New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Entry


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Entry
Permalink  
 


Entry  -நுழைவாயில்

பைபிள் எனும் கிறிஸ்துவ சமயத்தின் புராணக் கதை தொகுப்பு நூல், உலகின் பெரும்பாலான மொழிகளில் பெரும் பொருட்செலவில் மொழிபெயர்க்கப்பட்டு, மேலும் ஒவ்வொரு நாட்டிலும் ஆண்டிற்கு பல்லாயிரம் கோடிகள் செலவில் உலகெங்கும் பரப்பப்படும் கதைகளும் ஆகும்.

மின்னணுப் புரட்சியும் கைப்பேசியில் வலையுலகமும் உலகை ஒரு சிறு கிராமமாக சுருக்கிவிட்டது. உலகின் பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களின் பல முக்கிய பதவிகளில் இந்தியர் உள்ளனர். நம்மிடையேயும் பல்வேறு சமய மக்கள் வாழ்கின்றனர். தங்கள் சமயமே உயர்ந்தது என திணிக்கபட்ட புனையலை கேட்டு அதே ஊகத்தில் பாரத இறை வரலாற்றை -வழிபாட்டையை அறியாது பேசுவோர் காண்கிறோம்.

சமுதாயத்தில் நல்லிணக்கம் தோன்ற அனைத்து மக்க்ளிடையே உரையாடல்கள் அவசியம், அந்த நிலையில் பிற சமயங்களைப் பற்றிய வரலாற்றுப் புரிதல் அவசியம். கிறிஸ்துவம் பற்றிய தற்போதைய பன்னாட்டு பல்கலைக்கழக ஆய்வுகளின் இன்றைய நிலையினை-உண்மைகளை இந்நூலில் தருகிறோம்.

கிறிஸ்துவ சமயத்தின் தொன்மக் கதைகளைப் பற்றிய ஆய்வுகள் 1970க்குப் பின்பாக, தொல்லியல் ஆய்வுகளின் உண்மை அடிப்படையில் என்ற நோக்கம் மேலோங்கத் தொடங்கியது. அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் எழும்பிய கருத்துச் சுதந்திரம், விஞ்ஞானப் புரட்சி, சர்ச் உண்மையினைத் தடுக்கும் சக்தி குறைந்திட பல்கலைக் கழகங்களின் ஆய்வ்களும் மேம்படத் தொடங்கின.

விவிலியத்தின் முற்பகுதியான எபிரேய பைபிளினை வரலாறு எனக் கொண்டு எழுந்த தொல்லியல் அகழ்வாய்வுகள் அனைத்தும் பொய் எனக் காட்டிட, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியதுறை இயக்குனர்  இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் தன் நூலின்(The Bible Unearthed) முன்னுரையில் கூறுவது

//விவிலிய உலகம் இஸ்ரேல் ஒரு மிகச் சிறிய வளர்ச்சியற்ற ஒரு சாதாரண பகுதியில் மக்கள் எதிர்காலம் பற்றிய பயங்கள் வருமை, போர் , வியாதிகள், அநியாயங்கள், பஞ்சம் போன்றவையில் தவித்த மக்கள் பகுதி தான், பைபிள் கதைகள் - கூறப்பட்டுள்ள புனையல்கள் - ஆபிரகாமை கடவுள் தேந்தெடுத்தார், பின் பாபிலோனிலிருந்து அவர் கானான் வந்தார் என்பது, எகிப்திலிருந்து மோசே மூலம் மக்களை அடிமைப்பாட்டிலிருந்து மீட்டு, பின் யூதேயா -இஸ்ரேல் நாடுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் இவை ஏதும் ஒரு இறை வெளிப்பாடு இல்லை, மனிதச் சிந்தனையின் கற்பனை வளம்  மிக்கக் கதைகள்.//-

அமெரிக்க தொல்லியல் பேராசிரியர் வில்லியம் டேவர் கூறுவது கடந்த 150 ஆண்டுகளில் எகிப்தில்  எபிரேயர்கள் வாழ்ந்தார்கள், பாலைவனத்தில் 40 வருடம் அலைந்து இஸ்ரேல் வந்தனர் என்பதற்கு ஒரு சிறு ஆதாரமும் கிடைக்கவில்லை, பைபிள் கதைகளைக் காப்பாற்ற பல அறிஞர்களும் பல்வேறு ஊகக் கோட்பாடு கூறு மழுப்பினர்.[ii]

 உலகின் மூன்று பெருமதங்களில் ஒன்றாய் விளங்கும் கிறிஸ்துவத்தின் துவக்கம் மிகவும் மெதுவானது. கிறிஸ்துவ சமயத் தொடக்க வளர்ச்சியிஅனி ஆய்வு செத நூல்கள், அதனை சர்ச் வரலாற்றாசிரியர்களின் விமர்சன அடிப்படையில் காணும்போது, ஏசு பொகா 30 வாக்கில் இறந்தார் எனில், 40 வாக்கில் 1000 பேர் சர்ச் உறுப்பினராய் கிறிஸ்துவரானர், இது ஆண்டிற்கு 2.5% எனும் வேகத்தில் வளர்ந்தது.[iii]  கிறிஸ்துவ சர்ச்சின் ரோம் ஆட்சியின் கீழிருந்த 6 கோடி மக்களுள் பத்தாயிரம் என்ற நிலை எட்ட ஏசுவின் மரணத்திற்கு 100 ஆண்டு பின்பு தான் ஆனது, ஆனால் 10 லட்சம் பேர் எனும் நிலையில் 320 வாக்கில் இருந்த கிறிஸ்துவ மக்கல் தொகை, ரோமன் ஆட்சியில் அதிகார அங்கிகாரம் பெற்றிட அடுத்த 50 ஆண்டினும் 5.5 கோடியைத் தாண்டியது. கிறிஸ்துவம் பெருமதமாய் உரு பெறக் காரணம் ரோமன் ஆட்சியின் ஆதரவே அன்றி வரலாற்று ஏசுவோ, அதிசயங்களோ இல்லை என்பது வரலாற்று உண்மை

இயேசு கதைகளை சொல்லும் புதிய ஏற்பாடு எனும் 27 நூல் தொகுப்பு, மிகப் பழைய ஏடுகள்  என்பவை ஒரு சிறு புத்தகம் முழுதும் எனில் கூட 4ம் நூற்றாண்டு இறுதி அல்லது பிற்பாடு தான், புதிய ஏற்பாடு முழுமைக்கும் எனில் 6ம் நூற்றாண்டு ஏடுகள் அதிலும் பிற்கால திருத்தங்கள் என உள்ளது,  உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் மாற்றாக வேறு இரு சொற்களாவது உள்ளது, எனவே உள்ள 6000 கிரேக்க ஏடுகள் எவ்விதத்திலும் நம்மை மூல ஏட்டிற்கு அழைத்துச் செல்ல இயலாது.[iv]

எபிரேய மொழி மொழிரீதியில் வளர்ச்சியற்றது, , உயிர் எழுத்துக்கள், ஏசுவிற்கு 800 ஆண்டு பின்பு தான் உருவாயிற்று, உயிர் எழுத்து சேர்த்து எழுதப்பட்ட மெசொடரிக் 10ம் நூற்றான்டு ஏடு தான் நம்மிடம் உள்ள எபிரேய பழைய ஏற்பாடு ஏடுகள்.(பழைய ஏடுகள் அழிக்கப்பட நம்மிடம் பழைய ஏடுகளே கிடையாது) 1947ல்  கிடைத்த சாக்கடல் சுருள்கள் ஏசுவிற்கு ஒரு நூற்றாண்டு முன் தான் இவற்றை மாற்றி இக்கதைகள் இன்றைய  வடிவில் இயற்றப்பட்டன என நிருபிக்கிறது.

யூத கிறிஸ்துவ தொன்மக் கதைகளில் சற்றும் வரலாற்று உண்மைகள் கிடையாது என்பது மிகத் தெளிவாய் தொல்லியல் ஆய்வுகள், பைபிளியல் ஏடுகள் நூலின் அமைப்பு ஆய்வுகள், மிகத் தெளிவாய் நிருபித்துவிட்டது. பைபிள் முழுமையும் பிற்காலத்தில் இஸ்ரேலின் ஆட்சி உரிமை எங்களுக்கு எனக் காட்ட மனிதக் கரங்களால் புனையப்பட்ட தொன்மக் கதைகளே.

வரலாற்று ரீதியில் இயேசு எனும் கிறிஸ்துவ கதை நாயகர் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் ஏதும் கிடையாது, இஸ்ரேல் - ரோம் நாடுகளில் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து நூல்கள் எழுதிய பல ஆசிரியர் எவரும் ஏசுபற்றி எழுதவில்லை. ஆயினும் பிற்கால சர்ச் இறந்த ஆசிரியர் சிலர் நூல்களில் நுழைத்த இடைச்செருகள் இன்று ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டன.

இந்நூலில் நாம் வரலாற்றை பன்னாட்டு பல்கலை கழகங்கள் குறிக்கும்படிக்கு பொகா - பொமு என்றே (பழைய தவறான கிபி-கிமு தூக்கி எரியப்பட்டது, விவிலியக் கதைகளிலேயே ஏசு பிறந்த - இறந்த வருடங்களில் குழப்பம் உண்டு) பயன்படுத்துகிறோம். நாம் பெரும்பாலும் தமிழ் ERV அல்லது கத்தோலிக்க இன்றைய தமிழ் மொழி பெயர்ப்பை உபயோகித்தாலும் தேவை எனில் மூல எபிரேய- கிரேக்க சொற்களின் சரியான பொருளை எடுத்து கொண்டுள்ளோம்.

 The Bible Unearthed  //The world in which the Bible was created was not a mythic realm of great cities and saintly heroes,but a tiny, down-to-earth kingdom where people struggled for their future against the all-too-human fears of war, poverty, injustice, disease, famine, and drought. The historical saga contained in the Bible—from Abraham’s encounter with God and his journey to Canaan, to Moses’ deliverance of the children of Israel from bondage, to the rise and fall of the kingdoms of Israel and Judah—was not a miraculous revelation, but a brilliant product of the human imagination.// 

[ii] Dever, William G. (2001), What Did the Biblical Writers Know and When Did They Know It? What Archaeology Can Tell Us about the Reality of Ancient Israel As archaeological evidence mounted, however, in the heyday of “biblical archaeology” between the 1930s and the 1950s, the question of Israelite origins grew more intractable. To everyone’sfrustration, new data brought more questions than answers. In fact, no one had ever found anyarchaeological evidence for the Exodus from Egypt. But in order to try to reconstruct the conquest andsettlement of Canaan, three competing theories or “models” eventually emerged, to which we shallturn presently.

[iii] Rodney Stark, The Rise of Christianity (1996)  ; W.V. Harris, ed., The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005).’ Ramsey MacMullen, Christianizing the Roman Empire 

 [iv] Bart Ehrman, Helmet Koester



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

ஐரோப்பிய, அமெரிக்க மனதுக்கு, இருண்ட காலங்கள் Dark Ages எனக்கூறப்படும் காலம் ஏறத்தாழ முழுமையாக இருண்டதாக இருக்கிறது. கிபி 600களில் நடந்த எதனையும் அறுதியுடன் கூறுவது மிகவும் மெத்த படித்த அறிஞர்களுக்கு கூட கடினமானதாக இருக்கிறது. இந்த இருண்டகாலங்களை பற்றிய இலக்கிய, அகழ்வாராய்ச்சி மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. ஆனால், இந்த கால கட்டத்தில்தான் முகம்மதின் கதையும் இஸ்லாமின் தோற்றமும் நடக்கிறது. ஆகவே, இந்த காலத்தில் தடயங்கள் கிடைக்காமல் இருப்பது எதிர்பார்க்கக்கூடியதுதான் என்று வாதிட இடமிருக்கிறது.

இருப்பினும், இஸ்லாமை பற்றிய வரலாற்றை ஆராயப்புகுந்தால், ஒரு சிக்கலான நிலையையே எட்ட வேண்டியதிருக்கிறது. முகம்மது இருந்ததாக கூறப்படும் காலத்தை நெருங்க நெருங்க, ஆதாரங்களும் மூலங்களும் ஆவணங்களும் அரிதாகி விடுகிறது. முகம்மதின் இறப்பு முடிந்து நூறு ஆண்டுகளுக்கு பிறகுதான் நிகழ்ச்சிகள் ஆவணப்படுத்தப்படுகின்றன. அதற்கு முன்னால், செல்வது கடினமாகிவிடுகிறது. திரை இறங்கிவிடுகிறது. அந்த திரையை கிழித்து அதன் ஆரம்பத்தை பார்க்க முடிவதில்லை. ஆகவே, நம்மால் முகம்மது ஒரு உண்மையான மனிதரா? அல்லது உருவாக்கப்பட்ட பிரமையா, அல்லது வசதியாக உருவாக்கப்பட்ட கட்டுக்கதையா என்று சொல்லமுடிவதில்லை.

இன்றைய நவீன அரசியல் சூழ்நிலையில், முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா? Did Muhammad Exist? என்ற தலைப்பே ஒரு சவால்தான். இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு, இந்த மாதிரி தலைப்பை வைத்ததற்காகவே, எதிர்ப்பு, வன்முறை, ஒதுக்கல், பத்வாக்கள் ஆகியவை வரக்கூடும் என்பதால், உண்மையில், “முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா? என்ற தலைப்பில் புத்தகம் எழுதலாமா?” என்றுதான் இந்த புத்தகத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தலைப்பு கேள்விக்கு விடை இன்றைய அரசியலில் “கூடாது” என்றுதான் இருக்கும். ஆகவே, “முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா?” என்ற கேள்விக்கும் விடை “இல்லை” என்றுதான் இருக்கும். ஏனெனில், முகம்மது வரலாற்றில் நிச்சயம் இருந்திருந்தால், அவரது இருப்பு ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட கேள்வியை கேட்பதற்கு எந்த விதமான அச்சுருத்தலும் நிச்சயம் இருக்காது. மேலும், இந்த புத்தக ஆசிரியர், முகம்மதின் வரலாற்று இருப்பை சந்தேகப்பட்டிருப்பதாலும், அவரது முடிவை எளிதில் பொய்யென நிரூபிக்க முடிந்திருந்தால், இந்த கேள்வியும் உடனே உதாசீனம் செய்யப்பட்டு மறக்கப்பட்டிருக்கும். ஆகவே, இந்த புத்தகம் விவாதத்துக்குரியதாக இருப்பதாலும், இது சில நாடுகளில் தடை செய்யப்பட்டிருப்பதாலும், இந்த புத்தகத்தின் வாதங்களில் சத்திருக்கிறது என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.

இயேசு வரலாற்றில் இருந்தாரா என்பதை பற்றி ஆய்வாளர்கள் ஆராயும்போது அது விவாதத்த்குரியதாக இல்லை. விவிலியத்தில் இருக்கும் நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்போது அது விவாதத்துக்குரியதாக இல்லை. விவிலியத்தில் இருக்கும் நிகழ்வுகள் நடக்கவே இல்லை என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது, ஒரு சில கிறிஸ்துவர்கள் அப்படிப்பட்ட ஆய்வு முடிவுகளை வருத்தத்துடன் பார்த்தாலும், ஆய்வாளர்கள் மீது கொலை மிரட்டல் விடப்படுவதில்லை. கிறிஸ்துவம் தனக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களை தாண்டி நிற்கிறது. அது தன் செய்தி தரும் வலிமையால் நிற்கிறது. அதன் வரலாற்று தகவல்களால் நிற்கவில்லை. அதே போல இஸ்லாமும் இவற்றை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.
நாம் காணும் பைபிள்-(விவிலியம்) 16ம் நூற்றாண்டு வரை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச்சினால் சிறைப் படுத்தப் பட்டுயிருந்த்தது, பைபிள் நூலைப் பதிப்பித்த பலர் மதத்திலுரிந்து வெளியேற்றம் ம்ற்றும் மரணதண்டனை என கொலையும் சர்ச்சினால் செய்யப்பட்டனர். மறுப்பியல் (ப்ரோட்டஸ்டண்ட்) அணியினரின் கிளர்ச்சியினால் அதிலும் புத்தகங்கள் மட்டுமே (sola scripture) என்ற கோரிக்கையினால் பைபிள்-(விவிலியம்) சுதந்திரம் பெற்றது.

 

 ஏசு கிறிஸ்து மற்றும் விவிலியக் கதைகள் மேற்க்கத்திய நாடுகொளோடு கடந்த 1700 ஆண்டுகளாக பின்னிப் பிணைந்தவை, விவிலியம் ரோமன் கத்தோலிக்க சர்ச்சினால் சிறை படுத்தப் பட்டு இருந்தது, ப்ரோட்டஸ்டண்ட் கிளர்ச்சி என எழுந்த போது அதில் ஒரு கோரிக்கை, நூல் மட்டுமே (சோலா ஸ்கிருப்சர்) என்பதால் வெளிவந்தது, ஆயினும் விவிலியக் கதைகள் மீது நேர்மையான ஆய்வுகள் தொடங்கியது 

ஆரம்பத்தில் விவிலியத்தை பதிப்பித்தவர்களை கொன்றது சர்ச், பைபிள்களை வாங்கி அழித்தது. ஆகையினால் விவிலியக் கதைகள் மீது நேர்மையான ஆய்வுகள் தொடங்கியது மேலும் 200 ஆண்டு பின்பு தான். ஆய்வு செய்தோரும் கடுமையாய் விமர்சிக்கப்பட்டனர். கைது செய்தல் - கொலை எல்லாமே நிகழ்ந்தன. தற்போதும் தொடர்கிறது.

பழைய ஏற்பாட்டில் மோசேயின் சட்டங்கள் எனும் கதைகளில் உள்ள ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனத் தொடொங்கி, மோசே வழியில் யோசுவா காலத்தில் இஸ்ரேலின் ஊர்களை 12 கோத்திரங்களுக்கு பிரித்துக் கொடுப்பதாகக் கதை, இவர்களை முற்பிதாக்கள் எனப் பெயர். பாபிலோனில் வாழ்ந்த ஆபிரகாம் என்னும் அன்னியர் இங்கே வந்து தங்கி பஞ்சத்தில் எகிப்து சென்றிட, 400 ஆண்டு பின்பு வந்தேறி எபிரேயர்கள் மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை செய்து, கன்னிப் பெண்களை அனுவபித்தும், மண்ணின் மைந்தர்களின் சொத்துக்களை அபகரித்தலுமே பைபிளின் அடிப்படை

இஸ்ரேலிற்கான எல்லை தெய்வம் யாவே எனும் கர்த்தர் ஆபிரகாமின் வாரிசுகளுக்கு எனத் தேர்ந்தெடுத்தார், இஸ்ரேல் அந்தக் சிறுகடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, ஆபிரகாமின் வாரிசுகள் எபிரேயர்கள் தேர்ந்தெடுட்க்கப்பட்ட மக்கள், மண்ணின் மைந்தர்கள் கானானியர்களை இனப்படுகொலை செய்திட அம்மண்ணின் கடவுள் சட்டம் என்பதே தோரா எனும் சட்டங்கள் எனும் நியாயப் பிரமாணங்கள்.

960க்குமுன்பு எகிப்து, இஸ்ரேல் எனப் பல அகழ்வாயுவ்களில் கிடைத்த பல தரவுகளை மேம்போக்காக  விவிலியக் கதைகளை உறுதி செய்வதாய் பரப்பட்டன.   ஆனால் இந்தக் கதைகள் எவற்றிற்கும் சிறுதும் ஆதாரங்கள் இல்லை, 

இஸ்ரவேல் தேசத்தின் சரித்திர தொடக்கமாக பைபிள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் வாழ்க்கைகளை எடுத்து கூறுகிறது. ஆபிரகாம் சிலைவணக்க வழிபாடு மிகுந்த சமுதாயத்தில் பிறந்தாலும் யெகொவா தேவனுக்கு மட்டுமே தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தவர். இறைவனின் ஆசியோடு ஆபிரகாம் ஈசாக்கை பெற்றார். ஈசாக்கு யாக்கோபை பெற்றார். யாக்கோபிற்கு பன்னிரெண்டு புத்திரர்கள் பிறந்தனர். இந்த சந்ததி எகிப்திற்கு குடிபெயர்ந்து பன்னிரெண்டு கோத்திரங்களாக பெருகுகின்றனர். அந்நியர்கள் தங்களது தேசத்தில் பெருகி வருவதை கண்டு அச்சமுற்ற எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்க ஆரம்பிக்கின்றனர். தேவன் ஆபிரகாமை நினைவு கூர்ந்து, அவரது சந்ததியை எகிப்தியர்களுக்கு தப்புவித்து கானான் தேசத்தில் குடி அமர்த்துகிறார். இஸ்ரேல் என்னும் தேசம் மலர்ந்தது.
 
பல்லாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மூவரை உறுதிபடுத்தும் தடயங்களை  கண்டடைவது எளிதல்ல என்றாலும் அவர்களை குறித்த செய்திகளின் உண்மையை கண்டையலாம். பைபிளில் கணக்கிட்டபடி முற்பிதாக்களின் காலம் கி.மு 2000-த்திற்கு ஒத்து வருகிறது. இம்மூன்று தனி நபர்களை குறித்து பைபிள் கூறுகின்ற செய்திகளை இன்றைய மத்திய கிழக்கு தொல்பொருள் கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன. குறிப்பாக பண்டைய மத்திய கிழக்கு பட்டணங்களான மரி, நுசி, எப்லா ஆகியவற்றில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளில் கிட்டிய கல்வெட்டுகள் முற்பிதாக்களின் கதைகளோடு ஒத்திருக்கின்றன.
 
எகிப்திற்கு விற்கப்படும் யோசேப்பு:
கி.மு 2000 -1800 காலங்களில் செமித்தியர்கள் எகிப்திற்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். அடிமைகளாக பெறப்பட்ட ஆசியர்களின் பெயர்களை 12ஆம் வம்சத்தை சேர்ந்த சில எகிப்திய ஹியராடிக் (சமயஞ்சார்ந்த) பாப்பிரஸ்கள் குறிப்பிடுகின்றன. பண்டைய எகிப்து தேசத்திற்கும், மெசப்பொத்தொமிய தேசங்களுக்கும் நிலவிய அடிமைவர்த்தகத்தை இதனால் அறியலாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

http://iraivetham.blogspot.in/

http://ivaryaar.blogspot.in/2013/05/blog-post_29.html

 

12ஆம் நூற்றாண்டை சேர்ந்த "பாப்பிரஸ் டி'ஆர்பினி" என்ற எகிப்திய ஓலையில் காணப்படுகிறது.

image+(1).jpg
கோதுமை தானியங்களை பெற்றுகொண்டதாக
எகிப்தின் தலைமை சுயம்பாகி ஒருவர் பானை
ஓட்டில் ஒப்புதல் எழுதியுள்ளார்.
 
image+(2).jpg
சுயம்பாகிகளின் அப்பம் தயாரிப்பு பணியை
சித்தரிக்கின்ற பண்டைய எகிப்தின் மாதிரி
(கெய்ரோ அருங்காட்சியகம்)

மரி கல்வெட்டுகளில் காணப்படும் சுமேரிய நாடோடிகளின் தற்காப்பு படைகள் குறித்த விவரங்கள் ஆதியாகமம் 14-இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆபிரகாமின் போர்குணங்களோடு பொருந்துகின்றன.

ஓரிடித்தில் நிலையாய் குடியிராமல், நாடோடிகளாகவும், கூடாரங்கள் அமைத்து வசிப்பவர்களாகவும் அக்கால சுமேரியர்கள் வாழ்ந்தனர் என்றும் தண்ணீர் தேடி அலைவது, கால்நடை மேய்ப்பது, பயிரிடுவது, அண்டை வீட்டாரோடு அமைதி பேணுவது என அவர்களின் அன்றாட வாழ்க்கை கடந்தது என்றும் மரி கல்வெட்டுகள் கூறுகின்றன.

 

ன்று நம்மிடம் தனி மனிதர்களை குறித்த தொல்பொருள் சான்றுகள் மிக குறைந்தளவே உள்ளன. எனினும், அகப்படும் அகழ்வாராய்ச்சி தடயங்கள் பல, முற்பிதாக்களின் கதைகளில் காணப்படும் வரலாற்றுச் செரிவை உறுதிபடுத்தி வருகின்றன.

  • சாலொமோன் ராஜா யூத தேவாலயத்தை கி.மு 966-இல் கட்டத் தொடங்கினார் என 99.99% வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கின்றனர்.
  • விடுதலை பயணம் நிகழ்ந்து 480 ஆண்டுகள் ஆன பின்பு சாலொமோன் ராஜா தேவாலயத்தை கட்ட தொடங்கியதாக 1 இராஜாக்கள் 6:1கூறுகிறது. இக்குறிப்பின் படி விடுதலை பயணம் கி.மு 1446 என்ற கால கட்டத்தில் நிகழ்கிறது.
1 இராஜாக்கள் 6:1 - " இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின் மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான் "
  • ஆபிரகாம் ஈசாக்கு பிறந்த போது 100 வயதை எட்டியிருந்தார் (ஆதி 21:5). ஈசாக்கு 60 வயதான போது யாக்கோபை பெற்றார் (ஆதி 25:26). யாக்கோபு எகிப்தை அடைந்த போது 130 வயதுள்ளவராய் இருந்தார் (ஆதி 47:9). இதன்படி ஆபிரகாம் பிறந்த காலம் முதல் யாக்கோபு எகிப்தை அடைந்த காலம் வரை 290 ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது.
  • இஸ்ரவேலர்கள் எகிப்தில் வசித்த காலம் 430 ஆண்டுகள். இக்குறிப்பு யாத்திராகமம் 12:40,41-இல் காணப்படுகிறது. இதனை ஆதியாகமம் 15:13, அப்போஸ்தலர் நடபடிகள் 7:6 ஆகிய வசனங்களும் கூறுகின்றன.
யாத்திராகமம் 12:40,41 - " இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்று முப்பது வருஷம். நானூற்று முப்பது வருஷம் முடிந்த அன்றைய தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது "

இதன் படி ஆபிரகாம் பிறந்த ஆண்டை எளிதாக கணிக்கலாம்.

ஆபிரகாம் பிறந்த ஆண்டு = 966+480+430+290 = கி.மு 2166

இ) முற்பிதாக்கள் வாழ்ந்த பகுதிகள்:
பாக்தாத்திலிருந்து தெற்கு நோக்கி 100 மைல் தொலைவில் அமைந்த 'நிப்பூர்' என்ற மெசப்பொதோமிய பட்டணம் 1890-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பட்டணத்தை குறித்து பைபிளில் எந்த செய்திகளும் குறிப்பிடவில்லை. எனினும் நிப்பூரில் கிட்டிய 40,000 கல்வெட்களில் சுமேரிய பகுதிகளை ஆண்ட அரசர்களை குறித்தும், அவர்கள் அரசாண்ட காலத்தை குறித்தும் செய்திகள் உள்ளன. இது ஆதியாகமத்தில் காணப்படும் ஜலப்பிரளயத்திற்கு முந்திய அரசர்களின், முற்பிதாக்களின் தலைமுறை பட்டியலை ஒத்திருக்கிறது. மரி, நுசி, எப்லா பட்டணங்களில் கிட்டிய கல்வெட்டுகளிலும் இத்தகைய தடயங்கள் கிடைக்கின்றன. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள நினிவே பட்டணத்தில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சியில் நோவா கதையை ஒத்த கில்கமெஷ் காப்பியம் என்ற பழங்கதை கல்வெட்டு கிட்டியது.

170px-GilgameshTablet.jpg
கில்கமேஷ் காப்பியம்

எபிரேய மூலப்பிரதியில் ஆபிரகாம் 'ஊர் கஸ்திம்' என்ற பட்டணத்தில் வசித்ததாக எழுதப்பட்டுள்ளது. செப்துவசிந்தாவில் (கி.மு 3ஆம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க மொழிப்பெயர்ப்பு) 'கல்தேயருடைய பட்டணமான ஊர்' என இப்பட்டணம் குறிக்கப்பட்டுள்ளது. கல்தேயர்கள் பண்டைய செமிடிக் இனத்தை சேர்ந்தவர்கள். கி.மு 6ஆம் நூற்றாண்டில் இவர்களது ஆதிக்கம் பாபிலோனில் (ஈராக்கில்) பெருகியது. இவர்களது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊர்-கஸ்திமும் அடங்கும். நெடுங்காலமாக இப்பட்டணம் அமைந்த இடம் கண்டுபிடிக்கப்படவில்லை. கி.பி-1850ஆம் ஆண்டு ஈராக்கில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் 'இதன் அமைவிடம் ஊர்' என்று பொறிக்கப்பட்ட ஜிக்கருட் கண்டுபிடிக்கப்பட்டு அவ்விடம் 'ஊர்' என உறுதி செய்யப்பட்டது.

கானான் தேச எல்லைகளை அமர்னா கல்வெட்டுகள் (கி.மு 14ஆம் நூற்றாண்டு) உறுதிபடுத்துகின்றன. இக்கல்வெட்டுகளில் கானான் எகிப்தின் ஆட்சிக்கு உட்பட்ட சிரியா-பாலஸ்தீன மாநிலம் என பொறிக்கப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி சீதோன் வரை உள்ள இடங்கள் கானானில் அடங்கும்.

 

மோரியா மலைமீது ஆபிரகாம் ஈசாக்கை பலியிட முற்படும் போது தேவன் அவரைத் தடுத்து நிறுத்தினார், அப்பொழுது ஆபிரகாம் புதர்களில் சிக்கிய ஒரு ஆட்டுக்கடாவை கண்டு அதனை தேவனுக்கு பலியிட்டார் (ஆதியாகமம் 22ஆம் அதிகாரம்). இதே மோரியா மலைமீது தான் சாலொமோன் தேவாலயத்தை கட்டினார் (2 நாளாகமம் 3:1). 1928-இல் ஊர்-கஸ்திமில் (ஊர்) நிகழ்த்திய அகழ்வாராய்ச்சியில் கி.மு 2600-2400 காலத்தைச் சேர்ந்த ஆட்டுக் கடாவின் பொற்சிலை கிட்டியது. புதர்களுக்கிடையே காலூன்றியதை போல இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்காலங்களில் தான் சுமேரியர்கள் பெருமளவான ஆடுகளை வீட்டுவளர்ப்புப் பிராணிகளாக்கி வந்தனர் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

யாக்கோபு: சாகர்-பசர் என்ற வட மெசபொத்தோமிய பட்டணத்தில் கிட்டிய  கி.மு 18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் யாக்கோபு என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் துட்மோஸ் என்ற எகிப்திய மன்னரின் அரச ஓலையில் ஒரு பாலஸ்தீன பட்டணத்தின் பெயர் யாக்கோபு என எழுதப்பட்டுள்ளது. எகிப்தில் வாழ்ந்த ஹிஸ்கோஸ் என்ற பழங்குடி மக்களின் அதிகாரி ஒருவரின் பெயாராகவும்  காணப்படுகிறது.

காத், தாண், லேவி, இஸ்மவேல் ஆகிய பெயர்களும் மரி கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அசீரிய கல்வெட்டுகள் செரூகு, தேராகு என்னும் பெயருடைய இரு பட்டணங்களை குறிப்பிடுகின்றன. தேராகு ஆபிரகாமின் தந்தை. செரூகு தேராகின் தாத்தனாவார்.  எப்லா கல்வெட்டுகள் சிலவற்றிலும் இஸ்ரவேல், இஸ்மவேல் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

bertrand russell stopped becoming professor in america

HOW BERTRAND RUSSELL WAS PREVENTED FROM TEACHING AT THE COLLEGE OF THE CITY OF NEWYORK

http://www.skeptic.ca/Russell_&_CUNY.pdf  

 

Scopes Trial

 https://en.wikipedia.org/wiki/Scopes_Trial 

 

 

 



-- Edited by Admin on Friday 5th of August 2016 04:07:40 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

The limitations of purely text-historical procedure in working with classical Greek and Latin texts should not be ignored in NT textual criticism. The reconstruction of a stemma leads back to arch-types of first edition but not necessarily to original text. Even the most successful reconstruction of arch-types in NT textual criticism gives no more than information about the forms of the texts which were in existence at the end of 2nd cettury. Like the classical philologian, the NT textual  scholar also has to re



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard