உ
சிவமயம்
நண்பர்களே,சில மாற்று மதத்தவர்களும் திராவிட கழக பிரிவினைவாதிகளும் நம்மிடம் கேட்கும் ஒரு பிரபலியமான கெள்வி என்னவென்றால் “ஒரு கிருத்துவனோ,இஸ்லாமியனோ உங்கள் சமயத்தில் சேர்ந்தால்,எந்த சாதிப் பிரிவில் சேர்ப்பீர்கள் ?” என்பதே..இந்தக் கேள்விக்கு நமது பல நண்பர்கள் பதில் தெரியாமல் இருக்கின்றனர்…நம் நூல்களில் இதற்கான பதில் உண்டு..அதைப் பார்ப்போம்..
இந்தியாவில் உள்ள முஸ்லிம்,கிருத்துவன்,பௌத்தன்,ஜைனன் மட்டும் இல்லை,இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் வட அமெரிக்கா,ஐரோப்பா,ஆப்பிரிக்கா,தென் அமெரிக்கா போன்ற கண்டங்களை சார்ந்த மக்களாகவே இருக்கட்டும்…இவர்கள் சைவ சமயத்தில் சேர்ந்தால்,”அந்திய சைவர்” என்ற சாதி பிரிவில் இணைக்கப்படுவார்கள் என்று சைவ பூஷணம் எனும் நூல் கூறுகிறது …
” அநாதிசைவர்,ஆதிசைவர்,மகாசைவர்,ஆநுசைவர்,அவாந்திர சைவர்,பிராவரர சைவர்,அந்திய சைவர் எனச் சைவர் ஏழு பிரிவினையுடையவர் ஆவார்…அவருள் அநாதிசைவர் சிவபெருமான்,ஆதி சைவர் சிவப்பிராமணர், மகாசைவர் மகாபிராமணர், அநுசைவர் க்ஷத்திரியரும் வைஸ்யரும்,அவாந்திர சைவர் சூத்திரர், பிராவர சைவர் ஸங்கர சாதிகள், அதாவது கலப்பால் பிறந்தவர், அந்திய சைவர் மேற்கூறப்பட்டவர் அல்லாத ஏனையோர்” – ( சைவபூஷணம்,10ஆம் சுலோகம் )
ஆக,முஸ்லிம் கிருத்தவர்,பௌத்தர்,ஜைனர் மற்றும் ஏனையோர்,சைவ சமயத்திற்கு மதம் மாறினால்,அவர் “அந்திய சைவ” சாதியினராக ஆவார்..