New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஹிந்து = ஹிந்துதுவா.


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஹிந்து = ஹிந்துதுவா.
Permalink  
 


நாம் இந்துகள் தான்- ஆனால் இந்துதுவா என்றால் என்னவென்று சரியாக புரிதல் கிடையாது என்றால் சில உண்மைகளை தெளிவுபடுத்துவதே இந்த பதிவின் எண்ணம். (இது சார்ந்து கேள்விகள் கேட்ட அனைவருக்கும் நன்றி)

{மாற்று மதத்தினரை கேட்டு கொள்வது மதம் மாற்றுவதை எதிர்த்து குறல்கொடுங்கள். தனி மனிதன் மதம் மாறுவது அவன் விருப்பம். ஆனால் மதம் மாற்றுவதே வேலையாக திரிபவர்களை நாங்கள் வெறுக்கிறோம். ஏன் என்றால் கலாச்சாரத்தால் நீங்களும் ஹிந்துக்களே.முழுமையாக படிக்கவும்.. உண்மை கிடைக்கும்.}

சில அடிப்படை விசயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முதலில் ஏன் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பல அமைப்புகள் கூறுகின்றன?

அதன் விடை மிக எளிது, தமிழ் நாட்டை எடுத்துகொள்ளுங்கள் - பழனி கோவிலுக்கு மட்டும் ஆண்டுக்கு ஏறக்குறை 100கோடி வருமானம் வருகிறது இது 20 கோடிவரை பக்தர்கள் காணிக்கையாகவும் , அது தவிர கோவில் சொத்துகள் , பிரசாதங்கள் என்று கண்கிட்டால் 100கோடி எளிதாக கிடைக்கும். மொத்தம் அறநிலை துறை கையில் ஏறக்குறைய 38,488 கோயில்கள், அத்துடன் பல ஆயிரம் கோடி கோவில் சொத்துக்கள் உள்ளன.

மதுரை மீனட்சி அம்மன் கோவில் தொட்டு ராமேஸ்வரம் வரை உள்ள இந்த அனைத்து கோவில்களின் வருமானமும் அரசுக்கு தான் செல்கிறது.. அது என் கணக்குபடி ஏறக்குறைய 3000-4000கோடி தொட வேண்டும். இது அதிகம் ஆகுமே தவிர குறையவாய்ப்பு இல்லை, அதாவது ஏறக்குறைய கோவிலுக்கு 15லட்சம் வருமானம் என்று கணக்கிட்டால் கூட 5000கோடி எளிதில் கிடைக்கும். மடபுரம் காளி அம்மன் கோவிலுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் கூட வராது என்று இந்து அறநிலை துறை கூறினால் சுத்த முட்டாள் ஆக்கும் வேலை.

{38488* 1500000=5773,20,00,000Rs}

வரும் வருமானத்தை வேறு எந்த மதமும் என்ன செய்வர்? ஒரு சர்ஜ் தனக்கு வரும் வருமானம் கொண்டு அவர் மதத்தை வளர்க்க இல்லை மதத்தவருக்கு உதவ பயன்படுத்துவர்.. ஆனால் ஹிந்து கோவில்கள் மூலம் வரும் வருமானம் மட்டும் அரசு எடுத்துகொள்ளும் ????? இது எப்படி நியாயம்? அது மீண்டும் ஹிந்துகளில் ஏழை மக்களின் உயர்வுக்கு தானே பயன்படவேண்டும்? அது தான் 50 வருட திராவிட கட்சியின் முதல் சாதனை.

இது ஒரே ஒரு துளி தான்.. இன்னும் ஆயிரம் கொள்ளை நடக்ககிறது. முறைபடுத்தபடாத கோவில் சொத்துகள் சில ஆயிரம் கோடி திராவிட கழகங்கள் ஆட்சியில் பங்குபோட்டு கொண்டனர், 40 வருசம் முன்னாடி கேட்க ஆள் இல்லை.

இது இந்தியா முழுவதும் வேறு வேறூ விதமாக நடக்கும் பிரச்சனை. ஆக ஒற்றுமை தேவை கட்டாயம் ஆகிறது.

----------------------------------

1)ஹிந்து என்பது மதமே இல்லை என்று கேளி பேச்சுக்களை பலர் பேசி வருவது நான் அறிவேன். ஒன்று அவர்களுக்கு சரியாக வரலாறு தெரியாது இல்லை ஹிந்து வெறுப்பு இரண்டில் ஒன்று தான் அவர்கள் அப்படி பேச காரணம். இதற்க்கு நானே சில உண்மைகளை தெளிவுபடுத்துகிறேன்.

-இந்துகள் என்பது ஒரு குறிப்பிட்டு காட்டிவிட கூடிய மதம் அல்ல.. இன்று நாம் குறிப்பிட்டு காட்டும் இந்துமத கட்டமைப்பை உருவாக்கியவர்கள் என்று யாரையும் குறிப்பிட்டு கூறவும் முடியாது. சில நூறு ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள், சமய பெரியவர்கள் என்று கூறலாம்.

எனவே சுருக்கமாக கூறினால் பல்லுருவ வழிபாடு கொண்டவர்கள் ஹிந்துகள்.. (குறிப்பு : ரோம், எகிப்த், அரபியர்கள் என்று எல்லோரும் பல்லுருவ வழிபாடு தான் கொண்டிருந்தனர். மேற்கத்திய நாடுகளில் கிருஷ்து வந்து சென்று 300 ஆண்டுகள் ஏதோ ஒருகாரணத்தால் பெண் கடவுள்களை வணங்குவதை பெரிய அளவில் எதிர்ப்பு உருவாகி அது சாத்தானை வணங்கும் கூட்டமாக காட்டபட்டு முற்றிலும் அழிக்கபட்டனர்.. ஏறக்குறைய 30லட்சம் மக்கள் இறந்தனர் என்பது வரலாறு. இதே போல் அரபு தேசம் முழுவதும் இஸ்லாம். அதே போல் எல்லா இடங்களிலும் பல்லுருவ வழிபாடு முழுமையாக அழிந்தது... ஆசியாவில் ஹிந்துகளை தவிர. இன்றும் பெண் கடவுள்களாய் வணங்கும் மிக பழமையான மதம் இதுவே.}

2)மிக முக்கியமான விசயம் இதுவே

-ஏறக்குறைய 3000 வருடம் முன்னர் தெற்காசியா முழுவதும் பரவி இருந்து இந்த மக்கள் ஒரு பக்கம் காளி அம்மன் , துர்க்கை அம்மன் என்று பெண் கடவுள்கள் வழிபாடு இதற்க்கு பெயர் "சாக்தம்", இன்னொரு பக்கம் சிவன் ஆதியும் அந்தமுமாக அவரை முதற்கடவுளாக கொண்டு ஒரு வழிபாடு இது "சைவம்", இன்னொருபக்கம் விஷ்ணு அவர் தம் அவதாரமாக கொண்டு வழிபாட்டுமுறைகள் இது "வைணவம்" , இன்னொரு பக்கம் முருகன் முதல்கடவுளாக கொண்ட "கௌமாரம்" , இடையில் அனைத்துக்கும் மூலகடவுளாக கணபதி முன்னிறுத்தி ஒரு சமய வழிபட அது "காணாபத்தியம்". இது போதாதென்று சூரியனே அனைத்துக்கும் காரண கர்த்தா இந்த பூமியில் உயிர்கள் பிழைத்து வாழ, எனவே சூரியவழிபாடு அது "சௌரம்".

இப்படி 6 பெரும் பிரிவாக இந்த தேசத்தில் நின்றது இந்த மதவழிபாடுகள். (சைவம்,வைணவம்,சாக்தம்,கௌமாரம்,சௌரம்,காணாபத்தியம்.)

இந்த பிரிவும் தாங்கள் வழிபடும் முறை தான் சிறந்தது என்ற மனபான்மையும் இவர்கள் இடையே ஏறக்குறைய 2000 வருடம்முன்னர் பிரச்சனை வெடிக்கிறது. இது தான் இந்த சமயம் சந்தித்த முதல் பெரிய பிரச்சனை.

-இது தவிர அய்யனார் , கருப்பு என்று சில நூறு தேவதைகள் , வாழ்ந்து இறந்தவ நல்ல மனிதர்கள் போற்றி வழிபாடுகள்... அது போதாது என்று வீட்டு சாமி , காவல் சாமி , சித்தர்கள், ரிஷிகள் வழிபாடு என்று மிக பெரிய அளவு பிரிவுகளாக இருந்த பல்லுருவ வழிபாடு கொண்ட சமூகமாகமாக விளங்கியது... மேற்கூறிய அனைத்தும் தனி தனியே சடங்குகள் , வழிபடும் முறைகள் என்று தனிதுவம் பெறவே அதுவே பிரச்சனையை வழிவகை செய்தது.

இப்போ இதனை ஒன்றுபடுத்த வேதம் நன்கு தெளிவுபெற்ற ஆன்மீக பெரியவர்கள் களம்காண்கிறார்கள். அதாவது இந்த 6 பெரிய மத பிரிவுகளை ஒன்றினைக்க பலவழிமுறைகள் தேடி ஒன்றினைத்து ஒற்றுமையை கொண்டுவருகிறார்கள்.. (இருந்தும் மோதல்கள் இருந்தே வந்தன என்பது மிக முக்கியம். நன்கு கவனித்தால் அனைத்து இடத்திலும் இந்த புத்திசாலிதனமான இணைப்பு அப்படமாகவே தெரியும்.)

இந்த மிக பெரிய வேலையை முடிக்கவே 1000 வருடம் போராட வேண்டியதாகிட்டது இந்து சமய பெரியவர்களுக்கு. ஆதிசங்கரர்,நம்மால்வார் , அபினாவ், ஆள்வார்கள், அவ்வையார், காளிதாசர், காரைக்கால் அம்மையார், மங்கயர்கரசியர், நாயன்மார்கள் என்று அறத்தை முன்னிறுத்தி சமூகத்தை ஒன்றுபடுத்தினர். யாரும் பகை அல்லது பிரிவினையை ஆதரித்து பேசவில்லை.

இந்த 6 பெரும் பிரிவிகள் எப்படி ஒரே இந்து சமயம் ஆக்கலாம். அதுவே தவறு என்று சிலர் கூறுவர்?

இதற்க்கு இரண்டு விசயங்களை கவனத்தில் கொள்வோம். 1.ஆட்சிமுறை 2.அறம் சார்ந்து போதுக்கபட்ட பொது தத்துவம்.

மிக முக்கியம் இந்த தேசம் முழுவதும் சமய பெரியவர்கள் பயணம் செய்தனர், அப்படி செல்லும் இடங்களில் அந்த அந்த வட்டார மொழிகளை கற்று அதன் மூலமே வேதம் வாய்வழியாக போதித்தனர்.. அதாவது வாழ்வின் அறம் எது என்பதை போதித்தனர்.. காரணம் ஒற்றுமையாக, அறத்துடன் வாழ்வு இருக்கவேண்டி.

"திருவள்ளுவர் தொட்டு ஒளவை ஆரம்பித்து எல்லோருமே உயிர்களை கொண்டு உணவாக உண்பதை முழுமையாக எதிர்த்தனர். இந்தியா முழுவதுமாக இந்த பிரதிபலிப்பை எளிதில் காணலாம். இவர்கள் எல்லோரும் என்ன ஹிந்துதுவாவாதிகளா? ஏன் என்றால் வாய் வழி கற்ப்பிக்கபட்ட வேதமானது அதயே தான் கூறுகிறது. "

"பல மன்னர்கள் ஆட்சி தான். ஆனால் அனைவரும் நன்கு கவனித்தால் பொருளாதார விதி ஒரே போல் இருக்கும். அதாவது வரிவசூல் ஆரம்பித்து, நாட்டை நடத்தி செல்வது வரை அனைவரும் பொதுவாக கொண்ட விதி அர்த்தசாஸ்திரம் கூறியுள்ள வழிமுறையின் பிரதிபலிப்பு தெரியும்."

{குறிப்பு: அர்த்தசாஸ்திரம் கட்டாயம் அனைவரும் ஒருமுறையாது படிக்கவும். ஏன் என்றால் நாம் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார கொள்கையை பின்பற்றுவதாக சிலர் பேசுவது எனக்கு உடன்பாடு இல்லை. சர்த்தசாஸ்திரம் தான் உலகத்திற்க்கு ஆட்சி அதிகாரம் , வரிவசூல் , ஏற்றுமதி இறாக்குமதி என்று அனைத்தையும் எப்படி கையாளவேண்டும் என்று தெளிவுபத்துய தெளிவான முதல் நூல். ஆனால் அந்த அனைத்து முறையும் எங்கள் மூதாதையர் வாய்வழியாக கொடுத்து சென்ற அறிவு. அதை எழுத்தாக எழுதி தெளிவுபடுத்தியவர் தான் கௌடிலியர் என்ற சாணக்கியர். ஆகவே இந்தியாவுக்கு ஆங்கிலயர் வந்து வரி,சட்ட விவரங்களை கற்று கொடுக்கவில்லை. அதற்க்கு முன்னரே உலகத்திற்க்கு இந்தியர் கற்றுகொத்திருந்தோம்.}

" இறுதியாக மிக பெரிய பிரச்சனை முடிவுக்கு வந்தது.. அது 6சமய பிரிவின் ஒற்றுமை. இன்று நாம் காணும் இந்து மத வடிவம் பெற்றது இப்படியே". இரண்டாவது பிரச்சனை முளாய்த்தது.

----------------------------------------------

-அடுத்த பிரச்சனை , அது ஹிந்து மததிற்க்கே இன்றுவரை கலங்கம் ஏற்படுத்தியது. அது ஜாதிய ஏற்றதாழ்வுகள். அடுத்த 1000 ஆண்டுகளாக இதனுடன் போரட்டத்தை தொடங்கி வைத்தார்கள் ஸ்ரீ ராமானுசர் போன்ற மகான்கள்.

இந்து சமய பெரியவர்கள் கூறும் விளக்கம் இதுவே.

ஆரம்பகாலகட்டத்தில் இந்து சமயத்தில் இருக்கும் ஜாதிய உயர்வு தாழ்வு பிரச்சனை எழவில்லை கிபி 800 களில் தான் இந்த பிரச்சனை உருவாகிறது.

வர்ண சாஸ்திரம் சொல்லும் பிராமணர் , சத்திரியர் , வைசியர் , சூத்திரர் என்பது பிறப்பால் வருவது கிடையாது கொண்ட வாழ்க்கை முறையால் வருவது. அந்த தெளிவு இருந்ததால் தால் ஒரு வேடர் வால்மீகி ராமயணம் எழுத முடிந்தது. மகாபாரதம் எழுதிய வேதவியாசர் யார்? ஆகா இரண்டு மிகபெரிய இதிகாசமும் பிறப்பால் பிராமணர் அல்லாது கொண்ட வாழ்க்கை முறையால் பிராமணரானவராக உயர்ந்தவரால் எழுத பட்டது. ஏன் உயர்ந்தவர்? காரணம் அறிவு சார் விசயமே. பிறப்பு அல்ல. குணமே முக்கியம்.. பிராமணருக்கு பிறந்தான் பிராமணர் என்பது ஒரு தவறு. ஆனால் வாழ்வுமுறையில் அவர் அப்படி ஆவார் என்றால் ஏற்புடையது.

இது பின்னால் எப்படி பிரச்சனை ஆகிவிட்டது என்றால்- அரசன் தன் மகனை அரசன் ஆக்க, கணக்குபிள்ளாய் தன் மகனயே கணக்குபிள்ளை ஆக்க போய் ஜாதியாக உருவாகி அது மனிதனை மனிதன் மதிக்கும் பக்குவம் போய் அறம் தாழ்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகம் ஒடுக்கபட்டனர். அது முழுக்க சமூகத்தின் தவறு தானே ஒழிய ஹிந்து மதத்தின் தவறு அல்ல. அதை திருத்தவேண்டி முன்வந்தனர் பெரியவர்கள். அதில் முதலானவர் ராமானுசர்.

{ஏன் வள்ளுவன், ஒளவை போன்ற மகா பெரியவர்கள் கூட ஜாதிய பிரச்சனை தவறு என்று கண்டிக்கவில்லை? காரணம் அப்போது அந்த பிரச்சனை இல்லை. }

இது தான் இரண்டாவது பிரச்சனை, இதை தீர்க்கும் காலத்தில் நாம் இருக்கிறோம்.

------------------------------

மூன்றாவது பிரச்சனை இடையில் வந்து விட்டது - "கணக்கு போட்டு மதம் மாற்றும் கூட்டம்".....

நீங்கள் தமிழகத்தை தாண்டாத நபர் என்றால் இதன் கொடுமை புரிவது கடினம். ஆந்திராவை தாண்டிவிட்டால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல் ஒரு ஒரு பழமையான கோவிலை உங்களால் பார்க்க கடினம். அனைத்தும் இடிக்கபட்டு அதில் இருந்த செல்வம் கொள்ளை அடிக்கபட்டு முழுமையாக இந்துமதம் கிபி1000களில் தாக்குதளுக்கு உள்ளானது பாரசீக மன்னர்கள் படையெடுப்பால்.

{"குறிப்பு : கஜினி 17 முறை படையெடுத்து, ஒவ்வொரு முறையும் வெற்றிகரமாக கொள்ளை அடித்துவிட்டு சென்றார் என்பது தான் உண்மை. அவர் நாடுபிடிக்க வரவில்லை, கொள்ளை அடிக்க வந்தார். அந்த அளவு செல்வம் கொட்டிகிடந்தது ஹிந்து கோவில்களில். நம்ம வரலாறு புத்தகம் வேண்டுமானால் அவரை வீராதி வீரராக காட்டலாம். ஆனால் அவர் தன் அரசுக்கு பொருளாதாரம் தேடி ஊர் ஊராக கொள்ளை அடிக்க சென்றார் என்பது தான் நிஜம். சோமநாதர் ஆலையத்தில் இருந்து மட்டும் ஒரு முறை 300 டன் தங்கத்தை எடுத்து சென்றதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அப்போ 17முறை எவ்வளவு கோவில்கள் சூரைஆடி இருப்பார்? மன்னர் பிரித்திவி ராஜ்விடம் தோல்வி கண்ட கோரி முகமதுக்கு மன்னிப்பு வழங்க போய் வந்த வினை இது. அதற்க்கு முன்னர் கஜினி மொகமது ஒரு முக்கியமான மன்னரை நேரடியாக சந்திக்காமல் அவர் எல்லையை தொடாமல் தவித்ததால் பிழைத்தான். இல்லை கஜினி மொகமத் இன்று வரலாற்றில் இருந்து இருக்கவே முடியாது. ஏன் என்றால் அந்த ஹிந்து மன்னர் படையும் அவர் வீரமும் உலகம் உலகம் அறிந்தது. அவர் முதலாம் ராஜ ராஜ சோழன். ராஜ ராஜ சோழன் படை பலமும் கஜினி படைபலமும் கொஞ்சம் ஒப்பிட்டு பார்க்கவும். ராஜ ராஜ சோழன் படையில் உள்ள யானைகளை அனுப்பிவைத்தாலே கஜினி மொகமது மொத்த படையும் காலி. }

அடுத்த 15ஆம் நூற்றாண்டில் முழுமையாக ஆரம்பித்த மாற்று மத ஆதிக்க சோதனை ஏறகுறைய 600 வருடங்கள் நீடித்தது(முகாலாயர் , ஆங்கிலேயர்).

ஏன் என்றால் ஹிந்துகள் வரலாற்றில் முன்னரே 6 கடவுள்களை ஏற்று கொண்டனர். அதுபோக சில நூறு தேவதைகள்.. இப்போ இன்னொன்று ஏசு , அல்லா என்று வணங்குவதில் அவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் முற்றிலும் எல்லா கடவுள்களையும் விட்டுவிட்டு வணங்குவதில் தான் இஷ்டம் இல்லை. எதாவது அந்த கடவுள்களும் இந்த கலாச்சாரத்தில் ஒன்று இணைவதில் இவர்களுக்கு பிரச்சனை இல்லை, அவர்களுக்கு தான் பிரச்சனை.

பலர் மதம் மாற்றம் செய்யபட்டாலும் தொடந்து ஹிந்து கலாச்சாரத்திலேயே இருந்து வந்தனர். அதாவது பெயர் இஸ்லாமியராக , வழிபடும் முறை இஸ்லாமியராக , குரான் ஓதுவது என்று இருந்தாலும் ஹிந்து மத கடவுள்களையும் வணங்கியே வந்தனர். ஏன் என்றால் அது தானே 3000 வருட கலாச்சாரம்.

இதனால் தான் முன்னால் நீதிபதி M. C. Chagla (Mahommedali Currim Chagla) கூறினார் "நான் மதத்தால் முஸ்லீமாக இருக்கலாம். ஆனால் என் கலாச்சாரத்தால் நான் ஒரு ஹிந்து".

பெரும் இழப்பை சந்தித்தும் நீடித்து நின்றது ஹிந்து மதம். ஏன் என்றால் இது தான் இத நாட்டின் கலாச்சாரம்.

----------------------------------

இப்போ 2017... 100% ஹிந்துகள் இருந்து பாகிஸ்தான் இழந்து 1947ல் 84% ஹிந்து தேசமாக சுருங்கியது... இது இன்று 79% ஆக குறைய வேதனை கொண்டனர் சமய பெரியவர்கள்.. இதனால் இருமுக்கிய பொறுப்பை செய்ய விரும்பினர்

1.மதம் மாற்றுவதை தடுப்பது 2.ஜாதியை ஒழித்து இந்துகளாய் மீண்டும் ஒன்றுபடுத்துவது... அதுவே இனி இந்த தேசத்தின் பெருமையை கட்டி காட்கும் வழி என்று எண்ணினர் வரலாறும், சமய அறிவும் கொண்ட பெரியவர்கள். இது என்ன தவறு?

{மதம் மாறுவதை யாரும் தடுக்க கூறவில்லை. அது தனி நபர் விருப்பம். கணக்கு போட்டு காரியமாக மதம் மாற்றும் கூட்டத்தை தடுக்க கூறினர்.}

ஆக ஹிந்து - ஹிந்துதுவா எது?

"ஹிந்து என்பது என் நாட்டு கலாச்சாரம்; ஹிந்துதுவா என்பது அந்த கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டி சமய பெரியவர்களால் பலகாலமாக எடுத்துவைக்க்பட்ட சமூக முயற்ச்சி"..

இது தான் எனக்கு தெரிந்த விளக்கம். .

ஆனால் இங்கே மொழி முன்னிருத்தபடுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

அது பெரியார் ஆரம்பித்து வைத்த பிரிவினை.. அவர் திராவிட பிரிவினை பேசினார் இன்று மொழி பிரிவினை தூண்டபடுகிறது.

மதம் ஒன்றுபடகூடாது என்றால் மொழி வச்சு பிரிவினை செய்வது தான் தந்திரம். வேறு ஒன்றும் சொல்ல இல்லை. திருவள்ளுவனும் , அவ்வையும் தூக்கிபிடிக்காத மொழி பிரிவினையை திட்டமிட்டு சிலர் தூக்கிபிடிப்பது காரணம் மதம் ஒன்றுபட்டால் இந்த தேசம் வழுபெற்றுவிடும் என்பது ஆகும்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா" அர்த்தம் நன்கு உணர்ந்தால் இது புரியும். பிரிவினை பேசும் கூட்டம் யாரும் அதிகம் வரலாறு பேச மறுப்பர் ஏன் என்றால் அது அவர்களை ஹிந்துகளாக நிறுத்தும் என்ற பயம்.

பின்ன ஏன் செய்திதாள்கள் தகவல்கள் ஹிந்துதுவாவை தவறாக சித்தரிக்கின்றன?

என் பத்திரிக்கை நண்பர் ஒருவர் டெல்லி நேரு யுனிவர்சிட்டி வளாகத்தில் சந்தித்தேன் அவர் பேசிகொண்டிருக்கும் போது ஒன்றை தெளிவாக கூறினார்

"தமிழகத்தில் திருமாவளவன் கட்சி, கம்முனிஸ்ட் இருவரும் கட்சிகளும் அவர் கட்சி ஆட்களுக்கு இடும் ஆனை இதுவே

1.பத்திரிக்கை துறை 2.சினிமா துறை 3.நீதி துறை இந்த மூன்றில் கட்சி ஆட்களை சேர்ப்பதும் அது கொண்டு சில காரியங்களை செய்கிறார்கள்". எனவே அதில் நான் ஒன்றும் கூறவதற்க்கு இல்லை.

"கஜினி முகமது 17 முறை படையெடுத்து 17ஆவது முறை வெற்றி கொடி நாட்டினான் என்று வரலாறு எழுதிய அந்த ஆளை நான் தேடிகொண்டிருக்கிறேன்."

ஹிந்து = ஹிந்துதுவா.

-மாரிதாஸ்
Maridhas M ஜி பதிவு!!!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard