ஒரு ஊழலை விசாரிக்கும் நீதிபதி அசந்துபோனது வீராணம் ஊழலின்போதுதான்.
சுமார் 45 வருடம் கடந்துவிட்ட வீராணம் ஊழலை பற்றி இன்றய தலைமுறைக்கு சொல்லவேண்டுமானால் கதைகளில் வருவதுபோல் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யவேண்டும்.
ராமாயணம் , மகாபாரதம் போல் எக்கச்சக்க கதாபாத்திரங்கள் எல்லாம் இல்லை. சத்யநாராயணா பிரதர்ஸ் உரிமையாளர் திரு சத்திய நாராயண ரெட்டி மட்டும் போதும்.
சென்னை பச்சையப்பன் பள்ளி, கல்லூரி உட்பட்ட கல்வி நிறுவன உரிமையாளரான, " பச்சையப்பன் டிரஸ்ட் " அறங்காவலர் திரு MAM முத்தையா செட்டியார் ஜனவரி 1970ல் காலமாகிறார்.
அவரது மறைவால் ஏற்பட்ட ( Vaccancy ) அறங்காவலர் குழுவில் தான் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறார் முரசொலி மாறன்.
Sathya Narayana Brothers நிறுவன உரிமையாளர் திரு சத்யநாராயணாவின் மறுமகன் புருஷோத்தமன் அந்த அறங்காவலர் குழு உறுப்பினராக இருக்கிறார்.
முதல்வரின் மறுமகன் ஆசைப்படும்போது அந்த பதவியை பெற்றுத்தர புருஷோத்தமனுக்கு கசக்கவா செய்யும் ?
அவரது பரிந்துரையின்பேரில் முரசொலி மாறன் Pachayappas Trust உறுப்பினர் ஆகிறார்.
மிகக்குறைந்த கால கட்டத்தில் மாறன் Pachayappas Trust தலைவராகவும் ஆகிவிடுகிறார்.
ஒன்றை கொடுத்தால் ஒன்றை பெறவேண்டுமல்லவா ?
இந்த உதவிக்கு கைமாறாக என்ன வேண்டும் ? என்கிறார் மாறன்.
சென்னை நகர மக்களுக்கு 222 கி.மீ தொலைவில் இருக்கும் வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் குழாய் பதிக்கும் திட்ட காண்டிராக்ட் எனது மாமனாரான Sathya Narayana அவர்களுக்கு வேண்டும் என்கிறார் புருஷோத்தமன்.
அதெல்லாம் முடியாது. இந்த அறங்காவலர் பதவிக்கு அவ்வுளவு பெரிய காண்டிராக்ட் எல்லாம் தர முடியாது என்று மறுக்கிறார் மாறன்.
உனக்காக ஒன்று மட்டும் நான் செய்கிறேன். அந்த காண்டிராக்ட் நான் வாங்கி தருகிறேன். ஆனால் இரண்டரை சதவீதம் கமிஷன் கொடுக்கவேண்டும் என்றார் மாறன்.
அதேகாலகட்டத்தில் சென்னை அண்ணாசாலையில் ஒரு கிரவுண்டு இடம், 1240 சதுரடி கட்டிடத்துடன் சேர்த்து ரூ 45000/- ( நாற்பத்தைந்தாயிரம் என்றால் பணமதிப்பை கணக்கிட்டு கொள்ளலாம் ).