ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம்
பகுதி 1
பதிஇயல்
சன்மானமும் தண்டனையும்: நியாயத்தீர்ப்பு
உலகம் அழியப்போகின்றது, அதன் முடிவு நெருங்கிவிட்டது என்று இன்றுவரை கிறிஸ்தவ மிஷநரிகள் பிரச்சாரம் செய்துவருவதை நாம் அறிவோம்[1]. கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்றான நியாயத்தீர்ப்பு என்பது உலகின் இறுதி என்ற அவர்களது பிரச்சாரத்தோடு தொடர்புடையது. இந்தக்கோட்பாட்டைப் புரிந்துகொள்ளாமல் கிறைஸ்தவத்தைப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை.
உலகின் இறுதியில் மாண்டுபோன மனிதர்கள் அனைவரும் தமது உடல்களோடு உயிர்பெற்று எழுந்துவருவார்கள். அப்போது ஜெஹோவாவின் ஏககுமாரராகிய இயேசு தோன்றி மனித உயிர்களையெல்லாம் விசாரித்து நியாயத்தீர்ப்பு வழங்குவார். எவரெல்லாம் அவரை விசுவாசித்தார்களோ, அவர்கள் எல்லாப்புலன் இன்பங்களையும் தடையில்லாமல் அனுபவிக்ககூடிய வசதிகள் நிறைந்த ஹெவனுக்கு(சொர்க்கம்?) அனுப்பப்படுவார்கள். அவரை விசுவாசிக்காதவர்கள் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஹெல்லில் (நரகத்தில்?) இடப்பட்டு மீளமுடியாத துன்பத்தில் ஆழ்த்தப்படுவார்கள். நெருப்பு உடலைத் தகிக்கும் ஆனால் உடல் அழியாது துன்புற்றுக்கொண்டே இருக்கும். இறுதித்தீர்ப்பு அல்லது நியாயத்தீர்ப்பு என்னும் கிறிஸ்தவக்கொள்கையின் சாராம்சம் இதுதான்.
இதைக் கிறிஸ்தவர்கள் இன்றும் நம்புகின்றார்கள். விவரம் அறியாதவர்களை மதமாற்றும் கருவியாக மிஷநரிகளால் இந்தக்கோட்பாடு, காலம் காலமாகப்பயன் படுத்தப்பட்டு வருகின்றது. இந்த உலகில் எப்படி வாழ்ந்தாலும் இயேசுவை விசுவாசித்தால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்பது பரவலான கிறைஸ்தவ நம்பிக்கையாக இன்றும் இருப்பதை நாம் காணமுடிகின்றது.
இந்தப்பகுதியில் ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் தர்க்கப்பூர்வமாக நியாயத்தீர்ப்பு என்ற கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாட்டினை நிராகரிப்பதைக் காண்போம். நியாயத் தீர்ப்புக்கோட்பாடு மட்டுமல்ல, ஜெஹோவா, இயேசு ஆகியோரின் நீதிமான்மையும், தெய்வீக இலக்ஷணங்களும் ஸ்ரீலஸ்ரீ சுவாமிஜி அவர்களால் கேள்விக்குட்படுத்தப்படுவதை இங்கே நாம் அறியலாம்…
***
மரணித்த மனித உயிர்கள் உறைவது எங்கே?
ஓ கிறிஸ்தவப் பிரச்சாரகர்களே!
உலகத்தின் முடிவில் நியாயத்தீர்ப்பு நாளில் இயேசு நீதிபதியாகத் தோன்றுவார் என்று நீங்கள் சொல்கின்றீர்கள்! அப்படியானால் இறுதித்தீர்ப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புவரை செத்துப்போன மனித உயிர்கள் எங்கே இருக்கும்? சொர்க்கத்திலா, நரகத்திலா, வேறெங்காவதா? மனித உயிர்கள்[2](Soul) வேறெங்கோ இருப்பார்கள் என்று நீங்கள் சொல்லலாம். அப்படியானால் ஆதாம், அபிரஹாம் போன்றோர்கள் நியாயத்தீர்ப்புக்கு நெடுங்காலத்துக்கு முன்பே சொர்க்கத்திற்கு சென்றார்கள் என்று பைபிள் சொல்லுவது பொய்யாகிவிடுமே!
மனித உயிர்கள் தமது உடல்களைப் பிரிந்தவுடன், மரணமடைந்தவுடன் சொர்க்கத்திற்கு சென்று இன்பத்தையோ அல்லது நரகத்தினை அடைந்து துன்பத்தையோ அனுபவிக்கும் என்றால் நியாயத்தீர்ப்பு நாளுக்கோ, அதில் இயேசுவின் விசாரணைக்கோ எந்தவித அவசியமும் இல்லையே! இன்னமும் நீங்கள் மனித உயிர்கள் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டுத்தான் ஆகவேண்டும், நியாயத்தீர்ப்பு கட்டாயமானது என்று சொல்வீர்களா? அப்படியானால் ஏற்கனவே சொர்க்கத்தில் இருந்த மனித உயிர்கள் நரகத்துக்கும், நரகத்தில் அல்லலுற்ற மனித உயிர்கள் சொர்க்கத்துக்கும் செல்ல வாய்ப்புண்டா? அப்படியொரு வாய்ப்புமில்லாமல் இருந்தால் நியாயத்தீர்ப்பு என்பதே நோக்கமற்றதாக, பயனற்றதாக, பொருளற்றதாக ஆகிவிடுமே! மாறாக, ஏற்கனவே சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ சென்றவர்கள் அங்கேயே இருப்பார்கள். மற்றவர்கள் மட்டுமே இயேசுவால் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று நீங்கள் சொன்னால், நியாயத்தீர்ப்பின் நியாயமே கேள்விக்குள்ளாகும். எப்படிப்பார்த்தாலும் நியாயத்தீர்ப்பு நாளிலே மனித உயிர்கள் இயேசுவால் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படும் என்பது பொய்யானது, புனைவு, கற்பிதம்தான்!
நீதிபதியாக இயேசுவுக்கு தகுதியுண்டா?
நியாயத்தீர்ப்பு நாளிலே இயேசு ஒவ்வொரு மனித உயிரின் செயல்பாடுகளையும் ஆராய்வார் என்று உங்கள் பரிசுத்த வேதாகமமாகிய பைபிள் சொல்கின்றது. தாம் படைக்கப்படுவதற்கு முன்னர் பாவமோ புண்ணியமோ எதையும் அறியாத — செய்யாத மனித ஜென்மங்களில் சிலர் தமது வாழ்வில் துன்பத்தையே அனுபவிக்கவும், மற்றவர்கள் இன்பத்தையே துய்க்கவும் செய்கின்றனர். இதற்கெல்லாம் அவர்கள் யாரும் காரணமில்லை என்பதால் அவர்களைப்படைத்த இயேசுவேதான் அதற்குக் காரணமாக இருக்கமுடியும். அப்படியானல் இது ஓரவஞ்சனை அல்லவா! ஓரவஞ்சனையுள்ள ஒருவர் எப்படி நீதிபதியாக இருக்கமுடியும்? நியாயத்தீர்ப்பு வழங்குவதற்கு எந்தத் தகுதியும் இயேசுவுக்கு இருப்பதாகத் தெரியவில்லையே!
நியாயத்தீர்ப்புக்கு அடிப்படை பைபிள் என்பது நீதியா?
இறுதித்தீர்ப்பு நாளில் எந்த சாஸ்த்திரத்தை அல்லது புனிதநூலைக்கொண்டு இயேசு மனித உயிர்களை நல்லவை, தீயவை என்று நிர்ணயிப்பார்? அவர் பரிசுத்த வேதாகமம் என்று உங்களால் சொல்லப்படும் பைபிளைத்தான் நியாயத்தீர்ப்புக்குப் பயன்படுத்துவாரா? பைபிளிலே பல மாறுபட்ட பதிப்புகளும், முரண்பட்ட கருத்துக்களும் இருக்கின்றன. அதில் எவற்றைக்கொண்டு அவர் நியாயத்தீர்ப்பை வழங்குவார் என்று உங்களால் சொல்லமுடியுமா?
கிறிஸ்தவர்களை விசாரிப்பதற்கு நியாயத்தீர்ப்பின் அடிப்படியாக பைபிள் இருக்குமென்றால், பைபிளைப்பற்றியே கேள்விப்பட்டிருக்காத மக்களை விசாரிப்பதற்கு எந்த நூலை இயேசு பயன்படுத்துவார்?
கிறிஸ்துவையோ பைபிளையோ அறியாத மக்களை விசாரிப்பதற்கு நல்லது எது, கெட்டது எது, என்று சொல்லும் அவரவர் மனசாட்சியை இயேசு பயன்படுத்துவார் என்று உங்களால் சொல்லமுடியுமா? அப்படியானாலும் அவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்று போதித்த அவர்களது மரபார்ந்த சாஸ்திரங்களைத்தான் அவர் நியாயத்தீர்ப்புக்குப் பயன்படுத்தவேண்டும்?
ஆகவே, இயேசு கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விசாரிப்பதற்கு அவரவர் மனசாட்சியைப் பயன்படுத்துவார் என்று நீங்கள் சொன்னால் பைபிள்மட்டுமே மெய்யான புனிதநூல் — மற்ற மதங்களின் சாத்திரங்கள் எல்லாமே பொய் என்ற உங்களது அடிப்படையான நம்பிக்கை, கருத்து, பிரச்சாரம் தவிடுபொடியாகிவிடுமே!
மாறாக, அனைவரும் பைபிளின் அடிப்படையிலே நியாயத்தீர்ப்பு நாளிலே விசாரிக்கப்படுவார்கள் என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் அது இரக்கமற்ற அநீதியானதாகும். கிறிஸ்தவர் அல்லாதவர்களை, அவர்தம் வாழ்நாளில் அறியாத புனிதநூல் விதிக்கும் நெறிமுறைகளின்படி வாழவேண்டும் என்று எதிர்பார்ப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா? ஆகவே, இயேசுவிடத்தில் நியாயத்தீர்ப்பு நாளில் விசாரணைசெய்து நீதிவழங்குவதற்கு பொதுவான சாத்திரமோ சட்டமோ இல்லை என்பதும் தெளிவு.
இறுதித்தீர்ப்பு நாளிலே தன்னை நம்பாத விசுவாசிக்காத மனித உயிர்களை ஹெல் [Hell] என்னும் எரிநெருப்பிலே, நரகத்திலே தள்ளுவார் என்று நீங்கள் சொல்கின்றீர்களே! தாயின் கருவரையிலே மரித்துப்போன மனித உயிர்கள் பலகோடி இருக்குமே! பிறக்கும்போது இறந்த குழந்தைகளும் பலப்பல இருக்குமே! பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள் எனப்பலப்பல மனிதர்கள் இருந்திருப்பார்களே!
கிறிஸ்தவமே வழக்கில் இல்லாத நாடுகளில், தமது சாஸ்திரங்களின்படி நேர்மையாக வாழ்ந்தவர்கள் பலப்பலர் இருந்திருப்பார்களே! இவர்களுக்கெல்லாம் இயேசுவையோ பைபிளையோ அறிவதற்கோ நம்புவதற்கோ, விசுவாசிப்பதற்கோ வாய்ப்பு எதுவுமே இருந்திருக்காதே! அப்படிப்பட்டவர்களை நரகத்தில் இடுதல் கொடுமையானது, அநீதியானது. அது ஆண்டவனின் செயலாகவும் இருக்கமுடியாது.
பைபிளைப் படித்தபின்னும் கிறிஸ்தவரல்லாதவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். பைபிளில் உள்ளவை கடவுளின் வார்த்தைகள் என்றக்கருத்தை அவர்கள் நம்பாமல் இருந்திருக்கலாம். இயேவை நம்பவோ விசுவாசிக்கவோ அவர்கள் மறுத்திருக்கலாம். ஆனாலும் அவர்கள் தமது மதப்பெரியார்கள் சொன்ன நெறிமுறைப்படி வாழ்ந்திருக்கலாம். அத்தகைய நல்ல மனிதர்கள் சொர்க்கத்துக்குப் போவார்களா, இல்லை எரிநரகத்தில் இடப்படுவார்களா? அவர்களுக்கு சொர்க்கம், நித்தியவாழ்வு கிடைக்கும் என்றால் இயேசுவை விசுவாசிக்காதவர்களுக்கு நரகம் என்ற உங்கள் பிரச்சாரம் பொய்யாகிவிடுமே!
முதல்பாவத்துக்கு மூலவரான ஜெஹோவா நீதிபதியா?
உங்கள் தேவனாகிய ஜெஹோவா தூய்மையற்ற புலன்கள், மதம், மாத்சரியம் காமம், கோபம், போன்ற தீயகுணங்களோடுதானே மனிதர்களைப் படைத்தார்? அதே ஜெஹோவாதானே தன்னைத்தவிர வேறு யாராலும் பின்பற்றவே முடியாத சட்டங்களை அத்தகைய மனிதர்களுக்கு வழிகாட்ட அளித்தார். அப்படிப்பட்ட உங்களது தேவன் அதே மனிதர்களைப் பாவிகள் என்று நியாயத்தீர்ப்பு நாளிலே தீர்ப்பளிப்பது சரிதானா? நரகத்தில் தள்ளுவதும் முறையோ?
மனிதர்களைப் படைத்தபோதே அவர்களைத் தூய்மையற்றவர்களாக ஜெஹோவா என்னும் தேவன் படைக்கவில்லை என்று நீங்கள் வாதாடலாம். அப்படியானால் மனிதர்களிடத்தில் அசுத்தம் வந்தது எப்படி? அவர்கள் தூய்மையற்றவர்களானது எப்படி?
அந்த மனித உயிர்கள் முதல் பாவத்தினால் தீயகுணங்களைப் பெற்றனர் என்று நீங்கள் வாதாடலாம். அப்படியானால் ஆதிமனிதர்கள் முதல் பாவத்தைச் செய்யக்காரணமான பேதமை, மடமை அவர்களுக்கு வந்தது எப்படி? எப்படிப் பார்த்தாலும் ஆதிமனித மனித உயிர்கள் தூய்மையற்றவர்களாகவே ஜெஹோவா என்ற உங்கள் தேவனால் படைக்கப்பட்டன என்பதாகத்தானே தெரிகின்றது?
ஆதியில் — படைப்பின் ஆரம்பகாலத்தில் — எது எப்படி நிகழவேண்டும் என்று ஜெஹோவா விதிக்கவில்லை என நீங்கள் வாதாடலாம். அப்படியானால் ஜெஹோவாவிற்கு முற்றறிவோ, ஞானமோ, அல்லது சர்வவல்லமையோ இல்லை என்பதாக அது பொருள் தந்துவிடும். ஜெஹோவாவிற்கு அத்தகைய வல்லமை இருந்திருந்தால் எது நடக்கவேண்டும் என்பதை அவர் ஆதியிலே நிச்சயம் செய்திருப்பார்! ஜெஹோவா நிச்சயித்தபடி ஆதிமனிதர்கள் நடந்துகொள்ளவில்லை, அவர்கள் வாழ்வு நகரவில்லை என்று நீங்கள் கூறினாலும் சர்வவல்லமை, சர்வக்ஞதை அவருக்கு இல்லை என்றே பொருள்பட்டுவிடும். ஆகவே ஜெஹோவாவின் சட்டப்படியே, திட்டப்படியே எல்லாம் நிகழ்கின்றன என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது ஒரு சிறு குழந்தைகூட ஜெஹோவாவோ அல்லது அவரது ஏகபுத்திரனான ஏசுவோ நீதிமான் அல்லர் என்பதைப் புரிந்துகொள்ளும். ஜெஹோவா ஆதிமனித மனித உயிர்களை தூய்மை அற்றவைகளாகப் படைத்தார்! அவர்களுக்கு அறிவைத்தரும் மரத்தைப்படைத்து, அதன் கனிகளை உண்ணாதே என்று உத்தரவிட்டார்! அவரேதான் அவர்களை ஆண்டவன் கட்டளையை மீறத்தூண்டிய சாத்தானையும் ஏற்கனவே படைத்திருந்தார்! ஆக, ஆதிமனிதர்கள் செய்த முதல்பாவத்திற்கு எல்லாவகையிலும் ஜெஹோவாவின் தவறுகளே காரணமாக இருந்திருக்கின்றன. அத்தகையவர் கருணையுள்ளவராக தம்மைக் காட்டிக்கொண்டு தம்முடைய பிள்ளையின் தியாகத்தால் மனிதர்களின் பாவங்களைத் தாமே ஏற்றுக்கொண்டு அவர்களைத் துன்பங்களிருந்து மீட்பார் என்பது நாடகமன்றி வேறென்ன! மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணமான படைப்பின் நாயகனே நீயாயத்தீர்ப்பு நாளிலே அவர்களுக்கு நீதியும் வழங்குவார் என்பதும் அநீதியல்லவா? தம்மைப் பின்பற்றாதவர்களை நரகத்தில் தள்ளுவார் என்பதும் அநீதியன்றோ! குற்றங்களுக்கு மூலகாரணரான ஜெஹோவாவே குற்றவாளிகள் என்று யாரையும் தண்டிப்பார் என்பதும் அநீதிதான்.
இயேசுவை நம்பாமல் விசுவாசிக்காமல் இருப்பதே பாவம் என்றும் உங்கள் பைபிள் சொல்கின்றது. அதேசமயத்தில் இயேசு பிறப்பதற்கு முன்னரும் அதற்குப்பின்னரும் மனித உயிர்கள் செய்தபாவங்களுக்காக அவர் துன்புற்றார் என்றும் சொல்கின்றீர்கள். அப்படியானால் அவரை விசுவாசிக்காதபாவமும் இயேவைத்தானே சேரவேண்டும்? உலகில் தோன்றிய, தோன்றப்போகும் மனித உயிர்களின் பாவங்களையெல்லாம் இயேசுவே தன்மேல் ஏற்றுக்கொண்டார் என்றுதானே உங்கள் பரிசுத்தவேதாகமம் சொல்லுகின்றது? அப்படியானால் இயேசுவே அவர்கள் அனுபவிக்க வேண்டிய நரகத்துயரை அனுபவித்தாக வேண்டுமே! அப்படியிருக்க அவரை நம்பாத மனித உயிர்களை எரிநரகத்தில் அவர் இடர்ப்படவிடுவார் என்பது அநீதி அல்லவா?
இறுதித்தீர்ப்பைப்பற்றிய மேற்கண்ட தவறும் தண்டனையும் என்ற எமது விவாதமும் இயேசுவுக்கும் அவரது பிதாவாகிய ஜெஹோவாவுக்கும் கடவுளுக்குரிய தெய்வீகத்தன்மைகள், லக்ஷணங்கள் ஏதும் இல்லை என்பதை தெளிவாக்குகின்றன.
குறிப்புகள்:
[1] மாயன் காலெண்டரை வைத்து சமீபகாலத்தில் இவர்கள் செய்த பிரச்சாரத்தை, மதமாற்ற முயற்சிகளை நாம் இங்கே நினைவு கூறலாம். “உலகின் முடிவு நெருங்கிவிட்டது, இயேசுவை விசுவாசித்தால் சொர்க்கத்துக்குபோய் சுகமெல்லாம் அனுபவிக்கலாம். இல்லையேல் நரகத்தில் எரிந்துகொண்டே இருப்பீர்கள். கிறிஸ்தவராகுங்கள்!” என்பதே அவர்தம் பிரச்சாரம்.
[2] Soul என்றக் கிறிஸ்தவக்கருத்துருவும் ஆன்மா, உயிர் என்ற பாரதியக்கருத்தும் வேறுபட்டவை. மனிதருக்குமட்டுமே மனித உயிர் உண்டு என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. ஜெஹோவா ஆதியில் படைத்த மனிதர்களின் சந்ததியினரே மனித உயிர்கள். ஆகவே இங்கே மனித உயிர்கள் என்பது மனித உயிர்களுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகின்றது.



இந்த நூலில் சுவாமிகள் கிறித்தவமதத்தின் ஆதாரக்கருத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு, தமது ஆணித்தனமான மறுக்கவியலாத வாதங்களால் உடைத்தெரிகிறார். அவர்களின் புனித நூலிலில் இருந்தே மேற்கோள்களைக்காட்டி, ஜெஹோவாவும் இயேசுவும் தெய்வீகத்தன்மை அற்றவர்கள் என்று நிறுவுகிறார். மேலும் பைபிள் சில கைதேர்ந்தவர்களால் புனையப்பட்டக் கட்டுக்கதையென்றும் அவர் சொல்கிறார்.
தவம், தானம், ஜபம், யக்ஞம், வேத அத்யயனம்(ஓதுதல்) ஆகியவற்றை உங்களுடைய சுயநலத்திற்காகச் செய்வதாக நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா! ஆனால் மிஷனரிகளின் மதமாற்றத்தினைத் தடுக்கும் உங்களதுசெயல்கள் உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் பெரும் புகழைக் கொடுப்பதோடு, அறியாமையில் இருக்கும் மக்கள் கிறிஸ்தவப் படுபாதாளத்தில் விழுவதிலிருந்துக் காப்பாற்றவும் முடியும்.
கர்த்தராகிய ஜெஹோவா

மீளமுடியாத நரகத்தின் அச்சத்தில் ஜெஹோவாவிற்கு அஞ்சி நடுநடுங்கி மனித ஆன்மாக்கள் அவரது மகிமையை போற்றிப்புகழ் பாடுவார்கள். அவரது மகிமை அந்தப்புகழ்ச்சியால் ஒளிரும். அப்படிப்பட்ட புகழ்ச்சிக்காகவே தனது மகிமையை விளங்கச்செய்யவே, அவர் படைப்பை மேற்கொண்டார். ஆகவே ஜெஹோவாவின் படைப்பின் நோக்கம் அவரது சுயநலத்திற்காக மட்டுமே இருக்கமுடியும்.
உதாரணமாக ஒரு பானையை எடுத்துக்கொள்ளலாம். பானை, மண்ணிலே மறைந்திருக்கிறது. அது குயவரால் வெளிப்படுத்தப்படுகிறது. இங்கே மண்ணே முதற்காரணம் ஆகும். குயவன் நிமித்தக்காரணன் ஆவான். சக்கரம் மற்றும் அதை இயக்கும் கோல் ஆகியவை துணைக்காரணங்கள் ஆகும்.
ஒரு தந்தை அழகான விஷப்பழங்களை வீட்டுக்கு வாங்கிக் கொண்டுவருகிறார். அதை சாப்பிடக்கூடாது என்று தனது குழந்தைகளுக்கு சொல்கிறார். அவர் இல்லாத சமயத்தில் அந்தப்பழத்தின் அழகிலும் நிறத்திலும் தூண்டப்பட்ட அக்குழந்தைகள் அதனைச் சாப்பிட்டுவிடுகிறார்கள். அதனால் அவர்கள் நோய்வாய்ப்பட்டுத் துன்புறுகிறார்கள்.
ஆதி மனிதர்களைப் படைக்கும்போதே ஜெஹோவா அவர்களுக்குப் பகுத்தறிவையும் கொடுத்திருந்தால் அவர்களுக்கு அவர் தங்கள் கர்த்தர் என்றும், அவருக்குக் கீழ்பணிந்து நடத்தலே நல்லது என்றும் அவரது ஆணையைமீறுதல் தீது என்றும் தெரிந்திருக்குமே? கண்களைத் திறந்து, பகுத்தறிவைத் தரும் கனியைகொடுக்கும் மரத்தினைப் படைக்கும் அவசியம் அவருக்கு இருந்திருக்காதே!
சாத்தானின் ஏமாற்றும் நோக்கத்தினை எங்கள் கர்த்தர் அறிவார் ஆனால் அவனது தீச்செயலைத்தடுக்கவில்லை என்று நீங்கள் வாதிடலாம். அவனது தவறான செயல்களை அவர் தடுக்காதது ஏன்? அவரது சர்வவல்லமை பொய்யானதா? என்ன நடக்கிறது என்பதை அறிந்திருந்தும் அவர் அதனை அனுமதித்திருந்தால் கருணையற்றவரா அவர்? கொடியவிலங்கிடம் அகப்பட்டு பிள்ளைகள் துன்புறுமானால் அவர்களின் தந்தை அதனைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா? தம் குழந்தைகளைக் காப்பாற்ற ஓடோடி வருவாரா இல்லையா? அப்படித் தமது பிள்ளைகளைக் காப்பாற்றவராத தந்தை ஒரு தந்தையா? எல்லா மனிதர்களுக்கும் எங்கள் ஜெஹோவா தந்தை என்று நீங்கள் சொல்வது சரிதானா?
உங்கள் பரிசுத்த வேதாகமாகிய பைபிள் சாத்தான் மனிதரின் மனதைக் கெடுத்தான் என்று சொல்கிறது. அதே பைபிள் தன்னால் படைக்கப்பட்ட தேவதை ஒன்று கெட்டுப்போய்விட்டதால் கர்த்தரால் சபிக்கப்பட்டு சாத்தானானது என்றும் சொல்கிறது. மனிதரின் புத்தியைக் கெடுக்க சாத்தான் இருந்தது என்றால் அந்த சாத்தானின் புத்தியைக்கெடுத்த தீயசக்தி யார்? அப்போது கர்த்தராகிய ஜெஹோவைத்தவிர யாரும் இல்லையே?
ங்கள் பரிசுத்த வேதாகமாகிய விவிலியத்தின் கீழ்க்கண்ட வசனங்கள் உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா பொறாமைகொண்டவர், எரிச்சலுள்ளவர் என்பதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.
வானளாவிய கோபுரம் ஒன்றை மக்கள் கட்டமுயல்வதைக்கண்ட ஜெஹோவா அதனால் அவர்கள் பெரும்புகழ் பெறுவார்கள் என நினைத்தார். அதனால் அவர்களது ஒற்றுமையை சிதைத்தார். அவர்களை பூமி முழுதும் சிதறிப்போகச் செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தை கட்டிமுடிக்கமுடியாமல் போயிற்று என்றும் உங்கள் விவிலியம் சொல்லுவதை இங்கே நினைவுகூறுங்கள்.
பிறகு, தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். தேவனாகிய கர்த்தர் தன் உயிர்மூச்சினை அவன் மூக்கில் ஊதினார். அதனால் மனிதன் உயிர்பெற்றான்.” — (ஆதியாகமம் 2:7).
.jpg)













அவர்கள் கண்டது இயேசுவைத்தானா, அல்லது வேறு ஒருவரையா? இயேசுவோடு பலகாலம் கூட இருந்தவர்கள், அவருக்கு சேவை செய்தவர்கள்கூட அவர் உயிர்த்தெழுந்ததை சந்தேகப்பட்டார்கள், அவர் உயிர்த்தெழுந்ததை நம்பவில்லை என்றால் 1890(தற்போது 2016) ஆண்டுகளுக்குப் பின்னர் வாழும் நாங்கள் எப்படி அதை நம்புவது? .
இயேசுவைக் கைதுசெய்த யூதர்கள் அவரது கண்களைக்கட்டிவிட்டு, கேலிசெய்தனர். கன்னத்தில் அறைந்து, உம்மை அடித்தது யார் என்று கேட்டார்கள். அதற்கு அவரால் எந்த பதிலையும் சொல்லமுடியவில்லை. இயேசுவை சந்தித்தபோது மகிழ்ச்சி அடைந்த ஏரோது மன்னன் ஒரு அற்புதத்தை நிகழ்த்தவேண்டினான். அப்போதும் எந்த அற்புதத்தையும் அவர் நிகழ்த்தவில்லை.







