உ
சிவமயம்
கிருத்துவர்களில்,பெரும்பாலும் பெந்தகோஸ்து பிரிவு,நம் விக்கிரக வழிபாட்டை நோக்கி,அஞ்ஞானம் என்றும்,கல்லை வணங்குறீர் என்றும் கூறுகின்றனர்…ஆனால்,இவர்கள் கொண்டாடும் பைபிளில்,விக்கிரக வழிபாடு ஆதரிக்கப்படுகிறது….அதனைப் பார்ப்போம் :
யாத்திராகமம்,25ஆம் அதிகாரம் :
யெகோவா,மோசையை நோக்கி,சீத்தீம் மரத்தினாலே ஒரு பெட்டி செய்து,அதை செம்பின் தகட்டால் மூடி,அதன்மேல் செம்பொன்னொனால் ஒரு கிருபாசயம் பண்ணி ,அந்தக் கிருபாசத்தின் இரண்டு ஓரத்தில்,பொன்னினால்,இரண்டு கெரூபிகள் எனும் இரண்டு விக்கிரங்களை உண்டாக்கி ,அந்தப் பெட்டிக்குள்ளே,தாம் எழுதிக் கொடுத்த சாட்சி பத்திரத்தை வைத்து,சதா காலமும் ஆராதனை பண்ணும்படி விதித்தார்…
யாத்திராகமம் 35ஆம்,36ஆம்,37ஆம்,40ஆம் அதிகாரம் :
யெகோவா விதித்தப்படி மோசே ஒரு ஆவாசத்தை உண்டாக்கி, பெட்டியும் கிருபாசயமும் கெரூபிகள் எனும் விக்கிரகங்களை செய்து முடித்து,பெட்டிக்குள்ளே சாட்சிபத்திரத்தை வைத்து, பிரதிஷ்டை பண்ணினான்…அன்று தொடங்கி அந்தப் பெட்டிக்கு ஆராதனை செய்து வந்தார்கள்..அதற்கு ஆச்சாரியர்களாக ஆரோனையும் அவன் சந்ததியாரையும் நியமிக்க விதித்தார்…அந்த ஆசிரியர்கள் செய்த ஆராதனைக்கு யெகோவா மகிழ்ந்து,அநுக்கிரகம் பண்ணி வந்தார்…
யாத்திராகமம் 25 மற்றும் 22ஆம் அதிகாரம் :
சாட்சிபெட்டி மேலிருக்கிற இரண்டு கெரூபிகளின் மத்தியில் நின்று,கிருபாசயத்துக்கு மேலாய் நான் உனக்கு தரிசனமாகி இஸ்ரவேல் சந்ததியாருக்கு நான் கட்டளையிடும் யாவையும் நான் உன்னிடத்தில் சொல்லுவேன் ( என்று யெகோவா சொன்னார்)
எண்ணாகமம் 7:89 :
மோசே ,தேவனுடன் பேசும்படி சபையின் ஆவாசத்துள் பிரவேசிக்கையில், தன்னுடனே பேசுகிறவருடைய சத்தம் சாட்சிப் பெட்டியினது கிருபாசயத்தில் இரண்டு கெரூபிகளின் மத்தியினின்றும் தோன்றக் கேட்டான்…அங்கே அவர்,அவனுடனே பேசுவார்..
2 சாமுவேல் 6:2 :
கெரூபியரின் மத்தியில் வாசமாயிருக்கிற சேனாபதியாகிய யெகோவாவின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனின் பெட்டி
சங்கீதம் 80:1 :
கெரூபிகளின் மத்தியில் வசிப்பவரே,பிரகாசியும்..
சங்கீதம் 99: 1 :
யெகோவா ராஜ்ஜிய பரிபாலனம் பண்ணுகிறார் ; ஜனங்கள் நடுங்குவார்களாக ; அவர் கெரூபிகளின் மத்தியில் வீற்றிருக்கிறார்
எண்ணாகமம் 16: 46-48 :
ஒரு நாள் யூதர்களில் வெகு ஜனங்களுக்கு ஒரு வாதை சம்பவித்தது..ஆரோன் சீக்கிரமாக ஓடிப்போய், அந்தப் பெட்டிக்கு தூபங் காட்டி, ஆராதனை செய்து வழிபட்டதனால், அவ்வாதை நீங்கிற்று..
யோசு 3:2-4 :
அதிபதிகள்,பாளையம் எங்கும் போய்ச்,சனங்களை நோக்கி, “உங்கள் தேவனாகிய யெகோவாவின் உடன்படிக்கை பெட்டியையும், லேவிய ஆசாரியர் அதை சுமக்கிறதையும் கண்டவுடனே,நீங்களும் புறப்பட்டு அதற்குபின் செல்லுங்கள்.. உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் அளவு தூரம் இருக்க வேண்டு…இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியே போகவில்லையே ; ஆகையினால் நடக்க வேண்டிய வழியை அறிவதற்கு ,அதற்கு சமீபத்தில் வராதிருப்பீர்களாக ” என்று சொல்லிக் கட்டளையிட்டார்கள்…
சாமுவேல் 5 மற்றும் 6ஆம் அதிகாரம் :
ஒரு முறை,அந்த சாட்சிப் பெட்டியை இஸ்ரவேலர்களின் சத்துருக்கள், எடுத்துக் கொண்டுப் போய்,தங்கள் தங்கள் தேவாலயத்தில் வைத்தப் போது, அங்கேயிருந்த விக்கிரகம்,அந்தப் பெட்டிக்கு முன்பாக விழுந்து ,தலை வேறு,கை வேறாக வெட்டுண்டு கிடந்தது..அந்த நாடுகள் எல்லாம் மூல வியாதிகளால் வாதிக்கப்பட்டன..அதனால்,அவர்கள் அந்தப் பெட்டியைத் திரும்ப இஸ்ரவேலர்களிடம் அனுப்பிவிட்டார்கள்
1 இராஜாக்கள் 6 மற்றும் 8ஆம் அதிகாரம் :
தாவீதின் குமாரனாகிய சாலோமோன் யெருசலத்தில்,ஒரு ஆலயம் கட்டி,அதிலே அந்தப் பெட்டியை பிரதிஷ்டை செய்து, அனேகம் ஆடு மாடுகளை பலி கொடுத்து ஆராதனை செய்தான் ….
(உதவிய நூல் : ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இயற்றிய : “சைவ தூஷணப் பரிகாரம்” )
இன்னும் பல ஆதாரங்களைக் கொடுத்துவிட்டு,நாவலர் பெருமான் இவ்வாறு சொல்கிறார்,
” இப்படியே உன் சமய நூலிலே ,உன் தேவனாகிய யெகோவா சாட்சிப்பெட்டியையும் அதற்கு இருப்பக்கத்திலும் இரு கெரூபிகளையும் வைத்து ஆராதனைப் பண்ணும்படி விதித்தார் என்றும், அவ்வாறே மோசே முதலானவர்கள் செய்தார்கள் என்றும் ,யெகோவா அந்தப் பெட்டியிலே பிரச்சனராகி கிருபை செய்தாரென்றும் அந்தப் பெட்டியை அவமதி செய்தார்களைத் தண்டித்தார் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது…அதை அறிந்துக் கொண்டும்,கோதுமை அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் உன் தேவனாகிய கிருஸ்துவின் சரீரமும் ரத்தமுமாகவேனும் அவற்றுக்கு அறிகுறியாகவேனும் பாவித்து உட்கொள்ளல் வேண்டும் என்றும் புதிய உடன்படிக்கையில் விதித்தப்படி செய்துக்கொண்டு,எங்களைக் கல்லையும் செம்பையும் வணங்கும் அஞ்ஞானிகள் என்றும் கடவுளுக்கு செய்யற்பாலதாகிய வழிபாட்டை அறிவில்லாத விக்கிரகங்களுக்குச் செய்யும் பாவிகள் என்றும், தூஷிப்பது மதிமயக்கமன்றோ ?அறிகுறியும் அதிட்டேயமும் ஆகிய இலிங்கத்தினாலே காட்டப்படும் தமக்குச் செய்யும் வழிபாட்டை தமக்கென்றே கொள்ளாது இலிங்கத்துக்கென்று கொள்ளுதற்குக் கடவுள் மதிமயக்கம் உடையவர் அல்லர்.. ” ……
நாவலர் பிரான் அதே,நூலில்,இவ்வாறு கூறுகிறார்,
” பாலானது பசுவினது உடம்பெங்கும் வியாபித்திருப்பினும், கன்றைக் கண்டபொழுது முலைவழியாகவே ஒழுகுதல் போல்,அவர் தாம் சமஸ்த பிரபஞ்சமும் நிறைந்திருப்பினும் அவ்விலிங்கத் துவாரத்தால் அருள் செய்வார் என்று சிவாகமங்கள் செப்புகின்றன ” …
மேலே உள்ள பைபிள் வசனங்களும்,புதிய உடன்படிக்கையில் (New Testament) ,ஏசுவின் ரத்தமும் மாமிசமும் போல் எண்ணிக் கொண்டு, அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் உட்கொண்டால் தேவனின் அனுக்கிரகம் கிட்டும் என்று சொல்லப்படுகின்றன…கிருத்துவத்தில்,ரோமன் கத்தொலிக்க கிருத்துவம் தான் ஆதி கிருத்துவப் பிரிவு…இவர்கள் இன்றுவரை விக்கிரக வழிபாடு செய்து வருகின்றனர்…புரோடெஸ்டன் என்பது,கிபி 16ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் உருவான ஒரு சீர்திருத்தப் பிரிவு… நாவலரிடம் மோதிய கிருத்துவப் பிரிவு,இந்த புரோடெஸ்டன் பிரிவு தான்…மோதி,பிறகு மூக்குடைந்து போய்,தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்…
ஆக,கிருத்துவர்கள்,விக்கிரக வழிபாடு செய்பவர்க்ள் என்று நாம் பார்த்தோம்…நம்மைப் பார்த்து ஏளனம் செய்யும் பெந்தகோஸ்துக்கள்,முதலில் இந்த பைபிளில் உள்ள இந்த வசனங்களை கிழித்து எறியுங்கள்….பிறகு எங்களிடம் வந்து உபதேசம் கூறுங்கள்….இனிமேல் எங்களிடம் உபதேசம் கூறவந்தாலும்,மூக்குடைந்து நீங்கள் ஓடுவது உறுதி…