பேரறிவாளன் அப்பாவி இளைஞன். அப்போது 20 வயது இருக்கலாம். அவன் ஒரு பேட்டரி வாங்கிக் கொடுத்தான் என்பதற்காக மரண தண்டனையா? நல்ல வேளை, உச்சநீதிமன்றத்தில் தமிழன் தலைமை நீதிபதியாக வந்ததால் இவர்கள் தப்பித்தார்கள்.இந்திய சட்டங்கள் என்ன அந்த அளவுக்கு மோசமானதா?
================================
பேரறிவாளன் எல்லாம் அப்பாவி கிடையாது. அவன் திறமைசாலி தான். ஆனால், அவன் பணி பேட்டரி வாங்குவதோடு முடியவில்லை. எப்படி வெடிகுண்டு ஆடை அணிவது என்று முருகனுடன் சேர்ந்து பயிற்சி கொடுத்திருக்கிறான்.
சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு ஆஃப்கன் சாயபு பிரஷர் குக்கர் குண்டு வெடித்தான். தெய்வாதீனமாக அங்கே அப்பாவிகள் உயிர் தப்பினர்.சிறு காயத்துடன்.உடனே சில மணி நேரங்களில் அவனின் பாகிஸ்தான் மனைவியை வளைகுடா நாட்டில் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இங்கே பேரறிவாளன் கதை பேட்டரியோடு முடியவில்லை. அவன் இலங்கைக்குச் சென்று பயிற்சியும் பெற்று வந்திருக்கிறான்..
நளினி சகோதரன் பாக்கியநாதன் ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸை புலிகளின் தமிழக பிரதிநிதி பேபி சுப்பிரமணியத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு குறைந்த விலைக்கு - சுமார் ரூபாய் 5000க்கு வாங்கியிருக்கிறான். நளினி குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நேரம். வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலைமை.அந்த சமயம், பிரஸ்ஸிலேயே இவர்கள் ஒரு இடத்தில் தங்கிக் கொண்டு புலிகளை ஆதரித்தும், இந்திய ராணுவத்தை அவமதித்தும் பழிச்சொல் கூறியும் சுமார் 30000 துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டிருக்கிறார்கள்.. நளினியின் மேற்பார்வையில்.
ஆகவே நளினியாகட்டும், பேரறிவாளனாகட்டும்..
இதனால் அப்பாவிகள் கிடையாது..
அவர்கள் செய்ததெல்லாம் தெரிந்தே செய்திருக்கிறார்கள்..
அந்த அளவுக்கு மூளைச்சலவை புலிகளால் செய்யப்பட்டிருக்கிறார்கள்..
நளினி , பேரறிவாளன் அப்பாவி இல்லை என்று நீனா புத்தகத்தில் எழுதியிருக்கிறது என்று சொன்னீர்கள்.அதனை எப்படி நம்புவது? நளினி, வேலூர் சிறையில் பிரியங்காவிடம் கதறி அழுத பேட்டியை நீங்கள் ஜூனியர் விகடனில் படித்திருக்கிறீர்களே?அந்த அப்பாவி பெண்ணுக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை?
===================================
முதலில் சுருக்கமாக இந்த புத்தகம் பற்றி. இது பத்தோடு ஒன்று கிடையாது.
நிறைய ஆதாரங்கள்.கொடுத்திருக்கிறார், நீனா..
நான் இலங்கை சம்மந்தமாக அடிக்கடி படிப்பது , நம்புவது டி.பி.எஸ் ஜெயராஜ்.அடுத்து ஹரிஹரன்.அடுத்து தி ஹிண்டு.இப்போது இந்த புத்தகம்.நன்கு ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டிருக்கிறது.
நீனாவுக்கு 35 வருட பத்திரிக்கை அனுபவம். ஆக, நக்கீரன் கோபால் ரேஞ்சுக்கு இந்தப் புத்தகத்தை மட்டமாக எடை போட முடியாது.
சரி..
நளினி விஷயத்துக்கு வருவோம்.
நளினி அப்பாவி கிடையாது. ராஜீவ் கொலைக்குப் பிறகு கார்த்திகேயனின் மல்லிகை பங்களாவில் விசாரணைக்கு முதல் தடவையாக நளினி போகிறார்.
அங்கே "புலிகளை தான் ஏன் ஆதரித்தேன்?" என்றும் இந்தியா- புலிகளுக்கு இழைத்த துரோகம் பற்றியும், கூடவே தமிழச்சி கற்பழிப்பு பற்றியும் விலாவரியாக ,ஆவேசமாக கார்த்திகேயனிடம் பேசியிருக்கிறார்..அவர் அசந்து விட்டதாக நீனா எழுதியிருக்கிறார்..
ஆக- நளினிக்கு தான் யாருடன் சேர்ந்து கொண்டு எந்த வேலையை எதற்காக செய்திருக்கிறோம் என்பது நன்கு தெரிந்திருக்கிறது.