New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மறைமலை


Guru

Status: Offline
Posts: 24721
Date:
மறைமலை
Permalink  
 


பாகம் 1 : சைவப் பெண்களின் கற்பைப் பழித்த மறைமலையார்

சிவமயம்

இந்த மறைமலையார் முன்னுக்குப் பின் முரணாக பல தடவை கருத்து தெரிவிப்பவர்…கற்பைப் பற்றிய இவரது கருத்தைப் பார்ப்போம்:

“மற்று.ஆரியரது நடைமலிந்த வடநாட்டிலோ காதல்மணம் பெரும்பாலும்  நடவாமையின்,அங்கிருந்த மகளிர் தம் கணவர் இறந்தப் பின்,அவருடைய பிறந்தாரை மணந்து கொள்ளும் வழக்கம்,பண்டு நடைபெற்றது……மேலும்,கணவன் உயிரோடிருக்கையிலோ அல்லது அவன் இறந்த பின்னோ மகப்பெறாத மகளிர் தம் மைத்துனரையோ அன்றி வேறு பிறரையோ கூடி மகப்பெற்றுக் கொள்ளலாமென்று மநுமிருதி (3,59,60,61) வெளிப்படையாகக் கூறுதலால்கற்பற்ற அவ்வொழுக்கம் வட நாட்டவரிற் பொதுவாயிருந்தமை தெளியப்படும்”  { தமிழர் மதம் (காதலன்பு,பக்கம் 73) }

அதாவது வட நாட்டில் சிலப் பெண்கள்,தம் கணவன் இறந்தப் பிறகு,கணவனின் சகோதரனை மணப்பதும்,மனுஸ்மிருதியில் கூறியப்படி கணவன் குழந்தை பாக்கியம் கொடுக்க முடியவில்லை என்றாலோ அல்லது கணவன் இறந்த பின்போ,அந்தக் கணவனின் சகோதரனை அல்லது வேறொருத்தரைக் கூடி குழந்தைப் பெறும் நியோக முறையும் , கற்பற்ற வாழ்க்கை என்று கூறும் இதே மறைமலை அடிகள்,அடுத்து என்ன கூறுகிறார்  என்றுப் பார்ப்போம் :

“இன்னும் கணவரை இழந்த மாதரில்,திரும்ப மணம் செய்துக் கொள்ளும் விருப்பம் உடையார்க்கு,ஏதொரு தீங்கும்  செய்யாது,அவர் விரும்பிய ஆடவருடன் மகிழ்ந்து வாழ உதவி செய்தல் வேண்டும்…இத்துணைப் பெருந்திகையினரான ஏனை மக்களிற் கணவரை இழந்த மகளிர் திரும்ப மணம் செய்துக்கொண்டு,இனிது வாழ நிற்கையில்,அவர்களை நோக்க மிகச்சிறு கூட்டத்தாரான நம் தமிழ் மாதர் மட்டும் திரும்ப மணம் செய்து கொள்ள இடம்பெறாமல் தடைசெய்யப்பட்டுத்,தம் வாழ்நாள் முடியும் மட்டும் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாயிருந்து பெருந்துயர் உழக்கச் செய்வது,ஈர நெஞ்சமுடையார் செயலாகுமா ”   { தமிழர் மதம் (காதலன்பு,பக்கம் 74) }

இந்த வாசகத்தின் கருத்து,கணவன் இறந்தப்பின்,ஒரு பெண்,வேறு ஒருத்தனை மணக்க விரும்பினால்,அவளை மணக்க நாம் உதவி செய்ய வேண்டும் என்பதே…

இப்பொழுது இவருடைய இரண்டு கருத்துக்களையும் ஒப்பு நோக்குவோம்…முதல் கருத்தில்,வட நாட்டில் சிலப் பெண்கள்,கணவன் இறந்தப் பின் கணவனின் சகோதரனை மணப்பதும் நியோக முறையும் கற்பில்லாத வாழ்க்கை என்று சாடிவிட்டு,அடுத்த பக்கத்திலேயே,அதற்கு முரணாக,கணவன் இறந்தப் பின்,ஒருப் பெண் வேறொரு ஆடவனை மணக்க விரும்பினால்,அவளுக்கு உதவ வேண்டும் என்று சொல்கிறார்,இந்த மறைமலை அடிகள்…மேலும்,நியோக முறை என்பது,காமத்துக்காக பின்பற்றப்படும் முறை அல்ல…கணவனால் குழந்தை பாக்கியம் கொடுக்க முடியவில்லை என்றாலோ,அல்லது கணவன் இறந்துவிட்டான் என்றாலோ,பிற ஆடவனை அப்பெண் கூடி,பிள்ளை பெற்றுக்கொள்ளலாம்….இன்றுப் போல் மருத்துவ வசதி இல்லாத அக்காலத்தில்,இம்முறை அனுமதிக்கப்பட்டது…மேலும்,இந்த முறையில்,காமத்துக்கு இடம் இல்லை…. அந்தப் பெண்,கணவனுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும்… எக்காரணம் கொண்டு, நியோக முறையில் ஈடுபடும் ஆணுடன் காம சுகத்தை அநுபவிக்கக் கூடாது…காமத்தை அவ்வாடவனிடம் அனுபவித்தால்,அது விபச்சாரமே…அதனால்,நரகத்தில் அதற்கான  தண்டனை உண்டு…. மேலும்,நியோக முறை,கலியுகத்தில் செய்யக் கூடாது என்று தர்ம நூல்கள் கூறுகின்றன..ஏனெனில்,கலியுகத்தில்,இதை காமத்துக்காக பலப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால்…

ஆனால்,இந்த மறைமலையார் ஆதரிக்கும் விதவா மறுமணமோ,விபச்சாரத்தின் மறுவடிவம்….எப்படி என்றால்,ஒரு பெண் தன் கணவனுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும்…ஆனால், கணவன் இறந்தப் பிறகு,வேறொருத்தனுடன் வாழ ஆசைப்படுபவள் தன் கணவனிடம் விசுவாசமில்லாதவளாக ஆகிவிடுகிறாள்… மேலும், கணவன் இறந்தப் பிறகு,புதிய ஆடவனை மணந்துக் கொண்டு,அவனுடன் உடல் சுகம் அனுபவிக்கிறாள்…அதாவது காம சுகம் அநுபவிக்கிறாள்…விபச்சாரியும் பல ஆடவரை புணர்கிறாள், விதவா மறுமணம் செய்யும் பெண்ணும்,ஒருத்தனுக்கு மேல் தன் உடலைக் கொடுத்து,சுகம் அனுபவிக்கிறாள்… ஆக,விபச்சாரத்துக்கும் விதவா மறுமணத்துக்கு வித்தியாசம் இல்லை…இரண்டும் ஒன்றே…இப்படிப்பட்ட ஈனச் செயலான இந்த விதவா மறுமணத்தை ஆதரித்துக் கொண்டு இருக்கும் மறைமலை, கற்பு நெறியைப் பற்றி பேச என்ன தகுதி உண்டு ??இவர் ஆதரிக்கும் விதவா மறுமணம் எனும் விபச்சாரம்,எந்த வகையில் நியோக முறையைவிட சிறந்தது ??

மேலும்,விதவா மறுமணம் என்பது சைவத்தில் அனுமதிக்கப்படும் ஒரு செயல் அல்ல…. விதவா மறுமணம் செய்பவளிடம் கற்பு ஒழுக்கம் இல்லை…விதவை எவ்வாறு வாழ வேண்டும் என்று சைவ சமய நூல்கள்,இவ்வாறு கூறுகின்றன :

{ கற்பாவது நாயகனிற் சிறந்த தெய்வம் இல்லை எனவும் அவனை வழிபடும் முறைமை இது எனவும் தந்தை தாயரும், பிராமணரிடத்தும் சான்றோரிடத்தும் ஆசாரியரிடத்தும் கடவுளைச் சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் இப்படி என நாயகனும் கற்பித்த வழி நிற்றலாம்.  ஆதலால், சுமங்கலிக்கு, தன் கணவனை வணங்கி அவனுக்கு ஏவல் செய்தலே மேலாகிய தருமமாம்  ஏவல் செய்து வரும் பொழுது, பரமபதியாகிய சிவனை வழிபடல் வேண்டும் என்னும் விருப்பம் உண்டாகில், தனக்கெனச் சுதந்தரம் இல்லாமையால், கணவனது அனுமதியைப் பெற்று, ஆசாரியரை அடைந்து சிவதீக்ஷை பெற்று, கணவனுக்குச் செயற்பாலதாகிய ஏவலின் வழுவாது நின்றே சிவனை விதிப்படி வழிபடுக.  கணவன் இறந்துவிடில், ஆபரணங்கள் அணியா தொழிதலும், வெற்றிலை பாக்கை ஒழித்தலும், ஒரு பொழுது பகலிலே உண்டலும், பாயல் வேண்டாது தரையிலே நித்திரை செய்தலும், ஐம்புலன்களை அடக்கலும், சிவ புண்ணியங்களை விதிவழுவாது செய்தலும் வேண்டும்.  இதற்குப் பிரமாணம் :

1.

ஏந்திசைக்குப் பதியேவ லியற்றுதலே நியதி யீசனிணைத் தாளணைய வேசறவு பெருகிற்

காந்தனனு மதிபெற்றுக் கைக்கொள்க பூசை கலித்திடினே யிருதுசுலுழ்ந்தொரு மூன்று நாளும்

வாய்ந்திடச் செய் துடற்சுத்தி மற்றையர்நீர் தரவே மானதபூ சனைபுரிக மற்றையநாட் புனலுட்

டோய்ந் தருந்திக் கவ்வியத்தைச் சூட்டுகபோ தரற்குக் சூதகமுன் பெரு நோய்முன் சூட்டுவிக்க பிறரால்  (சிவதருமோத்தரம் )

2.

கருநெறிக் கூந்தலார்க்குக் கணவரை வணங்க றானே

யுரியநற் றரும மாகுமொண்டிறற் கணவர் சொல்லாற்

பருவரை பயந்த நங்காய் பணிந்துநம் – பாதம் போற்றிப்

புரியவிழ் மலர்கடூவிப் பூசனை புரிதலாமால் ( வாயுசங்கிதை )

3.

தரையினிற் கிடத்த றான நல்கிட றயங்கு நீரி

லரியவெண் ணீற்றின் மூழ்க லன்பொடு நமைப்பூ சித்த

லொருபசு லுண்டு வைக லட்டமி பதினான்கோடு

மருவுபூ ரணையி லுண்டி யொழிந்திடல் வழக்க தாமே   ( வாயுசங்கிதை )

4.

மருவுகாதலன் மாய்ந்திடின் மங்கைய

ரொருப கற்பொழு துண்டரும் பாகிலை

விரியும் பாயல் வெறுத்துமண் மேற்றுஞ்சி

யரிய நோன்புக ளாற்றிட வேண்டுமால்

சுடர்செய் பொற்கல னீத்திடுந் தோகையர்

கடவுள் பூசனை காதலி னாற்றியு

முடல மாசுண வுள்ளுயிர் நீத்திடா

தடகு மூல மருந்திட வேண்டுமால் ( காசிகாண்டம் )

}

( ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இயற்றிய “பெரிய புராண சூசனம் (திரு நாவுக்கரசர் புராணம்) ” )

ஆக,விதவா மறுமணம் என்பது ஒரு கற்புள்ள  சைவப் பெண் சிந்தித்துக் கூட பார்க்க முடியாது ஒரு ஈனச் செயல்….கற்புள்ள ஒருப் பெண்,விதவா மறுமணம் எனும் விபச்சாரத்தை செய்யத் துணிய மாட்டாள்… ஆனால்,தன்னை சைவன் என்று சொல்லிக்கொண்டு,சைவத்துக்கு மாறான இந்த விதவா மறுமணத்தை ஆதரிக்கும் இந்த மறைமலை எங்ஙனம் சைவர் ஆவார் ??  இந்த சிவத்துரோகியின் அடுத்தக் கருத்தைப் பார்ப்போம் :

” …..முத்தீ வேள்வியைத் தவிர,அம்மி மிதித்தல் அருந்ததிகாட்டல் முதலிய சடங்குகளெல்லாம் பார்ப்பனர்களால் காலங்கள் தோறும் புதியவாய்ப் புகுத்தப்பட்டவைகளே ஆதலாலும்,காதலால்  கற்பொழுக்கத்தில் சிறந்த நிலைப்பெற்ற நந் தமிழ் மாதரார்க்குக் கல்லைப் போற் கற்பொழுக்கத்திற் திண்ணியையாய்  இருவென்றும்,அருந்ததி என்னும் ஆரிய மாதைப் போல் கற்பொழுக்கத்தில் சிறந்து திகழ் என்றும் கற்பித்தல் மீன்குஞ்சுக்கு நீச்சுக் கற்பித்தல் போல் மிகைப்பட்ட செய்கையாய்த் தமிழ் மாதரை இழிவுபடுத்தும் நீரதாய் இருத்தலின்,அவையிரண்டும் தமிழர் தம் திருமணச் சடங்குகளிற் சேரா வண்ணம் அவையிற்றை அறவே விலகிடல் வேண்டும்… ”  { தமிழர் மதம் (திருமண வேள்விச் சடங்கும்,பக்கம் 229) }

அதாவது,அருந்ததி ஆரியப் பெண்  என்றும் அவளை கற்புக்கு உதாரணம் என்று சொல்வது,தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்துவது, மீனுக்கு நீந்தக் கற்றுக் கொடுப்பதற்கு சமம் என்று கூறுகிறார் இந்த மறைமலை..இன்னும் ஒருபடி மேலே போய்,அம்மி மிதித்தல்,அருந்ததிப் பார்த்தல் போன்ற சடங்கை,திருமணக் கிரியையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கூறுகிறார்…இந்த சடங்கை உருவாக்கியவர்கள் பிராமணர்கள் என்று அடுத்த குண்டை தூக்கிப் போடுகிறார்..இதன்மூலம்,அருந்ததியின் கற்பை இவர் பழிக்கிறார்…

இவருடைய அடுத்த குப்பைக் கருத்தைப் பார்ப்போம் :

“இன்னும்,முனிவர்களில் சிறந்தவர் வசிட்டரென்றும்,கற்புடைய மாதரில் சிறந்தவள் அவர்தம் மனைவி அருந்ததி என்றும் கதை கட்டிவிட்டவர்கள் பார்ப்பனரே ஆவர் ”   { தமிழர் மதம் (திருமண வேள்விச் சடங்கும்,பக்கம் 229) }

இதில் வசிஷ்ட முனிவரையும் அருந்ததி அம்மையையும் பழிக்கிறார் இந்த கேடு கெட்ட மறைமலையார்…

“காதல் மணமும் கற்பொழுக்கமும் இன்னதென்று அறியாத ஆரிய மாதர்,காதல் கற்பொழுக்கத்தையே தமக்குயிராய்க் கொண்ட தமிழ் நங்கைமார்க்கும் அவ்விரண்டையும் கற்றுக் கொடுத்தார் என உரைப்பது, கள்குடியன் ஒருவன்  கள்குடியே அறியாத மேன்மகன் ஒருவனுக்குக் கள்ளருந்த ஆகாதெனக் கழியுரைக்கும் உரையோடு ஒப்ப வைத்து நகையாடி விடுக்கல் பாலதாம் அன்றி மற்ற என்னை ?? ” { தமிழர் மதம் ( திருமணச் சடங்கு,பக்கம் 231) }

அதாவது கற்பு என்றால் என்னவென்று அறியாத ஆரிய மாதர்,தமிழ் பெண்களுக்கு கற்புக்கு உதாரணமாகச் சொல்வது நகைப்புக்குரியது என்கிறார் மறைமலையார்…இவர் அருந்ததி அம்மையைத் தான் கற்பில்லாதவர் என்று சொல்கிறார்..ஏனெனில்,அந்த அம்மையாரைத் தான் கற்புக்கு உதாரணமாக நாம் கூறுகிறோம் அல்லவா ?? மேலும் அருந்ததி அம்மையாரை ஆரிய மாதர் என்றும் இவர் முன்னமே கூறியதைப் பார்த்தோம்… ஆக,அருந்ததி அம்மையின் கற்பை இவர் சாடுகிறார்…

இவரது கருத்துக்கு முரண்படுபவரை,இவர் எப்படி கையாள்கிறார் என்று பார்ப்போம் :

” இங்ஙனமெல்லாம் கதைக் கட்டித் ,தமிழர்களையும் அவருள் சிறந்த சான்றோரையும் கூட ஏமாற்றிவிட்ட பார்பனர்தம் சூழ்ச்சித் திறனை என்ன என்போம் ! சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகள் அறிவில் சிறந்த சான்றோர் ஆயிருந்தும், அவதாமும் பார்ப்பனரின் சூழ்ச்சியால் ஏமாந்து,கற்பிற் சிறந்த கண்ணகிக்கு அருந்ததியை உவமையாக எடுத்துச் சொல்லியிருக்கின்றனர் ! ”  { தமிழர் மதம் ( திருமணச் சடங்கு,பக்கம் 231) }

அதாவது ,சிலப்பதிகார ஆசிரியர்,இளங்கோ அடிகளும் கண்ணகியின் கற்பு ஒழுக்கத்துக்கு உவமையாக அருந்ததியை கூறியதை,இந்த மறைமலையாரால் ஜீரணிக்க முடியவில்லை…அதான் இந்தப் புலம்பல்..

இவரது மேலும் ஒரு கருத்தைப் பார்ப்போம் :

“இனி,அம்மி மிதித்தல் அருந்ததி காட்டுதல் என்னும் ஆரியப் பார்ப்பனரின் சடங்கையும் பார்ப்பன ஆசிரியனையும் ஒழித்தப்பின்,தமிழாசிரியர் ஒருவரையே திருமணம் நடத்துதற்கு அமர்த்தி… ”   { தமிழர் மதம் ( திருமணச் சடங்கு,பக்கம் 231) }

அம்மி மிதித்தல்,அருந்ததி காட்டுதல் போன்ற சடங்கை நீக்க சொல்கிறார்,மறைமலையார்….இவரின் இத்தகைய சைவ மரபு மீறலை நாம் என்னவென்று கூறுவது ??

அருந்ததி அம்மையாரின் கற்பை பழிக்கும் இந்த மறைமலையார், தம் இந்தக் கொள்கைக்கு மாறாக இருப்பவரை,பார்ப்பனர் சூழ்ச்சிக்கு அகப்பட்டவர் என்று மழுப்புவார்…அருந்ததி அம்மையை புகழும் ஒருவருடையப் பாடலைப் பார்ப்போம் :

“அருந்ததிஎன் னம்மை அடியவர்கட் கென்றும்

திருந்த அமுதளிக்கும் செல்வி – பொருந்தவே

ஆனந்தக் கூத்தர் அகமகிழத் தொண்டுசெயும்

மானந் தவாத மயில் “

இந்தப் பாடலை பாடியவர் வேறு யாரும் இல்லை, சைவ சித்தாந்தத்தின் சிகரமாக இருந்த ஸ்ரீ சிவஞான சுவாமிகள் அருளியப் பாடல் தான்… ஒரு தடவை,திருவாவடுதுறை தம்பிரான்கள், சிவஞான சுவாமிகளது வீட்டுக்கு வருகை தந்தபொழுது, சுவாமிகளது தாயாரான,கற்பில் சிறந்த மயில் அம்மையார், குறுகிய காலத்தில் சுவையான உணவை சமைத்து,அத்தம்பிரான்களுக்கு அன்னமிட,அதைப் பார்த்து சிவஞான சுவாமிகள் இயற்றியப் பாடல் தான் இது…இப்பாடலின் முதல் அடியின் அர்த்தம்,  “என் தாய் அருந்ததியைப் போல் கற்பில் சிறந்தவர்” என்று அர்த்தம்” என்பதாகும்…மஹாபதிவிரதையான தன் தாயை,சுவாமிகள் ,அருந்ததியுடன் ஒப்பிடுகிறார்… இதற்கு மறைமலையார் என்ன சொல்வாரோ தெரியவில்லை…சிவஞானசுவாமிகளும், பார்ப்பனரின் சூழ்ச்சியில் அகப்பட்டவர் என்று சொல்வாரோ ?? அப்படி சொன்னால்,அது ஆச்சாரிய துரோகமாகும்,ஏனெனில்,சைவ சித்தாந்த ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீமாதவ சிவஞான சுவாமிகளை, பிறரின் சூழ்ச்சிக்கு  சுலபமாக  ஏமாறுபவர் என்று கூறுவதற்கு சமம்..அதாவது, சுவாமிகளது பெருமையை சிறுமைப் படுத்துவதாகும்…  ஆனாலும், சிவத் துரோகத்தை சதா காலமும் செய்த இந்த மறைமலைக்கு,ஆச்சாரிய துரோகம் ஒரு பொருட்டே அல்ல….அதையும் துணிந்து செய்வார்…

கண்ணகியை கற்பில் சிறந்தப் பெண் என்று வர்ணிக்கும் மறைமலையார், அருந்ததியின் கற்பை பழிப்பது கண்டனத்துக்குரியதாகும்..ஏனெனில்,கண்ணகி ஒரு சமணம்ப் பெண்…. சிலப்பதிகாரத்தை சைவர்கள் கொண்டாடுவதில்லை..ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், சிலப்பதிகாரத்தை, “ஜைன செட்டிச்சியின் கதை” என்று ஒதுக்கினார்…திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ சுவாமிநாத தேசிகர் தம்,இலக்கணக் கொத்தில், தேவாரம் திருமுறை போன்ற சைவ நூல்கள் இருக்க,சில்ப்பதிகாரம் போன்றவற்றை படித்து எந்த பிரயோசனமும் இல்லை என்றார்…ஆனால்,இந்த மறைமலைக்கு,தமிழிலுள்ள எல்லா நூலும் வேண்டியதாம்…சம்ஸ்கிருதத்தில் சைவத்தைப் போற்றும் நூலாக இருந்தாலும்,வேண்டியது இல்லையாம்,ஏனெனில் அது சம்ஸ்கிருதத்தில் இருப்பதாம்…அது நிற்க….

சமணப் பெண்ணான கண்ணகியை கற்பில் சிறந்தவள் என்று போற்றும் மறைமலை,ஏன் சைவப் பெண்ணான அருந்ததியின் கற்பைப் பழிக்கிறார் ??இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், மறைமலைக்கு சமயத்தைவிட திராவிட இனவாதமே முக்கியம்…ஆர்யப் பெண்கள் கற்பில்லாதவர் என்று இவர் பழித்தார்….ஆரியப் பெண் என்று இவர் குறிப்பிடுவது,வட நாட்டு பெண்களை….வட நாட்டில், சைவ சமயத்தை சார்ந்தப் பெண்கள் இல்லையா ?? சைவ சித்தாந்த நூல்கள், தமிழில் இயற்றப்படுவதற்கு முன்,காஷ்மீரம்,வங்காளம்,உஜ்ஜயினி போன்ற வட தேசங்களில் சிவாகம உரை நூல்கள் இயற்றப்பட்டன என்றும் பாரதம் முழுவதும் சைவ சித்தாந்தம் பரவி இருந்தது என்றும் வரலாறு நமக்கு உணர்த்துகிறது…ஆக,வட தேசங்களில் உள்ளப் பெண்களில் பெரும்பான்மையினர் சைவர்களே என்று நாம் தெரிந்துக்கொள்ளலாம்….அப்படியிருக்க,வட நாட்டுப் பெண்களுக்கு கற்பு இல்லை என்றால்,அங்குள்ள சைவப் பெண்களை இவர் பழிக்கிறார் என்றே அர்த்தம்…ஆக,இவர் சிவனடியார் நிந்தனை செய்தவர் ஆகிறார்…அடியார் நிந்தனை செய்தவருக்கு நரக தண்டனை நிச்சயம்…

மறைமலையார் சமணர் போன்ற மாற்று மதத்தவரை புகழ்தலும்,வட நாட்டவர் பலர் சைவராக இருந்தப் போதிலும்,அவர்கள் வட நாட்டவர் என்ற ஒரே காரணத்துக்காக இகழ்ந்ததையும் பார்த்தோம்… சைவ சமய மரபை மீறி, சிவாகமங்களில் விதிக்கப்பட்டுள்ள அம்மி மிதித்தல்,அருந்ததி பார்த்தல்,போன்ற சைவக் கிரியைகளை நிக்கவும் துணிந்தார்…சைவ நூல்கள் உணர்த்தும் கற்பொழுக்கத்துக்கு புறம்பாக,விதவா மறுமணம் போன்ற விபச்சாரத்தை ஆதரித்துப் பேசினார்..ஆக,மொத்தத்தில் இவர் ஒரு பெரும் சிவத்துரோகி என்று நாம் அறிந்துக்கொள்ளலாம்….



__________________


Guru

Status: Offline
Posts: 24721
Date:
Permalink  
 

Image may contain: 1 person Image may contain: outdoor

Image may contain: 1 personNo automatic alt text available.Image may contain: 1 person, textImage may contain: 1 person

Image may contain: 1 personImage may contain: 1 personImage may contain: 1 person, text   Image may contain: 1 person, sunglasses and text Image may contain: textImage may contain: cloud, sky, text and outdoorImage may contain: 1 person, textImage may contain: 1 person, sunglasses, text and close-up



__________________


Guru

Status: Offline
Posts: 24721
Date:
Permalink  
 

கிருத்துவக் கைக்கூலி மறைமலையார்

சிமயம்

மறைமலை அடிகள் ஒரு சிவத்துரோகி என்றும் அவருடைய முரண்பட்ட கருத்துக்களையும் நாம்  முந்தைய பதிவிலிருந்து தெரிந்துக் கொண்டோம்…ஆர்யர் படையெடுப்பு எனும் கட்டுக்கதையை அவர் நம்பினார்,அதனால் பிராமண துவேஷம்,சம்ஸ்கிருத துவேஷம்,வேத சிவாகம துவேஷம் அவரிடம் அதிகமாக இருந்தது….இதனால்,வட நாட்டில் உள்ள சைவப் பெண்களின் கற்பையே இவர் பழித்தார் என்று,முந்தைய கட்டுரை உணர்த்துகிறது…இதற்கெல்லாம் மூலக் காரணம், மறைமலையார்,மேன்னாட்டு கிருத்துவ ஆராய்ச்சியாளருக்கு அடிமையாக இருந்தது தான்…இவர்,எப்பேர்ப்பட்ட அடிமை என்பதை இனி காண்போம் ..

வேளாளர் நாகரிகம் என்று ஒரு நூலை இயற்றியிருக்கிறார் மறைமலையார்…அந்த நூலில், “நடுநிலையுடைய ஐரோப்பிய ஆசிரியர் உருத்திர வழிபாடு தமிழரதென்றமை” என்ற ஒரு தனி தலைப்பையே ஒதுக்கியிருக்கிறார்…இந்த தலைப்பிலேயே தனது அடிமைத்திறத்தைக் காட்டியிருக்கிறார் மறைமலையார்…மேன்னாட்டு ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் நடுநிலை உடையவர் என்று இவர் கூறுகிறார்..ஆனால்,ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள்,கிருத்துவத்தை இந்த நாட்டில் பரப்ப,வேதத்தை எப்படியெல்லாம் திரித்துக் கூறியிருக்கின்றனர் என்பதை எல்லோரும் அறிவோம்…ஆர்ய திராவிட பிரிவினை வாதத்தை உருவாக்கியதே இவர்கள் தான்…ஆனாலும், எல்லா ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் கிருத்துவ சார்புடையவர் என்றோ,நடுநிலையான மேன்னாட்டு ஆராய்ச்சியாளரே கிடையாது என்றோ நாம் சொல்ல முடியாது தான்… Koenraad Elst, David Frawley, schopenhauer போன்ற மேன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள்,ஆர்ய படையெடுப்பு எனும் கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தி நமக்கு பேருபகாரம் புரிந்துள்ளனர்….இவர்கள் தான் உண்மையான நடுநிலையுடையவர்கள்….இந்த மறைமலையார்,யாரை நடுநிலையுடையோர் என்று கூறுகிறார் என்பதை கவனிப்போம் :

“வடமொழி நூல்களை நடுநிலைமையோடு எழுத்தெண்ணிக் கற்று அவற்றின்கண் நிகரற்ற புலமையுடையோராய் விளங்கும் ஐரோப்பிய அறிஞரும்,ஆரிய வேதங்களின் இடையிடையே காணப்படும் உருத்திர வழிபாடு சிவவழிபாடுகள் பண்டுதொட்டு ஆரியர்க்கு உரியன அல்லவென்றும்,அவை தமிழர்பால் நின்றும்,ஆரியர் கைக்கொண்டனவா என்றும் ,இந்திர வருண வழிபாடுகலே ஆரியர்க்கு உண்மையில் உரியனவாமென்றும் நடுநிலை பிறழாமல் உண்மையை உள்ளவாறே ஆராய்ந்து காட்டி விளக்கியிருக்கின்றார்கள்..அவையெல்லாம் ஈண்டு எடுத்துக் காட்டலூறின் இது மிகவிரியும்..Max Muller, Muir, Taylor, Weber, Ragozin, Criffith Macdonell முதலான மிகச் சிறந்த வட நூற் புலவர்கள் எழுதியிருக்கும் அரும்பெரு நூல்களில் அவற்றின் பரப்பைக் கண்டுகொள்க. “(வேளாளர் நாகரிகம்,பக்கம் 76)

சம்ஸ்கிருதத்தில்,மாக்ஸ் முல்லர் போன்றோர் பெரும்புலமை உடையவர்கள் என்று கூறாமல்,நிகரற்ற புலமை உடையோர் என்று ஒரேயடியாக இந்த மேன்னாட்டு ஆராய்ச்சியாளர்களை மறைமலையார் உயர்த்துவதை கவனிக்கவும்…இவர் குறிப்பிட்ட மாக்ஸ் முல்லர் முதலானோர் நடுநிலை பிறழாத்வர்கள் என்றும் கூறுகிறார்,இவர்கள் சம்ஸ்கிருத நூல்களில் மிகச் சிறந்த புலவர்கள் என்றும் புகழ் மாலை சூட்டுகிறார்..ஆனால்,இவர் குறிப்பிடும் இந்த ஆராய்ச்சியாளர்கள் உண்மையிலேயே இவருடைய புகழ்ச்சிக்கு உரியவர்கள் தானா என்பதை சற்று பார்ப்போம்…

மறைமலையார் குறிப்பிட்டுள்ளவர்களில் மிகவும் புகழ் பெற்றவர் மாக்ஸ் முல்லர்,அதனால் இவரைப் பற்றி சிறிது ஆராய்வோம்…இவர் எழுதிய கடிதங்கள் மூலம் இவருடைய உண்மை முகத்தை நாம் அறியலாம் :

1. To Chevalier Bunsen. 55 St. John Street, Oxford, August 25, 1856.    “India is much riper for Christianity than Rome or Greece were at the time of St. Paul. The rotten tree has for some time had artificial supports… For the good of this struggle I should like to lay down my life, or at least to lend my hand to bring about this struggle. Dhulip Singh is much at Court, and is evidently destined to play a political part in India.”

2. To the duke of  Argyll. Oxford,  December 16, 1868.   “India has been conquered once, but India must be conquered again, and that second conquest should be a conquest by education. Much has been done for education of late, but if the funds were tripled and quadrupled, that would hardly be enough. A new national literature may spring up, impregnated with western ideas, yet retaining its native spirit and character… A new national literature will bring with it a new national life, and new moral vigour. As to religion, that will take care of itself. The missionaries have done far more than they themselves seem to be aware of.”

