New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனு தர்மம்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
மனு தர்மம்
Permalink  
 


மனு தர்மம்-1

இந்து மதத்தின் சிறப்புகளையும் பண்டைய இந்திய சமுதாயத்தின் பெருமைகளையும் சிறப்பித்து கூறுவோரில் பலர் சிறிது அடங்கிப் போகும் ஒரு விஷயம் மனு ஸ்மிருதி. ஏனெனில், இன்றுள்ள சாதிய முறைக்கும், இத்தனை ஆண்டு காலம் நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கும் மனு ஸ்மிருதியே காரணம் என்ற ஒரு கருத்து அனைவரது மனங்களிலும் ஆழமாக விதைக்கப்பட்டு விட்டது.

பிராமண துவேஷம் எங்கெல்லாம் நடக்கிறதோ (தமிழகத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும்) அங்கெல்லாம் மேற்கோள் காட்டப்படுவது ‘ மனு ஸ்மிருதி’ எனப்படும் மனுவின் நீதி நூல். இது நீதி நூல் என்பதையே பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மனிதர்களால் உருவாக்கப்பட்டு, காலத்திற்கேற்ப மாறுவது ‘ஸ்மிருதி’ . அந்தந்த கால கட்டத்திற்கும் , மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப, பல்வேறு ஸ்மிருதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது அனைவராலும் தூற்றப்படும் மனு ஸ்மிருதி கிருதா யுகத்திற்க்கானது. இதை கலி யுகத்தில் பயன்படுத்தியது நம் முன்னோர்கள் செய்த முதல் தவறு. ஆயினும், மனு ஸ்மிருதியில் எவ்வித பிழையும் இல்லை, அதை உறுதி செய்யவே இந்தக் கட்டுரை.

முதலில் மனு ஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ள வர்ணாசிரம முறைகள் அதன் ஒரு மிகச் சிறிய பகுதி என்பதை அனைவரும் உணர வேண்டும். கல்வி, வாழ்க்கை முறை, பக்தி, குற்றங்கள், தண்டனைகள், போர் முறை, திருமணம், சாட்சி சொல்லும் முறை, ஒற்றர்கள் என பல சமுதாய, அரசியல் விஷயங்களும் மனு ஸ்மிருதியில் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி அனைத்து விஷயங்களையும் விவாதிக்கும் ஒரு நீதி நூல் உருவாக்கப்பட்டது ஆச்சர்யமே!

மனு ஸ்மிருதி மனிதர்களை வர்ண முறையில் நான்காகவும், ஆசிரம முறையில் நான்காகவும் பிரிக்கிறது. வர்ண முறையில் பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையிலும், ஆசிரம முறையில் சிறுவர் (வயது < 8), பிரமச்சாரி (8-16), சம்சாரி (16-48) மற்றும் சந்நியாசி (>48) எனவும் பிரிக்கிறது. ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமைகளையும், வாழ்க்கைமுறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது மனு தர்மம். இவை அனைத்தும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த உருவாக்கப் பட்டனவே அன்றி, பாழ்படுத்த அல்ல.

பிராமணர்கள் வேதம் ஒதுவதற்கும், பக்தி மார்க்கத்தைப் பரப்புவதற்கும், க்ஷத்ரியர்கள் ஆட்சி செய்து நீதி வழங்கவும், வைசியர்கள் நியாயமான வியாபாரம் செய்யவும், சூத்திரர்கள் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளை செய்வதற்கும் பணிக்கப்பட்டனர். இதில் பிராமண துவேஷர்களின் வாதம் யாதெனில், மனு ஸ்மிருதியில் பிராமணர்களுக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது, மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?

‘க்ஷத்ரியனை விட உயர்ந்தவன் இல்லை. ஆகையால் ராஜசூயம் நடக்கும்போது, பிராமணன் க்ஷத்ரியனை விட தாழ்வான இடத்திலேதான் அமர வேண்டும்’ – இது சதபத புராணம் கூறுவது. ‘சந்திரன், வாயு, அக்னி, சூரியன், இந்திரன், குபேரன், வருணன், யமன் ஆகிய எட்டு உலக நாயகர்களின் அம்சங்களைக் கொண்டவன் அரசன். ஆகையால் அவனுக்கு அசுத்தம் கிடையாது’ என்றும் சொல்கிறது. பிராமணன் அரசனாக முடியாது என்றும் கூறுகிறது மனு தர்மம். இதிலிருந்து, க்ஷத்ரியர்களே உயர்வானவர்களாக சொல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

மற்றொரு குற்றச்சாட்டு, பிராமணர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது. உதாரணமாக பிராமணனுக்கு வரி விலக்கு என்பது. இதை மனு தர்மம் யாருக்கு அளிக்கிறது? நன்கு கற்றறிந்து, வேதம் ஓதி, இரந்து உண்ணும் பிராமணனுக்கே இச்சலுகை. பிராமணனாகப் பிறந்து, வேறு தொழில் ஒருவன் செய்வானாயின் அவனுக்கு எவ்வித சலுகையும் வழங்கவில்லை மனு தர்மம். மாறாக, வன்மையாகக் கண்டிக்கிறது. எவ்வளவு வசதியாக இருந்தாலும், ஜாதியைப் பொறுத்து சலுகை வழங்கும் இன்றைய சட்டங்களைப் போற்றுவோருக்கு, மனு ஸ்மிருதி தவறாகத்தான் தெரியும்.

மனு ஸ்மிருதி பிராமணர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கிறது என்றால் வேதங்களை கற்றுணர்ந்து, தனக்கு வகுத்த முறைப்படி வாழும் எந்த பிராமணனும் மரண தண்டனை அளிக்கும் அளவுக்கு தவறு இழைக்க மாட்டான் என்ற நம்பிக்கையே காரணம். இதில் தவறேதும் இல்லையே. இன்று வரை மரண தண்டனை விதிக்கத் தகுந்ததாக கருதப்படும் குற்றங்களான கொலையிலும், கற்பழிப்பிலும், ராஜ த்ரோகத்திலும் எத்தனை பிராம்மணர்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றனர்? பார்ப்பன பயங்கரவாதம் என்று இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் பிதற்றிக் கொண்டிருப்பது தொடர்ந்த போதும் பிராமணர்கள் குற்றங்களிலோ, குற்றங்களைத் தூண்டுவதிலோ, வன்முறையை ஊக்குவிப்பதிலோ எந்த பங்கும் கொள்வதில்லை என்பதே உண்மை.

பிராமணனுக்கு மரண விலக்கு அளிக்கும் அதே மனு ஸ்மிருதிதான் இதையும் சொல்கிறது


அஷ்டோபாத்யம் து சூத்ரச்ய
ஸ்தேயே பவதி கில்பிஷம்.
ஷோடசைவ து வைச்யச்ய
த்வாத்ரிம்சத் க்ஷத்ரிச்ய  ச.
ப்ராம்மனச்ய சது: ஷஷ்டி:
பூர்ணம் வாபி சதம் பவேத்.
த்விகுணா வா சது.
ஷஷ்டி: தத் தொஷகுனா வித்தி: ஸ:

அதாவது, ‘அறிந்து திருட்டுக் குற்றத்தை செய்கின்ற சூத்திரனுக்கு, வழக்கமான தண்டனையை விட எட்டு மடங்கு அதிக தண்டனையை விதிக்க வேண்டும். வைச்யனுக்கு பதினாறு மடங்கு. க்ஷத்ரியனுக்கு முப்பத்திரண்டு மடங்கு. குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால் பிராமணனுக்கு 64 அல்லது 100 அல்லது 128 மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்’. பிராமணனுக்கு சலுகைகள் தரும் அதே மனு ஸ்மிருதிதான் இதனையும் கூறுகிறது.

இந்த சலுகைகள் பிராமணனுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. முதியோர், ஊனமுற்றோர், ஏழைகள், சிறு தொழில் செய்வோர் என அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிராமணன் மனு தர்மத்தின் படி வாழ்கையில் அவன் ஏழை என்ற பகுதிக்குக் கீழ் வந்து விடுகிறான். ஏனெனில், வேதங்களின் படியும், மனு தர்மத்தின் படியும், பிராமணன் அடுத்த நாள் உணவுக்காகக் கூட பொருள் சேர்த்து வைக்கக் கூடாது. பிராமணனுக்கு சலுகைகளைத் தரும் அதே மனு தர்மம்தான் அவன் மீது இத்தகைய சுமைகளையும் ஏற்றுகிறது. மற்ற எந்த தரப்பினருக்கும் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

பிராமணர்கள் மனு ச்மிரிதியை உருவாக்கி இருந்தால் தாங்களே தங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளை இட்டுக் கொண்டிருப்பார்களா? இன்று இந்திய சட்டத்தின்கீழ் சலுகை பெறுவோருக்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா? நீங்கள் சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.

ஸம்ஸமித்யுவஸே வ்ருஷன்னக்னேன விச்வான்யர்ய ஆ (ரிக்)

பொருள்: நன்மையை அள்ளிக் கொடுக்கின்ற தெய்வமான அக்னி தேவனே! எல்லா  உயிரினங்களையும் ஒற்றுமையாக இருக்கச் செய்வாயாக!’

நன்றி:நேர் கொண்டபார்வை



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

மனுதர்மம்-2

முந்தைய பாகத்தில் மனு ஸ்மிருதி என்பது என்ன என்பதைப் பற்றியும், அதிலிருந்து சில விளக்கங்களையும் பார்த்தோம். இப்பாகத்தில் மனு ஸ்மிருதி பற்றி மேலும் அலசுவோம்.

பின்வரும் ஸ்லோகங்கள் மனுஸ்மிருதியில் இடம் பெற்றுள்ளன.

‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’

அதாவது – ‘சூத்திரன் பிராமணனாகி விடலாம்; பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், மகள்களும் வேறு வர்ணத்தை அடையலாம்’. ஆக, சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று சொல்லும் அதே மனு தர்மம்தான் அவர்கள் வேதம் ஓதும் பிராமணர்கள் ஆகலாம் என்று சொல்கிறது. இதை மற்றோர் விதமாய் சொல்ல வேண்டுமானால், வேதம் ஓத விருப்பம் தெரிவிப்பவன் பிராமணனாக மாறியே அவ்வாறு செய்ய இயலுமேயன்றி சூத்திரனாகவே இருந்து செய்ய இயலாது.  இதில் யாரும் எந்த வகையிலும் தடுக்கப்படவோ ஒடுக்கப்படவோ இல்லை.

அப்ராம்ணாத் அத்யயனம் ஆபத்காலே விதியதே
அனுவ்ரஜா ச சுச்ரூஷா யாவத் அத்யயனம் குரோ:

அதாவது, தவிர்க்க முடியாத காலங்களில் ஒரு பிராமண மாணவன் பிராமணன் அல்லாத குருவிடமிருந்து கல்வி கற்கலாம். அவ்வாறு செய்கையில் அம்மாணவன் அக்குருவிற்கு பணிவிடை செய்ய வேண்டும்.

பிற்போக்கு கண்ணோட்டத்துடன் மனுஸ்ம்ருதியை  அணுகும் முற்போக்குவாதிகளின் கண்களில் முன்னுக்குப்பின் முரணாக தென்படும் இந்த தர்மங்களுக்கு பின்னால் ஆதவனென பிரகாசிக்கும் உண்மை – மனுஸ்ம்ருதி ஜாதி அடிப்படையில் அமைக்கப்பட்டது அல்ல என்பதே.  ஒரு சமூகத்தின் அனைத்து அங்கங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டுமே சமூக நலன் காக்க முடியும் என்ற கருத்தே இந்த தர்ம நூலின் அடிப்படை. அனைவருமே வேதம் கற்க வந்தாலோ அனைவருமே விவசாயம் செய்யத்தொடங்கினாலோ சமூகத்தில் சீரமைப்பு இருக்க வழியில்லை. வழி வழியாக ஒரு தொழிலை ஒரு குடும்பத்தினர் செய்கையில் அவர்கள் ரத்தத்தில் அது ஊறி விடுமென்று மனுஸ்ம்ருதி கூறுவது முட்டாள்த்தனம். ஆனால் ‘ஜீன்’ எனப்படும் மரபணுக்கள் நம் முன்னோர்களிடம் இருந்து வருகிறது. அதன் மூலமாகவே பல குணங்களை நாம் பெறுகிறோம் என்று ஆங்கிலேயன் கூறினால் அது விஞ்ஞானம்!

எந்த ஒரு தர்ம சாத்திரத்தையும் அதன் உண்மையன பொருளுணரமல் வார்த்தைக்கு வார்த்தை அமல்படுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு விஷயம்!  அது மனு தர்மத்திற்கும் முற்றிலும் பொருந்தும். மனுவின் நீதிகள் அனைத்தையும் ஒரு அரசன் அமல்படுத்த வேண்டியதில்லை. அந்த ராஜ்ஜியத்திற்கு, மக்களின் வாழ்க்கை முறைக்கு எது தேவையோ அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறே மனுவின் நீதிகளும் கூட வகுக்கப்பட்டுள்ளன.]
நான் முந்தைய பதிவில் சொன்னதுபோல் மனு பிராமணர்களுக்கு சில சலுகைகளை வழங்கினாலும், மிகக் கடுமையான விதிகளை விதிக்கிறான். வேதம் ஓதி, சாஸ்திர முறைப்படி வாழாத பிராமணனை மனு தர்மம் மிகக் கடுமையாக அணுகுகிறது.

‘மற்றவர் பொருளில் விருப்பம் வைத்து, பொய்யைப் பரப்பி, கர்வம் கொண்டு, பொறாமை உடைய பிராமணன் பூனையின் குணம் கொண்டவன். இப்படிப்பட்ட குணமுடைய பிராமணன் நரகத்தில் வீழ்கிறான். பூனை குணம் கொண்ட பிராமணனுக்கோ, விரதமுடையவன் போன்ற வேடம் போடுகிற பிராமணனுக்கோ, வேதங்களை முறையாகப் பயிலாத பிராமணனுக்கோ, நன்னடத்தை கொண்ட எவனோருவனும் ஒரு சிறிய தானத்தைக் கூட செய்து விடுதல் கூடாது. அவ்வாறு செய்தால் தானம் வாங்கியவனோடு சேர்ந்து தானம் கொடுத்தவனும் துன்பத்தையே அனுபவிப்பான்.’

அனைத்திற்கும் மேல் நான்கு வர்ணங்களைத் தவிர ஐந்தாவது பிரிவு என்றொன்று கிடையாது என்பதை மனு தர்மம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.

அஜ்யேஷ்டாஸோ அகனிஷ்டாஸ ஏதே
ஸம் ப்ராதரோ வாவ்ருது: ஸௌபகாய
(ரிக்)

பொருள்:  உங்க‌ளில் உய‌ர்ந்த‌வ‌ர் தாழ்ந்தவ‌ர் என்று யாரும் கிடையாது. நீங்க‌ள் அனைவ‌ரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே! என‌வே ஒன்றுப‌ட்டு வாழ்வீர்க‌ளாக‌, மேன்மைய‌டைவீர்க‌ளாக‌!



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
பெண்ணடிமையை மனுநீதி வலியுறுத்துகிறதா?
Permalink  
 


பெண்ணடிமையை மனுநீதி வலியுறுத்துகிறதா?

 

சரியான பார்வையில் மனு ஸ்மிருதி : மலர் மன்னன்

ஓரு குலத்துக்கொரு நீதி என்பதுவே மனுநீதி என்று ஓசை நயத்திற்காகப் பேசிப் பேசி, சமுதாயத்தைப் பிளவு படுத்தி, மக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் பழங்காலத்துப் பிற்போக்கான சட்ட நூல்தான் மனு நீதி என்கிற எண்ணம் நம்மில் பலரிடையே நிச்சயமாகிவிட்டிருக்கிறது. விருப்பு வெறுப்பின்றி, முன்கூட்டியே ஓர் அபிப்பிராயத்துடன் அணுகாமல் ஆராய்ந்து பார்த்தால்தான் மனு நீதி என்கிற மனு ஸ்மிருதி வகுத்திருக்கும் விதிமுறைகள் எத்தகையன என்னும் முடிவுக்கு வரமுடியும்.

முதலில் ஸ்மிருதி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆதியிலிருந்து தொடர்ந்து வருபவை ஸ்ருதி என்கிற செவி வழியாகத் தலைமுறை தலைமுறையாய் மிகுந்த மரியாதையுடன் ஏற்கப்பட்டு வரும் கோட்பாடுகள். நான்மறைகளும் அவற்றின் அடியற்றி வரும் உபநிடதங்களும் இவ்வகையைச் சேர்ந்தவை. கண்ணபிரான் அருளியதாக அறியப்படும் பகவத் கீதையையுங்கூட ஸ்ருதி என்று கூற வியலாதுதான். ஆனால் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு வாய்மொழியாக அது உபதேசிக்கப்பட்டமையால் அதையும் ஸ்ருதியெனக் கொள்வதில் தவறில்லை எனக் கருதுவோர் உண்டு. ஸ்மிருதி எனப்படுபவை ஏட்டில் பதிவு செய்யப்பட்ட விதிமுறைகள். வேத காலத்திற்குப் பின் வெகு காலங் கழிந்த பிறகுதான் இவை உருவாயின. பொதுவாக தர்ம சாஸ்திரங்கள் எனக் கருதப்படுபவைதாம் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றன. மாறும் காலத்திற்கேற்ப மாற்றங்கொள்பவைதாம் தர்ம சாஸ்திரங்கள். அவ்வாறு மாற்றங்கொள்ளாமல் சில விதிமுறைகள் முரண்டுபிடித்தால் மூலாதாரமான ஸ்ருதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஸ்ருதிகள் என்ன சொல்கின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஸ்மிருதியின் கூற்றைத் தள்ளிவிட வேண்டும் என்று தர்ம சாஸ்தரங்களான ஸ்மிருதிகளே அறிவுறுத்தியிருக்கின்றன. ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு காணப்படுமானால் ஸ்ருதியில் சொல்லப்பட்டிருப்பதைத்தான் சரியென்று கொள்ளவேண்டும் என மனு ஸ்மிருதியும் தனது இரண்டாவது சருக்கத்தின் பனிரெண்டாவது, பதிமூன்றாவது செய்யுள்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆக, ஹிந்து சமுதாயத்திற்கு ஸ்ருதிகளான வேதங்கள்தாம் வழிகாட்டும் அறநெறிகள். மனு ஸ்மிருதியே ஒப்புக்கொண்டுள்ளவாறு, ஸ்மிருதிகள் இரண்டாம் பட்சந்தான். மனு நீதி எனப்படும் மனு ஸ்மிருதியானது ஹிந்து சமுதாயத்தின் ஒரேயரு ஸ்மிருதியல்ல. மொத்தம் உள்ள பதினெட்டு ஸ்மிருதிகளுள் ஒன்றுதான் அது. ஒரு தனி நபர், ஒரு குடும்பம், ஒரு சமுதயம், ஒரு தேசம் ஆகியவை கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளை, தான் எழுதப்பட்ட காலத்திற்கேற்ப வகுத்துள்ளது, மனு ஸ்மிருதி. விண்ணியல், மருத்துவம் முதலான விஷயங்கள் குறித்தும் அது பேசுகிறது. 


மனு ஸ்மிருதி எப்பொழுது எழுதப்பட்டது என்பதற்கு வரலாற்றுப் பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை. எந்தக் கால கட்டத்தில் அது ஹிந்து சமூகத்தால் வார்த்தை பிசகாமல் அனுசரிக்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை. ஸ்ருதிகளான வேதங்கள் தோன்றி நீண்ட நெடுங்காலம் கழிந்த பிறகுதான் ஸ்மிருதிகளுள் ஒன்றான மனு ஸ்மிருதி தோன்றியது. மனு ஸ்மிருதிக்குப் புராண அந்தஸ்தை அளிப்பதற்காக அதனை இயற்றியவர் மனு என்கிற ஆதி புருஷன் என்று கற்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்ப காலம் என்றும், ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு ஆதியானவர் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. தற்சமயம் நடப்பது ஏழாவது மன்வந்தரம். இதன் ஆதிபுருஷர் வைவஸ்த மனு என்கிறது, புராணம். இந்த மனு எழுதி வைத்ததுதான் மனு ஸ்மிருதி என்று எவரும் கூறினால் அதை ஏற்பது எளிதல்ல. 

வரலாற்றுக் கண்ணோட்டப்படிப் பார்த்தால் சுங்க வம்சத்துப் பேரரசர் புஷ்யமித்திரர் காலத்தில்தான் மனு ஸ்மிருதி என்கிற பெயரில் ஒரு சாஸ்திரம் எழுதப்பட்டது என்று ஒரு தரப்பினரால் கருதப்படுகிறது. ஆனால் இதற்கும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஆக, புராதன வேத காலத்து ஹிந்து சமுதாயம் இந்த மனு ஸ்மிருதியை அனுசரித்திருக்க வாய்ப்பில்லை. மனு ஸ்மிருதி எழுதப்பட்ட காலம் கி. மு. முதல் நூற்றாண்டு என ஒரு கருத்து நிலவுகிறது. 

மனு ஸ்மிருதியைப் பற்றிய பிரதான கருத்துகள் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்தான் வெளிப்படலாயின. இவை பெரும்பாலும் ஹிந்து சமய நம்பிக்கைகளையும் ஹிந்து சமூக நடைமுறைகளையும் இழிவானவை என நிறுவவேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் தெரிவிக்கப்பட்டன. மேலும் மனு ஸ்மிருதியின் மீதான கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்புகள் ஐரோப்பியர்களால், அவர்களின் கண்ணோட்டத்திற்கும் புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கும் பயிற்சிக்கும் ஏற்பவே இருக்கும் என யூகிப்பதில் தவறிருக்காது. 

மனு ஸ்மிருதியில் மொத்தம் 2031 செய்யுள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு ஒழுக்க விதியை வலியுறுத்துகிறது. ஆனால் இந்த 2031 விதிமுறைகளும் எந்தக் கால கட்டத்திலேனும் ஹிந்து சமூகத்தால் பாரத தேசம் முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகக் கூறுவதற்கில்லை.
மனு ஸ்மிருதியை ஆதாரம் காட்டிப் பேசப்படுகின்ற விதிமுறைகள் பலவும் அவரவர் கன்ணோட்டப்படியான விளக்கவுரைகளேயன்றி நேரடியான மொழிபெயர்ப்புகள் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தலை சிறந்த சமூக சீர்திருத்தத் துறவியும், ஆரிய சமாஜம் என்னும் அமைப்பை உருவாக்கியவருமான சுவாமி தயானந்த சரஸ்வதி மனு ஸ்மிருதிக்கு ஒரு விளக்கம் தந்துள்ளார். மனு ஸ்மிருதியின் செய்யுள்களிலேயே பல ஒன்றுக்கொன்று முரண்படுவதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, ஒவ்வொரு கால கட்டத்திலும் அவ்வப்போதைய வாய்ப்புகளுக்கு இணங்க மனு ஸ்மிருதியில் இடைச் செருகல்கள் நுழைந்து விட்டிருக்கின்றன என்பதுதான். ஒன்றோடொன்று முரண்படும் விதிமுறைகளைக் கண்டறிந்து இன்றைய காலகட்டத்திற்கு எந்த விதிமுறைகள் பொருந்துகின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு பொருந்தாதவற்றைப் புறக்கணிப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, மனு ஸ்மிருதியின் இரண்டாம் சருக்கத்தின் தொண்ணூற்றேழாவது செய்யுள் கீழான குணவியல்புகள் உள்ள வர்கள் வேதமெய்ப்பொருளை அறியவியலாது என்று கூறுகிறது. பிறவியின் அடிப்படையில் பேசப்படாமல் குண நலன்களையே வலியுறுத்துவதாக இது இருப்பதால் இதனை ஏற்பதுதான் முறையாக இருக்கும்.
ஆண், பெண் என்கிற பேதமின்றி எல்லாக் குழந்தைகளையும் ஐந்து அல்லது எட்டாவது வயதிலாவது கட்டாயக் கல்வி பெறச் செய்வது பெற்றொருக்கு மட்டுமின்றி அரசுக்கும் நிர்வாக சபைகளுக்கும் கடமை யென்று ஏழாவது சருக்கத்தின் 152 வது செய்யுள் விதிக்கிறது. குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யத் தவறுவது தண்டனைக்குரிய குற்றம் என்றே இச்செய்யுள் எச்சரிக்கிறது. எனவே பெண்களுக்குக் கல்வி அவசியமில்லை என விதிமுறை ஏதும் இருக்குமானால் முரண்பாடான அந்த விதியைத் தூக்கி யெறிந்துவிடலாம். 


திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, தனது ஒன்பதாவது சருக்கத்தின் தொண்ணூறாவது செய்யுளில் ஒரு பெண்ணுக்கு உரிய பருவத்தில் தன் தகுதிக்கு ஏற்ற கணவனைத் தேர்வு செய்துகொள்ளும் உரிமையை மனு ஸ்மிருதி உறுதிசெய்கிறது. எனவே பாலிய விவாகத்தை அது வலியுறுத்துவதாகக் கருதத் தேவையில்லை. 

திருமணப் பொருத்தம் என்பது மனப் பொருத்தம், குண வியல்புகளுக்கியைந்த கருத்தொற்றுமை, உடல் ஆரோக்கியம் ஆகியவைதான் என்று மனு ஸ்மிருதி கூறுகிறது. அவரவர் வகுப்பில் மணம் செய்துகொள்வது அவசியம் என்று கூறுகையில் இவற்றைத்தான் மனு ஸ்மிருதி வலியுறுத்துகின்றதேயல்லாமல் பிறவியின் மூலம் வருகின்ற வகுப்பைக் குறிப்பிடவில்லை. 

பெண்களை மிக உயர்வாகப் போற்றும் பல செய்யுள்களை மனுஸ்மிருதியில் காணலாம். மூன்றாவது சருக்கத்தின் அறுபத்திரண்டாவது செய்யுள் மனைவியைக் கணவன் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விதிக்கிறது. மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்காது என்று மனு ஸ்மிருதி எச்சரிக்கிறது. பெண்களை தந்தைமாரும் சகோதர்களும், ஏன் கணவனுங்கூட வணங்கக் கடமைப் பட்டிருப்பதாக அது கூறுகிறது. பெண்களுக்குக் குடும்பங்களில் நல்ல உணவு, சிறந்த ஆடையாபரணங்கள் ஆகியவற்றை அளித்து மகிழ்விக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி விதிக்கிறது. பெண்கள் மதிக்கப் படுகின்ற குடும்பங்களிலும் சமுதாயத்திலும்தான் சிறந்த மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மனு ஸ்மிருதி அறிவுறுத்துகிறது. பெண்கள் துன்புறும் நிலை இருக்கின்ற குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது என்று அது சொல்கிறது. பெண்களை மதிக்காத சமுதாயத்தில் எத்தனை நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றால் பயன் விளையாது என்கிறது, மனு ஸ்மிருதி. அதன் மூன்றாவது சருக்கத்தில் ஐம்பத்தைந்திலிருந்து, ஐம்பத்தொன்பது வரையிலான செய்யுள்கள் பெண்கள் நல னையே பிரதானமாக வலியுறுத்துகின்றன. 

தகப்பன் பெயர் இல்லையேல் தாயின் பெயரால் பிள்ளைகள் அறியப்படட்டும் என்று சொல்கிற நடைமுறை வேத கால சமுதயத்தில் இருந்திருக்கிறது. பெண்கள் ஆண்களோடு சரி சமானமாக அமர்ந்து தத்துவ விசாரங்களிலும் தர்க்கங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்பதற்கும் சான்றுகள் உண்டு. எனவே பெண்ணடிமை முறையும், பெண்களை அறிவார்ந் த சபைகளிலிருந்து விலக்கி வைக்கும் போக்கும் இடையில்தான் நுழைந்திருக்கக்கூடும் எனப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்குச் சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனு ஸ்மிருதியில் அதற்கு ஏற்ற இடைச் செருகல்கள் உள்நோக்கத்துடன் நுழைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடியும்.
மனு ஸ்மிருதியின் பத்தாவது சருக்கத்தில் உள்ள அறுபத்தைந்தாவது செய்யுள் ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது. சத்திரியர், வைசியர் விஷயத்திலும் இது பொருந் தும் என்று அது மேலும் விளக்குகிறது. இதிலிரு ந்து பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை, குணநலன்களின் அடிப்படையில்தான் அவை நிர்ணயிக்கப்படுகின்றன என்று மனு ஸ்மிருதி வலியுறுத்துவதாகக் கொள்ளமுடியும். 


மேலும், பிராமணன் ஒரு குற்றம் இழைத்தால் அதற்கு மிக அதிக பட்ச மாகவும், அதே குற்ற்றத்தை இழைத்த சத்திரியனுக்கு அதைவிடச் சிறிது குறைவாகவும் வைசியனுக்கு அந்தக் குற்றத்திற்கு மேலும் குறைவாகவும் சூத்திரனுக்கு மிக மிகக் குறைவாகவும் தண்டனை விதிக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி நிர்ணயிக்கிறது. காரணம், பிராமணனாக அறிவு நிலையில் உயர்ந்திருப்பவன் தெரிந்தே குற்றம் இழைத்திருப்பான் என்று கொள்ளவேண்டும் என அது விளக்குகிறது. பிற பிரிவினரை ஓரளவுக்கே விவரம் தெரிந்தவர்களாகக் கருத வேண்டுமாதலால் அதற்கேற்பக் குறைவாகவும், சூத்திரன் தனது அறியாமையால் குற்றம் இழைத்திருப்பான் ஆதலால் மிக மிகக் குறைவாகவும் அதே குற்றத்திற்குத் தண்டணை விதிப்பதே பொருத்தம் என்கிறது, மனு ஸ்மிருதி. 

மனு ஸ்மிருதியைப் பற்றிய விரிவான பிரஸ்தாபம் காலனி யாதிக்க காலத்தில்தான் தலையெடுத்தது. குறிப்பாக ஹிந்து சமூகத்தைக் குறை கூறி, மேற்கத்திய நாகரிகமும் சம்பிரதாயங்களும்தாம் மேன்மையானவை என்று மனதில் பதிய வைப்பதற்குத்தான் அத்தகைய பிரஸ்தாபம் பயன்படுத்தப் பட்டது. ஆங்கிலக் கல்வியின் வழியாகத் தம் தாயகத்தின் கலாசாரத்தையும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் காணப் பழகியவர்களுக்கு காலனியாதிக்கக் கல்வியாளர்கள் மனு ஸ்மிருதி பற்றி வெளியிட்ட கருத்துகள்தாம் வேத வாக்காகவும் அமைந்துவிட்டன. அந்த அடிச்சுவட்டில் தொடர்ந்து நடப்பவர்களிடையே மனு ஸ்மிருதியைப் பற்றி ஒருதலைப்பட்சமான கருத்து நிலவுவது இயற்கைதான்.


பின் குறிப்பு:

திண்ணை இதழில் முதுபெரும் எழுத்தாளர் திரு. மலர்மன்னன் எழுதிய கட்டுரை இது. அவர் அனுமதியுடன், அதை இங்கே மீள் பதிப்பிக்கிறேன்.

பெண்கள் பற்றி பொதுவாக மனு மிக உயர்வாகவே கூறிச் செல்கிறார், அவர் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தவில்லை என்று சுதந்திரமான வாசிப்பில் நானும் புரிந்து கொண்டிருக்கிறேன். அதனால், இது பற்றிய திரு. மலர்மன்னன் கருத்துடன் உடன் படுகிறேன்.

पुराणमित्यॆव न साधु सर्वं, सन्त: परीक्ष्यान्यतरात् भजन्ते ।
तातस्य कूपोयमिति ब्रुवाण:, क्षारम् जलं कापुरुषा: पिबन्ति ॥

இந்த சம்ஸ்கிருத சுலோகம் கூறுகிறது -

தொன்மையானது என்பதாலேயே எல்லா விஷயமும் நல்லது ஆகி விடாது
சான்றோர்கள் நன்கு சோதித்துப் பார்த்தபின்பே ஒரு விஷயத்தைப் போற்றுவார்கள்
முட்டாள்கள் தான் தன் தாத்தா வெட்டிய கிணறு என்பதற்காக
அதில் வரும் உப்புத்தண்ணீரையும் குடித்துக் கொண்டிருப்பார்கள்!

அதனால், வர்ணாசிரமம் பற்றிய மனுஸ்மிருதியின் கருத்துக்கள் பலவும் எனக்கு ஏற்புடையவை அல்ல. சுவாமி விவேகானந்தரையும், டாக்டர் அம்பேத்கரையும், ஸ்ரீநாராயண குருவையும் முன்னோடிகளாகக் கொண்டு, சாதிப் பாகுபாடுகளையும், சாதீயத்தையும் வேரோடு ஒழிக்கப் பாடுபடும் இந்துத்துவ நிலைப்பாடே என்னுடையது.

ஆனால் மனுஸ்மிருதி என்பது முழுக்க ஒரு தீய நூல் போன்றும் மனு ஒரு அரக்கன் போன்றும் கூறும் சித்தரிப்புக்களே தொடர்கின்றன. இதுவும் தவறு என்று நான் கருதுகிறேன். திருக்குறளில் கூடக் காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் உள்ளன. அதற்காக அந்த நூலையே தூக்கிப் போட்டு விடுவதில்லை நாம், அதில் வரும் நல்லவற்றை எடுத்துக் கொள்கிறோம் அல்லவா? அது போன்று தான் மனுஸ்மிருதியும் மதிப்பிடப் படவேண்டும்.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: மனு தர்மம்
Permalink  
 


மனு சாத்திரம் ஓர் அறிமுகம்

 

திண்ணையில் மலர்மன்னன் பார்ப்பனீய பார்வையில் மனுசாத்திரத்தை பற்றி எழுதிய கட்டுரையை ஜடாயு என்கிற பதிவர் ஒரு பதிவு செய்திருந்தார். ஆறாம்திணையில் மனுசாத்திரம் பற்றி திரு. ஆ. சிவசுப்பிரமணியன் "மனு சாஸ்திரம் ஓர் அறிமுகம்" என எழுதிய கட்டுரையில் மலர்மன்னனுக்கு பதில் இருக்கிறது என்பதால் எந்த மாற்றமும் செய்யாமல் அந்த கட்டுரையை பதிவு செய்கிறேன். நல்ல ஒரு கட்டுரையை எழுதிய திரு. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களுக்கும், ஆறாம்திணைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

-000-

காலத்தால் முந்திய வடமொழி நூல்களாக வேதங்கள் அமைந்திருக்கின்றன. வேதங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை மையமாகக் கொண்டு உருவான நீதி நூல்கள் 'ஸ்மிருதிகள்' என்றழைக்கப்படுகின்றன. இவை முனிவர்களால் கூறப்பட்டவை என நம்புகிறார்கள்.

தர்ம சாத்திரங்கள்
நித்திய கருமங்கள்
ஆசாரம்
விவகாரம்
பிராயச்சித்தம்
இராச தர்மம்
வருணாசிரமம்
அக்நி கார்யம்
விரதம்

ஆகியன தொடர்பான விதிமுறைகளை இவை குறிப்பிடுகின்றன. ஸ்மிருதிகள் மொத்தம் பதினெட்டாகும். (19 என்ற கருத்தும் உண்டு) இவற்றுள் மிகப் பரவலாக அறிமுகமாகி இன்றளவும் பேசப்படுவது 'மனு தர்ம சாஸ்திரம்' என்ற மனுஸ்மிருதி ஆகும்.

மனுஸ்மிருதி 

இந்த நூலானது இதை இயற்றியவரின் பெயராலேயே பெயர் பெற்றுள்ளது. மனு என்ற பெயரில் ஏழு பேர் இருந்தனர் என்றும் ஏழாவது மனுவே இந்நூலை இயற்றியவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் மனு என்பது ஒரு தனி மனிதனின் பெயர் அல்லவென்றும் நீதிநெறிகளை வகுக்கும் பதவியின் பெயரென்றும் சிலர் கூறுவர்.

ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்ட 'மாணவ தர்ம சாஸ்திரம்' என்ற நூல் வாய்மொழியாக வழங்கி வந்துள்ளது.

அந்நூலை மூல நூலாகக் கொண்டு மனுதர்ம சாஸ்திரம் உருவாகியுள்ளது. 12 அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்ட இந் நூலில் 2684 சுலோகங்கள் இடம் பெற்றுள்ளன.

நூல் நுவலும் செய்தி

வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய கடமைகள், மன்னன் ஆட்சி புரிய வேண்டிய முறையும், தண்டனையும், வழங்க வேண்டிய முறையும், பல்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆண் பெண்களிடையே நிலவும் சமூக உறவுகள், கணவன் மனைவியர் ஒழுக்க நியதி, பிறப்பு இறப்புச் சடங்குகள், குற்றங்களும் அவற்றிற்கான கழுவாய்களும், மறுபிறவி போன்றவை அந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்த நூல் பின்வரும் ஐந்து கருத்துக்களை அழுத்தமாக வலியுறுத்துகின்றது.

1. நால் வருணப்படி நிலை
2. இதில் பிராமணிய மேலாண்மையும், கீழ் வருணங்களின் −ழிநிலையும்
3. உடல் உழைப்பு இழிவானது. எனவே அதை மேற்கொள்வோரும் இழிவானவர்.
4. நால் வருணத்திற்கு வெளியில் உள்ள சண்டாளர்கள் என்ற பிரிவினர் பின்பற்ற வேண்டிய கொடூரமான கட்டுப்பாடுகள்.
5. பெண்ணடிமை

நூலின் காலம்

இந் நூலானது கி.மு. 170 க்கும் 150 க்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும், மெளரியர்களின் புத்த மத அரசுக்கு எதிரான பிராமணப் புரட்சியின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் பிராமணியச் சட்டத் தொகுப்பாகவே இது வெளிவந்துள்ளது என்றும் அம்பேத்கர் (1995:165-166) கூறுகிறார்.

நூல் உருவான வரலாறு
சுவாயம்பு மநுவான பிரம்மனிடம் முனிவர்கள் சென்று ''ஞான நிறைவும், வல்லமையும், செல்வமும், வீறும், திறலும், ஒளியும் பெற்றுத் திகழும் பெருமானே, நால்வருணந்தரும் மற்றோரும் கடைபிடிக்கத்தக்க அவரவர் செயல்கள், கடமைகளை எமக்கு உணர்த்துவீராக! என்று வேண்ட, பிரம்மா இவ்வுலகம் உருவான முறையையும் நாராயணன் என்ற பரம்பொருள் குறித்தும் உயிர்களின் தோற்றம் குறித்தும் கூறி விட்டு (சூத்திரம் 5 முதல் 56 முடிய) பின் ''எனது குமாரரான பிருகு இந்தத் தர்ம சாத்திரத்தைச் சற்றும் பிறழாமல் உங்கட்கு உபதேசிக்கக் கடவர். ஏனெனில் முறையாக என்னிடம் பிருகு முனிவரே இதனைப் பயின்று கைவரப் பெற்றவராகிறார்'' என்று கூற, பிருகு முனிவர் முனிவர்களை நோக்கிக் கூறிய செய்திகளே மநு தர்ம சாஸ்திரத்தில் இடம் பெற்றுள்ளன.

இக் கருத்தை அம்பேத்கர் (1995 : 165-166) ஏற்றுக் கொள்ளவில்லை.

''மனு என்ற பெயருக்கு இந்தியாவின் பண்டைக்கால வரலாற்றில் பெரும் மதிப்பு இருந்தது. சட்டத் தொகுப்புக்கு இந்த மதிப்பின் மூலம் பெருமை சேர்க்கும் நோக்கத்துடனேயே அதை மனு வெளியிட்டதாகக் கூறப்பட்டது. இது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு மோசடி என்பது சந்தேகத்துக்கு இடமில்லாதது. சட்டத் தொகுப்பில் அதை இயற்றுபவரின் பெயரைக் குறிப்பிடும் இடத்தில் பண்டைக்கால வழக்கப்படி பிருகு என்ற குடும்பப் பெயர் கூறப்பட்டுள்ளது. 'மனு தர்ம சாஸ்திரம்' என்ற தலைப்பில் பிருகு இயற்றிய நூல்'' என்பதே அதன் உண்மையான தலைப்பு ஆகும். தொகுப்பின் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பிருகு என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நமக்கு அதை இயற்றியவரின் குடும்பப் பெயர் தெரிகிறது. அவருடைய சொந்தப் பெயர் நூலில் தெரிவிக்கப்படவில்லை. நாரத ஸ்மிருதியை எழுதியவருக்கு மனு ஸ்மிருதியை இயற்றியவரின் பெயர் தெரிந்திருந்தது. அவர் அந்த இரகசியத்தை வெளியிடுகிறார். மனு சாஸ்திரத்தை இயற்றியவர் சுமதி பார்கவா என்பது கட்டுக்கதைகளில் வரும் பெயர் அல்ல. அவர் வரலாற்றில் இடம்பெற்ற ஒருவராகவே இருக்க வேண்டும். ஏனென்றால் மனுவின் சட்டத் தொகுப்புக்கு உரை எழுதிய மேதாதிநே கூட இந்த மனு ஒரு குறிப்பிட்ட நபர் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். எனவே மனு என்பது மனுஸ்மிருதியின் உண்மையான ஆசிரியரான சுமதி பார்கவாவின் புனை பெயராகும். இந்நூல் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதைப் பின்வரும் சூத்திரங்களால் அறியலாம்.

தர்மங்களுக்கு ஆதாரமாக இருப்பவை வேதமும், ஸ்மிருதிகளும் தொன்று தொட்டு வந்த ஒழுக்க மரபும் கவலையற்ற மன நிறைவுமாகும். (2 : 6)

மனுவினால் கட்டளையிடப்பட்ட நீதிகள் அனைத்தும் வேதத்தில் விதிக்கப்பட்டவையே. ஏனெனில் அவர் வேதசாரமுணர்ந்த பிரம்ம ஞானி. (2 : 7)

வேத சத்யத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்தவையென்று தனது ஞானத்தால் உணர்ந்து அவ்வறத்தாறு ஒழுகுவோனே உண்மையான கல்விமான். (2 : 8)

சுருதி, ஸ்மிருதிகளில் சொல்லப்படா நின்ற அறங்களை மேற்கொண்டு ஒழுகுவோன் யாரோ, அவனே இம்மையில் புகழையும் மறுமையில் சுத்தமான சுகத்தையும் பெறுவான். (2 : 9)

வேதமே சுருதியென்றும் அறத்துணிபுகளே ஸ்மிருதியென்றும் உணர்க.... (2 : 10)

மனு தர்ம சாஸ்திரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்ற செய்தியும் பிரம்மன் மற்றும் பிருகு முனிவர் ஆகியோரால் இது கூறப்பட்டது என்ற செய்தியும் மனுதர்ம சாஸ்திரம் புனிதமானது, உயர்வானது, ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தை நிலை நாட்ட உதவுகிறது. இனி மனு தர்ம சாஸ்திரத்தின் சுலோகங்கள் சிலவற்றைக் காணலாம்.

பிராமணர் உயர்வு

''மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால் வருணத்தையும் வேதஞானம், புவிபுரத்தல், செல்வமீட்டல், ஏவல் புரிதல் என்ற கடப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு 1 : 31).

இந்தச் சூத்திரத்தின் அடிப்படையில் இறைவனுடைய முகத்தில் பிராமணர் தோன்றியுள்ளனர். இதன் காரணமாகப் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்பதைப் பின்வரும் சுலோகங்களில் வலியுறுத்துகிறார்.

''புருஷ தேகம் சுத்தமானது. இடைக்கு மேல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது (1 : 92).

மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றியமையாலும், படைக்கப்பட்ட யாவற்றினும் அந்தணன் சிறந்து விளங்குகின்றான். (1 : 93)

சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (1 : 94).

மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே ஜீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (1 : 99).

பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும், படைப்புலகில் காணப்படும் சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக அவன் விளங்குகின்றான் (1 : 100).

எனவே அவன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள் யாவும், அவனுடைமையை அவன் பெறுவதாகவும் ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்யவராயுமிருக்கிறார்கள் (1 : 101).


இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு அதை நிலைநாட்டும் வகையில் பல்வேறு கருத்துக்களைக் குறிப்பிடுகின்றார். மங்களம் மற்றும் மேன்மையைக் குறிக்கும் வகையில் பிராமணனது பெயர் அமைய வேண்டும் (2:31, 32) என்றும் பிராமணர் உணவு அருந்தும்போது மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்றும் (2 : 176-178) வலியுறுத்துகிறார். தவறு செய்யும் பிராமணர்களுக்கு விதிக்க வேண்டிய தண்டனைகள் குறித்து மனு கூறும் செய்திகள் வருமாறு.

'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).

பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379).

அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281).

அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412).





__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சத்திரியர் - வைசியர் - சூத்திரர் நிலை
இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு, சத்திரியர், வைசியர், சூத்திரர்களின் பணி மற்றும் சமூகநிலை குறித்துப் பின்வருமாறு வரையறை செய்துள்ளார்.

''பிரஜா பரிபாலனம் செய்வது, ஈகை, வேள்விகள் புரிவது வேத பாராயணம் செய்விப்பது, விடிய சுகங்களில் மனதை அலைய விடாமல் உறுதியாக நிற்பது மன்னர் கடமையாகும். (1 : 89) 

வாணிபர்க்கு ஆநிரைகளைக் காத்தல், தானம் கொடுத்தல், கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளைபொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல், வட்டிக்கு விடுதல், பயிர்த்தொழில் செய்தல் ஆகியவற்றை விதித்தார். (1 : 90) 

ஏவலான மக்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும், ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் பணித்தார் (1 : 91).

நான்கு வருணத்தாரின் கடைசி வருணமான சூத்திர வருணத்தவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்ற கருத்தை மனு உறுதிபடக் கூறுகிறார்.

''நாலாம் வருணத்தோன் அரசனாகயிருக்கும் நாட்டிலும் அறம் அறியாதோரும், தீயழுக்கமுடையோரும் வசிக்கும் கிராமத்திலும், பாவிகள் அருகுறையும் ஊரிலும் வசிக்கக் கூடாது. (4 : 61).

மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது. (8 : 21)

நாலாம் வருணத்தாரும் நாத்திகருமே மிகுந்து, இரு பிறப்பாளர் இல்லாமற் போகின்ற நாடு வறுமை வாய்ப்பட்டு விரைவில் அழிந்து போகும் (8 : 22).

அனுஷ்டானங்களில்லாத அந்தணன் மன்னன் சார்பாகத் தீர்மானங்களைச் செய்யவும் கூடும். நாலாம் வருணத்தவன் செய்யக்கூடாது.

வைசியனையும், நாலாம் வருணத்தானையும் தன் தன் தொழிலைச் செய்யுமாறு மன்னன் கட்டளையிடுக. இல்லையெனில், வேலையற்ற இவர்கள் உலகையே அழித்து விடுவார்கள். (8 : 417)

...... இழி பிறப்பாளர் பெருகி வரும் நாடு விரைவில் குடிமக்களுடன் அழியும் (10 : 61).

பிராமணனின்றி சத்திரியனுடைய சதகருமங்களும் சத்திரியனின்றி அந்தணனின் ஜீவனமும் நடைபெறாதாகையால், ஒருவரை ஒருவர் சார்ந்து நின்றால் இம்மை மறுமைகளின் இன்பங்களை அடையக் கடவர் (9 : 322).

வருணமற்றவர்
நான்கு வருணத்திற்கும் அப்பால், சண்டாளர் என்ற சாதியை மனு குறிப்பிடுகின்றார்.

தேர்ப்பாகர், இரண வைத்தியர், மீன் பிடிப்பவர், எலி, உடும்பு பிடிப்பவர், தச்சு வேலை செய்பவர் ஆகியோர் நால் வருணத்திற்கு வெளியில் உள்ளவர்களாவர். (10 : 47 - 49)

இவர்கள் வாழும் இடமாக ''இவர்களனைவரும் நகரத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, இடுகாட்டின் அருகில், மலை, மலர்ச்சோலை ஆகிய இடங்களில் தங்கள் தொழிலைப் பலரறிய இயற்றி வாழ்ந்திருக்கவும்'' (10 : 50) என்று குறிப்பிடுகின்றார்.

சண்டாளர்களின் இருப்பிடம், மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய தொழில், வாழ்க்கைமுறை தொடர்பாக மிகவும் இழிவான கட்டுப்பாடுகளை மனு விதித்துள்ளார்.

''ஊருக்கு வெளியில் சண்டாளனும், ஸ்வபாகனும் குடியிருக்கவும், இவர்கள் உலோகத்தாலான பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது. இவர்கள் தீண்டிய பாத்திரங்கள் துலக்கினாலும் தூய்மையாகா. நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்துப் பிழைக்கக் கூடாது'' (10 : 52)

''இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளை அணிய வேண்டும். எப்போதும் தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும்'' (10 : 52).

''நற்கருமங்கள் நடைபெறுகையில், இவர்களைக் காண்பதோ, பேசுவதோ கூடாது. இவர்கள் தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும் கொடுக்கவும், கடன் கோடலும் வேண்டும்'' (10 : 53).

''இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது'' (10 : 54).

''அரசன் கொடுத்த அடையாளத்துடன், தங்களிடமுள்ள பொருளை விற்கவும், ஒன்றை வாங்கவும், பகலில் ஊர்த்தெருக்களில் திரியலாம். அனாதைப் பிணத்தை அகற்றுதலும் இவர்கள் கடன்'' (10 : 55).

''மரண தண்டனை பெற்றவரைக் கொல்லுதலும் இவர்கள் தொழில். தண்டனை நிறைவேற்றப்பட்டவரின் உடை, அணி, படுக்கைகளை இவர்கள் தங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்'' (10 : 56).

இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, இவர்கள் சொர்க்கம் போவதற்கான வழியையும் மிக எளிதாகக் காட்டுகிறார்.

''அந்தணன், ஆ, பசு, பெண், பாலர் இவர்களைக் காக்கும் பொருட்டுக் கூலி பெறாமல் உயிரைத் தியாகம் செய்வதே தீண்டத்தகாத பிறப்பினர் சுவர்க்கம் புகும் நல்லாறு'' (10 : 62).

பெண்கள்
அடுத்து பெண்கள் குறித்த மனுவின் கருத்துக்களைக் காண்போம்.

''எந்தப் பருவத்தினவளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச் செயலும் இயற்றலாகாது'' (10 : 147)

''இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது'' (10 : 148).

''இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக'' (10 : 154).

''அன்றாட வேள்விகள் ஐந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு'' (9 : 14).

''நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும்போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை'' (9 : 15).

இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது (9 : 17).

'படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்' (9 : 17).

மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சமஸ்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர் (9 : 18).

மனு தர்ம எதிர்ப்பு
இத்தகைய அதர்ம சாஸ்திரத்திற்கு எதிரான கருத்துக்கள் தமிழ்நாட்டிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் சித்தர்களும், வடபுலத்தில் தாந்திரிகர்களும் மனுதர்மத்தின் நால்வருணக் கோட்பாடுகளுக்கு எதிராக உரக்கக் குரல் எழுப்பியுள்ளனர். மனு - மனு தர்மம் என்ற சொற்களைப் பயன்படுத்தாவிட்டாலும் இந் நூலின் வருணக்கோட்பாடுகளுக்கு மாறான கருத்துக்களை முன்மொழிந்துள்ளனர்.மகாராஷ்டிரத்தில் மஹத் என்னும் நகரில் நடந்த தலித்துகள் மாநாட்டில் 1927 டிசம்பர் 25 - ஆம் நாள் மனு தர்ம சாஸ்திரத்தை எரிக்கும் பின்வரும் தீர்மானம் நிறைவேறியது. (அம்பேத்கர் 1997 : 197, 198)

''இந்துச் சட்டங்களின் பிதா எனக் கருதப்படும் மனுவின் பெயரால் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பவையும், மனு ஸ்மிருதியில் அடங்கியிருப்பவையும், இந்துக்களின் சட்டத்தொகுப்பான அங்கீகரிக்கப்பட்டிருப்பவையுமான இந்துச் சட்டங்கள், கீழ்ச்சாதியினரை அவமதிப்பவையாக இருக்கின்றன. மனித உரிமைகளை அவர்களுக்கு மறுப்பவையாக உள்ளன. அவர்களது ஆளுமையை நசுக்குபவையாக இருக்கின்றன. நாகரிக உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகளுடன் இவற்றை ஒப்பிடும்போது இந்த மனு ஸ்மிருதி எத்தகைய நன்மதிப்பையும் பெற அருகதையற்றது. ஒரு புனிதமான நூல் எனப் போற்றப்படுவதற்குத் தகுதியற்றது என இந்த மாநாடு கருதுகிறது. இதன்பால் தனக்குள்ள ஆழமான அளவிட முடியாத வெறுப்பை வெளிப்படுத்தும் பொருட்டும், மதம் என்ற போர்வையில் அது சமூக ஏற்றத் தாழ்வைப் போதித்து வருவதைக் கண்டித்தும் மாநாட்டு நடவடிக்கைகளின் முடிவில் இதன் பிரதி ஒன்றை எரிப்பதென இம் மாநாடு தீர்மானிக்கிறது''.

இதன்படி இரவு ஒன்பது மணிக்கு மாநாடு நடக்கும் இடத்தில் பலிபீடம் போல் அமைக்கப்பட்டு மனு நீதி நூல் அதன் மேல் வைக்கப்பட்டது. தீண்டத்தகாத சாதிச்சாமியார்கள் சிலர் முறைப்படி அதற்கு நெருப்பு மூட்டித் தகனம் செய்தனர். மனுநூலின் தகனம் முடிந்த பின் அம்பேத்கர் எழுந்து ''ஏற்றத்தாழ்வை வற்புறுத்தும் நீதிநெறி இனி பாரதத்தில் செல்லாது என உலகம் தெரிந்து கொள்ளட்டும்'' என்று முழங்கினார்.(வசந்த்தின் 1995:56)

இந் நிகழ்ச்சி குறித்து அம்பேத்கர் பின்வருமாறு எழுதினார்:
''இந்து சமூக அமைப்பு என்னும் கட்டுமானம், மனு ஸ்மிருதி என்ற அடித்தளத்தின் மீது நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்த மனுஸ்மிருதி இந்து சமய நூல்களின் ஒரு பகுதி. எனவே அது எல்லா இந்துக்களுக்கும் புனிதமாக உள்ளது. புனிதமானது என்பதால் பிழைபாடற்றதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு இந்துவும் அதன் புனிதத்தில் நம்பிக்கை வைக்கிறான். அதன் ஆவணங்களை ஏற்று நடக்கிறான். மனு, சாதியையும் தீண்டாமையையும் ஆதரித்து நிற்பதோடு அதற்குச் சட்ட வலுவையும் தருகிறார். எனவே, ஒரு அபகீர்த்தி வாய்ந்த மனுஸ்மிருதியை எதிர்த்தது ஒரு துணிகரமான செயலாகும். இந்து சமயம் என்ற கொத்தளத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். பிரான்சில், பாஸ்டில் சிறை எவ்வாறு கொடுங்கோன்மையின் உருவகமாக இருந்ததோ அவ்வாறே இந்து வாழ்க்கை முறைக்கும் சிந்தனைப்போக்குக்கும் அடிநாதமாக இருந்த ஏற்றத்தாழ்வுகளின் உருவகமாக இருந்தது மனுஸ்மிருதி. பாஸ்டிலின் வீழ்ச்சி பிரான்சிலும் ஐரோப்பாவிலும் பரந்த மக்கள் பகுதியினரின் விடுதலையையும் வெற்றியையும் எவ்விதம் குறித்ததோ அவ்விதமே 1927 ஆம் ஆண்டு மஸத்தில், மனுஸ்மிருதி எரிக்கப்பட்ட நிகழ்ச்சி தீண்டப்படாத மக்களின் விடுதலை வராற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகத் திகழ்ந்தது.''

மனு தர்மத்தின் மீது இத்தகைய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதற்கு முக்கியக் காரணம் என்ன? என்பதை அப்பேத்காரே (1997-232) குறிப்பிடுகிறார்.

''சதுர்வருணமாக சமுதாயத்தை நான்கு வகுப்புகளாகப் பிரிப்பது மனுவுக்கும் பிரதானமானதாக இருக்கவில்லை. ஓர் அர்த்தத்தில், அது அவருக்கு இரண்டாம்பட்சமானதாகவே இருந்தது. சதுர் வருணத்திற்குள் இருப்போரிடையேயான ஓர் ஏற்பாடாகவே இதனை அவர் கருதினார். ஒருவன் பிராமணனா, சத்திரியனா, வைசியனா அல்லது சூத்திரனா என்பது பலருக்கு முக்கியமானதல்ல. இது அவருக்கு முன்பே இருந்து வருகின்ற ஒரு பிரிவினை. −ந்தப் பிரிவினையை மேலும் தீவிரப்படுத்தி அதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தார். இந்தப் பிரிவினை அவரிடமிருந்து தோன்றியதல்ல. மாறாக மனுவிடமிருந்து ஒரு புதிய பிரிவினை தோன்றியது.

1. சதுர் வருண அமைப்புக்குள் இருப்பவர்கள்.
2. சதுர் வருண அமைப்புக்கு வெளியே இருப்பவர்கள்

என்பதே இந்தப் பிரிவினை. இந்தப் புதிய சமூகப் பிரிவினை மனுவிடமிருந்து உதித்ததாகும். இந்துக்களின் பண்டைத் தர்மத்துக்கு அவரது புதிய சேர்ப்பு இது. இந்தப் பிரிவினை அவருக்கு அடிப்படையானதாக, மூலாதாரமானதாக, இன்றியமையாததாக இருந்தது. ஏனென்றால் அவர்தான் இந்தப் பிரிவினையை முதலில் உருவாக்கியவர். அதற்குத் தனது அதிகார முத்திரை அளித்து அதனை அங்கீகரித்தவர்!

இக் கூற்றின் உண்மைத் தன்மையை இதுவரை நாம் பார்த்த மனு தர்ம சூத்திரங்கள் உணர்த்துகின்றன.

மனு தர்ம ஆதரவாளர்கள்
ஆனால் இன்றும் மனுவைப் போற்றுபவர்கள் நம்மிடையே உள்ளனர். இந்தியா விடுதலை பெற்றவுடன் உச்ச நீதிமன்றம் உருவாகும் நிலையில் அந் நீதிமன்ற வளாகத்தில் மனுவின் சிலையை நிறுவ வேண்டுமென்று வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது. அவ்வாறு மனுக்குச் சிலை நிறுவினால் அதைத் தாமே முன்னின்று இடிப்பதாக அம்பேத்கர் கூறினார். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி புரிந்தபோது ஜெய்ப்பூரில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுவுக்குச் சிலை நிறுவப்பட்டது. இதற்கு மாநில காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் சிலை மேற்கூரை எதுவுமின்றி வீதியில் உள்ளது. பாரதிய ஜனதா ஆட்சி புரிந்தபோது இமாசலப் பிரதேசத்தில் மனாலி என்னுமிடத்தில் ஏற்கனவே உள்ள மனு கோயிலைப் பல லட்சம் செலவு செய்து புதுப்பித்துள்ளனர்.

''1992 ஏப்ரல் 18, 19 தேதிகளில் மதுராவில் உத்தரப்பிரதேச மாநில இந்து வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மாநில பா.ஜ.க. அரசின் அட்வகேட் ஜெனரல் வி.கே.என். சவுதாரி பேசுகையில் எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற சட்ட நூல் மனுஸ்மிருதிதான் என்று குறிப்பிட்டார். இதனை ஆர்.எஸ்.எஸ். சின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான 'ஆர்கனைசர்' (மே 10, 1992) வெளியிட்டுள்ளது''. (மார்க்ஸ்).

இந்து தர்மாச்சாரியார்களும் மத அடிப்படைவாத இயக்கங்களும் மனுவைப் புறக்கணிக்க விரும்பியதில்லை. விசுவ இந்து பரிஷத் 1982 −ல் நிகழ்த்திய ஊர்வலத்தில் மனு தர்ம சாஸ்திரத்தின் ஒரு பிரதி எடுத்துச் செல்லப்பட்டது. (அஸ்கர் அலி இன்ஜினியர்) இவற்றுக்கெல்லாம் காரணம் இந்து மதத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட சாதிய அமைப்புதான். திலிப்போஸ் (1984 : 146) கூறுவது போல ''சர்ச் இல்லாமல் கிறிஸ்துவ மதம் இல்லை. அதுபோல் சாதி அமைப்பு இல்லாமல் இந்துமதம் இல்லை.'' இந்தச் சாதிய அமைப்பை நிலை நிறுத்தும் மனுதர்ம சாஸ்திரத்தை ஓர் உண்மையான இந்துவால் புறக்கணிக்க முடியாது. எனவே சமூக நீதியை இவர்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நிலை நாட்டவும் முடியாது. இந்துக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்று மக்கள் என்று உரக்கப் பேசி வருபவர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள்!

ஏனைய சமயங்களைப் போன்றே கத்தோலிக்கத் திருச்சபையும் பல்வேறு தவறுகள் மற்றும் பிழைகளைச் செய்துள்ளது. விவிலியக் கருத்துடன் முரண்படும் அறிவியல் கருத்துக்களைக் கூறியமைக்காகக் கலிலியோவைச் சிறையிலடைத்தது. புரூனோவை உயிருடன் கொளுத்தியது. இசுலாமியர்களுக்கு எதிராகச் சிலுவை யுத்தம் என்ற பெயரில் நீண்ட கால யுத்தத்தை நடத்தியது. பாசிஸ்ட் முசோலினியை ஆதரித்தது. ஆனால் இன்றைய போப் இச் செயல்கள் எல்லாம் தவறு என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டதுடன் கடந்தகால வரலாற்றுப் பிழைகளுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இதை முன்மாதிரியாகக் கொண்டு அனைத்து சங்கராச்சாரியார்களும் ஏனைய துறவிகளும் காசியிலோ, மதுராவிலோ கூடி, 'மனுவின் வருணக் கோட்பாடுகளை முற்றிலும் புறந்தள்ளுகிறோம். சமூக நீதிக்கும் மனிதநேயத்திற்கும் மனுநீதி எதிரானது என்பதை உணருகிறோம்' என்று வெளிப்படையாக அறிவியுங்களேன்!



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 திரு, 


மனுஸ்மிருதியின் மொழிபெயர்ப்புகள் பலரும் அறிந்தவை தான். ஆனால் கடைசி பத்தியில் இந்துத்துவ நிலைப்பாடு பற்றிக் கூறுவது தவறு. 

இது பற்றி ஆர்.எஸ்.எஸ்-இன் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. ரமேஷ் பதங்கே அவர்கள் (தலித் உரிமைகளுக்காக மிகப் பெரிய அளவில் போராடியவர் இவர்) ஒரு நூலை எழுதியிருக்கிறார் - "சங்கமும், மனுவும், நானும்" (மராத்தியில் "சங், மனு ஆணி மீ"). இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இணையத்திலேயே உள்ளது - 
http://hvk.org/specialrepo/mms/index.html

புராண கால மனுவை ஆதிபுருஷர் என்பதாக எல்லா இந்துக்களும் போற்றுகின்றனர். விஷ்ணுவின் மச்சாவதாரத்தில் பிரளயத்தில் இருந்து தப்பிய உலகம் மறுபடியும் உயிர்க்கும் தொன்மத்துடன் தொடர்புடையவர் இவர். மனிதன், மானிடன், மனுஷ்யன் என்ற பெயர்கள் எல்லாமே மனு என்பதில் இருந்து வருகின்றன. ('ஆத்மி' என்ற மனிதனைக் குறிக்கும் அரபிச் சொல் ஆதாமில் இருந்து வருவது போல) இமாசலப் பிரதேசத்தில் கோயில் கட்டப் பட்டது இந்த மனுவிற்குத் தான்.

இந்தக் கட்டுரையே குறிப்பிடுவது போல ஸ்மிருதியைச் செய்தவர் பெயரும், இந்தப் புராண புருஷரின் பெயரும் கலந்தது ஒருவிதான குழப்படி தான். மோசடி என்று சொல்லலாமா? அதை வரலாற்று ஆய்வாளர்கள் தான் சொல்ல வேண்டும். 

மற்றபடி, தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கூட மனு பற்றிய குறிப்பு உள்ளது (திருவள்ளுவ மாலை, சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம்...). வள்ளலார் "மனுமுறை கண்ட வாசகம்" என்ற பெயரில் தர்மசிந்தனைகளை விளக்கும் ஒரு நூலையே எழுதியிருக்கிறார். இங்கும் இரு மனுக்களும் ஒன்று என்பது போன்ற புரிதலே கிடைக்கிறது. 

இந்த குழப்படியை எல்லாம் விட்டு மனுஸ்மிருதியை ஒரு நூல் என்று மட்டும் எடுத்துக் கொண்டால் அதில் காலத்துக்கு ஒவ்வாத இத்தகைய கருத்துக்களோடு பல நல்ல அறக் கருத்துக்களை விளக்கும் சுலோகங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நோக்கில் தான் நான் மனுஸ்மிருதியைப் பார்க்கிறேனே அன்றி புனித நூல் என்பதாக அல்ல.

மனுஸ்மிருதி பற்றிய இந்துத்துவ நிலைப்பாடு பற்றி இன்னும் - 

சங்கத்தின் மூன்றாவது தலைவர் பாலாசாகேப் தேவரஸ் கருத்து - 
http://www.hvk.org/specialarts/sehc/sehc.html

தாத்தாவின் கிணற்றில் வரும் உப்புத்தண்ணீர் பற்றி நான் குறிப்பிட்ட சுலோகம் இங்கே படித்தது தான்



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

பச்சைத் தமிழன் said...

சிவசுப்ரமணியன் தந்திரமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப்பற்றிய முழுத்தகவலும் தராமல் ஆங்காங்கே இருந்து எதிர்மறையான கருத்துக்களை மட்டும் தந்து மொத்த நூலுக்கும் ஒரு கீழ்த்தர ப்ராண்ட் கொடுத்துள்ளார். இவர் சார்ந்துள்ள குழுக்களின் தொழிலே வெறும் முத்திரை குத்துவதுதான். இந்தத் தொழிலும் பயமுறுத்தலாலும் அடாவடியாலும் பெற்றது. 

ஒரு சட்டப் புத்தகத்தின் மதிப்புத்தான், மனு ஸ்ம்ருதிக்கு. மதிப்பிற்குரிய மலர்மன்னன் அவர்கள் தெளிவாகக் கூறியிருப்பதுபோல அந்தந்த காலத்திற்கு ஏற்ப இது பலரால் பல சமயங்களில் மாற்றப்பட்டுவந்து இருக்கின்றது. இருந்தபோதிலும், மனு ஸ்ம்ருதி என்றும் முற்றிலுமாக பின்பற்றப்பட்ட ஒரு நீதி நூல் இல்லை. காரணம் இது நீதி நூல்களில் பின்பற்றமுடியாத உயர்நிலையுடையது என்கின்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதுதான்.

அதுவுமன்றி, ஒவ்வொரு யுகத்திற்கும் பின்பற்றத்தகுந்ததாக ஒரு குறிப்பிட்ட ஸ்ம்ருதி அறியப்படுகின்றது. இப்போது நடப்பது கலி யுகம் - இந்த யுகத்தில் பின்பற்றப்படவேண்டிய ஸ்ம்ருதியாக அறியப்பெற்றிருப்பது பராசர ஸ்ம்ருதி. ஹிந்து சட்டமாக இந்திய அரசியல் சட்டம் பின்பற்றுவதும், பின்பற்ற பண்டிதர்களால் பரிந்துரைக்கப்பெற்றதுமாய் இருப்பது இதுதான். கலிகால ஆரம்பத்திலிருந்து பின்பற்றப்படுவது இந்த ஸ்ம்ருதியே. (கலி யுகம் எப்போது ஆரம்பித்தது என்பதற்கான கணக்கை கூகிளில் தட்டிப் பெற்றுக்கொள்ளலாம்.) ஏறத்தாழ பலகோடி ஆண்டுகள் கணக்கில் வரும். (இல்லை, பல லட்சம் என்று நீங்கள் புத்திசாலித்தனமாய் தவறு கண்டுபிடித்தாலும் வியப்பதற்கில்லை.) ஆக மொத்தம் மனு ஸ்ம்ருதி பின்பற்றப்பட்ட ஒரு நூல் இல்லை. ஆனால், அவ்வபோது கன்ஸல்ட் செய்யப்பட்ட ஒரு நூல்.

அப்படியானல், அது எப்போது பின்பற்றப்பட்டதாக அறியப்படுகின்றது? ஸத்ய யுகத்திற்கானதாகவே அது அறியப்பெறுகின்றது. 

த்ரேதா யுகத்திற்கு யாக்ஞ்யவல்கிய ஸ்ம்ருதி; த்வாபர யுகத்திற்கு ஸங்க மற்றும் லிகித ஸ்ம்ருதி.

தற்போது நடக்கும் கலிகாலத்திற்கு ஏற்றதான ஸ்ம்ருதியாக அறியப்படும் பராசர ஸ்ம்ருதியும்கூட தேவைப்பட்டால் புறக்கணிக்கத்தகுந்ததே. முக்கியமாக ஜாதி அடிப்படையில் மக்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்த பிறப்பினடிப்படியில் உயர்வர்ணத்தாராகத் தம்மை கருதிக்கொள்ளும் ஓஸி, ஓபிஸி, பிஸிக்களின் அராஜகத்திற்கு இதுவழிகோலுமாயின் இந்த பராசர ஸ்ம்ருதி மட்டுமல்ல எந்த ஸ்ம்ருதியையுமே மாற்றிக்கொண்டுவிடலாம். 

மாற்றப்படவே கூடாது என்று கூறுவதற்கு இது என்ன குரானா, ஹதீஸா, பைபிளா, மாவோவின் சிவப்புப்புத்தகமா, இல்லை ஈவேரா திகவிற்கு செய்துவிட்டுப்போயிருக்கிற விதிமுறைகளா?

அந்தவகையில் போதிசத்வர் அம்பேத்கார் இதை எரிக்கவேண்டும் என்று கூறியிருந்தாலும் அதை ஹிந்துத்துவம் உளமாற வரவேற்கிறது. தேவைப்பட்டால் நடைமுறைப்படுத்தவும் தயங்காது.

மாற்றப்படவேண்டும் என்பதில் ஹிந்துத்துவாவிற்கு எந்த சந்தேகமும் இல்லை. ஸ்ருதிக்கு எதிரானவை அழியவேண்டும் என்பதில் ஹிந்துத்துவாவிற்கு வேறு கருத்தில்லை. ஸ்ருதி என்பதற்கு மற்றொருபெயர் மனித வளம்.

பேய்கள் அரசாண்டபோது பிணம்தின்ற சாத்திரங்கள் ஹிந்துத்துவத்தின் கைகளில் குளிர்காயும் நெருப்பிற்கு விறகாகிக்கொண்டுதான் இருக்கிறது. பேய்களுக்குத்தான் இதைவிட்டுவிட மனமில்லை. பாவத்தைத் தொடர்ந்து செய்ய பழியை பேய்களும் பிசாசுகளும் அவற்றின் எதிரிகளின்மேல் போட்டுவருகின்றன.

இந்த இரண்டு சக்திகளையும் ஹிந்துத்துவம் அழித்துக்கொண்டேதானிருக்கிறது. அது மனு ஸ்ம்ருதி என்கின்ற பார்ப்பன ராவணனாக இருந்தாலும் ராமனாய் வதம் செய்யும்.

செத்த பாம்பை பொய்மை நூல்களாலும், கட்டுரைகளாலும் கட்டி பொம்மலாட்டம் நடத்துவதும் வேடிக்கை என்கின்ற அளவில் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

பின்பற்றப்படத்தகுதியில்லாத விஷயங்களை விலக்கிவைத்தபின்னும் பிற்போக்கு இடதுசாரிகளின் பொம்மலாட்டப் பிழைப்பும் நடந்துகொண்டுதானிருக்கிறது. பிழைத்துப்போங்கள் !

 

பச்சைத் தமிழன் said...

ஜடாயு,

உங்களது பதிவிலிட்ட அதே பின்னூட்டத்தை திரு என்பவரது மனு ஸ்ம்ருதி சம்பந்தமான கட்டுரையிலும் இட்டேன்.

காலத்திற்கு ஒவ்வாத ஸ்ம்ருதி தேவையில்லை என்ற ஹிந்துத்துவ வாதத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் நீங்கள் அப்பின்னூட்டத்தை வெளியிட்டீர்கள். உங்களது சொல்லும், செயலும் ஒன்றாயுள்ளது.

திரு வெளியிடுவதாயில்லை. பகலில் "சீ சீ தள்ளிப்போ, மேலே படாதே, நான் சுத்தமாக்கும், உன்னைவிட உயர்ந்தவனாக்கும்" என்று சொல்லிவிட்டு இரவில் "காசு கூடத்தரேன், கொஞ்சம் கிட்ட வாயேன்" என்று சொல்லுவதுபோலத்தான் இந்தச் செயலும் இருக்கிறது. 

ஒவ்வாத கருத்துக்கள் வேண்டாம் என்றால் அதை சொல்லும் பின்னூட்டத்தை அனுமதிக்கலாம். ஆனால், வேறு யார்மேலோ பழியை போட்டுவிட்டு, அந்தப் புத்தகத்திலுள்ள கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் இச்செயல் நேர்மையில்லா உயர்சாதிவெறி கோழைத்தனத்தின் முதல்தர உதாரணம்.

எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற நடிகரது படத்தில் ஒரு பாட்டு உண்டு:

"திருந்தாத ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்"

இரட்டைவேடம் போடும் இந்த போலி சீர்திருத்தவாதிகள் திருந்தாமலிருப்பது மனித குலத்தின் அவமானங்களில் ஒன்று.

மனிதன் said...

திரு ஜடாயு,
சிந்தனையை தூண்டிய கட்டுரை.மலர்மன்னனின் கட்டுரையை பதிந்ததிற்கும் நன்றி.

சிவசு-வின்( திரு ) கட்டுரையையும் படித்தேன்.
பச்சை தமிழனின் பராசர ஸ்மிருதி
தகவலையும் படித்தேன்.

இன்றைய காலகட்டத்தில் மனு ஸ்மிருதியை பற்றிய அறிதல் பெரும்பான்மையான மக்களிடம் இல்லை என்பதுதான்
உண்மை.

நான் மனு ஸ்மிருதி பற்றி அறிந்தவையெல்லாம், மனுதான் ஜாதிக்கொரு நீதியை கற்பித்தார்
என்பதுதான்.இது கூட திக வினரின்
மேடைப்பேச்சு மூலமாகவும், அவர்களின் உண்மை ஏட்டின் மூலமாகவும் அறிந்ததுதான். அதற்கு முன் மனு என்ற பெயரை நான் மருந்துக்கு கூட அறிந்திலேன். 

மற்றபடி மனு ஸ்மிருதியில் அரசியல்நீதி
மற்றும் வேறு பல நீதிகளும் சொல்லப்பட்டுள்ளது என்பது எனக்கு புதுமையான தகவல்.

மனு ஸ்ம்ருதியை மிக உயர்வானது என்று யாரும் தூக்கி பிடிப்பதாக தெரியவில்லை.சூழ்நிலை இப்படியாக இருக்கும்பொழுது அதைப்பற்றி தாழ்த்தி வசைபாடவும் ஏதும் அவசியம் வந்துவிட்டதாகவும் நான் கருதவில்லை.
திரு-வின் பதிவு வெறுப்புணர்சியைத் தூண்ட இடப்பட்ட பதிவாகவே கருதுகிறேன்.

மனுநீதியின் திரிக்கப்படாத மொழிபெயர்ப்பு ஏதும் உண்டா?.யாராவது இதை நேரடியாக சஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்களா?. இது புத்தக வடிவில் தமிழில் கிடைக்கிறதா போன்ற விவரங்களை நேரம் கிடைத்தால் வெளியிடுங்கள்.

அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்று படித்து தெரிந்துகொள்கிறேன்.
அதில் கொண்டாட ஒன்றும் இல்லை என்றால் பாக்கேட் நாவல்களை படித்துவிட்டு ஒரு மூலையில் வீசிவிட்டு மற்ந்துவிடுவது போல மறக்கவேண்டியதுதான் மாறாக உபயோகமாக எதுவும் தேறினால் 
( தாத்தா வெட்டிய உப்புநீர் கிணறு பாடல் போல உருப்படியானது)
அன்னப்பட்ஷியாக இருந்து, பிரித்து எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.
அன்புடன்,
ராமச்சந்திரன்.

Thamizhan said...

டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார் சென்னை மாகாண சபையிலே ஒரு தீர்மானங் கொண்டு வந்தார்.பெண்கள் கோவில்களிலே பொட்டுக் கட்டி விடப்படுவதை ஒழிக்கும் தீர்மானம்.அப்போது பெரும்பேச்சாளரான சத்தியமூர்த்தி அவர்கள் "நான் இந்த நாட்டின் சட்டத்தை மீறினாலும் மீறுவேனே தவிர சாஷ்திர ச்ம்பிரதாயங்களை மீறமாட்டேன்"என்று பேசி எதிர்த்தார்.அப்போது அம்மையார் சொன்னார்கள்"மிகவும் நல்லது.இதுவரை எங்கள் பெண்கள்தான் பொட்டுக்கட்டி விடப்பட்டனர்.அதை வேண்டாம் என்கிறோம்.இனிமேல் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்களின் பெண்கள் செல்லட்டும்.எங்களுக்கு ஆட்சேபணை இல்லை"என்றார்.
அத் 1 சுலோ31
பிரம்மா,உலக வளர்ச்சியின் பொருட்டுத் தன்னுடைய முகம்,தோள்,தொடை,கால் ஆகியவ்ற்றினின்றும் பிராம்மணன்,ச்த்திரியன்,வைசியன்,சூத்திரன் ஆகியவர்களை முறையே உண்டு பண்ணினார்.
அத்1சுலொ100
பிராமணன் முதற் பிறவி.அத்தகதியினால் பிராம்மணன் பிரம்மாவின் படைப்புலகில் காணப்படும் அனைத்துச் செல்வங்களையும் தனதாக்கிக் கொள்ளத் தக்க உரிமை படைத்தவனாகிறான்
அட்1சுலொ101
பிராம்மணன் மற்ற மூவரிடமிருந்தும் பெறுகிற உணவு,உடை பொருள் மற்றெதுவானாலும்,அவன் தன்னுடையதைத்தான் அவர்களிடமிருந்து பெறுகிறான்.ஏனெனில் அம்மூவரும் பிராம்மணனின் உடைமையை வைத்துத்தான் வாழ்ந்து வருபவர்களாவார்கள்.
அத்2சுலோ31
பிராம்மணனுக்கு மங்களம்,ச்த்தியனுக்கு பலம்,வைசியனுக்கு செல்வம்,சூத்திரனுக்கு அவன் அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களையே சூட்ட வேண்டும்.
(அதனால்தான் சர்மன்,வர்மன்,பூபதி என்றும் தாசன்,கேசவன்,அமாவாசை பெயர்களும்)
அத்2சுலோ91
மற்றவர்கட்கு உழைப்பதற்கென்றே சூத்திரன் படைக்கப்பட்டுள்ளான்.மற்ற மூன்று வருணத்தார்க்கும் பொறாமையின்றிப் பணிவிடை செய்வதைச் சூத்திரனுக்கு முக்கிய அறமாகப் பிரம்மா ஏற்படுத்தியுள்ளார்.
அத்1சுலொ99
பிராம்மணன் சாத்திர நூலைப் படிக்கலாம்;அவன் மற்ற வருணத்தார்க்குச் சொல்லித் தரக்கூடாது.
அத்8சுலோ270
பிராம்மணர்களின் பெயர் கூறி இகழ்ச்சியாய்த் திட்டுகிற சூத்திரன் வாயில் பத்தங்குல நீலமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்க.
அத்8சுலோ279
பிராம்மணனைச் சூத்திரன் கையாலேனும் கருவியாலேனும் தாக்கினால் எந்தெந்த இடத்தில் அடித்தானோ அடித்தவனின் அந்தந்த உறுப்பை அறுத்திடுக.
அத்9சுலோ265
பிராம்மணன் மீது காறியுமிழ்பவனின் உதடுகளை அறுத்திடுக;மூத்திரம் பெய்தால் குறியை வெட்டு;மலத்தை வீசினால் ஆசன்ப் பகுதியை அறுத்துவிடு
அத்8சுலோ380
பிராம்மணன் எப்பாவம் செய்தாலும் அவனைக் கொல்லாமல்,காயமின்றி,அவன் பொறுளுடன் ஊரைவிட்டுத் துரத்த வேண்டியது.
அத்8சுலோ381
பிரம்மஹத்தியை விட(பார்ப்பானைக் கொல்வது)அதிகமான பாவம் உலகத்திற் கிடையாது.ஆதலால் பிராமம்மணனைக் கொல்ல வேண்டும் என்று அரசன் மந்த்தினாலும் நினைக்கக் கூடாது.
ஆனால் ச்சுத்திரன் நிலை என்ன?
அத்9 சுலோ248
பிராம்மணனுடைய பொருளைப் பிடுங்கிக் கொண்டு அவனை அடித்துத் துன்புறுத்துகின்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லுக.

இதெல்லாம் கதைகள் என்று பல மன்னர்களும் மடையர்களும் சொல்வார்கள்.அதனால் தான் சோழ மன்னர்கள் பல மங்கல்ங்கள்(நல்ல நஞ்சை நில கிராமங்கள்).ச்துர்வேதி மங்கல்ங்கள்,பார்ப்பனர்களுக்காகவே கல்வி மானியங்கள் நன்கொடை செய்தனர்.
இதெல்லாம் வெறும் பேச்சு என்று சொல்லும் வீணர்களுக்காகத்தான் வடமொழி அறிந்த சுந்தரனார் சொன்னார்
"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவர நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொரு நீதி"
பாரதியார் சொல்கிறார்
"சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,சாத்திரம் சொல்லிடு மாயின்
அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்".
இது இன்று இல்லை என்று சொல்லும் அறிவுக் கொளுந்துகளே உங்களுக்காகவேத்தான் உச்ச நீதி மன்றம் காஞ்சி சுப்பிரமணிக்குத் தனிநீதித் தர அனைத்து விதத்திலும் கடுமையாக உழைக்கிறது.
பின்னூட்டம் மிக நீண்டு விட்டதற்கு வருந்துகிறேன்.பெண்ணடிமை பற்றி நீங்களே படியுங்கள்.
பார்ப்பனர்களின் ஏமாற்றிற்கும் சில தமிழர்கள் என்ற படித்தாகச் சொல்லிக் கொள்ளும் அறிவில்லா ஜீவிகளுக்கும்
சேர்ந்துதான் மனுநீதியை பாபா சாகேப் அம்பேத்கர் கொளுத்தினார்,திருவள்ளுவர் முதல் பெரியார் வரை திட்டித் தீர்த்தார்கள்.
ஆம் இன்று நீங்கள் பொட்டுக் கட்டி வாழ நினைத்தாலும் உங்களுக்கும்,உங்கள் பெண்களுக்கும் சேர்த்துத்தான் பெண்ணுரிமைக்காகப் போராடிப் "பெரியாரா"க்கப் பட்டார்.
மூடி மறைக்காதீர்கள்,உடைகளை மாற்றியதப் போல் உள்ளங்களை மாற்றிக் கொண்டு மனிதர்களாகுங்கள்.
உங்களை வரவேற்போம்,மனிதர்களாக்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

ஜடாயு said...

Thamizhan அவர்களே, முதலில் இந்தப் பதிவை நீங்கள் படித்தீர்களா என்றே எனக்கு சந்தேகம் வருகிறது! மனுஸ்மிருதியில் உள்ளதெல்லாம் சரி என்று இங்கு யாரும் வாதம் செய்யவே இல்லை. நீரே கற்பனை செய்து கொண்டு ஏதேதோ சொல்ல ஆரம்பித்து விட்டீர். 

இந்தப் புத்தகத்தின் பல பிரதிகளில் காணப்படும் இவ்விதமான தண்டனைகளையும், சட்டங்களையும் இந்தியாவில் எந்த மன்னனும், மக்கள் குழுவும் முழுமையாக நடைமுறைப் படுத்தியதற்கான சான்றுகள் இல்லை என்று டாக்டர் அம்பேத்கர் அவர்களே தன் நூலில் கூறியிருக்கிறார். சோழ மன்னர்கள் வேதியருக்கு மட்டும் அல்ல, படைவீரர், கலைஞர்கள், மருத்துவர் உள்ளிட்ட எல்லா சாதியாருக்கும் நிலங்கள், கிராமங்கள் வழங்கியதற்கும் சான்றுகள் உள்ளன.

இருப்பினும், சாதீய வெறிக்கான ஒரு குறியீடாக இந்நூலைப் பார்ப்பதாகக் கூறித் தான் அம்பேத்கர் இந்த நூலை எரித்தார். ஏனென்றால் இத்தகைய ஸ்மிருதிகள் மிக மரியாதையுடன் யாராலும் பார்க்கப் படவில்லை என்பது அவருக்குத் தெரியும். வேடரான முனிவர் வால்மீகியின் ராமாயணத்திற்கும், மீனவரான முனிவர் வியாசரின் மகாபாரதத்திற்கும் இருக்கும் உயரிய இடத்தில் நூறில் ஒரு பங்கு கூட மனுஸ்மிருதிக்கு இல்லை என்பது அவர் அறிந்தது. இந்து மரபில் வந்திருக்கும் ஆயிரக் கணக்கான புத்தகங்களில் சாதி வெறியைப் பற்றி ஓவராகப் பேசிய புத்தகம் என்று இதைக் கண்டு அவர் எரித்தார். அவரது செயல் ஒரு போர்முறை என்ற அளவில் சரியானது என்றே நான் கருதுகிறேன். 

இருப்பினும் ஒரு பழைய நூல் (புனித நூல் அல்ல) என்ற அளவில் மனுஸ்மிருதியை மதிப்பிட்டு அதிலும் சில நல்ல அறக் கருத்துக்களை விளக்கும் பாடல்கள் உள்ளன என்பதே நான் கூறவந்தது. 

இந்து சாத்திரங்கள் எல்லாமே இப்படித் தான் கூறுகின்றன என்று நீங்கள் வாதிட்டால் அது உங்கள் அறியாமையையே காட்டுவதாக இருக்கும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

ஹிந்து குடிமைச் சட்டத்திற்கு அடிப்படை மனு ஸ்மிருதியா?

மலர் மன்னன்

 

 

மனு ஸ்மிருதி குறித்து எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு நூற்றுக்கும் அதிகமான திண்ணை வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாக என்னுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யத் தொடங்கியிருப்பது மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. பலர் மேலும் பலவாறான விளக்கங்கள் கேட்டு முந்தைய கட்டுரைக்குத் தொடர்ச்சியாக இன்னொரு கட்டுரை எழுதுமாறும் முடிந்தால் இது பற்றி ஒரு கட்டுரைத் தொடரையே தொடங்குமாறும் எழுதியிருக்கிறார்கள்.

 

மனு ஸ்மிருதி பற்றித் தொடர் எல்லாம் எழுதுவதற்கு எனக்குப் பொறுமை இருக்குமா என்று தெரியாது. இப்போதைக்குச் சில அடிப்படையான சந்தேகங்களைத் தெளிவுபடுத்தக் கூடிய விவரங்களைத் தர முயற்சி செய்கிறேன்.

 

முதலில் மனு ஸ்மிருதி பற்றிக் கட்டுரை எழுத வேண்டும் என்கிற தூண்டுதலை எனக்குத் தந்த கனடா வாழ் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான சி. ஜயபாரதன் அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். ஏனெனில் சமீபத்தில் அவர் திண்னையில் எழுதிய ஒரு கவிதையைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்திராவிடில் மனு ஸ்மிருதி பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணமே எனக்குத் தோன்றியிருக்காது!

 

அறிவியல் சார்ந்த நுட்பமான விஷயங்களை மிகச் சிறப்பாக எழுதிவரும் சி. ஜயபாரதன், நிச்சயமாக விவரம் தெரிந்தவராகத்தான் இருக்க முடியும். அவரது கட்டுரைகளை சிரத்தையுடன் படிப்பதுண்டு என்றாலும் அவர் எழுதும் கவிதைகளையெல்லாம் படிக்கிற வழக்கம் இல்லை. ஆனால் நான் மனு ஸ்மிருதி பற்றி எழுத வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது போலும், வழக்கத்திற்கு மாறாக அவரது கவிதையைப் படித்தேன்.

ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று தொடங்கிய முதல் வரியைப் படித்ததுமே அறிவாளிகள் மத்தியிலுங்கூட மனு ஸ்மிருதி பற்றி நேரடியான புரிதல் இல்லாமலேயே, வழிவழியாகப் பிறர் சொல்லக் கேட்டு அதன் அடிப்படையில் மிகவும் உறுதியான கருத்து உருவாகி யிருப்பது கண்டு வருத்தம் ஏற்பட்டது. சரி, நமக்குத் தெரிந்ததைச் சொல்வோம் என்று மனு ஸ்மிருதி பற்றி எழுதலானேன். நானே எதிர்பாராத விதமாக ஏராளமான வாசகர்களிடமிருந்து நன்றி தெரிவித்தும் மேற்கொண்டு விவரங்கள் கேட்டும் அஞ்சல்கள் வரத் தொடங்கி

யிருக்கின்றன.

 

நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் நமது தேசத்தின் தத்துவம், அறிவியல், கணிதம், கலைகள் முதலான பாடங்கள் சமஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன. தமிழ் மிகவும் இனிமையான, சமஸ்கிருதத்திற்கு இணையான தொன்மை மிக்க மொழியெனினும், அதன் சுயமான வளம் இலக்கண இலக்கியங்களில் மட்டுமே உள்ளது. அது பெற்றுள்ள மானிட வியலின் பிற அம்சங்கள் யாவும் சமஸ்கிருதத்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்றன. தமிழில் முன் குறிப்பிட்ட பாடங்கள் தொடர்பான விவரங்களுக்கெல்லாம் சமஸ்கிருதம்தான் மூலம்.

 

திருத்தமான மொழி எனப் பொருள்படும் சமஸ்கிருதத்தை பாரத தேசம் முழுவதும் உள்ள படிப்பாளிகள் தமக்கிடையே கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் பொருட்டு ஒரு பொது மொழியாகத் தமிழனேதான் உருவாக்கினான் என்று நா. மகாலிங்கம் அவர்கள் கூறுவதுண்டு. இதனை ஒப்புக்கொள்வதன் மூலமாகவேனும் சமஸ்கிருதத்தின் மீது தோற்றுவிக்கப்பட்டுள்ள துவேஷம் மறைந்து, அதனைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் தோன்றுமானால் அது சமஸ்கிருதத்திற்கு அல்ல, அப்படி ஆர்வங்கொள்பவர்களுக்குத்தான் லாபம்.

 

வெளிநாடுகளிலிரு ந்து வரும் இந்தியவியல் பேராசிரியர்களும் மாணவர்களும் இங்குள்ள சிறந்த கல்வியாளர்களுக்குக் கூட சமஸ்கிருதம் தெரியாது என்பதை அறியும்போது வியப்பும் வருத்தமும் தெரிவிப்பதுண்டு. இந்தியவியலில் தமிழ் மற்றும் தென்மொழிகளைக் கற்றவர்கள்கூட சமஸ்கிருதமும் கற்றால்தான் தமது இந்தியவியல் சார்ந்த அறிவு முழுமைபெறும் என்று கூறுவார்கள்.

 

கடந்த நூற்றாண்டுகளில் தமிழ்ப் புலவர்களும் தமிழகத்து சமஸ்கிருத பண்டிதர்களும் பெரும்பாலும் இருமொழிப் புலமையுள்ளவர்களாகவே இருந்து வந்துள்ளனர். சமஸ்கிருத மொழி மீதான வெறுப்பும் துவேஷமும் கடந்த நூறாண்டுகளில்தான் சிறுகச் சிறுக ஊட்டப்பட்டு வந்துள்ளன.

 

இவ்வளவும் நான் சொல்லக் காரணம், மனு ஸ்மிருதியை அதன் மூல மொழியான சமஸ்கிருத்தத்தில் படித்துப் பொருள் புரிந்துகொள்ளாமலேயே, எவரோ செய்த அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு, அதன் அடிப்படையில் மனு ஸ்மிருதி பற்றிக் கூசாமல் பழித்துப் பேசுவது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்குமேயன்றி, அறிவாளிகளும் அதேபோல் நட ந்துகொள்ளலாமா என யோசிக்க வேண்டும்.

 

ஹிந்துஸ்தானத்தில் குற்றவியல், குடிமையியல் என்கிற பாகுபாடுகளுடன் நீதி பரிபாலனம் நடைபெற்ற விதம் பற்றிய தெளிவான பதிவுகள் இல்லை. 1700க்குப் பிறகு வியாபாரிகளாக வந்த ஆங்கிலேயர்களான கிழக்கிந்திய கம்பெனியார் நமது ஒற்றுமையின்மையாலும் முன்னெச்சரிக்கையின்மையாலும் நம்மை ஆளுகின்ற பொறுப்பையும் ஏற்றுக் கொண்டபோது, குற்றவியல் குடிமையியல் ஆகியவற்றின் பிரகாரம் நீதி பரிபாலனம் செய்யும் கடமையினையும் ஏற்க வேண்டியவர்களானார்கள். குற்றவியலைப் பொருத்தவரை அவர்களுக்குப் பிரச்சினை இருக்கவில்லை. தங்கள் தேசத்துக் குற்றவியலை எளிதாக வரித்துக் கொண்டுவிட்டனர். அடிமை மக்களுக்கான குற்றவியல் என்பதால் விசாரணை, தண்டனை விதிகளை மட்டும் சிறிது கடுமையாக்கிக்கொண்டனர். சிவில் எனப்படுகிற குடிமையியலின்படி நீதி வழங்க நேர்ந்தபோதுதான் அவர்களுக்குச் சிக்கல் வந்தது.

 

ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்கள், முகமதியர், ஒரளவு கிறிஸ்தவர், பவுத்தர், சமணர், வனவாசிகள் எனப் பல பிரிவினர் இருப்பதோடு, ஹிந்துக்களிலேயே ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொருவிதமான பழக்க வழக்கங்களும், பிரிவுகளும், அவற்றுக்கு ஏற்ப நடைமுறைகளும் இருக்கக் கண்டு ஆங்கிலேயர் திகைத்தனர். முகமதியம், கிறிஸ்தவம் போல ஒரு மதத் தலைமை, ஒரு புத்தகம் என்கிற கட்டுப்பாடு ஹிந்துக்களிடையே இல்லாததும், மதத்தின் முத்திரையோடு ஒழுக்க விதிகள் நிர்ணயிக்கப் படாததாலும் எத்தகைய விதிகளின் பேரில் எவருடைய அங்கீகாரத்துடன் ஹிந்துக்களுக்கிடையிலான குடிமை வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிப்பது என்றும் எந்த அதிகாரத்தின்கீழ் தமது தீர்ப்பிற்கு வாதிகளை ஒப்புக்கொள்ளச் செய்வது என்றும் அவர்களுக்குப் புரியவில்லை.

 

அப்போதைய கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் இதற்கு விடை காணப் பலரிடமும் ஆலோசனை செய்தபோது, ஹிந்து தர்ம சாஸ்திரங்களில் மனு ஸ்மிருதி என ஒரு நீதி நூல் இருப்பதாகக் கேள்வியுற்றார். சமஸ்கிருத மொழிப்புலமையோடு, சாஸ்திர சம்பிரதாயங்களில் தேர்ச்சியும் உள்ளவர்கள் என அறியப்பட்ட சிலரைத் தேர்வு செய்து ஒரு குழு அமைத்து,

ஹிந்துக்களுக்கான குடிமைச் சட்ட விதிகளை ஒழுங்கு படுத்துமாறு அவர் கூறினார். பண்டிதர்கள் ஒன்று கூடி த் தமக்குள் விவாதித்து, மனு ஸ்மிருதியைப் புரட்டிப் புரட்டி, முக்கியமான குடிமை விவகாரங்களில் எவ்வாறு தீர்ப்பளிப்பது என முடிவு செய்வதற்கான விதிகளைத் தொகுத்து அளித்தனர். இதுதான் பின்னர் ஹிந்து குடிமைச் சட்டமாகப் பரிணாமமடைந்தது.

 

பொதுவாக மக்களிடையே அதிருப்தி வளர இடமளிக்கலாகாது என்பதால் கம்பெனி ஆட்சி மத சம்பந்தமான விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்து வந்தது. பாலிய விவாகம், உடன்கட்டை ஏறுதல், பலதார மணம், முதலிய நடைமுறைகள் சமூக வழக்கங்களாக இருந்த போதிலும் பண்டிதர் குழு சாமர்த்தியமாக அதற்கு சமயத்தின் முத்திரையைப் பதித்துவிட்டதால் கம்பெனி தர்பார் அவற்றில் தலையிடவில்லை.

சதி என்கிற உடன்கட்டை ஏறும் வழக்கம் பல சந்தர்ப்பங்களில் உடன் கட்டை ஏற்றும் சதிச் செயலாக இருந்தும் அதனைத் தடுக்க கம்பெனி ஆட்சி விரும்பவில்லை. ராஜா

ராம்மோஹன் ராய் இடைவி டாது முயற்சி செய்ததன் பயனாகவே இறுதியில் அந்தக் கொடிய வழக்கத்தைத் தடை செய்ய கம்பெனி ஆட்சி முன் வந்தது. உடன்கட்டை ஏறுதல் ஒரு சமூகப் பழக்கம், சமய நம்பிக்கைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று ராம்மோஹன் ராய் வாதாடித் தமது கோரிக்கையை அத ஏற்கச் செய்தார்.

 

பண்டிதர்கள் மனு ஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டு ஹிந்து குடிமைச் சட்ட விதிகளை ஒழுங்கு செய்ததாகக் கூறியபோதிலும் அதற்கு ஆதாரம் ஏதும் இல்லை.

பொதுவாகக் கிழக்கிந்திய கம்பனி ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ள முற்படும்வதற்கு முன் கிராம அளவிலான பஞ்சாயத்துகள் மூலமாகவே குடிமையியலிலும், குற்றவியலில் சிறு குற்றங்களுக்கும் தீர்ப்ப்புகள் வழங்கப் பட்டு வந்தன. இவற்றை முன்மாதிரியாகக் கொண்டுதான் பண்டிதர்கள் ஹிந்துக்களுக்கான குடிமையியல் விதிகளை ஒழுங்கு படுத்தினார்கள்.

 

புதிதாக நிறுவப்பட்ட குடிமையியல் நீதி மன்றங்களில் ஹிந்துக்களிடையிலான வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது ஆங்கிலேய நீதிபதிகளுக்குத் தீர்ப்பு வழங்குவதற்கான ஆலோசனை வழங்கப் பண்டிதர் குழு நியமிக்கப்பட்டது. ஒரே மாதிரியான வழக்குகளில் கூட, பண்டிதர்கள் தம் மனம் போன போக்கில் விளக்கம் சொல்லி ஆலோசனை அளிக்கத் தொடங்கிவிட்டதால் கம்பெனி ஆட்சியாளர்களுக்குப் பண்டிதர்கள் அளிக்கும் ஆலோசனையில் சந்தேகம் வரலாயிற்று.

 

வில்லியச்ம் ஜோன்ஸ் என்பவர் ஹிந்துக்களுக்கு அவர்களின் தர்ம சாஸ்திரப்படித் தீர்ப்பு வழங்குவதுதான் முறை என்று கருதி, மனு ஸ்மிருதியைப் பற்றி அறிந்திருந்தமையால் அதனைப் படித்து மொழிபெயர்க்கலானார்.

 

பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான இடைச் செருகல்களுடன், முன்னுக்குப்பின் முரணான விதிகளுடன் ஏராளமான பாட பேதங்களோடு பல்வேறு வேறு பிரதிகளாகக் கிடைத்த மனு ஸ்மிருதியை வைத்துக் கொண்டு ஒட்டு வேகைல செய்யத் தொடங்கிய ஜோன்ஸ், இயற்கை நீதிக்கு முரணான பல விதிகளும் அதில் காணப்பட்டதும் ஹிந்து சமயத்தை இழிவு செய்து, கிறிஸ்தவம்தான் சமூக நீதியைப் போற்றும் சமயம் என்று பிரசாரம் செய்ய மனு ஸ்மிருதி சரியான ஆயுதம் எனக் கண்டுகொண்டார். அவரைத் தொடர்ந்து பிற ஆங்கிலேயக் கல்வியாளரும் , இறையியலாளரும் ஹிந்து சமயத்தைத் தாக்குவதற்கு மனு ஸ்மிருதியை வலுவாக பற்றிக் கொண்டார்கள். ஆங்கிலேயக் கல்வித் திட்டப்படிக் கற்றுத் தேர்ந்த நம்மவர்களும், சமஸ்கிருதம் தெரியாமல், மூல நூல் என்ன சொல்கிறது எனத் தெரிந்துகொள்ளவும் அக்கரை கொள்ளாமல், ஆங்கிலேயரின் மொழி பெயர்ப்பு என்ன சொல்கிறதோ அதையே திருப்பிச் சொல்லும் வெறும் கற்றுச் சொல்லிகளாக வலம் வரத் தொடங்கிவிட்டார்கள்.

 

வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் முதலான இதிகாசங்களில் கூட பாட பேதங்களுடன் வெவ்வேறு வட்டாரங்களில் வித்தியாசப்படுகின்ற பிரதிகள் படிக்கபட்டு வந்துள்ளன. இதுதான் முழுக்க முழுக்கச் சரியான மூல நூல் என்று சாதிக்க முடிவதில்லை. நிலைமை இவ்வாறிருக்க, ஒழுக்க விதிகளை விவரிக்கும் சாஸ்திரமான மனு ஸ்மிருதி அவற்றைக் காட்டிலும் கூடுதலான பாட பேதங்களைப் பெறுவது சாத்தியம்தான். இது ஹிந்து மத துவேஷிகளுக்குக் கொண்டாட்டமாகிவிட்டது! மத மாற்ற முயற்சிகளுக்கும் இது வசதியயாகப் போயிற்று!

 

மனு ஸ்மிருதியை மெல்லிய இழையாகக் கொண்டுதான் ஹிந்துக்களுக்கான முதல் குடிமைச் சட்டம் பின்னப்பட்டது. அந்த இழையின் பலத்தினால்தான் காலத்திற்கேற்ப ஹிந்து குடிமையியலில் சமூக சீர்திருத்தச் சட்டங்களையும் சேர்த்துக்கொள்வது சாத்தியமாயிற்று. உடன் கட்டை ஏறுதல், பல தார மணம், தீண்டாமை போன்ற சுய நலம் சார்ந்த சமூக அடிப்படையிலான பொருந்தா வழக்கங்களைக் குற்றவியலுக்குரிய முறை கேடுகள் எனத் தடை செய்வதும், பெண்களுக்குச் சொத்தில் பங்கு, எனப் பல விதிகளைத் தங்கு தடையின்றி அதில் இணைத்துக்கொண்டே வரவும் முடிகிறது என்றால் இதற்கான பெருமை மனு ஸ்மிருதியைத்தான் சாரும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

cap tiger said...

ஆரியர்கள் அட்லாண்டிஸ் கண்டத்தில் வந்திறங்கிய வேற்றுகிரகவாசிகள்! திராவிடர்களே லெமூரிய கண்டத்தில் தோன்றிய இம்மண்ணின் மைந்தர்கள்(இவர்களே ஆப்பிரிக்கா பழங்குடியினர், தென்னிந்தியர்கள், தென்னமெரிக்க பழங்குடியினர், அமெரிக்க செவ்விந்தியர்கள், ஆஸ்திரேலிய பழங்குடியினர்கள்)இப்படிபட்ட மக்களை மூளைசலவை செய்யவே ஆரியக்கதைகள்! ஆனால் ராமனும், கிருஷ்ணனும் நிச்சயம் வேற்றுகிரகவாசிகளாகத்தான் இருக்கமுடியும்: கவனிக்க: அவர்களின் பிறப்பு, நிறங்கள், பயன்படுத்திய பறக்கும் வாகனங்கள்! ஆரிய புராணங்கள் அவர்களை ஹீரோ ஆக்கிவிட்டனர்!



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

மனுநீதி – சோ

https://i0.wp.com/im.in.com/connect/images/profile/b_profile1/Cho_Ramaswamy_300.jpg

எங்கே பிராமணன்? – டெலிவிஷன் விளக்கங்கள்

கேள்வி : மனுநீதி அல்லது மனு தர்மம் பற்றி என்ன சொல்கிறீர்கள்? பிராமணர்களை விசேஷமாக உயர்த்தி, மற்றவர்களை எல்லாம் மட்டமாக வைத்துப் புனையப்பட்டதுதானே மனுதர்மம்? மிகவும் அநியாயமாக, நியாயத்திற்குச் சம்பந்தமே இல்லாத பல விதிகளைக் கொண்டதுதானே மனு தர்மம்?

சோ : இது, மிகவும் தவறான எண்ணம். இந்தச் சந்தர்ப்பத்தில், மனு ஸ்ம்ருதி பற்றிய சில விவரங்களைப் பார்ப்போம். அதன் பிறகு, அது அநீதியை விதித்ததா, அல்லது தர்மத்தைக் கூறியதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மனுநீதி, மனுதர்மம் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டாலும், அந்த நூலின் பெயர் ‘மனுஸ்ம்ருதி’ என்பதுதான். ‘ச்ருதி’ என்பது கேட்கப்பட்டது. அதாவது, வேதங்கள்; அவை ரிஷிகளால் உணரப்பட்டு, உலகிற்குக் கிட்டியவை; செவி வழி வந்தவை. ‘ஸ்ம்ருதி’ என்பது, முந்தைய உபதேசத்தை நினைவில் வைத்து, அதன் அடிப்படையில் வகுக்கப்பட்டது. வேதங்களில் கூறப்பட்டதைப் புரிந்து கொண்டு, அந்த வேதங்களுக்கு விரோதமில்லாமல் தெரிவிக்கப்பட்ட சிந்தனைகள், விதிமுறைகள் ‘ஸ்ம்ருதி’களில் காணப்படும்.

ஸ்ம்ருதிகளை எடுத்துக் கொண்டால், மனுஸ்ம்ருதியைத் தவிர, வேறு பல ஸ்ம்ருதிகளும் இருக்கின்றன. யாக்ஞவல்கிய ஸ்ம்ருதி, பராசர ஸ்ம்ருதி, ப்ரஹஸ்பதி ஸ்ம்ருதி, நாரத ஸ்ம்ருதி… என்பவை, அந்த ஸ்ம்ருதிகளில் சில.

மனு’ என்கிற பெயர் வேதங்களிலும் கூட இடம் பெறுகிறது. வேறு பல ஸ்ம்ருதிகளிலும் அவருடைய பெயர் குறிப்பிடப்படுகிறது. மனு ஒருவர் அல்ல; சொல்லப் போனால், அது ஒரு பதவி மாதிரி; அதை விதித்தவர்கள் மனு என்று அழைக்கப்பட்டனர். மனுஸ்ம்ருதியை எழுதியவர் ‘இந்த மனுதான்’ என்று சொல்லிவிட முடியாது. என்றாலும், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே செய்யப்பட்ட நூல் இது என்று நம்பப்படுகிறது.

மஹாபாரதத்தில் கூட, மனுஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ள விதிகள் விவாதிக்கப்படுகின்றன. மஹாபாரதமோ சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்புஎழுதப்பட்டது. ஆகையால், மனுஸ்ம்ருதி அதற்கும் முன்பாகச் செய்யப்பட்டிருக்கிற நூல் என்பது தெளிவாகிறது.

சில ரிஷிகள், மனு என்ற மஹரிஷியை அணுகி, படைப்பு மற்றும் வாழும் வகை, ராஜநீதி போன்ற விஷயங்களை விளக்கிச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது அந்த மஹரிஷி (மனு), அவர்களுக்கு, படைப்பு எப்படி நிகழ்ந்தது என்பதை விளக்கினார். பின்னர், ‘ப்ரும்ம தேவன் எனக்கு இந்த சாஸ்திரத்தை (மனுஸ்ம்ருதியை) உபதேசித்தார்; நான் இதை மரீசி போன்ற ரிஷிகளுக்கு எடுத்துச் சொன்னேன். இப்போது இங்கேயுள்ள ப்ருகு முனிவர், உங்களுக்கெல்லாம் இதை விளக்குவார். அவர் என்னிடமிருந்து இதை முழுமையாகத் தெரிந்து கொண்டார்’ என்று மனு கூறினார்.அதையடுத்து, ப்ருகு, அங்கு கூடியிருந்த ரிஷிகளுக்கு, இதை (மனுஸ்ம்ருதியை) விளக்கினார்.இப்படித் தொடருகிற மனுஸ்ம்ருதியில், படைப்பு; யுகங்கள் உட்பட கால அளவுகள்; யுக தர்மங்கள்; நான்கு வர்ணங்கள்; ஒவ்வொரு வர்ணத்தின் சிறப்பு; சொத்துக்கள் பற்றிய விதிமுறைகள்; குற்றங்கள்; அவற்றின் விசாரணை; தண்டனைகள்; அரசனின் கடமைகள்; நீதிபரிபாலனம் நடக்க வேண்டிய முறை; யுத்தத்தில் அரசனின் அணுகுமுறைகள்; பெண்கள் பற்றிய விதிமுறைகள்; நான்கு வர்ணங்களைச் சார்ந்தவர்களின் கடமைகள் மற்றும் உரிமைகள்; பாவங்கள் – அவற்றிற்கான பிராயச்சித்தங்கள்; முற்பிறவிகளின் விளைவுகளாக இப்பிறவியில் காணப்படுகிறவை; திருமணங்கள்; இல்லறத்தானின் பொறுப்புகள்; ராஜ்யத்தை நடத்த வேண்டிய முறைகள்; வழக்குகளை நடத்த வேண்டிய வழிமுறைகள்… என்று பற்பல விஷயங்கள் பேசப்படுகின்றன.

 

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக இப்படிப்பட்ட ஆழ்ந்த சிந்தனை இங்கே இருந்திருக்கிறது என்பதைக் கண்டு, மேல்நாட்டு அறிஞர்கள் கூட வியந்து பார்க்கிறபோது, நாம்தான், மனுஸ்ம்ருதியை இகழ்ந்து பேசுவது பெருமை என்று நினைக்கிறோம். மனுஸ்ம்ருதியை இகழ முனைபவர்கள், அப்படிச் செய்வதற்கு முன்னால், அதில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் நல்லது. மனுஸ்ம்ருதியின் சில பகுதிகளை நாம் பார்ப்போம்.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

கேள்வி : மனு ஸ்ம்ருதியின் சில அம்சங்களைப் பற்றிச் சொல்வதற்கு ஆரம்பமாக, ஒரு விஷயத்தை விளக்குங்கள். மனு ஸ்ம்ருதியில் ஒரே குற்றத்திற்கு, வெவ்வேறு வர்ணத்தவருக்கு வெவ்வேறு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா?

சோ : உண்மைதான். மனு ஸ்ம்ருதியில் – ஒரு குற்றம் – ஒரு திருட்டு நடந்தால், குற்றம் செய்தவனின் வர்ணத்தைப் பொறுத்து அவனுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

கேள்வி : அதாவது – பிராமணனுக்குச் சலுகை; ஒரு குற்றத்தை ஒரு பிராமணன் செய்தால் அவனுக்குக் குறைவான தண்டனை; அல்லது தண்டனையே கிடையாது. மற்ற வர்ணத்தவர் செய்தால் கடும் தண்டனை! இது என்ன நியாயம்? 

சோ : நீங்கள் அவசரப்படுகிறீர்கள். வர்ணத்தைப் பொறுத்து தண்டனை மாறுபடுகிறது என்று நான் சொன்னேனே தவிர, பிராமணனுக்குக் குறைவான தண்டனை என்று சொல்லவில்லை.

கேள்வி : என்ன சொல்கிறீர்கள்? பிராமணனுக்கும் மற்றவர்களைப் போலவே தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறதா? 

 
சோ : இல்லை. மற்றவர்களை விட, பிராமணனுக்கு – ஒரே குற்றத்திற்கு அதிக தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
 
அஷ்டாபத்யம் து சூத்ரஸ்ய ஸ்தேயே பவதி கில்பிஷம்/
ஷோடசைவ து வைச்யஸ்ய த்வாத்ரிம்சத் க்ஷத்ரியஸ்ய ச//
ப்ராம்மணஸ்ய சது: ஷஷ்டி: பூர்ணம் வாபி சதம் பவேத்/
த்விகுணாவா சது: ஷஷ்டி: தத்தோஷ குணவித்தி ஸ://
– என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது.
இதன் அர்த்தம்:

‘குற்றம் புரிந்த சூத்ரனுக்கு (அவன் விதிமுறையை அறிந்தவனாயின்), வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிக தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றம் புரிந்தவன் வைச்யனாக இருந்தால், பதினாறு மடங்கு தண்டனையும்; க்ஷத்ரியனாக இருந்தால், முப்பத்திரண்டு மடங்கு தண்டனையும் விதிக்கப் பட வேண்டும்.

குற்றம் புரிந்தவன் பிராமணனாக இருந்தால் – அவன் குற்றத்தின் தன்மையை உணர்கிற நிலையில் உள்ளதால் – அவனுக்கு அறுபத்தி நான்கு மடங்கு அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்தெட்டு மடங்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

குற்றத்தின் தன்மையை உணர்ந்தவனாகவும், அது செய்யத் தகாத காரியம் என்பதை முழுமையாக அறிந்தவனாகவும், பிராமணன் இருப்பான் என்ற எண்ணத்தின் அடிப்படையில், அவனுக்கு மற்றவர்களை விடப் பல மடங்கு அதிகத் தண்டனையை மனு ஸ்ம்ருதி விதிக்கிறது.

 
உண்மை இப்படியிருக்க, தண்டனை விஷயத்தில், பிராமணர்களுக்கு மனு ஸ்ம்ருதி சலுகைகள் காட்டுவதாகச் சொல்வது தவறு அல்லவா? ஆனால், ஒரு விஷயம். பிராமணனுக்கு ஒரு தண்டனையில் மட்டும் வித்தியாசம் காட்டப்பட்டிருக்கிறது. பிராமணனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ‘மரண தண்டனைக்குரிய குற்றத்தை ஒரு பிராமணன் செய்தால், அவனை நாடு கடத்த வேண்டும்’ என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது.
பிராமணனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதற்கு, ‘பிரம்மஹத்தி – அதாவது பிராமணனைக் கொலை செய்வது – கொடிய பாவம்’ என்ற நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம்.
 
 
 
 
 
கேள்வி : அப்படி என்றால், மற்ற தண்டனைகளில் பிராமணனுக்குக் கூடுதல் தண்டனை என்றாலும் – மரண தண்டனை என்று வருகிறபோது, அவனுக்கு ஒரு சலுகை இருக்கிறதே?

சோ : உண்மைதான். ஆனால், யாருக்கு இந்தச் சலுகை? பிராமணனுக்கு. பிராமணன் என்றால் – பிராமண குலத்தில் பிறந்த அனைவரும் அல்ல. இப்படி நான் சொல்வதற்குக் காரணமும் மனு ஸ்ம்ருதிதான்.

பிராமணனுக்குப் பல கட்டுப்பாடுகளை மனு ஸ்ம்ருதி விதிக்கிறது. அவற்றிலிருந்து தவறுகிறவனை பிராமணனாக மனு ஸ்ம்ருதி ஏற்கவில்லை.

இப்போது, அரசியல் சட்டம் இந்தியக் குடிமகனுக்கு சில உரிமைகளை அளிக்கிறது. ஆனால், யார் இந்தியக் குடிமகன்? அதையும் சட்டமே விளக்குகிறது. இந்தியாவில் குடியிருப்பதால், ஒருவர், ‘நானும் குடிமகன்தான்’ என்று கூறிக் கொண்டு, அந்த உரிமைகளைக் கோர முடியாது.

அதேபோல், பிராமணன் யார் என்பதை மனு ஸ்ம்ருதி விளக்குகிறது. அந்த இலக்கணப்படி வாழாதவன், ‘நானும் பிராமணன்தான்’ என்று கூறிக் கொண்டு, மரண தண்டனையிலிருந்து விலக்குப் பெற முடியாது. இது பற்றி மேலும் நாம் பார்க்க வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன.

கேள்வி : பிராமணன், கொல்லத் தகுந்தவன் அல்ல; அவனைக் கொல்வது மிகப் பெரிய பாவம் என்றெல்லாம் மனு ஸ்ம்ருதி கூறுகிறது அல்லவா?

சோ : ஆமாம். அப்படித்தான் சொல்கிறது. ஆனால், யார் பிராமணன் என்பதையும் மனு ஸ்ம்ருதி விளக்குகிறது; பிராமணத் தாய் – தந்தைக்குப் பிறந்தும், பிராமணனுக்கு விதிக்கப்பட்ட வழிமுறைகளின்படி வாழாதவனை, மனு ஸ்ம்ருதி பிராமணனாகவே ஏற்கவில்லை.

கேள்வி : அதைப் பிறகு சொல்லுங்கள். இப்போது நான் கேட்பது இதுதான். ‘பிராமணனைக் கொல்வது மஹா பாவம்’ – இல்லையா?

சோ : அதற்கும் கூட விதிவிலக்கு இருக்கிறது. தன்னைத் தாக்க வருகிற பிராமணனை ஒருவன் கொன்று விடலாம்.

குரும் வா பாலவ்ருத்தௌ வா
ப்ராம்மணம் வா பஹுச்ருதம்
ஆததாயின மாயாந்தம்
ஹன்யாதேவாவிசாரயந்
(350/378)

குருவோ, இளைஞனோ, வயோதிகனோ, மெத்தப் படித்த பிராமணனோ – அவன் வன்முறை எண்ணத்துடன் வந்தால், அவனைத் தயங்காமல் கொன்று விட வேண்டும்.இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். தாக்க வருகிற பிராமணன் கொல்லப்படலாம் என்று கூறுகிற மனு ஸ்ம்ருதி, இன்னார்தான் அவனைக் கொல்லலாம் என்று சொல்லவில்லை. நான்கு வர்ணங்களில், எந்த ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி – தன்னைத் தாக்க வருகிற பிராமணனை அவன் கொல்லலாம். இது நான்கு வர்ணங்களுக்கும் பொருந்துகிறதே! ஆகையால், பிராமணனைக் கொல்லவே கூடாது என்ற மனு ஸ்ம்ருதி, அதற்கு விதிவிலக்கையும் கூறியிருக்கிறது.தவிர, பிராமணனுக்கு உண்டான விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் வாழ்கிற பிராமணனைப் பற்றி, மனு ஸ்ம்ருதி பல இடங்களில் கடுமையாக விமர்சிக்கிறது :
கோரக்ஷகான் வாணிஜிகாம்ஸ்ததா
காருகுசீலவான்
ப்ரேஷ்யான் வார்துஷிகாம்ஸ்சைவ
விப்ரான் சூத்ர வதாசரேத்
ஆடு, மாடுகளை காத்தும்; வர்த்தகம் செய்தும்; கை வேலை செய்பவர்களாகவும், நடிகர்கள் மற்றும் பாடகர்களாகவும், வட்டிக்குப் பணம் தருகிறவர்களாகவும் வாழ்கிற பிராமணர்கள், சூத்ரர்களாகவே கருதத்தக்கவர்கள்.

கேள்வி : அப்படியானால், பிராமணனுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறைதான் என்ன? அதாவது, அவன் ஜீவிப்பது எப்படி?

சோ : வேதத்தைக் கற்பது, வேதத்தைக் கற்பிப்பது; யாகம் செய்வது, யாகங்களைச் செய்விப்பது; தானம் வாங்குவது, தானம் செய்வது – என்ற ஆறு ‘தொழில்கள்’ பிராமணனுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இதைக் கூறுகிற மனு ஸ்ம்ருதி வாசகம் இது :
அத்யாபனம் அத்யயனம்
யஜனம் யாஜனம் ததா
தானம் ப்ரதிக்ரஹ ஸ்சைவ
ஷட் கர்மாண்யக்ரஜன்மன:
(75/467)
இந்த ஆறு வழிகளில் – தானம் வாங்குவது என்பது, தனக்காக மட்டும் அல்ல – தானம் கொடுப்பதற்காகவும் கூட. இம்மாதிரி ஆறு கடமைகள் பிராமணனுக்கு உள்ளதால்தான், திருவள்ளுவர் கூட பிராமணர்களை ‘அறுதொழிலோர்’ என்று வர்ணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி : யாகம் செய்வது, வேதம் கற்பது என்பதெல்லாம், பிழைப்பதற்கு வழி இல்லையே?  வேதம் கற்பது – கற்பிப்பது; யாகம் செய்வது – செய்விப்பது; தானம் வாங்குவது – தருவது என்ற ஆறு கடமைகளில் ஜீவனத்திற்கு வழி? 
சோ : இதுவும் கவனிக்கப்பட்டிருக்கிறது. மனு ஸ்ம்ருதி இவ்வாறு சொல்கிறது: ‘மேற்குறிப்பிட்ட ஆறு கடமைகளில் – மற்றவர்களுக்கு யாகம் செய்விப்பது; வேதத்தைக் கற்பிப்பது, தானம் வாங்குவது ஆகியவற்றின் மூலம் பிராமணர்கள், தங்கள் ஜீவியத்தை நடத்தலாம்’.

ஆக, இந்த வழிகளில் ஒரு பிராமணன் வாழ்க்கை நடத்தலாம். மற்ற பல தொழில்கள், வர்த்தகங்கள் அவனுக்குக் கிடையாது.

கேள்வி : ஆனால், பிராமணன் தானம் பெறலாம் என்று கூறுகிற போதே, மற்றவர்கள் பிராமணனுக்கு தானம் தருவதற்கு ஒரு ஊக்கம் அளிக்கப்படுகிறதே?இதை மறைமுகமாக ‘பிராமணனுக்குத் தானம் கொடு’ என்று சொல்வது போல்தானே இருக்கிறது? 

சோ : இதில் ‘மறைமுகம்’ என்ன வேண்டிக் கிடக்கிறது? ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். பழைய நூல்களில் மறைமுகம் கிடையாது – எல்லாமே நேரிடைதான். அது இருக்கட்டும். தானம் தருவது பற்றிச் சொல்கிறேன். பிராமணனுக்குத் தானம் தருவது மிகவும் நல்லது என்று மனு ஸ்ம்ருதி மட்டுமல்ல, பல நூல்கள் கூறுகின்றன. ஏனென்றால், அவன், உலக நன்மைக்காக வேதம் ஓதி, யாகம் செய்து, தியாக வாழ்க்கையை மேற்கொள்பவன்.

கேள்வி : எல்லா பிராமணர்களையும் அப்படிச் சொல்ல முடியாதே? நான் இந்த காலத்தைப் பற்றிச் சொல்லவில்லை. அப்போதே கூட, எல்லா பிராமணர்களும் அப்படித்தான் தியாக வாழ்க்கை வாழ்ந்தார்களா?

சோ : இல்லை. இருந்திருக்க முடியாது.

கேள்வி : பிராமணனுக்குத் தானம் கொடு என்றால், அவர்களுக்கும் தானம் கொடுக்க வேண்டும் என்றுதானே ஆகிறது? 
சோ : இல்லை. விளக்குகிறேன். எப்படிப்பட்ட பிராமணனுக்கு தானங்களைச் செய்ய வேண்டும் என்பதையும், எப்படிப்பட்ட பிராமணனுக்கு தானம் செய்யக் கூடாது என்பதையும் மனு ஸ்ம்ருதி மிகச் தெளிவாகச் சொல்லி இருக்கிறது. ‘தவ வாழ்க்கைக்குரிய குணம் எதுவும் இல்லாமலும், வேதத்தைக் கற்காமலும் வாழ்ந்து கொண்டு, தானம் பெறுவதையே மிகவும் விரும்புகிற பிராமணனுக்கு தானம் செய்தால் – அந்தப் பிராமணனும், அவனுக்கு தானம் செய்தவனும் – கல்லும் அதன் மீது அமர்ந்து தண்ணீரில் இறங்கியவனும் போல, மூழ்கி விடுவார்கள்’

– என்று கூறுகிற மனு ஸ்ம்ருதி மேலும் சொல்கிறது:

‘உண்மையிலேயே வேதத்தை நன்கு கற்காதவனாகவோ; சாஸ்திர அறிவை, ஒரு வேடமாகக் கொண்டிருப்பவனாகவோ; பூனை குணம் உடையவனாகவோ இருக்கிற பிராமணனுக்கு, ஒரு மிகச் சிறிய தானத்தைக் கூட விவரம் அறிந்தவர்கள் செய்ய மாட்டார்கள்’.

கேள்வி : ‘பூனை குணம் உடையவன்’ என்றால், அது என்ன குணத்தைக் குறிக்கிறது?

சோ : அதையும் மனு ஸ்ம்ருதி விளக்கியிருக்கிறது: ‘செல்வத்தின் மீதே குறியாக இருந்து; தர்மத்தை ஒரு முகமூடியாகப் பயன்படுத்தி; ஏமாற்றுகிற தன்மை கொண்டு, பொறாமை உடையவனாகவும்; மற்றவர்களுடைய நற்பெயரைச் சகியாதவனாகவும்; நல்லோரை இழிவுபடுத்துவதில் முனைப்பு உடையவனாகவும் இருக்கிறவன் – பூனை குணம் உடையவன் எனப்படுகிறான். தனது இரையைப் பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்காக, சாது போல் நடந்து கொண்டு, இரை வெளியே வந்தவுடன் பெரும் ஆவேசத்துடன் அதன் மீது பாய்ந்து விடுகிற பூனை போன்றவன் – அந்த மாதிரி மனிதன்’.

ஆக,‘வேதம் முறையாக கற்காத பிராமணன்; சாஸ்திர அறிவை ஒரு வேடமாக அணிகின்ற பிராமணன்; பூனை குணம் உடைய பிராமணன் – ஆகியோருக்குத் தானம் கொடுத்தால் – தானம் வாங்கியவனோடு, கொடுத்தவனும் அழிவான்’ என்று கூறுகிறது மனு ஸ்ம்ருதி

ஆகையால், ‘ஒரு பிராமணன் எப்படி வாழ்ந்தாலும் அவன் தானங்கள் பெறத் தகுதி பெற்றவனாகிறானே?’ என்று நீங்கள் கேட்பது அர்த்தமற்றது. தகுதியற்ற பிராமணன் தானம் வாங்கினால், அவனுக்கு ஏற்படுகிற பாவத்திற்குப் பிராயச்சித்தம் கூடக் கிடையாது என்று கூறுகிறது மனு ஸ்ம்ருதி. அந்த மாதிரி ஏதாவது பிராயச்சித்தம் செய்ய அவன் முனைந்தால், அவன் அர்ப்பணிப்பது, அஸுரர்களைத்தான் சென்றடையும் என்றும் கூறுகிறது மனு ஸ்ம்ருதி.ஆகையால், பிராமணனுக்கு மிகவும் வசதியாக, ‘தானம்’ என்பதை விதித்து விட்டார்கள் – என்று கூறவே முடியாது. தானம் வாங்குகிற தகுதியற்ற பிராமணனுக்குச் செய்யப்படுகிற தானம், ஒரு பாவச் செயலே. அது மட்டுமல்ல – பிராமணன், அவனுக்கு விதிக்கப்பட்ட வழிமுறைகளிலிருந்து மாறுபட்டு வாழ்ந்தால் – அவன் பிராமணன் அல்ல என்றும் மனு ஸ்ம்ருதி கூறுகிறது. அதைப் பார்ப்போம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சோ : மனு ஸ்ம்ருதி கூறியுள்ள சில விஷயங்களைப் பார்ப்போம். இவற்றைப் பார்த்தாலே, மனு ஸ்ம்ருதி பற்றி ஏற்பட்டுள்ள தவறான கருத்துக்கள் மாறக் கூடும்; இத்தனைக்கும், இவை ஒரு ‘ஸாம்பிள்’தான். இம்மாதிரி, இன்னமும் கூட மனு ஸ்ம்ருதியில் பல விதிமுறைகள் உள்ளன.

பிராமணன்’ என்பவன், வேதம் கற்றிருந்தால் மட்டும் போதாது; துர்குணம் இல்லாதவனாகவும் அவன் இருக்க வேண்டும். பிறருக்கு உதவாத, கருமியாக வாழ்கிற ஒருவன், பிராமண குலத்தில் பிறந்திருந்தாலும், அவன் தாழ்ந்தவனாகவே கருதப்படுவான்.

ச்ரோத்ரியஸ்ய கதர்யஸ்ய
வதான்யஸ்ய ச வார்துஷே:
மீமாம்ஸித்வோ பயம் தேவா:
ஸமமன்னம் அகல்பயன்

ஒருவன் வேதங்களை நன்கு கற்றறிந்த, கருமியாக உள்ள பிராமணன்; மற்றொருவன் தாராள குணம் உடைய, ஆனால் பெரும் வட்டிக்கு பணம் தருகிற தொழிலை நடத்துபவன். இப்படிப்பட்ட இருவரைப் பார்க்கையில், இவர்கள் அளிக்கிற உணவு, சமமாக இகழத் தக்கதே – என்று தேவர்கள் கூறினர்.

இவ்வாறு சொன்னதுடன் மனு ஸ்ம்ருதி நிறுத்தி விடவில்லை; கருமியாக வாழ்கிற, கற்றறிந்த பிராமணனைப் பற்றி, மேலும் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.

தான்ப்ரஜாபதிராஹைத்ய மா
க்ருத்வம் விஷமம் ஸமம்
ச்ரத்வாபூதம் வதான்யஸ்ய
ஹதமச்ரத்தயேதரத்
(இருவரும் சமம் என்று நினைத்த) தேவர்களிடம், பிரம்ம தேவன் ‘மாறுபட்ட குணாதிசயங்களையும் அவற்றுக்கிடையே முரண்பட்ட குணங்களும் கொண்ட இந்த இருவரிடையே – பெரும் வட்டிக்குப் பணம் தருகிற வர்த்தகம் செய்பவனின் அன்னம், தயையினால் சுத்தப்படுத்தப்பட்டது; ஆனால் கருமியாக உள்ள வேதம் அறிந்த பிராமணனின் உணவோ, மனமில்லாமல் தரப்படுவது; ஆகையால் அது குற்றமுடையது.

பெரும் வட்டிக்குப் பணம் தருகிறவன் இழிவு உடையவனாகக் கருதப்பட்டதுடன், அவனையும் விட, இழிவானவனாகக் கருமியாக உள்ள பிராமணன் திகழ்கிறான் – என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது. வேதங்களை நன்கு கற்றறிவதால் மட்டும், ஒருவன் மேன்மை உடையவனாகி விடுவதில்லை; அவனிடம் குறை இருக்கக் கூடாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

பிராமணன்’ என்ற வர்ண அடையாளம் மட்டும் இருப்பதால், ஒருவர் ‘தகுதி’ பெற்றவர் ஆகிவிடவில்லை என்பதையும், மனு ஸ்ம்ருதி பல இடங்களில் விளக்குகிறது. அவற்றில் ஒன்றைப் பார்ப்போம்:

அவ்ரதானாம் அமந்த்ராணாம்
ஜாதிமாத்ரோப ஜீவிநாம்
ஸஹஸ்ரச: ஸமேதானாம்
பரிஷத்வம் ந வித்யதே

விரதங்களைக் கடைப்பிடிக்காத, வேதங்களை அறியாத, தங்கள் ஜாதியை மட்டுமே காட்டி வாழ்கிற, பிராமணர்கள், ஒரு ஆலோசனை சபையில் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தாலும், அது ஒரு ஆலோசனை சபை என்று ஒருபோதும் ஏற்கப்படாது.

கேள்வி : சரி, பிராமணன் என்ற ஜாதியை மட்டும் நம்பி வாழ்க்கை நடத்த முனைபவர்கள், தகுதியற்றவர்கள் என்று சொல்கிறீர்கள். மனு ஸ்ம்ருதி கூறியதைச் சுட்டிக்காட்டினீர்கள். அது பற்றி ஒரு கேள்வி. அப்படி தகுதியில்லாமல் இருந்தும் கூட, தானம் பெற முனைகிற பிராமணன் பற்றி மனு ஸ்ம்ருதி ஏதாவது சொல்லியிருக்கிறதா?

 
சோ : அப்படிப்பட்ட பிராமணனுக்குத் தரப்படுகிற தானம், பயன் தராது என்பது மட்டுமல்ல – தானம் தருகிறவனையும் வீழ்த்தும் – என்றும் கூட, மனு ஸ்ம்ருதி கூறியதை ஏற்கெனவே பார்த்தோம். நீங்கள் கேட்ட மாதிரி, அப்படி தகுதியற்றவனாக இருந்தும் தானம் வாங்குகிற பிராமணன் பற்றி மனு ஸ்ம்ருதி கூறுவதைப் பார்ப்போம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சோ : தகுதியற்ற பிராமணன், தங்கம் அல்லது தான்யங்களை தானமாகப் பெற்றால் – அவன் ஆயுள் குறையும்; நிலம் அல்லது பசுவை, அவன் தானமாகப் பெற்றால், அவனுடைய உடல் நலம் கெடும்; அவன் குதிரையைத் தானமாகப் பெற்றால் அவன் பார்வையை இழப்பான்; துணியைத் தானமாகப் பெற்றால் – அவன் சரும நோய் வரப் பெறுவான்; வெண்ணையைப் பெற்றால் – அவன் சக்தியை இழப்பான்; எள்ளை தானமாகப் பெற்றால் – அவனுடைய சந்ததியே பாவமுறும்.

கேள்வி : சரி. இவ்வளவு சொன்னாலும், தகுதியற்றவனை பிராமணன் என்றே மனு ஸ்ம்ருதி சொல்கிறதே?

சோ : அது அவன் ஜாதியின் பெயர். முதலில் ஜாதிகள் இல்லை. பின்னர் அது தோன்றியது. மனு ஸ்ம்ருதி இயற்றப்பட்டபோது ஜாதிகள் வந்துவிட்டன. முதலில் எல்லோருமே பிராமணர்கள்தான்.

கேள்வி : இது உங்கள் கருத்தா…?

சோ : ஆதியில் எல்லோருமே பிராமணர்களாகத்தான் இருந்தனர் என்று நான் சொல்வது – என் கருத்து என்று நீங்கள் சந்தேகப்படுவது தவறு. இது நமது நூல்களிலேயே விளக்கப்பட்டிருக்கிறது.

மஹாபாரதத்தில், ‘பல விதமான மனிதர்கள் எப்படி நான்கே வகைகளில் (வர்ணங்களில்) அடக்கப்படுகிறார்கள்?’ என்ற கேள்வி இடம் பெறுகிறது. இது பரத்வாஜரால் கேட்கப்படுகிறது.இதற்கு ப்ருகு முனிவர் இவ்வாறு பதில் அளிக்கிறார்: ‘அந்த நான்கு வகைகளைச் சார்ந்தவர்களிலேயே ஏற்றத் தாழ்வு கிடையாது. முதலில் எல்லோருமே பிராமணர்களாகத்தான் இருந்தார்கள். பிரம்மாவினால் இப்படிச் சமமாகப் படைக்கப்பட்ட மனிதர்கள், வெவ்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, அவற்றிற்கேற்ப அவர்கள் நான்கு வர்ணங்களாக வகைப்படுத்தப்பட்டனர்.மேலும் கூட, ப்ருகு முனிவர் இதை விளக்குகிறார். முதலில், இந்தப் பிராமணர்கள் இடையே மாறுதல்கள் தோன்றியதை அவர் இவ்வாறு எடுத்துரைக்கிறார்: ‘உலக இன்பங்களில் ஆர்வம்; கோப தாபங்கள்; துணிவு – ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு வாழ்பவர்கள் – க்ஷத்ரியர்கள் ஆனார்கள். விவசாயம், ஆடு, மாடுகளைப் பராமரிப்பது போன்ற வர்த்தக வாழ்க்கை முறைகளை மேற்கொண்டவர்கள் – வைசியர்கள் ஆனார்கள். ஆசைகளை வளர்த்துக் கொண்டு, பல வகைத் தொழில்களைச் செய்ய முனைந்தவர்கள் – சூத்திரர்கள் ஆனார்கள்’. அதாவது, ஆசைகள் இன்றி, விரதங்களையும், நியமங்களையும் கடைப்பிடித்து, ஞானத்தை அடைய முனைந்தவர்கள் – பிராமணர்கள் ஆனார்கள்.இவ்வாறு கூறிய ப்ருகு ‘வெவ்வேறு வகையைச் சார்ந்தவர்களாகி விட்ட இவர்கள் அனைவருமே பிராமணர்களாக இருந்தவர்கள்தான் என்பதால் – யாகத்தைச் செய்வதிலும், தர்மத்தை அனுஷ்டிப்பதிலும், இவர்கள் யாருக்கும் எந்தத் தடையும் இல்லை’ என்றும் சொல்கிறார்.

 

ப்ருகு முனிவரின் சொல், இவ்வாறு அமைந்திருக்கிறது:

இத்யேதி: கர்மபிர்வ்யஸ்தா
த்விஜா வர்ணாந்தரம் கத:
தர்மோ யக்ஞ்யக்ரியா தேஷாம்
நித்யம் ந ப்ரதிஷித்யதே

பிராமணர்களே தங்கள் நியமங்களைக் கைவிட்டதால், வெவ்வேறு செயல்முறைகளை மேற்கொண்டு, மற்ற மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்கள் ஆனார்கள். ஆகையால், தர்ம காரியங்களைச் செய்வதிலும், யாகங்களை நடத்துவதிலும், யாருக்கும் தடை கிடையாது.

மனு ஸ்ம்ருதியும் கூட, ஆதியில் எல்லோரும் பிராமணர்களாக இருந்தனர் என்றே கூறுகிறது. வாழும் வகையை ஒட்டியே வர்ணங்கள் அமைகின்றன என்பதை இது நிரூபிக்கிறது.மனு ஸ்ம்ருதி ஒரு படி மேலேயும் போகிறது. வர்ணங்கள், பிறப்பினால் அடையப்படுகிறவை அல்ல என்பதற்கு, இதைவிட வேறு அத்தாட்சியே தேவையில்லை – என்று கூறும்படியாக, இப்படிச் சொல்கிறது மனு ஸ்ம்ருதி:
சூத்ரோ ப்ராம்மணதாமேதி
ப்ராம்மணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதமேவம் து
வித்யாத் வைச்யாத் ததைவ ச

சூத்திரன் பிராமணன் ஆகலாம்; பிராமணனும் சூத்திரன் ஆகலாம்; அதேபோல, க்ஷத்ரிய மற்றும் வைச்ய வகைகளைச் சார்ந்தவர்களின் மகன்களும், வேறு வர்ணத்தை அடையலாம்.

இப்படி தெளிவாக, வெவ்வேறு அம்சங்களை விளக்கியுள்ள மனு ஸ்ம்ருதியைக் குறை கூறுவது, துவேஷத்தை திருப்தி செய்யலாமே தவிர, உண்மையை நிலைநாட்ட உதவாது.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சோ : தகுதியற்ற பிராமணன், தங்கம் அல்லது தான்யங்களை தானமாகப் பெற்றால் – அவன் ஆயுள் குறையும்; நிலம் அல்லது பசுவை, அவன் தானமாகப் பெற்றால், அவனுடைய உடல் நலம் கெடும்; அவன் குதிரையைத் தானமாகப் பெற்றால் அவன் பார்வையை இழப்பான்; துணியைத் தானமாகப் பெற்றால் – அவன் சரும நோய் வரப் பெறுவான்; வெண்ணையைப் பெற்றால் – அவன் சக்தியை இழப்பான்; எள்ளை தானமாகப் பெற்றால் – அவனுடைய சந்ததியே பாவமுறும்.
 மனு, பெண்ணுரிமை, பிராமணீயம்

 
முதலில் “மனு” என்பது ஒரு பதவியின் பெயர். அந்த மனு என்னும்  பதவிக்கு க்ஷத்ரியர்கள்தான் வரமுடியும் “மனுவாக” ஒரு பிராமணர் வரமுடியாது. எனவே, இதில் எங்கு ஆரியம் / பிராமணீயம் வந்து ஒட்டிக்கொண்டது எனத் தெரியவில்லை.
 
     மனுவினை எதிர்ப்பவர்கள் கூட இன்றும் தமிழக அரசு சார்பில் நடக்கும் “மனுநீதி” நாளை அந்த மனுவின் பெயரில் தான் சிறப்பிக்கிறார்கள் என்பது வேடிக்கை..
 
