சென்னையைச் சேர்ந்த பிரபலமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’, கத்தோலிக்க அப்போஸ்தலர்களுள் ஒருவராகக் கொண்டாடப்படும் புனித தாமஸ்ஸின் கதையைத் திரைப்படமாகத் தயாரிக்கப்போவதாகச் செய்திகள் வந்துள்ளன. அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள தார்லின் எண்டெர்டெய்ன்மெண்ட் (Dharlin Entertainment)என்கிற நிறுவனத்துடன் இணைந்து, கேரளா, சென்னை மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் படப்பிடிப்புகள் நடத்தப்படும் என்றும், இந்திய மற்றும் சர்வதேசக் கலைஞர்கள் பங்குபெறுவார்கள் என்றும், 2018 ஆரம்பத்தில் திரைப்படம் வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது. திரைப்படத்தின் பெயர்‘கமிஷண்ட்’ (Commissioned) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் அப்போஸ்தலர் தாமஸ்ஸின் இந்தியப் பயணத்தைப் பற்றியும், அவர் சென்னையில் ஒரு பிராம்மண புரோகிதரால் கொல்லப்பட்டு மடிந்தது பற்றியும் விரிவாகச் சொல்லும் என்றும் கூறப்படுகின்றது. (Deccan Chronicle dated 1 May 2017)
அப்போஸ்தலர் தாமஸ் கதையைத் திரைப்படமாக எடுக்கவிருப்பதாக 2008ம் ஆண்டே செய்திகள் வந்தன. சென்னை மயிலாப்பூர் தலைமை மறைமாவட்டம்,‘அப்போஸ்தலர் புனித தாமஸ் இந்தியா டிரஸ்ட்’என்கிற அமைப்பின் பெயரில் ரூபாய் 50 கோடி செலவில், புனித தாமஸின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தயாரிக்கப்போவதாக அறிவித்தது. (Deccan Chronicle dated 24 June 2008)
அந்த அறிவிப்புக்கு முக்கிய காரணங்கள் இரண்டு.
முதலாவதாக, போப் இரண்டாம் ஜான்பால் இந்தியாவிற்கு 1986 மற்றும் 1999ஆகிய ஆண்டுகளில் வந்தார். அந்த இரண்டு பயணங்களின் போதும் இந்தியாவில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் புனித தாமஸ் பற்றி அலட்டிக்கொள்ளவேயில்லை. சொல்லப்போனால் ‘புனித தாமஸ்’ பற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை என்று சொல்லலாம்.
கிறிஸ்தவர்கள் முக்கியமாகக் கருதும் அப்போஸ்தலர்களுள் ஒருவரான புனித தாமஸ் உண்மையிலேயே இந்தியப் பயணம் மேற்கொண்டு, கேரளம் மற்றும் தமிழகக் கடற்கரை கிராமங்களில் வாழ்ந்து இறுதியாகச் சென்னையில் கொல்லப்பட்டு இறந்தவர் என்றால், கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் போப் அவரைப் பற்றிப் பேசாமல் இருந்திருப்பாரா?இத்தனைக்கும் அவர் 1986ம் ஆண்டு வந்தபோது, சென்னையில் சாந்தோம் சர்ச்சுக்கும், புனித தாமஸ் மலை (உண்மைப் பெயர் – பிருங்கி மஹரிஷி தொடர்பால் ‘பிருங்கி மலை’ – பின்னர் பரங்கிமலை என்று மருவியது)சர்ச்சுக்கும் வந்து பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார். ஆகவே, இரண்டு முறை வந்தபோதும் போப் இரண்டாம் ஜான்பால் புனித தாமஸ் பற்றிப் பேசவில்லை.
இரண்டாவதாக, போப் இரண்டாம் ஜான் பாலுக்குப் பிறகு பதவியேற்றுக்கொண்ட போப் பதினாறாம் பெனடிக்ட் 27 செப்டம்பர் 2006 அன்று வாத்திக்கனில், புனித பீட்டர் சதுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், “அப்போஸ்தலர் புனித தாமஸ் சிரியா மற்றும் பெர்ஷியா ஆகிய நாடுகளில் மதமாற்றத்தில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் இந்தியாவின் மேற்குப் பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான்)மதமாற்றம் செய்தார். அங்கிருந்து கத்தோலிக்கக் கிறிஸ்தவம் இந்தியாவின் தென்பகுதிகளை அடைந்தது”என்று, புனித தாமஸ் தென் இந்தியாவுக்கு வரவில்லை என்று தெளிவாகப் புரியுமாறு, பேசினார். (Hindustan Times dated 23 November 2006)
கேரளம் மற்றும் தமிழகக் கத்தோலிக்கச் சபைகளுக்கு போப் பெனடிக்டின் பேச்சு இடிபோல இறங்கியது. இத்தனை வருடங்களாக அவர்கள் கட்டமைத்து வந்த புனித தாமஸ் கதை, உண்மையிலேயே கட்டுக்கதை என்று நிரூபிப்பது போல போப் பெனடிக்டின் பேச்சு இருக்கவே, அவர்கள் அவசரம் அவசரமாக வாத்திக்கனுடன் தொடர்புகொண்டு தங்கள் பிரச்சினையைத் தெரிவிக்கவே,வாத்திக்கன் தலைமை தங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் போப்பின் பேச்சை மாற்றி அமைத்தது. இருந்தும் அவர் பேச்சு வெளியில் செய்திகள் மூலம் முன்னரே வந்துவிட்டதை எப்படி மாற்றி அமைக்க முடியும்? (Rediff.com dated 29 November 2006)
ஆகவே, சென்னை மயிலை தலைமை மறைமாவட்டம் புனித தாமஸ் பற்றிய திரைப்படம் ஒன்றை எடுத்துத் தன்னுடைய கட்டுக்கதைக்கு மேலும் வலுச் சேர்க்க முனைந்தது. புனித தாமஸ்ஸின் கட்டுக்கதைக்கு மேலும் கூடுதலான நம்பகத்தன்மையைச் சேர்க்க, அவர் சென்னை மயிலாப்பூர் கடற்கரையில் திருவள்ளுவருடன் அளவளாவினார் என்றும், திருவள்ளுவர் தாமஸ்ஸின் சீடர் என்றும், அதனால்தான் திருக்குறளில் விவிலியத்தின் தாக்கம் காணப்படுகின்றது என்றும் புனைந்துரைகளை, ஏற்கெனவே பரப்பிக்கொண்டிருந்த தெய்வநாயகம் என்னும் ஒரு மதமாற்றப் பிரசாரகரை மீண்டும் பயன்படுத்திக்கொண்டனர்.திருக்குறளில் விவிலியத்தின் தாக்கம் உள்ளது என்கிற புனைந்துரையை முதன்முதலில் பரப்பியவர் 19ம் நூற்றாண்டில் மதமாற்றம் புரிய வந்த ஜி.யு.போப் என்கிற பாதிரி ஆவார். அவருடைய போலித்தனமான வழியைப் பின்பற்றித்தான் தெய்வநாயகமும் நடந்துள்ளார்.
தமிழர் சமயம் பற்றிய திரிப்பு வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும்தெய்வநாயகம் ‘விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் – ஒப்பு ஆய்வு’என்கிற ஒரு நூலை 1985-86ல் எழுதி வெளியிட்டு இந்தப் புனித தாமஸ் கட்டுக்கதையை உண்மையென நிலைநாட்ட முயற்சி செய்தார். ஆனால் அருணை வடிவேல் முதலியார் என்கிற தமிழறிஞர் மூலம் தரமான மறுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு தருமை ஆதீனத்தைச் சேர்ந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தினர், தெய்வநாயகத்தின் சதியை முறியடித்தனர்.அந்த நூல்: ‘விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்’ – அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம் ஆதீனம்- 1991.
இங்கே முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்னவென்றால்தாமஸ் என்று ஒருவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதற்கோ, இங்கே ஒரு பிராம்மணர் அவரைக் கொன்றார் என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது.ஆனால், போர்ச்சுகீசியர் படையெடுத்து வந்து ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை அழித்தனர் என்பதற்கும், பிருங்கி மலையில் இருந்த கோவிலையும் அழித்தனர் என்பதற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உட்படப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. சொல்லப்போனால், சாந்தோம் சர்ச்சிலும், அதன் அருகில் உள்ள அருங்காட்சியகத்திலும் பழைய கபாலீஸ்வரர் கோவிலின் தூண்கள் மற்றும் சில இடிபாடுகள் இன்னும் இருக்கின்றன. கோவில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு அந்த இடத்தில்தான் சர்ச்சு கட்டப்பட்டுள்ளது என்கிற உண்மையைப் பறைசாற்றும் விதமாக அவை இன்றும் சர்ச்சுக்குள்ளேயே காட்சியளிக்கின்றன.டாக்டர் நாகசாமி போன்ற தொல்லியல் நிபுணர்களும் இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழக இந்து அறநிலையத்துறையே, தற்போதைய கபாலீஸ்வரர் கோவிலின் நுழைவாயிலில் இவ்வுண்மையைக் கல்வெட்டில் பதிய வைத்துள்ளது.எனவே, இந்தத் தாமஸ் என்கிற கதாபாத்திரத்தை உருவாக்கியதே பாரதத்தின் தென்பகுதியில் உள்ள இந்துக்களை மதமாற்றம் செய்யத்தான்.
தாமஸ் இங்கு வந்து திருவள்ளுவருக்கு குருவாக இருந்தார் என்றும், திருவள்ளுவர் தாமஸிடம் பைபிள் கற்று,பின்னர் பைபிளில் உள்ள பல கருத்துக்களின் அடிப்படையில் திருக்குறளை இயற்றினார் என்றும் கதை கட்டிவிட்டதுதான் தமிழுக்குப் பங்குத் தந்தைகளின் பங்களிப்பு. பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாகும் திருக்குறள். நம்மிடமுள்ள வரலாற்றுச் சான்றுகளை வைத்துப் பார்த்தால் திருவள்ளுவர் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார் என்று தெரிய வருகிறது. மேலும் இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயற்றப்பட்ட கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றில் திருக்குறள் கருத்துக்கள் காணப்படுவதும்,கிறிஸ்துவம் பற்றிய ஒரு தகவலும் இல்லாமல் இருப்பதுமே, இவர்களின் தாமஸ்கதைசரியானஏமாற்றுவேலைஎன்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.மயிலையில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தின் சுவர்களில் பதினோராம் நூற்றாண்டு ராஜேந்திரச் சோழனின் கல்வெட்டுக் குறிப்புகள் இருந்து பின்னர் அழிக்கப் பட்டுள்ளன. கிறிஸ்தவர்களின் தாமஸ் கூத்தை ‘புனித தாமஸ் கட்டுக்கதையும் மயிலை சிவாலயமும்’ என்ற புத்தகத்தின் மூலம் ஈஸ்வர் சரண் என்கிற ஆராய்ச்சியாளர் தோலுரித்துக் காட்டியுள்ளார். வேதம் வேதபிரகாஷ் என்கிற வரலாற்று ஆய்வாளரும், தன்னுடைய ‘புனித தாமஸ் கட்டுக்கதை’ என்கிற புத்தகத்தில் கிறிஸ்துவர்களின் சூழ்ச்சியை நிரூபித்துள்ளார்.ஈஸ்வர் சரண் எழுதியுள்ள The Myth of St.Thomas and Mylapore Shiva Temple என்ற புத்தகத்தை அவசியம் படியுங்கள். அதற்கு பெல்ஜியம் நாட்டு வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான கோன்ராட் யெல்ஸ்ட் எழுதியுள்ள முன்னுரையும் படிக்க வேண்டிய ஒன்று.1
இருப்பினும், தாமஸ் கட்டுக்கதையைத் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட முடிவு செய்த மயிலை மறைமாவட்டம் தெய்வநாயகத்தின் மூலமாக தாமஸ் கட்டுக்கதை மீண்டும் புதிய வேகத்துடன் பரவத் தொடங்கியது.
அந்தத் திரைப்படத்தின் துவக்க விழாவில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு துவக்கி வைத்துப் பேசினார்.ஜி.யு.போப்பை சிலாகிக்கும் கருணாநிதி, திருக்குறளை நன்கு கற்றறிந்து அதற்கு உரையும் எழுதிய கருணாநிதி, தன்னுடைய துவக்க விழா உரையில், புனித தாமஸ்-திருவள்ளுவர் சந்திப்பைப் பற்றியோ அல்லது திருக்குறளில் விவிலியத்தின் தாக்கம் உள்ளதைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவை உண்மைகளாக இருந்திருந்தால் பேசாமல் இருக்கக்கூடியவரா அவர்? ஆனால், கிறிஸ்தவர்களைத் திருப்திப படுத்தி அவர்கள் ஓட்டுகளைப் பெறவேண்டும் என்கிற காரணத்துக்காக புனித தாமஸை ஒரு பிராம்மணர் கொன்றார் என்கிற கட்டுக்கதையைப் பற்றி மட்டும் பேசினார்.பல்வேறு ஆதாரங்களும் சான்றுகளும் உடைய ராமபிரானின் வரலாற்றைக் கேள்விக்குள்ளாக்கி ராமாயண சரிதத்தின் உண்மைத் தன்மையைப் பற்றிக் கேள்விகள் எழுப்பிய கருணாநிதி, ஒரு துளி கூட ஆதாரமோ சான்றோ இல்லாத புனித தாமஸ்ஸின் வரலாற்றைப் பற்றி ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை.(Rediff.com dated 4 July 2008)
திரைப்படத் தயாரிப்பைப் பற்றிய அறிவிப்பைச் செய்து, அதற்கு முதலமைச்சர் தலைமையில் துவக்க விழா நடத்திய பிறகும், எந்த காரணத்தாலோ மயிலாப்பூர் மறைமாவட்டம் அதன் பிறகு அந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கவில்லை. அவர்களின் தயக்கத்திற்கு புனித தாமஸ்ஸின் இந்தியப் பயணம் பற்றி வாத்திக்கனே நம்பிக்கை தெரிவிக்கவில்லை என்பதே முக்கியக் காரணமாக இருக்க வேண்டும். மேலும், பின்வரும் உண்மைகளும் காரணங்களாக இருக்கலாம்:
·1729ம் ஆண்டு மயிலாப்பூர் மறைமாவட்டத் தலைமைப் பாதிரியார் சாந்தோம் சர்ச்சில் உள்ள கல்லறை புனித தாமஸ்ஸுடையதுதானா என்கிற சந்தேகத்தை எழுப்பி, ரோமானிய சடங்குமுறைச் சபைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். ஆனால் அவருடைய சந்தேகத்தை நிராகரித்தோ அல்லது சாந்தோமில் உள்ளது தாமஸ்ஸின் கல்லறைதான் என்பதை உறுதி செய்தோ ரோமானியச் சபை பதில் எதுவும் அளிக்கவில்லை.
