New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா...? பழனி பாபா


Guru

Status: Offline
Posts: 24811
Date:
பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா...? பழனி பாபா
Permalink  
 


photo+003.jpg 1.jpg  2.jpg

புனித பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா...? ஆசிரியர் ஷஹித் பழனி பாபா

என்னுரை

அன்புச் சகோதரர்களே!
சாந்தியும் சமாதானமும் நம் மீது உண்டாகட்டும்!

என்னை ஆத்திரத்தோடு பார்க்காதீர்கள்; அதிலுள்ள நிறைகள் உங்களுக்குத் தெரியாது!! அனுதாபத்தோடு பார்க்காதீர்கள். அதிலுள்ள குறைகளும் தெரியாது போய்விடும். எனவே நடுநிலையோடு பாருங்கள். நாளைய இளைய சமுதாயத்துக்கும் நல்ல வழி காட்டிய பெருமை சேரும்.
"பைபிள்" இது கடந்த 7 நூற்றாண்டுகளாக அதிகம் அச்சடிக்கப்படும் நூல். 14-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் "காக்ஸ்டன்" என்பவர் அச்சு இயந்திரம் கண்டு பிடித்ததும் முதன் முதலில் அச்சு ஏறிய புத்தகம் தான் "பைபிள்".

இதன் வரலாற்றுச் சுருக்கம்

மோசஸ் (முஸாநபி)க்கு வழங்கிய பழைய ஏற்பாடும் புனித ஆவிகள் புகுந்து வெளிப்படுத்திய " புதிய ஏற்பாடுகளும்" கலந்த கலவை நூல் புனித வேதாகமம்.

இது தான் கிறிஸ்துனர்களும் யூதர்களும் கூறும் கூற்று.
இன்றைய உலகின் இரண்டாவது மிகப் பெரிய இனமான கிறிஸ்துவர்கள் இதை ஏற்றுப் போற்றி வருகிறார்கள்.
இந்நூல் குறித்து உலகின் மூன்றாவது பெரிய மார்க்கமான இஸ்லாமியர்களின் "திருக்குர்-ஆனும்" அதிகமாகவே கூறுகிறது.
'தவ்ராத்'Old Testament என்றால் இன்ஜீல் என்றால் New Testament ஏசு நாதருக்கு அருளப்பட்டது.'திருக்-குர்-ஆன்' முஹம்மது நபிகள் பெருமானாருக்கு அருளப்பட்டது என்கிறார்கள். இன்று வேதத்தை உடைய மக்கள் நால்வரே.

யூதர்கள்- பழைய ஏற்பாடு
கிறிஸ்தவர்கள் -பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கலந்த பைபிள்.
முஸ்லிம்கள் - குர்-ஆன்
இந்துக்கள் - ரிக்,யஜுர்,சோமா,அதர்வனா
எச்சமயமும் சாராமைக்கு - திருக்குறள்

இவையனைத்துமே ஆண்டவனால் அருளப்பட்டது. எக்காலத்துக்கும் எச்சமூகத்துக்கும் எச்சூழ்நிலைக்கும் ஏற்றவையாக உள்ளது என்று எல்லோருமே கூறி எக்காளமிடுகிறார்கள், வாதாடுகிறார்கள், வழக்கிடுகிறார்கள், வம்பிடுகிறார்கள், வன்மையான போருமிடுகின்றனர்.

எனவே எது ஆண்டவனால் அருளப்பட்ட புனித நூல்? எது எச்சமூகத்துக்கும் எச்சூழ்நிலைக்கும் ஏற்றவை என்பதை, எது சாதாரண பாமர மகனும் படித்துப் பின்பற்றத் தகுந்தவையாக உள்ளது என்பதையும் நடுநிலையோடு மதவெறிக்கு அப்பாற்பட்டு, உள்ளதை உள்ளபடி உரைக்கின்றேன்.

ஏற்றுக்கொள்வதும் எடுத்து எறிவதும் உங்கள் தலையெழுத்தைப் பொருத்த விஷயம். நீங்கள் ஏற்றுக் கொள்வதால் நான் வளர்ந்து விடப் போவதுமில்லை, எடுத்து எறிவதால் தளர்ந்து விடப்போவதுமில்லை. பரந்த மனதோடு திறந்து வைக்கிறேன். திறந்த மனதுள்ளவர்களுக்காக!

எது புனித நூல்?

இறைவனால் அருளப்பட்ட நூலாயிருக்கின்ற ஒன்று. எவ்வித மாற்றங்களும், முரண்பாடுகளுக்கும், விதண்டா வாதங்களுக்கும் சந்தேகத்துக்கும் இடமின்றி அசிங்கங்களுக்கும், அனாச்சாரங்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத் தலைவர் படித்து அர்த்தம் சொல்ல அன்னை,தங்கை, தம்பி,உறவுகளுடன் உட்கார்ந்து பயபக்தியோடு கேட்டு ஆமோதித்து ஜபிக்கப்பட வேண்டும். இதுவே சுருக்கமான அளவுகோல்!!

அஹ்மத் அலி பழனி பாபா

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

ஆகாயத்திலே நடந்த உண்மை

(Gulf Airlines) கல்ப் ஏர்லைன்சில் நான் கொழும்பு விமான நிலையத்திலிருந்து பஹ்ரின் செல்கிறேன். நான் முதல் வகுப்பில் ஏறுகிறேன்.மூன்றாம் வகுப்பு முழுவதுமிலங்கையிலிருந்து வேலை பெற்றுஅ செல்லும் பணியாட்கள். முதல் வகுப்பு காலியாக உள்ளது.
கடந்த 22 வருடங்களாக பைபிளையும் மற்ற வேதங்களையும் ஆராய்ந்து, பல மதத்தவர்களுடன் நெருங்கிப் பழகி வாதிட்டு அவர்கள் கூறும் விளக்கங்களையும் அடக்கத்துடன் கூர்ந்து ஏற்று என் அறிவுப்பசிக்குத் தீனி தேடிக் கொண்டவன்.

பைபிளை எடுத்து வைத்துப் படிக்கிறேன். நான் பெரும்பாலும் அரபி உடைகளையே விரும்பி அணிவேன். மேலொட்டமாய்ப் பார்த்தாலும் கிறிஸ்துவ தோற்றம். தலையை மூடியிருப்பதைக் கண்டால் முஸ்லிமின் வடிவம். 20 நிமிலம் கழித்து பயணிகள் அதிகமில்லாததால் பணிப்பெண் வந்து பணிவிடைகளை முடித்து விட்டு என் தேவைகளுக்காக நின்றவர் நீண்ட நேரம் குழம்புகிறார். பின்னர் மெதுவாய் பாதர் நீங்கள் கிறிஸ்துவரா? முஸ்லிமா? என்று நான் தெரிந்து கொள்ளலாமா? என்கிறார்.

"ஆட்சேபகரமற்று நான் ஒரு முஸ்லிம்" என்றேன்.

"முஸ்லிம் கையில் பைபிளா? ஏனிந்த மாற்றம்? எப்படி வந்தது இந்த ஆகர்ஷனம் (Attraction? பைபிளின் புனிதம் இப்படி மாற்றங்களை ஏற்படுத்துவதுதான்! தேவனின் மகிமையை என்னென்பேன். ஒ! ஜீஸஸ்" கண்களில் நீர்த்துளிகள். மெய்சிலிர்க்கப் பேசுகிறார்.

அவரின் ஆதங்கம் தணியும் வரை நான் மவுனமாயிருக்கிறேன். பிறகு மெதுவாய்ப் பேசினேன்.

"சகோதரியே! உங்கள் வயது?"

"22 வயது"

" எனக்கு 38 வயது ஆகிறது. நீங்கள் பைபிளை எத்தனை வருடமாய் படிக்கிறீர்கள்?"

" சிறு வயது என்றால், சுமாராக எத்தனை வயதில்?"

" 12 வயது முதல்!"

" அப்படியானால் 10 வருடமாய் படிக்கிறீர்கள்- நான் எனது 15 வயது முதல் இன்று 23 ஆண்டுகளாய் படிக்கிறேன்.!"

" நானும் ஐந்து ஆறு வருடமாய் தீவிரமாய் படிக்கிறேன்!"

" நீங்கள் - புராட்டஸ்டண்டா - கத்தோலிக்க்ரா? பியூரிட்டடா - கிறிஸ்துவரின் எப்பிரிவு?

" நான் ரோமன் கத்தோலிக்!"

" வெரிகுட்! உங்களுக்குள் இத்தனைப் பிரிவுகளும் ஒரே பைபிளை கடைப்பிடிக்கிறீர்களா?"

" இல்லை . நான் தேர்ந்தெடுத்தது K.J.V (King James) வர்ஷன்."

" பைபிளை எழுதியது யார்?"

" யார் சொன்னது எழுதியது என்று? பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டது?".

" யார் மூலமாக?"

" ஏசுநாதர் (ஈஸா நபி) மூலமாக!"

" அப்படி என்றால் அதற்கு முன் பைபிள் இல்லையா?"

" அதன் பெயர் பழைய ஏற்பாடு (Old Testament) "

" ஏசுநாதர் தான் இதை அருளினார் என்று பைபிளில் எங்கே போட்டுள்ளது? நான் தான் கடவுள்; என்னையே வணங்குங்கள்; என்று ஏசு எங்காவது ஓரிடத்தில் சொல்லி உள்ளாரா?"

" பார்த்துத் தான் சொல்ல வேண்டும்."

" சரி போகட்டும் என் சகோதரியே!

ஒரு புனித நூல் என்றால் - கடவுளிடமிருந்து இறங்கியது என்றால், அதில் முரண்பாடுகள் இருக்கக் கூடாதல்லவா?"

" கட்டாயமாக!"

" இறங்கியது முதல் அது உருமாறாது யாராலும் திருத்தப்படாது, அப்பழுக்கற்று அப்படியே இருக்க வேண்டுமல்லவா?"

" நிச்சயமாக!"

" சகோதரியே! எல்லா சுவரிலும் எல்லாச் சர்ச்சுகளிலும் பொதுவாக என்ன எழுதி உள்ளது? ஏசு எதற்காக இப்பூவுலக்கு வந்தார்?"

" ஏசு சமாதானத்தை போதிக்க வந்தார் என்று எழுதியுள்ளது. ஏசு சமாதானத்தையே விரும்பினார் என்று நாங்களனைவரும் ஏற்றுக் கொள்கிறோம்."

" சகோதரியே, பைபிளில் என்ன போட்டுள்ளது பாருங்கள்."
என்கையிலுள்ள பைபிளை தருகிறேன்.

49. பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன், அது அப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.

51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தை அல்ல. பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.

52. எப்படியெனில், இது முதல் ஒரே வீட்டில் ஐந்து பேர் பிரிந்திருப்பார்கள், இரண்டு பேருக்கு விரோதமாய் மூன்று பேரும் மூன்று பேருக்கு விரோதமாய் இரண்டு பேரும் பிரிந்திருப்பார்கள்.

53. தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
லூக்கா - 12:49,51,52,53

34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள். சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.

35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
மத்தேயு - 10:34,35
ஏசுவின் வரிகளைச் சுட்டிக்காட்டியதும், பைபிளை என் கையிலிருந்து பிடுங்கி மேற்படி வசனங்களை திரும்பத் திரும்ப படிக்கிறார்.

முகம் சிவக்க, மனம் குழப்ப, புருவம் நெளிய தயவுடன் கொஞ்சம் இருங்கள்!(Excuseme) எனக்கூறிவிட்டு நெரெ(Cabincrew) பணிப்பெண்கள் அறை நோக்கிச் சென்று தனது பைபிளை எடுத்து புரட்டுகிறார். அட்டை, விலாசம்,அடிக்கப்பட்ட இடம் இவைகளை சரிப்பார்க்கிறார். இரண்டும் ஒன்று தான். வாசகங்களும் ஒன்றே! ஒரு பாட்டில் நீர் கொண்டுவந்து முழுவதும் குடிக்கிறார், வியர்வைத் துடைக்கிறார், சோர்ந்து அமர்கிறார், தன் கண்களையே நம்ப முடியாது தவிக்கிறார்.

அவரின் குழப்ப நிலையைக் கண்ட நான் " என்ன அன்புச் சகோதரியே! தங்கள் மனம் புண்படும்படி நான் ஏதாவது கூறியிருந்தால் மன்னியுங்கள். எனக்கு உங்கள் வயதில் சகோதாரிகளுண்டு.என் கருத்தை நான் கூறவில்லை. பைபிளில் உள்ளதையே எடுத்து வைத்தேன்! பாவம் உங்கள் 10 ஆண்டு பைபிளின் பாசத்தை நான் சிதைத்து விட்டேனா?"

' இல்லை சார், எனக்கு அதிர்ச்சியாய் உள்ளது! எப்படி இப்படி எழுதப்பட்டுள்ளது? யார் இப்படி செய்தது? என்னால் நம்ப முடியவில்லை!'

" சகோதரியே, அதை முஸ்லிம்களோ இந்துக்களோ செய்யவில்லை, செய்யவும் முடியாது. இதை சரிபார்த்தவர்கள் லிஸ்ட்டில் 32 மேதாவிகள் (Bible Scholars and 52 Demominations) 52 - உயர் பாதிரிஸ்தானிகர்கள் கூடி சரிப்பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதனால் மொழிபெயர்ப்பில் கோளாறு இல்லை. அப்படிக் கருத்தில் கொண்டாலும் இதோ தழிழ் பிரதி, இதுவும் அப்படியே! இதோ அரபிப்பிரதி" (தனக்கும் அரபி தெரியும் என்று வாங்கிப் படிக்கிறார்) ஆமோதிக்கிறார்.

" சகோதரியே! ஏசுநாதர் பேசிய மொழி என்ன?"

" அராமிக் (ARAMIC)"

" பைபிளிம் மூலப்பிரதி எந்த மொழியில் இருந்தது?"

" ஹிப்ரு (HEBREW)"

" தற்போது அராமிக் மொழியும் வழக்கில் இல்லை, மூலப்பிரதியும் காணாது போய்விட்டது."

" அராமிக் வழக்கில் இல்லை - பைபிளின் மூலப்பிரதி காணாது போய்விட்டது என்று யார் சொன்னது?"

" பைபிளே சொல்கிறது."

கடைசியில் திறந்து Summary of the book of the bible ( நூல் வரலாறு)K.J.V என்ற தலைப்பின் கீழ்: அதில் உள்ள வாசகம் இதோ!

NEW TESTAMENT

The New Testament, Which has a total of twenty seven Books, being with the four Gospels, which record the life and teachings of christ from four different view points Although the Originai autograph No Longer Exist.

27 புத்தகங்களைக் கொண்ட புதிய ஏற்பாடானது 4 சுவிஷேஷங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு ஏசுநாதரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை நாலு கோணங்களில் பதிவு செய்கிறது. அதன் மூலப்பிரதி காணாமல் போய்விட்டதால்...

" சகோதரியே, நிலைமை இப்படி இருக்க நீங்கள் எதைவைத்து இதை நிருபிப்பீர்கள்? கடவுளால் அருளிய வேதம் காணாமல் போனதா? எப்படிச் சகோதரியே நம்புவது? காலம் காலமாய் கடைசி நாள் கியாமத் (Day of Judgemant) வரை வழிகாட்ட வேண்டிய நூல் எங்கோ வழி தவறினால், அதைப் பின்பற்றினால் என்ன நிலைமை? குருடன் குருடனுக்கு வழிக்காட்டினால் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? அதுவும் வழிகாட்ட வந்த முதல் குருடனே காணாது போன பின், அடுத்தவன் அழைக்கிறான் - வாருங்கள் அவன் காட்டிய பாதையில் நான் கூட்டிச் செல்கிறேன், " ஏசு அழைக்கிறார்" என்று கூப்பாடு போட்டால் - எப்படியம்மா ஏற்றுக் கொள்வது? நான் பரந்த மனதுடனே கேட்கிறேன் எது சரி - சகோதரியே?

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

பிறகு, " ஏசுவை நீங்கள் என்னவென்று நினைக்கிறீகள்?" என்றேன்.

" அவரே கடவுள் என்று எண்ணி வழிபடுகிறேன்" என்றார்.

" சரி - அவர் கடவுள் என்றால் , எதை வைத்து அவரைக் கடவுள் என்கிறீர்கள்?"

" ஒரே வரி உலகில் யாருமே உடலுறவற்று பிறக்கவில்லை. அவரே - அவர் மட்டும் தந்தையற்று பிறந்துள்ளார்".

" தந்தை இல்லாது பிறந்ததனால் மட்டுமே அவர் இறைவன் என்றால் அதே பைபிளில் வரும் ஆதம் - ஏவாள் (ADAM & EVE) தாயுமற்று தந்தையுமற்று பிறந்துள்ளானரே! அவர்களை எப்படி அழைப்பது Super God என்றா?

ஆரம்பமும் அர்று முடிவும் அற்று, தாயும் இன்றி தகப்பனும் இன்றி, வம்ச வரலாறு, வம்ச வழியும் இன்றி, சமாதானத்தின் ராஜா மெல்கிதேக்கு(Kings of Peace)என்றழைக்கப்படும் தீர்க்கதரிசி பற்றி பைபிளின் எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் வருகிறதே - அதிகாரம் 7:2 முதல் 4வது வசனம் வரை - அவரை ஏன் கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை?

ஏசுநாதரே கடவுள் என்றால், அவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படும் 3 நாள் இப்பூலகையும், கோள்களையும் வான்களையும் ஜீவராசிகளையும் யார் கவனித்துக் கொண்டது?

அவரது தாயின் வயிற்றில் 10மாத வளர்ச்சியின் போது உலகையாரம்மா கவனித்துக் கொண்டது?

நாத்திகனுக்கு இவைகள் நல்ல பிடியாகி விட்டதே!

ஏசுநாதரின் கடைசி வார்த்தைகள் என்ன என்று பைபிள் சொல்கிறது?

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு " ஏலோயீ! ஏலோயீலாமா சபக்தானி" என்று மிகுந்த சப்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு 'என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று அர்த்தமாம்.
மாற்கு 15:34

அவரே தேவன் (கடவுள்) என்கிறீர்கள். ஆனால் அவரே 'என் தேவனே! என் தேவனே!! ஏன் என்னைக் கைவிட்டீர்' என்கிறார். யாரையம்மா அழைத்தார்? தன்னைத் தானே அழைத்தாரா? ஏனிந்த குழப்பம்?"

மவுனம் பதிலாய் உள்ளது.

" கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கப்பெறும் என்று மத்தேயூ - 7:7ல் கூறியுள்ளப்படி நாம் கேட்டு கடவுளிடமிருந்து கிடைப்பது ஒரு பக்கமிருக்கட்டும். இவர் கேட்டே கிடைக்கவில்லையே! எப்படியம்மா இவர் பேச்சை நாம் கேட்பது என்று எந்த பாமர மகனும் யோசிப்பானல்லவா?"

இதற்கும் அச் சகோதரியிடமிருந்து மவுனமே பதிலாய் வந்தது.

" ஒரு புனித நூல் அனாச்சாரங்களுக்கும் அசிங்கங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டுமல்லவா? யாரோடும் ஆண், பெண் பேதமின்றி, பகிர்ந்து அர்த்தத்துடன் படிக்க வேண்டுமல்லவா? ஒரு புனித நூலை ஓதும்போது மனது கலக்கமோ, தயக்கமோ இன்றி உள்ளம் தெளிவடைய வேண்டுமல்லவா? மாறாக குழப்பமோ குதர்க்கமோ ஏற்பட்டால் அது புனித நூலாகாதல்லவா?"

" ஆமாம்!"

" சரி, சகோதரியே! நீங்கள் குளிக்கும்போது நான் மாடியிலிருந்து பார்ப்பது கூடுமா?"

" தண்டனைக்குரிய குற்றம்"

" சாதாரண மனிதனான எனக்கே கூடாது என்றால் இறைநேசச் செல்வர்கள் இதைச் செய்யலாமா?"

" யார் செய்தாலும் மிகப் பெரிய தண்டனை தரப்பட வேண்டும்".

" அப்படியானால் டேவிட்டை ஏன் தன்டிக்கவில்லை?"

" எந்த டேவிட்?"

(DAVID தாவூது) பைபிளில் வரும் ஏசுவின் முன்னோர்கள், ஏசுவின் பரம்பரை பட்டியலில் முதல் இடம் வகிப்பவர்!" (Genealogy)

" எங்கே போட்டுள்ளது?"

" இதோ - சாமுவேல் - அதிகாரம் - 11"
II Samuel - Chapter II version: 2 to 5

அதிகாரம் பதினொன்று சாமுவேல்

2. ஒரு நாள் சாயங்காலத்தில் தாவீது ( டேவிட் ) தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை உப்பரிகையின் மேல் உலாத்திக் கொண்டிருக்கும் போது ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள்.

3. அப்போது தாவீது அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும், எத்தியனான உரியாவின் ம்னைவியுமாகிய பத்சேபாள் - என்றார்கள்.

4. அப்போது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான், அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோட சயனித்தான். பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக் கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.

5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினான்.

" போதும் நிறுத்துங்கள் சகோதரியே! ஒரு நபி - ஒழுக்கத்தை போதிக்க வேண்டியவரே - விபச்சாரம் அதுவும் பிறன் மனைவி என்று விசாரித்து தெரிந்து இந்தத் தவறை செய்துள்ளார்.

" அதன் பின்னால் உரியாவை ( பத்சேபாளின் கணவனை) பின்னர் கொலை செய்ய திட்டமிட்டு முடிக்கிறார்.

" இந்த உரியாவின் மனைவியும் தாவீதும் செய்தது பச்சை விபச்சாரம் - இவர்களுக்குப் பிறந்தது தான் சாலமோன் - இவர் வம்சத்தில் வந்தவர் ஏசு என்கிறீர்கள்".

" ஆனால் பழைய வேதத்தின் கூற்றுப்படி விபச்சாரத்தில் பிறந்தவன் 10 (bastard)தலைமுறையானாலும் அவன் கர்த்தரின் சபைக்கு உட்படலாகாதே - ஏசு எப்படி இச்சபைக்கு வந்தார் என்று எந்த நாத்திகனும் கேட்டால் என்னம்மா பதில் சொல்வாய்?

" சரி போகட்டும் உங்களுக்கு சகோதரர்கள் உண்டா?"

" ஆமாம் 2 தம்பிகள் உண்டு!"

" அவர்கள் ஒரு பெண்னை கற்பழித்தால் கண்டிப்பீர்களா?"

" ஒரு பெண்னை காதலித்தால் வரவேற்பேன். காமமுற்றால் கண்டிப்பேன். காதலும் காமமும் வேறு (LUST AND LOVE IS DIFFERENT)"

" உங்கள் சகோதரன் ( இப்படிக் கேட்பதற்காக என்னை மன்னிக்கவும் என்றபடி) உங்களையே கற்பழித்தால்...?"

" அயோக்கியத்தனம்! அறிவீனம் (Nonsense idiot) காட்டு மிராண்டி! அவனை சுட வேண்டும். நீங்கள் என்ன பேச்சு பேசுகிறீர்கள்? பண்பாடு அற்றவன், மிருகம்."

சகோதரியே! சாந்தமாகுங்கள்! இதை நான் சொல்லவில்லை. உங்கள் புனித வேதாகமத்தில் புனித ஆவிகள் புகுந்து எழுதி உள்ளன - இதோ அதைப் படியுங்கள்.

சாமுவேல் - 13வது அதிகாரம் வசனம் 1 முதல் 14 வரை
1. இதற்குப் பின்பு தாவீதின் குமாரானாகிய அப்சலோமுக்குத்தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள் மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான்.

2. தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங் கொண்டு வியாதிக்கப்பட்டான். அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள், அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய அம்னொனுக்கு வருத்தமாய்க்கண்டது.

3. அம்னோனுக்குத் தாவீதுடைய தமயன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான். அந்த யோனதாப் மகா தந்திரவாதி.

4. அவன் இவனைப் பார்த்து 'ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதனாலே இப்படி மெலிந்து போகிறாய் எனக்குச் சொல்ல மாட்டாயா? என்றான் அதற்கு அம்னோன் என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின் மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான்.

5. அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து நீ வியாதிக்காரனைப் போல் உன் படுக்கையின் மேல் படுத்துக்கொள் உன்னைப் பார்ப்பதற்கு உன் தகப்பனார் வரும்போது நீ என் சகோதரியாகிய தாமார் வந்து எனக்குப் போஜனம் கொடுத்து அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாக சமைக்கும்படிக்கு தயவு செய்ய வேண்டும் என்று சொல் என்றான்.

6. அப்படியே அம்னோன் வியாதிக்காரன் போல் படுத்துக் கொண்டு ராஜா தன்னைப் பார்க்க வந்தபோது ராஜாவை நோக்கி என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவன் கையினாலே சாப்பிடும்படிக்கு என் கண்களுக்கு முன்பாக இரண்டு பணியாரங்களைப் பண்ணுப்படி உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான்.

7. அப்பொழுது தாவீது தாமாரிடத்தில் ஆள் அனுப்பி ' நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய் அவனுக்குச் சமையல் பண்ணிக்கொடு' என்று சொல்லச் சொன்னான்.

8. தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக் கொண்டிருக்கிற வீட்டுக்குப் போய் மாவெடுத்து பிசைந்து அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி பணியாரங்களைச் சுட்டு.

9. சட்டியை எடுத்து அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள் ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான், பின்பு அம்னோன் எல்லோரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான். எல்லோரும் அவனை விட்டு வெளியே போனார்கள்.

10. அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு அந்தப் பலகாரத்தை அறை வீட்டிலே கொண்டுவா எண்றான். அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறைவீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டு போனான்.

11. அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டு வருகையில் அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து என் சகோதரியே, நீ வந்து என்னோட சயனி என்றான்.

12. அதற்கு அவள் வேண்டாம் என் சகோதரனே! என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது, இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம்.

13. நான் என் வெட்கத்தோட எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய், இப்போதும் நீ ராஜாவோட பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள்.

14. அவன் அவள் சொல்லைக் கேட்க மாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோட சயனித்து, அவளைக் கற்பழித்தான்.

" என் சகோதரியே! அண்ணனே தங்கையைக் கற்பழிக்கலாமா? அந்த சகோதரி தாமார் வேண்டாம் என் சகோதரனே, இது மதிகேடான விஷயம் என்பது வரை படிக்கும்போது தாமாரின் மீது மதிப்பும் மரியாதையும் கூடுகின்றன. ஆனால் அடுத்த வரியிலேயே இப்போதும் நீ ராஜா வோட (தாவீதுராஜா - அவர்களின் தந்தையுடன்) பேசு , அவர் என்னை உனக்குத்தராமல் மறுக்கமாட்டார்" என்று கூறும் போது தந்தையை மகள் கணித்துள்ள இடம் மிகமிக வேதனையளிப்பதாக உள்ளதல்லவா?

இவர்கள்தான் ஏசுநாதரின் முன்னோர்களா? இவர்களின் வம்ஸா வழியிலே ஏசுவை திணிக்கலாமா?

சகோதரியே, இம்மாதிரி குற்றங்களுக்கு திருக்குர்-ஆனில் 100 கசையடிகள் தர வேண்டும் எனக் கூறி விபச்சாரம் தேசிய குற்றமாக்கப்பட்டது.மேலும் சகோதரியே, "லோத்" (Lot - லூத் நபி) பற்றிய வரலாறு பைபிளின் முதல் பாகத்தில் வருகிறதே அதைப் படியுங்கள்

ஆதியாகமம்(GENESIS)19-வது அதிகாரம் வசனம் 31 முதல் 38 முடிய ( சத்தமாக படிக்கும்படி சொன்னேன். முதல் இரண்டு வசனத்தை சப்தமிட்டுப் படித்துவிட்டு - மவுனமாய் படிக்கிறார்.)

31. அப்பொழுது மூத்தவள் இளையவனைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்வயதானார். பூமியெங்கும் நடக்கிற முறைமயின் படியே நம்மோட சேர பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.

32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து, அவரோட சயனிப்போம் வா என்றாள்.

33. அப்படியே என்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் , தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோட சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள்.

35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய் அவனோட சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்ப்வதியானார்கள்.

37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள். அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியாருக்குத் தகப்பன்.

38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள். அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.

" ஏன் மவுனமாய்ப் படித்தீர்கள்?"

" எனக்கு அருவருப்பாயிருந்தது" என்றார்.(I Felt Embarassed)

" ஏனம்மா அருவருப்பு ? புனித வேதநூல் - இதை தலையில் வைத்துப் படுத்தால் உடல் நோய் தீரும் - என்றெல்லாம் உபதேசிக்கப்படுகிறதே!

ஒரு புனித நூல் அனாச்சரங்களுக்கும் அசிங்கங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டும்! யாரோடும் ஆண் பெண் பேதமின்றி பகிர்ந்து, அர்த்தத்துடன் படிக்க வேண்டுமல்லவா? ஒரு புனித நூலை ஓதும்போது மனது கலக்கமோ தயக்கமோ இன்றி உள்ளம் தெளிவடைய வேண்டுமல்லவா? மாறாக குழப்பமோ குதர்க்கமோ ஏற்பட்டால் அது புனித நூலாகாதல்லவா என்று நான் கேட்ட போது ஆமோதித்தீர்கள் அல்லவா, பின் ஏன் மெளனமாய் படித்தீர்கள்? (Delegacy) இடர்பாடு ஏற்படும் அளவுக்கு அதிலுள்ள அசிங்கங்கள் சாதாரண வயதுப் பெண்ணாக இருந்தாலும் வயசானவராயிருந்தாலும் ஜீரணிக்க முடியவில்லையே ஏன்?

ஒரு குடிக்காரனை ஏன் வெறுக்கின்றோம்?

நிதானமற்று குடித்துவிட்டு தாய் தங்கை என்றுகூட உணர முடியாது அவன் தவறுதலாக நடக்கக் கூடுமல்லவா?

ராஜா தாவீதின் மகன் நிதானத்தோடே திட்டமிட்டுத் தங்கையைத் தனிமைப்படுத்தி, நிர்பந்தித்துக் கற்பழிக்கின்றான்!

தூங்கி எழுந்து தாவீது ராஜாவோ மாற்றான் மனைவி மீது மைய்யலுற்று கற்பழிக்கின்றார்.

மேலும், மாமனார் மருமகளை கற்பழிப்பதை ஆதியாகமம் (Genesis) 38:13ல் காணலாம். அந்த தீர்க்கதரிசியின் பெயர் ஜூடா (Judaha) இவர்தான் எனப்படும் யூத இனத்தை தோற்றுவித்தவர். இவர் தமது மகனின் ம்னைவி "தமார்" என்பவளை கற்பழித்த கதையையும் படித்துப் பாருங்கள்.

என் சகோதரியே! மேலும் நீங்கள் படிக்கத் தயங்கிய லோத்தின் குமாரத்திகள் கதையை எந்த டாக்டரிடமும் அனுப்பி வ்ல்லுனர் கருத்து (EXPERT OPINION) கேட்போம்.

வயதானவர் - மது அருந்தி மயக்க நிலையில் மகளால் கற்பழிக்க முடியுமா? இன்னும் எளிதாக சொல்லப்போனால், ஒரு பெண்னுக்கு மதுவைக் கொடுத்து மயக்கமூட்டி ஆணால் கற்பழிக்க முடியும். ஆனால் ஆண் மயக்கமுற்ற நிலையில் பெண் எப்படி உடலுறவு கொள்ள இயலும்? திருமணமானவர்களைக் கேட்டுப்பாருங்கள் புரியும். அநேகமாய் உங்களுக்கும் ( எனக்கும் ) திருமணமாகவில்லை - அதனால் குழப்பமே. குடும்பஸ்தார்களிடம் நான் விசாரித்ததில் ஆணின் மர்மஸ்தானத்துக்கு (இதை உங்களோடு பேச வெட்கப்படுகிறேம், வேதனைப்படுகிறேன். இருப்பினும் உண்மையை தோலுரிக்கும்போது இதை பொருட்படுத்தமாட்டீர்கள் என்று பணிவோடு கேட்டுவிட்டு) ஒரு விறைப்புத்தன்மை தேவை (Errection)என்றார்கள்.

இந்த ஒரு சாதாரண உண்மை சர்வலோக ரட்சகனுக்கு எப்படி தெரியாது போயிற்று?

இது கடவுளால் அருளப்பட்ட வேதமா? என்ன தான் முஸ்லிம்கள், யூதர்களின் எதிரிகளாக இருந்தாலும் எந்த தீர்க்கதரிசிகள் மீதும், இப்படி ஒரு கேவலத்தைச் சுமத்தமாட்டார்கள். பெயரைக்கூட சொல்லும் போது (மோசா) மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர் மீது என்றென்றும் ஆண்டவனின் அருள் பொழியட்டும் என்றே கூறுவர்.

சகோதரியே, என் நாவு கூசுகிறது. நீங்கள் வீட்டில் போய் (Ezekiel-23) ஏசேக்கேல் 23வது அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள். தற்போது தென் ஆப்பிரிக்கா (South Africa)அரசின் (Publication Board) வெளியீடுகள் இதை தடை செய்துவிட்டன. இந்தக் கமிட்டியின் 5 அங்கத்தினர்களில் 2 பேர் கிறிஸ்துவ கத்தோலிக்க பாதிரிமார்கள்!

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சார்! நீங்கள் சற்றுமுன் சொல்லும் போது Judah தான் யூதகுலத்தை தோற்றுவித்தவர் என்றீர்கள். அப்படியானால் மோசஸ் (மூஸா) அப்ரஹாம் (இப்ராஹீம்) இவர்களும் யூதர்கள் அல்லவா?

" இல்லை என் சகோதரியே! திருக்குர் ஆனில் அப்ரஹாம்(இப்ராஹீம்) யூதரும் அல்ல, கிறிஸ்தவருமல்ல; அவர் ஒரு நேர்மையானவர்; இறைவனுக்கு தன்னைத்தானே அர்பணித்தவர், சிலை வணக்கமே செய்யாதவர் (குர்-ஆன் 3:67) என்றுள்ளது. அதையே அளவுகோலாக வைத்து பைபிளை ஆராய்ந்தபோது கீழ்கண்ட முடிவுக்கு வரவேண்டியவராகிறோம்.

தயவு செய்து ஆதியாகமம் Genesis 11:31 படியுங்கள்!

11:31 தேராகு தன் குமாரனாகிய அபிராமையும் ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும் தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராவையும் அழைத்துக்கொண்டு அவர்களுடனே "ஊர்" என்ற " கல்தே"யருடைய பட்டணத்தை விட்டு "காணான் " (Cacaan)தேசத்துக்கு புறப்பட்டான்> ஆரான் (haran)வந்த போது அங்கேயே இருந்து விட்டனர் ஆதியாகமம் 11:31

எனவே, சகோதரியே ஆப்ரஹாம் பிறந்தது " ஊர் " என்கிற கல்தேயருடைய (Chades) பட்டணம். எனவே அவர் யூதரல்ல காரணம் கல்தேயருடைய பட்டணம் மெஸப்படோமியாவில் (MESOPOTAMIA)உள்ளது (தற்போதைய ஈராக்கின் ஒரு பகுதி) அவர், அரபியர் 2வது " ஜூ யூதர் என்பதே இப்ராஹிமின் கொள்ளுப்பேரனான ஹீதா என்பவருக்குப் பின் ஏற்பட்டது.

மேற்கூறிய பைபிள் வசனங்களின் படி மூஸாவும் அப்ரஹாமும் யூதர்கள் அல்ல. பைபிளை ஆராயாது படித்ததனால் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்".

" கேட்கவே அதிசயமாயுள்ளது " என்கிறார்.

" சகோதரியே! நீங்கள் கோவிலில் (CHURCH) நுழைந்ததும் எதை வணங்குகிறீர்கள்?"

" சிலுவையிலுள்ள ஏசுவை, மேரி மாதாவை, ஜோஸப்பை!"

" அப்படியானால், ஏசு சொன்ன வாக்கியங்களான " நான் பழைய வேதத்தை (தெளராத்-Old Testament) மெய்ப்பிக்கவே வந்தேன்" எனும் வசனத்தை நீங்கள் நம்புகிறீர்களா?"
" நிச்சயமாக! "

சரி - பழைய ஏற்பாட்டில்.

அந்நிய தேவர்களின் பேச்சைச் சொல்ல வேண்டாம்.

அது உன்வாயிலிருந்து பிறக்க கேட்கப்படவும் வேண்டாம்.
யாத்திராகமம் 23:13
3. என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

4. மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உன்க்கு உண்டாக்க வேணடாம்.

5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
யாத்திராகமம் 21:3,4,5.
22. யாதொரு சிலையையும் நிறுத்த வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்; (உபாகமம் 16:22) இன்னும் பல உள்ளன, ஆக சிலைகளை வணங்குவதை - பைபிளில் சிலைவணக்கம் தடை செய்யப்பட்டுள்ள போது அதை மெய்ப்பிக்க வந்த ஏசுவையும் சிலுவையையும் நீங்கள் ஏன் வணங்குகிறீர்கள்? "

" I am confusedநான் குழம்பிவிட்டேன்" என்றார்.

என் கையில் அன்றைய தினசரி இருந்தது. அதில் சிரியன் கத்தோலிக்க வங்கி Syrian Catholic Bankஎன்று போட்டு வட்டி விகிதாச்சாராங்கள் இருந்தன!

அதைக்காட்டி, " ஏம்மா கிறிஸ்தவர்கள் வட்டி வாங்கலாமா?" என்றேன்.

" தெரியாது சார்".

" உபாகமம் 16:19ல் பரிதானம் வாங்காமல் இருப்பாயாக - பரிதானம் (வட்டி) ஞானிகளின் கண்களை குருடாக்கி நீதிமான்களின் நியாயங்களை தாறுமாறாக்கும்" என்றுள்ளதே. இஸ்லாமும் வட்டிக்கு விரோதமானது தான். சரி பன்றி இறைச்சியையும் மற்ற பிராணிகளின் ரத்தத்தையும் உண்பீர்களா?"

" தினமும் உண்போம் "

பன்றியும் புசிக்கத்தகாது, அது விரிகுளம்புள்ளதாயிருந்தும் அசைபோடாதிருக்கும். அது உங்களுக்கு இவைகளின் மாமிசத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பிர்களாக. 
உபாகமம் 14:8
இரத்தத்தை மாத்திரம் புசிக்காதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
உபாகமம் 12:23

(ரத்தம்) அதை சாப்பிடாது தண்ணிரைப் போல தரையில் ஊற்றிவிடவும்.
உபாகமம் 12:16,24

நீ கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்வதினால் நீயும் உனக்குப் பின் வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும் படிக்கும் நீ அதை (ரத்தத்தை) சாப்பிடலாகாது
உபாகமம் 12:25

" இதே கருத்தை உபாகமம் 12:27லும் காணலாம். இருப்பினும் நீங்கள் அதைச் செய்யலாமா?

" நீங்கள் முஸ்லிம் நாடுகளில் பார்த்திருப்பீர்களே, அவைகள் ஹராம் (விலக்கப்பட்டது) ஆக்கி வைத்திருப்பதை."

" ஆமாம்" என்றார்.

" சகோதரியே, இஸ்லாமும், இன் ஜீலும் தெளராத்தும் ஒன்றையே கூறின. ஆனால் இஸ்லாம் தவிர ஏனைய மார்க்கங்களில் மனிதக் கைகள் ஊடாடி சிதைந்து உருத்தேய்ந்து உருமாறி விட்டன.

" உதாரணமாக- புதிய ஏற்பாட்டில் லூக்கா (LUKE)10:5ஐ படியுங்கள்."

" ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது இந்த விட்டுக்கு சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவதாக சொல்லுங்கள்" என்று படிக்கிறார்.

அதன்பின் என்னிடமுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பு குர்-ஆனில் 24:27 எடுத்து தருகிறேன்.அதே கருத்து சொல்லப்பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட பன்றி மாமிசம், ரத்தம் இவைகள் அல்லாது இறந்துபோன மிருகங்களையும் சரிபார்க்கிறார். வியப்பால் விழிகள் மலர்கின்றன. மிகமிக நேசத்துக்குரியவராய் கருதப்படுகிறேன்.

" பைபிள் முரண்பாடுகளுடைய (CONTRADICTION) என்றேன்ல்லவா? அது குறித்து கிழ்கண்ட வசனங்களைத் தருகிறேன். புரட்டிப் பாருங்கள்."

" உதரணமாக ஒரு வசனத்தில் 50 வயதில் ஒருவர் இறந்தார் என்றும் மற்றொன்றில் அதே நபர் 60 வயதில் இறந்தார் என்றும் இருந்தால் எது சரி?" என்றேன்.

" ஏதாவது ஒன்றுதான் உண்மையாயிருக்கும். இல்லாவிடில் எந்த வாதமும் இரண்டாக முரண்பட்டால், இரண்டையுமே தவறாகத்தான் சொல்ல வேண்டும்" என்றார்.

" ஒரு புனித நூலில் முரண்பாடுகள் இருக்கலாமா?"

" இருக்கவே கூடாது"

" அப்படி இருந்தால் ?"

" அது புனித நூல் அல்ல, மனிதனால் எழுத்ப்பட்டவையே."

" அப்படியானால், பைபிள் புனித நூல் அல்ல!"

" புதிய ஏற்பாட்டிலா பழைய ஏற்பாட்டிலா?"

" இரண்டிலுமே உள்ளன இதோ பாருங்கள்"-

II sAMUEL 8:4 II சாமுவேல் 8:4

தாவீது அவனுக்கிருந்த (எதிரியிடமிருந்து) இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரை வீரரையும் இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து இரதங்களில் நூறு ரதங்களை வைத்துக் கொண்டு... இதன் தமிழ் மொழி பெயர்ப்பில் மோசடி நடந்துள்ளது.

I CHRONICLES 18:14 நாளாகமம் 18:14

அவனுக்கிருந்த ஆயிரம் ரதங்களையும் ஏழாயிரம் குதிரை வீரர்களையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இதரங்களைக் கொண்டு.....
ஆங்கிலத்தில்-
And David Took From Him A Thousand Chariots and Seven Hundred Horse men And Twenty Thousand Footmen.......

உண்மையான மொழிப்பெயர்ப்பு:

தாவீது அவனிடமிருந்து ஆயிரம் ரதங்களையும் எழுநூறு குதிரை வீரர்களையும் இருபதினாயிரம் காலாட்படை வீரர்களையும் கைப்பற்றி.... என்று வர வேண்டும்.

எது சரி: எழுநூறு (700) குதிரைப்படை வீரர்களா?

ஏழாயிரன் (7000) வீரர்களா?

இங்கே இடைமறித்து பேசுகிறார், ஏன்சார் 700க்கும், 7000க்கும் ஒரு சைபர் "0" தானே வித்தியாசம்?"

" சகோதரியே, பைபிளை எழுதியபோது யூதர்களுக்கு சைபர் "0" (பூஜ்ஜியம்) பற்றிய ஞானமில்லை. சைபரை இந்தியாவிலிருந்து அராபியர்கள் கொண்டு வந்தனர். பைபிளில் 700 என்பதை Seven Hundred என்று எழுத்தாலும் 7000 என்பதை Seven Thousand Hundred என்று மட்டுமே எழுதி வந்தள்ளனர். எண்ணால் எழுதும் பழக்கம் அவர்களுக்குமில்லை. பிற்கால ரோமர்கள் கூட ரோமர் எழுத்து (Romanian Letters)களை I II III IV V VI VII எப்படி உபயோகித்தனர்.

சாமுவேல் II Samuel 10:18

சீரியர் (Syrians) இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள், தாவீது சீரியரில் ஏழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரம் குதிரை வீரரையும் கொன்று அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் (Shophac) சாகும்படியாக வெட்டிப் போட்டான்.

I CHRONICLES நாளாகமம் 19:18

சிரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள். தாவீது சீரியரில் ஏழாயிரம் இரதங்களின் மனுஷரையும் நாற்பதினாயிரம் காலாட் படையினரையும் கொன்று படைத்தலைவனாகிய சோப்பாக்கையும்? (Shophac) கொன்றான்.

எது சரி- எழுநூறு இரதங்களா? ஏழாயிரம் காலாட்படைகளா? நாற்பதினாயிரம் குதிரை வீரர்களா? நாற்பதினாயிரம் காலாட்படையினரா? ( குதிரைப்படைக்கு cavalry என்று காலாட்படைக்கு INFANTRY என்பதும் ஆங்கிலச்சொல்)

படைத்தலைவன் பெயர் சோபாகையா (Shobach)? அல்லது சோப்பாக்கையா (Shophac)?

II (Kings) இராஜாக்கள் 8:26

அகசியா ராஜாவாகிற போது இருபத்திரண்டு வயதாயிருந்தது.

II (Kings) 10:18

Two and twenty years old was Ahaziah when he began to reign.

II (Chronicles) நாளாகமம் 22:2

தமிழ் பைபிளில் இப்பகுதி மொழிபெயர்ப்பு மோசடி செய்துள்ளதால் ஆங்கில வாசகத்தை அப்படியே தந்து அதற்கு ஈடான தமிழ் வார்த்தைகளையும் தருகிறோம். அகசியா ராஜாவாகிய போது நாற்பத்திரண்டு வயதாயிருந்தது.

Forty and two years old was AHAZIAH who began to reign.

இருபத்தி இரண்டா அல்லது நாற்பத்தி இரண்டு வருடங்களா? எது சரியானது?

( பின் குறிப்பு: அன்புத் தமிழ்மக்களே உங்களில் பலபேருக்கு ஆங்கிலப் பிரதியையும் தமிழ் மொழிபெயர்ப்பையும் சரிபாருங்கள். இப்படியா மொழிபெயர்ப்பு மோசடியினை செய்வது? பாமர மக்களை ஏமாற்றலாமா? மனிதக்கைகள் ஊடாடி உள்ளன என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்! - ஆசிரியர்)

II Kings இராஜாக்கள் 24:8

யோயாக்கின் ராஜாவாகிற போது பதினெட்டு வயதாயிருந்தது. எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்.

II Chronicies நாளாகமம் 36:9

யோயாக்கின் ராஜாவாகிற போது எட்டு வயதாயிருந்தது. மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு......

பத்னெட்டு வயதா? எட்டு வயதா? மூன்று மாதமா? மூன்று மாதமும் பத்து நாளுமா? எது சரி?

சாமுவேல் 23:8 II Samule

தாவீதுக்கு இருந்த பராக்கிரமாலிகளின் நாமங்களாவன தக்கெமொனியன் Hachmonite குமாரானாகிய யோசேப்பா செபத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன், இவண் எண்ணூறு பேர்களின் மேல் விழுந்து அவர்களை ஒரு மிக்க வெட்டிப் போட்ட அதினோஏஸ்னி ஊரானானவன்.

நாளாகமம் 11:11 I Chronicles

தாவீதுக்கு இருந்த பராக்கிராமாலிகளின் இலக்கமுமாவது அக்மோனியின் Hachmonite குமாரனாகிய யாஷோபியாம் எனும் சேவைகாரரின் தலைவன், இவன் முன்னூறு பேர்களின் மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்க கொன்று போட்டான்.

தக்கெமோனியன் (Tachmonite) அல்லது அக்மோனியன் (hachmonite) எது சரி?

யோசேப்பாசெபத் அல்லது யாஷோபியாம் எது சரி?

எண்ணூறு பேர்களா - முன்னூறு பேர்களா எது சரி?

II சாமுவேல் 24:1

கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரேலின் மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம்பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.

நாளாகமம் 21:1 I Chronicles

சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்கு தாவீதை ஏவி விட்டது.

தாவீது கர்த்தரால் ஏவப்பட்டாரா அல்லது சாத்தானாலா? எது சரி?

சாமுவேல் 6:23

அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.

சாமுவேல் 21:8

ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவனுடைய இரண்டு குமாரராகிய அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியானான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப் பெற்ற அவனுடைய ஐந்து குமாரரையும் பிடித்து......

மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லை என்றும் அவளுக்கு 5 குமாரர்களிருந்தார்கள் என்றும் உள்ளது. எது சரி?

(பின் குறிப்பு: இந்த " மீக்காள் " என்னும் பெயரை கிங்ஜேம்ஸ்வர்ஷனிலும் king James Version 21:8 New World Translation-னிலும் அப்படியே வைத்துள்ளனர். ஆனால் New American Standard Boble 1973யில் " மீக்காள் " என்பவளை(Michal)"MERAB" என்றும் மாற்றி மோசடி செய்துள்ளனர்)

இது மட்டுமல்ல சகோதரியே, ஆதியாகமம் 6:3 பாருங்கள். அப்போது கர்த்தர் என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சந்தானே 'அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம்' என்றார்.

ஆக மனுஷரின் வயது 120 வருஷம் - என்றார். Noah (நூஹ் நபி அலை) நோவாவின் வயது (சாகும் போது) என்ன? என்று பாருங்கள்; ஆதியாகமம் 9:29ல் நோவாவின் நாட்களெல்லாம் தொள்ளாயிரத்து ஐம்பது (950) வருஷம் என்றுள்ளதே - முன்னுக்குப்பின் முரண்பாடல்லவா? இதை சில கிறிஸ்துஞானிகள் ஏற்றுக்கொள்ளாது - மனிதனிம் வருஷத்தை சொல்லவில்லை.வெள்ளம் வரப்போவது இன்னும் 120 வருடமென்று முன்னறிவிப்பு செய்துள்ளது என்கிறார்கள். அதுவும் பொருந்தவில்லை. காரணம் அப்படி பார்த்தாலும் நோவாவுக்கு வெள்ளம் வரும்போது (500+120) 620 வயதாகி இருக்க வேண்டும். ஆனால் பைபிளில் ஆதியாகமம் 5:32ல் நோவா ஐந்நூர்று வயது ஆன போது..... என்றும் ஆதியாகமம் 7:6ல் ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டான போது நோவா அறுநூறு வயதாயிருந்தான் என்றுள்ளது. எனவே கிறிஸ்துவ அறிஞர்களின் வாதம் கண்துடைப்பே!

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

" சகோதரியே! கிறிஸ்துவ உலகமனைத்தும் ஆண்டவன் தமது சாயலாகவே ( வெள்ளையோ கறுப்போ எப்படியோ? ஆணாகவோ பெண்ணாகவோ) படைத்தான் என்பதை நம்புகிறீர்களல்லவா?"

" ஆமாம் - ஆதியாகமம் 1:26ல் 
பின்பு தேவன் நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியும் மனுஷனை உண்டாக்குவோமாக.....பின்னர்

ஆதியாகமம் 1:27ல் தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார் என்றுள்ளது என்று படித்தார்.

மிக்க நல்லது - ஆனால் சகோதரியே - எசாயா 40:17,18 மற்றும் 25

17. சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும் மாயையாகவும் எண்ணப்ப்டுகிறார்கள்.

18. இப்படியிருக்க தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?

25. இப்படியிருக்க என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்கிரார்.

மேலும் சங்கீதம் PSALM 89:6ல் ஆகாய மண்டலத்தின் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? என்றுள்ளது - மேலும், ஏரோமியா JEREMIAH 10:6 மற்றும் 7லின் படி

6. கர்த்தாவே உமக்கு ஒப்பானவன் இல்லை. நீரே பெரியவர். உமது நாமமே வல்லமையில் பெரியது.

7. ..............ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும் அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை என்றுள்ளதே. ஏனிந்த முரண்பாடுகள்?

" சார்! இதுவரை நீங்கள் குறிப்பிட்டுள்ள முரண்பாடுகள் பழைய ஏற்பாட்டுகளில் தான் உள்ளது. ஆனால் புதிய....?

" புதிய ஏற்பாட்டிலும் நிறையவே உண்டு சகோதரியே."

John:யோவான் 5:37

என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துஅ சாட்சி கொடுத்திருக்கிறார்: நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதிமில்லை.

John:யோவான் 14:9

.........என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.

John:யோவான் 5:31

என்னைக் குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.

John:யோவான் 8:14

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக; என்னைக் குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது.

" மேலும் சகோதரியே, நாலு சுவிசேஷகங்களிலும் கடைசி அதிகாரங்களை எடுத்து படிக்கவும்."

மத்தேயூ MATTHEW 28:1 முதல் 6 வரை

1. ஓய்வு நாள் முடிந்து வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.

மாற்கு MARK 16:1 முதல் 8 வரை

1. ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கி கொன்டு.

மத்தேயூ MATTHEW 28:2

2. அப்பொழுது பூமி மிகவும் அதிரும்படி கர்த்தருடைய தூதன் வானத்திலிந்திறங்கிவந்து வாசலிருந்த கல்லைப் புரட்டித்தள்ளி அதன் மேல் உட்கார்ந்தான்.

மாற்கு MARK 16:2

2. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து.

மத்தேயூ MATTHEW 23:3

3. அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.

மாற்கு MARK 16:3

3. கல்லறையின் வாசலில் இருக்கின்ற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

மாத்தேயூ MATTHEW 28:4

4. காவலாளர் அவனுக்கும் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.

மாற்கு MARK 16:4

4. அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப் பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள்.

மத்தேயூ MATTHEW 28:5

5. தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி நீங்கள் பயப்படாதிருங்கள். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.

மாற்கு MARK 16:5

5. அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள்.

மத்தேயூ MATTHEW 28:6

6. அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்தெழுந்தார்; கர்த்த்ரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.

மாற்கு MARK 16:6

6. அவன் அவர்களை நோக்கி பயப்படாதிருங்கள். சிலுவையில் அறையப்பட்ட நசரேனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை. இதோ, அவரை வைத்த இடம்.

மாற்கு MARK 16:7,8

7. நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய் உங்களுக்கு முன்னே கலிலெயாவுக்குப் போகிறார். அவர் உங்களுக்குச் சொன்னப்படியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.

8. நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால் அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து கல்லறையை விட்டு ஓடினார்கள். அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்.

லூக்கா LUKE 24:1 முதல் 8 வரை

1. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம் பண்ணின சுகந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.

யோவான் JOHN 20:1 முதல் 18 வரை

1. வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோட, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையஒ அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள்.

லூக்கா LUKE 24:2

2. கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளபட்டிருக்கிறதைக் கண்டு.

யோவான் JOHN 20:2

2. உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய் கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.

லூக்கா LUKE 24:3

3. உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்.

யோவான் JOHN 20:3

3. அப்பொழுது பேதுருவும் மற்ற சீஷனும் கல்லறையிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.

லூக்கா LUKE 24:4

4. அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில் பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டு பேர் அவர்கள் அருகே நின்றார்கள்.

யோவான் JOHN 20:4

4. பேதுருவைப் பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி முந்திக் கல்லறையிடத்தில் வந்து.

லூக்கா LUKE 24:5

5. அந்த ஸ்திரிகள் பயப்பட்டு தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?

யோவான் JOHN 20:5

5. அதற்குள்ளே குனிந்துபார்த்து. சீலைகள் கிடக்கிறதைக் கண்டான், ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.

லூக்கா LUKE 24:6

6. அவர் இங்கே இல்லை, அவர் உயிர்ந்தெழுந்தார்.

யோவான் JOHN 20:6

6. சீமோன் பேதுரு அவனுக்குப் பின்னே வந்து கல்லறைக்குள்ளே பிரவேசித்து.

லூக்கா LUKE 24:7

7. மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவு கூருங்கள் என்றார்கள்.

யோவான் JOHN 20:7

7. சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச்சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.

லூக்கா LUKE 24:8

8. அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து.

யோவான் JOHN 20:8

8. முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரதவேசித்து, கண்டு விசுவாசித்தான்.

யோவான் JOHN 20:9 முதல் 18 வரை

9. அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.

10. பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப் போனார்கள்.

11. மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுது கொண்டிருந்தாள். அப்படி அழுது கொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து.

12. இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள் தலைமாட்டில் ஒருவனும், கால்மாட்டில் ஒருவனுமாக உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.

13. அவர்கள் அவனை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள் என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

14. இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி இயேசு நிற்கிறதையே கண்டாள் ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

15. இயேசு அவளைப் பார்த்து, ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய் என்றார். அவள் அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி ஐயா, நீர் அவரை எடுத்துக் கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக் கொள்ளுவேன் என்றாள்.

16. இயேசு அவளை நோக்கி, மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து; ரபூனி என்றாள். அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

17. இயேசு அவளை நோக்கி என்னைத் தொடாதே! நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நீ என் சகோதரரிடத்திற்குப் போய் நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

18. மகதலேனா மரியாள் போய், தான் கர்த்த்ரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

இயேசு கிறிஸ்துவை அடக்கம் செய்த பின் என்ன நடந்தது என்பதை விவரிப்பதில் இந்த விலிய சுவிஷேஷக்காரர்களிடையே எத்தனை முரண்பட்ட வாதங்கள்? இதில் யாருக்கு வந்தது புனித ஆவி? ஒரே புனித ஆவியா? பல புனித ஆவிகளா? புளுகு மூட்டைகளா?

புனித வெள்ளிக்கிழமையும் புளுகு மூட்டையும்
(GOOD FRIDAY FRAUD)
" சகோதரியே, புனித வெள்ளிக்கிழமையை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் அல்லவா?"

" ஆமாம், ஏசுநாதர் இறந்த தினமல்லவா!"

" ஏசுநாதர் இறந்தது எப்போது?"

" வெள்ளிக்கிழமை 9வது மணியளவில் (மதியம் 3 மணி)"

" ஆதாரம் என்ன?"

" LUKE(லூக்கா) 23:44 இதுவே ஆதாரம்!"

" போதும். சரி, ஏசுநாதரிடம் மக்கள் ஒரு அடையாளம் காட்டச் சொன்னார்கள் அல்லவா? அதைப்பற்றி சொல்லுங்கள்" என்றேன்.

MATTHEW மத்தேயூ 13:38 முதல் 40 வரை

மத்தேயூ 27:46லும் இதைச் சொல்கிறார்.

38. அப்பொழுது வேதபாரிகளிலும், பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி போதகரே, உம்மாள் ஒர் அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள்.

39. அவர்களுக்கு அவர் (ஏசு) பதிலளிக்கும் விதமாக இந்தப் பொல்லாத விபச்சார சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா (JONA யூனூஸ் நபி) தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேற அடையாளம் இவர்களுக்கு கொடுக்கப்போவதில்லை.

40. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவுல் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்திலிருப்பார்.

இங்கேயும் வல்லுனத்தைக் காட்டி மொழிபெயர்ப்பு மோசடி செய்துள்ளனர். காரணம் இதன் மூலத்திலும் ஆங்கிலத்திலும் உள்ளப்படி

FOR AS JONAS WAS THREE DAYS AND THREE NIGHTS IN THE WHALE'S BELLY, SO SHALL THE SON OF MAN BE THREE DAYS AND THREE NIGHTS IN THE HEART OF THE EARTH. Mathew 12:40

இதன் சரியான மொழிபெயர்ப்பு: யோனா மூன்று பகல் மூன்று இரவு ஒரு பெரிய மீன் வயிற்றில் இருந்தது போல மனுஷகுமாரனும் மூன்று பகல் மூன்று இரவு பூமியின் இருதயத்திலிருப்பார்.

( இது ஒரு சிறு தவறு போல் தோன்றினாலும் அங்குதான் பெரிய அயோக்கியத்தன்மை அடங்கியுள்ளதைப் பற்றி பாருங்கள்.)

( ஆக ஏசுநாதர் முன்னறிவிப்பு செய்தபடி அவர் இறந்தபின் அல்லது இறந்ததாக சொல்லப்படுவதற்குப் பின் 3 பகல் 3 இரவு கழித்து உயிர்த்து எழுவார்.(Reserection)

அதன்படி வெள்ளி இரவு அவரை அடக்கம் செய்ததாகவும் அதை ஆர்மத்திய ஊர்க்காரான யோசேப்பு என்பவன் அந்த சரீரத்தை துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி அடக்கம் செய்ததாக மத்தேயூ கூறுகிறார். காரணம் இயேசுவின் 12 சீடர்களின் 12-ம்மவன் யூதாஸ் தற்கொலை செய்து கொண்டான், மீதி 11 பேர்களும் ஏசுநாதரை கைது செய்ய ரோமாபுரி வீரர்கள் வந்தபோது சீஷர்களெல்லாம் கைவிட்டு ஓடிப்போய்விட்டார்கள். (மத்தேயூ 26:56)

எனவே ஏசு நாதரின், உடலைப் புதைத்ததைக் கண்ணால் கண்ட சாட்சிகளின் வாக்குமூலம் பைபிளில் இல்லை. ஆர்மேனியனான யோசேப்புவின் வாக்குமூலமும் இல்லை. ஏசுநாதரின் தாயாரின் வாக்குமூலம் இருட்டடிப்பு செய்த மர்மம் என்ன? கிறிஸ்தவ உலகமே பதில் சொல்லுங்கள்.

புனித வெள்ளி

ஏசு நாதர் இறந்தது வெள்ளி 9வது மணி நேரம் அதாவது 3 மணி. மாலை அடக்கமானதும் அவரின் முன்னறிவிப்புப்படி 3 பகல் 3 இரவு கழித்து அவர் எழ வேண்டும். ஆனால் ஓய்வுநாள் ( யூதர்களின் ஓய்வுநாள் சனிக்கிழமை) முடிந்து வாரத்தின் முதலாம் நாள் வந்த போது ஏசு காணாது போய்விட்டார். இது தான் ( F.I.R ) முதல் தகவல் அறிக்கை. இனி கணக்கு போடுவோம்.

ஆக இரு(2) இரவுகள் ஒரு பகல் வருகிறதே! ஏசு சொன்னதாக சொல்லப்படும் 3 பகல் 3 இரவு எங்கே? யார் புளுகுவது?

புனித வெள்ளி என்று புளுகி உலகம் முழுவதும் 3 நாள் விடுமுறை விடுகிறார்கள்! இதை மூடி மறைக்கவே இரவும் பகலும் 3 நாள் என்ற மோசடி மொழிபெயர்ப்பினை செய்கிறார்கள். அப்படி கணக்கு பார்த்தாலும் (2 இரவும்) மூன்று நாளும் வராதே!

கல்லறை அடைத்த கல்லைப் புரட்டியது யார்? என்பதை 4 சுவிஷேஷங்களும் தரும் 4 வித தகவல்களினால் இது ஒரு பெரும் மோசடி; ஒரே புனித ஆவியினால் எழுதப்படவில்லை. அவரவர் மனப்போக்கில் எழுதியது. இச்சிக்கல்களை யோசித்த மாற்கு தமது சுவிஷேஷத்தில் (8:11- 13) ஏசுநாதர் தம்மை நபி என்று நிரூபிக்க சொன்னவர்களுக்கு எத்தனையோ அடையாளங்களைக் காட்டி உள்ளார், ஆனால் மாற்கு 11 அப்போது பரிசேயர் வந்து அவரோடு (ஏசுவிடம்) தர்க்கிக்கத் தொடங்கி அவரை சோதிக்கும்படி, வானத்தில் இருந்து ஒர் அடையாளத்தைக் காண்பிக்க வேண்டும் என்று கேட்டார். அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சு விட்டு - இந்த சந்ததியினர் அடையாளம் தேடுகிறதென்ன? இந்த சந்ததியினருக்கு ஒர் அடையாளம் கொடுக்கப்படுவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என சொல்லி படகில் ஏறி அக்கரை போனார். மாற்கு 8:11-13

சுவிஷேஷம் எழுதிய மத்தேயூ ஏசுவின் சீடர் அல்ல

" சகோதரியே, 4 சுவிஷேஷக்காரர்களில் யாராவது ஏசுநாதரை கண்ணால் கண்ட சாட்சிகளுண்டா?"

" ஏன் மத்தேயூ - 12 சீடர்களில் ஒருவராயிற்றே."

" சகோதரியே, "சீடர் மத்தேயூ (MATHEW) வேறு, சுவிஷேஷத்தை எழுதிய மத்தேயூ வேறு!"

" எப்படிச் சொல்கிறீர்கள்?"

" நீங்கள் எதை வைத்து இந்த மத்தேயூ தான் சீடர்களில் ஒருவர் என்கிறீர்கள் சகோதரியே?"

" ஆயத்துறையில் சுங்க அதிகாரியாக இருந்த மத்தேயூ ஏசு அழைத்து அவரைப்பின் தொடர்ந்து சென்றதாக உள்ளதே." (அதிகாரம் 9 வசனம் 9)

" கண்டும் காணாதவர்களாயும் கேட்டும் கேளாதவர்களாயும் காதாரக் கேட்டும் உணாராதிருப்பீர்கள் - கண்ணாரக் கண்டும் அறியாதிருப்பீர்கள் என்ற ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது மத்தேயு13 ௧3,14 எவ்வளவு உண்மையாக உள்ளது சகோதரி?"

" என்ன ஃபாதர் சொல்கிறீர்கள்? இதோ படித்துப் பாருங்கள் மத்தேயு 9:9" என்றார்.

" நீங்களே படியுங்களம்மா" என்றேன்.

மத்தேயு எழுதிய சவிஷேஷத்தின்படி 9:9

9 - AND AS JESUS PASSED FORTH FROM THENLE, HE Saw a man, named mathew, Sitting of the receipt of custom, HE Saith unto him follow me - And he follwed Him(Matthew 9.9)

" இதை எழுதியவர் மத்தேயு தானே? என்றேன்.

" ஆமாம்."

அப்படியானால்: Man named matthew - மத்தேயு எனும் பெயருடைய மனிதனைக் கண்டார் (HE(ஏசு) கூப்பிட்டார் him (மத்தேயு)he (மத்தேயு)Followed Him அவர் (ஏசு) பின் சென்றார். யார் சொல்வது ? 3வது நபர் சொல்வது போலல்லவா உள்ளது.

(தமிழ் மொழிபெயர்ப்பில் இதிலும் மோசடி செய்துள்ளனர்.Follow Me என்பதை " என் பின்னால் சென்றுவா" என்று எழுதி உள்ளது. - உண்மைப்பதம் " என்னைப்பின் தொடர்ந்துவா என்பதே)

தமிழ் பைபிள் படியே தமிழ் வாசகர்களுக்கு தருகிறேன்.

மத்தேயு எழுதிய சவிஷேஷம்: அதிகாரம் 9.

வசனம் 9: இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப் போகையில் ஆயத்துறையில் (சுங்க கேட்டருகில்) உட்கார்ந்திருந்த மத்தேயு எனும் ஒரு மனுஷனைக் கண்டு; எனக்கு பின் சென்றுவா என்றார். அவன் எழுந்து அவருக்குப்பின் (ஏசுவுக்கு) பின் சென்றான். மத்தேயு 9:9

WHO IS THIS HE AND HIM?

யார் அந்த அவர்? எழுதுவதே மத்தேயு: அப்படியிருக்க,

" மத்தேயூ எனும் ஒரு மனுஷனைக் கண்டு" என்றும் (He CALLED Him) என்பதை எனக்குப் பின் சென்றுவா என்றார். (என்ன மோசடி மொழிப்பெயர்ப்பு) போகட்டும்-

அவன் எழுந்து அவருக்குப் பின் சென்றான்.

இது ஆங்கிலத்தில் THIRD PARTY STATEMENT

அந்த மத்தேயுவும் இந்த மத்தேயும் ஒரு நபரானால் மத்தேயு ஆகிய நான் ஆயத்துறையிலிருக்கும் போது ஏசு என்னிடம் வந்து என் பின்னே எழுந்து வா என்றார். "னான் எழுந்து பின் சென்றேன்" என்பது பொருந்தும்.

இது ஆங்கிலத்தில் SELF STATEMENT OF NARRATION



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

அதனால் சீடர்களில் ஒருவரான மத்தேயு வேறு; சுவிஷேஷம் எழுதிய மத்தேயூ வேறு.

HE CALLED HIM: அவர் அவனை அழைத்தார். HE FOLLOWED HIM: அவன் அவரைப்பின் தொடர்ந்தான் (9:9 மத்தேயு)

" சிந்தியுங்கள் சகோதரியே" என்றேன். Iam Convinced நான் திருப்தியடைகிறேன்" என்று கூறினார் அப்பெண்மணி

சுவிஷேஷங்களிடையே முரண்பாடு சுவிஷேஷங்கள் நாலும் கோர்வையாய் இல்லை. துண்டு துண்டாகச் சேகரிக்கப்பட்ட துணுக்குகளை ஒட்டி வைக்கப்பட்டது போன்று இருக்கின்றன. அவைகளில் ஒரு "தொய்வு" காணப்படுகிறது. மேலும் ஒருவர் கூற்றை மற்றொருவர் மறுக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.

உதாரணமாக-

1.ஏசுநாதர் தமது மார்க்கப் பிரசங்கத்தை செய்த கால அளவு எவ்வளவு என்பது குறித்து சுவிஷேஷெக்காரர்களிடையே வேறுபாடு உண்டு. " ஒரே ஒர் ஆண்டு நடைபெற்றது." என மாற்கு, மத்தேயு, லூக்கா மூவரும் " இரண்டு ஆண்டுகள்" - என யோவான் கூறுகிறார் எது சரி

2. இந்த சந்ததியினருக்கு ஒரு அடையாளம் காட்டப்படும்." லூக்கா " ஒரு அடையாளம் கூட காட்டப்படாது." மாற்கு

3. ஏசுநாதர் உயிர் பிரிந்து அடக்கம் செய்யப்பட்டதற்கும் அவர்கள் உயிர்த்தெழுப்பபட்டு வானுலகிற்கு அழைத்துக் கொள்ளப்பட்டதற்குமிடையில் உள்ள கால அளவில் சுவிஷேஷங்களிடையே முரண்பாடுள்ளது.

4. இறுதி போஜன சடங்குகள் (LAST SUPPER)(Eucharist) பற்றிய மூன்று சுவிஷெஷங்களிலும் வெவ்வேறு விதமாக கூறப்பட்டுள்ளது.

5. ஏசுநாதர் உயிர்த்தெழும் நிகழ்ச்சியையும் மூவரும் ஒரே விதமாய்க் கூறவில்லை.

6. ஏராளமான மீன்கள் கிடைத்த அதிசயம் அற்புதம் ஏசுநாதரின் வாழ்நாளிலேயே நடந்ததாக லூக்கா சொல்கிறார். ஆனால், யோவானோ இந்நிகழ்ச்சி ஏசு இறந்தபின் உயிர்த்து எழுந்த பின் நடந்ததாகக் கூறுகிறார். எது சரி?

7. ஏசுநாதர் மரணித்தபின் மூன்று முறை மற்றவர்களுக்கு தோற்றமளித்தார் - லூக்கா ஜெருஸலத்தில் ( ஒரே வாரத்தில்) இருமுறையும் கலீலியோவில் ஒரு முறையாக மூன்று.... - யோவான் ஒரே ஒருமுறை (கலீலியோவில்) தோற்றமளித்தார் - மத்தேயு எது சரி?

8. கல்லறைக்குப்போன பெண்கள் எத்தனைபேர்? ( மரியதானா மகதலேனா) ஒருவரா, பலரா எது சரி?

9. திபேரியா கடற்கரையில் ஏசுநாதர் மீனவர்களை சந்தித்தது உயிருடனிருக்கும் போதா? அல்லது யோவான் (21:1- 14) கூற்றின்படி உயிர்த்து எழுந்த பின்பா? எது சரி?

10.ஏசுநாதர் முதலில் தோற்றமளித்தது ஜுதேயாவில் - லூக்கா ஏசுநாதர் முதலில் தோற்றமளித்தது கலீலியோவில் - மத்தேயு எது சரி?

11.அடக்கம் செய்யப்பட்ட ஏசுநாதர் பரமண்டலத்துக்கு உயர்த்தப்பட்டார்(ASENCION) -மாற்கு, லூக்கா இது குறித்து மாத்யூவும் யோவானும் ஒன்றும் கூறவில்லை. இந்த மெளனம் ஏன்?

12.ஈஸ்டர் பண்டிகையைப் பற்றி சுவிசேஷங்களின் மவுனம் ஏன்?

13.ஏசுவின் இறுதி சம்பாஷனை - இறுதி போஜனத்திற்குப் பின் - கைதாகும் முன்வரை நடந்தது. பிரசித்திபெற்ற பேச்சு பற்றி (4 அத்தியாயங்கள்) யோவான் மட்டுமே கூறுகிறார், மற்ற மூவரின் மவுனம் ஏன்? ( முஸ்லிம்களுக்கு அது சாதகமாக உள்ளதால் அந்த இருட்டிப்பா?)

( மூடி மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் உதயம் மற்றும் தேற்றரவாளன் யார்?) யார் அந்த தேற்றரனாளம்?

யார் அந்த தேற்றரவாளன்?

1. நான் என் பிதாவை வேண்டிக்கொள்வேன். அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.உலகம் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது. யோவான் 14:15,16 2.

நான் உங்களுடனே தங்கி இருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன். என் நாமத்தாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் போதித்து, நான் உங்களுக்கு சொன்ன எல்லாவர்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். யோவான் 14:29 3.

பிதாவிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிறவரும் பிதாவினிடத்தில் இருந்து புறப்பட்டு வருகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும் பொழுது அவர் என்னைக் குறித்து சாட்சி கொடுப்பார். நீங்கள் ஆதி முதல் என்னுடன் கூட இருந்தபடியால் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் - யோவான் 16:26 4.

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார். நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். யோவான் 16:7,8 5.

இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதாயிருக்கிறது. சத்திய ஆவியாகிய அவர் வரும்பொழுது சகல சத்தியத்திற்கும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாகப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப் படுத்துவார். யோவான் 16:12,13,14

யோவானுடைய சுவிசேஷத்தில் இருந்து சில மேற்கோள்களை படித்தீர்கள். அவற்றிலெல்லாம் அவர் Parakletos என்ற கிரேக்க வார்த்தையைத்தான் உபயோகப்படுத்தி இருக்கிறார். இப்பதத்திற்கு தேற்றரனாளன் என்பதே பொருளாகும். ஆனால் பின் காலத்தில் இப்பதத்தை குருமார்கள் மொழிபெயர்க்கும் பொழுது "பரிசுத்த ஆவியாகிய " என்ற அடைமொழியை தேற்றரவாளன் என்ற பதத்திற்கு முன்னால் திணித்துக் கொண்டார்கள்!

எனக்காகப் பரிந்துரை செய்பவர் எனது கட்சியை எடுத்து வாதிப்பவர், எனக்காக வாதாடுபவர் எனக்காக வக்காலத்து வாங்கி பேசுபவர் என்பதுதான் தேற்றரவாளன் என்ற பதத்திற்கு நேரடியான பொருள். கி.பி. முதலாவது நூற்றாண்டின் கிரேக்க மொழி பேசிய யூதர்கள் மத்தியில் "பாக்லேட்" என்ற பதம் வாதாடுபவர், பரிந்துரைப்பவர் தலையிட்டு உதவி புரிபவர் வக்காலத்து வாங்கி பேசுபவர் என்ற அர்த்தங்களிலேயே வழக்கில் இருந்து வந்திருக்கிறது.

யோவான் இந்த பதத்தை தமது சுவிசேஷத்தில் நான்கு தடவைகளும் முதலாவது நிருபத்தில் ஒரு தடவையும் உபயோகப்படுத்தி இருக்கிறார். சுவிசேஷத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பதம் "பரிசுத்த ஆவியை" குறிப்பிடுகிறதென்றும் நிருபத்தில் உபயோகப்படுத்த பதம் "கிருஸ்துவை" குறிப்பிடுகிறதென்றும் பைபிளில் பதவுரையாளர்கள் கூறுகிறார்கள்!

"தேற்றரவாளன்" என்பவர் பின் காலங்களில் தோன்றி ஈஸாநபி அவர்களின் பணியை முழுமைப்பெறச் செய்வார் என்பதனை மூடிமறைப்பதற்காகவே அப்பதம் பரிசுத்த ஆவியையும் ஏன் கிறிஸ்துவையுமே குறிக்கின்றது என அம்மார்க்க அறிஞர் திசை திருப்பிவிடுகிறார்கள்.

இந்த நான்கு சுவிசேஷக்காரர்களும் எந்த மூலத்திலிருந்து தங்களது நூல்களுக்கான ஆதாரங்களைத் திரட்டினார்கள்?

மூலனூல் காணாமல் போன மர்மம்? லூக்காவின் முரண்பாடுகள்!

கிறிஸ்துவக் கோட்பாடுகளிலேயே ஆணிவேர் போன்ரது ஏசுநாதரின் வானிலகுப் பயணம், (ASCENSION) -

இது குறித்து மத்தேயும் யோவானும் மவுனமாயுள்ளதன் மர்மம் என்ன?

லூக்கா மட்டும் தமது சுவிசேஷத்தில் ஒரு வகையாகவும் அவருடைய அப்போஸ்தலருடைய நடபடிகள் (அவரே எழுதியது) வேறு வகையாகவும் கூறுகிறார். மரித்தவுடன் வானுலகு எய்தினார் - லூக்கா மரித்து 40நாள் கழித்தே அது நடந்தது. அப்போஸ்தலர்களின் நடவடிக்கையில் - லூக்கா ஏணிந்த முரண்பாடு? (மத்தேயு, மாற்கு, லூக்கா)

இம்மூன்று சுவிசேஷங்களிலும் ஒரே மாதிரி வசனங்கள் 330 இடங்களிலும் மார்க், மத்தேயுவில் ஒரே மாதிரி வசனங்கள் 178 இடங்களிலும் வருகின்றன. மாற்கிலும் லூக்காவிலும் ஒரே மாதிரி வசனங்கள் 100 வருகின்றன. மாத்யூவிலும் லூக்காவிலும் ஒரே மாதிரி வசனங்கள் 230 இடங்களிலும் வருகின்றன. விபரமாய் கூறினால், மாத்தேயுவிற்கு மட்டும் தனியாக உரித்தான வசனங்கள் 330, மார்க்கிற்கு மட்டும் தனியாக உரித்தான வசனங்கள் 53, லூக்காவிற்கு மட்டும் தனியாக உரித்தான வசனங்கள் 500

ஒரே புனித ஆவியால் சொல்லப்பட்டதானால் ஏனிந்த முரண்பாடு, ஏற்றத்தாழ்வுகள்? ஏறுக்குமாறான ஏமாற்றுவித்தைகள்? ஏசுநாதரின் வம்ஸா வழி பற்றிய முரண்பாடுகள்

(GENEOLOGY) GENEOLOGY FROM DAVID TO JESUS ACCORDING TO MATTHEW 1:6 - 16

மத்தேயு எழுதின சுவிசேஷம் 1.அதிகாரம் 1.ஆபிரகாமின் குமாரனாகிய, தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு 2.ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான். யாக்கோப்பு யூதாவையும் அவன் சகோதரனையும் பெற்றான். 3.யூதா பாரேசையும், சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான். எஸ்ரோம் ஆராமைப் பெற்றான். 4.ஆராம் அம்மினதாவைப் பெற்றான். அமினதாப் நகசோனைப் பெற்றாள். நகசோன் சல்மோனைப் பெற்றான். 5.சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான். போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான். ஓபேத் ஈசாவைப் பெற்றான். 6.ஈசாப் தாவீது ராஜாவைப் பெற்றான்.தாவீதுராஜா உரியாவின் மனைவியாயிருந்தவனிடத்தில் சாலமோனைப் பெற்றான். 7.சாலமோன் ரெகொபெயாமைப் பெற்றான். ரெகாபயொம் அபியாவைப் பெற்றான்.அபியா ஆசாவைப் பெற்றான். 8.ஆசா யோசாபாத்தைப் பெற்றான். யோசாபாத் யோராமைப் பெற்றான். யோராம் உரியாவைப் பெற்றான். 9.உரியா யோதாவைப் பெற்றான். யோதாம் ஆகாசைப் பெற்றான். ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றாம். 10.எசேக்கியா மனோரேயைப் பெற்றான். மனோரோ ஆமோனைப் பெற்றான். ஆமோன் யோசியாவைப் பெற்றான். 11.பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான். 12.பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான், சலாத்தியேல் சொரொபா பேலைப் பெற்றான். 13.சொரொபாபேல் அபியூதைப் பெற்றான். அபியூத் எலியாக்கிமைப் பெற்றான். எலியாக்கீம் ஆபோரைப் பெற்றான். 14.ஆசோர் சதோக்கைப் பெற்றான். சதோக்கு ஆகீமைப் பெற்றான். ஆகீம் எலியூதைப் பெற்றான். 15.எலியூத் எலெயாசாரைப் பெற்றான். எலெயாசார் மாத்தானைப் பெற்றான். மாத்தான் யாக்கோபைப் பெற்றான். 16.யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான். அவளிடத்தில் கிரிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். 17.இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைக்கும் தாவீது முதல் பாபிலொனுக்குச் சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போன காலம் முதல் கிறிஸ்து வரைக்கும் பதினாறு தலைமுறைகளுமாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 "அன்பு சகோதரியே, எகிப்துக்கு (EGYPT) சென்றுள்ளீர்களா?" " O Yes - அங்குள்ள பிரமிடுகளைக் கண்டு வியந்துபோனேன்?" "ரொம்ப சரி - பிரமிடுகளின் வயது என்னவாக இருக்கும்?" "10000 வருடங்களுக்கு மேலாக இருக்கும் என்றார்கள்."

"எனது இந்தியாவின் உயரமான சிகரம் எவரஸ்டின் வயது தெரியுமா? ( 8 கோடி வருடம் - நீலகிரிமலை 320 கோடி வருடம்) "தெரியாது.

ஆனால் ஐரோப்பாவிலுள்ள ஆல்ப்ஸ் மலை 4 கோடி வருடங்கள் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்." "சரி உலகின் மூத்த நாகரீகம் எந்த நதிக்கரையில் எப்போது தோன்றியது?"

" INDUS VALLEY CIVILIZATION - சிந்துவெளி நாகரீகம் சுமார் 8 முதல் 10 ஆயிரம் வருடங்களுக்கு முந்திய நாகரீகம் என்கிறார்கள். நைல் நதி நாகரீகம் 6 ஆயிரம் வருடம் என்று படித்துள்ளேன்."

"ஆக, உலகம் தோன்றி நாகரீகம் வளர்ந்து ஹரப்பா மொஹஞ்ஞதாராவில் ( இன்றைய பாகிஸ்தான்) உற்பத்தியாகி 10 ஆயிரம் ஆண்டுகள் என்பது புதை பொருளாராய்ச்சியின் கருத்து நிலைமை அப்படி இருக்க, ஏசுநாத்ருக்கு முன் தோன்றிய ஆதம்நபி இருவருக்கும் இடைப்பட்டதாக பைபிள் கூறுகிற வருடங்கள் - கி.மு. 37 நூற்றாண்டுகள் அதாவது 3700 வருடங்களுக்கு முன் முதல் மனிதன் தோன்றினான்.( பைபிளின் அதியாகமம் ஆதம்நபி தோன்றியதை வரையறுத்துக் கூறி உள்ளது) என்று ஏசு தோன்றி 1986 ஆக உலகம் தோன்றி (3700+1987=5687 ஆண்டுகள் தான்) முதல் மனிதன் தோன்றியபைபிள் படி 5687 ஆண்டுகள். இதோ, என் கையிலுள்ள யூதர்களின் காலண்டர்

- இதன்படி முதல் மனிதன் தோன்றி (இது 1985ம் வருடக்காலண்டர்) 5746 வருடங்கள் என்று பெருமை பேசுகிறது. இப்போதைய பைபிள்கள் இதை இருட்டிப்பு செய்கின்றன. எது சரி?

" இன்னொரு எளிமையான கேள்விக் கேட்கட்டுமா?" " தாராளமாக" " ஒரு செடி சூரிய ஒளி (SUN LIGHT) இல்லாது (தாவரங்கள்) விளையுமா? வளருமா? " நிச்சயமாக முடியாது. காரணம் Chlorophil எனும் பச்சை நிறமே சூரிய ஒளியிலிருந்துதான் பெற முடியும். இதை நான் ஆரம்ப பள்ளியிலேயே படித்துள்ளேன் - Lovely days." " உங்களுக்குத் தெரிந்த சாதாரண உன்மைக் கூட சர்வலோக இரட்சகனுக்கு தெரியாது போனது ஏன்?"

" என்ன சொல்கிறீர்கள்?"

" ஆத்திரப்பட்டு ஆவதொன்றுமில்லை. அமைதியாக ஆதியாகமம் முதல் பக்கம் (பைபிளின் முதல் பக்கம்) படியுங்கள். முதல் 19 வசனங்கள் மட்டும் படியுங்கள்." படித்து முடிக்கிறார்.

" கவனித்துப் படித்தீர்களா? சகோதரியே!" மூன்றாம் நாள் புல் பூண்டு கனிவர்க்கங்களையும் விருட்சங்களையும் படைத்துவிட்டு( ஆதியாகமம் 1:12) நாளாம் நாள் சூரியன் சந்திரனையும் படைக்கிறார் (ஆதியாகமம் 1:14 முதல் 16 வரை) சூரிய ஒளியற்று எப்படி தாவர இனங்கள் வளர்ந்தன? கனிதந்தன? வர்கங்களை உற்பத்தியாக்கின? எந்த விஞ்ஞானியாவது ஒத்துக்கொள்வார்களா?

" உங்கள் குர்-ஆனில் எப்படி உள்ளது?" " சூரியனை உண்டாக்கிய பின், தாவரம் உண்டாக்கினான் ஆண்டவன்.

" I am Surprise to hear do you have an English copy? Can you give me please. " O yes நிச்சயம் தருகிறேன். இதையே எடுத்துப் போங்கள். இது அரபி English புத்தகம். (இடையில் விமானம் 1 மணி நேரம் நின்றது. அப்போது பஹ்ரினுக்கு முதல் வகுப்பில் ஓர் அரபி ஏறினார்.எங்கள் வாதத்தைக் கேட்டபின் அவர் ஒரு காஃபிருக்கு எப்படி குர்-ஆனை தந்தீர்கள். மொழிபெயர்ப்பு மட்டும் தர வேண்டும் என்றார்.

ஐயா, அரபி மட்டும் தெரிந்த ஒரு கிறிஸ்துவனுக்கு எந்த மொழிபெயர்ப்பை தருவீர்கள் என்றதும் வாய் மூடிவிட்டார்.)

ஆதியாகமம் 1. அதிகாரம் 1. ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார். 2. பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். 3. தேவன் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. 4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும், இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார். இருளுக்கு இரவு என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற் காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. 6. பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக் கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்க கடவது என்றும் சொன்னார். 7. தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி ஆகாய விரிவுக்குக் கீழ் இருக்கிற ஜலத்துக்கும், ஆகாய விரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்துக்கும் பிரிவுண்டாக்கினார். அது அப்படியே ஆயிற்று. 8. தேவன் ஆகாய விரிவுக்கு வானம் என்று பேரிட்டார். சாயங்காலமும், விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று. 9. பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. 10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்கு சமுத்திரம் என்றும் பேரிட்டார். தேவன் அது நல்லது என்று கண்டார். 11. அப்பொழுது தேவன், பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. 12. பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது. தேவன் அது நல்லது என்று கண்டார். 13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று. 14. பின் தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாகம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற விரிவிலே சுடர்கள் உண்டாக்க கடவது. அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும், குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். 15.அவைகள் பூமியின் மேல் பிரகாசிக்கும் படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. 16. தேவன் பகலை ஆளப்பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17. அவைகள் பூமியின் மேல் பிரகாசிக்கவும். 18. பகலையும் இரவையும் ஆளவும் வெளிச்சத்துக்கும், இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார். தேவன் அது நல்லது என்று கண்டார். 19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.

" சகோதரியே! பைபிளின் முதல் பக்கத்தின் முதல் அத்தியாயத்தின் 19 வசனங்களை மீண்டும் படித்துவிட்டு எத்தனை இரவு, பகல், மாலை Day - Night and Evening என்று சொல்லுங்கள்."

1. இருள் - ஆரம்பத்தில் 2. வெளிச்சம் - உண்டாக்கினார். எதிலிருந்து உண்டாக்கினார்? இன்னும் வானத்தில் சூரியன் உண்டாக்கவில்லை.

3. 4வது வசனத்தின்படி வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார் - எதைக் கொண்டு பிரித்தார்? இன்னும் சூரியனும் சந்திரனும் படைக்கப்படனில்லை.

4. 5வது வசனத்தின்படி தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பெயரிட்டார். இருளுக்கு இரவு என்று பெயரிட்டார். - பகலும் இரவும் எப்படி உண்டாகிறது. பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றினால் ஒரு நாள் அதாவது ஒரு பகல் ஒர் இரவு சூரியனும் இருக்க வேண்டும். இரண்டையும் சுற்றிவிட்டிருக்க வேண்டும்.

5. 6வது வசனம் ஜலத்தின் மத்தியில் ஆகாய பிரிவு உண்டாக்கினார். - சூரியன் இன்னும் படைக்கப்படவில்லை. அதற்குள் சாயங்காலம் விடியற்காலமாகிறது. முதல் நாளும் ஆகிறது.

6. 7வது வசனம் ஆகாயபிரிவுக்கும் ஜலத்திற்கும் வித்தியாசம் செய்தார். - முதல் வசனத்தில் ( வானம் பூமி சிருஷ்டித்தார்) எற்படுத்திய வானம் எங்கே - ஏன் மீண்டும் ஆகாயம் உண்டு செய்கிறார். IS God is absendminded?

7. 8வது வசனம் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பெயரிட்டார். சாயங்காலமும் விடியற் காலமுமாகி இரண்டாம் நாளானது.

9 - 10வது வசனம் வெட்டாந்தரை தனியாகவும் ஜலம் தனியாக பூமியும் சமுத்திரமும் உண்டாயிற்று. - (மீண்டும் வானம் என்று மூன்றாவது முறையாக அதே மறதியை செய்கிறார்.)

காலை மாலையுடன் 2 நாளாகிறது( சூரியன் இன்னும் படைக்கப்படவில்லை) 2 நாளில் கடவுளுக்கு ஏகப்பட்ட Confusion குழப்பம்.

8. 11வது வசனம் பூமியானது புல், விதை பிறப்பித்து பூண்டுகளும் உண்டாகி - பூமியின் மேல் தங்களில் தங்கள் ஜாதியின் படியே கொடுக்கும் கனி விருட்சங்களை முளையும்படி ஆணையிட - 12வது வசனம் - அவரது ஆனை அமுலாக்கப்பட்டு விதை, கனி விருட்சம், புல் பூண்டுகள் பூமியில் தோன்றின.- சூரியனும் சந்திரனும் இன்னும் உண்டாக்கவில்லை கனி, மரம், செடி தாவரங்கள் உண்டானது எப்படி?

9. 13வது வசனம் சாயங்காலமும் விடியற்காலமுமாக மூன்றாம் நாளானது.- மூன்று நாள் அதாவது 3 விடியற்காலம், 3 சாயங்காலம், 3 இரவுக்காலம் சூரியனின்றியே.

10. 14வது வசனம் பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாக்க சுடர்களை வானத்தில் உண்டாக்கி அவைகளை அடையாளமாகவும், காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும், குறிப்பதற்காகவும் உண்டாக்கினார். 16வது வசனம் பகலை ஆளப் பெரிய சுடர் இரவை ஆளச் சிறிய சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 18வது வசனம் பகலையும், இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும், இருளுக்கும், (மீண்டும்) வித்தியாசம் உண்டாக்கி (மீண்டும்) வானத்தில் வைக்கின்றார். 19வது வசனம் சாயங்காலமும் விடியற் காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.- ஆரம்பத்தில் 4வது வசனத்தில் ஒருமுறை இரவையும் பகலையும் வெவ்வேறாகப் பிரிக்கிறார். 14வது வசனத்தில் 2வது ஒருமுரை பிரிக்கிறார். 18வது வசனத்தில் மீண்டும் ஒரு (3வது) முறை பிரிக்கிறார். கடவுளுக்கு இத்தனை மறதிகளா? காலம் அடையாளம் - நாள் வருஷங்களை உண்டாக்க நாலாவது நாள் தான் இறைவனே நாள் குறிக்கிறார். 4வது நாள்தான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை உண்டாக்குகிறார். இரவும் பகலும் ஆளப்படுகிறது. காலம், பகல், இரவு மாலை, மதியம் 4வது நாளில் தானே படிப்படியாய் 14வது வசனத்தில் செய்கிறார். - பின்னர் இதற்கு முன்னரே 9வது வசனங்களுக்குள் 3 நாள் எப்படி ஆனது? மாலை காலை எப்படி வந்தது ? இதுதான் புனித ஜாலங்களா? புளுகு மூட்டைகளா? முதல் பக்கத்திலேயே இத்தனை தவறு. விஞ்ஞானியைவிட்டால் இன்னும் கெட்டுப்போகும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சகோதரியே இந்த வேடிக்கையைப் பார்க்கவும் வம்ஸாவழி எது சரி?

கடவுளால் தூண்டப்பட்டு எழுதியவர்கள் இந்த 4 சுவிசேஷக்காரர்கள் என்றால், ஒருவர் மத்தேயு 21தலை முறை; மற்றவர் லூக்கா 41தலை முறை என ஏன் தர வேண்டும்?

இதில் தச்சர் ஜோசப் தவிர மற்ற அனைத்திமே வெவ்வேறு (Not identical) பெயர்கள்; வெவ்வேறு பட்டியல். அதில் வினோதம் உரியாவுக்கும் தாவிதுக்கும் பிறந்தவர்.

அவர் ஏசுநாதரின் வம்ஸா பட்டியலில் வருகிறார். லூக்காவும் அதே தவறைச் செய்கிறார். தம் மருமகளோடு விபச்சாரம் செய்தவர் அதில் பிறந்தவரும் கூட ஏசுவின் வம்ஸா வழியில் முன்னோராக வருகிறார்கள். இது நியாயமா? இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரை ( ABRAHAM TO DAVID) 14 பதினாலு தலைமுறைகளும் அதாவது ஆபிரகாம் முதல் தாவீது வரை - 14 தலைமுறைகளும் தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைபட்டுப் போன காலம் வரை - 14 தலைமுறைகளும் பாபிலோனுக்கு சிறைபட்டுப் போன கால முதல் கிறிஸ்துவரைக்கும் - 14 தலைமுறைகளும் ஆனால் லூக்கா 23 - 38 வரை வேறு கணக்கு தருகிறார். ஆக, தாவீதுக்கு முன் தரும் பட்டியலிலும் இருவரிடையே முரண்பாடுகள். முற்றிலும் தாவீது முதல் ஏசு முடிய உள்ளத்தில் முரண்பாடுகள். (இப்ராஹிம்) ஆப்ரஹாமுக்கு முந்திய தலைமுறையினர் பற்றி மத்தேயூ ஒன்றும் கூறவில்லை.

லூக்கா கூறுகிறார், பழைய ஏற்பாட்டில், முதல் மனிதன் ஆதம் தொட்டு ஆப்ரஹாம் வரை இருபது (20) தலைமுறைகளும் மத்தேயுவின் சுவிஷெசத்தில் ஆப்ரஹாமிலிருந்து ஏசுநாதர் வரை 41 தலைமுறைகளும் ஆக மொத்தம் 61 தலைமுறைகள் வரிசைப்படுத்துகிறார். ஆனால் லூக்கா - ஆதம் தொட்டு ஏசுநாதர் வரை 77 தலைமுறைகளைப் பட்டியல் போட்டுள்ளார்.

பழைய ஏற்பாட்டில் ஆப்ரஹாமுக்கு 19 தலைமுறைகள் இருப்பதாகவும் நபி ஆப்ரஹாம் 20வது தலைமுறை எனக் கூறுகிறது. லூக்காவோ ஆப்ரஹாமுக்கு முன்னதாக 20 தலைமுறைகள் இருந்தன என்றும் ஆப்ரஹாம் 21வது தலைமுறை என்கிறார். (

இப்ராஹீம்) ஆப்ரஹாம் முதல் ஏசுநாதர் வரை 14 தலைமுறை என்கிறார் மத்தேயு ஆப்ரஹாம் முதல் தாவீது வரை 16 தலைமுறைகள் என்கிறார் லூக்கா.

ஏனிந்த குழப்படிகள்? இதில் எது சரி? கடவுள் ஒய்வெடுத்தாரா?

" சகோதரியே, (SABATH) சபாத் தினம் என்றால் என்ன?" " ஓய்வு நாள்

" யாருக்கு "ஒய்வு நாள்?" " கடவுளுக்கு காரணம் வானம் பூமி அனைத்தும் - மனுஷனைத் தவிர படைத்துவிட்டு ஏழாம் நாள் (சனிக்கிழமை) ஒய்ந்திருந்தார் என்று ஆதியாகமத்தில் 2:22 வது அதிகாரம் 2வது வசனத்தில் உள்ளது.

" சகோதரியே, ஏழாவது நாள் என்பது யூதருக்கு சனிக்கிழமை; கிறிஸ்துவர்கள் ஞாயிற்றுக்கிழமையை ஏன் தேர்ந்து எடுத்தீர்கள்? "சபாத் என்றாலே ஹீப்ரு மொழியில் ஓய்வுநாள், ஞாயிற்றுக்கிழமை ரோமாபுரியினரின் சூரியக்கடவுளான மித்ராவின் தினம். கடவுள் ஓய்வெடுத்ததாக கிறிஸ்துவர்களும் யூதர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். கேட்டால் ஆதியாகமம் 2:2ஐ சுட்டிக்காட்டுகிறீர்கள்.

நான் ஓய்வே எடுக்கவில்லை என்று கூறினால் மறுப்பீர்களா?" "இதோ பாருங்கள் பழைய ஏற்பாட்டில்!" ஓய்வெடுத்தது ஆதியாகமம் 2:2 தேவன் தம்முடைய கிரியையெல்லாம் முடிந்த பின்பு ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்தார்.

ஓய்வெடுக்கவில்லை ஏசாயா 40:28 பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய ஆநாதித்தேவன் சோர்ந்து போவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாது...

இதில் எது சரி? "சார் I am terribly confused? I feel ashamed- நான் மிகவும் குழம்பிவிட்டேன், எனக்கு கேவலப்பட்டது போன்ற உணர்வு உண்டாகிறது." தலையில் கை வைக்கிறார் விமானப் பணிப்பெண் அறைக்குள் சென்று முகம் கழுவி பவுடர் அணிந்து சுநகசநளா செய்து தலைவலி மாத்திரை உண்டு வருகிறார். கொஞ்சநேரம் மவுனமாகிறார். பழைய உற்காகமில்லை.

நான் பைபிளை புரட்டி மீண்டும் படிக்கிறேன். பின்னர் (அஸர்) மாலை நேரத் தொழுகை தொழுகிறேன். விமானம் இன்னும் சில மணிகளில் அபுதாபி போகும். தொழுகை முடிந்ததும் "உண்வு உண்கிறீர்களா?" என்கிறார். "வேண்டாம்" என்று கூறிவிட்டு குர்-ஆனை கொஞ்சநேரம் ஓதுகின்றேன்

பின்னர் மீண்டும் பைபிளை எடுத்துப் படிக்கிறேன். அப்பெண்மணியும் வந்து எதிரே அமர்கிறார். நான் பைபிளில் இதுவரை சுட்டிக்காட்டியவைகளை அடிக்கோடிட்டுத் தருமாறு கேட்கிறார். அவருடைய பைபிளில் மளமளவென்று அடிக்கோடிட்டு ஓரத்தில் விபரமும் எழுதித்தருகிறேன்.

"சார் இறுதி இராபோஜனம் குறித்து யோவான் மட்டுமே குறிப்பிடுகிறார். மற்ற ( Gospellers) சுவிஷேஷக்காரர்கள் மவுனம் சாதிக்கிறார்கள். காரணம் முஸ்லிம்களுக்கு சாதகமாகிவிடும் என்று கூறினீர்களே அதன் மர்மம் என்ன?"

சகோதரியே! பழைய ஏற்பாட்டை மெய்ப்பிக்கத்தானே ஏசு வந்தார்? பழைய ஏற்பாட்டில் என்ன எழுதி உள்ளது?"

18வது அதிகாரம் 18 மற்றும் 19வது வசனம். 18. உன்னைப்போல் (LIKE UNTO THEE) ஒரு தீர்க்கதரிசியை நான் (GOD) அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணி என் (இறைவன்) வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதை எல்லாம் அவர்களுக்குச் சொல்வார்! 19. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். DEUTERONOMY 18:18,19 "இது எங்கள் ஏசுநாதரின் வருகையைக் குறித்து ஆண்டவன் மோசேவுக்கு முன்னறிவிப்பு செய்யப்பட்டதல்லவா?" "அவசரப்படாதீர்கள் சகோதரியே! ஆழ்ந்து படியுங்களேன்!" உன் "சகோதர கூட்டத்திலிருந்து" என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்ரவேலர்லளின் சகோதர கூட்டம்- (இஸ்ரவேலர்கள் யாருடைய வாரிசுகள்? அப்ரஹாமின் மகன் இஸ்ஸாக்கின் (ISSAC) வாரிசுகள் என்பது இஸ்ஸாக்கின் சகோதரர் (ISHMAEL) இஸ்மாயில். இங்கு ஏசுநாதர் எப்படி வருகிறார்? அவர் இஸ்ரவேலின் யூதகுலமாயிற்றே? யூதகுலத்தில் உண்டாவார் என்றிருந்தால் உங்கள் கூட்டத்திலிருந்து உரொவரை என்றல்லவா சொல்லப்பட்டிருக்க வேண்டும், மாறாக "உன் சகோதர கூட்டம்" என்பதன் ஆய்வு என்ன? "சரி போகட்டும், வேறு எவ்வகையில் இது ஏசுநாதருக்கு பொருந்துகிறது?" (மூஸா) மோசஸும் யூதர், ஜீஸஸும் யூதர். மோசஸும் தீர்க்கதரிசி, ஜீஸஸும் தீர்க்கதரிசி. "இந்த ஒற்றுமை ஒன்றே போதுமே. இதுதான் எனக்கு போதிக்கப்பட்டது" என்றார்.

"சகோதரியே! ஏற்கனவே மோசஸ் யூதரல்ல என்று நிருபித்தேன்; பரவாயில்லை! யூதராகவும் நபியாகவுமட்டுமே இருந்தால் அதுமட்டும் போதுமென்றால் இது ஏசுவுக்கு மட்டுமல்ல. தாவீதும் தீர்க்கதரிசி, தாவீதும் யூதரே. சாலமோனும் தீர்க்கதரிசி, சாலமோனும் யூதரே. இன்னும் எத்தனையோ நபிகள் உண்டு. எனவே உங்கள் வாதம் அதில் அடிப்பட்டு போய்விடும். இன்னும் எளிமையான பல உதாரணங்களை எங்களால் தரமுடியும். அது முழுக்க முழுக்க முஹம்மது நபி அவர்களையே குறிக்கும் என்பது எங்கள் வாதம். இல்லை ஏசுவையே குறிக்கும் என்பது பாதிரிகள் வாதம். அவர்கள் கூறும் ஒரே ஒரு ஒற்றுமை ஏசுவும் மோசேவும் யூதர், தீர்க்கதரிசி என்பதே. அந்த அளவுகோலையே நாமும் பயன்படுத்தி விளக்குவோம். தவறாக இருந்தால் விட்டு விடுங்கள், சரி என்றால் சந்தோஷம்! என்றேன்.

"உங்கள் பாணி(Approaching) எனக்குப் பிடித்துள்ளது. உங்கள் பதிலை கூறுங்களேன் என்றார். "சகோதரியே, உன்னைப்போல் " LIKE UNTO THEE மோசேயைப்போல் யார் என்று பார்ப்போம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

மோஸஸ்,முஹம்மத்,ஜீஸஸ் Moses, Mohamed, Jesus மூவரையும் களத்திறக்குவோம்.

இதைப்போல் இன்னும் எத்தனையோ வேற்றுமைகளை காட்டலாம்.

ஆக தவ்ராத் (OLD TESTAMENT)ல் சொல்லிய தீர்க்கதரிசி முஹம்மது நபிகளார்தானே தவிர ஏசுநாதர் அல்ல.

இதே கருத்தையே (இது இறைவனின் கூற்றாக) உபாகமம் 18:18 மோசசும் கூறுகிறார். என் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரிலிருந்து எழுப்பப்பண்ணுவார். அவருக்கு செவி கொடுப்பீர்களாக என்றுள்ளது. 

உபாகமம் 18:15 உபகாமம் 18:18 இறைவன் சொன்னது. உபகாமம் 18:15 மோசே தீர்க்கதரிசி சொன்னது.

"அது சரி . நீங்கள் முதலில் கூற வந்தது இறுதி இரவு போஜனத்தில் 3 சுவிஷேஷக்காரர்களின் மவுனம் பற்றியல்லவா? அதற்கு இன்னும் விளக்கம் தரப்படவில்லையே?"

"மன்னியுங்கள் சகோதரியே!" கிறிஸ்துவ கோட்பாடுகளுக்கும் தத்துவங்களுக்கும் ஆணிவேர் போன்றது ஏசுநாதரின் இராபோஜன பிரசங்கம்.

இதை யோவான் 4 அத்தியாயங்களில் விவரிக்கிறார். அதில் ஏசுநாதர் எதிர்காலத்தில் மனித சமுதாயம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் பின் காலங்களில் வழிகாட்ட யார் வருவார்கள் என்பது பற்றியும் உபதேசித்திருக்கிறார்.

யோவான் கிரேக்க (GREEK மொழியில் PARAK LETOS எனக் குறிப்பிட்டதை ஆங்கிலத்தில் என்று மொழி பெயர்த்துள்ளார். அதை பைபிளில் தேற்றரவாளன் (வழக்குரைப்பவர், வாதிடுபவர், பரிந்துரையாளர், சிபாரிசு செய்பவர், வழி காட்டுபவர்) என்று கூறுகின்றனர்.

15.If you love me keep my commandments. 16. And I will pray the father, and he shell give you another comforter, and he may abide you with you for ever. John – 14,15,16.

இங்கே தமிழ் மொழிபெயர்ப்பு மோசடியைக் காணுங்கள். 15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளை கைக்கொள்ளுங்கள் John 14:15 சரியான மொழிபெயர்ப்பு: (If you love me) என்னை நீங்கள் நேசித்து என் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தீர்களேயானால் நான் என் பிதாவினிடத்தில் வேண்டுவேன். அவர் உங்களுக்கு இன்னொரு தேற்றரவாளனைத் தருவார். அவர் (தேற்றரவாளன்) என்றென்றும் உங்களுடனிருப்பார். ஆனால், தமிழ் பைபிளில் புதிதாக சத்திய ஆவி என்று சேர்த்துள்ளனர். நான் பிதாவை வேண்டிக்கொள்வேன். அப்போது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 

யோவான் 14:15,16 நான் உங்களுடனே தங்கி இருக்கையில் இவைகளை உங்களுக்கு சொன்னேன். என் நாமத்தாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். யோவான் 14:26 பிதாவினிடத்திலிருந்து தான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும் பிதாவினிடத்தில் இருந்து புறப்பட்டு வருகிறவருமாகிய சத்திய ஆவியான, தோற்றரவாளன் வரும் பொழுது அவர் என்னைக் குறித்து சாட்சி கொடுப்பார். நீங்களும் ஆதி முதல் என்னுடனே கூட இருந்தபடியால் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் யோவான் 16:26 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் இருக்கும். நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார். நான் போவேனெயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். 

யோனான் 16:7,8 இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும் பொழுது சகல சத்தியத்திற்கும் உங்க சத்தியத்திற்கும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாகப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையும் சொல்லி வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப் படுத்துவார். 

யோவான் 16:2,13,14 "இவைகள் தீர்க்கதரிசியின் வருகையல்ல; புனித ஆவியிம் வருகையைக் குறித்தே கூறப்படுவதாக பாதிரிமார்கள் எங்களுக்கு சொல்லியுள்ளனரே!"

"சகோதரியே! அது தான் PRIESTLY POLITICS or POLY TRICKS" புனித ஆவி என்றால் புனித ஆவி புதிய ஒன்றா? யோவான் 16:7ன் படி நான் போவது நலமாயிருக்கும்; நான் போனேனாகில் அவரை உங்களிடம் அனுப்புவேன். ஆக, புனித ஆவி ஏசுநாதருக்கு முன்னும் இருந்தது, அவர் வாழும்போதும் இருந்தது. இல்லாத ஒன்றையே அனுப்பப் போவதாக கூறுகிறார்.

Gulf Airlines விமானம் அபூதாபியை நெருங்குகிறது. மீண்டும் பேச்சு தொடர்கிறது.

"ஏங்க சார் நிறைய இடங்களில் சுவிஷேஷக் கூட்டங்கள் 'ஏசு அழைக்கிறார்' ( நம் தமிழ் நாட்டில் சகோதரன் தினகரன் போன்றோர்) என்று கூறி, சப்பாணிகள் நடந்துள்ளனர். குருடர்கள் பார்வை பெற்றுள்ளனர். செவிடர்கள் கேட்டும், பிணிகள் நீங்கியும் அற்புதங்கள் ஏற்பட்டு உள்ளனவே! அது எப்படி?"

"சகோதரியே! அது குறித்து நீண்ட விளக்கம் தர வேண்டும். ஆனால் நமது விமானப் பயணம் குறுகியது. சுருங்கக் கூறினால். மத்தேயூ 24:5 , மத்தேயூ 24:11,23 முதல் 25 வரை, மத்தேயூ 7:15 முதல் 23 வரை அநேக கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள் அப்பொழுது இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார் அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

 மத்தேயூ 24:23 முதல் 25 வரை ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைத் தரிசித்துஅ கொண்டு நானே கிறிஸ்து என்று சொல்லி அநேகரை வஞ்சிப்பார்கள். மத்தேயூ 24:5 15. கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு, எச்சரிக்கையாயிருங்கள் அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள். உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கின்ற ஓநாய்கள். 16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? 17.அப்படியே நல்ல மரமொல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். 18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்க மாட்டாது. 19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். 20. ஆதலால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். 21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே! என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்திமாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே! என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ம

த்தேயூ 7:15 முதல் 23வரை "சகோதரியே! மேற்சொன்னவற்றில் மத்தேயூ 7:22ல் உள்ளது" அந்நாளில் - எது அந்த நாள்! நாளை நியாயத் தீர்ப்பு செய்யும் ?(DAY OF JUDGEMENT) நாள். அந்நாளில் ஏசு என்ன செய்கிறார் பாருங்கள். கர்த்தாவே! கர்த்தாவே! உன்நாமத்தினால் அதை இதை செய்தோம் என்பார்கள். யார் அவர்கள்? முஸ்லிம்களா? இந்துக்களா? யூதர்களா? புத்தபிச்சுக்களா? பார்சிகளா?

கிறிஸ்துவர்களாகிய நீங்கள் உங்களைப்பார்த்து என்ன சொல்கிறார்? ஏசு சொல்வார். ஒருக்காலும் நான் உங்களை அறியவில்லை. என்னை விட்டு தூரப் போங்கள் (Depart from me) என்பார்! எனவே, இந்த மாய ஜாலங்களில் மயங்காது நேரான வழியை தேர்ந்தெடுங்கள் சகோதரியே!"

" O GOD "Terrible" ஓ கடவுளே, மிக பயங்கரம் WE WERE MISGUIDED- எங்களை வழி கெடுத்துவிட்டார் இந்தப் பாதிரிகள் என்றார் அப்பணிப்பெண்.

( இது குறித்து நீண்ட விவாதம் செய்தேன். புத்தகத்தின் அளவு நீளமாகக் என்பதற்காகவே இங்கு சுருக்கித் தருகிறேன். இறைவன் நாடினால் அடுத்த பதிப்பில் முழு விபரமும் தருகிறேன். 6 வால்யூம்கள் உள்ளன - ஆசிரியர்)*

* இந்நூலாசிரியர் பழனி பாபா அவர்களின் இந்த ஆசை நிறைவேறவில்லை. 1997ஆம் ஆண்டு ரமலான் மாதம் பயங்கரவாதிகளால் வெட்டி (ஷஹித்) கொலை செய்யப்பட்டார்கள்.(இன்னாலில்லாஹிவ இன்ன இலைஹி ராஜிஊன்) அவரது பிழைகளை வல்ல அல்லாஹ் பொறுத்து மறுமையில் சுவனத்தில் சேர்க்க துஆ செய்வோம். (பதிப்பகத்தார்)

"முஸ்லிம்களாகிய நீங்கள் பைபிளை முழுவதும் பொய் என்கிறீர்களா?" "சரியான கேள்விதான், சகோதரியே! பைபிளில் மட்டுமல்ல, தெளராத், இன் ஜீல், ஸபூர் (சங்கீதங்கள்) இவையனைத்தும் வேதங்களையும், அதனைக் கொணர்ந்த இறைவனின் தூதுவர்களையும் ஏற்று நடக்க வேண்டும் என்பது எங்கள் திருக்குர் ஆனின் ஆனை. அதுவுமல்லாது மலக்குகள் (ANGEKS) மறுமை இவற்றை ஏற்று நடப்பது எங்கள் கடமை! ஆனால், மாறுபடாத - மாசுபடாத மனிதக்கரத்தின் கறைபடாத நூலாக அவைகள் இருந்தால் அது நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும்." "இன் ஜீல், ஈஸா என்ற பதங்களை முஸ்லிம்கள் கூறுவதை நான் கண்டிள்ளேன்!" "சகோதரியே, நான் மறுக்கவில்லை, மாறாக என் வேதம் இன் ஜீல் இதை என் தேவனாகிய கர்த்தர் அருளினார் என்று பைபிளில் எங்காவது ஏசுநாதர் கூறுகிறாரா?" "இல்லை" "முஸ்லிம்கள் மட்டுமே கூறுகின்றனர்.

அதில்தான் ஆராய்ச்சியாளனுக்கு கருவே அமைந்துள்ளது. எப்படி எனில் ஒரு வேத நூலை ஆராய்பவர் தெளிவான எளிமையான பதங்களை உடைய வசனங்களை வைத்து மேற்கோள் காட்டி விளக்கிட வேண்டும். அதற்கு 3 விதமான அளவுகோலை முஸ்லிம்கள் காலங்காலமாய் கடைபிடிக்கிறார்கள்.

இறைவனால் கூறப்பட்டது - Words of God

நபியால் கூறப்பட்டது - (Hadith) Words of the prophet of God

சரித்திராசிரியர்களால் கூறப்பட்டது - Words of the HISTORIANS or Autograper

திருக்குர் ஆன் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் ஆனைகள்.

ஹதிஸ்கள் (Traditions) நபிகளாரின் வாக்குகள் மற்றும் அதை கேள்விப்பட்டவர்கள், உறவினர்கள், நண்பர்களின் வாக்குமூலங்கள்.

சரித்திரங்கள், சரித்திர வல்லுனர்களின் கூற்று மற்றும் Commentators இப்படி மூவகையும் தனித்தனியே வைத்துள்ளோம்.

உங்களுடையது அனைத்தும் சேர்ந்த (அரபு நாட்டு இரவுக் கதைகள் போல்) கலவை.

"கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் சார்" "தெளிவாகவே சொல்கிறேன்.

பேனாவை வாங்கி கீழே உள்ளதை எழுதுகிறேன்; "உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்களின் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்கு கற்பிப்பதை எல்லாம் அவர்களுக்குச் சொல்வார்."உபாகமம் 18:18 என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குஅ செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன் உபாகாமம் 18:19 நான் - நானே கர்த்தர். என்னைப்யல்லாமல் வேறு ரட்சகர் இல்லை. 

ஏசாயா 43:11 வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதை குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது, நானே கர்த்தர்; வேறோருவர் இல்லை.ஏசாயா 45:18 என்னையல்லாமல் வேறே தேவனில்லை! என்னைத் தவிர வேறு ஒருவருமில்லை. ஏசாயா 45:21 பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே! என்னை நோக்கிப் பாருங்கள். அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள். நானே தேவன் வேறொருவரும் இல்லை. ஏசாயா 45:22 இவற்றைப் படிக்கும் போதே எளிதாய்க் கூறிவிடலாம், யாருடைய இடையுதவியும், விளக்க பதவுரைமில்லாது கூறலாம்." நான்""என்" போன்றவை "சுய" சொற்கள். ஓர்மையில் உள்ளது. இது இறைவன் கூறுவதுபோல் உள்ளது என்பது வெளிப்படை. அதே நேரம், இரண்டாவது கூற்றுப்படி, ஒரு தீர்க்கதரிசியின் சொல் என்பதை பைபிளில் எப்படி ஆராய்வது எனப் பார்ப்போம். "உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார். அவருக்கு செவி கொடுப்பீராக. உபாகமம் 18:15 அப்போது கர்த்தர் ர்ன்னை நோக்கி அவர்கள் சொன்னது சரியே. உபாகமம் 18:17

"ஏலி,ஏலி,லாமா,சபக்தனி என்று மிகுந்து சப்தமிட்டு ஏசு கூப்பிட்டார். "என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர். என்று அர்த்தமாம்" மத்தேயூ 27:46

"இயேசு அவனுக்குப் பதில் சொல்லும் வண்ணமாக கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால், "ஓ இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்." மாற்கு 12:29

அதற்கு இயேசு "நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே"மாற்கு 10:18 23.

அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார் அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். 24. ஏனெனில் கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் (அறிவாளிகளையும்) வஞ்சிக்கத் தக்கதாகப் பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள். 25. இதோ முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். மத்தேயூ 24:23,24,25 இயேசு கூறினார், ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைதரித்துக் கொண்டு நானே கிரிஸ்து என்று சொல்லி அநேகரை வஞ்சிப்ப்ச்ச்ர்கள். மத்தேயூ 24:5

இதைப் படிக்கும் ஒரு குழந்தைக்குக் கூட புரியும் கர்த்தர் என்னை நோக்கி என்பதும், இயேசு அழுதார், கூவினார் இயேசு மோசே கூறியது எனும் போது அது ஒரு தீர்க்கதரிசி, இறைவனின் தூதுவருடைய சொல் என்பது புரிகிறது. மூன்றாவது நபருடைய சொல் அதாவது சரித்திராசிரியரின் சொல் எப்படிப்பட்டது என்பதை பார்ப்போம்.

அப்போது எல்லாரும் (சீடர்கள்) அவரை (ஏசுவை) விட்டு ஓடிப்போனார்கள். 12. மறுநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டு வருகையில் அவருக்குப் பசி உண்டாயிற்று. 13. அப்போது இலைகளுள்ள ஒரு அத்திபரத்தைத் தூரத்திலே கண்டு,அதில் ஏதாகிலும் அகப்படுமா என்று பார்க்க வந்தார். அவர் அதனிடத்திலே வந்தபோது அதில் இலைலளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை. மாற்கு 12:12,13 அவருக்குப் பசியுண்டாயிற்று என்பது மூன்றாவது நபர் கூற்று. ஏசுவின் கூற்று எனக்கு பசியுண்டாயிற்று, நான் அதனிடம் வந்தபோது என்றிருக்கும். அவர் அதனிடம் வந்தபோது என்பது மூன்றாம் நபர் அதாவது சரித்திராசிரியரின் கூற்று. இப்படிப் பகுத்துப் பார்த்தால் பைபிள் என்பது கடவுளின் வாக்காக இருக்க வாய்ப்பற்று இரு மடங்கு தீர்க்கதரிசிகள் மற்றும் சரித்திராசிரியர்கள் கூற்று மலிந்து கிடப்பதைக் காணலாம். எனவே, மொத்த பைபிளும் கடனுளின் வார்த்தைகள் என்பதை ஏற்றுக்கொள்ள ஒரு முஸ்லிமால் முடியாது. "பழைய ஏற்பாட்டைக் கூட மோசேவின் முழு வார்த்தை என்று ஏற்பதில்லையா?"

"சகோதரியே, பழைய வேதத்தை எடுத்துப் பாருங்கள். 700க்கும் மேற்பட்ட இடங்களில் மோசேவிடம் கர்த்தர் சொன்னதாவது, கர்த்தரிடம் மோசே சொன்னதாவது, கர்த்தர் ஆரோன் மோசேவிடம் கூறியதாவது என்றுள்ளது. இது மோசஸ் சொல்லவும் இல்லை, கடவுளின் வார்த்தையாகவும் இல்லை. மோசஸ் சொல்லியிருந்தால் நான் கர்த்தரிடம் சொன்னேன், கர்த்தர் என்னிடம் பேசிய போது என்று ஒருமை வந்திருக்கும். அவர் இவரிடம் சொன்னர். இவர் அவரிடம் என்பது முழுக்க முழுக்கு மூன்றாம் நபர் சாட்சி. எனவே பழைய ஏற்பாட்டின் பெரும் பகுதி மனிதக் கைகளால் ஊடாடப்பட்டுவிட்டது என்ற உண்மையை தெரிந்தும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் மறுதலிக்க காரணமெம்ம!" என்றேன்.

"முற்றிலும் சரியே!" என்றார் அப்பெண்.

"சகோதரியே, நீங்கள் நிச்சயம் யூதப் பெண்ணாக இருக்க முடியாது." "நீங்கள் அரபிகளுக்கு சொந்தமான GULF AIRLINES-ல் வேலை செய்கிறீர்கள். யூதர்களுக்கு சொந்தமான COCOCOLA பானத்தைக் கூட பருகாது PEPSI பானம் பருகும் அரபிகள் யூதர்களின் பரம வைரிகள் அதனால் சொல்கிறேன்.

" "மிகவும் சரி, நான் அமெரிக்கன் கலிபோர்னியாவைச் சார்ந்தவள்"

"அப்படியானால் ஏசு கிறிஸ்துவால் உங்களுக்கு பலன் இல்லையம்மா." "மிகவும் கொடுரமான அதிர்ச்சி தரத்தக்க வேதனை தரும் செய்தி உங்களுடையது."

"வேண்டுமானால் மத்தேயூ 15:21 முதல் 24 வரை படித்துப்பாருங்கள்.

21. ஏசுநாதர் திரு சீதோன் பட்டணத்துக்கு போனார். 22. அப்போது அந்த திசைகளில் குடியிருக்கிர கானானிய (CANNAN) தேச யூதரல்லாத ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும். என்மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். 23. அவளுக்கு எவ்வித பதிலும் தராது ஏசு போகிறார். சீடர்கள் சிபாரிசு செய்கிறார்கள், வேண்டிக் கேட்கிறார்கள். 24. அதற்கு அவர் கானாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்துக்கு அனுப்பப்பட்டேனேயன்றி மற்றபடி அல்ல என்றார். மத்தேயூ 15:21 - 24

அதைப்படித்த அப்பெண்மணி சற்று அதிர்ச்சி அடைகிறார்.

ஆனால் முஹம்மது நபிகளை இறைவன் 'ரஹ்மத்துல் ஆலமீன்' அகில உலகுக்கும் அருட் கொடையாக ஆக்கி வைத்துள்ளான்.

மேலும் சகோதரியே! மத்தேயூ 10:5 முதல் 7 வரை படியுங்கள். (அதிகாரம் 10ல் தான் யூதாஸ் கரியோத்து காட்டிக் கொடுத்தவன்) உட்பட 12 சீடர்களை ஏசு தேர்ந்தெடுக்கிறார்,

பின்னர் அறிவுரை கூறும்போது - 5. இந்த பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்கு கட்டளையிட்டு சொன்னது என்னவென்றால், நீங்கள் புறஜாதியார்(GENTILES) நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர்(SAMARITANS) பட்டணங்களில் பிரவேசியாமலும்..... 6. காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்துக்குப் போங்கள். 7. போகையில் பரலோகராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்! மத்தேயூ 10:5 - 7 "சகோதரியே, புற ஜாதியார் யார்? அமெரிக்கராகிய நீங்களும் நானும், ஏன் யூதரல்லாத அனைவரும் தானே."

"ஆனால் சார், மார்க் 16:15ல் நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிகளுக்கும் சுவிஷெஷத்தை பிரசங்கியுங்கள் என்று கூறியுள்ளாரே!"

"சகோதரியே, மீண்டும் இவ்வரிகள் மத்தேயூ 15:24 உடன் முரண்படுகிறது. (முரண்பட்டால் புனிதம் கெடும்) மற்றும் மத்தேயூ 1:21ல் அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது (யூத) ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை(யூதர்களை) இரட்சிப்பார் என்றான் (தேவ தூதன் யோசேப்பின் கனவில்) இதனுடனும் முரண்படுகிறது.

இதனால் தான் பல பைபிள் அறிஞர்கள் சில ஆண்டுகளுக்கு முன் மார்க் 16ல் 9லிருந்து 20வரை நீக்கி Foot Note அடிக் குறிப்பிட்டுள்ளனர். ( THE NEW AMERICAN STANDARD BIBLE )

பல பாதிரிகளின் எதிர்ப்புகளால் சிலர் சில பைபிள்களில் சேர்த்தும் சேர்க்காமலும் விட்டுள்ளனர்.( சேர்க்காது விட்டது AMERICAN REVISED STANDARD VERSION

) "அப்படியிருந்தும் மத்தேயூ 28:19ல் ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும்(NATIONS)என்று வருகிறதே." "சகல ஜாதிகள் (தேசங்கள்) என்பது All nations யூதர்களின் 12 குலங்கள் (இது குறித்து ஏசுவே லூக்கா 22:30ல் "நீங்கள் என் ராஜ்யத்திலே, என் பந்தியிலே போஜனபானம் பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாய் சிங்காசனங்களின் மேல் உட்காருவீர்கள்" என்றார்) இந்த 12 கோத்திரங்களைத்தான் குறிப்பிடுகிறார் NEW AMERICAN STANDARD BIBLE மற்றும் NEW WORLD TRANSLATION of Holy SCRIPTURES இந்த இரு பைபிள்களிலும் All Nations என்று இல்லை. மாறாக All the Nations என்றுள்ளது. எனவே குறிப்பிட்டுச்சொல் 12 கோத்திரத்தைக் குறிப்பிட்டுக் கூறுகிறது. இதை வழக்கம் போல Papal Politics வேலை செய்துள்ளனர்."

"ஓ Now I under stand இப்போது புரிகிறது!"

"அது மட்டுமல்ல சகோதரியே! ஏற்கனவே படித்த மத்தேயூ 15:24லிருந்து 25,26ல் என்ன சொல்லப்படுகிறது?ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று மீண்டும் அப்பெண்மணி கேட்க (புற ஜாதி பெண்மனி) ஏசு என்ன சொன்னார்? அவர் அவளை நோக்கி; "பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுகிறது நல்லதல்ல" என்றார்.

மத்தேயூ 15:26 பிள்ளைகள் என்பது யூதர்கள், அப்பம் அருள்பெற்ற அற்புத சக்தி, நாய்க்குட்டி என்பது புற ஜாதியராகிய நாம்.

இன்னொரு இடத்தில் நம்மை பன்றி என்று சொல்லுகிற வசனம் வருகிறது.

இவ்வளவு ஏன் சகோதரியே; ஏசுநாதர் யூதர்களை காணாது போன ஆடுகள் என்கிறார்.

மற்றெல்லாரையும், பல நேரம் பல இடங்களில் இப்பொல்லாத சந்ததியினர், இந்த விபச்சார சந்ததியினர், குட்டிவிரியன் பாம்புக் குட்டிகளே, நாய்களே, பன்றிகளே என்று கூறுகிறார்.

ஒரு தீர்க்கதரிசி இப்படி கூப்பிடுவாரா? நிச்சயம் இருக்க முடியாது, காரணம் எங்களுடைய குர்-ஆனிலே அவரையும் ரஹ்மத்துல் ஆலமீன் உலகத்து மாந்தருக்கு அருட்கொடை என்று கூறுகிறது.

அவருடைய தாய் மேரி (மரியம்)யை உலகத்து மாந்தருக்கெல்லாம் உயர்வானவராக குர்-ஆனில் வைத்துள்ளோம். ஆனால் அந்த மாந்தர்க்கரசி பற்றி பைபிள் மவுனமே சாதிக்கிறது. பேசினால் ஆண்டுகள் யுகங்கள் தேவை. மொத்தத்தில் பைபிளிலும் குர்-ஆனிலும் வரும் ஒரே ஒரு விதவசனம் தான் பதில். அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாகவும், உணர்ந்து கொள்ளாதவர்களாயும் இருக்கிறப்படியால்.

 Mathew மத்தேயூ 13:13 (அவர்கள்) செவிடர்களாக,ஊமையர்களாக,குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள் அல்குர்-ஆன் 2:18 இது தான் பதில்.

"ரொம்ப நன்றி சார். பஹ்ரினில் நீங்கள் எங்கு தங்குவீர்கள்? என் அண்ணனும் இங்கு கம்பெனி வைத்து என் ஜினீயரிங் காண்டிராக்ட் செய்து வருகிறார்/" "ஹோட்டல் அல்ஜஸிராவில் 2 நாள் இன்ஷா அல்லாஹ் தங்குவேன்." "ரொம்ப நன்றி சார்" விடைபெற்றேன்.

பஹ்ரினில் தங்கியிருக்கும்போது மறுநாள் ரிஸப்ஷன் போனில் என்னைப் பார்க்க ஒரு குடும்பம் வந்துள்ளதாக செய்தி வந்தது மேலே அனுப்பும்படி கூறினேன்.

என்ன ஆச்சிரியம்! அல்ஹம்துலில்லாஹ், அதே விமானப் பணிப்பெண் அவருடைய தாய், தங்கை, அண்ணன், அண்ணி(தகப்பனார் இல்லை) அனைவரும் வந்து உரிமையோடு அளவளாவினர். மகள் கூறியதையும் பாதிரிகள் தயங்கியதையும் கூறி குடும்பமே இஸ்லாத்தைத் தழுவும்படி வழி கேட்டனர்.

பஹ்ரினிலுள்ள ( ISLAMIC GUIDANCE SOCIETY ) இடம் வரவழைத்து ஒப்படைத்து விடைபெற்று ரியாத் சென்றேன். அவர்களுடன் ஓட்டலில் உரையாடியது VIDEO செய்யப்பட்டிள்ளது.

ரியாத் லக்கி வீடியோவிலும் அபுதாபியில் அல் அமனாவிலும், சிங்கப்பூரில் மஜீத் பிரதர்ஸ், இலங்கையில் ISLAMIC STUDIES CENTRE - Colombo விலும் என்னிடமும் காப்பிகள் கிடைக்கும். 

முற்றும்.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard