New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியத்தின் காலம்


Guru

Status: Offline
Posts: 23958
Date:
தொல்காப்பியத்தின் காலம்
Permalink  
 


கோவை செம்மொழி மாநாட்டில் "இலக்கணம்' பற்றிய  ஆய்வில், முனைவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டு என்றும், ரிக் வேதத்துக்கு முற்பட்டதாகத் தொல்காப்பிய

கோவை செம்மொழி மாநாட்டில் "இலக்கணம்' பற்றிய  ஆய்வில், முனைவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டு என்றும், ரிக் வேதத்துக்கு முற்பட்டதாகத் தொல்காப்பியம் இருக்கக்கூடும் என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார் என்று தினமணி 25-6-2010 அன்று தெரிவித்திருந்தது. வேதத்துக்கு முந்தையது தொல்காப்பியம் என்ற முனைவர் நெடுஞ்செழியன் கருத்துக்குத் தொல்காப்பியத்தின் அகச்சான்றுகள் ஆதரவாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

சிறப்புப் பாயிரம்:

தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். அதன் பிற்பகுதி வருமாறு:

நிலம் தரு திருவில் பாண்டியன் அவையத்து

அறம் கரை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்தப் படிமையோனே

""நிலம் தரு திருவில் பாண்டியன் அவையில், அறத்தை உணர்ந்த, உணர்த்தும் நாவினையுடைய, நான்கு மறைகளையும் தெரிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில், புலவர் கூடிய பேரவையில், மயக்கமின்றித் தெளிவாகத் தான் உணர்ந்து, பிறர்க்கு எழுத்து முறையைக் காட்டிக் "கடல் சூழ்ந்த உலகத்து ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கண  நூல் செய்திகளையும் கற்று தொல்காப்பியன் எனத் தன் பெயரை அமைத்துக் கொண்டு, இந்நூலால் பல சிறப்புகளைப் பெற்ற தூயோன்'' என்று முனைவர் ச.வே.சுப்பிரமணியன் இந்த வரிகளுக்குத் தெளிவுரை எழுதியிருக்கிறார்.

நான்மறை:

சிறப்புப் பாயிரத்தில் உள்ள நான்மறை என்ற சொல் சம்ஸ்கிருத மொழி நான்கு வேதங்களையே குறிக்கும். ""நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையின் நான்மறை என்றார். அவை: தைத்திரியம், பெüடிகம், தலவதாரம், சாமவேதம் ஆகும். இனி ரிக், யஜுர், சாமவேதமும் அதர்வனமும் என்பாரும் உளர். அது பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேத வியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தார் ஆகலின்'' என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்கு விசேட உரை எழுதியுள்ளார்.

வியாசர் காலத்துக்கு முன்பே தைத்திரியம் ஆதியாகிய நான்கு வேதங்கள் இருந்தன என்பதும், அவற்றை இக்காலத்திற்கு ஏற்பத் தகுதியாக வியாசர் ரிக் ஆதியாகிய நான்மறைகளாக வகுத்தனர் என்பதும் நச்சினார்க்கினியரின் விசேட உரையாகப் பெறப்படுகின்றன.

நான்கு வேதங்களையும் நன்கு அறிந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில் தொல்காப்பியத்தின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. எனவே, வேதங்களுக்கு முந்தைய நூல் அன்று தொல்காப்பியம் என்பது தெளிவு.

ஐந்திரம்:

ஐந்திரம் என்பது சம்ஸ்கிருத மொழியில் எழுந்துள்ள இலக்கண நூல் என்று முனைவர் ச.வே.சுப்பிரமணியன் தெளிவுரை எழுதியுள்ளார். ரிக், யஜுர், சாம, அதர்வனம் ஆகிய வேதங்களுக்கு மிகவும் பின்னரே ஐந்திரம் எழுதப்பட்டது என்பதை மொழியியல் அறிஞர்கள் அறிவார்கள். ஆக, சிறப்புப் பாயிரத்தின் ஐந்திரம் என்ற சொல்லும் முனைவர் நெடுஞ்செழியன் கூற்றுரைக்கு ஆதரவாக இல்லை.

ஐந்திரம் என்ற சம்ஸ்கிருத இலக்கண நூல் செய்திகளையும் கற்றறிந்தவர் தொல்காப்பியர் என்ற குறிப்பையும் அருள் கூர்ந்து நுட்பமாகக் கவனிக்க வேண்டும்.

அந்தணர் மறைத்தே:

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பிறப்பியல் 20-ஆம் சூத்திரம் வருமாறு:

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து

சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து

அகத்து எழுவளி இசை அரில்தப நாடி

அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே;

அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்

மெய்தெரி வளியிசை அளபு நுவன்றிசினே

(உயிர், மெய், உயிர்மெய் முதலிய) எல்லா எழுத்துகளும் (பிறக்கும் முறையை முன்னைய நூலாசிரியர்கள்) விளக்கியிருப்பதனால், மேற்கூறிய (தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் என்னும்) எட்டு இடங்களிலும், உந்தியில் இருந்து எழுகின்ற உதானன் என்னும் காற்றினால் பிறக்கின்றன. (பரை, பைசந்தி, மத்திமை என்னும்) ஓசைகளின் பிறப்புடன், எழுத்துகளின் பிறப்பைச் சொல்லுமிடத்து, (மேற்கூறிய எட்டு உறுப்புகளும் உதானன் என்னும் காற்றும்) வெவ்வேறாக மாறுபட்டு அமையும் தன்மையால், மூலாதாரத்தில் எழுகின்ற காற்றின் ஓசையைக் குற்றமற ஆராய்ந்து, எடுத்தல், படுத்தல், நலிதல், விலங்கல் என்னும் தன்மை உடையனவாகக் கொள்ளும் முறைமை, பார்ப்பனர்களின் வேதங்களில் சொல்லப்பட்ட முறைமை உடையதே ஆகும். அவ்வியல்பினை இங்கு கூறாமல், நெஞ்சத் தானத்தில் இருந்து எழுந்து, வெளியே நம் காதுகளில் கேட்கும்படி ஒலித்துப் பொருளை உணர்த்துகின்ற வைகரி ஓசையினது (எழுத்தினது) தன்மை அல்லது மாத்திரையினை மட்டுமே கூறுகின்றன''. தமிழ்ப் பேரறிஞர் ந.ரா. முருகவேள் இவ்வாறு பதப்பொருள் கூறியுள்ளார், இந்தச் சூத்திரத்திற்கு.

வேதங்களின் தொன்மையையும், அவற்றால் விளக்கப்பட்ட ஓசைகளின் நுட்பங்களையும் தொல்காப்பியர் நன்கு அறிந்திருந்தார். அவர் இந்தச் சூத்திரத்தில் அகத்தெழு வளியிசை நன்று, புறத்திசை மெய்தெரி வளியிசை நன்று என உடம்பிலிருந்து காற்று வெளிப்பட்டு வருவதை இரண்டாக வகுத்தார்; அகத்தெழு வளியிசை அந்தணர் வேதங்களில் உள்ளது என்றார். அதாவது, உந்தியினின்றும், மூலாதாரத்தினின்றும் எழுவது யாதோ அது அந்தணர் மறைத்தே என்றார்.

ஆறு செயல்கள்:

தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் இருபதாம் சூத்திரம் ""அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்'' என்ற முதல் வரியுடன் தொடங்குகிறது. ""ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும்'' என்று இந்த வரிக்கு முனைவர் ச.வே.சுப்பிரமணியன் தெளிவுரை எழுதியுள்ளார்.

ஓதல் - நான்கு வேதங்களையும் ஓதிக் கற்றல்.

ஓதுவித்தல் - பிறருக்கு வேதங்களை ஓதிக் கற்பித்தல்.

வேட்டல் - யாகங்களைச் செய்தல்.

வேட்பித்தல் - பிறர் யாகங்களைச் செய்யுமாறு செய்தல். (யாகங்களைப் பிறருக்காகச் செய்தல் என்றும் ஆம்).

ஈதல் - தம்மிடம் உள்ள பொருளைப் பிறருக்குத் தருதல்; ஏற்றல் - பிறர் தரும் பொருளை ஏற்றுக்கொள்ளுதல்.

வேதங்களில் விதித்துள்ள வண்ணம் இந்த ஆறு செயல்களையும் தொல்காப்பியர் காலத்துத் தமிழகப் பார்ப்பனர்கள் செய்தார்கள். இதனாலேயே தொல்காப்பியர் இங்கு பதிவு செய்கிறார்.

ஓத்து:

தொல்காப்பியம்  பொருளதிகாரம் அகத்திணை இயல் 31-வது சூத்திரம் ""உயர்ந்தோர்க்குரிய ஓத்தினான'' என்பது ஆகும். வேதங்கள் உயர்ந்தோர்க்கு உரியவை என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள். பொருளதிகாரம் செய்யுளியலில் 169-வது சூத்திரம் வருமாறு:

நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு

ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது

ஓத்து என மொழிப உயர்மொழிப்புலவர்

""ஓர் இனத்தைச் சார்ந்த மணிகளுள், தரத்தால் ஒத்த மணிகளை வரிசைபெற அமைத்துக் கோத்தல் போல, ஓர் இயலைச் சார்ந்த பொருள்களை ஒருவழி அமைத்து வெளிப்படுத்துபவை வேதங்கள்'' என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள். ஓத்து என்ற சொல் வேதங்களைக் குறிக்கும். பண்டைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இந்தச் சொல், இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேதங்கள் எழுதப்பட்டவை அல்ல. அவை பரம்பரை பரம்பரையாக ஓதப்பட்டு வந்துள்ளன. எனவே, அவை ஓத்து என்று குறிப்பிடப்படுகின்றன.

கீழ்க்கணக்கு நூல்கள்:

""அந்தணர் ஓத்து உடைமை ஆற்ற மிக இனிதே'' என்று "இனியவை நாற்பது' நூலின் 7-வது பாடல் தெரிவிக்கிறது.

பார்ப்பனர்கள் வேதங்களை மறவாது இருத்தல் மிக இனிது என்பது பொருள். ""இன்னா ஓத்திலாப் பார்ப்பான் உரை'' என்று இன்னா நாற்பது நூலின் 21-வது பாடல் குறிப்பிடுகிறது. ""வேதங்களை ஓதாத பார்ப்பனன் சொல் பயனற்றது'' என்பது பொருள்.

""கூத்தும் விழவும் மணமும் கொலைக் களமும் ஆர்த்த முனையுற்றும் வேறிடத்தும் ஓத்தும் ஒழுக்கும் உடையவர் செல்லாரே; செல்லின் இழுக்கும் இழவும் தரும்'' - இது "ஏலாதி' என்ற நூலில் 62-வது பாடல்.இந்தப் பாடலிலும் ஓத்து என்ற சொல் வேதங்களைக் குறிக்கிறது.

""மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்'' என்பது திருக்குறள். ""பார்ப்பனன் ஒருவன் தான் கற்ற வேதங்களை மறந்தான் ஆயினும், அவற்றை அவன் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் ஒழுக்கம் கெட்டால் இழிந்தவன் ஆகிவிடுவான்'' என்பது பொருள்.

இனியவை நாற்பது, இன்னா நாற்பது, ஏலாதி, திருக்குறள் ஆகிய இவை அனைத்தும் சங்கம் மருவிய கால பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள். ஆக, ஓத்து என்ற சொல் வேதங்களையே குறிக்கிறது என்பது தெளிவு.

தொல்காப்பியம் வேதங்களுக்கு முந்தைய நூல் என்ற முனைவர் நெடுஞ்செழியனின் கூற்றுரை பிழையானது - ஏற்கத்தக்கது அன்று - என்று தொல்காப்பியத்தின் அகச்சான்றுகள் உறுதியாகவே சுட்டுகின்றன.__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
RE: தொல்காப்பியமத்தின் காலம்
Permalink  
 


தொல்காப்பியர் காலம் பற்றிய குறிப்புகள்

 

1.   சிலப்பதிகாரத்தில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப் பெற்றது என்பர். சிலப்பதிகாரத்தில் திருக்குறளின் சொற்றொடர்களும் கருத்துகளும் எடுத்தாளப் பெற்றுள்ளன. எனவே திருக்குறள் சிலப்பதிகார காலமாகிய கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பதும், கி.பி.முதல் நூற்றாண்டளவில் தோன்றியது என்பதும் போதரும். திருக்குறள் தொல்காப்பித்தை அடியொற்றிச் சொல்லும் அறநூலாகும். அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பொருளும் செய்யுளுக்கு உரியன என்பதும் தொல்காப்பியர் கருத்தாகும். இப்பாகு பாட்டினைப் பின்பற்றியே திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூன்றினையும் அமைத்துள்ளார். இது மட்டுமன்று தொல்காப்பியரது வாய்மொழியினையும் கருத்தினையும் எடுத்தாண்டுள்ளார் ‘நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்’ என்பார் தொல்காப்பியர்  இந்நூற்பாவை பின்பற்றி, ‘சுவை ஒளி ஊறுஓசை நாற்றம் என்றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு’ என்று கூறியுள்ளார். ‘நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப’ என்பது தொல்காப்யிர் கூற்றாகும். இதனையே திருவள்ளுவரும், ‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்’ என்று கூறுகிறார். இவற்றால் தொல்காப்பியர், திருவள்ளுவர் காலமாகிய கி.பி. முதல் நூற்றாண்டுக்கும் முற்பட்டவர் என்பது விளங்கும்.

 

2.   சங்க இலக்கியங்கள் என்று கூறப்பெறும் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வரை அமைந்த காலப் பகுதியினைச் சார்ந்தனவாகும். இச்சங்க இலக்கியங்களில் தொல்காப்பியத்திற்கு மாறான சில வழக்குகள் காணப்படுகின்றன.

 

i)    ‘கள்’ என்னும் பன்மை விகுதி அஃறிணையில் மட்டும் வரும் என்பது தொல்காப்பியம். ஆனால் கலித்தொகையில் ‘தீதுதீர் சிறப்பின் ஐவர்கள்’ என உயர்திணையில் வந்துள்ளது.

 

ii)   ‘அன்’ விகுதி ஆண்பாற் படர்க்கைக்கே உரியது என்று தொல்காப்பியர்  கூறியுள்ளார். ‘யான் வாழலனே’ (அகம்-362) ‘அளியன் யானே’ (குறுந்-30) ‘கூறுவன் வாழி தோழி ‘(நற்-233) எனத் தொகை நூல்களில் அன் விகுதி தன்மையொருமையில் காணப்படுகிறது.

 

iii)  ஆல், ஏல், மல், மை, பாக்கு முதலிய இறுதியையுடைய வினையெச்சங்கள் தொல்காப்பியத்தில் கூறப்பெறவில்லை. ஆயின் கலித்தொகையில் உள்ள சில பாடல்களில் இவ்வினையெச்சங்கள் வந்துள்ளன.

 

iv)  பலர்பால் படர்க்கையில் வரும் மாரீற்று முற்றுச்சொல் பெயர் கொள்ளாது வினைக்கொண்டு முடியும் என்பது தொல்காப்பியர் கருத்து. புறநானூற்றில், “உடம்பொடுஞ் சென்மார் உயர்ந்தோர் நாட்டே” (புறம்-362) என மாரீறு பெயர் கொண்டு முடிந்துள்ளது.

 

v)   மார் என்பது தொல்காப்பியர் காலத்தில் வினை விகுதியாகவே வழங்கப்பெறுகிறது. ஆனால் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் ‘தோழிமார்’ விகுதியாக வந்துள்ளது.

 

vi)  வியங்கோளினை படர்க்கையில் அன்றி வாராதென்பது தொல்காப்பிய விதி. இவ்விதிக்கு மாறான சொன்முடிபுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.

 

vii)  சகரம் அகரத்தோடு கூடி மொழிக்கு முதலாகாது என்பது தொல்காப்பியம். சகடம், சடை, சதுக்கம், சந்து, சமட்டி எனச் சகர அகரத்தை சங்க இலக்கியங்கள் மொழிக்கு முதலாக வழங்கியுள்ளன.

 

மேற்காட்டியன போன்ற இன்னும் சில விதிகளில் சங்க இலக்கியங்களுக்கும் தொல்காப்பியத்திற்கும் வேறுபாடு காணப்படுகின்றது. தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்குப் பிற்பட்டதாயின், சங்க இலக்கியங்களில் அமைந்த மொழி நிலைக்கு இலக்கணம் கூறியிருத்தல் வேண்டும். அவ்வாறு விதிகள் கூறாமையால் தொல்காப்பியர் சங்க இலக்கிய காலமாகிய கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பது சொல்லாமலே விளங்கும்.

 

 

 

3.   ‘ஐந்திரம் நிறைந்த’ தொல்காப்பியன் எனத் தொல்காப்பியரைப் பனம்பாரனார் பாராட்டியுள்ளார். ஐந்திரம் என்பது வடமொழியில் அமைந்த மிகப் பழைய இலக்கண நூலாகும். இந்நூல் வடமொழியில் சிறந்த விளங்கும் பாணினீயத்திற்கு முற்பட்டது என்பர் எனவே, பாணினீயம் கற்ற தொல்காப்யிர் எனக் கூறப் பெற்றுள்ளதால் தொல்காப்பியர், பாணினீய ஆசிரியராகிய பாணினீக்கு முற்பட்டவராவார். பாணினீ கி,மு. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவர் என மாக்டோனல், வின்டெர்னிட்ஸ், கீத் முதலியோர் கூறியுள்ளனர். ஆதலால் தொல்காப்பியர் பாணினீக்கு முற்பட்டவர் என்பதும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டினர் என்பதும் விளங்கும்.

 

4.   இரண்டாம் சங்கத்தின் இறுதியில் மூன்றாம் சங்கத்தின் தொடக்கத்திலும் வாழ்ந்தவன் முடத்திருமாறன் என்னும் நிலந்தருதிருவிற் பாண்டியனாவான். இப்பாண்டியன் அவையில் தொல்காப்பியம் இயற்றப் பெற்றது என்பது பனம்பாரனார் பாயிரத்தால் தெரிகிறது. எனவே தொல்காப்பிர், நிலந்தருதிருவிற் பாண்டியன் காலத்தவர் என்று கருதலாம். நிலந்தருதிருவிற் பாண்டியன் தென் மதுரையில் மூன்றாம் சங்கத்தைத் தேற்றுவித்ததன் காரணம், இரண்டாம் சங்கம் இருந்த கபாடபுரம் கடல் கோளால் அழிந்தமையலாகும். மகாவம்சம், தீபவம்சம், இராஜாவளி ஆகிய இலங்கை வரலாற்று நூல்களில் கி.மு.2378-ல் முதற் கடல்கோளும் கி.மு.504-ல் இரண்டாவது கடல்கோளும் நிகழ்ந்தாகக் குறிக்கப் பெற்றுள்ளது. கபாடபுரம் அழிவதற்குக் காரணமான கடல்கோள், கி.மு. 504-ல் தோன்றியதாக இருக்கலாம். இதனாலும் தொல்காப்பியர் காலம் கி,மு ஐந்தாம் நூற்றாண்டு என்பது பெறப்படும் ஆய்வாளர்கள் தொல்காப்பியர் காலத்தைப்  பற்றிப் பலவாறாகக் கூறுவர் அவர்கள் கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

Ø  க.வெள்ளைவாரணன் : கி.மு.5320 – தமிழ் இலக்கிய வரலாறு பக்-127

 

Ø  மறைமலையடிகள்   : கி.மு.3500 – மாணிக்கவாசகர் வரலாறு காலமும் பக்-595

 

Ø  கா.சு. பிள்ளை        : கி.மு.2000 – இலக்கிய வரலாறு பக்-67

 

Ø  ச.சோ. பாரதி         : கி.மு.1000க்கு முற்பட்டவர் – கலைக் களஞ்சியம் தொகுதி 6 பக் 217

 

Ø  ஞா.தேவநேயப்பாவணர்: கி.மு.7-ம் நூற்றாண்டு – தென்மொழி (இலக்கிய இதழ் இயல்இசை-1)

 

Ø  V.R.R. தீட்சிதர் : கி.மு.5-ம் நூற்றாண்டு

 

Ø  டாக்டர் மு.வ : கி.மு. 5-ம் நூற்றாண்டுக்கு– கலைக் களஞ்சியம் தொகுதி 5 பக் 479

 

Ø  M. சீனிவாசையங்கார் :கி.மு.5-ம் நூற்றாண்டு

 

TAMIL STUDIES P.117

 

Ø  கே.ஜி. சங்கரையர் :கி.மு.3-ம் நூற்றாண்டு -செந்தமிழ் தொகுதி -15, பக்.648

 

Ø  ரா. இரகவையங்கார் :கி.மு.145-க்குச் சிறிது முற்பட்டவர் தமிழ்வரலாறு பக் -261

 

Ø  சீனிவாசையங்கர் : கி.பி முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவர் History of Tamils P. 70

 

Ø  தெ.பொ.மீ கி.பி 2-நூற்றாண்டை ஒட்டிய சங்க நூல்களுக்கு முற்பட்டவர் - சமணத் தமிழ் இலக்கிய வரலாறு பக்-28

 

Ø  பெரிடேல் கீத் கி.பி 4-நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் தமிழ்ச்சுடர் மணிகள் பக்-39

 

Ø  எஸ். வையாபுரிப்பிள்ளை கி.பி 4 அல்லது 5 நூற்றாண்டில் வாழ்ந்தவர் தமிழ்ச்சுடர் மணி பக்-39

 

Ø  கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கி.பி 5-ம் நூற்றாண்டு

 

Ø  கே.எஸ் சிவராஜபிள்ளை கி.பி.6-ம் நூற்றாண்டு
http://tamildhason.blogspot.in/2012/12/blog-post_28.html


__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

 கல்வெட்டுகளின் மூலம் கிடைத்திருக்கும் வரலாற்றுப் பூர்வமானச் சான்றுகளைக் கொண்டு ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் பின்வரும் உண்மைகளை வெளிக்கொணருகின்றனர்:
 
1. தமிழ் பிராமி எழுத்துகள் அசோகன் காலத்தையொட்டிய பிராமி எழுத்துகள்தான். தமிழ் பிராமி எழுத்துகள் எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டபோது வளைவு சுழிவுகள் பெற்று பரிணாம வளர்ச்சியில் வட்டெழுத்தாக ஆனது.
 
2. பிராமி எழுத்துகளிலும் தமிழ் முற்காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஔவையார் தமிழ் பிராமி எழுத்துகளில்தான் எழுதியிருப்பார் என்ற முடிவுக்கு வரலாம்.
 
3. தமிழ் எழுத்துகள் வடநாட்டிலிருந்து வந்த (பிராமி) எழுத்துகளிலிருந்துதான் உருவானவை என்கிற உண்மை சிலத் தமிழறிஞர்களுக்குக் கசப்பாக இருப்பதால், இதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
 
4. தமிழ் எழுத்துகளிலிருந்து பிராமி எழுத்துகள் உருவானதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால், பிராமி எழுத்திலிருந்து தமிழ் வட்டெழுத்து உருவானதற்குச் சான்றுகள் இருக்கின்றன.
 
5. இப்போது இருக்கும் தமிழ் எழுத்துகள் கிரந்தத்தோடு தொடர்புடையன. கிரந்த எழுத்துகள் ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்பட்டவை. தென்பிராமியிலிருந்து கிரந்தம் மூலமாக வட்டெழுத்துகள் வந்தன. பிறகு வட்டெழுத்து தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப் பட்டது. ஆனால், பத்தாம் நூற்றாண்டிற்குப் பின் வட்டெழுத்து அழிந்து, கிரந்த எழுத்து பல்லவர் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரைக்கும் இருந்துள்ளது.
 
மேற்கண்ட வரலாற்று உண்மைகளை ஆராயவும் பொருள் காணவும் நாமும் கல்வெட்டியலாளராகவோ அறிஞராகவோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மேற்கண்டவற்றிலிருந்து, குன்சாக, தமிழ் எழுத்துகள் பிராமி எழுத்துகளிலிருந்து (வடமொழி எழுத்து) உருவானவை என்றும் கிரந்தத்துடன் ஏறக்குறைய ஆறாம் நூற்றாண்டு காலம் முதல் தொடர்புடையவை என்றும் சாதாரண I.Q. உள்ள எவரும் கூடப் புரிந்து கொள்ள முடியும். எனவே, கிரந்த எழுத்தைத் தமிழ் இல்லையென்று ஒதுக்கினால், மற்றெல்லா தமிழ் எழுத்துகளையும் கூட தென்பிராமி மற்றும் கிரந்தம் ஆகியவற்றின் வழியே வந்தவை என்று சொல்லித் தூக்கி எறிந்துவிட முடியும். ஆனால், தனித்தமிழ்ப் பிரியர்கள் அதைச் செய்யாமல், கிரந்த எழுத்துகளை மட்டும் வடமொழி என்று சொல்லி நீக்கிச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிரந்த எழுத்துகளை ஒதுக்கி எழுதுவதுதான் சரியான தமிழ் என்பதற்கு வரலாற்றுபூர்வமாக உண்மையும் இல்லை என்று இதன்மூலம் விளங்குகிறது. எனவே, எதற்காக கிரந்த எழுத்துகளை ஒதுக்க வேண்டும்.
 
தொல்காப்பியத்திற்குப் பிறகு பல இலக்கண நூல்கள் தமிழில் வந்திருக்கின்றன. அவற்றுள் திவாகரம் (9ஆம் நூற்றாண்டு), பிங்கலம் (10ஆம் நூற்றாண்டு), நன்னூல் (13ஆம் நூற்றாண்டு), உரிச்சொல் நிகண்டு (14ஆம் நூற்றாண்டு), சூடாமணி நிகண்டு (16ஆம் நூற்றாண்டு) ஆகியன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் பவணந்தி முனிவர் (பவணநந்தி என்ற பெயர் திரிந்து பவணந்தி ஆகியது என்பர்) என்னும் சமணத்துறவியால் பதிமூன்றாம் நூற்றாண்டின் முன்பகுதியில் எழுதப்பட்டதாக கணிக்கப்படும் நன்னூல் மிகவும் புகழ் பெற்றது. "முன்னோர் ஒழியப் பின்னோர் பலரினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ" என்கிற புகழ் பெற்றது நன்னூல். அதாவது, நன்னூல் எழுதப்படுவதற்கு முன்னிருந்த இலக்கண நூல்கள் நன்னூல் வந்தவுடன் முக்கியத்துவம் இழந்துவிட்டன என்னும் அளவிற்கும், நன்னூல் எழுதப்பட்டதற்குப் பின் வந்த இலக்கண நூல்கள் எதுவும் நன்னூலுக்கு இணையாக மாட்டா என்றும் சொல்லும் அளவிற்கும் நன்னூல் சிறப்பு மிக்கது என்று போற்றப்படுகிறது. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஔ என்பன வடமொழிக்கும் தமிழிக்கும் பொது உயிர் எழுத்துகள். வடமொழியில் மெய்யெழுத்து முப்பத்தேழு. அவற்றுள் க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள என்ற பதினைந்து மெய்கள் வடமொழிக்கும் தமிழுக்கும் பொது எழுத்துகள் என்று நன்னூல் சொல்கிறது. கிரந்த எழுத்துகளை வடமொழி என்று நாம் ஒதுக்குவது சரியென்றால், இருமொழிகளுக்கும் பொதுவான இந்த எழுத்துகளையும் வடமொழி என்று ஒதுக்கிப் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் சரியான "தனித்தமிழாக" இருக்க முடியும்.
 
அதுமட்டுமில்லை, சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி உட்படத் தமிழின் அகராதிகள் கிரந்த எழுத்துகள் கலந்த வார்த்தைகளைத் தமிழ் வார்த்தைகளாகவே கருதி, அவற்றைக் கிரந்த எழுத்துகளைக் கொண்டே பாவித்து, பொருள் தந்திருக்கின்றன. எனவே, கிரந்த எழுத்துகள் தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்தன என்று நாம் அறிய முடிகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

 

தொல்காப்பியர் காலம்

KESAVAN ON 20 JUNE 2014. POSTED IN இலக்கியம்

பேராசிரியர் வெள்ளைவாரணன்

உலக வழக்கும் இலக்கிய தொன்மையும் வாய்ந்த தமிழ் மொழியை இனிய எளிய இலக்கண வரம்பு கோலிப் போற்றி வளர்த்தவர் ஆசிரியர் தொல்காப்பியனார் ஆவார். அவர் வாழ்ந்த காலம் இதுவென அறிதற்குப் பனம்பாரனார் இயற்றிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரமும் இறையனார் களவியலுரையும் அதனை அடியொற்றி இளம்பூரணர் முதலிய பழைய உரையாசிரியர்கள் எழுதிய உரைக் குறிப்புக்களும் சான்றுகளாக உள்ளன. தொல்காப்பியத்திற் காணப்படும் தமிழிலக்கண அமைப்பும் அதனை அவ்வாறே அடியொற்றியும் காலப்போக்கில் சிறிது வேறுபட்டும் அமைந்த திருக்குறள், சங்கச் செய்யுட்கள், சிலப்பதிகாரம் முதலிய பழைய தமிழிலக்கியங்களின் சொற்பொருளமைதியும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆசிரியர் தொல்காப்பியனார் வாழ்ந்த காலப்பகுதி இதுவெனத் துணிதற்குரிய சிறந்த ஆதாரங்களாக அமைந்துள்ளன. பண்டைக் காலத்துப் பாண்டியர்கள் கல்வி வளர்ச்சி கருதிப் புலவர் பலரையும் ஒருங்கழைத்துத் தமிழ்ச் சங்கங்களை மும்முறை நிறுவித் தமிழ் வளர்த்த வரலாறு இறையனார் களவியலுரையில் விரித் துரைக்கப் பெற்றுள்ளது. கடல் கொள்ளப்பெற்ற தென்மதுரையில் முதற் சங்கமும் கபாடபுரத்தில் இரண்டாவது சங்கமும், கபாடபுரம் கடல்கோளால் அழிவுற்ற நிலையில் இப்பொழுதுள்ள கூடலம் பதியாகிய மதுரையில் மூன்றாவது சங்கமும் நிகழ்ந்தன எனவும், தலைச்சங்கம் 4440 ஆண்டும், இடைச்சங்கம் 3700 ஆண்டும் கடைச்சங்கம் 1800 ஆண்டும் நிலைபெற்றிருந்தன எனவும், இடைச் சங்கத்திலிருந்து தமிழாராய்ந்தாருள் ஆசிரியர் தொல்காப்பியனாரும் ஒருவர் எனவும் அவரால் இயற்றப்பெற்ற தொல்காப்பியம் இடைச் சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண நூலாயிற்று எனவும் களவியல் உரையாசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார்.1

பாண்டியர்க்குரிய தலைநகரம் கபாடம் எனவும் அது தாமிரபரணிக்குத் தெற்கேயுள்ள தெனவும், வடமொழி ஆதிகாவியமாகிய வான்மீகி ராமாயணம் கூறும் குறிப்பு மேற்குறித்த முச்சங்க வரலாற்றுக்கு அரண் செய்யும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.

தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமும், தெற்கே குமரியாறும் தமிழகத்தின் எல்லைகளாக அமைந்திருந்தன என்பது ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து’ எனவரும் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத் தொடரால் இனிது புலனாம். தொல் காப்பியர் காலத்தில் தெற்கெல்லையாக விளங்கிய குமரியாறு அவர் காலத்திற்குப் பின் நிகழ்ந்த கடல்கோளால் அழிவுற்றது. இக் கடல்கோள் இடைச் சங்கத்தின் இறுதியில் முடத்திருமாறன் காலத்தில் நிகழ்ந்திருத்தல் வேண்டும். இச்செய்தி, ‘அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது’ என இடைச்சங்க வரலாற்றின் இறுதியிலும் அவர்களைச் சங்கம் இரீஇயினார், கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத் திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதியீறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப’ - எனக் கடைச் சங்க வரலாற்றிலும் களவியலுரையாசிரியர் குறித்துள் ளமையாற் புலனாம். தொல்காப்பியர் காலத்திற்குப் பின் நிகழ்ந்த இக்கடல் கோளால் குமரியாறு அழியவே தமிழ் நாட்டின் தெற்கெல்லையாகக் குமரிக்கடல் அமைவதாயிற்று.

நெடியோன் குன்றமுந் தொடியோன் பௌவமும்

தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு

(சிலப். வேனிற். 1,2)

என இளங்கோவடிகள் தம் காலத் தமிழகத்தின் எல்லையைக் குறித்துள்ளார். ‘நெடியோன் குன்றம் - வேங்கடமலை. தொடியோள் பௌவம் - குமரிக் கடல் என்பது அருபதவுரையாசிரியர் குறிப்பு. நெடியோன் குன்றமும் தொடியோள் நதியும் என்னாது. பௌவம் என்றது என்னையெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரைத் தலைச் சங்கத்து.... நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீஇயினான். அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலிமுகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் நாற்பத்தொன்பது நாடுகளும், குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நாடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட் டின்காறும் கடல்கொண்டு ஒழிதலாற் குமரியாகிய பௌவம் என்றார் என்றுணர்க. இஃது என்னை பெறுமாறு எனின்,

வடிவே லெறிந்த வான்பகை பொறாது

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

(சிலம்பு. காடுகாண். 18-20)

என்பதனானும், கணக்காயர் மகனார் உரைத்த பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள் முகவுரையானும், பிறவாற்றானும் பெறுதும் என்பது அடியார்க்கு நல்லார் கூறும் விளக்கமாகும்.

தமிழ் நாட்டின் தென்பகுதியிற் பஃறுளியாறும் குமரியாறும் ஓடின என்பதும், அவ்விரு பேராறுகளின் இடையே எழுநூற்றுக்காவத அளவில் 49 நாடுகள் அமைந்திருந்தன என்பதும், தெற்கிலிருந்து மீதூர்ந்து வந்த கடல் பஃறுளி யாற்றுடன் பல மலையடுக்கங்களையும் உள்ளடக்கிக் குமரியாற்றின் வடகரையளவும் பரவி அழித்தமையால் தமிழ் நாட்டின் தென்னெல்லை குமரிக் கடலாயிற்று என்பதும் மேற்குறித்த இளங்கோவடிகள் வாய்மொழியாலும் அடியார்க்கு நல்லார் உரையாலும் இனிது புலனாதல் காணலாம்.

கி.மு. நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்த மன்னனுக்கு அமைச்சராக விளங்கிய சாணக்கியர், தமது பொருள் நூலில் முத்துக்கள் கிடைக்கும் இடங்களைக் கூறுமிடத்துப் பொருநையாறு ‘பாண்டிய கபாடம்’ என்னும் இடங்களைக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பினை உற்று நோக்குங்கால் அவர் காலத்திற் பாண்டிய நாட்டுக் கபாடபுரத்துக் கடற்றுறையில் முத்துக்கள் எடுக்கப்பெற்ற செய்தி நன்கு விளங்கும்.

கயவாகு என்னும் பெயருடைய வேந்தர் இருவர் இலங்கையில் ஆட்சி புரிந்துள்ளார்கள். அவ்விருவருள் முதற் கயவாகுவின் காலம் கி.பி. 71_193 என்பது ஆராய்ச்சியாளர் துணிபு.2 செங்குட்டுவன் கண்ணகிக்குத் திருவுருவமைத்துக் கடவுள் மங்கலஞ் செய்த நாளில், இக் கயவாகு வஞ்சி நகரத்திற்கு வந்து கண்ணகியன்னையை வழிபட்டுச் சென்ற செய்தியைச் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகள் குறித்துள்ளார். எனவே, இளங்கோவடிகள் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டென்பது நன்கு தெளியப்படும். இளங்கோவடிகளும் அவர் காலத்தும் அவர்க்கு முன்னும் வாழ்ந்த கடைச்சங்கப் புலவர்களும் திருக்குறளிலுள்ள சொற்றொடர்களையும் கருத்துக்களையும் தம் செய்யுட்களில் எடுத்தாண் டுள்ளார்கள். ஆகவே, திருவள்ளுவர் காலம் கி.மு. முதல் நூற்றாண்டெனக் கொள்ளுதல் பொருத்த முடையதாகும்.

திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணத்தினை வரம்பாகக் கொண்டே திருக்குறளை இயற்றி யுள்ளார். உலக மக்களால் கருதத்தக்க பொருள்கள் அறம், பொருள், இன்பம் என்னும் இம்மூன்றுமே என்பதனை, ‘அந்நிலை மருங்கின் அற முதலாகிய மும்முதற்பொருள்’3 என்ற தொடராற் குறித்த தொல்காப்பியர், அறத்தினாற் பொருளை ஈட்டி அப்பொருளால் இன்பம் நுகரும் வாழ்க்கை முறையினை ‘மூன்றன் பகுதி’ என முப்பால்களாகப் பகுத்துள்ளார். தொல்காப்பியர் கூறும் இப்பகுப்பு முறையினை அடிப்படையாகக்கொண்டே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனத் திருக்குறளை முப்பால்களாகத் திருவள்ளுவர் வகுத்தமைத்தார்.

தொல்காப்பியர் வாய்மொழியினை அவ்வாறே எடுத்தாண்ட பகுதிகள் திருக்குறளிற் காணப்படு கின்றன. ‘எழுத்தெனப் படுப அகர முதல னகர விறுவாய்’ எனத் தொல்காப்பியர் தமது நூலைத் தொடங்கியுள்ளார். திருவள்ளுவரும் ‘அகர முதல எழுத்தெல்லாம்’ - என அகர முதலாகத் தொடங்கிக் ‘கூடி முயங்கப் பெறின்’ என னகர இறுதியாகத் திருக்குறளை அமைத்துள்ளார். ‘நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம்’ என்றார் தொல்காப்பியர். ‘சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின், வகைதெரிவான் கட்டே யுலகு’ (திருக்.27) என்றார் திருவள்ளுவர். ‘நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழி தானே மந்திரம் என்ப (தொல். செய்யுளியல்_171) என வரும் நூற்பாவினை அடியொற்றி அமைந்தது, ‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து, மறைமொழி காட்டிவிடும் (28) என வரும் திருக்குறளாகும். ‘அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி’5 என வரும் தொல்காப்பியத் தொடர்ப்பொருளை, அருளென்னும் அன்பீன் குழவி (757) என வரும் திருக்குறள் இனிது புலப்படுத்துகின்றது. இவ்வாறு தொல்காப்பியர் திருவள்ளுவர்க்குக் காலத்தால் முந்தியவர் என்பது நன்குபெறப்படும்.

ஒரு மொழிக்கு இலக்கண நூல் செய்யும் ஆசிரியர், தம் காலத்திலுள்ள எல்லா இலக்கியங் 

களையும் இலக்கணங்களையும் நன்கு ஆராய்ந்த பின்னரே அந்நூல்களிற் காணப்படும் மொழி யியல்புகளைத் தொகுத்தும் வகுத்தும் உரைப்பது இயல்பு. ஆசிரியர் தொல்காப்பியர், கபிலர், பரணர், நக்கீரர் முதலிய சங்கப் புலவர்கட்கும் திருவள்ளுவர்க்கும் காலத்தால் பிற்பட்டவராயின் இப்புலவர் இயற்றிய நூல்களில் அமைந்த மொழியியல்புக்குப் பொருந்தும் முறையில் தாம் இயற்றும் தொல்காப்பியத்தில் விதிகளை அமைத்திருப்பார். தொல்காப்பிய நூலில் விதந்து கூறப்பட்ட விதிகட்கும் சங்கச் செய்யுட்களிலும் திருக்குறளிலும் அமைந்த மொழி நடைக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுவ தொன்றே தொல்காப்பியர் கடைச் சங்கப் புலவர்கட்கும் திருவள்ளுவர்க்கும் பன்னூறாண் டுகள் முற்பட்டவர் என்பதற்குப் போதிய சான்றாகும்.

தொல்காப்பிய விதிகட்கு மாறான சொல் வழக்குகள் சில சங்கச் செய்யுட்களிலும், திருக்குறளிலும் காணப்படுகின்றன. தொல்காப்பியர் காலத்தில் ‘கள்’ என்னும் பன்மை விகுதி அஃறிணையில் மட்டுமே வழங்கியதென்பது.

“கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே

கொள்வழி யுடைய பலவறி சொற்கே

(தொல். பெயரியல் - 5)

என்ற நூற்பாவால் அறியப்படும். இவ்விதிக்கு மாறாக, ‘பூரியர்கள்’ (910), ‘மற்றையவர்கள்’ (263) எனத் திருக்குறளிலும், ‘ஐவர்கள்’ (26) எனக் கலித்தொகையிலும் உயர்திணையிற் கள் விகுதி வழங்கப்பெற்றுளது.

தொல்காப்பியத்திற் காணப்படாத புது வழக்குகள் சில சங்கநூல்களிலும், திருக்குறளிலும் காணப்படுகின்றன.

‘அல்லால்’ (377), ‘சூழாமல்’ (1024), ‘அல்லனேல்’ (386), ‘வேபாக்கு’ (1128) எனத் திருக்குறளிலும், ‘பொருளல்லால்’ (14) ‘கூறாமல்’ (1). ‘கேளாமை’ (108) எனக் கலித்தொகையிலும் ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியையுடைய வினையெச் சங்கள் பயின்று வழங்குகின்றன. இவை தொல் காப்பியத்திற் கூறப்படாத புதிய வினையெச்ச வாய்பாடுகளாகும்.

சங்கச் செய்யுட்களில் அருகிக் காணப்படும் சமய விகற்பங்களைப்பற்றிய குறிப்புக்கள் தொல்காப் பியத்தில் இடம் பெறவில்லை. மாயோன், சேயோன், வருணன், வேந்தன் என்னும் நானிலத் தெய்வங் களுடன் வெற்றி விளைக்கும் கொற்றவையையும் எல்லா நிலத்திற்கும் உரிய நிலையிற் கடவுள் என்னும் பெயரையும் தொல்காப்பியர் தம் நூலிற் குறிப்பிடுகின்றார். சங்கச் செய்யுட்களில் காரியுண்டிக் கடவுள், மணிமிடற்றோன், முக்கணன் என இறைவனை உருவநிலையில் வைத்து வழிபடும் வழிபாடு காணப்படுகிறது. திருமால் வழிபாட்டில் செங்கட்காரி (வாசுதேவன்), கருங்கண்வெள்ளை (சங்கருணன்), பொன்கட்பச்சை (பிரத்தியும்நன்), பைங்கண்மால் (அநிருத்தன்) ஆகிய நால்வகை வியூகமும் பரிபாடலிற் கூறப்பட்டுள்ளன.

இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால் இயற்றமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம், சங்க இலக்கியத்திற்கும் திருக்குறளுக்கும் பன்னூறாண்டு முற்படத் தோன்றிய தொன்மை யுடையதென்பது நன்கு துணியப்படும்.

பாணினீயம் என்னும் வடமொழி இலக்கணம் கி.மு. ஆறாம் நூற்றாண்டளவிற் பழைமை கூறப்படுகின்றது. பாணினி முனிவர் காலம் கி. மு. 900 என, சி. வி. வைத்தியா என்பவர் ‘வேதகால சமஸ்கிருத இலக்கிய வரலாறு’ என்னும் நூலிற் கூறியுள்ளார். வினைகளே எல்லாச் சொல்களுக்கும் முதனிலை (தாது) என விளக்கி, ஒரு முதனிலையிற் பிறந்த பல சொற்களுக்கு இலக்கணம் கூறும் முறையில் அமைந்தது. பாணினியார் இயற்றிய அஷ்டாத்தியாயி என்னும் வியாகரணமாகும். இம்முறை தொல்காப்பியத்திற் காணப்படவில்லை. தொல்காப்பியரது வடமொழி இலக்கணப் பயிற்சியைப் பாராட்டக் கருதிய ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரனார், ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என அவரது ஐந்திர வியாகரணப் பயிற்சியைச் சிறப்பித்துள்ளார். வடமொழி வியாகரணங்களில் தலைசிறந்து விளங்குவது பாணினி முனிவர் இயற்றிய வியாகரணமே என்பது பலரும் அறிந்தது. தொல்காப்பியர் பாணினிக்குக் காலத்தாற் பிற்பட்டவராயின் வடமொழி வியாகரணங்களில் தலைசிறந்து விளங்கும் பாணினீயத்தைக் கற்றுவல்லவர் தொல்காப்பியர் என்றே பனம்பாரனார் அவரைப் பாராட்டி யிருப்பர். அங்ஙனங் கூறாது ‘ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி’ என ஐந்திர நூற் பயிற்சியொன்றையே சிறப்பித்துக் கூறுதலால், வடமொழியிற் பாணினி முனிவர் வியாகரணத்தினை இயற்றுதற்கு முன்னரே தமிழில் தொல்காப்பியம் இயற்றப்பெற்றதென்பதும், எனவே பாணினி முனிவர் காலத்திற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் தொல்காப்பியர் என்பதும் நன்கு துணியப்படும்.

இனி, பனம்பாரனார் குறித்த ஐந்திரம் என்பது வைதிக சமயத் தொடர்பில்லாத பிறிதொரு நூல் என்றும், அது சமணர்களால் இயற்றப்பெற்ற தென்றும், இந்நூலினைப் பயின்ற தொல்காப்பியர் பாணினிக்குக் காலத்தால் பிற்பட்டவரென்றும் அறிஞர் வையாபுரிப் பிள்ளையவர்கள் கருதுவர்.6 இந்திரனாற் செய்யப்பட்ட ஐந்திர நூற்பயிற்சியைப் பராசரன் என்னும் வேதியன் பாராட்டிப் போற்றினன் எனவும், கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவி ஐந்திர நூற்பயிற்சியைப் புறக்கணித்துத் தம் சமண சமய நூலாகிய பரமாகம நூற்பொருளைப் பாராட்டி உரைத்தனர் எனவும், இளங்கோவடிகள் அவ்விருவர் மனநிலையினையும் இனிது புலப்படுத்துகின்றார்.7 ஆகவே ஐந்திர வியாகரணம் வைதிகரல்லாத புறச் சமயத்தாராற் போற்றிப் பயிலப்பெற்ற பிற்காலத்து நூல் என்னும் கருத்து பொருந்தாமை காணலாம்.

பாண்டியர்க்குரிய தலைநகரமாகிய கபாடபுரம் தாமிரபரணிக்குத் தெற்கேயுள்ளது என வான்மீக முனிவர் குறித்துள்ளார். மகாபாரதத்தில் பாண்டியர் தலைநகராக மணலூர் என்னும் மற்றொரு பேரூரினைத் தலைநகராக அமைத்துக் கொண்டனர் எனத் தெரிகிறது. கபாடபுரமும், குமரியாறும் கடல்கோளால் அழிந்துபடுவதன் முன் வாழ்ந்தவர் தொல்காப்பியர் என்பது தொன்றுதொட்டு வழங்கும் வரலாறாதலால், அவ்வாசிரியர் பாரத காலத்துக்கு முற்பட்ட காலத்தவர் என்பது நன்கு தெளியப்படும். பாரத காலம் கி.மு. 1500 ஆண்டு களுக்கு முன் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. எனவே, பாரத காலத்திற்கு முன் வாழந்த தொல் காப்பியர் கி.மு. 1500 ஆண்டுக்குப் பிற்பட்டிருத்தல் இயலாது என்பது நன்கு துணியப்படும்.

கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் என்பது ஆராய்ச்சியாளர் துணிபாகும்.8 இறையனார் களவியலுக்கு நக்கீரனார் கூறிய உரை வழிவழியாகப் பாடஞ் சொல்லப்பெற்று வந்து இப்பொழுதுள்ள வடிவில் எழுதப்பெற்ற காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டென்பர் ஆராய்ச்சியாளர். இற்றைக்கு 1200 ஆண்டுகட்கு முற்பட்ட அந்நூலிற் கண்ட முச்சங்க வரலாற்றின்படி நோக்குங்கால் இடைச்சங்கம் கி.மு. 5000 ஆண்டுகட்கு முன் தொடங்கப் பெற்றதெனக் கொள்ள வேண்டியுளது. அங்ஙனம் கொள்ளுமிடத்து, தலைச்சங்கத்திறுதி யிலும் இடைச்சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவராகிய தொல்காப்பியர் காலத்தின் மேலெல்லை கி.மு. 5000 எனக் கொள்ள வேண்டிவரும். இக்காலவெல்லை ஆராய்ச்சியாளர் சிலர்க்கு வியப்பாகத் தோன்றக்கூடும். இடைச் சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண நூலாக விளங்கியது தொல்காப்பியம் என்னும் உண்மை மேற்காட்டிய சான்றுகளால் நன்கு வலியுறுத்தப் பெற்றமையின், ஆசிரியர் தொல்காப்பியர் வாழ்ந்த காலம் கி. மு. நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தொன்மை யுடையதென்பதிற் சிறிதும் ஐயமில்லை.

தமிழிலக்கிய வரலாற்றில் நெடுங்காலமாக வழங்கி வரும் இம்முடிவுக்கு மாறாகத் தொல்காப்பியர் கடைச்சங்க காலத்திற்குப்பின் கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்கள் தாம் எழுதிய ‘தமிழ்ச் சுடர்மணிகள்’ என்னும் நூலிற் பல்வேறு காரணங்களைக் காட்டி முடிவுகட்டி யுள்ளார்கள். பிள்ளையவர்கள் தமது கொள்கை யினை நிறுவுவதற்குக் காட்டியவை யாவும் ஏற்புடைய காரணங்கள் அல்ல என்பது, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாகிய ‘தமிழிலக்கிய வரலாறு _ தொல்காப்பியம்’ என்ற நூலில் தொல்காப்பியனார் காலம் என்ற தலைப்பில் விரிவாக ஆராய்ந்து விளக்கப்பெற்றுள்ளது.

அடிக்குறிப்புகள்

1. தமிழரது பழைய வரலாற்றினைப்பற்றி இறையனார் தளவியலுரையிற் கூறப்பெற்ற இம்முடிவுகள் வரலாற்று நூலாசிரியர் ஆராய்ந்து கண்ட சரித்திர முடிபுகளோடு ஒத்திருக்கின்றன வாகலின் இவை வெறுங்கதைகள் அல்ல என்பதனை அருள்மிகு விபுலானந்த அடிகளார் அவர்கள் உலக புராணம் என்னும் கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளார்கள். (செந்தமிழ், தொ.39, பக். 19-32)

2. சதாசிவ பண்டாரத்தார், தமிழிலக்கிய வரலாறு, இருண்டகாலம். ப.3

3. தொல்.செய். 102

4. தொல்.அகத். 44

5. தொல்.கற்பு. 20 

6. தமிழ்ச் சுடர் மணிகள், பக். 27_32

7. சிலப்பதிகாரம், காடுகாண் காதை

8. சதாசிவ பண்டாரத்தார், தமிழிலக்கிய வரலாறு _ இருண்டகாலம் பக். 2_4

இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர், 1968 - சென்னை.

புதிய பார்வை | ஜூன் 1 - 15, 2014__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

கி.மு. 711 சித்திரைப் பௌர்ணமி தினமே தொல்காப்பியம் அரங்கேறிய நாள்!

 

தொல்காப்பியர் காலம் பற்றியும், திருக்குறள், சங்கப்பாடல்கள் பற்றியும், இரட்டைக் காப்பியங்கள் பற்றியும் கால ஆராய்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே இருந்து வந்துள்ளது.

இப்பழந்தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வு, தமிழ் மொழியுடன் தொடர்புடையது. தமிழ் மொழி ஆய்வு, சிந்துவெளி நாகரிக ஆய்வுடனும் தெற்கிலிருந்து மறைந்த குமரிக் கண்ட ஆய்வுடனும் தொடர்பு கொண்டது.

இன்றைய அகழாய்வுகளும், கல்வெட்டு ஆய்வுகளும் மேற்சுட்டிய பழந்தமிழ் நூல் கிறிஸ்தவ காலத்துக்கு முற்பட்டனவே என நிறுவுமாறு சான்றுகள் பல கிடைத்து வருகின்றன. இதனால் இம்முடிவில் தொடர் ஆய்விலேயே இருந்த பேரறிஞர்களாகிய ஐராவதம் மகாதேவன், தினமலர் கிருஷ்ணமூர்த்தி, ஆர். நாகசாமி போன்றவர்களும் தமிழ் மொழியியல் மரபு வழி அறிஞர்களும் இன்று கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலம் என்பதை ஏற்கின்றனர்.

இந்நிலையில், தொல்காப்பியர் காலம் கிறிஸ்துவுக்குப் பிற்பட்டது என்பார் கூற்று, சான்றற்றது என விட்டு விடத்தக்கதாகிறது. கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்ற முடிவிலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

 

க. வெள்ளை வாரணர் கி. மு. 5320
மறைமலையடிகள் கி.மு. 3500
கா. சுப்பிரமணிய பிள்ளை கி.மு. 2000
ச. சோ. பாரதியார் கி.மு. 1000
க. நெடுஞ்செழியன் கி.மு. 1400
மா. கந்தசாமி கி.மு. 1400
கே. கே. பிள்ளை கி.மு. 400
மு. வரதராசனார் கி.மு. 500
ஞா. தேவநேயப் பாவாணர் கி.மு. 700
சி. இலக்குவனார் கி.மு. 700
இரா. இளங்குமரன் கி.மு. 700

 

தொல்காப்பியர் காலத்தின் ஆய்வில் கீழ் எல்லையாக கி.மு. 7 ஆம் நூற்றாண்டைக் கொள்ளுதல் தகும்.

தொல்காப்பியம் என்ற இலக்கிய வரலாற்று ‘உரைநடைத் தொல்காப்பிய’ நூலில் தொல்காப்பியம் திருக்குறளுக்கு முற்பட்டது. சங்கப் பாடல்களுக்கு முற்பட்டது என்பதைப் பல சான்றுகளால் நிறுவியுள்ளார்.

சி. இலக்குவனார், தொல்காப்பியம் திருக்குறளுக்கும் சங்கப் பாடல்களுக்கும் முற்பட்டது என்பதற்குப் பல சான்றுகள் தந்துள்ளார். இவையும் இவை போன்ற செய்திகளும் எளிதில் மறுக்கக் கூடியதே.

பாணர், பொருநர் போன்றவர்களின் ஆற்றுப் படைப் பாடல்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஆனால், அவர்களின் பாடலுக்கு இலக்கிய வடிவம் தந்து, புலவர்கள் அவர்கள் பாடலைப் போல பாடியவையே பத்துப் பாட்டில் உள்ளன.

தொல்காப்பியர் செய்யுள் வடிவமான பாவகைகளைக் கூறும் விளக்கம் அனைத்தும், அவர் தமக்கு முந்தியவற்றைக் கண்டு கூற முற்படுவதை உணர்த்துகின்றன. பிற்கால யாப்பிலக்கண நூல்களைப் போல வரையறைப்படுத்திக் கூறவில்லை. இலக்கணம் கூறும் முறை தொடக்க காலத்தைக் காட்டுகிறது.

இதனால் முதற்கண் சங்கப் பாடல்களின் காலத்தை ஒரு முடிவு செய்து கொள்வது பொருத்தமாக இருக்கும். சங்க இலக்கியப் பாடல்கள் பாடப்பட்ட காலம் கி.மு. 5, 4ம் நூற்றாண்டுகள் என்பதை, நடுநிலையாளர் அனைவரும் ஒப்புக் கொள்வர் என்பது இயற்கையே.

 

தொல்காப்பியர் காலம்:

சங்கப் பாடல்களின் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்பதை அதன் மேல் எல்லையாகக் கருதலாம். தொல்காப்பியம் அச்சங்கப் பாடல்களுக்கு சில நூற்றாண்டுகள் முற்பட்டிருக்க வேண்டும் என்பதும் முன்பே குறிக்கப்பட்டது.

இங்கு காட்டப்பட்டுள்ள சான்றுகளின் படியும் சான்றோர் பலரது ஆய்வுகளின் படியும் உற்று நோக்கினால் தொல்காப்பியர் காலம் கி.மு. 7 ஆம் நூற்றாண்டுக்கும் 8ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது. பொருந்துவதாகும். அதனால் கி.மு. 31, திருவள்ளுவர் காலம் என முடிவு செய்யப்பட்டது போல கி.மு. 711 தொல்காப்பியர் காலம் என முடிவு செய்யலாம்.

தொல்காப்பியர் காலம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. எனினும் திருவள்ளுவர் காலம் பற்றி ஒரு முடிவு செய்ததும் திருவள்ளுவர் திருவுருவம் பற்றிய கருத்துப் போலவும் தொல்காப்பியர் திருவுருவம் பற்றி (கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் போன்ற வடிவம்) ஒரு கருத்துடன் முடிவுடன் முடிவு செய்ததும் திருவள்ளுவர் நாள் போல, தொல்காப்பியர் நாள் ஒன்றைக் குறிப்பது அச்சான்றோரை தமிழ்ப் புலவரில் முதற்குடி மகனெனப் போற்றத் தகுந்த பெருமையுடையவரை ஆண்டு தோறும் நினைத்து கொண்டாட வாய்ப்பாகும்.

 

தொல்காப்பியர் நாள்:

தொல்காப்பியர் பாயிரத்தில் பனம்பாரனார், நிலத்தரு திருவிற் பாண்டியன் அவையத்தில், நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் முன்னிலையில், தொல் காப்பியர் தம் நூலை அரங்கேற்றினார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து, அரச அவையகத்தில் (சங்கத்தில்) புதிய நூல்கள் அரங்கேற்றப்பட்ட மரபு மிகத் தொன்மைமிக்க காலத்திலிருந்து வழக்கத்திலிருந்தமை அறியப்டுகிறது. பாண்டிய நாட்டு மதுரையில் இம்மரபு தொடர்ந்து நடந்ததைத் கலித் தொகையால் அறிகிறோம்.

கலித் தொகையில், பாலைக்கலியில் பாலை பாடிய பெருங்கடுங்கோ இதைக் குறிப்பிடுகிறார்.

தலைவன் பிரிந்து சென்ற போது திரும்பி வருவதாகக் கூறிச் சென்றது இளவேனிற் காலமாகும். ஆனால், தலைவன் -மி’ரினிற் பருவம் வந்ததும், கூறியபடி வந்திலன், சிறிது காலம் தாழ்ந்தது. ‘அப்பருவம் வந்ததும், தலைவரும் வருகிறார். பார் வந்தாரே’ எனத் தோழி கூறுவதாக இப்பாடல் உள்ளது.

தரவு என்ற முதற் பகுதியில் இளவேனில் வருணனை பிறகு மூன்று தாழிசைகளில் இவ் இளவேனிற் பருவமல்லவா அவர் வருவதாகச் சொன்னது. அவரும் மறவாது வந்தனர் எனக்கூறும் ஆறுதலுரை எனப் பாட்டுப் பொருளமைப்பு உள்ளது. இதில் வரும் மூன்று தாழிசைகளும் கால (சித்திரை, வைகாசி) வருணனைகளாக உள்ளன. முதல் தாழிசை, வையையாறு பூத்துக் குலுங்கும் கால், இரண்டாம் தாழிசை காதலர் காமன் விழாக் கொண்டாடும் காலம், மூன்றாம் தாழிசை, புலவர்கள் புதிய நூல்களை அரங்கேற்றும் காலம். இங்கு மூன்றாம் தாழிசைதான் உற்று நோக்கத்தக்கது. ‘நிலன் நாவில் திரித ரூஉம் நீண்ட மாடக் கூடலார்

புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுதன்றோ?

பலநாடு நெங்சினேம் பரிந்துநாம் விடுத்தக்கால்

கடரழாய் நமக்கவர் வருதுமென்று உரைத்ததை

(கலி 35).

நிலன் நாவில் திரித ரூ உம் - உலகோர் நாவிலெல்லாம் பலவாறு புகழ்பாடும் நீண்ட மாட மாளிகைகளையுடைய இக்கூடல் மாநகரிலுள்ளார். புலவர்களின் நாவில் பிறந்த புதிய சொற்களை நூல்களை கேட்டு இன்பம் நுகர்ந்து மகிழும் இளவேறிற் காலமல்லவா?

புலன் நாவில் பிறந்த புதிய சொல் - புதிய புதிய நூல்களைப் புலவர்கள் புதிதாக இயற்றி வந்து, அவர்களே அவற்றை எடுத்துக்கூறி அரங்கேற்றுதல், புதிதுண்ணல் அரசனும் மக்களும் அப்புதிய பனுவல்களைக் கேட்டு, நுகர்ந்தது இன்புறுதல்,

இவ்வாறு அரங்கேற்றம் இளவேளியில் நடந்ததென்றால், இது நீண்ட நாள் மரபாக இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியர், பாண்டியன் அவையில் அரங்கேற்றிய நாளும் இதுவாகவே இருக்கும் எனக் கொள்ளலாம்.

எனவே, கி.மு. 711, சித்திரை மாதம், முழுமதிநாள் தொல்காப்பியர் தம் ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியத்தை அரங்கேற்றிய நாளாக மட்டுமன்றி, அவரது பிறந்த நாளாகவும் கொண்டு கொண்டாடுதல் பொருத்தமுடையதாகும்.

(நன்றி: இணையும்)

http://www.thinakaran.lk/vaaramanjari/2010/09/12/?fn=k1009125&p=1__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

பல்லறிவு உயிர்க்கு இளமைப்பெயர் (நூற்பா வரிசை)[தொகு]

  • கன்று - யானை, குதிரை, கழுதை, கடமை, மான் (3-559) எருமை, மரை (3-560) கவரி, கராம் (3-561) ஒட்டகம் (3-552)
  • குட்டி - மூங்கா, வெருகு, எலி, மூவரி, அணில் (3-550) நாய், பன்றி, பு, முயல், நரி (3-554) கோடுவாழ் குரங்கு (3-557)
  • குருளை - நாய், பன்றி, பு, முயல் (3-352) நரி (3-353)
  • குழவி - குஞ்சரம் (3-563) ஆ, எருமை (3-564) மக்கள் (3-567)
  • பறழ் - மூங்கா, வெருகு, எலி, மூவரி, அணில் (3-551) நாய், பன்றி, பு, முயல், நரி (3-554) குரங்கு (3-558)
  • பார்ப்பு - பறப்பவற்று இளமை (3-548) தபழ்பவை (3-549) குரங்கு (3-558)
  • பிள்ளை - பறப்பவற்று இளமை (3-548) தபழ்பவை (3-549) பன்றி, பு, முயல், நரி (3-555) குரங்கு (3-558)
  • மகவு - குரங்கு (3-558) கடமை, மரை (3-565) முசு, ஊகம் (3-566) மக்கள் (3-567)
  • மறி - யாடு, குதிரை, நவ்வி, உழை, ஒடும் ப்ல்வாய் (3-556)
  • http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

http://swamiindology.blogspot.in/2012/09/2_10.html

தொல்காப்பியர் காலம் தவறு-1


tolkappian+katturai.jpg
 
 
ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று கற்றோரும் மற்றோரும் போற்றும் தமிழ் அறிஞனின் உண்மைக் காலம் எது என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்து வருகிறது. இதனால் ஒரே ஆசிரியரே அவரை கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் கி.மு.ஆயிரம் ஆண்டு என்றும் எழுதிக் குழம்புவதையும், மற்றோரைக் குழப்புவதையும் காணலாம். மற்றும் பலர் மொழி இயலின் அடிப்படைக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு 20,000 ஆண்டுகளுக்கு முந்தியவர் என்று பிதற்றுவதையும் பார்க்கலாம். தமிழின் மீது தீராக் காதல் கொண்டவர்கள், தொல்காப்பியன் காலம் எதுவானாலும் சரி—அவர் பாணிணிக்கு முந்தியவர் என்று சொன்னால் போதும் என்று வட மொழி வெறுப்பில் தவிப்பதையும் காணலாம்.
 
உலகமே வியக்கும் வண்ணம் முதல் இலக்கண நூலை எழுதிய பாணினியைக் குருவாகக் கொண்டே தொல்காப்பியர் நூலை எழுதினார் என்பதை இரு மொழியும் அறிந்தவர்கள் அறிவர். பி.எஸ்.சுப்ரமண்ய சாஸ்திரி, வையாபுரிப் பிள்ளை போன்றோருக்கு இது புரியும். தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்களாகக் கருதுவோருக்கு இது விளங்கும். ஒல்காப் புகழ் தொல்காப்பியனுக்கும் இது தெரிந்தே உளது என்பதை கட்டுரையில் போகப் போகக் காண்பீர்கள்.
 
அதனால்தான் தொல்காப்பியரின் புகழைப் பாட மறந்த பாரதியும் கூட பாணினியின் புகழைப் பாட மறக்கவில்லை:
“ நம்பருந்திறலோடு ஒரு பாணினி
ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும்” என்று பாடினான்.
 
வையாபுரிப் பிள்ளை போன்றோரின் கருத்துக்களை முன்வைப்பதற்கு முன் என் கருத்துக்களை முன்வைக்கிறேன்.
 
1610= தொல்காப்பிய சூத்திரங்கள் 1610
3999= மொத்த அடிகள் 5630
5630= சொல் வடிவங்கள் 5630
13708= தொடை விகற்பம் 13,708
பிரிவுகள் 3: எழுத்து, சொல், பொருள் அதிகாரங்கள்
என்று நாம் எல்லோரும் படித்திருக்கிறோம்.
 
பெரிய பெரிய புதிர்
 
தொல்காப்பியர் ஏன் வேத கால தெய்வங்களான இந்திரனையும் வருணனையும் தமிழ்க் கடவுள் என்று கூறினார்?
 
தொல்காப்பியர் சிவன், கணபதி போன்ற தெய்வங்களைக் குறிப்பிடாதது ஏன்?
 
வள்ளுவர், இளங்கோ போலவே அதிகாரம் என்ற சொல்லை நூலில் புகுத்தியது ஏன்?
 
வள்ளுவர் போலவே அறம், பொருள், இன்பம், (வீடு) (தர்ம அர்த்த காம (மோட்ச) என்ற வேத வழி முறையை வலியுறுத்துவது ஏன்?
 
பலராமனின் கொடியான பனைக் கொடியைக் குறிப்பிடுவது ஏன்?
 
தொல்காப்பியர் நான்மறை முற்றிய பிராமணன் அதங்கோட்டு ஆசார்யார் (ஆசான்) தலைமையில் நூலை நிறவேற்றியது ஏன்?
 
த்ருண தூமாக்கினி என்பதே இவருடைய ‘ஒரிஜினல்’ பெயர் என்றும் பாணினி ‘ஸ்டைலில்’ பாணினீயம் என்று பெயர் வைத்தது போலவே தொன்மையான காப்பியக் குடியில் வந்தவர் தொல்காப்பியர் என்றும் அதன் மூலம் நூலுக்கு தொல்காப்பியம் என்று பெயரிட்டதாகவும் நச்சினார்க்கினியர் முதலியோர் கூறுவது ஏன்?
 
சங்க கால இலக்கியத்துக்குப் பின்னர் வந்த சொற்களை மூன்று அதிகாரங்களிலும் பயன்படுத்துவது ஏன்?
 
இதுவரை எந்த தமிழ் அறிஞரும் இந்த சொற் பிறப்பியல் விஷயத்தை அலசாமல் மறைத்தது ஏன்?
 
மொழியியலில் எல்லோரும் ஒத்துக் கொண்ட கொள்கைகளை தொல்.ஐ மதிப்பிடும்போது மட்டும் “அறிஞர்கள்” கண்டு கொள்ளாதது ஏன்?
 
தொல். ஆய்த எழுத்து  ( ஃ ) பற்றிப் பேசுவதால் முதல் நூற்றாண்டுக்கு முன்னர் வைக்க முடியாது என்று பல அறிஞர்கள் வாதிடுவது ஏன்?
ஏதேனும் சிறிது இசகு பிசகு வந்தால், இது எல்லாம் இடைச் செருகல் என்று சொல்லி சில “தமிழ் அறிஞர்கள்” தப்பிக்க முயல்வது ஏன்?
பொருள் அதிகாரம் பிற்காலச் சேர்க்கை என்று வெளி நாட்டு அறிஞர் பலரும் கூறுவது ஏன்?
 
இதற்கெல்லாம் விடை காண்போம். சுருக்கமான விடை:- தொல். உடைய காலம் நாலாவது அல்லது ஐந்தாவது நூற்றண்டுதான். ஆனால் அவர் கூறும் விதிகளோ அவருக்கு 1000 ஆண்டுக்கு முந்திய தமிழ் மொழியின் பழைய விதிகள்.
 
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியின் விதிகளை அவர் தொகுத்தளித்தமைக்கு தமிழ் கூறு நல் உலகம் அவருக்கு என்றும் கடப்பாடு உடையதே.
 
தொல்காப்பியரை ஐந்தாம் நூற்றாண்டில் வைக்க அவருடைய சொற்களே சாட்சி. இதோ ஒவ்வொன்றாகப் படியுங்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

தொல்காப்பியர் காலம் தவறு--பகுதி 2


tamil+grammar+image.jpg
 
 
(முதல் பகுதியைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்: லண்டன் சுவாமி)
 
1.தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து இல்லை. இதை அடுத்து வந்த குறள், சிலப்பதிகாரத்தில் மங்கல வாழ்த்தோ கடவுள் வாழ்த்தோ உண்டு. ஐந்தாம் நூற்றாண்டில் சிதறிக்கிடந்த பாடல்களை எல்லாம்-- வியாச மாமுனிவன் வேதத்தைத் தொகுத்தது போல ---பாரதம் பாடிய பெருந்தேவனார் முதலியோர் தொகுத்தபோது அதில் கடவுள் வாழ்த்தை இணைத்தனர். தொல்காப்பியர் அதற்கு ஒரு நூற்றாண்டு முந்தியவராக இருக்கலாம்.
 
2.இந்த நூலை ஒட்டி வளர்ந்த சொற்களான சூத்திரம், காப்பியம், அதிகாரம் ஆகியன வட மொழிச் சொற்கள். சங்க இலக்கியத்தில் 27,000+ வரிகளில் காண முடியாதவை. புலவர் பெயரில் மட்டும் ‘காப்பிய’ உண்டு. ஏனெனில் அவர்கள் காப்பிய (உஷனஸ் மஹா கவியின் காவ்ய கோத்திரம்) கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்கள்.
 
3.ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று பிற்காலத்தில் புகழப்பட்ட பேரறிஞரைப் பற்றி சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பும் இல்லாதது ஏன்? இவருக்கு முன் இலக்கியம் இருந்தால் அவை யாவை? அழிந்த நூல்கள் பட்டியலில் நூல்கள் பெயர்களில் சம்ஸ்கிருதச் சொற்கள் அல்லவா இருக்கின்றன! மேலும் தொல்காப்பியர் காலத்தவராகக் கருதப்படும் பனம்பாரனார் போன்றோரின் தமிழ், எளிய தற்காலத் தமிழாக இருக்கிறதே! மொழி இயல் ரீதியில் இவர்களை மிகவும் முன் போட முடியாதே. மேலும் முதல், இடைச் சங்க புலவர் பாடல்களும் சங்க இலக்கியத் தொகுப்பில் இருக்கின்றன. அவைகளின் நடையைப் பார்க்கையில் மூன்று தமிச் சங்கங்களும் 200  அல்லது 300 ஆண்டுகளுக்குள்தான் இருந்திருக்க வேண்டும்.
 
(எனது ‘ 3 தமிழ் சங்கங்கள் உண்மையா கட்டுக் கதையா?’ Three Tamil Sangams: Myth and Reality என்ற கட்டுரையில் மேல் விவரம் காண்க)
 
4. தொல்காப்பியனாரின் ஒரு சாலை மாணாக்கரான பனம்பாரனார் பாட்டிலும் ஆதிரையாரின் சிறப்புப் பாயிரத்திலும் வடமொழி சொற்களும் (அவையம், உலகம்), பிற்காலக் கருத்துகளும் இருக்கின்றன. தமிழ் கூறும் நல் உலகம் வேங்கட மலைக்குள் சுருங்கி விட்டதை மாமுலனார் போன்ற புலவர்களும் வேங்கடத்துக்கு அப்பால் உள்ள நாடுகளை ‘மொழி பெயர் தேசம்’ என்று குறிப்பிடுவர். ஆகையால் ஏறத் தாழ ஒரே காலத்தைப் பற்றி அல்லது மாமுலனாருக்குப் பிந்திய காலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டி இருக்கிறது.
 
5. தொல்காப்பியர் 68 இடங்களில் பயன்படுத்தும் “என்மனார்” முதலிய சொற்கள் சங்கச் சொல்லடைவில் இல்லை என்பதோடு ‘ஆர்’ விகுதி பிற்கால விகுதியாகும். வினைச் சொற்கள் ஆன், ஆய், ஆர் என்று நெடிலில் முடிவது கலித்தொகை, பரிபாடலில் அதிகம் வரும். இவை பரிபாடல், கலித்தொகை காலத்தைச் சேர்ந்தவை. இந்த இரு நூல்கள் பற்றிய குறிப்பும் தொல். இல் உண்டு. இதற்கு முந்திய பரிபாடல், கலித்தொகை பற்றிய சான்றுகள் இழந்த நூற்பட்டியலிலும் இல்லை.
 
6. தொல். பயன்படுத்தும் இலக்கணம் ,வணிகன், காரணம் போன்ற வடமொழிச் சொற்கள் சங்க கால நூல்களில் இல்லை.
 
7. தொல்காப்பியர் காலப் பாண்டியனை வழுதி, மாறன், செழியன் என்று சொல்லாமல் பாண்டியன் என்று மட்டும் அழைப்பதையும் கருத்திற் கொள்க. அகம், புறம் முதலிய பாடல்களில் இச் சொல் உண்டு என்றாலும் அவைகளின் காலம் சங்க கால இறுதிக் கட்டமா என்பதை ஆராய வேண்டும்.
 
8.தர்ம, அர்த்த, காம, (மோட்சம்)= அறம், பொருள், இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு நூல்களில் பெருகுவதைக் காணலாம். புறம் 28, 31 பாடல்களில் காணப்படும் இந்த இந்து மதக்கருத்துக்கள் தொல். இல் 1363, 1038 சூத்திரங்களிலும் காணக்கிடக்கிறது.
 
9.பரைத்தமை: பரத்தையிற் பிரிவு என்பது தலைவனின் ஒழுக்கக் கேட்டிற்கு அடையாளம். சங்க நூல்கள் இவைகளை அன்றாட வாழ்வியல் நிகழ்ச்சியாகப் பேசும். ஆனால் திருக்குறள் காலத்திலிருந்து இதைக் கண்டனப் பார்வையில் காண்கின்றனர். தொல்காப்பியர் இதை ஒரு பிரிவாக இலக்கணத்திற் சொல்ல மனமில்லாமல் ஒதுக்கிவிட்டது போலத் தோன்றுகிறது. அதாவது காலத்தின் தாக்கம். பிற்கால இறையனார் களவியல் இதை ஒரு சூத்திரமாக வைத்து நூல் செய்துள்ளார். ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக பலர் சந்தேகிக்கும் சிலப்பதிகாரத்தில் பரத்தையர் வாழும் வீதியை இளங்கோ அடிகள் 22 வரிகளில் வருணிக்கிறார்.
 
10.எதுகை:- குறளைப் போல, அதிகம் காணப்படுகிறது. ஆய்த எழுத்துப் பிரயோகமும் சங்க நூல்களை விட அதிகம்.
 
11.ஒட்டகம்: தொல்காப்பியர் ஒட்டகம், குதிரை முதலிய சொற்களைப் பயன்படுத்துவதும் இவரது காலத்தைக் காடுகிறது. சங்க காலத்தின் இறுதிகட்டத்தில் வந்த சிறுபாணாற்றுபடையிலும் அகம் 245லும் மட்டுமே ஒட்டகம் வருகிறது.
 
12.தொல்காப்பியர் 287 இடங்களில் தனக்கு முந்தி இருந்தவர்கள் கூறியது என்று பல விதிகளைக் கூறுகிறார். அவருக்கு முந்திய அத்தனை பேரின் நூல்களில் ஒரு சில கிடைத்திருந்தாலும் கூட, இந்தக் கட்டுரைக்குத் தேவையே எழுந்திராது. ஆக அவர் கூறுவது நாமறிந்த சங்க காலப் புலவர்கள் என்றே கருதவேண்டும்.
 
13. தொல்காப்பியர் பயன்படுத்தும் சம்ஸ்கிருதச் சொற்கள் பட்டியல் மிக மிக நீண்டது; கீழே காண்க:
 
எழுத்து அதிகாரம்: உவமம், காலம், காரம், காயம், திசை, பூதம், பூதன், மதி, ஆசிரியர், இமை, உரு, உருவு, துணி (12)
சொல் அதிகாரம்: அத்தம், ஆனை, இலக்கணம், உவமம், கருமம், களம், காரணம், திசை, தெய்வம், பூதம், சுண்ணம், வண்ணம் (12)
பொருள் அதிகாரம்: அத்தம், அந்தரம், அம்போதரங்கம், அமரர், அமுதம், அவை, ஆரம், உலகம், உவமம், உரு, ஏது, கபிலை, கரகம், கருமம், கரணம், காமம், காயம், காரணம், காலம், குணம், குஞ்சரம், சிந்தை, சின்னம், சூதர், தாரம், திசை, தூது, தெய்வம், நாடகம், நிமித்தம், பழி, பருவம், பலி, பூதம், மங்கலம், மண்டிலம், மந்திரம், மதி, மாயம், மானம், முகம், முரசு, வருணன், வள்ளி, வாணிகம் (46)
கீழ்கண்ட வார்த்தைகள் பிராக்ருதம் மூலமாக நுழைந்த சம்ஸ்கிருதச் சொற்கள்: அரசன், அரணம், அவை, ஆசான், ஆசிரியர், ஆணை, இமை, இலக்கணம், உரு, ஏமம், ஐயர், கவரி, சுண்ணம், தாமதம், தூணி, தேயம், நிச்சம், பக்கம், பண்ணத்தி, பார்ப்பனன், பையுள், மாராயம், வண்ணம்.
 
சில சொற்கள் மீண்டும் வந்த போதும் திருப்பிக் கொடுத்தமைக்குக் காரணம் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை அல்லது ஒரே காலத்தில் இருவேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டவை எனபதைக் காட்டவே.


__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

 

தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி3

 

Picture shows Kannaki’s cooking for Kovalan

தொல்காப்பியத்தின் துவக்க வரியே நெருடலாக இருக்கிறது. “எழுத்தெனப்படுவது” என்று செயப்பாட்டு (வினை) பொருளில் –Pseudo Passive voice–துவக்குகிறார். இதை பொருளதிகாரத்திலும் காண்கிறோம்.உலகத்தில் எந்த நூலும் இப்படி துவங்குவது இல்லை.

சொல்லப்/ பட்டன/ படும்/ பட்ட (3-564-1, 651-1; 3-63-22, 68-8, 253-2,). இது போல மணிமேகலை-24,30. திருக்குறளிலும் ‘கொல்லப்படு’ என்ற சொல் வருகிறது. இதுவும் தொல்காப்பியத்தின் காலத்தைக் காட்டுவதோடு மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை என்பதையும் காட்டும். புரிதல், புரிந்தோள் என்பன தொல்காப்பியத்தோடு சிலப்பதிகாரம், மணிமேகலையில் மட்டூமே வரும்.

ஆகும்: இந்தச் சொல் மூன்று அதிக்கரங்களிலும் நிறைய இடங்களில் வரும். மேலும் சம அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே ஆசிரியர் மூன்று அதிகரங்களையும் எழுதாவிடில் இப்படி இருக்கமுடியாது. புறநானூற்றில் மூன்றே இடங்களில் மட்டுமே வருகிறது.

எண்ணுங்காலும்: இது தொல். இல் 2-47-1 ல் உள்ளது. இதைத் தவிர திணைமாலை ஐம்பதில் (150-2) மட்டுமே வருகிறது. இப்படிக் ‘கால்’ விகுதியுடன் வருவது சங்க காலத்தில் மிகமிகக் குறைவு. கலி., குறள் போன்ற நூல்களில்தான் அதிகம்.

எப்பொருள்: இது சொல் அதிகாரத்துக்குப் பின்னர் குறள் முதலான பிற்கால நூல்களில் மட்டுமே உள்ளது. மேலும் ‘எப்’ துவக்கத்துடன் சங்க இலக்கியத்தில் சொற்களே இல்லை.

என்ப: தொல்காப்பியருக்கு மிகவும் பிடித்த இச்சொல் மூன்று அதிகாரங்களிலும் பரவலாகக் காணப்படுவதால் ஒரே ஆசிரியர், ஒரே காலத்தில் எழுதியதே என்பதைக் காட்டும்.

என்மனார்: முன்னர் குறிப்பிட்டது போல 60–க்கும் மேலான இடத்தில் வரும் இச்சொல்லும் 3 அதிகாரங்களிலும் காணப்படுகிறது. இது தவிர கலித்தொகை, குறுந்தொகையில் இரண்டே இடங்களில்தான் வருகிறது.

என்றா: இந்தச் சொல்லும் 3 அதிகாரங்களைத் தவிர வேறு எங்கும் இல்லை.

ஏனை, ஏனவை: ஏனவை என்ற சொல்லை 1, 3 அதிகாரங்களைத் தவிர வேறு எங்கும் காண முடியாது. ஏனை, என்ற சொல் குறிஞ்சிப்பாட்டில் ஒரு இடத்தில் மட்டுமே வரும். தொல். இல் எல்லா அதிகாரங்களிலும் காணப்படுகிறது.

எண்கள்: ஐந்து, எட்டு, ஐம்பது, ஐயீர் ஆயிரம் போன்ற எண்களை 3 அதிகாரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார். உயிர் எழுத்துக்களில் துவங்கும் சொற்களில் இருந்து மட்டுமே எடுத்துகாட்டுகளைக் கொடுத்தேன். ஏணையவற்றைக் கொடுத்தால் கட்டுரை நீளும்.

எள்: தொல்காப்பியர் காலமும் கலித்தொகை- பரிபாடல் காலமும் ஒன்றே என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன.

எள் என்ற வித்தைக் கொண்டு பல வினைச் சொற்கள் உருவாக்கப்பட்டன. இவை புற நானூற்றில் குறைவாகவும், பிற்காலத்தில் அதிகமாகவும் புழக்கத்தில் உள்ளன.எள்ளின், எள்ளாமை, எள்ளாது— குறள் முதலிய நூல்களில் மட்டுமே வரும். எள்ளின் என்ற சொல் தொல். 3-109-7 தவிர குறள், கலி. மணி.யில் மட்டுமே வருகிறது.

‘இன்’– னில் முடியும் சொற்கள் ஒன்றின், நுவலின், நீங்கின், மறுப்பின், மறைப்பின் முதலியன தொல். தவிர குறள், சிலம்பு முதலிய சங்கம் மருவிய கால நூல்களிலேயே காணலாம்.__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு

Picture shows the greatest of the Choza Kings: Karikalan

தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் ஆகியனவும் வடமொழி நிபுணர்களால் எழுதப்பட்டது என்பதை நினைவிற்கொண்டு தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிட வேண்டும்.

தொல்காப்பியத்தில் வடமொழி, மறை (வேதம்), ஐயர் முதலியன இருப்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். தமிழ் நாட்டில் வேத நெறி தழைத்தோங்கி இருந்ததால்தான் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான் தலைமையில் காப்பியம் அரங்கேறியது.

தொல்காப்பியர் கடவுள் பற்றி நிறைய இடங்களில் குறிப்பிடுகிறார். ஒரு இலக்கண நூலில் இவ்வளவு இடங்களில் தெய்வம் பற்றிப் பேசியதையும் நோக்கவேண்டும் (கடவுள் பற்றி பொருள். 5, 88, 18, 57, 93, 115 சூத்திரங்களிலும் அறம் பொருள் இன்பம் பற்றி பொருள் 92, 418 சூத்திரங்களிலும் வருகிறது)

தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்போடுவதால் தமிழின் பெருமைக்கும் பழமைக்கும் எந்த இழுக்கும் வராது. தமிழ் மொழி தொல்காப்பியருக்கு குறைந்தது 500 முதல் 1000 ஆண்டுக்கு முன்  தமிழகத்தில் பேசப்பட்டிருக்கவேண்டும். இவர் இலக்கணம் வகுத்தவர் என்பதைவிட முன்னோரின் இலக்கணத்தைத் தொகுத்தவர் என்பதே சாலப் பொருந்தும்.

தொல்காப்பியர் 38 உவம உருபுகளைத் தருகிறார். இவற்றில் 14 சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. ஆனால் வேறு 28 புதிய உவம உருபுகளை சங்கப் புலவர்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் இதை வைத்தே கால இடைவெளி அதிகம் இருந்தால் தானே இப்படி நடக்கமுடியும், ஆகையால் தொல்காப்பியர் காலத்தால் முற்பட்டவர் என்று வாதாட முயல்வர். ஆனால் தொல்காப்பியர் தனக்கு முன்னால் இருந்த விதிகளை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்புவித்தார் என்றே சொல்லவேண்டி இருக்கிறது. இப்படி நான் சொல்லக் காரணம், அவர் பயன்படுத்திய சொற்கள் சிலப்பதிகாரத்திலும் பதினென்கீழ்க்கணக்கு நூல்களிலுமே அதிகம் காணப் படுகின்றன.

நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கிறோம்.  தொல்காப்பியர் பயன்படுத்திய சொற்களை கம்ப்யூட்டரில் போட்டு பிற்காலச் சொற்களுடன் ஒப்பிட்டால் உண்மை புலப்படும் கம்ப்யூட்டர் வசதி இல்லாத காலத்திலேயே வையாபுரிப் பிள்ளை போன்றோர் தக்க சான்றுகளுடன் காலத்தைக் கணித்தனர். ஆனால் நான் சொல்லும் முறை எல்லா சொற் பிரயோகத்தையும் ஆராய்ந்து விகிதாசாரக் கணக்கில் புள்ளி விவரங்களைக் கொடுத்துவிடும்.

அவர் பயன்படுத்தும் குற்றம், குடிமை, குன்றும் போன்ற சில சொற்களே இதை நிரூபித்துவிடும்

தமிழ் சுடர் மணிகள் என்ற நூலில் 40 பக்கங்களுக்கு தொல்காப்பியரையும் தொல்காப்பியத்தையும் திரு. வையாபுரிப்பிள்ளை அலசி ஆராய்ந்து விட்டார். அதற்கு வெள்ளைவாரனார், இலக்குவனார் போன்றோர் கொடுத்த பதிலகள் திருப்தியாக இல்லை. வ. சுப. மாணிக்கம் போன்றோர் தொல்காப்பியத்தின் புகழ் பாடுவதை நாம் ஏற்கலாம். ஆனால் காலக் கணக்கீடு என்று வரும்போது அவரை எங்கே வைப்பது என்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும் எனபதே கட்டுரையின் நோக்கம்.

இது காறும் நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் காலத்தை உறுதி செய்கிறதோ இல்லையோ. ஆனால் மூன்று அதிகாரங்களையும் எழுதியவர் ஒருவரே அல்லது மூன்று அதிகாரங்களும் ஒரே கலத்தவையே என்பதை உறுதி செய்துவிட்டது. நேரம் கிடைக்கும்போது திரு. வையாபுரிப் பிள்ளையாரின் 40 பக்க வாதங்களைச் சுருக்கி வரைகிறேன்.

தொடர்பு கொள்ள: லண்டன் சுவாமிநாதன் swami_48@yahoo.com__________________


Guru

Status: Offline
Posts: 23958
Date:
Permalink  
 

பகுதி 5–தொல்காப்பியர் காலம் தவறு

 

Picture shows Yaalpaanan (Musician with Yaaz)

தொல்காப்பியர் பயன்படுத்திய மேலும் பல சொற்களைக் கீழே கொடுத்துள்ளேன். இவை சங்க இலக்கிய நூல்களைவிட பிற்கால நூல்களிலேயே அதிகம் வருகின்றன. சங்க இலக்கியச் சொல்லடைவு, தொல்காப்பியச் சொல்லடைவு, பதினெண்கீxக்கணக்கு நூல்களின் சொல்லடைவு ஆகியவற்றைக் கொண்டு ஒப்பிட்டால் நான் சொல்லுவது நன்கு விளங்கும் ஒரு சில சொற்களை வைத்து மட்டும் இப்படி முடிவு செய்யவில்லை. நூற்றுக் கணக்கான சொற்களை ஆராய்ந்தே இந்த முடிவுக்கு வந்தேன்.

முதல் நாலு பகுதிகளையும் படித்துவிட்டு இப்பகுதியைப் படிக்க வேண்டுகிறேன்.

அரில்தப (குற்றமற) : அரிஷ்ட என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது. இதைப் பாயிரத்திலும், நூலிலும் காணலாம்

உயிர்த்தல்: இச் சொல் தொல்.(1-33, 3-104-3, 14) தவிர, கலி.யில் (54-11) மட்டுமே வரும்.

என்பதனால்: இது தொல். (3-145-23), கலி.(39-5) மற்றும் நாலடியார், ஐந்திணை எழுபது போன்ற பிற்கால நூல்களில் மட்டுமே உள்ளன.

‘வை’ யில் முடியும் சொற்கள்: அனையவை, என்றவை, மறைந்தவை போன்ற சொற்கள் பிற்கால நூல்களில் மட்டுமே அதிகம் உள்ளன.

நூறாயிரம், நுனி, நுவலுக்காலை,புணருங்காலை,நீட்டம், நீட்டல் ஆகியனவும் பிற்கால வழக்கில் அதிகம்.

மை—இல் முடியும் சொற்கள்: இவ்வகைச் சொற்கள் குறளில் பரவலாக உள்ளன. புறநானூற்றில் ஓரிடத்தை தவிர தொல். (3-138-1) மற்றும் பிற்கால வழக்கில் அதிகம்.

முதலில், முடிவினது, முடிவு, முடிபு ஆகியனவும் இப்படிபட்டவை.

மானம்: இது தொல். இல் 3 அதிகாரங்களிலும் பரவலாக உள்ளது. இது தவிர பிற்கால நூல்களில் மட்டுமே காணமுடியும்.

மறுதலை, விழைவு, கொற்றவை நிலை, பல்லவை, பல்முறை, பல்வகை, புரிதல், புல்லா, புல்லாது, பெருநெறி, பாங்கன், மடிமை, மடன்மா, வரைதல், கொள்ப ஆகிய சொற்களையும் காண்க.

 

குறிலும் நெடிலும்

சங்க இலக்கியத்தில் குறில் ஒலியுடன் வரும் சொற்கள் நமது காலத்தில் நெடில் ஒலியுடன் வழக்கத்தில் உள்ளன. பழங்காலத்தில் வந்தனன், வந்தனர், வந்தனள் என்றால் இப்பொழுது நாம் வந்தான், வந்தார்கள், வந்தாள் என்று நீட்டு முழங்குவோம். அதாவது ஆன், ஆர், ஆள் விகுதி பிற்காலத்தில் அதிகம். இதை தொல். இல் நிறைய காணலாம்.

விழிப்ப, பொச்சாப்பு, பெருமிதம், மூவகை இவைகளும் தொல். இல் 3 அதிகாரங்களிலும் பரவலாக உள்ளன. இது தவிர பிற்கால நூல்களில் மட்டுமே காணமுடியும்.

சிவண: இந்த ஒலி தொல்காப்பியரின் முத்திரை. சிவணல், சிவணிய, சிவணி, சிவணாது, சிவணும் போன்று 20க்கும் மேலாக இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் 27000 வரிகளில் மூன்று இடத்தில் மட்டுமே காணலாம். ஆக மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை அல்லது ஒரு கைப்பட எழுதியவை என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை.

இதே போல காரணம், கருமம், வெறுப்பு, கல்வி போன்ற சொல் வழக்குகளும் குறளிலும் பிற்பட்ட நூல்களில்ம் மட்டுமே உள்ளதால் தொல்காப்பியரையும் அவர்களோடு வைத்தே காணவேண்டும்.

தொல். கூறும் ஔ, ஃ முதலியன சங்க இலக்கியத்திலும் பழைய கல்வெட்டிலும் இல்லை அல்லது குறைவு. இதுவும் அவரது காலத்தை கணக்கிட உதவும். தொடர்பு கொள்ள: swami_48@yahoo.com__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard