New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஸ்ரீ அப்பர் பெருமானும் ஏசுவும்- ஓர் ஒப்பீடு


Guru

Status: Offline
Posts: 24765
Date:
ஸ்ரீ அப்பர் பெருமானும் ஏசுவும்- ஓர் ஒப்பீடு
Permalink  
 


ஸ்ரீ அப்பர் பெருமானும் ஏசுவும்- ஓர் ஒப்பீடு


சிவமயம்

இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன்,பலர் முகம் சுளிக்கலாம்…ஸ்ரீ அப்பர் பெருமான் எனும் ஞானத்தின் சிகரம் எங்கே, கோழையைப் போல் அழுது இறந்த ஏசு எங்கே ?? இருவரையும் ஒப்பிடலாமா என்று பலர் எண்ணலாம்…இந்த ஒப்பீட்டின் நோக்கம் இருவரையும் சமத்துவப்படுத்த அல்ல,மாறாக ஸ்ரீ அப்பர் பெருமானுன் மேன்மையையும் ஏசுவின் கீழ்மையையும் புலப்படுத்தவேயாம்…

 
உண்மை இறைவனை அறிபவனே ஞானி…அதைவிட்டு, தன்னைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாமல்,பயத்தில் ” என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர்” என்று இறைவனை குறை கூறும் விதமாக அழுபவன் எப்படி ஞானி ஆவான் ??ஒரு தண்டனையில் இருந்துக் கூட தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத ஏசு ஞானியா அல்லது நான்கு விதமான தண்டனையில் இருந்து விடுபட்ட அப்பர் சுவாமிகள் ஞானியா ??படிப்பறிவு இல்லாத மக்களை மட்டும் கிருத்துவராக்கிய ஏசு ஞானியா அல்லது தன்னை எதிர்த்தவரும் சைவராக ஆகும்படி செய்த அப்பர் ஞானியா ??

 

உயிருக்கு பயந்து,அழுது,இறைவனை குறைக் கூறிய ஏசு ஞானியா அல்லது பகைவர் தண்டனை வழங்கும்போது,அஞ்சாமல் இறைவனை போற்றிய அப்பர் ஞானியா ??

மேலும்,ஏசு ஒரு ஞானி இல்லை என்பதற்கு அவனிடம் உண்மை பக்தி இல்லாமையும் ஒரு காரணம்..சிலுவையில் அறையப்பட்டு கிடக்கும்போது,ஏசுவுக்கு உண்மையிலேயே இறை பக்தி இருந்திருந்தால்,சமயத்துக்காக தான் உயிர் துறப்பதை பெருமையாகக் கருதி இறைவனிடத்தில் நன்றியை செலுத்தியிருக்க வேண்டும்….ஆனால்,ஏசுவோ “இறைவா என்னை ஏன் கைவிட்டீர்” என்று அழுது புலம்புகிறான்….சாதாரண மக்கள் கூட,தங்கள் தாய் நாட்டுக்காக தூக்கு மேடையில் கூட கலங்காமல்,சந்தோஷத்தோடு அந்தத் தண்டனையை பெறும்போது,மனிதருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய “கடவுளின் குமாரன்” ஏசு எப்படிப்பட்ட வீரனாக இருந்திருக்க வேண்டும் ?? ஆனால்,இவனோ ஒரு கோழையாக செத்து மடிந்தான்…

ஏசு,நீரில் நடந்தான்,செவிடரை கேட்க வைத்தான் என்றெல்லாம் கூறும் கிருத்துவர்களே,உங்கள் ஏசு ஏன் தன்னை சிலுவையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவில்லை ??

அப்பர் சுவாமிகளை,சமணப் பாவிகள்,நான்கு விதமான தண்டனை கொடுத்து கொல்லப் பார்த்தனர்… சமணப் பாவிகள் கொடுத்த நான்கு தண்டனைகள் :

1.சுண்ணாம்புக் காளவாயில் அடைத்தல்
2.சோற்றில் விஷத்தைக் கலந்து உண்ண வைத்தல்
3.யானையை ஏவி நசுக்க செய்தல்
4.கல்லில் கட்டி கடலில் எறிதல்

அந்த சமயத்தில்,அப்பர் என்ன,இந்த ஏசுவைப் போல் அழுதாரா ?? “என்னை கைவிட்டீரே” என்று சிவபெருமானை குறை கூறினாரா ?? இல்லை,மாறாக சிவபெருமானை புகழ்ந்து பாடினார்,அதன் மூலம் அந்தத் தண்டனை அனைத்தையும் வென்றார்…கடைசில்,தன்னை தண்டித்தவனையும் சைவனாக்கினார்….அது தான் வீரம்,அது தான் உண்மை பக்தி,அது தான் ஞானம்,அது தான் ஒரு ஞானியின் அடையாளம்… சாதாரண மனிதரின் தண்டனைக்கு பயந்து அழுது புலம்புபவன் (ஏசு) எல்லாம் ஞானியா ?? ஐயோ,வெட்கம் வெட்கம்…துடப்பக்கட்டைக்குப் பெயர் பட்டுக்குஞ்சமா ??



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard