New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வைரமுத்துவின் தொடரும் பித்தலாட்டம்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
வைரமுத்துவின் தொடரும் பித்தலாட்டம்
Permalink  
 


தாசியை வேசி என திரித்து மதக்கலவரத்தை தூண்டுகிறார்கள்: வைரமுத்து விளக்கம்

 
vairamuthu-on-andal-issue

ஆண்டாள் சர்ச்சை குறித்து விளக்களித்து வீடியோ வெளியிட்ட வைரமுத்து, ஆண்டாளின் புகழ் பாட ஆசைப்பட்டது தவறா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆண்டாள் குறித்து ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்து கட்டுரை ஒன்றினை வாசித்தார். வைரமுத்து வாசித்த கட்டுரையில் ஆண்டாளை தேவதாசி மரபைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது போன்ற மேற்கொள் ஒன்றினை பதிவு செய்திருந்தார். ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கட்டுரைக்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த பிரச்சனை நீடித்து வருகிறது. வைரமுத்து இரண்டு முறை வருத்தம் தெரிவித்த போதும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. 

இந்நிலையில், ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக வைரமுத்து இன்று வீடியோ பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில்,  ஆண்டாள் புகழ்பாட தான் ஆசைப்பட்டது தவறா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வைரமுத்துவின் வீடியோவில், “10 நாட்களாக நான் மூர்ச்சையுற்று கிடந்தேன். என் மனம் உடைக்கப்பட்டு கிடக்கிறது. ஆண்டாள் பாசுரங்களை பாடப்பாட எனக்கு பக்தி பிறக்கிறது; சக்திபிறக்கிறது. ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்த ஆண்டாளின் பெருமைகளை வியந்து பாராட்டினேன். தமிழ்வெளியில் கேட்ட முதல் பெண் விடுதலை குரல், ஆண்டாளின் குரல். 

ஆண்டாள் பற்றி மட்டும் எழுதப்பட்ட கட்டுரை அல்ல அது. புதிய தலைமுறையினரும், இளைய தலைமுறையினரும் தெரிந்து பயன்பெறவே கட்டுரை எழுதி வருகிறேன். சமய, சமூகவியல் பார்வையுடையவள் ஆண்டாள். ஆண்டாள் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகளை 3 மாதங்களாக ஆராய்ச்சி செய்தேன்.  

தேவதாசி என்பது உயர்குலப் பெண்களுக்கு வழங்கப்பட்ட சொல். அதனை மூலத்தில் எழுதியவர்கள் உயர்ந்த பொருளில் எழுதியுள்ளார்கள். நானும் உயர்ந்த பொருளில் எடுத்து பயன்படுத்தியுள்ளேன். கட்டுரை வாசித்த அன்று அங்கு இருந்த மக்கள் என்னை அப்படி பாராட்டினார்கள். என்னை வழியனுப்ப 40 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார்கள். இகழ நினைத்தால் ஆண்டாளின் மண்ணில் சென்று கருத்தரங்கு நடத்துவேனா?.

யாரோ மதம் கலந்து அரசியலுடன், அரசியல் கலந்த மதத்துடன் எனது பேச்சை திருத்திவிட்டார்கள். தேவதாசி என்று நான் குறிப்பிட்டதில் தேவ என்ற வார்த்தையை துண்டித்துவிட்டு தாசி என்று பரப்பினார்கள். பின்னர் தாசி என்பதை திருத்தி வேசி என்று கூறினார்கள். இல்லாத சொல்லுக்காக பழியேற்ற பின்னரும் திரித்து கூறி வருகிறார்கள். மன்னிப்பு கேட்ட பிறகும் மேலும் மேலும் திரிக்கிறார்கள், பரப்புகிறார்கள், இனக்கலவரத்தை, மதக்கலவரத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள் என்றால் தமிழ் சமூகமே நீ ஞான சமூகம் புரிந்து கொள்வாய்” இவ்வாறு பேசினார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 

 
 
 
 
 

எங்கள் திவ்யதேச யாத்திரையின்போது சில க்ஷேத்திரங்களுக்கு இரண்டுமுறை செல்லவேண்டியிருக்கும்...

நாங்கள் செல்லும்போது ஏதாவது திருப்பணி நடந்துகொண்டிருந்தாலோ , நாங்கள் செல்வதற்குள் நடை சாத்திவிட்டாலோ ,மீண்டும் ஒருமுறை செல்வோம்...

திருக்குறுங்குடி நம்பியை சேவிக்கச்சென்றபோது தகவல் இடைவெளி காரணமாக மலைமேல் நம்பியை தரிசிக்காமலே திரும்பிவிட்டோம்...

அதே வருடம் ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயியை தரிசிக்கச்சென்றபோது திருப்பணிகள் நடந்துகொண்டிருந்தன... மூலவர் சந்நிதி அடைக்கப்பட்டு உற்சவர் மட்டுமே பாலாலயத்தில் சேவை சாதித்துக்கொண்டிருந்தார்...

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாளை சேவிக்கச்செல்வதற்குள் நடை சாத்தப்பட்டுவிட்டது...

ஆகவே இந்த மூன்று திவ்ய தேசங்களுக்கும் மீண்டும் ஒருமுறை செல்லவேண்டியிருந்தது...அடுத்த வருடம் மலைநாட்டுத்திருப்பதிகள் [ கேரளா ] தரிசிக்கச்சென்றபோது இந்த மூன்று தலங்களுக்கும் மீண்டும் செல்வது என்று முடிவு செய்தோம்...அதே வண்ணம் சென்று வந்தோம்...

ஆக , ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு இரண்டு முறை செல்லும் பாக்கியம் கிடைத்தது...இரண்டாவது முறை செல்லும்போது தாயார் சந்நிதியின் தங்க விமானத்துக்கு சம்ப்ரோக்ஷன வைபவம் நடந்துகொண்டிருந்தது...முதலில் வடபத்ரசாயியை சேவித்துவிட்டு அடுத்து ஆண்டாளை தரிசிக்கச்சென்றோம்...

முதல்முறை சென்றபோதும் சரி...இரண்டாவதுமுறை சென்றபோதும் சரி ..நல்ல கூட்டம்...நீண்ட வரிசையில் நின்றுதரிசனம் செய்தோம்...திருப்பாவை பாராயணம் செய்துகொண்டே சென்றோம்...தாயாரை சேவிக்கும்போது ஒரு நிமிடம் நாமும் ஆண்டாளும் மட்டுமே அங்கு இருப்போம்...ஒரு நிமிடம் நாம் குழந்தையாக , நம் அம்மாவின் மடியில் படுத்திருப்பதுபோல ஒரு உணர்வு தோன்றும்.. [ எனக்கு இந்த அனுபவம் மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதியிலும் , காஞ்சி காமாட்சிஅம்மன் சந்நிதியிலும் கிடைத்திருக்கிறது... ]

இதோ , எதிரே நிற்பவள் என் தாய்..லோக மாதா..

.என்ன ஒரு பக்தியும் , இறை அர்ப்பனிப்பும் இருந்திருந்தால் இறைவனே நேரில்வந்து ஆட்கொண்டிருந்திருப்பார்...?சூடிக்கொடுத்த சுடர்க்கொடியன்றோ இவள்?இப்படிப்பட்ட ஒரு தெய்வப்பிறவி பிறந்த , வாழ்ந்த மண்ணில் வாழ நாம் என்ன புண்ணியம் செய்தோமோ?

தரிசனம் முடித்து வெளியே வந்து ரெங்க மன்னாரை சேவிக்கும்போதும் , பிரகார வலம் வரும்போதும் , ஆண்டாளும் பெரியாழ்வாரும் வாழ்ந்த நந்தவனம் , வடபத்ரசாயி சந்நிதி ஆகிய இடங்களுக்குச்செல்லும்போதும் இங்குதானே பூப்பறித்திருப்பார்? இங்குதானே பெருமாளுக்கு சூடிக்கொடுத்திருப்பார்? இந்த வழியாகத்தானே சென்றிருப்பார் என்றெல்லாம் எண்ணிப்பார்க்கத்தோன்றும்...

இதெல்லாம் அந்த ஆண்டாளை நம்புபவனுக்கும் , அவளை உண்மையிலேயே இந்த லோகமாதாவாக ஏற்பவனுக்கும் மட்டுமே சாத்தியம்..

இப்படிப்பட்ட ஒரு உன்னதத்தை போகிறபோக்கில் எடைபோட்டுப்பார்க்கிறார்கள்..எதிர்ப்பு வலுத்ததும் இன்று டி.வியில் தோன்றி ஆண்டாள் எனக்கும்தாய் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது அந்த கருநாய்...எந்த மகனடா தன் தாயை தாசி என்று அழைப்பான்? செய்வதையும் செய்து விட்டு அதற்கு விளக்கம்வேறு கொடுக்கிறான் ... தாசி என்று சொல் இழிவில்லையாம்...எனில் ஹெச்.ராஜா உன்னை தாசிமகன் என்றுதானே அழைத்தார்? அதற்கு மட்டும் ஏன் பொங்குகிறாய்?

அவனைச்சொல்லிக்குற்றமில்லை...தகுதியற்ற ஜென்மத்தை , ஒரு புனிதத்தைபற்றிப்பேச அழைத்தவர்களின் தவறு...தமிழகத்தில் ஆண்டாளைப்பற்றிப்பேச ஆளே இல்லாததுபோல இந்த நாத்திக நாதாரியை பேச அழைத்துவந்தானே , அவனைச்சொல்லவேண்டும்...

அடேய்... [தினமணி ] வைத்தியநாதா... நாயினும் கீழான ஜென்மம் காத்திருக்கிறதடா உனக்கு.....

#andal



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

ஆண்டாள் தேவதாஸியென்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை... ஆனால் ஒரு பொய்யை ஆணவத்தாலும்.. இப்பொழுது அழுதுக்கொண்டும் வடிவேலுவைப்போல் எப்படி அடித்தாலும் தேவதாஸி, தேவதாஸியென பிதற்றுவது ஒருவித தீய உள்நோக்கத்தோடு மக்களை முட்டாளுக்கும் செயல்.. இவர்களுக்கு திருவெம்பாவை இயற்றியது யாரென்றே தெரியாத பட்சத்தில் திடீர் புளியோதரைப்போல ஆண்டாள் எங்கள்தாய் என பாவ்லா காட்டுவதல்லாம் வெறும் நடிப்பேயன்றி வேறொன்றுமில்லை!



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

21_01_2018_402_030.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

வைரமுத்து சொன்ன பொய்: ஆதாரப்பூர்வமாக அம்பலம்

 Updated : ஜன 19, 2018  Added : ஜன 18, 2018
 
ஆண்டாள், ஸ்ரீரங்கம், வைரமுத்து,மாலிக்
Colors:
 

 

சென்னை: ''ஆண்டாள் தேவதாசியாக வாழ்ந்தவர்'' என்று அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை பொதுமேடையில் வைத்த வைரமுத்துவின் கருத்துக்கு, ஆதாரப்பூர்வமான மறுப்பு கிடைத்துள்ளது. அவர் கூறியது மாபெரும் பொய் என்பதும் அம்பலமாகி உள்ளது.
ஜன.,7ம் தேதி ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் வைரமுத்து பேசும் போது, அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம், சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராக கொண்டு வெளியிட்ட, indian movement: some aspects of dissent, protest and reform என்ற ஆய்வு நுாலில், ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டு இருக்கிறது. Andal was herself a devadasi who lived and died in srirangam temple என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது என்று கூறினார். 


ஆய்வே இல்லை:

ஆனால், அவர் குறிப்பிட்ட எஸ்.சி.மாலிக் புத்தகத்தை தேடும்போது இண்டியானா பல்லைக்கழகம் அப்படி ஒரு ஆய்வை நடத்தவேயில்லை என்பது தெரிய வந்தது. 1975ம் ஆண்டு சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ட்ஸ் ஸ்டடீஸ் என்ற அமைப்பு ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதில், 45 இந்திய வரலாற்று அறிஞர்கள் பங்கேற்று, 26 கட்டுரைகளை வெளியிட்டனர். அந்த கட்டுரைகளின் தொகுப்பு பின்னர் Indian movements: Some Aspects of dissent protest and reform என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. 
அந்த கட்டுரைகளை தொகுத்தவர் தான் எஸ்.சி.மாலிக்; எழுதியவர் அல்ல. அவரோ, இண்டியானா பல்கலையோ ஆண்டாள் பற்றிய ஆய்வை நடத்தவில்லை. அந்த புத்தகத்தில் ஆண்டாள் பற்றி, bhakti movements in south india என்ற கட்டுரையில் தான் ஆண்டாள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை எழுதியவர்கள் இந்தியாவை சேர்ந்த பேராசிரியர்கள் எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். அதில் தான், Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple என்ற வரி இடம் பெற்றுள்ளது. இதற்கு, History of sri vaisnavas என்ற பெயரிலான டி.ஏ. கோபிநாத் ராவ் என்பவரின் புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் தான் இதற்கான ஆதாரம் இருப்பதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில், ஆண்டாளின் முழு கதையும் இடம் பெற்றுள்ளது. பெரியாழ்வாரின் கனவில் கடவுள் தோன்றி ஆண்டாளை மணக்க சம்மதித்தாகவும், அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வரும்படி ஆணையிட்டதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி பெரியாழ்வார் ஆண்டாளை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அழைத்து சென்று பின்னர் தனியே ஸ்ரீவில்லிபுத்துார் திரும்பினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த பக்கத்தில் தேவதாசி என்ற வார்த்தையே இல்லை. பிறகு எப்படி ஆண்டாளை தேவதாசி என்று நாராயணன் குறிப்பிட்டார் என்று அவரிடம் தந்தி டிவி நிருபர் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் அளித்த பேட்டி:
கே: அந்த கட்டுரையில் ஆண்டாள் ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்த ஒரு தேவதாசி என குறிப்பிடப்பட்டுள்ளதே? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
நாராயணன்: ஆண்டாள் தேவதாசி என்பதற்கான பிரத்யேக குறிப்புகள் இல்லை. 
கே: உங்களுடைய ஆய்வில் ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆவணங்கள் ஏதாவது கிடைத்ததா?
நாராயணன்: இல்லை. அது போன்று குறிப்பிட்ட ஆதாரங்கள் ஏதும் இல்லை. 
கே: ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கல்வெட்டுகளிலோ, வேறு ஏதேனும் ஆவணங்களிலோ ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதா?
நாராயணன்: இல்லை. வாய்மொழியாக சொல்வதை வைத்து தான் பார்க்க வேண்டி உள்ளது. எழுத்துப்பூர்வமாக எதுவும் இல்லை. 
கே: நேரடி ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஒரு புரிதலில் அந்த முடிவுக்கு வந்துள்ளீர்கள் என சொல்லலாமா?
நாராயணன்: இது ஒரு அனுமானம் தான்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.


வைரமுத்துவின் பதில் என்ன:

 

ஆண்டாள் தேவதாசி என்று சொல்லப்படுவதற்கு நேரடி ஆதாரம் இல்லை. அது அனுமானத்தின் பேரில் தான் என்பது தான் வைரமுத்து குறிப்பிட்ட கட்டுரையின் ஆசிரியர் தரும் விளக்கம். 

இது குறித்து ஒரு வைணவ அறிஞர் கூறும்போது, ‛‛எந்த ஆதாரமும் இல்லாத ஒரு தகவலை, ஆதாரப்பூர்வ தகவலைப் போன்று வைரமுத்து பேசி உள்ளார். அதுவும், நடக்காத ஒரு ஆய்வை, நடத்தாத ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் பெயருடன் அவர் எவ்வாறு குறிப்பிட்டார். 
அக்கட்டுரையை எழுதிய நாராயணன் என்பவரே, ஆண்டாள் பற்றிய செவி வழி செய்தியை மட்டுமே குறிப்பிட்டதாக கூறியுள்ளார். இப்படிப்பட்ட, ஆதாரமற்ற ஒரு தகவலை வைரமுத்து ஏன் பரப்பினார். இதன் மூலம் வேண்டுமென்றே ஆண்டாளை வைரமுத்து அசிங்கப்படுத்தி உள்ளார் என்பது புலனாகிறது. அவரது உள்நோக்கமும் புரிகிறது. கடவுளாக வணங்கும் ஒருவரைப் பற்றி, மாபெரும் பொய்யை பேசிய வைரமுத்து, இனிமேலாவது பொய் சொன்னேன் என ஒப்புக்கொள்வாரா. பகிரங்க மன்னிப்பு கேட்பாரா'' என்று கூறினார். 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard