பேசமுடியாதவர்கள் பாடுகிறார்கள், கேட்க முடியாதவர்கள் ரசிக்கிறார்கள். பிறவிக் குருடர்கள் கண்பார்வை பெற்று ஓவியம் வரைகிறார்கள். ஊனமுற்றோருக்குக் கை, கால் முளைக்கிறது. இவை அனைத்தும் நடப்பது மருத்துவமனைகளில் அல்ல. மண்டபங்களில் பட்டால் படாடோபமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் மேடைகளில். உங்களைப் பரிபூரணப்படுத்தும் அற்புத சுகமளிக்கும் ஆன்மிக ஜெபக்கூட்டங்களில்தான் இத்தனை களேபரங்களும். சிறப்பு ஆவி அழைப்புப் பொதுக்கூட்டங்கள், எழுப்புதல் கூட்டங்கள், சொஸ்த சபைகள், யேசு அழைக்கிறார், யேசு விடுவிக்கிறார், பரிசுத்த ஆவியின் தூய எழுப்புதல் கூட்டங்கள் என்று விதவிதமான பெயர்களில் அப்பாவி மக்களை மதிமயக்கி காசுகளைக் கொள்ளையடிக்கும், மதச்சாயத்தில் முக்கி எடுக்கப்பட்ட மல்டி லெவல் மார்கெட்டிங் மாயைகளை கொஞ்சம் விரிவாகவும் இதை நடத்தும் பிரசங்கிகளின் வருமானத்தையும் இன்னபிற வசதிகளையும் தெரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.
அறிவுச்சலவை செய்யப்பட்ட பாவிகளே இங்கே வாருங்கள்!
நோயில்லாத மனிதனும்,கவலைகள் இல்லாத மனிதனும் இந்த உலகில் நிச்சயம் இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் நிலைக்குத் தகுந்தாற்போல் கவலைகளும் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதையே விற்கப்படும் பொருளாக மாற்றி தங்களின் மல்டி லெவல் மார்கெட்டிங்கிற்கு விபரீத கனம் ஏற்றி அப்பாவிகளின் உழைப்பையும் சேமிப்பையும் அவர்களின் ஒப்புதலோடு கொள்ளையடிப்பதற்கு ஒரு திட்டம் வகுக்கப்பட்டு, அவை கார்ப்பரேட் கலர் ஏற்றப்பட்டு, அப்பாவி மக்கள்முன் காட்சிக்கு வைக்கப்படுகிறது. அதன் வண்ணங்களிலும் அதன் விற்பனை உத்திகளிலும் மனதைப் பறிகொடுப்பவன் பின்னர் தன் சொத்து, மனைவி, மகள் ஆகியவற்றையும் தன் ஆதார சேமிப்பையும் இறுதியாக ஆன்மாவையுமே இழக்கிறான். இப்படி ஒரு சாமனிய மனிதன் ஏமாற, மனோதத்துவ ரீதியாக மனிதர்கள் திட்டமிட்டு குற்ற உணர்ச்சியில் திளைத்து மாசோக்கியர்களாக மாறி அதில் இன்பமும் கண்டு சுயம் இழந்து அற்ப மானுடனாகவும், அவர்களால் பாவிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களை இலக்காக கொண்டு கூட்டப்படும் இந்த வகைத் திட்டமிடப்பட்ட ஆபாச, மோசடிக் கூட்டங்கள், நிச்சயம் அதை நடத்துபவர்களை பல கோடிகளுக்கு அதிபர்களாக்கி இருக்கின்றன. அவர்களுக்குத் தேவை குற்ற உணர்ச்சியும் நோய்மையும் நிரம்பிய பலியாடுகள்; எனவேதான் அவர்கள் தங்களுக்கு வருமானத்தை வாரிக் கொடுக்கும் எஜமானர்களை பாவிகளே இங்கே வாருங்கள் என்கிறார்கள். பணத்துடன் பலியாடுகள் வரிசையாகவும் கூட்டமாகவும் இந்த நவீன மோஸ்தர் பொன்ஸீக்கள் முன் மாலையும் கழுத்துமாக நிற்கின்றன.
வியாபார உத்திகள்
1. ரெஃபரல் மார்கெட்டிங்
இந்த உத்தியில் ஏதோ ஒரு சகோதரரோ, சகோதரியோ உங்களிடம் வந்து, யதேச்சையாகப் பேசுவது போல பிரசங்கியின் ஆண்மை, வலிமைகளைப் பற்றியும் தாங்கள் மீள முடியாத பிரச்சினையிலும் நோயிலும் இருந்ததாகவும், அந்த X அல்லது XX அல்லது XXX அவர்களுடைய ஜப வலிமையால் தங்கள் பிரச்சினை எப்படி இன்ஸ்டண்ட் முறையில் மறைந்தது என்பதையும் விளக்குவார். கல்லும் கரையும் அந்த உருக்கமான குரலிலும், அந்த அக்கறையிலும் உங்களின் அறிவு திரையிடப்பட்டு மறைக்கப்படும். அதை அவர் சொல்வது உங்கள் மீதான அக்கறையினாலும் அன்பினாலுமே அன்றி அந்த பிரசங்கியை மறைமுகமாக மார்கெட்டிங் செய்வதற்காக அல்ல என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாக உங்களுக்கு “விளங்க” வைக்கப்படும்.
2. செய்தி, ஊடகக் கட்டுரை உத்தி
அனைவரும் படிக்கும் நாளிதழ்கள், வார இதழ்களில் வரும் கோகோ கோலா, மெக்டவல் சோடா, பான் பராக் வகை விளம்பரங்கள் நேரடியானவை. இன்ன நோக்கத்திற்காக செய்கிறோம் என அறிவித்துவிட்டு செய்வது. அதற்கு விளம்பரம் என்று பெயர். கருணாநிதி ஊழல் செய்தாரா?, இந்தியாவில் ஏழைகள் இருக்கிறார்களா? மன்மோகன் ஆச்சர்யம்! என்பதெல்லாம் செய்தி வகையைச் சேர்ந்தவை. இந்தியாவின் எல்லாப் பெரிய மோசடிகளிலும் இத்தாலிய சோனியா ஆதாயம் அடைந்திருக்கலாம் என்பது ஊகம் போல சொல்லப்படும் உண்மை செய்தி. திறமையும், செயல்திறனும் இல்லாத மன்மோகன் அரசு ஆட்சியில் நீடிக்கத் தார்மிக உரிமை உள்ளதா என்பன போன்றதெல்லாம் தலையங்கம் (அ) எடிட்டோரியல் வகையில் அடங்கும். இவை எவற்றுள்ளும் இல்லாத ஒரு வகை இருக்கிறது; அதற்குப் பெயர் அட்வர்ட்டோரியல் என்ற பணம் பெற்றுக்கொண்டு செய்தி போலவே போடப்படும் சுய விளம்பரங்களும், பொய்களும். ”ராகுல் காந்தி ஏழை வீட்டில் சாப்பிட்டார்”. ’மண் சட்டி சுமந்தார்’ என்பவையெல்லாம் இந்த வகையில் சேரும். அது போன்ற அட்விட்டோரியலாக, பிரசங்கியின் பெருமைகள்(?!) ஊருக்கு உரத்துச் சொல்லப்படும். இப்படிச் செய்திகளைத் திரிப்பதற்கென்றே தனியாக மீடியா செல்லும், கத்தோலிக்கப் பெருமத நிறுவனங்களால் நடத்தப்படும் நாளிதழ்கள், வார இதழ்கள், தொலைகாட்சி ஊடகங்களும் மிக அதிகமாக உள்ளன.
3. திரை நட்சத்திரங்கள் வருகை
திரைத்துறையிலும் அண்டர் கிரவுண்ட் உலகத்திலும் தொடர்புடைய நட்சத்திரங்கள், மின்னும் தாரகைகள். திரைப்படக் கவர்ச்சியினால் பெற்ற புகழை ஆயுதமாகவும் முதலீடாகவும் கொண்ட நட்சத்திரங்களை அழைப்பதன் மூலம் பாமர மனங்களை வீழத்த இந்த உத்தி பயன்படுத்தப்படும். நக்மாக்கள், நமீதாக்கள் வரும் சுவிஷேசங்கள் இந்த வகையானதுதான்.
4. P2P எனப்படும் நேரடி விளம்பர உத்தி
தங்களின் மதிப்புக்குள்ளான மதபீடத்தில் உள்ளவர்களை வைத்து செய்யப்படும் விளம்பரங்கள். பாஸ்டர்கள், ஜெப ஊழியர்கள் மூலம் செய்யப்படும் விளம்பரங்கள். வால்போஸ்டர் மூலம் ,ஃப்லெக்ஸ் பேனர் மூலம், நோட்டீஸ் மூலம் செய்யப்படும் விளம்பரங்களின் உத்தி பற்றி குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை.
5. ஒப்புதல் வாக்குமூலங்கள்
பிரசங்க மேடையிலேயே அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள், நேரடிக் காட்சிகள் மூலம் கவர்தல்.
இப்படியெல்லாம் சகலவித வியாபார நுணுக்கங்களோடு செய்யப்படும் இந்த வியாபாரத்தின் லாபமாக எப்படியும் ஒரு 10 கோடியை சம்பாதித்து இருப்பார்களா என்று, ஒரு அப்பாவி நண்பரிடம் கேட்டேன். அவர் சொல்லிய கணக்குகள் அனைத்தையும் சேர்த்தால் மொத்த தமிழக பட்ஜெட்டுக்கு அருகில் வந்து விடுகிறது.
ஒரு சோற்றுப் பதமாக சிலரைப் பற்றிப் பார்க்கலாம்…
டி.ஜி.எஸ்.தினகரன்
மாபெரும் மோசடியாக, திறமையாக வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய வியாபார உத்தியுடன் கிறிஸ்துவ மதத்தின் பெயரால் பல கள்ளப் பிரசங்கிகள் தோன்றி, ”எங்கள் ஜெபத்தால் முடவன் நடப்பான், குருடன் பார்ப்பான், செவிடன் கேட்பான், ஊமை பேசுவான்,” என்று ஏராளமான பொய்களைச் சொல்லி, அப்பாவி மக்களின் மூளையைக் கெடுத்து, அவர்களை மனநோயாளிகளாக்கி, அவர்களிடமுள்ள பணத்தையும், பொருளையும் கோடிகோடியாகக் கொள்ளையடித்து வருகிறார்கள். இந்தக் கொள்ளைக்காரர்களில் தமிழ்நாட்டில் பிரபலமான கொள்ளையர்களாக இருந்து, பல்லாயிரம் கோடிப் பணம் சம்பாதித்து, இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பவர்கள் டி.ஜி.எஸ். தினகரன், அவர் மகன் பால் தினகரன்.
1935-இல் சாதாரண குடும்பத்தில் சுரண்டையில் பிறந்த தினகரன், 1972-இல் வங்கி கிளர்க் வேலையை உதறிவிட்டு அதை விடப் பல மடங்கு லாபம் தரக்கூடிய “யேசு அழைக்கிறார்!” என்ற பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தத் தொடங்குகிறார் எனக் குறிக்கப்பட்டாலும் 1980-க்குப் பிறகே இவர் தனியான ஜெப நிறுவனத்தை துவங்குகிறார். அதன் மூலம் அனைவருக்குமான ஜெபக் கூட்டங்களை நடத்தத் தலைப்படும் தினகரனுக்கு அயல்நாட்டு நிதி வர வர, 1984-லிருந்து தொடர்ந்து வாங்கிய குறைந்த விலை நிலத்தில் காருண்யா கல்வி அறக்கட்டளை சார்பாக பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டு, அதிலும் மிக அதிகமான பணம் வெளுக்கத் தொடங்கிய பிறகு, தமிழகம் முழுக்க பரவலாக நிலம் வாங்கிக் குவிக்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு காருண்யா கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறிய பிறகு, அவர்களின் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. 2008-இல் தீவிர நோய்க்கு ஆட்பட்டு இறக்கும்போது அவரின் சொத்து மதிப்பு சுமாராக 15,000 கோடி ருபாய்கள்.
பால் தினகரனின் (டி.ஜி.எஸ்.தினகரனின் மகன்) சாம்ராஜ்யம்
மேலாண்மைக் கல்வியில் பட்டம் பெற்றுவர் பால் தினகரன். தன் தந்தையின் வியாபாரத்தில் புதிய மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்தி மேலும் அதன் வீச்சைப் பிரபலப்படுத்தவும் அதன் மூலமாக மேலும் பணம், நிலம், அதிகாரம் இவற்றைப் பெறவும், தொடர்ந்து தான் பெற்ற வியாபாரக் கல்வியின் நுணுக்கங்களைச் செயல்படுத்துகிறார். ரெயின்போ டிவி 8 மாநில மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. மாதம் 1800-க்கும் மேற்பட்ட விளம்பரதாரர்கள் நிகழ்ச்சியை வழங்குகிறது. 750 ஏக்கருக்கு மேல் கோவையில் காருண்யா கல்வி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்கள். 5000 கோடிக்கு மேல் சொத்து மதிப்புள்ள காருண்யா கல்வி அறக்கட்டளையின் அதிபர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக, தொடர்ந்து இருமுறை பதவி வகித்தவர். அந்தப் பதவியின் மூலம் ஏகப்பட்ட கிறித்தவர்களை வேலையில் அமர்த்த மறைமுகமாக லாபி செய்து வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. டாக்டர் பட்டம் போட்டுக்கொள்ளும் தினகரனுக்கு அந்தப் பட்டத்தை வழங்கியது ஜெர்மனியைச் சேர்ந்த ‘மார நாதா ஜெப சபை’ என்ற மத நிறுவனம். மத்திய அரசின் சிறுபான்மையின அமைச்சகத்தின் கண்காணிப்புக் குழுவில் இவர் இருக்கிறார். ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் ஆட்சி அதிகாரக் குழுவிலும் இவர் இடம்பெற்றிருக்கிறார். இவை அனைத்தும் மத்திய அரசின் கல்வித் துறையால் நேரடியாக நியமிக்கப்படுவது.
மத்திய காங்கிரஸ் அரசில் இவரின் செல்வாக்கு எந்தளவுக்கு உள்ளது என்றால், மத்திய அமைச்சர் பல்லா, இவரிடம் நாடாளுமன்றம் நன்றாக நடக்க நீங்கள் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் என்கிறார். நிதி மோசடியில் ஈடுபட்டு கோர்ட்டில் பொய்ப் பிரமாண பத்திரம் கொடுத்த வசந்தி ஸ்டான்லி 2010-இல் எழுதிய கடிதத்தில் அவரின் தலைவரின் தேர்தல் வெற்றிக்குப் பிரார்த்தித்துக் கொள்ளச் சொல்கிறார். காங்கிரஸின் ராம்சுப்பு எம்.பியும் சில கோரிக்கைகளை பிரார்த்தனைகளாக்க முன்வைக்கிறார்.
மோசடி நபர்களிடம் ஏமாறவும், பணம், மானம் மரியாதையை இழக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் இந்த நபர்கள் தன் அலுவலக லெட்டர்பேடில் மோசடியான பிரசங்கிக்கு அங்கீகாரம் செய்து அனுப்பும் கடிதத்தை அவர் பெருமையாக வெளியிட்டு அதன்மூலம் தன் வணிகச் சந்தையைப் பெரிதாக்கிக் கொள்கிறார். தனக்கு இவர்களுடன் அந்தரங்கமாகத் தொடர்பு உண்டு என்று சொல்லி அவர்களின் மூலம் அரசின் திட்டங்களில் ஆதிக்கம் செலுத்த தன் சர்வதேசத் தொடர்புகளை இவர் உபயோகிப்பார் என நம்ப இடமிருக்கிறது. வின்செண்ட் H பல்லா-, சிறுபான்மையின நலத்துறை அமைச்சர், தன்னுடைய 23-ஆம் தேதியிட்ட 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதக் கடிதத்தில் நாடாளுமன்றம் அமைதியாக நடக்க உறுப்பினர்களுடனான பிரார்த்தனையில் வேண்டிக்கொண்டு, அந்த வேண்டுதலால் பட்ஜெட் கூட்டத்தொடர் அமைதியாக நடந்ததற்கு அவருக்கு நன்றி தெரிவிக்கிறார். மேலும் இது போன்ற கூட்டங்களை நடத்தி நாடு சிறக்க அவர் வழிசெய்ய வேண்டுமாம். இந்தக் கேவலமான கடிதத்திற்காகவே அவர் மீது உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பலாம். நான் கேள்வி கேட்பது அவரின் மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளைப் பற்றியோ, பால் தினகரனைப் போன்ற கள்ளப் பிரசங்கிகளை நம்பி மோசம் போவதைப் பற்றியோ அல்ல. தன்னை மதச்சார்பற்றது (இந்துமதச் சார்பற்றது) என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படும் சோனியா காங்கிரஸ் அரசு– அது தரும் பதவியை அனுபவித்துக்கொண்டு அதன் லெட்டர்ஹெட்டில் போலிப் பிரசங்கிகளை அங்கீகரித்துக் கடிதம் எழுதுவதில் உள்ள தார்மிக நெறியைப் பற்றியே.
//////////////Jesus is the real savior//////////
மண்ணாங்கட்டி! ////
This is ur mariyathai. OK I did not mention any hard sentence like this to indicate ur god or u. This is the reality difference between christian and other religion. god bless u my child honest man.
//நம்ம தமிழ்நாட்டில்
திருநெல்வேலியில் திருச்சபை
(=Church ) கட்டும்பணியில் ஈடுபட்டிருந்த
எடிசன் (40), ஜஸ்டின் (50), மைகேல்
ஜஸ்டின் (30) ஆகிய 3 பேரும்
புதன்கிழமை (27-5-2015) அன்று
திருச்சபையின் கூரை (=roof )
இடிந்து விழுந்து பரிதாபமாக
இறந்தனர். தனது உன்னத ரட்சகருக்கு
(=Savior ) ஆலயம் கட்டும் நற்பணியில் அந்த
ஏழை கூலி தொழிலாளிகள்
ஈடுபட்டுள்ளனர்.. அவர்களை அந்த
இறப்பிலிருந்து காப்பாற்ற உங்க
கடவுளுக்கு துப்பில்லை.
வக்கில்லை. ஆனால் இவர் அவருதான்
எங்களுக்கு real savior என்கிறார்.
(குறிப்பு:- மேற்படி மூவரும்
இந்துக்கள் அல்ல. மூவருமே
கிறிஸ்தவர்கள் ஆவார்கள். ஏனென்றால்
அந்த ஓரவஞ்சனை பிடித்த கடவுள்
இந்துக்கள் என்றால் காபாற்றாமல்கூட
விட்டுவிடுவான் என்று இவர்
(=பிரியா ராணி) சொன்னாலும்
சொல்லுவார் )//
OK accepted. Then wat happened to kedarnath people. why Siva didn’t resume them. pls think
//அது போல இந்த sister
(=சகோதரி) யும் பயந்து எங்காவது
போய் ஒளிந்து கொள்ளமாட்டார் என்று
நிச்சயமாக நம்புகிறேன்.///
I will not hide any where. I will not shame to tell any historical truth.
//ஒரு சில அப்பங்களும் சில மீன்
துண்டுகளையும் வைத்து சுமார்
5000 மனிதர்களுக்கு
உணவளித்தபின்னரும் கூட கூடை
கூடையாக அப்பங்களும் மீன்
துண்டுகளும் மீந்து போயின என்று
பைபிளில் கூறினால் நாம்
எல்லாரும் நம்பி ஆகவேண்டும். ஆனால்
ஹனுமான் ஒரு குன்றை
தூக்கினான் என்று கூறினால் அதை
நம்ப கூடாதாம்.//
So faith is only for u people not for us? Ithu enna nyayam. Let be in ur faith and we will be in our faith. pls don’t disturb our faith and I will not too disturb ur faith.
The reply from krihna kumar is very reality. I like the reply. If u people will not panic our faith, we don’t need to argue this. well done krishna kumar let ur faith should be succeful.
//1. உங்கள் பைபிள் உலகம் தட்டை
என்கிறது. பூமி உருண்டை எனும்
கோபர்நிகஸ் என்ற விஞ்ஞானியின்
கருத்தை ஆதரித்து பேசிய புருனே
(1548-1660) என்பவர் ஐரோப்பாவில்
””””பாதிரிகளால்”” உயிரோடு
எரிக்கபட்டார். இப்போது சொல்லுங்கள்
பூமி உருண்டையா தட்டையா? நீங்கள்
ஆதரிப்பது விஞானியையா அல்லது
பாதிரியையா?//
Where it is mentioned exactly. If people (paathiriyar) done the mistakes in the name of god means they will get punished by god. That people done wrong I admitted
//2. இயேசு தனது சீடர்களில் சிலர்
உயிருடன் இருக்கும்போதே
“‘பூமிக்கு மீண்டும் வருவதாக”
சொன்னார், (ஆதாரம் Mathew 16:28)
ஆனால் 2015 வருடங்கள் கடந்துவிட்டன.
இன்னும் வந்தபாடில்லை. ஏன் அவர் வந்த
பஸ் break down ஆகிவிட்டதா?
மந்திரவாதி “”கீரிக்கும் பாம்புக்கும்
சண்டை விட போகிறேன்” என்று
கூறி கடைசி வரை விடாதது போல
“வருகிறார் வருகிறார்” என்று
எத்தனை நாளைக்கு சொல்லி
ஏமாற்றி கொண்டிருப்பீர்கள்?//
Here where Jesus mentioned about seedargal. He is pointing ‘Inge iruppavarul silar’ the meaning of that one is who have faith in Jesus. that people still in earth only.
///3. Elisha வின் bald head ஐ கேலி செய்த 42
சிறு குழந்தைகளை உங்க பைபிள்
கடவுள் அனுப்பிய கரடிகள் கொன்றன.
(ஆதாரம் 2 kings 2 : 23-24) இப்படி ஒரு
கடவுள் நமக்கு தேவையா?////
Pala perai poril konta krishnar namakku thevaiya. That is thrmam means this is also tharmam
//4. Santa Claus : இவரது முழு பெயர்:–
“”செயின்ட் நிக்கோலஸ் of myra “”
என்பதாகும். 270-343ல் Lycia வில்
வாழ்ந்தவர். இவர் பறக்கும் (?!?!) மான்
இழுக்கும் ஓர் sleigh யில் உலகம்
பூராவும் சுற்றிவந்தாராம்! ஒரே
இரவில் பல லட்சம் வீடுகளுக்கு விசிட்
அடித்து கதவு ஜன்னல் எதையும்
திறக்காமலேயே குழந்தைகளுக்கு
பரிசு பொருட்களை வைத்துவிட்டு
வந்துவிடுவாராம். (இதையெல்லாம்
நீங்கள் அப்படியே நம்புவீர்கள். ஆனால்
ஒரு அணில் ஆற்றில் மூழ்கி பின்னர்
மணலில் உருண்டு அதன் உடலில் ஒட்டிய
அந்த கொஞ்சம் மணலை கொடுத்து
அணை கட்டுவதற்கு தன்னால் ஆன்
உதவியை செய்தது என்று சொன்னால்
அதை உம்மால் நம்பமுடியவில்லை.
ஜீரணிக்கமுடியவில்லை.
அப்படிதானே!)//
Where this is in bible.
//5. Bible God made the sun STAND STILL to
allow the Jews more time to slaughter their
neighbours (ஆதாரம் Joshua 10:12-14) அந்த
பைபிள் கடவுளுக்கு சூரியன்
(பூமியை பொருத்தவரை) நகராமல்
ஒரே இடத்தில் உள்ளது என்ற விஷயம்
தெரியுமா தெரியாதா? அப்புறம்
எப்படி சூரியனை ”’அசையாமல் நிற்க”’
வைத்தார் என்று கூறுவது?//
What is the meaning of ‘stand still’ . It means it will be in working condition. so wat is the issue here
//6. When the Bible God wanted to kill Moses.
Moses’ wife throw the fresh FORESKIN of the
infant son at the Bible God’s feet. (ஆதாரம்
வேண்டுமா” இதோ தருகிறேன். Exodus
4:24-26)///
To break this only due to Adam, Jesus came here and rescue us.
If u have faith u accept it otherwise please leave this