கல்வெட்டுத் துறை காட்டியுள்ள இந்தப் படத்தில் மாகோதை என்னும் அரசன் பெயர் ஊரின் பெயராகக் காட்டியுள்ளது திருத்திக்கொள்ளப்படவேண்டும் |
- 13 ஆம் நூற்றாண்டுப் பெரியபுராணம் வஞ்சியைத் திருவஞ்சைக்களம் (38 கழறிற்றறிவார் நாயனார் புராணம் 47) என்றும், கொடுங்களூர் (இக்கால வழக்கு - கொடுங்களூர்) என்றும் (1) குறிப்பிடுகிறது.
- இதில் இருந்த மதில், சோலை முதலானவை 4, 10, 47 எண் கொண்ட பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
- இதன் அரசன் பெருமாக்கோதை (1) கழறிற்று-அறிவார் (16), பொறையன் (10), உதியர் வேந்தன் (28),சேரர் குலப்பெருமாள் (72) என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான்.
- கொடுங்களூரில் உள்ள பகவதியம்மன் கோயில் சங்க காலக் கண்ணகி கோயிலாகும்.
- எர்ணாகுளம் பரவூரை அடுத்த பட்டணம் என்னும் பகுதியில், பெரியாற்றின் கழிமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு ஒற்றை மரத்தைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள படகின் அடிப்பகுதி, ஆம்ரோ வகை மதுச்சாடி, சங்க காலச் சேரர் காசுகள், உறைகிணறு முதலானவற்றைக் கண்டுபிடித்துள்ளது.
- முனைவர் பி.ஜே.செரியன், வீ.செல்வகுமார் ஆகியோர் இவற்றிற்கு விளக்கங்கள் தந்துள்ளனர்.
- நிலத்தொல்லியல் அறிஞர் (Geo Archaeologist) கே.பி. ஷாஜன் (K.P. Shajan) என்பவரால் இப்பகுதி அடையாளம் காணப்பட்டு, 1990-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து தொல்லியல் ஆய்வாளர்களும்,வரலாற்று அறிஞர்களும் இப்பகுதியை ஆய்வு செய்யத்தொடங்கினர்.
- பாரம்பரியக்கல்வி மையம் (Centre for Heritage Studies) என்ற அமைப்பினர் 2004-இல் சோதனை அகழாய்வினை நடத்தி, மேற்பரப்பு ஆய்வில் கிடைத்த பொருள்களைக்கொண்டு “ முசிறி “ பற்றிய கருத்துத்தெளிவை வெளிப்படுத்தினர். கேரள வரலாற்று ஆய்வுக்கழகம் (Kerala Council of Historical Research) அமைப்பினர் 2007-இல் பன்னாட்டு அமைப்பினரோடு இணைந்து அகழாய்வினைத்தொடங்கினர். முதன்முதலாகப் பன்னாட்டு அமைப்பினர் இணைந்து நடத்தும் அகழாய்வு இதுவேயாகும்.
- மலபார் கடற்கரைப்பிரதேசத்தில் இந்தோ-ரோமன் வணிகம் நடைபெற்ற காலம் கி.மு. 100 – கி.பி. 400 ஆகும். கேரளத்தோடு ரோமானியர், வட ஆப்பிரிக்காவினர், மேற்கு ஆசியாவினர் ஆகியோர் கொண்ட தொடர்பினை வெளிப்படுத்திய முதல் வாழ்விடப்பகுதி பட்டணமாகும்.
- கேரளத்தின் முதல் பெருங்கற்கால வாழ்விடம் பட்டணம் என்று கருதப்படுகிறது. முதன் முதலாக முற்காலச்சேரரின் நாணயம் கிடைத்துள்ளது பட்டணத்தின் இன்னொரு சிறப்பாகும்.
- 2011-இல் முசிறி பாரம்பரியத் திட்டம் (Muziris Heritage Project) என்னும் திட்டத்தின் கீழ் கேரள வரலாற்று ஆய்வுக்கழகம் வரலாற்று ஆய்வினைத்தொடங்கியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்,ரோம் பல்கலைக்கழகம், பர்ஹாம் பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போன்ற அயல் நாட்டு அமைப்புகளும் மற்றும் இந்தியத்தொல்லியல் ஆய்வுக்கழகமும் (Archaeological Society of India) இவ்வாய்வில் பங்குபெற்றன.