
உங்களிடம் சில வார்த்தைகள்…!
இந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர் கண்டிப்பாக ஒரு பிராமணராகத்தான் இருக்க முடியும் என்ற எண்ணம்தான் முதலில் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு. ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி எழுதியிருக்கும் நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன்.
நான் முதன்முதலில் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த எண்ணம் இதுதான்:
* ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழுக்காகப் பாடுபட்டவர்
* தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தொண்டாற்றியவர்
* பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்
* பொய் பேசாதவர்; முரண்பாடு இல்லாதவர்
இந்த எண்ணத்தின் காரணமாக ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள, கிட்டதட்ட 90 சதவீத புத்தகங்களைப் படித்தேன்.
அது மட்டுமல்லாமல், ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சமகாலத்தோடு வாழ்ந்த ம.பொ. சிவஞானம், ப. ஜீவானந்தம், தெ.பொ. மீனாட்சி சுந்தரம், உ. முத்துராமலிங்கத் தேவர், கி. ஆ. பெ. விசுவநாதம், அண்ணாத்துரை, காமராஜர், பாவாணர் போன்றவர்களெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் முரண்பாட்டை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய புத்தகங்களையும் படித்தேன்.
அதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ- அந்த கருத்திற்கு-அந்த எண்ணத்திற்கு முரண்பாடாக ஈ.வே. ராமசாமி நாயக்கர் செயல்பாடும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டேன்.
அடுத்து, தாழ்த்தப்பட்ட சமூகத்துக்காக உழைத்த, ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி விமர்சித்து ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் எழுதலாமா?- இந்த எண்ணமும் சிலருக்குத் தோன்றும். அது இயற்கை.
ஈ.வே. ராமசாமி நாயக்கர் உயிருடன் இருக்கும்போது தலித் தலைவர்கள், தலித் எழுத்தாளர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரை தாழத்தப்பட்டவர்களுக்கு விரோதி என்ற தன்மையில் சாடி வந்திருக்கின்றனர். இப்பொழுதும் தலித் தலைவர்கள், தலித் எழுத்தாளர்கள் அவரை தாழத்தப்பட்டவர்களுக்கு விரோதி என்ற தன்மையில் சாடி வருகின்றனர்.
ஈ.வே. ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார் என்று சொல்லும்போது, அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்ல தாழத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த எனக்கு உரிமையுண்டு.
அதேபோல ஈ.வே. ராமசாமி நாயக்கரால்தான் தாழ்த்தப்பட்டவர்கள் சமூகக் கொடுமைகளிலிருந்து விடுதலையடைந்தார்கள், சமூகத்தில் முன்னேற்றம் கண்டார்கள் என்று சொல்வார்களேயானால் அது வடிகட்டினப் பொய் என்பதை என்னால் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியும். ஷட்டாவதானம் வைரக்கண் வேலாயுத புலவர், பண்டிதர் அரங்கையதாஸ், பண்டிதர் க. அயோத்திதாஸ், வேம்புலி பண்டிதர், ஏ. பி. பெரியசாமி புலவர்,முத்துவீர நாவலர், ராஜேந்திரம் பிள்ளை, திருசிபுரம் பெருமாள், தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், ஜான் ரத்தினம் கோலார் ஜி. அப்பாதுரை, புதுவை ரா. கனகலிங்கம், என். சிவராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்) டாக்டர் அம்பேத்கர் போன்றவர்களெல்லாம் தாழத்தப்பட்டவர்களுக்கு செய்த நன்மைகளில் 1 சதவீதம்கூட ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்ததில்லை என்பதுதான் சரித்திரம் நமக்குக் காட்டுகிறது.
ஆகவே தாழ்த்தப்பட்ட சமூகத்தவனாகிய நான் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப்பற்றி எழுதலாமா என்ற கேள்வி எழும்பினால் அந்தக் கேள்வி வெறுப்பினால் எழுப்பப்பட்ட கேள்வியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இந்தக் கேள்வியை விட்டுவிட்டு நான் ஆதாரம் இல்லாமல் எழுதியதாக யாராவது கருதினால் அவற்றைச் சுட்டிக் காட்டலாம்.
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்பித்துள்ள அவரது அடியார்கள் அவருடைய மறுபக்கத்தை மூடிமறைத்து விட்டார்கள்.
ஆகவே, அவர்கள் மூடிமறைத்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மறுபக்கத்தை நான் பாரத தேசத்தின் ஒரு நல்ல குடிமகனின் கடமையெனக் கருதி இந்தப் பண்யை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு இன்று கொண்டுவந்திருக்கிறேன். மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் காலத்திலேயே அவரை விமர்சித்த ம. பொ. சிவஞானம், ப. ஜீவானந்தம், தெ. பொ. மீனாட்சி சுந்தரம், உ. முத்துராமலிங்கத் தேவர், கி. ஆ. பெ. விசுவநாதம், அண்ணாதுரை, காமராஜர்,பாவாணர் ஆகியோர்களின் எழுத்துக்களை கட்டுரைகளின் நடுவிலும், பின்னிணைப்பாகவும் தந்திருக்கிறேன். இவை எல்லாம் என்னுடைய கருத்துக்களுக்கு ஆதாரம் சேர்ப்பவை.
இந்த நூலைப் படித்து நான் எழுதியிருப்பது சரிதான் என்று திராவிடர் கழக மாயையில் இருக்கும் தோழர்கள் ஒருவராவது ஏற்றுக் கொள்வாரானால் அதுவே இந்த நூலுக்கு உண்மையான வெற்றியாகும்.
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற நூல் ஒன்று வெளிவர இருக்கிறது என்பதை அறிந்து, ஈ.வே. ராமசாமி நாயக்கரை கடைசிவரை எதிர்த்த ஆன்மீகத் தங்கம் முத்துராமலிங்கத் தேவரின் அடியை ஓற்றி, இந்த புத்தகம் வெளிவர உதவியவர் பாரதீய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் கே. ஏ. முருகன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் உரித்தாகுக.
நான் இந்த நூல் எழுத எண்ணம் கொண்டதிலிருந்து பல நூல்களை எனக்கு வாங்கித் தந்து பல உதவிகளைச் செய்த எனது நண்பர் திரு. பிரகாஷ் எம். நாயர் அவர்களுக்கும், எனது ஆசான் என்று சொல்லக்கூடியவரும் என்னை ஊக்கப்படுத்தியவருமான திரு. பாலசுப்ரமணியன் அவர்களுக்கும், மற்றும் எனது நண்பர்கள் ஜி. சுரேஷ்குமார், சி. அரிசங்கர்,ஆர். நாகராஜ், எம். மணிகண்டன், ஏ. நெப்போலியன் ஆகியோர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.
- ம. வெங்கடேசன்.
(ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் நூலுக்கான முன்னுரை – நூலாசிரியர் ம. வெங்கடேசன் 2004ல் எழுதியது.)
தமிழ் மொழி மீது வெறுப்பும், ஆங்கில மொழி மீது பற்றும் கொண்ட ‘ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழுக்காக அரும்பாடுபட்டவர் என்று சொல்கின்றனர். ஆங்கில மோகம் கொண்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தொல்காப்பியரையும், கம்பனையும் தமிழ் துரோகிகள் என்று சொல்கின்றனர். இதைச் சொல்ல ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? என்பது தான் உண்மையானத் தமிழர்களின் கேள்வி.
ஒருவேளை முஸ்லிம்களின் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டாரோ என்னவோ! முஸ்லிம்கள் திருக்குறளை ஏற்றுக்கொண்டார்களா, இல்லையா என்பது கூட விமர்சனம்தான். ஆனால் அந்த புத்தகத்திலே திருக்குறளை கண்டபடி திட்டியிருக்கிறார்களே அதைப் பற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது அவரது அடியார் வீரமணியோ கண்டித்தார்களா? களங்கமுள்ள ஏடு என்றெல்லாம் திருக்குறளை முஸ்லிம்கள் சொன்ன போது – திருக்குறள் வழியில் நடக்கும் கழகம் திராவிடர் கழகம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது வீரமணியோ எங்கு போனார்கள்? திருக்குறள் திராவிடர்களின் வா¡க்கை நூல் என்று சொன்ன ஈ. வே. ராமசாமி நாயக்கர் – அதை கேவலப்படுத்திய முஸ்லிமையோ அந்த புத்தகத்துக்கோ கண்டனம் தெரிவிக்காதது ஏன்? – இதுதான் திருக்குறளுக்கு திராவிடர் கழகம் செய்த தொண்டா?
1967-ல் நடந்த தேர்தலில்போது பெரியார் ஈ.வே.ரா ஆதரித்து வந்த காங்கிரசும், காமராஜரும் தோற்று, அறிஞர் அண்ணா முதல்வரானதை விரும்பாத பெரியார் ஈ.வே.ரா. 01.10.1967ல் ‘விடுதலை’ .இதழில் ‘‘தமிழனுக்கு இன உணர்ச்சி இல்லை. ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் துரோகச் செயல், ஒருவன் மீது ஒருவன் பொறாமை கொள்ளும் இழிசெயல் இல்லாத தமிழன் அரசியலிலோ, மத இயலிலோ, தமிழ் இயலிலோ, தமிழனில் நூற்றுக்கு பத்து பேர் இருக்கிறார்கள் என்று யாராவது காட்டமுடியுமா?’’ என்று வெளியிட்டுள்ளார். அதன் பொருள் தமிழனாகிய அறிஞர் அண்ணா மற்றொரு தமிழனாகிய காமராஜரை காலைவாரிவிட்டார் என்பதுதான்.
பாவாணர், ‘‘(பெரியார்)… இந்தியையும் தமிழ்ப்பற்றால் எதிர்க்கவில்லை. பேராயத்தைத் தாக்க இந்தியெதிர்ப்பு ஒரு நல்ல கருவியாய்க் கிடைத்ததென்றே வெளிப்படையாய்ச் சொன்னார்’’ என்று கூறுகிறார். (நூல்: பாவாணர் வரலாறு)
பாட்டின் மூலம் நாட்டின் மறுமலர்ச்சிக்குத் தேவையான பகுத்தறிவுச் சிந்தனையையும், தனித்தமிழ்ப் பற்றையும் வளர்த்த பெருமை பாவேந்தர் பாரதிதாசனையே சாரும். அவரை சிறப்பிப்பது தமிழன்னையைச் சிறப்பிப்பது போன்றதாகும் என்று அண்ணா கருதினார். ஆகவே தோழர்கள் முல்லை முத்தையா, டி.என். இராமன் முதலானோரின் ஓத்துழைப்புடன் கவிஞருக்கென ரூ. 25,000 ரூபாய் திரட்டப்பட்டது.
இஸ்லாமின் சாதியைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய்:
ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த வாசகம் இந்து மதத்திற்கு மட்டும்தான் என்பதை இவர்கள் மூடி மறைக்கிறார்கள். ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் மறுப்பு வாதத்தை இந்து மதத்திற்கு மட்டும்தான் சொன்னாரே தவிர கிறிஸ்த, முஸ்லிம் மத கடவுள்களுக்காக அல்ல. கிறிஸ்துவ, முஸ்லிம் மதத்தை ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்போதும் பாராட்டியே வந்திருக்கிறார். அந்த மதங்களைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் விமர்சனம் மிக மிக மிக சொற்பமே. அந்த சொற்ப விமர்சனமும்கூட அந்த மதத்தைக் கண்டிக்கும் விதமாக இல்லாமல் அறிவுரை கூறும் விதமாகவே இருக்கும். ஆனால் இந்து மதத்தை விமர்சனம் செய்யும்போது அறிவுரை கூறும் விதமாக இல்லாமல் கண்டிக்கும் விதமாக இருக்கும்.
ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதிலிருந்து, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார். யாருக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் அறிவுரை கூறினாரோ, அவரே ஈ.வே. ராமசாமி நாயக்கரை அழைத்தபோது இந்துவாக இறக்கமாட்டேன் என்ற தன் சபதத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு இந்துவாகவே இருப்பேன் என்று சொன்னாரே ஏன்? அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் சொல் ஒன்று செயல் ஒன்று என்ற கட்டத்திற்கு போகாதவரா?
14.08.98 அன்று கோலாலம்பூரில் வீரமணி தன்னுடைய நிகழ்ச்சிக்கு இடம் கொடுக்காததைப் பற்றி பேசும் போது ”நண்பர்களே கீதையின் மறுபக்கம் நூலை அறிமுகப்படுத்த இங்கு இடம் தர மறுத்தால் இன்னொரு இடத்தில் அறிமுகம் செய்து வைத்துவிட்டுப் போகிறோம். புத்தகம் பரவுவதில் எங்களுக்கொன்றும் எந்தச் சங்கடமும் இல்லை. இடம் கொடுத்தவர்களுக்கு ஒரு சங்கடத்தை உருவாக்கக்கூடாது என்ற உணர்வோடு நாங்கள் நடக்க வேண்டுமென்று விரும்புகிறோம். இதை ஒரு பெரிய குற்றமாகக் கூடக் கருதவேண்டிய அவசியமில்லை. ஆகா! இந்த இடத்தில் தான் பண்ணவேண்டும். அந்த இடத்தில்தான் பண்ணவேண்டும் என்ற அவசியமில்லை. நாங்கள் பகுத்தறிவுவாதிகள்” என்று கூறுகிறார்.
‘‘அம்மையார் (நாகம்மையார்) இறந்தவுடன் யாரையும் அழக்கூடாது என்று தடுத்துவிட்டார். அம்மையார் இறந்த அன்று பெரியார் நடந்து கொண்டவிதம் பலருக்கு வியப்பைத் தந்தது. அவர் தமது கைத்தடியுடன் வாயிற்படியில் நின்று கொண்டார். துக்கத்திற்கு வரும் பெண்களிடம் அழாமல் பிணத்தைப் பார்ப்பதாயிருந்தால் உள்ளே செல்லலாம், அழுவதாயிருந்தால் உள்ளே செல்லவேண்டாம். இப்படியே திரும்புங்கள்’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். வந்த பெண்களும் இக்கட்டுப்பாட்டுக்கு அடங்கியே நடந்து கொண்டார்கள். பிணம் பெட்டியில் வைக்கப்பட்டது. வண்டியில் ஏற்றி மாடு கட்டி ஓட்டப்பட்டது. சுடுகாட்டிற் கொளுத்தப்பட்டது. பெட்டியில் வைத்தல் முஸ்லிம் மத வழக்கம், வண்டியிற் கொண்டு-செல்லுதல் கிறிஸ்தவ மதத்திற்கு உடன்பாடு. சுடுவது இந்து மதக்கொள்கை. இம்மூன்றும் நாகம்மையார் இறந்த பின் பெரியாரால் நடத்திக்காட்டிய நன்முறையாகும்.”
பேராசிரியர் ந. க. மங்கள முருகேசன் அவர்கள் எழுதிய ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற நூலில் “தமது தள்ளாத வயதிலும் இராஜாஜியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதும், அவருடைய உடல் சென்னை கிருட்டிணாம்பேட்டைச் சுடுகாட்டில் எரியூட்டப்பெற்ற போது சிதையருகே சக்கர நாற்காலியில் அமர்ந்து மறைந்த தம் நண்பருக்காகப் பெரியார் கண்ணீர் உகுத்ததும் இன்னும் நம் கண்களில் நிற்கிறது’’ என்று குறிப்பிடுகிறார். இதை மேலும் உறுதிபடுத்தும் விதமாக மேலும் ஓர் ஆதாரம் இதோ!
‘‘மற்றெல்லா மதங்களைவிட புத்தமதத்தில் கருத்துக்கள் விசாலமாக, மனித தர்மத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாக யிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது’’.
நரகாசூரன் கொலைக்காக துக்க நாளாகக் கொள்ளவேண்டுமாம்! நரகாசூரன் கட்டுக்கதையாக இருக்கும் போது எதற்காக துக்கநாளாக கொள்ளவேண்டும்? நடக்காத சம்பவத்திற்கு துக்க நாளாக கொள்வதுதான் பகுத்தறிவா?
இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இருக்கிறான். வால்மீகி மாற்றிவிட்டான். ஆனால் புத்த இராமாயணம், சமண இராமாயணம் முதலியவைகளைப் பார்த்தால் தெரியும் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.
1. ஈரோட்டில் சமதர்ம வேலைத் தீர்மானத்தை நிறைவேற்றினார். பின்னர் சமதர்ம விரோதிகளான ஆர். கே. சண்முகம், ஏ. ராமசாமி முதலியார்களைத் தேர்தலில் ஆதரித்தார் ஈ.வே. ரா.
ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு இரண்டு தடவை திருமணம் நடைபெற்று இருக்கிறது. முதல் திருமணத்தின்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 19. அவருடைய மனைவி நாகம்மையாருக்கு வயது 13. ஈ.வே. ராமசாமி நாயக்கர் சிறுவயதிலிருந்தே பகுத்தறிவுவாதியாக இருந்தார் என்று பகுத்தறிவுவாதிகள் சொல்கின்றனர். அப்படியானால் 13 வயதுப் பெண்ணை – குழந்தையைத் திருமணம் செய்வதுதான் முற்போக்குத்தனமா? பகுத்தறிவுத்தனமா?
புரியவைத்து தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். அல்லது நாகம்மையாருக்குப் புரிகிறவரை காத்திருந்து, புரிந்தபின் கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பெண்பித்தர்களான தன் கூட்டாளிகளிடம் தன் மனைவியையே ”தாசி” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்லியிருக்கிறார் எனும்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரை, ‘‘பெரியார்’‘ என்று அழைப்பது எப்படி நியாயமாகும்?
ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26.
ஈட்டி. இயக்கத்தின் மாண்பு, அதன் தலைவரின் தகாதச் செயலால் தரைமட்டமாகிவிடும். ‘உரத்த குரல் எடுத்து ஊரெல்லாம் சுற்றினாலும்’ தலைவர் போக்கால் ஏற்பட்ட கண்ணியக் குறைவைக் காப்பாற்றிவிட முடியாது. போற்றிப் பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டுபோய்விட்டுவிட்டது. இனி அவரின் கீழிருந்து தொண்டாற்றுதலால் பயன் இல்லை. உழைத்து நாம் சிந்தும் வியர்வைத் துளிகள் அவரது ”சொந்த” வயலுக்கு நாம் பாய்ச்சிய தண்ணீராகவே ஆகும் என்று கருதி அவரது தலைமை கூடாது; அது மாறும்வரை கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற கழகங்களும், தோழர்களும், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் கண்ணீர்த்துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர்.
சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 -வத ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம்.
பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்க விஷயத்தில் அம்பேத்கர் ஏமாந்து போய்விட்டார் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்றும் ஒரு மனத் தாங்கல் பெரியாரிடம் கடைசிவரை இருந்தது.
முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுமை ஏற்பட்டபோது அதை எதிர்த்து ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சம்பவங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பங்கு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவார்களா பகுத்தறிவுவாதிகள்?
ஈ.வே.ராமசாமி நாயக்கரின் இந்த பதில் 1959-ம் ஆண்டு சொல்லப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் இறக்கும்வரை அதாவது 1956-ம் ஆண்டு அரசியலிலே எப்படியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னுடைய கொள்கைக்காக பதவியையே ராஜினாமா செய்தவர். இப்படிப்பட்ட அம்பேத்கரை – கடைசிவரை அரசியலியே ஒழுக்கமாக, நாணயமாக இருந்த அம்பேத்கரை – அரசியல் மாற்றிவிடும் என்ற அவர் இறந்தபிறகு சொல்வது அம்பேத்கரைக் கேவலப்படுத்துவதுதானே!
அம்பேத்கருக்கு என்று தனிப்பட்ட கருத்து இல்லை. ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய கருத்தைத்தான் எதிரொலித்தார் என்று மறைமுகமாக கூறுகிறார். அம்பேத்கருடைய அறிவும், ஆராய்ச்சித் திறனும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு இருந்ததா?
ஒருவேளை ஈ.வே. ராமசாமி நாயக்கர் மட்டும்தான் வைக்கத்திலே போராடினாரா? இல்லையே கே.பி. கேசவமேனன், டி.கே. மகாதவன், ஜார்ஜ் ஜோசப் போன்ற பலபேர் போராடி சிறை சென்றார்களே- அவர்களின் பெயரெல்லாம் வெளிவராமல், வைக்கம் போராட்டமே ஈ.வே. ராமசாமி நாயக்கரால்தான் துவக்கப்பட்ட மாதிரி எல்லோராலும் பேசப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் மற்ற தலைவர்களுடைய பங்கை மறைத்து ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பெயரை மட்டும் முன்நிறுத்துகின்றனர். காரணம் வைக்கம் போராட்ட வெற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு மட்டுமே போய்ச்சேர வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த நினைப்பு அவர்களை எந்த அளவுக்கு பொய் சொல்வதிலும், குழப்பத்திலும் கொண்டுபோய் விட்டிருக்கிறது தெரியுமா? அந்த விபரங்களை சற்று பார்ப்போம்.

”மகாத்மா, சமஸ்தானத்தின் அடங்குமுறைப்போக்கை வன்மையாகக் கண்டித்துப் பெரியாரது செயலை வெகுவாகப் பாராட்டி எழுதினார். தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ள தடையை பெரியார் கோரிக்கைப்படி நீக்காவிட்டால் பெரும் போராட்டம் துவங்கும் என்று மகாத்மா எச்சரிக்கை செய்தார்.
”பெண்கள் விடுதலைக்காக பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியது ஒருவேளை அவரை நினைத்து தான் சொல்லியிருப்பாரோ என்னவோ நமக்குத் தெரியது ஒருவேளை இது உண்மையாகக்கூட இருக்கலாம்.
இவ்வாறெல்லாம் பெண்களுக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் அறிவுரைக் கூறுகிறார். இந்த அறிவுரைகள் எல்லாம் தன்னுடைய திராவிடக்கழகத்தினுடைய தோழிகளுக்கும் சேர்த்துத்தான் சொல்லியிருப்பார் என்று நம்பிக்கைக் கொண்டு நமக்கு எழுந்த சந்தேகங்களை கேட்போம்.
பெரியார் ராமசாமி அவர்கள் காங்கிரஸிலே இருந்து பிரிந்த பிற்பாடு, பிராமணர்களை எதிர்க்கிறேன் என்கிற போக்கிலே அவர் இந்தியாவையே எதிர்க்கத் தலைப்பட்டார்.
‘துக்ளக்’ ஆசிரியர் சோ கூறுகிறார்:-
ஒரு பொழுதும் உண்மையாக இருக்கமுடியாது. ஏனென்றால் அம்பேத்கர் மதமாற்ற அறைகூவல் விட்டவுடனேயே ஹைதராபாத் நிஜாம், முஸ்லீமாக மாறினால் ஒரு கோடி ரூபாயும், ஒரு கல்லூரியும் தருவதாக வாக்களித்தபோது அம்பேத்கர் அதைப் புறக்கணித்தார். அம்பேத்கர் முஸ்லீம் மதத்தை கனவில் கூட நினைத்துப்பார்த்ததில்லை.
ஈ.வே. ராமசாமி நாயக்கர், மற்றும் மணியம்மையாரின் மூடநம்பிக்கைகளையும், பொய் பித்தலாட்டங்களையும் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய சீடர் வீரமணியின் முரண்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் பார்க்கலாம்.
தாய்-தந்தையை இழந்தவர்கள்- சுயமரியாதைகாரர்களாக ஆன பிறகு அவரவர் தாய்க்கோ, தந்தைக்கோ ஆண்டுதோறும் நினைவு நாள் கொண்டாடுகிறார்களா? இல்லையே? இன்றைய சமாதிகள்தான் நாளைய கோவில்கள் என்கிற மூடநம்பிக்கை வளர்ச்சி வரலாற்றில் பாலபாடத்தை மறந்துவிட்டு, பெரியார் சமாதிக்கு மரியாதை, பெரியார் சிலைக்கு மலர் மாலை போடுகின்ற ஒருவன் எப்படி சுயமரியாதைக்காரன்?
சாதி ஒழிப்புப் பணியில் சென்ற 20ஆண்டுகளில் வீரமணி செய்தது என்ன? மாறாக ஒரு கொள்கை அமைப்பாக – போராளி நிறுவனமாக இருந்த இதை(தி.க) வீரமணி ஒரு வட்டிக் கடையாக – கல்வி வணிக அமைப்பாக மாற்றிவிட்டார். இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களாகிய நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? துரோகங்களை எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்த பெரியாருக்கே துரோகம் செய்ததில், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய துரோகி வீரமணி ஆகிறார்.



ஆர்.வி அவர்களின் பார்வைக்கு பெரியாரின் கருத்தை சமர்பிக்கிறேன்.படியுங்கள்.
இதுவா விடுதலை முயற்சி? – பெரியாரின் தொலைநோக்கு!
சுதந்திரப் போராட்டம் அல்ல; ஆரியர், திராவிடர் போராட்டமே!
“இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப்போகிறதா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. சீக்கிரத்தில் நாடு கழுதை புரண்ட களம் என்பது போல் சீரழியப் போகிறது என்பதுதான் காணக்கூடியதாக இருக்கிறது. தூது கோஷ்டி தோல்வி அடையப் போகிறது; அடைந்து விட்டது என்கிறார்கள் -பத்திரிகை செய்திக்காரர்கள். காங்கிரசார் பதவி ஏற்ற இந்தக் காலத்துக்குள்ளாகவே மக்களுக்கிடையே ஒரு சமரச முடிவு இல்லையானால், நாடு சீரழியப் போவது நிச்சயம். இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு நஷ்டமில்லை. அவர்கள் ஆதிக்கம் இன்னும் பல நாளைக்குப் பலப்படத்தான் இடமாகும். ஆரியர்களுக்கும் கஷ்டமில்லை.
ஆரியர் பிரிட்டிஷாருடன் இன்னும் பலமான ஒப்பந்தம் செய்து கொள்ளுவர். காந்தியாருக்கும் குறைவு வராது. அவர் அவதாரக் கடவுள் தன்மை மாறி உண்மைக் கடவுளாகி விடுவார். தொல்லைப்படப் போவது நாம்தான். முஸ்லிம், திராவிடர், ஷெட்யூல்டு வகுப்பார் ஆகியவர்களும் இக்கூட்டத்தில் உள்ள ஏழை, எளியவர், தொழிலாளர் கூலியாட்கள் ஆகிய பாட்டாளி மக்களும்தான்.அதோடு மாத்திரமல்ல. கண்டிப்பாக இந்து -முஸ்லிம் ரத்தம் சிந்துதலும், மேல் ஜாதி, கீழ் ஜாதி ரத்தம் சிந்துதலும், சோம்பேறி பாட்டாளி ரத்தம் சிந்துதலும், முதலாளி, தொழிலாளி ரத்தம் சிந்துதலும் நடந்துதான் தீரும்.
இந்த முப்பது வருஷ காலமாக நம் மக்கள், நான் முதல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பொது நலனுக்கு என்று பாடுபட்ட, கஷ்ட நஷ்டமனுபவித்த தியாகம் என்பதற்கு இதுதானா பலன் என்று பாருங்கள். இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்பனப் பத்திரிகையில் செய்து வரும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. அவை இந்து முஸ்லிம் கலகத்தையும், கீழ் ஜாதி மேல் ஜாதி கலகத்தையும், திராவிடர்களுக்குள் ஒருவருக்கொருவர் குத்து, வெட்டு, அடி, உதை, கொளுத்து ஆகிய போராட்டங்களையும் வளர்த்து விடுகின்றன.
இன்றைய அரசியல் போராட்டம் என்பது என்ன? இந்தியன் வெள்ளையன் போராட்டமா? இல்லையே. இன்றைய இந்தியப் பிரச்சினை, சுயராஜ்யப் பிரச்சினை அல்லவே; சுதந்திரப் பிரச்சினை அல்லவே, ஆங்கிலேயே
அந்நியன் பிரச்சினை அல்லவே. இந்து, முஸ்லிம் பிரச்சினையாகத்தானே காணப்படுகின்றன. இந்து முஸ்லிம் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதும், இந்து மதம் காப்பாற்றப்படுவதும், இஸ்லாம் காப்பாற்றப்படுவதுதானே இன்று சுதந்திரப் போராக ஆகிவிட்டது. இதே நிலையில்தானே ஆரியம், திராவிடம் என்கின்ற பிரச்சினையும் இருக்கிறது.
திராவிடன் ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனித்தன்மை பெறுவதை சுயராஜ்யம் என்கிறான். ஆரியன் திராவிடரை அடக்கி அழுத்தி வைப்பதை, மனு ஆட்சி புரிவதை சுயராஜ்யம், தர்மராஜ்யம், ராமராஜ்யம் என்கின்றான்.
தோழர்களே! தூது கோஷ்டி வெற்றி பெற்றாலும் நாம் சூத்திரர், பறையர், 4ஆவது 5ஆவது ஜாதியாகத்தான் இருப்போம். தூது கோஷ்டி தோல்வியுற்றாலும் நாம் 4ஆவது 5ஆவது ஜாதிதான். காங்கிரசுக்கும் நமக்கும் என்ன பேதம்? காங்கிரஸ் அந்நியன் ஆதிக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்கின்றது. நாமும், ஆம் அது சரி அதுதான் முதல் வேலை என்கிறோம். ஆனால் அந்நியர் என்கின்ற பட்டியில் திராவிடனல்லாதவன் எவனும் அந்நியன் என்று விளக்கம் எழுதிக்கொள் என்கின்றோம். ஒப்புக் கொள்ளுகிறதா காங்கிரஸ்? ஆங்கிலேயன் தவிர மற்றபடி இந்தியன் என்ற பெயரால் எவன் பிழைத்தாலும், எவன் திராவிட நாட்டைக் கொள்ளை கொண்டாலும் சரி என்கிறது காங்கிரஸ்.
நாம் திராவிட நாட்டை திராவிடத்தில் நிரந்தரமாய் வாழும் திராவிட
நாட்டுக் குடிகள் தவிர, பிர்லா, பஜாஜ், காந்தி, நேரு, பட்டேல், பட்டானி, குஜராத்தி, மார்வாரி, பனியா, சிந்தி, காஷ்மீரி, பட்டான், மேமன் எல்லைப்புறக்காரன் எவரும் சுரண்டக்கூடாது என்கின்றோம். இந்தியன்
மட்ட ஜாதியல்ல; வெள்ளையன் உயர்ந்த ஜாதி அல்ல. இருவருக்கும் மாத்திரமல்ல. மூவருக்கும் அதாவது திராவிடன், ஆரியன், வெள்ளையன் ஆகிய மூவருக்கும் சம உரிமை வேண்டும்.
திராவிடன் சூத்திரனல்ல; பறையன் அல்ல; தீண்டப்படாதவன் அல்ல;
ஆரியன் பிராமணன் அல்ல,மேல் ஜாதி அல்ல; பூதேவன் அல்ல. சம உரிமையில் சம விகிதாசாரத்தில் சம போக போக்கியத்தில், சம உழைப்பில் இருக்க வேண்டிய மக்கள் என்கின்றது திராவிடர் கழகம். இந்தியா முழுமைக்கும் ஒரு சுயராஜ்யம் போதும் என்கிறது காங்கிரஸ். பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சுயராஜ்யம் வேண்டும். ஜின்னா
பிரிவினை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி.
அம்பேத்கர் மனிதத்தன்மை, சம உரிமை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி; கம்யூனிஸ்டுகாரர்கள் கேட்டால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டிய இழிமக்கள்; திராவிடர்கள் பாதுகாப்பு சமுதாய உரிமை கேட்டால் -அவர்கள் தேசத்துரோகி!
தோழர்களே! கலகத்தில் காலித்தனத்தில் ஆரியன் எவனாவது சிக்கிக் கொள்கிறானா? திராவிடன் கையில் சாணி உருண்டையும் கல்லையும் கொடுத்து திராவிடன் மீதே எறியச் சொல்லிவிட்டு, மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறானே! இதுவா விடுதலை முயற்சி?’
—————— பள்ளிகொண்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை – ‘விடுதலை’ 15.06.1946
அஷ்ரப் அலியின் ஜின்னா பாசம் நமக்கு புரிகிறது
இங்க இன்னாத்துக்கு குந்திகினு எங்கல கஸ்ட படுத்துறீங்க
என்ன உங்கநாடா எதுஸார் உங்கநாடு ஆங்கிலேயனிடம் இருந்து
மீட்பதர்க்கு எந்தபிராமிணன் யுத்தம்செய்தான் இஸ்லாமியன் எத்தனை பேர்
இழந்துருக்கொம் தெரியுமா இஸ்லாமியன் ஒன்றும் இற்க்குமதி ஆனவன் இல்லை இந்தநாட்டின் மைந்தன்
விட்டு கொடுப்பது சிறுபான்மைனர் விட்டுகொடுக்கனுமா எதுஸார் ஞாயம்
சிறுபான்மைனர்காள் பலகீனமானவர்காள் பெருபான்மைனர்கள்தான் விட்டுகொடுக்கவேண்டும் பெரியவர்கள் விட்டுகொடுப்பார்கலா சிரியவர்கால்
விட்டுகொடுப்பர்களா என்னசார் உங்கமூளை.
தமிழ் ஓவியாவுக்கு
திரும்ப திரும்ப ஈ வே ரா அவர்களின் பேச்சுகளை போட்டு கொண்டே இருந்தால் ஒன்றும் ஆக போவதில்லை… நீங்கள் அவருடைய சீடராக இருந்தால் பகுத்தறியுங்கள்… மேலே நீங்கள் போட்டிருக்கும் பேச்சில் அவர் ஆரியர் திராவிடர் என்று இரு சாராரை பற்றி பேசுகிறார். இது அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஆரிய இன கோட்பாட்டை வைத்து அவர் பேசியது.. இன்று 2009 இல் இந்த கோட்பாட்டை பல ஆராய்ச்சியாளர்கள் கை விட்டு விட்டனர். இப்பொழுது அது Aryan Migration theory என்று மாற்ற பட்டுள்ளது… என்னை பொறுத்த வரையில் இதுவும் செத்து போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை…
இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் திராவிடம் என்னும் சொல்ல தமிழ் சொல் அல்லவே ! அது தென் இந்தியாவை குறிக்கும் வட மொழி சொல் அன்றோ? இதை எல்லாம் அப்பொழுது அவர் பகுத்து அறியாமல் விட்டு விட்டாரா? இதை தவிர அவர் திராவிடர்கள் என்று கூறுவது யார் யாரை? தமிழகத்தில் இருக்கும் பார்பனர் அல்லாதோர் எல்லாரையுமா? இதில் பிற்படுத்த பட்டோரை அவர் சேர்த்தார் என்பதில் உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறதா?
ஒரு ஸ்ரீ வைஷ்ணவனான எனக்கு அழ்வார்களின் திவ்ய பிரபந்தங்கள் “திராவிட வேதம்” ! எங்களுடைய குல குரு வாக கருத படுபவர் நம்மாழ்வார் … இவர் பிராமணராக பிறக்காவிட்டாலும் இவருடைய வாழி திருநாமத்தில் “காசினியில் ஆரியனாய் காட்டினான் வாழியே!” என்று போற்றுகிறோம்.. மொத்தத்தில் நீங்கள் பகுத்தறிய நிறைய விஷயங்கள் உள்ளன … ஆரியன் என்னும் சொல் முற்காலத்தில் வேள்வி செய்து அக்னியை வணங்குபவர்கள் என்றும், பிற் காலத்தில் நன் நடத்தை உள்ளவர் என்றும் இந்த சொல்லுக்கே பொருள் வேறு வேறாக மாறி இருக்கும் பொது, நீங்கள் யாரை ஆரியர் என்று சொல்லுகிறீர்கள்? யாரை திராவிடர்கள் என்று சொல்லுகிறீர்கள்?
எனக்கு தெரிந்து தமிழகத்தில் எல்லாரும் தமிழர் என்று தான் மற்றவர்களிடம் அறிமுக படுத்தி கொள்கிறார்களே தவிர திராவிடர் என்று அல்ல… திராவிடர் என்னும் சொல் கழகங்களில் தான் வாழ்ந்து வருகிறது…
சரி அவர் அப்போது ஏதோ பேசி விட்டார்.. நீங்கள் அவரை தெய்வம் என்றும் அவர் சொல்லை வேத வாக்கு என்றும் கருதுகிறீர்களா ? உண்மையான பகுத்தறிவாளருக்கு இது அழகல்லவே? நீங்கள் இப்போது சொல்லுங்கள் யார் ஆரியர் யார் திராவிடர் என்று?