“The ancient religion of India is doomed, and if Christianity does not step in, whose fault will it be?”

3.

max muller

 

 

[ ஆதாரம் : The True History and the Religion of India: A Concise Encyclopedia of Authentic Hinduism ( Prakashanand, H.D. Saraswati, Prakashanand) ]

முதல் கடிதத்தில், இந்தியா,கிருத்துவ மதத்துக்கு ஏற்ற இடமாக இருப்பதாக மாக்ஸ் முல்லர் கூறுகிறார்…அடுத்தக் கடிதத்தில்,  இந்தியாவின் பழஞ்சமயம் அழியப்போவதாகவும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,கிருத்துவம் உள்ளே நுழையவில்லை என்றால்,அது யாருடைய குற்றம் என்றும் இவர் கூறுகிறார்…மூன்றாம் கடிதத்தில்,இந்தியாவில் கிருத்துவம் வளர்ச்சி பெறும் என்று தமக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார்….ஆக,இவர் கிருத்துவ மதத்தைப் பரப்ப வந்தவர் என்றும்,கிருத்துவர்களின் கைக்கூலியாக செயல்படுகிறார் என்றும் நாம் அறியலாம்…இரண்டாம் கடிதத்தில்,எவ்வாறு இந்தியாவின் பழஞ்சமயத்தை அழிக்கலாம் என்று அவரே கூறுகிறார் “India must be conquered again, and that second conquest should be a conquest by education. Much has been done for education of late, but if the funds were tripled and quadrupled, that would hardly be enough. A new national literature may spring up, impregnated with western ideas, yet retaining its native spirit and character.. A new national literature will bring with it a new national life, and new moral vigour. As to religion, that will take care of itself. The missionaries have done far more than they themselves seem to be aware of.” ….. அதாவது,ஐரோப்பா போன்ற நாடுகளிலிருந்து பணத்தொகை பன்மடங்காக்கப்பட்டால், இந்தியாவில் ,மேன்னாட்டு சிந்தனைகளை உடைய புதிய இலக்கியங்கள் தோன்றும் என்று கூறுகிறார்…அதாவது,இந்திய மக்களின் சிந்தனையில் மேன்னாட்டு கலாச்சார சிந்தனைகளை புகுத்துவது எப்படி என்று கூறுகிறார்….அடுத்து,நம் சமயத்தை அழிக்க,கிருத்துவ மிஷனரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறுகிறார்…ஆக,இவர் நடுநிலையுடையவர் என்று மறைமலையார் புகழ்வது,பொருள் சேரா புகழே… துடப்பக்கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் என்று பெயர் வைப்பதற்கு ஒப்பாகும்…

அடுத்து,இந்த மாக்ஸ் முல்லர்,உண்மையிலேயே சம்ஸ்கிருதத்தில் பெரும் புலமை வாய்ந்தவரா என்று பார்ப்போம் :

Q: Max Mueller is a very renowned name in India. We have a Max Mueller Institute here where German language is taught and various other activities are conducted. In my understanding, Max Mueller had a command on Sanskrit language and he translated Vedas and other works of Sanskrit. How did he come to acquire immense knowledge of the ancient language which incidentally was not a spoken language?

A: Max Mueller. It is not his name. His name was Friedrich Maximillan Mueller. He did not publish in German. He did not get a job in Germany. He got a job with the East India Company in England. Most of his writings are in English. He was neither a scholar nor he knew Sanskrit. He was a swindler.

Q: You call him a swindler?

A: I call him a swindler. I can provide  proofs in support of my assertion. I can reason it out  also. Max Mueller had assumed that he was a scholar. From his own autobiography, from biographies written by his son and wife, from other biographies, from his other writings, and from his letters, we can reconstruct his life from birth to his death. After passing the High School, he never appeared in any examination rather never cleared any examination. So obviously he can not possess any academic degrees. Yet he calls himself a Master of Arts (MA). His wife calls him a Doctor of Philosophy. His wife maintains that he was a Ph. D. from the Leipzig  University. There is no record at the Leipzig University or any proof that he appeared in any examination there. So how would you describe him:

Q: OK, but there are people who without going to school or university acquire knowledge of languages. So what about his knowledge of Sanskrit.

A: That is a different issue but one can’t describe oneself as a scholar or ascribe degrees to oneself without clearing  any examination. So far Sanskrit, Max Mueller never came to India. In his youth, he wanted to come to India but when he had  money as his books were flooding market with the help of East India Company. But when he had plenty of money, he did not feel any need of coming to India. So the question arises that if had not learnt Sanskrit in India then he must have learnt it in Europe. So this is another part of my book ‘Lies with long legs’ as we have tried to find out who was the first person, the pioneer, who taught Sanskrit in Europe.

நன்றி : http://haindavakeralam.com/HKPage.aspx?PageID=11325

இந்த உரையாடலில்,மாக்ஸ் முல்லர்,இந்தியாவில் சம்ஸ்கிருதம் படிக்கவில்லை என்று தெரிகிறது…..இவர் சம்ஸ்கிருதம் அறியாதவர் என்றும் இந்த உரையாடல் நமக்கு உணர்த்துகிறது…தன்னை ஒரு அறிஞன் என்று மாக்ஸ் முல்லர் கூறிக்கொண்டதாகவும், அவருடைய மனைவி,மாக்ஸ் முல்லர்,ஜெர்மனியில் உள்ள லீப்சீக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்றும் கூறுவதாகவும் தெரிகிறது.ஆனால்,மாக்ஸ் முல்லர்,லீப்சீக் பல்கலைக்கழகத்தில் எந்தவொரு பரீட்சையும் எழுதவில்லை ஆகையால்,அவருக்கு அப்பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் கிடைத்ததாக அவர் தம் மனைவி கூறுவது புரட்டே…இப்படிப்பட்ட புரட்டாளரும் சம்ஸ்கிருதம் அறியாதவருமான மாக்ஸ் முல்லர் தான் சம்ஸ்கிருதத்தில் பெரும்புலமை வாய்ந்தவர் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளியுள்ளார் மறைமலையார்…

ஒரு பானைக்கு சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல், மறைமலையார் குறிப்பிட்ட அறிஞர்களில் ஒருவரான மாக்ஸ் முல்லரின் அயோக்கியத்தனத்தை ஒருவாறு பார்த்தோம்…அதேபோல்,மறைமலையாரின் மற்றைய அபிமான் அறிஞர்கள் எத்தகையவர் என்று நாம் தெரிந்துக்கொள்ளலாம்…இனி,மறைமலையார், எவ்வாறு இந்த மேன்னாட்டு ஆராய்ச்சியாளர்களை தற்காக்கிறார் என்று பார்ப்போம் :

“இவ்வைரோப்பிய அறிஞர்க்குள்ள ஆராய்ச்சித் திறத்திலும் வடமொழிப் புலமையிலும் நூறாயிரத்து ஒரு சிறு கூறேனும் வாய்ப்பப் பெறாதார் தாமுந் தமது அறியாமையையே அறிவாகப் பிழைப்படக் கருதி அவ்வைரோப்பியர் செய்த ஆராய்ச்சிகளெல்லாம் பிழையென எளிதாகச் சொல்லிவிடுவர். ” (வேளாளர் நாகரிகம்,பக்கம் 76)

மேன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சித் திறன் மிக்கவர்களாம், சம்ஸ்கிருதத்தில் புலமை மிக்கவர்களாம்…அவர்களின் இத்திறன்களில்,100 000ல் ஒரு சிறு பகுதி திறன் கூட இல்லாதவர்கள் நம் மக்களாம்…மேன்னாட்டு ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சி தவறு என்று நம் மக்கள் கூறுவதை இந்த மறைமலையார் கண்டிக்கிறார்…ஐரோப்பியனைக் காக்க,தன் சொந்த மக்களை ஆராய்ச்சித் திறன் இல்லாதார் என்று பழிக்கும் அளவுக்கு இந்த மறைமலையாரின் அடிமைத் திறன் செயல்படுகிறதைப் பாருங்கள் !!!

ஐரோப்பிய எஜமான்களுக்கு இவர் காட்டும் விசுவாசத்தைத் தொடர்ந்து பார்ப்போம்:

” இவ்விந்திய நாட்டிற் பிறந்து,ஒவ்வொரு கோட்பாட்டிற் குரியராய்,ஏனைக் கோட்பாடுகளை முற்றும் இகழ்ந்து ஏனையோர் கூறுவனவற்றை நடுவுநின்று ஆராய்ந்து உண்மை கண்டறியும் வேட்கையிலராய்த்,தாந்தாம் பிடித்ததனையே நிலை நாட்டும் பொய்ப்பற்று உடைய நம் இந்திய நாட்டுப் புலவர்களிற் பெரும்பாலார்  ஆரியவேதங்கள் உபநிடதங்கள் முதலியவற்றின் பொருள்களை நடுநின்று கண்டு உண்மையை உள்ளவாறு உரைக்கும் நீரர் அல்லர். ஆரிய வேதங்களுக்குச் சொற்பொருள்களும் உரைகளும் எழுதிய யாஸ்கர்,சாயனர்,மகீதர்,அந்வதர் முதலியோரும்,உபநிடதங்கள் வேதாந்த சூத்திரங்கள் முதலியவற்றிற்கு உரைகள் எழுதிய நீலகண்டர்,சங்கரர்,இராமானுசர்,மத்வர் முதலியோரும்,பிற்காலத்தில் இவை தமக்கு உரைகளும் விளக்கங்களும் வரைந்த தயானந்த சரசுவதி,ராசாராம் மோகன்ராய் முதலியோரும் தாந்தாம் உரை வகுத்தற்கெடுத்த நூற் பொருள்களை நடுநின்று ஆராய்ந்துகண்டு கூறாமல்,தாந்தாம் வேண்டிய பொருள்களை நுழைத்து,ஒருவரோடொருவர் பெரிதும் மாறுகொண்டு உரை உரைத்தலைச் சிறிது ஆராய்ச்சியுடையாரும் நன்கு உணர்ந்து கொள்வர். ” (வேளாளர் நாகரிகம்,பக்கம் 77)

நம் இந்திய பண்டிதர்கள்,புலவர்கள்,வேதங்களின் உண்மை பொருளை உரைக்க மாட்டார்கள் என்று இந்த மறைமலை எனும் ஐரோப்பியரின் அடிமை குற்றம் சாடுகிறார்…இவர் சாடியவர்களில் சாயனர் என்பவரும் அடங்குவார்..அப்படியாயின்,மாக்ஸ் முல்லரையும்,இந்த மறைமலையார் சாட வேண்டி வருஉம்,ஏனெனில்,மாக்ஸ் முல்லர்,சாயனரின் உரையைத் தான் பின்பற்றி வேதத்துக்கு தப்பான அர்த்தம் கொடுத்தார்…சாயனரை நாம் தற்காக்கவில்லை…சைவர்கள் சாயனருக்கு ஆதரவு தருவதில்லை,ஏனெனில்,சாயனர் தான் சோம பானம் போன்றவற்றுக்கு கள் என்ற தப்பான பொருள்களைக் கொடுத்தவர்….சாயனரை சாடும் இந்த மறைமலையார்,அந்த சாயனரின் உரையைப் பின்பற்றும் மாக்ஸ் முல்லரைக் கொண்டாடுகிறார்..இது தான் இவரின் லட்சணம்..

உபநிஷத்துக்களுக்கு பாஷ்யம் எழுதிய நீலகண்டர்,சங்கரர்,ராமானுஜர்,மத்வர் என்ற நால்வரை குறிப்பிட்டு,இவர்களும் வேதத்துக்கு உண்மை பொருளை சொல்லாமல்,தத்தம் கொள்கைகளை கூறினர் என்று சாடுகிறார் இந்த மறைமலையார்.. இவர் கூறும் நால்வரில்,நீலகண்டரை தவிர்த்து,மற்ற மூவரையும் சைவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.ஸ்ரீ நீலகண்ட சிவாச்சாரியார்,சைவ சமயத்தின் ஒரு பிரிவான சிவாத்வைத சைவத்தை சார்ந்தவராக இருப்பினும், அவர் பாஷ்யத்தைத் தான் சைவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்..நீலகண்ட பாஷயத்திலிருந்து நம் சைவ அறிஞர்கள் பலர் மேற்கோள் காட்டுகின்றனர்…உதாரணத்திற்கு,ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சீடரான,காசிவாசி சாம்பவஸ்ரீ செந்தில்நாத ஐயர்,நீலகண்ட பாஷ்யத்தை,தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்… அதே செந்தில்நாத ஐயர், சைவ சித்தாந்த பரமாச்சாரியரான ஸ்ரீமெய்கண்ட தேசிகர் அருளிய  சிவஞானபோதத்துக்கு உரையாக ,தாம் இயற்றிய “சிவஞானபோத வசனலங்கார தீபம்” எனும் நூலில்,இவ்வாறு கூறுகிறார் :

“வைதிகசைவப் பகைவரால் உடைக்கப்படாத வச்சிரமலை போன்றும் ,அதிலே கட்டப்பட்ட மநோஹர ஆனந்தகவர்ணமாளிகை போன்றும் முறையே உள்ளன வேதாந்த சூத்திரசைவ பாஷ்யமும் ,அதன் சாரமாகிய , சிவஞானபோத சைவ சித்தாந்த சாஸ்திரமுமாம் என்க “

வைதிக சைவ (சைவ சித்தாந்தம்) விரோதிகளால் உடைக்கப்படாத வஜ்ர மலை போன்று உள்ளது வேதாந்த சூத்திர சைவ பாஷ்யம் என்கிறார் செந்தில்நாத ஐயர்…சைவபாஷ்யம் என்பது நீலகண்டரின் பாஷ்யத்தைக் குறிக்கும்,ஏனெனில்,உபநிஷத்துக்களுக்கு எழுந்த நான்கு உரைகளில்,இதுவொன்று தான் சைவசமயத்தை அனுசரித்து இயற்றப்பட்ட  (சைவ) பாஷ்யம்…

 Agita-Agama says,

“Sa eva sarvages sadbhir Brahma sabdena Sabditah” that Siva is called Brahma.

Therefore Srikhantha-Acharya is right in interpreting Brahma as Siva according to Srutis, Puranas and Agamas. ” (Vaidika Saivam)

சிவன்,பிரம்மன் என்றும் கூறப்படுகிறான் என்று அஜித ஆகமம் கூறுவதால், வேதம்(ஸ்ருதி),புராணம்,ஆகாமம் போன்ற நூல்களின் கருத்துக்கு ஒப்ப,ஸ்ரீகண்ட ஆச்சாரியர்,வேதத்தில் கூறப்படும் பிரம்மனை,சிவன் என்று தமது பாஷ்யத்தில் பொருள்கொண்டது சரி என்று,காசிவாசி செந்தில நாத ஐயர்,தாம் இயற்றிய வைதிக சைவம் (Vaidika Saivam) எனும் நூலில் குறிப்பிடுகிறார்…நீலகண்ட சிவாச்சாரியாருக்கு,ஸ்ரீகண்டர் என்ற நாமமும் உண்டு….சில சமயம்,நீலகண்ட பாஷ்யம்,ஸ்ரீகண்ட பாஷ்யம் என்றும் அழைக்கப்படும்…ஆக,சைவத்தின் பிரமாண நூலான சிவாகமத்தின் கருத்தை அனுசரித்து,வேதத்துக்கு பாஷ்யம் எழுதியிருக்கிறார்,நீலகண்ட சிவாச்சாரியார் என்று தெரிகிறது…

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரும்,நீலகண்டரை,ஆதாரமாக சில இடங்களில் மேற்கோள் காட்டுகிறார் :

இன்னும் பிரம மீமாஞ்சைக்கு நீலகண்ட சிவாச்சாரியார் இயற்றிய பாஷ்யத்தில் “வேதசிவாகமங்களுக்குப் பேதம் காண்கின்றிலம், வேதமே சிவாகமம்”

நம் சைவ சான்றோர்கள், நீலகண்ட பாஷ்யத்தை பல இடங்களில் மேற்கோள் காட்டுவதால்,அதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றே அர்த்தம்…ஆனால்,தன்னை சைவன் என்று கூறிக்கொண்டு,நீலகண்ட சிவாச்சாரியார்,வேதத்தின் உண்மை பொருளை கூறாமல்,தம் கொள்கையை நிலை நாட்ட பாஷ்யம் இயற்றியதாக பிதற்றும் மறைமலையாரை எவரும் சைவர் என்று ஒப்புக்கொள்வார்களா ??

மறைமலையாரின் அடுத்த உளறல் :

“நிலநூல்,வான்நூல், மொழி நூல், உயிர்களின் தோற்றவளர்ச்சி நூல், மக்கட்டோற்ற நூல்,மன நூல் முதலான பல்வகை நூலுணர்ச்சியினும்  ஒப்புயர்வில்லாப் புலமையுடையராய் விளங்கும் ஐரோப்பிய அமெரிக்க அறிஞர்களில் வடமொழியையும் ஆராய்ந்து உண்மை காணப்புகுந்த புலவர்களே,நம் இந்திய உரைகாரரை விட அம்மொழி நூற் பொருள்களின் உண்மையை உள்ளவாறறிந்து உரைக்கும் நீரராவார்” (வேளாளர் நாகரிகம்,பக்கம் 77)

சம்ஸ்கிருத நூல்களுக்கு,நம் இந்திய பாஷ்யக்காரர்களைவிட, ஐரோப்பிய,அமெரிக்க அறிஞர்தான் உண்மை பொருள் தெரிந்தவர்களாம்…மறைமலையார், கிருத்துவ ஆராய்ச்சிகளிடம் வைத்திருக்கும் விசுவாசம்,நம்மை புல்லரிக்க வைக்கிறது !

ஆக,மறைமலையார்,கிருத்துவ சார்புடைய மேனாட்டு ஆராய்ச்சியாளர்களின் சிறந்த அடிமையாக இருந்ததைப் பார்த்ததோம்..பாரத நாட்டில்,சைவ சமயத்தை அழிக்க வந்த கிருத்துவ மிலேச்சர்களுக்கு, மறைமலையார் விசுவாசமாக இருந்ததோடு அல்லாமல்,சைவ பாஷ்யம் இயற்றிய நீலகண்ட சிவாச்சாரியரையும் பழித்துப் பேசுகிறார்..ஆக,இந்த மறைமலையாரும், கிருத்துவர்களின் கைக்கூலியாக செயல்பட்டுள்ளார்…இவர் ஒரு மாபெரும் சிவத்துரோகி என்பதை நாம் தோலுரித்துக் கொண்டே வருகிறோம்..

அடுத்தப் பதிவு : பாகம் 3 : மறைமலையாரின் வேத சிவாகம நிந்தனை

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard