New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஞாயிறு போற்றுதும்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
ஞாயிறு போற்றுதும்
Permalink  
 


ஞாயிறு போற்றுதும்

 

 
mithra.gif
காளையை அடக்கும் சூரிய கடவுள் மித்ர கடவுள்
உலகெங்கும் 'பொறாமை பிடித்த' ஏக இறைக்கும்பல்களின் கொட்டங்கள் தொடங்கிடாததோர் பொற்காலம் அது. உலகெங்கும் ஆதவ வழிபாடு அங்கங்கிருந்த பண்பாட்டு செழுமையுடன் வழங்கப்பட்டு வந்திட்ட காலம் அது. ஒருவர் மீது மற்றவர் தம் மதத்தை திணிக்காமல் அனைத்திலும் ஒற்றுமையை உணர்ந்திட்ட காலம் இது.
kizil.gif
டிரரன்ஸாக்ஸியன் கிஸீல் குகை கோவிலோவியங்களில் ஆதவ கடவுள்
ஆனால் இந்த ஆதவ ஒளிக்கிரணங்களை மூடிட எழுந்த இருட்சக்திகள்தான் 'ஏக இறை' எனும் போதையேறிய பொறாமை தேவன்கள். யஹீவாவாம் ஏசுவாம் அல்லாவாம் இந்த இருட்சக்திகள் அழித்திட்ட ஆதவ வழிபாடுகள் உலகெங்கிலும் எத்தனை எத்தனை!
hammurabi.gif
ஹமுராபிக்கு சட்டங்கள் அளிக்கும் ஆதவ இறைவன்
aztec.gif
ஆதவ இறைவனை மையமாக கொண்ட அஸ்டெக் வானிலை இயக்க மண்டலம். இது இருந்த கோவில் ஏசு கும்பலால் அழிக்கப்பட்டு அங்கு யஹீவா என்பவனின் மகனாக வணங்கப்படும் ஏசு என்பவனுக்கு கோவில் கட்டியுள்ளார்கள்.
சிலுவைப்போர்களையும் ஜிகாதுகளையும் கொடும் நோய்களாக உலகெங்கும் பரப்பி உன்னத ஆதவ வழிபாட்டினை அழித்திட்ட வன்செயல்கள் நம் மனதில் நீங்கா வடுக்களாக நிலைத்திருக்க,
japan.gif
ஜப்பானில் வழிபடப்படும் ஆதவ தேவி - இவளே ஜப்பானிய கொடியிலும் திகழ்கிறாள்.
இத்தனை கொடுமைகளுக்கும் அப்பால் இன்றும் வாழும் நம் பண்பாட்டில் ஆதவ வழிபாடு - பொங்கலாக மகர சங்கராந்தியாக- ஞாயிறு போற்றுதும். இயற்கை சக்திகளின் இறைமையை இனிமையை போற்றுவோம்.
pongal2.gif
பொங்கல் விழாவில் தேவியராக குழந்தைகள் அணிவகுப்பு
பொறாமையையும் புனிதப்போர்களையும் உருவாக்கும் ஏக இறை இருட்சக்திகள் அழிந்திட போர்ப்பறை முழக்குவோம்.

ஞாயிறு போற்றுதும்


pongal.gif

sun_temples.gifசூரியக் கோவில்கள்: மெக்ஸிகோ கொனாரக்
 

 

ஸ்ரீமாவும் பொங்கலும்

 

 
2001 இல் கிறிஸ்தவ பிரிவினைவாத பயங்கரவியாதிகளான NLFT அமைப்பினர் பொங்கல் கொண்டாட விதித்திருந்த கிறிஸ்தவ தடையை மீறி பொங்கலை கொண்டாடியதற்காக ஜனவரி 13 2002 அன்று குடும்பத்துடன் பலிதானியாகிய ஸ்ரீமாவை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தருமத்துக்காக இயற்கையின் இறைத்தன்மையை கொண்டாடும் ஹிந்து-பாகனீய மரபின் உரிமைக்காக தன் உயிரையே பலிதானியாக்கிய ஏழுவயது ஸ்ரீமாவின் நினைவாக ஒவ்வொரு இந்துவும் இந்த பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி பெருநாளை கொண்டாடுவோம். பாரத தருமத்தை அழிக்க நினைத்திடும் அதரும ஆபிரகாமிய அசுர சக்திகள் சூரிய தேவனின் ஒளியில் மங்கி மறையட்டும் ஒவ்வொரு பாரத குடும்பத்திலும் அன்பும் அறமும் வளமையும் பொங்கட்டும். மேன்மைகொள் பாரத தருமம் ஆதவ ஒளிபோல் உலகெங்கும் அருளும் அன்பும் அமைதியும் பரப்பட்டும்.

 

இலங்கை சர்வ இந்து அமைப்புகள் சங்கம் வெளியிட்டுள்ள பொங்கல் செய்தி

தை பொங்கல் அனைத்து இந்துக்களுக்கும் புனிதமான பாரம்பரிய திருநாளாகும். சூரியதேவனை நண்றியுடன் நினனவு கூர்ந்து அவருக்கு பொங்கல் படைத்திடும் நாள் இது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நூற்றாண்டுகளாகத் தொடரும் நம்பிக்கை ஆகும்.ஆனால் இலங்கை தமிழருக்கு இந்த பொங்கல் திருநாளிலும் கூட சொல்லொணா துயரங்கள் தொடர்கின்றன. கொலைகள், கடத்தல்கள், சொத்து பறிமுதல்கள் என பல துயரங்களை எம்மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
எமக்கும் தைபிறந்தால் வழி பிறக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. எனவே அனைத்து இந்துக்களுக்கும் இந்த பொங்கல் திருநாளன்று இந்நாளின் புண்ணிய புனித தன்மையை உணர்ந்து அதனை பிரார்த்தனையுடன் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறோம். [நன்றி: டெய்லி நியூஸ் 15-01-2008]


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard