New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Church Activities against common Public


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Church Activities against common Public
Permalink  
 


வேப்பேரியில் 100 ஆண்டுகளுக்கும் மேலான
மரங்கள் வெட்டப்படுவதாக பொதுமக்கள் புகார்
கிளையைத்தான் வெட்டியதாக பெண்கள் விடுதி நிர்வாகம் விளக்கம்
 
 
சென்னை, மார்ச்.14-
 
சென்னை வேப்பேரியில் உள்ள பெண்கள் விடுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் வயதான மரங்களை வெட்டி வீழ்த்துவதாக பொதுமக்கள் புகார் கூறினர். ஆனால், மரக்கிளைகளைத்தான் வெட்டியதாக அந்த விடுதி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
 
மரங்களை வெட்டியதால்...
 
சென்னை வேப்பேரியில் ரன்டால்ஸ் என்ற பெயருடைய சாலை பின்னர் ஈ.வி.கே.சம்பத் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் இந்த சாலையின் இருபுறமும் ஏராளமான மரங்கள் இருந்தன. அப்போது சாலை முழுவதும் மர நிழல் இருக்கும். அதனால் இந்த சாலையில் நடந்து செல்வதை பொதுமக்கள் பெரும் ஆனந்தமாக கருதினார்கள். இங்கிருந்த வீடுகளுக்குள்ளேயும் ஏராளமான மரங்கள் இருந்தன.
 
மரங்களை பற்றிய கதையை முதியவர்கள் தங்களது பேரன், பேத்திகளிடம் கதை, கதையாக சொன்னார்கள். அவர்களில் பலர் காலமாகிவிட்டாலும் மரங்களைப் பற்றி அவர்கள் சொன்ன கதைகள் இன்னமும் மறக்காமல் இருப்பதாக இந்த பகுதியில் வசிக்கும் இளையவர்கள் கூறுகின்றனர். மரங்கள் மனிதர்களுக்கு நிழல் தருவதோடு மட்டுமில்லாமல், மழையைக் கொண்டு வருவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பறவைகளின் வாழ்விடமாகவும் இருக்கிறது. சென்னை நகரம் பெருநகராக மாறியதால் ஈ.வி.கே.சம்பத் சாலையில் இருந்த ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு வீடுகள், கடைகள், அலுவலகங்களாக உருமாறிவிட்டன.
 
காக்கைகள் கரைந்தன
 
வேப்பேரியில் மரங்கள் நிறைய இருந்தபோது நிலவிய தட்பவெப்ப நிலை, இப்போது அறவே இல்லை. வெப்ப தாக்குதல் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில், ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள பெண்கள் விடுதியில் மரங்கள் வெட்டப்படுவதாக பொதுமக்கள் நேற்று புகார் கூறினார்கள். அதுபற்றி போலீஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு எஸ்.எம்.எஸ்.மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த எஸ்.எம்.எஸ். செய்தியில், ``ஒ.டபிள்ï.சி.ஏ.பெண்கள் விடுதியில் நன்கு ஆரோக்கியமாக இருக்கும் 5 மரங்கள் வெட்டப்படுகின்றன. அந்த மரங்களைக் காப்பாற்ற உங்கள் கடமையைச் செய்யுங்கள்'' என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
அந்த விடுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் வயதான சில மரங்கள் வெட்டப்பட்டன. அதில் கூடு கட்டியிருந்த பறவைகள் தங்களது வாழ்விடத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின. ``பறவைகள் கூடு கட்டி குஞ்சு பொரிக்கும் காலத்தில் இப்படி மரத்தை வெட்டுகிறார்களே'' என்று அந்த வழியாக சென்ற பலரும் வேதனைப்பட்டனர். மரங்களை வெட்டி வீழ்த்தும்போது வேதனையில் காக்கைகள் கரைந்தன. பறவைகள் அழுவதைப் பார்த்த பொதுமக்கள் இப்படி மரங்களை வெட்டி பறவைகளை வாழ்விடத்தை அழிக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டனர். இயற்கை ஆர்வலர்கள் கண்கலங்கினர். ``ஒருபுறம் மரத்தை வெட்டாதீர்கள் என்றும் ஒரு மரத்தை வெட்டினால் 25 மரக்கன்றுகளை நட்டு வையுங்கள் என்றும் பிரசாரம் செய்யப்படுகிறது. மறுபுறம் 100 ஆண்டுகளுக்கும் மேலான மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன'' என்று அவர்கள் கூறினர்.
 
நிர்வாகத்தினரின் விளக்கம்
 
இதுபற்றி பெண்கள் விடுதி நிர்வாகத்தினர் கூறுகையில், ``நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயரமாக வளர்ந்துவிட்ட மரங்களின் கிளைகளை வெட்டுவது வழக்கம். அதன்பிறகு அந்த மரங்கள் மீண்டும் துளிர்த்து வளர்ந்துவிடும். அதுபோலத்தான் இந்த ஆண்டும் வெட்டுகிறோம். மரங்களை முழுவதுமாக வெட்டமாட்டோம். விடுதியின் காம்பவுண்டு சுவர் அருகே வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது. அதன்அருகில் உள்ள மரங்களில் இருந்து புழுப்பூச்சிகள் பெண்கள் மீது விழுகின்றன. அதனால் அவர்களுக்கு அலர்ஜி, தோல் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதனால்தான் மரக்கிளைகளை வெட்டுகிறோம்'' என்று தெரிவித்தனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சிவபிரகாசர் நூல்கள் எரித்த பெஸ்கியின் 330வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

வீரமாமுனிவரின் 330வது பிறந்த நாள்!

கருணாநிதி அரசு கொடுத்த விளம்பரம் 
ஜோஸப் கான்ஸ்டேன்ஸோ / கான்ஸ்டேனியஸ் பெஸ்கி [Joseph Constanzo 
(Constantius) Beschi (1680-1742)] என்ற கிருத்துவ பாதிரியார், இத்தாலி 
நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு மதம் பரப்ப வந்தார். 
தூத்துக்குடிக்கு 1710ம் ஆண்டு வந்து பண்டிதர் சுப்ரதீப கவிராயரிடம் 
மதுரையில் தமிழ் கற்றார். அதாவது தமிழ் கற்றது, கிருத்துவ மதம் 
பரப்பவேயன்றி தமிழ்மீதான பற்று, காதலால் அல்ல. அவர் பெயரில் புxஅங்கும் பல 
நூல்கள் அவரால் எழுதப்பட்டதல்ல என்று கிருத்துவர்களே எடுத்துக் 
காட்டியுள்ளனர். அக்காலத்தில் வருமையில் வாடிய தமிழ் புலவர்களை வைத்து 
எழுதபட்டவைதாம். கருணாநிதி எப்படி ஒரு தமிழ்பள்ளி ஆசிரியரை வைத்து 
“கபாலீசஸ்வரர் போற்றியில்” தமையும் சேர்த்து “போற்றிக் கொண்டாரோ” அந்த 
மாதிரி சமாசர்ரம் தான் அது! 
1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். 
கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு 
கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார்! 
1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். 
மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு 
எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு ச்ய்த கொடுமைகள் 
அநேகம்! உடனே டேனிஸ் (Denmark) மிஷினரிகளுடன் தன்னுடைய இறையியல் சண்டயை 
ஆரம்பித்துவிட்டார். 
1728ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ள ஒரு கடிதம் பாதிரி மாட்ரியா என்பவரின் 
ஆணைப்படி, இவர் அந்த ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்களை எதிர்த்து, மறுத்து வேலை 
செய்யுமாறு பணித்ததாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நிறைய 
அளவில் புத்தகங்களை வெளியிடும்போது, கத்தோலிக்கர்களால் முடியவில்லையே 
என்று வருத்தப் படுகிறார். 
இந்த பெஸ்கி பாதிரியார் முழுக்க-முழுக்க 
பிரச்சினைகள்-சர்ச்சைகளுக்குட்பட்ட மதவெறி பிடித்தவராகத் தெரிகிறது. 
துரைமங்களம் சிவப்பிரகாசர் கிருத்துவர்களின் அடாத செயல்கள் 
பொறுக்கமாட்டாமல், “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” என்ற 
நூல்களை எழுதியதாக உள்ளது. ஆனால், அந்த பெஸ்கி அதையறிந்து தாளாமல், 
அந்நூல்களைத் திருடி எரித்திவிட்டதாகத் தெரிகிறது. இன்று நான்கைந்து 
பாடல்கள்தாம் சிக்கியுள்ளன. அவையே கிருத்துவர்களின் அட்டூழியங்களை 
எடுத்துக் காட்டுகிறது!

ஆனால்  அவரது 330வது பிறந்த நாள் அரசாங்கத்தால் கொண்டாடப்படுவது விந்தையாக உள்ளது! 
நாளையொட்டி, சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு 
அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருப் படத்திற்கு செய்தித்துறை அமைச்சர் 
பரிதி இளம்வழுதி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் ஆகியோர் மலர் 
தூவி மரியாதை செலுத்தினர்.

என்னே தமிழர்களது கோலம்! 
ஏன் தமிழ்நாட்டில் கொண்டாடுவதற்கு உகந்த புலவர்களேயில்லையா? 
எங்கே போயிற்று இன்று வாழும் தமிழ்புலவர்களுக்கு ரோஸம், மானம், எல்லாம்………………..? 
உள்ளர்களே தமிழ் அறிஞர்கள், பண்டிதர்கள், புலவர்கள், கவிகள், 
கவியரசர்கள், கவிப்பேரரசர்கள், கவிக்கோக்கள், பெருங்கவிக்கோக்கள் 
…………………….இவர்கள் எல்லாம் என்ன செய்கின்றனர்? 
இவர்களுக்கு சரித்திரம் தெரியாதா? 
தமிழ் தெரியாதா? 
எது தெரியாது?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

ஐயப்பனின் நண்பர் ஒரு கிருத்துவ பாதிரி: புதிய கதைத் திரிக்கப்படுகிறது!

ஜனவரி 19, 2010 by vedaprakash

ஐயப்பனின் நண்பர் ஒரு கிருத்துவ பாதிரி: புதிய கதைத் திரிக்கப்படுகிறது!

ஃபினிஸியோ எண்ற பாதிரி இருந்தானாம். அவனுக்கு இந்து கலாச்சாரம் என்றால் பிடிக்குமாம். அவன் ஐயப்பனுடைய நண்பனாம்…………………….இப்படி ஒரு கதையைத் திரிக்க கிருத்துவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்!

எங்கிருந்து வந்தான் அந்த பாதிரி?

1498ற்கு பிறகு வந்தான், 1632ல் செத்தான் என்றால், அப்பொழுது ஏது ஐயப்பன்!

என்ன கேவலம், இப்ப்டியெல்லாம் கூட புரட்டுவேலைகள் செய்வார்களா?

பிறகு தாமஸ் புரட்டு வேறு பேசுகிறார்கள்!

இதில்தான் அவர்களது போலித்தனமும், கள்ளத்தனமும் வெளிப்படுகிறது.

ஐயப்ப பக்தர்களே உஷார்!

இந்த போலிகளை நம்பி, ஐயப்பனை விட்டுவிடப் போகிறீர்கள்!

கிருத்துவர்களால் சொல்லப்பட்ம் கதை: 1579ல் எலயிடது ஆட்சியாளன் முதேடது அனுமதி கொடுத்தபோது ஆர்துங்கல் என்ற இடத்தில் இருந்த மார்தோமா / சால்திய கிருத்துவர்கள், தாமஸ் பெயரில் ஒரு குடிசையைக் கட்டினார்களாம். போர்ச்சுகீசியர் அங்கு வந்தபோது பாப்டிஸம் பெறாத அந்த “கிருத்துவர்களை”க் கண்டனராம்! அந்த குடிசையை எடுத்துவிட்டு, “சந்தநந்தராவோஸ்” என்ற பெயரில் 30-11-1581ல் மரத்தினால் மரத்தினால் ஒரு கட்டிடம் கட்டினார்களாம். பிறகு அவர்கள் அந்த “கிருத்துவர்களை” வலுக்கட்டாயமாக “மதம்” மாற்றி, லத்தீன் சடங்குகளை ஏற்றுக்கொள்ளச் செய்தனராம்! 1584ல் காஸ்பர் பயஸ் என்பவனிருந்தானாம். அவ்வருடமே ஜகோமோ ஃபெனிஸியோ, அரசனின் அனுமதியுடன் கல்லினால் ஒரு சர்ச் கட்ட ஆரம்பித்து, 7 வருடங்களில் – 1591ல் முடித்தானாம். 1619ல் மறுபடியும் அங்கு வேலைக்கு அமர்த்தபட்ட போது அதிசயங்களை செய்ய ஆரம்பித்தானாம். அப்பொழுது அவனுக்குப் பெயர் “வேலுதச்சன்” என்பதாம். 1632ல் செத்துவிட்டானாம். பிறகு அந்த சர்ச் மறுபடி-மறுபடி கட்டப்பட்டதாம்.

ஆர்துங்கல் சர்ச் - இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம்!

ஆர்துங்கல் சர்ச்

ஆர்துங்கல் சர்ச் – இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம்! பழைய கட்டிடம் கேரளாவில் இருக்கும் சாதாரண கட்டிடம். முன்பகுதி சர்ச் மாதிரி பிறகு கட்டப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது.

ஆர்துங்கல் சர்ச் - இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம்!

ஆர்துங்கல் சர்ச் - இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம்!

இது சாதாரண வழிபாட்டுக் கூடம். எந்த கோவிலும் இப்படித்தான் இருக்கும்.

உள்ள கட்டிடத்தில் காணப்படும் பொருட்களைக் கொண்டுவைத்தால் சர்ச் ஆகிவிடுகிறது!

உள்ள கட்டிடத்தில் காணப்படும் பொருட்களைக் கொண்டுவைத்தால் சர்ச் ஆகிவிடுகிறது!

மேலும், இந்தியாவில் இத்தகைய கட்டிட மாற்றங்கள் அன்னியர்கள் ஆட்சி காலங்களில் மிகவும் அதிகமாக நடந்துள்ளன.

இக்கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

பொங்கலை எதிர்க்கும் கிருத்துவர்கள்!

ஜனவரி 18, 2010 by vedaprakash

பொங்கலை எதிர்க்கும் கிருத்துவர்கள்!

பொங்கல் விழா தகராறில் கொலை:பிணத்தை வாங்க மறுத்து போராட்டம்: திண்டுக்கல் அருகே பதட்டம்
ஜனவரி 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15478

Important incidents and happenings in and around the world

பொங்கல் விழா தகராறு: திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே பொங்கல் விழா தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இறந்தவர் உடலை வாங்க மறுத்து  உறவினர்கள், ஆம்புலன்சை முற்றுகையிட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகேயுள்ளது பெருமாள்கோவில்பட்டி. இங்கு வசிக்கும் கிறிஸ்தவ, இந்து வன்னியர்களிடையே திருவிழா நடத்துவது தொடர்பாக கடந்த 20 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 96ம் ஆண்டு இருபிரிவினரும் விழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் மோதிக் கொண்டனர். வீடுகள் சூறையாடப்பட்டன. கடந்த 2008ம் ஆண்டு, கிறிஸ்தவ வன்னியர் விழா கொண்டாட, காளியம்மன் கோயில் முன், சப்பரம் நிறுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்னை ஏற்பட்டது.இதையடுத்து இந்து வன்னியர்கள் ஊரை விட்டு வெளியேறி, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் தஞ்சமடைந்தனர். அதிகாரிகளின் சமரசத்தால், 15 நாட்களுக்கு பின், மீண்டும் ஊர் திரும்பினர்.

நேற்று முன்தினம் பொங்கல் விழாவை முன்னிட்டு, மாடுகள் வயலில் இறங்கியதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஆண்டி(45) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.மேலும் எட்டு பேர் காயமடைந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக எதிர்தரப்பைச் சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெகநாதன் என்பவரை தேடி வருகின்றனர். மோதல் ஏற்பட்ட பெருமாள்கோவில்பட்டியில் கூடுதல் எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிணத்தை வாங்க மறுப்பு: கொலை செய்யப்பட்ட ஆண்டியின் உடல், நேற்று காலை 6 மணிக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டது. பெருமாள் கோவில்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் பிரச்னைக்கு நிரந்த தீர்வு, கோயிலுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டும் பணியை உடனடியாக துவக்குதல், கிறிஸ்தவர்கள் சப்பரம், எங்கள் இடத்தில் நிற்கக்கூடாது என்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதுவரை பிணத்தை கொண்டு செல்ல விடமாட்டோம் என்று கூறி ஆம்புலன்ஸ் முன் அமர்ந்து சிலர் மறியல் செய்தனர். டி.ஐ.ஜி.,சந்தீப் மித்தல், எஸ்.பி., முத்துச்சாமி, ஆர்.டி.ஓ., ராமசாமி, டி.எஸ்.பி.,க்கள் ராஜாராம், ராமமூர்த்தி தலைமையில் ஊர் பொதுமக்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் ஏற்படவில்லை. கலெக்டர், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான், நாங்கள், பிணத்தை எடுத்து செல்ல அனுமதிப்போம் என்றனர். 2 வது முறையாக பேச்சுவார்த்தை நடத்த ஆர்.டி.ஓ.,அழைப்பு விடுத்தும் ஊர் மக்கள் புறக்கணித்தனர்.தொடர்ந்து மதியம் ஒரு மணி வரை இறந்த ஆண்டியின் உடல் ஆம்புலன்சிலேயே வைக்கப்பட்டிருந்தது.

அரசு ஆஸ்பத்திரியில் பிணத்தை வாங்க மறுத்தவர்களிடம், முதற்கட்டமாக போலீஸ் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. இதையடுத்து ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியாக கலெக்டர் வள்ளலார், முகாம் அலுவலகத்தில் அவர்களை சந்தித்து பேசினார். “பிரச்னைக்குரிய இடத்தை நேரடியாக பார்வையிட்டு, பணிகள் நடக்க முயற்சி எடுக்கப்படும்’ என்றார். அரசியல் பின்னணியால், எதிர் தரப்பினரை கைது செய்வதில் போலீசார் தாமதப்படுத்துவதாக புகார் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த எஸ்.பி., முத்துச்சாமி “அடுத்தடுத்த பிரச்னைகளால், கைது நடவடிக்கையை கவனிக்க முடியவில்லை. தொடர் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும்’ என்றார்.இதையடுத்து மாலை 3.30க்கு இறந்தவரின் உடலை எடுத்துச் சென்றனர். பிரச்னை ஏற்படாமல் இருக்க, இந்த வாகனத்தை பின்தொடர்ந்து போலீசார் சென்றனர்.

30 முறை நடந்த பேச்சுவார்த்தைதோல்விக்கு காரணம் என்ன:பெருமாள்கோவில்பட்டியில் இந்து வன்னியர், கிறிஸ்தவ வன்னியர் வசித்து வருகின்றனர். இங்குள்ள காளியம்மன் கோயில் முன், 12 ஏக்கர் காலியிடம் உள்ளது. இந்த இடத்திற்கு இருதரப்பினரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். நீண்ட காலமாக இரு தரப்பினரிடையே மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 2008ல் மீண்டும் விழா கொண்டாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த வாசுகி, இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் காளியம்மன் கோயில் முன், மண் போட்டு உயர்த்திக் கொள்ள வேண்டும். சர்ச் சப்பரத்தை ஓரத்தில் நிறுத்திக் கொள்ளலாம். கழிவு நீர் தேங்காமல் ஏற்பாடு செய்து கொள்வது, கோயிலுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.ஆனாலும், பிரச்னைக்கு தீர்வு காணப்படாததால் நிரந்தரமாக இங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் போலீசார் முன்னிலையிலேயே மோதல் ஏற்பட்டு, கொலையில் முடிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் தரப்பில், 30 முறை பேச்சுவார்த்தை நடந்தது. அரசியல் தலையீடு காரணமாகவே அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து வருகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

“நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பரின் ஒப்புதல் வாக்குமூலம்!PDFக்கு மாற்றவும்அச்சடித்து எடுக்கமின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 08-01-2010 18:41

 

Favoured : 19

Published in : சர்ச்சை, அரசியல்

திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி.Image

 

“ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு.க.விற்கு ஆபத்தில்லாத கவிதைகளை வெளியிட்டது எல்லாமே பத்திரிகையாளர்கள்தான் என்று கூறி தப்பித்துக் கொண்டிருக்கிறார். போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் தனியே எழுதுவோம்.

மேற்கூறிய குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில், அதன் நிருபர் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம் முன்வைக்கிறார். அந்தக் கேள்விகளையும் அதற்கான ஜெகத் கஸ்பரின் பதிலையும் அப்படியே கீழே தருகிறோம்.

கேள்வி : இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன?

கஸ்பர் : இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணி நேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. ‘தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்’ என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் (புலிகள்) அதை ஏற்கவில்லை.

கேள்வி : ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை?

கஸ்பர் : அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்லை.

கேள்வி : வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்?

Imageகஸ்பர் : கடைசிக் கட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்தவரை, ‘தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. ‘ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்’ என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.’

போர் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு கடைசி நேர முள்ளிவாய்க்கால் போர் குறித்து இப்போது பதிவு செய்கிற ஜெகத் கஸ்பர், போர் நிறுத்தம் ஒன்றிற்கு இலங்கை அரசு தயாராக இருந்ததாகவும், புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவோ போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவோ இல்லை என்றும் சொல்கின்றார். புலிகளுக்கும், இந்திய அரசுக்குமிடையிலான கடைசிநேரத் தூதராகச் செயல்பட்ட இவரின் பேச்சைக் கேட்டிருந்தால் போராட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் இப்போது குமுதம் இதழில் சொல்லியிருக்கின்றார் ஜெகத் கஸ்பர்.

இன்றைக்கு இப்படிப் பேசுகிற இதே ஜெகத் கஸ்பர், போருக்குப் பின்னர் மே மாதம் 21ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் “யுத்த துரோகம்” என்னும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அக்கட்டுரையில் ஜெகத் எழுதியிருந்தது இதுதான்.

“கடைசி நாளில் அதாவது கடந்த சனிக்கிழமை (16.05.2009) பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டதாகவும், அந்த மதுரை நபர் சு.ப.வீயைத் (சு.ப. வீரபாண்டியன்) தொடர்பு கொண்டதாகவும், கடைசியில் கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி (எதார்த்தமான முடிவு) ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்பதுதான் அந்த முடிவு.

இம்முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராசா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்பட, அவரும் மின்னல் வேகத்தில் இயங்கி ‘இந்தியாவிடமே (அதாவது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம்) ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்’ என்றும் இரவு 11.50 மணிக்கு முடிவு எடுத்ததாகவும் கஸ்பர் கூறுகிறார்.

உடனே கனிமொழி ஏற்கனவே பேசிய அந்தக் காங்கிரசு பெரியவரைத் தொடர்பு கொண்டு இந்தியா அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் சொன்ன போது, ‘கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று அந்த காங்கிரசு பெரியவர் சொன்னதாகவும் கூறுகின்றார்.

பின்னர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை அதே சனிக்கிழமை நள்ளிரவு புலிகள் எடுத்ததாகவும், திங்கள் கிழமை அதிகாலை அதாவது 2.30 மணிவரை களத்தில் நின்ற நடேசன், பத்மநாதனுடன் உரையாடி விட்டு காலையில் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்றபோது, நடேசனையும் தளபதி ரமேஷையும் போராளிகளையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும் ஜெகத் கஸ்பர் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருந்தார். 

அன்றைய சூழலில் இக்கட்டுரையை மேலோட்டமாகப் படித்தவர்கள், பிரபாகரனையும் போராளிகளையும் காப்பாற்ற ஃபாதர் வேலை செய்திருக்கிறார் என்றே நினைத்தார்கள். வாசித்ததைத் தாண்டி யோசிக்கவில்லை. ஆனால் இன்று இக்கட்டுரையைப் படிக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பரோ அதோடு தொடர்புடையவர்களோ பதில் சொல்வார்களா?

அதே மே மாத இறுதியில் இது போன்ற இன்னொரு வாக்குமூலக் கட்டுரையும் இணையங்களில் உலவியது. லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த மேரி கொல்வினின் கட்டுரைதான் அது. அவரும் ஜெகத்தைப் போலவே புலிகளுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையில் இறுதி நேர தூதுவராகச் செயல்பட்டவர். தவிரவும் மேரி கொல்வின் 2001இல் வன்னிக்குச் சென்றிருந்த போது இராணுவத்தின் ஷெல்லடியில் ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டவர். அவரது வாக்குமூலக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

“நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2009) அன்று பின்னிரவில் கடைசியாக நடேசன் என்னிடம் கூறினார். ஆனால் ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றும் கூறியிருந்தார். வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்திடம் சரணடைவது 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர்கள் (அதாவது புலித் தலைவர்கள்) நன்கு உணர்ந்திருந்தனர் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிடுகின்றார்.

மேலும் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த சீவரத்தினம் புலித்தேவனையும், நடேசனையும், சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளையும் காப்பாற்றுவதே அவர்களின் (புலிகளின்) நோக்கமாக இருந்தது என்று எழுதுகின்ற மேரி கொல்வின், முக்கியமாக மூன்று விசயங்களை ஐ.நா.விற்கு தெரிவிக்குமாறு நடேசன் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறுகின்றார். ஒன்று புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், இரண்டு அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். மூன்று தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டும். இந்த உறுதிமொழிகளை புலிகள் கோரியிருந்தனர்.”

புலிகள் வைத்த இம்மூன்று கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிற மேரி கொல்வின், “ஞாயிற்றுக்கிழமை 17.05.2009 இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ, படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை உபயோகிக்க நடேசன் மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அந்த வார்த்தையைப் பிரயோகிக்க மறுத்திருந்தார்” என்றும் கூறுவது மிக முக்கியமானது. மேரி கொல்வின் எழுத்திலிருந்து இறுதிப் போரின் போது புலிகளின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒருவேளை, வேறு வழியில்லாமல் சரணடையும் சூழல் எழுந்தால் கூட, அது மூன்றாம் தரப்பு நாடு ஒன்றிடம்தான் என்று நடேசன் தெரிவித்ததாகவும் மேரி கொல்வின் எழுதுகின்றார்.

அப்போது நியூயார்க்கிலிருந்த ஐ.நா. அலுவலகம், ஐ.நா.வின் ஆசியாவுக்கான தூதர் விஜய் நம்பியாருடன் மேரி கொல்வினுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ, “நடேசனும், புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தனக்கு இலங்கை தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதாக கொல்வினிடம் கூறுகிறார். கடைசியில் திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு அந்த இறுதிச் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இன்னொரு நபரான சந்திர நேரு என்ற இலங்கை எம்.பி, நடேசனுடன் பேசியிருக்கிறார். (இவர் இப்போது அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் லண்டனில் வாழ்கிறார்) என்றும் மேரி கொல்வின் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard