சாதி ஒழிப்பே சமூக நீதிக்கு வழி ; மத ஒழிப்பே (குறிப்பாக இந்துமத ஒழிப்பே)மானுடத்தைக் காக்கும் என்ற கொள்கையோடு உருவான திராவிடஇயக்கங்களின் நிலை இன்று என்ன ?
பெரும்பாலான திராவிட இயக்கப் பாரம்பரியம் கொண்டவர்களின் வீடுகளில்பூஜை அறை ! சாதி சங்கங்களோடு சம்மந்தி உறவு !
தமிழகத்தில் ஏராளமான சாதி அமைப்புகள், சங்கங்கள் திராவிடஆட்சியாளர்களின் காலத்தில் தான் தோன்றி ; வளர்ந்து ; ஆட்சியில்இருப்பவர்களை ஆட்டுவிக்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றன.
கடவுள் மறுப்பு ; இந்துமத வெறுப்பு போன்றவற்றை இன்று இவர்கள் பேசினால்,இவர்களின் தொண்டர்களே அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முன்புபோல் இந்து மத எதிர்ப்பைத் தீவிரமாக மேற்கொண்டால் இங்கு இவர்களால்ஆட்சி நடத்த முடியாது. திராவிட பாரம்பரியத்தில் வந்த அ.இ.அ.தி.மு.க இன்று100 சதவீத கடவுள் நம்பிக்கை கொண்ட கட்சியாகவே மாறிவிட்டது !. எம்.ஜி.ஆர்; ஜெயலலிதா போன்று மக்களால் வெற்றிபெற்ற தலைவர்கள் கடவுள் மறுப்பைஏற்கவில்லை. தி.மு.க வினர் மட்டும் தேவைப் படும் பொழுது கடவுள் மறுப்பு ;பிறகு பின் வாசல் வழியாக கோவிலுக்குச் செல்வது , என்று இரட்டை நிலைவகிக்கின்றனர்.
சாதி விஷயத்தில் இரு பெரும் திராவிட கட்சிகளும் ஒன்றுதான். சாதிக்கட்சிகளின் "அருளாசியோடு" ஆட்சி நடத்துகின்றன ! வெளியில் மட்டும் சாதிஒழிப்பு , சமத்துவம் !.
ஒரு தொகுதியில் எந்த சாதி மக்கள் அதிகம் வாழ்கின்றனரோ அந்த சாதிவேட்பாளரையே நிறுத்துவதா சாதி ஒழிப்பு ? ஒரு குறிப்பிட்ட சாதியினர் வாழும்பகுதியில் மாற்று சாதி நபர் ஒருவரை வேட்ப்பாளராக நிறுத்தி வெற்றி பெறவைப்பதே உண்மையான சமத்துவம். இப்படிச் செய்வதன் மூலம் தங்கள்கட்சியின் கொள்கைகளைப் பார்த்து மக்கள் வாக்களிக்கின்றனர் மாறாகவேட்ப்பாளரின் சாதியைப் பார்த்து அல்ல என்ற நிலையை உருவாக்க முடியும்.இந்தச் செயலைச் செய்ய இன்று தமிழகத்தின் எந்தக் கட்சிக்கும்தைரியமில்லை, குறிப்பாகச் சாதி ஒழிப்பை தீவிரமாகப் பேசிய திராவிடபாரம்பரியம் கொண்ட கட்சிகள்.