New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வஞ்சி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வஞ்சி
Permalink  
 


வஞ்சி (14)
வஞ்சி பித்திகம் சிந்துவாரம் - குறி 89
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர - ஐங் 50/2
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும் - அகம் 216/4
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய - அகம் 226/9
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க - அகம் 263/12
வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே - அகம் 396/19
விண் பொரு புகழ் விறல் வஞ்சி/பாடல் சான்ற விறல் வேந்தனும்மே - புறம் 11/6,7
பாடுநர் வஞ்சி பாட படையோர் - புறம் 33/10
வாடா வஞ்சி வாட்டும் நின் - புறம் 39/17
வஞ்சி முற்றம் வய களன் ஆக - புறம் 373/24
எஞ்சா மரபின் வஞ்சி பாட - புறம் 378/9
வஞ்சி கோட்டு உறங்கும் நாரை - புறம் 384/2
புல் இளை வஞ்சி புற மதில் அலைக்கும் - புறம் 387/33
வாடா வஞ்சி பாடினேன் ஆக - புறம் 394/9

அகநானூறு 216, ஐயூர் முடவனார்மருதத் திணை – பரத்தை தன் தோழியிடம் சொன்னது 
நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்மகள்
தாள் புனல் அடை கரைப் படுத்த வராஅல்
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப்
பெட்டாங்கு மொழிப என்ப அவ்வலர்
பட்டனம் ஆயின் இனியெவன் ஆகியர்
கடலாடு மகளிர் கொய்த ஞாழலும்
கழனி உழவர் குற்ற குவளையும்
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு
பல் இளம் கோசர் கண்ணி அயரும்
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
பெரும் களிற்று எவ்வம் போல
வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே.

Akanānūru 216, Aiyūr Mudavanār, Marutham Thinai – What the concubine said to her friend
They say that they utter words
that come to their mouths about
me, the women from his town
with cool shores,
where a bard’s daughter catches
varāl fish with a thread and thin rod
on the shores of the flowing water,
roasts it with vanji tree wood, and feeds
it to her father, who drinks filtered liquor.

If we are to suffer like that, what will
happen to them if we go to their settlement?
They will suffer like a big bull elephant that
is in distress when his precious chest
is thrust by a bright spear thrown with
strength, without missing its mark,
by Āthan Elini of Selloor,
where young Kōsars wear garlands
woven with gnālal flowers plucked by
women playing in the sea, kuvalai
flowers plucked by field farmers, and
mullai flowers from the protected forests.

Meanings:   நாண் கொள் – with a thread, நுண் கோலின் மீன் கொள் பாண்மகள் – bard’s daughter who catches fish with a delicate rod, தாள் புனல் அடை கரைப் படுத்த – catch on the shores of the flowing water, வராஅல் – murrel fish, Ophiocephalus marulius, நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு – for her father who drank fiber filtered alcohol, வஞ்சி விறகின் சுட்டு – cooked with vanji tree wood, இருப்பை, Indian Butter Tree, South Indian Mahua, இலுப்பை வாய் உறுக்கும் தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப – they say that the women from the cool shores of his town talk about me the way they want to, அவ்வலர் பட்டனம் ஆயின் – if I am to suffer like that, இனியெவன் ஆகியர் – what wil happen to them, கடலாடு மகளிர் கொய்த ஞாழலும் – gnālal flowers plucked by women playing in the sea, Cassia sophera , Tigerclaw tree, புலிநகக்கொன்றை, கழனி உழவர் குற்ற குவளையும் – blue waterlilies plucked by the farmers in the field, Nymphaea caerulea, கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு – along with jasmine that bloomed in the protected forest, இளம் கோசர் கண்ணி அயரும் – young Kōsars wear as garlands, மல்லல் யாணர் – very prosperous, செல்லிக் கோமான் – king of Selloor, எறிவிடத்து – when thrown, உலையா – not missing the mark, செறி சுரை – lots of strength, வெள் வேல் ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய பெரும் களிற்று எவ்வம் போல வருந்துப – will feel sad like a big male elephant that had its precious chest thrust by a bright spear of Āthan Elini, மாது – அசை, an expletive, அவர் சேரி யாம் செலினே – if we go to their settlement/village



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அகநானூறு 226, பரணர்மருதத் திணை – தோழி தலைவனிடம்சொன்னது
உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம்
நாணிலை மன்ற யாணர் ஊர
அகலுள் ஆங்கண் அம் பகை மடிவைக்
குறுந்தொடி மகளிர் குரூஉப் புனல் முனையின்
பழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக்
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும்
வல் வில் எறுழ்த் தோள் பரதவர் கோமான்
பல் வேல் மத்தி கழாஅர் முன் துறை
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய்
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி
தொடி அணி முன் கை நீ வெய்யோளொடு
முன் நாள் ஆடிய கவ்வை இந்நாள்
வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி
போர் அடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.

Akanānūru 226, Paranar, Marutham Thinai – What the heroine’s friend said to the unfaithful hero
O man from a prosperous town!  You have no shame!
Don’t utter lies!  I won’t accept them!

Yesterday you played with your beloved woman, with
bangles on her forearm, in the freshets of Kāviri which
brought down tall, white marutham trees along with vanji
trees in the morning, on the shores of Kalār town,
of strong-shouldered Mathi, lord of fishermen, owning
strong a bow and an army of many spears, where women
wearing many different foliage clothing and tiny bangles,
play in the vast flood waters, and tiring of that, move away
to pluck reeds in the pond and chase white herons in the
fields with thistles.

The gossip risen is larger than the uproar in the day
assembly of Thithan Veliyan wearing large garlands, in
Uraiyur, when Katti with a large army came to fight along
with the brave and strong Pānan, and on hearing the sweet
roars of the kinai drums, ran away.

Meanings:   உணர்குவென் அல்லென் – I won’t accept them, உரையல் நின் மாயம் – don’t utter your lies/confusing words, நாணிலை – no shame, மன்ற – for sure/an expletive, அசை, யாணர் ஊர – man from prosperous town, அகலுள் – wide space, ஆங்கண் – there, அம் பகை மடிவை – pretty opposing/different kinds of foliage clothes, குறுந்தொடி மகளிர் – women wearing tiny bangles, குரூஉப் புனல் முனையின் – hating the colorful floodwater, பழனப் பைஞ்சாய் கொழுதி – pluck reeds near the pond, Reed, கோரைப்புல், கழனிக் கரந்தை அம் செறுவின் – beautiful field with globe thistles or basil, வெண்குருகு ஓப்பும் – chase white herons, வல் வில் – strong bow, எறுழ்த் தோள் – strong shoulders, பரதவர் கோமான் – leader of fishermen, பல் வேல் மத்தி – Mathi with many spears, கழாஅர் முன் துறை – on the shores of Kalār, நெடு வெண்மருதொடு – along with whitemarutham trees, Terminalia arjuna , வஞ்சி சாஅய் விடியல் வந்த – brought down vanji trees in the morning, Indian Butter Tree, South Indian Mahua, இலுப்பைஇருப்பை, பெரு நீர்க் காவிரி – Kāviri with abundant water, தொடி அணி முன் கை – forearms wearing bangles, நீ வெய்யோளொடு – with the one you desire, முன் நாள் ஆடிய – when you played the other day, கவ்வை – gossip, இந்நாள் – today, வலி மிகும் முன்பின் பாணனொடு – with brave and strong Pānan, மலி தார் – huge garlands, தித்தன் வெளியன் உறந்தை நாளவை – in Thithan Veliyan’s day assembly at Uranthai, பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி – afraid on hearing the sweet clear sounds of kinai drums, போர் அடு தானைக் கட்டி – Katti with an army that kills in battles, பொராஅது ஓடிய – ran away without fighting, ஆர்ப்பினும் பெரிதே – louder than the uproar

அகநானூறு 263, கருவூர்க் கண்ணம்பலனார்பாலைத் திணை – மகட்போக்கிய தாய் சொன்னது
தயங்கு திரைப் பெருங்கடல் உலகு தொழத் தோன்றி
வயங்கு கதிர் விரிந்த உருகெழு மண்டிலம்
கயம் கண் வறப்பப் பாஅய் நல் நிலம்
பயம் கெடத் திருகிய பைது அறு காலை
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார்
வில் வல் ஆடவர் மேலான் ஒற்றி
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ்சுரம்
கொண்டனன் கழிந்த வன் கண் காளைக்கு
அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்னஎன் வள நகர் விளங்க
இனி தினின் புணர்க்குவென் மன்னே துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதை
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே.

Akanānūru 263, Karuvūr Kannampalanār, Pālai Thinai – What the heroine’s mother said, after her daughter eloped
The strong, young man took her to the
harsh wasteland, where
the fierce sun that rises in the huge
ocean with moving waves, and
worshipped by those in the world,
spreads its bright rays which dry up
ponds and makes fertile land
become dry in this painful time,
in the wide forest with forked paths
where men skilled with bows look
for those who travel,
near the tall  tree trunks.

Alas!  If I had known her strong
intent,
for my rich house that is like
Vanji city protected by Chēra king
with bright spears to prosper,
without hatred, I would have
united them in marriage,
so that he could sleep happily on
the growing breasts of my innocent
daughter with a pretty forehead.

Meanings:   தயங்கு திரைப் பெருங்கடல் – huge ocean with moving waves, உலகு தொழத் தோன்றி – appearing as the world worships, வயங்கு கதிர் விரிந்த – spreads its bright rays, உருகெழு மண்டிலம் – fierce sun, கயம் கண் வறப்ப – dried ponds, பாஅய் நல் நிலம் பயம் கெடத் திருகிய – wide fertile land lose benefits and become dry, பைது அறு காலை – painful morning time, வேறு பல் கவலைய – many different forked paths, வெருவரு – fierce, வியன் காட்டு – wide forest, ஆறு செல் வம்பலர் – those who travel on the path, வரு திறம் காண்மார் – look for those who come, வில் வல் ஆடவர் – men who are skilled with their bows, மேலான் ஒற்றி – near, நீடு நிலை – tall, யாஅத்துக் கோடு –  tree trunks, Hardwickia binata tree, கொள் அருஞ்சுரம் கொண்டனன் கழிந்த – harsh wasteland where he took her and went, வன்கண் காளைக்கு – strong young man, அவள் துணிவு அறிந்தனென் ஆயின் – if I had known her strength, அன்னோ – alas, ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி அன்ன – like Vanji city which is protected by Chēra king with bright spears, என் வள நகர் விளங்க – for my rich house to flourish, இனி தினின் – sweetly, புணர்க்குவென் – I would have united them in marriage , மன்னே – அசை, an expletive, துனி இன்று – without hatred/sorrow, திரு நுதல் பொலிந்த – with splendid pretty forehead, என் பேதை – my naive girl, வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே – to sleep happily on her growing breasts



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அகநானூறு 396, பரணர்மருதத் திணை – பரத்தைதலைவனிடம் சொன்னது 
தொடுத்தேன் மகிழ்ந செல்லல் கொடித்தேர்ப்
பொலம் பூண் நன்னன் புன்னாடு கடிந்தென
யாழிசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கித்
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது
தெறலருங் கடவுள் முன்னர்த் தேற்றி
மெல் இறை முன் கை பற்றிய சொல் இறந்து
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின்
மார்பு தரு கல்லாய் பிறன் ஆயினையே
இனியான் விடுக்குவென் அல்லென் மந்தி
பனி வார் கண்ணள் பல புலந்து உறையக்
கருந்திறல் அத்தி ஆடு அணி நசைஇ
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒழித்தாங்கு நின்
மனையோள் வவ்வலும் அஞ்சுவல் சினைஇ
ஆரியர் அலறத் தாக்கிப் பேர் இசைத்
தொன்று முதிர் வட வரை வணங்கு வில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சியன்ன என் நலம் தந்து சென்மே.

Akanānūru 396, Paranar, Marutham Thinai – What the concubine said  to the hero
I am holding on to you, my lord!
Please do not abandon me!
When Nannan with gold ornaments and
chariots with flags showed his rage to the
citizens of Punnādu, Āy Eyinan protected
them in Pāli, a town with lute music in the
streets, and fought smartly against Nannan’s
astute warrior Mignili and gave up his life.

You made a promise before the fierce gods
holding my delicate forearms, but you have
gone past those words.

For my anxious heart to feel better, I
would like to embrace your chest.  You have
refused that and become a stranger to me.
Now I will not let you get away!

Like Kāviri river which fell in love with
the beautiful dancer Athi and took him away
from his wife Āthimanthi,
your wife is trying to remove you from me.

I will not be afraid to stay here.  Should you
leave, before leaving, you need to return my
beauty, like Vanji city of the victorious Chēras
who attacked the trembling Aryans and carved
their bow symbol on the ancient, northern
mountains.

Meanings:   தொடுத்தேன் – holding on to you, மகிழ்ந – lord, செல்லல் – do not leave, கொடித்தேர் – chariot with flags, பொலம்பூண் – gold ornaments, நன்னன் – Nannan, புன்னாடு – Punnādu, கடிந்தென – showed rage, யாழிசை – lute music, மறுகின் – in the streets, பாழி – Pāli city, ஆங்கண் – there, ‘அஞ்சல்’ – don’t be afraid, என்ற ஆஅய் எயினன் – (said) Āaiy Eyinan, இகல் – enemies, அடு – kill, கற்பின் – smartness, மிஞிலியொடு தாக்கி – fought with (a man named) Mignili, தன்னுயிர் கொடுத்தனன் – gave his life, சொல்லியது அமையாது – what is said is not apt, தெறல் அருங் கடவுள் – ruining rare god, முன்னர் – to him, தேற்றி – clearly, மெல் இறை முன்கை – delicate folded forearm, பற்றிய – held, சொல்லிறந்து – past my words, ஆர்வ நெஞ்சம் – anxious heart, தலைத்தலை சிறப்ப – become better and better, நின் – your, மார்பு தரு கல்லாய் – you refuse to give me your breast, பிறன் ஆயினையே – became a stranger, இனியான் விடுக்குவென் அல்லென் – now I won’t let you go, மந்தி – Āthimanthi, பனி வார் கண்ணள் – girl with cool long eyes, பல – many, புலந்து – hatred, உறைய – live, கருந்திறல் அத்தி – Very smart Athi, ஆடு – dancing, அணி – beautiful, நசைஇ – attracted, நெடுநீர்க் காவிரி – long river Kāviri, கொண்டு – took away, ஒழித்தாங்கு – hid, நின் – your, மனையோள் – wife, வவ்வலும் – to remove, அஞ்சுவல் – will not be afraid, சினைஇ – will stay, ஆரியர் அலற – The Aryans scream, தாக்கிப் – attack, பேர் இசை – very famous, தொன்று முதிர் – ancient old, வடவரை – northern mountains (Himalayas), வணங்குவில் – curved bow, பொறித்து – carved, வெஞ்சின – very angry, வேந்தரைப் பிணித்தோன் – one who won over the Aryan king (Chēran king), வஞ்சியன்ன – like his Vanji city, என் நலம் தந்து சென்மே – return my beauty to me and leave



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 புறநானூறு 11, பாடியவர்: பேய்மகள் இளவெயினியார்,பாடப்பட்டோன்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ,திணை: பாடாண்துறை: பரிசில் கடாநிலை

அரிமயிர்த் திரள் முன் கை
வால் இழை மட மங்கையர்
வரி மணல் புனை பாவைக்குக்
குலவுச்சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்
விண் பொரு புகழ் விறல் வஞ்சிப்
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே
வெப்புடைய அரண் கடந்து
துப்பு உறுவர் புறம் பெற்றிசினே
புறம் பெற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினியும்மே
ஏர் உடைய விழுக் கழஞ்சின்
சீர் உடைய இழை பெற்றிசினே
இழை பெற்ற பாடினிக்குக்
குரல் புணர் சீர்க் கொளை வல் பாண்மகனும்மே
என ஆங்கு
ஒள் அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப் பெற்றிசினே.

Puranānūru 11, Poet Pēymakal Ilaveyiniyār sang for Chēramān Pālai Pādiya Perunkadunkō, Thinai: Pādān, Thurai: Parisil Kadā Nilai
The king of Vanji, victorious city with sky-high fame,
where delicate girls with fine hair on their rounded
forearms wear bright jewels and play on the streaked
sand, decorating the sand dolls they made with flowers
they pluck from bent branches, and plunge into the
cool waters of Porunai River,
his victories sung in verses, has captured guarded forts
of enemies and made them run, showing their backs,
and the female singer who sang the bravery of the mighty
king won splendid, heavy, pretty jewels, and the bard
who sang along with her with perfect rhythm,
won a lotus formed in glowing fire, strung on a silver thread.

Notes:  Puranānūru 11 was written for this king.   He wrote poem 282.  He has written many poems in Natrinai, Kurunthokai and Akanānūru.  Pālai thinai was his specialty.  This is the only poem written by Pēymakal Ilaveyiniyār.

Meanings:  அரி மயிர்த் திரள் முன் கை – thick/rounded forearms with delicate hair, வால் இழை – bright/pure jewels, மட மங்கையர் – delicate girls/women, வரி மணல் – decorated sand or streaked sand, புனை பாவைக்கு – for the doll they created, குலவுச் சினை – bent branches, பூக் கொய்து – plucked flowers, தண் பொருநைப் புனல் பாயும் – dive into Porunai river, விண் பொரு புகழ் – sky high fame, விறல் வஞ்சி – victorious Vanji city, பாடல் சான்ற – praised in verses, விறல் வேந்தனும்மே – victorious king, வெப்புடைய அரண் கடந்து – captured guarded forts of enemies, துப்பு உறுவர் – those who came with strength, enemies, புறம் பெற்றிசினே புறம் பெற்ற – had them run with their backs showing, வய – strong, வேந்தன் மறம் பாடிய பாடினியும்மே – a female musician who sang about his bravery, ஏர் உடைய – beautiful, splendid, விழு – best, கழஞ்சின் – weight of 12 coins/heavy, சீர் உடைய இழை பெற்றிசினே – received beautiful jewels, இழை பெற்ற பாடினிக்கு – for the female musician who got jewels, குரல் புணர் சீர்க் கொளை வல் பாண் மகனும்மே – bard who sang with perfect voice and rhythm, என ஆங்கு – there, ஒள் அழல் புரிந்த தாமரை – lotus formed in glowing fire, வெள்ளி நாரால் பூப் பெற்றிசினே – strung on a silver thread



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

புறநானூறு 39, பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்,பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்திணை: பாடாண்துறை: இயன் மொழி 
புறவின் அல்லல் சொல்லிய கறையடி
யானை வான் மருப்பு எறிந்த வெண் கடைக்
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக
ஈதல் நின் புகழும் அன்றே சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின்
அடுதல் நின் புகழும் அன்றே கெடுவின்று
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் நின்று நிலையிற்றாகலின் அதனால்
முறைமை நின் புகழும் அன்றே மறம் மிக்கு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
வரை அளந்து அறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமையம் சூட்டிய ஏம விற்பொறி
மாண் வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும் நின்
பீடுகெழு நோன் தாள் பாடுங்காலே.

Puranānūru 39, Poet Mārōkathu Nappasalaiyār sang to Chōlan Kulamutrathu Thunjiya Killi Valavan, Thinai: Pādān, Thurai: Iyan Moli 
O heir of Chempiyan who removed the pain of a dove by climbing
on a scale with pointers made of white tusks of elephants with
dark legs!  Generosity is not the reason for your fame!  If we
think about your ancestors who ruined forts that are hanging high
that are strong and difficult to approach, killing in battles is
not the reason for your fame!  Righteousness has been established
in the court of Uranthai of the Chōlas with martial courage, and
reigning with justice cannot increase your fame!

O Valavan who wins battles with great might, whose arms are like
the crossbars of forts, whose garland is blinding, who owns proud
horses!  How can I describe you, since you have made strong Vanji
wither, and destroyed the Chēra king owning tall, well-built
chariots, who had inscribed his bow symbol on the Himalayas with
many towering summits with gold?  How can I sing of your great acts?

Notes:  The north Indian Sibi story must have been adopted as theirs by the Chōla kings.  Puranānūru poems 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 46, 69, 70, 226, 227, 228, 386, 393 and 397 were written for this Chōla king.   He wrote Puranānūru 173.  This female poet from Mārōkam town which is near Korkai, wrote Puranānūru 37, 39, 126, 174, 226, 280 and 383.

Meanings:  புறவின் அல்லல் சொல்லிய – to remove the sorrow of a dove/pigeon, கறையடி யானை – elephant with dark feet, வான் மருப்பு எறிந்த – cut and made with white tusks, வெண் கடைக் கோல் – white pointers, நிறை துலாஅம் – full scale, புக்கோன் மருக – heir of Chempiyan, ஈதல் நின் புகழும் அன்றே – generosity is not what brings you fame, சார்தல் ஒன்னார் உட்கும் – enemies fear, துன்னரும் – difficult to approach, கடுந்திறல் தூங்கு எயில் எறிந்த – ruined their forts that are hanging high, நின் ஊங்கணோர் நினைப்பின் – if we think about your ancestors, அடுதல் நின் புகழும் அன்றே – killing is not what brings you fame, கெடுவின்று – without fault, மறங் கெழு – very brave, சோழர் உறந்தை அவையத்து – in the Uranthai court of the Chōlas, அறம் நின்று நிலையிற்றாகலின் – since righteousness is established, அதனால் முறைமை நின் புகழும் – so, your fame will stand, அன்றே – not, மறம் மிக்கு எழு சமம் கடந்த – won battles with great strength, எழு உறழ் திணி தோள் – shoulders/arms as strong as crossbars, கண்ணார் கண்ணி – garlands attractive to the eyes, கலிமான் வளவ – Valavan with proud horses, யாங்கனம் மொழிகோ யானே – how can I say this, ஓங்கிய வரை – tall mountain, அளந்து அறியாப் பொன் படு நெடுங்கோட்டு இமையம் சூட்டிய ஏம விற்பொறி – the bow symbol inscribed on Himalayas with immeasurable tall peaks with gold, மாண் வினை நெடுந்தேர் வானவன் தொலைய – ruined Chēran with tall chariots that are well made, வாடா வஞ்சி வாட்டும் – you hurt strong Vanji city, நின் பீடு கெழு நோன் தாள் பாடுங் காலே – when I sing of your great efforts



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 புறநானூறு 394, பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்பாடப்பட்டோன்: சோழிய ஏனாதி திருக்குட்டுவன்திணை: பாடாண்துறை: கடை நிலை

சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின்
ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன்
வலி துஞ்சு தடக்கை வாய் வாள் குட்டுவன்
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும்
உள்ளல் ஓம்புமின் உயர் மொழிப் புலவீர்
யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை
ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றிப்
பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினேன் ஆக
அக மலி உவகையொடு அணுகல் வேண்டிக்
கொன்று சினந் தணியாப் புலவு நாறு மருப்பின்
வெஞ்சின வேழம் நல்கினன் அஞ்சி
யான் அது பெயர்த்தனென் ஆகத் தான் அது
சிறிதென உணர்ந்தமை நாணிப் பிறிதும் ஓர்
பெருங்களிறு நல்கியோனே அதற்கொண்டு
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு உறினும்
துன்னரும் பரிசில் தரும் என
என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே.

Puranānūru 394, Poet Chōnattu Erichalūr Madalan Mathurai Kumaranār sang for Chōliya Ēnāthi Thirukkuttuvan, Thinai: Pādān, Thurai: Kadai Nilai
Poets with eloquent words!  Even though the world
praises Kuttuvan with mighty large hands and
unfailing sword, lord of Venkudai city with paddy
fields with luxuriant grains, whose chest is
lifted by archery practice, who is greatly
charitable, do not think of going to him.

I went at dawn when darkness and moon were over,
beat my black, one-eyed kinai drum softly and sang vanji
invasion songs in praise of his father who rode a fine
chariot, whose drum had soared.  With great happiness,
he bade me to approach him and gave me an enraged male
elephant with flesh-stinking tusks, and I backed off
in fear.  Thinking that it was small, embarrassed, he
gave me a larger elephant.   Since then, even though my
big clan suffers greatly, I do not go to his country with hills.

Notes:  This king was of Chēra lineage, and his ancestors had ‘Kuttuvan’ as part of their names.  He ruled Kutta Nadu.   This is the only poem written for him.  This poet wrote Puranānūru poems 54, 61, 167, 180, 197 and 394.

Meanings:  சிலை உலாய் நிமிர்ந்த – lifted by bow practice, சாந்து படு மார்பின் – chest with sandal, ஒலி கதிர்க் கழனி – field with heavy spears of grain, வெண்குடைக் கிழவோன் – lord of Venkudai city, வலி துஞ்சு தடக்கை – large hands with might residing, வாய் வாள் குட்டுவன் – Kuttuvan with never failing sword, வள்ளியன் ஆதல் – since he is charitable, – வையகம் புகழினும் – even though the world might praise, உள்ளல் ஓம்புமின் – avoid thinking, உயர் மொழிப் புலவீர் – poets with eloquent words, யானும் – I, இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை – early morning at day break when darkness and moon ended, ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றிப் – beating delicately my one-eyed black/huge kinaidrum, பாடு இமிழ் முரசின் – royal drums soared, இயல் தேர்த் தந்தை – his father who rode a fine chariot, வாடா வஞ்சி பாடினேன் ஆக – as I sang of vanji songs – about invasions, அக மலி உவகையொடு – with great inner happiness, அணுகல் வேண்டி – asked to approach, கொன்று – killed, சினந் தணியா – anger not reduced, புலவு நாறு மருப்பின் – tusks with flesh stink, வெஞ்சின வேழம் நல்கினன் – he gave me an elephant with rage, அஞ்சி யான் அது பெயர்த்தனென் – I became afraid and moved, ஆகத் தான் அது சிறிதென உணர்ந்தமை – thinking that it was too small, நாணி – embarrassed, பிறிதும் ஓர் பெருங்களிறு நல்கியோனே – he gave me a much larger bull elephant, அதற் கொண்டு இரும் பேர் ஒக்கல் – large numbers of relatives, பெரும் புலம்பு உறினும் – even if we suffered greatly, துன்னரும் பரிசில் தரும் என – that he gives gifts that we cannot go near, என்றும் செல்லேன் – so I never went back forever, அவன் குன்று கெழு நாட்டே – to his country with hills



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

புறநானூறு 387, பாடியவர்: குன்றுகட் பாலியாதனார்,பாடப்பட்டோன்: சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன்திணை: பாடாண்துறை: வாழ்த்தியல்  – பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை
வள் உகிர வயல் ஆமை
வெள் அகடு கண்டன்ன
வீங்கு விசிப் புதுப் போர்வைத்
தெண் கண் மாக் கிணை இயக்கி என்றும்
மாறு கொண்டோர் மதில் இடறி
நீறு ஆடிய நறுங் கவுள
பூம் பொறிப் பணை எருத்தின
வேறு வேறு பரந்து இயங்கி
வேந்துடை மிளை அயல் பரக்கும்
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக்கைத்
திருந்து தொழிற் பல பகடு
பகைப் புல மன்னர் பணி திறை தந்து நின்
நசைப் புலவாணர் நல்குரவு அகற்றி
மிகப் பொலியர் தன் சேவடியத்தை என்று
யாஅன் இசைப்பின் நனி நன்று எனாப்
பல பிற வாழ்த்த இருந்தோர் தன் கோன்……
மருவ இன்நகர் அகன் கடைத்தலைத்
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி
வென்று இரங்கும் விறன் முரசினோன்
என் சிறுமையின் இழித்து நோக்கான்
தன் பெருமையின் தகவு நோக்கிக்
குன்று உறழ்ந்த களிறு என் கோ
கொய் உளைய மா என் கோ
மன்று நிறையும் நிரை என் கோ
மனைக் களமரொடு களம் என் கோ
ஆங்கவை கனவு என மருள வல்லே நனவின்
நல்கியோனே நசை சால் தோன்றல்
ஊழி வாழி பூழியர் பெருமகன்
பிணர் மருப்பு யானைச் செருமிகு நோன் தாள்
செல்வக்கடுங்கோ வாழியாதன்
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணிந்து இவன்
விடுவர் மாதோ நெடிதோ நில்லாப்
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்
பல் ஊர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.

Puranānūru 387, Poet Kundrukat Pāliyāthanār sang for Chēramān Chikkarpalli Thunjiya Selvakkadunkō Vāliyāthan, Thinai: Pādān, Thurai: Vālthiyal – Parts of this poem are missing
He is the leader of men who will praise me
thinking that it was good
if I beat my dark kinai drum with clear eyes,
its newly stretched large cover tied with straps,
looking like the white stomach of a sharp-clawed
field tortoise, and sing to him, “You ended
the poverty of poets in need who brought you joy,
giving them the tributes humbly given to you by
opposing kings owning many bull elephants skilled
in their jobs, that spread in different directions and
break down enemy fortress walls, their fragrant
cheeks covered with fine dust, their huge necks
with flowery spots, their tusks lifted and their
trunks coarse, working in the protected forests of
great kings.  May your handsome feet glow!”

…………………………………In the large courtyard
of his huge palace, my king bade me to advance
toward his handsome feet with perfect warrior
anklets, he who owns a victorious royal drum
that roars.  Not looking down on my smallness,
my king looked fitting his pride and honor,
and gave me bull elephants that were like hills,
horses with trimmed manes, herds of cattle
filling his courtyard, fields with farmers – all
so quickly, that even though it was real,
it felt like a dream.  He is the king filled with
great love, the lord of Pooliyar.

He is Selvakkadunkō Valiyāthan, owning elephants
with tusks and rough trunks, who put great
efforts in battles, whose enemies bow to his umbrella
and offer the necessary tributes.  May he live
long, more than the grains of sand by the Porunai
River that laps the outer walls of Vanji city, named for
the trees with dull leaves, more than the grains of rice
that grow in all the fields surrounding the many towns!

Notes:    This is the only poem written by this poet, who is from the town Kundrukat which is Kerala in Kolikōdu.  The present name is Pālikunnu.  This king also goes by the name Selvakkadunkō Valiyāthan for whom Kapilar wrote Pathitruppathu poems 61-70 and Puranānūru 8 and 14.  There are 33 poems in which lines are missing.

Meanings:  வள் உகிர வயல் ஆமை – field tortoises with sharp claws, வெள் அகடு கண்டன்ன – looking like the white stomach, வீங்கு விசி – large and tight, புதுப் போர்வை – new cover, தெண் கண் மாக் கிணை – dark kinai drum with clear eyes, இயக்கி – beat, என்றும் – always, மாறு கொண்டோர் மதில் இடறி – attack the fortress walls of enemies who oppose, நீறு ஆடிய – dust spread, நறுங் கவுள – fragrant cheeks, பூம் பொறி – flowery spots, பணை எருத்தின – wide (drum-like) neck, வேறு வேறு பரந்து – spread in different directions, இயங்கி – work, வேந்துடை மிளை அயல் பரக்கும் – spread among the protective forests, ஏந்து கோட்டு lifted long, இரும் பிணர் – dark rough, தடக்கை – large trunks, திருந்து தொழிற் பல பகடு – owning bull elephants that do perfect jobs, பகைப் புல மன்னர் பணி திறை தந்து – tributes giving humbly by enemy kings, நின் நசை – giving you happiness, புலவாணர் நல்குரவு அகற்றி – remove the sorrow of poets in need, மிகப் பொலியர் தன் சேவடியத்தை – may your handsome feet glow greatly, என்று யாஅன் இசைப்பின் – if I sing so or when I sang so, நனி நன்று எனாப் பல பிற வாழ்த்த – others praise many, இருந்தோர் – those there, தன் கோன் – their king,……., மருவ இன் நகர் அகன் கடைத்தலை – entry gate area of a wide sweet mansion well protected, திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி – to reach his handsome/red feet with perfect war anklets, வென்று இரங்கும் விறன் முரசினோன் – owns a victorious drum which roars, என் சிறுமையின் இழித்து நோக்கான் – he did not look down at my smallness, தன் பெருமையின் தகவு நோக்கி – fitting his pride and honor he looked, குன்று உறழ்ந்த களிறு – bull elephants that are like hills, என் கோ – my king, கொய் உளைய மா – horses with trimmed tufts, என் கோ – my king, மன்று நிறையும் நிரை என் கோ – my king has cattle herds in his courtyard, மனைக் களமரொடு களம் – fields and field workers, என் கோ – my king, ஆங்கவை கனவு என மருள வல்லே நனவின் நல்கியோனே – he gave them quickly in real in what felt like a dream, நசை சால் தோன்றல் – lord with great love, ஊழி வாழி பூழியர் பெருமகன் – may the king of Pooliyar live forever, பிணர் – rough, மருப்பு யானை – elephants with tusk, செரு மிகு – in many battles, நோன் தாள் – great effort, செல்வக் கடுங்கோ வாழியாதன் – Selvakkadunkō Valiyāthan, ஒன்னாத் தெவ்வர் உயர் குடை பணிந்து – enemies who oppose bow to his tall umbrella, இவன் விடுவர் மாதோ – do what needs to be done here, நெடிதோ நில்லா – not waiting for long, புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும் – hit the outer walls of Vanji city named for dull-leaved vanji trees, Ochreinauclea missionis,  கல்லென் – loudly , பொருநை மணலினும் – more than the sands of River Porunai shore, ஆங்கண் – there, பல் ஊர் சுற்றிய கழனி எல்லாம் விளையும் நெல்லினும் பலவே – more than the rice that grows in the fields around the many cities



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 புறநானூறு 373, பாடியவர்: கோவூர் கிழார்பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்திணை: வாகைதுறை: மறக்கள வழிஏர்க்கள உருவகம்  – பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை

உரு மிசை முழக்கென முரசும் இசைப்பச்
செரு நவில் வேழம் கொண்மூ ஆகத்
தேர் மா அழி துளி தலைஇ நாம் உறக்
கணைக் கால் தொடுத்த கண் அகன் பாசறை
இழி தரு குருதியொடு ஏந்திய ஒள் வாள்
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப
மைந்தர் ஆடிய மயங்கு பெருந்தானைக்
கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே
. . . . . . தண்டா மாப் பொறி
மடக் கண் மயில் இயன் மறலி யாங்கு
நெடுங் சுவர் நல்லில் புலம்பக் கடை கழிந்து
மென் தோள் மகளிர் மன்றம் பேணார்
புண் உவந்து. . . . . . . . . . . . .
. . . . .அணியப் புரவி வாழ்கெனச்
சொல் நிழல் இன்மையின் நன்னிழல் சேர
நுண் பூண் மார்பின் புன்தலைச் சிறாஅர்
அம்பழி பொழுதில் தமர் முகம் காணா
. . . . . . . . . வாளில் தாக்கான்
வேந்து புறங் கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை
மாட மயங்கெரி மண்டிக் கோடு இறுபு
உரும் எறி மலையின் இரு நிலம் சேரச்
சென்றோன் மன்ற கொலை வன் சென்று எறி
வெம்புண் அறிநர் கண்டு கண் அலைப்ப
வஞ்சி முற்றம் வயக்கள னாக
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக்
கொண்டனை பெரும குட புலத்து அதரி
பொலிக அத்தை நின் தயங்கு வியன் களம்
விளங்கு திணை வேந்தர் களம் தொறும் சென்று
புகர் முக முகவை பொலிக என்றி ஏத்திக்
கொண்டனர் என்ப பெரியோர் யானும்
அங்கண் மாக் கிணை அதிர ஒற்ற
முற்றிலன் ஆயினும் காதலின் ஏத்தி
நின்னோர் அன்னோர் பிறரி வண் இன்மையின்
மன்னெயில் முகவைக்கு வந்திசின் பெரும
பகைவர் புகழ்ந்த அண்மை நகைவர்க்குத்
தாவின்று உதவும் பண்பின் பேயொடு
கண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து
செஞ் செவி எருவை குழீஇ
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே.

Puranānūru 373, Poet Kōvūr Kilār sang to Chōlan Kulamutrathu Thunjiya Killi Valavan, Thinai: Vākai, Thurai: Marakkala Vali, Ērkala Uruvakam – Parts of this poem are missing 
Victorious king who made Kongu warriors run away!
In your vast camps, drums roar with sounds of thunder,
elephants trained in battle are clouds, fierce whirling
winds are arrows, raindrops are chariots and horses, and
your great army of warriors are happy to suffer the anguish
of being wounded, as though they were being squeezed by
lifted bright swords with oozing blood.

Like pea****s with dark spots on their feathers, naive
eyes and delicate walk, women with tender arms wander,
leaving their mansions with tall walls empty, and do not
go the courtyards, but are thrilled at the wounds…..
They praised the horses with decorated plumes and came
to your shade, finding shade of fame nowhere else.
Children with delicate heads and fine chest ornaments,
losing their arrows and not seeing the faces of their
fathers…..On the battlefield where kings fled, fell and
died, he, the killer, did not charge with his sword, but
attacked like fire that swallows mansions, and felled an
elephant so that its tusks shattered like a mountain where
thunder has struck.  Those who heal saw his wounds,
and their eyes flooded.  O greatness!  You flattened the
land on the west, ruining warriors who fought without fear.
May your vast battlefields with drums flourish!

The wise ones say that they go to every field where there are
those of noble heritage, great kings, to praise them and win
elephants with spotted faces.  Though my skills are meager,
I beat my black kinai drum with lovely eyes with love.
I sing your praises and there are no others like you in this
world.   I have come to win gifts that you have won from the
forts of your enemies.  Even your enemies praise you.
You have the virtue of helping friends.
You are the lord of the fierce field where packs of foxes and
ghouls wander, joined by red-eared vultures that eat human fat!

Notes:  Kōvūr Kilār wrote Puranānūru 31-33, 41, 44-47, 68, 70, 308, 373, 382, 386 and 400.  .  He hailed from Kōvūr town in Thondai Nadu.  It is presently in Chengalpattu district.   Puranānūru poems 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 46, 69, 70, 226, 227, 228, 386, 393 and 397 were written for this Chōla king.   He wrote Puranānūru 173.   There are 33 poems in which lines are missing.

Meanings:  உரு மிசை முழக்கென முரசும் இசைப்ப – drums roar with the sounds of thunder, செரு நவில் வேழம் கொண்மூ ஆக –  elephants trained in battles as clouds, தேர் மா அழி துளி தலைஇ – raindrops as chariots and horses, நாம் உறக் கணைக் கால் தொடுத்த – the winds as fierce arrows, கண் அகன் பாசறை – in the vast battle camp, இழி தரு குருதியொடு – with blood flowing down, ஏந்திய ஒள் வாள் – lifted bright swords, பிழிவது போல – like squeezing, பிட்டை ஊறு – cracked wounds, உவப்ப – happy, மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை – huge army where young warriors fight, கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே – victorious king who made Kongu country run away. . . . . . தண்டா மாப் பொறி – endless dark/large spots, மடக் கண் மயில் – pea**** with delicate eyes, இயன் மறலி யாங்கு – like how it walks, நெடுங் சுவர் நல்லில் – fine houses with tall walls, புலம்ப – to be lonely/sad, கடை கழிந்து – leaving their gates, மென் தோள் மகளிர் – women with delicate arms, மன்றம் பேணார் – do not go to the common grounds, புண் உவந்து – happy to see the wounds, . . . . . .- missing text, உளை அணியப் புரவி வாழ்கென – praised the horses with plumes, சொல் நிழல் இன்மையின் – since there is no shade of fame, நன்னிழல் சேர – to join your fine shade, நுண் பூண் மார்பின் புன்தலைச் சிறாஅர் – youngsters with parched heads and fine jewels on their chests, அம்பழி பொழுதில் தமர் முகம் காணா- not seeing their fathers when they lose their arrows, . . . . . . . . . வாளில் தாக்கான் – not attack with swords, வேந்து புறங் கொடுத்த – kings showed their backs and ran away, வீய்ந்து உகு – fell and died, பறந்தலை – battlefield, மாட மயங்கெரி மண்டி – approach like fires in mansions, கோடு இறுபு உரும் எறி மலையின் இரு நிலம் சேர – tusks fall on the earth, shattered like a mountain struck by thunder, சென்றோன் – he went, மன்ற – for sure, or an expletive, அசை, கொலைவன் – one who is capable of killing, சென்று எறி வெம்புண் அறிநர் கண்டு – the healers who saw the attack wounds, கண் அலைப்ப – eyes are sad, வஞ்சி முற்றம் வயக்கள னாக – Vanji town to become a battlefield, அஞ்சா மறவர் – warriors with no fear, ஆட் போர்பு அழித்துக் கொண்டனை – you ruined in murderous battles, பெரும – lord, குட புலத்து அதரி – threshed the battlefields in the west, பொலிக அத்தை நின் பணை தயங்கு வியன் களம் – may your wide battlefield with panai drums flourish, விளங்கு திணை வேந்தர் களம் தொறும் சென்று – went to the battlefields of kings of great heritage, புகர் முக முகவை பொலிக என்றி ஏத்திக் கொண்டனர் என்ப பெரியோர் – the elders say that they won elephants with spotted faces as gifts, யானும் அங்கண் மாக் கிணை அதிர ஒற்ற – I have come beating my dark kinai drum with lovely eyes, முற்றிலன் ஆயினும் – even though I am not perfect, காதலின் ஏத்தி – praise with love, நின்னோர் அன்னோர் பிறரி வண் இன்மையின் – that there is no one else like you, மன்னெயில் – forts (tributes got from enemy forts), முகவைக்கு – to win gifts, வந்திசின் பெரும – I came here, my lord, பகைவர் புகழ்ந்த அண்மை – in a place praised even by enemies, நகைவர்க்குத் தாவின்று உதவும் பண்பின் – you have the virtue of helping friends, without limit, பேயொடு கண நரி திரிதரும் – packs of foxes roam with ghouls, ஆங்கண் – there, நிணன் அருந்து செஞ்செவி எருவை குழீஇ – vultures with red ears that eat fatty meat, அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே – lord of the battlefield which is fierce



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

வஞ்சி (25) சிலப்பதிகாரம்
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் - மது 17/128
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் - மது 17/129
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சி_கோன் - மது 21/11
வஞ்சி முற்றம் நீங்கி செல்வோன் - வஞ்சி 25/9
வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து - வஞ்சி 25/34
பூவா வஞ்சி பொன் நகர் புறத்து என் - வஞ்சி 25/148
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என - வஞ்சி 25/149
காவல் வஞ்சி கடைமுகம் பிரியா - வஞ்சி 25/174
கூடார் வஞ்சி கூட்டுண்டு சிறந்த - வஞ்சி 25/179
வாடா வஞ்சி மா நகர் புக்க பின் - வஞ்சி 25/180
புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் - வஞ்சி 26/46
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி
   வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து - வஞ்சி 26/50,51
வானவன் போல வஞ்சி நீங்கி - வஞ்சி 26/79
வஞ்சி தோன்றிய வானவ கேளாய் - வஞ்சி 26/99
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை - வஞ்சி 27/113
எண்_நான்கு மதியம் வஞ்சி நீங்கியது - வஞ்சி 27/149
வஞ்சி பாடுதும் மடவீர் யாம் எனும் - வஞ்சி 27/249
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர் - வஞ்சி 28/4
பேர் இசை வஞ்சி மூதூர் புறத்து - வஞ்சி 28/196
வஞ்சி மா நகர் புகுந்து - வஞ்சி 29/32
வஞ்சியர் வஞ்சி இடையீர் மற வேலான் - வஞ்சி 29/110
வஞ்சி மகளிர் குறுவரே வான் கோட்டால் - வஞ்சி 29/188
வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின் - வஞ்சி 30/127
வஞ்சி மூதூர் மணிமண்டபத்திடை - வஞ்சி 30/173
கிடந்த வஞ்சி காண்டம் முற்றிற்று - வஞ்சி 30/217


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Oct 07 2015 : The Times of India (Chennai)

 
WHILE RULERS CHANGED, TRADE THRIVED
 
 
 
With A System Of Merchant Guilds, Levies, Tamil Traders Did Roaring Business With Rome, Far East
N umismatic evidence shows that Roman-Tamil trade in ancient times thrived for centu ries without break, though now and then there was slackness. An important point is that intermodal transportation was well known then. Cargo came to the Indian west coast, moved to east coast by land and river, and left through the eastern ports. After emperor Nero's passing away in Rome there was a lull in sea trade, which recovered later though the currency changed from gold to silver and copper coins.

History has it that Karur was at various times under Chera, Chola or Pandyas. But trade in the river port flourished irrespective of who ruled.Epigraphical, literary and numismatic evidence show that Karur was an emporium of trade. Ptolemy mentions it as early as 2nd century .

Apart from a strong merchant fleet and a sailing community, ancient Tamils had supporting organizations called by various names -largely independent of whoever was ruling at that point of time -but controlling the trade in an efficient manner.

The ruler of the day did not interfere with the trading communities.Merchant guilds known by various names such as “Anjuvannam“, “AinnuRRuvar“, “Manigramam“ and “Padinenvishayam“ had well established trade practices. They had their own methods of collecting levies for cargo imported and exported along with fees for port security and efficient cargo handling.

These traders created an atmosphere of goodwill among the local population by constructing water tanks and places of worship -a corporate social responsibility initiative of those days. This ensured that trade was smooth in spite of changing regimes. The rulers, however, did ensure safe transit of ships and provided various supporting facilities, in addition to collecting custom duties for imported articles.The classic case is that of Rajendra Chola who with one of the best known navies of the world ensured that traders were well protected and ensured easy passage for them.

According to well-known historians Noboru Karashima and Y Subbarayulu, Padinenvishayam was an organization of high order, which controlled other guilds such as Manigramam, Senamugam etc. These names have been found in various countries with whom the merchants of the Chola period carried on trade.

Padinenvishayam means eighteen countries. In a gloss on grammar treatise “Nannul“, Mayilainathar names the eighteen countries. Guilds must have operated as an organized network between various countries for good logistics support.

The craftsmen who went out in the ships to countries in the far east continued their profession there supported by the merchant guilds. A 3rd or 4th century inscription that says “Perumpatan Kal“ in Brahmi script, meaning “the touchstone of the chief goldsmith“, has been preserved in a Thailand museum. A tank was constructed and put under the protection of a merchant guild -Manigramam.

Karashima has observed two more Tamil inscriptions now kept in a Bud dhist temple and says one of them mentions the name of a donor “Dhanmasenapathi“ who made a grant to brahmins. In Pagan (Myanmar), a 13th century inscription shows a Vaishnavite mantra and also says that a hall was built by “Irayiran Kulasekhara Nambi“.

But the most amazing inscription is the one recorded by T N Subramaniam. This was from Quanzhou, a medieval port of south China. The text reveals that one Champanda Perumal, also known as Thava-Chakravarthigal, having got a grant of land from the then King Khan, built a temple there and called it ThiruKhaneeswaram after the Khan.

An inscription found in the Vishnu temple of Ponneri states that to make Mylapore a protected harbor levy was laid on goods imported and exported. A voluntary levy of the trade guilds was denoted by the term “Pattinapakudi“. Pakudi is a share for the betterment of the “pattinam“ (a port) given by the trade guilds.

(The author is a former marine chief engineer, Tamil writer and heritage enthusiast)

07_10_2015_006_006_003.jpg

07_10_2015_006_006_006.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

Oct 07 2015 : The Times of India (Chennai)
 
Tale of a sculpture: From Pallava glory to a dump yard
 
 
 
 
Despite all the public ity about idol theft and efforts made to bring back stolen antiquities from abroad, it still doesn't take much to cart away these treasures from here.

The people who made these idols would have never expected that their creations would be treated in a cavalier manner.The Pallavas, for instance, built many temples and monuments but some of the great works they created centuries ago are in a state of neglect today . A 9th century sculpture lying abandoned amidst the garbage in Poondi, a village on the bank of river Cheyyar in Tiruvannamalai, is one among them.

Though the four-foot sculpture of Subramaniar has been lying neglected on the main road of Poondi, it didn't get the attention it deserved as the local people were not aware of the heritage value associated with it. The importance of preserving the sculpture came to light only recently when Raj Pannerselvam, who documents abandoned and neglected temples and sculptures across Tamil Nadu, established with the help of experts that it was a Pallava Subramaniar sculpture dating back to 9th century AD.

The style and features of the sculpture, according to epigraphist A Padmavathi, confirms that it belonged to the Pallava era. “This looks similar to many Subramaniar sculptures made during the reign of the Pallavas. The style is simple, but classy . The ornaments and headgear are peculiar Pallava pieces of art. If you consider all these facts, the sculpture might be a later Pallava period creation,“ said Padmavathi, who visited the site to study the sculpture a couple of weeks ago.

How the sculpture has been lying abandoned among garbage is a question for which no one is able to give a clear answer, including the local people.“The sculpture must have been thrown out of a nearby temple during renovation. Obviously it was not created here, and has been badly damaged while shift ing. We need to study the surrounding areas to see what exactly led the sculpture to the dump-yard,“ said Padmavathi.

Some heritage activists are trying to shift the rare piece of art to a museum, but lack of support from the government is a stumbling block to their plan. Raj Pannerselvam said the sculpture faces serious ruin and should be preserved. “We have approached the government but we are yet to get a response from it,“ he said.

But shifting the sculpture to a safer place is not enough, according to Pannerselvam. “We need to get the sculpture marked by the state archaeology department so that it will be recognized as a heritage piece.At a time when protected monuments face threats from vandals and thieves, how can one assure protection for one lying in a dump yard?,“ he asked.

Email your feedback to southpole.toi @timesgroup.com

07_10_2015_006_015_007.jpg

07_10_2015_006_015_009.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

கேரள வரலாறும் பெருமாள்களும்

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard