New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வைரமுத்துவின் வழக்கமான அரசியல்தான் இது! தேனி கண்ணன்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
வைரமுத்துவின் வழக்கமான அரசியல்தான் இது! தேனி கண்ணன்
Permalink  
 


ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள்  » தமிழகம்

 வைரமுத்துவின் வழக்கமான அரசியல்தான் இது!

Posted By: Shankar Published: Wednesday, April 22, 2015, 10:29 [IST]

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/this-is-vairamuthu-s-as-usual-politics-theni-kannan-225214.html

சமூக வலைத் தளங்களிலும், இணையத்திலும் காய்ச்சி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. ஜெயகாந்தன் என்ற மிகப் பெரிய ஆளுமையின் பெயரை மிக மட்டமான முறையில் தனது சுய தம்பட்டத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார் என நாட்டின் பிரபலமான ஆங்கில நாளேடான தி இந்து சாடியிருக்கிறது.

எத்தனை விருதுகள், எவ்வளவு புகழ் மாலைகள், மேடைகள் கண்ட கவிஞருக்கு இது தேவையா என்ற குரல்தான் ஏகோபித்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த தர்மசங்கடத்துக்கு வேறு யாரும் காரணமல்ல. அவரது சுபாவம்தான். This is Vairamuthu's 'as usual' politics

'இன்று நீ நாளை நான்' என்ற படத்தின் படப்பிடிப்பு துவங்க இருந்த சமயம். அந்த படத்தின் இயக்குனர் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன். தயாரிப்பாளர் பழ.கருப்பையா. இருவரும் படத்தின் இசைய்மைப்பாளராக இளையராஜாவை முடிவு பண்ண அவரை சந்திக்க சென்றிருக்கிறார்கள். இளையராஜாவும் அந்த படத்திற்கு ஒத்துக்கொள்ள, பாடல் கம்போசிங்கை வெளியில் எங்காவது வைத்துக்கொள்ளலாம் என்று இளையராஜா சொல்ல, ஊட்டி, கொடைக்கானல், கேரளா என்று ஆளுக்கொரு இடமாக சொல்கிறார்கள்.

ஆனால் இளையராஜாவே தேனியில் உள்ள வைகை அணைக்குச் செல்லலாம் என்று சொல்லவும் மூவருக்கும் ட்ரெயினில் டிக்கெட் ரிசர்வ் செய்யப்படுகிறது. அந்த படத்திற்கான பாடல்களை யாரை வைத்து எழுத வேண்டும் என்பதை இளையராஜா முடிவு செய்கிறார்.

இந்த தகவல் வைரமுத்துவின் காதுக்கு வருகிறது. பாட்டு எழுத வேண்டிய லிஸ்டில் தன்னுடைய பெயர் இல்லையென்பதை தெரிந்து கொள்கிறார். எப்படியாவது அந்த படத்தில் இடம் பிடிக்க தன்னுடைய அரசியலை அரங்கேற்ற தயார் ஆகிறார் வைரமுத்து.

ஊருக்குப் புறப்படும் அந்த மூவரும் எந்த தேதியில் ஊருக்குப்போகிறார்கள் என்று தெரிந்து வைத்துக்கொண்டு அதே ட்ரெயினில் தனக்கும் ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்கிறார். இது இளையராஜா, மேஜர் சுந்தர்ராஜன், பழ.கருப்பையா மூவருக்கும் தெரியாது.

ரயில் புரப்படும் அதே நாளில் அந்த கோச்சிற்கு வெளியே மூவருக்கும் காத்திருக்கிறார் வைரமுத்து. அதுவும் எப்படி எல்லோருக்கும் சாப்பிட டிபன் கேரியரில் விதவிதமான உணவுகளுடன். அவரை அங்கு பார்த்த இளையராவிற்கு பெரிய ஷாக். யார் இவரை வரச் சொன்னது என்பது போல பழ.கருப்பையா, மேஜர் சுந்தர்ராஜன் இருவரையும் பார்க்கிறார். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டர்களே தவிர பதில் சொல்லவில்லை.

அப்புறம் வேறு வழியில்லாமல் பழ.கருப்பையாவே 'வந்துட்டார், நம்ம கூடவே வரட்டுமே' என்று சொல்ல அவர்களுடனே பயணித்திருக்கிறார் வைரமுத்து. இளையராஜாவிற்கு இதில் ஒப்புதல் இல்லையென்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. வந்ததற்காக அவருக்கு இரண்டு டியூன்களை கொடுத்து எழுத வைத்திருக்கிறார்.

ஒரு பிரபல வார இதழில் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த செய்தி ஒன்று. அப்போது பாரதிராஜாவின் புதுமைப்பெண் வெளியாகி இருந்த சமயம். அந்த படத்தில் வைரமுத்து எழுதிய பாடல் என்று ‘கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு' என்ற பாடல் வெளிவந்திருந்தது. ஆனால் அந்த பாடலை எழுதியது வாணியம்பாடி அருகே நாட்ராம் பள்ளி என்ற ஊரை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் என்ற உண்மையை போட்டு உடைத்தது. அந்த மாணவன் வைரமுத்துவிடம் முன்னுரைக்காக கொடுத்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிய வந்தது.

கவிஞர் அறிவுமதி அவர்களும் இதே போல் தன்னுடைய கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டதாக வைரமுத்துவின் பல பிரபலமான திரைப் பாடல்களை குறிப்பிட்டு ‘பா நிரை கவர்தல்' என்ற தலைப்பில் கையடக்கப் பிரதி ஒன்ரை வெளியிட்டார். லேட்டஸ்டாக வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ஜெயகாந்தன். அப்போது அவர், 'ஓசோனில் ஓட்டை விழுந்தால் உமக்கென்ன ஆயிற்று. அந்த ஓட்டையை வியாபாரமாக்குகிறாயா... படைப்புகள் மனிதர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பயத்தை ஏற்படுத்தக்கூடாது" என்று வைரமுத்துவை அதே மேடையிலேயே வைத்து கம்பீர குரலில் கண்டித்தார். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய பாணியில் காய் நகர்த்துவது வைரமுத்துவின் கவி அரசியல். ஆனால் இந்த முறை அந்த அரசியல் அம்பலத்திற்கு வந்து விட்டது. எளிய மக்களின் உண்மை நிலையை தன் எழுத்துக்கள் மூலம் உலகுக்கு உணர்த்திய மாபெரும் படைப்பாளி ஜேகே. அவர் மறைந்த பிறகும் அவரது பெயரை யாரும் பொய்யாகக்கூட பயன்படுத்தக் கூடாது என்று இயற்கையே வெகுண்டெழுந்தது போலத்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது! -தேனி கண்ணன்


Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/this-is-vairamuthu-s-as-usual-politics-theni-kannan-225214.html



-- Edited by Admin on Friday 19th of January 2018 04:05:05 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: வைரமுத்துவின் வழக்கமான அரசியல்தான் இது! தேனி கண்ணன்
Permalink  
 


Image may contain: 1 person



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Image may contain: 1 person

Image may contain: 4 people, people smiling

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Image may contain: one or more people and text

Image may contain: 1 person, standing



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

Image may contain: one or more people, crowd and outdoor



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Image may contain: 3 people, people smiling, textImage may contain: 8 people, people smilingImage may contain: 8 people, people smiling, text



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Image may contain: 1 person



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Image may contain: 1 person, smiling



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard