New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பட்டியல் இன மக்களும் கிறிஸ்துவமும்


Guru

Status: Offline
Posts: 23971
Date:
பட்டியல் இன மக்களும் கிறிஸ்துவமும்
Permalink  
 


ஏன்டா கிறிஸ்துவனாக மாறினாய்?சர்ச்சை இடி. சான்றிதழை பிடி.

 
கோதுமைக்கு ஆசைப்பட்டு கிறிஸ்துவர்களாகி கிறிஸ்துவப் பெயர்களை வைத்துக் கொண்டார்கள். அதன் பலனை இப்போது நாங்கள் அனுபவிக்கிறோம்.

ஆல்பட், ஆரோக்கிய ஜார்ஜ், அந்தோணி என்று ஆசைப்பட்டு கிறிஸ்துவப் பெயர்களை வைத்துக் கொண்டு, அதன் எதிரொலியாக இப்போது சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் அவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆரணிப் பகுதி தலித் மக்கள் சிலர்.

``உங்களுக்கு சாதிச்சான்றிதழ் பெற இடைஞ்சலாக இருக்கும் அந்த சர்ச் எதற்கு? அதை உடையுங்கள்''என்று ஒரு தாசில்தார் வேறு மறைமுகமாக உசுப்பேற்றுவதால், மனமுடைந்து கிடக்கிறார்கள் அவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணி அருகே உள்ள புலவன்பாடி கிராமத்தில்தான் இப்படியொரு அவஸ்தை எனக் கேள்விப்பட்டு, அங்கு நாம் சென்றோம்.ஊர்க்கோயில் நடுவே காய்ந்து போன குளம். அதையொட்டி அனைத்துப் பிரிவினரும் சமமாக தேநீர் அருந்த வசதியாக கீற்றுக் கொட்டகையில் ஒரு டீக்கடை.அதையும் தாண்டி நாம் சென்றபோது 175 தலித் குடும்பங்கள் வாழும் தலித் குடியிருப்புப் பகுதி தலை காட்டியது.

அங்கு தலைநிமிர்ந்து கம்பீரமாக நின்ற `புனித போஸ்கோ அருளப்பர்' தேவாலயத்தின் அருகே நாம் நடந்தோம். அப்போது அந்த சர்ச்சின் அருகே கிறிஸ்துவப் பாதிரியார்களால் நடத்தப்படும் பள்ளியில் இருந்து குருவிக் கூட்டம் போல சின்னஞ்சிறார்கள் பள்ளி முடிந்து வெளியே வந்தார்கள்.

கைகளில் மஞ்சள் நிற துணிப்பையில் பாடப்புத்தகங்கள். உடலில் சட்டை எதுவும் இல்லை. டிரவுசர் என்ற பெயரில் பட்டன் இல்லாத ஏதோ ஒன்று அவர்களது இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் சர்ச் பார்க் கான்வென்ட்டுகள்.

இன்னொருபுறம் சட்டை கூட இல்லாத கிறிஸ்துவப் பள்ளிகளா? என்ற கேள்வியுடன் முதலில் லூர்துசாமி என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

அண்மையில் முனிசாமி என்று பெயரை மாற்றிக் கொண்டுவிட்ட அவர் பேசத் தொடங்கினார்.
``நாங்கள் பிறப்பால் ஆதிதிராவிடர்கள். எங்கள் தாத்தா, பாட்டன்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்திருக்கிறார்கள்.அதற்கடுத்த தலைமுறைகளைச் சேர்ந்த நாங்கள் ஒழுங்காக கிறிஸ்துவ மதத்தில் இணைந்து ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளவில்லை.இருந்தும் இயேசுநாதரை வணங்கி வருகிறோம்.மேலோட்டமாக நாங்கள் கிறிஸ்துவப் பெயர்களை மட்டும் வைத்துக்கொண்டதால் ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும்போது சாதிச்சான்றிதழ் பிரச்னை என்ற தலைவலி வந்து விடுகிறது.

`நீங்கள் எல்லாம் கிறிஸ்துவர்கள்' என்று சொல்லி ஆதி திராவிடர் என சாதிச்சான்றிதழ் தர அதிகாரிகள் மறுத்து விடுகிறார்கள். நாங்கள் கிறிஸ்துவர் ஆகிவிட்டதால் ஆதிதிராவிடர் இல்லையென்று ஆகி விடுமா? என்னங்க நியாயம் இது? நாங்கள் ஆதி திராவிடர்கள் இல்லையென்றால் ஊருக்கு நடுவில் எங்களையும் வீடுகட்டிக் கொள்ள அனுமதிப்பதுதானே?

தாசில்தாரிடம் கேட்டால், பாதிரியாரிடம் `கிறிஸ்துவன் என்று கடிதம் வாங்கி வா' என்கிறார். நாங்கள் கிறிஸ்துவராக மாறாத நிலையில், பாதிரியார் அப்படிக் கடிதம் தர மறுக்கிறார். இருபக்கமும் அடி வாங்கும் மத்தளத்தின் கதையாகி விட்டது எங்கள் கதை. 

மாதவன், வல்லவன் என்ற என் இரு மகன்களுக்கு சாதிச் சான்றிதழ் வாங்குவதற்குள் நான் ஒருவழி ஆகிவிட்டேன். ஒன்று நாங்கள் கிறிஸ்துவப் பெயர்களை வைக்காமல் இருந்திருக்க வேண்டும். அல்லது நாங்களாவது முழுமையாக மதம் மாறியிருக்க வேண்டும்.

இரண்டில் ஒன்றைச் செய்யத் தவறியதால்தான் இவ்வளவு பிரச்னை. இங்கே இருக்கிற தாசில்தாரோ, `உங்க ஊரில் சர்ச் இருக்கிறதால்தான் இத்தனை பிரச்னை' என்று திரும்பத் திரும்ப ஏதோ ஒரு நோக்கத்தில் சொல்கிறார்'' என்றார் லூர்துசாமி என்ற முனிசாமி.

அடுத்துப் பேசியவர் ஆறுமுகமாக இப்போது மாறியுள்ள டேவிட்.
``கோதுமைக்கு ஆசைப்பட்டு எங்கள் தாத்தாக்கள் ஓடிப்போய் கிறிஸ்துவர்களாகி கிறிஸ்துவப் பெயர்களை வைத்துக் கொண்டார்கள். அதன் பலனை இப்போது நாங்கள் அனுபவிக்கிறோம்.

இப்போது என் பெயர் டேவிட் என்பதால் என் மகன்கள் சிவராமன், அரவிந்தன் ஆகியோருக்கு சாதிச்சான்றிதழ் தர அதிகாரிகள் மறுக்கிறார்கள். எங்கள் பிள்ளைகளின் படிப்புக்கும் எதிர்காலத்துக்கும் எங்களது கிறிஸ்துவப் பெயர்கள் இடையூறாக நிற்கிறது'' என்று புலம்பினார் அவர். சாந்தி, பீட்டர் என்பவர்களின் புலம்பலும் இதேதான்.

``ஒவ்வொரு வருஷமும் இதே கூத்து. எங்களைக் கிறிஸ்துவர்கள் என்று கூறி சாதிச்சான்றிதழ் மட்டுமல்லாமல்,தொகுப்பு வீடுகள் தரவும் மறுக்கிறார்கள்.சாதிச்சான்றிதழ் வாங்க நாங்கள் அலையும் அலைச்சலுக்கு ஆயிரம், ஐநூறு என்று செலவாகிறது. எங்களுக்குப் பிடித்த சாமியை நாங்கள் கும்பிடுகிறோம். எங்களை ஆதிதிராவிடர் இல்லையென்றால் எப்படி?'' என கேள்வி எழுப்பினார்கள் அவர்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் கிளைச் செயலாளர் பாபு, நம்மிடம், ``என் அப்பா பெயர் ஜோசப். என் தம்பி பெயர் துரை பொன்னையன். இதையே காரணமாகக் காட்டி சாதிச்சான்றிதழ் தர மாட்டேன் என்கிறார்கள். என் அப்பா பெயர் ஜோசப் என்று இருந்தாலும் அவர்தான் எங்கள் பகுதி இந்துக்களுக்கு நாட்டாண்மை. அண்மையில் கூழ் வார்க்கும் திருவிழாவை நடத்தியது கூட அவர்தான்.

தாசில்தாராக இருக்கும் கோவிந்தராசு எப்போது பார்த்தாலும், எங்கள் ஊர் தேவாலயத்தை உடைக்க வேண்டும் என்பது போலவே பேசுகிறார்.`உங்க ஊரில் சர்ச் இருப்பதுதான்யா அத்தனை பிரச்னைக்கும் காரணம்' என்றுவிரட்டுகிறார். `அப்படியானால் `சர்ச்'சை இடித்து விடட்டுமா?' என்று கூட அவரிடம் வி.சி. தொண்டர் அணிச்செயலாளர் முத்தமிழ் கேட்கும்படி ஆகிவிட்டது'' என்றார் பாபு.

முத்தமிழிடம் பேசினோம். ``தாசில்தார் சொல்வதைப் பார்த்தால் ``சர்ச்'சை இடி! சாதிச்சான்றிதழ் தருகிறேன்' என்று சொல்வதைப் போல உள்ளது. ஏதோ ஒரு வகையில் தலித் மக்களுக்கு இடைஞ்சல்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன'' என்றார் அவர்.

தாசில்தார் கோவிந்தராசுவிடம் கேட்டபோது, ``அவர்கள்எந்த சாமியை வேண்டுமானாலும் கும்பிடட்டும். எனக்கென்ன வந்தது? `சர்ச்'சை இடிக்க வேண்டும் என்ற ரீதியில் நான் பேசவில்லை'' என்றார்.

இந்தப் பிரச்னை குறித்து கமிட்டி போட்டால்தான் பிரச்னை தீரும் என்ற நிலையில், ஆலய பாதிரியார் அலெச்சாண்டரிடம் நாம் பலமுறை பேச முயன்றோம். முடியவில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு முதல்கட்டமாக சர்ச்சுக்குப் பூட்டு போட்டுவிட்டு,அடுத்தகட்டமாக போராட்டத்தில் இறங்கத் தயாராகி வருகிறது. புலவன்பாடி கிராமத்தின் அருகே உள்ள பத்தியாவரம் கிராமமும் இதே பிரச்னையால்தான் இன்று சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. புலவன்பாடி விஷயத்திலாவது அதிகாரிகள் முன்கூட்டியே விழித்துக் கொண்டால் தேவலை. -ம.பா.கெஜராஜ் kumudam reporter.
http://idhuthanunmai.blogspot.in/2008/06/blog-post_12.html


__________________


Guru

Status: Offline
Posts: 23971
Date:
Permalink  
 

சாதி வெறியில் பாதிரியார்?

 

‘‘தலித் கிறிஸ்தவர்கள் மீது சாதி வெறியைக் காட்டுகிறார், தேவாலய தலித் ஊழியரை சாதியைச் சொல்லி திட்டுகிறார்...”-----& பாதிரியார் பீட்டர் ராஜ் என்பவர் மீது இப்படியரு அதிர்ச்சிப் புகாரை அள்ளிவீசுகிறார்கள், திண்டுக்கல் நகர்ப்பகுதியிலுள்ள குறிப்பிட்ட சில தலித் கிறிஸ்தவர்கள்.

 

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் 80 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியத் துடன் வீற்றிருக்கிறது, தூய வளனார் பேராலயம். பீட்டர் ராஜ் இந்தப் பேராலயத்தின் பங்கு பாதிரியார். இவருக்கெதிராக கச்சைகட்டி நிற்கும் தலித் கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர், கடந்த 18&ம் தேதி பேராலயத்தின் திருப்பலி பூசையை நிறுத்தவும், தேவாலய கதவுகளை மூடவும் எத்தனித்திருக்கிறார்கள். மற்ற பாதிரியார்கள் தலையிட்டதால் அந்த முயற்சியைக் கைவிட்டவர்கள், அந்தநேரம் அங்கு வந்த பீட்டர் ராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

 

‘தலித் கிறிஸ்தவர் இளைஞர் அமைப்’பைச் சேர்ந்த சுஷிலிடம் பேசினோம்... “பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த இந்த பீட்டர் ராஜ், ஒன்றரை வருடத்துக்கு முன்னால இந்த பங்குக்கு வந்தார். வந்த சமயத்திலிருந்தே தலித்களிடம் விரோதம் காட்ட ஆரம்பிச்சுட்டார். சர்ச்சில் ரொம்ப வருடங்களா வேலை பாத்துக்கிட்டுருந்த தலித் சமூகத்தை சேர்ந்த ஆர்கனிஸ்ட் மைக்கேல்ராஜ், பீடப்பணியாளர் ஆரோக்கியசாமி, எலெக்ட்ரீஷியன் ஜோசப் ஆகியோரை ஒவ்வொருத்தரா வேலையிலிருந்து நீக்கினார். கடைசியா ஜோசப்பை நீக்குனப்ப, அவரை சாதியை சொல்லித் திட்டினார்.

 

திண்டுக்கல் பங்கில் எண்பது சதவிகிதத்துக்கும் மேல தலித்கள்தான் இருக் கிறோம். எங்களின் குழந்தைகளுக்குப் பேர் வைக்கும் போதுகூட நாங்க சொல்ற பேரை வைக்கமாட்டார் பீட்டர் ராஜ். இந்து மதத்தில் தீண்டாமை இருக்குங்குறதாலதான் எங்க மூதாதையர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியிருக்காங்க. ஆனா கிறிஸ்தவ மதத் திலும் இப்ப சாதிய கொடுமைகள் அதிகரிச் சுக்கிட்டு வருதுன்றதுக்கு நாங்களே சாட்சி. இதைப் பற்றி ஆறு மாசம் முந்தியே பிஷப் உள்ளிட்டவர்களிடம் சொல்லி, மனு கொடுத்திருக்கிறோம். யாரும் கண்டுக்கவேயில்லை. திண்டுக்கல் மறை மாவட்டத்தில் இருக்குற பங்குகளில் ஒரே ஒரு பாதிரியார் மட்டும்தான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரையும் சாதிரீதியா ஒதுக்கியிருக்காங்க. அவர் ஒருத்தரால் மட்டும் எப்படி எங்களுக்காகக் குரல் கொடுக்க முடியும்?’’ என்றவர்,

 

‘‘நாங்க எல்லோரும் சுத்தி நின்னு பேசும்போதே, ‘உங்களால என்னை ஒண்ணும் புடுங்க முடியாது. உங்களை யெல்லாம் தொலைச்சுக்கட்டிடுவேன்’னு பீட்டர் ராஜ் சொல்றாரு. ஒரு பாதிரியார் இப்படியெல்லாம் பேசலாமா? இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்றதுக்காக உயிரை விடக்கூட எங்க இளைஞர்கள் தயாராயிட்டாங்க’’ என்றார்.

 

பாதிரியாரால் பணி நீக்கப் பட்ட எலெக்ட்ரீஷியன் ஜோசப் பிடம் பேசினோம். “என் தம்பிக்கு உடம்பு சரியில்லைனு லீவு போட்டிருந்தேன். திரும்ப வேலைக்கு வந்தப்போ, ‘வேலைக்கு இனிமே வர வேணாம்’னு ஃபாதர் சொன்னார். நான் நியாயம் கேட்டேன். உடனே அவர், ‘இப்பவே என் ஆபீஸை விட்டு ஓடிப்போயிடு. இல்லேன்னா என் சாமான்களைத் திருடியிருக்கேனு சொல்லி போலீஸ்ல கேஸ் குடுத்துருவேன்’னு சொன்னார். திரும்ப நான் மன்னிப்பு கேட்டதுக்கு சாதியைச் சொல்லி இழிவா திட்டுனார். இன்னமும் என்னை வேலையில் சேர்க்கலை. மைக்கேல் ராஜும் ரொம்ப வருசமா இங்கதான் வேலை பார்த்தார். ஆரோக்கியசாமி முப்பது வருசமா வேலை பார்த்தார். அவங்க ரெண்டு பேத்தையும் இவர்தான் வேணும்னே நீக்குனார்’’ என்றார்.

 

பாதிரியார் பீட்டர் ராஜிடம் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தோம். “இந்த பங்கில் இருக்கும் மற்ற கிளைப்பங்குகளில் பூசை முடித்து விட்டு சர்ச்சுக்குத் திரும்பி வரும்போது, என் வாகனத்தை மறித்து அவங்க தகராறு செஞ்சாங்க. அதுக்கு முன்னாடியே பூசையை நிறுத்தச் சொல்லியும் தகராறு செஞ்சிருக்காங்க. பூசையை இவங்க எப்படி நிறுத்த சொல்லலாம்? பிஷப்கிட்ட போய் முறையா தகவல் சொல்றத விட்டுட்டு, இவங்க இப்படி அராஜகத்தில் ஈடுபட்டது சரியா?’’ என்று கேள்விகளை அடுக்கியவர்,

 

‘‘நான் சாதிய அடிப்படையில் யாரிடமும் எந்த வார்த்தையும் பேசவில்லை. ஆனால், சாதியைச் சொல்லித் திட்டியதாக என்மீது பொய்க்குற்றச்சாட்டை சொல்லியிருக்காங்க. இங்குள்ள ஒரு ஏரியாவை சேர்ந்தவங்க ஏதோ உள்நோக்கதுடன் இப்படி எல்லோரையும் திசைதிருப்பி விடுறாங்க. இங்க ஆர்கனிஸ்டா வேலை பார்த்த மைக்கேல்ராஜின் மகன், 2005&ம் வருசம் கிறிஸ்துமஸ் அன்னிக்கு ஒரு சின்ன அசம்பாவிதத்தில் ஈடுபட்டுட்டான். அதுனால அவரைக் கூப்பிட்டு பையனை கண்டிக்கச் சொன்னேன். அதுக்கப்புறம் ஏனோ அவரே வேலையிலிருந்து நின்னுகிட்டார். அதே மாதிரி ஆரோக்கியசாமிக்கு நான் இங்கு வருவதற்கு முந்தியே பணியிலிருந்து ஓய்வு கொடுத்துட்டாங்க. அதுக்கப்புறமும் வீட்டுல சும்மா இருக்க முடியாம இறைப்பணி செய்றேன்னு செஞ்சுகிட்டிருந்தவர், திடீர்னு ‘எனக்கு உடம்புக்கு முடியலை’னு வேலைய விட்டு நின்னுட்டார்.

 

எலெக்ட்ரீஷியன் ஜோசப் அடிக் கடி சொல்லாம லீவுல போயிடுவார். அதனால் அடிக்கடி பிரச்னை வரும். ‘இனிமேல் ஏதாவது தவறு நடந்தால் பங்கு நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு உகந்து நடப்பேன்’னு எழுதிக்கொடுத்த பிறகும் சொல்லாம லீவு எடுத்தார். அதனால அவரைக் கண்டிச்சு ‘வேலைக்கு வர வேணாம்’னு சொல்லிட்டேன். உடனே அவர் என் ஆபீஸ§க்குள் இருந்துகிட்டு, ‘வெளிய போகமாட்டேன்’னு தகராறு பண்ணுனார். நான் அவசரமா வெளியில் கிளம்ப வேண்டி யிருந்ததால, ‘வெளியில போ, இல்லேன்னா நான் உன்னை உள்ள வெச்சுப் பூட்டிட்டுப் போயிடுவேன்’னு சத்தம் போட் டேன். அவர் கிளம்பிட்டார். இதுதான் நடந்தது’’ என்றார்.

 

இந்தப் பிரச்னை பற்றி திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் அந்தோணியிடம் பேசினோம். “இதுபற்றி என்கிட்ட புகார் கொடுத்துருக்காங்க. குறிப்பிட்ட சிலர்தான் இப்படி பிரச்னையைக் கிளப்பியிருக்காங்கனு தெரியுது. மூணு பேரை விலக்கியிருக்கறதுக்கான காரணம் தெளிவாச் சொல்லப்பட்டிருக்கு’’ என்றவர், ‘‘முதல்கட்ட விசாரணையில் பங்குப் பிரதிநிதிகள் யாருமே பீட்டர் ராஜைப் பற்றி தப்பான அபிப்பிராயத்தைச் சொல்லலை. குறிப்பிட்ட அந்தப் பகுதியிலிருந்து வந்திருந்த ஒருத்தர் மட்டும்தான் குற்றச்சாட்டுகளை சொன்னார். அதிலேயே பீட்டர் ராஜ் தலித்களுக்கு எதிரா னவரில்லைங்கிறது தெளிவா தெரிஞ்சது.

 

முதல்கட்ட விசாரணைதான் இது. தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பேன். அதில்லாம இங்குள்ள பங்குகளில் ஒரே ஒரு பங்குத்தந்தை மட்டும்தான் தலித்னு சொல்றதும் தப்பு. இந்த மறை மாவட்டத்தில் மூன்று தலித் பாதிரியார்கள் இருக்காங்க. எனக்கு அடுத்தபடியாவே ஒரு தலித் பாதிரியார் இருக்கிறார். அதனால பிஷப் உள்ளிட்டவங்க தலித்களுக்கு விரோதமா செயல்படுறாங்கன்னு மொட்டையா அவங்க குற்றம் சொல்றது தப்பானது. எனக்கோ இங்கிருக்கிற பங்குத் தந்தைகளுக்கோ தலித் விரோத மனப்பான்மை கிடையாது. கிறிஸ்தவ மதத்தில் கொள்கை அடிப்படையில் சாதி பாகுபாடே கிடையாது. அதனால இது தேவையில்லாத குற்றச்சாட்டு” என்றார்.

ஜி.பிரபு

 

நன்றி ஜூனியர் விகடன்

http://www.tamilnadutalk.com/portal/topic/5655-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/__________________


Guru

Status: Offline
Posts: 23971
Date:
Permalink  
 

திருச்சி லால்குடி அருகில் பூவலூர் கிராமத்தில் தலித் கிறிஸ்தவராய் பிறந்து ...
இன்று லயோலா கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியராய் ....இல்லறவாழ்க்கையை 
துறந்து ...டாக்டர் அம்பேத்கர் சமூக மாற்றத்தின் முதல் படியாக " கற்பி " 
கற்பித்தலை சமூகம் , கல்வி சார்ந்த நமக்கான குரலை ஊடங்கங்கள் வாயிலாக 
விவாத மேடைகளில் மக்களுக்கு கொண்டுசெல்லும் வல்லமை படைத்தவர் 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 
கல்வி மற்றும் பொருளாதார பிரிவு மாநில செயலாளர் பொறுப்புவகித்துவரும் 
போராடும் பேராசிரியர் ..ச .லெனின் 
தலித் மாணவர்கள் கூட்டமைப்பு என்னும் கட்டமைப்பை உருவாக்கி அதற்க்கு உந்து சக்தியாய் ...தக்க ஆலோசனைகள் வழிகாட்டியாக இருந்தும் வருகின்றார்

தமிழக கத்தோலிக்கத் திருச்சபையில் நிலவும் சாதி தீண்டாமை
கொடுமைக்கு எதிராக 
போராடும் யேசுவின் நீதியின் பக்கம் கத்தோலிக்க கிறித்தவர்களை
நிற்க வைக்கவும் ,
தனது எளிய மக்களுக்கும் அதனை அவர்கள் மொழியில் 
கொண்டு செல்லும் சிறந்த மக்கள் பேச்சாளர்

ஆகஸ்டு 15 அடிக்கடி வரும்நாள்...
கொடிமரத்தின் கீழ்நின்று கூத்தாடிகளும் கூட்டுக் கொள்ளைக்காரர்களும் 
ஏழைகளுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் 
துணிவோடு முழங்கி !

நமது ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான 
பொருளாதார விடுதலை கிடைக்கவில்லை 
என களம் காணும் சமூக போராளி ச .லெனின் 
அவர்கள் வரும் அக்-02 அன்று திருச்சபையில் நமது உரிமையும் கடமையும் 
என்ற தலைப்பில் உரை நிகழ்த்த வருகை தரும் அவரை தலித் கிறித்துவ மக்கள் 
கூட்டமைப்பின் சார்பில் தலித் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் வர வேற்கின்றோம்

செய்திகளுக்காக பே .பெலிக்ஸ் ( ஒருங்கிணைப்பாளர் )

Patrick Felix Felix's photo.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard