ஏசு மரணத்திற்கு 40 வருடம் பின்பு மாற்கு சுவி கதை வரையப்பட்ட பின்பு, அதை வைத்து மத்தேயு சுவி( 80- 90 ); லூக்கா சுவி 85- 95லும் உருவானது.ஏசு பிறப்பு கதைகளில் இருவர் கூறுவது
மத்தேயு
லூக்கா
பெரிய ஏரோது அரசனாய் இருந்தபோதுபெதலஹேமில் வாழ்ந்த தச்சரான யாக்கோபு மகன் ஜோசப்பிற்கு ஏசு பிறந்தார்.
அன்னிய ஜோசியர்கள் நட்சத்திரம் பார்த்து யூத ராஜா பிறந்துள்ளார் என வந்தரவ்ர்கள் திரும்பி வராததால் கோபடைந்து இரண்டு வயதுக்கு கீழான எல்லா குழந்தைகளை[ii]கொன்றாராம்.
ரோம் மன்னர் அகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரிய நாட்டில் குரேனியு[iii] என்பவர் ஆளுநராய் இருந்து யூதேயாவையும் ஆண்ட போது மக்கள் தொகை கணக்கீடு நடக்க, அதற்காக கலிலேயாவின் நாசரேத்து ஊரில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப் முன்னோர் தாவீது ஊரானபெதலஹேம் செல்ல அங்கே விடுதியின்[iv] மாட்டுத் தொழுவத்தில் ஏசு பிறந்தார் எனக் கதை.
மத்தேயூ கதைப்படி பெரிய ஏரோது காலத்தில்- 2 வயதுக் குழந்தைகளை கொன்றார் என்பதால், பொமு 4ல் இவர் மரணம்; அதாவது ஏசு பொமு 6இல் பிறந்திருக்க வேண்டும்.
பெரிய ஏரோது மரணத்திற்குப் பின் நாடு பிரிக்கப்பட்டு மகன்கள் அர்க்கெலாயு[v] யூதேயா பகுதிக்கும், ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய [vi]பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அர்க்கெலாயுவை ரோம் ஆட்சி தூக்கி கிரேனுயுவை பொகா 6ல் நியமித்து ரோமின் நேரடி ஆட்சிக்கு கீழ் யூதேயாவை கொணர்ந்தது; அதன் பின்னர் வரி விதிக்க மக்கள் சொத்து அறிய சென்சஸ் வந்தது, எனில் லூக்கா கதைஏசு பொகா 7 அல்லது 8ல் பிறந்திருக்க வேண்டும்.
ரோம் ஆட்சியில் மித்ராய மதம் பரவலாய் இருந்தது, அதன் மித்ரா கடவுள் பிறந்த நாளை மறக்க வைக்க சர்ச் டிசம்பர் 25 என வைத்தது.
ஏசு பிறந்தது பொமு 6 என பெருமாலோன பைபிளியலாளர்கள் கருதுகின்ற்னர். எனவே பழைய திணிக்கப்பட்ட கிபி- கிமு தூக்கி எறிந்து பொதுக் காலம்(பொகா) எனவும், பொதுக் காலத்திற்கு முன்(பொமு) எனவும் மாற்றப்பட்டு பன்னாட்டு பல்கலைகழக வரலாற்று ஆசிரியர்களும் இப்படியே கடந்த -60 70 ஆண்டுகளாய் பயன்படுத்துகின்றனர்.