மனுவில் பெண் உரிமை
 
1) பெண்ணின் விவாஹ (திருமண) காலத்தில் அவளுக்கு கொடுக்கப்பட்ட ஆடை,ஆபரணம், வாகனம் இவற்றை அவளது கணவன், தந்தையோ உபயோகப்படுத்தக்கூடாது. (மனு 2-52)
2)  எந்த வீட்டில் பெண்கள் சந்தோஷமடைக்கிறார்களோ அந்த வீட்டில் எல்லா தெய்வங்களும் சந்தோஷமடைகின்றன.
எந்த வீட்டில் அவ்வாறு பெண்கள் சந்தோஷம் அடையவில்லையோ அந்த வீட்டில் செய்யப்படும் காரியங்கள் பலனில்லாது போகின்றன. (மனு 2-56)
3) பெண்களை அவளது தந்தை உபசரிக்க வேண்டும், இல்லையென்றால் அந்த பெண்ணின் சாபத்தால் அந்த குடும்பம் அழியும் (2-58)
4)   நன்மையை விரும்பும் மனிதர்கள் எப்போதும் தன் வீட்டு கல்யாணம், விரதங்கள்,போன்ற காலங்களில் உடன் பிறந்த பெண்களுக்கு நகை, உடை, சாப்பாடு இவற்றால் சந்தோஷப்படுத்தவேண்டும்.(2-59)
5)  கணவன் தன் மனைவியைத் தவிர வேறு பெண்ணை நினைக்காது இருக்கவேண்டும். (2-60)
6)        குருடன், மூடன், நொண்டி, எழுபது வயதான முதிய ஆண் பெண்  இவர்களிடம் சிறிது கூட வரி வாங்கக்கூடாது.( 8-394) 
7)        இரண்டு மாதத்திற்க்கு மேற்பட்ட கர்பிணியிடம் ஓடக்காரன் கூலி வாங்கக்கூடாது (8-407)
8)   எல்லாவர்ணத்தினரும் மனைவியை காப்பாற்றுவதே மேலான தர்மம் என அறியவேண்டும். சக்தியில்லாத கணவனாயினும் மனைவியை காப்பாற்ற முயற்சிக்கவேண்டும். (9-6)
9)           கணவனும் மனைவியும் சரிநிகர் சமானம் (9-45)
10)  அண்ணனின் மனைவி தம்பிக்கு தனது குருவின் மனைவியை போன்றவள். தம்பியின் மனைவி அண்ணனுக்கு மருமகள் போன்றவள்.(9-57)  
11)    பெண்ணுக்கு ருதுக்காலம் வந்துவிட்டாலும் அதாவது வயதுக்கு வந்தாலும்,கல்யாணமாகாது தன் வீட்டில் இருக்கும்படி நேர்ந்தாலும் பரவாயில்லை மாறாக நல்ல குணமில்லாத ஆணுக்கு (வரனுக்கு) பெண்ணை கொடுக்கக்கூடாது.(9-89)
12) பெண்ணானவள் வயதுக்கு வந்தபின் மூன்று வருடங்கள் வரையில் அவளது தந்தையோ, சகோதரனோ, தகுந்த ஆணுக்கு (வரனுக்கு) தன்னை திருமணம் செய்து கொடுக்கவில்லையெனில் தானே தகுந்த நல்ல ஆண் துணையை தேடிக்கொள்ளலாம். (9-90)
 
பிராமணீயம்
 
     அடுத்து பிராமணர்கள் வேறு எந்த ஜாதியரையும் அடக்கி விட்டார்களாம், அதற்கு ஆன்மீகம் என்பது ஆயுதம், சூழ்ச்சி என்பார்கள்.
 
sudharsan.jpg
 
 
     பிராமணர்கள் மற்ற வர்ணத்தினர் தந்த ஞான செல்வத்தினை ஜாதி வர்ண பேதமின்றி எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை காண்போமா?
 
     பிராமணர்களை பெரும்பாலும் அடையாளம் காட்டுவது பூணல்.  க்ஷத்ரியர்கள், வைசியர்கள் பூணல் அணிவதை பெரும்பாலும் கைவிட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்ட காலத்தில் பூணல் பிராமணர்களின் தனி அடையாளம் என்கிற ரீதியில் வெறுப்பாளர்கள், எதிர்பாளர்களால் அடையாளப் படுத்தப்படுகிறது.
 
     பூணலில் முக்கியமானது  தந்தை மகனுக்கு உபதேசிக்கும் “காயத்ரீ” என்னும்  மந்திர உபதேசம்.  இந்த காயத்ரீயை கண்டு வெளிப்படுத்தியவர் (திருஷ்டா) விஸ்வாமித்ரர். இவர் க்ஷத்ரியர். பிறப்பால் பிராமணர் அல்ல. பிராமணர்களின் முக்கிய சடங்கான பூணலில் உபதேசிக்கப்படும் மந்திரம்   பிராமணர் கண்ட மந்திரமல்ல.
 
     பிராமணன் காயத்ரீ ஜபத்தினாலேயே மோக்ஷத்தினையடைகிறான். இதில் சந்தேகமில்லை. மனு இரண்டாம் அத்தியாயம் 87 வது ஸ்லோகம்
 
     பிராமணர் பெரிதும் போற்றும் ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமம் மகாபாரதத்தில் உள்ளது. இன்றும் ஜோதிடர்கள் பிராயாச்சித்தம் என பிராமணர்களுக்குக்கூட கூறுவதில் முக்கியமானது ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்.
     இந்த  ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமம் க்ஷத்திரியரான  ஸ்ரீ பீஷ்மரால் சொல்லப்பட்ட ஸ்துதி. இதையும் பிராமணர்கள் உருவாக்கவில்லை மாறாக வர்ண பேதமின்றி ஸ்துதித்து வணங்குகின்றனர்.
 
     அடுத்து பிராமணர்கள் போற்றும் இதிகாசம் இரண்டு அதில் முதல் ஸ்ரீ ராமாயணம் அதை எழுதியது பிராமணரா? என்றால் இல்லை. ஸ்ரீ வால்மீகி என்னும் ரிஷி அவர் வேடுவகுல ஜாதி,அடுத்த காவியமாம் உயர்ந்த தத்துவ நூலாம் கீதையைக் கொண்ட ஸ்ரீ மஹாபாரதம் அதை எழுதியவரான ஸ்ரீ வியாசர் அவரது தாயோ ஒரு மீனவ பெண்மணி.
 
     கீதையை சொன்ன ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததோ இடையர்குலம். பிராமணனாகிய ராவணனை வதம் செய்ய  ஸ்ரீ ராமன் அவதரித்ததோ  க்ஷத்ரியர் குலம்.
 
     பிராமணர் அல்லாத குலத்தில் பிறந்தார்கள் என்பதற்காக ஸ்ரீ ராம , ஸ்ரீ கிருஷ்ண நாமங்களை பிராமணர்கள் ஜபிக்காமல் இல்லை. சொல்லப் போனால் அதை உச்சரித்துக்கொண்டே காலம் கழிப்பது மோட்சத்திற்க்கு வழி என பலர் வாழ்கின்றனர்.
 
     தசாவதாரங்களில் இரண்டு அவதாரங்கள் மட்டுமே பிராமண அவதாரம் அவை வாமன மற்றும் பரசுராம அவதாரங்கள் அவை இரண்டுக்கும் பாரத தேசமெங்கும் கோவில் இல்லை என்பது தானே உண்மை. பிராமணீயத்தினை உயர்த்திட எண்ணியிருந்தால் இந்த இரண்டு அவதாரங்களுக்குக்தானே கோவில்கள் கட்டியிருக்கவேண்டும்.
 
     தொட்டதற்கெல்லாம் பிராமண சூழ்ச்சி என உணர்ச்சிவசப்படும் “பகுத்தறியாதவர்கள்” இந்த வழிபாட்டு முறையினை சிந்திக்கவேண்டும்.
     மஹாபாரதம் சாந்தி பர்வம் 85வது அத்தியாயம் ராஜ தர்மத்தினை பற்றி பீஷ்மர் தர்மருக்கு உபதேசிக்கிறார் அதில் அமைச்சர்களினை தேர்வு செய்வது குறித்து கூறும்போது....
 
      பீஷ்மர், பிரும்மச்சர்யத்தினை முடித்த, கற்ற பரிசுத்தமுள்ள பிராமணர்கள் நால்வரையும்,பலசாலியான ஆயுதமுள்ள 18 க்ஷத்திரியர்கள், நிறைந்த பொருளுள்ள 21 வைசியர்களையும்,மூன்று சூத்திரர்களையும் அமைச்சர்களாக்க வேண்டும் என கூறியுள்ளார்.
 
     முற்றிலுமாக நான்காம் வர்ண ஜாதியினரை அடிமையாக்கிவிட்டது உங்கள் மதம் என்னும் வாதம் இங்கு அடிபடுகிறது.
 
     பெருமாள் கோவில்களில் எல்லோரது தலையிலும் வைக்கப்படும் “சடாரி” என்பது நம்மாழ்வார் எனப்படும் பிராமணரல்லாத அதுவும் வர்ணத்தின்படி நான்காம் வர்ணத்தினர் காலடிகள் / திருவடிகள்
 
sadaari.jpg
 
  
     எந்த பிராமணரின் காலடிகளும் திருவடிகளாக சடாரியாக கோவில்களில் இல்லை என்பதையும், ஜாதி வர்ணம் என்பதை விலக்கி ஞானத்தினை முன்னிறுத்தியதே நமது தேசத்தின் பண்பாடு, ஆன்மீகம், மதம், கலாசாரம் மற்றும் உயர்ந்த மரபு வழியாகும்.

கேள்வி : சரி. இவ்வளவு சொன்னாலும், தகுதியற்றவனை பிராமணன் என்றே மனு ஸ்ம்ருதி சொல்கிறதே?

சோ : அது அவன் ஜாதியின் பெயர். முதலில் ஜாதிகள் இல்லை. பின்னர் அது தோன்றியது. மனு ஸ்ம்ருதி இயற்றப்பட்டபோது ஜாதிகள் வந்துவிட்டன. முதலில் எல்லோருமே பிராமணர்கள்தான்.

கேள்வி : இது உங்கள் கருத்தா…?

சோ : ஆதியில் எல்லோருமே பிராமணர்களாகத்தான் இருந்தனர் என்று நான் சொல்வது – என் கருத்து என்று நீங்கள் சந்தேகப்படுவது தவறு. இது நமது நூல்களிலேயே விளக்கப்பட்டிருக்கிறது.

மஹாபாரதத்தில், ‘பல விதமான மனிதர்கள் எப்படி நான்கே வகைகளில் (வர்ணங்களில்) அடக்கப்படுகிறார்கள்?’ என்ற கேள்வி இடம் பெறுகிறது. இது பரத்வாஜரால் கேட்கப்படுகிறது.இதற்கு ப்ருகு முனிவர் இவ்வாறு பதில் அளிக்கிறார்: ‘அந்த நான்கு வகைகளைச் சார்ந்தவர்களிலேயே ஏற்றத் தாழ்வு கிடையாது. முதலில் எல்லோருமே பிராமணர்களாகத்தான் இருந்தார்கள். பிரம்மாவினால் இப்படிச் சமமாகப் படைக்கப்பட்ட மனிதர்கள், வெவ்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, அவற்றிற்கேற்ப அவர்கள் நான்கு வர்ணங்களாக வகைப்படுத்தப்பட்டனர்.மேலும் கூட, ப்ருகு முனிவர் இதை விளக்குகிறார். முதலில், இந்தப் பிராமணர்கள் இடையே மாறுதல்கள் தோன்றியதை அவர் இவ்வாறு எடுத்துரைக்கிறார்: ‘உலக இன்பங்களில் ஆர்வம்; கோப தாபங்கள்; துணிவு – ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு வாழ்பவர்கள் – க்ஷத்ரியர்கள் ஆனார்கள். விவசாயம், ஆடு, மாடுகளைப் பராமரிப்பது போன்ற வர்த்தக வாழ்க்கை முறைகளை மேற்கொண்டவர்கள் – வைசியர்கள் ஆனார்கள். ஆசைகளை வளர்த்துக் கொண்டு, பல வகைத் தொழில்களைச் செய்ய முனைந்தவர்கள் – சூத்திரர்கள் ஆனார்கள்’. அதாவது, ஆசைகள் இன்றி, விரதங்களையும், நியமங்களையும் கடைப்பிடித்து, ஞானத்தை அடைய முனைந்தவர்கள் – பிராமணர்கள் ஆனார்கள்.இவ்வாறு கூறிய ப்ருகு ‘வெவ்வேறு வகையைச் சார்ந்தவர்களாகி விட்ட இவர்கள் அனைவருமே பிராமணர்களாக இருந்தவர்கள்தான் என்பதால் – யாகத்தைச் செய்வதிலும், தர்மத்தை அனுஷ்டிப்பதிலும், இவர்கள் யாருக்கும் எந்தத் தடையும் இல்லை’ என்றும் சொல்கிறார்.

 

ப்ருகு முனிவரின் சொல், இவ்வாறு அமைந்திருக்கிறது:

இத்யேதி: கர்மபிர்வ்யஸ்தா
த்விஜா வர்ணாந்தரம் கத:
தர்மோ யக்ஞ்யக்ரியா தேஷாம்
நித்யம் ந ப்ரதிஷித்யதே

பிராமணர்களே தங்கள் நியமங்களைக் கைவிட்டதால், வெவ்வேறு செயல்முறைகளை மேற்கொண்டு, மற்ற மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்கள் ஆனார்கள். ஆகையால், தர்ம காரியங்களைச் செய்வதிலும், யாகங்களை நடத்துவதிலும், யாருக்கும் தடை கிடையாது.

மனு ஸ்ம்ருதியும் கூட, ஆதியில் எல்லோரும் பிராமணர்களாக இருந்தனர் என்றே கூறுகிறது. வாழும் வகையை ஒட்டியே வர்ணங்கள் அமைகின்றன என்பதை இது நிரூபிக்கிறது.மனு ஸ்ம்ருதி ஒரு படி மேலேயும் போகிறது. வர்ணங்கள், பிறப்பினால் அடையப்படுகிறவை அல்ல என்பதற்கு, இதைவிட வேறு அத்தாட்சியே தேவையில்லை – என்று கூறும்படியாக, இப்படிச் சொல்கிறது மனு ஸ்ம்ருதி:
சூத்ரோ ப்ராம்மணதாமேதி
ப்ராம்மணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதமேவம் து
வித்யாத் வைச்யாத் ததைவ ச

சூத்திரன் பிராமணன் ஆகலாம்; பிராமணனும் சூத்திரன் ஆகலாம்; அதேபோல, க்ஷத்ரிய மற்றும் வைச்ய வகைகளைச் சார்ந்தவர்களின் மகன்களும், வேறு வர்ணத்தை அடையலாம்.

இப்படி தெளிவாக, வெவ்வேறு அம்சங்களை விளக்கியுள்ள மனு ஸ்ம்ருதியைக் குறை கூறுவது, துவேஷத்தை திருப்தி செய்யலாமே தவிர, உண்மையை நிலைநாட்ட உதவாது.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

11822623_1459985454306478_2078520868620162266_n.jpg?oh=64ad83b5ffa4b3437ccec5d4f77c138e&oe=5683B243'பொதுவாக இந்த திராவிட பித்தலாட்டகாரர்கள் கேட்கும் கேள்விக்கு பதில்.

---------------------------------------------------------------------------------
அதென்ன பாப்பான் மட்டும் தலையில் இருந்து பிறந்தவன் சூத்திரன் காலில் இருந்து பிறந்தவனா? என்ன ஒரு அயோகியதனம்.

மனுஸ்ருமிதி கொடுக்கும் விளக்கம்:
------------------------------------------------------
ஏக வர்ணங்களும் உயர்வு தாழ்வு அறியாது. மாற்றத்தின் அடிப்படையில் உண்டானதே வர்ணங்கள். அவ்வகையில் கல்வி போதிப்பவனும் வேதங்கள் போதிப்பவனும் தனது தலையில் உள்ள மூளையால் சிந்திப்பதால் அவனை தலையாய் பாவிப்போம். சத்திரியனாவன் தனது நாட்டையும் தர்மத்தையும் தோள்களில் தாங்குவதால் அவனை தோளாக பாவிப்போம். வைசியனானவன் தனது வியாபாரத்தில் நேர்மையுடன் தனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பதால் அவனை நெஞ்சாக பாவிப்போம். தனது கடின உழைப்பால் தான் வருந்தினாலும் தன்னை சார்ந்தவர்களை கலங்காமல் வைத்திருப்பதால் பாதங்களாக சூத்திரனை பாவிப்போம்.
---------------------------------------------------------------------------------
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது:
-----------------------------------------------------------
இதில் எந்த ஒரு உறுப்பு இல்லாமல் மனிதனால் வாழ்வே முடியாது. அது போக இந்த ஈவேரா பித்தலாட்டக்காரர்கள் நினைக்கும் வகையில் பாதம் என்றால் அவ்வளவு கேவலமா?

இந்து தர்மம் முதலில் அறிவுருத்துவது தாய் தந்தையையும், பெரியோர்களையும், குருமார்களையும் பாதம் தொட்டு வணங்க வேண்டும் என்று சொல்லுகிறது. ஆகவே நமது இந்து தர்மத்தில் இன்றுவரை பாத பூஜை, பாதம் தொட்டு வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம். ஆக நமது வேதங்களில் சூத்திரர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம்.
--------------------------------------------------------------------------------
இப்படித்தான் நாம் எல்லோரையும் சாதூர்யமாக தாழ்வாக நினைக்கவைத்து நமது இந்து தர்மத்தை வீழ்த்த நினைக்கிறார்கள். ஆனால் நமது இந்து தர்மம் யாரையும் உயர்வாகவோ தாழ்வாகவோ கூறுவதில்லை. நமது இந்து தர்மத்தை பொருத்தவரையில் தர்மத்தின் வழி நடப்பவரையே உயிர்வாக கருதுகிறது. அது போக வர்ணங்கள் குணங்களுக்கு ஏற்ப மாறுபடுவதே.....

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

Thamizhan அவர்களே, முதலில் இந்தப் பதிவை நீங்கள் படித்தீர்களா என்றே எனக்கு சந்தேகம் வருகிறது! மனுஸ்மிருதியில் உள்ளதெல்லாம் சரி என்று இங்கு யாரும் வாதம் செய்யவே இல்லை. நீரே கற்பனை செய்து கொண்டு ஏதேதோ சொல்ல ஆரம்பித்து விட்டீர். 

இந்தப் புத்தகத்தின் பல பிரதிகளில் காணப்படும் இவ்விதமான தண்டனைகளையும், சட்டங்களையும் இந்தியாவில் எந்த மன்னனும், மக்கள் குழுவும் முழுமையாக நடைமுறைப் படுத்தியதற்கான சான்றுகள் இல்லை என்று டாக்டர் அம்பேத்கர் அவர்களே தன் நூலில் கூறியிருக்கிறார். சோழ மன்னர்கள் வேதியருக்கு மட்டும் அல்ல, படைவீரர், கலைஞர்கள், மருத்துவர் உள்ளிட்ட எல்லா சாதியாருக்கும் நிலங்கள், கிராமங்கள் வழங்கியதற்கும் சான்றுகள் உள்ளன.

இருப்பினும், சாதீய வெறிக்கான ஒரு குறியீடாக இந்நூலைப் பார்ப்பதாகக் கூறித் தான் அம்பேத்கர் இந்த நூலை எரித்தார். ஏனென்றால் இத்தகைய ஸ்மிருதிகள் மிக மரியாதையுடன் யாராலும் பார்க்கப் படவில்லை என்பது அவருக்குத் தெரியும். வேடரான முனிவர் வால்மீகியின் ராமாயணத்திற்கும், மீனவரான முனிவர் வியாசரின் மகாபாரதத்திற்கும் இருக்கும் உயரிய இடத்தில் நூறில் ஒரு பங்கு கூட மனுஸ்மிருதிக்கு இல்லை என்பது அவர் அறிந்தது. இந்து மரபில் வந்திருக்கும் ஆயிரக் கணக்கான புத்தகங்களில் சாதி வெறியைப் பற்றி ஓவராகப் பேசிய புத்தகம் என்று இதைக் கண்டு அவர் எரித்தார். அவரது செயல் ஒரு போர்முறை என்ற அளவில் சரியானது என்றே நான் கருதுகிறேன். 

இருப்பினும் ஒரு பழைய நூல் (புனித நூல் அல்ல) என்ற அளவில் மனுஸ்மிருதியை மதிப்பிட்டு அதிலும் சில நல்ல அறக் கருத்துக்களை விளக்கும் பாடல்கள் உள்ளன என்பதே நான் கூறவந்தது. 

இந்து சாத்திரங்கள் எல்லாமே இப்படித் தான் கூறுகின்றன என்று நீங்கள் வாதிட்டால் அது உங்கள் அறியாமையையே காட்டுவதாக இருக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

ஹிந்து குடிமைச் சட்டத்திற்கு அடிப்படை மனு ஸ்மிருதியா?



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 

பெண்ணடிமையை மனுநீதி வலியுறுத்துகிறதா?

 

சரியான பார்வையில் மனு ஸ்மிருதி : மலர் மன்னன்

ஓரு குலத்துக்கொரு நீதி என்பதுவே மனுநீதி என்று ஓசை நயத்திற்காகப் பேசிப் பேசி, சமுதாயத்தைப் பிளவு படுத்தி, மக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் பழங்காலத்துப் பிற்போக்கான சட்ட நூல்தான் மனு நீதி என்கிற எண்ணம் நம்மில் பலரிடையே நிச்சயமாகிவிட்டிருக்கிறது. விருப்பு வெறுப்பின்றி, முன்கூட்டியே ஓர் அபிப்பிராயத்துடன் அணுகாமல் ஆராய்ந்து பார்த்தால்தான் மனு நீதி என்கிற மனு ஸ்மிருதி வகுத்திருக்கும் விதிமுறைகள் எத்தகையன என்னும் முடிவுக்கு வரமுடியும்.

முதலில் ஸ்மிருதி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆதியிலிருந்து தொடர்ந்து வருபவை ஸ்ருதி என்கிற செவி வழியாகத் தலைமுறை தலைமுறையாய் மிகுந்த மரியாதையுடன் ஏற்கப்பட்டு வரும் கோட்பாடுகள். நான்மறைகளும் அவற்றின் அடியற்றி வரும் உபநிடதங்களும் இவ்வகையைச் சேர்ந்தவை. கண்ணபிரான் அருளியதாக அறியப்படும் பகவத் கீதையையுங்கூட ஸ்ருதி என்று கூற வியலாதுதான். ஆனால் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு வாய்மொழியாக அது உபதேசிக்கப்பட்டமையால் அதையும் ஸ்ருதியெனக் கொள்வதில் தவறில்லை எனக் கருதுவோர் உண்டு. ஸ்மிருதி எனப்படுபவை ஏட்டில் பதிவு செய்யப்பட்ட விதிமுறைகள். வேத காலத்திற்குப் பின் வெகு காலங் கழிந்த பிறகுதான் இவை உருவாயின. பொதுவாக தர்ம சாஸ்திரங்கள் எனக் கருதப்படுபவைதாம் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றன. மாறும் காலத்திற்கேற்ப மாற்றங்கொள்பவைதாம் தர்ம சாஸ்திரங்கள். அவ்வாறு மாற்றங்கொள்ளாமல் சில விதிமுறைகள் முரண்டுபிடித்தால் மூலாதாரமான ஸ்ருதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஸ்ருதிகள் என்ன சொல்கின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஸ்மிருதியின் கூற்றைத் தள்ளிவிட வேண்டும் என்று தர்ம சாஸ்தரங்களான ஸ்மிருதிகளே அறிவுறுத்தியிருக்கின்றன. ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு காணப்படுமானால் ஸ்ருதியில் சொல்லப்பட்டிருப்பதைத்தான் சரியென்று கொள்ளவேண்டும் என மனு ஸ்மிருதியும் தனது இரண்டாவது சருக்கத்தின் பனிரெண்டாவது, பதிமூன்றாவது செய்யுள்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆக, ஹிந்து சமுதாயத்திற்கு ஸ்ருதிகளான வேதங்கள்தாம் வழிகாட்டும் அறநெறிகள். மனு ஸ்மிருதியே ஒப்புக்கொண்டுள்ளவாறு, ஸ்மிருதிகள் இரண்டாம் பட்சந்தான். மனு நீதி எனப்படும் மனு ஸ்மிருதியானது ஹிந்து சமுதாயத்தின் ஒரேயரு ஸ்மிருதியல்ல. மொத்தம் உள்ள பதினெட்டு ஸ்மிருதிகளுள் ஒன்றுதான் அது. ஒரு தனி நபர், ஒரு குடும்பம், ஒரு சமுதயம், ஒரு தேசம் ஆகியவை கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளை, தான் எழுதப்பட்ட காலத்திற்கேற்ப வகுத்துள்ளது, மனு ஸ்மிருதி. விண்ணியல், மருத்துவம் முதலான விஷயங்கள் குறித்தும் அது பேசுகிறது. 


மனு ஸ்மிருதி எப்பொழுது எழுதப்பட்டது என்பதற்கு வரலாற்றுப் பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை. எந்தக் கால கட்டத்தில் அது ஹிந்து சமூகத்தால் வார்த்தை பிசகாமல் அனுசரிக்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை. ஸ்ருதிகளான வேதங்கள் தோன்றி நீண்ட நெடுங்காலம் கழிந்த பிறகுதான் ஸ்மிருதிகளுள் ஒன்றான மனு ஸ்மிருதி தோன்றியது. மனு ஸ்மிருதிக்குப் புராண அந்தஸ்தை அளிப்பதற்காக அதனை இயற்றியவர் மனு என்கிற ஆதி புருஷன் என்று கற்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்ப காலம் என்றும், ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு ஆதியானவர் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. தற்சமயம் நடப்பது ஏழாவது மன்வந்தரம். இதன் ஆதிபுருஷர் வைவஸ்த மனு என்கிறது, புராணம். இந்த மனு எழுதி வைத்ததுதான் மனு ஸ்மிருதி என்று எவரும் கூறினால் அதை ஏற்பது எளிதல்ல. 

வரலாற்றுக் கண்ணோட்டப்படிப் பார்த்தால் சுங்க வம்சத்துப் பேரரசர் புஷ்யமித்திரர் காலத்தில்தான் மனு ஸ்மிருதி என்கிற பெயரில் ஒரு சாஸ்திரம் எழுதப்பட்டது என்று ஒரு தரப்பினரால் கருதப்படுகிறது. ஆனால் இதற்கும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஆக, புராதன வேத காலத்து ஹிந்து சமுதாயம் இந்த மனு ஸ்மிருதியை அனுசரித்திருக்க வாய்ப்பில்லை. மனு ஸ்மிருதி எழுதப்பட்ட காலம் கி. மு. முதல் நூற்றாண்டு என ஒரு கருத்து நிலவுகிறது. 

மனு ஸ்மிருதியைப் பற்றிய பிரதான கருத்துகள் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்தான் வெளிப்படலாயின. இவை பெரும்பாலும் ஹிந்து சமய நம்பிக்கைகளையும் ஹிந்து சமூக நடைமுறைகளையும் இழிவானவை என நிறுவவேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் தெரிவிக்கப்பட்டன. மேலும் மனு ஸ்மிருதியின் மீதான கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத்தான் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்புகள் ஐரோப்பியர்களால், அவர்களின் கண்ணோட்டத்திற்கும் புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கும் பயிற்சிக்கும் ஏற்பவே இருக்கும் என யூகிப்பதில் தவறிருக்காது. 

மனு ஸ்மிருதியில் மொத்தம் 2031 செய்யுள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு ஒழுக்க விதியை வலியுறுத்துகிறது. ஆனால் இந்த 2031 விதிமுறைகளும் எந்தக் கால கட்டத்திலேனும் ஹிந்து சமூகத்தால் பாரத தேசம் முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகக் கூறுவதற்கில்லை.
மனு ஸ்மிருதியை ஆதாரம் காட்டிப் பேசப்படுகின்ற விதிமுறைகள் பலவும் அவரவர் கன்ணோட்டப்படியான விளக்கவுரைகளேயன்றி நேரடியான மொழிபெயர்ப்புகள் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தலை சிறந்த சமூக சீர்திருத்தத் துறவியும், ஆரிய சமாஜம் என்னும் அமைப்பை உருவாக்கியவருமான சுவாமி தயானந்த சரஸ்வதி மனு ஸ்மிருதிக்கு ஒரு விளக்கம் தந்துள்ளார். மனு ஸ்மிருதியின் செய்யுள்களிலேயே பல ஒன்றுக்கொன்று முரண்படுவதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, ஒவ்வொரு கால கட்டத்திலும் அவ்வப்போதைய வாய்ப்புகளுக்கு இணங்க மனு ஸ்மிருதியில் இடைச் செருகல்கள் நுழைந்து விட்டிருக்கின்றன என்பதுதான். ஒன்றோடொன்று முரண்படும் விதிமுறைகளைக் கண்டறிந்து இன்றைய காலகட்டத்திற்கு எந்த விதிமுறைகள் பொருந்துகின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு பொருந்தாதவற்றைப் புறக்கணிப்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, மனு ஸ்மிருதியின் இரண்டாம் சருக்கத்தின் தொண்ணூற்றேழாவது செய்யுள் கீழான குணவியல்புகள் உள்ள வர்கள் வேதமெய்ப்பொருளை அறியவியலாது என்று கூறுகிறது. பிறவியின் அடிப்படையில் பேசப்படாமல் குண நலன்களையே வலியுறுத்துவதாக இது இருப்பதால் இதனை ஏற்பதுதான் முறையாக இருக்கும்.
ஆண், பெண் என்கிற பேதமின்றி எல்லாக் குழந்தைகளையும் ஐந்து அல்லது எட்டாவது வயதிலாவது கட்டாயக் கல்வி பெறச் செய்வது பெற்றொருக்கு மட்டுமின்றி அரசுக்கும் நிர்வாக சபைகளுக்கும் கடமை யென்று ஏழாவது சருக்கத்தின் 152 வது செய்யுள் விதிக்கிறது. குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யத் தவறுவது தண்டனைக்குரிய குற்றம் என்றே இச்செய்யுள் எச்சரிக்கிறது. எனவே பெண்களுக்குக் கல்வி அவசியமில்லை என விதிமுறை ஏதும் இருக்குமானால் முரண்பாடான அந்த விதியைத் தூக்கி யெறிந்துவிடலாம். 


திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, தனது ஒன்பதாவது சருக்கத்தின் தொண்ணூறாவது செய்யுளில் ஒரு பெண்ணுக்கு உரிய பருவத்தில் தன் தகுதிக்கு ஏற்ற கணவனைத் தேர்வு செய்துகொள்ளும் உரிமையை மனு ஸ்மிருதி உறுதிசெய்கிறது. எனவே பாலிய விவாகத்தை அது வலியுறுத்துவதாகக் கருதத் தேவையில்லை. 

திருமணப் பொருத்தம் என்பது மனப் பொருத்தம், குண வியல்புகளுக்கியைந்த கருத்தொற்றுமை, உடல் ஆரோக்கியம் ஆகியவைதான் என்று மனு ஸ்மிருதி கூறுகிறது. அவரவர் வகுப்பில் மணம் செய்துகொள்வது அவசியம் என்று கூறுகையில் இவற்றைத்தான் மனு ஸ்மிருதி வலியுறுத்துகின்றதேயல்லாமல் பிறவியின் மூலம் வருகின்ற வகுப்பைக் குறிப்பிடவில்லை. 

பெண்களை மிக உயர்வாகப் போற்றும் பல செய்யுள்களை மனுஸ்மிருதியில் காணலாம். மூன்றாவது சருக்கத்தின் அறுபத்திரண்டாவது செய்யுள் மனைவியைக் கணவன் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விதிக்கிறது. மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்காது என்று மனு ஸ்மிருதி எச்சரிக்கிறது. பெண்களை தந்தைமாரும் சகோதர்களும், ஏன் கணவனுங்கூட வணங்கக் கடமைப் பட்டிருப்பதாக அது கூறுகிறது. பெண்களுக்குக் குடும்பங்களில் நல்ல உணவு, சிறந்த ஆடையாபரணங்கள் ஆகியவற்றை அளித்து மகிழ்விக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி விதிக்கிறது. பெண்கள் மதிக்கப் படுகின்ற குடும்பங்களிலும் சமுதாயத்திலும்தான் சிறந்த மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மனு ஸ்மிருதி அறிவுறுத்துகிறது. பெண்கள் துன்புறும் நிலை இருக்கின்ற குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது என்று அது சொல்கிறது. பெண்களை மதிக்காத சமுதாயத்தில் எத்தனை நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றால் பயன் விளையாது என்கிறது, மனு ஸ்மிருதி. அதன் மூன்றாவது சருக்கத்தில் ஐம்பத்தைந்திலிருந்து, ஐம்பத்தொன்பது வரையிலான செய்யுள்கள் பெண்கள் நல னையே பிரதானமாக வலியுறுத்துகின்றன. 

தகப்பன் பெயர் இல்லையேல் தாயின் பெயரால் பிள்ளைகள் அறியப்படட்டும் என்று சொல்கிற நடைமுறை வேத கால சமுதயத்தில் இருந்திருக்கிறது. பெண்கள் ஆண்களோடு சரி சமானமாக அமர்ந்து தத்துவ விசாரங்களிலும் தர்க்கங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்பதற்கும் சான்றுகள் உண்டு. எனவே பெண்ணடிமை முறையும், பெண்களை அறிவார்ந் த சபைகளிலிருந்து விலக்கி வைக்கும் போக்கும் இடையில்தான் நுழைந்திருக்கக்கூடும் எனப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்குச் சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனு ஸ்மிருதியில் அதற்கு ஏற்ற இடைச் செருகல்கள் உள்நோக்கத்துடன் நுழைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடியும்.
மனு ஸ்மிருதியின் பத்தாவது சருக்கத்தில் உள்ள அறுபத்தைந்தாவது செய்யுள் ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது. சத்திரியர், வைசியர் விஷயத்திலும் இது பொருந் தும் என்று அது மேலும் விளக்குகிறது. இதிலிரு ந்து பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை, குணநலன்களின் அடிப்படையில்தான் அவை நிர்ணயிக்கப்படுகின்றன என்று மனு ஸ்மிருதி வலியுறுத்துவதாகக் கொள்ளமுடியும். 


மேலும், பிராமணன் ஒரு குற்றம் இழைத்தால் அதற்கு மிக அதிக பட்ச மாகவும், அதே குற்ற்றத்தை இழைத்த சத்திரியனுக்கு அதைவிடச் சிறிது குறைவாகவும் வைசியனுக்கு அந்தக் குற்றத்திற்கு மேலும் குறைவாகவும் சூத்திரனுக்கு மிக மிகக் குறைவாகவும் தண்டனை விதிக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதி நிர்ணயிக்கிறது. காரணம், பிராமணனாக அறிவு நிலையில் உயர்ந்திருப்பவன் தெரிந்தே குற்றம் இழைத்திருப்பான் என்று கொள்ளவேண்டும் என அது விளக்குகிறது. பிற பிரிவினரை ஓரளவுக்கே விவரம் தெரிந்தவர்களாகக் கருத வேண்டுமாதலால் அதற்கேற்பக் குறைவாகவும், சூத்திரன் தனது அறியாமையால் குற்றம் இழைத்திருப்பான் ஆதலால் மிக மிகக் குறைவாகவும் அதே குற்றத்திற்குத் தண்டணை விதிப்பதே பொருத்தம் என்கிறது, மனு ஸ்மிருதி. 

மனு ஸ்மிருதியைப் பற்றிய விரிவான பிரஸ்தாபம் காலனி யாதிக்க காலத்தில்தான் தலையெடுத்தது. குறிப்பாக ஹிந்து சமூகத்தைக் குறை கூறி, மேற்கத்திய நாகரிகமும் சம்பிரதாயங்களும்தாம் மேன்மையானவை என்று மனதில் பதிய வைப்பதற்குத்தான் அத்தகைய பிரஸ்தாபம் பயன்படுத்தப் பட்டது. ஆங்கிலக் கல்வியின் வழியாகத் தம் தாயகத்தின் கலாசாரத்தையும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் காணப் பழகியவர்களுக்கு காலனியாதிக்கக் கல்வியாளர்கள் மனு ஸ்மிருதி பற்றி வெளியிட்ட கருத்துகள்தாம் வேத வாக்காகவும் அமைந்துவிட்டன. அந்த அடிச்சுவட்டில் தொடர்ந்து நடப்பவர்களிடையே மனு ஸ்மிருதியைப் பற்றி ஒருதலைப்பட்சமான கருத்து நிலவுவது இயற்கைதான்.


பின் குறிப்பு:

திண்ணை இதழில் முதுபெரும் எழுத்தாளர் திரு. மலர்மன்னன் எழுதிய கட்டுரை இது. அவர் அனுமதியுடன், அதை இங்கே மீள் பதிப்பிக்கிறேன்.

பெண்கள் பற்றி பொதுவாக மனு மிக உயர்வாகவே கூறிச் செல்கிறார், அவர் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தவில்லை என்று சுதந்திரமான வாசிப்பில் நானும் புரிந்து கொண்டிருக்கிறேன். அதனால், இது பற்றிய திரு. மலர்மன்னன் கருத்துடன் உடன் படுகிறேன்.

पुराणमित्यॆव न साधु सर्वं, सन्त: परीक्ष्यान्यतरात् भजन्ते ।
तातस्य कूपोयमिति ब्रुवाण:, क्षारम् जलं कापुरुषा: पिबन्ति ॥

இந்த சம்ஸ்கிருத சுலோகம் கூறுகிறது -

தொன்மையானது என்பதாலேயே எல்லா விஷயமும் நல்லது ஆகி விடாது
சான்றோர்கள் நன்கு சோதித்துப் பார்த்தபின்பே ஒரு விஷயத்தைப் போற்றுவார்கள்
முட்டாள்கள் தான் தன் தாத்தா வெட்டிய கிணறு என்பதற்காக
அதில் வரும் உப்புத்தண்ணீரையும் குடித்துக் கொண்டிருப்பார்கள்!

அதனால், வர்ணாசிரமம் பற்றிய மனுஸ்மிருதியின் கருத்துக்கள் பலவும் எனக்கு ஏற்புடையவை அல்ல. சுவாமி விவேகானந்தரையும், டாக்டர் அம்பேத்கரையும், ஸ்ரீநாராயண குருவையும் முன்னோடிகளாகக் கொண்டு, சாதிப் பாகுபாடுகளையும், சாதீயத்தையும் வேரோடு ஒழிக்கப் பாடுபடும் இந்துத்துவ நிலைப்பாடே என்னுடையது.

ஆனால் மனுஸ்மிருதி என்பது முழுக்க ஒரு தீய நூல் போன்றும் மனு ஒரு அரக்கன் போன்றும் கூறும் சித்தரிப்புக்களே தொடர்கின்றன. இதுவும் தவறு என்று நான் கருதுகிறேன். திருக்குறளில் கூடக் காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் உள்ளன. அதற்காக அந்த நூலையே தூக்கிப் போட்டு விடுவதில்லை நாம், அதில் வரும் நல்லவற்றை எடுத்துக் கொள்கிறோம் அல்லவா? அது போன்று தான் மனுஸ்மிருதியும் மதிப்பிடப் படவேண்டும்.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 னுதர்ம சாஸ்திரம் என்ற ஒரு நூல் இருப்பதும் அதுவே இந்து சமூகத்தின் வாழ்கை முறை சட்டமாக இருப்பதும் அனைவரும் அறிந்ததே மற்ற மதத்தவரும் இந்து மதத்தவரும் மத நம்பிக்கையே இல்லாதவரும் அந்த நூலை தான் மிக அதிகமாக விமர்சனம் செய்து திட்டுவார்கள் காரணம் அந்த நூல் பிராமணர்களின் பிறப்பையும் சமூக அந்தஸ்தையும் மிக உயர்வாக காட்டுகிறது மற்ற ஜாதியினரை விட பிராமணர்களுக்கு அதிகமான சலுகைகள் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறது என்று கூறுகிறார்கள். உண்மையாகவே அந்த நூல் பிராமணர்களுக்கு சலுகைகள் கொடுக்கிறதா? அவர்களை  உயர்ந்த பிறவிகளாக காட்டுகிறதா என்று மனுதர்ம சாஸ்திரத்தை விமர்சனம் செய்யும் பலர் நேரடியாக அறிய மாட்டார்கள். அதில் அப்படி இருப்பதாக அவர் கூறுகிறார் இவர் கூறுகிறார் என்று பலரை கைகாட்டுவார்களே தவிர அறுதியிட்டு கூற பலரும் முன்வர மாட்டார்கள்.

 
மனுதர்ம சாஸ்திரத்தில் அப்படி இருக்கிறது நான் அதை படித்திருக்கிறேன் என்று கூறுபவர்கள் கூட ஒருசில வார்த்தைகளை முன்னும் இல்லாமல் பின்னும் இல்லாமல் நடுவில் பிடித்து கொண்டு தங்களது தேவைக்கேற்ப வளைத்து நெளித்து பேசுவார்கள். அவைகளை நம்பி நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் உண்மையாகவே மனுதர்ம சாஸ்திரம் மனிதர்களை பிறவியின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்து கீழ்மை படுத்துகிறது என்று நம்பிவிடுகிறோம் இது முற்றிலும் தவறுதலான மனபோக்காகும். உள்ளதை உள்ளபடி கூறுகின்ற மனமிருந்தால் மட்டுமே பல விஷயங்களை புரிந்து கொள்ளவும் முடியும் மற்றவர்களுக்கு தெளிவுபடுத்தவும் முடியும். 
 
 
உண்மையில் மனுதர்ம சாஸ்திரம் பிராமணர்களை உயர்ந்த பிறப்பாளர்கள் என்று கூறுகிறதா? என்பதை ஆராய மனுதர்ம சாஸ்திர நூலுக்குள் சென்று பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது எடுத்த எடுப்பிலேயே அந்த நூல் நமக்கு அதிர்ச்சியை தருகிறது இறைவனது படைப்பில் பிராமணன் மிக உயர்ந்தவன் அவனை பின்பற்றி நடக்க வேண்டியது மற்ற மனிதர்களின் தலையாய கடமை என்று அடித்து சொல்கிறது அப்படி சொல்கிற மனுதர்ம சாஸ்திரம் அடுத்தபடியாக பிராமணன் என்பவன் எப்படி இருப்பான்? அவன் யார்?  என்பதை தெளிவாக காட்டுகிறது. பிராமணனின் உண்மையான இலக்கணம் தெரிந்தவுடன் நமக்கு கூட கண்டிப்பாக பிராமணன் உயர்ந்தவனே என்ற நம்பிக்கை வருகிறது.
 
அமைதியாக சகல உயிர்களையும் நேசிக்கின்ற ஜீவகாருண்யன் போன்ற வேடம் அணிந்து ஒரு பூனை தான் வேட்டை ஆட நினைக்கின்ற எலி பொந்திலிருந்து வெளியில் வருகிறவரை காத்திருந்து வந்தவுடன் ஆக்ரோஷமாக பாய்ந்து கதற கதற எலியை கடித்து விழுங்குவது போல தனது சுயநலத்தை மறைத்து மற்றவர்களின் பொருளை பறிக்க நினைத்து பொய்களை பரப்பி கர்வம் கொண்டு பிறர்பால் பொறமை வைத்து வாழ்கின்ற பிராமணன் எவனும் நரகத்தில் வீழ்வான் இவனுக்கு தானம் கொடுப்பவனும் நரக வாழ்வை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்து பிராமணன் எப்படி இருக்க வேண்டும் என்ற விபரங்களை நமக்கு தருகிறது. 
 
 
வேதத்தை ஓதுவதும் கற்பிப்பதும் மட்டுமே அவனது தொழில் பொருளை எதிர்பார்த்து இதை அவன் செய்ய கூடாது கொடுத்தவனுக்கு அதிகமாகவும் கொடுக்காதவனுக்கு குறைவாகவும் கற்பிக்க கூடாது எந்த நேரத்திலும் அடுத்த வேளை உணவுக்காக சேமிக்கும் பழக்கம் இல்லாமல் ஒவ்வொரு வேளையும் தானாம் வாங்கியே அல்லது யாசகம் பெற்றே பசியாற வேண்டும் வியாபாரம் செய்வது லாபம் சம்பாதிப்பது அவனுக்கு கூடாது லேவாதேவி செய்வதோ மற்றவர்களிடத்தில் பணிபுரிந்து சம்பளம் வாங்குவதோ கூடவே கூடாது என்று கட்டளை போடுகிறது அதே நேரம் நாடகம் நடிப்பது இசை முதலிய கலைகளில் ஈடுபடுவது ஜோதிடம் பார்ப்பது போன்றவைகள் பிராமணனால் நடத்த படக்கூடாது என்று மனுதர்ம சாஸ்திரம் வலியுறுத்துகிறது மாறாக இவைகளை செய்பவன் பிராமணனே அல்ல என்றும் அடித்து கூறுகிறது. அதனால் தான் 
 
சூத்ரோ ப்ராமணதாமேதி 
ப்ராமணஷ்சைதி சூத்திரதாம் 
ஷத்திரியாஜ்ஜாதமேவம் து 
வித்யாத் வைச்சியாத் தைதவச 
 
என்கிறது அதாவது சூத்திரன் பிராமணன் ஆகலாம் பிராமணனும் சூத்திரன் ஆகலாம் அதை போலவே சத்திரிய வைசிக குலத்தவர்களும் மாறி கொள்ளலாம் அவனவன் தர்மமும் சுயபுத்தியும் மாறும்போது வர்ணமும் ஜாதியும் தானாக மாறுகிறது. இதை நான் கூறவில்லை ஜாதிகளை உருவாக்குகிறது என்று பலரும் குறை கூறுகிறார்களே அந்த மனுதர்ம சாஸ்திரம் தெளிவாக கூறுகிறது. 
 
பிராமணன் என்பவன் அடுத்த வேளை சோற்றை பற்றி சிந்திக்காமல் இறைவனை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பான் தனக்காகவும் தன்னை சுற்றி உள்ள சமூகத்திற்காகவும் அவனால் மட்டுமே பிரார்த்தனை செய்ய முடியும் வழிபாடு நடத்த முடியும் அதனால் பிராமணனே வழிபாடு நடத்துவதற்கு தகுதியானவன் என்பதே நமது மதத்தின் இறுதியான முடிவு. இந்த இலக்கணத்திற்குள் இல்லாத எவனும் பிராமணன் அல்ல அப்படி பிராமண தர்மத்தை கைவிட்டவனை வைத்து கொண்டு வழிபாடு நடத்த வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கட்டளை போடவும் இல்லை. 
 
குறைந்தபட்சம் அதிகபட்சம் என்ற வித்தியாசத்தை தர்மத்தை பொறுத்தவரை சலுகைகாட்ட முடியாது. வேதம் ஒதுவதையே தொழிலாக கொண்டவனை மட்டுமே பூஜாரியாக நமக்காக இறைவனிடம் முறையிடுபவனாக வைக்கலாம் மற்றவர்களை வைத்தால் அது அவனுக்கும் பாவம் நமக்கும் பாவம் இப்போது சொல்லுங்கள் பிராமணன் உயர்ந்தவனா இல்லையா? நிச்சயம் தர்மப்படி வாழுகிற பிராமணன் உயர்ந்தவனே காரணம் அவன் மட்டுமே பிராமணன் அந்தண குலத்தில் பிறந்தேன் அதனால் நானும் பிராமணன் என்று எவனாவது சொன்னால் அப்படி கூறுவது கூட பாவம். 
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard