New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தலித் இறையியல் விடுதலை இறையியல்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
தலித் இறையியல் விடுதலை இறையியல்
Permalink  
 


தலித் கிறிஸ்தவம்

ஐயா! தலித்துக்களுக்கென்று ஒரு கிறிஸ்தவம் என்ற வகையில் பேசுகிறார்கள். இதைப்பற்றி எழுதி விளக்குங்கள் என்று வாசகர் ஒருவர் கேட்டுக் கொண்டார். தமிழ் நாட்டிற்கு வெளியில் இருப்பவர்களுக்கு இது என்ன? என்று புரியாமலிருக்கலாம். ஒடுக்கப்பட்டு, சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள சாதியினர், தொழிலாளர்கள், நாடோடி மக்கள், ஆதிவாசிகள் ஆகியோர் இந்தியாவில் தலித்துக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். யார் உண்மையான தலித்? என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கங்கள் எல்லாமே ஒத்துப் போவதாயில்லை. இருந்தாலும் பொதுவாக சமுதாயத்தில் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களை இது குறிக்கின்றது. உயர் சாதியினரால் தலித்துக்கள் பெருந்துன்பங்கள் அடைவது மறுக்க முடியாத உண்மை. இந்திய அரசியல், பொருளாதார சூழ்நிலையும், சாதிக்கொடுமையும் அவர்களைக் காலில் போட்டு மிதித்து வருகின்றது. இந்திய சமுதாயத்தைப் பிடித்திருக்கும் சாதிக் கொடுமை அகற்றப்படாதவரை தலித்துக்களின் தலைவிதி மாறுமா என்பது கேள்விக்குறியே. அம்பேத்கார் தலித்து மக்களின் முன்னேற்றத்திற்காகப் போராடிய மனிதர். வேறு பலரும் இதைச் செய்திருக்கிறார்கள்.

 

கிறிஸ்தவ திருச்சபைகளில் தலித் இன உணர்வு ஏற்படுவது சரியா? அரசரடி இறையியல் கல்லூரி அதிபர் எழுதுகிறார், “தலித் இன உணர்வு ஏற்படுவதில் தவறு இல்லை” என்று (தலித் விடுதலை இயல்). “தலித்துக்கள் போராட்ட ஆற்றல் பெற அத்தகைய இன உணர்வு துணை செய்யும்” என்று அதிபர் எழுதியுள்ளார். தலித்துக்களுக்கான கிறிஸ்தவம், தலித் இறையியல், தலித் பெண்ணீயம் என்பன போன்ற கோஷங்கள் புதிதல்ல. இத்தகைய இன அடிப்படையிலான கோஷங்களை கிறிஸ்தவ வரலாறு ஏற்கனவே சந்தித்திருக்கின்றது. இலத்தீன் அமெரிக்காவை ‍அ‍டிப்படையாகக் கொண்டு கடந்த காலங்களில் எழுந்ததே விடுதலை இறையியல் (Liberation Theology). அச்சமுதாயத்தில் ஏற்பட்ட இனவர்க்கப்போராட்டத்தில் மிதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை காண முற்பட்டது ரோமன் கத்தோலிக்க மதச்சார்புடைய இத்தாராளவாத (Liberal) விடுதலை இறையியல். இது கிறிஸ்துவை, நசுக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் ஒரு புரட்சிக்காரராக காட்ட முயல்கிறது. இதைப்போல நம்மக்கள் மத்தியில் உருவானதொன்றே பிராமண எதிர்ப்புணர்வு கொண்ட தெய்வநாயகத்தின் இந்திய வேதங்களில் இயேசுவைக்காணும் தாராளவாத இறையியல். இதெல்லாம் வர்க்க, இனப்போராட்டங்களுக்கு கிறிஸ்தவ வடிவம் கொடுக்கும் முயற்சிகள். இதைப்போன்றதொரு முயற்சியே தலித் இறையியலும், தலித் கிறிஸ்தவமும்.

வேதபூர்வமான கிறிஸ்தவத்தைப் புரிந்து கொள்ளாதவர்களே இத்தகைய கோஷங்களை சமுதாயத்தில் தொடர்ந்து எழுப்பி வந்துள்ளனர். ஆணாதிக்கம், பெண் அடிமைத்துவம், இனவேறுபாடு, வர்க்கப்பிரிவு, பொருளாதாரப் பிரிவு என்பதையெல்லாம் கடந்தது வேதபூர்வமான கிறிஸ்தவம். இயேசுவின் மக்கள் மத்தியில் பார்ப்பனன், தலித் என்ற வேறுபாட்டிற்கே இடமில்லை. உயர்சாதிக்காரனும், தலித்தும் ஒரே இலையில் உணவருந்த எங்கு இடமில்லையோ அங்கு ‍மெய்கிறிஸ்தவம் இருக்க முடியாது. ஏனெனில், வேத பூர்வமான கிறிஸ்தவம் இருக்குமிடத்தில் கிறிஸ்துவின் பிள்ளைகளாகப் பார்க்கும் சமுதாயமே கிறிஸ்துவின் சமுதாயம். திருச்சபைகளில் சாதிப்பாகுபாடு இல்லாமலிருப்பதே நல்லது. உயர்சாதிக்கொரு திருச்சபை, கீழ்ச்சாதிக்கொரு திருச்சபை என்று சபை அமைக்கும் பெரும் வேதவிரோத செயல்களுக்கு மெய்க்கிறிஸ்தவர்கள் என்றுமே இடம் கொடுக்கக் கூடாது.

தலித்துக்கள் கிறிஸ்துவை அறிந்து கொண்டால் மட்டுமே அவர்களுக்கு தன்மான உணர்ச்சியும், மெய்யான விடுதலையும் ஏற்படும். கிறிஸ்து கொடுக்கும் விடுதலை வெறும் சமுதாய, பொருளாதார, அரசியல் விடுதலை அல்ல. அதையெல்லாம்விடப் பெரிய ஆன்மீக விடுதலை. தலித்துக்களுக்குத் தேவை அவர்களைத் தன்மானத்துடன் வாழ உதவும், கிறிஸ்து மட்டுமே தரக்கூடிய இரட்சிப்பு. கிறிஸ்தவர்கள் இன்று தலித்துக்களுக்காக இறையியல் ஏற்படுத்த முயலாமலும், தலித் பெண்களுக்காக வக்காலத்து வாங்காமலும் வேதம் போதிக்கும் மெய்க்கிறிஸ்தவ விடுதலையை அவர்களுக்கு சுவிசேஷத்தின் மூலம் அறிவிக்க வேண்டும். கிறிஸ்துவை அறிந்து கொண்ட தலித்தை கிறிஸ்துவின் பிள்ளையாக வரவேற்று திருச்சபையில் சரிசமமான இடமளிக்க வேண்டும். கிறிஸ்துவை அறியாத சமுதாயம் காட்டும் வேறுபாடுகளனைத்தையும் கிறிஸ்தவ சமுதாயம் அவர்களுக்கு காட்ட மறுத்து எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். கிறிஸ்துவை அறிந்து கொண்ட தலித்துப் பெண்கள் கிறிஸ்தவ சமுதாயத்தில் ஆண்களுக்கு அடிமைகளாவதில்லை; அவர்கள் ஆண்களால் மதிக்கப்படுவார்கள். பெண்ணீயம் (Feminism) என்பதே ஒரு வர்க்கப் போராட்டம்தானே! அதற்கு கிறிஸ்தவத்தில் இடமில்லை. வேதபூர்வமான கிறிஸ்தவம் பெண்களுக்கு உரியமரியாதை கொடுப்பதால் அங்கு பெண்ணீயம் தேவை இல்லை. கிறிஸ்துவிடம் வந்தபிறகு தலித், தலித்தாக இருக்க முடியாது. அவன் கிறிஸ்துவின் குழந்தையாகிவிடுகிறான். இனி அவன் கிறிஸ்தவனைப்போல் சிந்திக்கப் பழக வேண்டும். இதுவே கிறிஸ்து காட்டும் தலித் விடுதலை! தலித் இறையியல்!



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

தமிழ்நாடு இறையியல் கல்லூரி முதல்வரை கண்டித்து கூட்டம்

மதுரை அரசரடி பகுதியிலுள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரி முதல்வர் ஞானவரத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும், மாணவ, மாணவியருக்கு எதிரான பாலியல்

மதுரை அரசரடி பகுதியிலுள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரி முதல்வர் ஞானவரத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும், மாணவ, மாணவியருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும், தமிழ்நாடு இறையியல் கல்லூரி பாதுகாப்புக் குழு சார்பில் கூட்டம் நடைபெற்றது.

  அமைப்பாளர் அ. கொண்டவெள்ளை தலைமை வகித்தார். தலித் விடுதலை இயக்கம் மாநில இணைப் பொதுச் செயலர் ச. கருப்பையா, கட்டட பஞ்சாயத்து சங்கம் அகில இந்திய செயலர் கீதா, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு தேசிய கூட்டுநர் கேபிரியலே, ஏக்தா தலைவர் காந்திமதி, ஆதித்தமிழர் பேரவை மாநில அமைப்புச் செயலர் விடுதலை வீரன், தமிழ்நாடு சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்றச் சங்கம் மாநிலத் தலைவர் கே. பட்டன், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநிலச் செயலர் லீலாவதி, பறையர் பேரவை மாவட்டச் செயலர் முருகன், சிபிஐஎம்எல் செயலர் ஆறுமுகம், தமிழ்நாடு வீட்டு வேலைப் பணியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கிளாரா ஆகியோர் பேசினர். 

  கூட்டத்தில், கல்லூரி முதல்வர் மீது போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட பாலியல் புகார் மீதான குற்ற அறிக்கையை விரைவில் தாக்கல் செய்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். மாணவியர், பணியாளர் மீது தொடரும் நெருக்கடி பாலியல் தொல்லைகளை தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு விசாரிக்க வேண்டும என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

சீர்திருந்த வேண்டிய தமிழ்ப் ‘பண்பாடு’

தமிழினத்தில் கிறிஸ்தவம் வேத அடிப்படையில் இயங்கி வருகிறதா? என்ற கேள்விக்கு இருதய சுத்தத்தோடு பதிலளிக்க வேண்டுமானால் இல்லை என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. எதற்கெடுத்தாலும் ‘நெகட்டிவ்வாக’ நம்மைப் பற்றிப் பேசுகிறாரே என்று சில உள்ளங்கள் இதை வாசித்து வருத்தப்படலாம். பொறுமையாக நான் சொல்லப் போவதைக் கேட்டுவிட்டு அதற்குப் பிறகு சிந்தித்து பதிலளியுங்கள்.

மிஷனரிகள் விட்ட தவறு

தமிழ் மக்கள் மத்தியில் பணிபுரிய வந்த அனேக மேலைத்தேச மிஷனரி கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள். பட்டரையும், ஜேம்மையும், பிரெட்டையும் வருடக்கணக்கில் கண்ணால் காணமுடியாமல் வாழ்ந்து நம்மக்கள் மத்தியில் நல்லூழியம் செய்திருக்கிறார்கள். வெய்யில் கொடுமையை சகித்துக் கொண்டு, தூசியையும், சூழலின் துர்நாற்றத்தையும், கொசுத்தொல்லையையும் பொறுத்துக்கொண்டு அரும்பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பையும், நல்ல நோக்கத்தையும் பாராட்டத்தான் வேண்டும். குடும் பத்தைப் பலிகொடுத்தும்கூட போகமாட்டேன் என்று பலர் உழைத்திருக்கிறார்கள். கடினமான நம்மொழியைக் கற்று அதில் பேசுவதென்றால் முடியுமா? ஆங்கிலத்தைப் படிக்க நம்மவர்கள் படுகிறபாடுதான் எத்தனை?

இத்தனை நன்மைகளை நமக்காக அவர்கள் செய்திருந்தும் அவர்கள் ஊழியத்தில் ஒரு குறை இருக்கத்தான் செய்தது. அது முழுவதும் அவர்களுடைய தவறல்ல. நம்மக்கள் இயேசுவின் அன்பை ருசிபார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு பணி செய்த அவர்கள் நமது பண்பாடு இயேசுவின் வார்த்தைக்கு ஏற்றபடி மாற்றமடைய பெரிதாக எதையும் செய்யவில்லை. ஒருசிலர் பாடுபட்டிருக்கிறார்கள்தான். ஆனால், அனேகர் அது கைவைக்கக் கூடாத, தீண்டத்தகாததொன்று என்று தொட மறுத்துவிட்டார்கள். சிலர் நமது பண்பாட்டை வேதமாகக் கூட ஏற்றுக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஏற்கனவே நான் சொன்னதுபோல் அது அவர்களுடைய முழுத்தவறல்ல. மேலைத்தேய பண்பாட்டில் வளர்ந்த அவர்களுக்கு குழப்பமான நம் பண்பாட்டைப் புரிந்துகொள்வது இலேசான காரியமல்ல. எத்தனை முயற்சி எடுத்தாலும் மேலைத்தேசத்தார் புரிந்துகொள்ளக் கஷ்டமானது நமது தமிழ்ப் பண்பாடு.

 

இங்கிலாந்தைச் சேர்ந்த, இப்போது அமெரிக்காவில் வாழும் என் நண்ப ரான போதகரொருவர் நம் தமிழ் சபைகளில் பெண்கள் ஒரு பக்கமும், ஆண்கள் ஒரு பக்கமும் உட்காருவதைப் பார்த்து துள்ளிக் குதித்தார். ‘இது அடுக்காது. கணவன், மனைவி, பிள்ளைகளைக் கூடப் பிரித்து வைக்கி றார்களே பாவிகள்’ என்று பரிதவித்தார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவருடைய எண்ணத்தில் எந்தவிதமான தவறுமில்லை. ஆணும், பெண்ணும் அருகருகே உட்காரக்கூடாது என்று வேதத்தில் எங்கே வாசிக்கிறோம்? இது நாமே உருவாக்கிக்கொண்டுள்ள பண்பாடு. ஏன் இதைச் செய்கிறோம்? பரிசுத்தம் கெட்டுவிடும் என்பதாலா? இல்லை. ஆண், பெண் உறவுபற்றி நம்மினத்தில் நாமே உருவாக்கிக் கொண்டுள்ள சில கருத்துக்களால் இந்தப் பிரிவினையை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். இப்படி சபைகளில் தள்ளி உட்காருவதோடு அது முடிந்துவிடுவதில்லை. கூடப்பிறந்து வளரும் சகோதரர் களும், சகோதரிகளும்கூட வீட்டில் பிரித்து வைக்கப்பட்டே வளர்ந்து வருகி றார்கள். உடன்பிறந்த சகோதரனும், சகோதரியும் கொஞ்ச நேரம் கூடிப்பேசிக் கொண்டிருந்தால்கூட அது தவறு என்று விதித்து இந்த ஆண், பெண் பேதத்தை சாதிவெறிபோல் நாம் பாதுகாத்து வருகிறோம். பெண்ணைப் பற்றியும், பெண்ணில் ஏற்படும் சரீரரீதியிலானதும், உளரீதியிலானதுமான மாற்றங்களை அறியாமல் வளர்ந்துவரும் வாலிபர்கள் நம்மினத்தில் அதிகம். ஏனெனில், இதுபற்றிப் பேசுவதோ, வாசிப்பதோ ஒழுக்கமற்ற செயல் என்ற உதவாக்கறை எண்ணத்தை நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். திருமண த்திற்குப் பிறகு கூட மனைவியோடு அவளுடைய சரீர மாற்றங்களில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிப் பேசக்கூச்சப்பட்டு டாக்டரிடம் அழைத்துப் போகும் கணவன்மார் எத்தனை பேர்? அந்தளவுக்கு போலிப்பண்பாடு நம்மைக் குருடர்களாக வைத்திருக்கிறது. அதேபோல் ஆணில் ஏற்படும் மாற்றங்கள்கூட அனேக தமிழ்ப் பெண்களுக்குத் தெரிவதில்லை. இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்ட பின்னும் இது நம்மத்தியில் சுகமாகத் தொடர்கிறது. யாரும் இது பற்றி எதுவும் கேட்பதில்லை. பெண்கள் கூட்டம் என்றால்கூட ஆண் போத கர் பேசமுடியாமல் ஒரு பெண்ணே பேச வேண்டிய அளவுக்கு இந்தப் பேதம் தொடர்ந்து நம்மை ஆளுகிறது. இரட்சிப்பைக் கொடுக்கின்ற ராஜாதி ராஜனாகிய இயேசுவால்கூட இன்று இதில் கைவைக்க முடியாமலிருக்கிறது.

இப்படியிருக்கின்ற நிலைமையில் மேலைத்தேசத்து மிஷனரி என்ன செய்து விட முடியும்? அவர்கள் எதுவும் புரியாமல் இது பண்பாட்டோடு சம்பந்தப்பட்ட ஒன்று என்ற எண்ணத்தில் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டார்கள். அவர்கள் மூலம் சுவிசேஷத்தைக் கேட்டு இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற கூட்டம் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டு தொடர்ந்து நமது பண்பாட்டிலும், வாழ்க்கைமுறையிலும் எந்த வொரு மாற்றமுமில்லாமல் வாழ்ந்து வருகிறோம். நன்மையோ, தீமையோ பண்பாட் டில் கைவைக்கக்கூடாது என்பதே நமது எண்ணமாக இருக்கிறது.

பண்பாடு நம்மைப் பாதிக்கிறது

இந்த அருமைப் பண்பாடு விசுவாசிகளைப் பாதிக்கிறதா? இல்லையா? என்பதே நான் விவாதிக்க விரும்புகிற விஷயம். நிச்சயம் பாதிக்கிறது. அவர்களுடைய விசுவாச வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, பிள்ளைகளின் வாழ்க்கை, சபை வாழ்க்கை எல்லாவற்றையுமே பாதிக்கிறது என்பது என்னுடைய தாழ்மையான முடிவு. எப்படி என்று கேட்கிறீர்களா? விளக்குகிறேன் பொறுமையாக வாசியுங்கள்.

முதலில், வேதம் சொல்லுவதைக் கவனியுங்கள். இயேசு நம் வாழ்க்கையில் குடிபுகுந்தபின் நமக்குள்ளும், நம்மோடு சம்பந்தமுடைய அனைத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்கிறது வேதம். அது கிறிஸ்துவே ஏற்படுத்துகிற மாற்றம். கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்டிருக்கும் நாம் புதிய சிந்தனைகளோடு, அதாவது வேத சிந்தனைகளோடு நம்மிலும், நம்மைச் சுற்றி நம்மோடு சம்பந்தப்பட்டிருக்கும் அனைத்திலும் வேதரீதியிலான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியவர்களாக இருக்கிறோம். பண்பாடு என்பது நாம் பிறந்த சூழ்நிலையில் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கிற ஒன்று. அதில் நல்லதும் இருக்கலாம், கெட்டதும் இருக்கலாம். விசுவாசி நல்லவற்றை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு, தீயவற்றை விட்டுவிட வேண்டியவனாக இருக்கிறான். இன்னொருவிதமாகக் கூறினால், வேதம் அனுமதிக்கின்றவற்றை தக்கவைத்துக் கொண்டு வேதம் அனுமதிக்காதவற்றைத் தூரஎறிந்துவிட வேண்டியவனாக இருக்கிறான். நாம் விசுவாசிகளாக மாறியபின் நல்லது, கெட்டதைத் தீர்மானிப்பது நமது சமூகமோ, நாம் இதுவரைப் பின்பற்றி வந்துள்ள பண்பாடோ அல்ல. வேதம் மட்டுமே. விசுவாசிகளான நாம் வேதபோதனைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள். வேதம் சொல்லுவதைச் செய்து, செய்யாதே என்று தடுப்பவற்றைத் தன் வாழ்க்கையில் விலக்கிவைத்து வாழ்கிறவனே மெய்விசுவாசி.

சிலர் பண்பாட்டிற்கும் வேதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை, வேதம் அந்த விஷயத்தில் எல்லாம் நாம் ஊர்நிலவரத்தைப் பொறுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லுகிறது என்பார்கள். பவுல் தீமோத்தேயு விருத்தசேதனம் செய்துகொள்ள அனுமதித்ததையும், “நான் எல்லோருக்கும் எல்லாமானேன்” என்று சொன்னதையும் காரணம் காட்டி விசுவாசியின் வாழ்க்கையில் பண்பாடுகள் தொடர்வதற்கு வேதம் அனுமதி யளிக்கிறது என்பார்கள். மேலே பார்த்த இரண்டும் வேத உதாரணங்களுக் கும் பண்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த சந்தர்ப்பங்கள் புறஜாதிப் பண்பாடு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் தொடர்வதற்கு அனுமதி யளிக்கும் பகுதிகள் அல்ல. அந்த இரண்டும் ஒருசில சந்தர்ப்பங்களில் வாழ்க்கையில் வேதபோதனைகளுக்கு விரோதமற்ற செயல்களைத் தொடர்வதை மட்டுமே நியாயப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு சபைக்குள் செருப்புப் போடலாமா? போடக்கூடாதா? என்பது போன்ற பாதகமற்ற செயல் களையே அவை கருத்தில் கொண்டுள்ளன. தெளிவான வேத போதனைகளுக்கு மாறான செயல்கள் நம் வாழ்க்கையில் தொடர்வதைக் கர்த்தர் ஒருபோதும் அனுமதித்ததில்லை.

மேலே நாம் பார்த்த இரண்டு வேத உதாரணங்களின் அடிப்படையில் பண்பாட்டிலுள்ள கேடான அம்சங்கள் நம் வாழ்க்கையில் தொடர்வதை ஆதரிப்பவர்கள் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். வேதம் தொடாத இடம் விசுவாசியின் வாழ்க்கையில் இல்லை என்பது இவர் களுக்குப் புரியவில்லை. கிறிஸ்து நம் ராஜாவாக இருந்தால் அவர் ஆளாத இடம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடாது. கணவன், மனைவி உறவில் கூட வேத அடிப்படையில் காரியங்கள் நடக்க வேண்டும் என்கிறது கர்த் தரின் வேதம். உதாரணத்திற்கு வீட்டுக்கு வரப்போகிறவளிடத்தில் வரதட்சனை வாங்குவது தமிழ் பண்பாடு. விசுவாசியான ஒருவன் தனக்கு மனைவியாக வரப்போகிறவளிடத்தில் வரதட்சனை வாங்குவது வேத விரோதமான செயல். அப்பா, அம்மாவைப் பகைத்துக்கொள்ள முடியாது, அவர்கள்தானே வாங்குகிறார்கள் என்று ஒருவன் சொல்லுவானாகில் அவன் ஒரு பெரிய விசுவாசத் துரோகி; இயேசுவின் முதுகில் குத்துகிற யூதாசு. இந்த விஷயத்தில் வேதம் அதிகாரம் செலுத்துகிறது. அது இந்தப் போலிப்பண்பாட்டிற்கு இடம் கொடுக்கவில்லை. எப்படிச் சொல்லுகிறேன் என்கிறீர்களா? எபேசியர் 5:22-33 வரையுள்ள வசனங்களில் கணவன் மனைவியைப் போஷிக்க வேண்டிய முறையைப்பற்றி பவுல் கூறுவதை வாசியுங்கள். இயேசு தன் சபையை நேசிப்பதுபோல் தன் மனைவியை ஒருவன் நேசிக்க வேண்டுமென்கிறார் பவுல். மனைவியிடம் திருமணத்திற்கு முன்பே கைநீட்டிப் பணம் வாங்குகிற ஒரு பாவி அவளை இயேசு சபையை நேசிப்பது போலவா நேசிக்கப்போகிறான்? முதலில் அவனுடைய விசுவா சத்திலேயே பெரிய கோளாறு இருக்கிறது.

திருமணத்தில் பெற்றோரின் பங்கு

பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தை எடுத்துக் கொள்வோம். இதுவும் தமிழர் மத்தியில் இருக்கும் வழக்கம். இதில் நன்மையும் இருக்கிறது; கேடும் இருக்கிறது. உதாரணத்திற்கு பெற்றோர் விசுவாசிகளாக இருந்தால், தங்களுடைய பிள்ளைகள் விசுவாசிகளாக இருந்தால் மட்டுமே விசுவாசிகளான துணைகளைத் தேடி வைக்க வேண்டும். விசுவாசியாக இல்லாத மகன் திருந்த வேண்டும் என்பதற்காக விசுவாசியான ஒரு பெண் ணைப் பார்த்து திருமணம் செய்து வைப்பது எத்தனை பெரிய கொடுமை. அல்லது விசுவாசியான மகனோ, மகளின் எண்ணங்களுக்கு எந்த இடமும் கொடுக்காது பணத்தோடும், சமூக, சாதித்தரத்தோடும் வருகிறார்கள் என்ப தற்காக அவிசுவாசிகளைப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைப் பது எத்தனை பெரிய பாவம்.

தன் பிள்ளைகள் யாரையும் விரும்பிவிடக்கூடாது என்பதற்காக சபையில் எந்த வாலிபப் பையன்களும், பெண்களும் யாரையும் விரும்புவதற்கு தடைபோட்டு ஒருவரையொருவர் உடன்பிறந்த சகோதரர்கள் போல் நடத்த வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கும் போதகப் பெருமக்கள் எத்தனைப் பெரிய பாவத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். சபையில் இருக்கும் பெற்றோர்கள் விசுவாசிகளான தங்களுடைய பிள்ளை களுக்கு அவிசுவாசியையும், விசுவாசமேயில்லாத பெயர் கிறிஸ்தவர்களையும் (Nominal Christians) திருமணத்திற்காக நிச்சயம் செய்யும்போது அது தெரிந்திருந்தும், தெரியாததுபோல் மௌனமாக இருந்துவிடும் போதகர் கள் எத்தனைப் பெரிய பாதகர்கள். இது தொடக்கூடாத விஷயம் என்று வாய்திறக்காமல் இருந்துவிடுகிற போதகர்களின் ஊழியத்தைக் கர்த்தர் ஆசீர்வதிக்கப் போவதில்லை. வாழ்ந்து வளம்பெற வேண்டிய இளம் உள் ளங்களின் வாழ்க்கை வீணாவதற்கு போதகர்கள் உடன்போவதை எந்த விதத்தில் வேதம் அனுமதிக்கிறது? தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் கிறிஸ்துவும், அவருடைய வார்த்தையும் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் வெளிப்படையாகப் புறக்கணிக்கப்படுகிறது. வேதசத்தியங்களின்படி திருத்தமடைய வேண்டிய பண்பாடு வேதத்தைப் புறக்கணிப்பதற்கு வழியேற்படுத்தித் தந்திருக்கும் தமிழ் கிறிஸ்தவம் மெய்க்கிறிஸ்தவம்தானா? என்று நான் கேட்பதில் என்ன தவறு.

கிறிஸ்தவ சபைகளில் திருமண வயதில் இருக்கும் வாலிபர்கள் விசுவாசி களான பெண்களை, அல்லது விசுவாசிகளான பெண்கள் விசுவாசிகளான வயதுக்கு வந்த வாலிபர்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவது எந்தவிதத்தில் தவறு? இது நம் பண்பாடில்லை என்று சொன்னால் நம் சமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் உணர்ச்சிகளே இல்லையா? கர்த்தர் படைத்துள்ள மனிதன் சகல உணர்ச்சிகளையும் கொண்டே படைக்கப்பட்டிருக்கிறான். உணர்ச்சிகள் தவறானவிதத்தில் அடக்கப்பட்டு, மறைத்து வைக் கப்படுகிறபோதுதான் மனிதர்கள் பாவச்செயலில் ஈடுபடுகிறார்கள். விசுவாசிகளுக்கு உணர்ச்சிகளே இல்லை என்று வேதத்தில் நாம் வாசிப்பதில்லையே. யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை திருமண வயதில் இருக்கிற வாலிபனோ, வாலிபப் பெண்ணோ முடிவு செய்ய வேண்டும். அவர்கள் உள்ளத்தில் ஏற்பட வேண்டிய உணர்வை பெற்றோர்களால் உருவாக்க முடி யாது. பெற்றோர்கள் உள்ளத்தில் ஏற்பட வேண்டிய உணர்வு அல்ல அது.

தான் படைத்த உலகத்தில் தகுந்த ஒரு துணையைத் தேடிக்கொள்ளுமாறு கர்த்தர் ஆதாமைப் பணித்தார். ஆதாமே ஒரு துணையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதே கர்த்தரின் விருப்பமாயிருந்தது. அப்படி ஒரு துணை யைத் தேடிக்கொள்ளக் கூடிய சகல தகுதிகளும் அவனுக்கிருந்தன. தனக்கேற்ற துணையை அவனால் உலகத்தில் தேடிக்கொள்ள இயலாதபோதே கர்த்தர் அவனுக்கு ஏவாளைத் தந்தார். கர்த்தர் ஏவாளைத் தந்தபோது அவளை அவனுக்குப் பிடித்திருந்தது. அவனுக்குப் பிடித்தமில்லாதவளை கர்த்தர் படைத்துத் தரவில்லை. ஆதாமின் மனமறிந்து அவனுக்கேற்ற துணையை கர்த்தர் அளித்தார். நல்ல தகப்பன் செய்கிற காரியத்தை கர்த்தர் செய்தார். ஆதாம் ஏவாளைக் குறித்துக் கூறிய வார்த்தைகள் அவன் அவளை எந்தளவுக்கு நேசித்தான் என்பதை விளக்குகின்றன. இது பெற்றோர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. தனக்குப் பிடித்தமில்லாதவளை மணந்து வாழ்நாள் முழுதும் ஒருவன் மனக்கஷ்டத்துக்குள்ளாவதைப் போன்ற வேதனை ஒன்றுமில்லை. இளம் உள்ளங்களின் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுக்காது தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக இருவரை இணைத்து வைக்கும் அநியாயச் செயல், திருமண பந்தம் பற்றி வேதம் போதிக்கும் அத்தனை சத்தியங்களுக்கும் முரணாக அமைகிறது. அது கர்த்தருக்கு விரோதமானது என்பது விசுவாசிகள் என்று அழைத்துக் கொள்ளுகிற உங்களுக்குப் புரியாமல் இருப்பது ஆச்சரியமே.

பெற்றோர்களே, போதகர்களே, விசுவாசிகளான உங்கள் வாலிபர்கள் மெய் விசுவாசிகளை மட்டும் திருமணம் செய்து கொள்ள ஆலோசனை சொல்லு ங்கள், அவர்களுக்குத் துணையாக இருங்கள். அவர்கள் காதலிக்க வேண்டிய பெண்ணையோ, ஆணையோ நீங்கள் தீர்மானிக்கப்போவது சிருஷ்டியில் மனித சரீரம், உணர்வுகள் சார்ந்த அனைத்திற்கும் எதிராக நடப்பதாகும். திருமணத்திற்குப் பிறகு காதலிக்கப் பழகலாமே என்று சிலர் சொல்லுவது காதில் விழுகிறது. என் கண் பார்த்து, மனதுக்குப் பிடிக்காத ஒருத்தியை என்னால் என்றாவது விரும்ப முடியுமா? இனிப்புக் கடைக்குப் போனால் கூட எனக்குப் பிடித்ததைத்தானே வாங்கிச் சுவைக்கிறேன். கடைக்காரன் சொல்லுவதைக் கேட்டு அவன் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வருவதில்லையே. சாதாரண இனிப்பு விஷயத்திலேயே நம் நாக்கு விரும்புவதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறபோது வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழவேண்டியவள் நமக்குப் பிடிக்காதவளாய் இருந்துவிடக்கூடாது.

விசுவாசிகளான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் விசுவாசிகளை மட்டும் விரும்பவும், மணக்கவும் ஆலோசனை சொல்ல வேண்டும் என்று சொன்ன உடனேயே எனக்கு இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. நமது பண்பாட்டில் இந்த விஷயத்தை நாம் பிள்ளைகளோடு ஒருநாளும் பேசுவது இல்லையே. பிள்ளைகளுக்கு உணர்ச்சிகளே இல்லாதது போலவும், வயதுக்கு வந்தபின் எல்லாம் தானாய்த் தெரிந்துவிடும் என்ற கனவுலகில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண், பெண் பற்றிய சரீர வேறுபாடுகளை யும், உணர்ச்சிகளையும், திருமணம், மணவாழ்க்கை பற்றி தம் பிள்ளைகளோடு அவர்கள் வளர்ச்சி கருதி பேசி உதவுகிற பெற்றோர்களைத் தமிழினத்தில் பார்க்க முடிகிறதா? விசுவாசத்திற்கு எதிரியான வரட்டுப் பண்பாடு பலரின் கண்களையும், இருதயத்தையும் குருடாக்கி வைத்திருக் கிறது. பண்பாடு என்ற பெயரில் பிள்ளைகளோடு நட்போடு கூடிய உறவை வளர்த்துக் கொள்ளாது அவர்கள் வாழ்க்கையிலேயே அதிமுக்கியமான நிகழ்ச்சியான மணவாழ்க்கையை வெறும் சந்தை வியாபாரமாக நடத்திக் கொண்டிருக்கிற பெற்றோர்கள் தாங்கள் விசுவாசிகள்தானா என்று ஆராய் ந்து பார்ப்பது நல்லது. பண்பாடு நம்மை எந்தளவுக்கு பாதித்து திருமண வயதுக்கு வந்துள்ள பிள்ளைகளுக்கு இல்லற விஷயத்தில் ஆலோசனைகள் சொல்லக்கூட முடியாதபடி நம்மைத் தடுத்து வைத்திருக்கிறது என்பது புரிகிறதா? விசுவாசிகள் இந்த மோசமான பண்பாட்டிற்கு முடிவு கட்டாத வரையில் நம்மினத்தில் குடும்பங்கள் விசுவாசமாக வாழ்க்கை நடத்துவது முடியாது. திருமணத்துக்கும் விசுவாச வாழ்க்கைக்கும் பெருந்தொடர்பு இருக்கிறது. வேத அடிப்படையில் அமையாத திருமணங்களின் மூலம் குடும்ப வாழ்க்கை வேதபூர்வமாக அமைவது சாத்தியமில்லை. சாத்திய மாகும் என்று நினைப்பது பெருங்கனவு.

குடும்ப வாழ்க்கையில் பண்பாட்டுக் கோளாறு

நமது பண்பாட்டால் சீரழிந்திருப்பது திருமணம் மட்டுமல்ல, குடும்ப வாழ்க்கையும்தான். “யாரோ பார்த்து வைத்தவளைக் கட்டி திருமணம் முடிந்த பிறகு இருவரும் உடலுறவும் கொண்டுவிட்டோம். ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் அன்பினால்தான் அப்படிச் செய்தோமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக் கிறது” என்று என்னிடம் சொன்னார் ஒரு விசுவாசி. “ஒரு பெண்ணைக் காட்டி இவள் உனக்குப் பொருத்தம், மணந்துகொள் என்று சொன்னதால் கட்டினேன் தாலி. அதற்கு அடுத்தபடியாக ஒரு கடமையாய்தான் ஹனிமூன் நடந்ததே தவிர அன்பால் இணைக்கப்பட்டதால் அல்ல” என்று கூறிய விசுவாசி “காலச்சக்கரம் மட்டும் மாறி அமையுமானால் அன்போடு திருமணம் செய்து அன்போடு வாழ்க்கை நடத்துவதைத்தான் விரும்புகிறேன்” என்றார். இதற்காக அவர் தன் மனைவியை இப்போது நேசிக்க வில்லை என்று அர்த்தமில்லை. சரியாக நடந்திருக்க வேண்டியது அப்படி நடக்கவில்லையே என்ற ஆதங்கம்தான் அவருக்கு.

இன்று எத்தனை விசுவாசிகள் வயது வந்தபின் காலாகாலத்தில் நடக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சியாக மட்டும் கருதி பெற்றோர் காட்டும் ஒருத்தி கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு கடமைக்காக அவளோடு வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள்? உடலுறவுக்காகவும், குடும்பப் பெயர் நிலைக்க பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவுமே மனைவி இருக்கிறாள் என்ற எண்ணம் பலர் மத்தியில் ஊறிப்போயிருக்கிறது. போதக ஊழியத்தில் ஈடுபடுவதற்கு மனைவி தேவை என்பதற்காக நாலு இடங்களில் தேடி யாரையாவது மணந்துகொள்ளும் அநியாயம் நடப்பதும் தமிழினத்தில் மட்டும்தான். மனங்கள் பொருந்திவராமல், வேதம் எதிர்பார்க்கும் உண்மையான அன்பு கணவன் மனைவிக்கு இடையில் இல்லாமல் சமூகக் கட்டுப்பாட்டிற்கு மட்டும் அடங்கி ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதற்குப் பெயர் திருமண வாழ்க்கையல்ல; சட்டரீதியான விபச்சாரம். நம்முடைய வரட்டுப் பண்பாடே இதற்கெல்லாம் வழிவகுத்திருக்கிறது.

கர்த்தரை அறியாத மக்கள் இப்படி வாழ்வது வழக்கம். கர்த்தரை விசுவா சிக்கிறவர்கள் திருமணத்தையும், குடும்ப வாழ்க்கையையும் அலட்சியப் படுத்தி வெறும் உடலுறவுக்காக அதில் ஈடுபடுவதைக் கர்த்தர் விரும்பவில்லை. பெற்றோர் பார்த்துவைத்து ஏனோதானோவென்று திருமணம் முடி த்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டபின் வேறு பெண்கள் மேல் அன்பு காட்ட ஆரம்பித்த பலர் விசுவாசிகள் மத்தியில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் பாவம் என்று மட்டும் சொல்லி உதறிவிட முடியாது. திருமண வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் வயிற்றுப் பசிக்கு சாப்பாடு போடுவது போல் அமைந்து விடுவதால்தான் பலர் இந்தக் கதிக்கு ஆளாகிறார்கள். பெற்றோர்கள் திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளின் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுத்து அவர்கள் மனதுக்குப் பிடித்தமாதிரியான வரன்களைத் தேடி, அவர்கள் சந்தித்துப் பேசி ஒருவர் மனதை இன்னொருவர் புரிந்து கொள்ள வகைசெய்து கொடுத்தால் மிருகங்கள் வாழ்வதுபோல் விசுவாசிகள் உடலுறவுக்காகவும், பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுவதற்காகவும் மட்டும் குடும்ப வாழ்க்கை நடத்தும் வழக்கத்திற்கு ஒரு முடிவு கட்டிவிடலாமே.

திருமண விஷயத்தில் சபைப் போதகர்களின் பங்கு

திருமணத்தையும், குடும்ப வாழ்க்கையையும் பற்றி வேதபூர்வமாக சபைகளில் போதிப்பது போதகர்களின் கடமை. திருமணம் செய்து கொள்ளப்போகிறவர்களுக்கு இல்லற வாழ்க்கைபற்றி போதகர்கள் வேதபூர்வமாக சிந்தித்து தகுந்த ஆலோசனை அளித்து உதவ வேண்டியது அவசியம். இதை எழுதிக் கொண்டிருக்கிறபோது, சபைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மூப்பர் கள்/போதகர்கள் இருப்பதன் அவசியம் நினைவுக்கு வருகிறது. மிகவும் ‘சென்சிடிவான’ நம் பண்பாட்டில் ஒரே ஒரு போதகன் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்களை தனிமையில் சந்தித்து எப்படி ஆலோசனை தர முடியும்? ஒன்றுக்கு மேற்பட்ட மூப்பர்கள் இருந்தால் ஆலோசனைகள் சொல்ல அது வசதியாக இருப்பதோடு, போதகர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். தனிமையில் பெண்களைப் போதகர்கள் ஒரு போதும் சந்திப் பதை வழக்கமாக வைத்திருக்கக் கூடாது.

திருமண காரியமெல்லாம் சபையில் பேசுகிற விஷயமல்ல என்றும், அவை பக்திக்குரிய விஷயங்களல்ல என்றும் பத்தாம்பசலித்தனமாய் சிந்தித்து வாழ்கிற போதகர்கள்தான் இன்று நம்மினத்தில் அதிகமாக இருக்கிறார்கள். கொரிந்தியருக்கு பவுல் எழுதிய நிருபத்தையும், எபேசியருக்கு எழுதிய நிருபத்தையும், பேதுருவின் நிருபத்தையும் போதகர்கள் முறையாக வாசித்துப் பார்த்தால் போதகர்களுக்கு இந்த விஷயத்தில் பெரும் பங்கிருப்பது தெரியவரும். நம்மினத்தின் போலிப் பண்பாட்டிற்கேற்ப வேதத்தை தலைகீழாக மாற்றி சபை நடத்தி வருவதால்தான் போதக ஊழியம் இன்று தமிழினத்தில் சீரழிந்து காணப்படுகிறது. அனேக போதகர்களின் குடும்ப வாழ்க்கையும் வேதப்படி அமைந்ததாயில்லை. ஆத்துமாக்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்துவதைத் தவிர வேறு எதையும் சொல்லிக்கொடுக்காமல், அவர்கள் இருட்டில் இந்துக்கள் வாழ்வதுபோல் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு தமிழினத்தின் சபைப் போதகர்களுக்குப் பெரும் பங்கிருக்கின்றது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

‘திருமண வாழ்க்கைபற்றி போதகரிடம் கேட்டால் என் மானமே போய் விடும், அவர் என்னைத் தப்பாக நினைத்துவிடுவார்’ என்று இன்று போதகர் கள் பக்கமே தலையைக் காட்டாமல் இருந்துவிடுகிறார்கள் வாலிபப் பிள்ளைகள். பெற்றோரிடம் கேட்க முடியாத நிலையிலும், போதகர்கள் பக்கம் போக முடியாத நிலையிலும் இல்லற வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டு இருட்டில் வாழ்ந்து வருகிறார்கள் அனேக இளைஞர்கள். இல்லற வாழ்க்கையின் இரகசியத்தை கர்த்தர் அவர்களுக்கு வானத்தில் இருந்து திருமண நாளிரவில் திடீ ரென்று கொடுக்கப்போவதாக பெற்றோர்களும், போதகர்களும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. குடும்பங்களில் குளருபடி ஏற்பட்டு சபைகள் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டுமானால் குடும்ப வாழ்க்கை பற்றி கர்த்தர் தந்துள்ள போதனைகளின்படி சபை மக்கள் சிந்தித்து ஆராய்ந்து வாழ்வதற்கு துணைபுரிவது போதகர்களின் அடிப்படை கடமை.

இன்னும் எத்தனையோ விடயங்களில் பண்பாடென்ற பெயரில் நாம் பாவத் திற்கு துணை போய்க்கொண்டிருக்கிறோம். இந்துமதக் கலாச்சாரம் இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கும் தமிழ்ப்பண்பாட்டில் இருக்கும் கள்ளிச்செடிகளும், களைகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். விசுவாசி என்று தன்னை அழைத்துக் கொள்ளுகிற எவரும் பிசாசின் கேவலமான வழிமுறைகளுக்கு பண்பாடு என்ற பெயரில் தங்களுடைய வாழ்க்கையில் இடம் கொடுக்கக்கூடாது. பண்பாடு என்ற இருட்டில் வாழ்ந்துகொண்டு, சமூகக் கட்டுப்பாடு என்ற போர்வையில் ஒலிந்துகொண்டு சீரழிந்து வருகிறார்கள் தமிழ் கிறிஸ்தவர்கள். நமது பண்பாட்டில் வேத அடிப்படையில் சீர்திருத்தத்தை நாம் கொண்டுவராதவரையில் நமது விசுவாசம் உயிரற்ற பிணமாகத் தான் இருக்கும். இயேசுவை விசுவாசிக்கிறோம் என்று சொல்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் நம் வாழ்க்கையில் அந்த விசுவாசத்தின்படி அனைத்தும் அமைவதையே கர்த்தர் விரும்புகிறார்; எதிர்பார்க்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 

 

 

தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு யூதர்கள், பாலஸ்தீனர்களின் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உண்டு. யூதர்கள் இஸ்ரேலை உருவாக்கியது பற்றிய ஒப்பீடு தமிழ் பேசும் மக்களுக்கு அறிமுகமாகியுள்ளது போன்ற ஒப்பீட்டு முயற்சியல்ல இப்பிரதி. வெறுமனே ஒப்பீடுகளில் மிதப்பதால் மனித இனம் விடுதலையை பெறவும் முடியாது. 1948 வரையில் இஸ்ரேல் என்பது கனவாக இருந்தது. அதற்காக யூதர்கள் உலகமெங்குமிருந்து ஒன்றுதிரண்டு உழைத்தார்கள். இன்று அமெரிக்க அரசியலில் கருத்துக்களை உருவாக்கி, கொள்கை முடிவுகளை எடுக்க வைக்கிற பெரும்பலம் கொண்டவர்களாக யூதர்கள் இருக்கிறார்கள். 

பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய சர்வதேச மனித உரிமை குற்றங்களை ஐ.நா.மனித உரிமை சபை நியமித்த ‘கோல்டு ஸ்டோன் விசாரணை அறிக்கை’ இவ்வருடத்தில் சுட்டிக்காட்டியது. உடனடியாக இஸ்ரேலை காப்பாற்ற தனது அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா. அரபு நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சிறிய நாடான இஸ்ரேலின் பாதுகாப்பு தந்திர பொறிமுறை அதன் ஆயுதங்களைக் காட்டிலும் அமெரிக்காவின் ஆதரவில் தங்கியுள்ளது. உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்களால் இவ்வளவு பலத்தையும், ஆதரவையும் எப்படி திரட்ட முடிந்தது? இந்த கேள்விக்கான விடை 18 நூற்றாண்டுகள் கழித்து யூதர்கள் இஸ்ரேலை நிறுவ முன்னெடுத்த திட்டங்களில், நகர்வுகளில் அடங்கியுள்ளது. கி.பி 70ஆம் ஆண்டில் எருசலேம் நகரம் ரோமை பேரரசின் முற்றுகைக்குள் சென்றது. எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து யூதர்கள் உலகமெங்கும் சிதறினார்கள். ஆனால் அவர்கள் தங்களது கலாச்சாரம், பண்பாட்டை கைவிடவில்லை.  யூத சமூகத்தில் நாடு திரும்பும் வேட்கையும், கனவும் தலைமுறைகளை கடந்து தொடர்ந்தது.

சியோனிஸ்டு இயக்கத்தின் துவக்கம்

 

zionists_370.jpg

1920-ல் சியோனிஸ்ட்கள் இயக்கம்

இஸ்ரேலுக்கான ஆதரவைத் திரட்டும் வேலை 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கியது. யூதர்களுக்கான நாட்டை உருவாக்கும் கனவை வளர்த்தெடுத்து பல நாடுகளின் ஆதரவை திரட்டும் வேலையில் ஈடுபட யூதர்கள் 1897ல் சியோனிஸ்ட் இயக்கத்தை (Zionist movement) உருவாக்கினார்கள். யூதர்களின் நாட்டை உருவாக்க சியோனிஸ்ட் அமைப்பும், சியோனிஸ்டு யூதர்களும் ஈடுபட்டனர். ‘சியோனிஸ்ட்’ (Zionist) என்னும் சொற்பதம் எருசலேம் (Jerusalem) நகரின் அருகிலுள்ள சியோன் மலையை (Zion) நினைவுபடுத்துகிறது. சியோன் மலை இஸ்ரேலிய மக்களையும், எருசலேமையும் குறிப்பிடும் குறியீடாக யூதர்களின் மத நூல்களிலும், கிறித்தவர்களின் மத நூல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. யூதர்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து இஸ்ரேலை நிறுவ இக்கலாச்சார குறியீடு பெயரில் ‘சியோனிஸ்ட் இயக்கம்’ உருவாக்கப்பட்டது. உலகமெங்கும் சிதறியிருந்த யூதர்களின் மனங்களில் தங்களுக்கான நாட்டை உருவாக்க, அதற்காக உழைக்க இக்கலாச்சார குறியீடு தூண்டியது. அதற்காக உழைக்க சியோனிஸ்டு இயக்கம் உலக அளவில் யூதர்களை திரட்டியது.

 

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிழக்கு ஐரோப்பாவில் குறிப்பாக போலந்து, ரசியா, ரொமானியாவில் வாழ்ந்த யூதர்கள் இணைந்து ‘சியோனுக்குப் போகும்’ நோக்கத்துடன் ‘சியோன் விரும்பிகள்’ (Lovers of Zion) சங்கங்களை உருவாக்கத் துவங்கினார்கள். அவர்கள் பெரும்பாலும் வர்த்தகத்தில் ஈடுபட்டதால் பணக்காரர்களாக இருந்தனர். டெல் அவிவ் அருகிலுள்ள யாஃபா நகரில் விவசாய பாடசாலையை 1870ல் யூதர்கள் உருவாக்கினர். யாஃபா நகரில் 10 ஹெக்டேர் நிலத்தை சர் மோசஸ் மாண்ட்பியோர் என்கிற யூதர் வாங்கினார். ரசியாவில் இரண்டாம் சார் மன்னன் அலெக்சாந்தரின் கொலையைத் தொடர்ந்து 1881-1882 வரையில் யூதர்களுக்கு எதிராக கலவரங்கள் நடந்தன. அதற்குப் பிறகு சியோனுக்கு திரும்பும் நோக்கம் யூதர்களிடம் மேலும் வலுவடைந்தது. 1882ல் டாக்டர்.யூதா லெய்ப் பென்ஸ்கர் எழுதிய கட்டுரையில் யூதர்களுக்கான நாடு, சுய விடுதலை ஆகிய கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு பாலஸ்தீனத்திற்கு யூதர்கள் செல்வது ஆரம்பமானது. ‘சிரியா மற்றும் பாலஸ்தீன யூத விவசாயிகள் மற்றும் கலைஞர்களுக்கான ஆதரவு அமைப்பு’ ரசியாவில் அரசின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டது.

ரசியாவில் சட்டரீதியாக செயல்படும் அனுமதி கிடைத்தவுடன் ரசியாவில் வாழ்ந்த யூதர்களிடமிருந்து பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான திட்டங்களை உருவாக்க பண வசூலை துவக்கினார்கள். பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியிருப்புகளை உருவாக்கவும், விவசாயத்திற்கும் இவ்வமைப்புகள் திட்டங்களை செயல்படுத்தின. 1882ல் பாலஸ்தீனத்தில் 2200 ஹெக்டேர் நிலத்தை சில யூதர்கள் வாங்கினார்கள். ரசிய கலவரத்துக்குப் பிறகு ரசியாவிலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் குடிபுகுவது பெருகியது. அவர்களுக்கு சியோனிஸ்ட் அமைப்பு மற்றும் சியோன் விரும்பிகள் சங்கங்கள் பாலஸ்தீனத்தில் குடிபுக உதவிகளை செய்தன. துவக்கத்தில் சியோனிஸ்டுகளிற்கு யூதர்கள் அனைவரிடமும் ஆதரவு இருக்கவில்லை. உலகமெங்கும் சுமார் ஒன்றரை கோடி யூதர்கள் இருந்த 1921ம் ஆண்டில் சியோனிஸ்டு இயக்கத்தில் 7 லட்சத்து 70 ஆயிரம் யூதர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். பெரும்பான்மையான யூத மக்கள் யூதர்களுக்கு தனிநாடு வேண்டுமென்ற சியோனிஸ்டுகளின் கொள்கையை ஆதரிக்கவில்லை. யூதர்களுக்கான நாடு கொள்கையை கைவிடாமல்; சியோனிஸ்டுகள் பலமான திட்டங்களை முன்னெடுத்தனர். யூத மக்களிடம் அக்கொள்கையை பரப்பி அவர்களை இணைப்பதிலும், உலக நாடுகளின் ஆதரவை திரட்டவும் பல்வேறு வழிகளையும், திட்டங்களையும் முன்னெடுத்தனர்.

யூத தேசிய நிதியும், பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றமும்

சியோனிஸ்ட் இயக்கத்தின் 5வது உலக மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டில் பாசல் நகரில் 1901ல் நடைபெற்றது. அம்மாநாட்டில் யூதர்களுக்கான நாட்டிற்கு நிலங்களை வாங்குவதற்காக பொதுநிதியை உருவாக்க நீண்ட விவாதம் நடைபெற்றது. அதன் முடிவில் ‘யூத தேசிய நிதி’ உருவாக்கப்பட்டது. அந்த நிதி யூத மக்கள் அனைவருக்குமான பொது நிதியாக முடிவானது. 2 லட்சம் பவுண்ட்களுடன் நிதி துவங்கியது. 10, 20 என்று ஒவ்வொருவரும் வழங்கிய நிதி யூதர்களின் கனவை நோக்கிய திட்டங்களுக்கு செலவிடப்பட்டது. யூதர்கள் தங்களது தேசிய நிதி பங்களிப்பிற்கு கொடுத்த பெயர் செக்கெல். பின்னர் இஸ்ரேலின் நாணயத்திற்கு செக்கெல் என்று பெயர் சூட்டினார்கள். யூத தேசிய நிதியை நிர்வகிக்கும் தலைமையகம் எருசலேமாக உருவானது. 1902 முதல் சியோனிஸ்ட் ஆவணங்களுக்கான சிறப்பு முத்திரைகள் வெளிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதிலிருந்து கிடைத்த பணமும் யூத தேசிய நிதியில் சேர்ந்தது. யூத தேசிய நிதிக்கு கிடைத்த நன்கொடையை வைத்து 50 ஏக்கர் நிலத்தை ஹதேராவில் முதல் முறையாக வாங்கினார்கள். தொடர்ந்து யூத தேசிய நிதி (Jewish National Fund) மூலம் பல பகுதிகளில் பெருமளவு நிலங்களை வாங்கினார்கள். நிலங்களோடு கட்டமைப்புகளையும் உருவாக்க ஆரம்பித்தனர். வாங்கிய நிலத்தில் ஆலீவ் மரத்தோட்டங்கள், காடுகள், பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்களை உருவாக்கினார்கள். யூத தேசிய நிதி உருவாக்கப்பட்ட முதல் பத்து ஆண்டுகளில் சுமார் 85 ஆயிரம் யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியிருந்தனர். 1921ல் யூத தேசிய நிதியத்திடம் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் சொந்தமாகியிருந்தது. அப்போது 76 நாடுகளில் வாழ்ந்த யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை கோடி.

ஒவ்வொருவருக்கும் யூதர்களின் நாடு பற்றிய விழிப்புணர்வை உருவாக்க திட்டத்தை உருவாக்கினார்கள். யூத தேசிய நிதியத்திற்காக யூதர்களுக்கு சொந்தமான வீடுகள், மத நிலையங்கள், அலுவலகங்கள், பாடசாலைகள், வியாபார நிலையங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் நீல நிற உண்டியல் வைக்கப்பட்டது. பாலினம், வயது ஆகிய எந்த வேறுபாடுமில்லாமல் யூதர்களின் நிலத்தை உருவாக்க அனைவரும் ஈடுபடுத்தப்பட்டனர். இளவயதினர்களுக்கு சியோனிஸ்டு இயக்கம் தனியாக திட்டங்களை நடத்தியது. ஜனவரி 1926ல் யூத தேசிய நிதி அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்பட ஆரம்பித்தது. வனம், நீர், சுற்றுலா, பொழுதுபோக்கு, கல்வி, ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்கள்.

1927ற்குள் 50 ஆயிரம் எக்கர் நிலத்தில் 50 யூத குடியிருப்புகள் உருவாக்கப்பட்டிருந்தது. 1935ற்குள் 1750 ஏக்கர் நிலத்தில் சுமார் 17 லட்சம் மரங்களை நட்டிருக்கிறார்கள். நீர் ஆதாரங்களை உருவாக்கினார்கள். 1935ல் யூதர்களிடம் 89,500 ஏக்கர் நிலமிருந்தது. யூதர்களின் குடியேற்றத்திற்கு பிரிட்டன் அதிகாரம் தடைகளை விதித்திருந்தது. 1904ல் பாலஸ்தீனத்தில் சுமார் 35 ஆயிரம் யூதர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் பாலஸ்தீனத்திலிருந்து பல நாடுகளுக்கும் திரும்பப் போயிருந்தனர். ஆனால் யூத தேசிய நிதியை ஏற்படுத்தி தொடர்ந்து நிலங்களை வாங்கி குடியேற்றங்களை உருவாக்கியதால் 1939ற்குள் 4 லட்சத்து 50 ஆயிரம் யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினர். அவர்களில் சுமார் 10 விழுக்காடு யூதர்கள் யூத தேசிய நிதிக்கு சொந்தமான நிலத்தில் இருந்தனர். பிரிட்டன் யூதர்கள் புதிய குடியிருப்புகளை உருவாக்க தடை விதித்தது. ஆனாலும் பிரிட்டனின் தடையை மீறி யூதர்கள் பெருமளவில் நிலங்களை வாங்கினார்கள். அவற்றில் குடியிருப்புகள், கட்டுமானங்களை கட்டத் திட்டமிட்டார்கள். இரவில் ஒரேயடியாக 10 நகரங்களை யூத தேசிய நிதிக்கு சொந்தமான நிலத்தில் கட்டி எழுப்பியிருந்தனர். டெல் அவிவ் நகரும் யூத தேசிய நிதியிலிருந்து உருவாக்கப்பட்டது தான். யூதர்களுக்கான நாட்டை உருவாக்கும் இந்த வேகமும், வேட்கையும் தான் இஸ்ரேலை உருவாக்கியது. 1939ல் இரண்டாம் உலகப் போர் துவங்கியது. அப்போதும் யூத தேசிய நிதிக்கான நன்கொடைகள் அதிகமாக குவிந்தது.

இட்லரின் இன அழிப்பு கொடுமைகளுக்குப் பிறகு யூதர்களின் பெரும்பகுதியினர் அமெரிக்கா மற்றும் பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்ந்தனர். பாலஸ்தீனத்தில் நுழைய சட்டப்புறம்பான வழிகளையும் பயன்படுத்தினார்கள். 1939ல் ஐரோப்பாவிலிருந்து யூதர்களைக் காப்பாற்றி கடல் வழியாக கொண்டு சென்று பாலஸ்தீனத்திற்குள் குடியேற்றினார்கள். கடல் பயணங்கள் சாத்தியமில்லாத போது அரபு நாடுகளில் தங்கியிருந்த யூதர்களை நிலம் வழியாக குடியேற்றினார்கள். இவை அனைத்தும் சட்டத்துக்கு எதிராக செய்யப்பட்ட குடிபெயர்வுகள். 1945 துவங்கி மூன்று ஆண்டுகளில் 70 ஆயிரம் யூதர்களை வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து 65 முறை கடல் பயணங்கள் மூலம் பாலஸ்தீனத்திற்குள் குடியேற்றினார்கள். இதற்காக கப்பலை வாங்கவும், மாலுமிகளை நியமிக்கவும், சைப்பிரசில் இடைத்தங்கல் முகாம்களோடு தொடர்பு கொள்ளவும் தனியாக குழுக்களும், அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஆனால் இவை அனைத்திலும் சியோனிஸ்ட் இயக்கத்தின் பங்கிருந்தது.

கூட்டுறவு விவசாய பண்ணைகள்

கலிலேயா கடற்கரை பகுதியில் 1909ல் முதல் விவசாய கூட்டுறவு பண்ணை உருவாக்கப்பட்டது. அங்கே வேலை செய்த யூதர்களில் பலர் கடுமையான உழைப்பிற்கு ஈடுகொடுக்க முடியாமல் யோர்தான் நாட்டின் நகரங்களுக்கும், புலம்பெயர் தேசங்களுக்கும் சென்றனர். 1914ல் அந்த கூட்டுப்பண்ணையில் 50 யூதர்கள் மட்டுமே வேலை செய்தனர். ஒரேயடியாக நாட்டை உருவாக்ககுவதற்கு பதிலாக சிறிய சிறிய திட்டங்களாக உருவாக்கி, அவற்றில் யூதர்கள் அனைவரையும் ஈடுபட வைத்து, யூத ஒற்றுமையை உருவாக்கினார்கள். அதன் பிறகு அனைத்து யூதர்களையும் ஒருங்கிணைப்பது அவர்களுக்கு எளிதாக இருந்தது. தனித்தனியாக நிலங்களை வாங்கும் போது தனிநபர்களால் விவசாயத்திற்கு தேவையான முதலீடு, உழைப்பு மற்றும் குடியிருப்புகளின் பாதுகாப்பு சிக்கல்கள் உருவாகும். ஆனால் கூட்டுறவு விவசாய முறையில் உழைப்பு, உற்பத்தி வலுவடைவது ஒருபுறம். கூட்டுறவு விவசாய முறையில் யூதர்களை ஒற்றுமையாக இணைத்து கூட்டாக செயல்படும் வாய்ப்பு இருந்தது. இந்த கூட்டுறவு முறையினால் அயல்நாடுகளிலிருந்து வந்து நிலங்களில் குடியேறுகிற யூதர்களின் வருமானம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நோக்கமாக இருந்தது. அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். துவக்கத்தில் கூட்டுறவு பண்ணைகளில் சோசலிச சிந்தனைத் தாக்கம் இருந்தது. இஸ்ரேல் நாடாக உருவாகிய பிறகு கூட்டுறவு விவசாயம் குறைந்து தனியார்மயம் வளர்க்கப்பட்டது.

யூதர்களுக்கு ஆதரவான பிரிட்டனின் பால்பஃர் பிரகடனம்

 

zionists_360.jpg

சியோனிஸ்ட்களின் குடியேற்றம்

1917ல் அறிவியலாளரும், சியோனிஸ்டு இயக்கத்தின் தலைவர் செய்ம் வெய்ஸ்மன் பாலஸ்தீனத்தில் யூதர்களின் நாட்டை நிறுவ ஆதரவை பிரகடனம் செய்ய பிரிட்டன் அரசை வற்புறுத்தி அதில் வெற்றியும் பெற்றிருந்தார். லண்டனில் வசித்த லார்டு ரோத்ஸ்சைல்டு வீட்டிற்கு பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆர்தர் பால்பஃர் நவம்பர் 2, 1917ல் கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதம் தான் பால்பஃர் பிரகடனம். யூதர்களின் நாடு அதுவரையில் சியோனிஸ்ட் இயக்கம் மற்றும் யூதர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் பால்பஃர் பிரகடனம் மூலம் பிரிட்டன் யூதர்களுக்கான நாட்டிற்கான முதல் அங்கீகாரம். உலகின் வல்லரசு நாடான பிரிட்டனின் ஆதரவைப் பெற யூதர்கள் தந்திரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். லார்டு ரோத்ஸ்சைல்டு சியோனிஸ்ட், பெரும் பணக்காரர், வங்கி உரிமையாளர், உயிரியலாளர், அரசியல்வாதி ஆகிய பலமுகங்களைக் கொண்டவர். பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராக 11 வருடங்கள் பணியாற்றியிருந்தார். லார்டு ரோத்ஸ்சைல்டு யூதர்களுக்கான நாட்டை உருவாக்க தனது அரசியல், சமூக செல்வாக்கைப் பயன்படுத்தினார். முதல் உலக யுத்தம் நடந்த அவ்வேளை மத்திய கிழக்கில் பிரிட்டன் போரில் தொய்வு நிலையில் இருந்தது. பிரிட்டனுக்குத் தேவையான ஆதரவை திரட்டும் நிலையில் சியோனிஸ்ட் இயக்கம் அமெரிக்காவில் பலமாகவும், அரசியல் அழுத்தம் கொடுக்கும் செல்வாக்குடனும் இருந்தது. யூதர்களின் நாட்டை பிரிட்டன் ஆதரிப்பதன் மூலம் யூதர்கள் அமெரிக்காவை பிரிட்டனுக்கு ஆதரவாக போரில் இறங்க வைக்கமுடியுமென்று பிரிட்டனுக்கு நம்பிக்கையளித்தனர்.

 

பிரிட்டனுக்கு ஆதரவாக துருக்கியை எதிர்த்துப் போரிடவும் பாலஸ்தீனத்திலிருந்த யூதர்கள் தயாரானார்கள். அதைப் போல ரசியாவிலிருந்த யூதர்கள் போல்ஸ்விக் புரட்சியில் பங்கெடுத்தனர். அதனால் ரசியா முதல் உலகப் போரில் தொடர்ந்து போரிட ரசியாவில் குடியிருந்த யூதர்கள் செல்வாக்கு செலுத்துவார்களென்று பிரிட்டனுக்கு நம்பிக்கையூட்டினார்கள். பிரிட்டன் யூதர்களுக்கு ஆதரவளிக்காமல் போனால் ஜெர்மனி பாலஸ்தீனத்தை கைப்பற்றுமென்றும் சியோனிஸ்டுகள் பிரிட்டனுக்குத் தெரிவித்தனர். அப்போதைய பிரிட்டன் பிரதமர் லாய்டு ஜார்ஜ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பால்பஃர் கிறிஸ்தவ வழிபாட்டில் தீவிரமாக இருந்தனர். அவர்களிடம் மத நம்பிக்கையை பயன்படுத்தி ‘யூதர்களை அவர்களது தாய்நிலத்தில் மீண்டும் குடியேற்றுவதன் மத ரீதியான’ விளக்கங்களை சொல்லி ஆதரவைத் திரட்டினார்கள். இவை எல்லாவற்றிற்கும் நேரடி சந்திப்புகள் மற்றும் செய்தி ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தினார்கள். யூதர்கள் செய்த இந்த அரசியலின் விளைவாக யூதர்களுக்கான நாடு பற்றிய விருப்பத்தை பால்பஃர் பிரகடனம் வழியாக பிரிட்டன் வெளியிட்டது. முதலாம் உலகப்போருக்குப் பின்னர் உருவான நாடுகளின் கூட்டமைப்பு (பின்னர் அது ஐ.நா சபையாக உருவெடுத்தது) 1922ல் பால்பஃர் பிரகடனத்தை அங்கீகரித்து பாலஸ்தீனத்தை ஆளும் பொறுப்பை பிரிட்டனுக்கு வழங்கியது.

பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகைக்குள் வந்ததும் யூதர்களின் நம்பிக்கை அதிகமானது. சியோனிஸ்டுகளுக்கு ஆதரவு பெருக ஆரம்பித்தது. 1930களில் இதனால் பல நாடுகளிலிருந்தும் பாலஸ்தீனத்திற்கு குடிபுகுந்த யூதர்கள் எண்ணிக்கை அதிகமானது. அதைத் தொடர்ந்து விழிப்படைந்த பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் மத்தியில் 1936ல் மோதல் துவங்கியது. மோதலை நிறுத்துவதற்காக பாலஸ்தீனத்திற்கு யூதர்கள் குடிபெயர்வதற்கு 1939ல் பிரிட்டன் கட்டுப்பாடுகளை விதித்தது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு டாக்டர் பட்டம்! Posted by: Chakra Published: Tuesday, April 27, 2010, 12:01 [IST]

Tirumavalavn

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்பியுமான தொல். திருமாவளவனுக்கு இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சமூகப் பணி ஆற்றி வருகிறார். இந்தப் பணியைப் பாராட்டி உலக அளவில் செயல்பட்டுவரும் இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி, டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்க உள்ளது. 2009ம் ஆண்டுக்கான டாக்டர் பட்டத்தை திருமாவளவனுக்கு இக் கல்லூரி வரும் 18.07.2010 அன்று வழங்க உள்ளது என்று கூறியுள்ளார். சமூகப் பணி மற்றும் இறைதொண்டு ஆகியவற்றில் சிறப்பான முறையில் பணியாற்றிய சிந்தனையாளர்கள் மற்றும் களப் போராளிகளுக்கு இக்கல்லூரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/2010/tirumavalavn-doctorate-vc-leader.html



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

பாலஸ்தீன இயேசுவும், பரமக்குடி இம்மானுவேல் சேகரனும்

 
பாலஸ்தீன இயேசுவும், பரமக்குடி இம்மானுவேல் சேகரனும்
                                    
-அன்புசெல்வம்


பல தரப்பு மக்களையும். மத நிறுவனக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு கிறித்துவம் எடுத்துக் கொண்ட வினையூக்கிகள் அதிகம்,  ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மதமாக தன்னை முன்னிறுத்தி, அவர்களையே தனது ஆதரவுக் களமாகவும் தேர்ந்தெடுத்து, அதுகளுக்கான‌ நோக்கங்களில் கிறித்துவம் ஓரளவு தன் நிறைவையும் கண்டுள்ளது. எம்.ஏ. ஷெரிங்கின் வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்தியாவில் விவிலிய (பைபிள்) சமயத்தைப் பரப்பச் செய்வது ஒரு நோக்கமாக இருந்தாலும், அது அம்மக்களுக்கு சமுக வளர்ச்சியையும். நாகரீகத்தையும் கொடுத்திருக்கிறது என்பதை எளிதாக மறுத்துவிடவும் முடியாது. (M.A. Sherring, The History of Protestant Mission in India, Beneras: 19874, p.5). இப்படிச் சொல்வதால் இந்தியாவில் நுழைந்த கிறித்துவம் இந்திய சாதிய அமைப்பை ஏற்றுக் கொண்டதையும், அதற்கான நியாயப்பாட்டை இந்து மனோபாவத்துடன் கற்பித்ததையும். அத்தகைய கொடுஞ்செயலுக்கு டி நொபிலி போன்ற மிஷினெரிகளே விளக்குப் புடிச்ச‌தையும் வரலாற்றில் இருந்து மறந்துவிடவோ, மறைத்துவிடவோ முடியாது.

ஒரு மதத்தின் இத்யாதிகளில் இருந்து ஒடுக்கப்பட்ட  மக்கள் ஒரு சில பயன்பாட்டைப் பெற்றுக் கொண்டாலும், அந்த மதத்தின் இத்யாதிகளை விவாதிக்கும் சுய விமர்சனம் தலித்துகளுக்கு எப்போதும் இருந்தது உண்டு. மற்ற மதங்களை விமர்சிப்பதை விட கிறித்துவத்தின் மீதான விமர்சனங்களுக்கு எதிர்வினை மிகவும் குறைவு என்ற போதிலும் அதனை குண்டாங்குறையாக விமர்சிக்க முடியும்.  நார்மன் மெய்லர், பெர்ட்ரன் ரஸ்ஸல், டேவிட் பிரௌன், பிலிப் புல்மான், பால் சக்கரியா, தியான்சந்த் கார், செகுந்தோ, ஓஷோ போன்றோர் ஜனநாயகப் போக்கில் அவ்வாறு விமர்சனக் கண்ணோட்டத்துடன அணுகி இருக்கிறார்கள். 

ஒரு மதத்தையோ, அதன் புனித இலக்கியங்களையோ, அதில் சொல்லப்படும் கதாபாத்திரங்களையோ எந்த மக்களாயினும், அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எப்படி வேண்டுமானாலும் உருவகித்துப் பாத்தியம் கொள்ளலாம்.  அல்லது தார்மீக எல்லைகளைக் கடந்தும் விமர்சிக்கலாம் என்கிற நியதியை கிறித்துவ மதம் தன்னுள் ஏற்றுக் கொண்டுள்ளது. அவ்வாறு ஏற்றுக் கொண்டதனாலேயே ஒடுக்கப்பட்ட மக்களிடம் அதனால் வசியப்படவும் முடிகின்றது.  சமுக அறிவியலையும். மதச் சார்பற்ற ஆன்மீகத்தையும் முரண்பாட்டு மறையாகப் பகுப்பாய்வு செய்கிற யுக்தி பார்ப்பனிய மதங்களுக்கு எதிரான பிறவிக் குணமாகக் கொண்டதால் தலித்துகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அதனை விமர்சிக்காமல் இருக்க மாட்டார்கள்.  அவர்களின் சமுக நோக்குடைய விமர்சனங்களை உள் வாங்கியதனாலேயே அந்த மதமும் தன்னில் தானே தன்னுள் செழுமையடைந்திருக்கின்றது எனலாம்.  உலகம் முழுவதிலும் நீதிக்காக கூக்குரல் எழுப்புகிற எல்லா சமுகங்களும் இப்படித்தான் நடந்து கொள்கின்றன,  கிறித்வத்தில் அதற்கான சிறு இடைவெளி இருப்பதால் தலித்துகள் அதனை தற்போது விடுதலை நோக்கிப் பூர்த்தி செய்து வருகின்றார்கள்.

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களிடம் கிறித்துவம் எவ்வாறு ஊடாடியது என்பது ஒரு சுவாரஸ்யமான வரலாறு.  அதிலும் தேவேந்திரர்களை உள்ளடக்கிய தென் தமிழகத்தின் கிறித்துவ எழுச்சியானது மாறுபட்ட குணாம்சங்களைக் கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகக் களமிறங்கிய தேவேந்திரர்களில் சிலர் கிறித்துவர்.  இமானுவேல் சேகரன் உட்பட தேவநேயப் பாவாணர், பெருமாள் பீட்டர், பாலசுந்தராசு, தேவாசிர்வாதம், ஜான் பாண்டியன் போன்றோர் சிறு வயதிலிருந்து திருச்சபைகளின் நிகழ்ச்ச் நிரல்களுக்கு உட்பட்வர்களாக வளர்ந்துள்ளார்கள். இன்னொரு பக்கம் இவர்கள் திருச்சபை என்கிற அடையாளத்தைத் தகர்த்தெறிந்து சாதிய ஒடுக்குதல்களுக்கு எதிராகப் போராடி, சமுக அரசியல் இயக்கத்தையும் கட்ட முயற்சித்துள்ளார்கள்.  நடைமுறைப் பண்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து அல்லது தான் ஒரு சமுகம் என்கிற உணர்வில் இருந்து கொஞ்சமும் மாறுபடாமல் தங்களின் போர்க்குணத்தை அப்படியே திருச்சபையிலும் பதித்துக் காட்டியுள்ளார்கள்.  

மாவீரன் இமானுவேல் சேகரன் படுகொலைக்குப் பிறகு தேவேந்திரர்களின் போர்க்குண வீரியம், தட்பவெப்பம் குறையமல் திருச்சபைகளுக்குள்ளும் - வெளியிலும் சரியான எதிர் வினையாற்றி இருக்கிறது.  உதாரணத்திற்கு திருநெல்வேலி. மதுரை. இராமநாதபுரம், விருதுநகர், துத்துக்குடி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் கடந்த கால தலித் நடவடிக்கைளைச் சொல்லலாம். முதுகுளத்தூருக்குப் பக்கத்தில் இருக்கிற வீரம்பல் கிராமத்தில் குண்டு துளைக்கப்பட்ட தேவாலயச் சுவர்கள் போர்க் குணப்பண்பாட்டின் இன்னொரு அடையாளமாக இன்றுவரையிலும் எழுந்து நிற்பதைக் காணலாம்.  மன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம் என்கிற ஆன்மீக வளையத்துக்குள் இருந்து கொண்டே ஆயுதம் ஏந்திய எதிர்த் தாக்குதலிலும் நம்பிக்கை கொண்டிருந்த அற்புதத்தை இங்குதான் காணமுடியும்.  

மூளைச்சலவைச் செய்யும் திருச்சபைகளின் ஆட்டு மந்தை இறையியல் கோட்பாட்டுக்குள் தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் வீரியம் மிக்கப் போர்க்குணத்தின் இயக்க மனப்பான்மையை கிறித்துவ தேவேந்திரர்களிடம் இன்றளவும் காணமுடியும்.  2001-ல் பரளச்சி கிராமத்துக்கு அருகில் உள்ள தெற்கு நத்தத்தில் போதக அய்யரே இந்த மஞ்சப் பைபை பீடத்துல வச்சு குடுங்க என்று அரிவளை ஆசிர்வாதம் பெற்றுச் சென்று போராட்ட களத்தில் இறங்கிய அனுபவம் அவர்க‌ளுக்கு உண்டு. இது போக சமுகத்தில் எழுகிற பிரச்சனைகளில் ஈடுபட்ட தேவேந்தரிர்களின் குடும்பப் பாதுகாப்பிற்கும், வழக்குச் செலவுகளுக்கும் திருச்சபை சமுகத்தில் இருந்து நிதி திரட்டும் மரபை சில திருச்சபைகளில் இன்றும் பின்பற்றுகின்றனர். தீண்டாமை அனுபவத்தைச் சுமந்த தேவேந்திரர்களுக்கு திருச்சபைகளுக்குள்ளும் இப்படியொரு போர்க்குணம் இருப்பது ஒட்டுமொத்த திருச்சபை மறை மாவட்ட ஆதிக்கக் கிறித்துவர்களுக்கும் எரிச்சலை உண்டு பண்ணக்கூடியது,  அதனாலேயே அதிகாரத்தை நோக்கிய திசைகளில் பல இழப்புகளையும் கிறித்துவ தேவேந்திரர்கள் சந்தித்தார்கள்.  ஒருவகையில் திருச்சபையும். சமுகமும் தேவேந்திரர்களுக்கு ஒரே நேர்க்கோடுதான் என்கிற தோற்றத்தைக் கொடுப்பது போல் தெரிந்தாலும். கிறித்துவத்தை தங்களின் விடுதலைக் குறியீடாகப் பாவித்து. கும்பல் கும்பலாக திருச்சபைகளை நோக்கி தேவேந்திரர்கள் அணி திரண்டதில்லை என்கிற வமிர்சனமும் திருச்சபை மட்டத்தில் உள்ளது. அதற்கு காரணம் ஒரு தலித் கிறித்துவராக மதம் மாறினால் சற்றேரக் குறைய அவர் ஒரு கிறித்துவ காந்தியவாதியாக மாற்றப்பட்டு விடுகிறார். தேவேந்திரர்கள் இயல்பாகவே போர்க்குண்ம் கொண்டவர்கள். கிறித்துவம் இன்று நச்சு விதையாகத் தூவி வரும் கருத்தியலான நாமெல்லாம் பாவிகள், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு, இந்த உலகாத்தாஈக் குறித்துக் கவலைப் படாமல் பரலோகத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், உங்கள் துன்பம் எதுவானாலும் ஜெபம் பண்ணுங்கள்,  கிளர்ச்சி, போராட்டம் ஆகிய தீயப் பழக்கங்களில் ஈடுபடாதீர்கள் போன்ற பிற்போக்குத்தன இறையியலில் தேவேந்திரர்களுக்கு நாட்டம் இல்லாமல் இருக்கலாம். ஆகையால் தான் இந்து மதக் கொடுமைகளுக்கு எதிராகப் போராட்டக் குணத்தையும், எதிர்ப்புக் குறியீட்டையும் வலியுறுத்தும் இஸ்லாம் நோக்கி மதம் மாறுகிறார்கள்.  இது குறித்து விவாதிக்க கடந்த நூறாண்டுகளில் கிறித்துவ தமிழ்த் திருச்சபைகளில் தேவேந்திரர்களின் நிலை குறித்து விரிவான ஆய்வு ஒன்றும் தேவைப்படுகிறது.

தலித்துகள் மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு, எவ்வாறு கிறித்துவர்களானார்கள்? என்கிற நிறுவனமயமாக்கப்பட்ட சிந்தனையின் அடிப்படையிலேயே இந்தியத் திருச்சபை வரலாறுகளும். தலித் இறையியல் கோட்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.  ஆனால் தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித்துகளை நோக்கித் திரண்டு சென்ற மதங்களை தலித்துகள் உளவியல் ரீதியாக எவ்வாறு அணுகினார்கள்? அதனருகில் அவர்கள் சென்றதற்கான விடுதலைக்காரணிகள் என்ன? என்பது திருச்சபைகளுக்குள் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டதில்லை. அப்படி பேசினால் ஒரு மதத்தை மட்டுமல்ல, அதைச் சார்ந்தவர்களையும் அவர்களது வரலாற்று முரண்களையும் பேச வேண்டியிருக்கும்,  எனவே, தமிழ்க் கிறித்துவ மேலாளர்களாக இருந்தவர்கள் திட்டமிட்டே தலித் கிறித்துவ கோட்பாட்டு முரண்களைத் தவிர்த்துக் கொண்டார்கள்.  உதாரணமாக, விவிலிய வரலாற்றையும், அதில் பேசப்படும் கதாபாத்திரங்களையும் ஏன்? மரியாள், இயேசு மற்றும் இவர்களின் பன்னிரு சீடர்களின் போராட்ட அனுபவங்களையும் குழந்தைப் பருவத்திலிருந்தே ஞாயிறு பள்ளிகளில், கதை கதையாகச் சொல்லி வரும் திருச்சபை, அந்த கதையைக் கேட்கும் குழந்தையின் மூதாதையர்களுடைய வரலாற்றையும், சமுகத்தில் அவர்களுக்கன பாத்திரத்தையும், சந்தித்த போராட்டங்களையும், ஏன் சொல்லித் தருவதில்லை? அவ்வாறு சொல்லித்தராமல் போனதாலேயே ஒரு சமுகத்தின் வரலாறு கிறித்துவ மத ரீதியான வரலாற்று விச‌யங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு நிற்கிறது என்பதுதானே அர்த்தம்.  அதையும் விட அந்த மதத்தின் இத்யாதிகளுக்கு அவர்கள் செய்த பங்களிப்பும் முற்றிலும் மறைக்கப்பட்டிருக்கிறது.  அவ்வாறு மறைக்கப்பட்ட இந்திய திருச்சபை வரலாற்றில் இருந்து கிடைத்த மாபெரும் கலகக்கார ஆளுமைதான் மாவீரன் இமானுவேல் சேகரன்.

மாவீரன் இமானுவேல் சேகரன், இயேசுவைப் போல் வாழ்ந்து மடிந்த இந்தியாவின் முதல் கிறித்துவ களப்போராளி.  (இப்படி சொல்வதால் இம்மானுவேல் சேகரனை கிறித்துவம் என்கிற ஒற்றைச் சிமிழுக்குள் அடைத்து விட முடியாது என்பதை தேவேந்திரர்களின் குருபூஜை வரலாறு நமக்கு நன்றாகவே உணர்த்தியுள்ளது). இவர் தமிழ சுவிசேஷ லுத்திரன் திருச்சபையைச் (டி.இ.எல்.சி) சார்ந்தவர்.  பரமக்குடி அருகேயுள்ள செல்லுர் சேரியில் 1924 அக்டோபர் 9-ல் பெரியவர் வேதநாயகம் வாத்தியாருக்கும், ஞானசவுந்தரி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்,  தொடக்கக்கல்வியை டி.இ.எல்.சி. பள்ளியிலும், உயர் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்சு உயர்நிலைப் பள்ளியிலும் கற்றார். மரணத்தின் போது அவர் கிறித்துவர் இல்லை என சொல்லிக் கொண்டாலும், குழந்தைப்பருவம் முதல் தொடங்கிய இளமைக் கால அனுபவங்கள் அனைத்தும் ஒரு சாராசரி கிறித்துவருக்கே உரிய திருச்சபை அடையாளங்களோடு எழுச்சி பெற்றன.

படிக்கும்போது தனது 18-ஆவது வயதில் இந்த நாட்டின் விடுதலைக்காக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் (1942) பங்கேற்று, முன்று மாதங்கள் சிறை தமண்டனையை அனுபவித்தார்,  சிறை வாழ்க்கைக்குப் பிறகு பள்ளியில்  அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது,  பிறகு மீண்டும் அவர் பள்ளியில் சேர்க்கப்பட்டு 1945-ல் இராணுவத்திற்குப் புறப்பட்டார்.  பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் மூன்று ஆண்டுகளும், சுதந்திர இந்திய இராணுவத்தில் அய்ந்து ஆண்டுகளும் பணியாற்றினார்.  1857-ல் தொடங்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற முதல் சுதந்திரப் போரில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கிறித்துவர்கள் எழுப்பிய குரல் எவ்வாறு புலப்படாமல் போயிற்றோ, அது போல 1947-ல் பெறப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற சுதந்திரப்போரில் காலனிய கும்பலுக்கு எதிராகப் போராடிய தலித்துகளின் வரலாறும், கிறித்துவர்களின் பங்கேற்பும் ஒரு சேரத் தவிர்க்கப்பட்டுள்ளன,

ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் இராணுவத்தின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்ககது. யாரெல்லாம் சேரியில் இருந்து இராணுவத்திற்குச் சென்றார்களோ, அவர்கள் மீணடும் சேரிக்குள் சுய மரியாதை உணர்வுடன் திரும்புவதற்கு இராணுவ அனுபவமும், அதன் மிலிட்டிரி உடையும், துப்பாக்கியும், என்பீல்டு போன்ற மோட்டார் சைக்கிளும் மிக முக்கியமான பாதுகாப்பை வழங்கியது.  புரட்சியாளர் அம்பேத்கர் தொடங்கி வைத்த ஷெட்யூல்டு இனப் பேரவையை தென் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய தென் மணட்லப் பொறுப்பாளர், மேலக்கால் வீரபத்திரன் (முகமது பிலால்) சோழவந்தான் பகுதியில் ஒற்றை இராணுவமாக நின்று எதிர் வினையாற்ற முடிந்ததற்கு காரணம் இராணுவ அனுபவம்தான். 

அவ்வாறான அனுபவத்தைக் கொண்டு 1952-ல் தனது அவில்தார் பணியைத் துறந்த‌ இமானுவேல் சேகரன் ஊர் திரும்பினார்.  அப்போது நடந்து கொண்டிருந்த பொதுத் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் கவனிக்கத்தக்கது.  இந்த நாட்டின் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்வகள் எல்லாம் களத்தில் அன்றைய இளம் வேட்பாளர்கள்.  காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்த இராஜாஜி குல‌க்கல்வியைக் கொண்டு வந்த போது அதற்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்தியவர் இம்மானுவேல் சேகரன்.  அதுமட்டுமல்ல, தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது என சாக்கு சொல்லி, அதனை ஈடுகட்ட கிராமங்களில் உள்ள பள்ளிகளை மூடுகிறோம் என இராஜாஜி எடுத்த முடிவை மிக வன்மையாகக் கண்டித்தார். கிறித்துவ நிறுவனங்களுக்குச் சொந்தமான பள்ளிகளுக்கு எதிராகப் பார்ப்பனர்கள் போர்க் கொடி பிடித்த போது ஒடுக்கப்பட்ட சமுகத்தின் குழந்தைகளே பள்ளிகளை நோக்கிப் புறப்படுங்கள் என பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் வட்டாரங்களில் பிரச்சாரம் செய்தார். கிறித்துவ திருச்சபைகளுக்கு சொந்தமான பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்ற‌ளவும் இயங்க முடிகிறதென்றால் அன்றைக்கு மாவீரன் முழக்கிய போர் முரசு என்பதே. 

1952-ல் நிகழ்ந்த பொதுத்தேர்தல் இம்மானுவேல் சேகரனை கிறித்துவ வட்டாரத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து மாபெரும் சமுகப் போராளியாக்கியது.  அந்த தேர்தலில் உ. முத்துராமலிங்கம் என்பவரை எதிர்த்து களத்தில் போட்டியிட்டார்.  இச்செய்தி அப்பகுதிகளில் காட்டுத்தீ  போல பரவியது.  தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமையை மீட்க அய்ந்து ஆண்டுகள் போராடினார்.  அது மட்டுமல்ல இரண்டொரு மாவட்டங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய‌ உ. முத்துராமலிங்கம் என்பவரின் சாதியச் சேட்டைகளை சமூகத்திற்குப பட்டியலிட்டுக் காட்டினார்.  இதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமல்ல பாதிப்புக்குள்ளான பிற்படுத்தப்பட்டவர்களையும் போராட்டக்களத்தை  நோக்கி அணி திரள அழைப்பு விடுத்தார்.  உ. முத்துராமலிங்கம் என்பவரின் சொந்த சமுகத்தைச் சேர்ந்தவர்களே இம்மானுவேல் சேகரனின் விடுதலைக்கான போர்க்குணத்தை வரவேற்றனர்.  இன்றைய தினகரன் நாளிதழை தோற்றுவித்த அதன் ஆசிரியரான தினகரன், இம்மானுவேல் சேகரனுக்கு ஆதரவாகவும்,  உ. முத்துராமலிங்கத்துக்கு எதிராகவும் தனது தினகரன் பத்திரிக்கையில் எழுதினார் என்பதற்காக தன் சொந்த சாதிய சகாக்களால் படுகொலையும் செய்யப்பட்டார்.
    
ஒரு தலித் கிறித்துவ களப்போராளி தொடங்கி வைத்தப் போராட்டம் தென் மாவட்டங்களில் மட்டுமல்ல, தமிழகம் கடந்து ஓயாத அலைகளாகப் பேரோசை எழுப்பியது.  1957-ல் பத்ரகாளிக்குப் பலி கொடுப்பதற்காக காடமங்குளம் கிராமத்தில் இருந்து ஒன்பது தலித்துகளை உ. முத்துராமலிங்கத்தின் சகாக்கள் தூக்கிப்போனார்கள் என்ற நிகழ்வும், அதன் மீதான வழக்கு விசாரணையும் அன்றைய அரசியலில் சலசலப்பை உருவாக்கியது.  இந்த பிரச்சனையை இராமநாதபுரம் ஆட்சித்தலைவர் வரைக்கும் இம்மானுவேல் சேகரன் கொண்டு சென்றார். மறுநாள் பண்ணந்தலை கிராமத்தில் தேவேந்திரர்கள் ஒன்று கூடி உ. முத்துராமலிங்கத்தை பஞ்சாயத்து வரை இழுத்துச் சென்று மாபெரும் குற்றவாளியாக நிற்க வைத்து, கையெழுத்திட வைத்த நிகழ்வுதான் இமானுவேல் சேகரன் நேரிடையாகப் பங்கேற்ற கடைசிப் போராட்டம்.  அதன் பின்னர் களப்போராளி இயேசுவின் வாழ்வில் ஏற்பட்ட எல்லா வன்கொடுமைகளையும் இம்மானுவேல் சேகரன் எதிர்கொண்டார். ஒரு குற்றமும் அறியாத அவரை சமுக விரோதியாகப் பாவித்து அவரை கொல்ல உ. முத்துராமலிங்கத்தின் ஆதிக்கச் சமுகங்களால் சதித்திட்டம் தீட்டப்பட்டது.  சமாதானக் கூட்டம் நடந்த மறுநாள், அதாவது 11.09.1957 அன்று மாலை எமனேஸ்வரம் கிராமத்தில் நடந்த பாரதி விழாவிற்குச் சென்று சிறப்புரையாற்றி விட்டு இரவு 8.30 மணியளவில் பரமக்குடியில் இருந்து தனது இல்லத்திற்கு திரும்பினார்.  அவரது வீடு பரமக்குடி வளைவு அருகில், காந்தி சிலை வீதியில் மேற்புறத்தில் கிழக்கு நோக்கி அமைந்திருந்தது.  இரவு உணவை முடித்து விட்டு வளைவுக்கு கிழக்கே 50 அடி தொலைவில் உள்ள ஒரு பெட்டிக் கடைக்குப் போன இம்மானுவேல் சேகரன் எதிர்பாராத நிலையில் கொடிய ஆயுதங்களால் பதுங்கி இருந்த ஆதிக்கச் சாதி ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.  அவர் கொலையுண்ட செய்தி தமிழத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய‌து.  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வீடுகளும், கடைகளும் மூடப்பட்டு நடமாட்டம் அருகிக் காணப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஆயுதமேந்திய காவல் துறையினரும். இராணுவத்தினரும் மாவட்டம் முழுக்கக் குவிக்கப்பட்டனர்.  அன்று குவிக்கப்பட்ட ஆதிக்க சமுகங்களுக்கான காவல் பாதுகாப்பு இன்றுவரை விலக்கிக் கொள்ளப்படவில்லை. தங்கள் தலைவரை, வழிகாட்டியை, வீரத்தளபதியை இழந்து தவித்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஆதிக்கச் சமுகங்களுகும் இடையே மோதல் வெடித்தது.  தாக்குதல்கள் தொடர்ந்தன.  அது முதுகுளத்தூர் கலவரமாக வெடிக்கத் தொடங்கியது. 

களப்போராளி இம்மானுவேல் சேகரனின் கொடூரமான இப்படுகொலை வரலாற்றை வாசித்து முடிக்கிற எந்த ஒரு கிறித்துவருக்கும், களப்போராளி இயேசுவின் படுகொலைக் காட்சிகளும் நிச்சயம் கண் முன் வந்து நிற்கவேண்டும்.  அல்லது பெரிய வெள்ளி (Good Friday) என்கிற நாளில் இயேசுவின் படுகொலையை நினைவுகூறும் ஒவ்வொரு கிறித்துவருக்கும் இம்மானுவேல் சேகரனின் படுகொலை நினைவுகளும் ஊடாடிப்போகும்.  அப்படி ஒரு அனுபவத்தைக் கூறாமல் இருக்க முடியாது.  ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப்[ போராடிய இயேசுவுக்கு நிகழ்ந்த வன்கொடுமையை நினைவூட்டி வரலாறு பேசிவரும் கிறித்துவ திருச்சபைகள், 50 ஆண்டுகளுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்ட இம்மானுவேல் சேகரனின் வீரவணக்கத்தைத் துளி கூடி திருச்சபைகளுக்குள் நினைவு கூறுவதில்லை என்பதை எதைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. அத்தகைய படுபாதகத்தை இறையியல் பேசி மன்னிக்கவும் முடியாது.  நூறாண்டுகளுக்கு முன் ஜார்க்கண்ட் மாநில ஆதிவாசி மக்களுக்குக் கல்வியையும், நிலத்தையும் பெற்றுத் தருவதற்காகப் போராடி கிறிஸ்மஸ் என்கிற பண்டிகையையே அவர்களது வாழ்வில் இருந்து வேரறுத்து, சாகும்வரை பட்டினி கிடந்து செத்துப்போன இருபத்தேழு வயதுப் போராளி பிர்சா முண்டாவை வட இந்திய திருச்சபைகள் (சி.என்.அய்) எப்படி இருட்டடிப்பு செய்ததோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் இங்கே தென்னிந்திய திருச்சபைகளும் (சி.எஸ்.அய்) தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபைகளும்., ஏனைய பிற திருச்சபைகளும் அவர்களது திருச்சபை வரலாற்றுப் பக்கங்களில் இருந்து இம்மானுவேல் சேகரன் என்கிற மாபெரும் களப்போராளியை முற்றிலும் மறைத்துவிட்டது, மறந்தும் விட்டது. ஆகையால் தான் ஒரு மாபெரும் தலைவரின் குருபூஜை நாளில் நிகழும் வன்கொடுமைகளையும், படுகொலையையும், துப்பாக்கிச் சூட்டையும் வேடிக்கைப் பார்க்கின்றது. இதெல்லாம் திருச்சபைகளுக்கு அநீதியாகத் தெரிவதில்லை. அவர்கள் விசுவாசிக்கும் ஐரோப்பிய, அமெரிக்க கலவரம் நடந்தால் மெழுகுதிரி பிடித்து துக்கம் அநுசரிப்பார்கள். இது தான் இன்றைய போராட்ட இறையியல். இதை எப்படி தேவேந்திரர்கள் ஏற்பார்கள். அதனால் தான் அவர்களின் பிரச்சனைகளில் திருச்சபைகள் மவுனம் காக்கின்றன.  

இயேசுவுக்கும், இமானுவேல் சேகரனுக்கும் நிகழ்ந்த படுகொலை அனுபவமும், வன்கொடுமை வரலாறும் அடிப்படையில் ஒன்றுதான்.  இருவரும் பேராதிக்கங்களுக்கு எதிராகப் போராடியவர்கள்.  நீதிக்கானப் போராட்டத்தில்  தன்முனைப்புக் காட்டியவர்கள்.  அப்படி போராடும்போது தங்களுக்கு சாவு வரும் என்பதை முன்னரே அறிந்து. துளியும் பொருட்படுத்தாமல் எதிர்கொண்டு, எதிராளிகளால் படுகொலையும் செய்யப்பட்டார்கள்.  இயேசுவில் தொடங்கிய இக்களப் போராளிகளின் அணிவகுப்பு இன்று இமானுவேல் சேகரன் வரை நீடித்து, எருசேலமிலும், பரமக்குடியிலும் விடுதலை நெருப்பை மூட்டி வருகிறது. பாலஸ்தீனத்தில் நிகழும் குண்டுவெடிப்புக்கும்,  பரமக்குடியில் கட்டவிழ்த்துவிடப்படும் துப்பாக்கிச் சூட்டுக்கும் அர்த்தம் ஒன்று தான். புவியியல் எல்லை தான் மாரறுபட்டிருக்கின்றது.

இப்படியான கிறித்துவ விவிலிய கோட்பாட்டுச் சிந்தனையை. கிறித்துவ‌த் திருச்சபைகளுக்குள் உசுப்பிவிடும் போது அல்லது ஒடுக்கப்பட்டவர்களின் அனுபவங்களை தலித் இறையியலாக்கமாக அர்த்தப்படுத்தும்போது அடிப்படைவாதக் கிறித்துவர்களுக்கு பல முரண்பாடுகள் எழும். அவ்வாறான சந்தேகங்களைத் தீர்க்க நினைப்பவர்கள் ஆலன் டன்டீஸ் என்கிற பெர்க்கிலி இறையியல் அறிஞர் மோசேயைப் பற்றியும், எலியாவைப் பற்றியும் ஒப்புமைப்படுத்தி எழுதியுள்ள களப்போராட்ட ஆளுமைகளை வாசித்துப் பார்க்க வேண்டும்.  அதில் அவர் இயேசுவையும் அவரின் களப்போராட்ட தலைமைத்துவத்தையும் மிக அழகாக எடுத்துரைப்பார். இத்தகையான கருத்தாக்கத்தை தலித் அல்லாத சாதிக் கிறித்துவர்கள் விமர்சிக்கிறார்களோ இல்லையோ, நமது கனம் சூடோ தலித் கிறித்துவர்கள் வரிந்து கட்டி வாய் பேசுவதில் கில்லாடிகள். இயேசுவும், இமானுவேல் சேகரனும் ஒன்றா! இயேசு ஒடுக்கப்பட்ட மக்களுக்காவே அடிப்பதற்குரிய ஆட்டுக்குட்டியாக‌ கடவுளால் அனுப்பப்பட்டவர். அதுமட்டுமல்ல இயேசு உலகம் தழுவிய ஒரு மாபெரும் தலைவர்.  ஆனால் இம்மானுவேல் சேகரன் அப்படியில்லையே.  அவர் ஒரு பகுதிக்குட்பட்ட தலைவராயிற்றே.  இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவர்.  இம்மானுவேல் சேகரன் எங்கே உயிரோடு எழுச்சி அடைந்தார்?  இயேசுவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கும் வல்லமை வாய்ந்தது. ஆனால் இம்மானுவேல் சேகரன் சிந்திய ரத்தம் தொடக்கூடாத தீட்டாயிற்றே, என்று பேசும் மத அடிப்டைவாதிகள் கிறித்துவ மதத்திற்குள்ளும் இருந்து கேள்வி எழுப்பக்கூடும். இன்னும் ஒரு படி மேலே போய் இப்படி எழுதுகிறவர்களை சாத்தானின் அந்திக் கிறித்துவர்கள் என்றும் முத்திரையிடக்கூடும்.

பெருமளவு தலித்துகளைப் பிடித்து வைத்திருக்கின்ற கிறித்துவ திருச்சபைகளில் இப்படியொரு கேள்வியை எழுப்ப எவருக்கும் அனுமதியும், அறுகதையும் இல்லை என்பதை எடுத்த எடுப்பிலேயே சொல்லி விட வேண்டும்.  வேலை வாய்ப்புக்காக மட்டுமே குத்தகையில் ஈடுபட்டு, குந்தியிருக்கின்ற கிறித்துவ சாதிய மேலாளர்கள் வேண்டுமானால் முக்க-முக்க முணகலாம். ஆனால் பரமக்குடியில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பாலஸ்ததீனத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே உள்ள ஒடுக்கப்படுதல் என்கிற அனுபவங்கள் அடிப்ப‌டையில் இரு சமுகங்களுக்கும் ஒன்றுதான என்பதை உணர வேண்டும்.  அதனை அங்கே இயேசு உரத்துப் பேசினார்.  இங்கே இம்மானுவேல் சேகரன் ஆர்த்தெழுந்து முழக்கினர்.  அவ்வளவுதான். 
                        
இயேசு மரணத்தை நோக்கிச் சென்று எதிர்கொண்டார். ஆனால் மரணம் இம்மானுவேல் சேகரனை நோக்கிச் சூழ்ந்தது.
இயேசுவின் முன் ஒரேயொரு குற்றவாளி முன் நிறுத்தப்பட்டார்    . இம்மானுவேல் சேகரனைக் கொல்ல ஒரு சமுகமே குற்றவாளிக் கூண்டில். நகரம் முழுவதையும் தம் காவல் கட்டுப்பட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பகலில் அனைவர் முன்னிலையிலும் இயேசுவின் படுகொலை நிகழ்ந்தது. இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் பதுங்கி இருந்து படுகொலை செய்து விட்டு பின்னர் மக்களை தங்க‌ளின் கட்டுப்பட்டின் கீழ் கொண்டு வந்தனர். சொந்த சமூகத்தைச் சோந்தவர்களே எதிரிகளாக இருந்து இயேசுவைக் கொலை செய்தனர். ஆனால் இம்மானுவேல் சேகரன்    ஆதிக்கச் சமுகத்தைச் சேர்ந்த எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இயேசுவிடம் தவறு எதுவும் இல்லாததால் அவர் மீது பொய்யான குற்றம் சுமத்தினர்.    ஆனால் இம்மானுவேல் சேகரனனோ ஒரு தவறும் செய்யவில்லை. அவர் மீது குற்றமும் சுமத்த் முடியவில்லை.

இருவருக்குமான பொதுமைகள்
•    இருவரிடத்திலும் ஒரே நோக்கத்தைக் கொண்ட தன்னம்பிக்கை குடி கொண்டிருந்தது.
•    மரணம் வரும் என்பதை அறிந்திருந்தும், அதிலிருந்து தங்களைக் காப்பபாற்றிக் கொள்ள‌ எந்த சுயநலப்    பாதுகாப்பையும் தேடவில்லை.  மரணத்தைக் கண்டும் அச்சப்படவில்லை.
•    சிலுவையின் வலியையும், வேதனையையும், அருவாளின் கொடூரத்தையும் நன்கு அறிந்தவர்கள்.
•    படுகொலை நிகழ்வதற்கு முன் இருவரும் மக்கள் முன் உரையாற்றிய களப்பேச்சாளர்கள்.
•    திருப்பித் தாக்குவதில் அதி வலிமை கொண்ட போர்க்குணம் படைத்தவர்களாக இருந்த போதிலும் வன்முறையை விரும்பியவர்கள் அல்ல.
•    குறிப்பிட்ட பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தாலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்ப‌ட்ட விடுதலை வீரர்கள்.
•    இருவரின் வயதும் சற்றேறக் குறைய 34-35-க்கு இடைப்பட்ட இரத்தத் துடிப்பான, அடங்க மறுக்கின்ற அனுபவம் கொண்ட காலம்.
•    உடலில் இருந்து பிரியும் உயிருக்கு மீண்டும் அபார எழுச்சி உண்டு என நம்பியவர்கள்.
•    இருவரின் நினைவிடங்களிலும் வீரவணக்க அஞ்சலியான குட்பிரைடேவும், குருபூஜையும் இன்று வரை பதற்றம் கூடிய நிகழ்வாகவே வரலாறாகிறது. 

இயேசுவின் படுகொலைக்குப் பிறகு அவருடைய சீடர்கள் திரைமறைவு வாழ்வில் பல இன்னல்களை எதிர்கொண்டு தீவிரமாகச் செயல்பட்டார்கள்.  அவருடைய மறைவுக்குப் பின் ஒரு மக்கள் கூட்டமும். பேரியக்கமுமம் உருவாகி. உலகின் எல்லா இடங்களிலும் கேலோச்சிய ரோம ஏகாதிபத்தியத்தை உலுக்கியெடுத்தது.  இம்மானுவேல் சேகரனின் மறைவுக்குப் பின் தேவேந்திரர் ச‌முகம் மட்டுமல்ல,  ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களும் அவர் பெயரில் இயக்கமாக எழுந்து நிற்கிறார்கள்.  களப்பணியாற்றி கொல்லப்படும் தலைவர்கள் இயேசுவைப்போல் உயிர்த்தெழுவார்கள். நீண்ட நெடுநாள் வாழ்ந்த தலைவர்கள் எல்லாம் மக்களால் மறக்கப்ப‌ட்டிருக்கிறர்கள்.  சில காலம் வாழ்ந்து மடிந்தவர்கள் மக்களின் குலசாமிகளாக வீற்றிருக்கிறார்கள். வெள்ளையடிக்கப்பட்ட கல்லரைகளே, அகில உலக திருச்சபையோரே இமானுவேல் சேகரனின் குருபூசையும். இயேசுவின் ஈஸ்டர் திருநாளும் உங்களுக்கும் எனக்குமானது என்பதை இனியாவது உரக்கச் சொல்லுங்கள். உங்களை நோக்கி உலகமே அணிதிரளும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

பரட்டையில் மகிழும் கிறித்துவ போலிப்புரோகிதம்

 
1979 -களில் சமூக அறிவியல் வளர்ச்சியின் சிந்தனைகள் தலித் விடுதலைக்கான கல்வித்தளத்தில் நீண்ட விவாதங்களைத் தொடங்கி வைத்தன. தலித் கலை, இலக்கியம், பண்பாடு, நாட்டுப்புறவியல், தலித் நாடக அரங்கு, தலித் இயக்க அரசியல் என நீட்சி பெற்றவை அனைத்தும் இதன் தொடக்கம் தான். தமிழக தலித் கலை, இலக்கிய, அரசியல் எழுச்சியில் இது பல வேதியல் மாற்றங்களை உண்டாக்கியது. தலித்துகளிடம் இருந்து களவாடப்பட்டவைகள் ஒவ்வொன்றாக அடையாளம் காணப்பட்டன. மய்ய நீரோட்டத்தில் பதுக்கிய தலித் குறியீடுகள் தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டன. சேரி மக்களின் பண்பாட்டு அழகியல் புத்தொளியை நோக்கி வீறு கொண்டது. விடுதலை உணர்வுகளால் மண் பிசையப்பட்ட தலித் விடுதலைக்கான கலை இலக்கிய அரசியல் ஒப்பனை இல்லாமல் தன் ஊடுருவலை பண்பாட்டுத் தளங்களில் தொடங்கிய இச்சூழலில் மதுரை பகுதியில் ஆள் அரவம் இல்லாமல், தனக்கே விதிக்கப்பட்ட தீண்டாமைச் சுவர்களை தானே உடைத்தெறிந்து கொண்டு நாட்டுப்புறவியலில் ஒரு காந்தப்புயலை உருவாக்கியவர் கிராமிய அறிஞர் பரட்டை. ம‌துரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் தொடர்புத் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். 35 ஆண்டுகளுக்கு முன் நாட்டுப்புறவியல் பாடல்களையும், நாடகங்களையும், நாட்டுப்புற இசை மரபையும் மதுரை மண்ணில் உலவ விட்டவர். அதன் தொடக்கம் தான் தலித் கலை விழா என்பதெல்லாம். தஞ்சையிலும், பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மய்யத்திலும், மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையிலும் கிராமியம் என்கிற சொல்லாடலை காயடித்து விட்டு நாட்டார் என்கிற சொல்லாடலை தனக்கான அடையாளமாக  ஆதிக்கம் செய்ய முற்பட்ட மேற்படியாள்களின் தமிழ்ச்சாதி விசுவாசத்தை கடுமையாக விமர்சித்தார், எதிர்த்தார் என்கிற ஒரே காரணத்துக்காக நாட்டுப்புறவியல் வரலாற்றில் இருந்தே தூக்கி வீசப்பட்டவர் பரட்டை. இந்த இருட்டடிப்பு வேலையில் கிறித்துவ கத்தோலிக்க வெள்ளாளர்களும், நாடார்களும் கணிசமாக பங்குபோட்டு வேலை செய்துள்ளார்கள். இந்த அநியாயம் நிகழ கூடவே வழக்கம்போல் நம்ம சூடோ தலித்துகளும் விளக்கு புடித்துள்ளார்கள் என்பது ஒரு பக்கம். 

இந்த மாபெரும் கிராமிய அறிஞனின் நாட்டுப்புறவியல் கருத்தியல் அம்சங்களை அவரிடம் பயின்ற கிறித்துவ ஆயர்கள் அவர்களின் திருச்சபைகளில் வழிபாடாகவும், ஓருலை திருவிழாவாகவும் நிகழ்த்துவது மரபு. சொல்லப்போனால் கிறித்துவ திருச்சபைகளில் சாமரம் வீசிக்கொண்டிருந்த மேற்கத்திய பண்பாட்டு விசயங்களை ஓட ஓட விரட்டியது பரட்டையின் நாட்டுப்புறவியல் என்பது தகும். அவருடைய தலித் கருத்தியலை அவருக்கு தெரிந்தே திருடி கல்லா கட்டும் சூடோ தலித்துகள் ஒரு புறம் உருவாகிக்கொண்டிருந்தாலும் உண்மையாக அவருக்கென்று சில விசுவாசிகள் இன்னமும் திருச்சபைகளில் இருக்கின்றனர். வேலூரில் உள்ள தோழர்.அய்சக் கதிர்வேலு, மதுரையில் உள்ள பேராசிரியர் ஜான் ஜெயகரன், சென்னையில் உள்ள தோழர்.ஈனோஸ், ஜாக்குலின், கோவையில் தோழர். என்றி, பாண்டிச்சேரியில் தோழர். ஜெபா, ஜெர்மனியில் உள்ள தோழர். ஜோன்ஸ் இப்படி பலர் அவரின் இறையியல் கருத்துக்களை நாட்டுப்புறவியல் கூறுபாட்டுடன் மக்களிடம் இன்னமும் பரப்பிக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் பண்ரூட்டியில் உள்ள தோழர். ஜான்சன் அசோக்குமார் அவர்களும் ஒருவர். ஆற்காடு லுத்தரன் திருச்சபையில் உருப்படியாக நல்ல பல இறையியல் ரீதியிலான வேலைகளில் ஆழ்ந்த பட்டறிவு கொண்டவர். அதனாலேயே அவரை சில கிறித்துவ புரோகிதர்களும், அவர்களின் அடிவருடிகளும் அவரின் செயல்பாட்டைக் கண்காணித்து குற்ற‌ம் சாத்துவது மரபு.   சென்னையில் அவர் ஆயராக பணியாற்றும்போது இயேசு பெருமான் செய்யும் உயர்ந்த பண்பான சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்வை இவர் திருச்சபையில் செய்தபோது பாலியல் வக்கிரத்துடன் விமர்சித்து பல மாதங்கள் பணி கொடுக்காமல் கிடப்பில் வைத்தார்கள். அதற்கு எதிராக ஒரு ஆயரும் குரல் கொடுக்காமல் த‌ங்களின் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உண்ணாவிரதம் இருந்த கொடுமையை எங்க போய் சொல்ல. ஆனால் இறையியலாளர் செகுந்தோவையும், மார்டின் லுத்தரையும் மல்லாக்கப் புரட்டிப் பேசுவதில் எவரும் சளைத்தவர் அல்லர்.. 

தோழர். ஜான்சன் அசோக்குமார் பரங்கிப்பேட்டையில் ஆயராக இருந்தபோது அவர் செய்து காட்டிய பரட்டையின் ஓருலைத் திருவிழாவை அண்மையில் கடந்த 12.11.2011 அன்று பரட்டையின் ஆறாம் ஆண்டு நினைவு தினமாக தனது பண்ருட்டி திருச்சபையில் படு கம்பீரமாக நிகழ்த்தினார். அந்த திருச்சபையின் நூற்றாண்டு விழாவுக்கான தொடக்கம் அது. ஏற்கனவே சொன்னது போன்று பரட்டை கிறித்துவ திருச்சபையின் எந்த ஆதிக்க உள்ளீடுகளையும் ஏற்பவர் அல்லர். அவரும் அந்த சடங்காச்சாரங்களுக்கு துளியும் முக்கியத்துவம் கொடுத்தவரும் அல்லர். சாமிக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத் தான் சாமி என்பார். அதற்கேற்றார்போல் சாமியே மாறியாக வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறுவார். குறிப்பாக அவரது நாட்டுப்புற வழிபாட்டில் கிறித்துவ மேலாதிக்காத்தின் குறியீடுகளை எங்கேயும் பார்க்க முடியாது. இசை, பாடல், வசனம், அருளுரை, வழிபாட்டிடம், அதில் பரிமாறப்படும் அப்பம், ரசம் எல்லாமே கிராமியத்தின் கூறுகளை உள்ளடக்கியிருக்கும். தப்பித்தவறி ஒரு பாரம்பரிய, அடிப்படைவாத ஆர்த்தடாக்ஸ் கிறித்துவர் எவராவது பரட்டையின் வழிபாட்டில் பங்கேற்றுவிட்டால் அதைவிட தீட்டு அவருக்கு எதுவும் இருக்க முடியாது. தற்கொலை கூட செய்து கொள்வார். மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் அவரின் வழிபாடு நடந்து கொண்டிருக்கும்போது பலர் பாதியில் எழுந்து சென்று விடுவார்கள். சிலர் அப்பமாக கொடுக்கப்படும் அடையையும், ரசமாகக் கொடுக்கப்படும் இளநீரையும் வாங்காமல் தீண்டாமைப் பிடித்து வெளியேறிவிடுவர். 

இது ஏதோ தலித் அல்லாத சாதிக்கிறித்துவர் இருக்கும் பகுதியில் தான் நடக்கும் என்பதல்ல. சூடோ தலித்துகள் இருக்கும் இடத்திலும் நடக்கும் என்கிற ஒரு நிகழ்வு அண்மையில் பண்ருட்டி நாட்டுப்புற வழிபாட்டிலும் நிகழ்ந்தது. வழிபாடு நடந்துகொண்டிருக்கும்போது இடையில் வரும் திருவிருந்து எனப்படும் அப்பம், ரசம் பரிமாறப்படும்போது ஆயராக இருப்பவர் மட்டுமே அதனை ஆசீர்வதித்து மக்களுக்கு வழங்குவார். இந்த பரிகாரங்களெல்லாம் பொதுவாக பரட்டையின் வழிபாட்டில் எப்போதும் பின்பற்றப்படுவதில்லை. அதனை அவர் ஒரு பொருட்டாக எண்ணியதுமில்லை. அப்படியிருக்கையில் அந்த கருமாந்தரத்தில் தான் அன்புசெல்வமாகிய நானும், ஆயர் உடை அணியாமல் பரட்டையை மனதில் நினைத்து வழிபாட்டில் பங்கேற்றேன். ஏற்கனவே பரங்கிப்பேட்டையில் நடந்த வழிபாட்டிலும் இவ்வாறு பங்கேற்றுள்ளேன். இதுபோன்று பல வழிபாட்டிலும் அன்யூனிஃபாமில் பங்கேற்றிருக்கிறேன் .இங்கேயும் அதிகாரந்திண்ணும் கிறித்துவ புரோகிதர்களும், அவர்களின் பிற்போக்குவாதிகளும் பங்கேற்பார்கள் என்பது யாரும் எதிர் பாராதது. நானும் கூட. வழிபாடு நடந்துகொண்டிருக்கும்போதே 30-40 ஆண்டுகளில் நன்றாகக் குந்தி திருச்சபையின் மேலாதிக்கங்களை அனுபவித்துவிட்டு, எந்த இறையியல் மாற்றத்துக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளாத சிலருக்கு வழிபாட்டில் கிறித்துவின் கர்ப்பக்கிரகம் கலைந்துவிட்டதாகவும், அதில் பங்கேற்ற கிறித்துவப் புரோகிதர்களுக்கும் அது ஒரு அப சகுனம் ஏற்பட்டு விட்டதாகவும் விதந்தோதி, அதை என்னிடம் வாய் கூசாமல் எச்சரிக்கையாக விளக்கினார்கள். அங்கிருந்து என்னையும் வெளியேற்றினார்கள். அந்த வெளியேற்றம் என்னை எந்த பாதிப்பிற்கும் உட்படுத்தவில்லை. காரணம் கிறித்துவத்தின் எந்த மேலாதிக்க அதிகாரத்தையும் பரட்டையைப் போன்று மதிப்பதில்லை.

முனைவர்.அருள்பணி.பீட்டர் பால் தாமஸ் ம‌ற்றும் அருள்பணி. கென்னடி ஆகியோரை நான் கேட்கிறேன். பரட்டையைப் பற்றி அதிகம் தெரியாத திருச்சபை மக்களே இந்த வழிபாட்டைப்பற்றித் தெரியாமல் விதந்தோதியிருந்தாலும் கூட, அதற்காக படித்து, அதையே முழுநேரப் பணியாக செய்துகொண்டிருக்கும் பரட்டையின் உண்மையான மாணவர்க‌ளாகிய நீங்களாவது உங்களிடம் முரண்பட்ட, திருச்சபையின் நலன்களை 40 ஆண்டுகள் அனுபவித்த  அந்த பிற்போக்கு அடிப்படைவாதியிடம் எடுத்துச் சொல்லியிருக்கலாமல்லவா? இறையியல் ரீதியில் விளக்கியிருக்கலாமல்லவா? அது தானே பரட்டையின் சிறந்த மாணவர் என்பதற்கு சான்று. அதைவிட்டுவிட்டு ஒரு தூசுக்கு ஆகாத போயும் போயும் என்னை வழிபாட்டிலிருந்து வெளியேறச் சொன்னது நிச்சயம் எனக்கு துளியும் அசிங்கமல்ல. பரட்டையின் நாட்டுப்புறவியலுக்கு செய்த துரோகம் என்றே சொல்வேன்.   தஞ்சையிலும், பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மய்யத்திலும், மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையிலும் பரட்டைக்கு செய்யும் துரோகம் சாதித் திமிர் என்றால் அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? இருக்க  முடியும். அவர்கள் தங்களின் சாதி ஆட்டம் கண்டுவிடும் என அஞ்சுவதைப்போல நீங்களும் ஏதாவது ஒன்றுக்கு அஞ்சுகிறீர்களா? 

 தோழர். ஜான்சன் அசோக்குமார் அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் முன்னெடுக்கும் ஒவ்வொன்றும் திருச்சபையின் அதிகாரத்தை கேள்வி எழுப்பக்கூடியது என்பதை மனதில் கொள்ள வேண்டும். துணிச்சல் உள்ளவர்களால் மட்டுமே இதை செய்ய முடியும். திருச்சபையின் அதிகாரத்தை அவ்வாறு கேள்வி எழுப்பியவர்கள் பலர். ஒரு பெர்ட்ரன் ரசலைப்போல, ஒரு நார்மன் மெய்லரைப்போல, ஒரு செகுந்தோவைப்போல, கோல்கர் கெர்ஸ்டனைப்போல, ஒரு ஜோஸ் சரகாமாவைப்போல, ஒரு நிக்கோஸ் கசன்டாகிசைப்போல, ஒரு பால் சக்கரியாவைப்போல, ஒரு அய்சக் கதிர்வேலைப்போல, ஒரு தியான்சந்த் காரைப்போல இறையியல் ரீதியிலான அவமானங்களை தொடர்ந்து சந்திக்க வாழ்த்துகிறேன். ஏனெனில் இவர்கள் தான் வரலாற்றில் பேசப்பட்டார்கள். எதிர்த்தவர்களும், அவதூறு பேசியவர்களும் புல்லைப்போல பொசுங்கிப்போனார்கள்.   பரட்டை மட்டும் இந்த அவமாந்த்தைக் கேள்விப்பட்டிருந்தால் எங்கேயாவது முருங்கை மரம் பக்கத்தில் இருக்குதா பார் என்று நிச்சயம் கேட்டிருப்பார். அதில் தான் அவர் எதிர் பார்ப்பதெல்லாம் கிடைக்கும்.     


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

இன்றைய திருஅவை: இறையாட்சியின் இயக்கமா? ஓர் இறையியல் ஆய்வு

 

 

முன்னுரை:  வாழ்க்கை சில மனிதனைப் புரட்டிப் போடுகிறது. வேறு சில மனிதர்களுக்கு ஆசிரியத்தைக் கொடுக்கிறது. அப்படிப்பட்ட வேளையில் மனிதன் தேடத் தொடங்குகிறான். அந்தத் தேடலில் பல வகை உணர்வுகள் வருவதும் போவதுமாய் அமைகிறது. அது தனிமனித மாற்றத்தைக் கொண்டு வருகிறதுஅது சமூகப் போக்கையும் வரலாற்றையும் மாற்றும் தன்மையைக் கொண்டது. இக்கோணத்தில் திருஅவை ஓர் ஏக்கப் பெருமூச்சில் உருவான இறையாட்சி இயக்கம் தானாஎன்று எண்ணத் தோன்றுகிறது. அதுதான் என்னுடைய ஆய்வும் கூட.
 
முதல் அலகில் இன்றைய மக்கள் இயக்கம்அதன் வகைகள்குணநலன்கள்,செயல்பாடுகள்செயல்பாட்டிற்கு இட்டுச் செல்லும் வளங்கள் என்ன என்ன என்பதையும் இரண்டாம் அலகில் வரலாற்றில் இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் பற்றியும் இயேசுவின் இயக்கமும் அதன் செயல்பாடுகள் பற்றிய பார்வையும் தெளிவும் தேடலும். மூன்றாம் அலகில் இன்றைய திருஅவையின் தேவை இறையாட்சி என்ற கண்ணோடத்தில் இயேசுவின் இயக்கமும் திருஅவையும் ஓப்பீடு செய்து திருஅவையின் அவசியம் மாற்று திருஅவை என்பதை வலியுறுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அலகு ஒன்று
இன்றைய இயக்கமும் அதன் செயல்பாடுகளும்
இந்தியாவில் ஒட்டு மொத்தமாகவும் தமிழகத்தில் சிறப்பாக சமூக மாற்றத்தின் முன்னோடியாகவும் திகழ்வது மக்கள் இயக்கம். மக்கள் இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் அறிவு ஜீவிகள் யாராலும் புறக்கணிக்க முடியாது. ஜனநாயகப் பாதையில் செல்லும் இயக்கங்களும்,புரட்சிகரப் பாதையில் செல்லும் இயக்கங்களும் நடைமுறையில் இருக்கின்ற இரண்டுமே சமூக மாற்றத்தை முன்னிறுத்துவதாக அமைகின்றன.”  எனவே சமூகத்தின் அடிப்படை மாற்றத்திற்கு முக்கியக் காரணியாக இருந்து வரும் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளைப் பற்றிப் பார்ப்போம்
1.1          மக்கள் இயக்கம்:  
மாற்றத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் படியான கூட்டுச் செயல்பாடே இயக்கம்”  ஆகும். இயக்கம் என்ற சொல்லுக்குச் செயல்பாடு என்ற பதமும் உள்ளது. இயக்கம் பல்வேறு தன்மைகளைக் கொண்டது. ஓவ்வொரு இயக்கத்தையும் அதன் தன்மையின் அடிப்படையில் பிரிக்கலாம். சமூக இயக்கம்அரசியல் இயக்கம்கலைஇயக்கம்இலக்கிய இயக்கம். என்பவையாகும்.
1.2          இயக்கத்தின் அடிப்படை பண்புகள்
இயக்கம் இயக்கத் தன்மையில் இருக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையான பல பண்புகள் இருக்கின்றன. மனிதனைப் பண்புள்ள மனிதனாக மாற்றுவது அவனுடைய குணநலன்கள் அது போன்றுஓர் அமைப்பிற்கு அல்லது இயக்கத்திற்கு அடிப்படை பண்பு நலன்கள் தான் இயக்கத்தை வலுப்படுத்துகிறதுவளப்படுத்துகிறது.
1.2.1 பங்கேற்பாளார்கள்
தங்கள் உடைமையும்உழைப்பும்வாழ்வாதாரம் சுரண்டப்படும் போது,தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணரும் போது பாதிக்கப்பட்ட மக்கள் நடைமுறையில் உள்ள சமூகப் போக்கை எதிர்த்தும் புதிய மாற்றத்தைத் தேடும் மனிதர்கள் தான் பங்கேற்பாளார்கள். அநீதிக்கு எதிராகவர்க்கம்சமயம்சாதி போன்ற காரணிகளைத் தாண்டியே தங்களையே ஓர் அமைப்பாக மாற்றி” அதற்கு தங்களுடைய பங்களிப்பை ஏற்படுத்தும் போது சமூகபொருளாதாரஅரசியல்கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
1.2.2 அடிப்படை மாற்றம்
இயக்கம் தனக்கென்று ஓர் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கிறது. மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முதலில் சமூக கட்டமைப்புகளில் மாற்றத்தைக் கொணர வேண்டும். எந்த சமூகம் தங்களுடைய மரபுகளில் மாற்றத்தைக் கொணர்வது அதாவது புதிய வழிமுறைகளை பின்பற்றும் போது வளர்ச்சி அடைகிறது. இயக்கங்கள் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்குவதற்கு அல்ல மாறாகஇயக்கத்தின் அடிப்படை இலக்கு சமூகபொருளாதாரஅரசியல்கலாச்சாரத் தளத்தில் கொள்கை அளவில் மதிப்பீடுகள் அடிப்படையில் மாற்றத்தை எற்படுத்து”  ஆகும்.
1.2.3 பிரச்சனைகளை முறைப்படுத்துதல்
மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு அடுத்த நிலையில் வகுத்தும்,தொகுத்தும் வரையறை செய்யப்பட்டு முறைப்படுத்தப்படுகின்றன. இது சமயப் பிரச்சனைகள்பண்பாட்டுப் பிரச்சனைகள்சமூகப் பிரச்சனைகள் என்று முறைப்படுத்துவது இயக்கத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று.
1.2.4 கருத்தியல்
ஒவ்வொரு இயக்கத்திற்கும் கருத்தியல் என்பது முதுகெலும்பு போன்றது. கருத்தியல் இயக்கத்தை உயிரோட்டமுள்ளதாக மாற்றுகிறது. இது தான் இயக்கத்தின் இலட்சிய வேட்கை உருவாகக் கூடிய தளமாக அமைகிறது இலட்சியமாக மாறுகின்றது. எனவே கருத்தியல் எல்லா உறுப்பினர்களையும் ஒன்று சேர்க்க வேண்டும். அவர்களுள் ஈடுபாடடை வளர்க்க வேண்டும்அவர்களின் கூட்டு செயலை நியாயப்படுத்த வேண்டும் அவர்களுக்கு ஒரு தான்மையை வழங்க வேண்டும்.
1.3  இயக்கத்தின் வளங்கள்
இயக்கத்தை உருவாக்கி அதை வளர்த்தெடுக்க உதவும் செயல்பாடுகளே வளங்கள் என்கிறோம். வளங்கள் இயக்கத்தைச் சார்ந்ததாகவும் பிற வெளி உறுப்பினர்களை சார்ந்ததாகவும் அமையும். வளத்தை முறைமையாகப் பயன்படுத்தினால் இயக்கத்தின் செயல்பாடு வேரோட்டமாக அமையும். இவைகள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிகின்றன.
1.3.1  தகுதிவாய்ந்த தலைமை உருவாக்குதல்
மாற்றம் வேண்டும்மக்களின் நியாயமான உணர்வுகளுக்கும்,விருப்பங்களுக்கம் சொல் வடிவம் கொடுக்க அருள் கொடைத் திறனமைந்த தகுதி வாய்ந்த தலைமை தேவைப்படுகிறது. இத்தகைய தலைமையை உருவாக்கும் போதுதான் மக்களிடையே மாற்றத்திற்கான வேட்கை இயக்க ரீதியாக வடிவமும் வாழ்வும்பெறும். நான் என எண்ணுகிற மனிதர்களையெல்லாம் நாம் எண்ணக் கூடிய அளவுக்கு அதவிருப்தியான மக்களை ஒன்று திரட்ட ஒருங்கிணைந்த தலைவர் தேவை.
1.3.2 பிரச்சாரமும் ஊடகமும்
இயக்கத்தின் கருத்தியல் தொண்டர்களையும் வெகுஜனங்களையும் சென்று அடையுமாறு பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இயக்கத்திற்குத் தேவைப்படுகிறது. ஊடகங்கள் மக்களுக்கு இயக்கத்தின் இலட்சியத்தைச் சென்றடையச் செய்கிறது. அவர்களின் உணர்வலைகளோடு கலக்கிறது.” அந்த அளவிற்கு இயக்கத்தை வேரோட்டமானதாகவும் உயிரோட்டமாகவும் மாற்றி விடுகின்றன.
1.3.3 இயக்க கட்டமைப்பு
இலட்சியம் வரையறுக்கப்பட்டதால் மட்டும் இயக்கம் உயிர் பெறாது. அதை நிறைவேற்ற இயக்க கட்டமைப்பு என்பது முக்கியம்செயலாக்க உத்திகள் ஒவ்வொன்றும் இயக்கத்தின் வளங்கள் அது தான் இயக்கத்தை சிறப்பாக,தெளிவாக இருக்கிறதாஎன்பதையும்தலைவர்துணை தலைவர். மையகம்கிளையகம் செய்தி பரிமாற்றம் இவ்வியக்கத்தின் மிகப் பெரிய வளம். இதனை உருவாக்குவது இயக்க கட்டமைப்பு
                இவ்வாறு ஆள்வோரால் மறக்கப்பட்ட மக்கள் தேவைகளை சிறப்பாக நினைவுறுத்தி ஆள்வோரின் கவனத்தை அவற்றின் மீது ஈத்து ஒரு வெற்றிடத்தை இயக்கங்கள் நிரப்புகின்றன. மக்களுக்கு நடப்பு நிலையைப் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களை தேடலுக்கு உள்ளாக்குவதும் அவர்களை சமூக ஈடுபாட்டில் உருவாக்குவது”.  தேடலின் மூலம் புதிய சமூகம்வாழ்வுஉறவு போன்றவற்றைக் கொடுப்பதில் முன்மதியோடு இயக்கங்கள் செயல்படுவது. மேலும் இயக்கங்கள் அனைத்தும் பொது நலனில் அக்கறை கொண்டு அன்றாட நடைமுறை வாழ்வில் ஏற்படுகின்ற சிக்கல்களை தணிப்பதற்காகமுடிவுக்கு கொண்டு வருவதற்கு துணை புரியும் கருவியாக இயக்கங்கள் திகழ்கின்றன.
அலகு இரண்டு
இயேசு காலத்து இயக்கமும் அமைப்பும் இயேசு முன்வைத்த இயக்கமும்
இயேசுவின் காலத்தில் பல்வேறு வகையான அமைப்புகளும் இயக்ககளும் செயல்பட்டு வந்தன. இயக்கத்தின் செயல்பாடுகளைப் பார்த்து அவற்றை அன்றாட வாழ்வோடு உரசிப் பார்த்திருப்பார். வரலாற்றில் வாழ்ந்த இயேசுவுக்கு இந்த இயக்கங்கள் தான் உந்து சக்தியாக இருந்திருக்க வேண்டும். இயக்கத்தில் உள்ள நிறை குறைகளைப் பார்த்த இவர் எப்படிப்பட்ட ஒரு இயக்கத்தைத் தான் முன்நிறுத்த வேண்டும் என்ற தேடலும் தெளிவும் பெற்று இருப்பார்.
2.1 இயேசு காலத்து இயக்கமும் அமைப்பும்
இயேசு காலத்தில் காணப்பட்ட இயக்கம் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக அக்கால மக்களை வழிநடத்திய ஒன்றாகும். மக்களைச் சிந்திக்க விடாமல் மழுங்கடித்த செயல்பாடுகளும் நடைபெற்றன. அக்காலத்தில் இயேசு பலவற்றைப் பார்த்தார்ஆய்ந்தார்அறிந்தார்கற்றார் என்பது அவருடைய வாழ்வில் தென்படுகிறது. கீழ் காண்பவை அவர் வாழ்ந்த காலத்தில் செயல்பட்ட பல்வேறு இயக்கங்களும் அமைப்புகளும்.
2.1.1 பரிசேயர்கள்
பரிசேயர்கள்  பகட்டு நிறைந்தவர்கள்பாராட்டப் பெற்றவர்கள். மரபையும்,பழமையையும் கட்டிக் காப்பதற்காகச் செயல்படும் ஓர் இயக்கம். இயல்பில்லாததுஇயங்குதன்மை அற்றதுஇயந்திர தனமானது.” அவர்களைக் கேடுக்குள்ளானவர்கள் என இயேசு எச்சரித்தார்.
2.1.2 மறைநூல் வல்லுநர்
சட்டத்தைக் காட்டி மக்களை வாட்டியவர்கள். மக்களுக்குப் புரியாத சட்ட நுணுக்கங்களுக்கு வறட்டு விளக்கம் தந்தவர்கள். நிமிர முடியாதபடி சட்ட சுமைகளை மக்கள் மீது சுமத்தியவர்கள். இயேசு இவர்களையும் கேள்விக்கு உள்ளாக்கினார்.”  குருட்டு வழிகாட்டிகளே எனச் சாடினார் என்று மத்தேயு23 அதிகாரம் நமக்கு எடுத்துரைக்கின்றது.
2.1.3 குருக்கள்
இவர்கள் மக்கள் வாழ்வைத் தொடாத சடங்கு சம்பிரதாயங்களில் மட்டுமே சுகம் கண்டவர்கள். எதார்த்தங்களை வடிகட்டிய வழிபாட்டைக்காட்டி,மக்களை மழுங்கடிக்கும் மலட்டுச்  சிந்தனைகளை கொண்டவர்கள்.” மானிட நேயத்தை புறந்தள்ளிவிட்டவர்கள். இயேசு இவர்களையும் புறக்கணித்தார் (லூக்கா10: 25-37).
2.1.4 திருகாட்சியாளர்கள்
கனவுலகத்தைக் காட்டி மக்களைத் திசைத் திருப்பியவர்கள். மேலிருந்து விடிவு வரும் எனப் பக்திப் போதை ஊட்டியவர்கள்.”  வாழ்வின் சூழல்களையும்சிக்கல்களையும் சிந்திக்க விடாமல் பகுத்தறிவை மழுங்கடிக்கும் மயக்க நிலைக்கு இட்டுச் சென்றனர். (மத்தேயு7:15).
2.1.5 தீவிரவாதிகள்
இயேசு காலத்து அப்பாவிகள் மற்றும் அன்றாடங் காய்ச்சிகளை மூளைச்சலவை செய்தவர்கள். பகைமையும் பழி உணர்வுமே அவர்களது மூலதனம். கொலை கொள்ளையே அவர்களின் செயல்பாடு.”  இதுவும் இயேசுவுக்கு ஏற்புடையதல்ல.
2.1.6 திருமுழுக்காரின் இயக்கம்
இயேசுவுக்கு இதில் ஈடுபாடு உண்டு. சமயபொருளாதாரபண்பாட்டு மாற்றம் தேவை எனும் திருமுழுக்காரின் அர்பணத்தை அப்படியே ஏற்கின்றர்கள். அதை அடித்தளமாகக் கொண்டு தனது கோட்பாடுகளைக் கட்டியெழுப்புகிறார்கள். ஆனால் திருமுழுக்காரின் அழிவுதண்டனை,சுளகுகோடரிநெருப்புப் போன்ற சொல்லாடல்கள் மூலம் அச்சத்தை ஊட்டி மக்களை மனந்திரும்ப வைத்தனர்.
2.2 இயேசு முன்வைத்த இயக்கமும் அமைப்பும்
இயேசு முன் வைத்த இயக்கங்கள் தனி மனிதரைச் சார்ந்தது அல்ல மறாக சமூகத்தை சார்ந்தது. இயேசு காண விரும்பிய அமைப்பு முழு விடுதலைக்கான அமைப்பு. சமூகபொருளாதாரஅரசியல் விடுதலை மட்டுமல்லஅக விடுதலை மற்றும் ஒடுக்கப்படுவோரும் விடுதலையை வழங்கக் கூடிய அமைப்பையும் இயக்கத்தையும் முன்வைத்தார். அவற்றின் செயல்பாடுகளைப் பார்போம்.
2.2.1 சமூக விடுதலை
இயேசு வாழ்ந்த காலத்தில் யூத சமயத்தில் பல்வேறு பிளவுகள் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. பணக்காரன்சட்டம் தெரிந்தவன் உயர்வாகக் கருதப்பட்டனர். நோயாளிகள்வரி வசூலிப்பவர்விலைமாதர் என்று பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்ட மானிடர்களை இயேசு தம் நண்பராக்கிக் கொண்டார். இதனால் சமூக ஏற்பும் மரியாதையும் பெறுகிறார்கள். அவரது ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுதலை கிடைக்கிறது. மானிடரை பிரிக்கின்ற வறையறைகளைக் கொண்டு செயல்படுகின்ற அனைத்தையும் எதிர்த்தார். அவர்களின் வாழ்விலும் விடுதலைய உதயமாகச் செய்கிறார்.
2.2.2 சமய விடுதலை
இயேசுவின் காலத்தில் இருந்த சமய இயக்கங்கள் மக்களிடையே மூடபழக்க வழக்கங்களையும்மக்களின் சிந்தனைகளையும் மழுங்கடிப்பதாக அமைந்தது. எனவே அக்கால சமய சடங்குகள் அர்த்தமற்றதாய் இருந்தன.மக்களின் வாழ்வோடு தொடர்புடைய ஒன்றாக அமையவில்லை. அவர்களுடைய பலி முறைகளும் கடவுளுக்கு உகந்ததாக இல்லை. எனவே தான் இயேசு அவற்றை எதிர்த்தார்.”  மானுட நேயத்திற்கு எதிராக ஓய்வு நாள் சட்டம் இருந்தால் அதையும் மீறியவர். குணப்படுத்தினார் மக்களுக்கு அன்பு என்னும் விடுதலை தரும் சட்டத்தைக் கொடுத்தார்.
2.2.3 பொருளாதார விடுதலை
பொருளாதார விடுதலையே இயேசு முன்வைத்த இயக்கத்தின் கனவாக இருந்தது. பகிர்தலே இவற்றின் அடிப்படை தாரக மந்திரமாக அமைந்தது. பகிர்தலை இயக்கத்தில் வாழ்க்கை முறையாக்கினார். மனித உழைப்பிற்குக் கொடுக்க வேண்டிய கூலி திறமை அடிப்படையில் அல்லமாறாக தேவை அடிப்படையில் என்பதை உணர்த்தினார். மனித மாண்பை உருவாக்க கூடிய பொருளாதார விடுதலைக் கூறுகளைத் தன்னுடைய செயல்பாட்டில் வாழ்ந்து காட்டியவர்.
2.2.4 அரசியல் விடுதலை
இயேசுவின் காலத்தில் பல்வேறு ஆட்சிகள் நடைபெற்றன. மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்குக் குரல் கொடுத்தார். இயேசு ஒரு போதும் அவர்களுடன் சமரச பேச்சு நடத்தவில்லை. அடிமைநிலைஅடக்குமுறை,ஆதிக்க மனநிலை ஆகியவற்றை மூச்சோடு எதிர்த்தார். மனிதநேய உரிமைக்காக புரட்சிகரமான செயல்பாட்டில் மனித மாண்பை தூக்கிப் பிடித்தார்.”  இதுதான் உண்மையான உள்ளார்ந்த அரசியல் விடுதலைக்கான உளப்பாங்கு.
2.2.5 அக விடுதலை
அக விடுதலை என்பது  அவநம்பிக்கையிலிருந்து விடுதலை அளிப்பது. இயேசு பல்வேறு தீய ஆவி பிடித்திருந்தவர்களை குணப்படுத்தினார்,உள்மன காயங்களை ஆற்றினார். பல்வேறு பாதிப்புக்கு உள்ளான மனிதன் நிம்மதி இல்லாமல் தவிக்கின்ற போதும், “தாழ்வு மனப்பான்மையால் வருந்துகின்றவர்களோடு உரையாடியும்உறவாடி சமபந்தி விருந்துண்டும் அவர்களின் கவலை அச்ச உணர்வுகளிலிருந்து விடுதலை பெற இயேசு தூண்டுதலாக இருந்தார்.
                எனவேஇயேசுவின் காலத்து இயக்கங்கள் பழமை விருப்பிகளாகவும்மக்களின் சிந்தனையை மழுங்கடித்து அர்த்தமற்ற வழிபாடு கொண்டாடுவதாகவும் அமைந்தன. இயேசு காண விரும்பிய இயக்கங்கள் புரட்சிகரமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு சமூகம் மட்டுமல்ல மனித வாழ்வில் மாற்றம் கொண்டுவருவதே இயேசுவின் இயக்கம்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

அலகு மூன்று
இன்றைய திருஅவையின் தேவை: இறையாட்சி இயக்கம்
இன்று திருஅவை பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தாலும் கூட பல்வேறு வகையான முரண்பாடுகளும்சவால்களும் நிறைந்து காணப்படுகின்றன. திருஅவை பல்வேறு வளர்ச்சியைக் கண்டாலும் தளர்ச்சியும் சவாலும் நிறைந்த பணியாக தான் இருக்கிறது. இன்று திரு அவை சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை ஆய்வு செய்வோம்.
3.1 திருஅவையின் தளர்சியும் அதன் செயல்பாடும்
3.1.1 சாதிய உணர்வு
தாழ்ந்த சமுதாயத்தின் அத்தனைச் சீர்கேடும் திருச்சபையில் இருக்கும் போது சமுதாயத்தை செப்பனிட முடியுமாசாத்தியமாஎன்று கேட்டால் இல்லை என்ற பதில்தான் மிஞ்சுகிறது. அருட்பணியாளர்கள் மத்தியில் சாதிய மேகம் தலை விரித்து ஆடுகிறது. அவர்களை ஒருங்கிணைப்பதே பெரும் சவாலாக இருக்கின்றது. எப்பொழுது மக்களிடையே எழும் சாதிய மோதல்களை எப்படி திருஅவை முன்னெடுத்துச் செல்லும் என்பது கேள்வியாகவே இருக்கிறது.சாதிய அமைப்புகள் இருப்பது போல அருட்பணியாளரும் சாதிய உணர்வோடு ஆயருக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவதை நாம் பார்க்கின்றோம். சாதியத்தின் இரும்புப் பிடிக்குள் குருத்துவம் சிக்கித் தவிக்கின்றது. தமிழக திருஅவை நடைமுறை வாழ்வில் சாதியத் தாக்கம் கொண்ட குருத்துவம் வலம் வருகின்றது.
3.1.2 நிறுவன திருஅவை 
திருஅவை கிறித்தவ நிறுவனமாக தான் இருந்து வருகின்றது. திருஅவை தன்னுடைய கொள்கையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்ச்சிக்கின்றது.திருஅவை தன்னில் மாற்றத்தை ஏற்படுத்த முயலவில்லை. மாறாகஅதன் மரபில் செயல்பட விரும்பி செயல்பாடுகளை உருவாக்குகிறது. முக்களின் வாழ்வுக்குக் காட்டுவதற்குப் பதிலாக தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறது.
3.1.3 இறை அனுபவம்
 கிறித்தவ வழிபாட்டு செயல்கள் பல நேரங்களில் பயன் தரவில்லை. அர்த்தம் தர வில்லைஆழ்ந்த இறை நம்பிக்கைக்கு அழைத்து செல்ல வில்லை. இங்கு செயல்பாடற்ற நம்பிக்கை உயிரற்றது என்று யாக்கோபு கூறியது போல இன்று குருக்கள் மத்தியில் இறை அனுபவம் என்பதை கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.”  இறைமக்களுக்கு தேவையான இறைஅனுபவத்தை கொடுக்க மறுக்கின்றார்கள். தன் கடமையை சரிவர செய்வதில்லை. இதனால் பல மக்கள்  திருஅவையை விட்டு வெளியேறும் தன்மையை திருஅவை உருவாக்குகிறது.
3.1.4 மருத்துவ பணிகள்
உடலிலும் உள்ளத்திலும் மட்டுமல்ல சமூகத்திலும் நலவாழ்வு சிறக்க வேண்டுமென்பதே இயேசுவின் மருத்துவப் பணி.  ஆனால் இயேசுவின் மருத்துவப் பணியைப் போன்று நிறைவுள்ளதாக இன்றைய திருஅவையின் மருத்துவப் பணிகள் இல்லை. திருஅவையின் மூலம் வழிநடத்தப்படுகின்ற மருந்துவமனைகள் பணம் தான் முக்கியம் என்ற தன்மையில் செயல்படுகின்றன. பிறரன்பு என்பது கேள்விக்கு உட்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது.
3.1.5 கல்விப் பணி
                நமது கல்வி நிறுவனங்களில் சிறப்பாக பயன்பெறுவது ஏழை மக்கள் அல்ல என்பதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். இந்தியாவில் உயர்மட்டத்திலிருக்கும் பணக்காரன்அரசு அதிகாரிகள் பிள்ளைகள் 99சதவீதம் நமது கல்வி நிறுவனங்களில் தான் படிக்கிறார்கள். கல்விப் பணி கடவுள் பணி என்ற எண்ணம் வந்தகாலம் போய் பணம் தான் தெய்வம் என்றுச் சொல்லும் அளவிற்கு நமது கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
3.2 திருஅவையின் கடமைகள்
                ஆவியரால் நிரப்பப்பட்டுவழிநடத்தப்படும் திருச்சபை செபம்,வழிபாடுதியானத்திலே மட்டும் ஆழ்ந்திருப்பது போதாது. ஆவியாரால் உந்தப்பட்டுஇன்றைய உலகில் உள்ள கடமைகள் என்னஎப்படிச் செயலாற்ற வேண்டும் என்று உணர்ந்து ஆக்க வழிகளில் இறங்க வேண்டும். செயலற்ற செபம்செயலற்ற விசுவாசம் பலனற்றது. எனவே கிறிஸ்துவினுடைய பணியைச் சிறந்த முறையில் செயலாற்ற வேண்டும் என்பதை அறிய வேண்டும்.
3.2.1 விடுதலை
                யோர்தான் ஆற்றில் திருமுழுக்கின்போது ஆவியாரைப் பெற்றபின் கிறிஸ்துவின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவர் தமது பணியை லூக் 4:18-19-ல் எடுத்துரைக்கிறார். அவர் அளித்த தூய ஆவியார் இன்று திருச்சபையை வழிநடத்துகிறார் என்றால்எப்படித் திருச்சபையானது இன்றைய உலகின் ஏற்றத் தாழ்வுகளையும் அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் பார்த்துக்கொண்டு செயலில் இறங்காமல் இருக்க முடியும்ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டுஅவரால் வழி நடத்தப்படும் ஒவ்வொருவரும் இதற்கு எதிராகக் கிளர்ச்சிசெய்ய வேண்டாமா? “திருஅவை தனி நபரையோ அல்லது ஒரு குழுவையோ புனிதமாக்குவதோடு மட்டும் நிற்கக் கூடாது. அன்று இயேசுவை ஆவியார் இட்டுச் சென்றது போல் ஒவ்வொருவரும் சமூகத்தின் தீமைகளை எதிர்த்துப் போராட வேண்டும்.
3.2.2 பல்சமய உரையாடல்  
                நம்மில் குடிகொண்டிருக்கும் ஆவியாரை அறிவதோடு மட்டும் இந்த திருஅவை நின்றுவிடக்கூடாது. மற்ற மறைகளிலும் உண்மைகள் உள்ளன. மற்ற மறையினர் வாயிலாகவும் அவர் பேசலாம். அவர்களுடன் உறவு கொண்டுஉரையாடிஅவர்கள் மூலமாக இயேசு என்ன பேசுகின்றார் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஏனெனில், “மற்றவர்களைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும்ஆன்மீக வாழ்வில் மலர்ச்சி அடையவும்சகோதர அன்பில் நிலைத்துச் செயலில் இறங்கவும்” இத்தகைய உரையாடல்கள் நமக்கும் பெரிதும் உதவுகின்றன. என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும.
3.2.3 நற்செய்தி அறிவிப்புப்பணி
                “நற்செய்தி அறிவுப்பணி சிறந்த முறையில் நடைபெற திருஅவை முதுகெலும்பு போலச் செயல்படவேண்டும். கிறிஸ்துவ மறைபரப்புப் பணியின் ஆரம்பம்வளர்ச்சி முடிவு அனைத்துமே ஆவியாரின் செயல்தான். ஆகவே இது திருஅவையின் முக்கிய கடமையாகும்.”  ஆழமான உயிருள்ள நம்பிக்கை எங்குள்ளதோ அங்கு செப வாழ்வு மலரும்அன்பு தழைக்கும்,அருள் பெருகும். எனவே நம் நம்பிக்கை வாழ்வைநம் அருள் வாழ்வைநம் அன்பு வாழ்வைவலுப்படுத்த உதவும் அரிய கருவி என்பதை உணர்ந்து செயல்பட்டால் அது நிறைவு தரும்.
3.2.4 மனமாற்றம்
                கிறிஸ்துவை ஆண்டவராகவும்மீட்பராகவும் ஏற்றுக் கொள்பவர் மன மாற்றத்திற்குபுதிய மாற்றங்களுக்கு அழைக்கப்படுகிறார். தம் வாழ்வை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டியவராகிறார். எனவே கிறிஸ்து நம் வாழ்வின் மையமாகிறார். அவரது செயல்கள் நம்மை வழி நடத்துகின்றன. கிறிஸ்துவுக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்து வாழும்பொழுது ஏற்படும் உறவு ஆவியாரில் புதிய வாழ்வை அளிக்கிறது. இப்புதுவாழ்வு கிறிஸ்தவனின் அனுபவப் பொருளாக மாறுவதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
3.2.5 கிறிஸ்து மைய வாழ்வு
                திருஅவை கிறிஸ்துவை மையமாகக் கொண்டது. இனி வாழ்பவன் நானல்ல. கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலா 2:20) என்று புனித பவுல் கூறுவதைப் போல நாமும் கூறக்கூடிய நிலை தான் ஆன்மீக மறுமலர்ச்சி. கிறிஸ்துவைத் தன் வாழ்வின் மையமாகக் கொண்டு வாழ்ந்ததால்தான் ஆதித் திருச்சபையில் தங்கள் உயிரையும் பணயம் வைத்தார்கள்கிறிஸ்துவின் சாட்சிகளாக மடிந்தார்கள்.”  இன்று நாமும் இவர்களைப் பின்தொடர வேண்டும். நம்மையே மையமாகக் கொண்ட வாழ்வு மாற வேண்டும். இயேசுவின் இறையாட்சி விழுமியங்களை மையமாகக் கொண்ட வாழ்வு நம்மில் மலர உழைக்க வேண்டிய பொறுப்பு உண்டு.
3.3 அருட்பணியாளர் கடமைகள்
கத்தோலிக்க திருச்சபையின் அடித்தள அமைப்பு பங்கு என்பதாகும். இது தொடக்க காலத் திருச்சபையில் நிலவிய தோழமை அல்லது ஒன்றித்த கிறிஸ்தவ சமூகத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டது. ஆனால் இப்போது இந்தப் பங்கு அமைப்பு சீரிய முறையில் செயல்படுவதில்லை எனலாம்.
                “கத்தோலிக்க சமூகத்தில் தோழமைநட்புறவுஒற்றுமை போன்றவற்றை ஏற்படுத்தும் செயல்களில் திருச்சபை கவனம் செலுத்த வேண்டும். அதன் விளைவாக உறுப்பினர்களிடையே வாழ்க்கையில் முன்னேற்றமும்நம்பிக்கையும்நட்புறவும்ஒருமைப்பாடும் ஏற்பட வேண்டும்.”  கத்தோலிக்கர் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையான தோழமையை ஏற்படுத்தும் செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்.
                இதை நோக்காகக் கொண்டுஉலகின் பல பகுதிகளில் சிறு கிறிஸ்தவச் சமூகங்கள்அடித்தளக் கிறிஸ்தவச் சமூகங்கள்அருகருகிலான திருச்சபைச் சமூகங்கள்அன்பியங்கள் போன்ற பல பெயர்களுடன் அமைப்புகள் தோன்றியுள்ளன. இவற்றில் பல இங்கிருந்து ஒருவரும் அங்கிருந்து ஒருவருமாக வந்து பங்கு பெறும் அமைப்புகளாக விளங்குகின்றன. எனவே கூட்டம் முடிந்தபின்விரும்பிய தோழமை நிலைத்திருப்பதில்லை. ஆகவே பங்குகள் தெருவாரியாகவோ பரப்பளவு வாரியாகவோ பிரிக்கப்பட்டுஒவ்வொரு பகுதியிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கூடிச்செபிக்கவும்ஒருவரை மற்றவர் அறிந்து கொள்ளவும்கருத்துகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளவும்,உதவி செய்யவும்இவற்றின் விளைவாக உண்மையான தோழமையை வளர்க்கும் விதத்தில் குழுக்களாக அமைக்கப்பட வேண்டும். இக்குழுக்களின் உறுப்பினர்கள் அவ்வப்போது கூடி இறைவார்த்தையையும் அதற்குரிய விளக்கம் கேட்டலிலும்இறைவேண்டலிலும் அப்பம் பிடுவதிலும் உயிருள்ள விதத்தில் பங்கெடுத்துத் தங்களுள் உறையும் இறை ஆவியின் பிரசன்னத்தை அனுபவபூர்வமாக உணர முயற்சி எடுக்க வேண்டும். இக்குழுக்கள் வெறும் சமயக்குழுக்களாக மட்டும் செயல்படாமல்சமூக வளர்ச்சிக் குழுக்களாகவும் அமைய வேண்டும். தங்கள் பகுதியில் எழும் நிகழ்ச்சிகளையும் பிரச்சனைகளையும் பற்றிய கருத்துப்பரிமாற்றமும்,அவற்றைச் சீர்ப்படுத்தும் கூட்டு முயற்சியும் இடம்பெற வேண்டும். பொருள் வளமுடையோர் வறியவர்களுக்கு உதவி செய்யவும்முடிந்தவர்கள் பிறர் தேவைகளில் உதவிசெய்வும் இக்குழுக்கள் வழிகாட்ட வேண்டும். அதன் விளைவாகப் பொருளாதாரம் சாதி போன்ற வேறுபாடுகளையும் கடந்து ஒருமனத்தோராய் இருக்க இக்குழுக்கள் முயல வேண்டும். அப்போதுதான் கத்தோலிக்கரிடையே தனிமைஒதுக்கப்படுதல் போன்ற நிலைமாறிபிறரை நன்கு அறிந்துஉண்மையான நட்புறவிலும் தோழமையிலும் ஒன்றித்து வாழ வழி பிறக்கும்.
அலகு நான்கு
இறையாட்சி இயக்கத்திற்கான பரிந்துரைகள்
4.1 அருட்பணியாளர்களின் பணிகள்
 கத்தோலிக்க அருட்பணியாளர்களின் பணியானது விளிம்பு நிலை மக்களைத் தேடிச் சென்று மீட்பளிக்க வேண்டிய பணியாக உள்ளது.
 இயேசுவின் முக்கிய பணியானது அங்குள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களோடு பந்தியில் அமர்ந்து அவர்களின் தேவையை நிறைவேற்றுவது. அது போன்று அருட்பணியாளர்கள் கூட்டத்திற்கு வந்து செபிப்பதைவிட இல்லங்களுக்குச் சென்று செபித்தல் மிக முக்கியமான ஒன்று. குடும்ப செபத்திலும்இல்லங்களை சந்திப்பதிலும்உறவுகளை வளர்த்துக் கொள்வதிலும் தூய ஆவியானவர் நம் அனைவரையும் வழிநடத்துகிறார் என்ற உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும்.”
 பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருத்தாலும் ஆண்களின் ஆதிக்கமும் அதிகமாக இருக்கிறது. மேலும் சாதிய உணர்வுகளைத் தாண்டி கடவுள் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற உணர்வை வளர்க்க வேண்டும். இயேசு சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முயற்சி எடுத்தார். அதேபோல் சமத்துவ சமுதாயம் நிலைநாட்ட முயற்சிகள் எடுக்க வேண்டும்.
“இறையாட்சி விழுமியங்களை உள்வாங்கி செயல்படுத்த வேண்டும். கத்தோலிக்க திருஅவையில் உள்ள திருமுழுக்குப் பெற்ற அனைவரும் செய்ய வேண்டிய அடிப்படை கடமையாக வாழ்வில் கொள்ள வேண்டும்.” அதற்கான பயிற்சிகளைக் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வழியாகவும் இளையோருக்கு இளையோர் பாசறை வழியாகவும்குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அன்பியத்தின் வழியாகவும் கற்றுக் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திருஅவைக்கு உண்டு.
 பணிப் பகிர்வு தேவை என்பதை மனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
  இறை அனுபவத்துடன் செயல்பட்டால் தான் இறையரசுப் பணியை இம் மண்ணில் நிலைநாட்ட முடியும். இவ்வாறு செயல்படும்போது ஆழமான விசுவாசம் உண்டாகும்.
அனைவரும் விவிலியம் அறிவோம் என்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கும் விவிலிய வகுப்புகள் எடுக்கும்போது இறைமக்களிடம் உள்ள இறைவார்த்தையின் மீதுள்ள தாகம் அதிகரிக்கும். இதைத்தான் இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுகிறது, “காலத்தின் அறிகுறிகளைத் தேர்ந்து தெளிந்து நற்செய்தியின் ஒளியில் அவற்றின் பொருளை எல்லாக் காலக்கட்டங்களிலும் விளக்கி உரைப்பது திருச்சபையின் கடமையாகும்.
அன்பியத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் அன்பிய விழா மூலம் அன்பியத்தில் உள்ள குடும்பங்களை அன்புறவில் வலுப்படுத்த வேண்டும்.
 செபக்குழுவை அமைத்து பங்குகளில் உள்ள எல்லா வீட்டிற்கும் சென்று செபிக்கத் தூண்டுதல். மேலும் ஆலயத்தில் எல்லாரும் ஒன்றாகஒரே குடும்பமாக செபிக்க ஏற்ற தளத்தை ஏற்படுத்துதல்.
நோயாளிகளைச் சந்தித்தல்தேவையில் இருப்போருக்கு உதவுதல் போன்ற உதவியைச் செய்யும்போது இறையரசைக் கட்டியெழுப்பும் கருவியாக அனைத்துச் சபைகளும் செயல்படும். இவ்வாறு நமது குருத்துவம்அமைப்பு முறைகள்வழிபாடுகள்இறையியல் மேய்ப்புப்பணி முதலியவற்றை மறுவரையறை செய்வதே முதல் கட்டப்பணியாக இருக்க வேண்டும்.
4.2 அருட்பணியாளர்களின் முன்னெடுப்புகள்
அன்பியம் உருவாக்குதல்: பயிற்சி அளித்தல்தொடர் வழிகாட்டி நியமித்தல்.
சிறார் பாராளுமன்றமசிறுவழி இயக்கம்பாலர்சபைஇளைஞர் இயக்கம் முறைப்படுத்தி செயல்படுத்த வேண்டும்.
மக்கள் வங்கி நடைமுறைப் படுத்துதல் (பங்குவங்கி உருவாக்கி நடத்தப்பட வேண்டும்.)
பங்களவில் மாதாந்திர இதழ் உருவாக்குதல்
தொட்டில் குழந்தைத் திட்டம் (ஊரில் உள்ள வசதி குறைந்த குழந்தைகளைக் கட்டி எழுப்புவது)
தன்னிறைவுத் திட்டம் (ஊர் திருவிழாவின் போது குறிப்பிட்ட வருவாயை ஊர் நலனுக்காக பயன்படுத்தவது).
வேலைவாய்ப்புச் செய்திகளைக் கண்டறிந்து மக்களுக்கு உதவுதல்.
மாணவர்களுக்குமஇளைஞர்களுக்கும் வாழ்க்கை வழிகாட்டல் பயிற்சி கொடுத்தல்
மக்களின் பங்கெடுப்பு அதிகமாக்கப்பட வேண்டும். மக்களை பயன்படுத்தி செயல் திட்டம் தீட்டுதல்
சபைகள்இயக்கம் மற்றும் ஊரில் உள்ள அனைத்து அமைப்புகளிலும் குறுகிய மற்றும் நீண்ட ஆண்டு திட்டம் உருவாக்க வேண்டும்.
முடிவுரை
முறையோடு உழைத்துண்ண முடியாத சோம்போறி
நரி போலத் திரிவார் புவி மேலே – நல்ல
வழியோடு போகின்ற வாய்பேசா
உயிர்களை வதச்சு வதச்சு தின்பார் வெறியாலே – பட்டுக் கோட்டையார்
ஒரு சமூகத்தை விமர்சனப் பார்வையோடு அலசுவதும் எதிர் நீச்சல் போடுவதும் தோழமை உணர்வை வளர்ப்பதும் போன்ற பண்புகளைக் கொண்ட ஒரு சமூகம் உருவாக வேண்டும். ஆதிக்கத்திற்கு எதிரான சமத்துவம்மனித நேயம்நீதி  இவற்றின் அடிப்டையில் செயல்படத் தூண்டி சமூக மாற்றத்தையும் நேர் மறையான சிந்தனைகளையும் விதைக்க வேண்டும். சமூகத்தில் புரட்சி ஏற்பட வேண்டும். புதிய சமூகத்தை உருவாக்குவது நமது சமூகப் பொறுப்பு என்பதை ஏற்க வேண்டும். சமுதாய மாற்றுச் செயல்பாட்டாளர்களாக வாழ வேண்டியது நமது சமூக கடமை என உணர்ந்து செயல்பட வேண்டும்
பொய்மைக்கும் புரட்டுக்கும்மௌன சாட்சிகளாக இருப்பதை விட புதுமைக்கும் புரட்சிக்கும் இரத்த சாட்சிகளாக  மாறுவோம் - தந்தை பெரியார்.
 
துணை நின்ற நூல்கள்
புத்தகம்
1. மரியஅருள். புதுயுகம் புதுஇனம். சென்னை: இதயவெளியீடு, 1985.
2.க்ரியா. தற்கால தமிழ் அகராதி. சென்னை: இந்திய அரசு கல்வித்துறை,1992.
3.இன்றைய உலகில் திருச்சபைஇரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள்,தொகுப்பு. பவுல் லியோன் (திருச்சி: தேடல் வெளியீடு, 2008), எண். 4.
4.மரிய அருள் ராஜா. திருச்சபையும் தலித் மக்களும். சென்னை: அமைதி வெளியீடு, 2010. 159
5.மிக்கேல். விடுதலை விழிப்புகள். திருச்சி: தமிழக சமூக பணி மையம்,1999.

கட்டுரைகள்
6.பிரேமா வாக்கயில். பவுலின் பர்வையில் பல்சமய-சபை உரையாடல். இரண்டாயிரத்தில் பவுல். தொகுப்பு. ரெய்மண்ட் ஜோசப். திருச்சி: தேடல் வெளியீடு, 2009.
7.பீட்டர். திருநிலைக் குருத்துவத்தின் கூறுகள். இறையாட்சி இறையாட்சி. தொகுப்பு. செல்வராசு. திண்டுகல்: வைகறைப் பதிப்பகம், 2005.
8.செபஸ்தியான். மக்கள் இயக்கங்களை வளர்தெடுக்க உதவும் வளங்கள். எழுச்சி பெறும் மக்கள் சக்தி. தொகுப்பு. செல்வராசு . திருச்சி: தேடல் வெளியீடு, 2013.
9.எரோணிமுஸ். இயேசுவின் ஆன்மிகம். பாறையை பிளக்கும் வேர்கள். தொகுப்பு. செல்வராசு . திருச்சி: தேடல் வெளியீடு, 1996.
10. அமலதாஸ். விடுதலைவாழ்வு. மறைஅருவி 3/2 (1979), 39-50
11.எரோணிமுஸ்,“இயேசுவும் அவர் காலத்து தீவிரவாதிகளும்”,மறைஅருவி6/4 (1982), 1-9
12.மரிய அருள் ராஜா,அருட்பணியை அகழ்ந்து ஆராயும் மக்கள் மைய நிதானம்பெந்தக்கோஸ்தே இயக்கங்கள். தொகுப்பு.நசரேன் (சென்னை: இதய வெளியீடுகள் 11, 2007), 127.
13.லியோன் தர்மராஜ். மறைமாவட்ட அருட்பணியாளரின் ஆன்மிகம். இறையாட்சி இறையாட்சி.  தொகுப்பு.செல்வராசு (திண்டுகல்: வைகறைப் பதிப்பகம், 2005), 172
14.சுந்தரி மைந்தன்திருஅவை-ஓர் இயேசு இயக்கம். பெந்தக்கோஸ்தே இயக்கங்கள். தொகுப்பு. நசரேயன் (சென்னை: இதய வெளியீடுகள் 11,2007), 109
15. ஆரோக்கியதாசு. தலித் இயக்கங்கள்: ஓர் அலசல்”,அன்னம், 9/3 (1996), 15


-- Edited by Admin on Wednesday 1st of July 2015 02:56:14 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard