New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள்
Permalink  
 


 

அறத்தாறிது…

  

 
 

1

நண்பர்களே,

என் சொந்த ஊர் திருவட்டாறு. குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களில் சங்க இலக்கிய காலகட்டத்தில் இருந்த சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிற இரண்டு ஊர்களில் ஒன்று திருவட்டாறு. இன்னொன்று தென்குமரி. ‘வளநீர் வாட்டாறு’ திருவட்டாறை புறநாநூற்றில் மாங்குடி மருதனார் சொல்கிறார்.

அங்கே இந்தியாவில் மிகப்பெரிய விஷ்ணு சிலைகளில் ஒன்று உள்ளது. இருபத்திரண்டு அடி நீளம் உள்ள ஒற்றைப்பெரும் சிலை. மூன்று கருவறைகளிலாக நிறைந்து கிடக்கும். கன்னங்கரிய திருமேனி. கடுசர்க்கரை என்ற பொருளால் ஆனது என்று சொல்வார்கள். கல்லுக்கு நிகரானது. இந்த மூன்று கருவறைகளையும் இப்போது ஒவ்வொரு நாளும் திறக்கிறார்கள். நான் சிறுவனாக இருந்தபோது வைகுண்ட ஏகாதசி அன்றைக்கு மட்டும்தான் திறப்பார்கள்.

அதைப்பார்ப்பதற்கு அன்று பெரிய வரிசை நிற்கும். சாலையிலிருந்து போய்க்கொண்டே இருப்பார்கள் . நாலைந்து மணிநேரம் நின்று இரண்டு நிமிடம் மூன்று கருவறைகளிலாக பரந்து கிடக்கும் அந்த திருமேனியைப்பார்க்க முடியும். முதல் கருவறையிலே கால். இரண்டாவது கருவறையிலே உந்தி. மூன்றாவது கருவறையிலே திருமுகம் .அந்த சிலையை தரிசிப்பதை ஒரு பெரிய புனித செயலாக என் பாட்டி கருதினார்கள். அவர்களுடன் பலமுறை சென்றிருக்கிறேன்.

என்னை சின்ன வயதிலே கூட்டிக் கொண்டுபோகும்போது அதை விஷ்ணுவின் ‘தர்மகாயம்’ என்றுதான் பாட்டி சொன்னார்கள். விஷ்ணுவின் தர்மவடிவம். பேரறத்தோற்றம். புராணத்தில் அதை மகாயோகநிலை என்று சொல்வார்கள். அதாவது பிரபஞ்சம் உற்பத்தியாவதற்கு முந்திய கணம். வெறும் இருளாக, தான் இருப்பதை தான் மட்டுமே அறிந்தவராக விஷ்ணு படுத்திருக்கும் நிலை. அந்நிலையில் பிரம்மா உதிக்கவில்லை. அதன் பிறகு தான் அவர் தொப்புளிலிருந்து ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர்ந்து அதில் பிரம்மன் உருவாகி அதிலிருந்து பிரபஞசங்கள் தோன்றி சிருஷ்டி தொடங்கியது. அதற்கு முந்திய நிலை. முற்றிருள் நிலை.
அது அவ்வளவு மகத்தான ஒரு படிமம். நெடுங்காலம் என் சிந்தனையை பாதித்திருந்த ஒரு படிமம் அது. அந்த சிலையைத்தான் விஷ்ணுபுரம் என்ற நாவலாக நான் எழுதியிருக்கிறேன். இந்த மேடையில் அறம் என்ற சொல்லுடன் அச்சிலை நினைவில் எழுந்தது. அதனுடன் இணைந்த பல நினைவுகள் வருகின்றன.

திருவட்டாறு ஆலயம் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வம். அது தமிழகத்திற்கு அண்மையில் இருப்பதாலும் தொடர்ந்து படையெடுப்புகள் நிகழ்ந்ததாலும் அவர்கள் தங்கள் தலைநகரை திருவட்டாறிலிருந்து 1795ல் திருவனந்தபுரத்திற்கு மாற்றினார்கள். அப்போதுதான் திருவனந்தபுரம் ஆலயம் பெரிதாக கட்டப்பட்டது. இந்த சிலையை விட ஒரு அடி சிறிதாக அங்கே ஒரு சிலை அமைக்கப்பட்டது. இதே போன்ற பெருஞ்சிலை. அனந்தபத்மனாபன்.

உங்கள் அனைவருக்கும் அந்த ஆலயத்தைப்பற்றிய ஒரு முக்கியமான செய்தி தெரிந்திருக்கும். சில வருடங்களுக்கு முன்னால் சுந்தரராஜ ஐயங்கார் என்பவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். ‘திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள் உள்ளன. அதில் சில ரகசிய செல்வங்கள் உள்ளன. இதை மன்னர் தன் பொறுப்பில் வைத்திருக்கிறார். முடியாட்சி சென்று குடியாட்சி வந்தபிறகும் கூட ஆலய நிர்வாகமும் அது சார்ந்த பொறுப்புகளும் மன்னர் குடும்பத்தில் தான் இருந்தன. இங்கு நிலவறைகளில் இருக்கும் செல்வம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. இதை நீதிமன்றம் தன் கட்டுபாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அவர் நீதிமன்றத்தில் கோரினார்.

அந்த வழக்கில் தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம் மகாராஜாவிடமிருந்து சாவியை வாங்கி நிலவறைகளை பரிசோதிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. நடுவர்குழு சென்று அறைகளைத் திறந்து பார்த்தனர். முதல் அறையில் பூஜைப் பொருட்கள் இருந்தன. சில பொருட்கள் பொன்னாலானவை. அதன்பிறகு மேலும் ஆறு அறைகள் இருந்தன. அந்த ஐந்து அறைகளில் திறந்து எடுத்த செல்வம் இன்று உலகத்தில் ஒரே இடத்தில் இருக்கும் மிகப்பெரிய செல்வக்குவைகளில் ஒன்று. கலைமதிப்பைக்கொண்டு அதை விலைமதிப்பிடவே முடியாது என்று சொல்கிறார்கள்.

அதை மதிப்பிட்ட ஒருவரிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்த போது அதில் இருக்கும் வைரங்களை பொதுச் சந்தையில் கொண்டு வந்தால் அதன் கலைமதிப்புக்காக ஏலம் போட்டால் இந்திய கருவூலத்தை விட அதிகமாக வரும் என்றார். வைரக்கற்களே குவியல்களாக உள்ளன. அதை இந்த மகராஜா குடும்பம் இத்தனைநாள் தன் கையிலே வைத்திருந்திருக்கிறது. அதில் ஒரு பத்து வைரத்தை அவர்கள் அள்ளிக் கொண்டு சென்றிருந்தால் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்திருப்பார்கள். ஆனால் அவருடைய மொத்தக் குடும்பமும் கீழ் நடுத்தர நடுத்தர வாழ்க்கையைத் தான் வாழ்கிறார்கள். கடைசி வரைக்கும் மகாராஜா ஒரு அம்பாசிடர் காரை அவர்தான் ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அவருடைய குடும்பத்தில் வாரிசுகள் யாருமே பணக்காரர்கள் கிடையாது. ஆனால் அவர்களுக்குத் தெரியும் அந்தச்செல்வம் அங்கிருப்பது

யோசித்துபாருங்கள், உலகத்தின் மகத்தான செல்வத்தின் மேல் அமர்ந்து ஒரு நடுத்தர வாழ்க்கையை வாழ அவர்களால் முடிந்தது. நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு நிலை அது. டாக்டர் அ.கா.பெருமாள் அவர்கள் ஒரு நூல் எழுதி வெளியிட்டிருக்கிறார். அது திருவனந்தபுரத்தில் இருக்கும் மதிலகம் ஆவணங்களையும் திருவனந்தபுரத்திற்கு எழுதப்பட்ட கடிதங்களையும் தொகுத்து போடப்பட்ட ஒரு ஆய்வுநூல். ’முதலியார் ஆவணங்கள்’ என்று அதற்கு பெயர். குமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் முதலியார் என்ற குடும்பத்தில் இருந்த ஓலைகள் அவை. அவற்றில் கணிசமான பகுதியை ஏற்கனவே கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பதிப்பித்திருக்கிறார். எஞ்சிய ஓலைகளை அ.கா.பெருமாள் அவர்கள் பார்த்து பிழை தீர்த்து பதிப்பித்திருக்கிறார்.

அந்த நூல் எனக்கு நெருக்கமானது. ஏனென்றால் எனக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நூல் அது. அந்த நூலில் ஒரு கடிதம் இருக்கிறது. அழகிய பாண்டியபுரம் முதலியார் குமரி மாவட்டத்தில் நாஞ்சில் நாட்டு மக்களின் வரியை வசூலித்து மன்னருக்கு கொடுக்கும் பொறுப்பில் இருந்தவர். அழகிய பாண்டியபுரம் முதலியாருக்கு திருவிதாங்கூர் மன்னர் எழுதிய கடிதம் அதில் இருக்கிறது. அதில் மன்னர் சொல்கிறார், பதினைந்து நாட்களுக்குள் அரிசியை அரண்மனைக்கு அனுப்பி வைக்கவும். இல்லையென்றால் இங்கு சாப்பாட்டுக்கே கஷ்டமாகிவிடும் என்று.

உண்மையிலேயே பலமுறை சாப்பாட்டுக்கு கஷ்டமான நிலைமை திருவிதாங்கூர் அரசருக்கு வந்திருக்கிறது. ஏனென்றால் வெள்ளையரின் வரிவிதிப்பு அப்படி. வருடாவருடம் வரி ஏறிக்கொண்டே செல்லும். அது திருவிதாங்கூர் அரசரின் வருமானத்துக்கு ஏற்ற வரி அல்ல, வெள்ளை அரசின் தேவைக்கு ஏற்ற வரி. ஆகவே கடுமையான நெருக்கடி. ஆனால் ஒருபக்கம் அவர் உலகத்திலே மிகப்பெரிய செல்வத்தை கையில் வைத்திருக்கிறார். மறுபக்கம் பட்டினி. தொடர்ந்து வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இவர்கள் மிக மிக ரகசியமான குலச்செல்வமாக இதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளையர்களுக்குத் தெரிந்திருந்தால் ஒரு நாணயம் கூட இருந்திருக்காது.

நண்பர்களே, திருச்செந்தூர் ஆலயத்திலும் ஸ்ரீரங்கம் ஆலயத்திலும் சிதம்பரம் ஆலயத்திலும் இதே போன்ற நிலவறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கே எதுவுமே இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் நிலவறைகள் இருக்கின்றன. இந்த ஒரு ஆலயம் மட்டும் தான் செல்வத்தோடு இருக்கிறது. அப்படியெனில் எவ்வளவு செல்வம் இருந்திருக்கிறது, அது எங்கு சென்றிருக்கிறது என்று யோசித்துப் பார்க்கவேண்டும். ஆகவேதான் அது அத்தனை ரகசியமாக இருந்திருக்கிறது

ஆனால் 1780லும் 1876லும் தமிழக நிலப்பகுதியில் மாபெரும் பஞ்சம் வந்தபோது திருவிதாங்கூர் பகுதி முழுக்க கஞ்சித் தொட்டிகளைத் திறந்தார்கள். இந்தக் கஞ்சித் தொட்டிகளைத் திறக்கும்முறை இதுதான். அந்தந்த ஊரிலுள்ள வேளாள நிலப்பிரபுக்களை பிடித்து “நீங்கள் கஞ்சி தொட்டி திறக்கவேண்டும், காலையில் பத்து மணியிலிருந்து சாயங்காலம் மூன்று மணி வரைக்கும் கஞ்சிகொடுக்கவேண்டும்” என்று மகாராஜா ஏற்பாடு செய்கிறார். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அத்தனை சாதிக்கும் கஞ்சி அளிக்கப்பட்டது – கண்டிப்பாக அதில் சாதிக்கேற்ற இடவேறுபாடு இருந்தது. அந்தக்கால பார்வை அது. ஆனால் அனைவருக்கும் கஞ்சி கொடுக்கப்பட்டது

அந்தக்கஞ்சித்தொட்டிகளால் திருவிதாங்கூரின் மக்கள்தொகை இருமடங்கு ஆகியது என மதிலகம் ஓலைகள் காட்டுகின்றன. திருவிதாங்கூரின் இன்றைய ஊர்கள் உருவாகி வந்ததெல்லாம் அப்போதுதான். அந்தக் கஞ்சித்தொட்டி முறை மதத்துடன் பிணைக்கப்பட்டிருந்தமையால் பஞ்சம் விலகியும் நீடித்தது. சுதந்திரம் கிடைத்தபின்னரும் பல இடங்களில் இருந்தது. நிலச்சீர்திருத்தங்கள் வரும் காலம்வரை. தோவாளை கஞ்சித்தொட்டியில்ன் அ.கா.பெருமாள் கஞ்சி குடித்திருக்கிறார். இன்றும் கஞ்சிமடம் போன்ற ஊர்கள் இங்கு நிறையவே உள்ளன.

நண்பர்களே, தர்மதுரைகளும் நவீனர்களுமான வெள்ளையர் ஆண்ட நிலப்பகுதிகளில் கோடிக்கணக்கானவர்கள் பஞ்சத்தில் செத்து அழிந்தனர். பழைமைவாதிகளும் சாதியவாதிகளுமான திருவிதாங்கூரில் ஒருவர் கூட பட்டினியால் சாகவில்லை. நவீனத்துவ அறம் வேறு. அங்கு உணவு என்பது ஒரு விலைபொருள். வணிகப்பண்டம். நிலப்பிரபுத்துவகால அறம் சாதிவேறுபாடுகள் மிக்கது. பலவகை அடிமைத்தனங்கள் கொண்டது. ஆனால் அங்கே உணவு அன்னம், தெய்வ வடிவம். பகிர்ந்துண்ணுதல் அதன் நெறி.

மகாராஜா கஞ்சித்தொட்டி திறப்பதற்கு அந்த ஊரிலிருந்தே தேவையான செல்வத்தை சேர்ப்பவதற்குரிய அமைப்பை உருவாக்கினார். இன்றைக்கு என்ன சொல்கிறார்கள் என்றால் , அன்றைக்கு பஞ்சகாலத்தில் அப்படி ஓர் அமைப்பை ஊரிலிருந்து உருவாக்க முடியாது என்று. அவ்வளவு பணம் அன்று மக்களிடம் இல்லை. மகாராஜா வரும்போது அவர்தான் கையோடு பணம் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் ஊரில் எவரிடமாவது கொடுத்து ‘உங்கள் செலவாக நீங்கள் நடத்துங்கள்’ என்று சொன்னார். அந்தச் செல்வம் அனந்தபத்மநாபனின் கருவூலத்தில் எடுக்கப்பட்டதாகவே இருக்கும். அதற்கு அந்தப்பணத்தை அவரால் எடுக்க முடிந்திருக்கிறது. ஆனால் தனக்கு என்று எடுக்க மனம் வரவில்லை.

1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் வந்தபோது அன்றைக்கு திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி ஐயர் திருவிதாங்கூர் இந்தியாவுடன் சேரக்கூடாது என்று வாதிட்டார். மகாராஜாவையே அதற்காக வற்புறுத்தினார். அவர் அதற்கு சொன்ன காரணம், திருவிதாங்கூர் தனித்து நின்றால் மிகவளமான நாடாக ஆகமுடியும், அதற்கான நிதி இருக்கிறது என்பதே. அவரை ஒரு சரியான மரபுவழிப் பிராமணர் என்று சொல்லலாம். அவர் மகாராஜாவின் ஊழியர், அமைச்சர். மகாராஜாவுக்கு எது சிறந்ததோ அதைச் சொன்னார்.

திருவிதாங்கூர் இந்தியாவுடன் இணைந்தால் இந்தியா என்ற வறுமை நிறைந்த நாட்டின் பிரதிநிதியாக ஆகவேண்டியிருக்கும். உண்மையில் திருவிதாங்கூர் மிகப்பணக்கார நாடு என்றார். அவர் கடிதங்களில் நெடுங்காலம் அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமலேயே இருந்தது. இன்றைக்கு இந்த பெரும் செல்வம் தெரியவந்தபிறகு அந்தக் கடிதங்களை பார்த்தால் அவர் என்ன சொல்கிறார் என்று புரிகிறது என்கிறார்கள்.

ஆனால் காங்கிரஸ்காரர்கள் அவருக்கெதிராக கலவரம் செய்தார்கள். மணி என்னும் கம்யூனிஸ்ட்காரர் அவரை வெட்டினார். திருவிதாங்கூர் மகாராஜா அவரை வேலையை விட்டு நீக்கினார். அய்யர் வேலையை விட்டு நீங்கும் போது தன் சம்பளத்தில் எஞ்சியிருந்த பணத்தை மட்டும் எழுதி எடுத்துக் கொண்டார். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வழியாக அன்றைய தமிழ்நாட்டுக்குள் நுழைந்தார் என்கிறது வாய்மொழிக்கதை. ஆரல்வாய்மொழியில் வண்டியை நிறுத்தி திருவிதாங்கூரிலிருந்து தான் பெற்றுக் கொண்ட தன் கார் உட்பட அனைத்து வசதிகளையும் அங்கே விட்டு விட்டு வேறு காரில் ஏறி சென்னைக்கு போனார் என்பார்கள்

ஆனால் அப்போதும் அவருக்குத் தெரியும், உலகத்திலேயே மிகப்பெரிய செல்வங்களில் ஒன்றைப்பற்றி. எப்போது வேண்டுமானாலும் அவரால் அதைத் திறந்து எடுத்துக் கொள்ளவும் முடியும். ஒரு கைப்பிடி வைரத்தை அள்ளிக் கொண்டு போனால் போதும், அவர் ஒரு கோடீஸ்வரர். அவர் செய்யவில்லை. எளிமையான பிராமணராகத் திரும்பிச்சென்று தன் ஆசிரியப்பணிக்கு மீண்டார். அரசனும் அந்தணனும் அப்படி இருந்திருக்கிறார்கள்

இது என்ன அறம்? இந்த நூற்றாண்டில் ஏன் இது நமக்கு சாத்தியமில்லாமல் போகிறது? ‘எதுக்குடா இதைத் திறந்தோம்’ என்று மனமுடைந்து வழக்கு போட்ட சுந்தர ராஜன் இறந்து போனார். ஏனெனில் அவருக்குத் தெரியாது ,இவ்வளவு பெரிய செல்வம் இருக்கும் என்று. இன்றைக்கு இருக்கும் அரசியல்வாதிகள் கையில் அதைத் திறந்து கொடுத்துவிட்டு போயிருக்கிறார். நீங்கள் பார்க்கலாம், நம் பேரப்பிள்ளைகள் காலத்தில் ஒர் அறிக்கை வரும். அவை எல்லாமே கண்ணாடிக்கற்கள்தான், எதுவுமே வைரம் கிடையாது என. அங்கு பொன்னே இல்லை என்று. எங்கே போனதென்றே தெரியாது. ஏற்கனவே அப்படி எவ்வளவோ செல்வங்கள் நம் நவீன ஜனநாயகத்தில் காணாமல் போயிருக்கின்றன. இதைவிடப்பலமடங்கு கோயில் நிலங்கள், பொதுச்சொத்துக்கள்….

இந்தக்காலகட்டத்தில் இல்லாத, அந்தக் காலகட்டத்தில் இருந்த, ஏதோ ஒன்று அங்கு இருக்கிறது. அது நம் கைகளில் தட்டுப்படுகிறது. அதைக் குடிஅறம் அல்லது குலஅறம் என்று சொல்லலாம். பழங்காலத்தில் நம் குடிபாரம்பரியமாக, குலபாரம்பரியமாக சில அறங்கள் கைமாறி வந்து கொண்டே இருந்தன. அதை மீறவே மாட்டார்கள் நம் முன்னோர். அது தான் அறத்தின் ஒரு தொடக்கம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
RE: திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள்
Permalink  
 


மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் உணவு தேடி, எப்படி வேண்டுமானாலும் உறவை அடைந்து ,சக மனிதனை வென்று வாழலாம் என்ற ஒருகாலம் இருந்திருக்கும். அதிலிருந்து ஒருவிதமான நெறிக்குள் கொண்டு வந்தார்கள்.பழங்குடிகள் சில விஷயங்களை உயிரே போனாலும் செய்ய மாட்டார்கள் . சிலபழங்குடிகள் பால் குடிப்பதில்லை. செத்தாலும் சரி. Taboos எனலாம். அல்லது Faiths எனலாம். ஆனால் அந்த நெறிகளின் அடிப்படையில்தான் அவர்களின் குடி கட்டியமைக்கப்பட்டுள்ளது. அதைமீறினால் அவர்களின் குடி அழியும். ஆகவே மீறமாட்டார்கள். அது குடியறம்.

ஒரு பனையேறி ஆயிரம் மூடநம்பிக்கைகளும் சாதிப்பற்றும் கொண்டவராக இருக்கலாம், ஆனால் குடிப்பதற்கு என கேட்டால் பதநீருக்குக் காசு வாங்கமாட்டார். பிள்ளைக்குச் சமைப்பதற்கு என்று கேட்டால் மீனவர் மீனுக்குக் காசுவாங்கமாட்டார். பகிர்ந்துண்ணுதல் இயல்பான அறமாக இருந்தது. அதை அவர்கள் பண்டமென்றே பார்க்கவில்லை.

நம் தாத்தாக்கள் பாட்டிகள் எல்லாருமே குடி அறத்துக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். அதற்கு மேல் உள்ள அறங்கள் அவர்களுக்குத் தெரிந்திருந்தனவா என்பது வேறு விஷயம். நம் பழைய நூல்களை பார்க்கும்போது, நம் நாட்டார்க்கதைகளில் அந்த குடியறத்தைத்தான் நாம் பார்க்கிறோம். நமக்கு அது ஒரு பிரமிப்பையும் மனவிலகலையும் இன்று உருவாக்குகிறது. ஒர் அறத்தின் பொருட்டு ஒரு குலமே விலக்கப்பட்ட கதைகளைக் கேட்டு என்ன காலம் அது என்று பிரமிப்போம். ஒர் அறத்தின் பொருட்டு ஒருவன் சாகிறான் என்பது நமக்கு இன்று ஒரு திகைப்பையே உருவாக்கும்.

தமிழகம் முழுக்க பரவலாக காணப்படும் ஒருவகை நடுகற்சிலைகள் உண்டு. தன் தலைமுடியை தன் கையால் பிடித்து தன் கழுத்தை தானே வெட்டிக் கொள்ளும் சிலை. அதை நவகண்டம் என்று தமிழ்நாட்டிலே சொல்வார்கள் ஒரு மேலான தர்மத்துக்காக தன் கழுத்தை தானே அறுத்து செத்தவனுக்கு வைக்கப்பட்ட சிலை அது. போருக்கு முந்தைய களப்பலியாக. ஓர் ஏரியோ ஆலயமோ இடரின்றி கட்டப்படவேண்டும் என்பதற்கான தன்பலியாக அவன் இறக்கிறான். என்ன காரணத்துக்காக என்றாலும் இப்படி ஒரு மனிதன் செய்ய முடியுமா என்பதே நமக்கு நம்பமுடியாததாக இருக்கிறது. ஆனால் அவன் நம்பிய ஒரு விஷயத்துக்காக இதை செய்திருக்கிறான். இங்கே தான் சமூகஅறம் ஆரம்பிக்கிறது. ஒரு குடியிலிருந்து ஒரு சமூகத்திற்காக அவன் தன்னை அளிக்கிறான். தான் அழிந்தாலும் தன் சமூகம் வெல்லவேண்டுமென விழைகிறான்.

அந்த அறத்தின் முகங்களை பழைய இலக்கியங்களில் பார்த்துக் கொண்டே இருக்கலாம். குறிப்பாக ராமாயணம் மகாபாரதம் போன்ற பெருங்காவியங்களில் இந்தியாவின் நீண்ட பாரம்பரியத்தின் சமூக அறத்தின் பல முகங்களை நாம் பார்க்க முடியும். மகாபாரதத்தில் ஓர் இடம். வெண்முரசில் அதை எழுதி வந்தபோது பெரிய விவாதம் வந்தது. குந்திக்கு குழந்தைகள் இல்லாத போது நியோகம் என்ற முறைப்படி வேறு ஆண்களுடன் கூடி குழந்தை பெறலாம் என்று ஆலோசனை சொல்லப்படுகிறது. தன் கணவன் மேல் உள்ள பிரியத்தினால் முடியாதென்று சொல்கிறாள்.

அப்போது பாண்டு பல்வேறு நியோகமுறைகளைப்பற்றிச் சொல்கிறான். எப்படியெப்படியெல்லாம் குழந்தை பெறலாம் என்று விளக்கும் ஒரு பகுதி அது. அந்த விளக்கத்தில் பலவகையான மைந்தர்களைப்பற்றி விளக்கம் வருகிறது. கானீனன் என்று ஆரம்பித்து பதினெட்டு வகையான பிள்ளைகள். எல்லாவகையான பிள்ளைப்பிறப்பும் அந்த பட்டியலில் அடங்கிவிடுகிறது.

அதாவது, ஒரு பெண்ணுக்கு பிள்ளை என்று ஒன்று பிறந்தால் அது எப்படி பிறந்தாலும் அந்தக் குழந்தைக்கு ஒரு பெயர் போட்டு அந்த சமுதாயம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்த சமுதாயத்தில் Bastard என்று ஒருவன் கிடையாது. புறக்கணிக்கப்பட்டவன், அன்னியன் என்று ஒருவன் கிடையாது அவன் இன்னவகையான மைந்தன், அவ்வளவுதான்.

சரி, ஒரு கேள்வி. ஒரு மனைவி கணவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் இன்னொரு காதலனிடம் ரகசியமாகப் போய் ஒரு குழந்தை பெற்றால், அது அவனுக்குத் தெரியும் என்றால் அந்தக் குழந்தை அந்தக் கணவனுக்கு பித்ரு கடன்கள் செய்யமுடியுமா? செய்ய முடியும். அவன் அவளை சட்ட பூர்வமாக விவாகரத்து செய்யும் வரை அவள் பெறும் எல்லாக் குழந்தைகளும் அவன் குழந்தைகள்தான் .அந்தக் குழந்தை நீர்க்கடன் செலுத்துமென்றால் அவன் மோட்சத்துக்கு போக முடியும். சரி, அவள் விவாகரத்து செய்து இன்னொருவன் கூட போய்விட்டாள். பிறகு ஒரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தையிடம் அவள் ’இவர் உன் அப்பா’ தான் என்று சொன்னால் அந்தக் குழந்தை அவர் மைந்தன் ஆகுமா? ஆகும். அவன் அந்த தந்தைக்கு நீர்க்கடன் செய்யலாம்.

அம்மா ஒருவரை இவர் உன் தகப்பன் என்று சொன்னால் அவன் அம்மைந்தனுக்குத் தகப்பன் தான். கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்குப் பிறந்தவனும் அவள் கணவனின் சட்டபூர்வமான மகனே. ஏன் ஒருவனை ஒரு தந்தை மானசீகமாக தன் மைந்தன் என்று சொன்னால்போதும், அவன் மைந்தனேதான். ஆக அந்தச் சமூகம் ஒரே ஒரு மனிதனைக்கூட அடையாளம் இல்லாமல் ஆக்கிவிடக்கூடாது, சமூகத்தை விட்டு வெளியே அனுப்பக்கூடாது என்பதில் வைத்திருந்த ஒரு பிடிவாதம் அதில் தெரிகிறது. அது ஒரு குலஅறம்.

மெய்சிலிர்க்க வைக்ககும் பல இடங்கள் இருக்கின்றன மகாபாரதத்தில். யக்ஷப்பிரசன்னம் ஒர் இடம். பாண்டவர்கள் காட்டுக்குள் போய்க் கொண்டிருக்கிறார்கள். கடுமையான் தாகம். ஒரு இடத்தில் பாஞ்சாலி விழுந்து விடுகிறாள். ‘தண்ணீர் கொண்டு வா இனி ஒரு அடி கூட காலெடுத்து வைக்க முடியாது ’என்று சொல்கிறாள். பீமன் தண்ணீர் கொண்டுவர தனியாக போகிறான். அங்கே ஒரு அழகான குளிர்ச் சுனையை பார்க்கிறான். குடிப்பதற்காக கையில் நீரள்ளுகிறான். ஒர் அசரீரி கேட்கிறது. ஒரு யக்ஷன் சொல்கிறான் ‘ இது என் குளம் நான் சொல்லாமல் இந்த தண்ணீர் நீ குடிக்க கூடாது’

‘சரி என்ன செய்யவேண்டும்?’ என்று பீமன் கேட்கிறான். யக்ஷன் ‘நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல். சரியான பதில் சொன்னால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்று சொல்கிறான். பீமன் ‘இல்லை, என் தாகம் அதுவரை பொறுக்காது’ என்று சொல்லி தண்ணீர் குடிக்கிறான். இறந்துவிடுகிறான். சற்று நேரம் கழித்து அங்கு அர்ஜுனன் வருகிறான். அண்ணன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறான். இருந்தும் நீரள்ளி குடிக்க்க முயல்கிறான். அசரீரி தடுக்கிறது. கேள்விகளுக்கு பதில் சொல்லும்படி கேட்கிறது. ‘இல்லை முதலில் தாகம் தீரட்டும்’ என்றபடி நீர் குடித்து அவனும் இறந்து விடுகிறான். அது போல நகுலனும் சகதேவனும் இறந்து விழுகிறார்கள்.

கடைசியாக தம்பியரைத் தேடி தர்மன் அங்கு வருகிறான். தண்ணீர் அள்ளப்போகும்போது மறுபடியும் அசரீரி குரல் கேட்கிறது. தண்ணீரை கீழே விட்டுவிடுகிறான். அந்த அசரீரி நூறு கேள்விகளைக் கேட்கிறது. யக்ஷப் பிரஸ்னம் என்ற அற்புதமான ஒரு குட்டி உபநிஷத் அது. அதில் அற்புதமான, யோசித்துப்பார்க்கவேண்டிய வினாக்கள் இருக்கின்றன. உதாரணமாக உலகிலேயே மிகப்பெரிய சுமை எது என்று கேட்கும்போது கர்ப்பம் என்று சொல்கிறான். உலகத்தில் மிகப்பெரிய துயரம் எது என்று கேட்கும்போது புத்திர துக்கம் என்று சொல்கிறான். தந்தைக்கு மகன் இறக்கும்போது வரும் துயரம் அது. தாய்க்கு மகன் இழக்கையில் வருவதை விட ஒருபடி பெரியது அது. ஏனெனில் தாயைவிடவும் தந்தைக்கு மகன் முக்கியமானவன். ஏனெனில் அவன் நீட்சி மைந்தன். அவன் இந்த உலகத்தில் எஞ்சியிருக்கப்போவது மகன் வடிவில் தான். அதுதான் துயரங்களில் உச்சகட்ட துயரம் என்று யக்ஷபிரஸ்னம் சொல்கிறது.

எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி முடித்த உடனே யக்ஷன் மனம் மகிழ்ந்து கேட்கிறான். ‘இவ்வளவு அற்புதமான பதிலை நீ சொல்வாயென்று நான் நினைக்கவில்லை. இங்கு படுத்திருப்பவர்களில் ஒருவனை உயிருடன் தருகிறேன். கூட்டிக் கொண்டு போ. என்கிறான். அப்போது தருமன் நகுலனை உயிர்ப்பித்துத் தரும்படி கேட்கிறான். யக்ஷனுக்கு ஆச்சரியம். ‘அர்ஜுனன் இல்லையென்றால் நாட்டை திரும்ப பெறமுடியாது. பீமன் இல்லையென்றால் இந்தக் காட்டைவிட்டே வெளியே போக முடியாது நகுலனை ஏன் கேட்கிறாயே?” என்று கேட்கிறான்.

தர்மன் சொல்கிறான் , ‘என் தந்தைக்கு இரண்டு மனைவியர். குந்தியின் மகனாக நான் இங்கு இருக்கிறேன். மாத்ரியின் மகன்கள் நகுலனும் சகதேவனும். அதில் ஒருவன் இருக்க வேண்டும் அதுதான் நியாயம்’.யக்ஷன் வெளியில் வந்து ‘என்றைக்கு தர்மதேவனை நான் கண்ணில் பார்க்கிறேனோ அன்று எனக்கு மீட்பு என்று சொன்னார்கள். இன்று எனக்கு மீட்பு’ என்று சொல்லி பாண்டவர்களை உயிர்ப்பித்துவிட்டு விண்ணுலகு செல்கிறான்.

யோசித்துப்பார்க்கும்போது அந்த மனநிலையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு குலத்திற்குள் செயல்படும் உச்சகட்ட அறம் ஒன்று இருக்கிறது. குலதர்மங்களின் அறம் அது. ஒரு காலகட்டத்தில் அதுவே முதன்மையாக இருந்தது.

என் குடும்பத்தில் ஒரு நிகழ்வு. என் அப்பா தற்கொலை செய்து இறந்து போனார். அவர் மனம் கலங்கி இருந்த ஒரு காலம். அம்மாவின் தற்கொலை காரணமாக நான் விரக்தி அடைந்து வீட்டை விட்டு சென்றுவிட்ட ஒரு காலம். எஞ்சியிருக்கும் சொத்தை முழுக்க அப்பா என் தங்கை பெயருக்கு எழுதி வைத்தார். கேரளக்குல வழக்கப்படி சொத்து பெரும்பாலும் பெண்களுக்குத்தான் போகும். திருமணத்தின்போது அவளுக்கு கொடுத்த சொத்து போக எஞ்சியிருந்தது அந்த வீடும் நிலமும் மட்டும்தான். அதையும் தங்கை பெயரில் எழுதி வைத்துவிட்டார்.

அவர் இறந்து போனபின் உயில் வாசிக்கும்போது தான் இது தெரியவந்தது. அப்போதும் தங்கைக்கு அது தெரியவில்லை. அவள் மாமியாருக்கு தான் அது தெரிகிறது. மாமியார் உற்சாகமாக போய் தங்கையிடம் ‘உனக்குதான்டீ வீடு நிலம் எல்லாம் கிடைச்சிருக்கு’ என்று சொன்னாள். பெரிய வீடு அது. தங்கை சீறி எழுந்தாள். ‘எப்படி அப்பா அப்படி எழுதி வைக்கலாம் ? அது எங்கள் அண்ணன்களின் சொத்து’ என்றாள்.

காலை பத்து மணிக்கு அவளுக்குத் தெரிகிறது செய்தி. பத்தரைக்கு பஸ் பிடித்து திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து ஊருக்கு வந்து மறு நாளைக்கே அதை திருப்பி எங்கள் பெயரில் எழுதி வைத்தாள். மாமியார் ‘எதுக்கு சொத்தையெல்லாம் திருப்பி எழுதி வைக்கிறே?” என்று கேட்டதற்கு ‘சங்கைக் கடிச்சு துப்பிருவேன். என் அண்ணன்களின் சொத்து அது. போ அந்தப்பக்கம்’ என்று தங்கை அவரிடம் சொன்னதாக மாமியார் பிற்பாடு என்னிடம் சொன்னார். ‘காளி மாதிரி நிற்கிறாள்” என்று மாமியார் சொன்னார். இது ஒரு குல அறம். ஒரு சராசரி மலையாளிப்பெண்ணின் அறம் அது. இதுதான் நம் குடும்பங்களை இதுவரைக்கும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது

நான் பட்டப்படிப்பு கடைசி வருஷம் படிக்கும் காலம். அப்போது கல்லூரிக்கு அடிக்கடி போகும் வழக்கம் கிடையாது. ஒரு வருஷத்திலேயே 45 நாட்கள் தான் கல்லூரிக்கு போயிருக்கிறேன். ‘அப்பாவைக் கூட்டிட்டு வரலேன்னா உள்ளே விடமாட்டேன்’ என்றார் முதல்வர் ஆர்தர் டேவிஸ். அப்பாவிடம் போய் அதை சொல்ல முடியாது. ஆகவே நான் சுற்றிச்சுற்றி அம்மாவிடம் சொன்னேன். ஒருவழியாக அம்மாவுக்கு புரிந்தது. ‘சரி வரேன்’ என்று சொன்னார்கள்.

என் அம்மா உலக இலக்கியத்தில் ஆழமான பரிச்சயம் கொண்டவர்கள். சமகால ஆங்கில இலக்கியப்படைப்புகள் அனைத்தையும் படித்தவர்கள்.ஆனால் ரொம்ப சின்ன கிராமத்தில் மாடு மேய்த்து புல்பறித்து வாழும் வாழ்க்கைதான் அவர்களுக்கு. வெளியே போன அனுபவமே கிடையாது. நான்தான் முதலில் வெளியே போவதற்காக செருப்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன். அவர்கள் மலையாளி முறைப்படி வெள்ளை ஆடை அணிந்து என்னுடன் வந்தார். தக்கலை என்பதே அவர்களுக்கு ஒரு பெரிய ஊர். தக்கலை பஸ் ஸ்டாண்டுக்குள் எங்க அம்மாவை கொண்டு வந்து நிறுத்தினேன். நான் அருகே நின்றேன்

அங்கே ஒரு சின்ன சுவர். அதற்கு அந்தப்பக்கத்தில் ஒரு சிறிய சாலை. அங்கிருந்து ஒரு பத்து வயசு பெண் ஓடிவந்தாள். அவள் பின்னால் ஒருவன் ஓடிவந்தான். வந்து அந்த பொண்ணை முடியைப் பிடித்து படபடவென்று அடிக்க ஆரம்பித்தான். நல்ல மூர்க்கமாக அடித்தான். மொத்த பஸ்ஸ்டாண்டும் பார்த்துக்கொண்டே இருந்தது. “டேய் எதற்கடா அடிக்கிறான்?” என்று பதறியபடி கேட்டார்கள். “அவள் ஏதாவது பண்ணியிருப்பாள்” என்று நான் சொன்னேன்.

அவன் அடித்துக்கொண்டே இருந்தான்.சட்டென்று அம்மா ஓடிப்போய் ( அம்மா போன அந்த வேகத்தை இன்றைக்கு யோசித்தாலும் எனக்கு மெய் சிலிர்க்கும்) அவனை ஒரு அறை விட்டார்கள். அடியை வாங்கிக்கொண்டு “இவதான்! இவதான்!” என்று ஏதோ சொன்னான். உக்கிரமாக அம்மா “போடா” என்றார்கள். அபப்டியே அவன் திரும்பிப் போய்விட்டான். அம்மா அந்தப்பெண்ணை அணைத்துக் கொண்டார்கள்.

மொத்த நிகழ்ச்சியையும் நான் அப்பால் நின்றுதான் பார்த்தேன். எனக்கு கைகால் எல்லாம் நடுங்கிவிட்டது. அவன் திருப்பி அடித்துவிட்டால்? நான் அப்படியே கூட்டத்துக்குள் பதுங்கி பின்னால் வந்துவிட்டேன். அடிவாங்கியவன் கையால் காதைப் பொத்தியபடி திரும்பி போய்விட்டான். பெரிய உடல்கொண்ட ஆள். அதன் பிறகுதான் நான் பக்கத்தில் போனேன். அம்மா அவளை சமாதானப்படுத்தி திருப்பி கொண்டு போய் விட்டார்கள். அவன் மகள் தான். “டேய், கையை வெச்சா கொன்னுபோடுவேன்” என்று அம்மா சொன்னார்கள். “இல்ல அம்மணி …” என்று ஏதோ சமாதானம் சொன்னான்.

பின்பு சுந்தரராமசாமியிடம் இந்த சம்பவத்தைச் சொன்னபோது ‘எப்படி அம்மாவுக்கு அடிக்க தோன்றியது? எப்படி அவன் அடிவாங்கிக் கொண்டு போனான்?’ என்றேன் ராமசாமி சொன்னார் “சரி, ஒருவேளை அவன் திருப்பி உங்கள் அம்மாவை அடித்திருந்தால் என்ன ஆகும்? அந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து அவன் வெளியே போகவே முடியாதே?” ஆம் அந்தப் பெண்ணை அவன் அடிக்கலாம் .அது அவன் பெண் .ஆனால் ஒரு அம்மாவை அடிப்பதை பஸ்ஸ்டாண்டில் நிற்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம் சமூகத்தின் கூட்டுமனம் கொதித்து எழும். நம் குடியறத்தில் அதற்கு இடமே இல்லை.

அந்த குடியறமே இன்றைக்கும் நம் காவல். நாம் அதை நம்பித்தான் நம் பெண்களை தனியாக பஸ்ஸில் அனுப்புகிறோம். நான்கு பேர் இருக்கிறார்கள் என்று நினைக்கிறோமே. நான்குபேர் அருகே நின்றால் ஏதோ ஒன்றை நம்புகிறீர்கள் அல்லவா? பத்து பேர் சேர்ந்தால் நியாயம் பிறக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா? அதுதான் எப்போதும் இருந்து வரும் குல அறம் என்பது. அதன் மேலேதான் மேலதிகமான அறங்கள் அனைத்தும் கட்டி எழுப்பப்படுகின்றன.

[மேலும் ] Jun 29, 2015 – டொரெண்டோ மெட்றாஸ் கலை கலாச்சாரக் கழகத்தில் ஆற்றிய உரை



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

சி.பி.ராமசாமி ஐயர் காரில் நாகர்கோவில் வழியாக தக்கலைக்கு செல்வதை பார்த்த ஒரு நண்பர் எனக்கு இருந்தார். அய்யப்பண்ணன் என்று பெயர் நூற்றுப்பத்து வயது வரை வாழ்ந்தார். நான் வேலை பார்த்த அலுவலகத்து நேர் முன்னால் இருந்த ஒரு கூரை டீக்கடைக்கு வருவார். நான் அதிக நேரம் அங்கேதான் இருப்பேன். அவரைப்பற்றி ஒரு மூன்று கட்டுரைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். அசாதாரணமான மனிதர் அவர். பழைய கால மனிதர். அவர் கடைசி வரைக்கும் ஜனநாயகம் என்பதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. எஞ்சிய வாழ்நாளிலும் திருவிதாங்கூர் மன்னரின் பிரஜையாகவே வாழ்ந்து இறந்து போனார்.

அவர் சி.பி.ராமசாமி ஐயர் போனதை பார்த்தார். ஆரல்வாய்மொழி வரைக்கும் மக்கள் சி,பி,ராமசாமி அய்யருக்கு எதிராக கல்லை விட்டெறிந்தார்கள். அவர் காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் எதிரி. இருவருமே கல்லை விட்டெறிந்தார்கள். அன்றெல்லாம் கார் வேகமாகச் செல்லாது. அவர் தொப்பி கீழே விழுந்தது. அவர் ஜனநாயகத்தை பற்றி விமர்சனம் செய்யும் போது சொல்வார், “அந்த தொப்பி கிடந்த மண்ணாக்கும்லே இது. பின்ன எப்படி வெளங்கும்?”.

குலஅறம் என்பது அடுத்த கட்டத்துக்கு போகும் தருணங்களை நான் தரிசித்திருக்கிறேன். இரண்டு நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகம் வருகின்றன. அய்யப்பண்ணன் வேளிமலை அடிவாரத்தில் விவசாயம் செய்வதற்காக போவார். சாலையிலிருந்து அங்கு போவதற்கு கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் வரை இருக்கும். தண்ணீர் தவிர அங்கு வேறு எதுவும் கிடைக்காது. தூக்கு பாத்திரத்தில் சோறோடு போவார். அங்கு வைத்துவிட்டு வயலுக்குள் இறங்கி வேலை பார்ப்பார். சோறுதான் இருக்கிறதே, சாப்பிடலாம் என்று எண்ணி சோறு இருப்பதனாலேயே பசியை ஒத்திப்போடும் மனநிலை வரும். விவசாய வேலை அப்படிப்பட்டது முடிக்கவே தோன்றாது. சாப்பிடலாம் சாப்பிடலாம் என்று ஒத்திப்போட்டு பசி ஏறிக்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட கொலை வெறி பசி அடையும்வரை விட்டுவிட்டார். பசி தாங்க முடியாமல் ஆனபின் மண்வெட்டியை வைத்துவிட்டு வந்தார்.

ஒருநாய் அவருடைய தூக்குபோணியில் இருந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அவர் மண்வெட்டியை காலால் மிதித்தபடி குச்சியை எடுத்தார் அடிப்பதற்கு. ஆனால் மனம் நெகிழ்ந்துவிட்டது. அவர் என்னிடம் சொன்னார். “தம்பி க்ளக் க்ளக்ன்னு சத்தம் கேட்டுது. அம்புட்டு பசி அதுக்கு. நமக்கு தெரிஞ்ச பசிதானே அதுக்கும் தெரியுது அந்த பசி சத்தத்துக்கு கண்ல தண்ணி வந்து போட்டுது பாத்துக்குங்க. சாப்டுட்டு போ மக்கான்னு சொல்லிட்டேன்”

இது தான் குல அறத்திலிருந்து அடுத்த கட்டமாக ஒரு பெரிய அறம் நோக்கி போகும் பயணம். மானுட அறம். உயிர்களைத் தழுவி விரியும் அறம் இது. இன்னொரு நிகழ்ச்சி. அதுவும் அய்யப்பண்ணன்தான். அந்த வருடம் மழை தவறிவிட்டது. அவர் சொன்னார் “எப்படி மழை பெய்யும்? மழையை நாம விக்க தானே செய்யுறோம்?” நான் “என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டேன்.

அவர் விளக்கினார். உணவுக்காக வாழ்வுக்காக விவசாயம் பண்ணும்போது மழைக்கு நாம் நியாயம் செய்கிறோம். ஆனால் அந்த மழையைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வணிகப்பொருளாக மாற்றி ரப்பராகவோ இன்னொன்றாகவோ ஆக்கி விற்கும்போது மழையை விற்கிறோம். மழையை விற்றால் மனிதனுக்கும் மழைக்குமான ஒர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. எதன் பொருட்டு மண்ணில் விழவேண்டுமோ அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறாய் நீ. விற்க ஆரம்பிக்கிறாய். அதனால் அது பெய்யாது. பெய்யவில்லை என்றால் நீ போய் தெய்வத்திடம் கேட்கக்கூடாது. இது ஒரு அறம். இப்படிப்பட்ட அறங்களால் தான் வாழ்க்கை உருவாகிவந்திருக்கிறது.

இதிலிருந்து தான் பெரிய அறங்கள் உருவாகி வந்திருக்கின்றன. சமூக அறம், தவறுகள் சரிகள் சார்ந்த அறங்கள், உருவாகி வந்துள்ளன. ஆனால் திருப்பி திருப்பி நமக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு பேரறத்தான் ஒருவன் தருமத்தின் குரலில் பேசும்போது நம் அன்றாட தர்க்க புத்திக்கு அது அபத்தமாக இருக்கிறது ஆனால் அது சரியாகவும் இருக்கும்.

உங்களுக்குத் தெரிந்திருக்கும், இந்தியாவின் மதக்கலவரங்கள் நடந்த காலத்தில் ஒருவன் வந்து காந்தியிடம் சொல்கிறான். ‘ “என் மனைவியையும் நான்கு குழந்தைகளையும் இஸ்லாமியர்கள் கொலை செய்துவிட்டார்கள். நான் ஐந்து இஸ்லாமியர்களைக் கொலை செய்துவிட்டு வந்திருக்கிறேன். இன்னும் கொல்வேன். நீங்கள் என்ன செய்ய முடியும்?” என்று. அப்போது காந்தி சொல்கிறார் “இன்னும் நூறு இஸ்லாமியர்களைக் கொன்றாலும் உன் தீ அடங்காது. ஒரு இஸ்லாமியக் குழந்தையை எடுத்து நீ வளர். உன் குழந்தையாக அதை நினை. அப்போது தான் உன்னுடைய தீ அடங்கும்”.

நடைமுறையில் அபத்தமான ஒரு பதில் அது. ஆனால் அதைவிட சரியான பதில் இருக்கமுடியாது. அவ்வளவுதான் அட்டன்பரோவின் காந்தி சினிமாவில் இக்காட்சி வருகிறது. உண்மையிலேயே அவர் அப்படிச் செய்து பிற்காலத்தில் புகழ்பெற்ற சமூக சேவகராகவும் ஞானியாகவும் அறியப்பட்டார் என்று ஒரு செய்தி உண்டு..

எப்போதும் அறத்தின் குரல் கிளம்பி வரும்போது அது சமகால பிழைப்புவாத சிந்தனைக்கும் நாம் யோசித்திருக்கும் நூற்றுக்கணக்கான அன்றாட விஷயங்களுக்கும் முரண்பாடாக தெரியும். கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக வீட்டு வாசலுக்குப் பதிலாக கூரையில் ஒரு ஜன்னலைத் திறந்து விட்டதாக தோன்றும். ஏனெனில் அது மிகவும் தொன்மையானது. மிகவும் பழைமையானது. எப்போதாவது நம் புனைகதைகளில் அந்தத் தருணம் வரும்போதுதான் நமக்கு ஒரு மெய்சிலிர்ப்பு வருகிறது.

நாஞ்சில் நாடனின் ஒரு பிரபலமான கதை உண்டு. இவர் கோவையில் ஒரு பஸ்ஸில் ஏறுகிறார். அந்த பஸ் மானந்தவாடிக்கு போகிறது. அந்த பஸ் ஏறும் காட்சியே அவர் பிரமாதமாக சொல்கிறார். பஸ்ஸில் நூறு பேர்தான் போக முடியுமெனில் முந்நூறு பேர் காத்திருக்கிறார்கள். பஸ் வந்தவுடன் நானூறு பேர் ஏறிவிட்டார்கள். எப்படி ஏறினார்கள் என்று தெரியாது. முழுவதும் ஆட்கள்.

டிரைவர் வந்து உட்காரும்போதே அந்தக் கூட்டத்தை பார்த்து கடுப்பாகிவிடுகிறான். வண்டியே ஒரு பக்கம் சரிந்திருக்கிறது. அவனே ஒரு பக்கம்சரிந்து உக்கார்ந்துதான் ஓட்டுகிறான். பிறகு கெட்ட வார்த்தையாக திட்டிக் கொண்டே இருக்கிறான். சத்தம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் மக்கள்.. எரிச்சலின் உச்சத்தில் அந்த வண்டி போய்க்கொண்டிருக்கிறது. மானந்தவாடியை தாண்டும்போது ஒரு பெரிய மலைப்பாம்பு சாலையை மிக மெதுவாக கடந்து போகிறது. எதையாவது சாப்பிட்டிருக்குமோ அல்லது கர்ப்பிணியோ தெரியவில்லை என்கிறார் ஆசிரியர். மிக மெதுவாக கடந்து போகிறது அது. டிரைவர் வண்டியை நிறுத்திட்டு தலையை வெளியே நீட்டி மலையாளத்தில் ‘ஒந்நு போ மோளே வேகம்’ என்கிறான். மகளே கொஞ்சம் வேகமாப்போ என்று.

இந்த இடத்தில் அவன் ஒரு டிரைவராக அல்லாமல் ஒரு ஆதிவாசியாக மாறி பல்லாயிரம் வருட பழமையான ஒரு பண்பாட்டுக்குள்ள போய்விடுகிறான். இந்த மாற்றத்தை இந்த தொன்மையை மாறாத ஒன்றை சுட்டிக் காட்டும்போது தான் இலக்கியப்படைப்புகள் அமரத்துவம் கொள்கின்றன.

நான் சில ஆண்டுகளுக்கு முன் நமீபியா போயிருந்தேன். என்னை டேவிட் கெம்பித்தா- என்கிற கருப்பினத்தை சேர்ந்த வழிகாட்டி இளைஞன் அழைத்துச் சென்றான். ஓர் இடத்தில் மணல்மேல் ஒரு டிசைனை பார்த்தேன். ”இது என்ன?” என்று கேட்டேன். ”இது வைட் லேடி, காட்டுகிறேன்” என்று மணலில் தோண்ட ஆரம்பித்தான். அங்கு எச்சிலால் ஆன ஒரு குழாய் போல மணலுக்குள் இறங்கிச் சென்று அங்கு ஒரு சிறிய குடுவை மாதிரி சென்று முடிந்தது. அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு சிலந்தியை எடுத்து எனக்கு காட்டினான். ”இதன் பேர்தான் வைட் லேடி. இவள் இரவில் தான் வேட்டையாடுவாள்.பகலில் உள்ள உக்காந்திருப்பாள். அழகானவள். அதனால தான் இவளுக்கு வைட் லேடி என்று பெயர்” என்று விளக்கம் சொன்னான்.

கொஞ்ச நேரத்தில் கிளம்பினோம். அவன் அதே ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி அதைப்போட்டு மண்ணை மூடினான். ”ஏன்?” என்று கேட்டேன். “இவளை வெளியே போட்டால் பத்து நிமிஷம் கூட வெயில் தாங்காது. இறந்துவிடுவாள். உள்ளே போட்டால் குளிராக இருக்கும். அங்கு தான் அவள் உயிருடன் இருக்க முடியும்” என்று சொன்னான். நான் சொன்னேன் ”நீங்கள் எல்லாம் வேட்டைக்காரர்கள்தானே? இதைக் கொன்றால் உங்களுக்கு என்ன?”

அவன் சொன்னான். ”அதை நான் சாப்பிட முடியும் என்றால் ஒன்றுமில்லை. வெறுமே கொன்று போட்டுவிட்டு போவதை ஒரு ஆப்பிரிக்க பழங்குடி செய்யக்கூடாது”. அதைக் கொன்று போட்டுவிட்டு போவதற்கு வெள்ளைக்காரர்கள், இந்தியர்கள் போன்ற நாகரீக மனிதர்களால் தான் முடியும். அவர்களால் முடியாது. அவர்களுடையது பல்லாயிரம் வருடத் தொன்மைகொண்ட வேட்டைப்பண்பாடு.

நெடுங்காலமாக ஒரு பண்பாட்டிலிருந்து நாம் விலகி விலகி வந்துவிட்டோம். மீண்டும் குல அறத்திலிருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதுதான் அறம் என்பதின் அடிப்படை. இங்கிருந்துதான் அறம் தொடர்பான எல்லா வார்த்தைகளும் வந்திருக்கிறது இங்கிருந்து தான் எல்லாமே தொடங்குகிறது. அறம் வலியுறுத்தல் என்ற பெயரில் வள்ளுவர் எழுதிய எல்லா பாடல்களையும் இன்றைய நவீன மாணவனுக்கு சொல்லி புரியவைப்பது கடினம் ஆனால் ஒரு பழங்குடியிடம் சொல்லிபுரியவைப்பது சுலபம்.

 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது

மிக சாதாரணமாக பொருள் அளிக்கும் ஒரு குறள் அது. ஆனால் விசும்பு என்பது வானம் அல்ல. பெருவெளி. ஸ்பேஸ். அது கனிந்துவிழுந்தால்தான் பசும்புல். உணவின் முதல் வடிவம் உருவாகிறது. புல் என்பது ஜடப்பொருள் உனவாகும் முதற்பரிணாமம். அன்னத்தின் கண்கண்ட வடிவம். ஆகவே தான் புல் வணக்கத்துக்குரியதாக வேதத்தில் சொல்லப்படுகிறது. ஏனெனில் நெல்லும் ஒரு வகையான புல்தான். இந்த பூமியை முழுக்கத் தழுவியிருக்கும் ஒன்று புல். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மோசமான இடத்திலிருந்தும் புல் வந்துவிடும். புல்லில் இருந்து தான் அனைத்தும் ஆரம்பிக்கிறது. ஒன்று புல்லை சாப்பிடுவோம். அல்லது புல்லை சாப்பிடுவதைச் சாப்பிடுவோம். அது முளைக்க விசும்பிலிருந்து ஓர் ஆணை வரவேண்டும். அய்யப்பண்னன் சொன்னது அதுதானே?

அறம் என்கிற வார்த்தையை தமிழில் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறோம் என்று பார்த்தால் அது மாறிக்கொண்டு வருவதைப்பார்க்கலாம். சங்க காலத்து அறம் என்பது பொதுவாக ஒரு குடியோ ஒரு குடும்பமோ மரபுக்கடமையாகக் கொள்ளும் ஒன்றைத் தான் சுட்டிக் காட்டுகிறது. இல்லறம், துறவறம் என அறங்கள் இரண்டு. அதன் பிறகு பௌத்தம் வந்தது, சமணம் வந்தது. அவர்கள் அறம் என்பதை பிரபஞ்ச அறமாக மாற்றினார்கள். இங்கிருக்கும் ஒரு பசும்புல்லில் இருந்து விசும்பை திறந்து காட்டினார்கள். அதன் பின் அறம் என்பது மிகப்பெரிய வார்த்தை. அது பிரபஞ்ச நெறி.

அரசியல் பிழைத்தோர்க்கு கூற்றாக வரும் அறம் ஒன்று உண்டு என்று இளங்கோவடிகள் சொல்கிறார். அந்த அறம் எளிய குடியறம் அல்ல. அது கற்பறமோ துறவறமோ போரறமோ அல்ல. அது பெரிய எழுத்து அறம். எந்த மனிதரும் இங்கில்லாவிட்டால்கூட அது இங்கிருக்கும். அனைத்தும் மாறும்போதும் மாறாத நெறியாக நடுவே திகழும் அதைத்தான் பௌத்தம் தர்மம் என்ற சொல்லில் சொல்கிறது. பாலி மொழியில் தம்மம்.

அதை எப்படி விளக்கலாம் என்றால், ஒரு தீ தீயாக இருப்பதை தீத் தன்மை என்று சொல்லலாம். அது அதன் தர்மம். தண்ணீர் தண்ணீர்த் தன்மையோடு இருப்பது தண்ணீரின் தர்மம். இப்படி கோடானுகோடி தர்மங்கள் இந்த பூமியில் இருக்கின்றன. ஒரு புழுவுக்கும் புழுவுக்குமான தர்மம் இருக்கிறது. இந்த அத்தனை அறமும் தனித்தனியாக தெரிவது நாம் அவற்றை பிரித்துப் பார்ப்பதனால்தான். நாம் இல்லையென்றால் இவையெல்லாம் சேர்த்து ஒரு ஒற்றை அறம் தான். அதுவே மகாதம்மம். பேரறம்

அந்த அறத்தைதான் வள்ளுவர் சொல்கிறார். அந்த அறத்தைதான் இளங்கோ சொல்கிறார். அந்த அறத்தைதான் இன்னும் பிரம்மாண்டமான வடிவமாக கம்பன் சொல்கிறான். அறத்தின் மூர்த்தியான் என்று ராமனை ச் சொல்கிறான். அறம் ஒரு மனிதனாக வருமென்றால் அது இவன் என்று சொல்கிறான். ’அறம் பின் இரங்கி ஏக’ என்கிறான். அவன் நடந்து போனால் அழுதபடி அறம் பின் செல்கிறது. அப்படிப்பட்ட அறத்தை தொடர்ந்து வலியுறுத்தி பெரிதாக்கி நமக்கு அளித்திருக்கிறார்கள்.. குல அறத்திலிருந்து, சமூக அறத்திலிருந்து, ஒரு பேரறம் நோக்கிப் போகும் பெரும் பயணம் ஒன்று நம் பண்பாட்டில் நமக்குக் காணக்கிடைக்கிறது.

அறம் என்பது ஏற்கப்படுவது. ஆனால் என்றுமே அதன் துலாமுள் நிலையற்றுமிருக்கிறது. ஏனென்றால் வாழ்க்கை பெரும் பெருக்கு. அந்த அறச்சிக்கல்களைத்தான் பெரிய படைப்புகள் எப்போதும் கையாள்கின்றன.. நான் விரும்பி சொல்லும் ஜெயகாந்தன் கதை ஒன்று உண்டு. ”நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ” என்ற கதை.

அதில் கணவர் கிட்டத்தட்ட தியாகராஜ சுவாமிகள் போன்ற ஒருவர். உஞ்சவிருத்தி செய்து வாழ்பவர். மறுவேளைக்கு உணவை வைத்துக்கொள்ளாதவர். இசையையும் பக்தியையும் தன்வாழ்க்கையாகக் கொண்டவர். அவருக்கு ஒரு மனைவி. அவள் கணவனது நலம் மட்டுமே நாடும், கணவனுக்கென்றே வாழும், அந்தக்காலத்துப் பதிவிரதை. ஆனால் அவளுக்குள் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. ’இவர் இறந்துபோனால் யாரும் என்னை பார்க்க மாட்டார்கள். இவர் இருக்கிற வரை நான் இவரை நம்பி இருந்துவிடுவேன். நாளைக்கு இவர் இறந்து போனால் இப்பேர்ப்பட்ட மகானுடைய மனைவி போய் கையேந்தினால் பிச்சை எடுத்தாள் என்று ஆகிவிடக்கூடாது. இதுவும் இவரே நாளைக்கு படுத்துட்டார் என்றால் இவருக்கு ஒரு மருந்து வாங்கிக் கொடுக்கக்கூட இவர்கள் யாரும் வரமாட்டார்கள்.. அப்போது  அவருக்காக நான் கையேந்தினால் அது இன்னும் அவமானம். அப்போது என்ன செய்வது’.

அவள் ஒரு லாட்டரி சீட்டு எடுக்கிறாள். அதற்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுகிறது. லாட்டரிச்சீட்டை எடுத்துக் கொண்டு போய் கணவனிடம் கேட்கிறாள். இதை ”நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?”. அவர் சொல்கிறார். ”நீதானே ஆசைப்பட்டு வாங்கினே? நேக்கு ஒண்ணும் வேண்டாம். நீயே வெச்சுக்கோ” அவள் திகைத்துவிடுகிறாள். “உங்களுக்கு இல்லாத ஒண்ணை நான் வெச்சுக்க முடியாது. நான் வாங்கினதே உங்களுக்கும் சேர்த்துதான். நீங்க வேண்டாம்னு சொன்னா நான் வெச்சுக்க மாட்டேன்.” அவர் இயல்பாக ”சரி அப்ப கிழிச்சு எறிஞ்சுடு” என்கிறார். அவள் பதைப்புடன் ”அது எப்படி கிழிச்சு எறியறது? மகாலட்சுமி இல்லையா?” என்கிறாள். ”சரி ஏதாவது பண்ணு” என்று அவர் சென்று விடுகிறார்.

கதைமுடிவில் அவள் திரும்பி நம்மிடம் கேட்கிறாள் ”நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ”. இதில் இரண்டுமே அறம் தான். ஒன்று வான்பறவைகள் போல தெய்வத்தை நம்பி வாழ்பவனின் அறம். இன்னொன்று அக்கறையான குடும்பப்பெண்ணின் அறம். இந்தக் குரலை இந்தச் சிக்கல்களைத்தான் பெரிய படைப்புகள் தொடந்து கையாண்டு கொண்டிருக்கின்றன.

குஷி நகர் என்று ஒரு இடம் இருக்கிறது நேபாளத்துக்குள், உத்தரகண்ட் அருகே. அங்கே நெடுங்காலத்துக்கு முன்னால் ஹரிபாலசுவாமி என்ற புத்த பிக்ஷு புத்தரின் பரிநிர்வாணத்தை ஒரு சிலையாக வடித்திருக்கிறார். புத்தர் தலைக்கு கைவைத்து கால் நீட்டி மரணமடைந்தார். அந்த சிலை பிறகு மகாதர்மத்தின் வடிவமாக கருதப்பட்டது. அது அறப்பேருடல், தர்மகாயம்.

தேரவாத பௌத்தர்களுக்கு உருவ வழிபாடு தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மகாயான பௌத்தர்களை பொறுத்தஅளவில் உருவ வழிபாடு செய்யலாம். புத்தரை அல்ல. புத்தரின் உடம்பை மகாதர்மமாக உருவகித்து விழிபடலாம். இந்தப் பிரபஞ்சத்தை ஆளும், பல கோடி கரங்களால் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றையும் ஆற்றும், செயல்களின் மையநெறியாகத் துலங்கும் அந்த மகாதர்மத்தின் வடிவமாக புத்தரை வழிபடலாம்.

நான் பலவருடங்களுக்கு முன்பு குஷி நகருக்குச் சென்று அந்த சிலையைப் பார்த்தேன். அப்போது எனக்குத் தெரிந்தது, என் பாட்டி நெடுங்காலத்துக்கு முன் விஷ்ணு படுத்திருக்கும் அந்த தோற்றத்தை பார்த்து மகாதர்மம் என்று ஏன் சொன்னார் என்று.

நன்றி

 

Jun 29, 2015 - டொரெண்டோ மெட்றாஸ் கலை கலாச்சாரக் கழகத்தில் ஆற்றிய உரை



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

உலகின் முதல் மொழி தமிழா?

 
tamil-language.jpg

உலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி அடையப்போகும் முதல் மனிதன் நான்தான். ஆனால் அறிவியல்பூர்வமாகப் பார்க்கும்போது இதில் சற்றும் உண்மை இல்லை என்பதுதான் நிஜம். உலகின் முதல் மொழி எது என்ற ஆராய்ச்சியை மொழி அறிவியலாளர்கள் கிட்டத்தட்ட விட்டுவிட்டனர். கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. 
கிடைத்திருக்கும் சான்றுகளில் சுமேரிய மொழிக்கான சான்றுகள்தான் மிகவும் பழமையானது (கி. மு. 2900). இதனால் சுமேரிய மொழிதான் பழமையான மொழி என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. மற்ற மொழிகளுக்கு இதைவிட பழமையான சான்றுகள் கிடைக்கவில்லை. உலகில் தொன்மையான ஒருசில மொழிகளில் தமிழும் ஒன்று. ஆனால் உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்று. சமஸ்கிருதம்தான் தொன்மையான மொழி, கிறேக்கம்தான் தொன்மையான மொழி என்று யாராவது நம்மிடம் சொன்னால் நமக்கு எவ்வளவு எரிச்சலாக இருக்கும். அதே போல்தான் தமிழ்தான் உலகின் தொன்மையான மொழி என்றால் மற்ற மொழியைச் சேர்ந்தவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். சமஸ்க்ருதம் நவீன கிரேக்கம், சீனம், பாரசீகம் போன்ற மொழிகளைச் சேர்ந்த பலரும் இதேபோல்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் நான் சந்தித்த ஈரானியர் ஒருவர் உலகின் முதல் மொழி பாரசீகம்தான் என்றும் உலகின் எந்த மொழி அழிந்தாலும் பாரசீகம்தான் அழியாமல் இருக்கக் கூடிய ஒரே மொழி என்றும் என்னிடம் கூறியபோது எனக்குத் தோன்றியது இதுதான் 'கிணற்றுத் தவளைகள் தமிழுக்கு மட்டும்தான் சொந்தமா என்ன?' என் கிணறுதான் உலகிலேயே பெரிய கடல் என்று சொல்லும் தவளைகள் ஒவ்வொரு மொழியிலும் இருக்கவே செய்கிறார்கள். இந்தத் தன்மைக்கு ethnocentirism அதாவது இனமைய வாதம் என்று பெயர். இதுதான் மற்ற மொழிகளையும் இனங்களையும் அடிமைப்படுத்துவதற்கும் அழிக்க நினைப்பதற்கும் அடிப்படை. ஆரிய இனம்தான் உலகின் உன்னத இனம் என்ற ஹிட்லரின் எண்ணம் கோடிக்கணக்கிலான உயிர்களைக் (குறிப்பாக யூதர்களை) காவுவாங்கியது. அப்படிப் பாதிக்கப்பட்ட யூதர்களே இன்று பாலஸ்தீன மக்களை அழிப்பவர்களாக மாறிவிட்டனர். சிங்களவர்கள்தான் உயர்ந்தவர்கள், தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் இலங்கையில் இனப் படுகொலைக்கு வழிவகுத்தது. வரலாறு முழுக்க இதுபோல் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. தமிழ் இனமும் அது போன்ற இனமைய வாதத்திற்கு அடிமையாக வேண்டாம். 

உலகில் உள்ள மொழிகளிலேயே தமிழ்தான் தொன்மையானது, சிறந்தது என்றெல்லாம் சொல்ல நாம் உலகின் அத்தனை மொழிகளையும் கற்றாக வேண்டும். அது சாத்தியமல்ல. அவரவருக்கு அவரவர் மொழி சிறந்தது. தமிழின் சங்க இலக்கியம் உட்பட பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்துக்கொண்டிருப்பவன் என்கிற முறையிலும் உலகின் பிற மொழி இலக்கியங்களை ஆங்கிலம் வாயிலாகப் படித்துக்கொண்டிருப்பவன் என்கிற முறையிலும் என்னால் தமிழ் இலக்கியத்தைக் குறித்து மிகவும் பெருமை கொள்ள முடியும். வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு 'கல் தோன்றி மண் தோன்றக் காலத்து...' என்று சொல்லிக்கொண்டிருக்கும் நண்பர்களில் பலர் பழந்தமிழ் இலக்கியத்தை சிறிதளவுகூட வாசிக்கவில்லை என்பதுதான் உண்மை (பள்ளிப் பருவத்தில் மனப்பாடப் பகுதியில் அர்த்தம் தெரியாமல் மக்கப் பண்ணியதோடு பலருக்கும் பழந்தமிழ் இலக்கியத் தொடர்பு முடிந்துவிட்டது.) பழந்தமிழ் இலக்கியத்தை வாசியுங்கள். நம் சிற்பக் கலைகளின் பெருமையைப் பற்றி நேரே சென்று பார்த்து அறியுங்கள். அப்போது பெருமை கொள்ளுங்கள். அதில் ஓர் அர்த்தம் இருக்கும். கூடவே பிற மொழிகளின் வளத்தையும் சிறப்பையும் உரிமையையும் அங்கீகரியுங்கள். தமிழ் எவ்வளவு பழமையான மொழி என்பதைவிட தமிழ் எவ்வளவு காலம் வாழப் போகிறது என்பதுதான் தமிழுக்கு முக்கியம். அதுதான் எனது பிரதானமான அக்கறை. என்னைத் தமிழ்த் துரோகி என்றழைக்கப் போகும் நண்பர்களுக்கு: தயவுசெய்து அறிவியல் பூர்வமாக இதைப் பாருங்கள்.
 

மனித இனம் எங்கு தோன்றியது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆப்பிரிக்காவில்தான் உலகின் முதல் மனித இனம் தோன்றியது. சந்தேகம் இருப்பவர்கள் தயவுசெய்து மரபணு விஞ்ஞானிகளிடம் கேட்டுத் தெளிந்துகொள்ளவும். தயவுசெய்து உங்கள் முடிவுகளுக்கு இலக்கியத்தை ஆதாரமாகக் காட்டாதீர்கள்.
     (உலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் facebookஇல் அடிக்கடி போடப்படும் வெற்றுக் கூச்சலுக்கு நான் அளித்த எதிர்வினை)  
http://writerasai.blogspot.in/2013/05/blog-post_5684.html


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 தமிழ் இலக்கியங்களில் சில 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால் இது மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம்இ கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும். 


இந்தியாவை பொறுத்தவரை சிந்துவெளி நாகரீகம் மிகவும் பழமையானது என்கிறது வரலாறு.அதற்கெல்லாம் முன்தோன்றிய மூத்த நாகரீகம் தமிழனின் நாகரீகம். இதற்கான ஆதாரங்களைத் தான் கடல் கொண்டு விட்டது. 

சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான். 

குமரி கடலின் அடியில் உள்ள லெமூரியா கண்டம் என்ற குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான். லெமூர் என்றால் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பரிணாம வளர்ச்சி என்று பொருள். ஆக உலகின் முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது. 

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் 

49 ஆயிரம் சதுர மைல் என்கிறார்கள்.பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். 

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு 
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா 
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா 
4. தொலை கிழக்கில் – சீன நாடு 
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர் 
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர் 

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். 

ஆதாரங்கள் ............. 

ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும். 

தமிழ் தான் உலகின் முதல் மொழி....!!! 

ReplyVote UpVote Down3 வாக்குகள்
 
 
 
user photo

sankaran ayya • 05-Jun-2013 9:58 pm

செறிந்த தகவல்கள் .வாழ்த்துக்கள். 
65 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்கவில்தான் முதல் மனிதன் தோன்றி இருக்கக் கூடும் என்று வேறு 
சில ஆராய்ச்சித் தகவல்கள் கூறு கின்றன . 
----அன்புடன்,கவின் சாரலன் 

replyVote UpVote Down0 வாக்குகள்
 
 
 
user photo

Naveenkumar • 05-Jun-2013 2:51 pm

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. 

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. 

மேலும்... 
/kavithai/116853 - பார்க்கவும்... 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள்
Permalink  
 


உலகின் முதல் மொழி எது

http://www.tamil.chellamuthu.com/2013/11/blog-post_28.html 

உலகின் முதல் குரங்கு தமிழ்க் குரங்கே என நிரூபிப்பதற்காக நண்பர் ஒருவர் கடுமையான ஆராய்ச்சியில் மூழ்கியிருக்கிறார். என்னோடு பணியாற்றுகிறார் அவர். வயதிலும் பெரியவர்.
 
“உங்க ஆராய்ச்சியோட நோக்கம் என்ன?” என்றேன்.
 
அதற்கு அவர் சொன்ன பதிலைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.
 
”ஆதி காலத்தில் திராவிடர்கள், அதாவது தமிழர்கள், சுமேரியாவுக்கு, பாபிலோனாவிற்கு, எகிப்திற்கு மற்ற பிற தேசங்களுக்கும் பரவினார்கள். அதன் பிறகு ஆரியர் வருகை. என்னைப் பொருத்த வரைக்கும் ஆரியர்களும், திராவிடர்களும் ஒன்று தான். ஆகவே நாம் அனைவரும் ஒருவரே. அதாவது திராவிடர்கள் இங்கேயே ஆஃப்ஷோரிலேயே வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்கள் மாதிரி. ஆரியர்கள் ஆன்சைட் அசைன்மெண்ட் போயிட்டு ரிட்டர்ன் ஆகிறவங்க மாதிரி. என்ன ஆயிரக்கணக்கான வருஷம் முன்னாடியே ஆன்சைட் போனதால கொஞ்சம் ஒஸ்தியா தெரியறாங்க. மத்தபடி ஆர்யா உதடு, டிராவிட் உதடு, டிம்பிள் கபாடியா உதடு எல்லாமே ஒன்னு தான்.
 
ஹரப்பா, மொகஞ்சதாரோ எல்லா எடத்திலும் இருந்தது நாமதான். நாமன்னா எல்லோருந்தான். அலெக்சாண்டர் போரஸ் கிட்ட என்ன பாடுபட்டான் தெரியும்ல? இப்ப என்ன ஆச்சு? ஏன் நம்மால எதையும் சாதிக்க முடியல? கடந்த 200 வருசத்துல எந்தக் கண்டுபிடிப்பையுமே நாம செய்யல. ஏன்? எதனால? ஏன்னா நாம சாதியால பிளவுண்டிருக்கிறோம். வெளி சக்திகளோட சண்டை போடறதுக்குப் பதிலா நமக்குள்ளையே சண்டை போட்டுக்கறோம். அலெக்சாண்டரை எதுத்து நின்ன நாம ஏன் மொகல்ஸ் கிட்ட, பிரிட்டிஷ்காரன் கிட்ட எல்லார் கிட்டையும் தோத்தோம்? நம்ம வீரம் எல்லாம் எங்கே போச்சு?”
 
”ஸார் நான் ஏழம் அறிவு பாத்துட்டேன்.” சொல்லும் போது சிரிக்காமலிருக்க இயலவில்லை.
 
அவருக்கும் சிரிப்பு வந்தது. ஆனாலும் தொடர்ந்தார்.
 
”இந்த உண்மையை எல்லோருக்கும் விளக்கணும்.”
 
“விளக்கி?”
 
“நாம எல்லாம் ஒன்னு தான். நமக்குள்ள வேறுபாடு இல்லை அப்படீன்னு சொல்லி ஜாதியை ஒழிக்கணும். அதை மட்டும் செஞ்சுட்டா இந்தியாவை மேலே தூக்கிறலாம்.”
 
”ஜாதிய ஒழிக்கப் போறீங்களா? சான்ஸே இல்லை.”
 
“ஏன் முடியாதுன்னு சொல்லுங்க”
 
”நம்ம ஊர்ல ஒருத்தன் மதம் கூட மாறிடலாம். ஆனா ஜாதியை மாத்த முடியாது தெரியும்ல? மதம் சட்டை மாதிரி பாஸ். எப்ப வேணா கழட்டிக்கலாம். ஆனா ஜாதி தோல் மாதிரி. உரிச்சுத்தான் எடுக்கணும்”
 
மனிதர் ஒத்துக்கொள்வதாக இல்லை. கிறிஸ்துவர்களில் ஜாதி இருப்பது தெரியும். முஸ்லிம்களில் ஜாதி இல்லையென்றார்.
 
“அப்ப நாமெல்லாம் முஸ்லிமா மாறிடலாமா?” கேட்டேன்.
 
“நான் சொல்றது உங்களுக்குப் புரியல. இப்ப வேற மதத்துல இருந்து இந்து மதத்துக்கு கன்வெர்ட் ஆக முடியாது தெரியும்ல உங்களுக்கு. அப்படி கன்வெர்ட் ஆனா அவனுக்கு என்ன ஜாதி கொடுப்பீங்க? அதனால தான்.”
 
”புரியுது. That’s why you want to eradicate caste system?”
 
வேகமாக மண்டையை ஆட்டினார்.
 
“சரி உங்க ஆராய்ச்சியில எதை அடிப்படையா வெச்சு முடிவு செஞ்சிருக்கீங்க? Some hypothesis, inference or evidence?”
 
“Inference”
 
உலகின் முதல் மொழி தமிழ்.. முதல் மனிதன் தமிழன். முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என தர்க்க ரீதியில் நிறுவ முயன்று கொண்டிருக்கிறார் இவர்.
 
மேற்சொன்ன உரையாடலை நான் சும்மா அடிச்சு விடுவதாக நீங்கள் நினைத்தால் இந்த லிங்கை ஒரு நிமிடம் பார்த்து விடுங்கள்.
 
இப்போது உங்களுக்கு விஸாகனைப் பற்றியும் ஓரிரு வரிகள் சொல்ல வேண்டும். பல வருடங்களுக்கு முன் யாழ்ப்பாண பலகலைக் கழகத்தில் லெக்சரர் வேலை பார்த்து வந்தாராம். போரின் உக்கிரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார். அங்கே National Archives அமைப்பில் பணியாற்றி ஓய்வும் பெற்று விட்டார்.
 
அவருக்கும் இந்த மாதிரி வினோதமான ஒரு ஆசை. வாழ்நாள் ஆசை. என்னவோ DNA குறித்தெல்லாம் எழுதி தமிழரும், சிங்களரும் ஒன்றே என்ற முடிவைச் சொல்லி அவரே காசு செலவழித்து சுமார் 80 பக்க சைஸில் ஒரு புத்தகம் போட்டார். தான் இந்த பூமியில் வாழ்ந்து விட்டுப் போனதன் நினைவாக, நம்ம எலந்தக் காட்டு அய்யன் மயில் கெண்டையின் வரலாற்றைஎழுதிட உயிரைக் கையில் பிடித்திருந்தது போல தன்னளவில் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்க முனைந்திருக்கிறார். இதை நீங்க சிங்களவர்களுக்குத் தானே பரப்பணும் என நினைத்துக்கொண்டு ”பொறவு எதுக்கு சண்டை?” என்று திருப்பிக் கேட்டால் எனக்கு சரியாக விளங்கிக் கொள்ள ஏலலை என்பார்.
 
Inference மூலம் உலகின் முதல் மொழி என நிறுவ முயலும் நண்பரும் விரிவாக எழுதி வருகிறாராம். புத்தகமாக வெளியிட வேண்டுமென்றார். எது சுலபமான வழியெனக் கேட்டார்.
 
”பதிப்பகம் ஆரம்பிச்சுருங்க.”
 
சத்தியமாக இதைச் சொல்லும் போது நான் சிரிக்கவில்லை.


-- Edited by Admin on Wednesday 31st of August 2016 06:59:36 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

பார்ஸி – ரிக் வேதம் – சுடலை ( சுடர் ) மாடன்

 


பார்ஸி – ரிக் வேதம் – சுடலை ( சுடர் ) மாடன் , இவர்களுக்கான பொதுமை என்ன ?
 
பார்ஸிக்கள் சொராஸ்டிரிய மதத்தை பின்பற்றுகிறவர்கள். டாடா, கோத்ரேஜ், வாடியா ( Bombay Dyeing ) இந்த வகுப்பினர்.
 
ரிக் முதல் வேத வழிபாட்டு சாசனம்.பொதுவாக பிராமணர்களுடையது என எண்ணம்.
 
சுடலை ஆதி தமிழ் வழிபாடு.
 
இவை எல்லாமே அக்னியை ( தீ ) தெய்வமாக கொண்டன. ஒவ்வொரு சுடலையும் ஒரு வேத அத்தியாயமே.
அக்னி, இந்திரா, பிரம்மா, இரட்டையரான அஸ்வினி குமாரர்கள் எல்லாமே சுடலை, சுடலைதான்.
sudalai.jpg

வலங்கை - இடங்கை

 

‘அந்தக் கையால இல்ல, வலது கையால கொடு’   
 
இதை நீங்கள் சில சமயம் கேட்டிருக்கலாம், அல்லது உங்களுக்கே சொல்லப்பட்டிருக்கலாம்.வலது கை ஏன் உசத்தி, இடது கை ஏன் உசத்தி இல்லை ? இதன் பின்னால் ஆயிரம் ஆண்டு வரலாறு உள்ளது. கி.பி. 1000 – ல் பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்ட வலங்கை இடங்கை குழுக்களும், அதனால் ஏற்பட்ட சண்டைகளுமே இதன் மூலாதாரம்.
 
தமிழர் சிற்ப , கட்டிட, நெசவு , தச்சு, ஆபரண, வேளாண்மை, நாவாய் கட்டுதல், இசை நடன கலைகளில் மிகச்சிறந்து விளங்கினர். தஞ்சை பெரிய கோவிலும், கல்லணையும், மதுரை மீனாட்சி கோவிலும், மாமல்லபுரமும், பட்டாடைகளும் சிறந்த சாட்சிகள்.
 
வேளாளரும், கம்மாளரும், அந்தணரும் மற்ற குலங்களும் ஒன்றிலிருந்து மற்றது உசத்தி எனவோ, வரிசைக்கிரமமாக பிரிக்கப்பட்டிருந்ததாவோ தகவல் இல்லை. பிராமணர்கள் இருந்த போதிலும், எல்லோருக்கும் மேல் என எந்த தடயமும் இல்லை.
 
பொதுவாக விவசாயம் செய்பவர்களே சமூகத்தில் முதலிடம் பெற்றிருந்தனர். சோழ காலத்தில் கட்டிட கலைக்கு மிக முக்கியம் தரப்பட்டு, எங்கும் கோவில்களும், விகாரங்களும் கட்டப்பட்டன. இதனால் தச்சு வேலை செய்பவர்கள் ராஜமரியாதை பெற்றனர். இது சமூகத்தில் சிறுசிறு சலசலப்புகளை உருவாக்கி கொண்டிருந்தது.
அருள்மொழித்தேவன் என்ற இராஜராஜன் சாளுக்கிய, கலிங்க, வங்க நாட்டை வென்று ஏராளமான பிராமணர்களை பிடித்து வந்தான். அதில் ஒருவர், விஷ்ணு சர்மா. தன்னுடைய பேச்சாலும், சின்ன சின்ன தந்திரங்களாலும் தன்னை ராஜ குருவாக நியமித்துக் கொண்டார். அவருடைய சூழ்ச்சியில் உருவானதே வலங்கை இடங்கை குழுக்கள். வேளாளர்கள் மற்றும் அவர் சார்பானவர்களை வலங்கையாகவும், ஏனையோரை இடங்கையாகவும் தமிழ்க் குலங்களை இரண்டாக்கினார். அப்போதிருந்த 198 குலங்களில், 98 குலங்களை வலங்கையாகவும், 98 குலங்களை இடங்கையாகவும் ஆகின. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சடங்குகள், உரிமைகள், இலச்சினைகள், கொடுக்கப்பட்டன.
வலங்கைக்கு அதிக சலுகைகள் வழங்கி மற்றவர்களை கொதிப்படையச்செய்து சண்டை, சச்சரவை மேலும் பெரிதாக்கியும், மற்றும் இடங்கைக்கு வேறு சலுகைகள் வழங்கி வலங்கைக்கு எதிராக சண்டையிடச் செய்தும், தன்னை சமூக நீதிமானாக நடுநிலைவாதியாகவும் காட்டிக் கொண்டு சமூகத்தை தன் வயப்படுத்திக் கொண்டார்.
 
இதுவே தமிழ் குலத்தின் சாதிய வரலாறு. 
 
செருப்பு அணிவது, வாசலின் அளவு, சீலை தோளில் போடுவது, குடை பிடிப்பது போன்ற உரிமைகளை ராஜகுருவையும், அவருடன் இருந்தவர்களும் தீர்மானித்தனர். ஒரே சாதியைச்சார்ந்த ஆணும் பெண்ணுமே வேறுவேறாக்கப்பட்டனர். அண்ணனும் தம்பியும், மாமனும் மச்சானும் வேறுவேறாக்கப்பட்டனர். தமிழ் குலத்தை சின்னாபின்னமாக்க வழிவகுக்கப்பட்டது. 
 
ராஜகுருவையும், அவரை மதித்தவர்களும், வேண்டப்பட்டவர்களும் ஒரே தொழிலில் இருந்த குலங்களை கூட ( உதாரணமாக, செட்டியார் ) இரண்டாகப் பிரித்தனர். வெள்ளாளச்செட்டி வலங்கையாகவும், பேரிசெட்டி இடங்கையாகவும் ஆக்கப்பட்டன. இருவருக்கும் வேறுவேறு தெருக்கள், குலப்பட்டம், செருப்பு, விருதுகள் கொடுக்கப்பட்டன.
 
தொழில்
வலங்கை
இடங்கை
வாணிகம்
வெள்ளாளச்செட்டி,கோமுட்டி
பேரிசெட்டி
நெசவு
சாலியன்    
தேவாங்கர், கைகோளர்
வேளாண்மை
பள்ளி ( பெண்கள் )
பள்ளி ( ஆண்கள் மட்டும் ), பள்ளர்
 
இவ்வாறு பிரிக்கப்பட்ட என் தமிழினம், இன்றும் தனக்குள்ளேயே ‘ நீ என் முன்னால் செருப்பணிய கூடாது’, ‘நீ என் தெருவில் வரக்கூடாது’, சொல்லிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது.
 

ஆரிய மாயை

 

பிராமணர்கள் வீட்டு வழக்குச்சொற்களில் சில..
ஆத்துல ( வீட்டில ) – இது அகம் என்ற தூய தமிழ்ச் சொல்லின் திரிபே .அகத்துல  ( திரும்பத் திரும்பச் சொல்லி பாருங்கள் ) -> ஆத்துல.
 
ஆம்படையான் ( வீட்டுக்காரன் – Husband ) - இது அகம் உடையான் ( Husband ) என்ற தூய தமிழ்ச் சொல்லே. அகமுடையான் -> ஆம்படையான்
 
நாத்தனார் ( sister-in-law ) – இது நா-துணை ( பேச்சுத் துணை or சொல் துணை ) ஆனவர் என்பதின் திரிபே..நா-துணை-ஆர் -> நாத்தனார்.
 
இது போலவே மாட்டுப்பொண்ணு.
 
நாகரிக மேம்பாட்டில், வாழ்க்கையுடன் மிக நெருக்கமான சொற்களை தமிழில் கொண்டவர்கள் , தங்களை ஆரியராக சொல்வதில் ஒரே ஒரு உண்மை மட்டுமே இருக்க முடியும், 
 
தமிழே ஆர்யம், தமிழனே ஆரியன்.
 
மற்ற எல்லாமே, அறிஞர் அண்ணா சொல்படி, ஆரிய மாயை.
 


-- Edited by Admin on Wednesday 31st of August 2016 07:00:56 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
RE: திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள்
Permalink  
 


இராமன் எனும் திராவிடன் - இனி ஒரு புது விதி செய்வோம் !!

 
இராமன் ஏன் திராவிடக் கடவுளாக இருந்திருக்க கூடாது ?
சீதாப் பிராட்டியார் ஏன் திராவிடக் கடவுளாக இருந்திருக்க கூடாது ?
இராமாயணம் சமஸ்கிருத்தில் இருப்பதனாலேயோ, கம்பர் வால்மீகி இராமாயணத்தை முன்னூலாக கொண்டதனாலேயோ  இராமன் வட தெய்வம் ஆகி விட மாட்டான்.
கரிய நிற இராமனை தெய்வமாக இதிகாசங்களும், புராணங்களும் கொண்டாடுவது ஏன்?
மற்ற கரிய நிற தெய்வங்களான சிவனையும், கிருஷ்ணனையும் அதே சமஸ்கிருத்தில் இதிகாசங்களும், புராணங்களும் கொண்டாடுவது ஏன்?
rama.png
 
 
இதற்கான சாத்தியக்கூறுகள் இரண்டு.
1.   பழந் தமிழன், தன் தெய்வ வழிபாட்டை மற்றவரிடம் இருந்து எடுத்துக் கொள்கிறான்.
2.   பழந் தமிழன், தன் தெய்வ வழிபாட்டிற்கு சமஸ்கிருத்தை உருவாக்கி, தன் தெய்வங்களான சிவனையும், கிருஷ்ணனையும், முருகனையும் கொண்டாடுகிறான்.
கிருஷ்ணன் ( கண்ணன் ), சிவன், முருகன் எல்லோரும் தமிழ் தெய்வங்கள்தான். சங்க நூல்களை படிக்கவும். முதல் கூற்றுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
அகம், புறம், குறள், தொல்காப்பியம் என வாழ்வியல், மொழியியலில் ஆயிரம் ஆயிரம் நூற்களை விட்டுச் சென்ற தமிழன்,  தெய்வ வழிபாட்டில் மாபெரும் நூற்களை விட்டுச் செல்லவில்லை. ஏன் ? ஏனென்றால் தன் தெய்வ வழிபாட்டிற்கு தமிழுக்கு ஈடாக, அவன் சமஸ்கிருத்தை உருவாக்கி, தன் வழிபாட்டை அதில் மாற்றி, அந்த நூல்களை ‘மறை’ என்றான்.
இங்கே மாற்றான் எவரும் வரவில்லை.
Refer Indologist Pandit Vamadeva Shastri in http://www.vedanet.com/2012/06/myth-of-aryan-invasion-update-2001/ and other blogs for an overview on the theory of Aryans..
இராமாயணத்தில், இராவணனுக்கு பத்து தலைகள். ஏன் பத்து தலைகள் ? இதற்கான ஆதாரங்கள் எந்த வட மொழியிலும் இல்லை. தமிழில் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது.
மானம்  குலம்  கல்வி  வண்மை  அறிவுடைமை தானம்  தவர் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்பசிவந்திடப் பறந்து போம்.  
இதிலிருந்து என்ன தெரிகின்றது ? இராமாயணத்தின் மூல க்ஷேத்திரம் திராவிட நாடே.  
அனுமன் சீதாப் பிராட்டியிடம் பேசிய மொழி தமிழ்.( http://sookta-sumana.blogspot.in/2013/04/sanskrit-and-tamil-were-co-existing.html). இராமனும் அதையேதான் பேசி இருக்க வேண்டும்.
நாமே திராவிடர் !! நாமே ஆரியர் !!!
இதையே பாரதி ‘ஆரிய தேசத்தில் தமிழ் மொழி’ என்றான். இத்தகைய கருத்து தற்போதைய பல தமிழ் கட்சிகளுக்கு அலர்ஜியாக இருக்க கூடிய விஷயமாகும். எதை வைத்து மக்களை பிரித்து ஏமாற்ற ?
அதற்கு நாம் என்ன செய்வது ?
புத்தர் சொன்னபடி ‘உண்மையை உண்மை எனவும், உண்மை அல்லாதவற்றை உண்மை அல்லாதன’ எனவும் அறிவோம்.
இனி ஒரு புது விதி செய்வோம்.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழர் !! வாழிய பாரதம் !!!
http://dravidians-in-sumeria.blogspot.in/search?updated-max=2013-12-15T03:15:00-08:00&max-results=7&start=10&by-date=false


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard