உ
சிவமயம்
இந்த மறைமலையார் முன்னுக்குப் பின் முரணாக பல தடவை கருத்து தெரிவிப்பவர்…கற்பைப் பற்றிய இவரது கருத்தைப் பார்ப்போம்:
“மற்று.ஆரியரது நடைமலிந்த வடநாட்டிலோ காதல்மணம் பெரும்பாலும் நடவாமையின்,அங்கிருந்த மகளிர் தம் கணவர் இறந்தப் பின்,அவருடைய பிறந்தாரை மணந்து கொள்ளும் வழக்கம்,பண்டு நடைபெற்றது……மேலும்,கணவன் உயிரோடிருக்கையிலோ அல்லது அவன் இறந்த பின்னோ மகப்பெறாத மகளிர் தம் மைத்துனரையோ அன்றி வேறு பிறரையோ கூடி மகப்பெற்றுக் கொள்ளலாமென்று மநுமிருதி (3,59,60,61) வெளிப்படையாகக் கூறுதலால்கற்பற்ற அவ்வொழுக்கம் வட நாட்டவரிற் பொதுவாயிருந்தமை தெளியப்படும்” { தமிழர் மதம் (காதலன்பு,பக்கம் 73) }
அதாவது வட நாட்டில் சிலப் பெண்கள்,தம் கணவன் இறந்தப் பிறகு,கணவனின் சகோதரனை மணப்பதும்,மனுஸ்மிருதியில் கூறியப்படி கணவன் குழந்தை பாக்கியம் கொடுக்க முடியவில்லை என்றாலோ அல்லது கணவன் இறந்த பின்போ,அந்தக் கணவனின் சகோதரனை அல்லது வேறொருத்தரைக் கூடி குழந்தைப் பெறும் நியோக முறையும் , கற்பற்ற வாழ்க்கை என்று கூறும் இதே மறைமலை அடிகள்,அடுத்து என்ன கூறுகிறார் என்றுப் பார்ப்போம் :
“இன்னும் கணவரை இழந்த மாதரில்,திரும்ப மணம் செய்துக் கொள்ளும் விருப்பம் உடையார்க்கு,ஏதொரு தீங்கும் செய்யாது,அவர் விரும்பிய ஆடவருடன் மகிழ்ந்து வாழ உதவி செய்தல் வேண்டும்…இத்துணைப் பெருந்திகையினரான ஏனை மக்களிற் கணவரை இழந்த மகளிர் திரும்ப மணம் செய்துக்கொண்டு,இனிது வாழ நிற்கையில்,அவர்களை நோக்க மிகச்சிறு கூட்டத்தாரான நம் தமிழ் மாதர் மட்டும் திரும்ப மணம் செய்து கொள்ள இடம்பெறாமல் தடைசெய்யப்பட்டுத்,தம் வாழ்நாள் முடியும் மட்டும் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாயிருந்து பெருந்துயர் உழக்கச் செய்வது,ஈர நெஞ்சமுடையார் செயலாகுமா ” { தமிழர் மதம் (காதலன்பு,பக்கம் 74) }
இந்த வாசகத்தின் கருத்து,கணவன் இறந்தப்பின்,ஒரு பெண்,வேறு ஒருத்தனை மணக்க விரும்பினால்,அவளை மணக்க நாம் உதவி செய்ய வேண்டும் என்பதே…
இப்பொழுது இவருடைய இரண்டு கருத்துக்களையும் ஒப்பு நோக்குவோம்…முதல் கருத்தில்,வட நாட்டில் சிலப் பெண்கள்,கணவன் இறந்தப் பின் கணவனின் சகோதரனை மணப்பதும் நியோக முறையும் கற்பில்லாத வாழ்க்கை என்று சாடிவிட்டு,அடுத்த பக்கத்திலேயே,அதற்கு முரணாக,கணவன் இறந்தப் பின்,ஒருப் பெண் வேறொரு ஆடவனை மணக்க விரும்பினால்,அவளுக்கு உதவ வேண்டும் என்று சொல்கிறார்,இந்த மறைமலை அடிகள்…மேலும்,நியோக முறை என்பது,காமத்துக்காக பின்பற்றப்படும் முறை அல்ல…கணவனால் குழந்தை பாக்கியம் கொடுக்க முடியவில்லை என்றாலோ,அல்லது கணவன் இறந்துவிட்டான் என்றாலோ,பிற ஆடவனை அப்பெண் கூடி,பிள்ளை பெற்றுக்கொள்ளலாம்….இன்றுப் போல் மருத்துவ வசதி இல்லாத அக்காலத்தில்,இம்முறை அனுமதிக்கப்பட்டது…மேலும்,இந்த முறையில்,காமத்துக்கு இடம் இல்லை…. அந்தப் பெண்,கணவனுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும்… எக்காரணம் கொண்டு, நியோக முறையில் ஈடுபடும் ஆணுடன் காம சுகத்தை அநுபவிக்கக் கூடாது…காமத்தை அவ்வாடவனிடம் அனுபவித்தால்,அது விபச்சாரமே…அதனால்,நரகத்தில் அதற்கான தண்டனை உண்டு…. மேலும்,நியோக முறை,கலியுகத்தில் செய்யக் கூடாது என்று தர்ம நூல்கள் கூறுகின்றன..ஏனெனில்,கலியுகத்தில்,இதை காமத்துக்காக பலப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால்…
ஆனால்,இந்த மறைமலையார் ஆதரிக்கும் விதவா மறுமணமோ,விபச்சாரத்தின் மறுவடிவம்….எப்படி என்றால்,ஒரு பெண் தன் கணவனுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும்…ஆனால், கணவன் இறந்தப் பிறகு,வேறொருத்தனுடன் வாழ ஆசைப்படுபவள் தன் கணவனிடம் விசுவாசமில்லாதவளாக ஆகிவிடுகிறாள்… மேலும், கணவன் இறந்தப் பிறகு,புதிய ஆடவனை மணந்துக் கொண்டு,அவனுடன் உடல் சுகம் அனுபவிக்கிறாள்…அதாவது காம சுகம் அநுபவிக்கிறாள்…விபச்சாரியும் பல ஆடவரை புணர்கிறாள், விதவா மறுமணம் செய்யும் பெண்ணும்,ஒருத்தனுக்கு மேல் தன் உடலைக் கொடுத்து,சுகம் அனுபவிக்கிறாள்… ஆக,விபச்சாரத்துக்கும் விதவா மறுமணத்துக்கு வித்தியாசம் இல்லை…இரண்டும் ஒன்றே…இப்படிப்பட்ட ஈனச் செயலான இந்த விதவா மறுமணத்தை ஆதரித்துக் கொண்டு இருக்கும் மறைமலை, கற்பு நெறியைப் பற்றி பேச என்ன தகுதி உண்டு ??இவர் ஆதரிக்கும் விதவா மறுமணம் எனும் விபச்சாரம்,எந்த வகையில் நியோக முறையைவிட சிறந்தது ??
மேலும்,விதவா மறுமணம் என்பது சைவத்தில் அனுமதிக்கப்படும் ஒரு செயல் அல்ல…. விதவா மறுமணம் செய்பவளிடம் கற்பு ஒழுக்கம் இல்லை…விதவை எவ்வாறு வாழ வேண்டும் என்று சைவ சமய நூல்கள்,இவ்வாறு கூறுகின்றன :
{ கற்பாவது நாயகனிற் சிறந்த தெய்வம் இல்லை எனவும் அவனை வழிபடும் முறைமை இது எனவும் தந்தை தாயரும், பிராமணரிடத்தும் சான்றோரிடத்தும் ஆசாரியரிடத்தும் கடவுளைச் சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் இப்படி என நாயகனும் கற்பித்த வழி நிற்றலாம். ஆதலால், சுமங்கலிக்கு, தன் கணவனை வணங்கி அவனுக்கு ஏவல் செய்தலே மேலாகிய தருமமாம் ஏவல் செய்து வரும் பொழுது, பரமபதியாகிய சிவனை வழிபடல் வேண்டும் என்னும் விருப்பம் உண்டாகில், தனக்கெனச் சுதந்தரம் இல்லாமையால், கணவனது அனுமதியைப் பெற்று, ஆசாரியரை அடைந்து சிவதீக்ஷை பெற்று, கணவனுக்குச் செயற்பாலதாகிய ஏவலின் வழுவாது நின்றே சிவனை விதிப்படி வழிபடுக. கணவன் இறந்துவிடில், ஆபரணங்கள் அணியா தொழிதலும், வெற்றிலை பாக்கை ஒழித்தலும், ஒரு பொழுது பகலிலே உண்டலும், பாயல் வேண்டாது தரையிலே நித்திரை செய்தலும், ஐம்புலன்களை அடக்கலும், சிவ புண்ணியங்களை விதிவழுவாது செய்தலும் வேண்டும். இதற்குப் பிரமாணம் :
1.
ஏந்திசைக்குப் பதியேவ லியற்றுதலே நியதி யீசனிணைத் தாளணைய வேசறவு பெருகிற்
காந்தனனு மதிபெற்றுக் கைக்கொள்க பூசை கலித்திடினே யிருதுசுலுழ்ந்தொரு மூன்று நாளும்
வாய்ந்திடச் செய் துடற்சுத்தி மற்றையர்நீர் தரவே மானதபூ சனைபுரிக மற்றையநாட் புனலுட்
டோய்ந் தருந்திக் கவ்வியத்தைச் சூட்டுகபோ தரற்குக் சூதகமுன் பெரு நோய்முன் சூட்டுவிக்க பிறரால் (சிவதருமோத்தரம் )
2.
கருநெறிக் கூந்தலார்க்குக் கணவரை வணங்க றானே
யுரியநற் றரும மாகுமொண்டிறற் கணவர் சொல்லாற்
பருவரை பயந்த நங்காய் பணிந்துநம் – பாதம் போற்றிப்
புரியவிழ் மலர்கடூவிப் பூசனை புரிதலாமால் ( வாயுசங்கிதை )
3.
தரையினிற் கிடத்த றான நல்கிட றயங்கு நீரி
லரியவெண் ணீற்றின் மூழ்க லன்பொடு நமைப்பூ சித்த
லொருபசு லுண்டு வைக லட்டமி பதினான்கோடு
மருவுபூ ரணையி லுண்டி யொழிந்திடல் வழக்க தாமே ( வாயுசங்கிதை )
4.
மருவுகாதலன் மாய்ந்திடின் மங்கைய
ரொருப கற்பொழு துண்டரும் பாகிலை
விரியும் பாயல் வெறுத்துமண் மேற்றுஞ்சி
யரிய நோன்புக ளாற்றிட வேண்டுமால்
சுடர்செய் பொற்கல னீத்திடுந் தோகையர்
கடவுள் பூசனை காதலி னாற்றியு
முடல மாசுண வுள்ளுயிர் நீத்திடா
தடகு மூல மருந்திட வேண்டுமால் ( காசிகாண்டம் )
}
( ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இயற்றிய “பெரிய புராண சூசனம் (திரு நாவுக்கரசர் புராணம்) ” )
ஆக,விதவா மறுமணம் என்பது ஒரு கற்புள்ள சைவப் பெண் சிந்தித்துக் கூட பார்க்க முடியாது ஒரு ஈனச் செயல்….கற்புள்ள ஒருப் பெண்,விதவா மறுமணம் எனும் விபச்சாரத்தை செய்யத் துணிய மாட்டாள்… ஆனால்,தன்னை சைவன் என்று சொல்லிக்கொண்டு,சைவத்துக்கு மாறான இந்த விதவா மறுமணத்தை ஆதரிக்கும் இந்த மறைமலை எங்ஙனம் சைவர் ஆவார் ?? இந்த சிவத்துரோகியின் அடுத்தக் கருத்தைப் பார்ப்போம் :
” …..முத்தீ வேள்வியைத் தவிர,அம்மி மிதித்தல் அருந்ததிகாட்டல் முதலிய சடங்குகளெல்லாம் பார்ப்பனர்களால் காலங்கள் தோறும் புதியவாய்ப் புகுத்தப்பட்டவைகளே ஆதலாலும்,காதலால் கற்பொழுக்கத்தில் சிறந்த நிலைப்பெற்ற நந் தமிழ் மாதரார்க்குக் கல்லைப் போற் கற்பொழுக்கத்திற் திண்ணியையாய் இருவென்றும்,அருந்ததி என்னும் ஆரிய மாதைப் போல் கற்பொழுக்கத்தில் சிறந்து திகழ் என்றும் கற்பித்தல் மீன்குஞ்சுக்கு நீச்சுக் கற்பித்தல் போல் மிகைப்பட்ட செய்கையாய்த் தமிழ் மாதரை இழிவுபடுத்தும் நீரதாய் இருத்தலின்,அவையிரண்டும் தமிழர் தம் திருமணச் சடங்குகளிற் சேரா வண்ணம் அவையிற்றை அறவே விலகிடல் வேண்டும்… ” { தமிழர் மதம் (திருமண வேள்விச் சடங்கும்,பக்கம் 229) }
அதாவது,அருந்ததி ஆரியப் பெண் என்றும் அவளை கற்புக்கு உதாரணம் என்று சொல்வது,தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்துவது, மீனுக்கு நீந்தக் கற்றுக் கொடுப்பதற்கு சமம் என்று கூறுகிறார் இந்த மறைமலை..இன்னும் ஒருபடி மேலே போய்,அம்மி மிதித்தல்,அருந்ததிப் பார்த்தல் போன்ற சடங்கை,திருமணக் கிரியையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கூறுகிறார்…இந்த சடங்கை உருவாக்கியவர்கள் பிராமணர்கள் என்று அடுத்த குண்டை தூக்கிப் போடுகிறார்..இதன்மூலம்,அருந்ததியின் கற்பை இவர் பழிக்கிறார்…
இவருடைய அடுத்த குப்பைக் கருத்தைப் பார்ப்போம் :
“இன்னும்,முனிவர்களில் சிறந்தவர் வசிட்டரென்றும்,கற்புடைய மாதரில் சிறந்தவள் அவர்தம் மனைவி அருந்ததி என்றும் கதை கட்டிவிட்டவர்கள் பார்ப்பனரே ஆவர் ” { தமிழர் மதம் (திருமண வேள்விச் சடங்கும்,பக்கம் 229) }
இதில் வசிஷ்ட முனிவரையும் அருந்ததி அம்மையையும் பழிக்கிறார் இந்த கேடு கெட்ட மறைமலையார்…
“காதல் மணமும் கற்பொழுக்கமும் இன்னதென்று அறியாத ஆரிய மாதர்,காதல் கற்பொழுக்கத்தையே தமக்குயிராய்க் கொண்ட தமிழ் நங்கைமார்க்கும் அவ்விரண்டையும் கற்றுக் கொடுத்தார் என உரைப்பது, கள்குடியன் ஒருவன் கள்குடியே அறியாத மேன்மகன் ஒருவனுக்குக் கள்ளருந்த ஆகாதெனக் கழியுரைக்கும் உரையோடு ஒப்ப வைத்து நகையாடி விடுக்கல் பாலதாம் அன்றி மற்ற என்னை ?? ” { தமிழர் மதம் ( திருமணச் சடங்கு,பக்கம் 231) }
அதாவது கற்பு என்றால் என்னவென்று அறியாத ஆரிய மாதர்,தமிழ் பெண்களுக்கு கற்புக்கு உதாரணமாகச் சொல்வது நகைப்புக்குரியது என்கிறார் மறைமலையார்…இவர் அருந்ததி அம்மையைத் தான் கற்பில்லாதவர் என்று சொல்கிறார்..ஏனெனில்,அந்த அம்மையாரைத் தான் கற்புக்கு உதாரணமாக நாம் கூறுகிறோம் அல்லவா ?? மேலும் அருந்ததி அம்மையாரை ஆரிய மாதர் என்றும் இவர் முன்னமே கூறியதைப் பார்த்தோம்… ஆக,அருந்ததி அம்மையின் கற்பை இவர் சாடுகிறார்…
இவரது கருத்துக்கு முரண்படுபவரை,இவர் எப்படி கையாள்கிறார் என்று பார்ப்போம் :
” இங்ஙனமெல்லாம் கதைக் கட்டித் ,தமிழர்களையும் அவருள் சிறந்த சான்றோரையும் கூட ஏமாற்றிவிட்ட பார்பனர்தம் சூழ்ச்சித் திறனை என்ன என்போம் ! சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகள் அறிவில் சிறந்த சான்றோர் ஆயிருந்தும், அவதாமும் பார்ப்பனரின் சூழ்ச்சியால் ஏமாந்து,கற்பிற் சிறந்த கண்ணகிக்கு அருந்ததியை உவமையாக எடுத்துச் சொல்லியிருக்கின்றனர் ! ” { தமிழர் மதம் ( திருமணச் சடங்கு,பக்கம் 231) }
அதாவது ,சிலப்பதிகார ஆசிரியர்,இளங்கோ அடிகளும் கண்ணகியின் கற்பு ஒழுக்கத்துக்கு உவமையாக அருந்ததியை கூறியதை,இந்த மறைமலையாரால் ஜீரணிக்க முடியவில்லை…அதான் இந்தப் புலம்பல்..
இவரது மேலும் ஒரு கருத்தைப் பார்ப்போம் :
“இனி,அம்மி மிதித்தல் அருந்ததி காட்டுதல் என்னும் ஆரியப் பார்ப்பனரின் சடங்கையும் பார்ப்பன ஆசிரியனையும் ஒழித்தப்பின்,தமிழாசிரியர் ஒருவரையே திருமணம் நடத்துதற்கு அமர்த்தி… ” { தமிழர் மதம் ( திருமணச் சடங்கு,பக்கம் 231) }
அம்மி மிதித்தல்,அருந்ததி காட்டுதல் போன்ற சடங்கை நீக்க சொல்கிறார்,மறைமலையார்….இவரின் இத்தகைய சைவ மரபு மீறலை நாம் என்னவென்று கூறுவது ??
அருந்ததி அம்மையாரின் கற்பை பழிக்கும் இந்த மறைமலையார், தம் இந்தக் கொள்கைக்கு மாறாக இருப்பவரை,பார்ப்பனர் சூழ்ச்சிக்கு அகப்பட்டவர் என்று மழுப்புவார்…அருந்ததி அம்மையை புகழும் ஒருவருடையப் பாடலைப் பார்ப்போம் :
“அருந்ததிஎன் னம்மை அடியவர்கட் கென்றும்
திருந்த அமுதளிக்கும் செல்வி – பொருந்தவே
ஆனந்தக் கூத்தர் அகமகிழத் தொண்டுசெயும்
மானந் தவாத மயில் “
இந்தப் பாடலை பாடியவர் வேறு யாரும் இல்லை, சைவ சித்தாந்தத்தின் சிகரமாக இருந்த ஸ்ரீ சிவஞான சுவாமிகள் அருளியப் பாடல் தான்… ஒரு தடவை,திருவாவடுதுறை தம்பிரான்கள், சிவஞான சுவாமிகளது வீட்டுக்கு வருகை தந்தபொழுது, சுவாமிகளது தாயாரான,கற்பில் சிறந்த மயில் அம்மையார், குறுகிய காலத்தில் சுவையான உணவை சமைத்து,அத்தம்பிரான்களுக்கு அன்னமிட,அதைப் பார்த்து சிவஞான சுவாமிகள் இயற்றியப் பாடல் தான் இது…இப்பாடலின் முதல் அடியின் அர்த்தம், “என் தாய் அருந்ததியைப் போல் கற்பில் சிறந்தவர்” என்று அர்த்தம்” என்பதாகும்…மஹாபதிவிரதையான தன் தாயை,சுவாமிகள் ,அருந்ததியுடன் ஒப்பிடுகிறார்… இதற்கு மறைமலையார் என்ன சொல்வாரோ தெரியவில்லை…சிவஞானசுவாமிகளும், பார்ப்பனரின் சூழ்ச்சியில் அகப்பட்டவர் என்று சொல்வாரோ ?? அப்படி சொன்னால்,அது ஆச்சாரிய துரோகமாகும்,ஏனெனில்,சைவ சித்தாந்த ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீமாதவ சிவஞான சுவாமிகளை, பிறரின் சூழ்ச்சிக்கு சுலபமாக ஏமாறுபவர் என்று கூறுவதற்கு சமம்..அதாவது, சுவாமிகளது பெருமையை சிறுமைப் படுத்துவதாகும்… ஆனாலும், சிவத் துரோகத்தை சதா காலமும் செய்த இந்த மறைமலைக்கு,ஆச்சாரிய துரோகம் ஒரு பொருட்டே அல்ல….அதையும் துணிந்து செய்வார்…
கண்ணகியை கற்பில் சிறந்தப் பெண் என்று வர்ணிக்கும் மறைமலையார், அருந்ததியின் கற்பை பழிப்பது கண்டனத்துக்குரியதாகும்..ஏனெனில்,கண்ணகி ஒரு சமணம்ப் பெண்…. சிலப்பதிகாரத்தை சைவர்கள் கொண்டாடுவதில்லை..ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், சிலப்பதிகாரத்தை, “ஜைன செட்டிச்சியின் கதை” என்று ஒதுக்கினார்…திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ சுவாமிநாத தேசிகர் தம்,இலக்கணக் கொத்தில், தேவாரம் திருமுறை போன்ற சைவ நூல்கள் இருக்க,சில்ப்பதிகாரம் போன்றவற்றை படித்து எந்த பிரயோசனமும் இல்லை என்றார்…ஆனால்,இந்த மறைமலைக்கு,தமிழிலுள்ள எல்லா நூலும் வேண்டியதாம்…சம்ஸ்கிருதத்தில் சைவத்தைப் போற்றும் நூலாக இருந்தாலும்,வேண்டியது இல்லையாம்,ஏனெனில் அது சம்ஸ்கிருதத்தில் இருப்பதாம்…அது நிற்க….
சமணப் பெண்ணான கண்ணகியை கற்பில் சிறந்தவள் என்று போற்றும் மறைமலை,ஏன் சைவப் பெண்ணான அருந்ததியின் கற்பைப் பழிக்கிறார் ??இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், மறைமலைக்கு சமயத்தைவிட திராவிட இனவாதமே முக்கியம்…ஆர்யப் பெண்கள் கற்பில்லாதவர் என்று இவர் பழித்தார்….ஆரியப் பெண் என்று இவர் குறிப்பிடுவது,வட நாட்டு பெண்களை….வட நாட்டில், சைவ சமயத்தை சார்ந்தப் பெண்கள் இல்லையா ?? சைவ சித்தாந்த நூல்கள், தமிழில் இயற்றப்படுவதற்கு முன்,காஷ்மீரம்,வங்காளம்,உஜ்ஜயினி போன்ற வட தேசங்களில் சிவாகம உரை நூல்கள் இயற்றப்பட்டன என்றும் பாரதம் முழுவதும் சைவ சித்தாந்தம் பரவி இருந்தது என்றும் வரலாறு நமக்கு உணர்த்துகிறது…ஆக,வட தேசங்களில் உள்ளப் பெண்களில் பெரும்பான்மையினர் சைவர்களே என்று நாம் தெரிந்துக்கொள்ளலாம்….அப்படியிருக்க,வட நாட்டுப் பெண்களுக்கு கற்பு இல்லை என்றால்,அங்குள்ள சைவப் பெண்களை இவர் பழிக்கிறார் என்றே அர்த்தம்…ஆக,இவர் சிவனடியார் நிந்தனை செய்தவர் ஆகிறார்…அடியார் நிந்தனை செய்தவருக்கு நரக தண்டனை நிச்சயம்…
மறைமலையார் சமணர் போன்ற மாற்று மதத்தவரை புகழ்தலும்,வட நாட்டவர் பலர் சைவராக இருந்தப் போதிலும்,அவர்கள் வட நாட்டவர் என்ற ஒரே காரணத்துக்காக இகழ்ந்ததையும் பார்த்தோம்… சைவ சமய மரபை மீறி, சிவாகமங்களில் விதிக்கப்பட்டுள்ள அம்மி மிதித்தல்,அருந்ததி பார்த்தல்,போன்ற சைவக் கிரியைகளை நிக்கவும் துணிந்தார்…சைவ நூல்கள் உணர்த்தும் கற்பொழுக்கத்துக்கு புறம்பாக,விதவா மறுமணம் போன்ற விபச்சாரத்தை ஆதரித்துப் பேசினார்..ஆக,மொத்தத்தில் இவர் ஒரு பெரும் சிவத்துரோகி என்று நாம் அறிந்துக்கொள்ளலாம்….