ஆட்சியில் இருந்தால் கொலை செய்வதும், ஆட்சியில் இல்லாத காலங்களில் கொலையை வைத்து அரசியல் செய்வதும் திமுகவிற்கு கைவந்த கலை.
1971ல் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் மாணவர்களின் கொந்தளிப்பு ஏற்பட்டபோது,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் படுகொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டார்.
உதயகுமாரின் பெற்றோரிடம் இறந்தது உதயகுமாரின் சடலம் அல்ல என்று காவல்துறையை வைத்து மிரட்டி எழுதி வாங்கினர். இன்றுவரை உதயகுமார் எங்கே ?
பாளை தூயசவேரியர் கல்லூரி மாணவர் லூர்துநாதனை அடித்து கொன்று தாமிரபரணி ஆற்றில் தூக்கி வீசினர். ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு முடிக்கப்பட்டது.
திருச்சி கிளைவ்ஸ் ஹாஸ்டலுக்குள் போலீஸ் உடை அணிந்த திமுகவினர் மாணவர்களை நைய புடைத்தனர்.
அதிமுக பூலாவரி சுகுமாரனில் துவங்கி , பி.டி.ஆர், தா.கிருஷ்ணன் வரை பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.
கருணாநிதி பேரன் தயாநிதி - கலாநிதிக்கும், மு.க அழகிரிக்கும் நடந்த குடும்பச்சண்டை 3 அப்பாவி தினகரன் நாளிதழ் தொழிலாளர்கள் உயிரோடு எரித்து கொல்ல காரணமானது.
கள்ளுக்கடை சாராயக்கடையை திறந்துவிட்ட புண்ணியவானே கருணாநிதி தான். மதுக்கடை ஒழிக்க போராடுவதாக களம்கண்ட சசிபெருமாள் சடலமாகவே வந்தார்.
தற்போதய புத்தம் புதிய பதிப்பு அனிதா.
வாழ்வில் சமரசம் செய்துகொண்டவர்கள் நிச்சயம் சாக துணிய மாட்டார்கள். இது ஒரு General Psychology.
MBBS சீட் கிடைக்கவில்லை என்றால் விவசாயம் படிக்க தயாராக இருந்த பெண் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை.
முறையாக விசாரித்தால் அனிதா மரணத்தின் உண்மையான காரணம் வெளியுலகிற்கு தெரியவரும்.