கிறிஸ்துவ பைபிளியல் பேராசிரியரும், தொல்பொருள் அகழ்வாய்வில் போற்றப்படும் ஜேம்ஸ் டாபர் இயேசு மரணம் வியாழன் அன்று தான் என எழுதிய கட்டுரை இணைப்பு
அவர் சுவிசேஷ்க் கதைகளில் உள்ள கிரேக்க குறிப்புகள் மற்றும் யூதர்கள் நாட்களை கணக்கிடும் முறை வைத்து எழுதியுள்ளார். யோனா மீனின் வயிற்றுக்குள் உயிரோடு சென்று திரும்பியதாகக் கதை. அப்படி என்றால் கல்லறையில் வைக்கும் போது ஏசு உயிரோடு இருந்தாரா?
தெளிவாக வெள்ளி என உள்ளதை மாற்றி கதை தேடக் காரணம்- ஏசு பேசியதாக இவ்வசனம்
மத்தேயு12:40யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றில் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருந்தான். அதைப் போலவே, மனித குமாரனும் கல்லறைக்குள் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருப்பார்.
Good Friday is a Myth; Jesus Died on a Wednesday!!by Roy A. Reinhold
புதிய ஏற்பாட்டில் முதலில் வரையப்பட்டவை பவுல் கடிதங்கள் 14ல் 6 அது மட்டுமே உண்மையில் எழுதியவர் கூறப்பட்ட நபர் எனவும், மற்ற 21 புத்த்கங்களும் யார் யாரோலோ அடுத்த 100 ஆண்டுகளில் புனையப்படவை. 27 நூல்களில் ஒன்று கூட ஏசுவைப் பார்த்து பழகியவர் எழுதியதல்ல.
மாற்கு14:12அன்று புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகையின் முதல் நாள். அன்றுதான் அவர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடுவார்கள். இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். ஏசுவின் கடைசி இரவு விருந்தை பஸ்கா பண்டிகை விருந்து, அதாவது வியாழன் மாலை விருந்து வெள்ளி கைது நிசான் மாதம் 1ம் தேதி பஸ்கா.
யோவான் சுவி ஏசு கைதான அன்று யோவான் 18:28 பிறகு யூதர்கள் இயேசுவைக் காய்பாவிடம் இருந்து ரோம ஆளுநரின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்போது அதிகாலை நேரம். யூதர்கள் அரண்மனைக்கு உள்ளே போக விரும்பவில்லை. போனால் அவர்களின் தூய்மை கெட்டுத் தீட்டுப்படும். ஏனென்றால் அவர்கள் பஸ்கா பண்டிகையின் விருந்தை உண்ண விரும்பினர்.
இயேசு எந்த வருடம் பிறந்தார்- எந்த வருடம் இறந்தார்? எதுவுமே நிச்சயமாய் சொல்ல முடியாது? ஏன் சுவிசேஷக் கதாசிரியர்கள் இறந்த மனிதனை தெய்வீகர் ஆக்க தன்னிச்சையாய் கதை புனைந்தவையே ஆகும்.
அசோகர் மூலம் பரவிய இந்திய நம்பிக்கைகளும் எபிரேய அரசியல் நம்பிக்கைகளும் ஒன்று சேர எழுந்த ஒரு மூட நம்பிக்கை தான் கிறிஸ்துவம். பிறப்பில் விருத்த சேதனம் என ஆண்குறி நுனித்தோல் வெட்டப்பட்ட இயேசு – பஸ்கா பண்டிகை என எபிரேயர்களுக்கான கடவுளின் ஒரே இருப்பிடமான ஜெருசலேம் வந்து ஆட்டை கொலை செய்து பலி தர் வந்த போது ரோம் ஏகாதிபத்திய கவர்னரால் கைது- விசாரணைக்குப் பின் ரோம் தன் ஆட்சிக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியாளருக்கான மரண தண்டனை முறையான தூக்கு மரத்தில் தொங்கவிடப்படுதல் முறையில் ஏசு மரணம். அதாவது இயேசு பிறப்ப்லிருந்து மரணம் வரை யூதராகவே வாழ்ந்தார்.
யூதரல்லாதவர்களை நாய் – பன்றி என்கிறார். எந்த ஒரு யூதரல்லாதவர் வீட்டிற்கும் அவர் செல்லவே இல்லை. இறந்தபின்னர் இவர் பழைய உடம்பில் மீண்டும் உயிர் பெற்று சிலருக்கு காட்சி தந்தான ஒரு ஊகக்கதையின் அடிப்படையில் இயேசுவை நேரில் சந்திதிராத பவுல் என்பவரால் ஆரம்பிக்கப் பட்ட ஒரு மதக் குழுவே கிறிஸ்துவம். பவுலும் இயேசுவின் இரண்டாவது வருகை என உலக அழிவை தன் வாழ்நாளில் பார்த்தார்.
ஏசு மரணத்திற்கு 25 ஆண்டு பின்பான் பவுல் கடிதத்தில் , பவுல் தான் புனையும் கதையை விட்டுச் சென்றவரை சபிக்கிறார்.
கலாத்திய1: 6 கிறிஸ்துவின் பொருட்டு அருள் கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது.7 வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை.8 நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக!
சுவிசேஷங்களின் கதை நாயகர் தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார்.
பவுல்- பழைய ஏற்பாட்டில் உள்ள ஒரு படைப்புக் கதையை எபிரேயர் பார்வையை மீறி- ஆதாம் பாவம் நீக்க கிறிஸ்து எனப் புனைந்தார்.
ஒரு தப்புக்கு- தண்டனையோ – அபராதமோ அனுபவித்தால் அதன் பின் தண்டனை முடிந்துவிடும் என்பது இயல்பு. மனிதன் பூமியில் மரணம் அடையக் காரணம் ஆதாம் பாவம் எனில் இயேசு மரணம் அதற்கான பரிகாரம்[அபராதம்] எனில் அதன் பின் உலகில் யாருமே மர்ணம் அடையக் கூடாது. பூமியில் மனிதன் மரணத்தின் அடிப்படை விலகவும் இல்லை.
யோனா மீனின் வயிற்றுக்குள் உயிரோடு சென்று திரும்பியதாகக் கதை. அப்படி என்றால் கல்லறையில் வைக்கும் போது ஏசு உயிரோடு இருந்தாரா?
உபாகம24:16“பிள்ளைகள் செய்தக் காரியத்திற்காகப் பெற்றோர்கள் கொலைசெய்யப்படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த காரியங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும்.
கிறிஸ்து என்பவர் வந்தால் அவர் வாழும் காலத்தின் தலைமுறையுடன் [சந்ததியுடன்] உலகம் அழிய வேண்டும். பின்னர் கணக்கெடுப்பு- இது தான் கிறிஸ்து என்ற நம்பிக்கையின் அடிப்படை.