உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு நெடு 1,முல் 1,பட் 67
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள்
5 செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை திரு 99
மறு இல் கற்பின் வாணுதல் கணவன் கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி 10 தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து இருள் பட பொதுளிய பராரை மராஅத்து உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் திரு 256,பெரும் 330 கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி 15 கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள் கோபத்து அன்ன தோயா பூ துகில் பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை 20 சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி தெய்வவுத்தியொடு வலம்புரி வயின் வைத்து திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் 25 மகர பகு வாய் தாழ மண்ணுறுத்து
துவர முடித்த துகள் அறும் முச்சி
பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு
உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி திரு 34
கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு
30 இணைப்புறு பிணையல் வளைஇ துணை தக திரு 200,237
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் திரு 207,குறி 119
நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்
நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை
தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் திரு 28
35 குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர் சிறு 25
வேங்கை நுண் தாது அப்பி காண்வர
வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா
கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி திரு 55
வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன்
40 சீர் திகழ் சிலம்பகம் சிலம்ப பாடி
சூர் அரமகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து மலை 315
சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள் மலை 145
பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன்
45 பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் பெரும் 457
உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க
50 பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல்
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை
ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர
55 வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா திரு 38
நிணம் தின் வாயள் துணங்கை தூங்க பெரும் 235
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர்
60 மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து
எய்யா நல் இசை செ வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு சிறு 145
நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும்
செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன்
65 நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே
செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி
வரி புனை பந்தொடு பாவை தூங்க
பொருநர் தேய்த்த போர் அரு வாயில்
70 திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து
மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் மது 429,நெடு 29
இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரை துஞ்சி வைகறை சிறு 183,பெரும் 114,மது 249
உயிர்கள் மகிழும் பொருட்டு வலமாக எழுந்து திரிதலைச் செய்யும்
பலரும் புகழும் ஞாயிறு கடலில் (எழக்)கண்டதைப் போன்று, ஒழிவு இல்லாமல் மின்னும் சேய்த்துநின்று ஒளிரும் பிரகாசமான ஒளியையுடைய, (தன்னைச்)சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய,வலிமையான திருவடிகளையும், (தான்)கோபங்கொண்டாரை அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும், 5 குற்றமற்ற கற்பினையும்,ஒளியுடைய நெற்றியினையும்,உடையவளின் கொழுநன் ஆகியவனும் - கடலில் முகந்த நிறைத்த சூல் (கொண்ட)மேகங்கள், (மின்னலாகிய)வாள் பிளந்த வானிடத்தே பெரிய துளியைச் சிதறி, முதல்மழை பொழிந்த தண்ணிய நறிய காட்டில், இருள் உண்டாகத் தழைத்த பரிய அடியையுடைய செங்கடம்பின்10 (தேர்)உருள் போலும் பூவால் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினையுடையவனும் - பெரிய மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள வானளாவிய மலையிடத்தே, சிறு சதங்கை சூழ்ந்த ஒளிரும் சிவந்த சிறிய அடியினையும், திரட்சியையுடைய காலினையும்,வளைந்து நுடங்கிய இடையினையும்,பெருமையுடைய தோளினையும், தம்பலப்பூச்சி(யின் செந்நிறத்தை) ஒத்த,சாயம் தோய்க்கப்படாத பூவேலைப்பாடமைந்த துகிலினையும், 15 பல (பொற்)காசுகளை வரிசையாக அமைத்த சில வடங்களை அணிந்த அல்குலினையும், கையால் ஒப்பனை செய்து தோற்றுவிக்கப்படாத அழகினைப் பெற்ற வனப்பையும், நாவலின் பெயர்பெற்ற (சாம்பூந்தமென்னும்)பொன்னால் செய்த ஒளிரும் அணிகலன்களையும், தொலைதூரத்தையும் கடந்து விளங்கும் குற்றம் தீர்ந்த நிறத்தினையும் (உடைய சூரர மகளிர்) - தோழியர் ஆராய்ந்த இணைந்து நெய் பூசி ஈரமான மயிரில்20 சிவந்த காலையுடைய வெட்சியின் சிறிய பூக்களை நடுவே (விடுபூவாக)இட்டு, பசிய தண்டினையுடைய குவளையின் தூய இதழ்களைக் கிள்ளி (இட்டு), தெய்வவுத்தி,வலம்புரி ஆகிய தலைக்கோலங்களை அதனதன் இடத்தில் வைத்து, திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில் சுறாவின் அங்காந்த வாயாகப்பண்ணின தலைக்கோலம் தங்கச் செய்து, 25
முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி,கரிய புறவிதழினையும் உள்ளே துய்யினையும் உடைய பூக்களையுடைய மருதின் ஒளிரும் பூங்கொத்துக்களை அதன் மேல் இட்டு, கிளையில் அழகுற்று வளரும் நீர்க்கீழ் நின்ற சிவந்த அரும்பைக் கட்டுதலுற்ற மாலையை வளைய வைத்து, (தம்மில்)ஒத்தற்குப் பொருந்த, 30 வளவிய காதில் (இட்டு)நிறைந்த பிண்டியின் ஒளிரும் தளிர் நுண்ணிய பூணையுடைய மார்பில் அசைய,திண்ணிய வயிரத்தையுடைய நறிய (சந்தனக்)கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை, மணம் நாறுகின்ற மருதம் பூவை (அப்பினால்)ஒப்பக்,கோங்கின் குவிந்த அரும்பு (ஒத்த)இளமுலையில் அப்பி,விரிந்த மலரினையுடைய35 வேங்கைப் பூவின் நுண்ணிய தாதையும் அதன்மேல் அப்பி, (மேலும்)அழகுண்டாக, விளவின் சிறிய தளிரைக் கிள்ளித் தெறித்துக்கொண்டு, ‘கோழி(யின் உருவத்தைத் தன்னிடத்தே கொண்டு) உயர்ந்த வென்று அடுகின்ற வெற்றியையுடைய கொடி வாழ்வதாக,நெடுங்காலம்',என்று வாழ்த்திப்,பலருடன் சீர்மை விளங்குகின்ற மலையிடமெல்லாம் எதிரொலிக்கப் பாடி -40
கூற்றுவனை ஒத்த பிறரால் தடுத்தற்கரிய வலிமையினையும் உடைய, காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில் ஏறி - ஐந்தாகிய வேறுபட்ட வடிவினையுடைய (முடிக்குச்)செய்யும் தொழிலெல்லாம் முற்றுப்பெற்ற முடியோடு விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள் மின்னலுக்கு மாற்றாகும் சிமிட்டலுடன் தலையில் பொலிவுபெறவும், 85 ஒளி தங்கி அசையும் வகையாக(-நன்றாக) அமைந்த பொன்னாலான மகரக்குழை தொலை தூரத்திற்கும் ஒளிரும் இயல்பினையுடைய ஒளியை உடைய திங்களைச் சூழ்ந்து நீங்காத மீன்கள் போல விளங்குவனவாய் மின்ன, குற்றம் இல்லாத நோன்புகளையுடைய தமது தவத்தொழிலை முடிப்பாருடைய நெஞ்சில் பொருந்தித் தோன்றுகின்ற ஒளி மிக்க நிறத்தையுடைய திருமுகங்களில்; 90 பெரும் இருள் (சூழ்ந்த)உலகம் குற்றமில்லாததாய் விளங்க பல ஒளிக்கீற்றுகளையும் பரப்பியது ஒரு முகம்;ஒரு முகம் (தன்பால்)அன்புசெய்தவர்கள் வாழ்த்த, (அவர்க்கு) முகனமர்ந்து இனிதாக நடந்து, (அவர்மேல் கொண்ட)காதலால் மகிழ்ந்து (வேண்டும்)வரங்களைக் கொடுத்தது;ஒரு முகம் மந்திர நியதிகளின் மரபுள்ளவற்றில் வழுவாத95 அந்தணருடைய வேள்விகளை கூர்ந்து கேட்கும்;ஒரு முகம் எஞ்சிய பொருள்களைச் (சான்றோர்)காவலுறும்படி ஆராய்ந்துணர்ந்து, திங்கள் போலத் திசைகளெல்லாவற்றையும் பொலிவுறுத்தி நிற்கும்;ஒரு முகம் கோபமுடையோரை அழித்து,செல்லுகின்ற போரில் கொன்றழித்து, வெகுளி கொண்ட நெஞ்சத்தோடு களவேள்வியைச் செய்யும்;ஒரு முகம்100 குறவரின் இளமகளாகிய,கொடி போன்ற இடையையும் மடப்பத்தையும் உடைய,வள்ளியோடே மகிழ்ச்சியைப் பொருந்திற்று; அவ்வாறாக,அந்த ஆறு முகங்களும் (தத்தம்)முறைமைகளைப் பயின்று நடத்தலால் - ஆரத்தைத் தாங்கிய அழகுடைய பெரிய மார்பிடத்தே கிடக்கின்ற சிவந்த வரிகளை வாங்கிக்கொண்ட,வலிமை மிக்க,வேலை எறிந்து, 105 வளவிய புகழ் நிறையப்பெற்று,வளைந்து நெளிந்து(உருண்டு திரண்ட) நிமிர்ந்த தோள்களில், விண்ணுலகத்திற்குச் செல்லும் முறைமையினையுடைய துறவிகட்குப் பாதுகாவலாக ஏந்தியது ஒரு கை;இடுப்பில் வைக்கப்பட்டது மற்றொரு கை; செம்மைநிறம் பெற்ற ஆடையுடைய துடையின் மேலே கிடந்தது ஒரு கை; தோட்டியைச் செலுத்தி நிற்ப ஒரு கை;இரண்டு கைகள் 110 அழகிய பெரிய கேடகத்தோடு வேற்படையையும் வலமாகச் சுற்றிநிற்ப;ஒரு கை மார்போடே விளங்கிநிற்க;ஒரு கை மாலையோடு அழகு பெற;ஒரு கை கீழ்நோக்கி நழுவி வீழும் தொடி என்ற அணிகலனோடு மேலே சுழல;ஒரு கை ஓசை இனிதாக ஒலிக்கின்ற மணியை மாறி மாறி ஒலிக்கப்பண்ண;ஒரு கை115 நீல நிறத்தையுடைய முகிலால் மிக்க மழையைப் பெய்விக்க;ஒரு கை தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்ட; அப்படியே,அந்தப் பன்னிரண்டு கையும் (ஆறு முகங்களின்)பகுதியில் பொருந்தத் தொழில்செய்து - விசும்பின் பல இசைக்கருவிகள் முழங்கவும்,திண்ணிய வயிரத்தையுடைய கொம்பு மிக்கு ஒலிப்பவும்,வெள்ளிய சங்கு முழங்கவும், 120
வலிமையை(த் தன்னிடத்து)க் கொண்ட உருமேற்றின் இடி(யைப் போன்று ஒலிக்கும்)முரசுடன் பல பீலியையுடைய மயில் வெற்றிக் கொடியிலிருந்து அகவ, வானமே வழியாக விரைந்த செலவினை மேற்கொண்டு, உலகமக்களால் புகழப்பட்ட மிக உயர்ந்த சிறந்த புகழினையுடைய அலைவாய் என்னும் ஊரில் ஏற எழுந்தருளுதலும் (அவன்)நிலைபெற்ற பண்பே,அவ்வூரல்லாமலும், 125 மரவுரியை உடையாகச் செய்த உடையவரும்,அழகோடு வலம்புரிச்சங்கினை ஒத்த வெண்மையான நரைமுடியினை உடையவரும், அழுக்கு அற மின்னும் உருவினரும்,மானின் தோல் போர்த்த தசை கெடுகின்ற மார்பின் எலும்புகள் தோன்றி உலவும் உடம்பினையுடையவரும்,நல்ல பகற்பொழுதுகள் 130 பலவும் சேரக்கழிந்த உணவினையுடையவரும்,மாறுபாட்டுடன் கோபத்தை(யும்) நீக்கிய மனத்தினரும்,பலவற்றையும் கற்றோரும் அறியாத அறிவினையுடையவரும்,கற்றோர்க்கும் தாம் எல்லையாகிய தலைமையை உடையவரும்,அவாவோடு கடிய சினத்தை(யும்) விலக்கிய காண்பதற்கினியரும்,மனவருத்தம்135 ஒருசிறிதும் அறியாத இயல்பினரும்,பொருந்துதல் வரும்படி வெறுப்பு அற்ற காட்சியையுடையரும் ஆகிய முனிவர்,முன்னே செல்ல, புகையை முகந்துகொண்டதைப் போன்ற அழுக்கேறாத தூய உடையினையும், மொட்டு வாய் நெகிழ்ந்த மாலை சூழ்ந்த மார்பினையும் (கொண்ட), செவியால் இசையை அளந்து நரம்பைக் கட்டின சுற்றுதலுறும் வார்க்கட்டினையுடைய 140 நல்ல யாழின் இசையில் பயின்ற நன்மையையுடைய நெஞ்சால் மெல்லிய மொழி பேசுதல் பொருந்தியோர் (ஆகிய கந்தருவர்),இனிய யாழ் நரம்பை இயக்க - நோய் இல்லையாக இயன்ற உடம்பினையும்,மாவின் ஒளிரும் தளிரை ஒக்கும் நிறத்தினையுடையவரும்,ஒளிர்தோறும் பொன்னுரை (விளங்கினால்)போல (விளங்கும்)தேமலையுடையவரும் ஆகிய,இனிய ஒளியினையுடைய145 மேகலையை அணிந்த தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ள அல்குலையும், குற்றமில்லாத மகளிரோடு கறை இன்றி விளங்க; நஞ்சுடன் மறைந்திருக்கும் உள்துளையுடைய வெண்மையான பல்லினையும், நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக்கொள்ளும் அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய, பாம்புகள் மாளும்படி அடிக்கின்ற பல வரியினையுடைய வளைந்த சிறகினையுடைய 150 கருடனை அணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும் - வெள்ளிய ஆனேற்றை வலப்பக்கத்தே (வெற்றிக்கொடியாக)உயர்த்திய,பலரும் புகழ்கின்ற திண்ணிய தோள்களையும், இறைவி பொருந்தி விளங்குகின்ற,இமையாத மூன்று கண்களையும் உடைய, முப்புரத்தை எரித்த,மாறுபாடு மிக்க உருத்திரனும் - நூற்றைப் பத்தாக அடுக்கிய(ஆயிரம்) கண்களையும்,நூற்றுக்கணக்கான பல155 வேள்விகளை வேட்டு முடித்ததனால் வென்று கொல்கின்ற வெற்றியினையும் உடையனாய், நான்கு ஏந்திய கொம்புகளையும்,அழகிய நடையினையும், (நிலம் வரை)தாழ்ந்த பெரிய வளைவினையுடைய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின் புறக்கழுத்தில் ஏறிய திருமகளின் விளக்கமுடைய இந்திரனும் - நான்கு பெரும் தெய்வங்களுள் வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள160