வைகோ குடும்பத்துடன் கிருத்துவத்திற்கு மாறினார் என்றமோகன் லாசரஸின் அறிவிப்பும், வைகோவின் மறுப்பும், ஏற்படுத்தும் தீவிர விளையுகளும்!
வைகோ கிறிஸ்தவராக மதம் மாறினாரா?[1]: திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டியில் 1944-ஆம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி பிறந்தார் வை. கோபால்சாமி. இப்போது வைகோ எனப் பெயர் மாற்றம் செய்துள்ளார். பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் இளங்கலை பட்டக்கல்வியை முடித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலையும், சென்னை சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டக்கல்வியையும் படித்தார். திமுகவில் அரசியல் பயணத்தைத் தொடர்ந்த வைகோ, திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இந்து குடும்பத்தில் நாயக்கர் வகுப்பில் பிறந்த வைகோவின் தாய்மொழி தெலுங்கு. இருப்பினும் தமிழ் மீது ஏற்பட்ட பற்றின் காரணமாக தமிழுக்காக பாடுபடுகிறார். சிறந்த படிப்பாளி. அவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர். இந்நிலையில் வைகோ குடும்பத்துடன் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டதாக பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் தற்போது கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது, என்று ஈநாடு சிறப்பித்து தள்ளியது[2]. வைகோ அவர்கள் ஒரு பகுத்தறிவாதி, எந்த மதத்திற்கு ஆதரவாக இல்லாதவர் என்றுதான் இத்தனை வருடங்களாக பொதுமக்கள் எண்ணி வருகின்றனர். ஆனால் இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று முடித்தது[3]. இதற்கு வைகோ என்ன விளக்கம் கொடுக்க போகிறார் என்பதை தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்[4].