·1886ம் ஆண்டு போப் பதிமூன்றாம் லியோவும், 1923ம் ஆண்டு போப் பதினொன்றாம் பையஸும், புனித தாமஸ் இறுதியாக சிந்து நதிக்கு அப்பால் உள்ள இந்திய எல்லைக்கு (தற்போதைய பாகிஸ்தான்)வந்தார் என்றுதான் கூறியிருக்கிறார்கள். அதாவது 2006ல் போப் பெனடிக்ட் கூறியதும் அவர்கள் கூறியதும் ஒன்றே. ஆகவே, தாமஸ் தென் இந்தியாவுக்கு வந்தார் என்பது வெறும் பொய் என்பதே உறுதியாகின்றது.
·பொது ஆண்டு 52ல் அப்போஸ்தலர் தாமஸ் கேரளக் கடலோரக் கிராமமான கொடுங்கல்லூரில் வந்து இறங்கினார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று வாத்திக்கன் தலைமையகம் 13 நவம்பர்1952 அன்று கேரள கத்தோலிக்க சபைக்குத் தகவல் அனுப்பியுள்ளது.2
இந்த மாதிரியான சூழ்நிலையில் தாமஸ் கட்டுக்கதையை, உண்மையான வரலாறாகக் கட்டமைக்க, மயிலை கத்தோலிக்கச் சபை மேலும் முயற்சி செய்வது பரிதாபத்திற்குரியது. ஆனால் இவ்வாறான முயற்சிகள் மூலம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் மதமாற்ற நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த நினைக்கலாம். அதற்குத் திரைப்படங்கள் பயனுள்ள வழிவகையாகவும் அமையக்கூடும்.
எனவே, தற்போது எடுக்கப்படும் இந்தத் திரைப்பட முயற்சியை தேசப்பற்றும் மதநல்லிணக்க விருப்பமும் கொண்ட இந்தியக் குடிமக்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்து முறியடிக்க வேண்டும். ஹிந்து இயக்கங்களும் அமைப்புகளும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அதிபர்களான பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோரிடம் விஷயத்தை எடுத்துச் சென்று, உண்மையான வரலாற்றை எடுத்துக்கூறி, மதநல்லிணக்கத்திற்கு ஆபத்தாக முடியும்,போலியான வரலாற்றை நிலைநிறுத்த முயலும் இந்த முயற்சிக்குத் துணைபோக வேண்டாம் என எச்சரிக்க வேண்டும்.
இந்தத் திரைப்படத் தயாரிப்பைக் கைவிடுவது சிவாஜி புரொடக்ஷன்ஸ்ஸுக்கு மட்டுமல்லாமல், மயிலைக் கத்தோலிக்க மறைமாவட்டத்திற்கும், கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும் நல்லது.
இயேசு கிறிஸ்துவின் பிரதான சீடர்களான பன்னிருவரில் ஒருவர்தான்தோமா. திருச்சபை பாரம்பரிய செய்திகளின் அடிப்படையில் இவரதுமுழு பெயர்'யூதா தோமா'என்பதாகும்.இயேசு கிறிஸ்து பரமேறி சென்றபிறகு தேற்றரவாளனாம் தூய ஆவியால் நிரப்பபட்ட சீடர்கள்“உலகமெங்கும் போய்,சர்வ சிருஷ்டிக்கும்சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.”என்ற தம் தலைவராம் இறைமைந்தனின் கட்டளையை சிரமேற்று, உலகமக்களை பாவ இருளிலிருந்து விடுவிக்க நற்செய்தி என்னும் ஒளியை பல்வேறு நாடுகளுக்கு கொண்டுசென்றனர்.சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் அறிவொளியடைந்தனர். அந்தவகையில்பல்வேறு நாடுகளில்நற்செய்தியை அறிமுகப்படுத்திய தோமாAD 52-ல் கடல் மார்க்கமாக சேரநாட்டின் (தற்போதைய கேரளா) முசிறிபகுதிக்குவந்தார். [பிற்காலத்தில் பல்வேறு நிலவியல் மாற்றங்களை சந்தித்தசேரநாட்டின் புகழ்பெற்ற முசிறி துறைமுகம் தற்போது கொடுங்ஙல்லூர்என்று அழைக்கப்படுகிறது]
மலபார் (கேரள) பகுதிக்குவந்த தோமா ஆயிரக்கணக்கான மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். தம் இனத்தவரான யூதர்கள் அங்குவசிப்பதை கண்டு அவர்களுக்கும்நற்செய்தியை அறிவித்தார். பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டனர்.முசிறிக்கு அருகிலுள்ள பாலையூர் பகுதியில் தோமா போதிக்கும்போது சில பிராமணர்கள் தோமாவின் போதனையை ஏற்றுக்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த வேறுசில பிராமணர்கள் அவ்வூரைவிட்டு வெளியேறியதுடன் அவ்வூருக்கு சாப்பாக்காடு (சாபமான இடம்) என்றும் பெயரிட்டனர். பின்பு இவர்கள் சற்று தொலைவிலுள்ள வெம்மனாடு என்ற பகுதியில் குடியேறினர்.
தமது போதனையை ஏற்றுக்கொண்டு மனம்திரும்பிய மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்து அவர்களுக்காக சபைகளையும் நிறுவினார்தோமா. மலபார் பகுதியில் அவர் ஏழு சபைகளை நிறுவியதாக குறிப்புகள் உள்ளன. அந்த ஏழு இடங்களாவன.
முசிறி (கொடுங்ஙல்லூர்)
பள்ளுர்
பரூர் (கோட்டக்காவு)
கோத்தமங்ஙலம்
காயல்
நிரணம்
கொல்லம்
மேற்கண்ட பகுதிகளில் மட்டுமல்லாது மலையாற்றூர்போன்ற பல சிறிய ஊர்களிலும் அப்பேஸ்தலர்தோமா பணியாற்றியதற்கு சான்றுகள் உள்ளன.பின்பு திருவிதாங்கோடு பகுதிக்கு வந்த தோமா அங்கும் ஒரு ஆலயத்தை கட்டி பலருக்கு திருமுழுக்கு கொடுத்துவிட்டுAD 65-ல்கொரமண்டல் பகுதிக்கு (தற்போதைய சென்னை) சென்றார்.
தோமா கட்டிய தேவாலயம், திருவிதாங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம்
சாந்தோம் பேராலயம், சென்னை
மயிலாப்பூரை அடைந்த தோமா சின்னமலை (இன்றைய சைதாப்பேட்டைக்கு அருகில் உள்ளது) மற்றும் சற்று தொலைவில் உள்ள பெரியமலை பகுதிகளில் மக்களுக்கு போதனை செய்தார். தோமா மற்றும் அவர்காட்டும் மர்க்கத்தின் செல்வாக்கு மயிலை மக்களிடம் பெருகுவதை கண்ட காளிகோயில் பூசாரிகள் எரிச்சலடைந்தனர். பொய் குற்றச்சாட்டுகள்மூலம் அரசரிடம் தண்டனை பெற்றுத்தர இயலாததால் நேரடியாக செயலில் இறங்கினர். இறுதியாக AD 72-ல் பெரியமலை பகுதில் வைத்தது களிகோயில் பூசாரிகளால் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்தசாட்சியாக மரணம் அடைந்தார்.
தோமாவின் சீடர்கள் அரசரின் அனுமதியுடன் அவரது உடலை மைலாப்பூரில் நல்லடக்கம் செய்தனர். தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மகாதேவன் என்ற மன்னரின் உத்தரவுப்படிஒரு பெரிய நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது. அங்கு தற்போது இருக்கும் சாந்தோம் பேராலயம் 1896-ல் கட்டப்பட்டது. தோமா ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தம் வாய்மொழியாக கூறிய வார்த்தைகள் இங்கு நினைவு கூறத்தக்கது. “அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்”. (யோவா 11:16) என்பதே அது. தம் உயிரினும்மேலாக சுவிசேஷத்தை எண்ணிய அவரது வாழ்வு நிச்சயமாக அகில உலக கிறிஸ்தவர்களுக்கும் ஒரு அழகிய முன்மாதிரியே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
"ஜரேப்பாவின் பல நாடுகள் கிறிஸ்தவத்தை அறியும் முன்னரே புனித தோமா இந்தியாவுக்கு வருகை புரிந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பலஜரேப்பிய நாடுகளின் கிறிஸ்தவர்களுக்கும் முந்தைய வரலாறுபுனித தோமாவழிவந்த இந்திய கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இது நாம் உண்மையில் பெருமை கொள்ளத்தக்க செய்தியாகும்."
-Dr.ராஜேந்திரபிரசாத் (இந்தியாவின் முதல் குடியரசு தலைவர்)
பழைய ஏற்பாடு பல கடவுள் வழிபாடு கொண்டது. யகொவா என்பவர் இஸ்ரேலுக்கு ஆன சிறு எல்லை தெய்வமே. பழைய ஏற்பாடு முழு முதல் கடவுல் பெயர் எல்சடை- இது தமிழ் ஆகும்.
இயேசுவின் மாணாக்கர்களில் முக்கியமானவரான புனித தோமையர் [St.Thomas] பற்றி விவிலியம் போதுமான அளவுக்கு செய்திகளை அளிப்பதில்லை. கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தில் தேடினால் தாமையரைப்பற்றி மிகச்சில குறிப்புகளே காணப்படுகின்றன. தாமையரின் பெயர் திருச்சபை அங்கீகரித்த நான்கு இறைச்செய்திகளிலும் மீண்டும் மீண்டும் வருகிறது. அவரது தெளிவான சித்திரத்தை அளிப்பது நான்காவது இறைச்செய்தியாளரா யோவானில்தான். இவர் தாமஸ் யூதாஸ் திதியோன் என்று சொல்லப்படுகிறார். இரட்டையரில் ஒருவன் என்ற பொருளில்...............
தோமையர் யோவானின் இறைச்செய்தியில் இயேசு மேல் அழுத்தமான பிடிப்பும் துணிவும் கொண்ட முதல் மாணாக்கராகச் சொல்லப்படுகிறார். இயேசு லாஸரசை காணும் பொருட்டு ஜுதேயாவுக்கு மீண்டும் செல்லும் நோக்கத்தை அறிவித்தபோது இவர்தான் மற்ற மாணவர்களிடம் ”நாமும் கூடவே செல்வோம். ஒருவேளை நாமனைவருமே கொல்லப்படலாம்”என்று சொன்னார்.[யோவான் எழுதிய இறைச்செய்தி 11-16] .மேலும் தோமையர் எளிதில் நம்பிவிடாதவராகவும் தருக்கம் சார்ந்து எதையும் ஆராய்பவராகவும் இருந்தார். இவரே ஏசுவின் இறுதி உணவின்போது அவர் மீது ஐயத்தை எழுப்பினார். ”தோமையர் ஏசுவிடம் சொன்னார். ”கர்த்தரே நீங்கள் ஆவியா அல்லவா என்று நாங்கள் அறியோம். அதை நாங்கள் எப்படி தெளிவுபடுத்திக் கொள்வது?” [யோவான் எழுதிய இறைச்செய்தி 14:5] .
ஆனாலும் தாமஸ் கிறிஸ்து உயிர்த்தெழுந்து வந்தபோது கேட்ட கேள்வியால்தான் வரலாற்றில் நிற்கிறார். ”அவரது கைகளில் ஆணி அறையப்பட்ட துளைகளை கண்ணால் கண்டு அவற்றில் என் விரல்களை விட்டாலொழிய நான் அதை நம்பமாட்டேன்” என்று அவர் அடம்பிடித்தார்.[யோவான் எழுதிய இறைச்செய்தி 20:25] ஆனால் எட்டு நாட்கள் கழித்து அவர் விசுவாசம் பெற்றார். அதற்காக ஏசு அவரைக் கடிந்துகொண்டார். ” நீ என்னைக் கண்டதனால் என்னை நம்பினாய் தாமஸ். ஆனால் காணாமலேயே நம்பியவர்கள் எவரோ அவர்களே அருள்கூரப்பட்டவர்கள்” [ யோவான் எழுதிய இறைச்செய்தி 20:29].இக்காரணத்தால் இவர் ஐயப்பட்ட தாமஸ் [ Doubting Thomas] என்று அழைக்கப்பட்டார். மேலைநாடுகளில் , குறிப்பாக புரட்டஸ்டண்ட் மதத்தில், தோமையர் ஒரு படி குறைந்தவராகவே இனம்காணப்படுகிறார்.
தாமஸ் என்ற பேர்குறித்தே ஏராளமான கிறித்தவ இறையியல் சார்ந்த ஊகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையான ஆவணம் என்பது கிரேக்க மொழியிலும் சிரியக் மொழியிலும் சிற்சில பாடபேதங்களுடன் பேணப்பட்டுவரும் ‘தோமையரின் செயல்பாடுகள்’ [Acta Thomae] முக்கியமான ஆவணமாகும். அது பார்டசேன்ஸ் எழுதியதாக இருக்கலாம்[Bardesanes] கிபி 220க்கு முன்பாக எழுதப்பட்ட இவ்வாவணம் ஹரானக் [Harnack] ஆல் தன் குறிப்புகளில் [Chronologie, ii, 172] சான்றளிக்கப் பட்டுள்ளது. ஆனால் இதன் உண்மையான பிறப்பிடம் எடேசா ஆகும். [Edessa] அங்கு தாமஸ் கீழைநாட்டில் கொல்லப்பட்டபின் கொண்டுவரப்பட்ட எலும்புகள் வைக்கப்பட்டு வணங்கப்பட்டதாக தெரிகிறது. இது தோமையரின் எலும்புகள்தான் என்பதற்கான ஆதாரம் என்னவெனில் அவர் இரு இடங்களில் ஏசுவின் இரட்டைச் சகோதரர் ஆக குறிப்பிடப்படுகிறார் என்பதே. யூதாஸ் தாமஸ் என்று சிரியக் மொழியில் சொல்லப்படும் தாமஸ் கிரேக்க மொழியில் திதிமோஸ் [இரட்டையர்] என்று சொல்லடுகிறார். இவை ஒரே பொருள் கொண்டவை.
இறையியலாளாரான ரெண்டல் ஹாரிஸ் இந்த எலும்புவழிபாடானது இது எடெஸாவில் இருந்த ஏதோ புறச்சமய [pagan] வழிபாட்டு முறையானது கிறித்தவத்துக்குள் ஊடுருவியதன் விளைவு என்கிறார். அவர் எடெஸாவிற்கு தாமஸின் எலும்புகள் வந்தது குறித்து கூறும் கதை இது. கிறிஸ்துவின் இறப்புக்குப் பின்னர் அவரது மாணாக்கர்கள் உலகைப் பகுத்துக்கொண்டு சமயப்பரப்புநர்களாக [அப்போஸ்தலர்] கிளம்பிய போது தாமஸின் கணக்குக்கு வந்தது இந்தியா. தாமஸ் இந்தியா செல்ல விரும்பவில்லை. அப்போது ஆவி வடிவில் வந்த ஏசு அபான்[Abban] என்ற இந்தியக்கப்பலில் தோன்றி அதன் உரிமையாளரான குந்த·பார்[Gundafor] என்ற மன்னனுக்கு தாமஸை ஆசாரி வேலைசெய்யும் அடிமையாக விற்கச்செய்தார். அவ்வாறாக தாமஸ் அன்டிராபாலிஸ்[Andrapolis] என்ற இந்திய துறைமுகத்துக்கு வந்துசேர்ந்தார். அங்கு அவர் மன்னனுக்கு ஓர் அரண்மனைகட்டும் பணியில் அமர்த்தப்பட்டார். அப்பணத்தை தாமஸ் ஏழைகளுக்கு செலவழித்தார். மன்னன் அவரை சிறையிலடைக்க அவர் ஏசுவின் அருளால் தப்பினார்.அந்த அற்புதத்தை அறிந்த குந்த·பார் மதம் மாறி கிறித்தவர் ஆனார். அங்கே பலரை மதம் மாற்றியபின் தாமஸ் இன்னொரு நாட்டுக்குச் சென்றார். போகும் வழியில் பலவிதமான மாயமிருகங்களையும் பேய்களையும் அவர் சந்தித்தார். மிஸ்தாய் [Misdai சிரிய மொழியில் [Mazdai] என்ற மன்னனின் நாட்டுக்கு அவர் வந்து சேர்ந்தார். அவனது மனைவி டெரிஷியாவையும் மகன் வாஸனையும்[Tertia/ Vazan] அவர் மதம் மாற்றினார். ஆகவே அவர் சிறைப்பிடிக்கப்பட்டு மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார். நகர் அருகே இருந்த குன்றுக்கு அவர் கொண்டுசெல்லபப்ட்டு கொல்லப்பட்டார்.அவரதுச் சடலம் புராதன மன்னர்களின் கோபுரத்தின்கீழ் அடக்கம் செய்யபபட்டது. பிற்பாடு அவரது ஆதரவாளர்களால் அவரது எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு எடெஸாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இங்கு குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் கிபி 46ல் இமைய மலைக்கு தெற்கே ஆ·ப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பஞ்சாப் மற்றும் சிந்த் பகுதியை ஆண்டிருந்த மன்னனின் பேர் கோண்டோ·பெர்னிஸ் என்று கிரேக்க மொழியிலும் குது·பாரன் என்று அம்மொழியிலும் சொல்லப்பட்டது. [Gondophernes/Gudupharan] நாணயங்கள் மூலமும் கிரேக்க தொன்மக்கதைகள் மூலமும் இது ஓரளவுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியின் மொழியான காரோஸ்தி [Kharoshthi ]யிலும் ஐதீகங்கள் காணப்படுகின்றன. இது ஏற்கனவே கண்ட மன்னந்தான் என்பதில் பெரிதும் விவாதமில்லை. தக்த்- இ- ·பாய் [Takht-i-Bahi] கல்வெட்டுகளின்படி அம்மன்னன் கிபி 20 முதல் கிபி 46 வரை ஆண்டான் என்பது நிபுணர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மிஸ்தாய் என்பது இந்து பேர் ஈரானிய மொழிக்கு மாறியதாக இருக்கலாம். அப்படியானால் அது மதுராவை ஆண்ட வாசுதேவன் ஆக இருக்கலாம். கனிஷ்கருக்கு அடுத்தபடியாக பட்டத்துக்கு வந்த மன்னர் அவர். சிலபெயர்கள் பொருளில்லாதபடி உருவாக்கப்பட்டவையாகவும் இருக்கலாம் ஆனால் தோமையர் இந்தியாவின் தெற்கே மேற்குக்கடற்கரைக்கு வந்தார் என்றும் இங்கேயே கொல்லப்பட்டார் என்றும் மிக தீவிரமான நம்பிக்கை உள்ளது. 1955 டிசம்பர் 18 ல் இந்திய தலைநகர் டெல்லியில் தோமையர் தினம் கொண்டாடப்பட்டபோது அப்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் சொன்னார் ” புனித தோமையர் இன்று கிறித்தவ நாடுகளாக இருக்கும் பல நாடுகள் தோன்றுவதற்கு முன்னரே இந்தியக்கடற்கரைக்கு வந்தார். அவரிடமிருந்து தங்கள் கிறித்தவப் பாரம்பரியத்தை தொடங்கும் இந்திய கிறித்தவர்கள் ஐரோபிய நாட்டுக் கிறித்தவர்களைவிடவும் பழைமையானவர்கள் ”
தோமையர் இந்தியா வந்து பத்தொன்பது நூற்றாண்டு தொடங்குவதை ஒட்டிய கொண்டாட்டத்தின் பகுதியாக புனித பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் 1952 டிசம்பர் 31ல் அனுபிய ரேடியோ செய்தியில் இவ்வாறு சொன்னார். ” புனித தோமையர் இந்தியா வந்து 1900 வருடங்கள் தாண்டிவிட்டன. பிந்திய பல நூற்றாண்டுக்காலம் இந்தியா மேற்கிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்தியா தன்னுடைய முதல் அப்போஸ்தலரின் பாரம்பரியத்தை பேணிக்கோண்டது . இந்த அப்போஸ்தலரின் வழித்தோன்றல்களாக இன்று இந்தியாவில் உள்ள தோமையர் கிறித்தவ மக்களுக்கு எங்கள் சபையின் வாழ்த்துக்கள் ”
ஆனால் தோமையர் இந்தியா வந்தது உண்மையா என்ற ஐயம் வலுவானதே. காரணம் ஒன்று தோமையரின் வருகை இன்றும் ஓர் ஐதீக கதையாகவே உள்ளது. தோமையரின் வருகைக்கு ஆதாரமாகக் காட்டப்படும் எல்லா அமைப்புகளும் காலத்தால் மிகவும் பிற்பட்டவை.
மரபான நம்பிக்கைகளின்படி ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தாமையர் கிபி 52ல் இந்தியாவுக்கு வந்தார். கேரளத்தில் அன்றிருந்த முக்கிய துறைமுகமான கொடுங்கல்லூரில் இறங்கினார். இது கொடுங்கோளூர் என்றும் வஞ்சி என்றும் அழைக்கபப்ட்டிருந்த துறைமுகம். சேரர்களின் பண்டைய தலைந்நகரம். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயில் எடுத்த இடம் இதுவே என்று ஆதாரபூர்வமாக சொல்லப் படுகிறது. அந்த கண்ணகி ஆலயமே இன்றுள்ள கொடுங்கல்லூர் தேவி கோயில் என்று வரலாறு கூறுகிறது. தாமையர் கேரள பிராமணர்களுக்கு ஏசுவின் நற்செய்தியைச் சொன்னார் என்றும் அவர்களில் பலர் மதம் மாறினார்கள் என்றும் கூறப்படுகிறது.
அவர் ஏழு திருச்சபைகளை கேரள மண்ணில் உருவாக்கினாராம். அவை முறையே கொடுங்கல்லூர், கோட்டக்காவு, பாலயூர், கொல்லம், கோக்கமங்கலம், நிரணம் சேறயில் ஆகியவை. அவர் மலயாற்றூர் குன்றுகளுக்கு வந்து ஜெபம் செய்யும் பழக்கம் கொண்டிருந்தார் என்றும் சொல்லபப்டுகிறது. அதன் பின் அவர் கிழக்கு கடற்கரைக்கு இடம் பெயர்ந்தார். கிபி 72ல் அவர் சென்னைக்கு அருகே உள்ள புனித தோமையர் குன்று என இன்று அழைக்கப்படும் குன்றில் வாழ்ந்த போது ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டார். அவரது உடல் மைலாப்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கே அவர் அடக்கம் செய்யபப்ட்டார். இன்றும் அவரது சமாதி அங்கே வழிபடப்படுகிறது. உண்மையில் தோமையர் வந்திருக்க வாய்ப்புள்ளதா? உண்டு. அன்றைய கேரளக் கடற்கரைக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்தது. யவனர்களும் அராபியர்களும் தொடர்ந்து வணிக நோக்கத்துடன் கேரளத்துக்கு வந்தபடி இருந்தனர். இக்கடற்கரையில் இன்றும் குவியல் குவியலாக நாணயங்கள் கிடைத்தபடியுள்ளன. அதிகமும் ரோமாபுரி நாணயங்கள். அதற்கும் முன்பு கிமு 970 முதல் 930 வரை ஆண்ட இஸ்ரேலரின் சாலமோன் மன்னரின் மரக்கலங்கள் கேரளக் கடற்கரைக்கு வந்தபடி இருந்தன. அதற்கு புராதன பழைய ஏற்பாடு பைபிளிலேலேயே ஆதாரங்கள் உள்ளன. முசிரிஸ் என்று அப்போது குறிக்கப்பட்ட கொடுங்கல்லூரில் இருந்து முத்தும் மணிகளும் கோண்டுவரப்பட்டு மன்னருக்குப் படைக்கப்பட்டன. கேரளக்கடற்கரையிலிருந்து பெறப்பட்ட மிளகு முதலிய நறுமணப்பொருட்கள் அக்காலம் முதலே ஐரோப்பாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் மிகமிக பிரியமானவையாக இருந்தன. ரோமாபுரி பயணியும் வரலாற்றாசிரியருமான ப்ளினி [கிமு 23-79] ஒவ்வொரு வருடமும் பொன்னாகவும் மணியாகவும் பெருஞ்செல்வம் கேரளத்துக்குச் செல்வதைப்பற்றி வருந்தி எழுதியிருக்கிறார்.மலபார் பகுதிக் கப்பல்கள் பாரசீக வளைகுடா கடந்து சென்று வணிகம் செய்வதைப்பற்றியும் அவர் எழுதியுள்ளார். ப்ளினியைப்போலவே டாலமி [கிமு 100-160) மற்றும் பெரிப்ளூஸ் ஆகியோரும் சேரக்கடற்கரைக்கு மேலைநாடுகளுடன் இருந்த நெருக்கமான உறவைப்பற்றி எழுதியுள்ளனர். முதல் நூற்றாண்டுமுதலே கேரளத்தில் மட்டாஞ்சேரி என்ற இடத்தில் யூத குடியிருப்புகள் உருவாகிவிட்டன. சமீபகாலம் வரை யூதர்கள் ஒரு தனிச்சமூகமாக அங்கிருந்தனர்.அவர்களின் கோயிலும்[சினகாக்] அங்குள்ளது இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருக்க வாய்ப்புள்ள யூதாஸ்- தாமஸ் குறிப்புகளின் படி முதல் நூற்றாண்டின் இறுதியில் புனித தோமையர் தன் சுவிசேஷங்களை குண்டபேர்ஸ் என்ற பார்த்திய மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் செய்துகொண்டிருந்தார் .[Gundaphares,Parthian]. பாண்டிய மன்னரின் நிலமா இது என ஆராயலாம். இலக்கிய ஆதாரங்கள் தவிர இன்றும் எஞ்சும் தோமையர் மரபு கிறித்தவர்களின் [மார்த்தோமா கிறித்தவர்கள்] சமூகம் அவரது வருகைக்கான சிறந்த ஆதாரமாகும். இவர்கள் பாலையூர் , அர்த்தாடு, நிலம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரளம் முழுக்க பரவினார்கள். மயிலாப்பூரில் உள்ள தோமையரின் சமாதியும் பறங்கிமலை கோயிலும் இன்றும் உள்ளவை. இப்புனித அப்போஸ்தலரின் எலும்புகள் எடெஸ்ஸா என்ற என்ற ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பிற ஆதாரங்கள்
ஈஸி·பஸ் [ Eusebius, கிபி நாலாம் நூற்றாண்டு] புனித ஜெரோம் [St. Jerome, கிபி342-420] ஆகியோரின் குறிப்புகளில் பாண்டேனியஸின் [Pantaenus] பயணம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இவர் அலக்ஸாண்டிரியாவின் பிஷப் டிமிட்றியஸ் மூலம் இந்தியாவின் பிராமணர்களுக்கு கிறித்தவ மதத்தை கற்பிக்கும்பொருட்டு அனுப்பபட்டவர் . கிபி 190ல் எழுதப்பட்ட இக்குறிப்புகளில் சில மேலதிக ஆதாரங்கள் கிடைக்கின்றன. மேலைக்கடற்கரையில் வாழ்ந்த தாமையர் மரபு கிறித்தவர்களைப்பற்றி இவற்றில் சொல்லப்பட்டுள்ளது. புனித எ·ப்ரம் [St. Ephrem கிபி306-373] புனித கிரிகோரி [St. Gregory of Nazianze கிபி 324-390 ] புநித அம்புரோஸ் [ St. Ambrose கிபி 333-397] புனித ஜெரோம் [St. Jerome ஆறாம் நூற்றாண்டு] புனித கிரிகோரி [St. Gregory of Tours ஆறாம் நூற்றாண்டு] ஆகியோரின் குறிப்புகளிலெல்லாம் இந்தியாவில் கிறித்த்வம் இருந்தமைக்கான சான்றுகளும் தோமையர் பற்றிய குறிப்புகளும் உள்ளன என்று சொல்லப்படுகிறது.
ஆனால் தாமஸ் இந்தியாவில் ஊழியம்செய்தார் என்பதற்கோ கணிசமான இந்தியக் கிறித்தவர்கள் நம்புவதுபோல அவர் மேற்குக் கடற்கரையில் இறங்கி கிழக்கு கடற்கரையில் இறந்தார் என்பதற்கோ அவரை சென்னை மைலாப்பூருடன் தொடர்புபடுத்துவதற்கோ உறுதியான சான்றுகள் ஏதுமில்லை என்று சொல்லும் ஆய்வாளர்களும் உள்ளனர். எ·ப்ரம் சிரியக் , புனித கிரிகோரி , புனித அம்புரோஸ்,புனித ஜெரோம், புனித கிரிகோரரி ஆகியோர் இதைப்பற்றிய மேலோட்டமான குறிப்புகளை விட்டுச்சென்றிருந்தபோதும்கூட அவை போதுமான ஆதாரங்களாக இல்லை. ஆனால் சென்னை பறங்கிமலை அல்லது புனித தோமையர் மலையில் கல்லாலன ஒரு சிலுவை உள்ளது. இதில் ·ப்லாவி [Pahlavi ] என்னும் தொன்மையான பெர்சியன் மொழியில் அமைந்த கல்வெட்டு உள்ளது. இது ஏழாம்நூற்றாண்டுக்கு முற்பட்டது. சிரியமொழிச்சடங்குகளையும் சிரிய வேர்களையும் கொண்ட ஒரு கிறித்தவ சமூகம் மேலைக்கடற்கரையில் காணப்படுவதும் உண்மையே. இவர்கள் சிரியன் கிறித்தவர்கள் எனப்படுகின்றனர். இந்த சர்ச் உண்மையிலேயே புனித தாமஸ் அவர்களால் உருவாக்கப்பட்டதா என்பது இன்னும் குழப்பமானதே. கிபி 325ல் நடந்த நைஸியா கவுன்ஸிலில் [Council of Nicea ] சிரிய-கால்டியன் பிஷப் ஒருவர் இந்தியா மற்றும் பாரசீகத்துக்கான பிஷப்பாக கலந்துகொண்டமைக்கு சான்று உள்ளது. அப்போதே இந்தியாவில் கிறித்தவர்கள் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவர்கள் தாமஸ் அவர்களால் மதம் மாற்றப்பட்டவர்களா? கிபி 745ல் தாமஸ் கானா [Thomas Cana] என்னும் போதகரின் தலைமியில் ஒரு சிரிய மதமாற்றக்குழு கேரளக்கடற்கரையில் பணியாற்றியுள்ளது. அவர் பேரைத்தான் புனித தோமையர் என்றுஙிங்குள்ள கிறித்தவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அவர் கேரள மரபில் க்னாயி தொம்மன் என்று சொல்லபப்டுகிறார். இவ்வாறு இவ்விவாதம் தொடர்ந்து நடைபெறுகிறது. வரலாற்றாதாரங்களை விடவும் நம்பிக்கைகளுக்கே இங்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. கத்தோலிக்க சபையால் உறுதியாகச் சொல்லப்பட சாத்தியமான தகவல் என்னவென்றால் ஆறாம் நூற்றாண்டு அளவில் காஸ்மோஸ் இண்டிகோப்லெய்ஸ்டஸ் [Cosmas Indicopleustes] மலபார் கடற்கரையில் [Male] கிறித்தவர்கள் இருந்தனர் அவர்களின் பிஷப் பாரசீகத்தில் பட்டமேற்றார் என்று குறிப்பிடுவதாகும். தோமையரின் எலும்புகள் நாலாம் நூற்றாண்டுவரை எடெஸ்ஸாவில் இருந்தன என்பதற்கு சான்று உள்ளன. அவை அங்கிருந்து சியோஸ் [Chios]க்கு 1258ல் கொண்டுசெல்லபப்ட்டு அங்கிருந்து ஒர்டொனா [Ortona]வுக்கு கொண்டுசெல்லபப்ட்டதாக ஆதாரபூர்வமாகச் சொல்ல முடியும். ஒரு தவறான புரிதலின் அடிப்படையில் தாமஸ் அமெரிக்காவுக்குச் சென்றதாக சிலர் நம்புகிறார்கள். ஆக்டா தோமா [Acta Thomae] வின் சுருக்கமான வடிவம் எதியோப்பிய மொழியிலும் லத்தீனும் உள்ளது. தோமையரின் சுவிசேஷம் என்ற வடிவில் எகிப்தில் காப்டிக் மொழி வடிவில் கிடைத்துள்ள நூலை கத்தோலிக்க திருச்சபை அங்கீகரிக்கவில்லை. தோமையரின் வெளிப்பாடுகள் [Revelatio Thomae] என்ற பேரில் கிடைக்கும் நூல் பாப்பரசர் கெலசியஸ்[ Pope Gelasius]அவர்களா இறைமறுப்பு என்று விலக்கப்பட்டது. அதன் பல சிதைந்த வடிவங்கள் இப்போது பல இடங்களில் கிடைக்கின்றன. ஆய்வாளர்களைப் பொறுத்தவரை புனித தாமையர் யார், அவர் இந்தியாவுக்கு வந்தாரா, இல்லையென்றால் கிழக்கே வந்த அவர் உண்மையில் எங்கு கிறித்தவச் செய்தியை பரப்பினார் என்பதெல்லாம் இன்றும் மர்மங்களே.
அவரது இறைச்செய்தி பிற்பாடு கிறித்தவ தேவாலய அதிகார அமைப்பால் அங்கீகரிக்கபபட்ட இறைச்செய்திகளிலிருந்து தத்துவார்த்தமாக மாறுபட்டிருந்தது என்று இப்போது தெரிகிறது. அதனால்தான் அவர் வரலாற்றில் இருந்து மறைந்து போனாரா என்ன?
புனித தோமா பற்றி தெரியாமல் எழுதிவிட்டாய் என பலர் சீறுகின்றார்கள். உலக வரலாற்றை எல்லாம் தேடியவன் தோமாவின் வரலாற்றை தேடாமல் இருப்ப்போமா?
இயேசுவின் 12 சீடர்களில் தாமஸ் எனும் தோமையாரும் ஒருவர், எங்கோ பாமரராய் சுற்றி திரிந்த அவரை இயேசு சீடராக்குகின்றார்
ஆனால் இயேசு உயிர்த்ததை நம்பமாட்டேன் என அடம்பிடித்தபொழுது இயேசு வந்து இதோ என் காயம் என காட்டி அவரை நம்பவைத்து முழுமையாக ஆட்கொண்டார்
இத்தோடு பைபிள் புனித தாமஸ் என்பவரை பற்றி முடித்துகொள்கின்றது, அதன்பின் பைபிள் ஒன்றும் சொல்லாது
என்னதான் ஆனார் தோமா?
அவரும் போதித்திருக்கின்றார், ஒரு நற்செய்தியும் எழுதியிருக்கின்றார். உண்மையில் மத்தேயு, மார்க்,லூக்கஸ், ஜாண் என்பவரை போல பலர் நற்செய்தி எழுதியிருக்கின்றார்கள்
ஜேம்ஸ் எனும் யாகப்பர் எழுதியிருக்கின்றா, புனித தோமாவும் எழுதியிருக்கின்றார்
ஆனால் பைபிளில் சேர்க்கவில்லை ஏன்? ஏன் என்றால் அதில் சில முரண்பாடுகள் உண்டு
"கேளுங்கள் தரப்படும்.." என இயேசு சொன்னதாக மற்ற நற்செய்தி சொன்னால், "தரப்படும் வரை கேளுங்கள்.." என தோமாவின் நற்செய்தி சொன்னது, இப்படிபட்ட முரண்பாடு காரணமாக நீக்கிவிட்டார்கள்.
இயேசு 5 அப்பத்தை பலுகிபெருக பண்ணினார் என மற்ற நற்செய்தி சொன்னால், அல்ல மக்களிடம் இருந்த உணவினை மொத்தமாக சேர்த்து பின் பங்கிட்டு கொடுத்தார் என்ற அளவில் தோமாவின் நற்செய்தி இருந்தது.
தோமா இயேசுவினை முழுக்க முழுக்க தத்துவாதியாக பார்த்தவர், அதனால்தான் இயேசு உயிர்த்துவிட்டார் என்பதை அவர் நம்பவே இல்லை, முதலில் நம்பவே இல்லை. அவர் காயத்தை தொட்டுபார்க்காமல் நம்ப மாட்டேன் என அவர் சவால்விட்டது எல்லாம் இந்த அடிப்படையில்தான்
சீடர்களுக்கும் தோமாவிற்கும் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருந்திருக்கின்றது
தோமா இந்தியா வந்தார் என சொல்பவர்கள், பவுல் என்பவர் கண்ட தரிசனத்தை மறக்கின்றார்கள், அது பைபிளில் தெளிவாக இருக்கின்றது
அதாவது பவுல் என்பவர் ஆசியா மைனர் வழியாக கிழக்கு நோக்கி வந்து கிறிஸ்துவினை பரப்பத்தான் திட்டமிட்டார். ரோமர் கொன்ற யேசுவினை ஐரோப்பிய பேரரசின் தலைநகரான ரோம் பக்கம் போதிக்க அவருக்கு தயக்கம் இருந்தது
அப்பொழுது அவர் தரிசனத்தில் மாசின்டோனியாவின் ஒருவன் வந்து தங்கள் பக்கம் அழைக்க, இறைவன் கிழக்கே செல்வதை அனுமதிக்கவில்லை என உணர்ந்து மேற்கு நோக்கி சென்றார்
பின் ரோமில்தான் பவுலும், பீட்டரும் அவர்கள் தொடக்கத்தில் அஞ்சியது போலவே கொல்லவும் பட்டார்கள்.
ஆம் இயேசுவின் நற்செய்தி கிழக்கு பக்கம் அறிவிக்கபட கடவுள் உத்தரவு கொடுக்கவில்லை என சொல்வது பைபிள்தான்
அந்த காலகட்டத்தில் எல்லோரும் பீட்டர், பவுல், பிலிப்பு என எல்லோரும் ஐரோப்பா நோக்கி செல்ல தோமா மட்டும் இந்தியா வருவாரா?
நிச்சயம் இல்லை, வாய்ப்பே இல்லை
ஆனால் என்ன நடந்தது? தோமா என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அவருக்கு சீடர்கள் இருந்தார்கள்
தோமா வழி கிறிஸ்தவன் என்றொரு பிரிவே இருந்தது, இன்றுள்ள சிரியன் ஆர்தடாக்ஸ் எனும் சபையின் மூலம் அது
அதாவது அன்று போப் இல்லை, திருச்சபை தொடங்கபடவில்லை, பவுல் என்பவர் கொரிந்து, தெசலோனிக்கா, பிலிப்பு என எல்லா ஊர்களிலும் சபை தொடங்கிகொண்டிருந்தார்
சிரியபக்கம், அந்தியோக் பக்கம் தோமா தனி சபை நடத்தினார்கள் என்கின்றார்கள்,
அந்த தோமாவின் சீடர்கள், அந்த சபையினர் கேரளா பக்கம் வந்ததாகவும் அவர்கள் அந்த சிரியன் மலபார் சபையினை தொடங்கி வைத்ததாகவுமே வரலாறு சொல்கின்றது
அதுவும் கிபி 70க்கு பின்னால் ரோமையர் எருசலேம் ஆலயத்தை அழித்து யூதமோ, கிறிஸ்தவமோ தொலைத்துவிடுவோம் என எச்சரிக்கை செய்த பின்பு
ரோமருக்கு அஞ்சி யூதர்கள் கொச்சி வந்தார்கள் அல்லவா? அந்த காலகட்டத்தில் தோமா சபையாரும் மலபார் பக்கம் வந்திருக்க வாய்ப்பு உண்டு என்கின்றது வரலாறு
அப்படி கேரளாவில் இருந்து கிறிஸ்தவர் சென்னை மயிலாப்பூர் பக்கம் வந்திருக்கலாம், கொல்ல்பட்டிருக்கலாம்
அது தோமா சபையின் ஒருவராக இருக்கலாமே அன்றி தோமா என்பது எங்கும் உறுதிபடுத்தபடவில்லை
ஆக தோமா வழிவந்த சபையில் யாரோ நடமாடியிருக்கலாமே தவிர, தோமாதான் வந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை
இதுவரை இல்லை
போர்த்துகீசியரிடம் தகவல் சென்றபொழுது, அப்படியா ?? அவர் கல்லறையா? அப்படியே இருக்கட்டும் என்றார்கள், உண்மையில் சாந்தோம் என்பது செயின்ட் தாமஸ் என்பதன் திரிபு சாந்தா தோமஸ் என்று போர்த்துகீசிய மொழியில் தோமாவினை அழைக்கும் சொல்
இது சாந்தா தோமஸாக இருக்கலாம் என்று சொன்னார்களே தவிர, முழு ஆதாரம் அவர்களிடமும் இல்லை
ஆனால் வெள்ளையர் ஆட்சியில் அது நிலைபெற்றது
முழு ஆராய்ச்சிகள் ஒருநாளும் நடக்கவே இல்லை, எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லபட்டவை
இதனிடையே ஆப்கனில் தோண்டபட்டு கொண்டு செல்லபட்ட எலும்புகளை தோமாவின் சீடர்கள், இது தோமாவின் எலும்பு அவர் ஆப்கானுக்கு சென்றிருந்தார், (அன்றெல்லாம் அது கிரேக்கர் ஆப்கன் செல்வது எளிது) என ரோமிற்கு கொண்டு சென்ற தகவலும் உண்டு
ஒரு விஷயம் உண்மை
கத்தோலிக்க திருச்சபையிலும் மறைக்கபட்ட பக்கங்கள் ஏராளம் உண்டு, பல விஷயங்களை அது முழுக்க ஆராய்வதே இல்லை
அப்படியா, ஒஹோ அப்படியே இருக்கட்டுமே என விட்டுவிட்டார்கள், அதில் ஒன்றுதான் தோமா சர்ச்சை
எல்லா இயேசுவின் சீடர்களும் ஐரோப்பாவில் முண்டிய காலத்தில் தோமா மட்டும் கிழக்கே வந்தார் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பொய்கள்
அப்படி வருவது சுலபம் என்றால் மீதி 10 சீடர்களும் ஏன் வரவில்லை என கேட்டால் பதில் இவர்களிடம் இருக்காது
அதனால் அடித்து சொல்லலாம், ஒரு விஷயம் சரியான வாதம்
சிலுவை என்பது எந்தமொழி சொல்? இலத்தீனிலும் ஆங்கிலத்திலும் அது குரூஸ் அல்லது கிராஸ்
சிலுபே என்பது சிலுவையினை குறிக்கும் சீரிய மொழி சொல்
சீரியன் மலபார் சபை தொடங்கபட்டபொழுது சிலுவை எனும் சொல் இங்கு வந்தது, நிலைபெற்றும் விட்டது.
இன்றுவரை அச்சபை தனி சபையே, உலகெல்லாம் கிறிஸ்மஸ் கொண்டாடும்பொழுது கொண்டாடமாட்டார்கள், ஈஸ்டரும் அப்படியே
தனியாக ஒருநாளில் கொண்டாடி, சின்னதம்பி கவுண்டமணி போல் கைதட்டிகொண்டிருப்பார்கள்
ஆக தோமா சிரியா பக்கம் ஒரு சபை நடத்தியிருக்கின்றார், பின்னாளில் அவர் சீடர்கள் அதனை மலையாள மலபார் பக்கம் பரப்பினர் என்பதே ஏற்றுகொள்ள கூடிய வாதம்
அதெல்லாம் இருக்கட்டும்
அண்ணே கிறிஸ்மஸ் பைபிளில் இல்லை, அண்ணே ஈஸ்டர் கொண்டாட பைபிள் சொல்லவில்லை, புனிதர்களை வணங்க பைபிள் சொல்லவில்லை என மல்லுகட்டும் அதிதீவிர கிறிஸ்தவர்கள் எல்லாம்...
தோமா இந்தியா வந்தார் என்பதை மட்டும் நம்புவார்களாம், பைபிளின் எந்த பக்கத்தில் அப்படி சொல்லியிருக்கின்றது?