வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில் பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படிமரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது. பெருமாள் திருப்பெயரைப் பெரியாழ்வார் பாடக் கேட்டுக் கேட்டு வளர்ந்த பெண்பிள்ளை பெருமானுக்குப் பிச்சி ஆகிறாள்தெய்வக் காதலில் திளைக்கிறாள்.

தன் உடலென்ற அழகும் உயிரென்ற பொருளும் கண்ணனுக்கு மட்டுமே காணிக்கை என்று கருதுகிறாள். வடபெருங்கோயிலான் ஆகிய வடபத்ரசாயிக்குப் பெரியாழ்வார் தொடுத்துவைத்த துய்ய மலர்மாலைகளைத் தனக்குத்தானே சூடிச்சூடிச் சுகப்படுகிறாள். பெரியாழ்வார் திகைக்கிறார். அவர் தேகத் திசுக்கள் தனித்தனியே துடிக்கின்றன. எல்லைமீறிய செயல் இதுவென்று உள்ளம் உடைகிறார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணக்கடவுள் அவள் சூடிக்கொடுத்த மாலைகளைச் சூடுவதே சுகம்” என்று சொல்லி மறைகிறார். கோதையின் பெருமைகண்டு பித்துப்பிடித்து நிற்கிறார் பெரியாழ்வார்.

மகள் மங்கைப் பருவமுறுகிறாள். எடுத்து வளர்த்த பிறை பாற்கடல் குளித்தெழுந்து பெளர்ணமியாய் நிற்கிறது. மகளுக்கு மணாளன் தேட எத்தனிக்கும்போதுதான் இன்னோர் எதிர்வினை நிகழ்கிறது. மானிடன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுவதாமாட்டேன் தந்தையே!’ என்று நீட்டோலை வாசிக்கிறாள் கிடந்த திருக்கோலத்தின்மீது படர்ந்த நெஞ்சினள்.

உன்னித்தெழுந்தவென் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்கிறாள். மாலிருஞ்சோலைஎம் மாயற்கல்லால் மற்றொருவர்க் கென்னைப் பேசலொட்டேன்” என்று உறுதி உரைக்கிறாள்.

தமிழ்ப்பரப்பில் முன்னெங்கும் கேளாத இப்பெண்மொழி முதன்முதலாய்ப் பெரியாழ்வார் பெண்ணால் பேசப்படுகிறது. இப்படி ஒரு விடுதலைக்குரல் எப்படிச் சாத்தியம்இந்த உறுதியும் உணர்ச்சியும் எதற்கான முன்னோட்டம்?

ஆழ்வார்கள் பன்னிருவருள் பதினொருவர் ஆணாழ்வார்கள். இவளொருத்தி மட்டுமே பெண்ணாழ்வார். ஆனால் மொழியின் குழைவிலும்தமிழின் அழகிலும்உணர்ச்சியின் நெகிழ்விலும்உரிமையின் தொனியிலும் ஆணாழ்வார்களை விடவும்பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே! யாது காரணம்?

தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே” என்ற குலசேகர ஆழ்வார் குரலில்ஒரு பக்தனின் முக்தி வேட்கை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு 
ஞானத் தமிழ் புரிந்த நான்

என்ற பூதத்தாழ்வார் பாசுரத்தில் ஒரு தொண்டுள்ளத்தின் உருக்கமே தூக்கலாய் நிற்கிறது.

வண்டூர் உறையும் பெருமாளுக்குக் குருகினங்களைத் தூதுவிடும் நம்மாழ்வாரின் நாயகன் நாயகி பாவத்தில் உண்மையைத் தாண்டி உணர்ச்சி வினைப்படவில்லை. திடீரென்று வைணவத்துக்கு மாறியவர் திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டதுபோல் உணர்ச்சியின் பிரவாகம் யாப்புக்குள் தடுக்கி விழுகிறது. 

ஆனால் ஆண்டாள் உணர்ச்சி என்பது வெள்ளம்மலை உச்சியிலிருந்து பள்ளம் தேடித் தாவும் வெள்ளம். அது கட்டற்ற காட்டாறு. இதனால்தான் வைணவ ஆச்சாரியார்கள் ஆழ்வார்களின் பக்திநெறி மேட்டுமடை ஒக்கும்ஆண்டாளுடையதோ பள்ளத்துமடை ஒக்கும்” என்று திளைத்துத் தெளிந்து தெரிவிக்கிறார்கள்.


 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஆழ்வார் பாசுரமோ பெரும்பாலும் ஆற்றுப்படுத்துவது. ஆண்டாளுடையதோ ஐக்கியப்படுவது. ஆழ்வார் பாசுரங்களோ அடிமையுறுவதில் ஆனந்தம் காண்பன. ஆண்டாள் பாசுரங்களோ விடுதலைக் குரலின் வீச்சுடையன.
ஒருத்தியால் பாடப்பெற்றதென்றாலும் திருப்பாவைக்கும் நாச்சியார் திருமொழிக்கும் அடிப்படை வேறுபாடு ஒன்றுண்டு. நாச்சியார் திருமொழி காதல் லயத்தில் கனன்ற பாடல்கள். அவை பெரும்பாலும் தன்னுணர்ச்சியில் விளைந்தவை. திருப்பாவையோ யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பொது உணர்ச்சியில் பூத்தவை.

மல்லாண்ட திண்டோள் மணிவண்ணனுக்கென்றே சில்லாண்டு வளர்ந்த செல்வி கண்ணனையே கணவனாய் வரிப்பேன்’ என்று கனவு கண்டாள். அவரைப் பிராயம் தொட்டு ஆர்த்தெழுந்த தடமுலைகள் துவரைப் பிரானுக்கே’ என்று காதல் வஞ்சினம் கண்டாள். அவன் தோள்சேர என்ன வழி என்று எண்ணிக்கிடந்தவள் ஆயர்மங்கையர் கைக்கொள்ளும் பாவை நோன்புற்றாள். அவளுக்குத் திருவில்லிபுத்தூரே ஆயர்பாடி ஆயிற்று. தன்னையும் தம் தோழியரையும் ஆயர் பாவையர் ஆக்கினள். வடபெருங்கோயிலான் திருக்கோயிலே நந்தகோபன் குடிலாயிற்று. கல்லான கடவுளே கண்ணனாகினான். அகமும் புறமும் தம்மைத் தாமே தகவமைத்துக்கொள்ளக் கடவுளை ஓர் ஊடகமாய்க் கைக்கொள்கிறார்கள் ஆயர்குலத்துத் தாயர்கொழுந்துகள். 

நெய்யுண்ணோம்பாலுண்ணோம்நாட்காலே நீராடி மையிட் டெழுதோம்மலரிட்டுநாம் முடியோம்செய்யா தனசெய்யோம்தீக்குறளை சென்றோதோம்” -என்று பெண்மைக்கெல்லாம் பொதுவாகத் தன்மைப் பன்மையில் பாடிக்கொள்கிறாள். ஆனால் திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்

என்ற சொல் விடுதலை ஆண்டாளுக்கு அருளப்பட்டதா அல்லது அகவெழுச்சியின் அத்து மீறலா?

உரைகாரர்கள் இதற்கு வேறுபொருள் கூட்டித் தம் தீராப்புலமையின் திமிர் காட்டுவார்கள். குத்துவிளக்கு என்பது குரு உபதேசம். கோட்டுக்கால் என்பன நான்கு புருஷார்த்தங்கள். மெத்தென்ற பஞ்சசயனமாவது தேவதிர்யக்மனுஷ்யஸ்தாவரஅப்ராண ரூபமான ஜீவர்கள். மேலேறி என்பது இவ்வுயிர்களுக்கு மேம்பட்டவன்” என்று பிரபந்த ரட்சையில் வைணவாச்சாரியார்கள் வலிந்து விதந்தோதினாலும் அதை நயம் பாராட்டல் என்று சொல்லவியலுமே தவிர நியாயம் பாராட்டல் என்று சொல்லவியலாது. இதற்கு நேர்பொருளே ஏற்புடைத்து.

கோட்டுக்கால் என்பது யானைத் தந்தத்தால் நிறுத்திய கட்டில்கால். பஞ்ச சயனம் என்பது அன்னத்தூவிஇலவம்பஞ்சுசெம்பஞ்சுவெண்பஞ்சுமயிற்றூவி என்ற ஐந்தும். தான் வாய் வைக்கும் இடம் இந்த ஐந்தும் கடந்த மேன்மை கொண்டதாய்த் திகழ வேண்டுமென்று அந்த ஆறாம் பொருளைக் கண்ணன் கண்டடைகிறான் என்று கொள்வது கவிதை நயம்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றக்” கனாக்காணும் கோதையாள் பாசுரத்தில் தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது. கொழுந்தமிழும் – செழுந்தமிழும்பழந்தமிழும் – இளந்தமிழும் வசந்த காலக் கிளைகளில் கொழுந்தெழுந்து வருவதுபோல் குழைந்தெழுந்து வருகின்றன. 

மறுபடியும் ஒருபடி மேலேறுகிறாள் ஆண்டாள். கண்ணனின் வாய்ச்சுவையை அறிய விழைகிறாள். எவரிடம் கேட்பதுஅவனோடு உறவாடிய உயர்திணைப் பெண்கள் உண்மை சொல்லார். ஆகவே அவன் இதழோடு உறவாடிய அஃறிணைப் பொருள் ஒன்றை அவாவுகிறாள். அதுதான் அவன் ஊதுகின்ற வெண்சங்காகிய பாஞ்ச சன்யம்.

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

ஆண்டாள் பாடல்களின் உச்சம் என்று சொல்லலாம் இந்தப் பரவசப் பாசுரத்தை.

கண்ணன் வாய்வைத்த சங்கே சொல்! அவன் இதழில் கற்பூரம் மணக்குமாதாமரையின் வாசம் வருமாஇனிக்குமாஅதன் சுவையென்னமணமென்னஎன்பது பொருள். சங்கே நீ உப்புக்கடலில் பிறந்தாய். இனிக்கும் இடம் கிட்டிற்று உனக்கு. திருத்துழாய்ப் பாத்தியில் மணத்தோடு பிறந்தவள் நான். எனக்கேன் இக்கண்ணீர் உப்பு?” என்ற உள்ளார்ந்த தமிழ் நயம் இதில் ஊடாடிக் கிடக்கிறது. ஆண்டாள் இறைத்த நீர் கண்ணன் என்ற கழனி சேர்வதற்கு முன்னால் தமிழ் என்ற வாழையைத் தழைக்க வைத்திருக்கிறது.

காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை’ என்ற மரபு சங்க இலக்கியத்திலேயே மீறப்பட்டிருக்கிறது. என் உயவுநோய் அறியாது இந்த ஊர் துஞ்சுகிறதே என் செய்குவேன்முட்டிக்கொள்ளவோ எவரையேனும் தாக்கவோ வாய்விட்டுக் கதறவோ’ என்ற பொருளில் இயங்கும் முட்டுவேன்கொல்தாக்குவேன்கொல்’ என்ற ஒளவையார் பாடல் அந்த மரபை உடைத்ததுதான்.

கன்றும் உண்ணாமல் கலத்திலும் சேராமல் பசுவின்பால் நிலத்தினிழிந்து வீணாவதுபோல் எனக்கும் பயன்படாமல் என் தலைவனுக்கும் பயன்படாமல் என் அழகைப் பசலை உண்டு போகிறதே என்ற பொருளில் எழுதப்பட்ட கன்று முண்ணாது கலத்தினும் படாது’ என்ற வெள்ளிவீதியார் பாடலும் மரபு மீறல்தான். ஆனால் மணமான பெண்களின் குரல்களாக அவை கேட்கின்றன. ஆண்டாளுடையது கன்னிக்குரல். அப்போதுதான் பூத்தெழுந்த மலரின் புதுக்குரல். கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்தொருநாள் தங்குமேல் என்னாவி தங்கும்” என்று பாயிட்டுச் சொல்லும் தனிமொழியை வாய்விட்டுப் பாடிய குரல் ஆண்டாளின் அகக்குரல். கனவு காணும் வேளையிலும் கலவிகண்டு விண்டுரைக்கும் துணிச்சலும் சுதந்திரமும் ஆண்டாளுக்கு வாய்த்தது எப்படியென்று ஆய்வுலகம் ஆச்சரியமுறுகிறது. 

ஒரு மனிதனோடு எனக்கு மணவினை இல்லை என்று உறுதிப்பட்ட பெண்ணை என்செய்வது என்று பெரியாழ்வார் கலக்கமுற்றபோதுகண்ணன் அவர் கனவில் தோன்றியதாய்ச் சொல்லப்படுகிறது. ஆழ்வீர்! நின்மகளை யாமே மணக்கிறோம்உங்கள் திருச்செல்வியை திருவரங்கம் அழைத்து வாரும்’ என்று பெரியாழ்வார்க்கு ஆணையிட்ட பெருமாள்பாண்டிய மன்னன் வல்லப தேவன் கனவிலும் தோன்றித் திருவில்லிப்புத்தூர் சென்று முத்துச்சிவிகை ஏற்றி ஆண்டாளைத் திருவரங்கம் அழைத்து வாரும்’ என்று ஆணையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பல்லியம் முழங்க மறையவர்கூடி வாழ்த்தொலி வழங்கபோகும் வழியெங்கும் பூச்சிதறநாற்படையும் ஊர்ந்துவரபேரங்கம் முழுக்க அழகுற்ற பெண்ணாள் சீரங்கம் வந்து சேருகிறாள். திருவரங்கக் கோயில் புகுந்துவளர் தந்தையை வணங்கி வழிபட்டுகாதல் நடைநடந்து ஆதிசேடன் கடந்துதிருமால் திருவடி வருடி அவனோடு கலந்தாள்ஐக்கியமுற்றாள். 

இங்கும் சில வினாக்கள் விளைகின்றன.

கடவுள் மனிதவடிவில் வந்து மனிதப் பெண்ணை மணந்து போவது உண்டுவள்ளியும் முருகனும் போல. மனித வடிவத்திலேயே கடவுள் காதல் உண்டுகண்ணனும் ராதையும் போல. ஆனால் கடவுள் திருவுருவத்தோடு ஒரு மானிடச்சி கலந்தாள் என்பது பூமிதனில் யாங்கணுமே காணாதது.
ஆனால்அர்ச்சாவதாரமாகிய விக்கிரகத்தோடு குருதியும் இறைச்சியும் கொண்ட ஒரு மானிடப் பெண் கலந்ததுண்டா என்ற கேள்விக்கு விடைசொல்ல ஓர் ஆவணமும் இருக்கிறது.

குலசேகரப் பெருமாள் தமது புத்ரி சோழவல்லியை அழகிய மணவாளப் பெருமாளுக்குத் திருமணம் செய்வித்துத் தமது சொத்தை ஸ்ரீதனமாகக் கொடுத்துத் திருமண்டபம் கட்டிய செய்தியும்” – என்ற குறிப்பு எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் பதிப்பித்த கோயிலொழுகு’ நூலில் காணப்படுகிறது.

ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும்அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும்ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும்குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும்சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும்கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள். 

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தின் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட “Indian movement - some aspects of dissent, protest and reform” என்ற ஆய்வு நூலில் ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது :

“Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple” – 
பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும்சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப்பார்ப்பார்கள்.

சமண – பெளத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறாய்த் துய்ப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மத நெறிகளின் குறியீடாகத்தான் ஆண்டாளைப் பார்க்கலாம். ஆண்டாளின் பிறப்பு மறைவு இரண்டின் மீதும் விடை அவிழாத வினாக்கள் இருந்தாலும் ஆண்டாளின் தமிழ் நூற்றாண்டுகளின் தாகத்திற்கு அமிர்தமாகின்றது. எண்ணம் திண்ணியதாயின் எண்ணியதெய்துவாய்” என்ற நிபந்தனையற்ற நம்பிக்கையின் நிதர்சனமாக ஆண்டாளைப் புரிந்துகொள்ளலாம்.

கண்ணன் புரிந்துகொள்ள முடியாத ஒரு கடவுள் தத்துவம். தன் காலத்திற்கு முன்கூட்டியே பிறந்துவிட்டவன் கண்ணன். இன்னும் சொல்லப் போனால் மிகமிக முன்கூட்டி. அதனால் அவனைப் புரிந்துகொள்வது வருங்காலத்தின் சாத்தியமே தவிர நிகழ்காலத்தினதன்று” என்ற ஓஷோவின் கூற்று உண்மையாயின் கண்ணனைப் புரிந்துகொண்ட இறந்தகாலத்தின் எதிர்காலம் என்றே ஆண்டாளைச் சொல்லத் தோன்றுகிறது.

ஒன்றையே நினை – ஒருமுகப்படு – ஒப்புக்கொடு – நம்பு – கருதியதில் உறுதிகொள் – வினைப்படு - வெற்றியுறு என்ற தத்துவம் ஆண்டாளுக்கும் கண்ணனுக்கும் மட்டும் உரியதன்று. தலைவனுக்கும் தொண்டனுக்கும்நண்பனுக்கும் நண்பனுக்கும்கணவனுக்கும் மனைவிக்கும்தந்தைக்கும் மகனுக்கும்சத்தியத்திற்கும் வாழ்வுக்கும் இதுவே உரியது.

எட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும்மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கைதான்.

இறைவனையும் இயற்கை இறந்த நிகழ்வுகளையும்கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் கழித்தபிறகும் ஆண்டாள் அருளிச் செல்லும் அருஞ்செய்தி இதுதான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

(Andal) The one who ruled tamil - Vairamuthu - Cinema Lyricst 

Translation - S.Arul Selvaperarasan

 

Margazhi is charming; and has long nights. It washes those nights with its white dew. It has a its gentle sway on human, animal, bird and plant groups. It makes the Ozone layer, which has three oxygen molecules, strong by not letting the ultraviolet rays into the earths environment.

 

The dawn of Margazhi is pleasingly charm. The Baby sleeps touching the mother; The chick sleeps in the embrace of the mother bird; The tree sleeps covered by the leaves; The tank sleeps dashing its banks.Senility sleeps embracing itself.

 

The lovely voice of Andal, commands saying, "Hey young lady bird; why do you sleep yet. arise; come out".  And reaching all the doors it knocks saying,  "O Girls, Won't you come for the Margazhi bath".

 

Getting up early at dawn is a life moral. Bathing in this long winter by Andal is an acidic test for the calor and deteminationresoluteness. This dawn discipline is a ritual, and Kannan is one of the reason for "Paavai Nonbu (Vow of women)".

 

There is a difference between "Karthyayini fast" mentioned in Bhagavada and this the Andal Thirupaavi Fast. Karthyayini fast is a vow observed for acquiring Kannan himself as the husband. "Thirupaavai Nonmbu" is a vow meant only for getting a good bridegroom / husband. (As thiruvembavai 7 says) "My bosom won't embrace whom is not your disciple" is this vow.  But crossing the selfishness,  which would say we should be well and functioning in the general attribute, praying for the welfare of the nation is the dignity of this vow.

 

(As Thirupaavai 3 says) "Our winter’s vow {Maargazhi Nonbu} will bring joy to us. The monsoons shall not fail this fertile land, but bring forth golden heads of paddy. In the still waters where seedlings are planted, tiny fish will jump and dance enchanted. Lotus buds will sway and rock the dreamy bees to sleep. The udders of our cows so grand shall scarce be held in our milking hand. Abiding wealth shall be ours, come!", the Paavai Nonbu vow is beheld to uphold the three sciences - biological, life and social.

 

As Vaishnava grew, the Thirupaavai became influential. Or, as Thirupaavai became influent, Vaishnavam grew.

 

In the course of the life history of Tamils, 6th to 7th century cannot and may not be omitted. The life of tamils, which was in harmony with the nature, got mingled with god in that century. It was only in that century, the tamils who were living in righteousness, started to live with god .

 

After the fall of Jainism and Buddhism, the religion of the Vedas started to unbound its restraints a little. There are religions without god too. But there are no religions without men. After this true wisdom had popped up, it loosened its compactness and came down to the people.

 

Severe procedures as the Yaga, Yajna, Austerity and Penances were thrown out and  the new concessions of attaining salvation projecting Vatsalya (love), Karunya (compassion), and Sowlapya (ostentation), which were considered to be the virtues of gods were taught. Whether or not religion was required for the people of all castes,  the people from all castes were required for the religion. They thought to break the cast layer with the religion, which had concentrated them itself. Azhwars too believed like the Nayanmars, "Love for god is the only medicine for sorrow".

 

Thondaradipodi Azhwar roared "Caste discrimination has been annihilated" by saying, "Those who become my disciple, even if they were from lower castes, they may worship and receive my protection".

 

The later intellect which says, "Without annihilating class discrimination, caste discrimination may not be annhiliated"was not known on those days. A small ecstasy of the thought that all are equal before god alone gathered them and got them to go ahead.

 

Thirumaliam called Vaishnavam is not new to the tamils. The limitation that, "The diety of forest based land is maayon" is cited in Tholkaapiyam. The myth of Kannan and Balaraman were put to use in Puranaanooru itself. When Karikannanar beheld, the Chola Perundhirumaavalavan, who fell in Kurapalli and The Pandya Peruvazhudhi, who fell in Velliambalam to be close, he sang, "I behold this scene, as the great devas, the palm bannered one of milk hue and Nemiyon of blue hue were seen to be united" (in Puram 58).

 

Karikannanar, who visioned the Chola and Pandya to be as united as Kannan and Balaraman, says them as "Devas (Deivam)" in a clear rhetorical term. Those who were celebrated as Devas in Sangam literature, were seen to be raised to the status of  God in the Seventh Century.

 

There is a minute difference between Deva and God. Deva means an old usual thing; but God means a supreme unusual thing. "He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Devas who dwell in heaven" (kural). Here Deva is a fellow thing, which guides the way. God means a thing to be worshipped. Which may not be attainable. Which may not be attainable to everyone. Even that unattainable thing may even be attained; and even be joined in hands as the husband. It appears to think that, may be Andal is a theory, represented in a symbolic way to quote, "Thinking constantly and maturing in love is the only way to attain God".

 

Some live questions are found to be interacting throughout Andals life, in-between her birth to the day she disappeared with the Mayon of Srirangam. Andal was not the daughter of Periyazhvar. She was the gold found in Srivilliputhur Thulasi Garden. If so, who were her parents? What clan was her as per the practices observed on those days?

 

The next question is, in which time did Andal live? As per the Guru parampara notes, Samikannupillai calculated it to be 776AD. As the Thirupaavai indicates, "Venus ascended and Jupiter slept", scholars in Astronomy calculates the day to be December 18, 731AD.

 

If the statement of M.Raghavayyangar, "The Azhwars age was from the later part of the fifth century to the former part of the Eight Century" would be true, putting Andal's age to be in the mid of the eighth century would not be doubted.

 

In the eight century, when women were considered to be household property, or any thing to be locked, how was a woman called Andalformed to be the material of song in Perumal Sannidhi? The violations of tradition often occur in the life of Andal. A girl, often hearing Perumal's sacred names sung by Periyalvar, becomes crazy on Perumal. She enjoys the divine love.

 

She thinks that her body, the beauty and her soul, were the object to be offered to Kannan alone. The flower garland which was made by Periyazhvar for the one who had a great north temple, and who was called as Vadabadrasayi, was worn and enjoyed by her. (When he saw it) Each and every tissue of his (PeriAzhwar) body seemed to be writhing separately. His heart broke thinking this to be a great trespass. That night, Lord Kannan appeared in his dream. Saying, "Wearing the garlands, those worn by her is a pleasure" he disappears. Seeing the glory of Kodhai, Periyazhvar stood crazy.

 

The daughter grew up to be a woman. The milky ocean, the crescent which was reared, arose coaxingly and stood as a full moon. When a groom was sought for the daughter, another reaction happened. "How can I live with a mortal? O father, this will not happen" said the one who was lying with her bosom against the decorative kolam.

 

She says, "I wouldn't live to hear, that my bosom embraced a mortal". Again she says resolutely, "I will not bear to hear, that the garden where Maal lives, would be for anyone other than my Maayavan".

 

This lady voice, which was not at all heared before in a tamil evironment, was able to be uttered by the daughter of Periyazhvar. How can this voice of liberation be possible? What was the preview for this determination and emotion?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

In the twelve Azhwars, eleven were male. This one was the only Female Azhwar.But this one who wasready to spread her saree front and lay with perumal, supersedes all other male Azhwars in the creamy language, in the beauty of tamil, in the flexibility of emotion, in the tone of rights. What is the reason?

 

In the voice of Kulasekara Azhwar, "May the destiny be, me born as a little fish in the cool glens of Thiruvenkatam, where flowers spill nectar", a devotees choice of want on salvation alone becomes the foremost. In the poem of Boodhathaazhwar, "I who wrote this song that bestows wisdom, with love as the lamp, endearing involvement as the lubricant ghee,and knowledge as the wick of the burning torch, dedicated myself to the service of the Lord", the tenderness of a devotional mind stands high.

 

In the hero heroine mindset (the Nayagan Nayagi Bhavam) of Nammaazhwar, sending message through Kurugu birds to Perumal, who resides in Thiruvavandoor, emotions do not cross the truth/logic. As a one who suddenly transformed to Vaishnava, having mixed thiruneeru and wearing thiruman, the emotional flow falls tumbling in prosody.

 

But Andal's emotion is a flood; falling from the high, leaping and searching the low places. That is a boundless flooded jungle stream. That is why Vaishnava Aacharyas say in joy, "The devotional moral of other Azhwars may represent the high stream, but Andal's represent the low stream".

 

The poems of Azhwars are mostly to get in the right way. But Andals poem do amalgamation. The poems of Azhwars cite joy in servitude. But Andals poem does have the voice of liberation.

 

Though Thirupaavai and Nachiyaar Thirumozhi were sung by one person, there is a fundamental difference. Nachiyar thirumozhi poems were sung in the burden of love emotions. They were mostly composed in a self emotional mindset. But the poems in Thirupaavai, were blossomed from the feeling, "May this world get joy as I got".

 

She dreamt, "I the Selvi, grew making flower garlands for Manivannan who has the wrestling shoulders, will have that Kannan himself as my husband". She raged saying, "My amorous breasts have swelled and grown mature precocious, prays make haste and deliver them to Krishna, Lord of Dvaraka". She, who thought, which was the way to meet his shoulders, observed the Paavi nonbu practiced by Ayar women. Srivilliputhur became her Ayarpadi. She made herself and her friends as Ayar women. The temple of Vadabadrasayi became the asylum of Nandagopa. The god made of stone became Kannan. The mothers of Ayar clan adopt God as a medium, for adapting themself with the self.

 

She mentions herself singing in plural as, "We shall abstain from milk and Ghee. Bathing before dawn, we shall not line our eyes with collyrium, nor adorn our hair with flowers. Regaining from forbidden acts, avoiding evil tales".

 

But how come Andal crossed the line of severe restriction prevalent in those days with Thirupaavai 19th poem and in Nachiyar Thirumozhi? What led to the sexual conversation of a woman, who had not lost virginity?

 

She says, "Speak, O Flower chested one, lying in a room with a lamp of oil burning softly, ascending on a soft mattress of five ingredients, over an ornate tusk legged bed, resting the flower coiffure Nappinnai’s breasts on your chest!". Was this liberty of speech granted to Andal? Or  was it a breach of mental excitement?

 

Commentators may add other meaning to this, manifesting their inexpiable poetic impudence. Though Vaishnava acharyas, have astonishingly interpreted in this strain as, "Lamp means the Guru's instruction. Tusk legs means the four Purusharthas (Dharma, Artha, Kama, Moksha). Soft mattress of five ingredients means embodiment of the souls, viz.deva, driyak, manushya, sthavara, aprana. Ascending on a bed and lying means the one, who is supreme to these creatures" and so on in Prabhandha Rakshas, that may be said as flattering beauty, but not be held as a justified felicitation. The direct meaning alone is agreeable here.

 

Tusk legged bed means, a bed standinf on elephant tusks.  Five ingredient of the mattress are swan's feather, silk cotton, red cotton, white cotton and pea**** feather. To mean that Kannan, finds a sixth place for resting his mouth other than thes five soft ingredients is the beauty of poetry.

 

In a poem where Kodhai dreams, "Drums beat and conches blew under a canopy of pearls on strings. Our Lord and cousin Madhusudana held my hand in his", tamil sports there leaving apart the shyness. As the sprouts arise in the branches of the spring season, plump and rich, old and young tamil arises flexibly.

 

Andal ascends a step further. She tends to know the taste of Kannans mouth. whom to ask? Live women who were in relationship with him, won't tell the truth. So, she desires to have an inanimate thing, which had a relation with this lips. That was the white conch shell, Panchajanya he blew often. " Tell me, O White Conch, I am eager to know. Does the mouth of our killer-of-the-rutted-tusker Lord Madavan bear the aroma of camphor, or the fragrance of lotus? Are his auspicious lips sweet to taste?"

 

This ecstatic poem may be said as the peak of Andal songs.

 

The meaning of which is "O conch, in which Kannan has placed his mouth. Does the aroma of camphor be smelt in his lip? Does it smell as the lotus? Will it be sweet? What is its taste? What is its fragrance?" An inherent tamil beauty is interactive here as, "O conch, you were born in the salty sea. But you had a sweet place. I was born with fragrance in a tulsi garland. Why do I have this salty tears?" The water puddled by Andal, has sprouted the Tamil plantain, before reaching the Kannan field.

 

By saying, "Women, who are afflicted with love, don't usually tell that message" the legacy has been violated in Sangam literature itself. The poem, "Shall I dash or Shall I attack?", meaning "What may I do? This town sleeps without knowing my disease. Shall I dash, or shall I attack whomsoever, or shall I cry lamenting" by Avvaiyaar has also violated the legacy.

 

The Poem, "drunk not by the calf, attaining not the vessel", meaning "As the cow's milk that is drunk not by the calf, attaining not the vessel, spilling waste in the floor, so my beauty is eaten by lust disease, without being useful to me or to my lord" by Vellivedhiyaar is also a violation. But they are heard as the voices of wedded women. Whereas, Andal's voice is of a virgin.The new voice of the flower that blossomed just then. Andal's mind voice composes a poem in an unique articulation "If only he will give this serf of his the bliss of union one day, erasing off the Kumkuma smeared on my breasts, I may live". The possibility of the courage and the liberty that Andal had,  in beholding sexual union even when dreaming and speaking the subject which is not spoken, drives the research scholars to a surprise.

 

When PeriyAzhwar being agitated by the thought, "What to do with a girl, who is in this determination, that she may not wed a mortal?", it is said Kannan appeared in his dream. It is said that Perumal commanded PeriyAzhwar, "O Azhwar, I am to wed your daughter. Bring your Thiruchelvi to Thiruvarangam", and then appearing in the dream of king Vallabha Deva too and commanded, "Go to Srivilliputhur, and having Andal in the pearl palanquin, return to Thiruvarangam".

 

"Diverse musical instruments roaring, the crowd of Brahmanas blessing, flowers scattering all the way, in the pursuit of four forces, the beautiful woman arrives at Srirangam. Entering into Thiruvarangam temple, worshiping her foster father, walking romantic, crossing Adhisesha, touching the feet of Thirumal, she got united with him".

 

Some questions arise here too.

 

(We know) God comes in human form and weds a human woman; like Valli and Muruga. God's love is there in human form too; like Kannan and Radha. But for a human woman to unite with a divine form of God is not seen in the world elsewhere.

 

But Can a human girl, made of flesh and blood able to unite with a God manifest idol? There is document too to answer this question.

 

A note that, "The news of, Kulasekara Perumal, having bestowed his daughter Chozhavalli in marriage to Azhagiya Manavala Perumal, giving his property as dowry and constructed a divine hall" is found in the book called "Koyilozhugu", which was published by S.Krishnaswamy Iyengar.

 

Because Andal was not born to PeriyAzhwar, and because nothing have been obtained (as evidence) about her birth, and because the caste-based society would've been in hesitance to accept one as noble, whose clan is unknown, even when she was fostered by a brahmin himself, and because Andal herself attained the sexual freedom of speech in fury, which was denied by the society, and because offering a girl to a temple was approved by the government and the society, some research scholars tend to take a conclusion, which may be a culture shock.

 

In the book "Indian Movement: some aspects of dissent, protest and reform", which was authored by Subhash Chandra Malik and published by Indiana University of America, is mentioned, "Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple".

 

Devotees would not accept this. But the ones againt male domination and the ones in denial with the religious community would consider this.

 

Andal must only be perceived as the symbol of the principles laid by the religion of those days, which opened the gates of pleasure, discrepent to the severe principles of Jain and Buddhist religions. Though no answers have untied the questions, both in the birth and the demise of Andal, her tamil becomes a nectar to the centuries of thirst. With the unconditional belief that, "You will meet what you think, if the thought be strong", Andal would be understood obviously.

 

If Osho's speech, "Kannan is an inconcievable divine philosophy. Kannan has born much in advance to his time. Infact more and more advanced. Therefore understanding him is possible (only) in future; but not present" would be real, it seems to say, Andal was that future, which understood Kannan in the past.

 

The philosophy of, "Think about one - Concentrate - Entrust - Believe - Determine in thought - Act - Obtain victory" is not the right of Andal and Kannan only. It is the right of a master and slave, friend and  a friend, husband and a wife, father and a son, truth and life too.

 

The first capital of human race to attain the unattainable and to get the ungettable, is the belief in believing.

 

 

It appears to say, even after deducting God, the natural events of the past and structured imagery, that this is the special message granted by Andal.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இந்துமதத்தை ஆராய கிறித்துவ பன்னாடைகள் யார்?
திருவள்ளுவர் முதல்கொண்டு கிறித்துவர்கள் என்பதும், தேவாரம், திருவாசகத்தை கிறித்துவ நூல்கள் என ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெறுவதற்கு யார் உரிமை கொடுத்தது?
தமிழக கல்வியை இந்தளவுக்கு கேடாக மாற்றிய அன்னிய கைக்கூலிகள் திராவிட இயக்கங்களை எப்பொழுது எதிர்த்து களம் இறங்கப்போகிறோம்?
சொல்லுங்கள் இந்துக்களே...
அதனுடைய தொடர்ச்சிதான் தாயார் ஆண்டாளை தேவதாஸியென கட்டம் கட்டியதும்... எதிர்ப்பு வந்தவுடன் தேவதாஸி உயர்ந்த சொல் என பம்முவதும், சைமன் வகையறாக்கள் 1300 ஆண்டுகளுக்கு முன் இந்துமதமே இல்லையென்பதும், பின் நாங்கள் சைவர்கள் என பினாத்துவதும்... இவையல்லாம் இந்துமதத்தை அழித்து அங்கு கிறித்துவத்தை நிரப்ப செய்யும் மாபெரும் சதி... நமது பண்பாட்டை அழிக்கும் துரோகச்செயல்.. அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.. உங்கள் பெயருக்கு அவர்கள் இனிஷியல் போட நினைக்கிறார்கள்.. நீங்களோ நம்மோடு சேர்ந்து போராடுபவர்களை விமர்சனம் செய்கிறீர்கள்...
மீண்டும் ஒரு வரலாற்றுத்தவறினை செய்யத்துனியாதீர்!
#ரவுத்தரம்_பழகு


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கண்டுக்கொள்வோம்.. வைரமுத்துவின் அயோக்கத்தனத்தை...
அரவிந்தன் நீலகண்டனின் பதிவிலிருந்து!

மிகவும் பிரபலமாக பேசப்படும் ஒரு காணொளி. திரைப்பட பாட்டுக்கூலியான வைரமுத்து அவருக்கே உரிய செயற்கையான முக கோணல்களுடன் கேட்கிறார்: ‘ ராமன் அவதாரம் என்றால் அவனுக்கு இந்திரியங்கள் கர்ப்பம் தேவை இல்லை. எனவே அவன் பிறந்த இடம் என ஒன்று எதற்கு? அவன் கோசலை வயிற்றுதித்தவன் என்றால் அவன் மனிதன். மனிதனுக்கு எதற்கு கோவில்?’ ஏதோ பெரிய கேள்வியை கேட்டுவிட்டாராம். அதற்கு எவராலும் பதில் சொல்ல முடியவில்லையாம். உடனே எதிரில் இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளும் கிளர்ச்சியுடன் கை தட்டுகின்றன.

இதே ஆள் தனக்கு தமிழ் புகட்டியதே ஆண்டாள் என்கிறார். இப்போது நமக்கு ஒரு கேள்வி வருகிறது. இந்த ஆள் நிஜமாகவே ஆண்டாளை படித்திருக்கிறாரா? என்றால் ‘தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை’ என்று பாடுகிறாளே. யாரை பாடுகிறாள்? மாயனை பாடுகிறாள். அவனை ‘வாயினால் பாடி மனதினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்’ என்கிறாள். ’எப்படி மனித கர்ப்பத்தில் வாசம் செய்தவன் தாயை குடல் விளக்கஞ் செய்தவன் - அவனை வாயினால் பாடி மனதினால் சிந்திக்க எல்லா பாவங்களும் தீயினில் எரியும்?’ என்ற கேள்வி வைரமுத்துவுக்கு எழாமல் போனது ஏன்? எப்படி தாயின் வயிற்றில் இருந்த ’மானுடன் ’ ஓங்கி உலகளந்தவனாக முடியும் என்கிற கேள்வி எழவில்லை?

அட ஆண்டாளை விடுங்கள். இதைப் போன்ற அற்பத்தனமாக கேள்விகளைத் தாண்டிய அற்புத கேள்வி முரண்களை இளங்கோ அடிகளே எழுப்பிவிட்டார் - ஆய்ச்சியர் குரவையில். உதாரணமாக ஒன்று:

அறுபொருள் இவனென்றே அமரர் கணம் தொழுதேத்த
உறுபசி ஒன்று இன்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ உண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

அமரரர்களால் ஆதி பரம்பொருள் அறுதி பொருள், அறு சமயத்தின் உட்பொருள் என்றெல்லாம் கருதி வழிபடப்படும் நீ அனைத்து இருப்பையும் பிரபஞ்சம் முழுவதையும் யுக முடிவில் உண்பவன். கிறிஸ்தவ இஸ்லாமிய இறை கோட்பாடுகள் போல கோபம் கொண்டு இறைவன் அழிப்பதில்லை. பிரபஞ்சத்தின் உல்பத்தியும் அழிவும் இயல்பானவை அவை கரைந்து இறுதி வஸ்துவாக எஞ்சுவது பரம்பொருளே. எனவே உறுபசி ஒன்று இன்றியே உலகங்களையெல்லாம் உண்பவன். ஆனால் அவனோ ஆய்ச்சியர் வீடுகளில் வெண்ணெயை களவு கொண்டு உண்கிறான். இது என்ன மாயம் என கேட்கிறார் இளங்கோ அடிகள். மானுட அவதாரமாக இறை செய்யும் லீலையை நிர்குண பிரம்மமாக பிரபஞ்சமனைத்தின் உட்பொருளாக அறுபொருளாக இருக்கும் கடவுளுடன் பொருத்தி அதிலுள்ள முரண்வெளியில் இருக்கும் ஆன்மிகத்தை உணர வைக்கிறார்.

ஆண்டாளையும் புரியாமல் இளங்கோ அடிகளையும் படிக்காமல் ‘ராமன் கருவில் பிறந்தால் அவன் கடவுளா?’ என கேட்கும் தன் அறிவின்மைக்கு அஞ்சாத அடுமடையனாக இருக்கும் ஒரு ஆசாமி தான் தமிழை ஆண்டாளிடம் கற்றேன் என்கிறார். எனவே நம் கேள்வி. ஆண்டாளின் ‘தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன்’ என்கிற வரியைப் படித்த பிறகும் நீ ராமன் கருவில் பிறந்தவன் கடவுளா என கேட்டால் ஒன்று உனக்கு ஆண்டாள் புரியவில்லை அல்லது தெரிந்தே மேடையில் கைத்தட்டு வாங்க பொய் சொல்லியிருக்கிறாய். எது உண்மை வைரமுத்து?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ராமர் கடவுளா அல்லது மனிதனா? கடவுள் என்றால் எப்படி கோசலை கர்பத்தில் பிறந்தான்? மானிட கர்பத்தில் பிறப்பவர் எல்லாம் கடவுள் ஆகாது என்று சொன்னாராம் வைரமுத்து..

நாத்திகனின் இந்த பேச்சில் எனக்கு பெரிய அதிர்ச்சி எல்லாம் இல்லை..

நம் சகோதர சமயத்தவரே, மானிட கர்பத்தில் தோன்றியவர்கள் எல்லாம் ஈஸ்வரனாக ஆக இயலாது என்று பல தடவை பேசி எழுதியவர்கள்தான்.. பல தடவை இங்கேயே அவைகளை படித்துள்ளேன். பகவான் ஸ்ரீமன் நாராயணர் ராமர் கிருஷ்ணர் அவதாரங்களில் தாயின் கர்பத்தில் தோன்றியவர். ஜட உலகில் ஜட கர்பத்தில் பிறந்ததால், முக்குணங்களால் பாதிக்க படுவர். அப்படி முக்குணங்களால் பாதிக்கபடுபவர் நிச்சயம் ஈஸ்வரனாக இயலாது என்று இவர்களின் பல பிதற்றலை கண்டுள்ளேன்.

மெத்த கற்றதாக, தங்களை தானே எண்ணி கொண்டு
பல தடவை வைஷ்ணவ , விஷ்ணு தூஷணைகளை இவர்களே செய்கையில்..வைரமுத்து போன்ற நாத்திக அறிவீலிகள் செய்யும் பிதற்றலை கண்டு என்ன அதிர்ச்சி வேண்டி கிடக்கு?

இப்படிபட்ட ஆத்திக நாத்திக அறிவீலிகளுக்கு கீதையின் இரண்டு சுலோகங்களை மட்டும் சமர்க்கிறேன்.

மனித உருவில் நான் தோன்றும்போது முட்டாள்கள் என்னை ஏளனம் செய்கின்றனர். எனது பரம இயற்கையை, அதாவது, இருப்பவை அனைத்திற்கும் நானே உன்னத உரிமையாளன் என்பதை அவர்கள் அறியார்கள். 9.11

நான் பிறப்பற்றவனாக இருந்தாலும், எனது திவ்யமான உடல் அழிவற்றதாக இருந்தாலும், உயிர்வாழிகள் அனைவருக்கும் நானே இறைவனாக இருந்தாலும், நான் எனது சுயமான திவ்ய உருவில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன். 4.6



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

30_01_2018_005_012.jpgImage may contain: one or more people and text

 



-- Edited by Admin on Tuesday 30th of January 2018 07:34:12 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

IMG-20180122-WA0022.jpg?part=0.1&authuse



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

👇👇👇👇👇👇👇
*வைரமுத்து* 
*கவனத்திற்கு* 
😡😡😡😡😡😡😡😡
கவிஞர் உமா சங்கர் 
சேலம்
😡😡😡😡😡😡😡😡

நீர் இயற்றிய 
தமிழாற்றுப்படை 
தமிழுக்கு இழுக்கு 
தமிழனுக்கு அழுக்கு 
நீ தமிழின் 
அறம்தனைக் கூறும் கலைஞனா ...?
இல்லை
அரமென ராவும் கொலைஞனா ...?

கம்பராமாயணத்தில் 
கிஷ்கிந்தா காண்டம் 
வாலி வதைப் படலம்

வாலியை இராமன் 
வதைத்த பிறகு 
வாலி சொல்வதாக 
கம்பன் வரியில்

தேவியைப் பிரிந்த
பின்னை 
*திகைத்தனை* போலும் 
செய்கை

என்பதில் 
*திகைத்தனை* என்பதற்கு 
மதிமயங்கல்
புத்தி சுவாதீனம் 
அதாவது
வாலி *இராமனை* 
புத்தி சுவாதீனமில்லாதவன் 
என்று கூறுவதாக
கம்பன் வரியை
அவதூறு செய்திட்ட 
டை மண்டுவே

உன் 
தறுதலையான புரிதலை 
என்னென்பது ???
ஏதென்பது ???
உன் 
பா வளம் பாலைவனமானதோ..?

கண்டொன்று சொல்லேல் 
சொற் சோர்வு படேல் 
சித்திரம் பேசேல் 
சுளிக்கச் சொல்லேல் 
எனும் ஆத்திச்சூடியை
மறந்தனையோ...?

உன் அறிவுப்பேழை 
ஏனிப்படி சமீபகாலமாக 
அழிவுப்பேழையாய் .....
அடம்பிடித்து தடம்புரண்டு
முடமாகி விடமாகி...

திகைத்தனை 
என்பதின் சொற்பொருளை 
அகராதிகளில் தேடினேன் எனும் 
உன் கூற்று ...
கேலிக்கூத்து ....
ஊழிக் காத்து .....

சாதாரண வார்த்தைக்குண்டான 
பொருளை எவரேனும் 
அகராதியில் தேடுவரோ.....?
சாமானியரும் 
அறிந்த அர்த்தத்தை 
கவிப்பேரரசு 
பட்டம் சூட்டிக்கொண்ட உனக்கு 
தெரியாதா என்ன.......?

இந்த 
ஒப்பனை அரிதாரம் 
வேடம் கபடம் 
எதற்காக.....யாருக்காக.....?

கரை சேர்க்கும்
கலங்கரை விளக்கத்திற்கே
களங்கம் கற்பிக்கும் 
உன் ஈனச் செயல்
களங்கமே அமங்களமே...

பழிப்பன பகரேல் 
பிழைபடச் சொல்லேல் 
நைவினை நணுகேல் 
தெய்வ மிகழேல்
ஔவை கூற்றுகள்
நினைவுக்குள் வாராதோ..?

ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியை 
அசிங்கப்படுத்துவதே
உன் உள் நோக்கமன்றி
வேறில்லையோ...?

உன்மனம் மலம் அவலம் 
எண்ணம் இருள் வண்ணம் 
என்பது திண்ணம்

இந்துமததெய்வங்களை 
இழிவுபடுத்தும் உன் 
துன்மதி துர்மதி 
குறுமதி சிறுமதி 
விளைவித்த வெகுமதி 
இனி நீ ---
திருமிகு வைரமுத்து அல்லவே 
துருமிகு தகரப்பொத்தலே .....

அன்று 
அன்னை ஆண்டாள் 
இன்று 
ஸ்ரீஇராம பிரானா...?

உன் வயிற்றுக்குச் சோறூட்டிய 
தமிழன்னைக்கே 
பொறுக்காதே 
நீ 
போற்றவிலை எனினும் 
தூற்றாமலாவது .....

நன்றி மறவேல்.....
வஞ்சகம் பேசேல் 
வேண்டி வினைசெயேல்
தூக்கி வினைசெய்

உன் சிறுமைத்தனம் 
பெரும்பான்மையின்
பொறுமைத்தனத்தாலா.....?

ஏய் ஹிந்துவே......
உன் பொறுமை
வெட்ககரமானது 
வேதனையானது 
துக்ககரமானது 
துடிதுடிக்கச்செய்வது 
இன்னும் 
எத்தனையெத்தனை காலம்தான் 
எத்தனை அசுத்தனை
கண்டிக்காது தண்டிக்காது
உணர்வின்றி மரத்துப்போய்.....

ரௌத்திரம் பழகு

கல் தோன்றி 
மண்தோன்றா காலத்து 
முன் தோன்றிய மூத்தகுடியின் 
பைந்தமிழை செந்தமிழை 
அலங்காரப் படுத்தவில்லை 
எனினும் 
அலங்கோலப் படுத்தாதே.....

மொழி வளர்ச்சிக்கு 
அடிகோல் இடாவிடினும்
மொழி தளர்ச்சிக்கு 
அடியிட்டு விடாதே

வார்த்தைகளுக்குரிய 
அர்த்தத்தை உணர்ந்தும் 
ஆலகால விஷமாய்
அனர்த்தத்தை உமிழ்வதேன்...?

தேன்தமிழின் 
தெய்வீகத்தமிழின் 
கலை கலாச்சாரம் 
ஒழுக்கம் பண்பாடு 
இலக்கணம் இலக்கியம் 
விஞ்ஞானம் மெய்ஞானம் 
மருத்துவம் ஆன்மிகம்
நாள் கோள் வாழ்வு வளம் 
யாவும் 
ஆலயத்தோடும் ஆண்டவனோடும் 
பின்னிப் பிணைந்த ஒன்றென

அறிந்தும் 
நீ அறியாதவனாய் 
தெரிந்தும் 
நீ தெரியாதவனாய் 
புரிந்தும் 
நீ புரியாதவனாய்

இந்து தெய்வங்கள் மீது 
வெறுப்புணர்வு
காழ்ப்புணர்வு 
ஏன்...ஏன்...ஏன் ...?

உன்
கள்ளமும் கபடமும் 
சூதும் வாதும் 
வஞ்சகமும் சூழ்ச்சியும் 
நினைவூட்டல் தரும் 
ஒரு வாசகம் ...
கெடுவான் 
கேடு நினைப்பான் 
எனும் திருவாசகம்

ஒருவனுக்கு ஒருத்தி எனும் 
உயர்ந்ததோர் ஒழுக்க நெறி 
வாழ்ந்து காட்டிய

உதாரண புருசனை 
இதிகாச நாயகனை 
அவதாரத் திருமகனை 
அவதூறு செய்திட

உனக்கென்ன 
தரம் தராதரம்
அருகதை
யோக்கியதை .....?

உன் 
இல்லறவியல் 
களவியல் 
சர்ச்சைகளென
உன் தனிப்பட்ட வாழ்வின் 
தரம் குறித்து 
விமர்சிக்க விரும்பவில்லை .....

உன் 
அகந்தை ஆணவம் 
அகங்காரம் செருக்கு 
இறுமாப்பு தலைக்கனம் 
அகம்பாவம் கர்வம் 
திமிரு கொழுப்பு 
மமதை இன்னும் 
இத்யாதி இத்யாதி தனை

சிந்தை நினைக்க நினைக்க 
சீச்சி என்றது 
மனம் தினம் அதனை
அசைபோட அசைபோட உனை
வசைபாடத் துடிக்கிறது

நீ ஒன்றும்
நினைத்த மாத்திரத்தில் 
கவிபுனையும் கம்பனாய் 
கொம்பனில்லை .....

ஆமாம் ---

உன் சிந்தையில் 
ஏனிந்த குப்பை ...?
உன் எண்ணத்தில் 
ஏனிப்படி ஓட்டை ...?
உன் பேச்சினில் 
ஏனிந்த மூடத்தனம் ...?
உன் போக்கினில் 
ஏனிந்த கொடூரம் ...?

அதிமேதாவி எனும் நினைப்பில் 
அடி மூடனாய் .....
அற்பத்தனமான உன்கருத்து 
அறிவீனத்தின் வெளிப்பாடாய்.....

யோசித்து யோசித்தும்
சிந்தையை
யாசித்து யாசித்தும்
உன் போக்குக்குக் 
காரணம் புரியவில்லை
அன்னையாம் ஆண்டாளை 
அவதூறு செய்திட்ட போதே 
மூக்கறுபட்ட சூர்ப்பனகையாய்
மூளியான பின்பும்
மீண்டும் இராமனை சீண்ட
உன்னை தூண்டியது எது ?

தசை மாறியதால் 
நீ திசைமாறினாயோ ...?
இல்லை 
பசை கூடியதால் உன் 
இசை மாறியதோ ...?

கோடானுகோடி 
ஆன்மீகவாதிகளின் 
இதயத்தை 
இரணப்படுத்தி
காயப்படுத்தி
குளிர்காயும் உன்னை

நாளும் கோளும் 
நாழிகையும் தண்டிக்கும்
நேரமும் காலமும் 
பொழுதும் கண்டிக்கும்

பாவலனா நீ ...
சீச்சீ ...
கேவல னாய் நீ ...

உன் விபரீதபுத்தி 
அறியா சனம்

தம் இதயத்தில் 
உனக்குத் தந்த 
அரியாசனம்

அறியாத்தனம் 
தெரியாத்தனம் 
புரியாத்தனம்

ஏதோ ஏனோ ஆயினும்

உன் கண்ணியம்
அமரத்துவம் அடைந்துவிட்டது 
என்பதே நிதர்சனம்
உண்மை மெய் சத்தியம்

"ப" மூன்றாம் 
பணம் பதவி பட்டம் என 
தமிழால் யாவும் பெற்றநீ
உன் நெஞ்சத்தைத் 
தொட்டுச் சொல்லு ......

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் 
ஈடு இணையற்ற காவியத்தில் 
காப்பியத்தில் குற்றமா ???

அண்ணல் ஸ்ரீ ராமபிரான் 
எனும் 
குற்றமில்லாக் கொற்றவனை 
குணவானை 
சற்றும் சிந்திக்காது 
குற்றம் சுமத்திய கொடுங்கோலனே 
நெடுங்காலமாய்
உனக்கினி 
கெடுகாலமே .....

வஞ்சக நெஞ்சமாயினும் 
கிஞ்சித்தும் சிந்திக்காதோ???

உன் சொல்லாடலால் 
அசிங்கப்பட்டது
அவலப் பட்டது 
அயோத்தி ஸ்ரீராமன் அல்ல 
அயோக்கியன் நீ நீ நீயல்லவோ .....

கற்றதனால் ஆய பயனென்கொல் 
வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

வயது கூடக் கூட 
மறதி கூடலாம் 
மமதை கூட லாமோ.???

படைப்புகள் கூடக்கூட 
பெருமை கொள்ளலாம் 
சிறுமை கொள்ளலாமோ ???

எதனால் எதற்காக யாருக்காக 
யார் எவருடைய 
புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு 
ஸ்ரீஇராமனை 
இகழ்ச்சிக்கு ஆட்படுத்தினாயோ...??? 
அறியேன் .....

ஆயினும் 
ஒன்று சொல்கிறேன் 
உன் தலைகனம் 
உனை சாய்க்கும் 
உன் மடத்தனம் 
புகழ் மாய்க்கும்

துர்நாற்றமெடுத்த வாடையாய்
சோடை போன பீடையாய்
அனர்த்தத்தை அர்த்தமென
பொய்யை மெய்யென
புறங்கூறித் திரியும் புரட்டே
சாடையாய் சொல்லிப் பயனிலை 
கவிச்சாட்டையடி சொடுக்க 
விரும்பியே இக்கவி .......

பாடையில் முடையு முன் 
நவதுவாரமும் மூடுமுன் 
தவற்றை உணர்வாயோ ...?

அன்னை ஆண்டாளிடமும் 
அயோத்தி ஸ்ரீராமரிடமும் 
மன்னிக்க விண்ணப்பஞ்செய்

பரிகாரந் தேடு 
பரந்தாமனை நாடு
ஹரிஹரனை பாடு

அன்றில் 
இகத்தில் மட்டுமல்ல 
பரத்திலும் 
படுவாய் கெடுவாய் மடுவாய்...
கொடுவாயனே.....

கோடானுகோடி ஜீவன்களின்
நெஞ்சங்களின் 
மனக்குமுறல்கள் 
உறுமல்கள் 
பொருமல்கள்
வருத்தங்கள்

விருத்தமாகி விருட்சமாகி 
தூண்டும் 
யாண்டும் அடியேன் வேண்டும்

அருணகிரி உச்சி ஒளிர் 
அக்கினி ஜோதிப்பிழம்பு 
சத்தியமாய் நித்தியமாய் 
உன்னைச் சுட்டே தீரும் .....
இதுவே நியதி 
இயற்கையின் நீதி.....

தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும்

ஓம் நமசிவாய......
கவிஞர் உமாசங்கர்
சேலம்
9994271870
9361038912

தயவுசெய்து அனைத்து 
சமூக வலைத்தள 
குழுமத்திலும் பகிரவும்...



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard