1968ல் நடந்த கீழ்வெண்மணி படுகொலை பற்றி எல்லோருக்கும் தெரியும். அதில் ஈவெரா கம்யூனிஸ்ட்கார ர்களை குற்றம்சாட்டி அறிக்கைவிட்டதோடு அவரது வேலை முடிந்துவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு அங்கு ஒரு தம்பதியினர் செய்த தியாக வேள்விகள் இன்னும் மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்டதாக இருக்கிறது.
படுகொலை நிகழ்த்தப்பட்ட மறுநாளே (டிசம்பர் 26)அந்த கிராமத்திற்கு தம்பதியில் ஒருவர் சென்று பார்த்தார்.
ஒருபடி நெல் கேட்டதற்கே கொளுத்தப்பட்ட 44 தலித்துகள் வாழ்வில் சொந்தமாக நிலத்தை நினைத்துப் பார்த்திருக்க முடியுமா?
கீழ்வெண்மணியில் 74 தலித் குடும்பங்கள் அப்போது இருந்தன. 74 குடும்பங்களுக்கும் ஒரு ஏக்கர் நிலங்களை பெற்று தந்தவர்கள் இந்த தம்பதியினர். அதுவும் இரண்டே வருடங்களில். வினோபாவின் பூமிதான இயக்கத்தின் மூலம் இந்த தம்பதியினர் செய்த மகத்தான வேலை அது. கீழ்வெண்மணி தலித் மக்களுக்கு இவர்கள் சிவனும் பார்வதியும் போல என்று சொல்கிறார்கள்.
இந்த தம்பதியினர் செய்த போராட்டங்கள் பல. அதற்காக அவர்கள் பட்ட கொடுமைகள், கஷ்டங்கள் அதைவிட அதிகம்.
யார் அந்த தம்பதியினர்?
ஒருவர் பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். விளிம்புநிலை மக்களின் மகத்தான போராளி. இவருடைய வரலாறும் மறைக்கப்பட்டதாகவே இருக்கிறது.
மற்றொருவர் இவருடைய கணவர் சங்கரலிங்கம் ஜகந்நாதன். இவர் பிராமணர். நான் படித்த புத்தகத்தில் இவர் பிராமணர் என்று சொல்லப்படவில்லை. கீழ்வெண்மணி படுகொலைக்குப் பிறகு நடந்த நாயுடு படுகொலையை வைத்து திரு. பாட்டாளி என்பவர் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவர் போராளி கிருஷ்ணம்மாள் அவர்களை சந்தித்துப் பேட்டி கண்டிருக்கிறார். போராளி கிருஷ்ணம்மாள் சொன்னதுதான் என்று அவர் என்னிடம் கூறினார்.
இந்த தம்பதியினரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு புத்தகம் கத்தியின்றி ரத்தமின்றி என்ற தலைப்பில் விகடனில் வெளிந்திருக்கிறது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த லாரா கோப்பா என்பவர் எழுதியிருக்கிறார். தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். இந்த புத்தகத்தைப் பற்றி முதன்முதலில் எனக்கு சொல்லியவர் திரு. ஆர்யத் தமிழன் அவர்கள்தான். அதற்குப் பிறகு திரு. பாட்டாளி சில விஷயங்களைச் சொன்னார். பாட்டாளி அவர்கள் கம்யூனிசத்தில் இருந்தவர். இப்போது இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அதைப் பற்றி நானும் கேட்கவில்லை. அவரதும் சொல்லவில்லை. அவர். பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். நான் வயதில் சிறியவன் என்று பார்க்காமல் எனக்குப் பல தகவல்களை சொன்னார். கோபாலகிருஷ்ண நாயுடு கொலை பற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் பொய்ப்பிரச்சாரம் விரைவில் உடையும். அதற்கான தகவல்கள் பல சொன்னார். விரைவில் அது பற்றி ஆதாரத்தோடு எழுதுகிறேன்.
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் (பிறப்பு: 1926) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சேவகி மற்றும் போராளி. இவரும், இவரின் கணவர் சங்கரலிங்கம் ஜெகந்நாதன் இருவரும் சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போரடினர். தலித் மக்களின் முன்னேற்றத்திற்கும், நிலமற்ற விவசாய கூலிகளுக்கு நிலத்தை பெற்றுத்தருவதிலும்,சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் போராடி ஏழை மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆரம்பத்தில் இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற இவர் தன் கணவருடன் வினோபா பாவேயின்பூமிதான இயக்கத்தில்பங்குகொண்டார். தன்னுடைய உயரிய சேவைக்காக 2008ல் Right Livelihood Award விருதைப்பெற்றார்.
1926 ஆம் ஆண்டு சூன் மாதம் 16ஆம் நாள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி கிராமத்தில் நிலமற்ற தலித் குடும்பத்தில் ராமசாமி-நாகம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் கிருஷ்ணம்மாள். இவருடன் சேர்த்து மொத்தம் 12 குழந்தைகள். பட்டிவீரன்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு வரை படித்தார். மதுரையில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார் அங்கு ஆங்கில கல்வி பயின்றார். டிவிஎஸ் ஐயங்காரின் மகளான செளந்திரம்மாளின் இலவச இல்லத்தில் சேர்ந்தார். அதன் பிறகு அமெரிக்கன் கல்லூரியில் படித்தார் அப்போது மதுரை மாவட்டத்தின் முதல் பெண் பட்டதாரியாக கிருஷ்ணம்மாள் திகழ்ந்தார்[1][2]
ஏழ்மை மற்றும் சமூக நீதி பற்றிய ஆர்வம் வர இவரது தாயார் நாகம்மாளின் பேறுகால இன்னல்கள் காரணமாக இருந்துள்ளன. [3]ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த போதிலும் அவர் பல்கலைக்கழக கல்வி பெற்று காந்தியம் மற்றும் சர்வோதய இயக்கம் ஈடுபட்டிருந்தார். அங்கு சர்வோதயாவில் பணி செய்த சங்கரலிங்கம் ஜெகன்னாதனைக் கண்டார், பின்னாளில் அவரது மனைவியானார். சங்கரலிங்கம் ஜெகன்னாதன் வளமையான குடும்பத்தினைச் சேர்ந்தவராக இருந்தாலும் 1930ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்க அறைக்கூவலுக்கு செவிமெடுத்து அதில் பங்கு பெற்றார். [1] ஒரு கட்டத்தில் கிருஷ்ணம்மாள் காந்தியுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார்.[3] மேலும் அவர் 1958ல் மார்டின் லூதர் கிங்கை சந்தித்துள்ளார். [4] 1942ல்வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்து பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். [1]சுதந்திர இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த சங்கரலிங்கம் மற்றும் கிருஷ்ணம்மாள் 1950ல் சூலை மாதம் 6 ஆம் நாள் திருமணம் செய்து கொண்டனர்.[3]. பின்னர் அவர் 2006ல் வேதாரண்யத்தில்உப்பு சத்தியாகிரகத்தின் பவள விழாவிற்குத் தலைமை தாங்கினார்.[5]
1950 மற்றும் 1952 இடையே இரண்டு ஆண்டுகளாக சங்கரலிங்கம் ஜெகநாதன் வட இந்தியாவில் வினோபா பாவே பூமிதான இயக்கத்தில் பங்கு கொண்டார். அப்போது ஆறில் ஓரு பங்கினை நிலமற்றவர்களுக்கு தங்கள் நிலங்களிலிருந்து நிலக் கொடையாக வழங்க நிலப்பிரபுக்களைக் கேட்டுக்கொண்டு வினோபா பாவேவுடன் பாத யாத்திரையாக சென்றார். இதற்கிடையில் கிருஷ்ணம்மாள் தனது ஆசிரியர் பயிற்சியினைச் சென்னையில் முடித்தார்.
கிராமத்தில் உள்ள ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதும்,நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்குவதன் மூலம் காந்திய சமுதாயத்தை உருவாக முடியும் என்று உறுதியாக நம்பினார்கள். உழுபவருக்கு நிலம் (Land for the Tillers' Freedom (LAFTI) திட்டத்தை 1981 ல் தொடங்கினார்கள். கடலோரத்தில் சூழ்நிலை சீர்கேட்டை ஏற்படுத்தும் இறால் பண்ணைகளை மூடப் போராடினார்.
நாகை மாவட்டத்தில் கீழ வெண்மணி என்னும் சிற்றூரில் 42 தாழ்த்தப்பட்ட உழவுத் தொழிலாளர்கள் உடலுடன் கொளுத்தப்பட்ட நிகழ்ச்சி 25-12-1968இல் நடந்தது. அக்கொடுமையைக் கண்டு "உழுபவனின் நில உரிமை இயக்கம்" (லாப்டி) என்னும் அமைப்பைத் தொடங்கினர். இறால் பண்ணைகளுக்காக விளைநிலங்கள் காவு கொடுக்கப்படுவதை எதிர்த்துப் போராடினார்கள்.
2013 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தம் கணவர் மறைந்த பின்னரும் சேவையே வாழ்க்கை என்று உழைத்து வருகிறார் கிருஷ்ணம்மாள். அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.